Saturday, June 29, 2019

செல்பேசியின் அழைப்பு மரணத்துக்கு அழைத்துச் சென்ற நிஜம்: கவிஞர் தணிகை

செல்பேசியின் அழைப்பு மரணத்துக்கு அழைத்துச் சென்ற நிஜம்: கவிஞர் தணிகை
Related image


செல்பேசியின் அழைப்பு தடம் மாற்றி மரணத்திற்கு இட்டுச் சென்ற கதையல்ல நிஜம். + TNEB NEWS

நேற்று தமிழ் நாடு சேலம் மாவட்டம் ஒட்டுப்பள்ளம் அருகே வீரக்கல் பகுதியில் ஒரு மின் மாற்றி அதாங்க ட்ரான்ஸ்பார்மரில் ஏறி மின் இணைப்பை சரி செய்யச் சென்ற ஒரு நபர் பலி ஆகி இருக்கிறார். இவர் ஒரு மின் பணியாளர் அல்ல.

கிராமங்களில் இதெல்லாம் சகஜமப்பா என்ற குரல்கள் ஒலிக்கின்றன.

இவர் சுமார் 15 ஆண்டுகளாக இதெல்லாம் செய்து வரும் பயிற்சி உடையவர்தாம் என்கிறார்கள்.

ஆனால் அன்று என்ன நடந்தது.

இவர் தண்ணீர் வண்டி ஓட்டி அனைவர்க்கும் தண்ணீர் சப்ளை செய்பவராம். அதுமட்டுமல்லாமல் காடு கழனிகள் உண்டு.

3 பெண் குழந்தைகள்....முதலாமவரை சென்னை ஐ.ஏ.எஸ் பயிற்சி நிறுவனத்தில் இரண்டு நாளுக்கும் முன் தான் சேர்த்தி விட்டு வந்தாரம்.

இரண்டாம் எண் ஒரு கலைக்கல்லூரியிலும் மூன்றாம் பெண் மால்கோ பள்ளியிலும் படிக்க வைத்து வந்திருக்கிறார்.

கிணற்றிலிருந்து நீர் எடுக்க மின்சாரம் இல்லை. மின்சார இலாகாவிற்கு போன்செய்து பார்த்திருக்கிறார் என்றும் அவர்கள் அங்கு வந்து சேர நேரம் பிடிக்கும் என்று சொன்னதாகவும்

உடனே இவர் சென்றிருக்கிறார் லிவரை போட்டு திருகி மின்சார முனையத்தை நிறுத்தி வைத்தாரா என்று தெரிவதற்குள் ஒரு செல்பேசி அழைப்பு எடுத்து பேசி இருக்கிறார்.

 பேசிவிட்டு லிவரை போட்டு ட்ரான்ஸ்பார்மரை ஆப் நிலைக்கு கொண்டு சென்றாரா இல்லையா என்று நினைவில்லாமலே ஆப் செய்யாமலே  மேல் ஏறி பீஸ் போட முயன்றிருக்க ஹெவி லைன்  தாக்க இறப்பு நேர்ந்திருக்கிறது

இது போல கிராமங்களில் நடப்பது தமிழ் நாடு மின் வாரியத்துக்கு அவமானமில்லையா..,
 அதே போல நான்  நடைப்பயிற்சி செய்யும் சாலையில் பெரும்பாலும் 3 இடங்களில் சாலை விளக்கை நான் தான் போட்டு வருகிறேன்.

இருள் அடர்ந்த போதிலும் எவரும் போடுவதாக இல்லை.

அடுத்து இன்னொரு செய்தியாக வாட்ஸ் ஆப்பில் உலவியது மின்சார வாரியத்திற்கு மின் இணைப்பு சீராக்கச் சொல்லி புகார் அளித்து 6 மணி நேரம் ஆகியபிறகும் கிராமத்தில் மின் இணைப்பு சீராக்கப்பட வில்லை எனில் 50 ரூ அபராதமாக மின் தடப்பணியாளரிடமிருந்து LINE MAN வசூலிக்கப்பட்டு உங்கள் மின் கணக்கில் அளிக்கப்பட்டு உங்கள் மின் கட்டணத்திலிருந்து கழிக்கப்படும் என்ற விதி பற்றி கீழே:

 உங்கள் பணம் உங்களுக்கே எப்படி? டி.என்.ஈ.பி. TNEB

மின் வாரிய விதி எண் 21ன் படி நமது வீட்டிலோ அலுவலகத்திலோ மின் இணைப்பு பழுது ஏற்பட்டு சம்பந்தப்பட்ட மின் வார்ய அலுவலகத்தில் உள்ள புகார் ஏட்டில் 10 இலக்க இணைப்பு எண் எழுதி வைத்தால்

நம்து வீடு மாநகரப் பகுதிக்குள் இருந்தால்  1 மணி நேரத்திற்குள்ளாகவும் நகராட்சி பகுதியெனில் 3 மணி நேரத்துக்குள்ளாகவும் கிராமப் பகுதியெனில் 6 மணி நேரத்திற்குள்ளாகவும், கிராம பகுதியெனில் 6 மணி நேரத்திறுள்ளாகவும் வந்து சரி செய்திட வேண்டும் இல்லையென்றால் தாமதிக்கும் ஒவ்வொரு 6 மணி நேரத்துக்கும் 50 ரூ வீதம் அதிகபட்ச 2000 ரூ வரை நமக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
அத்தொகை நமக்கு பணமாகவோ, காசோலையாகவோ வழங்கப்பட மாட்டாது நமது மின் கட்டண தொகையி கழிக்கப்படும்.

இதற்கான இழப்பீடு தொகையை சம்பந்தப்பட்ட மின்  கம்பியாள் ...லைன்மேன் அவரது மேலதிகாரி அவர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்து நம் கணக்கில் வரவு வைக்கப்படும்.

உங்கள் பணம் உங்களுக்கே...எப்படி ... TAMIL NADU ELECTRICITY DISTRIBUTION  STANDARDS  OF PERFORMANCE REGULATIONS  RULE NO: 21 DSPR...
தமிழ் நாடு மின்சாரப் பகிர்மானச் செயல் திறத் செந்தரங்களுக்கான ஒழுங்கு முறை விதிகள் படியான விதி ரெகுலேசன் 21 ஆப் டி எஸ் பி ஆர் ஆகும் இந்த விதி முறை எவருக்கும் தெரியாததனால் பயன்படுத்தி இழப்பு கேட்பதில்லை...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment