Monday, October 29, 2018

29 10.18 இன்றைய கல்லூரி ஃபேர்வெல்லில் எனது எண்ண அலைகள்: .கவிஞர் தணிகை

29 10.18 இன்றைய கல்லூரி ஃபேர்வெல்லில் எனது எண்ண அலைகள்:  கவிஞர் தணிகைஇனி நாம் எவருமே தாயின் கர்ப்பப் பைக்குள் புக முடியாது, தொப்பூள் கொடியை அவரிடமிருந்து துண்டித்து நாம் தனியே அவர் தனியே எனப் பிரிந்ததே ஃபர்ஸ்ட் ஃபேர்வெல்

தாய்ப்பால் குடி மறந்தபோது இரண்டாம் ஃபேர்வெல் நடந்தது.

பெற்றோரை விட்டு பள்ளிக்குள் புகுந்ததும் மூன்றாம் ஃபேர்வெல்

ஒவ்வொரு வகுப்பைத் தாண்டும்போதும் ஒரு ஃபேர்வெல்

பிரிவோம் சந்திப்போம் என்ற அந்த ஃபேர்வெல் இன்று உங்களை டாக்டர்களாக்கி நீங்கள் டாக்டர்களாகி பிரியும்போது வந்திருக்கிறது...

நாம் எவருமே தனித்தனியல்ல... நீ என்ற உனக்குள் எப்போதும் பிரியாமல்
உன் பெற்றோர், ஆசிரியர்,நட்பு, யவுமே இருக்கின்றன...விதைகளாக, சதையாய் எலும்பாய் நாம் சிறிதிலிருந்து பெரிதாகும் வரை இது போல் நிறைய ஃபேர்வெல்கள் வரும் போகும்...இங்கு நீ எனக் குறிப்பிட்டது மரியாதையைக் குறைக்க அல்ல...ஒருமையைக் குறிப்பதற்கே...

நமது அனைவர்க்கும் ஒரு நிரந்தரமான ஃபேர்வெல் உண்டு. அதைச் சொல்ல  சந்திக்க பயப்படத்தேவையில்லை. அது பற்றி பேசவும் கூச்சப்படவும் தேவவையில்லி..ஆனால் அதற்குள் நம்மை நாம் நிலை நாட்டிக் கொள்ள என்ன செய்யப்போகிறோம்? என்ன செய்திருக்கிறோம்? அதைப் பொறுத்துத்தான் நமது பெயர் விளங்கும். நமக்கான ஃபேர்வெல் இருக்கும்

ஒவ்வொருவருக்கும் சாதனை செய்ய ஒவ்வொரு தனித்தனியான முகம் இருக்கிறது...வாழ்த்துகள், ஆசிகள் என்றென்றும்..,

பாலமலை தூய்மை பாரதத் திட்டத்தின்  பயிற்சியில் வெற்றி பெற்ற இந்த இருபது பேரைப்பற்றி நிறைய சொல்லலாம்...ஆனால் ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால்:
Image may contain: 2 people, people smiling, people standing
இந்த திட்டத்துக்கு நோடல் ஆபிசராக என்னை நியமித்த முதல்வர் பேராசிரியர் டாக்டர் பேபிஜான் தற்போதைய இந்திய உபகண்டத்தின் சிறுவர் பல் மருத்துவத்துறையின் தலைவராக உயர்ந்திருக்கிறார் இப்போது மாநில அளவில் இந்திய பல் மருத்துவக் கழகத்தின் முதல் மாநாடாக வரும் நவம்பர் 10 11 ஆம் தேதிகளில்  ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக இருந்து  எங்கள் கல்லூரி சார்பாக நடத்துகிறார் அவருக்கே முதல் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்...
Image may contain: 4 people, people smiling, selfie, mountain, outdoor and nature
டாக்டர்    கவித்ரா முகாமின் பெயிண்டிங் பணி இவரால் முன்னெடுக்கப்பட்டது.
டாக்டர் ஆனந்த் ப்ரகாஷ்: நல்ல களப்பணியாளர் மற்றும் தலைவர்
டாக்டர் பீட்டர் ஸ்டீபன்சன்: சமூக அக்கறையுள்ள மருத்துவர்
டாக்டர் சோபியா: வார்த்தை மாறா பணி அர்ப்பணிப்பாளர்.
டாக்டர் ப்ரவின்குமார்: துன்பம் பொருட்படுத்தாமல் சேவைக்கு வந்தவர்
டாக்டர் ஜெயபால்: சேவை மனப்பக்குவமுள்ள பம்பரக் கால்கள்
டாக்டர் சினுமோல் சாஜன்: மிகவும் சுறுசுறுப்பான ஒத்துழைப்பாளர்
டாக்டர் அருண் விக்னேஷ்: ஆக்கபூர்வமான உழைப்பாளி
டாக்டர் ரஞ்சித்: எதற்கும் தயாரான முகாம் உறுதுணை
டாக்டர் சி.பி.நந்தினி: எதற்கும் தயார்
டாக்டர் இலக்யா: முகாம் முழுதும் பாலமலையில் தங்க ரெடி என்றவ்ர்
டாக்டர் ஏ. ஆசிக்கா: மத நல்லிணக்கத்தின் அடையாளம்
டாக்டர் வெங்கடேஷ்: சலியாத மனம்
டாக்டர் கார்த்தி: தொழில் நுட்பம் அறிந்த முகாமுக்கு பிள்ளையார் சுழி
டாக்டர் சுஜிதா: விளையாட்டாகவே வினை செய்பவர்
டாக்டர் கிருஷ்ணகுமார்: குறி தவறாதவர்
டாக்டர் ஸ்ரீ ஹரிணி: குடும்பப் பாங்கு
டாக்டர் விக்னேஷ்வரி: தோழமையில் பிடிவாதம்
டாக்டர் கௌதம்: மண்ணின் மைந்தர்
டாக்டர் ஆர்.ஜி.ஆர்: சித்தார்த்: நுட்பமான அறிவுடைய முதல் பதிவாளர்

அத்துடன் ஒர் விபத்திலிருந்து எமைக் காத்த கிருஷ்ணமூர்த்தி மற்றும் மலை அடிவாரத்தில் காத்திருந்த பாலமுருகன் போன்ற கல்லூரி ஓட்டுனர்கள் அனைவர்க்கும் இந்தப் பதிவின் மூலம் நன்றி நவிலலை உரித்தாக்கி ஃபேர்வெல் பாரட்டும் என்றென்றும் அன்புடைய...

மறுபடியும்பூக்கும் வரை
கவிஞர் தணிகை

Saturday, October 27, 2018

தமிழக முதல்வர் குடி இருக்கும் பகுதிகளிலேயே சேலத்தில் இரவு நேர‌ வழிப்பறிக் கொள்ளைகள் : கவிஞர் தணிகை

தமிழக முதல்வர் குடி இருக்கும் பகுதிகளிலேயே சேலத்தில் இரவு நேர‌ வழிப்பறிக் கொள்ளைகள்  : கவிஞர் தணிகை

Image result for salem city night dacoits 2018


நன்றி: காலைக்கதிர் 26.10.18.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொந்த ஊர் எடப்பாடி என்றாலும் கூட இவரது முக்கியமான தங்கும் இடம் சேலத்தில் நெடுஞ்சாலை நகர் இருப்பிடம். சென்னையிலிருந்து அடிக்கடி வந்து செல்வார். இவரது பிம்பம் இந்த 18 எம்.எல்.ஏக்கள் வழக்கிலும் வெற்றி பெற்றதால் பெரிதாக வளர்வது போன்று இவரது கட்சியில் தோற்றம்..

கடந்த சில நாட்களில் மட்டும் தீபாவளி ஸ்பெசலாக 76 செல்பேசி, மற்றும் ரொக்கம் வழிப்பறித் திருட்டாக இரவு நேரங்களில் கொள்ளை அடிக்கும் கும்பலால் நடத்தப்பட்டிருக்கின்றன என்று சேலம் காவல் நிலையங்களில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளன, என்று அதன் செய்தியை காலைக்கதிர் நாளிதழ் வெளியிட்டிருப்பதைக் கண்டேன். புகார் தெரிவிக்கப்பட்டதே 76 எண்ணிக்கை எனில் உண்மையில் நடந்தது எத்தனை இருக்குமோ என யூகித்துக் கொள்ளலாம். மேலும் இன்னும் தீபாவளிக்கு  ஒரு வாரம் இருக்கும் நிலையில் இந்த தொல்லைகள் மேலும் நீடிக்கும் இன்னும் தீவிரமாக ... இது சேலத்தில் நடப்பு.

 எனது சொந்த அனுபவத்திலேயே ஒரு முறை இப்படி ரூ.7 ஆயிரம், அரை நாண் கொடி, ஆகியவற்றை ஒரு பேருந்துப் பயணத்தின் போது மேட்டூரிலிருந்து சேலம் செல்லும்போதே இழந்திருக்கிறேன். அப்போதும் அது தீபாவளிக் கூட்டம்தாம். ஆனால் நான் புகார் தெரிவிக்கவில்லை . நாட்டின் தலைவிதியை ஏற்றுக் கொண்டேன் எனது தலைவிதியாக...

இந்த திருட்டு, வழிப்பறி, நடுநிசிக் கொள்ளை , தொடர்ந்து சேலத்தின் பல பகுதிகளில் நடைபெற்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இத்தனைக்கும் முதல்வர் அடிக்கடி சென்னையிலிருந்து சேலம் வந்து சொந்த வீட்டுக்கு வருகை புரிந்து கோலாகல வரவேற்பை ஏற்றுக் கொண்டு சென்று வருகிறார் என்பதுக் குறிப்பிடத் தக்கது.

நள்ளிரவுகளில் இரவு ஷிப்ட் பணிக்கு செல்வோர் வருவாரிடையேயும், வெளியூர் பயணிகள் இடையேயும் குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுமளவு கத்தி போன்ற கூர்மையான ஆய்தங்களுடன் பலர் அடங்கிய இரு சக்கர வாகன கும்பல்கள் வழி மறித்து மிரட்டி முக்கியமாக செல்பேசி, மற்றும் பணப்பர்ஸ், பைகள், ரொக்கப்பணம் ஆகியவற்றை பிடுங்கி சென்று விடுவதாகவும் செய்தி குறிப்பிடுகின்றன.

இந்நிலையில் முதல்வர் இந்தியாவிலேயே தமிழகம் மட்டுமே விபத்துகளைத் தடுப்பதில் முதல் மாநிலமாக விளங்குகிறது அவ்வளவு முயற்சிகள் நடக்கிறது என்றும், விபத்துகளுக்கு முக்கிய காரணம் சாலை விதிகளை கடைப்பிடிக்காததும், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவதுமே என்று குறிப்பிட்டு பேசி இருப்பது கவனிக்கத்தக்கது.

மேலும், இவரது  கட்சிக்காரர்களே வரவேற்பு கொடிகளை சாலையின் ஓரத்தில் நடாமல் பாதையின் இடையே சாலையின் இடர் விளைக்கும் பகுதிகளில் கூட நட்டு வைத்து விடுகிறார்கள் என்பதெல்லாம் அரசால் கவனிக்கப்பட வேண்டிய செய்திகள்.

மதுக்கடைகளையும் அரசே நடத்துகிறது, காவல்நிலையங்களையும் அரசே நடத்துகிறது...
Image result for salem city night dacoits 2018அரசு நினைத்தால் எல்லாவற்றையும் செய்யலாம்...இன்னும் 3 எம்.எல்.ஏக்களியும் கூட பதவி நீக்கம் செய்யலாம். இடைத்தேர்தல் நடத்தலாம் 20 தொகுதிகளுக்கும் அவர்கள் மேல் முறையீடு செய்யாதிருந்தால்.. ஊராட்சித் தேர்தலையும் நடத்தாது இருக்கலாம்...தெருவிளக்குகள் இல்லாமல் இருக்கலாம்...பொது சாக்கடைகளையும் சுத்தப்படுத்தாமல் கொசுக்கள் பெருக டெங்கு , பன்றிக்காய்ச்சல் வருவதையும் விழிப்புணர்வு பிரச்சார பதாகைகள் அடிக்கச் சொல்லி கல்வி நிலையங்களுக்கு உத்தரவிட்டு செய்திகள் கொடுத்தபடி...மருத்துவ மனைகளையும் தயார்படுத்தலாம்...

எது அடிப்படையோ அதை செய்யாமல் ....எல்லாவற்றையும் வளரவிட்டு ஆள்வதாக மேலாண்மை செய்வதாக ஆட்சி செய்வதாக செய்திகளைக் கொடுக்கலாம்

ப்ளாஸ்டிக் வரும் ஜனவரி முதல் தடை என்று சொல்லி இருக்க, வணிகர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாக செய்திகளும் சொல்லலாம்...

சாக்கடையை, இருப்பிடத்தை, வீதியை சாலையை தூய்மைப்படுத்தினால் கொசுக்கள் குறையும் அதை செய்ய மாட்டோம்.

மதுக்கடையை எடுக்க மாட்டோம்...விபத்து குறைய அடிப்படை ஆதாராமான அதை செய்ய மாட்டோம்..

பிளாஸ்டிக்கை , குடி நீரை, இப்படி எல்லாவற்றையும் வணிகமயமாக்கிவிட்டு இப்போது தடுக்க முடிவதாக, முனைவதாக செய்திகள்

எல்லாமே வரும் தேர்தலில் மத்தியில் ஆளும் கட்சியும், மாநிலத்தில் ஆளும் கட்சியும் திட்டமிட்டு காய் நகர்த்தலின் காட்சிகள். எனவே மீ டூ...அய்யப்பன் வைரமுத்து...என... தீர்ப்புகளும், ஆள்கையுமாக..

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Sunday, October 21, 2018

என்று தான் மாறப்போகிறீர்கள் மாற்றப் போகிறீர்கள்:? கவிஞர் தணிகை

என்று தான் மாறப்போகிறீர்கள் மாற்றப் போகிறீர்கள்:? கவிஞர் தணிகை

Related image


அது ஒரு தேச உடைமை ஆக்கப்பட்ட வங்கிதான். எனக்கு ஏன் பழைய தலைமுறை ஏ.டி.எம் கார்ட் வைத்திருக்கிறீர் புதிய இ.எம்.வி கார்ட் பெற்றுக் கொள்ளுங்கள் இன்னும் சில நாட்களில் அதாவது 15. 10.18 உடன் உங்களின் ஏ.டி.எம்.கார்டின் செயல் இயக்கம் நிறுத்தப்படும் என்று குறுஞ்செய்தி அனுப்பி இருந்தார்கள்.

அது சரிதானா?
ஏனெனில் அந்தக் கார்டின் மதிப்பு 2020 வரை என அவர்கள் கொடுத்த கார்டில் காலாவதி தேதி குறிப்பிடப்பட்டிருந்தது.

ஒரு தொலைபேசினேன். அந்த துணை மேலாளர் அம்மா அந்த செய்தியை உறுதிப்படுத்தி பெற்றுக் கொள்ளுங்கள் என்றார்.

அது மிகவும் மெதுவாக யானை போல அசைந்து பணி செய்யும் வங்கிப் பிரிவு.

நான் சென்று கார்ட் புதிது தரமுடியுமா எனக் கேட்டபோது எனக்கு முன் ஒரு தெரிந்த நபர் மிக எளிமையாக கையொப்பமிட்டு பெற்றுக் கொண்டு சென்றார். பழைய கார்டை நிறுத்தி வைத்து புதிய கார்டை ஓரிரு நாளில் இயங்க வைப்பதாக சொன்னார்கள்.
Related image


அடுத்து எனக்கு விடுமுறை ஆய்த பூஜை விழாக்காலத்தில் சனிக்கிழமை வர அந்த வங்கியை ஏ.டி.எம் கார்ட் வந்தால் கிடைக்குமா என தொலைபேசிவிட்டு சுமார் 10.30 மணி அளவில் சென்றேன் கிடைக்கும் அமருங்கள் பெட்டி ...பாக்ஸ் வரட்டும் என அந்த ஒரு சாளர முறை இயக்க அலுவலர் சொன்னார். முன் சொன்ன துணை முதல்வர் அங்கே பெற்றுக் கொள்ளுங்கள் எனக் கையைக் காட்டிவிட்டு அவரது பணியை கவனிக்க ஆரம்பித்தார்

சுமார் 11. மணிக்கு அனைவரும் ஒரு கோப்பை தேநீர் அருந்தினர். அதை முடித்து விட்டு உதவியாளர் பெண்ணை அழைத்து அந்தப் பெண் உதவி மேலாளர் மேஜையில் அமர்ந்திருந்தார், அவர் வராததால். வந்திருந்த ஒரு வாடிக்கையாளர் அவரை உதவி மேலாளாளராகி விட்டார் என கிண்டல் செய்தார்.
Related image
அவர் வந்து பெட்டியை அதாங்க பாக்ஸ் எடுத்து வைத்ததும், அதிலிருந்து  ஏடிஎம் கார்ட் உள்ள கவர்களை எடுத்து தனது கணினியில் பார்க்க எர்ர்ர் என்றதாம். சற்று அமருங்கள் என என்னைச் சொல்லிவிட்டு அந்த தனி சாளர முறை இயக்க அலுவலர் ...ஒரு இளம்பெண்தான்...உடனே செல்பேசியில் சொல்லி எடுத்துப் பேசினார்.

சற்று நேரத்தில் நிலை சீரடைந்தது.

உடனே அவர் என்னை மறந்து தனது பணியை தொடர ஆரம்பித்தார். அவருக்குத் தெரிந்த நபர்களை எல்லாம் ஏ.டி.எம் கார்ட் வாங்கி மாற்றிக் கொள்ளச் சொல்லிக் கொண்டிருந்தார். இன்னொரு வாடிக்கையாளரை அழைத்து பணம் வாங்கிக் கொள்ளச் சொன்னார்.

சென்றது முதல் கவனித்தேன் கணினியில்  புள்ளி விவரங்க்ளை புகுத்திக் கொண்டிருந்தார் சலான், வவுச்சர்களை எல்லாம் பார்த்து...அவர்களுக்கு நேரிடையான வந்திருக்கும் வாடிக்கையாளர்களை விட அவர்களுக்கு செய்ய வேண்டிய பணிகளை விட இது போன்ற‌ பணிகள் தாம் முக்கியமாக இருக்கிறது.
Related image
கஸ்டமர் ஈஸ் கிங் இன் அவர் சர்வீஸ் என்றார் அந்த கோமணத்தாத்தா...

நான் மறுபடியும் தானாக சென்று நின்று கொண்டேன். மகனை நேரம் ஆகிறது என்று சொல்லி அனுப்பி விட்டு..

என்னை மறுபடியும் பார்த்து அந்தப் பெண் ஏடிஎம் கவரை எடுத்து எங்கள் பாஸ்புக்கை வாங்கிப் பார்த்து கண்னியில் சில குறிப்பு இட்டுவிட்டு அந்தக் கவருடன் மேலாளரை சென்று பார்க்கவும் என்றார்...சென்று கொடுத்தேன். அவர் கணினியைப் பார்த்து செக் செய்துவிட்டு கேட்டார் எனது கணக்கு வைத்திருக்கும் பேர்களைச் சொன்னேன் அது ஒரு இருவருடைய இணைப்புக் கணக்கு...பின் எண்களை எவரிடமும் சொல்லாதீர், எவராவது கேட்டால் உடனே வங்கியில் வந்து சந்திப்பதாக சொல்லுங்கள் என்றெல்லாம் அறிவுரை செய்துவிட்டு கை எழுத்து மாதிரி அதே போல இருக்கிறதா மாறி இருக்கிறதா ஒரு விண்ணப்பம் வாங்கி இருவர் புகைப்படமும் இணைத்து சாவகாசமாக கைஒப்பங்கள் இட்டு கொண்டு வந்து விடுங்கள் என்றார்...

 எங்கே கை எழுத்து எல்லாம் இட  விடுகிறீர் ?(கை எழுத்துக்குத்தான் வேலையே இல்லையே எல்லாம் ஒரே இணைய டிஜிட்டல் பரிவர்த்தனை தானே?) என்று மேலாளரைக் கேட்டுவிட்டு, ஏய்யா இதுக்குப் போய் ஒன்னரை மணி நேரம் தேவையா? ஆகிவிட்டதே? என்று கேட்காமல் முன்பாக இருந்திருந்தால் அதற்குள் ஓம்புட்ஸ் மேன் விலாசத்தைக் கொடுங்கள் உங்கள் வங்கி பற்றிக் குறிப்பிட்டு எழுத வேண்டும் எனக் கேட்டு ஆர்ப்பாட்டம் செய்திருப்பேன்...ஆனால் இப்போது அப்படியெல்லாம் செய்யாமல் மனதுள் சிரித்தபடியே மறுபடியும் அந்தப் பெண்ணிடம் சென்று நிற்க, அவர் என்ன எனக் கேட்க கொடும்மா கை எழுத்துப் போட்டுவிட்டு செல்கிறேன் என ரிஜீஸ்டரை வாங்கி ஏடிஎம் எண், கணக்கு எண் எழுதி  தேதியுடன் கை ஒப்பமிட்டு விட்டு ஒரு ஸ்பெசிமென் விண்ணப்பம் அவர் எழுந்து தேடித் தர சொல்லாமல் விடைபெற்றேன்.. 2020 வரை இருந்தது 2023 வரை நீட்டிக்க இந்த அடிப்படைப் பணி...
Related image
அடுத்து பி.எஸ்.என்.எல்...அலுவலக படையெடுப்பு.

கோவையிலிருந்து குறுஞ்செய்தி அனுப்புகிறார்களாம், பெங்களூரில் வாடிக்கையாளர் மையமாம், ஏதாவது ஒன்று என்றால் உள்ளூர் அலுவலகத்தில் தொடர்பு கொள்வதாம்... வாடிக்கையாளர் மையத்தை முடிந்தவரை கொத்திப் பிடுங்கிவிட்டு மத்திய மந்திரி முதல் மாவட்ட அலுவலர் வரை ஒரு மின்னஞ்சல் ஏற்கென்வே கொடுத்து இருந்ததை காண்பித்துக் கொள்ளாமல்...

ஏன் எனது ரூ. 7 மற்றும் ரூ. 9 பிக் பாக்கெட் அடிக்கப்பட்டன எனக் கேட்டேன் சப் டிவிசனல் எஞ்சீனீருக்கு கடிதம் எழுதித் தரச் சொல்லி வாங்கிக் கொண்டார்கள். அந்த மனிதருக்கும் குறுஞ்செய்தி அனுப்பியது வெற்றிகரமாயில்லை என்றே செய்தி வர, அங்கிருந்த பெண் அவர் பங்குக்கு முயன்று கடைசியில் கண்ட கண்ட‌ குறுஞ்செய்தி அனுப்புவதற்கு  எல்லாம் முற்றுப் புள்ளி வைத்தார். ஒரு சாதாரண மனிதருக்கு எந்தவகையிலும் உதவி கரமாக இல்லாத அமைப்பு முறைகள்...கொஞ்சம் கூட ஒரு துளியும் ஒருங்கிணைப்பு இல்லாத அலுவலக முறைகள்...

வீடு வந்த போது மணி 1. 30 மதியம் அன்றைய விடுமுறை அதற்கே சரியாகி இருந்தது...
Related image
இடையில் சில நண்பர்கள் சந்திப்பு: அதில் ஒருவர்: அரசியல் வியாதி, நடிப்பு சினிமா இந்த இரண்டுத் துறையில் இருந்தால் மட்டுமே தமிழகத்தில் இந்தியாவில் ஏதாவது பிரபலமாகி செய்ய முடியும்...அதை ஊடகவிரும்பிகளும் பிரபலம் செய்வார்கள்... மற்றபடி என்னதான் செய்தாலும் ஒன்றும்...மேல் வரவழி இல்லை என்றார்...

சசிபெருமாளை நினைத்துக் கொண்டேன்.

வியட்நாமின் ஹோசிமின்னை நினைத்துக் கொண்டேன்

சனிக்கிழமை மதியம் காகங்களுக்கு எள் கலந்த சோறு வைத்துவிட்டு

வந்து கணினியைத் திறந்து இணையப் பார்வையைப் பார்த்தால்... அமிர்தசரஸ் ரயில் மனிதர்கள் மேல் பாய்ந்த செய்தி...இராவண கோபம்...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Saturday, October 20, 2018

இன்னுமொரு உயிர்க் கொல்லி தாவரம்: கவிஞர் தணிகை

உயிர்க் கொல்லி தாவரம்: கவிஞர் தணிகை
18.10.18 அன்று காலை எங்கள் வீட்டுப் புழக்கடையில் உள்ள கறிவேப்பிலை மரம், மற்றும் சப்போட்டா மரத்தின் மேல் ஏறிப் படர்ந்து பின்னியிருந்த கொடியை அகற்ற பிரம்மப் பிரயத்தன முயற்சிகள் மேற்கொண்டேன்.

நமது நாட்டில் பி.எல் 480 ஒப்பந்தத்தின் படி அமெரிக்கா அனுப்பிய கோதுமையுடன் பார்த்தீனிய விதைகளும் அனுப்பி வைக்கப்பட்டு இந்த நாட்டில் இன்று அது அழிக்க முடியாமல் பரவி வருவதாகச் செய்திகள் உண்டு.

அதன் பின் கல்வராயன், பாலமலை போன்ற மலைப்பிரதேசங்களில் உன்னி முட்செடி என்ற ஒரு முட்செடி அழகாய் வண்ண வண்ணமாய்ப் பூத்து அதன் பூக்கள் கீழே சிந்தி அதிலிருந்து அந்த முட்புதர்கள் தோன்றி அந்த வனத்திலே பரவி ஆக்ரமித்ததை பார்த்ததுண்டு...ஏன் இந்த ஜூன் மாதம் முதல் ஜூலை வரை கூட நான் பாலமலையில் இருந்தேன் பார்த்தேன்.
Image may contain: 1 person, standing and outdoor
எந்த அரசுக்குமே இவற்றிப் பற்றி எல்லாம் இவற்றி அறவே அழிக்கவேண்டும் என்ற எண்ணமே இருந்ததில்லை. அதே போல சவுக்கு,யூகலிப்டஸ் போன்ற நிலத்தடி நீரை உறிஞ்சி அந்தப் பிரதேசத்தையே மலடாக்கும் மரங்கள் பற்றி எல்லாம் நினைத்துப் பார்க்க நேரமில்லை.

 அதே போல விவசாய முள் மரம் என்போமே வேலிகாக்க சீமை வேலா முட் மரங்களையும் வெட்டி அகற்றுவது பற்றி இயக்கங்களே இருந்தன...

இப்போது எங்கள் பகுதிகளில் எல்லாம் ஏன் உங்கள் பகுதிகளிலும் நீங்கள் கண்டிருப்பீர்...இந்த செடி, இல்லை இந்தக் கொடி இல்லை இல்லை இந்த செடிகொடி ஏன் எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம் நூல் இழை விடுவதை வைத்து சொல்லவேண்டுமானால் இந்த விழுதை விடும் தாவரம்...

அதனதன் பூகோளத் தன்மைக்கேற்ப செடி கொடி மரத்திற்கேற்ப தன்னை தகவமைத்துக் கொண்டு ஆற்றல் பெற்றதாய் வளர்ந்து அந்த படரும் கொடிக்கு இலக்காகும் தாவரத்தை அழுத்தி அமுக்கி அழித்து விடும் ஆற்றல் கொண்டதாய் விளங்குகிறது.
Image may contain: plant, outdoor and nature
மிகவும் அபாயகரமான நச்சுக் கொடி...

இதனுடன் நான் ஒரு போராட்டமே நடத்தினேன். தப்பித்தது எனது மறுபிறப்பே/ ஏன் எனில் இதை முதலில் எனது பக்கத்து விட்டுக் காம்பவுண்ட் உள் பார்த்தேன் அங்கிருந்து எங்கள் வீட்டுக்கு தாவி பற்றிப் பரவியது அவர்கள் காம்பவுண்ட் அருகே இருந்த செடி கொடி மரத்தை அப்புறப்படுத்தி விட்டார்கள்.

சிறிது காலம் கழித்துப் பார்த்தால் எங்கள் கறிவேப்பிலை மரத்தின் அருகே ஒரு இரண்டு விரல் மொத்தத்திற்கு ஒரு புரசங் கொம்பு கலரின் ஒரு மரக்கட்டை போலான வேர் ஓடி மேல் மரத்து வரை ஏறி இருந்தது. அதை வெட்டி எடுத்தேன். பிடுங்கியும் விட்டேன்... வேர் வெட்டப்பட்ட செடி காய்ந்து போகவேண்டும்...காய்ந்தால் பிறகு மேல் சுற்றிக் கொண்டிருப்பவற்றை சத்துக் குறைந்து தானே இருக்கும்...பிடித்து இழுத்துப் போட்டு அப்புறப்படுத்தி விடலாம் என என் திட்டம்.


ஆனால் அது அதனிடம் பலிக்கவில்லை...மேல் ஏறியிருந்த கொடிகள் நன்றாக வளர்ந்து மேலும் மேலும் பசுமையாக இலைகள் விட்டு துளிர் விட்டு வளர்ந்தபடியே இருந்தன...மேலும் அதன் விழுது வேறு எல்லா இடங்களிலும் தொங்க ஆரம்பித்தன...

விழுது போல வரும் அதன் நூல் இழை போன்ற கொடியை அவ்வப்போது நாங்கள் குளிக்கும் அறைக்குச் செல்லும்போதும், ஓய்வறைக்குச் செல்லும்போதும் இழுத்து இழுத்து பிய்த்து பிய்த்துப் போட்டபடியே இருந்தேன் இருந்தாலும் அவை அழியவில்லை.ஓயவில்லை.
Image may contain: plant, outdoor and nature
 அதற்கு நீரும் தேவை இருக்கவில்லை, நிலமும் தேவை இருக்கவில்லை. காற்றிலேயே இருக்கும் ஈரப்பதம் அல்லது எங்கிருந்து சத்து பெறுகிறதோ தெரியவில்லை மிகவும் அற்புதமாக சுகமாக வளர்ந்து வந்தது. அதன் இலைகள் மிகவும் பசுமையாக ஏறத்தாழ மென்மையான அரசு இலை போல.

ஆய்த பூஜை அன்று ஒரு நாள் குறித்தேன், கறிவேப்பிலை, மற்றும் சப்போட்டா மரத்தின் மேல் இருந்த இதை ஓய்வறையின் ஓடுகள் மேல் ஏறி அறுத்து பிய்த்து எடுத்து அப்புறபடுத்துவது என...அதே போல ஏறினேன்.

வீட்டில் அதன் பிறகு வீட்டம்மாளிடம் பாட்டு வாங்கிக் கட்டிக் கொண்டேன் இன்றுதான் அதை செய்ய வேண்டுமா? அதனால் எவ்வளவு நேரம் வீணாகிவிட்டது மற்ற வேலைகள் எல்லாம் எவ்வளவு பாதித்திருக்கின்றன என்று அது வேறு குடும்பப்பிரச்சனை. இது வேறு பூகோள, தாவரவியல் பிரச்சினை

எப்படியோ அந்த இரண்டு மரங்களை விடுவித்தே தீருவதென்று எனது முடிவு. மேல் ஏறிப் பார்த்தால்...அந்த நூல் இழைகள் கீழே அந்த அஸ்பெஸ்டாஸ் சீட்டுகளி உதிர்ந்து தேங்கிய சப்போட்டா மற்றும் மக்கிய இலைளின் கீழ் இறங்கி பூரான் கால்கள் போல் வேர் விட்டு சல்லி வேர் மூலம் நீண்டு நீண்டு கிளை பரப்பியபடியே சென்று கொண்டிருந்தன. அதை முதலில் சுத்தம் செய்ய ஆரம்பித்து அந்த மக்கிய குப்பைகளுடன் அந்த செடியின் வேர் மற்றும் நூல் இழை போன்றவற்றையும் அப்புறப்படுத்தி விட்டு  மேல் இருக்கும் கொடியை கைப்பற்றும் முயற்சி செய்தேன்.

கொக்கி போட்டு இழுத்தாலும், வரவில்லை. ஒன்றை ஒன்று பின்னிக் கொண்டு மரத்தின் கிளைகளிலும் பின்னியபடி மகா மரணப் போராட்டம். கொஞ்சம் பிசகினாலும் நான் அன்று ஒரேயடியாக விடைபெற்றிருப்பேன் என எண்ணுமளவு

மெதுவாக ஒவ்வொரு கொடியையும் பிரித்து இழுத்து முடிந்தவரை பிய்ந்து வந்தாலும் வரட்டும் என கைகளாலும் பலம் கொண்ட மட்டும் பிய்த்தேன், கொக்கி மூலமும் இழுத்தேன். சில முறை பிய்ந்து வந்தது, சில முறை அதை என்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லை...

ஒரு முறை பிய்த்தபோது அதன் தோல், மட்டும் பிரிந்து வந்து உள்ளே நார் போல நீர் வழுக்கி கையை வைத்து இழுக்க முடியாமல் நடுத்தண்டு நின்று கொண்டது ஒரே நீர் வழ வழவென்று பிசு பிசுப்பு...
Image may contain: plant and outdoor
பல வகையான வண்ணம் காட்டியது... செடி போல, இலை போல, கொடி போல, தடித்த பட்டையுள்ள மேல் தோலுள்ள கொடி போல, உள்ளே நீர் விட்டும் , கசிந்துகொண்டிருக்கும் தாவரம் போல.. பூமியைத் தொடாமலே பூமிக்கும் தொடர்பில்லாமலே வளர்ந்தபடியே...

மாயம் காட்டியது...95 சதவீதம் பிய்த்து பிரித்த்ப் போட்டேன். கழீவு நீர் ஓடையில் இரசாயன கெம்ப்ளாஸ்ட் ஓடையில் விசிறி எறிந்தேன். அப்போதும் மிகவும் உயரத்தில் இரண்டு கொடிகளை என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை...

இங்குதான் இப்படி எனில் போகும் வழியெல்லாம் அன்று என் கண்கள் இதற்காகவே மேய்ந்தன...அந்த அந்த இடத்திற்கேற்ப புதர்களுக்கேற்ப, செடிகொடிகள் மரத்திற்கேற்ப இந்தக் கொடிகள் வளர்ந்துதான் இருக்கின்றன..மனிதர்கள் இதன் அபாயத்தை உணராமலே இருக்கிறார்கள்.

இவற்றை  உடனே அப்புறப்படுத்துங்கள் இல்லையேல் ஒரு தாவரம் மிஞ்சாது...
Image may contain: 1 person, standing


 இதன் இலை, கொடி, வேர் விடும் தன்மை ஆகியவற்றை இத்துடன் பதிவு செய்துள்ளேன்.... எப்படி எப்போது விழுமோ அந்த செடிகள் மிகவும் மென்மையாக பார்க்க அழகாக எங்கெங்கும் முளைத்தும் கிடக்கின்றன இவற்றை பார்த்தவுடன் முளையிலேயே பிடுங்கி எறிந்து விட வேண்டும்...

இதன் பேர் என்ன, இதன் குணம் என்ன,,, இவை எப்படி செடியாக, கொடியாக வியப்புக்குரிய ஒரு அபாயகரமான வளர்ச்சியாக எல்லாத் தாவரத்தையும் வளைத்து விடும் கொடிய ஆபத்தாக மாறுகின்றன என்பவை பற்றி எல்லாம் தாவரவியல் படித்த விற்பன்னர்கள் எவராவது தொடர்புக்கு வந்து விளக்கிச் சொன்னால் அவை உலகுக்கு நன்மை பயக்கும்.

சில செடிகள் மிருகத்தையே உண்ணும் எனக் கேள்வி. ஆக்டோபஸ் நிறைய கைகள் உடையவை என்றும் செய்தி..இந்த செடியான கொடித் தாவர்த்தப் பார்த்து வியப்பதா அதன் அபாயத்தை நினைத்து பிரமிப்பதா இதை எல்லாம் உணராமல் வாழ்ந்து வரும் எனது தமிழ் சமூகம் கண்டு மலைப்பதா...இவற்றை எல்லாம் அழிக்கும் விவசாயியை அழித்து வரும் நமது நிர்வாகம் கண்டு என்ன செய்வது என்றெல்லாம் ஏராளமான கேள்விகள் என்னுள்
Image may contain: one or more people and people standing
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

படிச்சவங்களே இப்படி பண்ணலாமா:? கவிஞர் தணிகை

படிச்சவங்களே இப்படி பண்ணலாமா:? கவிஞர் தணிகை


Image result for god is to live not to die

கூட்டம் கூடி இருக்கிற இடத்தில் ஜலந்தரில் இருந்து வந்த ரயிலை மக்கள் மேலே  ஓட்டி விட்டு பச்சை சிக்னல் காட்டப்பட்டது எனவே ஓட்டினேன் ...ரயில் ட்ரைவர்.

ரயில்வே தண்டவாளங்கள் அருகே மக்கள் நின்றிருக்கக் கூடாது...இது ஒரு வகையான அத்து மீறல்...நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது...ரயில்வே நிர்வாகம்

நான் அங்கிருந்து கிளம்பியபிறகுதான் இந்த சம்பவம் நடந்துள்ளது என்னை வீணாக இப்படிப்பட்ட அரசியல் ஆட்டத்துக்கு இழுக்க வேண்டாம்...நவ் ஜோத் சிங் சித்துவின் மனைவி கவுர்.. இவர் .பஞ்சாப் உள்ளாட்சித் துறை அமைச்சரின் மனைவியும் கூட..

இப்படி பொறுப்பற்ற எண்ணற்ற பதில்கள் இழந்த உயிர்களுக்கு 5 இலட்சம், இருப்பார்க்கு உள்ளாட்சித் துறை மந்திரி நவ்ஜோத் சிங் சித்து, அமரீந்தர சிங் முதல்வர் ஆறுதல்....இப்படியாக 61 உயிர்களை பலி கொண்ட காலனாக ஜலந்தர் பஞ்சாப் ரயில் விபத்து...மேலும் 71 பேர் காயம் என்றும் மேலும் பல உயிர்கள் போகக் கூடுமென்றும் செய்திகள்...

அடிப்படைக் காரணம் தசாரா பண்டிகை கொண்டாட்டம், ராவண உருவ பொம்மை எரிப்பு பட்டாசு, அதிர் வெடி வேட்டு வெடிப்பு, அந்த சத்தத்தில் இருபுறமும் ரயில்கள் வந்தது அறியாக் கூட்டம் ரயில்வே லைன் அருகே, ரயில்வே லைன் மேல் வேடிக்கை பார்த்து பரலோகம் புகுந்தது...

அந்த நிகழ்வை ரயில்வே தண்டவாளம் அருகே நடத்திய ஒருங்கிணைப்பாளர்களின் அக்கறை யின்மை,...நேரம் இரவு 7 மணி இருட்டு எல்லாம் சேர்ந்து கொண்டது அந்த கோர விபத்துக்கு...
Related image
பக்தி என்ற பேரில் கூட்டம் கும்மாளம் உயிர்ப்பலிகள்...

அதே காரணம்:கேரளத்து சபரிமலையிலும்.

அங்கு செல்ல முயன்ற ரஹானே என்பவரின் வீட்டின் மேல் கொச்சியில் கல்லெறிந்துள்ளதாம் கூட்டம்.

கேரளாவின் மக்கள் படிச்சவர்கள்...அவர்கள் போராடிய முறையைப் பார் என்றெல்லாம் பெருமை பேசினர்...ஆனால் அவர்களும் என்ன செய்திருக்கின்றனர் என்ற செய்திகள் வந்த வண்ணமே உள்ளன.


என்ன படித்தவர்களதானா இவர்கள் எல்லாம்...

இந்த ரஹனே என்ற பெண் பிள்ளை எல்லாம் ஒரு பெண்ணிய வாதி யல்ல என்று இங்கு ஒருவர் சொல்லி அவருக்கெல்லாம் எதற்கு சார்பு கருத்து தெரிவிக்கின்றீர் என்கிறார்... அவர் ஒன்றும் அப்துல் கலாம் அல்லவே குடியரசுத் தலைவர் என்றானபோதும் திருப்பதி கோவிலில் வேறு மதத்தினர் எவரும் கை எழுத்து இட்டு வரவேண்டும் என்ற நியதியை கடைப்பிடித்த அளவுக்கு
Image result for god is to live not to die
கட்சி, மதம், இனம், மொழி, பக்தி இப்படி எந்தக் காரணம் கொண்டும் உயிர்கள் பலியாகக் கூடாது..

எல்லாவற்றிலும் ஒரே வேகம், புரிதலின்மை...தினம் காண்கிறேன் எனது நடைப் பயிற்சி கிராமச் சாலை எங்கும் நசுங்கிய,சட்னியாகிய ஓணான், தவளை, எலி இது போன்ற சிற்றுயிர்களை வாகனசாரிகள் அடித்து வீழ்த்திச் சென்ற சுவடுகளை...

காலையில் நான் வாலறுந்த சிறு பல்லி ஒன்றை எங்கள் கழிப்பறையின் மலத்தொட்டியில் விழுந்து கிடந்ததை ஒரு பைப் மூலம் ஏறச் செய்து வெளி அனுப்பிக் காப்பாற்றினேன்...

இது போன்ற சிற்றுயிர்களை விட அல்லவா மனித உயிர்கள் கேவலமாகப் போய்விட்டது...
Image result for god is to live not to die
அய்யப்பனோ, துர்கையோ எந்த கடவுளுமே இந்த மனிதக் கூட்டத்தைக் காப்பற்றவும் வரவில்லை, இவர்கள் தவறுகளை சுட்டிக் காட்டி அறிவு புகட்டி இது போன்ற நிகழ்வு நடக்காமல்  இல்லை...தடுக்கவும் இல்லை.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Friday, October 19, 2018

அய்யப்பன் கோவில் சிக்கல்: கவிஞர் தணிகை

அய்யப்பன் கோவில் சிக்கல்: கவிஞர் தணிகை
Image result for ayyappan tempilஉச்ச நீதிமன்றத் தீர்ப்பும், கேரள அரசும், தேவசம் போர்டும் ஏற்றுக் கொண்ட முடிவை ஏன் ஆர்வலர்கள் ஆட்சேபித்து நிலக்கல்லில் பெண்கள் வாகனச் சோதனை நடத்தி வருவார் போவோரை சங்கடத்தில் ஏன் ஆழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்? இவர்கள் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்தார் பட்டியலில் வரவில்லையா...மத்திய நாடாளுமன்றத் தேர்தல் அருகே வர வர..எல்லா மாநிலங்களிலுமே இது போன்ற சலசலப்புகள்...காரணமாகும் தீர்ப்புகள். காவிரியும் கர்நாடகாவும் போல...வைரமுத்துவும் தமிழகமும் போல...ஹெச் ராஜா எஸ்.வி. சேகர் கருணாஸ் போல...
 வைக்கம் வீரர் பெரியார் இன்று இருந்திருந்தால் நிலக்கல், பதினெட்டாம்படி அய்யப்பன் கோவிலுக்கு சென்று போராட்டம் நடத்தி இருப்பார். ஆனால் அவர் இல்லாதபோது அவர் பேர் சொல்லும் இயக்கங்கள் என்ன செய்கின்றன...அல்லது செய்தவை பற்றி ஊடகங்கள் வாய் மூடிக் கிடக்கின்றனவா?


தாழ்த்தப்பட்ட இனத்தவரை முதலில் அர்ச்சகர் ஆக்கி மூலஸ்தானத்தில் நுழைய வைத்த கேரள அரசின் நடவடிக்கையை பாராட்டினார்கள். அனைவரும் இப்போது அய்யப்பன் கோவில் முடிவில் முரண்பாடாய் நிற்கிறார்க்ள் நியாயத்துக்கு புறம்பாக...


அனைவரும் கோவிலுக்குச் செல்வது ஏற்புடையதுதானே...அதில் என்ன அனைவர்க்கும் சம வாய்ப்பு உண்டாக்கித் தரவேண்டியதுதானே கோவிலும் அரசும்

10 வயதுக்கும் மேற்பட்ட பெண்களும் 60 வயதுக்கு கீழ் உள்ள பெண்களும் மாதவிடாய் உள்ள காரணம் பற்றியே இவர்கள் எல்லாம் தடுக்க முனைகிறார்களா அல்லது வணிக நோக்கமா, அல்லது அய்யப்பன் புகழ் மங்கிவிடுமா....
மக்கள் கூடும் பொது இடங்கள் யாவற்றிலுமே துர்நாற்றம் வீசுமளவு கழிவுகளின் எச்சம் வீச்சம் வருகிறது உண்மைதான்...அதற்காக போக்குவரத்தையே நிறுத்தி விட முடியாதே...அரசுக்கும் தூயமை செய்ய வேண்டிய கடமையும் ஒவ்வொரு தனி மனிதர்க்கும் சுற்றுப் புறம் சுகாதாரம் ஆகியவற்றில் தனி கவனமும் இருக்க வேண்டிய அவசியம் உள்ளது. இவற்றைப்பற்றி நன்கு அறிவுறுத்தி நமது பிழைகளை நாம் சீர் செய்தாகவேண்டும்
Image result for ayyappan tempil
காலம் மாறிக் கொண்டே இருக்கிறது. 48 நாட்கள் விரதமிருந்து சென்றவர்கள் இப்போது அப்படியா சென்று வருகிறார்கள் அதை ஏன் தடுக்க முடியவில்லை அய்யப்பன் கோவில் வருகிற அத்தனை பேரும் அப்பழுக்கற்ற புனிதர்க்ளாகவா மாறி விடுகிறார் அல்லது மாறி இருக்கிறார்...எனக்குத் தெரிந்த ஒரு பாக்கியை பக்கி என எழுதும் ஒரு நபர் கோவில் சாமி என்ற பேர் எல்லாம் சொல்லிக் கொண்டு எல்லா வித அயோக்யத்தனங்களையும், ஊழல்களையும் செய்து கொண்டுதான் இருந்தது. அதை நான் கண்கூடாக கண்டிருக்கிறேன்.
Image result for ayyappan tempil


அப்படி அய்யப்பன் கோவில் வருவதால் புனிதமடைவதாக இருந்தால் இதுவரை வந்து சென்ற அத்தனை மாந்தரும் இந்தியாவில் புனிதராக அல்லவா ஆகி இருக்க வேண்டும்...என் போன்றோர் தவிர....அந்த பூகோள பூமியின் வனப்பை காணக் கூட அங்கு நான் இன்னும் ஒரு முறை கூட போனதில்லை என்பது வேறு...சென்னையில், சந்து முனையில், சேலத்தில் எல்லா இடங்களிலுமே அய்யப்பன் இப்போது கொலுவிருந்து வருகிறார் குடி இருந்துதான் வருகிறார் . நான் பிறப்பு ஆராய்ச்சிக்குள் எல்லாம் நுழையவேயில்லை..

மொத்தத்தில் இந்தப் பெண்கள் மாதவிடாய் நாப்கின் பேட்களை மாற்றி தூர வீசுவதற்கும் மாறாக ஆங்காங்கே எறிந்து அசுத்தப்படுத்தியும் விடுகிறார்கள் இதுதானே முக்கிய பிரபலமான ஆட்சேபகரமான பிரச்சனை இதற்கு ஒரு முனையத்தை ஏற்படுத்தி அங்கே அரசு, தன்னார்வ நிறுவனங்கள் ஒரு இடத்தை தேர்வு செய்து அவற்றுக்கு உண்டான தோதான, பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்வதுதான் காலத்துக்குகந்த நடவடிக்கை.
Related image
இந்த ஆணை அமல்படுத்தலால் கம்ப்யூனிஸ்ட் அரசு, இன்னும்  வெள்ள நிவாரண மீட்பு நடவடிக்கையிலிருந்தே முழுதும் மீளாமல் இருக்கும்போது இது அவரகளுக்கு ஒரு சோதனை.

அவர்களை வெற்றி அடைய விடாமல் தடுக்க எடுக்கப்படும் சூழ்ச்சிகள்...பினராய் விஜயன் நல்ல தலைவர். நல்ல முதல்வர். அதை நல்ல முறையில் கையாண்டு மீட்டு எடுக்க வேண்டும். எல்லா மக்களும் கோவிலென்றால் போவதுதான் சரி.

உன்னைக் காண:
----------------------------

திருப்பதி சென்றேன்
திருவண்ணாமலை சென்றேன்
திருவரங்கம் சென்றேன்
பழநி சென்றேன்
சமயபுரம் சென்றேன்
சிருங்கேரி சென்றேன்
மூகாம்பிகை சென்றேன்
தர்மஸ்தலம் சென்றேன்
சுப்ரமண்யா சென்றேன்
காசி ராமேஸ்வரம் சென்றேன்
அமிர்தசரஸ் சென்றேன்
ஜெருசலம் சென்றேன்
பெத்லகேம் சென்றேன்
வாடிகன் சென்றேன்
மெக்கா ,மதினா சென்றேன்
அய்யப்பன் கோவில் சென்றேன்
....................
...................
......................
,,,,,,,,,,,,,,,,,,,,,
 நீ
இங்கிருப்பது அறியாமலே...

  ...2006 ல் கவிஞர் தணிகை ...மூச்சுக் காற்று.

மறுபடியும் பூக்கும் வரைMonday, October 15, 2018

தியானம் தரும் மனிதர்க்கு உன்னத ஆற்றல் கவிஞர் தணிகை

கடந்த 14.10.2018 அன்று வெளியிடப்பட்ட கலைடிஸ்கோப் என்னும் விநாயகா மிஷன் சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரியின் 2018‍..19 ஆண்டு விழா மலரில் எனது கீழ் வரும் கட்டுரை வெளியிடப்பட்டது பெருமைக்குரியதாகவும் நன்றிக்குரியதாகவும் அமைந்துள்ளது. 76 பக்க மலரில்  இரண்டே முக்கால் பக்கம் இந்தக் கட்டுரை இடம் பெற்றுள்ளது.

நன்றி

விழா மலர் வெளியீட்டுக் குழுவினர்க்கு.


தியானம் தரும் மனிதர்க்கு உன்னத ஆற்றல்
கவிஞர் தணிகை

Image result for meditation positions and stages

 தலையாயமனிதர்க்கு ஆயகலைகள் 64  என்பர் அதில் தலையானது யோகப்பயிற்சி ஆகும்.
யோகப் பயிற்சிகள்: மந்திர யோகம், இலய யோகம், ஹட யோகம் , ராஜ யோகம் அல்லது ராஜாங்க யோகம்  என  இருக்கின்றன.
 பகவத் கீதையில் கர்ம யோகம், பக்தி யோகம், ஞானயோகம் இப்படி  18 அத்தியாயங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. அவற்றுக்கு பலரும் பல வகையான விளக்கங்களை அவரவரது அனுபவங்களுடன் புரிதலுடன் பகிர்ந்து கொண்டுள்ளனர். நாம் அவற்றைப் பற்றி இங்கு சொல்லப் புகவில்லை.

மந்திர யோகம்: மந்திரங்கள், பஜனைகள், கீர்த்தனைகள் மூலம் இறைநிலையை நெருங்கவும் இயற்கையில் மனிதம் சிறு துகள் என்ற உணர்தலும் இதில் அடங்கும்
இலய யோகம்: அதாவது இலயித்திருத்தல், எல்லா செயல்களையும் இறைக்கர்ப்பணித்தல்.
ஹட யோகம்: 108 நிலையில் உள்ள யோகாசனங்களின் வகையும்,ஆசனம், பிரணாயாமம், முத்திரைகள், கிரியையகள் பற்றியும் சொல்கின்றன.
Image result for meditation positions and stages


ராஜயோகம்: அஷ்டாங்க யோகம்... இருக்கும் கலைகள் எல்லாவற்றுள்ளும் இதுவே தலைமையிடம் பெற்றிருப்பதால் ராஜயோகம் என்றும், இதில் 8 உட்பிரிவுகள் இருப்பதால் அஷ்டாங்க யோகம் என்றும் வழங்கப் பெறுகிறது.
பொதுவாகவே தியானம் என்பது கற்றுக் கொடுக்க முடியாத கலை. ஆனால் ஆர்வமுடையவர்கள் தாமாக கற்றுக் கொள்ளும் கலை.தனியிடத்தில் அமர்ந்தவனாகி என ஒரு சொல் இதில் இடம்பெறும் இதை தனியான ஒரு இடத்தை தேர்வு செய்து கொண்டு கற்று வருவதுதான் சிறந்தது. அதை எப்படி கற்க வேண்டும் என முழுமையாகச் இந்த சிறு வாய்ப்பில்  சொல்ல வழியில்லை. ஆனால் அது பற்றி ஒரு சிறு அறிமுகம் தருவதே இங்கு எனது நோக்கம்.

புறக் கண்களை மூடி அமர் உனது அகக் கண் திறந்து உலகை கவனிக்க,
புறக்கண்கள் திறந்து பார்க்கும்போது உலகைப் பற்றிய கவலையை மறந்து விடு.

அஷ்டாங்க யோகத்தின் எட்டு நிலைகள்: யமம், நியமம், ஆசனம், ப்ரணாயமம், பிரத்தியாஹாரம், தாரணை, தியானம், சமாதி நிலை.. இந்த எட்டு நிலைகளையும் ஒவ்வொரு நிலையாக ஒவ்வொரு படியாக விவேகானந்தர் சொல்வது போல லீச் என்னும் ஒருஅட்டைப் புழு எப்படி தான் நகரும்போது முன்னால் உள்ள உடலின் பகுதியை பின்னால் உள்ள பகுதியைத் தூக்கி வைத்து  நகர்த்தி முன் செல்லுமோ அது போல முன்னேறிச் செல்ல வேண்டும் என்பார். ஒரு புல்லை உறுதியாகப் பற்றும் வரை ஏற்கெனவே  பற்றிய புல்லை விடாது அது போல ஒரு நிலையை மறு நிலையை உறுதியாகப் பற்றும் வரை விடக்கூடாது.
பொதுவாக எல்லா மதங்களிலுமே சில ஒத்த கருத்துகள் உள்ளன அவை:

Image result for meditation positions and stages


யமம்: இது மனிதர்களின் ஒழுக்கம் பற்றி பேசுவது.
1. நினைவாலும் சொல்லாலும் செயலாலும் பிற உயிர்களை துன்புறுத்தாதிருத்தல்
2. நினைவாலும் சொல்லாலும் செயலாலும் பிறர் பொருள் மேல் ஆசைப்படாதிருத்தல்
3.நினைவாலும் சொல்லாலும் செயலாலும் பூரணமானபிரமசாரிய விரதம் காத்தல்
4.  நினைவாலும் சொல்லாலும் செயலாலும் பூரணமான உண்மையைக் கடைப்பிடித்தல்
5. பிறரிடமிருந்து எதையும் ஏற்றுக் கொள்ளாதிருத்தல்...
பொதுவான இந்த 5 அம்சங்கள் தியானம் கற்க வேண்டியவர்க்கு அடிப்படைக் குணங்களாக சொல்லப்படுகின்றன. இதில் பிரமசாரிய விரதத்தை கடைப்பிடிப்பது மிகவும் கடினமானது எனவேதான் தவசீலர்களும் ஞானிகளும், சித்தர்களும், யோகிகளும், புத்தர்கள், சித்தர்கள் ஆகிய மாமனிதர்கள் தனிமையைத் தேர்ந்தெடுத்து கானகம், அடவி, போன்ற காடுகளில் பழம் காய் கறிகள் உண்டு வாழ்ந்து அதில் 12 ஆண்டுகள் இருந்த பிறகு நாட்டிற்குள் வாழ, துணிந்து வந்து மனிதகுலத்துக்கு சேவை செய்தது.இந்தக் காலக் கட்டமே இவர்களின் தயாரிப்புக் காலமாக இவர்கள் ஒதுக்கிக் கொண்டது.
இந்த  5 குணங்களில் சில குணங்களாவது அவசியம் இருந்தால் ஒழிய தியானம் சித்திக்காது.

Related image
நியமம்: இதில் உடல் ஓம்பும் முறைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. அளவான உறக்கம், அளவான உணவு, உடல் தூய்மை ஆகியவை அவசியம் தியானம் கற்க அவசியம் என்பது பற்றி சொல்கிறது.

ஆசனம்: நாம் அமர்ந்து இருக்க வேண்டிய இடம், உடலை அமர்த்தும் நிலை, இடுப்பும் தோளும் தலையும் நேராகவும் முதுகு தளர்வாகவும் இருக்க அமர வேண்டும். ஆசனம் என்பது அந்தக் காலத்தில் புலித் தோலில் அமர்ந்தால் அவர் ராஜரிஷி என்றும் மான் தோல் மேல் அமர்வார் துறவி என்றும் உண்டு. புல்லால் ஆன ஒரு பாய், அதன் மேல் இது போன்ற தோல் ஆனால் இந்தக் காலத்தில் தோலை நீங்கள் சேகரித்து அதன் மேல் ஆசைப்பாட்டால் விலங்கு தடுப்பு வதை சட்டத்தின் மூலம் பிணையில் வெளிவர முடியா தண்டனைக்கு உள்ளாகி சிறையில் கொசுக்கடியில் தியானமே அமர முடியாது போகலாம்...எனவே காலத்துக்கேற்ப ஒரு புல்லாலன பாய் அதன் மேல் ஒரு வெண்ணிறமான தூய்மையான வேட்டி போன்றவற்றை விரித்து அதன் மேல் அமர்ந்து பயில்வது உகந்தது. இது மட்டுமல்ல இந்த ஆசனத்தில் நாம் பத்மாசன முறையில் சின் முத்திரையுடன் அமர்வதும் நல்லது. தியானம் செய்துவிட்டு கடைசியில் புற உலகில் புகு முன் சாந்தி ஆசனம் அல்லது சவ ஆசனம் செய்து நிறைவு செய்து கொள்ளலாம்.

பிராணாயாமம்: மூச்சை அடக்குதல்...இந்தப் பயிற்சியில் சிறந்து விளங்குவார்க்கு தியானம் எளிதில் கைவசப்படும். ஆனால் இதற்கு நல்ல உடல் தேக உறுதியான நிலை வேண்டும். எரிவாயு கொள்கலத்துக்கு எப்படி ஒரு இரும்பாலன காப்பு மேலுறை இருக்கிறதோ அப்படி காற்றை அழுத்தமான காற்றை தேக்கி வைக்குமளவு உடல் திறம் வேண்டும்.

பூரகம்: மூச்சை உள்ளிழுத்தல்
கும்பகம்:மூச்சை உள்ளிருத்தி வைத்தல்
ரேசகம்: மூச்சை வெளிவிடுதல்
பொதுவாக தியான செய்ய ஏற்ற நேரம் என்பது இரவும் பகலும் ஒன்று கூடும் அந்திப் பொழுதே என்பார்கள்.ஆனால் காலை அல்லது மாலை உங்களுக்கு உகந்த நேரத்தை அல்லது இரவு படுக்கைக்குச் செல்லும் முன் வைத்துக் கொள்வது சிறந்தது.
சுவாசம் இடது நாசி வழியாக ஓடும் நேரம் இளைப்பாறும் நேரம், வலது நாசி வழியாக செல்லும்போது அது செயல்புரிவதற்கு உரிய நேரம், இரு நாசிகள் வழியாக போகும்போதே தியானம் செய்வதற்குரிய நேரமாகும்.
Image result for meditation positions and stages

பிரத்யாஹாரம்: மனதை உள்முகமாகத் திருப்பி அதை வெளிச் செல்வதை தடுப்பது அல்லது நிறைய எண்ண அலைகள் தோன்றுவதைக் கட்டுப்படுத்த முனைதல்.

தாரணை: ஒரு பொருள் பற்றி சிந்தித்து மனதை ஒருமைப்படுத்துதல்.

தியானம்:

சமாதி: நமது முயற்சிகள் அனைத்திற்கும் முடிவு உள்ளொளி பெறுதல். ஆன்மாவோடு இலயித்திருத்தல்.
இது போல முயற்சி செய்யும்போது  உங்களுக்கு பிறர் கருத்தறிதல்தூர தேசத்தில் நடப்பன அறிதல், முக்காலமுணர்தல் போன்ற பக்க விளைவுகள் தோன்றும்... ஆனால் எக்காரணம் கொண்டும் பில்லி, சூனியம், மந்திரம், மாந்திரிகம் செய்யும் போலிச் சாமியார்கள் பக்கமே திரும்பிப் பார்க்கவே கூடாது என்பார் ரமணர். இப்படி ராமகிருஷ்ணர், விவேகாநந்தர், நிவேதிதா,பாரதி, பாரதிதாசன், சுரதா போன்ற குரு பாரம்பரியம், அரவிந்தர், அன்னை, ரமண மஹரிசி போன்றோரும்  சொல்வதெல்லாம் நினைவு என்ற ஒன்றை நீக்கிப் பார்க்கின்ற போது மனம் என்ற ஒன்று இல்லை என்பதும்,அளவற்ற நூல்களைப் படிப்பதால் பலனில்லை எல்லா நூல்களிலுமே மனோநிக்ரஹம் (மனதை அடக்குதல், எண்ணங்களை இல்லாது செய்தல், மனம் என்பதே இல்லை என்பதுமே.

 மனஸ் என்றால் சமஸ்கிருதத்தில் அசைந்து கொண்டிருப்பது என்ற பொருள் ...மனம் ஒரு குரங்கு மனித மனம் ஒரு குரங்கு என்கிறது வீ.சீத்தாராமன் என்பார் எழுதிய தமிழ்ப் பாடல். அந்த மனக்குரங்கை சரி செய்யும், அந்த அடர்ந்து வளரும் குரோட்டன்ஸ் செடியை அழகுபடுத்தும், வாழ்வில் தேவையில்லாத பகுதிகளை வெட்டி நல் உருவமாக்கி வாழ்வை அழகுபடுத்துவது தியானமே..

சு. தணிகாசலம்
பொது மக்கள் தொடர்பு அலுவலர்
விநாயகா மிஷன்ஸ் சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரி.
சேலம்.