லூசிவர்
படம் பார்த்தீர்களா? கவிஞர் தணிகை
இந்தப்
படம் நன்றாக இருக்கிறது என
மகன் சில வாரங்களுக்கும் முன்பே
கூறி இருந்தார். கடந்த வாரம் பார்த்தேன்.
பார்க்காதிருந்தால் படம் பார்க்கும் விருப்பம்
உள்ளோர் பார்க்கலாம் பார்க்க வேண்டிய படம்தான்.
க்யூரேசி
அப்ரஹாம் என்னும் போதை மருந்தை
உலகளாவிய அளவில் அழிக்கப் போராடிய
ஒரு மாவீரன் கதையையும் இதில்
கொண்டு வந்து சொல்லி இருக்கிறார்கள்.
ஆனால் அவன் மாபியா கூட்டத்தில்
தலைவனாக இருப்பவன் என்றும் கதையை அமைத்திருக்கிறார்கள்.
ப்ருத்விராஜ்
சுகுமாரன் அதாங்க மொழி படக்
கதாநாயகன் இந்த 200 கோடிக்கும் மேல் வசூல் செய்த
படத்தின் இயக்குனர். படம் பிரான்ஸ் என்று
ஆரம்பித்து ரஷ்யாவில் முடிவடைகிறது.
இடையே நடப்பதெல்லாம் கேரளத்து அரசியல் சார்ந்த விடயங்கள்தாம்.
படத்தில்
ஏகப்பட்ட நட்சத்திரக் கூட்டம். ஆனால் எல்லாம் லூசிவர்
என்னும் ஸ்டீபனை மையப்படுத்தியே நகரும்
படம் துளியும் நேரம் போவதறியாமல் எடுக்கப்பட்டிருக்கிறது.
மோகன்லால் அசத்தி இருக்க விவேக்
ஓப்ராயோ அழகிய ஆனால் சொந்த
தனது மனைவி வழிப் பிறந்த
மகளையே பெண்டாள நினைக்கும் அனைவரும்
வெறுக்கத் தக்க வில்லனாக. ஆனால்
இவர் சுனாமி வந்த போது
எந்த நடிகரும் செய்யாத சேவையை கடற்கரை
ஓரத்தில் those who are affected by tsunami தேவையானவர்க்கு செய்தார் என்பது கதையல்ல நடிப்பல்ல.
லூசிபர்
என்றால் சாத்தான் அல்லது சைத்தான் என்ற
பொருள் .இதில் யாரை சைத்தான்
என்கிறார்கள் எனத் தெரியவில்லை பாபி
என்கிற பிமல்நாயரை அதாவது விவேக் ஓப்ராய்
ஏற்ற பாத்திரத்தையா அல்லது ஸ்டீபன் நெடும்பள்ளி
என்னும் க்யூரேசி அப்ரஹாமையா என்பது எனக்குப் புரியவில்லை.
ஏனெனில் ஸ்டீபன் ட்ரக் மாபியா
போதை மருந்துக் கூட்டத்தை துவம்சம் செய்தவராக வருகிறார். விவேக் ஓப்ராய் போதை
மருந்தை இந்தியாவில் தனது மாநிலத்தில் ஊடுருவ
விட்டு பல நூறுகோடிகளை சம்பாதிக்க
திட்டமிடுகிறார் மும்பை கும்பலுடன் சேர்ந்து
வெளிநாட்டினருடன் வியாபாரம் நடத்தி...அது மட்டுமல்ல இவர்
தனது மாமனாரான ராமதாஸை எவரும் அறியாமல்
கொலை செய்து இயற்கை மரணம்
என நம்ப வைத்து அவரது
மகன் ஜதின் ராமதாஸை கைப்பாவையாகக்
கொண்டு தாம் விரும்புவதை சாதிக்க
நினைக்கும் உண்மையான சைத்தானாக இருக்கிறார். சாத்தானாகத் திரிகிறார். அழகிய சாத்தானாக மிடுக்கும்
அழகும் குறையாமல்.
தனது மனைவிக்குத் தெரியாமல் அவரது மகளை பயமுறுத்தி
தனது காம இச்சைக்கு பழியாக்க
நினைக்கிறார். அதற்கு போதை மருந்தும் போதை மருந்து கும்பலும்
பயன்படுகிறது.
ராமதாஸ்
நெடும்பள்ளி ஒரு நல்ல அரசியல்
தலைவராக இருந்து வளர்ந்து மறைந்து
போக அவரது வெளித் தெரியாத
மகனான ஸ்டீபன் எப்படி அவரது
சகோதரி சகோதர்க்கு நன்மை செய்து மாபியா
கூட்டத்தை அழிக்கும் பெரும் சக்தியாக இருக்கிறார்
என்று காட்சிப்படுத்துவதே படம்.
ராமதாஸ்
நெடும்பள்ளி- வெளித் தெரியாத மகனான
போதும் சரியான வாரிசாக நின்று
இவரே அனைவர்க்கும் நல்லது செய்கிறார். நல்ல
கம்பீரமான பாத்திரப் புனைவு .அழகாக செதுக்கப்பட்டிருக்கிறது.
மோகன்லாலையும் பிரித்விராஜையும் பாராட்டியே ஆக வேண்டும்.
மஞ்சு வாரியருக்கு பெரிய பாராட்டுமளவு பங்கு
இல்லை என்றாலும் கொடுத்த ஸ்பேசை
பங்கீட்டை நல்ல படியாக பங்கமின்றி
முடித்திருக்கிறார்.
அன்டனி
பெரும்பாவூர் ஒரு நல்ல படத்தையும்
தயாரித்து இலாபமும் ஈட்டி இருக்கிறார். இந்தப்
படம் 2012ல் இருந்து எடுப்பதாக
பேசப்படு எடுக்கப்பட்டு கடந்த மார்ச் மாத
வாக்கில் 2019 தான் வெளியாகி இருக்கிறது
மொத்தத்தில் சாத்தான் அல்லது சைத்தான் என்பது போதை மருந்தைத்தான். இதை மாணவ மாணவியர் பயன்படுத்தி அழிந்து விடுகிறார்கள். இந்த போதை மருந்து உயிர்க்கொல்லி உலகளாவிய ஒரு பேரழிவு வியாபாரம். ஒரு பேரழிவு விவகாரம் இது அரசியலுக்கு எப்படித் துணை செய்திருக்கிறது துணை செய்கிறது என கதை சார்ந்து விளக்கி உள்ளார்கள் இந்தப் படக்குழுவினர்.
இந்தப் படக்குழுவினர் சமுதாய அக்கறையும் விழிப்புணர்வையும் பார்ப்போரிடை இளைஞர்களிடை ஏற்பட எடுத்திருப்பதால் இதற்கு டபுள் ஓகே சொல்லலாம். நல்ல என்டர்டெயின் மென்ட் மூவீ வித் குட் சப்ஜெக்ட்.
எனக்குத் தெரிந்து இந்த போதை மருந்து விவகாரம் கோவை சார்ந்த கல்லூரிகளில் பிரபலம் என்றும் ஏன் பிரபலமான பெரும்பணக்கார வாரிசுகள் படிக்கும் பள்ளிகளில் கூட இருக்கிறது என்பதும் நானறிந்த ஒரு மாணவன் கூட இதனால் பாதிப்படைந்துள்ளான் என்பதும், இது சேலம் சார்ந்த பகுதிகளிலும் கல்லூரி மாணவர்களிடை இருக்கக் கூடும் என்பது அங்கிங்கு எனாதபடி நீக்கமற நிறைந்திருக்கும் இயற்கையைப் போல இது ஊடுருவி இளம் தலைமுறைகளை அழிக்கும் பெரும் அழிவு சக்தியான இதை நாம் கருவறுக்காவிட்டால் இது மனிதகுலத்தை கருவறுத்துவிடும் என்பதும் உண்மை
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை
இந்தப் படத்தின் பதிவை ஒரு நல்ல நானறிந்த இந்தப் பதிவுகளைப் படித்து வரும் முகம் வாய் மற்றும் தாடை இயல் பிரிவைச் சார்ந்த பல் மருத்துவர் மனோஜ் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.
No comments:
Post a Comment