Thursday, October 31, 2019

மத்திய அரசு மக்களுக்கான அரசாக இருந்தால் அதைச் செய்யும்.:கவிஞர் தணிகை.

ஸ்விஸ் வங்கி இந்தியர்களின் பெயர்ப் பட்டியலை இந்திய அரசுக்கு கொடுத்த பின்னும் அதை ஏன் இந்திய அரசு வெளியிடாமல் காங்கிரஸ் காலத்தில் இருந்து பி.ஜே.பி காலம் வரை ஏமாற்றிக் கொண்டே இருக்கிறது. அதை வெளியிடுவதால் என்ன நாடே குடி முழுகி விடப் போகிறதா ?

Image result for swiss bank indian list

இரவுடன் இரவாக பணத் தாள்களை செல்லாததாக்கியதை விட‌
Image result for swiss bank indian list"
ஜி.எஸ்.டி என சேவைக்கெல்லாம் வரி போட்டு தீட்டுவதை விட‌

கார்ப்ரேட், மாபெரும் பண முதலைகளுக்கு வங்கி மூலம் படியளந்த ஏழைகளின் வங்கி டெபாசிட் பணத்தை வாராக்கடன் என்று உலகின் மாபெரும் பணக்காரர்களுக்கு தள்ளுபடி செய்ததை விட‌
Image result for swiss bank indian list"
இவற்றை எல்லாம் விடவா அந்தப் பட்டியிலின் வெளியீடு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விடப் போகிறது

மத்திய அரசு மக்களுக்கான அரசாக இருந்தால் அதைச் செய்யும்.
Image result for swiss bank indian list"
இத்தனைக்கும் இது போன்ற செய்திகள் ஊடகங்களில் புரள ஆரம்பித்தவுடன் அந்த வங்கியின் முதலீட்டாளர்கள் பெரும்பாலான இந்தியர் பணத்தை வழித்து எடுத்துக் கொண்டதாகவும் தமது கணக்கை மூடி விட்டதாகவும், அதில் அந்த அளவு பணத்தை விட்டு வைக்க வில்லையென்றும் செய்திகள் ஊடாடி வருகையில்
Image result for swiss bank indian list"
இப்போது அந்த ஸ்விஸ் அரசு ஸ்விஸ் வங்கியில் இந்திய முதலீட்டாளர்கள் வைத்திருக்கும் பணக்கணக்கை இந்திய அரசுக்கு தந்த பின்னும் ஊழலே செய்யாத அரசு என மார்தட்டிக் கொள்ளும் அரசு ஏன் இந்த பெயர்ப் பட்டியலை இன்னும் வெளியிட மறுத்து இரகசியம் காக்கிறது...

வெளியிடும் என நம்புவோமாக அந்த 15 இலட்சத்தை இந்திய குடிமக்களின் வங்கிக் கணக்கில் போடுவோம் எனச் சொன்னது போலவே.

Image result for swiss bank indian list

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

இந்திரா காந்தி சுடப்பட்ட தினம் சில நினைவுகள் பகிர்வுக்கு: கவிஞர் தணிகை.

இந்திரா காந்தி சுடப்பட்ட தினம் சில நினைவுகள் பகிர்வுக்கு: கவிஞர் தணிகை.

Image result for the last meeting of Indira Gandhi"

1984 அக்டோபர் 31 அன்று அவர் தனது பிரதமர் வீட்டில் இருந்து அலுவலகம் போகும் வழியில் ஒரே வளாகத்தில் இருக்கும் இரு வேறு பகுதிகளுக்கு நடைபாதையில் செல்லும்போது  சத்வத்சிங், பியாந்த் சிங் என்ற அவரது பாதுகாவலர்களாலேயே சுடப்பட்டு இறந்தார். அதில் ஒருவர் அவரைச் சுடுகிறார் அதன் பின் சுட்டவரை மற்ற ஒருவர் சுட்டு விடுகிறார். எனவே உண்மை வெளியே வராமலே போகட்டும் என்று... இதெல்லாம் நடந்து காலண்டரில் நாள் குறிக்கப்பட்டு 35 ஆண்டுகள் ஓடி விட்டன.

சீக்கியர்கள் நேர்மைக்கும் தியாகத்துக்கும் வீரத்துக்கும் பேர் பெற்றவர்கள் அவர்கள் செய்த நம்பிக்கைத் துரோகத்தைப் பார்த்து உலகே ஸ்தம்பித்தது ....இதன் தமிழ் மொழியாக்கம்: நிலை குலைந்தது என்று சொன்னாலும் அது அவ்வளவு சரியாக பொருந்தாததால் இந்த வார்த்தையை உபயோகப்படுத்தியிருக்கிறேன்.

இவரது கடைசி கூட்டம் மல்க்கங்கிரி ஒரிஸ்ஸாவின் பின் தங்கிய மாவட்டத்தில் அவர் இந்த நாட்டு நன்மைக்காக ரத்தம் சிந்தவும் தயார் என்று பேசிய வாய்ச் சொல் தலைச் சுமையாக சில நாட்களாகளுக்குள்ளாகவே முடிந்து போனது. அது தண்டகாருண்யம் என்னும் காட்டுள் அடங்கிய பகுதி ஆகும்.இந்த இடத்தில் நானும் காலடி எடுத்து வைத்திருக்கிறேன். எனவே அந்த தாக்கம் எனக்கு அதிகம்.

பஞ்சாப் பொற்கோவில் அமிர்தசரஸ் பிந்தரன் வாலேவை லோங்கோவாலுக்கு சீக்கிய குருமார்...எதிராக இந்திரா வளர்த்தி விட்டதாக செய்திகள் உள்ளன. அதன் பின் நிலை கட்டுக் கடங்காது போனபின்னே இராணுவத்தை அனுப்பி பொற்கோவிலுக்குள்ளேயே பிந்தரன்வாலேவும் அவரது கிளர்ச்சி செய்த கூட்டமும் சுட்டுக் கொல்லப்பட்டது. அதன் பழி வாங்கலே இந்திரா காந்தி கொலை செய்யப்பட்ட நிகழ்வு.( கணவர் பெயர் பெரோஸ் காந்தி என்பதால் மட்டுமே அவர் காந்தி என்றும் அழைக்கப்பட வேண்டியதானது. மற்றபடி மகாத்மா காந்தியின் தலைமுறைக்கும் இதற்கும் ஒரு தொடர்பும் இல்லை.  ஒரு பிரதமராக இருந்த ஒருவரை அவர் பதவியில் இருக்கும்போதே இப்படி சுடப்பட்டது இந்திய வரலாற்றிலேயே இதுவே ஒரே ஒரு சம்பவமாக இருக்கிறது
Image result for the last meeting of Indira Gandhi"
இந்த பஞ்சாப் என்ற தலைப்பில் அந்தக் காலத்தில் அடியேன் கூட ஒரு கவியரங்கில் மக்கள் கலைப் பண்பாட்டு நிகழ்வில் கவிதை வாசித்த நினைவும் உண்டு.

அதன் பிறகு டில்லியில் ஒன்றுமறியா அப்பாவி சீக்கியர்கள் கூட உலகெங்கும் பழிவாங்கப்பட்ட பிற்சேர்க்கை கதைகள் சம்பவங்கள் யாவும் உண்டு.

காட்சி: 2.

மொரார்ஜி தேசாய் மகா நேர்மையாளர், சரியான கண்டிப்பு உடையவர். அவரை அப்போது இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக இருந்த கிங்மேக்கர் லால் பகதூர் சாஸ்திரிக்கும் பின் யாரைத் தேர்ந்தெடுக்கலாம் என ஒரு காலக் கட்டத்தில் இவர் அப்போது லால்பகதூர் அமைச்சரவையில் செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சராக இருந்த இந்திராகாந்தியைத் தேர்ந்தெடுத்து விட்டார்.

அதே இந்திரா ஒரு கட்டத்தில் காங்கிரஸ்ஸை தன்பக்கம் இழுத்துக் கொண்டு பழைய காங்கிரஸ் சிண்டிகேட் என்றும் புதிய காங்கிரஸ் இந்திரா காங்கிரஸ் என்றும் பேர் இட்டு நாட்டை ஆண்டு அதன் ஆதிக்கத்தில்  அவசர கால பிரகடனம் என்று அனைத்து தலைவர்களையும் சிறையில் தள்ளினார் காரணம் காரியம் பார்க்காமலே. காமராசர் மட்டும் வெளியில் இருந்தவர் நொந்து போய் அக்டோபர் 2 காந்தி பிறந்த தினத்தில் உறக்கத்திலேயே உயிர் பிரிந்தார்.

தன் தாய்க்கும் கூட ஒரு சிறு அரசின் சலுகையைத் தர விரும்பாத அந்த சுயநலமில்லாத தலைவரை நன்றி அறிதல் இல்லாத இந்திரா" ஐ அம் நாட் ஆன்சரபிள் டு தோஸ் ‍ஹு பான் இன் பட்டி தொட்டி" என்று ஒரு ஊடகத்தின் பேட்டியில் தன்னை பிரதமராக்கிய காமராசருக்கு எல்லாம் நான் பதில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை என்று சொல்லி தூக்கி எறிந்து பேசினார்.

தர்மம் நின்று கொல்லும்.

சஞ்சய் காந்தி, ராஜிவ் காந்தி இருவரின் மரணமுமே இயல்பானதாக இல்லாமல் போயிற்று.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு....குறள்

ஈழத் தமிழினம் முழுதுமே பழி வாங்கும் குணத்தால் மட்டுமே அழிக்கப்பட்டதும் நினைவு கொள்ளப்பட வேண்டியதாகிறது.
Image result for the last meeting of Indira Gandhi"
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Wednesday, October 30, 2019

வதந்திகள் செய்தியாகாது ஆனாலும் உண்மை எது எனத் தேடல் நடத்த உதவும்: கவிஞர் தணிகை

வதந்திகள் செய்தியாகாது ஆனாலும் உண்மை எது எனத் தேடல் நடத்த உதவும்: கவிஞர் தணிகை

Image result for TN govt taken steps to save the 2 year old boy"

கடந்த வாரத்தில் சுஜித் வில்சன் இரண்டு வயதுச் சிறுவன் உயிர்க் காப்பாற்றுதலில் நடந்த நிகழ்வில் சார்புக்கு அப்பால் நின்று சில  கேள்விப்பட்ட  மற்றும் ஊடகங்களில் வந்த  செய்திகளை கோர்த்துப் பார்த்திருக்கிறேன்.ஒப்பிட்டுப் பார்த்து நீங்களும் கேள்வி கேட்டுப் பாருங்கள் ஏன் என்று...ஏன் எனில் கேள்வி கேட்பதுதான் அறிவியல்.

1. அந்த சம்பவம் நடக்க அந்தச் சிறுவனின் பெற்றோரே முழு முதல் காரணம். ஏன் எனில் சிறு விளையாட்டுப் பையன்கள் இருக்கிறார்கள் என்பதறிந்தும் அந்த பல நூறு அடிகள் ஆழமான குழாய்க் குழியை  மழை நீர் சேகரிப்புக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என விட்டு வைத்தது அல்லது அதை மூடாமல் வைத்திருந்தது. அல்லது அதன் மேல் சரியான மூடாக்கு பலகையோ கற்களையோ வைக்காமலிருந்தது.

2. அந்த ஆழ்துளைக் கிணற்றிலிருந்து ஒரு எலி வந்ததாகவோ அல்லது அதற்குள் ஒரு எலி சென்றதாகவோ அதைப் பார்த்த சிறுவன் அதைப் பின் தொடர்ந்ததாகவும் வாய் வழிச் செய்தி.

3. அவன்  திரைக்காட்சியில் ஆடுவதையும், சில நாளுக்கு முன் அவன் தாயுடன் தங்களது விளைச்சல் காட்டிலிருந்து பயிர்க்கட்டுடன் செல்லும் தாயைப் பின் தொடர்ந்ததை சமூக ஊடகங்களில் பரப்பி உள்ளது.

4. அவர்களது அருகாமையிலேயே குழாய்க் கிணறு அமைக்கும் பணியைச் செய்து தற்போது அந்த தொழிலை விட்டு விட்ட ஒரு பெரியவரும் அவரது மகனான மற்றொரு சிறுவனையும் அரசு அங்கீகரித்து வெளியில் எடுக்க அனுமதிக்காதது.( அதனால் கோபப்பட்ட அந்த மனிதர் ஆரம்பத்தில் இருந்தே அந்த இடத்திற்கு வராமல் அரசின் முயற்சிகளைப் புறக்கணித்து உதவும்  மனப்பாங்கில் இருந்து விலகி அப்பால் சென்று அந்த பகுதிக்கே வராமல் தவிர்த்து விட்டது.)அல்லது ஒரு முறைக்கும் மேல் வேறு எந்த முயற்சியையும் அனுமதிக்காதது.
Image result for TN govt taken steps to save the 2 year old boy"
5. அது போன்று குழாய்க் கிணறுகள் அமைக்கும்போது தவறுதலாக ஏதாவது கருவிகள் உள்ளே விழுந்து விடும்போது இப்படி இந்தச் சிறுவன் தலைகீழாக சென்று எடுத்து வந்ததுண்டு என்று அந்தச் சிறுவனே தெரிவித்ததாக செய்திகள் வெளி வந்துள்ளன.ஆனால் இந்த முறை அந்தத் தொழிலை அவர்கள் விட்டு விட்டதால் அந்தக் கருவிகளை தேடி எடுக்க நேரமானதால் அதற்குள் அந்தச் சிறுவன் மேலும் பல அடிகள் உள் சென்ற காரணமும், இவர்களை அரசு நம்பாமல் அனுமதிக்காமல் இருந்தது.

6. கலாமின் ஆலோசகராக இருந்த பொன்ராஜ் இது போன்ற தருணங்களில் பயன்படுத்த வேண்டிய 6 தொழில் நுட்பங்களை ஏதுமே அரசு பயன்படுத்த வில்லை என்று கூறியுள்ளது.

7. இது போன்ற தருணங்களில் பஞ்சாப்பில் ஒரு அனுபவத்தில் வெற்றி பெற்றவர்களின் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள எந்த வகையிலும் அரசு முனையாதது என்ற செய்தி..

8. வாட்ஸ் ஆப் போன்ற சமூக பக்கங்களில் இது போன்ற இடரில் 300 அடியில் சீனர்கள் ஒர் குழந்தையை பத்து நிமிடத்தில் உயிருடன் மீட்டது என தொடர் காட்சிகள் வந்திருந்தன...ஏன் நம்மால் சீனர்களைத் தொடர்பு கொண்டு உடனே அந்த உயிரைக் காப்பாற்ற முயன்றிருக்கலாமே என்ற சிந்தனைத் துளிகள்...

9. தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுவினர் விண்வெளியில் விரைந்து வராமல்  சாலை மார்க்கமாகவே வரவழைக்கப்பட்டது.

10. மாநில பேரிடர் மேலாணமைக் குழுவினர் சாலை வழியே வந்து முயன்றது...
Image result for TN govt taken steps to save the 2 year old boy"
11.ரோபோ மூலம் முயற்சி செய்த நபரின் ரோபோவின் அளவை விட குழியின் அளவு போகப் போக மிகவும் குறுகிய அளவிலேயே இருந்தது. எனவே இடப்பற்றாக் குறையைப் போக்க இனி சிறிய அளவில் ரோபோ செய்யவிருப்பதாக அந்த அன்பர் முடிவு செய்திருப்பது.

12. உண்மையிலேயே  ஏற்கெனவே இறந்து துர்நாற்றம் அடிக்க ஆரம்பித்த அந்தச் சிறுவனின் உடல் எடுக்கப்பட்டு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டுத்தான் அடக்கம் செய்யப்பட்டதா அந்தப் பார்சலில் உண்மையிலேயே அந்த சிறுவனின் உடல் இருந்ததா...அதை அவனது பெற்றோர்களோ மற்றவர்களோ உண்மையில் பார்த்தனரா, அதன் பின் தான் அது நல்லடக்கம் செய்யப்பட்டு சிமென்ட் கலவை வைத்து பூசப்பட்டதா?

13.அந்த முயற்சிக்கு அந்தச் சிறுவனது தாயே தேவைப்பட்ட பைகள் தைத்துக் கொடுத்தது.

14, இந்த உயிர் காக்க வேண்டிய முயற்சியிலும் அரசியலும் ஊடகங்களின் விளையாட்டுகளும் நிறைய பங்கு பெற்றதாக செய்திகள் வந்து கொண்டிருந்தது.

15. தமிழக அரசின் பத்து இலட்சம், மாநில அரசின் ஆளும் கட்சி ரூபாய் பத்து இலட்சம், மேலும் எதிர்க் கட்சி பத்து இலட்சம் என தொகை வாரி வழங்கியுள்ளது.

16. இந்த நிகழ்வைப் பெற்றோர்கள் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் சேலம் மாவட்டத்தில் ஒரு வீட்டில் பின்னால் வைத்திருந்த பேரல் பீப்பாய் ஒன்றில் இன்னொரு குழந்தை விழுந்து உயிரிழந்தது.. இதற்கு எத்தனை இலட்சம் கொடுக்கப் போகிறதோ அரசு...

17. இந்த நிகழ்வைப் பார்த்த பல தொண்டு உள்ளங்கள் தாமாக முன் வந்து தங்களது சொந்தச் செலவில் இது போன்ற மூடாத ஆழ்துளைக் கிணறுகல் எங்கிருந்தாலும் சொல்லுங்கள் செலவின்றி வந்து மூடித் தருகிறோம் என்று தங்களது நல்ல உள்ளத்தை வெளிப்படுத்தி இருப்பது...

18. தமிழக அரசு இனி இது போல் எங்காவது திறந்த நிலையில் ஆழ்துளைக் கிணறுகள் இருந்தால் அவற்றை மூடுவதாகவும் மீறினால் தக்க நடவடிக்கை மேற்கொள்ளவிருப்பதாகவும் செய்திகள் வந்த வண்ணம் இருப்பது.

19. நீதிமன்றம் விளம்பர பேனர் விழுந்து உயிர் விட்டதைக் குறித்தும், சுஜித் வில்சன் உயிர் விட்டதையும் குறிப்பிட்டு அபாயங்கள் நிகழ்ந்து உயிர் போனால் மட்டுமே அரசு செயல்படுமா என எச்சரிக்கை விடுத்துள்ளது...

20. இந்த மேற்சொன்ன என்னளவில் தெரிந்த  சொற்றொடர்களில் நிறைய உண்மைகள் மறைந்து இருக்கலாம். இல்லாதும் இருக்கலாம் மொத்தத்தில் ஒரு உயிர் காக்கும் முயற்சி பற்றி நாடே பேசிவிட்டது டில்லியில் நடந்த‌ ஒரு சில கற்பழிப்பு பற்றி உலகையே பேசியது போல‌...

21. இந்த ஆழ்துளைக் குழியை உண்மையிலேயே நீர் தேக்கியாக வைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததா.... அந்தக் குடும்பம் அதன் பெற்றோர் அவர்கள் வீட்டில் விளையாடும் சிறு வயதுச் சிறுவர்கள் இருக்கிறார்கள் என்றிருந்த நிலையிலும் அந்த குழாய்க் கிணற்றை மூடாமல் விட்டிருந்தது அந்த அக்கறை எடுக்காமல் இருந்தது...இந்த நாட்டின் தனி மனித நாட்ட்ம், ஒழுக்கம் பற்றி எல்லாம் இந்த நாடும் சமூகமும் எப்படி எவ்வாறு அக்கறை எடுத்துக் கொள்ளப் போகிறது?

22. அது 700 அடிக்கும் மேலான நீர் வரவில்லை என்று மூடாமல் விட்ட குழிதானே?

23. அந்த அளவு ஆழமாக போட்ட குழியை மூடாது ஏன் அதை வெட்ட பயன்பட்ட நிறுவனமும் அந்தக் குடும்பமும், இந்த அரசும் இது வரை ஏன் விட்டு வைத்திருந்தது அதற்கு என்ன எவை எவை காரணங்கள்?
Image result for TN govt taken steps to save the 2 year old boy"
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Sunday, October 27, 2019

கார்த்தியின் கைதி: சினிமா விமர்சனம்: கவிஞர் தணிகை.

கார்த்தியின் கைதி: சினிமா விமர்சனம்: கவிஞர் தணிகை.

Image result for kaithi"


குற்றவியல் கதைப் பின் புலத்தைக் கொண்டிருக்கிற படம். ஆரம்பத்தில் குடும்பத்தின் பெண்களை இப்படம் கவராது என நினைக்கும்போது டில்லியின் தனிப்பட்ட கதையும் அவரின் பெண் குழந்தை அனாதை ஆசிரமத்தில் வளர்ந்து வருவதும் அந்தக் குறையைப் போக்குகிறது. டில்லி சுமார் 10 ஆண்டுக்கும் மேலாக சிறையில் இருந்து நன்னடத்தையின் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் முன்பே வெளியே வரும் ஒரு கைதி தனது நேசமிகு மனைவியை இழந்து அவரது அடையாளமாக இருக்கும் தனது ஒரே வாரிசான இது வரை பார்க்காத பெண் குழந்தையை அனாதை ஆசிரமத்தில் காண காலைச் செல்லும் முன் அன்றைய இரவில் என்ன என்ன நடக்கிறது என ஓரிரவில் நடந்த கதையாக இந்த கைதி சினிமா நமக்குத் தரப்பட்டிருக்கிறது.
Image result for kaithi"
நல்ல முயற்சி. பாடல் ஏதும் இல்லை. படத்தை நீட்டிக்கும் முயற்சிகளும் ஏதும் பெரிதாக இல்லை. கொஞ்சம் ஜனரஞ்சகமாக இருக்கட்டுமே என்று சில காட்சிகள் மிகைப்படுத்தப்பட்டிருக்கின்றன சண்டைக்காட்சிகளில்.

மற்றபடி கார்த்தியின் நடிப்பு நாளுக்கு நாள் மெருகேறியபடி இருக்கிறது. இவர் தீரன் அதிகாரம் ஒன்னு படத்தில் காவல் துறை அதிகாரியாக வந்து நமையெல்லாம் படத்தில் ஒருங்கிணைய வைத்தவர் இதில் டில்லி என்னும் கைதியாக ஒரு லாரியின் ஓட்டுனராக வந்து வாழ்ந்து சினிமாவை நேரம் தெரியாமல் நகர வைத்து ஒரு த்ரில்லராக்கியிருக்கிறார் நெற்றி நிறைய திருநீறு பூசிக் கொண்டு நற்றுணையாவது நமச்சிவாயவே என பாடலுடன்.
Image result for kaithi"
எனக்கென்னவோ இவர் இவரது மூத்த சகோதரர் சூரியா, விஜய் போன்றோரை எல்லாம் நடிப்பில் பின்னுக்குத் தள்ளி விடுவார் போலும் நாளடைவில். இந்தப் படமே சிறிய பட்ஜெட் படமாக பிகிலை ஒப்பிடத் தோன்றினாலும் இதன் கதை , மற்ற நடிப்பு , எல்லா வாய்ப்புகளும் அந்தப் படத்தை இது மிஞ்சி இருக்கிறது. இது பிகில் தீபாவளி இல்லை கைதி தீபாவளிதான்.

இது சினிமாதான் என்ற போதிலும் பாத்திரங்களுடன் நடிக்கும் நடிகர்கள் ஒன்றிப்போவதால் நாமும் படத்தில் ஒன்ற முடிகிறது. நீண்ட இடைவெளிக்கும் பின் நரேன் போலீஸ் ஆபிசர் வேடத்தில் தனது பாங்குணர்ந்து செய்திருக்கிறார்.
Image result for kaithi"
 காமாட்சி ஒரு துணைப்பாத்திரத்தை செய்த தீனாவை இனி நிறைய படங்களில் காணலாம்.

அப்போதுதான் பதவி ஏற்க வரும் போலீஸ்காரராக வருபவர் நன்றாக வாய்ப்பு வழங்கப்பட்டு நன்றாகவே செய்திருக்கிறார் அவருடன் கல்லூரி மாணவர்களாக காவல்நிலையத்தில் மாட்டிக் கொள்ளும் இளைஞர்களும் கதை பல்வேரு கோணங்களில் பல்வேறு இடஙக்ளில் நடக்கும் சம்பவங்களுடன் நன்றாக எடிட்டிங் செய்யப்பட்டு நல்ல விறுவிறுப்பேற்றப்பட்டு பார்க்க ஒரு வேகத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே லோகேஷ் கனகராஜ் மற்றும் குழுவினரைப் பாராட்டியே ஆகவேண்டும் கைதி 2 ஆம் பாகம் அதற்குள் எடுக்க இருப்பதாக உடனடியான செய்திகள் தெரிவிக்கின்றன. நல்ல தன்னம்பிக்கை. வாழ்த்துகள். நல்ல இளைஞர்கள் இது போல் நிறைய வந்து வழக்கமான டமுக்கடிப்பான் டியா டப்பான் மசாலா படங்களுக்கு மாற்றாகி நல்ல படத்தை தரவேண்டும் என வரவேற்கிறது மறுபடியும் பூக்கும் வலைப்பூவின் சார்பாக.
Image result for kaithi"
மோப்பம் பிடித்து காவல்துறைக்காக  செய்த  பிரியாணியை  கைதி கார்த்தி அதாங்க டில்லி ஒரு பக்கெட்டில் எடுத்து பெரிய தட்டில் போட்டு ஒரு பிடி பிடிப்பது போல ஒரு சாதாரண படத்தைப் பார்ப்போம் எனப் பார்க்க ஆரம்பித்த படத்தை நல்ல படம் பார்த்த உணர்வுடன் முடித்து வரலாம்.

இனி இந்தப் படத்தைப் பற்றி அதிகம் சொல்லப்போவதில்லை
நல்ல படங்க பார்க்க வேண்டிய படங்க... ஒரு முறை பாருங்க...
Image result for kaithi"
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.





பிகில்: விமர்சனம்: கவிஞர் தணிகை

பிகில்: விமர்சனம்: கவிஞர் தணிகை
Image result for bigil"

கால் பந்து பற்றிய  விளையாட்டு நுணுக்கங்களை , நுட்பங்களை இன்னும் ஆழ்ந்து ஆய்ந்து இந்தப் படம் செய்திருந்தால் டங்கல், கனா,சக்தே இன்டியா போன்ற படங்களுக்கு இணையாக பேசப்பட்டிருக்கக் கூடும். ஹாலிவுட் படங்கள் ரத்தினச் சுருக்கமாக தேவையான செதுக்கல்களுடன் இருக்கும்...ஆனால் தமிழில் தொடராக இருந்தாலும், பேச்சரங்கமாக இருந்தாலும், சினிமாவாக இருந்தாலும் நவரசங்கள் வேண்டும்.

எதிலும் ஒரு சினிமாத்தனமாக அதில் ஒரு அதிகபட்சத்தைக் காட்டுவது வழக்கம். அப்படித்தான் சண்டைக்காட்சிகள், பாடல்கள், சென்டிமென்ட்கள் எல்லாமே...இப்படி சங்கர் பார்முலா கூட கிராமியத்துகான ஒர் பாடல், நகரியம் சார்ந்த பாடல், குத்துப் பாடல் இப்படி எல்லா ரஸங்களையும் கோர்த்து எல்லா ரசிகர்களையும் திருப்திப் படுத்தி மொத்தத்தில் நிறைய பார்வையாளர்களை திரைக்கு  படத்துக்கு பார்க்க வரவழைத்து பெரும்பொருளீட்டி இலாபம் அடைய வேண்டும் அதுவே இவர்களின் இலக்கு.

அதை அவரிடம் பயிற்சி பெற்ற அட்லீ என்னும் இந்த இளைஞரான இயக்குனரும் தமது படங்களில் வரிசையாக செய்து வருகிறார். அதில் ஒன்றுதான் இந்தப் படமும்.

இவரது படங்களும் ரஜினியின் படங்களும் எதற்கெடுத்தாலும் பிரம்மாண்டம் என்ற பேரில் நிறைய மனிதர்கள் கூட்டத்துடன் காட்சிப் படுத்தப்பட்டிருப்பது வாடிக்கையாகிவிட்டது.

மைக்கேல் ராயப்பன், பிகில் என தந்தையும் மகனுமாக இருவரும் கட்டிப் பிடித்து நெஞ்சைத் தொட்டிருக்கிறார்கள் விஜய் என்ற ஒரே நடிகர் மூலம்.  நயன் தாரா, ஜாக்கி ஷ்ராப் போன்ற நடிகர்களின் திறம் காண்பிக்கப் படாமல் விஜய் என்ற நடிகர் மட்டும் மூலமாக படம் நகர்கிறது.

நயன் தாரா பிகில் தேவாலய நிகழ்வுகள், எல்லாம் மிகவும் செயற்கையாகவே இருக்கின்றன.நிறைய பொருட்செலவு என்பது மட்டும் நன்றாகத் தெரிகிறது. அதன் நாடித் துடிப்பாக இழையோட்டமாக கதையின் நெசவு சரியாக நெய்யப்படவில்லை.
Image result for bigil"
சகல விதமான மசாலாக்களும் போடப்பட்டு அனைத்து தரப்பு மக்களையும் கவரச் செய்யும் முயற்சியாகத் தெரிவிக்கும் நோக்கத்தில் தோல்வி அடைந்திருக்கிறது.

யோகிபாபுவின் நகைச்சுவை எடுபடவில்லை என்பதைப் பார்த்துவிட்டு நீண்ட இடைவெளிக்கும் பின் விவேக்கையும் சேர்த்திருக்கிறார்கள் அவர் பகுதியை நன்றாகவே செய்திருக்கிறார். வழக்கம் போல் இரசிக்க முடிகிறது.

ஏ.ஆர் ரஹ்மான் இரண்டு பாடல்களில் தெரிகிறார். ஒரு பாடலில் அநிருத்தை காப்பி அடித்தது போல சகிக்காத ஒரு பாடலுக்கு இவர் இசை என்பது இவரது தகுதிக்கு இழுக்காக இவரது தரத்தைக் குறைத்துள்ளது. ஆனந்தராஜ் உடன் ஒரு பட்டாளம் அவர் இருப்பதைக் காண்பித்திருக்கிறது. அவருக்கு பெரியதாக சொல்லிக் கொள்ள முடியாத ஒரு வாய்ப்பு. சினிமாத்துறையில் இருந்தால் இப்படித்தான் எதையாவது செய்து பிழைப்பு நடத்த வேண்டுமல்லவா

டேனியல் பாலாஜி ஒரு சீரியல் நடிகர்....இவரை விட்டால் வில்லனே இல்லாதது போல இழுத்துக் கொண்டிருக்கிறார்கள்...ஒன்றும் இரசிக்கவில்லை.பின்னாலிருந்து குத்தி மைக்கேல் இராயப்பனை வீழ்த்த பிகில் தலைஎடுக்கிறார் எதிரிகள் கூட்டத்தை நசுக்குகிறார் தனது பிரியமான கால் பந்து விளையாட்டுக்கும் பேர் வாங்கிக் கொடுக்கிறார். இந்த விளையாட்டு எல்லாமே தேசிய உலக விளையாட்டாகவே போய் முடிவதை எல்லாம் நிறைய படங்களில் ஒரே மாதிரி சொல்லப்பட்டிருப்பதால் இதையும் ஒரு பொழுதுபோக்கு படமாகக் கொள்ள வேண்டும்....மற்றபடி வெட்டி பந்தா ....நிறைய ...இரசிகர்கள் மெச்சிக் கொள்ளலாம். சாதாரணமாக ஒரு சினிமாவாக பார்க்கப் போனால் ஒரு சராசரி விரயம்.
Image result for bigil"
 மற்றுமொரு சராசரி ஒரு விஜய் படம்

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

தீபாவளியின் கொட்டம் அடங்கி விட்டது: கவிஞர் தணிகை.

தீபாவளியின் கொட்டம் அடங்கி விட்டது: கவிஞர் தணிகை.


Image result for diwali 2019"
இந்த ஆண்டு சென்னை மற்றும் உள்ள எல்லா ஊர்களிலுமே தீபாவளியின் பட்டாசு சத்தம் நூற்றுக்கு தொண்ணூறு சதவீதம் கேட்கவில்லை. தீபாவளியான இன்று மட்டும் ஆங்காங்கே சில சத்தங்கள் கேட்டபடி இருக்கின்றன.

பட்டாசு வெடிப்பது உயிர்களுக்கான அச்சுறுத்தல்.
இயற்கைக்கு கேடு.
என்பது இயற்கை ஆர்வலர்களின் ஒருமித்த கருத்து.

இந்த தொழிலில் பட்டாசு தயாரிக்கும் ஈடுபடுவாரை அது சிறுவர் ஆன போதும் பெரியவர் ஆனபோது மடை மாற்றம் செய்து வேறு தொழில்களில் ஈடுபடுத்தி அவர்களுக்கு வாழ்க்கை உத்தரவாதம் வழங்க வேண்டிய அரசுகள் மத்தியிலும் மாநிலத்திலும் படித்து முடித்த இளைஞர்க்கே வேலை வாய்ப்பில்லாமல் இருக்க இது வேறா என்று கேட்கக் கூடும்.

ஆனால் அதை எல்லாம் செய்தால் மட்டுமே அரசு. இல்லையேல் அது வெறும் முரசு.
Image result for diwali 2019"
மொத்தத்தில் இந்த ஊடகம் எல்லாம் ஊதிப் பெருக்க வைத்துக் கொண்டிருப்பவைதான் இது போன்ற மாதம் ஒரு திருவிழா வைபவம் எல்லாமே. சரியாக சிந்தித்துப் பார்த்தால் நராகாசுர வதம் கிருஷ்ணர் என்பவை யாவும் கதை மாயை என்பதை மனிதரால் உணர முடியும். வழி வழியாக கேள்வி முறையின்றி ஐதீகம் என்ற ஒரு வார்த்தையுடன் எதுவுமே தெரியாமல் அறியாமல் உலகின் போக்கோடு பொது நீரோட்டத்தோடு ஓடிக் கொண்டிருக்கும் மனிதக் கூட்டம் இப்போது பொருளாதார  நலிவு மற்றும் சிந்திக்கும் கண்ணோட்டத்தில் பட்டாசு வெடிப்பது என்பது சரியல்ல என்று அறிந்து கொள்ள ஆரம்பித்து விட்டது என்றே சொல்லலாம்.

ஐப்பசி அடைமழைக்காலம் வியாபார மந்தம் எனவே எண்ணெய் விற்பனை , மாவு விற்பனை, துணி விற்பனை , பட்டாசு விற்பனை எல்லாவற்றையும் சூடு பிடிக்க வைத்து ஏழ்மை நிலையில் உள்ளாரை மேலும் ஏழ்மைக்கு நிலைக்கு கொண்டு சென்று கடன் உடன் வாங்கி சிறுவர் சிறுமிகளின் அழுகையை கண்ணீரை ஆற்றி விட்டு காலம் காலமாக கடன்களையே கட்டிக் கொண்டு செல்ல வேண்டிய வாழ்க்கையை இந்த சமூகம் கை காட்டி விடுவதே இந்த மாதமொரு திருவிழாக்கள்...இதற்கு ஊடகம் உடந்தை.

 சித்திரை சித்திரா பௌர்ணமி, வைகாசி, வைகாசி விசாகம், ஆனி  ஆடி ஆவணி ஆடி 18, ஆவணி அவிட்டம் பூணூல் அணிவிப்பு விநாயக சதுர்த்தி ,புரட்டாசி எல்லா சனியும் திருப்பது ஏழுமலையான், ஐப்பசி தீபாவளி, கார்த்திகை திருவண்ணாமலை தீபம்,மேலும் குமரனின் திருக்கார்த்திகை,மார்கழி சிவ விஷ்ணு விடியற்காலை வழிபாடுகள், தை தேவையான‌ அறுவடைத் திருநாள்( இது மட்டுமே தமிழர் திருநாள் என்பது) மாசி: சிவராத்திரி, பங்குனி பங்குனி உத்தரம் இப்படி...இன்ன பிற அட்சய திருதியை, அமாவாசை, பௌர்ணமி, பிரதோசம், அஷ்டமி, நவமி...சந்திராஸ்டம் இப்படி எல்லா நாளுமே ஏதாவதொன்று இருக்க மனித மனங்கள் மேன்மையடைந்தால் ஒழிய நாளும் கோளும் என்ன செய்யும்...

எல்லாமே தெய்வ சிந்தையோடு மனிதரும் தெய்வமாகலாம் என்பதற்கே என்று ஒரு சமாதானம் கேட்கிறது அப்படி எல்லாம் இருந்திருந்தால் 19 ஆம் நூற்றாண்டின் ராமலிங்க வள்ளல் போன்ற தெய்வப் பிறவிகள் கடைவிரித்தேன் கொள்வாரில்லை என்று நைந்து போயிருக்கும் அவசியம் எல்லாம் நேர்ந்திருக்காது.

இதில் பெண்களைப் பெற்ற பெற்றோர்க்கு என்ன செய்தாலும் எப்படி தலைதீபாவளியைக் கொண்டாடினாலும் என்ன செய்தீங்க பெரிசா சொல்றீங்க என்ற அடைமொழி குறை கேட்கும் நிலை வேறாக...மொய் எழுதும் வழக்கம், சீர் செய்யும் வழக்கம் என மனிதப் பொருளாதாரத்தை குழிக்குள் தள்ளி மண் மூடும் நடவடிக்கைகள் பழக்க வழக்கஙக்ள் இதை எல்லாம் வழி வழியாக பாரம்பரியமாக இருந்தவை என்பார் அவற்றைப் பற்றி எல்லாம் சிந்தித்துப் பாருங்கள் கேள்வி கேட்டுப் பாருங்கள் விடை கிடக்கும் கேள்வி கேட்பது மட்டுமே அறிவியல்.
Image result for diwali 2019"
மன்னர் காலத்தில் பிராமண இராஜ குருக்கள் செய்த மூளைச்சலவையே இதன் அடிப்படைகளாக இருந்து பொருளாதாரச் சுரண்டலில் மாதமொரு திருவிழாக்களை தோற்றுவித்து பயமுறுத்தி செல்வ வளத்தை கீழிருந்து மேல் நகர்த்திச் சென்றபடி இவர் படிக்கலாம் இவர் படிக்கக் கூடாது என்றெல்லாம் நிலை நிறுத்தி காய்கள் நகர்த்தியதை கீழடி போன்ற அகழ்வாய்வுகள் தெள்ளத் தெளிவு படுத்தியதை காணலாம்.

பல்லாயிரம் காலம் முன்பே அறிவு செறிவோடு  நாகரீகத்தோடு திட்டமிட்ட கட்டடக் கலையோடு, கல்வி எழுத்தறிவோடு கலை சார்ந்த சமூகமாய் வாழ்ந்த தமிழ் இனத்தை எப்படி கல்வி அறிவே இல்லாமல் மாற்றி இப்போது மறுபடியும் ஓரிரு தலைமுறைகளாக படிக்க ஆரம்பித்திருக்கின்றனர். ஏன் இடையில் என்ன நடந்தது எப்படி இந்த இடைவெளி ஏற்பட்டது...மன்னர் ராஜகுரு மர்மங்கள்தாம் அவை. ஆடு மாடு மேய்த்துக் கொண்டு கைபர் போலன் கணவாய்கள் வழியே வந்து இங்கு குடியேறிய நிகழ்வுகளும் அது முதல் இங்கு இருந்தவர் வாழ்வு ஒண்ட வந்த பிடாரி ஊர்ப்பிடாரியை விரட்டிய கதையும் இதை எல்லாம் சிதம்பரம் போன்ற கோவில்களில் இன்றும் நடந்துவருவதை உச்ச நீதிமன்றமே அங்கீகரித்த கதை எல்லாம் உண்டு.

சங்கராச்சாரிய ஜெயேந்திரர் நரகாசுர வதம் பற்றி பேசிவிட்டு எண்ணெய் ஸ்நானம் பற்றி பேசி, புத்தாடை உடுத்தி பட்சணம் செய்வதை எல்லாம் பேசி இருப்பதை நானும் பார்த்ததுண்டு...அதே நபர் பற்றி அனுராதா ரமணன் என்னும் ஒரு எழுத்தாளர் அவரை சந்தித்துப் பேட்டி எடுக்கச் சென்றபோது என்ன நடந்தது என்பதைப் பற்றி உலகறியச் செய்தார் . இத்தனைக்கும் அவா எல்லாம் ஓரினம்தான்.

அடுத்து இன்னொரு அபாயம் நடக்க ஆரம்பித்துள்ளது கீழிருந்து கிரேன் என்னும் வாக்கு வங்கி, அரசின் சாதிய ஒதுக்கீடு வழியே உயர உயரச் சென்றபடி இருக்கும் ஒரு கூட்டம் மேலும் நடுவிலும் வாழ்ந்து வரும் கூட்டம் ஏதோ இவர்களை வேண்டும் என்றே தடுத்து அழுத்தியதாக அவர்களிடம் மோதலைக் கடைப்பிடித்து தாங்கள் உயர்ந்த நிலைக்கு சென்றுவிட்டோம் நீங்கள் எல்லாம் இனி கீழ் தாம் என்ற குருட்டு மனப்பான்மையில் வாழ்ந்து வருவதும் சண்டை சச்சரவுப் போக்குடன் அன்றாட வாழ்வில் நெருக்குதல்களை ஏற்படுத்தி வருவதும், இனியும் அவர்களுக்கே பணி வாய்ப்புகள், கல்வி வாய்ப்புகள், உதவித்தொகை வாய்ப்புகள் எல்லாம் கொடுப்பதும் பொருளாதாரத்தில் நலிவடைந்த திறமை சாலிகளையும் ஒதுக்கி வருவதுமாக...இதை எல்லாம் சொல்லப்போனால் நிறைய பக்கங்களுக்கும் வருத்தமும் உள்ளதைச் சொன்னால் உடம்பெரிச்சலாமாக இருக்கும்.
Image result for diwali 2019"
தீபாவளியின் ஆட்டங்கள் எல்லாம் மேலும் மேலும் படிப்படியாக ஆண்டுக்கு ஆண்டு குறையட்டும், மனிதர்கள் மகத்துவமாக இது போன்ற சிறு சிறு விஷயங்களில் எல்லாம் கவனம் சிதறடிக்கப் படாமலிருக்கட்டும்

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Wednesday, October 23, 2019

என் நட்பின் நனி சிறந்தவர்கள்:8. பிரவீன்குமார்:கவிஞர் தணிகை.

என் நட்பின் நனி சிறந்தவர்கள்:8. பிரவீன்குமார்:கவிஞர் தணிகை.






 பல ஆண்டுகளுக்கும் முன் பல‌ இளைஞர்கள் என்னுடன் நட்பு பாராட்ட வந்திருந்தனர். ஆனால் அதில் இன்னும் தொடர்பில் இருப்பவர் தங்கவேல் பிரவீன்குமார் ஒருவரே. இவரைப் பற்றி சொல்ல வேண்டியது நிறைய உண்டு. இளமையிலேயே மிகவும் கஷ்டங்களைத் சிரித்துக் கொண்டே தாங்கும் வல்லமை படைத்தவர். நேர்மையை உயிர் மூச்சாகக் கொண்டதால் இவர் மேலும் மேலும் வளர்ந்தபடியிருக்கிறார் எண்ணத்தளவிலும். வாழ்வின் போக்கிலும்.

ஒரு முறை நாங்கள் இருவரும் நடைப்பயிற்சி மேற்கொள்ள எங்களது நாய் ஒன்றையும் அழைத்துக் கொண்டு செல்ல ஆரம்பித்த போதே அந்த முரட்டு நாய் இவர் பிடித்துக் கொண்டிருந்த இரும்புச் சங்கிலியிலிருந்து தப்பித்து ஓடி மற்ற நாய்களைத் துவம்சம் செய்ய ஆரம்பித்தது இவர் விட மாட்டேன் என்ற இறுக்கிப் பிடித்திருந்தவரை கடித்தும் விட்டது. வேறு யாராக இருந்திருந்தாலும் அந்த நட்பு அன்றே அதோகதியாகி இருந்திருக்கும்.

என்னிடம் தியானம் கற்றுக் கொண்டவர், எனது ஏற்ற இறக்கங்களில் பங்கு கொள்பவர். தனது குடும்பத்தின் மேன்மைக்காக, தாயின் மகிழ்வுக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடுக்கவும், நேரிய வழிகளில் எப்போதும்  தியாகம் செய்யவும் தயாராக இருப்பவர்.
என்னிடம் அதிகம் இவர் ஒருவர்தான் நடைப்பயிற்சி செய்தவராக இருப்பார். அப்போது நாங்கள் பேசிய பேச்செல்லாம் நினைவில் வைத்து போற்றத் தக்கவை. எமை வளர்த்தியவை. எங்களது வாழ்வை வளப்படுத்தியவை. நான் ஒரு வேண்டுகோள் வைத்தால் அதை கட்டளையாக மேற்கொண்டு செய்து தனது பரந்த மனப்பான்மையை காண்பிப்பவர் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

எனக்கு பிறவாத உறு துணையாகும்  எனது  ஒருமகனைப் போன்றவர் உற்ற துணையாவார். எங்கிருந்தோ வந்தான் கண்ணன் ...என்று ஒரு சிவாஜிகணேசன் படத்தில்  ரங்கன் என்ற கதாபாத்திரத்தில் ரங்காராவ் பேசுவாரே உணர்வாரே அது போன்ற ஒரு பிரியமான நட்பு எங்களுடையது.

எனைப் போலவே மணமுடிக்கும் முன்பே இளமையிலேயே தந்தையை இழந்தவர்

திருப்பூர், ஹோசூர், காரைக்கால் ஆகிய இடங்களில் இரசாயனத் துறையில் பணிபுரிந்து இப்போது குவெய்ட் நாட்டில்  வாழ்க்கைத் துணையுடன் வாழ்ந்து வருபவர்.

எனக்கு mein kemph ஹிட்லர்,மிர்தாதின் கதை மைக்கேல் ந்யாமி எழுதியது...போன்றவற்றை அறிமுகப்படுத்தி வாங்கிக் கொண்டு வந்து தந்தவர்.

பாண்டிச்சேரி சியாமளன் படங்களான வில்லேஜ்,மற்றும் லூசி, டாவின்ஸி கோட் போன்ற பட வரிசையை எனக்கு அனுப்பி இதை எல்லாம் பாருங்கள் அண்ணா என அந்தப் படங்களை எல்லாம் அனுபவிக்கக் கொடுத்தவர். மேலும் ஷின்ட்லர்ஸ் லிஸ்ட் படம் கூட இவர் தந்ததுதானா இல்லை வேறொரு நண்பர் சொன்னதா என்பது இப்போது தீர்மானிக்க முடியாமல் என் நினைவலைகளில் உள்ளது.




வறண்டு போயிருக்கும் காலக் கட்டத்திலும் கூட இவர் என்னைத்தேடி வந்தால் அந்த நேரம் ஒரு ஊற்று பொங்கிப் பிரவாகமாய் நேரம் போவதே தெரியாமல் போய்விடும்.

வாழ்வின் எல்லாப் பக்கங்களையும் இவருக்கு திறந்து காண்பிக்கலாம் ஆர்வமுடன் கவனித்து உள் வாங்கிக் கொள்வார். இவரால் ஏதாவது பிரச்சனை அதனால் ஏற்பட்டு விடுமோ என்பதற்கான என்ற பய விதைகளுக்கு எல்லாம் அவசியமில்லை.

உற்ற நண்பராக, சிறந்த சீடராக, சரியாக உள் வாங்கிக் கொள்ளும் ஒரு கவனிப்பாளராக மேலும் சக மனிதராக, மனித நேயம் உள்ளவராக தனது குடும்பம் மட்டுமல்ல தன்னைச் சுற்றி உள்ள உலகும் மேம்பட எண்ணிடும் ஒரு நல் உயிராக எந்த வித போலித்தனமுமின்றி தனது உணர்வுகளை வெளிப்படுத்துபவராக இவர் இருப்பது இவர் குணாம்சம்.

நான் தியானம் கற்றுக் கொண்ட ஆண்டில்தான் இவர் இந்த உலகிற்கு தன் தாயின் வயிற்றில் இருந்து நமது பூமியின் மேனியில் அடி எடுத்து வைத்தவர். மேலும் எனது தியான வயதுதான் இவரது வயது.

இவர் மூலம் இவரது குடும்பமே அறிமுகமானது மட்டுமல்ல இவரது நண்பர்கள் வட்டமும், இவரது உறவின் வட்டமும் கூட எனது வட்டத்தில் வந்து கலந்து கொள்ளுமளவு எனது தனி மனிதத்தைப் பற்றி இவர் மதிப்பளித்து அங்கீகரித்து பெருமைப் படுத்தி இருக்கிறார்.

நிறைய சொல்ல வேண்டும் ஆனால் அது எனை நானே சொல்லிக் கொள்வது போல என்பதால் இதுவும் ஒரு பதிவாக நிற்கட்டும் என்றே இத்துடன் முடித்துக் கொள்ள வேண்டியதாகிறது. சில உறவுகளுக்கு வார்த்தைகள் ஈடாகாது. அதன் பொருள் சொல்லி விளக்க முடியாது. அது போன்ற உறவுதான் இது.

Image result for kavignar thanigai


மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Sunday, October 20, 2019

அசுரனைப் பார்க்க வேண்டும் என்கிறார்கள்: கவிஞர் தணிகை

அசுரனைப் பார்க்க வேண்டும் என்கிறார்கள்: கவிஞர் தணிகை

Image result for asuran tamil movie

வெற்றி மாறனும் தனுஷும்  ஒரு நல்ல இணைதான். இவர்கள் ஏற்கன்வே ஆடுகளத்தில் அதை நிரூபித்திருக்கிறார்கள். இப்போது அசுரன். நான் தியேட்டரில் சென்று படம் பார்ப்பதில்லை. இணையத்திலும் பார்ப்பதை நிறுத்தி பல காலம் ஆகிவிட்டது.

காந்தி கர்நாடகாவில் தங்கி இருக்கும்போது வாருங்கள் ஜோக்பால்ஸ் நீர்வீழ்ச்சி அருகில் தான் பார்த்து வரலாம் என்ற போது அதை விட உயரத்திலிருந்து பெய்யும் மழையையே நான் பார்த்திருக்கிறேன் எனவே வரவில்லை என மறுத்தது போல பொழுது போக்கிற்கே நேரம் ஒதுக்க முடியாத காலத்தில் நானும் பிரவேசித்திருக்கிறேன் என்றே நினைக்கிறேன்.

90களில் டில்லிவரை சென்றுவிட்டு தாஜ் செல்லாமல் வந்தவன் நான்.
படம் நன்றாகவே இருக்கிறது எனப் பார்த்தவர்கள் சொல்லக் கேட்கிறேன். என்றாலும் இது போன்ற படங்கள் அந்த அந்த காலக் கட்டத்தில் வந்து ஓடிக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் சமுதாயத்தில் மட்டும் பெரும் மாற்றம் ஏதுமே படங்களைப் பார்ப்பதால் வந்ததாக இல்லை.

பொழுது போக்கு பொழுது போக்காகவே எடுத்துக் கொள்ளப்படுகின்றன. சில வேளைகளில் தேவையில்லாத பின் விளைவுகளை சமூகத்தின் பால் ஏற்படுத்தி விடுவதையும் கண்டு கொண்டிருக்கிறோம்.

காடு இருந்தா  பிடுங்கிக் கொள்வார்கள், பணம் இருந்தாலும் பிடுங்கிக் கொள்வார்கள், கல்வி இருந்தால் மட்டும் எவரும் பிடுங்க முடியாது போய்ப் படிங்க என்று சொல்லும் இந்த முத்தாய்ப்பான அறிவுரை இந்த படத்தின் ஹை லைட்

இது போலவேதான் தேவர் மகன், மகாநதி, நாயகன் போன்ற கமல் படங்களிலும் சொல்லப்பட்டன. அவரும் அரசியல் முத்திரைக் குத்தி ஒன்றும் செய்ய முடியாமல் இருக்கிறார். இந்தியன் இரண்டில் தீவிரமாக ஈடுபடுவதாகச் செய்திகள். ரஜினி அப்படியும் இப்படியும் எண்ணத் தடுமாற்றத்தில் அலைக்கழிப்புகளில் இருக்கிறார்

கல்வி கரையில கற்பவர் நாள் சில‌
மெல்ல நினைக்கின் பிணி பல
தெள்ளிதின் ஆராய்ந்து அமையவே
பாலுண் குருகின் தெரிந்து

என்ற பாடலில் கல்வியின் மேன்மை அழகாக இலக்கணப்பாங்காக சொல்லப்பட்டிருக்கும்
பிச்சை புகினும் கற்கை நன்றே என்பார் அவ்வையார்.
அன்ன சத்திரம் ஆயிரம் நாட்டல்
அதனினும் ஆங்கோர் ஏழைக்கோர் எழுத்தறிவித்தல் என்பார் பாரதி

கேடில் விழுச் செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை
 என்பார் தமிழின் தலைமகன்.
Image result for asuran tamil movie
அதை எல்லாம் படித்துத் தெரியாத உணராத அறியாத மாக்கள் இது போன்ற படத்தைப் பார்த்துதானா மாறி விடப் போகிறார்கள்...சாதி வேறுபாடுகளை வைத்து அவ்வப்போது படம் வந்து கொண்டுதான் இருக்கிறது காதல், கருமாதிக்கு சுடுகாடு இடுகாட்டுக்கு வழி தராமை, அல்லது வேறு சுடுகாடு, தண்ணீர் எடுக்க நீர் நிலைகளை பயன்படுத்த விடாமை இப்படி இப்போது வந்த மகாமுனி கூட இப்படித்தான் இருந்தது.

பூரணத்திலிருந்து பூரணத்தை எடுத்து விட்டாலும் பூரணம் பூரணமாகவே இருக்கும் என்கிறது கல்வி பற்றிய தத்துவம்
அதாவது ஆசிரியரிடமிருந்து எல்லாவற்றையும் நிறைவாக எடுத்து மாணவர்க்கு அளித்த போதும் ஆசிரியரிடமும் மாணவரிடமும் குறையாது அப்படியே இருக்கும் கல்வி மட்டுமே...செல்வத்திற்கு அந்த குணம் இல்லை எடுக்க எடுக்க கொடுக்க கொடுக்க குறைந்து இல்லாமல் போய்விடும்.

எனவே மாறன் தனுஷ் கூட்டணிக்கு வாழ்த்துகள்.
Image result for asuran tamil movie
எனக்கும் கூட எப்படி ஒரு ஆரிய சமுதாயத்திற்கு முன்பே மொழியறிவு நாகரீகத்தில் வாழ்வியலில் முன்னேறியிருந்த தமிழ் சமுதாயம் கல்வி அறிவு அற்றதாக ஆக்கப்பட்டு மறுபடியும் இரண்டு தலைமுறைகளாக கல்விக்கு மாற ஆரம்பித்திருக்கிறது என்பது பற்றிய ஆய்வு செய்ய வேண்டிய அவசியங்கள் உண்டு என்பது

மேலும் இப்போது இது நம்ம ஆளு படத்தில் பாக்கியராஜ் ஒரு இணைப்பை பாலமாக்கிவிட்டு குமரி முத்து கால் மேல் கால் தூக்கிப் போட்டு க்ரூப் போட்டோவில் அமரும்போது சொல்வாரே அது போல சமவாய்ப்புகள் வேண்டும்தான் சமமாக இருக்க வேண்டும்தான் ஆனால் அதற்காக மேல் இருப்பார் என்ற எண்ணத்துடன் மற்றவர்கள் எல்லாருமே இவர்களுக்கு பகைதான் கீழ் தான் என்ற எண்ணத்தில் செயலையும் சொல்லையும் வீசி நிலையைக் காட்டிக் கொள்வாரைப் பார்க்கும்போது சற்று அசூயை எழுவதை சொல்லாமல் இருக்க முடியவில்லை.  இவர்களுக்கும் சரியான கல்வி என்பது வேண்டும்தான். அரசும், வாக்கு வங்கிகளும், சாதிய ஒதுக்கீட்டு முறைகளும் இவர்களைப் பகடைக் காய்களாக மாற்றிக் கொண்டு இவர்கள் பொது இடங்களிலும், அரசு அலுவலகங்களிலும் ஒரு சிலர் அடிக்கும் லூட்டிகளுக்கு அளவே இல்லாமல் போவதையும் காண முடிகிறது. how can we change this?

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Saturday, October 19, 2019

உயிர்க்கு மதிப்பில்லாத நாட்டில் இன்னும் உயிர்ப்போடு இருக்கும் நான்: கவிஞர் தணிகை.

உயிர்க்கு மதிப்பில்லாத நாட்டில் இன்னும் உயிர்ப்போடு இருக்கும் நான்: கவிஞர் தணிகை.
Image result for walking gave a gift of little dog
அன்றும் வழக்கம் போல நடைப்பயிற்சிக்கு சென்றிருந்தேன். லேசான மழை. நல்ல இருள். புதிதாக போடப்பட்ட சாலையின் பாலப் பகுதியின் ஒரு ஓரம் சென்று சிறு நீர் கழித்தபடி இருந்தேன். என்னருகே வெண்ணிறத்தில் ஒரு சிறு குட்டி நாய் வந்து அண்டியது.

அதன் பிறகு சுமார் ஒரு கி.மீ என்னைத் தொடர்ந்தது.  அது எவருடையாதாக இருக்கும் எவர் வேண்டுமானலும் எப்போது வேண்டுமானாலும் எங்கள் பயணத்தை தடுத்து அதை எடுத்துக் கொண்டு சென்று விடுவார்கள் என என்னை ஒவ்வொரு இரு சக்கர வாகனமும் கடந்து செல்கையில் எல்லாம் எதிர் பார்த்தேன் ஆனால் அப்படி ஏதுமே நடக்கவில்லை.

பிரபு கடையில் வழக்கம் போல் சிலர் அந்நேரத்திலும் கூடி இருந்தனர், என்ன சார் நாயுடன்...எனப் பார்த்து இது பெண் பொட்டை நாய் இல்லைன்னா இதை விட்டுவிடுவார்களா? கொண்டு போய் வளர்த்தினால் ஒரு காலத்தில் வீட்டு சுவற்றில் எல்லாம் ஆண் நாய்கள் எல்லாம் வந்து  சிறு நீர் கழிக்கும் என்றார் இராஜேந்திரன் பிரபு காவலர் மற்றும் இப்போது துணை ஆய்வாளர் தேர்வுக்கு கடுமையாக முயன்று கொண்டிருக்கும் பிரபுவின் தந்தை.

வால் சுருண்ட படி இருக்கிறது அதை கொஞ்சம் வெட்டி சாம்பல் போடுங்கள் ஆறி விடும் என்றார்கள். நாங்களும் முன்னால் குச்சி வைத்துக் கூட கட்டிப் பார்த்து விட்டோம் என அவர்கள் நாய் வளர்த்திய அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்...நாய் வாலை நிமிர்த்த முடியுமா என்ற பழமொழியை இவர்கள் அறியார் போலும். நாய் பூனையாக இருந்தால் பெண் வேண்டாம், கோழி, ஆடு மாடாக இருந்தால் பெட்டைதான் வேண்டும். விவசாயிகளுக்கு எல்லாம் இப்படி வியாபார புத்தி வந்ததால் தான் உலகின் நிலை இப்படியோ. எப்படியோ இந்த ஆண்டு மழை பெய்து அனைவரையும் காப்பாற்றி விட்டது. நிலத்தடி நீரும் நன்றாக உயர்ந்து விட்டதாகவே பேசிக் கொள்கிறார்கள்...

 அதன் பின்னும் அந்த நாய்க் குட்டி புதர் வழியும் எனைத் தொடர்ந்து வந்தது மற்ற  பெரிய நாய்கள் ஏதாவது செய்து விடுமோ என்ற நிலை யாவற்றையும் தவிர்த்து  வீடு வந்தோம்.

வேலை இன்னும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது என்றார் இல்லத்தரசி. என்றாலும் அது ஒரு கி.மீக்குக்கும் மேல் எனைத் தொடர்ந்த கதையைச் சொன்னேன்.

அன்பு எனப் பேர் வைக்கலாமா, சபிதாவின் நினைவாக வந்து விட்டதோ என்றெல்லாம் நினைத்தேன். மகனோ குல்பி எனப் பேர் வைக்கலாம் என்றார். ஏன் எனிலி பனி போன்ற ஒரே வெண்ணிறத்தில் இருக்கிறதாம்.

நாய் வளர்த்த ஆசைதான். ஆனால் அதன் கழிவுகளையெல்லாம் எடுக்க வேண்டுமே...இன்று  எங்கள் பூனை செல்ப் மேல் சுவரில் ஏறி எச்சமிட்டிருந்ததை எடுத்தேன். நாய்களுக்கும் பூனைகளுக்கும் பறவைகளுக்கும் இது போன்ற மழைக்காலம் அடை மழைக்காலம் அவ்வளவு ஏற்புடையதல்ல.

நல்ல வேளை இந்த நாய் நன்றாகவே இருக்கிறது இனி வரும் காலத்தில் எப்படி இருக்குமோ...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Friday, October 18, 2019

திருச்சி தேசியக் கல்லூரியில் விடியல் நண்பர்கள் சந்திப்பில் காந்தியம் ஒரு வாழ்வியல் நெறி: கவிஞர் தணிகை.

 திருச்சி தேசியக் கல்லூரியில் விடியல் நண்பர்கள் சந்திப்பில் காந்தியம் ஒரு வாழ்வியல் நெறி: கவிஞர் தணிகை.

Image may contain: குகன், standing

கடந்த 12.10.19 அன்று திருச்சி தேசியக் கல்லூரியில் விடியல் நண்பர்கள் சந்திப்பில் என்னை காந்தியம் ஒரு வாழ்வியல் நெறி என்ற தலைப்பில் பேச அழைத்திருந்தார்கள்.அன்றைய தினம் எனக்கு திருவள்ளுவர் விருது வழங்கப்பட்டது.

விடியல் குகன்  என்னும் எனதினிய நண்பர் முன்னின்று ஒருங்கிணைப்பு செய்து நடத்தி வரும் விடியல் நண்பர்கள் குழுவில்  சமுதாயத்தில் மேல் நிலையில் உள்ள நீதிபதிகள், வழக்கறிஞர்கள் கல்லூரி பிரமுகர்கள், உருமு தனலட்சுமி கல்லூரியின் முதல்வர், தேசியக் கல்லூரியின் உடற்பயிற்சி இயக்குனர் மற்றும் பல மாவட்டங்களில் இருந்தும் பிரதிநிதித்துவம் செய்த 60  பொறுக்குத் தரமான மனிதர் அடங்கிய சபை அது. அறிவார்ந்த சபையும் கூட.
Image may contain: one or more people and people standing
எனக்கு நல்லதொரு ஊக்குவிப்புத் தொகையுடன் மரியாதை செய்யப்பட்டது. பிறகென்ன கரும்பு தின்ன யானைக்கு கூலியா கொடுக்க வேண்டும். அது ஒரு நல்லதொரு அரிய உரையாக அமைந்தது. எவ்வளவு நேரம் பேசினேன் என குறிப்பு எடுத்து வைக்கவில்லை எனினும் எந்தவித நேரத் தடையும் தடங்கலும் இன்றி பேச அனுமதிக்கப்பட்டேன். ஆனால் இது போன்ற தலைப்பில் சில மணி அல்லது ஒரு மணி பேசுவதெல்லாம் சரியில்லை ஒரு பத்து நாளாவது ஒர் மணி நேரம்  பயிற்சி வகுப்பாக எடுத்தால் மட்டுமே சற்று இதன் தலைப்பு சார்ந்த கருப்பொருளை விளக்கி வைக்க முடியும். என்றாலும் அவர்கள் எல்லாம் பாராட்டும் வண்ணம் இந்த சிறிய காலத்திலேயே மிகவும் தெளிவாக அற்புதமாக பேசியதை அனைவரும் உள் வாங்கிக் கொண்டனர். ஒரு கவிதை படித்த பெண் பேசுவதற்காகவே பிறந்திருக்கிறீர்கள் என்ற வார்த்தையை ஒரு பாராட்டாக வழங்கினார் இதை விட சுருக்கமாக அந்த உரை வீச்சை எவரும் கணக்கிட்டு விட முடியாது

பேசிய அனைத்தையும் என்னால் பதிவிட முடியாது என்ற போதிலும் முடிந்த வரை பதிவிட வேண்டும் என்றே எண்ணுகிறேன். ஏன் எனில் அந்தக் காலத்தை பிடித்து வைக்க முயல்தல் ஒன்றும் தவறில்லையே... என்றாலும் எவரும் மிக நீண்ட பதிவு என்ற நோக்கத்தில் படிக்காமல் விட்டு விட்டால் அது அவர்களைப் பொறுத்தே அமையும். எனவே சற்று சுருக்கமாகவே எழுத விழைகிறேன்.
Image may contain: 2 people, people smiling
எர்த் ப்ரொவைட்ஸ் எனப்ஃ டு சேட்டிஸ்பை எவரி மேன்ஸ் நீட்ஸ், பட் நாட் எவரி மேன்ஸ் க்ரீட்....ஆங்கிலத்தில்.Earth provides enough to satisfy every man's needs, but not every man's greed.If you want to change the world change yourself.

டாக்டர் மு.வ சொல்வார் தனது நாவல் ஒன்றில்: உலகெங்கும் ஒரு ஓட்டப்பந்தயம் நடைபெறுகிறது இதில் முன் வருவார்க்கு முதல் பரிசை கொடுக்கிறது இந்த முடிவை மாற்றி கடைசியாக வருவாரிலிருந்து பரிசு கொடுப்பதை மாற்றி அமைக்க வேண்டும் என்பார்

தற்போது கூட வாட்ஸ் ஆப் குழுவில் மாற்றுத் திறனாளிக் குழந்தை ஒன்று ஓட்டப்பந்தயத்தில் கடைசியாக கைக்கட்டை ஊன்று கோலுடன் ஓட முயற்சித்து வருகிறது விழுகிறது வெற்றிக் கோட்டை எட்ட அருகில் சென்ற அத்தனை குழந்தைகளும் திரும்பி ஓடி வந்து அந்தக் குழந்தையை எடுத்து அதனுடன் சென்று அனைவரும் முதல் பரிசை பெறுகின்றனர்.
Image may contain: 1 person, standing
ஏன் ஒரு சூரியா படத்தில் கூட இப்படி சிலருக்கு பரிசு வழங்குவதை ஆட்சேபித்து வெளியே வந்து அனைவர்க்கு பரிசு கொடுக்க வேண்டும் அதுவே சரி என்பதாக இருக்கும்.

ஏன் விடியல் சந்திப்பில் கூட கலந்து கொள்ள வரும் அனைவரையுமே மன நிறைவையும் திருப்தியும் அடைய வைத்தே அனுப்புகிறார்கள் என்று முன்னுரையாகக் குறிப்பிட்டு விட்டு தலைப்பில் புகுந்தேன்.
Image may contain: 4 people, people standing, people sitting and indoor
நெறி என்றால்: ஒழுங்கு, கற்பு, முறை, நீதி இப்படி தமிழ் சொல்கிறது.
ஆறு கரையில் அடங்கி நடந்திடில் காடு வளம் பெறலாம்....வாகனத்தை இயக்கும்போது இருக்க வேண்டிய கட்டுப்பாடு, இப்படி சொல்லி விட்டு நெறிப்படுத்த வேண்டியவர் எல்லாம் யார் என்றால் : பெற்றோர், ஆசிரியர், நாடு, தலைமை, நட்பு போன்றவரே நெறிப்படுத்த முடியும்.
Image may contain: 5 people, people smiling, people sitting and indoor
நகுதல் பொருட்டன்று....அக நக நட்பது....நட்பில்...

இப்போது சி.சி.டி.வி என்பது எதற்கு ...நேர்மையின் மதிப்பு எவ்வளவு... பைபிளில் மனித ஆயுள் 900 ஆண்டுகள் என்பதை நேர்மையின்மையை பார்த்த இறை 120 ஆக குறைத்தது என்றும் காந்தியும் 120 ஆண்டுகள் வாழ்வேன் என்று கூறியதையும் குறிப்பிட்டேன். காந்தியம் என்பது காந்தி என்ற தனி மனித வாழ்வு மட்டுமல்ல அது ஒரு உலகளாவிய தவம் என்பதை எடுத்துக் கூறினேன்.

உடல் என்னுடையது, உடல் உண்மையிலேயே உன்னுடையதுதானா? உடை , உணவு, கல்வி, புத்தகம்,பை, பணம் சொத்து இவற்றின் பால் பித்து...இவற்றின் ஆரம் அதிகரித்து அதிகரித்து சுயநலம் என்ற ஒரே சிறு விசை முதலாளித்துவம் என்ற பெரு விசையை ஏற்படுத்தி விட  அதில் புவியடக்கம். பாதிக்கும் மேலான உயிர்களுக்கும் உணவு குடிநீரும் கூட இல்லை . கிரெட்டா தன்பெர்க் 16 வயது சிறுமி உலகத் தலைவர்களை எல்லாம் எள்ளி நகையாடி இருக்கிறாள்.
Image may contain: 1 person, standing and food
ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் சொல்லி இருக்கிறார்: பூமி முடிந்து விட்டது. விரைவில் வேறு கிரகத்தில் குடியேறுங்கள் என்கிறார் மனித குலத்தை. ஆதலால் சந்திரன், செவ்வாய், எட்ட முடியாக் கோKகள்,(totally saturn's moon until now is discoverd is 82 it is the highest number of moon having planet in our solar family) சனியின் 20 வது நிலா எல்லாம் சேர்ந்து 82 நிலாக்கள் எல்லாம் கண்டுபிடிப்புகளாக...காந்தியின் வார்த்தையை இங்கு நினைவில் கொள்ளலாம் அது மனிதரின் தேவைக்கேற்ப பூமியில் யாவும் கிடைக்கிறது பேராசைக்கேற்ப எல்லாம் கிடைக்குமா?

முதல் ஆதி தத்துவம்...முதலாளி தத்துவம் முதல் ஆதித் துவம் துவம், துவி: என்றால் இரண்டு: முதலாளித்துவம்...தொழிலாளித்துவம்...உழைப்பே மூலதனம். மூளைக்கும் அறிவுக்கும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் என்றால் ஆற்றலுக்கு காந்திதான்

19 ஆம் நூற்றாண்டு தந்தது: மார்க்ஸையும் கம்யூனிசத்தையும் 20 ஆம் நூற்றாண்டு தந்தது: காந்தியம்.
நெறி: தீயின் நெறி: எரித்தல், நிலத்தின் நெறி: பொறுத்தல், நீரின் நெறி: உயிர்ப்பித்தல் காற்றின் நெறி: உணர்த்தல் காந்திய நெறி என்பது: கடையனையும் கடைத்தேற்றல், அர்ப்பணித்தல், தியாகத்தால் சாதித்தல், சகித்துக் கொள்ளல்.
Image may contain: 4 people, people sitting and indoor
இன்னா செய்தாரை ஒறுத்தல்:; நெல்சன் மாண்டேலாவின் சிறை வாழ்க்கையில் அடித்து துன்புறுத்தி குடிக்க நீர் கேட்ட போது தன் முகத்தின் மேல் சிறு நீர்கழித்த  ஜெயில் வார்டனுக்கு அவர்  தென் ஆப்பிரிக்காவின் தலைவராக மக்கள் அங்கீகாரத்துடன் அரசாட்சியில் இருந்தபோது பாதுகாப்பு படை வீரர்களுடன் சென்று உணவருந்தும் இடத்தில் தனியாக இருந்த அவரையும் அழைத்து உணவருந்தச் செய்து அதற்குண்டான பணத்தைக் கொடுத்து அவரது கை நடுக்கம் தாம் ஏதாவது செய்து விடுவோமா என்ற பயமே என தன்னுடன் வந்தார்க்கு விளக்கி கூறியது...

காந்தி ஸ்மேட்ஸ் சம்பவத்தில் காந்தியை மலம் கழிக்கும்போது பூட்ஸ் காலால் உதைத்த  ஜெயில் வார்டனுக்கு செருப்பு தைக்கும் தொழிலை சிறையில் கற்று முதல் பூட்ஸை அவருக்கு பரிசளித்தது அதை அவர் இங்கிலாந்து சென்றும் போடாமல் பிரார்த்தன அறையில் வைத்து வணங்கியது போன்றவை சொல்லப்பட்டது
Image may contain: 8 people, people sitting and shoes
ஒபாமா நோபெல் வாங்கிய உடன் யாரை சந்திக்க அவா என்ற கேள்விக்கு நாலைந்து முறை நோபெலுக்கு பெயர் பரிந்துரைக்கப்பட்ட போதும் கிடைக்காத காந்தி பேர் சொல்லி அவருடன்  பேசிக் கொண்டே காலைச் சிற்றுண்டி அருந்த ஆசைப்பட்டது..

ஒரு பெருங்கடலை ஒரு மாபெரும் சமுத்திரத்தை 60000 பக்கங்களில் சொல்ல முயன்றதை சிறிய கால அளவில் சொல்ல முனைவது...

கலாம் சீடர்களாகிய நாங்கள் சொல்லும் வழக்கமான : பூங்கா, வெட்டுக்கிளி, மான்,தேனீ அத்துடன் மனிதரிடம் இருக்கும் பகவத் கீதையில் சொல்லப்பட்ட சத்வ, ரஜோ, தமோ...
Image may contain: 6 people, including குகன், people sitting and shoes
பொய்யாமை பொய்யாமை ஆற்றின்... சொல்லி காந்தி ஹரிச்சந்திரா, இராமாயணம், வைதிகத் தாய், புலால் உணவு, மது, புகை மாது தொடமாட்டேன் என இலண்டன் பாரிஸ்டர் படிக்கச் சென்ற போதே பகவத் கீதை, தாய் சொல்லைத் தட்டாதே என வாழ்ந்தது அந்தக் காலத்தில் கடல் கடந்து போவதின் விளைவு, கோவிலுக்குச் செல்ல தடை ..
Image may contain: Tanigai Ezhilan Maniam, hat
காந்தியின் தூண்டு உணர்வாளர்கள் பலர்: டால்ஸ்டாய், ரஸ்கின், கோகலே, தாகூர், அதில் தில்லையாடி வள்ளியம்மாள் வயது: 16. போராட்டத்தில் தென் ஆப்பிரிக்காவில் சிறை சென்று உயிர் இழந்தது, முத்துலட்சுமி ரெட்டி மருத்துவர் இருவருமே தமிழர்கள். வைகைக் கரையில் குளிக்கும்போது மேலாடையை இழக்க காரணமாக பெண்கள் ஆற்றங்கரையில் இருந்தது... தமிழ் கற்க ஆசிரியர் நியமித்துக் கற்றது, இரு கைகளாலும் எழுதக் கற்றது, விவசாயப் பண்ணை, ஆஸ்ரமங்கள், யங்க் இண்டியா, இண்டியன் ஒப்பீனியன், -ஹரிஜன் பத்திரிகை நடத்தியது, சமையல், பஜனை, பிரார்த்தனைக் கூட்டங்கள், துப்புரவுப் பணி, போராட்டங்கள், சத்தியாக்கிரகம், சிறைத்தவம், உண்ணாநோன்பு அஹிம்சையும் வாழ்வு என வாழ்ந்தது, விமானப் பயணம் செய்யாதது, ஜோக் பால்ஸ் நீர்வீழ்ச்சியை விட விண்ணிலிருந்து வரும் மழையையே பார்த்திருக்கிறேன் என வாழ்வில் ஓய்வையும் மகிழ்வுக்கான பொழுதுகளையும் புறக்கணித்தது

வின்ஸ்டன் சர்ச்சில் போன்ற அறிவாளிகள் இருக்கும் காலத்தில் வாழ்ந்து உலகெலாம் பிரதமர் என்றால் அது காந்தி எனப் பேர் பெற்றது அவரது தூண்டு உணர்வுடன் அடியேனாகிய நானும் கூட பாலமலையில் ஒர் கிராமத்தில் பள்ளியருகே அரசால் கட்டி மக்களால் பாழடிக்கப்பட்டிருந்த 8 கழிவறைகளை துப்புரவு செய்யும்போது அவர் எப்படி காந்திய மாநாடு நடந்த இடத்தில் அவர் அப்போது எவர் என்றே தெரியாத போது அருகிருந்த வீடுகளில் முறம் துடைப்பம் கொண்டு மலம் வாரி அப்புறப்படுத்தியது நினைவிலாட கைகள் வைத்தே மலத்தொட்டியை சுத்தம் செய்தது...
Image may contain: 1 person
திருப்பூர் குமரன், லால்பகதூர், காமராஜ், வினோபா பவே, ஜெபி, கிருபாளினி, மொரார்ஜி, பகத், சுபாஷ், அம்பேத்கர், மோதிலால், ஜவஹர்லால், வல்லபாய் படேல் பாரதி, சிதம்பரம், சிவா, மித வாதம், தீவிர வாதம்....

13 வது வயதில் 14 வயது கஸ்தூரிபாவை மணந்தது, 2 முறை தாசி வீடு சென்றது, மூத்த மகன் ஹரிலால் குடிகாரராக ஏன் இருந்தது என்ற விளக்கம்... உண்ணா நோன்பு மருத்துவம் , நீர் சிகிச்சை, மண் சிகிச்சை, கூனே மெத்தெட் 8 முறை கொலை செய்ய முயற்சியில் 7 முறை தப்பியது, 8 வது முறை சுடப்பட்டு இறந்தது தென் ஆப்பிரிக்காவிலேயே கொலை முயற்சியில் பற்கள் எல்லாம் உடைக்கப்பட்டு சாலையில் இருந்தோர் வந்து காத்தது...பண்ணை விவசாய முறைகள், கூட்டுறவு விவசாய முறைகள், கிராமியப் பொருளாதாரம், அடிப்படையிலான வாழ்க்கை முறைகள்...ராமராஜ்ஜியக் கனவுகள்..சத்தியாக்கிரகம், ஒத்துழையாம, வெள்ளையனே வெளியேறு, செய் அல்லது செத்து மடி சட்டமறுப்பு இயக்கம், சௌரி சௌரா கட்டுக்கு அடங்கா கூட்டம், தண்டி, வேதாரண்யம் நீதிமன்றட்தில் நீதிபதிகளே எழுந்து நிற்பது அவர் செல்லும்போது...

மதுவே எல்லா பாவங்களுக்கும் அடிப்படை என்ற சத்யமான காந்தி சிரவணன், ஹரிச்சந்திரா, விஸ்வாமித்திரர், இராமயாணம், போன்ற கதைகளிலிருந்து உருவான ஒரு சத்திய வரலாறு சாத்தியமான வரலாறாக இந்தியாவில்.

3 குரங்கு பொம்மை...ஆயிரம் வழி அழிவுக்கு, ஒரே வழிதான் ஆக்கத்துக்கு. அது காந்திய நெறிக்குத் திரும்புவதும் கிராமிய வாழ்வின் உன்னத வாழ்வின் முறைக்கு மாறுவதும்தான்...அதை நமது மக்களும், அரசுகளும் செய்ய நாம் என்ன செய்யப்போகிறோம்?

தோன்றின் புகழொடு.... தோன்றுக...
Image may contain: people sitting and indoor
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.