Sunday, April 30, 2017

அமரேந்திர பாஹுபலி மகேந்திர பாஹுபலி சூ மந்திரக் காளி: கவிஞர் தணிகை

அமரேந்திர பாஹுபலி மகேந்திர பாஹுபலி சூ மந்திரக் காளி: கவிஞர் தணிகை


Image result for baahubali 2

பாஹுபலி என்ற மகாவீரரின் சிரவணபெலகொலா, தர்மஸ்தலாவில் உள்ள சிலை ஜைன மத போதகரை வழிகாட்டியைக்குறிக்கும் அது நடந்த கதை.அது ஒரு சரித்திரம். வரலாறு. அவர் நிர்வாணக் கோலத்தில் இருப்பார். எதுவும் இந்த உலகத்தில் தேவையில்லை என இடையில் கட்டியிருந்த பட்டு வேட்டியைக் கூட ஒருவர் கேட்டார் என உருவிக் கொடுத்து விட்டு அப்படியே தவக் கோலத்தில் நிற்பார், காலங்கள் மாறும் அந்த உருவத்தில் மேல் கொடிகள் ஏறும், கரையான் புற்றுமாய் மாறும் இப்படி காலத்தை நின்று தமது தவத்தால் வென்றதால் அவர் புத்தரை விட பெரு நெறியாளர் என போற்றப்பட்டு கடவுள் நிலைக்கு உயர்த்தப்பட்டவர், இவர் அண்ணன் மஹாவீரராய் இருந்து உலகையெலாம் வென்று முடித்து கடைசியில் தர்ம ஆட்சியாய் தமது ராஜ்ஜியத்தை ஆண்டுவந்த பக்கத்து இராஜ்ஜியம் தமது தந்தையால் பிரித்துக் கொடுக்கப்பட்டு ஆண்டு வரும் தம்பியையும் வெல்ல மண்ணாசையால் போருக்கு அழைக்கிறார். ஆனால் எதிர்பாராத விதமாக பெரும் வீரரான‌ அண்ணன் வீழ்கிறார். தம்பி வெல்கிறார்.

Related imageImage result for shravanabelagola

ஆனால் தம்பி  பாஹுபலி அண்ணன் கேட்டிருந்தால் கூட கொடுத்திருப்பேனே? என்னிடம் சண்டையிடத் தான் வேண்டுமா? அதுவும் தமது சொந்த மூத்த சகோதரனே என வெறுத்து வாழ்விலிருந்தே விலகுவதுதான் பாஹுபலியின் வாழ்க்கைச் சுருக்கம். எனவே அவர்தான் மஹாவீரரான பாஹுபலி.அந்தக் கதையல்ல இது.ஆனால் அந்தக் கதை போன்றதுதான் இதுவும்.

இதில் உலகை வெல்வதை விட தன்னை வெல்வதே வீரம். என இந்த மஹாவீரர் பாஹுபலி அனைவருக்கும் வாழ்ந்து சொன்ன சேதிதான் அவர் வாழ்க்கை வரலாறு. இது அவர் பற்றி அறிந்த அனைவருக்கும் முக்கியமாக் ஜைன மதத்தினருக்கும் தெரியும். எனவே அந்த ட்ராக் வேறு அது சொல்வது தியாகம் மனித வழிகாட்டுதல் நெறியாள்கை எல்லாமே.

இந்த வரலாறை கொஞ்சம் கதையாக பெரும்பாலும் முடிவுகளை திரைக்கதையாக மாற்றி, ராஜ மௌளி குடும்பத்தார், மாமன், மனைவி, மகன்,மாமனார், இப்படி ஒரு பெரும் குடும்பம் படமாக ‍பாஹுபலி  முதல் பாகம், இரண்டாம் பாகம் என எடுத்து நிறைய பொருட் செலவு செய்து இப்போது இலாபத்தை வசூலில் அள்ளிக் குவித்து வருகின்றனர்.

ஜகன்மோகினி என்ற பேய் படத்தை எடுத்து விட்டலாச்சாரியா போன்ற தெலுங்கு இயக்குனர்களும் பந்த்லு(நல்ல இயக்குனர்தான் இவர் படஙக்ள் பல பெரும் வெற்றிப் படஙக்ள் தமிழிலும்) போன்ற இயக்குனர்களும் செய்த அதே வேலை இப்போது ராஜ மௌலி என்ற இயக்குனரால் இரண்டு பாஹுபலி பட பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது.

இதில் மஹாபாரதத்தில் வரும் பங்காளி சண்டை போல, ஆனால் இதில் தம்பி நல்லவர் மக்கள் செல்வாக்கு பெற்றவர் கர்ணன் போல ஆனால் நிஜ பாஹுபலி போல....

மகிழ்மதி நாடு, கோட்டை, எல்லாம் கிராபிக்ஸ் பலி,கட்டப்பா,சண்டை பல்வாழ்தேவன் , பிங்கள தேவன் அல்லது பிஜ்ஜிலி தேவன் எல்லாம் நாடகபாணியில் வழக்கம் போல...கொஞ்சம் கிளேடியேட்டர், கொஞ்சம் ஹாரி பாட்டர், இப்படி எல்லாம் கலந்த கலவைதான் இந்த இந்தியாவின் மாபெரும் படமாக பேசப்பட்ட இரண்டு பாஹுபலிக்களும்.

 இராமாயண கைகேயி பாத்திரம் தான் இந்த இராஜமாதா ரம்யா கிருஷ்ணனின் ரம்யாதேவி கேரக்டர், இந்த இரண்டாம் பாகத்தில் தமன்னாவைக் காணவில்லை. படம் முழுதும் அனுஷ்காவும் அமரேந்திரபூபதி என்னும் பிரபாசும், ராணாவுக்கும் முடிவில் கொஞ்சம் வலு சேர்த்திருக்கிறார்கள்.

மொத்தத்தில் பிங்கள தேவன் நாசரும், கட்டப்பா சத்யராஜும் இல்லாமல் படம் இல்லை எனவேதான் கர்நாடக வாட்டாள் நாகராஜ் சத்யராஜுக்கு எதிரான குரலை எழுப்பி 8 ஆண்டுக்கும் முன் பேசிய பேச்சுக்கு கர்நாடகமாய் கெடு விதித்து வணிகத்துக்கு ஒரு தடையை ஏற்படுத்தியது. புத்திசாலித்தனமாக சத்யராஜ் கட்டப்பாவை வாழ வைத்து விட்டார்.

மொத்தத்தில் இது போன்ற பிரம்மாண்டமான படங்களை ஊக்குவிக்கக் கூடாது. இது மற்றும் 2.0 படங்களை பார்ப்பதை விட கடுகு, எட்டுத் தோட்டாக்கள், கடம்பன் ஜோக்கர் போன்ற படங்கள் வரவேற்கத் தக்கவை. வெறும் கற்பனை, பொழுது போக்கு என்ற சாரம்சத்தை விட சமூக பிரச்சனை சார்ந்த படத்துக்குத்தான் முன்னுரிமை அளிக்க வேண்டும். இன்று இந்தியா இருக்கும் நிலையில்.

ஆங்கிலம், வேற்று மொழிப்படங்களானால் இரசிப்பீர் நமது நாட்டில் அப்படி எடுத்தால் ஏன் இப்படி விமர்சனம் செய்கிறீர், அல்லது இரசிக்க மாட்டீரா என்னும் கேள்விக்கு எனது பதில்: மக்கள் எழுச்சிக்காக எதையவது செய்வதை விட்டு விட்டு சினிமாக்கலையை வீணடிக்க இப்படி செய்வதும், மக்களை சுயநல இலாபத்துக்காக மழுங்கடிப்பதும் ஏற்க முடியாதவை. இன்னும் என்ன கத்தி, வாள், கேடயம், கதை என ஆய்தங்கள் அவரவர் இரசாயன குண்டுகளை, ஏவுகணைகளை, அணுகுண்டுகளை ஏவ தயாராயிருக்கும்போது இன்னும் பழைய காலத்துக்கு மக்களை கொண்டு செல்வது நம்மை திரும்பிப் பார்க்க வேண்டுமானால் வைக்க உதவும் .அதிலும் இந்த பாஹுபலியில் எல்லாம்  சுட்ட கதை. புதிதாக ஏதுமே இல்லை.

பொதுவாகவே இதை தியேட்டரில் வந்து பார்க்கச் சொல்வது 2000 அல்லது 3000 டிக்கட் என்பது இவை எல்லாம் தேவையில்லாதவை. ஒரு கற்பனைச் சினிமாவுக்கு இவ்வளவு செலவு எல்லாம் செய்யத் தேவையில்லை.

அதுவும் 3 ஆம் உலகப் போர் மூண்டுவிடுமோ என்ற காலக் கட்டத்தில் உலகே நடுங்கிக் கிடக்கும்போது,இந்தியாவில் மோடியாட்சி தலைவிரித்தக் கோலத்தில் நடந்து கொண்டிருக்கும்போது தமிழகத்தில் பன்னீர் தான் ரொம்ப சுத்தம் எடப்பாடி ரொம்ப அசுத்தம் என சாத்தான்கள் வேதம் ஓதிக் கொண்டிரும்போது மக்கள் சொந்தப் பிரச்சனையை விடுத்து சினிமாவில் மூழ்குவது அவசியமில்லாதது. மேலும் கத்தி சண்டை, வில், வாள், கட்டாரி, இராஜா, மந்திரி, இராஜ குரு, இராஜ மாதா சூழ்ச்சி, தந்திரம், சாணக்ய தந்திரம் , இராஜ தந்திரம் என்றெல்லாம் சொல்லித்தான் எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா போன்றோர் வந்து நாட்டைக் கெடுத்து குட்டிச் சுவர் ஆக்கிவிட்டார்கள்.

இன்று மதுவுக்கு எதிரான ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டு கடைகளை சூறையாட தாய்மார்கள் எங்கும் தயாராகி விட்டார்கள். இப்போது கடையை எடுத்து விட்டால் எடப்பாடிக்கு நல்ல பேர் கிடைக்கும்.

பேசாமால் இந்த அமரேந்திர பாஹுபலி கட்டப்பாவால் முதுகில் குத்தப்பட்டு இராஜாங்க கடமையை நிறைவேற்றி விட்டு அவர் குழந்தைக்கு வாழ்க்கையை கொடுத்த கட்டப்பாவை மாநிலத்தில், மகேந்திர  பாஹுபலியை மத்தியில் ஆள ஆட்சிக்கு தேர்ந்தெடுக்கலாம், மோடிக்கும் தமிழக அரசியலார்க்கும் அது பேதி கொடுக்கும்.

Related image


தியேட்டரில் தான் சென்று படம் பார்க்க வேண்டும் எனச் சொல்ல அரசுக்கோ, இந்த திரையுலகை சார்ந்தார்க்கோ எந்த தகுதியுமே இல்லை.

எனக்குத் தோன்றியதை சொல்லி விட்டேன்/
மற்றபடி உங்கள் விருப்பம்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

மற்றபடி படம் நன்றாக வர பிரம்மாண்டமாக அமைய நிறைய உழைத்திருக்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. கதை வெறும் காதில் பூ சுற்றும் இராமாயண மஹாபாரதக் கதைதான்.

இராஜ்ஜியத்திற்காக எடப்பாடியும் பன்னீரும் மோதுவது போல இதுவும் ஒரு பங்காளி மோதல்.

Friday, April 28, 2017

இந்தியாவில் வாய்ப் புற்று நோயால் ஒர் மணி நேரத்துக்கு 14 இறப்புகள்: கவிஞர் தணிகை.

இந்தியாவில் வாய்ப் புற்று நோயால் ஒர் மணி நேரத்துக்கு 14 இறப்புகள்: கவிஞர் தணிகை.




விநாயகா மிஷன்ஸ் சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரி,அன்ன பூர்ணா மருத்துவக் கல்லூரிகள் வழியாக  சென்னை அப்போலோ கேன்சர் இன்ஸ்ட்டிடியூட், சேலம் மாநகர பல் சிகிச்சை,காது, மூக்கு , தொண்டை பொது பல் மருத்துவர்களுக்காகவும் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்காகவும் வாய்ப் புற்று நோய்க்கான‌ அறுவை சிகிச்சை நேரடி செய்முறை விளக்கம், மற்றும் அவர்களுக்கு பயிற்சி அளிக்க ஒரு நாள் பயிலரங்கை கடந்த 22.04.1017ல் நடத்தியது.



இந்த பயிலரங்கில் முக்கிய விருந்தாளியாக சென்னை அப்போலோ கேன்சர் இன்ஸ்டிடிடியூட்டின் முது நிலை புற்று நோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சி.எஸ்.மணி கலந்து கொண்டு பயிற்சி அளித்தார்.

ஏழை மனிதனின் புற்று நோய் என்றாலே அது வாய்ப்புற்று நோய் என்றும் உலக அளவில்  வாய்ப்புற்று நோய் புற்று நோய்களில் 11 ஆம் இடத்தில் இருந்தாலும் இந்தியாவில் அது முதலிடத்தில் இருந்து வருவதுடன் மணிக்கு 14 இறப்புகள் நிகழவும் காரணமாயிருக்கிறது. மேலும் இந்தியாவில் 10 பேருக்கு புற்று நோய் இருக்கிறது என்று கண்டறிந்தால் அதில் 4 பேர் வாய்ப்புற்று நோய் உடையவராகவே இருக்கின்றனர் என்பதும் புகைப்பார், மதுபான அடிமைகள் போன்றோர்க்கு ஒரு அபாய அறிவிப்பாகும். போன்ற செய்திகள் இதன் தலையாய பொருளாக எடுத்து சொல்லப்பட்டன.



புகையிலை பொருட்களின் பயன்பாடும் அத்துடன் அளவு கடந்த மதுபான நுகர்ச்சியுமே இதன் முக்கிய காரணங்கள். இவற்றைக் கட்டுப்படுத்தினாலே இந்த நோயைக் கட்டுப்படுத்த முடியும். இவை பற்றிய விழிப்புணர்வு அதிகரிக்கப்படுமானால், ஆரம்ப கட்டத்திலேயே எளிதாக சிக்கனமாக இந்த நோயைக் கண்டறியவும் பாதிப்புகளிலிருந்து தடுக்கவும் முடியும் என வல்லுனர்கள் தெரிவித்தனர்.



எளிதாக சுலபமாக மருத்துவ சிகிச்சை அளிக்கும் வசதி வாய்ப்புகளும்,
புகையிலை மதுபானக் கட்டுப்பாடும் இதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.

வாய்ப்புற்று நோய் அறுவை சிகிச்சை
1. குறைவான செலவிலும்
2. சிகிச்சை கால அளவு குறைந்திருப்பதும்
3. செயல் திறன் இழப்பை குறைப்பதும்
4. எளிதாக மறு வாழ்வு பெற்று இயல்பு நிலை வாழ்வுக்கு திரும்ப வைப்பதும்

இவை யாவற்றையும்



செய்ய இந்த முன்னேறிய அறுவை சிகிச்சை நிபுணத்துவ‌ மருத்துவ முறைகள் பயனளிக்கின்றன என்பது இந்த ஒரு நாள் பயிலரங்கின் ஆதார சாராம்சம்

இந்த மருத்துவ சிகிச்சை முறைகளில் சென்னை அப்போல்லோ கேன்சர் இன்ஸ்டிடியூட் வினாயகா மிஷன்ஸ் சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரியுடன் இணைந்து கையுடன் கை சேர்த்து பயணம் செய்ய ஆரம்பித்திருக்கிறது



ஆரம்ப நிலையில் ஆங்காங்கே இந்த அறுவை சிகிச்சைகள் நடத்தப் படலாம் என்பதும், அதை மீறிய நிலையில் சென்னை அப்போலோ கேன்சர் இன்ஸ்ட்டிடியூட்டுக்கு அந்த வகையான அறுவை சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளை தெரியப்படுத்தினால் அதை செய்து கொடுக்க நல்ல சிகிச்சை அளிப்பதில் அப்போல்லோ ஆர்வமாக இருக்கிறது என்பதும் இந்த பயிலரங்கு மூலம் தெரிவிக்கப்பட்டது.


இந்த பயிலரங்கிற்கு அன்னபூர்ணா மருத்துவக் கல்லூரியின் தலைவர் டாக்டர் என்.மோகன் தலைமை தாங்கினார்..விநாயாகா மிஷன்ஸ் சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் ஜா பேபிஜான் வாய் மற்றும் முகத்தாடை அறுவை சிகிச்சைப் பிரிவின் தலைமைப் பேராசிரியர்  டாக்டர் ரீனா ஜான் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்

பயிலரங்கில் தமிழ் நாடு பொது அறுவை சிகிச்சை நிபுணர்கள் குழு அமைப்பின் தலைவர் டாக்டர்  ஜி.வி சிவலிங்கம்,மற்றும் செயலாளர் டாக்டர் சுந்தரமூர்த்தி ஆகியோரும் வருகை தந்து சிறப்பிக்க , காணொலிக் காட்சிகளுடன் சிறாப்பாக பயிற்சிகள் அளிக்கப்பட்டன.



பயிலரங்கு பெரிதும் பயனுடையதாக இருந்தது என கலந்து கொண்ட அறுவை சிகிச்சை நிபுணர்கள் பின்னோட்டத்தில் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தினார்கள். வாய் மற்றும் முகத்தாடை சீரமைப்பு பிரிவு டாக்டர் க . சரவணன் நன்றி கூற பயிலரங்கு இனிது நிறைந்தது.

நன்றி:
பி.ல்ஷ்மிபிரியா
மேலாளர்‍ ஹெல்த் கேர் சர்வீஸஸ் &
சர்வீஸ் லைன் மேலாளர் புற்று நோயியல்
அப்போல்லோ கேன்சர் இன்ஸ்டிடியூட்.

மறுபடியும் பூக்கும் வரை\
கவிஞர் தணிகை.


Sunday, April 23, 2017

பாரதிய ஜனதாக் கட்சியின் தவறான அணுகுமுறைகள்: கவிஞர் தணிகை

பாரதிய ஜனதாக் கட்சியின் தவறான அணுகுமுறைகள்: கவிஞர் தணிகை


Image result for wrong ruling and supports of bjp


தமிழகத்தின் புழக்கடை வழியே புகுந்து பி.ஜே.பிதான் ஆட்சி நடத்தி வருகிறது இங்குள்ள உதிரியாகிப் போன அ.இ.அ.தி.மு.க கட்சித் தலைவர்கள் எனச் சொல்லிக் கொள்வோரின் தவறான பணக்கொள்ளையடிப்புக் குவியல் பற்றி மத்திய அரசுக்குத் தெரியும் என்பதால்....அவர்கள் அனைவரும் ஆடிப் போய் இருக்கிறார்கள்...நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க .அடிப்படையில் பாடல் ஒலிப்பில் பாதை அமைத்த கட்சியில்.

மேலும் சொல்லப்போனால் நீதிமன்றங்கள் எல்லாம் கூட சார்பில்லாமல் இயங்கவில்லை என்பதற்கு பல எடுத்துக் காட்டுகள் குறிப்பிடலாம், ஜெ இறப்பு வரை வெளிவராத வருவாய்க்கு மீறிய சொத்து சேர்ப்பு வழக்கின் உச்ச நீதிமன்ற தீர்ப்பு சசிகலாவையும் இளவரசியையும் மட்டும் பாதிக்க ஜெ வை தப்பிக்க விட்டது 20 ஆண்டுகள் அவரின் அரசியல் ஆட்டங்கள்.

அவர் வாழ்க்கை முடிந்தபின் மோடி ஆடிய ஆட்டம் நீதியாகிவிட்டது. இன்று பன்னீர் செல்வத்துடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பார்கள் அல்லது ஆறுமாதம் குடியரசுத் தலைவர் ஆட்சி வந்து தேர்தல் நடத்தி விட்டால் ஏதாவது கிடைத்து விடலாம் அது அந்த 5% வாக்கு விகிதத்துக்கு அதிகமாகி விட்டால் அதுவே அந்தக் கட்சிக்கு பெருவெற்றி பெரிய வெற்றி என்பார்கள்.ஆனால் அதை எல்லாம் விட‌ இந்த தமிழகத்தில் இப்போதுதான் அ.இ.அ.தி.மு.க‌ ஆட்சி அமைத்திருக்கும் காலக் கட்டத்தில் மறைமுக ஆட்சியே மிகச் சிறந்தது என்னும் போக்கை பி.ஜே.பி நடத்திட விரும்புவதை அவர்கள் தலைவர்கள் என்னும் சொல்லிக் கொள்வோர் பேசிடும் அகந்தை காட்டுகிறது.
Related image



அந்தப் பிடிகளில் சிக்கியபடி சசிகலா, தினகரன், பன்னீர்செல்வம், எடப்பாடி எல்லாம் ஆடிக் கொண்டிருக்கிறார்கள். அதை விட மேலும் சொல்லப் போனால்
ஸ்டாலின் சொல்கிறபடி தி.மு.க என்ற கட்சி ஆளும் கட்சியின் இடத்தைப் பிடித்து விடக்கூடாது அது நிரந்தர ஆட்சியாகி 4 வருடம் 5 வருடம் ஓட்டி விடும் என்பதில் தெளிவாக இருந்து கொண்டு காய் நகர்த்திக் கொண்டே இருக்கிறார்கள்.

41 நாள் புல்லைத் தின்று, மண்ணைத் தின்று, சிறு நீர் எல்லாம் குடித்த தமிழக விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடியை வாங்கி முதல்வர் தருவதாக பிரதமரிடம் சொல்லி வாங்கித் தருவதாக சொல்லிச் சென்றிருக்கிறார்கள் நம்புவோமாக..

இந்த ஏழை கடன் வாங்கினால் அதற்காக தற்கொலை செய்யுமளவு செய்வார்கள்...அம்பானியும், மல்லையாவும் அதானிகளுக்கும் சிவப்பு பட்டுக் கம்பளி விரிப்பார்கள்...இந்திய ஆட்சிகள் அன்றும் இன்றும் என்றும் தனியார் மயத்தையே ஆதரித்து அரசு நிறுவனங்களை கூட வைத்து விடுவதற்கு ஒரே உதாரணம் பி.எஸ்.என்.எல்லும் ஜியோக்களும்...


ஜெ இறப்பு தமிழக ஆட்சிக்கு அந்தக் கட்சியில் ஒரு வெற்றிடம் என்றால், தி.மு.க கட்சிக்கு அதன் நிரந்தரத் தலைவர் மௌனமானது ஒரு பின்னடைவுதான் இல்லை என்றால் இந்த பா.ஜனதா கட்சியினர் இந்த அளவு துணிச்சலுடன் பேசுவதற்கு உடனடியான பதில் கிடைக்கும் அல்லது பதிலுரையாவது வார்த்தை வடிவத்தில் கிடைத்திருக்கும்...தி.மு.கவும் பயந்து கிடப்பது போல் தெரிகிறது அதை பதுங்கிக் கிடக்கும் புலி பாய்ந்து ஆட்சியைக் கைப்பற்ற இருக்கும் எச்சரிக்கையாக கொள்ளலாமா இல்லை அதுவும் இராஜா கேஸ் கனிமொழி கேஸ் மாறன் கேஸ் என செல்வ வளத்துள் சிக்கிக் கிடப்பதாகக் கொள்வதா?
Image result for wrong ruling and supports of bjp


அவங்க கட்சி அத்வானி போன்றவரையே பாபர் மசூதி வழக்கு என மறுபடியும் தூசி தட்டி குடியரசுத் தலைவர் போட்டியிலிருந்து விலக்கி வைத்திருக்கும் மோடிக்கு தமிழகத்தின் உச்ச நீதிமன்ற முன்னால் தலைமை நீதிபதி மற்றும் கேரள கவர்னர் சதாசிவம் அல்லது ரஜினிகாந்த் பேர்களை பரிசீலனை செய்யப் பரிந்துரைக்கப் படுவதாகவும் வதந்திகள் பரவிக் கொண்டிருக்கின்றன.
 அமித் ஷா முறை பருப்புகள் தமிழகத்தில் வேகாது என்பது நிச்சயமாகப் படுவதால் நீர் பிரச்சனை, கர்நாடகாவை நீதிக்கு பணிய வைக்காமை, போன்றவையும் தமிழகத்தில் வேண்டுமென்றே நிறைய நிர்பந்தங்கள் தலைமை ஆட்சியிடம் இருந்து ஏற்படுத்தப் படுகின்றன.

காந்தியை முடித்த அதே அடிப்படையில் இருந்து எழுந்த கட்டுமானக் கட்சி இன்று எதை எதையோ பேசி மக்கள் செல்வாக்கை பெற எத்தனையோ அணுகுமுறைகளை எடுத்து வருகிறது. தமிழகத்துக்கு ஒரு நீதி. உ.பிக்கு ஒரு நீதி. அங்கே ஆதித்யநாத் 60000 கோடி கடன் தள்ளுபடி செய்கிறார் பதவிக்கு வந்த சில நாட்களிலேயே...ஆனால் இந்த தமிழக விவசாயிகள் மலம் தின்ன விட்டுவிடுவார் போலும் இந்த மன்கி பாத்காரர். எல்லாரும் இந்நாட்டு மன்னரே.எல்லாம் இந்தியக் குடிமகன்கள் என்ற போதிலும் எப்போதும் தமிழர்கள் மாற்றான் தாய் பிள்ளை போலவே இந்திய நடுவண் அரசுகளால் அது இந்திரா இந்தியா ஆனாலும் காங்கிரஸ் ஆட்சி ஆனாலும் மோடி இந்தியா ஆனாலும் பி.ஜே.பி இந்தியா ஆனாலும்...அப்படியேதான் நடக்கிறது...இதெல்லாம் நல்லதுக்கில்லை என்று கவலைப்பட ஆள் யாரும் இல்லை என்பதுதான் கவலைக்குரிய பெரு விசியம் விஷம்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.




பெட்ரோலை ஓரங்கட்ட ஹீலியம் - 3?



இந்தியாவுக்கு தேவையான எரிசக்தி பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், சந்திரனி லிருந்து,அதிக சக்தியுடைய எரிபொருளான, 'ஹீலியம் - 3' வாயுவை கொண்டு வர, 'இஸ்ரோ' திட்டமிட்டுள்ளது. 2030க்குள் இந்த திட்டம் நிறைவேறும்' என, 'இஸ்ரோ' நம்பிக்கை தெரிவித்துள்ளது.

'இஸ்ரோ' என்கிற இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், விண்வெளி ஆய்வில் பெரும் சாதனைகளை படைத்து வருகிறது. 

சர்வதேச அளவில், அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளுக்கு போட்டியாக விண்வெளி ஆய்வில், இந்தியா முன்னேற்றம் கண்டுள்ளது.


சந்திரனுக்கு, 2008, அக்டோபரில், 'சந்திராயன் 1' விண்கலத்தை அனுப்பியது. இந்த விண்கலம், சந்திரனை வெற்றிகரமாக அடைந்து, சந்திரன் பற்றி பல்வேறு தகவல்களை, இஸ்ரோவுக்கு அனுப்பி வந்தது. இதனால், சந்திரனில், கனிம வளம், நீர்வளம் அதிகம் இருப்பது தெரிந்தது.

குறிப்பாக, சந்திரனில், 'ஹீலியம் - 3' வாயு அதிகம் இருப்பது தெரிந்தது. இது, 10 மடங்கு அதிக சக்தி கொண்ட எரிபொருளாகும். 
இதனால், சந்திரனிலிருந்து ஹீலியம் - 3 வாயுவை கொண்டு வருவது பற்றி, இஸ்ரோ ஆலோசித்து வருகிறது.

இந்தியாவின் எரிசக்தி தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இப்போது, இந்தியா, 10 லட்சம் கோடி ரூபாய்க்கு, எரிபொருள் இறக்குமதி செய்து வருகிறது. 

2030ல், இது இரு மடங்காக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. 2015 - 16ம் ஆண்டில், இந்தியா, 2,020 லட்சம் டன், பெட்ரோலிய பொருட்களை இறக்குமதி செய்துள்ளது. 

இதனால், எண்ணெய் இறக்குமதியை குறைப்பதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. 2022க்குள், கச்சா எண்ணெய் இறக்குமதியை, 10 சதவீதம் குறைக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள் ளது.

இந்த நிலையில், சந்திரனில் உள்ள ஹீலியம் - 3 வாயுவை, பூமிக்கு கொண்டு வந்து, இந்தியாவின் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்ய, இஸ்ரோ முடிவு செய்துள்ளது.

இதன் மூலம் தினசரி தங்கத்தைப்போல் விலை பெட்ரோலுக்கும் முடிவு செய்யும் துயரக்கட்டம் மாறும் எனலாம்.

சந்திரனில் உள்ள ஹீலியம் - 3 வாயுவை, பூமிக்கு கொண்டு வருவது தான் இஸ்ரோவின் அடுத்த இலக்கு. அதிக சக்தி கொண்ட ஹீலியம் வாயுவை கொண்டு தயாரிக்கப்படும் எரிசக்தியை பயன்படுத்து வதால், காற்று மாசுகுறையும். 

இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியும் குறையும். 2030க்குள், இந்த திட்டம் பயன்பாட்டுக்கு வரும் என, நம்பிக்கை உள்ளது.

இஸ்ரோ, கடந்த பிப்ரவரி மாதம் ஒரே ராக்கெட்டில், 104 செயற்கைக்கோள்களை விண்ணுக்கு வெற்றி கரமாக அனுப்பியது. இதுவரை, 225 செயற்கைக் கோள்களை இஸ்ரோ வெற்றிகரமாக அனுப்பியுள் ளது. அமெரிக்க, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளின் விண்வெளி ஆய்வுக்கு இணையாக, இஸ்ரோவும் சாதனை படைத்து வருகிறது.


சந்திரனில் ஹீலியம் - -3 பெருமளவில் உள்ளது. எரிபொருளுக்கான மிக நேர்த்தியான மூலப்பொருள் இது. நல்ல ஆற்றல் கொண்டது.அதேநேரம், சுற்றுச் சூழலை மாசுபடுத்தாது; கதிர்வீச்சு இருக்காது. 21ம் நுாற்றாண்டுக்கான எரிபொருள் இது .

சந்திராயன் -- 2 திட்டத்தின் கீழ், சந்திரனில் தரை யிறங்கும் விண்கலமும், ரோபோவும் அனுப்பப் படும். இவை, பல கி.மீ., துாரம் பயணம் செய்து, சந்திரனின் புறப்பரப்பில் இருக்கும், கனிமங்கள் உள்ளிட்ட மாதிரிகளை சேகரித்து பூமிக்கு திரும்பும்.

சந்திரனில் இருக்கும் கனிம வளங்களை கண்டறிந்து, அவற்றை நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்துவதும், அங்கு நீர்வளம் உள்ளதா என, கண்டறிவதும் தான், இந்ததிட்டத்தின் நோக்கம். 


எரிசக்தி உற்பத்தியில், ஹீலியம் -3 வாயு, எதிர் காலத்தில் முக்கிய பங்கு வகிக்கும்.யுரேனியம், தோரியம் போன்ற பொருட்களால், பூமியின் வளிமண்டலம் மாசுபடுகிறது. ஆனால், ஹீலியம் வாயுவில், இதுபோன்ற பிரச்னை இல்லை.

நம் தொழில் துறை, ஹீலியம்- - 3 வாயுவை பயன்படுத்தும் அளவுக்கு முன்னேறி வருகிறது. இன்னும், 15 ஆண்டுகளுக்குள், ஹீலியம் -- 3 வாயுவை பயன்படுத்தும் உலைகள் கிடைத்து விடும் என்ற நம்பிக்கை உள்ளது.சந்திரனின் இரு துருவங்களிலும் தண்ணீர் இருப்பதாக நம்பப்படுகிறது. 


அது உண்மையானால், எதிர்காலத்தில், அங்கு, மனிதனால் நீண்ட காலம் தங்க இயலும். 


மேலும், தண்ணீரில் உள்ள ஆக்ஸிஜன் மற்றும் நைட்ரஜனை, விண்கலங்களுக்கு எரிபொரு ளாக பயன்படுத்தலாம்.அதன்பின், விண்கலங் களை ஏவுவதற்கான ஒரு அண்டை வீடு போல, சந்திரன் ஆகி விடும். 


பூமியில் இருந்து விண் வெளிக்கு விண்கலங்களை ஏவுவதைக் காட்டி லும் சந்திரனில் இருந்து ஏவினால், செலவு கணிசமாக மிச்சம் ஆகும். 

ஏனெனில், பூமி யுடன் ஒப்பிடும் போது, சந்திரனில் புவியீர்ப்பு விசை ஆறில் ஒரு பங்குதான் இருக்கிறது. 

விக்ரம்சாராபாய் விண்வெளி ஆய்வு மையம் உருவாக்கிய லித்தியம் அயன் பேட்டரிகளை, மின்சார வாகனங்களில், பயன்படுத்த முடியும் என்பது, வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. 

தற்போது அலைபேசிகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்ற " லித்தியம் அயன்" பேட்டரிகளை, வாகனங்களில் பயன்படுத்தினால் சுற்றுச்சூழல் மாசு குறையும் .

இது, இந்தியாவில், மின்சார வாகனங்களின் உற்பத்தியை அதிகரிக்க வழி வகுக்கும், என, எதிர்பார்க்கப்படுகிறது. 
லித்தியம் அயன் பேட்டரி தொழில்நுட்பத்தை, வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்கி, எரி பொருள் தேவையை குறைக்க அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ளுவது சுற்றுசூழல் பிரசனைக்களுக்கு முடிவு காட்டும் . 
00000000000000000000000000000000000000000000000000000000

கிரேக்கர்கள் தங்களின் சூரிய கடவுளுக்கு வைத்தப்பெயர்  ஹிலியோசு .அதுதான்  ஹீலியம் தனிமத்துக்கு வைக்கப்பட்டுள்ளது.
868 ல் பிரான்சு நாட்டின் வானவியலாரான பியர் இழோன்சன் (Pierre Jonsson ) என்பார் பிரித்தானிய இந்தியாவில் குண்டூர் பகுதியில் ஏற்பட்ட முழு சூரிய கிரகணத்தைப் பற்றி ஆராய்ந்த போது எதிர்பாராத விதமாக ஒளியுமிழ் நிறமாலை வரிசையில் மஞ்சள் பகுதியில் ஒரு புதிய வரியைக் கண்டார்.

 அது அப்போது கண்டறியப்பட்ட எந்தத் தனிமத்திற்கும் அக்கோடு ஒத்துப் போகவில்லை என்பதால் அவ்வரி புதிய ஒரு தனிமத்தாலோ மூலக்கூறாலோ ஏற்பட்டிருக்க வேண்டும் என்று தீர்மானித்தார்.

அப்போது இங்கிலாந்து நாட்டிலிருந்து வெளி வந்த இயற்கை என்ற அறிவியல் இதழின் ஆசிரியரான லாக்கியர் என்பாரும் பிராங் லாண்டு என்பாரும், இதற்கு ஹீ லியம் எனப் பெயரிட்டனர்.
 000000000000000000000000000000000000000000000000000000000
நன்றி:

சுரன் blogger.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

ஏன் இங்கு தண்ணீர் பஞ்சம்? ஆந்திரா முதல் சென்னை வரை ஒரு 'நீர்வழி' பயணம்! #SpotReport

குடிநீர் வரும் பாதை மோசமான நிலையில்

சென்னை மாநகர மக்களின் ஒரே குடிதண்ணீர் ஆதார நம்பிக்கையாக விளங்கிய கிருஷ்ணா நதிநீர் நிறுத்தப்பட்டு இன்றோடு ஒரு மாதம் முடிகிறது. இது, சென்னையின் தாகத்தைத் தீர்க்கும் நம்பிக்கையை தகர்ந்துபோகச் செய்துள்ளது. கிருஷ்ணா நதிநீரை கண்டலேறு அணையில் தேக்கி, அதை அங்கிருந்து சென்னையின் குடிநீர்த் தேவைக்காக கடந்த 21 ஆண்டுகளாக அனுப்பிக் கொண்டிருந்த ஆந்திர அரசு, கடந்த மாதம் 21-ம் தேதி அன்று ஷட்டரை இழுத்து மூடி நிறுத்தி உள்ளது.ஆந்திர மாநில பொதுப்பணித் துறையினர், "கிருஷ்ணா நதியிலிருந்து கண்டலேறு அணைக்கு போதுமான நீர்வரத்து இல்லாத காரணத்தாலும், எங்கள் மாநிலத்திற்கே தண்ணீர்ப் பற்றாக்குறை சூழல் நிலவுவதாலும் நீர்வழி ஷட்டரை திறக்கமுடியாது" என்று தெரிவித்துள்ளனர். ஆண்டுதோறும் 12 டி.எம்.சி. கிருஷ்ணா நீரை, சத்யசாய் கங்கா கால்வாய்ப் பாதை வழியாக, ஆந்திர அரசு கடந்த 1996-ம் ஆண்டுமுதல் சென்னையின் குடிநீர்த் தேவைக்காக வழங்கி வருகிறது. கால்வாய் அமைத்தல், கால்வாய் சீரமைத்தல் போன்றவற்றுக்கு உரிய நிதி கொடுத்தது போக, பராமரிப்பு என்ற அடிப்படையிலும், தமிழக அரசு ஆந்திர மாநிலத்திற்கு நிதி வழங்கி வந்தது.

சென்னை மாநகர மக்களின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்வதற்காக தமிழக - ஆந்திர மாநில அரசுகள் செய்து கொண்ட கிருஷ்ணா நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தப்படி ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை 8 டி.எம்.சி. தண்ணீரும், ஜூலை முதல் அக்டோபர் மாதம் வரை 4 டி.எம்.சி. யும் வழங்க வேண்டும். நடப்பாண்டின் தொடக்கத்திலேயே, சென்னைக்கு நீர் வரும் சத்ய சாய் கங்கா கால்வாய்ப்பாதை மொத்தமாக காய்ந்து போகும் நிலைக்குத் தள்ளப்பட்டது. கடந்த ஜனவரி மாதத்தில் தமிழக முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், இதுகுறித்து ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை நேரில் சந்தித்து, குடிநீர்த் தேவையை எடுத்துக் கூறி, கிருஷ்ணா தண்ணீரை திறந்து விட வலியுறுத்தினார்."எங்களால் இப்போதுள்ள சூழ்நிலையில், 2.50 டி.எம்.சி. நீரை மட்டுமே வழங்க முடியும். அதை வழங்குகிறோம்" என்று  ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அப்போது தெரிவித்தார். அதன்படி 2017 ஜனவரி 10-ம் தேதி முதல் சாய் கங்கை கால்வாயில், தமிழகத்திற்கு நீர் திறக்கப்பட்டது. கண்டலேறு அணையிலிருந்து 12 டி.எம்.சி. நீரை திறந்தாலே அது, தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாய்ண்டிற்கு வர பத்து நாட்கள் ஆகும். அப்படியிருக்க 2.50 டி.எம்.சி. நீரைத் திறந்து விட்டதால், சென்னைக்குள் வரும் அந்த நீரின் அளவு கால்வாயில் எந்த அளவுக்கு இருக்கும் என்பதே பெரிய கேள்வி.

தமிழகத்தின் அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளாவுடன் தண்ணீர்ப் பங்கீடு தொடர்பாக பஞ்சாயத்து பேசிப் பேசியே தொண்டை காய்ந்து வருகிறது. அதற்காக, தமிழ்நாட்டில் தண்ணீருக்கான ஆதாரம் கொஞ்சமும் இல்லை என்று சொல்லிவிட முடியாது. 'எல்லாம் இருக்கிறது, ஆனால் ஒன்றும் இல்லை' என்ற கதைதான் உண்மை நிலவரம்.தமிழக பொதுப்பணித்துறை ஆவணங்களின்படி தற்போது மாநிலம் முழுவதும் 18,789 ஏரிகள் மிச்சமிருக்கின்றன... சுமார் முப்பதாயிரம் ஏரிகளை ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கும், பெருவணிகர்கள் என்ற பெயரிலான கொள்ளையர்களுக்கும் தாரை வார்த்துக் கொடுத்தது போக இவைதான் எஞ்சியுள்ளன.  இவை தவிர 29,484 கிளை வாய்க்கால்கள், 86 ஆறுகள், 200 அணைகள் இருப்பதாக அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் பாய்ந்தோடும் புகழ்பெற்ற நீர்நிலைகளின் பெயர்களில் பாதியைச் சொன்னாலே கேட்பவருக்கு மயக்கம் வரும் அளவு பட்டியல் இருக்கிறது. அதில் பாலாறு, வெள்ளாறு, மணிமுத்தாறு, தாமிரவருணி போன்ற ஆறுகளின் பெயரிலேயே பல ஆறுகள் பல மாவட்டங்களில் பாய்கின்றன. தாமிரவருணியின் கிளை ஆறுகளாக மட்டுமே பதினெட்டு ஆறுகள் உள்ளன. கரமணை ஆறு, சேர்வலாறு, மணிமுத்தாறு, கடனா நதி, பச்சையாறு, சிற்றாறு, பேயனாறு, நாகமலையாறு, காட்டாறு, சோம்பனாறு, கௌதலையாறு, உள்ளாறு, பாம்பனாறு, காரையாறு, நம்பியாறு, கோதையாறு, கோம்பையாறு, குண்டாறு என்பன கிளை ஆறுகளாகும்.
தமிழகம் மட்டும் அல்ல; இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான ஆறுகள் மற்றும் ஏரிகள் இருந்தாலும் 120 கோடி மக்களும் குடிப்பதற்கு போதிய அளவு தண்ணீர் கிடைக்காமல் அவதியுறும் நிலை நீடிக்கிறது. 30 கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் தண்ணீரை பொதுக் குழாய்கள் மூலமும், பூமிக்கு அடியில் இருந்து ஆழகுழாய்க் கிணறுகள் மூலமும் பெறுகிறார்கள்தமிழகத்தைப் பொறுத்தவரை தென்பெண்ணை, கெடிலம், வராக நதி, மலட்டாறு, பரவனாறு, வெள்ளாறு, கோமுகி ஆறு, மணிமுத்தாறு, ஓங்கூர், அடையாறு, செய்யாறு, பாலாறு, ஆரணியாறு, அமராவதி, பொன்னை, பாம்பாறு, கொள்ளிடம், வெட்டாறு, வெண்ணாறு, அக்கினி ஆறு, வைகையாறு, காவிரி, குடமுருட்டி, ஜம்பு நதி,  கோராம்பள்ளம், சுருளியாறு, தேனி ஆறு, வரட்டாறு, வரவனாறு, சிறுவாணி, அமராவதி, பவானி, நொய்யலாறு, பம்பாறு,கெளசிகா நதி, கடனா நதி, சிற்றாறு, இராமநதி, பச்சை ஆறு, கறுப்பா நதி, குண்டாறு, நம்பியாறு, கொடுமுடி ஆறு, கருமேனியாறு, வாட்டாறு, நாகலாறு, வராகநதி, மஞ்சள் ஆறு என நதிகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றன. தவிர, தமிழ்நாட்டில் உள்ள நீர்த் தேக்கங்கள் மற்றும் அணைகளின் பட்டியலும் பிரமிக்க வைக்கக்கூடியவையே. வைகை நதிப் படுகை, வைகை, மஞ்சளாறு, மருதா நதி, வைப்பார் நதிநீர்ப் படுகைகள், பிளவுக்கல், வெம்பக்கோட்டை நீர்த்தேக்கம், தாமிரபரணி நதிப் படுகை, மணிமுத்தாறு நதிப் படுகைகள், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சித்தாறு ஒன்று, சித்தாறு இரண்டு,பெரியாறு நதிப் படுகைகள் என ஏராளமான நீர்த்தேக்கங்கள், அணைகள் இருந்தாலும் தண்ணீர்த்தேவை என்னவோ அப்படியேதான் இருக்கிறது.
ஒரு காலத்தில் நமக்கான ஆறுகளை நாமே வெட்டினோம்; அவற்றின் கரைகளை பலப்படுத்தினோம், ஆற்றில் மீன் குஞ்சுகளை விட்டு வளர்த்தோம்... இன்று ஆறுகளில் தேங்கிய மணலை அடியோடு பெயர்த்து, வளத்தைச் சுரண்டி வீடுகள் மற்றும் கட்டடங்களைக் கட்டிக் கொண்டிருக்கிறோம்! ஏரிகள், நீர்த்தேக்கங்களின் உதவியுடன் பன்னெடுங்காலமாக செய்துவந்த விவசாயம், இப்போது தண்ணீர் இன்றி தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இனி விவசாயத்துக்கு நீரைத் தேடி எங்கே போவது? நம் தாகம் எப்படித் தீர்வது? 

-ந.பா.சேதுராமன்
நன்றி:
vikatan

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை


மதுவுக்கு பதிலாக பால் அருந்துகிறார்கள்”- நெகிழ்கிறார் பிகார் முதல்வர் நிதிஷ்குமார்!

Nitish Kumar

மது விலக்கை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும். மதுவிலக்கினால் வருமானம் குறைவதாக சொல்லபடும் கருத்து எல்லாம் பொய் என்று அறிவுரை கூறியுள்ளார் மதுவிலக்கை தனது மாநிலத்தில் சாத்தியபடுத்தி இருக்கும் பிகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார். 
மஹாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிகார் முதல்வர் நிதிஷ்குமார், “உச்சநீதிமன்றத்தின் ஆணைக்கு பிறகு தான் இந்த நாட்டில் நெடுஞ்சாலைகளில் இருந்து மதுக்கடைகள் அகற்றபட்டுள்ளது. மக்களின் மனநிலையே போதைக்கு அடிமையாகிவரும் நிலை இந்த நாட்டில் ஏற்பட்டுவருகிறது. மக்களின் மனநிலையை மாற்ற வேண்டும், அதே நேரம் நாடு முழுவதும் போதை பொருள்களையும் தடைசெய்ய வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கு இது தான் அவசியம்.
சீனாவை பார்த்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய மிகப்பெரிய பாடம் போதை வஸ்துகளுக்கு அந்த நாடு தடைபோட்ட பின் தான் அசுர வளர்ச்சியை அந்த நாடு கண்டது. நம்நாட்டிலும் அந்த நிலையை கொண்டுவர வேண்டும்.
மதுவிலக்கு கொண்டுவந்தால் வருவாய் பாதிக்கும் என்ற கருத்து நாடு முழுவதும் உள்ளது. எனது மாநிலத்தில் மதுவிலக்கு அமல்படுத்திய பிறகு எந்த வருவாய் இழப்பும் ஏற்படவில்லை. மது அருந்தியவர்கள் இப்போது பால் அருந்துகின்றார்கள். ஆரோக்கிய பானங்களை மக்களே நாடிச்சென்று வாங்கி பருகுகின்றார்கள். மதுவிலக்கை போலவே விளை பொருள்களுக்கும் உரிய விலையை நாங்கள் வழங்குவதால் ஒரு விவசாயி கூட எங்கள் மாநிலத்தில் தற்கொலை செய்து கொள்ளவில்லை” என்றார் பெருமிதமாக. நாடு முழுவதும் மதுவின் தீங்குகள் அதிகரித்து வரும் நிலையில் நிதிஷ் குமாரின் இந்த பேச்சு மதுவிற்கு எதிராக போராடி வருபவர்களை உற்சாகமடைய செய்துள்ளது.
 thanks
Vikatan
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை


Sunday, April 16, 2017

ப(வர்) பாண்டி: கவிஞர் தணிகை

பவர் பாண்டி: கவிஞர் தணிகை


Image result for pa pandi

தமிழ் சினிமா தலைப்பு வேண்டும் அப்போதுதான் தமிழக அரசின் உதவித் தொகை கிடைக்கும்  என்பதற்காக பவர் பாண்டியை ப பாண்டி என்று மாற்றி இருக்கிறார்கள். தனுஷ் கதை வசனம் எழுதி இயக்கி தயாரித்து நடித்தும் இருக்கிறார். பின்னே விடுவாரா இளம் பவர் பாண்டி ரோலை அடுத்தவருக்கு....

மடோன்னா செபாஸ்டியன் இளமை ஊஞ்சலாடுகிறார்.
ரேவதிக்கு பதிலாக தேவயானியோ,ஸ்நேகாவோ இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமோ என்று எனக்குத் தோன்றுகிறது.

ராஜ்கிரண் பற்றி சொல்லவே வேண்டாம் படம் அவர் பேர் சொல்லும். அதாவது இந்தப் படம் ஏதாவது விருதை வெல்லும் என்று எதிர்பார்க்கலாம்.

மாலாக்கா மாலாக்க ஐ லவ் யூ  மாஸ்டர் ராகவனை ஸ்டார் ஆக்காமல் விடமாட்டார்கள் போலிருக்கிறது.அவர்தான் தாத்தாவை முகநூலில் மறுபடியும் கண்டு கதைக்கு திருப்பம் கொடுக்கிறார். தன்னை விட மூத்த பக்கத்து வீட்டுக்கார இளைஞரை தாத்தாவை கிழவன் என்று சொன்னதற்காக என்னடா எங்க தாத்தாவை கிழவன் என்று சொல்கிறாய் என அடிக்கப் போவதாக  ஆர்ப்பரிக்கிறார்

சாயாசிங்க் மிக அழகான மருமகளாக மனைவியாக பொருந்தி இருக்கிறார், பிரசன்னாவை தேவை என்றே போட்டிருக்கிறார்கள். மிகச் சரியான தேர்வு.

மகனாக நன்றாக துடித்திருக்கிறார்.


Related image


நாம் எதிர்பார்த்தபடி இல்லாமல் வங்கியில் இருக்கும் பணத்தை எல்லாம் எடுத்துக் கொண்டு சிம்பு பைக்கில் காதலியை ஏற்றிக் கொண்டு பயணம் செய்வது போல இவர் புறப்படுகிறார் அதன் பின் இவரின் வயது ஒத்த தோழர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டு தனது பூந்தென்றல் தேடி ஹைதராபாத் புறப்படுகிறார். அவ்வப்போது ரெடிமேடாக பைட் வேறு. அதில் ஹைதராபாத் பைட் நன்றாகவே வெளித் தெரிகிறது ரெடிமேடாக தேவையில்லாமல் புகுத்தப் பட்டது போல.

மொத்தத்தில் ராஜ்கிரண் என்ற ஒரெ நடிகரை வைத்து வரைந்த ஓவியம். அவரும் நன்றாகவே வரைய முயன்றிருக்கிறார். ரேவதி ஆடிக்கொண்டே தம் வீட்டில் அறைக்குள் செல்லப் போவது எந்த வையதிலும் நமக்கு துணைத் தேவைப்படுகிறது என்று காண்பிக்கிறது.

இந்த சினிமா பார்க்கும்போது நன்றாக இருப்பது போலத் தோன்றுகிறது. ஆனாலும் நிறைய பேர் வாழ்வில் ஒட்டியும் ஒட்டாமலும் துருத்திக் கொண்டே இருக்கிறது.


Related image

காதல் நன்றாக இருக்கிறது. தனுஷ் தம்மை புரூஸ்லீ என அழைக்கப்பட வேண்டும் என்ற விருப்பத்தை காதலி மடோன்னா செபாஸ்டியன் வழியாகவும், வசனம் தாமே எழுதியதன் வழியாகவும் தீர்த்துக் கொண்டிருக்கிறார்.

இவர் டி.என்.ஏ டெஸ்ட் செய்ய வர மறுத்து அந்த வயது முதிர்ந்தோருக்கு நீத்மன்ற வழக்கில் இருந்து நழுவிக் கொண்டே இந்த மாதிரி படம் எடுப்பது எந்த  வகையில் பொருந்துமோ அது எனக்குத் தோன்றவில்லை...

மேலும் அச்சம் என்பது மடமையடா காதல் பைக் ரோட் ஷோ போல இந்த பவர் பாண்டி காதல் ரோட் ஷோ என இருவருக்கும் ஒரு மௌனயுத்தம் நடக்கிறதோ என்று நினைவு படுத்தும் காட்சிகள்.எல்லாம் சினிமாடிக்காக இருந்தாலும் சினிமாவாக பார்ப்பதற்கு நன்றாகவே இருக்கிறது.

பவர் பாண்டி வாழ்வு தற்கால வாழ்வுக்கு ஒட்டாமல் போய் கஞ்சா விற்பவரகளை அடிப்பது, அதற்கு ப்ரசன்னா ராகவன் தண்டம் கட்ட போலீஸ் ஸ்டேசன் போவது, தேவையில்லாமல் உதவி செய்து உபத்திரவம் தருகிறீர் என மகன் சலித்துக் கொள்ளுமளவு நடந்து கொள்வது, ஜிம் ட்ரெயினராக இருந்து வேலையை உதறுவது, சினிமாவில் நடிக்க டையலாக் வராமல் திணறுவது, அதே பைட்டிங் சீனில் மிகச் சரியாக செய்வது, குடித்து விட்டு கீழே விழுமுன்னே மகனை கடித்துக் குதறுவது, தூக்கம் விழித்துக் காப்பாற்றினேனே அதற்கு எப்போது நாங்கள் வருத்தப்பட்டோம் என்றது எல்லாம் டச்சிங்.
Image result for pa pandi



பவர் பாண்டியன் பக்கத்து வீட்டுத் தோழனாக ஒரு பீர் தோழன் .அவன் தான் தற்கால இளந் தலைமுறைக்கு நல்ல அடையாளமோ இல்லையோ, அவன் இனி சினிமாவில் மாலாக்கா மாலாக்கா ஐ லவ் யூ போல பயன்படுத்தப் படலாம்.
Related image


பழைய காதலிகளை காதலர்களை இதே போல சந்திக்க‌ ஆசைப்படும் அனைவருக்கும் இந்தப் படம் ஒரு ஆறுதல் அஞ்சலி தரும்.

நூற்றுக்கு 50 தரலாம்.Image result for 50 %

மறுபடியும் பூக்கும் வரை.



Easter 2017.கிறித்தவம் எனக்கு உறுதுணையானது: கவிஞர் தணிகை

கிறித்தவம் எனக்கு உறுதுணையானது: கவிஞர் தணிகை

Image result for easter 2017


ஈஸ்டர் திருநாள் கிறித்தவருக்கு, ஏசு உயிர்த்தெழுந்த நாள் என்ற பெருநாள்,இது உண்மையா பொய்யோ என்றெல்லாம் நானறியேன் நான் எல்லா மதங்களிலும் இருக்கும் நல்லதை நாடுபவன் அல்லதை சாடுபவன் மதங்களைக் கடந்தவன் என்று சொல்லிக் கொள்வதுமுண்டு. ஆனால் எனது வாழ்வில் கிறித்தவம் உறுதுணையானதில் சில துளிகள் மட்டும் நீங்கள் பருக.

காட்சி 1:

6 ஆம் வகுப்பு படிக்கிறேன். என்.சுந்தரம் என்ற பிராமணப் பிரிவு சார்ந்த தலைமை ஆசிரியர்.அந்தப் பள்ளியே பிராமணப் பிரிவு அடிப்படையில் அமைந்தது. சமஸ்கிருதம் எல்லாம் கற்றுக் கொடுக்க தனிப் பள்ளியும் அங்கு உண்டு.

எனக்கு வகுப்பாசிரியை மேரி சந்திரா. எனது 2 ஆம் வகுப்பு ஆசிரியை : குழந்தை திரேசா அந்த நினைவு கூட என்னுள் இன்னும் அப்படியே பசுமையாக...(ஒரு வேளை தெரஸா என்ற பேர்தான் அப்படியோ).மதர் தெரஸாவைத் தந்த மதம். அவரை விட புனிதமான மனிதம் இருக்கிறதா?
சரி வருகிறேன் கருப்பொருளுக்கு:(Even while in my Tribal development career one doctor certified my work is just like the works of Mahatma Gandhi and Mother Teresa ..those are different and we can see it some times afterwards...)

எனக்கு அரிவாள் மனை பின் பக்கத்துக்காரன்  அதாவது எந்த கால்சட்டை அணிந்தாலும் விடாமல் விளையாடி தேய்த்து கிழித்து விடுகிறேன் என்று வீட்டில் சொல்வதுண்டு.

எட்டு பேர் + பெற்றோர். மொத்தம் 10 பேர் அடங்கிய குடும்பம்.ஒரு மில் தொழிலாளி என் தந்தை. அவரது வருவாயில் 10 வாயும் வயிறும் நிரம்பியாக வேண்டும். இயற்கையை எண்ணி வியக்கிறேன் வியந்து கொண்டே இருக்கிறோம்.சிறு வயது பெற்றோர் திருமணம்.ஆரம்பத்தில் இளமையில் ஒரு குழந்தை கூட இல்லை நீ மறுகல்யாணம் பண்ணிக்கொள் என்ற உறவுகள், ஊர் , நட்பு, தந்தை இப்படி எல்லாம் சொன்னார்களாம் என் தந்தையிடம். தாயைக் கைவிடவில்லை . கட்டியவளைக் கைவிட மாட்டேன் என்ற இறுமாப்பு.

 எவர் பேச்சையும் கேட்காமல் இருந்த என் தந்தைக்கும் தாய்க்கும் நாங்கள் 8 பேர் மக்கள் .ஒரு குழந்தை இறந்ததாகவும் ,பிறர் சொல்லக் கேட்டதுண்டு.அந்தக் காலத்தில் எந்தவித குடும்பக் கட்டுப்பாடு, அறிவியல் ஆணுறை, பெண்ணுறைகள் ஏதும் இல்லாத காலம். நான் ஆண்மக்களில் கடைசி. பெண் மக்களில் கூட எனக்கு 4 பேர் அக்கா, ஒரு தங்கை மட்டும்.

சில கருக்கள் புறம் தள்ளப் பட்டிருக்கவும் வாய்ப்புண்டு. அதில் இன்னொரு வியப்புக்குரிய விஷயம் என்னவெனில்: என் தாய் சற்று மாநிறம், தந்தை நல்ல சிவப்பு. பிறந்த மகள்கள்  5 பேரும் தந்தை நிறத்துடன் நல்ல சிவந்த நிறம் நாங்கள் 3 மகன்களும் அம்மாவின் நிறத்தில். தாயைக் கொண்டு பிள்ளைகளும், தந்தையைக் கொண்டு பெண் மகள்களும் எனச் சொல்வார்களே அது எவ்வளவு சரியாக...

சரி சிறியதாக சொல்லி முடிக்கலாம் என்றாலும் இதெல்லாம் சொல்வதும் அதையெல்லாம் கெட்பதும் உங்களுக்கும் பயன் இருக்கும் பலன் இருக்குமோ என்பது தெரியாது.

 6 ஆம் வகுப்பில் ஆரம்பத்தில் என்னிடம் காக்கி கலர் கால் சட்டை இல்லை. மேல் உள்ள வெள்ளை சட்டை மில்லில் கொடுத்த எம்.எஸ். 55 லாங்க் கிளாத் போன்றவற்றில் இருந்து கொடுப்பதை தைத்துக் கொடுத்து விடுவார்கள். ஆனால் காக்கித் துணி கடையில் எடுத்துத்தான் தைத்தாக வேண்டும். அப்போது எடுக்க முடியவில்லை. எனவே வேறு கலரில் அரைக்கால் சட்டை அணிந்து கொண்டே பள்ளி சென்று வந்தேன்.கடைசியில் 11ஆம் வகுப்பு என நினைக்கிறேன் ஒரு வெளிறிய எனது மூத்த சகோதரின் மஞ்சள் டெரிலின் சட்டையை வெள்ளை சட்டை என்று அணிந்து சீருடை என்று ஏமாற்றியது எல்லாம் உண்டு அது எல்லாம் அப்புறம்.

மேரி சந்திரா எனது 6 ஆம் வகுப்பு ஆசிரியை, அப்போதுதான் நான் அந்தப் பள்ளிக்கு 6 ஆம் வகுப்பில் புதிதாக சேர்ந்துள்ளேன். நன்றாக அப்போது படிப்பேன் 3 ஆம் ரேங்க் வாங்கிய நினைவு. முதல் ரேங்க் கால் ஒடிந்ததால் தேறத் தவறிய பாலசுப்ரமணியம் இரண்டாம் ஆண்டில் அதே 6 ஆம் வகுப்பில் இருந்து படித்து முதல் ரேங்க் வாங்கி விடுவான், எஸ்.டி. ராஜன் டீச்சரின் பையன் 2 ஆம் ரேங்க். பள்ளி செல்லாத என் பெற்றோரின் பிள்ளையான நான் 3 ஆம் ரேங்க். எனவே இந்த ஆசிரியைக்கு என் மேல் பிரியம் அதிகம். எனவே சீருடை அணியாமலே கூட பிரேயருக்கு அனுப்பாமலே என்னை வகுப்புக்கு வந்து அமர்ந்து கொள்ளச் செய்து விடுவார். இப்படியே சில பல நாட்கள் பள்ளியை ஏமாற்றி வந்தோம்.ஆம் அந்த டீச்சரும் எனக்கு உடந்தை ஏன் அவர்தான் அந்த ஏமாற்றை கற்றுக் கொடுத்ததே. நல்ல உயரம், சிவந்த நிறம் திட சரீரம்  தக தகவென மின்ன..அப்பா அவர்களைப் பார்த்தாலே ஒரு மரியாதை வரும். இன்றும் அந்த 6 ஆம் வகுப்பு ஆசிரியை மேரி சந்திரா என் கண்களில். அதன் பின் அவரது கணவர் உயர் நிலைப் பள்ளி அசிரியர் டேவிட் அவர்களும் எனக்கு நட்பு.

இப்படி சென்று வருகையில்...

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பதற்கேற்ப , பள்ளி வகுப்பு நடந்து வரும் நேரம் இடையில்  ஒரு நாள் நான் சிறு நீர் கழிக்க டாய்லட் செல்லும்போது என்.சுந்தரம் தலைமை ஆசிரியரும் வந்து விட்டார்.. எங்கே சீருடை யூனிபார்ம் எனக் கேட்டு போட்டு வரச் சொல்லி துரத்த ஆரம்பித்து விட்டார்.

 வந்து வகுப்பில் ஆசிரியை இடம் நடந்தது பற்றிச் சொன்னேன், உடனே யாராவது இவனுக்கு ஒரு அரைக்கால் சட்டையை கொடுங்கள் என்றார், உடனே குள்ளமான எனக்கு மிகவும் உயரமான சரியாக படிக்காமல் வகுப்பில் தேறாமல் அங்கே அதே வகுப்பில் அப்போதும் படித்த ஐ. சார்லஸ் அவர் தந்தை பேர்: இஸ்ரேல்.அவர் அதன் பின்  பள்ளியில் கிர்க்கெட் வீரர், அதன் பின் கவுன்சிலர் என பல பரிமாணங்களிலும் ஒரு ஆளும் கட்சிக்காரர் என்றெல்லாம் எனது பார்வையிலும் என்னுடன் வளர்ந்து வந்தவர். எனது புத்தக வெளியீட்டின் போதெல்லாம் அவருக்கு ஒரு பிரதி சென்று சேர்த்த அனுபவம் எல்லாம் எனக்கு அப்புறம்.

இப்போதும் எனது ஊரிலிருந்து இரண்டு மூன்று கி.மீ தள்ளித்தான் வாழ்ந்து வருகிறார். அப்போதும் அவர்தான் அந்தப் பள்ளியின் மிக அருகே உள்ள அவரது வீட்டுக்கு சென்று ஹாஸ்டல் பகுதியில் கெமிகல் லைனில் உள்ள அவர் வீடு சென்று ...

எனது அரைக்கால் சட்டை இவருக்கு சரியாக இருக்காதே என்று சொல்லி விட்டு அவரது தம்பியின் கால் சட்டையை எடுத்து வந்து கொடுத்து அடுத்த புதுக் கால் சட்டையை எனது வீட்டில் எடுத்துத் தருமுன் அந்த இடைக்காலத்தில் போட்டுக் கொண்டு பள்ளி வரச் செய்தார்.அதன் பின் நான் பல ஆண்டுகள் வளர்ந்து நன்னிலையில் இருக்கும்போது ஒவ்வொரு கிறிஸ்மஸ் இரவிலும் அனாதை சாலையோரப் பிச்சைக்காரர்களுக்கு போர்வை கொடுத்து கொடுத்து கடைசியில் 2000 ஆண்டில் எவரின் துணையின்றி இரு சக்கர வாகனத்தில் சென்று கொடுத்து திரும்பி வந்து இடது கையை அதன் முழங்கை மூட்டை இடம் பெறச் செய்த நிகழ்வுடன் அந்த போர்வை வழங்கும் நிகழ்வை நிறுத்திக் கொண்டதுமுண்டு.

Image result for easter 2017

காட்சி : 2

எனது நிறுவனத்தில் இருந்து கேரளா எர்ணாகுளம் கொச்சினுக்கு ஒரு 15 நாள் கான்ப்ரன்ஸிக்கு சென்று வர பரிந்துரை செய்யப்பட்டேன் .அப்போது நான் திட்ட அலுவலர் மலை வாழ் மக்கள் மேம்பாட்டுத் திட்டத்துக்கு. என்னுடன் சுமார் 30 பேர் 4 தென்னிந்திய‌ மாநிலத்திலிருந்து. 29 பேர் மாமிச உணவு உண்பார், நான் ஒருவன் மட்டும் மரக்கறி உண்ணும் நெறியாளனாக.
அது நடந்த இடம் கிறித்தவ மதம் சார்ந்த ஒரு நிறுவனம். அங்கு உணவு தயாரிப்பு பொறுப்பு ஒரு கன்னியாஸ்திரி கையில். அந்த வளாகத்தில் ஒரு பெரிய தேவாலயமும் இருந்தது.

அவர்களுக்கு எல்லாம்( அந்த 29 பேருக்கு) எப்படி விருந்தாளிகளுக்கு உரிய முறையில் மாமிசத்தில் கட்லட், சிற்றுண்டி, உணவு எல்லாம் தந்தாரோ அதே போல எனக்கும் மரக்கறி உணவில் தனிப்பட்ட கவனத் தயாரிப்பில் எனக்கு வெஜிடபுள் கட்லட், சூப், உணவு வகைகள், ஏன் குடிநீரில் கருங்காலி எல்லாம் போட்டு..இராஜமரியாதையுடன். நாமாக இருந்தாலோ, நம் வீட்டில் இருந்தாலோ கூட ஒருவருக்குத்தானே இந்தப் பொறியலுடன் ,இந்த இரசத்துடன், இந்த சட்னியுடன் சமாளித்துக்கொள்ளுங்கள், ஒருவருக்கு எவ்வளவு என்று செய்வது என தாயாக இருந்தாலும் கூட சிறு கவனிப்புக் குறைவுடன் நடந்து கொள்வதை நாம் குறையென்று ஏற்க முடியாது நிலை அப்படித்தான் இருக்கும்.

ஆனால் அந்த கன்னியாஸ்த்ரி பெண் அவரை நாம் தேவதை என்றே சொல்ல வேண்டும் எப்படி அப்படி அந்தளவு கவனம் எடுத்துக் கொண்டார்கள் என்று இன்றளவும் எண்ணி எண்ணி மகிழ்கிறேன். இப்போது அந்த நிகழ்வு நடந்து25 ஆண்டுக்கும் மேல் ஆனபோதும் கூட மறக்க முடியாமல் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். ஒரு நாள் மட்டுமல்ல தங்கியிருந்த அத்தனை நாட்களிலும் அதே மரியாதை கலந்து உபசாரம், அதே அளவு மாறாத நெகிழ்வுடன்...

இது போல கிறித்தவத்தில் தான் வெண்ணுடை அணிந்த தேவைதைகள் நிறைய உலாவுகிறார்கள்.
Image result for easter 2017



காட்சி 3:

இது நடப்பு. என்னிடம் இருக்கும் திறம் அறிந்து என்னை தமது தலைமையின் கீழ் உள்ள கல்லூரியில் முகாம் அலுவலராக நியமித்து விட்டார். இன்று அவர் மூலம் ஒரு இலட்சத்து இருபதாயிரம் ரூபாய் ஈட்டியிருக்கிறேன் இதுவரை. இது எனது 10 மாத சம்பளம். இதில் இருபதாயிரம் வழிச்செலவு இன்ன பிறவற்றுக்கு போனாலும் ஒரு இலட்ச ரூபாய் எனது பொறியியல் படிக்கும் மாணவரான‌ எனது மகனுக்கு முதலாமாண்டு கட்டணச் செலவுகளுக்கு சரி கட்டியது. என்னடா செய்வது எப்படி சமாளிக்கப் போகிறோம் என்றிருந்த நிலையில் இந்த நிகழ்வு நடந்தது. நடந்து கொண்டிருகிறது.அவரும் ஒரு கிறித்தவரே . குழந்தை யேசுவின் கருணை பெற்ற குழந்தை ஜான் என்பது அவரது பெயர்.

இப்படி என்னால் நிறைய சொல்லிக் கொண்டே போக முடியும். நினைவுகளைப் பகிர்ந்து கொண்டு...ஆனால் உங்களுக்கு இதையெல்லாம் படிக்க நேரமிருக்கிறதா என்ன? இருக்க வேண்டும். மனிதம் மேம்பட..

சேலம் சந்திப்பில் நடைமேடையில் என்னுடன் நடைப்பயிற்சி செய்யும் ஒரு முகமதிய நண்பர் ஒரு ஆதார் அட்டையை ஒரிஜினல்தான் எடுத்தார். அது 18 வயது அஜிமுதீன் கள்ளக்குறிச்சி என்ற விலாசத்தில் இருந்த ஒரு இளையவருடையது. என்னிடம் கொடுத்தார், இதை ஒரு தபால் பெட்டியில் போட்டு விட்டால் தபால் துறையே உரியவருக்கு அனுப்பி வைக்குமே என்று சொன்னேன். அட, இந்த தகவலே எனக்கு இப்போது உங்கள் மூலம்தான் தெரியும் என்றார். ஆம், எந்த அரசு ஆவணமாயிருந்தாலும் அதை எங்கே எவர் தொலைத்திருந்து சென்றிருந்தாலும், நீங்கள் கண்டெடுத்தால் உங்களால் அவர்களுக்கு சேர்க்க முடியவில்லை எனில் ஒரு தபால் பெட்டியில் போட்டு விடலாம். அதை அஞ்சலகம் உரியவரிடம் ஒப்படைக்க முயலும் பொறுப்பெற்கும்.

ஆனால் என்னிடம் நண்பர் கொடுத்த அந்த ஆதார் அட்டையை நானே உறையிலிட்டு அதில் உள்ள விலாசமெழுதி அஞ்சல் வில்லை (5 ரூபாய்க்கு இல்லாததால்) 6 ரூபாய்க்கு ஒட்டி எனது துணைவியாரிடம் அந்த வெயிலில் எமது ஊரில் உள்ள அஞ்சலகத்திற்கு சென்று அஞ்சல் செய்யச் சொல்லி அஞ்சல் செய்தோம். ஏன் எனில் சுமார் 2 கி.மீ வரை தொலைபேசிக்கட்டணம் (இணையக் கட்டணம்தான்...நெட்பில்) கட்டச் சென்று பார்க்கும்போது எந்த அஞ்சல் பெட்டியுமே கண்ணுக்கு தென்படவேயில்லை என்பதும் மறுபடியும் வந்து எமது ஊரிலேயே அஞ்சலிடக் காரணம்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Saturday, April 15, 2017

கடம்பன் சிவலிங்கா: கவிஞர் தணிகை

கடம்பன் சிவலிங்கா: கவிஞர் தணிகை

Related image

Kadamban Name and Title is related with Elephants.

Image result for 55 by 100 number

கடம்பனுக்கு ஜே.
கடம்பன் மனதை கல்லாக்கிக் கொண்டு பார்க்க வேண்டிய அரிய படம். காலத்துக்கு இப்படி ஒரு மலைவாழ்மக்கள் அழிவைச் சொல்லிக் கொண்டிருக்கும்படியான படங்கள் வந்து கொண்டிருந்தாலும் இது அவர்கள் வாழ்வை துணிச்சலுடன் நேர்மறையாக எதிர் கொண்டு வெற்றி காணும் படம். எனவே பார்க்க வேண்டிய படமாகிறது.

ஆர்யா கடம்பன் பாத்திரமாக மாறி இருக்கிறார். மிகவும் நன்றாக உழைத்திருப்பது நன்கு தெரிகிறது. இது போன்ற நல்ல படங்களுக்கு மக்கள் ஆதரவு தர வேண்டும். ஆனால் இதன் வெற்றி எப்படி இருக்கிறது என மக்களும் காலமும் சொல்வார்கள்.

Related image


இராகவா என்பவர் இயக்கி எழுதி திரைக்கதை செய்திருக்கிறார். சூப்பர் குட் ஃபில்ம்ஸ் வெளியிட்டிருக்கிறார்கள். இது முன்பு விக்ரம் பிரபுவுடன் சேர்ந்து தனிக்காட்டு இராஜா என்ற பேரில் செய்வதாக இருந்ததாம் ஆனால் அவரால் செய்ய முடியாததால் ஆர்யாவை வைத்து செய்து நல்ல பேரும் ஈட்டி இருக்கிறார்கள். நான் கடவுள் அகோரி பாத்திரத்திற்கும் பின் ஆர்யா ஏற்றிருக்கும் மிக நல்ல முத்திரை பதிக்கும் பாத்திரம் இந்த கடம்பன்.

கேத்ரின் தெரஸா உண்மையாகவே கானகத்தின் இரதியாக, மலைக்குயிலாக வலம் வந்து குறும்பு செய்து கலக்குகிறார் ஓடி ஓடி கடம்பனை அடைந்தே விடுகிறார். நீங்கள் பணம் சம்பாதிக்க எதையும் செய்வீர் எனில் நாங்கள் எம் வாழ்வை காக்க காட்டை காக்க மலையை காக்க எதையும் செய்வோம் என ஆரியா சொல்வதும் தாத்தா, அப்பன், நாங்கள் எங்க மக்கள் எல்லாம் இதே மண்ணில் வாழவே வேண்டும் வாழ்ந்தோம், வாழ்ந்தே வருகிறோம் என்ற கருத்து ஒலிக்கிறது. ஒளிர்கிறது.

ஆனால் இதே போல் எல்லாப் போராட்டங்களும் நியாயமான போராட்டங்களும் வெல்கின்றனவா என்றால் சினிமாவில் வெல்கின்றன என்றே சொல்ல வேண்டும்.

Image result for kadamban

ஒரு யானைக்கு மது பாட்டல் காலில் ஏறி அதை வைத்தியம் பார்ப்பது, தேன் அழிப்பது, வேட்டையாடச் செல்வது,தோல் உரித்த புலி எனக் காட்டி தொங்க வைத்திருப்பது இப்படி மனதை பாதிக்கும் காட்சிகள்...கொடைக்கானலில் எடுத்ததாக சொல்கிறார்கள். அந்த அருவி மிகவும் அற்புதமாக இருக்கிறது. கடைசியில் அந்த 50க்கும் மேற்பட்ட யானைகளுடன் கடம்பனின் போர் யுத்திகள் படத்துக்கு மேலும் மகுடமாகிறது.

எதிரிகளை அழைத்து வந்து வளையத்துள் சிக்க வைப்பது, எதிரியை அவர்கள் பாசறைக்குள் சென்றே அழிப்பது என இரு யுத்திகளால் நாயகன் வெல்வதான கதை. நன்றாக இருக்கிறது.
Image result for kadamban


மதுவந்தி மகேந்திரனும், மகேந்திரனும், தன்னார்வத் தொண்டர்களாக நல்லது செய்வதாக சொல்லி தந்திரமாக அவர்களை மலை மக்களை ஏமாற்றும் கருவிகளாகி இருப்பதாக காண்பிப்பது தன்னார்வ இயக்கங்களை மறைமுகமாக எள்ளி நகையாடி இருக்கிறது. இதை சினிமாவுக்காக அந்த தனிப்பட்ட பாத்திரங்கள் வேண்டுமானல் அப்படி என கதைக்காக கொள்வதில்  தவறு ஏதுமில்லை.

மற்றபடி கடம்பன் நல்ல படம்தான். சிறந்த உழைப்பு. பார்க்க வேண்டிய படம்தான் காட்சிகள் யதார்த்தமாகவும் கதைக்காகவும் திரைக்கதைக்காகவும் இருக்கின்றன. வன இலாகாவின் கைக்கூலிகள் எப்படி இந்த மக்களுக்கு எதிரிகளாக இருக்கின்றனர் என்பதும், சொல்லப்பட்டிருக்கிறது.
Related image


என்ன வேகமாக ஆர்யா மரம் ஏறுகிறார், கொடியால் பின்னுகிறார், தொங்குகிறார், சேற்றில் விழுந்த வன இலாகா நபரைக் காப்பாற்றுகிறார் என்ன கிராபிக்ஸா? எப்படி இருந்தாலும் நன்றாகவே இருக்கிறது பா‍ஹுபலி கிராபிக்ஸை, சங்கரின் எந்திரன் 2.0 கிராபிக்ஸை இரசிக்கும்போது இதையும் இரசிக்கலாம்


சிவலிங்கா:
Image result for sivalinga

சிவலிங்கா ஏற்கெனவே கன்னடத்தில்  2016ல் வெளியான படம் இப்போது தமிழ் மறு உருவாக்கத்தில்.

இராகவா லாரன்ஸுக்கு மொட்ட கெட்டசிவாவை விட இந்த சிவலிங்கா சற்று பரவாயில்லை.

மனிதர் விவசாயிகள், மாற்றுத் திறானாளிக் குழந்தைகள் என அனைவர்க்கும் தம்மால் ஆன தர்மத்தை நிறைய செய்வதாக ஒரு தொலைகாட்யில் கண்டேன் . அது அவரை அனைவருடனும் அருகே கொண்டு செல்லும். ஆனால் இப்போதைய இந்த 2 படங்களும் அவருக்கு அந்தளவு புகழ் சேர்க்குமா என்பது கேள்விக்குறியே.

Related image
 சந்திரமுகி, போல காஞ்சனா போல வழக்கமான பேய் படங்கள் போல ஆனாலும் கடைசியில் அத்தனை திருகல்கள் செய்து கதையில் புறா போட்டியும் அதன் தோல்வியும்தான் ர‍ஹீமின் கொலைக்கு காரணம் என்று சொல்வதற்குள் படம் பார்ப்பாரை கொஞ்சம் திணற அடித்து விடுகிறார் வாசு.

சின்னத் தம்பி, சந்திரமுகி என கதையே இல்லாத கதையைக் கூட நன்றாக ஓடுமளவு திரைக்கதையாகத் தந்து விடும் அனுபவசாலியான இயக்குனர் இந்த படத்தில் தன் மகன் சக்திவேல் வாசுவை முக்கியமான ர‍ஹீம் பாத்திரத்தில் உலவ விட்டிருக்கிறார். பேயாகவும் பழி வாங்கவும்.
மேலும் அந்த ரித்திகா சிங் நன்றாகவும் பேயாகவும். மற்றபடி ஊர்வசியும் வடிவேலுவும் சிரிக்க வைக்க முயல்கின்றனர். எடுபடவில்லை.

ஊர்வசி மதுவுக்கு அடிமையாகி ஒரு கேரளத்து பொதுக்கூட்டத்திற்கே சென்று உளறியதாக செய்தி அறிந்ததிலிருந்து அவரை இரசிக்க முடியவில்லை  நன்றாக ஊதியிருக்கிறார்.

Banupria is coming as mother in law to siva linga....

ஜாலியாக சிக்கல் இல்லாமல் ஆரம்பித்து அப்படியே செல்லும் கதை கடைசியில் பெரிய முடிச்சாக அவிழ்க்கப் போகிறார்கள் என்ற கட்டத்தில் சிக்கிக் கொண்டு படாத பாடு படுகிறது.

எனது பார்வையில் சிவ லிங்காவை பார்க்கலாம் பார்க்காமலும் இருக்கலாம் ஒன்றும் நஷ்டமில்லை. பொழுது போக்க படம்.

Image result for 40 number out of 100

மறுபடியும் பூக்கும் வரை.
கவிஞர் தணிகை.

Friday, April 14, 2017

ஒரு போராட்டக்காரனின் ஓலத் தூது: கவிஞர் தணிகை

ஒரு போராட்டக்காரனின் ஓலத் தூது: கவிஞர் தணிகை

போகிற போக்கில்  சிறு நூலில் இடம் பெற்ற பதிவு:2007.

Image result for uniform civil code in india


எங்கள் "பணம்" தானே
உங்கட்கு "எல்லாம்"


FIRING ORDER
சுட உத்தரவு கிடைத்தவுடன்
கற்ற வித்தையை
கருணையின்றி காட்டி விடுகிறீர்
எங்கள் மீதே.

இழப்பது யரை?
உங்கள்  குடும்பங்களையேயல்லவா?
வருந்தியழுவது யார்?
உங்கள் தாய்களேயல்லவா?

நீங்காவலி
நமக்கேயில்லையா?


தங்களை
வேறு வழியின்றி
கவசத்துள் நுழைத்துக் கொண்ட‌
இளையவரே:

நீங்கள் கூட‌
கொஞ்சம் சிந்திப்பதில் தவறில்லை

CEASEFIRE
போர் நிறுத்தம்
நமக்குள் தேவை

நாங்கள்
நியாயத்துக்காக போராடுகிறோம்
நாங்கள் வைத்த வேலக்காரர்கள்
நியாயமென உறுமிக் கொண்டு
எங்கள் தலைமீதே
கை வைக்க நேர்கையில்

அவேலைக்காரர்களின்
கைக்கூலிகளா(ய்)
நீங்கள்?

எங்கள் போராட்டத்தில்
வெற்றி பெற்றால்
அப்பயன் பகிர்வுகள்
உங்கள் குடும்பங்களுக்கில்லையா?

நீங்கள் மனிதரில்லயா?
எங்கள் மனிதரில்லையா?

காக்கச் சொன்னால்
எவனோ ஒருவன் தாக்கச் சொன்னானெ
எங்களது குடலை சரித்து விடுகிறீர்
எங்கள் குருதிக் குழல்களை
முறித்து விடுகிறீர்

மண்ணிற்காக
உடல்களை சாய்த்து விடுகிறீர்

இளகிய எங்கள் கசாப்புக்காரரே
காப்பு மனிதரே
நீங்களும் சிந்திப்பதில் தவறில்லை|

நீங்கள் நியமனத்தின் பக்கமா?
நியாயத்தின் பக்கமா?
நிர்ணயித்துக் கொள்ளுங்கள்

இது ஆய்தமேந்த‌
அங்கீகார அனுமதி பெற்ற‌
தங்கள் சகோதரர்க்கு
ஓர் போராட்டக்காரனின்
ஓலத் தூது|


கவிஞர் தணிகை
மறுபடியும் பூக்கும் வரை


கவிதைகள் இளகிய மனமே புகும்
ஒலி
வெற்றிடத்தில் பயணம் செய்வதில்லை.

ஹேவிளம்பி தமிழ்ப் புத்தாண்டா? திருவள்ளுவராண்டு 2048_ 2049 புத்தாண்டா? கவிஞர் தணிகை

ஹேவிளம்பி தமிழ்ப் புத்தாண்டா? திருவள்ளுவராண்டு 2048_ 2049 புத்தாண்டா? கவிஞர் தணிகை



ஒரு முயலையே ஓடினாலும் பிடிக்க முடியாது, இதில் இரண்டு பக்கமும் வேறு வேறு திசையில் ஓடுகின்ற இரண்டு முயல்களை எங்கே பிடிக்க முடியும் கேட்டால் முயற்சி செய்யுங்கள் எல்லாம் பிடிக்கலாம் என கதை விடுவார்கள்.

ஒரு பாதி அல்லது ஒரு சாரர் பாரதி தாசன் சொன்னாரே தை தான் தமிழ் புத்தாண்டு எனச் சொன்னாரே அதுதானே தமிழ்ப் புத்தாண்டு என்பார், எடப்படி பழனி சாமி முதல்வரானவர் ஜெ தான் அதை மாற்றி விட்டாரே கலைஞர் ஆட்சி இனி காலம் போன கதை, சித்திரைதான் தமிழ்ப் புத்தாண்டு என அறிக்கை கொடுக்கிறார், எனவே தமிழ் நாடு மாநில அரசின் அலுவலக ரீதியான தமிழ்ப் புத்தாண்டு இன்றுதான், ஆனால் இதை சமுதாயத்தில் தமிழ் மொழி பால் பற்றை வைத்திருக்கும் ஒரு சாரருக்கு ஏற்புடையதில்லை.எனவே இரண்டுமே நாம் கொண்டாடும் நிலையில் இருக்கிறோம். ஏன் எனில் இவர்கள் எதையுமே குழப்பமில்லாமல் தெளிவுபடுத்தி ஒன்றை மட்டுமே பின் தொடர அனுமதிப்பாரில்லை. ஒரு சாரருக்கு அங்கீகாரமில்லை, அங்கீகாரம் கொடுக்கும் நிலையில் உள்ளார்க்கு அந்தளவு அறிவும், தமிழ்ப் பற்றும் நெறியும் இல்லை.

எனவே தமிழார்ந்த அறிவார்ந்த ஒரு சபை ஒன்றைக் கூட்டி அதில் ஒரு நல்ல முடிவை ஏற்படுத்தி அதை அரசும் மக்களும் பின் தொடரவைக்கும் ஆட்சி முறை வேண்டும். அந்தக் காலத்தில் மன்னராட்சியில் கூட இது போன்ற சபை கூட்டலும் தீர்வு செய்தலும் முறையாக இருந்தது. ஆனால் இன்று ஏதுமில்லை

இந்தக் கட்சிக்காரர் வந்தால் அது என்கிறார், இந்தக் கட்சிக்காரர் ஆட்சிக்கு வந்தால் இது என்கிறார், மொத்தத்தில் எமைப் போன்றோர் இரண்டையும் ஏற்றுக் கொள்ள முடியாது அல்லது இரண்டையுமே கொண்டாட வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

எனக்கு ஆங்கிலத்தில் 18.மார்ச் மற்றும் 23 மார்ச் இரண்டுமே பிறந்த நாளாக இருப்பது போல...ஒன்று அலுவலக அரசு முறைக்கும் ஒன்று உண்மையானதாக இருப்பது போல... எல்லாம் இரண்டு இரண்டாக இதுவும் இரண்டாக இருந்து விட்டுப் போகட்டுமே...அறிவியல் சார்ந்து இந்த விவாதம் பொருத்தமாக இல்லை எனிலும் இவை எல்லாம் அப்படித்தான் , அப்படியேதான் ஏற்றுக் கொண்டாக வேண்டும், நம்மால் அதை எல்லாம் மாற்றமுடிவதில்லை. மாற்ற முயன்றால் நாம் நம் நிலை மாறிப் போயாகவேண்டும், அல்லது மாயமாகப் போயாக வேண்டும்.

ஆறுமுக நாவலர் அல்லது ஓதுவார் என்பார் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஓதினார் இன்று மறைந்தார் அஞ்சலிதான் செலுத்துகிறார்கள் ஆனால் உச்ச நீதி மன்றம் அந்தக் கோயிலை தமிழுக்கும், பராந்தக சோழனுக்கும், தமிழருக்கும் தொடரபுடையதாக இல்லை அல்லது உரிமையுடமையாக இல்லை என்று தீர்ப்பு அளித்த பின் இன்னும் பக்தி மார்க்கம் மக்களை தொடர ஏமாற்று வேலைகள் தொடர்ந்தபடியே இருக்கிறது. எதுவும் மாறவில்லை எதையும் மாற்ற முடியவில்லை என்பதுதான் உண்மை.அதற்காக மாற்ற முயற்சி எடுக்காமல் விட்டு விட முடியாதே என்று ஒரு குரல் கேட்கிறது  அது உண்மைதான் முயற்சி எடுப்பார் எடுத்துக் கொண்டிருங்கள் எனக்கு மற்றொரு கடமை இருக்கிறது.

சொந்த சகோதரர் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இரங்காரடி  கிளியே இவர் ....

இது போல நிறைய இருக்கிறது இந்நாட்டில். எந்தப் பக்கம் போலித்தனம் இருந்தாலும் அது தவறுதான் அது இரட்டை நிலையை வழிநடத்த வாய்ப்பளிக்கிறது சுய வாழ்வில் போலித்தனமாய் வாழ்ந்து கொண்டு பொதுவாழ்வில் வேடமிடும் போலிகளால் இவை எல்லாம் நேர்ந்தது விளைந்தது...கடவுள் மறுப்பு சிந்தனையாளர் என்பார் அவர்கள் தான் காசி இராமேஸ்வரம் முதல் சென்றுவருகிறார்கள் கடவுள் நிலையில் வேறு வேறாய் கூறுகளை பார்ப்பார் கூட போகாதிருக்கும்பட்சத்தில்...

தி.க, தி.மு.க என்பார் கொள்கை எல்லாம் இழந்து ஒன்று கட்சிய தமது குடும்பம் என்றும், கழகத்தை அறக்கட்டளையை தமது சுயநலத்திற்குமாக இவர் நடப்பதே முன்னிருக்கும் முட்டுக் கட்டைகள்...இவை எல்லாம் விடுத்து சுய நலமில்லா நேரடியான வெளிப்படையான தலைமைகள் இருக்கும் போது மட்டுமே செயல்படும்போது மட்டுமே எல்லாவற்றையும் சீர் செய்ய முடியும். இலங்கை தமிழ் இனப் படுகொலையாக இருந்தாலும் சரி, விவசாயிகள் பிரச்சனையாக இருந்தாலும் சரி, காவிரி நீர்ப் பிரச்சனையாக இருந்தாலும் சரி தமிழ்ப் புத்தாண்டை கொண்டாடுவதாய் இருந்தாலும் சரி...

சேலத்தில் ஒரு பெரிய கடையில் விளம்பர போர்ட்: பாலஜி ‍அலுமினிய மெட்டல் மார்ட் என்றிருந்தது மிகப் பெரும் எழுத்துகளில்.பாலாஜி என்பதில் ஒரு கால் இல்லை.இதை ஏன் சரி செய்ய வில்லை மறுபடியும் பொருளாதர செலவு ஆகிவிடும் என கடைக்காரர் செய்யவில்லையா? தமிழ் எழுத்தை எழுதிய அந்தக் கலைஞர் அதிகம் சிரமம் எடுத்துக் கொள்ள வேண்டும் அதை மாற்ற என்பதாலா...ஆனால் அதை அப்படியே பயன்படுத்தி வருகிறார்கள். தவறு நிலைத்து விட்டது அப்படித்தான் தமிழும் தமிழ் மொழியும் சீரழிந்தபடி இருக்க...தமிழ் புத்தாண்டு என்று கொண்டாடுவது பற்றி நாம் யோசித்து அசை போட்டுக் கிடக்கிறோம்.தமிழே இல்லை காவிரியே இல்லை இனி எதுக்கு எப்படி என்கிறீரா?




என்றாலும் என்னாலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லைதான்...

ஹே என்பதே வட மொழி எழுத்து, இதில் விளம்புதல் என்றால் சொல்லுதல், மேலும் ஒரு பொருள் அதற்கு: எழுதிய எழுத்தின் மேல் திரும்ப எழுதல் அல்லது திருத்திக் கொள்ளுதல்...ஆனால் இதை ‍ஹேமா என்றால் தங்கம் என்றும் இதையும் அட்சயை திருதியை ஆக்கி தங்கம் விற்று காசு பணம் இலாபம் சம்பாதிக்க நினைக்கிற கூட்டம்...

அங்கே விவசாயி பாதி மழித்துக் கொள்கிறான், நிர்வாணமாக போராடுகிறான், குட்டிக்கரணம் போடுகிறான், அதற்கு இங்கே கத்திப்பாராவில் ஒரு குரல் கேட்டால் அதை ஆதரிக்காவிட்டாலும் கூட பரவாயில்லை சட்டம், மயிரு, கட்சி என கட்சித் தலைமை என ஒப்பாரிகள் கேட்கின்றன...ஒரு மயிரில்லாத மண்டையன் ஒரு எம்.எல்.ஏவை இருந்து மதுவுக்கு எதிராக போராடச் சொன்ன தாயை தமிழ்த் தாயை மதுவை எதிர்த்து போராடும் தாயை மிருகமாக தாக்குகிறான் அவன் என்ன ஆனான்? அவன் மத்திய அரசுப் பணி என மாற்றிக் கொண்டு ஓடி விடலாம்...

ஆனால் தமிழ் நாட்டுக்கும் தமிழுக்கும் இது போன்ற ஒரு இழிவான அவலமான நிலை மோடி ஆட்சியைப் போன்று பிறிதொரு ஆட்சியில் விளைந்ததில்லை இதை உணராமல் இங்கிருக்கும் அந்த காவிக் கட்சித் தலைவர்கள் கட்சியை கட்சியின் நிலையை தூக்கிப் பிடிப்பதாக எண்ணி கூலிக்கு மாரடைப்பார் போல குரைத்தபடி இருக்கிறார்கள். தமிழும் தமிழரும் முன மழுங்கியபடியே போய் வெகு நாளாக ஆகிவிட்டது.

முன்பெல்லாம் தி.மு.க காரர்கள் துணிந்து போராடி எதிர்த்து நிற்பார்கள் இது  கூட இப்போதெல்லாம் இல்லை. ஏன் எனில் அவர்களும் சுயநலமிகளாய் பாலு போல கோடீஸ்வர நாட்டத்திலேயே இருப்பது போல ஆகிவிட்டது.

இப்படி எல்லாம் தமிழுடன் தமிழ்ப் புத்தாண்டு, அரசியல் , சமூக வாழ்வுடன் பிணைந்து கிடக்க இந்த நாளை நாம் எதிர் கொள்கிறோம்

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.
பெரிய வெள்ளியில்


Wednesday, April 12, 2017

அடிசனல் டி.எஸ்.பி(ADSP) பாண்டியராஜனை பணி நீக்கம் செய்வதே சரி: கவிஞர் தணிகை.

அடிசனல் டி.எஸ்.பி பாண்டியராஜனை பணி நீக்கம் செய்வதே சரி: கவிஞர் தணிகை.

Image result for adsp pandiarajan

ஈஸ்வரி என்ற 45 வயதுப் பெண்ணை, மதுவிற்கு எதிராக போராடுகிறார் என்ற ஒரே காரணத்துக்காக அடித்த கூடுதல் கண்காணிப்பாளர் பாண்டியராஜனை பணி நீக்கம் செய்வது மட்டுமே தக்க தண்டனையாக இருக்கும். அங்கு மதுக்கடை திறக்க மாட்டோம் என இப்போது சொல்லும் தமிழக அரசு நாட்டில் ஸ்டேட்டில், மாநிலத்தில் ஒழுக்கம் நிலவ அவரை பணி நீக்கம் செய்தே ஆக வேண்டும் ஆம் அதை செய்தே ஆக வேண்டும்.

திருப்பூர் சாமளாபுரம் இப்போதுதான் கேள்விப்படுகிறோம். இது தேசிய செய்தியில் இடம்  பெற்றபிறகு.




மக்களுக்கு கடையடைப்பு நடத்துமளவு சொரணை வந்தது பற்றியும், மனித உரிமை ஆணையம் அந்த காட்டுமிராண்டி மேல் விசாரித்தும், நீதிமன்றத்திடம் தமிழக அரசு கடை இல்லை என்ற வாக்களித்தும், மேலும் சில வாரங்களுக்குள் இது பற்றிய விசாரணை அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்பதெல்லாம் மேம்போக்கான வாடிக்கையாக நடைபெறும் விஷயங்களே.

ஓரு பெண்ணின் மேல் ஆண் போலீஸ் கை வைக்க சட்டத்தில் இடம் இல்லை என்பதற்கு அந்த முட்டாள் மாறாக செயல் செய்து விட்டான்.எனவே அவன் இந்திய காவல்துறைச் சட்டத்தை மீறிய குற்றவாளியாகிறான். சாட்சியாக நிரூபணமாக அந்த வீடியோ பதிவே இருக்கிறது எனவே அவன் பணி இடை நீக்கமல்ல, பணி நீக்கம் செய்யப் பட்டேயாக வேண்டும். பணி நீக்கம் செய்யப் படுவதுதான் சரியானது.

எடப்பாடி முதல்வர் அவரது சக மந்திரியான விஜய பாஸ்கரை மந்திரி பதவியிலிருந்து நீக்குவதை விட இது முக்கியமானது மக்களது பார்வையில்.

இது மற்ற போலீஸ்காரர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டிய நடவடிக்கைகளாக இருக்க வேண்டும்.

காவல்துறை நண்பனா?
மதுவிற்கு எதிராக மதுக்கடைக்கு எதிராக போராடிய அந்தப் பெண் மனித குலத்திற்கு ஊறு செய்தவளா?

அவளை துன்புறுத்திய ஒரே காரணம் போதும் இந்த அரசு அரசாங்கம் நடத்த அருகதையற்றதன்று காட்ட...இதே போல சென்னையில் ம.க.இ.க பெண்களையும் கல்லூரி மாணவர்களையும் ஒரு முறை கடுமையாக தாக்கியது நினைவிருக்கும். அதுவும் மதுவிற்கு எதிராக போராடியதால்தான்...

பிரச்சார வழியில் மதுவுக்கு எதிராக போராட தொகை ஒதுக்கும் ஒரு பக்கம் அரசு இன்னொருபக்கம் பிரச்சாரத்தை கையில் எடுப்பாரை அடித்து ஒடுக்குமா முடக்குமா ,சசிபெருமாள் போன்றவரின் போராட்டத்திற்கும், மரணத்திற்கும் இப்ப்போதுதான் தமிழகம் அறுவடை செய்ய ஆரம்பித்து இருக்கிறது.

எங்கள் ஊரில் சாலையோரம் இருந்த மதுக்கடை சுடுகாட்டு அருகே ஆரம்பிக்கப்பட்டு அங்கேயும் கூட்டம் வழிகிறது...அங்கேயே சுடுகாட்டுள் குழி வெட்டி அப்படியே பிணமாக படுத்துக் கொள்ளலாம் என்று...

இப்படி எல்லா ஊர்களிலுமே கடை மாற்றம் இடமாற்றத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தின் ஆணையின் விளைவாக போராட்டம் இருக்கிறது...தமிழக அரசு இராதா கிருஷ்ணன் நகரில் ஆர் கே நகரில் செய்த வாக்குக்கு பணம் பரிமாறிய வழக்கிலிருந்தே ஈடேறமுடியாமல் இதில் எல்லாம் எங்கே கவனம் செலுத்தப் போகிறது என எண்ணாமல் நல்ல சொரணையோடு சாமளாபுரத்தில் கடை திறக்க மாட்டோம் என பதில் சொல்லி தப்பிக்க பார்க்கிறது.


Image result for adsp pandiarajan

மறுபடியும் பூக்கும்

கவிஞர் தணிகை.

Tuesday, April 11, 2017

வெரி குட் மயில் சாமி: கவிஞர் தணிகை

வெரி குட் மயில் சாமி: கவிஞர் தணிகை


மந்திரி சொல்றான், மயிறு சொல்ரான்னு மக்களை அடிப்பீங்களா.. மயில்சாமி ஆவேசம்


Actor Mayilsamy condemns Tirupur police

இந்த நடிகர் நடிக்காமல் உண்மையை பேசியுள்ளார். இது போன்ற கருத்துடன் நான் மூச்சுக்காற்று என்ற ஒரு சிறு கையளவு கவிதைத் தலைப்பில் எப்போதோ ஒரு கவிதை செய்த நினைவு.இந்தப் போலீஸ்காரர்களுக்கு அக்கா தங்கை, தம்பி, அண்ணன், தாய் , தந்தை, குடும்பம் எல்லாம் இல்லையா? வெறும் கருவிகளாய், ஆய்தமாய், மனம் மனசாட்சி, உணர்வுகளே இன்றி இப்படி எல்லாம் நடந்து கொள்ளலாமா? கேட்டால் காந்தி கூட ஒரு இடத்தில் குறிப்பிடுவார் போலீஸ்காரர் என்ற வேலைக்கு வந்து விட்டால் அடிக்கத்தான் வேண்டும் அதுதான் அவரது கடமை என..ஜன நாயகம் காலப் போக்கில் மாறி விட்டது நாகரீகம் ஆள்வோரிடையே, மக்களிடையே, நிர்வாகத்திடையே, பத்திரிகை, சட்டம், நீதி, நிர்வாகம் யாவற்றிடமும் வரவேண்டும். எனவே இன்னும் இந்தக் காட்டுமிராண்டிகளும் இந்த காட்டுமிராண்டித்தனமும் மாற வேண்டும் நாம் இந்த விசியத்தில் மயில்சாமி பக்கம்தான். கோவன் பக்கம்தான், சசிபெருமாள் பக்கம்தான் மயிர்சாமிகளின் பக்கமல்ல...


மந்திரி சொல்றான், மயிறு சொல்ரான்னு மக்களை அடிப்பீங்களா.. மயில்சாமி ஆவேசம்


சென்னை: ஒரு காட்டுமிராண்டிதான் பெண்களை அடிப்பான். மனிதனாக இருப்பவன் செய்ய மாட்டான். மந்திரி சொல்றான், மயிறு சொல்ரான்னு மக்களை அடிக்காதீங்க. திருப்பூரில் பெண்ணை அடித்த போலீஸ்காரர் அவரது தங்கச்சியாகவோ, அம்மாவாகவோ இருந்தால் அப்படி அடித்திருப்பாரா என்று நடிகர் மயில்சாமி கேட்டுள்ளார். திருப்பூரில் மதுக் கடைக்கு எதிராக போராடிய பெண்களை காட்டுமிராண்டித்தனமாக தடியால் அடித்து வெறித்தனத்தைக் காட்டியுள்ளனர் போலீஸார். போலீஸாரின் இந்த கேவலமான செயல் தமிழக மக்களை மிகவும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 


அதிலும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டிய திருப்பூர் கூடுதல் டிஎஸ்பி பாண்டியராஜன் ஒரு பெண்ணைக் கன்னத்தில் பளார் என அறைகிறார். அவரது செயல் அனைவரையும் பதற வைத்துள்ளது. அத்தனை பேரின் கோபத்தையும் திருப்பூர் போலீஸார் சில மணி நேரத்தில் வாங்கிக் கட்டியுள்ளனர். இந்த கொடும் செயல் குறித்து நடிகர் மயில்சாமி ஆவேசமடைந்துள்ளார். இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: காட்டுமிராண்டிதான் இப்படி செய்வான். 
மனிதனாக இருப்பவன் இவ்வாறு செய்ய மாட்டான்.
 மதுக் கடையைத் திறக்கக் கூடாது என்றுதான் மக்கள் போராடினார்கள் 

மக்களை கேட்டுத்தான் கடையை வைக்க வேண்டும்.
 உன் இஷ்டத்திற்கு வைக்க அதிகாரம் கிடையாது
 மக்களுக்குப் பிடிக்காவிட்டால் அது எதுவாக இருந்தாலும் வைக்கக் கூடாது. 
நான் பகிரங்கமாக சொல்கிறேன். நேர்மையான போலீஸுக்கு கோபம் வராது
 பெண்களை, தலையில் முடியே இல்லாத போலீஸ்காரர் கன்னத்தில் அடிக்கிறார். 
அந்தப் பெண்ணைக் கட்டிய புருஷன் கூட அடித்திருக்க மாட்டார். அப்பெண்ணைத் தாக்க அவருக்கு அதிகாரம் கொடுத்தது யார். வன்மையாக கண்டிக்கிறேன். 
மக்கள் கொந்தளித்தால் திருப்பி அடித்தால் ராணுவமே வந்தாலம் தாங்க முடியாது. கதை வேறு மாதிரி ஆகி விடும் 

என் தங்கையோ, அம்மாவோ இருந்தால் எப்படி பீல் பண்ணுவேனோ, அந்த உணர்வுதான் எனக்கு உள்ளது. 

போலீஸ் சம்பந்தப்பட்ட பெண்கள் போராடியிருந்தால் இப்படி அடித்திருப்பார்களா அவர்களது அம்மா, அக்கா, தங்கச்சி, மனைவியாக இருந்திருந்தால் அடித்திருப்பார்களா போலீஸ் மக்களின் நண்பன். அது மாதிரி நடந்து கொள்ளுங்கள்.

 இவர்களால் நல்ல போலீஸாருக்கும் கெட்ட பெயர் வருகிறது. மந்திரி சொல்றான், மயிறு சொல்றான்னு கெட்ட பெயர் வாங்கிக்காதீங்க. ஏற்கனவே தமிழன்னு வெளியில் சொல்லவே வெட்கக் கேடா இருக்கு. மக்களை நிம்மதியா இருக்க விடுங்க, மக்களை தொந்தரவு பண்ணாதீங்க.


VIDEO : Women up in the arms against Tirupur DSP Pandirajan - Video 






மறுபடியும் பூக்கும் வரை
 கவிஞர் தணிகை

நன்றி : மயில்சாமி
நன்றி: ஒன் இண்டியா.

Monday, April 10, 2017

பல தாரம்: கவிஞர் தணிகை

பல தாரம்: கவிஞர் தணிகை

Related image

அந்த மனிதன் எம்.ஜி.ஆர் போல நல்ல கலர் நல்ல உயரம் அத்தனை அழகு ஒரு வேளை அவன் அழகுதான் அழகுன்னா என்ன நல்ல கலர்தானா? அவனுக்கு நிறைய சொத்து வேறு பாக்குத் தோட்டம் எல்லாம் உண்டு, அவனுக்கு 7 மனைவிகள் எல்லாமே ஒத்துமையாகவே இருந்தார்கள். அவன் சாகும் வரை.முருகனுக்கு வள்ளி தெய்வானை என இருவர், பாஞ்சாலிக்கு 5 கணவர், இராமன் சீதையை சந்தேகப்பட்டான் இராவணன் ஒன்றுமே செய்யவில்லை கடத்தியது தவிர,மோளையனுக்கு ஒரு பெண் குழந்தை கூட‌ உண்டு இருந்தாலும் அவன் மனைவி சரசு குண்டிக்குழன் என்னும் கூளையன் ஒருவன் வீட்டுக்கு குடி புகுந்து விட்டாள் அவன் இருக்கும்போதே...

முகமதியத்தில் எத்தனை மனைவி வேண்டுமானாலும் கட்டிக் கொள்ளலாமா? வார்த்தையிலேயே விட்டு விடலாமா கை விட்டு விடலாமா? ஆண்கள் முதியவர்களாகவும் அவர்களின் மனைவி மார் மிக இளையவர்களாகவும் நிறைய பேரை பார்க்க முடிகிறது.

காற்று வெளியிடை போன்ற படங்களும், கடவுள் மறுப்பு சிந்தனையாளரும் இதற்கு எல்லாம் சடங்கு சம்பிரதாயம், தாலி, மணம் என்ற ஏதும் இல்லாமலே ஒருவனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு ஒருவன் என்றே போதிக்கின்றன.

போதவில்லை, ஒருவனுக்கு ஒருத்தி போதவில்லை எனவே மற்றொன்றா? சரி 7 பெண்கள் எப்படி? தசரதனுக்கு பல ஆயிரம் மனைவியாமே? அதைப் பார்த்து திருந்திய இராமனுக்கு ஒன்றே போதும் என புத்தியா?

ஆண்கள் எண்ணிக்கையை விட பெண்கள் எண்ணிக்கையின் விகிதாச்சாரம் குறைந்தே வருகிறது. எப்படி ஏற்கெனவே ஒருத்தி இருக்கும்போது இந்தப் பெண்கள் அதே ஆணை கட்டிக் கொள்கிறார்கள்? அவனை விட்டால் வேறு ஆளே கிடைக்காதா? இல்லையா? எல்லாம் ஏதோ ஒரு சிறு சலனம். மயக்கம்.

முறை வைத்துக் கொண்டு திரௌபதி பஞ்ச பாண்டவரை ஆண்ட போதும் அடுத்தவனை ஏற்கெனவே அந்த மற்றொருவன், இன்னொருவன் செய்ததுதான் நன்றாக இருந்தது என நினைத்தால் நினைத்திருந்தால் அவள் எப்படி பதிவிரதை பத்தினி யாய் இருக்க முடியும் எல்லாம் கதை, ஆனால் அவள் கடவுள் அவளுக்கும் கோவில். அவள் ஒருவனை புணர்ந்தபடி வேறொருவனை புணர்ந்ததை நினைக்கவேயில்லை, நினைத்தாள் என்றெல்லாம் யாரும் சொல்ல முடியாதே...பீமன் தானே அதில் உடல் வலு அதிகம் உள்ளவன், உடல் வலுவுக்கும் புணர்ச்சிக்கும் தொடர்பு என்கிறதே உயலியல் சேர்க்கைகள்...பெண்களில் இப்போதெல்லாம் சினிமாக்களில் நடப்பது போன்று அவன் தம் பேச்சைக் கேட்பவனாயிருக்க வேண்டும் என நினைப்பதோடு சரியல்லவா? மற்றபடி அவன் எப்படி கொலைகாரன், கொள்ளைக்காரன், கெட்ட பழக்கம் நிறைந்தவன், திருடன், குடிகாரன் இது எப்படி இருந்தாலும் அதற்கெல்லாம் கவலைப்படுவதாக இல்லையே...

எவ்வளவு நீளம் என்றெல்லாம் பாலியல் பரிமாற்றத்தில் இணையத்தில் எல்லாம் பெண்கள் எல்லாம் கூட கேட்கிறார்கள் என செய்திகள் இருக்கின்றனவே இதற்கெல்லாம் என்ன சொல்வது? அறிவியல் முன்னேற்றமா? இல்லை உடலியல் பெருமகிழ்வை  அதிக படியாக நுகர்ந்து விடுகிறார்களோ...ஆனால் இது எல்லாம் சிற்றின்பம் , மிருக உணர்ச்சி இதை எல்லாம் தாண்டி வாழ்வதும் பிறர்க்காக வாழ்வதுமே மனிதம் தெய்வீகம் என்னும் வாழ்வும் இருக்கிறதே...இதனிடையில் குடும்பம் பிள்ளை மனைவி என்றெல்லாம் பொறுப்புடன் இந்தியாவில் இன்னும் குடும்ப அமைப்பு அப்படியே நீடிக்கிறதே...இதை எந்த மத வாத, மொழி மாறிய இன மான அமைப்புகள் சாதிய அமைப்புகள் தடை செய்ய முடியும்?

இந்த பல தார மணம் என்பது ஒரு மிகவும் காம்ப்ளிகேட்டட் ஆன சப்ஜெக்ட்.
இது போல முற்கால மனிதர்கள் வாழ்ந்திருக்கலாம். தற்காலத்துக்கும், காலத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய காலத்துக்கும் மனிதர்க்கும் அழகே இல்லையே..

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Sunday, April 9, 2017

எட்டுத் தோட்டாக்கள்: கவிஞர் தணிகை

Image result for 0.58

எட்டுத் தோட்டாக்கள்: கவிஞர் தணிகை

superb
Image result for 8 thottakkal wikipedia

கணேஷ் என்ற ஒரு நல்ல திரைப்படக் கலைஞர் அருமையான திரைக்கதை அமைப்புடன் ஒரு நல்ல பல பரிமாணங்கள் கொண்ட கதையை திரைப்படமாக்கியிருக்கிறார் எட்டுத் தோட்டாவுக்குமே எட்டு உயிர்களைக் கொடுத்து...

எம்.எஸ்.பாஸ்கர்தான் நாயகர் என்றே சொல்லலாம், ஆனாலும் வெற்றி மிக அருமையாக அடக்கமாக அன்டர்ப்ளே செய்து நாயகன் பேரைத் தக்க வைத்துக் கொள்கிறார். நாயகி நன்றாக தமது ரோலை உணர்ந்து செய்திருக்கிறார். அவர் நடிகையாகவே தெரியவில்லை. அவ்வளவு குடும்பப் பாங்கு.அபர்ணா பாலமுரளியாம். அத்தனை நேரிய கனகச்சிதமான முக அமைப்புடையவரைத் தேர்வுசெய்திருக்கிறார் இயக்குனர்.

பொதுவாகவே இந்த எம்.எஸ்.பாஸ்கர், தம்பி இராமைய்யா, நாசர் போன்ற நடிகர்கள் எல்லாம் எந்த எப்படிப்பட்ட பாத்திரங்கள், ரோலைக் கொடுத்தாலுமே செதுக்கி விடுவார்கள்....இதில் எம்.எஸ்.பாஸ்கர் உன்னைப்ப்போல் ஒருவன் கமலைப் போல் அசத்தியுள்ளார்.

கைத்துப்பாக்கியைக் கையாளத் தெரிந்த ஒரு காவல்துறையில் பணி புரிந்து தண்டனையாக வேலை இழந்த ஒரு போலீஸ்காரர் எப்படி காவல் துறையை மிஞ்சி 8 தோட்டாக்களையும் உபயோகித்து விடுகிறார் என்பதே சுருக்கமான கதை.

பெரிய பெரிய பேனர் படங்களை எல்லாம் பார்ப்பதற்கு இது போன்ற படங்கள் எவ்வளவோ பரவாயில்லை,தேவலாம் சூப்பர் படம் பார்க்க ஆரம்பித்தால் முடித்தவுடன் தான் நமக்கு வெறு பக்கம் சிந்திக்கத் தோன்றுகிற அளவு அவ்வளவு கட்டிப் போட்டு விடுகிற படம்,

என்னைக் கேட்டால் காற்று வெளியிடை படத்தை இத்துடன் ஒப்பிடவே கூடாது ஆனாலும் இரண்டும் ஒரே நாளில் ரிலீஸ் என்பதால் காற்று வெளியிடை செல்வதற்கு பதிலாக இதற்கே சினிமா இரசிகர்கள் சென்றால் திருப்தி அடைவர்.

Related image

நல்ல கதைச் செதுக்கல். நல்லகதையமைப்பை உடைய படமே இனி வெற்றி பெறும் என்பதற்கு இந்தப் படமும் ஒரு எடுத்துக் காட்டு. 50களுக்கும் மேல் வயதாகிவிட்ட ஒரு நடுத்தர வயதான மனிதர் சமுகத்தின் எல்லாப் பக்கங்களிலும் எப்படி திருப்பிப் போடப்பட்டு ஒரு கொலைகாரராகி விடுகிறார். மாறுகிறார் என தெளிவாக சொல்கிறார்கள். இலஞ்சம், அரசு, காவல் துறை ஆகியவற்றின் பாதிப்புகளுடன் .முதுமை, பொருளாதாரம், நல்ல அரசின்மை, அரசு அலுவலகங்களின் மெத்தனம் , குடும்பத்தின் மனைவி இல்லா ஒரு கணவனின் ஏக்கம், செய்யாத குற்றத்திற்கு தண்டனை, காவல்துறை என்றாலே அச்சப்படும் ஒருவருக்கு காவல்துறைப் பணி, சிறுவர் கூர்மப் பள்ளியில் படித்த சிறுவன் காவல் துறை துணை ஆய்வாளராக ஆவது...

வேலையில்லாமல் தான் இருக்கிறார் என்று அந்தக் குற்றவாளியை பின் தொடரட்டும் என்று கையில் ஒரு கைத்துப்பாக்கி அதில் 8 தோட்டாக்களுடன் கதை செல்ல ஆரம்பிக்கிறது அதனுடன் நாமும் செல்கிறோம் ஒரு இடத்தில் கூட தொய்வில்லாமல்...
Image result for 58 marks


நல்ல படம் பார்க்க வேண்டிய படம். காவல்துறையின் கறைகளை ஒரளவு காட்டியுள்ள படம், சாடியுள்ள படம். எம்.எஸ். பாஸ்கர் புகுந்து விளையாடி இருக்கிறார். அந்த அளவு அவருக்கு வாய்ப்பை வழங்கி உள்ளார் இயக்குனர் கதை நாயகர் வெற்றியுடன் ஆரம்பித்து கைத்துப்பாக்கி தொலைந்து முதல் கிருஷ்ணா மூர்த்தி கிருஷ்ணமூர்த்தி மூர்த்தியை பின் தொடர ஆரம்பித்து விட்டது.

மறுபடியும் பூக்கும் வரை
 கவிஞர் தணிகை.

காற்று வெளியிடை: கவிஞர் தணிகை

காற்று வெளியிடை: கவிஞர் தணிகை

Image result for 40 out of 100 grade


ஐரோப்பியன், வெஸ்டர்ன், ரசியன் மொழி கதை சார்ந்தது போன்ற ஒரு காதல் கதையை மணி ரத்னம் கொடுத்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் வெளியாகியுள்ளது. ஹிந்தியில் ஒரு வேளை ஹிட் கொடுக்கலாம். தமிழில், தெலுங்கில் பிரதேச மொழி வெளிப்பாடுகளில் பெரு வெற்றி பெறுவது என்பதும் படம் ரீச் ஆவதும் சந்தேகத்துக்குரியதே.

எனக்கு தனிப்பட்ட முறையில் படம் பிடித்திருக்கிறது என்பது வேறு. மணி ரத்னம் மற்ற படங்களை ஒப்பிட்டு தனியாக இந்த படத்தை வேறு எந்த நினைவும் வராமல் பார்த்தால் ஓ.கேதான்.

ஆண் பெண் என்ற சங்கமம், இதில் சமம் சமானம் என்பது தேவையில்லா சமாதானமான உறவாக விசி, வருண் என்ற பைட்டர் பிலேன் கார்த்திக்கும் ஆர்மி டாக்டர் லீலாவுக்கும் உள்ள ஏற்படும் நெருக்கமான உறவை சித்திரிக்கிற படம்.

பாடல் சரட்டு வண்டியிலே, வான் வருவான், நல்லை போன்றவை புதிதாக கேட்பவர்க்கு பிரமிப்பூட்டும். காட்சியுடன் சேர்ந்து பார்க்க இயல்பாக இருக்கிறது.

Image result for 40/100

தாலி திருமணம் என்ற சடங்கு இல்லாமல் ஒருவனுக்கு ஒருத்தி என்ற உயர்ந்த நாகரீகமான உறவு முறை சொல்லப்பட்டிருக்கிறது. அவன் பைட்டர் ப்ளேன் பைலட், அவள் ஆர்மி டாக்டர் இருவருமே நல்ல உயரமான வாழ்வு நிலையில் இருப்பதால்...அதெல்லாம் சகஜமப்பா என்று தோன்றுமளவு.

ஆனால் வலுவான உறவு என்றும் நிலைத்திருக்கும் என விசி பாகிஸ்தான் சிறையிலிருந்து ஏழு கடல் ஏழுமலை தாண்டி தமது மனைவியை குழந்தையை பார்க்க வந்ததாக சொல்வது கதையின் ஆணிவேர்.இத்தனைக்கும் அவள் தாலி கட்டாமல் மேளம் கொட்டாமல் மணம் முடிக்காமல் உடலை பகிர்ந்து கொண்டவள்.ஆனால் இந்த ஆண் பயந்து கொண்டு பொறுப்பிலிருந்து தப்பித்து அதெல்லாம் சரியாக வராது என்ற நிலையில் பெண் தாம் பார்த்துக் கொள்வதாய் துணிச்சலுடன் சொல்லிப் பிரிகிறார் பிரிவதாய் அப்போது தெரியாமலே...

அதன் பின் ஏர் கிராஷ், பாகிஸ்தான் சிறை , சித்ரவதை என்றெல்லாம் கதை நிலை மாறி கடைசியில் ஒன்று சேர்கிறது. மணி ரத்னத்திற்கு ஒரு காலக் கட்டத்திற்கும் பிறகு படம் தொடர்பு இடைவெளியில் விழுந்து விடுகிறதோ என்று பேசிக் கொள்கிறார்கள், காதல், மதம் , தேசியம் இதிலிருந்து இன்னும்  இவர் மீளாமல் படம் செய்யும்போதெல்லாம் கீழ் இறங்கி விடுகிறார். ஒருவேளை இதே படத்தை பின்னாளில் இதே இந்தியப் படவுலகம் நன்றாக இருக்கிறது என்றும் சொல்லலாம்.

இந்தியப் பெண்கள் திருமணமில்லாமல் உடலுறவும், குழந்தை பெற்றுக் கொள்வதையும் ஏற்றுக் கொள்ளும் எனில் இந்தப் படத்தையும் ஏற்றுக் கொள்ளும். எனக்கென்னவோ படம் வியாபார ரீதியில் வெற்றி பெறும் எனச் சொல்லத்  தோன்றவில்லை.

இது நல்ல காமிர, நல்ல லொகேஷன், நல்ல படம்தான், ஒரு நல்ல கதையை நல்ல நாவலை படித்த உணர்வைத் தரும் படம்தான். ஆனாலும் இதன் நிறையை எது குறைக்கிறது என்றுதான் புரியவில்லை. விசி அடிக்கடி கோபப்படுவதும், லீலா தமது ஆற்றாமையை கோபத்தை வெளிப்படுத்துவதும் ஒரு பாண்டேஜ் இருவரிடையே இருப்பதும் இல்லாததுமாக சில உறவுகளில் இருப்பது போல
Related image



மொத்தத்தில் சராசரியை விட மேலான மனிதரை நோக்கி அவர் வாழ்வை எடுத்துக் காட்டும் படமாக இருப்பதால் மாஸ் அப்பீல் இதில் இல்லை. அனைவரையும் சென்று சேராது.

மறுபடியும் எனைப் பொறுத்தவரை இது ஒரு நல்ல படம் என்றே சொல்லத் தோன்றுகிறது.
Related image


தனியாக இயக்குனரின் பின்னணி பற்றி எல்லாம் ஆராயாமல் அவர் முன் பின் படம் எல்லாம் ஒப்பிடாமல் பார்த்தால், நல்ல படம். கொஞ்சம் வெள்ளை மழை, கொஞ்சம் ரஷியன் நாவல், கொஞ்சம் பாகிஸ்தான், இந்தியா என கலந்து போய் இருக்கிறது மழை இல்லா எங்களது நாட்களில்

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.