Monday, August 24, 2026

நாய்க் கதை: கவிஞர் தணிகை

 நாய்க் கதை: கவிஞர் தணிகை



நாய்கள் ஜாக்கிரதை(எச்சரிக்கை வாசகம் உள்ள வீட்டைப் பார்த்திருப்பீர்கள்...இப்போதெல்லாம் அதெல்லாம் கூட இல்லை.எல்லாருமே நாய் வளர்க்க எண்ணுகிறார்கள் ஆனால் எவ்வித அடுத்தவர் பற்றிய எண்ணமுமின்றி.இந்த நாய் ஒன்னும் பண்ணாது, கடிக்காது என்கிறார்கள் அது நாய்க்கும் நமக்கும் தெரிந்தால் தானே...


ஜப்பானிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய ஒழுக்கங்களுள் இதுவும் இருக்கிறது. அவர்கள் நாயை வெளியே நடைப்பயிற்சிக்கு கொண்டு வரும்போது வாயை மூடி, அதே நேரத்தில் மலக் கழிவை ஒரு பையில் வைத்து பொது இடச் சுகாதாரம் நேசித்தபடி எடுத்துச் சென்று அதை அப்புறப் படுத்தி விடுகிறார்கள்.


இங்கு எச்சமிடா பறவை வேண்டும் , வெளிக்குப் போகாத நாய் வேண்டும் வீட்டுவளர்ப்புக்கு என நினைக்கிறார்கள் இல்லையேல் அடுத்தவர் அல்லது சுற்றுப் புறம் பற்றிய கவலை எல்லாம் இல்லை, எங்கு வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும்...


தம்முடைய நாயை விட அடுத்தவர் வீடு, உடல், உயிர் ,எல்லாமே தரக்குறைவு என்ற எண்ணத்தில் நிறைய பேர் ஜம்பம் பாராட்டுகிறார்கள். நாய்க்குப் பிறந்த நாள் கொண்டாடி கேக் ஊட்டுவது வெட்டுவது, நாயை வாகனங்களில் அழைத்துச் செல்வது, படுக்கையில் உடன் படுத்துக் கொள்ளச் செய்வது...இப்படியாக செல்லப் பிராணி அபாயப் பிராணியாக மாறும் வரை எல்லாமே நல்லதுதான் என்று நினைக்கிறார்கள். விவேகானந்தரிடம் ஒருவர் சென்று பசு வதை, கோ சாலை பற்றி எல்லாம் பேசிட எதிர்பார்த்திட மனிதர்க்கு அப்புறம் தான் அவை எல்லாம் என அவரை வெறும் கையுடன் நரேந்திரர் திருப்பி அனுப்பியதான ஒரு நிகழ்வை படித்த நினைவு இப்போது என்னுள்.


தெரு நாய்கள் ஏராளம், கால்நடைகளில்(ஆடு மாடுகளில்) பெண் வேண்டும், ஆனால் நாய் பூனைகளில் பெண் வேண்டாம் என எடுத்து பொது இடங்களில் போட்டுச் சென்று விடுகிறார்கள்...


எங்கள் புது வீட்டருகே நிறைய தெரு நாய்கள் ...அவை சாலையின் நடுவிலேயே படுத்துக் கொண்டு உறங்குவதும்,மலம் கழித்து விடுவதும், சிறு நீர் கழிப்பதுமாய்...  அவற்றை துரத்தி விடுவது சிறந்தது ...அடிப்பது அல்ல‌...


இப்போது விலங்குகளை துன்புறுத்துவது குற்றம் எனவே நாய்களை பிடித்துச் சென்று தடுப்பூசி போட்டு திரும்ப கொண்டு வந்து விட்டு விடுகிறார்கள். மேலும் கடந்த காலத்தில் பிடித்துச் சென்று இவர்கள் விட்டு விட்ட இடங்களில் இருந்து அவை மறுபடியும் அதே இடத்துக்கு அதனதன் இடத்துக்கே வந்து சேர்ந்து விட்டன.


சில நாட்களுக்கும் முன் எங்கள் வீட்டு முன் ஒரு கழுத்திலே குடத்தின் வாய் மாட்டப் பட்டிருந்த பெண் நாயை பிடித்துச் சென்றார்கள். ஆனால் அந்த நாயும் இன்னொரு நாயும் சேர்ந்து 9 குட்டிகளை ஈன்றிருக்க...அக்கம் பக்கத்தினர் குட்டிகள் பாலின்றி இறந்து விடுமோ என பிரார்த்திக்க வேண்டியதாயிற்று. 


நல்ல வேளை அந்த நாயை திரும்ப கொண்டு வந்து விட்டு விட குட்டிகள் தப்பின பசியிலிருந்து.இப்போது அந்த குட்டிப் போட்ட நாயை துரத்தக் கூட மனசு வரவில்லை. எப்படியோ போகட்டும் நம்மை பாதிக்காதவரை என்ற நிலை வந்து விட்டது. ஆனால் நாய்க்கடி பட்ட ஒரு நபர் இறந்து போன செய்தியும்  உள் புகுந்து நிம்மதியை குலைக்கத்தான் செய்கிறது.மாட்டிய கழுத்துக் குடம் அப்படியேதான் இருக்கிறது.


எது காருண்யம் என்றே தெரியவில்லை, கட்டெறும்புகளும் , சிற்றெறும்புகளும், அதனினும் சிறு எறும்புகளும், கரையான்களும் வீட்டை துளையிட்டு வாழ்ந்து வருவதை சரி செய்தாலும் பாவம் தானே... ,பாம்பு, பல்லி, பூரான், தேள், பூச்சிகள், கரப்பான்கள், குளவிகள், கொசுக்கள் இப்படி எவற்றையுமே அழிக்காமல் எப்படி மனித அமைவிடங்கள் இருக்க முடியும்? 


ஒன்று இராமலிங்க அடிகளார் போல சித்தர்கள் போல வீடு வாசல் ஏதுமின்றி பிச்சை வாங்கி உண்டு விட்டு பரதேசம் என்று அலைய வேண்டும் அல்லது விவசாயக் குடியானவர்கள் உயிர்களை எல்லாம் அழித்து பயிர் பச்சைகளை செழிக்கச் செய்து உணவளிப்பதில் எவ்வித பாவமுமில்லை புண்ணியமே என்றெண்ண வேண்டும், படை வீரர்கள் பிறரைக் கொல்வதெல்லாம் என்ன கணக்கு? கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்கிறார்கள் தினமும் நடைப்பயிற்சியின் போது எங்களுக்கு கோபுர தரிசனம் உண்டு...இடுக்குப் பிள்ளையார் வழியில் திருவண்ணாமலையில் உயிர் நீத்த உயிருக்கு புண்ணியம் கிட்டி இருக்குமோ? அட திருவண்ணாமலை மண்ணை மிதித்தாலே முக்தி என்கிறார்களே அது எந்தளவு உண்மையாயிருக்கும்? காசியில் உயிர் நீத்தால் புண்ணியமாமே இது என்ன சொல்ல வருகிறது...இப்படி நிறைய கேள்விகள்..நான் நமது கருப் பொருளிலிருந்து விலகி சிந்தித்து விட்டேன் மறுபடியும் விட்ட இடத்திற்கே வந்து சேர்கிறேன் நமது நாய்க் கதைக்கு...


நாய் குரைக்கிறது, குலைக்கிறது என்பதற்கு மாறாக சிலர் உழைக்கிறது என்றே சொல்கிறார்கள். முப்பத்து ஐந்து என்பதற்கு பதிலாக நுப்பத்து ஐந்து என்பது போல... முப்பத்து மூன்று பத்து நுப்பத்து ?

வீட்டு நாய்கள் கூட வீட்டை எஜமானர் பூட்டிச் சென்று தனிமைப் படும்போது உளையிடுகின்றன.


நிலவொளி இரா வானம், முழு நிலவு வானம் இரண்டிலுமே கவனியுங்கள் நாய்களின் உணர்வலைகள் அதிகமாகவே இருக்கின்றன...இது ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப் பட வேண்டிய ஒரு விடயம்.


மேலும் எமன் வருவது நாய்க்குத் தெரியும் என்கிறார்கள், சாக்குருவி வீச்சு என சப்தமிடுவது போல, ஆந்தை என்கிற கோட்டான் அனத்திக் கொண்டு சப்தமிடும் போதெல்லாம் மனித இனத்துக்கு தீங்கு என எவராவது இறந்து விடுகிறார்கள் என்பதெல்லாம் அனுபவப் படி எடுத்துக் கொள்ளலாம்.


 மனித நடமாட்டத்தின் போது அருகே தென்னை மட்டை விழுவது, பனம்பழம் விழுவது...


கடைசியாக ஒன்று: நாங்களும் நாய்கள் வளர்த்தியிருக்கிறோம், அடுத்தவர்க்கு தொல்லை இன்றி, எங்கள் நாய் எச்சங்களை நாங்களே எடுத்து அப்புறப் படுத்தி துப்புரவு செய்தபடி,ஏன் வெளியே அவை சென்று ஏதும் அசுத்தம் செய்யாதபடிதான் வளர்த்தி இருக்கிறோம். அதை குளிப்பாட்டி வாரம் சில முறை, அதற்கு நோட்டிக்ஸ் எனும் பவுடர் போட்டு, நல்ல உணவிட்டு, நகங்களை எல்லாம் சீராக வெட்டி ,நோய் வந்த போதெல்லாம் மருந்தளித்து,  வயதான போது ஐவர் மெக்டின் என்ற ஊசி மருந்து செலுத்தி, அது கண் குருடாகி சாக்கடை எது என்று கூட தெரியாத வயது வரை எல்லாம் வளர்த்தி அதன் வாழ்வை வளம் பெறச் செய்திருக்கிறோம். எனவே ஒரு வாரிசு, நாய் வேண்டும் , பிரியம் செலுத்த நாய் வேண்டும்  நாய் வளர்க்க வேண்டும் என இன்னும் வேண்டுகோள் வைத்தபடியே இருக்கிறது...


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.


Tuesday, August 18, 2026

தமிழ் வழிச் சமுதாயத்தின் ஒரு கேட்காத குரல்: கவிஞர் தணிகை

 தமிழ் வழிச் சமுதாயத்தின் ஒரு கேட்காத குரல்: கவிஞர் தணிகை



இரண்டாயிரம் ஆண்டுகள் அல்லது இருபது நூற்றாண்டுகள் அல்லது அதற்கும் மேலான‌ ஆண்டுகள்...நூல்கள்...திரித்தவை...


விலங்குகள், பறவை இனத்திற்கு ஒலி உண்டு ஆனால் மொழி இன்றி... ஆனால் அவற்றின் சோகம், மகிழ்வு,யாவும் அவற்றின் உணர்வுடனான‌ ஒலி வெளிப்பாட்டுடன்...


மனிதம் மொழி வழி வாழ்கிறது உயர்கிறது உன்னதம் தொடுகிறது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முன்னே  தமிழில் திருக்குறள், பத்துப்பாட்டு, எட்டுத் தொகை, பதிணெண்கீழ்க்கணக்கு நூல்கள்,காவியங்கள், காப்பியங்கள்,... முதல் சங்கம், இடைச் சங்கம், கடைச்சங்கம் என சங்கம் வளர்த்த தமிழ் அதன் பின் மிகவும் பிற்காலத்தில் விவிலிய மறை, குரான் தர்ஜமா, பகவத் கீதை போன்ற எல்லா மதம் சார்ந்த நூல்களிலுமே நல்ல தமிழ் காண முடியும்.  

இடை இடையே சித்தர்களும் யோகிகளும் சிந்தனையின் ஞானியரும் பன்னிரு ஆழ்வார்களும், 63 நாயன்மார்களும் எப்படி எல்லாம் போட்டி பொறாமைகளிடையே தமிழ் வளர்க்க பாடல் இயற்றினார்கள் என்பதெல்லாம் வரலாறு.


மகாத்மா காந்தி அஹிம்சை தேடும் போது ரஸ்கின் கடையனுக்கும் கடைத்தேற்றம் என்று சொல்ல, டால்ஸ்டாயிடம் அஹிம்சை என்பதை எங்கிருந்து கற்றீர் எனக் கேட்கும் போது அது தமிழ் கொடுத்த கொடை, திருக்குறளில் "இன்னா செய்தாரை...ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்தல்...தமிழகத்தின் சீதனம் என்றறிந்து தமிழ் கற்றே தீர்வது என ஒரு ஆசிரியரை நியமித்துக் கொண்டு தமிழ் கற்கிறார், மதுரை வந்து மேலாடை துறக்கிறார்.


மகாத்மாவிற்கு உலகெலாம் நல்ல அங்கீகாரம் இருந்தது.


கல்லணை, தஞ்சைப் பெரிய கோயில் என தமிழ் வளர்த்த  தொழில் நுட்ப சான்றுகள் எண்ணிறந்தன...என்றும் கொண்டாடப் பட வேண்டியவையாய்...மேலும் ராஜேந்திர சோழனால் கடல் கடந்து சென்ற கோலாகலம் எல்லாம் சொல்லி மாளா. அவ்வளவு யானைப்படையின் யானைகள், அவ்வளவு நாவாய்கள்...


சரி இரண்டாயிரம் அதன் பின் சரிந்து ஒரு கட்டத்தில் நம் முன்னோர் படிப்பறிவற்றவராக போய் விட்டனர். இப்போது மூன்றாம் முன் தலைமுறை முதல் படிப்பை நுகர ஆரம்பித்த இந்த இனத்துக்காக மொழிக்காக சுதந்திரப் போர் தியாகிகளைப் போல் தம்மை விதைத்தவர் நிறைய...


வெடி மருந்தும் , தோட்டாவும், துப்பாக்கி, பீரங்கி, டாங்குகள், அணு ஆய்தம், இரசாயன ஆயுதம் போன்றவற்றை ஐரோப்பியர் கண்டுபிடித்தலால் உலகப் போர்களால் உலகு கெட்டது...அறிவியல் நம்மை வசதி படைத்தவர்களாகச் செய்துள்ளது ஆனால் வாழ்வைக்கிறதா என்றால் அதெல்லாம் கலந்துரையாடி விவாதித்து முடிவுகள் எட்டப்பட வேண்டியதாகிறது. அனால் அவர்கள் விஞ்சி விட்டார்கள் காலனி ஆதிக்கம் நமை மிஞ்சி விட்டது.


இப்போது ஒரு கலவையாக அவர்களோடு கலந்து பயணம் செய்து வருகிறோம். மொழியறிவு அழிந்து வருகிறது. உலகமயம், தனியார் மயம், தாரளமயம் என....


எது நன்மை பயக்காதோ அவற்றை எல்லாம் பின் பற்ற ஆரம்பித்திருக்கிறோம்...இனி யாம் சொல்ல இப்போதைக்கு ஒன்றுமில்லை, எல்லைக்கு வந்து விட்டோம்...


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை








Tuesday, August 4, 2026

2026 ஆடிப் 18ஆம் பெருக்கும் மேட்டூர் அணைக் காவிரியும்: கவிஞர் தணிகை

 2026 ஆடிப் 18ஆம் பெருக்கும் மேட்டூர் அணைக் காவிரியும்: கவிஞர் தணிகை



நீர் குறைந்தாலும் காவிரி காவிரிதான், அது நம் முகவரிதான்...


என்றபடி வழக்கம் போல கரையோரம் நடந்தேன் சுமார் இரண்டே முக்கால் மணி நேரம்.


தாயின் மாரில் மடியில் பால் வரவில்லை என்றாலும் தாய் தாய் தானே அது மாறாததுதானே!


காதோலைக் கருகமணி, கறுப்பு வளையல், வெற்றிலைப் பாக்கு சகிதம் எங்கள் குடும்ப வழக்கமான கன்னிமார் கும்பிட 16 கண் பாலம் வரை சென்று நீரேற்றிகளின் கடைசி முனையில் உள்ள அதற்கென்றே உள்ள இடத்தில் கற்பூரம் ஏற்றினேன்.


கிராமப்புற காவல் தெய்வங்களின் கோயிலில் உள்ள கத்தி, கடப்பாரை, ஈட்டி, போன்றவை கழுவி எடுத்து வர இந்நாள். முனியப்பனின் ஆண்டுக்கொரு நாள் திருவிழாவும் இந்த நாளையொட்டியே இருக்கும் தீர்த்தக் குடம் கொண்டு வந்து நீராட்டி கிடா வெட்டிக் கும்பிடுகிறார்கள்.


நிறைய அறிமுகமான முகங்களை சந்தித்தேன், தம்பி மதியழகன், எம்.எஸ். மாதப்பன்  தோழர் ராஜு தம்பதியர், ஆசிரியை மைதிலி கார்த்தி அவர் தம் குடும்பம் ஆகியோர் குறிப்பிடத் தகுந்தோர். அதற்காகத் தானே நடந்தே போவது...மேலும் 


அறிமுகமாகாத கரூரிலிருந்து வந்திருந்த‌ ஒரு குடும்பம் 4 பேர், பெற்றோர் இருவர், ஆண், பெண் குழந்தைகள் இருவர் என்னிடம் தன்னார்வத்துடன் பேசி அணை பற்றி பேசி புள்ளிவிவரங்கள் பெற்றும் எனது ஓரிரு வரிகளின் அறிமுகத்துடன் உடல் சுத்தம், நீரின் அத்தியாவசியத் தேவை, நீர்ப்பாசனத் தந்தை சர். ஆரதர் காட்டன் என சில நிமிடங்கள் பேசினேன். அது அவர்களுக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்க மகிழ்வுடன் நன்றி சொன்னார்கள்.


தங்கமாபுரி பட்டணம் சேலம் கேம்ப் இணைக்கும் புதுப் பாலத்தில் கொஞ்சம் கூட்டம்...6 காவலர்கள் இருக்க...

அவ்வளவாக பெரிதாக மக்கள் வெள்ளமோ, கடைகளின் எண்ணிக்கையோ இல்லை. சேலம் கேம்ப் பகுதியில் 2 கடைகளில் நல்ல கூட்டம் வியாபாரம்.


நாம் எப்போதுமே மேட்டூர் 16 கண்மாய் பாலத்துடன் நம்து உலாவை நிறுத்துக் கொள்வதுதான், என்றாலும் கீழ் மேட்டூரிலிருந்து சேலம் செல்லும் பேருந்துகளில் திரும்புகையில் நல்ல கூட்டம் இருப்பதை பார்க்க முடிந்தது.. எனவே கீழ் மேட்டூரில் நிறைய மக்கள் வந்திருந்திருப்பார்கள் எனக் கருதுகிறேன்.

இதெல்லாம் ஒரு சோகம் இழையோட இருந்தது. ஏன் எனில் ஒரு புறம் காவிரி வெள்ளம் கரை புரள, மறுபுறம் மக்கள் தலைகள் வெள்ளமாக ஆடிப் பெருக்கில் இருக்கும் இடத்தில் இப்படி... எனது சகோதர சகோதரிகளுடன் கைகளைப் பிடித்தபடி அணையின் மேல் ஏறிச் சென்ற காலம் முதல் இப்போது வரை என்னவெல்லாமோ நினைவிலோடியது. ஆனாலும் இன்று  அந்தக் காலம் எல்லாம் கலைந்த மேகங்களாய்...எல்லாம் மனிதத் தளையீடுகள்...


எந்த தலைவர் ஒருவர் நதி நீர் இணைப்பை இந்தியாவில் செய்கிறாரோ அவரே இந்த நாட்டின் தலைவிதியை மாற்றுவார். அஸ்ஸாமில் வெள்ளம் உயிர் சேதம், தமிழகத்தில் குடிநீருக்கே பாடாகப் பட இதுதான் நமது ஒரே இந்தியா என்றும் உபகண்டமென்றும் உலகெலாம் புகழ் பெற்ற தேசம் என... இதற்கு மேல் சொல்ல என்னிடம் ஒன்றுமில்லை..


சொல்ல நிறைய இருந்தாலும் வாயைத் திறந்தபடி எப்போதும் பேசிக் கொண்டே இருக்க மனிதரால் எவ்வளவுதான் முடியும்?


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை


Saturday, August 1, 2026

சொல்ல முடியா ஒரு இனிய கீதம்:கவிஞர் தணிகை

 சொல்ல முடியா ஒரு இனிய கீதம்:கவிஞர் தணிகை



ஜமுனா ராணி, ஜானகி பாடகிகளின் மறைவல்ல இந்தப் பதிவில் சொல்வது...


செல்வன் பிரஸ் செல்வன் (எ) நாகராஜ் வயது 73 பற்றியது.


மேட்டூரில் ஒரு காலத்தில் செல்வன் பிரஸ் என்பதுதான் முன்னணி அச்சகம்.இன்று காகித தினம் மற்றும் தாய்ப்பால் தினம்.


இரண்டிலுமே இந்த செல்வன் பிரஸ் வாழ்வோடு இணைந்திருந்தது.

ஒரு வாழ்வைப் பற்றி முழுதுமாக சொல்ல ஒரு பக்கம் போதாது.


நிறைய நிறைய சொல்ல உண்டு, ஆனால் எவ்வளவு சொன்னாலும் நிறையாதது இது.


ம.துரைசாமி என்ற பெரியவர் வலது கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்த ஒரு சிறந்த தொழிலாளி, மேட்டூர் பியர்ட்செல் என்ற மேட்டூரின் பெரும் பேர் சொன்ன ஆலையில் பணி புரிந்து கொண்டே சிறிதாக தனது ஒரே மகனது செல்லப் பேரில் சிறிதாக ஒரு அச்சுக் கோர்க்கும் அச்சகம் ஒன்றை சிறிதாக ஆரம்பித்தார். கடுமையான உழைப்பாளி என்பதால் அந்த அச்சகம் பேர் சொல்லி விரைந்து வளர்ந்தது. இப்போது இதில் சொல்லப் பட்டுள்ள அச்சகமோ, அவரோ, அவர் பணி செய்த பஞ்சாலையோ, அவரது மகன் செல்வம் என்ற நாகராஜோ இல்லை.


ஓரளவுதான் படிப்பு. பள்ளி வாசலை முடித்தவுடனே கல்லூரி வாசல் வரை சென்றாரா என்பது கூட என் நினைவில் இல்லை. செல்வனை சொந்தத் தொழில் பார்க்க வைத்துவிட்டார் பெரியவர்.சாப்பிட்ட நேரம் தூங்கிய நேரம் போக இவர்களது குடும்பத்தில் அனைவர்க்குமே அச்சகத் தொழிலே வாழ்க்கை. செல்வம் பிரஸ் என்பது விநாயகா கம்ப்யூட்டர் பிரிண்டிங் பிரஸ் ஆகி அதுவும் இல்லாமல் போனதெல்லாம் ஒரு வாழ்க்கை வரலாறு.


எல்லாவற்றையுமே சொல்லும் நோக்கமல்ல நமது. ஆதி முதல் எனது பணி வாழ்க்கையின் அந்தம் வரை இந்த செல்வம் பிரஸ் எனது எழுத்துகளுக்கு ஒரு ஊன்று கோலானது.எனது புத்தக ஆக்கத்திற்கு உறுதுணையாக இருந்தது. தெய்வா பதிப்பகத்தின் அச்சகமாக இருந்தது.


மலிவான குறைந்த தேவையான விலை நிர்ணயம் பெரும் பலம். எனவே உள்ளூர் ஆலைகள் முதல் வெளியூர் நிறுவனங்கள், பள்ளிக் கல்லூரிகள் அனைவருமே இவர்களை நாடிய ஒரு காலம் இருந்தது.


சிவந்த தேகம், சுருட்டை மயிர், எப்போதும் தவழும் புன் சிரிப்பு, எளிய தோற்றம், வெட்டி பந்தா எல்லாம் இல்லை. இருக்காது.அழகிய உருவம். இவர் தந்தை என்னதான் திட்டிக் கொண்டே இருந்தாலும்...செல்வன் எவரிடமும் சண்டையிட்டோ, கோபமுற்றோ நான் பார்த்ததில்லை. அதற்கு அப்படியே எதிர்ப்பதமாக யாம் இருந்ததால் அவரை எனக்கும் என்னை அவருக்கும் மெத்தப் பிடிக்கும். எனது எழுத்துகளின் வடிவத்தை நான் விரும்பியபடி வரும் வரை இருவருமே விட மாட்டோம்.


அது அவரது துணைவியாருக்கு பல சமயம் பெரும் இடைஞ்சலாக எங்கள் இருவருக்கும் சகோதர சகோதரி மோதல்களாகவும் இருந்தது. மனிதர் ஒரு வார்த்தை கூட என்னதான் இருந்தாலும் நீ அப்படி எனது துணையாரிடம் பேசி நடந்து கொள்ளக் கூடாது எனப் பேசியது கிடையாது. அப்படிப்பட்ட கனவான்.பெருந்தன்மை. எனக்கு கர்ணன், துரியோதணன் கதையை நினைவூட்டுகிறது.


ம.து அவர்கள் என்னை வியந்து, எனது ஆற்றலைப் புகந்து, எனக்கிருக்கும் திறத்துடன் ஒரு பத்திரிகை ஆரம்பித்து நடத்தச் சொன்னதுண்டு...ஆனால் அது போன்ற தவறை நான் எப்போதுமே செய்யத் துணியவில்லை.


அவர் எனது மகனுக்கு குழந்தைப் பருவத்தில் சேர்த்து சேமித்து வைத்த காமிக்ஸ், கதைப் புத்தக சேர்க்கைகள் இன்றும் எங்களது குடும்ப நூலகத்தில் இடம் பெற்றுள்ளது. பழைய கால தினமணி எல்லாம் இவர் வழங்கிய செய்திகளில் திருப்பூர் குமரன் ஊர் தாராபுரம் காங்கயம், திருப்பூர் அல்ல அவர் மொய் வைக்காமல் இரவோடு இரவாக அவமானப்பட்டு ஊர் விட்டு ஊர் கிளம்பிய வரலாறு எங்கள் குடும்ப வாழ்விலும் மொய் பழக்கம் வெளியேறக் காரணமானது.


எனது அளவுக்கு மிஞ்சினால் என்ற பாலியல் விழிப்புணர்வு நூல் அவர்கள் குடும்பத்தில் 3 பெண் பிள்ளைகள் வாழ்வில் திருப்பு முனையாக ஆண் வாரிசுகள் வரக் காரணமானது வம்சம் விளங்க.


சில நாட்களுக்கும் முன் தமது பெரிய மகள் வீட்டில் பெங்களூரில் இவர் சாப்பிட முனைந்த சப்பாத்தி மூச்சுக் குழலில் அல்லது தொண்டையில் சிக்கி மரணத்திற்கு காரணமானது . இவரது பெற்றோர் ஆயுள் தொண்ணூறுகளைத் தாண்ட இவர் 73ல்


ஆச்சரியமாக இருந்தது நம்ப வேண்டியும் நேர்ந்தது. 


மனிதர் எதைப்பற்றியும் கவலைப் படமாட்டார், சி.பி.யூவை அப்படியே தூக்கிக் கொண்டு சேலம் வரை பேருந்தில் சென்று அதில் இருக்கும் மேட்டரை எடுத்து பணிக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தார் ஒரு முறை சேலத்து ஜாப் ஆர்டர் கடைகளில்...எனக்கு அது வித்தியாசமாக இருந்தது...நள்ளிரவில் இருவரும் செவ்வாய்ப்பேட்டைக்கு ஒரு நிறுவனத்துக்கு வேலை செய்ததற்கான தொகையை கொடுக்க முன் செல்லாமல் அவர்களையே வந்து வாங்கிச் செல்லும்படி சேலத்து பேருந்து நிலையம் அருகே காத்திருந்(த)து சேலத்து செம்மையால் தயங்கி தயங்கி பின் வாங்கியது எல்லாம் சொந்த நடைமுறை.


தொழில் முறைக்கும் மேலாக சார்ந்த ஒரு பிணைப்பு எங்களுக்குள் இருந்தது. அப்படிப் பட்ட தோழமை அவருடையது...அவர்களுடைய குடும்பத்துடையது...


இவரது தந்தை நாங்கள் சிறுவர்களாக இருந்த போது ஆரம்பித்து நடத்திய மார்க்ஸ் மன்றத்தின் நூலகத்தில் நிறைய சோவியத் ரஷிய கம்யூனிஸ நாவல்கள் படிக்க நேர்ந்தது.


இவரது தாய்  குழந்தையாயிருந்த எனது  செல்வனுக்கு நல்லெண்ணெய் விட்டு பிசைந்த சோற்றை ஒரு முறை ஊட்டி விட்ட வாசம் இன்னும் என்னுடன் இருக்கிறது....


மறுபடியும் பூக்கும் முதல் கவிதை நூலை செய்யும் முயற்சியில் சேலத்தில் இவரது அச்சகத்தில் காகிதங்களோடு காகிதமாக இரவு படுத்து கரப்பான் பூச்சி கடித்து கை விரலில் காலையில் இரத்தம் வந்த சுவடு இருந்தது கூட பின் நினைத்துப் பார்க்க இனிமையானது...


ஆனால் இவர்கள் எவருமே இன்று இல்லை...இன்று எதுவுமே இல்லை. நினைவலைகள் தவிர...


காலம் மிக விரைவாக சென்றபடியே இருக்கிறது...ஆக்க பூர்வமாக எதையாவது செய்ய வேண்டியே இந்தப் பதிவும்.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.


Sunday, July 26, 2026

உமிழ் நீர் ஒரு சிறந்த மருந்து: கவிஞர் தணிகை

 உமிழ் நீர் ஒரு சிறந்த மருந்து: கவிஞர் தணிகை



அறு சுவை உணவை உட்கொண்ட நமது முன்னோர் கொடுத்து வைத்தவர்கள். அன்றாடம் நமது உணவில் அறுசுவை உணவு இருக்கும் பட்சத்தில் நோய் நொடிகள் அண்டாது என்பது பேருண்மை


உணவை எவ்வளவு கடினமானதாக இருந்த போதும் அதை நன்றாக கடித்து மென்று உமிழ் நீருடன் கலந்து உள் செலுத்தும் போது செரிமானம் சார்ந்த நோய்கள் வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏதும் நேராது என்பதும் உண்மை அது அனைவரும் அறிந்ததே.


முன் சொன்னவற்றில் எல்லாம் உமிழ் நீருக்கு பெரும் பங்குண்டு.


அடுத்து நான் அனுபவித்ததை கற்றுக் கொண்டதை தாயிடமிருந்து அறிந்ததை தற்போதும் அது எனக்கு உதவிகரமாக மருந்தானதை சொல்கிறேன்.நம்பிக்கையிருப்பின் நீங்களும் பின் பற்ற.


எமது அன்பின் மருத்துவர் அரவிந்தசாமி அவர்கள் மகனது ஒரு பிரச்சனைக்கு சில காரணிகளைச் சொல்லும் போது சர்வாங்காசனம் செய்யுங்கள் நல்லது என்றார்.


சர்வாங்காசனம் இரத்த அழுத்தம் இருப்பார் செய்யக் கூடாது. மகனது மருத்துவ யோசனைகளில் இதை மீண்டும் அடியேனும் பின் பற்றலாமே என சுமார் ஒரு வார காலம் தியானம் முடிந்த பின் தியானம் முடித்த பின் சில நிமிடங்கள் செய்து வரலானேன்


அதன் விளைவாக அல்லது கடுமையான வெயிலின் உஷ்ணத்தின் விளைவாக காதருகே தலையில் ஒரு சிறு கொப்புளம், தலையில், மற்றும் மூக்கின் நுனியில் ஒரு கொப்புளம் உருவாகி இருந்தது.


காதருகே மற்றும் தலையில் உள்ளதை எண்ணெய் போன்றவற்றால் குளிர்படுத்தியதால் தணிந்தது என எண்ணுகிறேன் அதைப்பற்றி சொல்ல ஒன்றுமில்லை.


மூக்கின் நுனியில் நன்றாக பெரிதான கொப்புளத்தின் மேல் இடது கை மோதிர விரலில் சிறிய அளவில் உமிழ் நீரை எடுத்து ஓரிரு நாட்கள் சில முறை தடவி வந்தேன். அப்படியே அது பொடிந்து போய்விட்டது எந்தவித சுவடும் செய்யாமல். பொருக்கை எடுத்து விட்டேன்.


பொதுவாகவே முகம் தொடர்பான முக்கிய இடங்களில் ஏதாவது கட்டிகள், ,

 கொப்புளங்கள், கண்கட்டிகள் வரும் போது தாய் எச்சில் தொட்டு வையுங்கள் சரியாகிவிடும் என்பார் அது நூற்றுக்கு நூறு சரியாகிவிட்டது. இதற்காக வேறு ஆங்கில மருத்துவம் ஏதாவது செய்திருந்தால் வீண் செலவும் வேறு விளைவும் ஆகி இருக்கலாம்.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை


Friday, July 24, 2026

அறிவியல் ஆசிரியர் சந்திரசேகரன் சாரின் புகழுடம்பு இருக்கிறது: கவிஞர் தணிகை

 அறிவியல் ஆசிரியர் சந்திரசேகரன் சாரின் புகழுடம்பு இருக்கிறது: கவிஞர் தணிகை



உயர் பள்ளி வகுப்புகளுக்கு அறிவியல் சொல்லித் தந்த ஆசிரியர். எளிமையாகவே இருப்பார் இந்த ஜென்டில்மேன்.

மாணவர்களின் மனதை (அதிகம்) பேசாமலே புரிந்து கொள்ளும் ஞானம் பெற்றிருந்தார்.பார்த்தவுடன் இவரின் பூஞ்சிரிப்பு எங்கள் உள்ளத்தில் ஒரு இனிய மலரின் பூப்பு, தூண்டு உணர்வின் நெருப்புப் பொறி.


மெதுவாகவே நடந்து செல்வார், எவரையுமே கடிந்து பேச மாட்டார், சிரித்துக் கொண்டேதான் பேசுவார். ஓய்வறியா ஒரு நல்லாசிரியர். ஓய்வுக்கும் பின்னும் ஆசிரியப் பணியைத் தொடர வாய்ப்பு பெற்றிருந்தார் கற்றவர்க்கு சென்றவிடமெல்லாம் சிறப்பேயல்லவா! தோழர் ராஜு சொன்னது போல இது ஒரு மேல் தூக்கி விடும் சக்தி.


அனேகமாக 9 ஆம் வகுப்பு என்றே நினைக்கிறேன் புதிதாக ஒரு அறிவியல் பாடம் புகுத்தப்பட்டு தேர்வு வினாத்தாள் மாதிரிகள் மாற்றப்பட்டு திறனாய்வு செய்யும் வண்ணம் இருந்தன. அதாவது ஒரு மதிப்பெண் கேள்வுகள் 40, இரண்டு மதிப்பெண் கேள்விகள்:15 ஐந்து மதிப்பெண் கேள்விகள் 6 என. அதில் பின் இரண்டுக்கும் சாய்ஸ்கள் அதாவது தெரியாததை விட்டு விட்டு அல்லது தெரிந்ததை மட்டுமே எழுதமளவு கூடுதல் கேள்விகள் 15 என்றால் 20, 6 என்றால் 10.


எனக்கு நன்கு நினைவிருக்கிறது அத்தனையும் சரியாக எழுதி விட்டேன், ஆசிரியருக்கு ஒரே புளகாங்கிதம். அது முதல்தாம் அறிவியல் போன்ற பாடங்களுக்கும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் போடலாம் என்ற நிலை அந்த ஆண்டு முதல் அமல்படுத்த நேர்ந்திருக்கலாம் என நினைவு.


சரித்திர பூகோளம், தமிழ், அறிவியல் , ஆங்கிலத்தின் முதல் தாள், இரண்டாம் தாளின் சாதனைக் கட்டுரைகள்,போன்றவை இவர் போன்ற ஆசிரியர்களாலே தாம் எமக்கு பிடித்துப் போய் வாழ்வில் ஒன்றாகிவிட்ட ஒன்றாய் இணைந்திருந்தன.


வி.ஹெச்.எஸ்.எஸ் VHSS பள்ளிக் குழுவினர் அவரின் பூத உடலுக்குத் தகுந்த மரியாதை செய்வார்கள் என நம்புகிறேன். எனக்கும் உடல் நிறைய உபாதை, மற்றும் செய்ய வேண்டிய முக்கிய கடமைக்காக காத்திருப்பு இருக்கிறது.எனினும் எவராவது கலந்து கொள்வதை தெரிவித்தால் அவர்களுடன் நானும் ஒருவனாக இணைந்து கொள்ள அவா.


ஆசிரியர்கள் முன் செல்வார்கள், நாமும் ஒரு நாள் பின் செல்வோர்தாமே! அதற்கிடையே புகழுடம்பு அகலாதிருக்க எதையாவது செய்து வைப்போம். இந்தப் பதிவு இந்தியாவில் இருந்து படிப்பாரை விட  உலகெங்கும் உள்ள மற்ற நாடுகளில் படிப்பார் அதிகம் உள்ள வலைப் பூ. 


இந்த செய்தியை எனக்குத் தெரியப்படுத்திய தோழன் ராஜீ, மற்றும் பள்ளி வாட்ஸ் அப் குழு நண்பர்களுக்கு எனது நன்றிகள்.இவர் மறைந்த செய்தி எனை முதியவனாக்கிவிட்டது.


அய்யாவுடைய ஆன்மா எப்போதும் அவருக்கு நாம் செய்யும் அஞ்சலிகளை ஏற்றுக்கொள்ளும், ஆசீர்வதிக்கும் என்று உளமார உண்மையாகவே நம்புகிறேன்.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.


Wednesday, July 22, 2026

அன்னை தெரஸாவின் அடுத்த வாரிசு: கவிஞர் தணிகை

 அன்னை தெரஸாவின் அடுத்த வாரிசு: கவிஞர் தணிகை



ஸ்விட்சர்லாந்து‍‍‍ ‍- துபாய் -கார்ப்ரேட் - சான்ட்ரா...மேற்கு வங்க மாநில குக்கிராமம் - பள்ளிகள்-- குழந்தைகள் மேம்பாடு



ஸ்விட்சர்லாந்தில் பிறந்து வளர்ந்து படித்து துபாயில் பல ஆண்டுகள் கார்ப்ரேட் கம்பெனிகளில் பணி புரிந்து விட்டு வாழ்க்கையில் இலட்சியம் என்பது வேண்டும் என்ற முடிவில் வேலையைத் துறந்து இரண்டு மேல் சட்டைகள், இரண்டு கால்சட்டைகளுடன் புறப்பட்டு வந்து தீர்மானத்திலிருந்து பின் வாங்காமல் மேற்கு வங்கத்தில் சாகர் என்ற ஒரு தீவுக் கிராமத்தை தேர்ந்தெடுத்து அங்கு சுமார் 350 பள்ளிக் குழந்தைகளுக்கு பெறாத தாயாக விளங்கும் இந்த மங்கை இன்னொரு தெரஸா.



குழந்தை மணத்தை தடுப்பது, குழந்தைகளைக் கடத்துவதை தடுப்பது, மற்றும் குடும்ப வன்முறைகள் சமூக வன்கொடுமைகளைத் தடுப்பது ஆகியவற்றை இந்தப் பள்ளிகள் மூலம் கொண்டு செல்கிறார்.


பொருளாதாரங்களை சம்பாதிப்பதும் குவித்துக் கொள்வதும், அதை சொந்தமாக்கிக் கொள்வதும் வாழ்வின் இலக்கல்ல. எனது வாழ்வின் இலக்கு கிராமிய மேம்பாடும் பள்ளிக் குழந்தைகளின் படிப்புமே  என்று இவர் இந்தியப் பள்ளித் திட்டம் என்று ஒரு திட்டத்தை ஆரம்பித்து இங்கு மேற்கு வங்காளத்தில் எவரும் எளிதில் சென்றடைய முடியாத ஒரு குக்குராமத்தை தேர்ந்தெடுத்து அங்கு குழந்தைகளை என் பள்ளியில் சேருங்கள் என்று கோரிக்கை செய்ய இவரை அப்போது எவருமே நம்பவில்லை என்றும் இப்போது இவரை நம்பி சுமார் 350 குழந்தைகளின் வளர்ச்சியும் அவர் குடும்ப வாழ்வும் உள்ளன என்று ஆங்கில பத்திரிகைகள் எழுதியுள்ளன. 



இது போன்ற நல்ல செய்திகளை தமிழில் செய்தி ஏடுகளில் எங்கும் படித்த நினைவில்லை.இவர் அந்தக் குழந்தைகளுக்கு கற்பிக்கிறார், அவர்களுடனேயே உண்டு உறங்கி தமது வாழ்வை அர்ப்பணித்து வருவது மிகவும் நல்ல விதையாக விருட்சம் எழுவதன் அறிகுறியாகத் தெரிகிறது.


2012 ஆம் ஆண்டு முதலில் இவரது  சொந்த சுய சேமிப்பை இந்த திட்டத்துக்கு செலவிட்டார் என்பதும் குறிப்பிடப்படுகிறது.



இது போல சில ஆசிரியர்களும், சில நல்ல உள்ளங்களும் தங்களது வாழ்வை சமுதாய மேம்பாட்டுக்கு செலவிடுகிறார்கள் என்றாலும் வெளி நாட்டிலிருந்து சுக போக வாழ்வைத் துறந்து இந்த வாழ்வுக்கு அடித்தளமிட்டதற்காக சாண்ட்ரா லவி கோஜ்கோவிக் என்னும் இலட்சுமியை நாம் போற்றுகிறோம் வாழ்த்துகிறோம்.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.

Friday, July 17, 2026

SPOTIFY.COMல் தணிகையில் குரலில் மாக்ஸிம் கார்க்கியின் தாய்: கவிஞர் தணிகை

 ஸ்பாட்டிவை டாட் காமில் தணிகையில் குரலில் மாக்ஸிம் கார்க்கியின் தாய்: கவிஞர் தணிகை



600 பக்கமுள்ள மாக்ஸிம் கார்க்கியின் தாய் நாவலில் 400 பக்கங்களுக்கும் மேல் படிக்கப் பட்டு ஸ்பாட்டிவை டாட் காமில் சேர்க்கப்பட்டுள்ளது.


கேட்டுப் பாருங்கள்.


உலக இலக்கிய வரிசையில் மிக முக்கிய இடத்தில் இருக்கிற இந்த நாவலை இப்படிச் செய்ய வேண்டுமென ஒரு இளைஞரின் வேண்டுகோள் எனைச் செய்ய வைத்துள்ளது.


படிப்பதுதான் குறைந்து விட்டது கேட்டாவது பாருங்களேன்., பொன்னியின் செல்வன், வேள்பாரி இப்படிப்பட்ட வீரம் செறிந்த நாவல்களை ஒலி வடிவத்தில் கேட்டு வருகிற சமுதாயத்தில் இந்த மாக்சிம் கார்க்கியின் தாய் சற்று வித்தியாசமானது.


மேலை நாட்டு இலக்கியங்கள், மொழி பெயர்ப்புகள், உள் நாட்டு வேறு மொழி இலக்கியங்களின் மொழி பெயர்ப்புகள் போன்றவற்றை வெகுவும் அதிகமாக படித்து நுகர்ந்து அனுபவித்த காரணத்தினால் இதை இப்போது செய்து வருகிறோம்.


ஒரு இளைஞர் தமது வேண்டுகோளாக கவிஞர் தணிகையின் புத்தகங்களையுமே இப்படி செய்யக் கூடாதா ? என விரும்பிக் கேட்டிருக்கிறார். அதன் முயற்சி இனி தொடரலாம். டால்ஸ்டாயின் புத்துயிர்ப்பு, மகாத்மாவின் சத்தியசோதனை, இப்படி செல்லலாம் என நினைத்த எமக்கு இதுவும் கூட ஒரு நல்ல யோசனையாக இருக்கவே அதையும் போதிய அளவு அல்லது தேவையான அளவு செய்து விட்டு அதன் பின் உலக இலக்கிய நூல்களுக்குள் செல்லலாம் என்ற அவா.


இறந்த பின்னும் சாதனை செய்யும் குரல்கள் ஜீவிதம் செய்கின்றன.அப்படி கூட இந்த முயற்சியும் இருக்கட்டுமே..


இந்த குரல் பதிவுகளை தினமும் ஸ்பாட்டிவை டாட் காமில் ஏற்றிய இணைப்பை வாட்ஸ் அப் இணையத்தின் வழியே தொடர்பில் உள்ள சில குழுக்களுக்கும் தெரியப்படுத்தி வருகிறோம். ஆர்வம் உள்ளார் இணைந்து கொள்ளலாம். இணைப்பு உங்களுக்கும் அனுப்பி வைக்கப் படும் . கேட்டுப் பாருங்கள் நன்றாக தமிழ் இருக்கும். நன்றி. வணக்கம்.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை


Friday, July 3, 2026

கூ(ட்)டு கண்டேன்: கவிஞர் தணிகை

 கூ(ட்)டு கண்டேன்: கவிஞர் தணிகை



அகந்தைக் கிழங்கை அகழ்ந்து எடு விண்ணில் வீசு!


திரு விளக்கை ஏற்றுவதை விட தெரு விளக்கு ஏற்றுவது சிறந்தது!


பயன்படுத்தா பொருள் பரண் மேலே ...பழமொழி

பயன்படுத்தா பொருள் வண்டிக்காரருடன் ...புது மொழி


ஒழுக்கமிலா ஆட்சியின் கீழ் ஒழுக்கமிலா மக்களுக்கு வாழ்வது பிடிக்கும்


சேற்று நிலத்தில் பட்ட மயிலின் தோகையை கழுவி விட ஆசை...


குயிலுக்கு மனிதர் மேல் நம்பிக்கையில்லை


மயிலுக்கு மனிதர் மேல் நம்பிக்கையில்லை


பறவைகளுக்கு மனிதர் மேல் நம்பிக்கையில்லை


விலங்குகளுக்கும் மனிதர் மேல் நம்பிக்கையில்லை


மனிதர்களுக்கும் மனிதர் மேல் நம்பிக்கையில்லை


மனிதர்களுக்கு கடவுள் மேல் நம்பிக்கை...


நம்பிக்கை வை நம்பி கை வை...

நம்பியவர்க்கு நடராஜன் நடராஜன் தான்

நம்பாதவ‌ர்க்கு எமன் ஒரு தூதுவன் தான்

நம்பாதவ‌ர்க்கு எமன் ஒரு தூது வந்தான்

நம்பாதவர்க்கும் நம்புபவர்க்கும்

கவிஞர் மகிழ்வதற்கும் கோபத்திற்கும் காரணங்கள் வேண்டியதில்லை

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை


Sunday, June 28, 2026

குருவிகளின் நேசம் மயில்களின் வாசம்: கவிஞர் தணிகை

 குருவிகளின் நேசம் மயில்களின் வாசம்: கவிஞர் தணிகை



புதிய வீட்டின் சாளர வழியே வந்து அலமாரியில் இருக்கும் மின் சலவைப் பெட்டியில் கிண்ணக் கூட்டைக் கட்டி முட்டை இட்டிருந்தது ஒரு குருவி.அடை காத்தது காற்று, மழை, மனிதர்கள், பூனை குறுக்கீடு ஏதுமில்லை. ஏன் எனில் அது எமது வீட்டின் கணினியுடனான‌ காலியாக இருக்கும் படுக்கை அறை.என்னையெல்லாம் ஒரு மனிதனாக அது மதிக்கவே இல்லை. அது பாட்டுக்கு எப்போதும் திறந்தபடியே இருக்கும் சாளரங்கள் வழியே வந்து கொண்டும் போய்க் கொண்டும் இருந்தன நான் அந்த அறையிலேயே அமர்ந்து கணினி வழியே செய்திகளைப் படித்துக் கொண்டிருந்த போதும் ஏதாவது தட்டச்சு செய்து கொண்டிருந்தாலும்...


அது ஒரு கலப்புத் திருமணத் தம்பதிக் குருவிகள்.

கருங்குருவி ஆண்

நமது ஊர்க்குருவி பெண்.


அதற்கு ஒரு குஞ்சும் வந்திருந்தது அந்த முட்டையில் இருந்து.

சில நாட்களிலேயே அதன் பெற்றோர் கொடுத்த புழு பூச்சிகளின் கவனிப்பால் குஞ்சுக் குருவி பெரிதாகி இருந்ததோடு மட்டுமல்ல பறக்கவும் ஆரம்பித்தது.



அந்த தம்பதி குருவிகள் ஓசைகள் எனக்கு புதிதாக இருந்தன.ஒரு புறம் கீச்சென்ற ஒலி, மற்றொரு முறை கர் கர் கர்ர் எனக் கிறீச்சிடல்...முதலில் எட்டி எட்டிப் பார்த்தேன் வெவ்வேறு குருவிகள் ஆக இருக்கும் என... ஊன்றிப்பார்க்க ஒரே குருவியின் வழியேதான் இந்த மாறுபட்ட குரல்கள். ஆச்சரியமானதாக இருந்தது.


வாழை மரத்தில் இளைப்பாற வந்த செம்போத்துப் பறவைகளைக் கூட இவை விரட்டிக் கொண்டிருந்ததாக துணை சொல்லியது...


 ஒரு நாள் காலை அதாவது இன்று காலைதான்,திடீரென ஆண், பெண் இரண்டு குருவிகளும் எங்களிடம் நிறைய புகார்களைச் சொல்லிக் குற்றம் சாட்டியது, என்னவென்று பார்த்தால் அந்தப் பெட்டியில் இருந்த குஞ்சைக் காணோம். தேடல் நடத்தும் முன் நான் அதை மேலோட்டமாக பார்க்க, பெரிய குருவியாக இருக்கும் என நினைத்து பீரோ சந்தில் இருந்ததை அதுவும் சிறிய குருவியைத் தேடிக் கொண்டிருக்கிறது என நினைத்து விட்டேன்.



ஆனால் அந்த பெற்றோர் குருவிகளின் ஆர்ப்பாட்டம் தாங்காமல் சமையல் கட்டிலிருந்து வந்து பார்த்தேன் அதுதான் பீரோ சந்தில் இருந்த அந்தக் குருவிதான் அந்த முட்டையிலிருந்து வந்த புது சிறு குருவி, துணையை அழைத்து அதை பெற்றோர் குருவிகளுடன் விட்டு விடச் சொன்னேன். செய்தாயிற்று.


சலவைப் பெட்டி இருக்கும் அட்டைப் பெட்டியை எடுத்து  பால்கனியின் தூண் அருகே வைத்து விட்டேன். இனி கண்ணாடி ஜன்னல்களையும் தேவைப்படும் போது சாத்தி விடலாம் எனத் தீர்மானித்து விட்டோம்.கோவிட் பேரமைதி இந்த சிட்டுக் குருவிகளின் எண்ணிக்கையைப் பெருக்கி இருந்ததை நாம் மறந்து விடக் கூடாது. 


பழனியில் மட்டுமே சிறுவயதில் கண்ட மயில்கள், இப்போது எங்கள் பகுதியில் பல நூறுகளாக பெருகி சுற்றித்திரிகின்றன, எவரும் அவற்றை துன்புறுத்தாததால் அவை பாட்டுக்கு காடுகளில், தோட்டங்களில் , மலைகளில், மலைக்குன்றுகளில் இரையெடுத்து இளைப்பாறி மனமகிழ்வுடன் வாழ்ந்து வருகின்றன. கல்லூரி பணிக்குச் சென்ற காலைகளில் எமது கல்லூரி வளாகத்தில் பார்த்தோம். அதன் பின் எங்கள் ஊரிலேயே இவ்வளவு மயில்களைப் பார்ப்போம் என கனவிலும் கருதவில்லை.


தினமும் எங்கள் நடைப்பயிற்சியில் தவறாத‌ மயில்களின் தரிசனம், அவ்வப்போது தோகை விரித்தபடியும்...


மறுபடியும் பூக்கும் வரை


கவிஞர் தணிகை.


Thursday, June 25, 2026

கர்மா VS இயற்கை: கவிஞர் தணிகை

 கர்மா VS இயற்கை: கவிஞர் தணிகை





சில நாட்களுக்கு முன்பு ஒரு நண்பர் பகிர்ந்தார் கர்மா பற்றி முக நூலில். அதன் அதிர்வலைகள் இன்னும் இருப்பதால் அது பற்றி நமது பதிவும்...


புத்தர் சொல்லிச் சென்றது: வினை தொடரும் என்பது

கணியன் பூங்குன்றனார்: நன்மையும் தீமையும் பிறர் தர வாரா...

இயற்பியல் கோட்பாடு: ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது ஒரு வகையில் மறையுமாயின் பிறிதொரு  வகையில் வெளித் தோன்றும்...


மொத்தத்தில் கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது கர்மா என்பது வினைப் பயன். தொடரும் ஒரு வினைச் செயல்.(வினை என்பது செயல் என்பதாக எடுத்துக் கொள்ளப் பட வேண்டியதாகிறது பொதுவானது) அது இதிலிருந்து விலகி நிற்கிறது இலக்கணப்படி. எண்ணம், சொல், செயல் எல்லாவற்றிற்கும் ஒரு தொடர்பு இருக்கிறது தொடர் ஓட்டம் இருக்கிறது இதனுள்.


இது வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை விதைத்தவன் தினை அறுப்பான் என்பது பழமொழி போல்   போன்று(ம்) தோன்றும் எக்காலத்திற்குமான மொழி.விதை ஒன்னு போட்டா சுரை ஒன்னா (வேறா) முளைக்கும் என்றும் ஒரு சொல்லடை உள்ளது.


அன்றாட வாழ்வில் நாம் செய்யும் செயல்களிலிருந்து அடுத்தவருடன் நமக்கேற்படும் அனுபவங்கள் வரை இவை அடங்கும்


சரி மனிதர்க்குத் தான் கர்மா, எல்லாமா என்றால் அப்படித்தான் இருக்கும் போலிருக்கிறது.விலங்கு போராடி உணவைப் பெறுகிறது அடுத்த விலங்கைக் கொன்று...பறவைகள் உணவைத் தேடிப் பெறுகின்றன, சில வகை விலங்கைப் போலவும் கொன்று தின்கின்றன.இந்த வாழ்வா சாவா போராட்டம் அனு தினமும் தொடரவே செய்கிறது...


எங்களது வாழ்விலேயே ஒரு மனிதர் வேட்டியைப் போட்டு தாண்டிவிட்டார் தன் மூத்தவரிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட வீட்டுப் பணத்தை இல்லையென்று சொல்லி, முதுமையில் கால்களை இழந்து மிகவும் வேதனை அனுபவித்ததை கண்கூடாக யாம் கண்டதுண்டு.


அறம், தர்மம், நீதி, நியதி, யமம் இப்படி எல்லாம் இருக்கிறது என்பாரும் இல்லை என்பாரும் இங்கு உண்டு. கடவுள் கட உள் கடந்து பார் கர்மா இருக்கலாம், கடவுள் இருக்கிறதோ இல்லையோ கர்மா இருக்கலாம்.


இது போல் எண்ணிலடங்கா நிகழ்வுகள் மனித வாழ்வில் இருக்கலாம், இருக்கும்...ஆனால் எம் கேள்வி எல்லாம் அதல்ல...


ஒரு திரைப் படத்தில் வண்ணத்துப் பூச்சியின் சிறகசைவுக்கும், சுனாமிக்கும் தொடர்பிருக்கிறது என்ற ஒரு கருத்தை சொன்னார்கள்...எப்படி என்பதை முழுதுமாக விரித்துப் பார்த்தால் அஞ்ஞானமும், விஞ்ஞானமும், மெய்ஞானமும் இருக்கும்.இருக்கலாம்.


பூகம்பங்கள், எரிமலை வெடிப்புகள், புயல், காற்றின் சீற்றங்கள்,போர்கள், மனிதப் பிழைகள், அறச்சீற்றங்கள், மறைச்சீற்றங்கள், அணு வெடிப்புகள், ஆயுதக் கலாச்சாரங்கள், வேதியல் நிகழ்வுகள் வேதியியல் விபத்துகள் இப்படி பல இயற்கை மற்றும் செயற்கை நிகழ்வுகள் பூமியை அலைக்கழிக்க, உயிர்கள் அழிவு ஒரு புறம்,ஆக்கம் உணர்ச்சியால் ஒரு புறம் இருக்க‌ பூமிக்கே ஒரு ஆயுள், விண்மீனான சூரியனுக்கும் ஒரு ஆயுள் என விண்ணியல் விரிந்தபடி இருக்க இதில் மனிதர்களும் கர்மாவும் இயற்கையில் இருக்கிறதா என்பதை நாம் கலந்துரையாடி தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமாகிறது.


 வாயேஜர்1,2 வேறு நிறைய விண்ணியல் புள்ளி விவரங்களைத் தந்த படி சென்று கொண்டே இருக்கிறதாம் ...


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை


Tuesday, June 23, 2026

இறையின் தடங்கள் இயற்கையின் வடங்கள்

 இறையின் தடங்கள் இயற்கையின் வடங்கள்



சிவனின் கால்களா?

சக்தியின் கைகளா?

விஷ்ணுவின் தோள்களா?

பிர்மாவின் கண்களா?

புத்தரின் கொள்கையா?

சமணரின் கல்வியா?

யேசுவின் பாசமா?

அல்லாவின் நேசமா?

நாபிக் கமலத்தின் ஓமா?(OHM...)


ஐம்பூதங்களின் வழியே


அன்பரின் மனமே

ஆருயிர்த் தவமே!


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை

Thursday, June 18, 2026

வோஜின்யா பாட்டி செல்லம்: கவிஞர் தணிகை

 வோஜின்யா பாட்டி செல்லம்: கவிஞர் தணிகை



அம்மா செல்லம், அப்பா செல்லம், தாத்தா செல்லம் இங்கே ஒரு பாட்டி செல்லம் உலகின் பார்வையைப்  பெற்றிருக்கிறது.துக்கப் பட்டு, துயரப் பட்டு, துன்பப் பட்டு, சித்ரவதைப் படும்போதெல்லாம் தமது பாட்டியிடம் ஆறுதல் தேடிய ஒரு மனிதம் இன்று புகழ் பெற்ற கதைதான் இது.


கேப்வெர்டி இந்த நாட்டை நாம் கேள்விப் பட்டிருக்கவே வாய்ப்பில்லை,1975 ஆம் ஆண்டில் தான் போர்ச்சுகல் நாட்டிடம் இருந்து சுமார் 400 ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலை பெற்ற ஒர் ஆப்பிரிக்க‌ தீவுக் கூட்ட நாட்டிலிருந்து இந்த வோஜின்யா என்ற 40 வயது மனிதன் ( பெயர்:ஜோஸிமர் ஜோஸ் எவரோ டயஸ்) ஸ்பெயின் என்ற நாட்டு கால் பந்து அணியின் 7 கோல்களை தடுத்தாடி அந்த மேட்ச்சை சமன் செய்யும் வரை.எல்லோரும் ஸ்பெயின் தாம் வெல்லப் போகிறது என்று கருதிய நிலையில் ஒரு பெரும் கால் பந்து வீரர் உருவானதாக கால்பந்து விளையாட்டு உலகே கொண்டாடும் இந்த வோஜின்யா என்ற பாட்டி செல்லம் 7 கோல்களை விழாமல் காப்பாற்றி தமது நாட்டுக்கும், தமது அணிக்கும் தமக்கும் பெருமை சேர்த்துக் கொண்டுள்ளார்.


இந்த தடுப்பாட்டத்துக்கும் பின் இவரை கோடிக்கணக்கான நபர்கள் சமூக வலை தளங்களில் பின் பற்றுவோராகி இருக்கின்றார்கள்.இவரது பெயரே பாட்டி செல்லம் என்று செல்லாமாக அழைக்கப் படுகிறதாம் இவரை அறிந்தவர்களால்.


இவரே இந்த அணியின் கேப்டனாகவும் இருக்கிறார். 40 வயதில் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறும் வயதில் இந்த மனிதர் மெஸ்ஸி போன்றோர் அர்ஜென்டினாவுக்காக ஹேட்ரிக் கோல் போட்டு வெற்றி பெற வைத்ததை எல்லாம் பின்னுக்குத் தள்ளி புகழ் அடைந்திருக்கிறார் தமது முதல் ஆட்டத்திலேயே பலம் வாய்ந்த ஸ்பெயின் அணிக்கு முன் தடுத்தாடி 7 கோல்களை தடுத்து வெற்றி தோல்வி இன்றி ஆடி முடித்ததற்காக.


அட நம்ம டிடி( DD Sports )ஸ்போர்ட்ஸ் கூட இதை நேரலையில் ஒலி ஒளிபரப்பு செய்கிறதாமே...


இனி விடக்கூடாது . பார்த்தாக வேண்டும்...


தனி மனித சாதனைகள் உலகைப் பேச வைக்கும், சில தனி மனித சோதனைகள் உலகையே கூச வைக்கும்.I am noting about our wold crisis between Iran and U.S....

மகாத்மா ஒரு அம்மா செல்லம் உங்களுக்குத் தெரியுமா? அம்மாவுக்காகவே அசைவ உணவைத் தவிர்த்து, பெண்சேரலை  வெளி நாடு செல்கையில் தவிர்த்து,உண்மையையே பேசி சத்யவானாக மகாத்மாவாக‌ உருமாறினார். எனவே செல்லங்கள் சாதனை செய்வார்கள்...

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை

Wednesday, June 17, 2026

மனித குலத்தின் நீட்சி வாயேஜர் விண்கலம்: கவிஞர் தணிகை

 நன்றி:

பிபிசி உலக சேவை


ஃபெர்னான்டோ துவார்டே

'மனித குலத்தின் மிகப்பெரிய சாதனை' - சூரியக் குடும்பம் பற்றிய பார்வையை மாற்றிய வாயேஜர் விண்கலம்


1977-ஆம் ஆண்டு நாசா விண்ணில் செலுத்திய இரட்டை விண்கலங்களில் ஒன்றான வாயேஜர் 1 விண்கலம் இந்த ஆண்டு நவம்பர் மாதம் பூமியில் இருந்து ஓர் ஒளி நாளைக் கடந்திருக்கும். ஒளி நாள் என்பது ஒரு நாளில் ஒளி பயணிக்கும் தூரம், அதாவது கிட்டத்தட்ட 26 பில்லியன் கிலோமீட்டர்.

மனிதனால் உருவாக்கப்பட்ட எந்தப் பொருளை விடவும் நீண்ட தூரத்தை வாயேஜர் 1 கடந்துவிட்டது. அதன் மைலேஜை விடவும் அந்த விண்கலத்தில் இருந்து தற்போதும் நாசாவுக்கு தகவல் வந்து கொண்டிருப்பது தான் அசாத்தியமானதாக உள்ளது.

ஐந்து ஆண்டுகள் நிலைத்திருப்பதற்காக உருவாக்கப்பட்ட வாயேஜர் 1 மற்றும் 2 விண்கலங்கள் விண்வெளியில் 50 ஆண்டுகள் கழித்தும் செயல்பாட்டில் உள்ளன.

அவை வானியலாளர்களுக்குப் பிரபஞ்சம் பற்றிய விலைமதிப்பில்லாத தகவல்களை வழங்கி கொண்டிருக்கின்றன. இவை அனைத்தும் இன்றைய காலகட்டத்தில் தொன்மையானதாக கருதப்படும் தொழில்நுட்பத்தில் இயங்கி வருவது தான் ஆச்சரியத்தின் உச்சம்.

"உங்கள் காரைத் திறப்பதற்கான ரிமோட் சாவியில் இருக்கின்ற அளவிலான நினைவகம் தான் வாயேஜரில் உள்ள கணினியில் இருக்கின்றன," என்று வாயேஜர் திட்டத்தின் தற்போதைய விஞ்ஞானியான முனைவர் லின்டா ஸ்பில்கர் பிபிசியிடம் தெரிவித்தார்.

"பண்டைய கிரேக்கர்கள் வியாழன் மற்றும் சனி கிரகங்கள் பற்றி அறிந்திருந்தனர். ஆனால் அவை வெறும் ஒளிப் புள்ளிகளாக இருந்தன," என்கிறார் எழுத்தாளரும் விண்வெளி ஆய்வாளருமான ஏமி ஷிரா தெய்டெல்.

ஆனால் வாயேஜர் திட்டத்தால் நாம் கிரகங்கள் பற்றி தெளிவற்ற எண்ணத்தில் இருந்து அனைத்து வகுப்பறையில் இருக்கக்கூடிய பரிச்சயமான வரைபடங்கள் என்கிற நிலைக்கு வந்தோம் என்று அவர் தெரிவிக்கிறார்.

வெளிப்புற கிரகங்களுக்கான நாசாவின் முதல் திட்டமான பயோனியர் 10 (Pioneer) 1973-ஆம் ஆண்டு வியாழன் கிரகத்துக்கு அருகே சென்றது. அதன் மூலம் செவ்வாய் மற்றும் வியாழன் கிரகங்கள் இடையேயான சிறுகோள் பட்டையை வெற்றிகரமாகக் கடந்து மில்லியன் கணக்கான கிலோமீட்டர்களுக்கு அப்பாலும் பூமியுடன் தொடர்பு கொள்ள முடியும் என்பதை நிரூபித்துள்ளது. அதன் அடுத்த திட்டமான பயோனியர் 11 ஆறு ஆண்டுகள் கழித்து சனி கிரகம் அருகே சென்றது.

வாயேஜர்களுடன் ஒப்பிடுகையில் இந்த இரண்டு திட்டமும் மிகவும் எளிமையானவை.வாயேஜரின் பிரமாண்ட பயணத்துக்கு மாற்றாக வெளிப்புற கிரகங்களில் இரண்டுக்குச் செல்லும் எளிய திட்டம் முன்வைக்கப்பட்டது.

எனினும் திரை மறைவில் செயல்பட்ட விஞ்ஞானிகள் வாயேஜர்கள் அதனையும் கடந்து செல்வதற்காகத் தயார்படுத்தி வந்தனர்.

"அதிகாரப்பூர்வமாக வியாழன் மற்றும் சனி கிரகத்துக்கான ஐந்து ஆண்டு திட்டமாக வடிவமைத்தோம். ஆனாலும் தேவைப்படும் பட்சத்தில் சிறிது காலம் கூடுதலாக நிலைத்திருக்கும் விதத்தில் அதனை வடிவமைத்தோம்," என ஒப்புக்கொள்கிறார் வாயேஜர் திட்டத்தில் தற்போதும் பணியாற்றும் வானியற்பியலாளரான முனைவர் ஆலன் கம்மிங்ஸ்.

ஒரே மாதிரியான விண்கலங்களாக தயாரிக்கப்பட்ட இவற்றில் வாயேஜர் 2 ஆகஸ்ட் 1977-இல் விண்ணில் செலுத்தப்பட்டது. அதற்கு அடுத்த மாதம் வாயேஜர் 1 விண்ணில் செலுத்தப்பட்டது. இரு வெவ்வேறு பாதைகளில் அந்த விண்கலங்கள் சென்றன, வாயேஜர் 1 அதன் இரட்டை விண்கலத்தை அந்த ஆண்டின் இறுதியில் முந்தியது.

புதிய உலகங்களைக் காண்பித்த வாயேஜர்

இறுதியில் இந்தத் திட்டங்களே அதன் மதிப்பை எழுத ஆரம்பித்தன. நமது சுற்றத்தைப் பற்றி தங்களுக்கு தெரிந்தது என வானியற்பியலாளர்கள் நினைத்தவற்றை வாயேஜர் மாற்றி எழுத தொடங்கியபோது உலகமே வியந்து பார்த்தது.

உதாரணமாக வாயேஜர் 1 முதல்முறையாக பூமிக்கு வெளியே முதல் செயல்பாட்டில் இருக்கும் எரிமலையை வியாழன் கிரகத்தின் நிலவான லோவில் (Moon lo) கண்டறிந்தது. அது வியாழன் கிரகத்தில் மின்னலையும் பதிவு செய்தது. நமது கிரகத்துக்கு வெளியே இது பதிவு செய்யப்படுவது முதல்முறை.

வாயேஜர் 2-இல் இருந்து அனுப்பப்பட்ட புகைப்படங்கள், வியாழன் கிரகத்தின் இன்னொரு நிலவான யுரோப்பாவின் பிளவுபட்ட பனிப்படலத்தின் கீழ் ஒரு திரவ நீர்ப் பெருங்கடல் இருக்கலாம் என்பதைச் சுட்டிக்காட்டியது. இது இந்நாள் வரை அங்கு உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கலாம் என வானியலாளர்களை வியாழனின் நிலவான லோவை முதலில் கண்டதை கம்மிங்ஸ் நினைவில் வைத்துள்ளார். அது அவரை மெய்சிலிர்க்க வைத்தது.

"நான் அப்போது வளாகத்தில் இருந்தேன். ஒரு காணொளி பதிவு வந்திருந்தது," என அவர் நினைவுகூர்கிறார்.

மேலும், "அங்கு லோ அதன் முழு மகிமையுடன் அங்கு இடம்பெற்றிருந்தது. என்னால் அதை நம்ப முடியவில்லை. நமது நிலா மிகவும் சாம்பல் நிறத்தில் சுவாரஸ்யமற்றதாக உள்ளது. நிலவுகளில் இவ்வளவு பன்மைத்துவம் இருக்கும் என்பதை நான் உணர்ந்திருக்கவில்லை." என்றும் தெரிவித்தார்.

இந்தத் திட்டம் தொடங்கிய நான்கு ஆண்டுகளில் யுரேனஸ் மற்றும் நெப்ட்யூனை அடையும் முதல் விண்கலமாக வாயேஜர் 2 இருக்கும் என நாசா முடிவெடுத்திருந்தது. 1986 மற்றும் 1989-இல் அருகே செல்வதன் மூலம் பிரமாண்ட சுற்றுலா முடிவுக்கு வரும் எனக் கருதப்பட்டது.

'வெளிர் நீலப் புள்ளி'

வாயேஜர்கள் ஒரு விதமான புத்தாக்கத் திறன் மற்றும் தொழில்நுட்பத்தின் கலவையுடன் தங்களின் இலக்குகளை அடைந்தன.

ஸ்லிங்ஷாட் உத்திகள் என அழைக்கப்பட்ட முறை ஒவ்வொரு கிரகத்தின் புவியீர்ப்பைப் பயன்படுத்தி திசைவேகம் பெற்று அடுத்த இலக்கை அடைவதற்காக திசையை மாற்ற அனுமதித்தது. இது நெப்ட்யூனை அடைவதற்கான பயண நேரத்தை 30 ஆண்டுகளில் இருந்து 12 ஆண்டுகளாக குறைத்தது.

இந்தத் திட்டங்களில் ப்ளுடோனியம் சார்ந்த அணுக்கரு மின்கலங்கள் பொருத்தப்பட்டிருந்தன. அவை ஒவ்வொரு ஆண்டும் 4 வாட் ஆற்றலை இழந்துவந்தன. பெரும்பாலான அறிவியல் கருவிகள் ஒன்றன்பின் ஒன்றாக நிறுத்தப்பட்டன.

வாயேஜர் விண்கலம், நாசா, விண்வெளி ஆராய்ச்சி

பட மூலாதாரம்,NASA/JPL-CALTECH

படக்குறிப்பு,இந்த வெளிர் நீலப் புள்ளி என்பது 1990-இல் வாயேஜர் 1 பூமியை எடுத்த புகழ்பெற்ற புகைப்படம் ஆகும். அதன் 30வது ஆண்டான 2020-இல் இந்தப் புகைப்படம் நாசாவால் வெளியிடப்பட்டது.

1990-இல் வாயேஜரின் கேமரா நிறுத்தப்படுவதற்கு முன்பாக, அது நெப்ட்யூனைக் கடந்திருந்த சூழலில் திரும்பி பூமியை புகைப்படம் எடுத்தது.

விண்வெளியின் பரந்த வெளியில் ஒரு சிறிய வெளிர் நீலப் புள்ளியாக பூமி அதில் தெரிந்தது.

அது மறைந்த வானியலாளரான கார்ல் சாகனின் எண்ணமாக இருந்தது.

"இந்த வெளிர் நீலப் புள்ளி தான் இதுநாள் வரையில் வாழ்ந்த மனிதர்கள், இதுநாள் வரையில் நீங்கள் அறிந்த மனிதர்கள்," என கார்ல் சாகன் கூறியதாக ஸ்பில்கர் நினைவுகூர்கிறார். நமது கிரகத்தை நாம் பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிற உணர்வையும் அவர் குறிப்பிடுகிறார்.

விண்மீன்களுக்கு இடையிலான வெளி (இன்டர்ஸ்டெல்லார் வெளி)

2012-இல் ஹீலியோஸ்பியர் என்று அழைக்கப்படும் சூரிய மண்டல வெளியின் வெளிப்புறத்தை விட்டுவிலகி இன்டர்ஸ்டெல்லார் வெளிக்குள் நுழைந்த மனிதனால் உருவாக்கப்பட்ட முதல் பொருளாக வாயேஜர் 1 மாறியது. அதன் இரட்டை விண்கலம் ஆறு ஆண்டுகள் கழித்து அதனை பின்தொடர்ந்தது.

இரண்டும் காந்தப்புலங்களைப் போல பூமிக்கு தரவுகளை தற்போதும் அனுப்பிக் கொண்டிருக்கின்றன. இதற்கு முன்னதாக விண்ணில் ஆராயப்படாத பிராந்தியத்தில் இருந்து புதிய தகவல்களை கொடுத்துக் கொண்டிருக்கின்றன.

"தற்போது இன்டர்ஸ்டெல்லார் மீடியத்தில் நேரடி அவதானிப்புகளை மேற்கொண்டு வரும் ஒரே கருவியாக வாயேஜர் இருக்கிறது," என்கிறார் வாயேஜரின் தற்போதைய ஆய்வில் வேலை செய்து வரும் முனைவர் பில் குர்த்.

வாயேஜர் விண்கலம், நாசா, விண்வெளி ஆராய்ச்சி

பட மூலாதாரம்,NASA/JPL

படக்குறிப்பு,1981-இல் சனி கிரகத்துக்கு அருகில் சென்ற வாயேஜர் 2 விண்கலம் அதன் மோதிரங்களைப் புகைப்படம் பிடித்தது.

"பெருங்கடல் என்பது யாது என்பதை அறிந்துகொள்ள பெருங்கடலில் உங்களுடைய பாதங்களை ஈரமாக்குவதைவிட சிறந்தது எதுவும் இருக்க முடியாது," என்றும் அவர் குறிப்பிட்டார்.

2030 வாக்கிலும் இரண்டு விண்கலன்களும் குறைந்தபட்சம் ஒரு அறிவியல் கருவியை இயக்கிக் கொண்டிருக்கும் என நாசா கணித்துள்ளது.

"இந்தத் திட்டம் தொடர்ந்து செயல்பாட்டில் வைத்திருப்பதற்கு தேவையான அனைத்தையும் நாங்கள் தொடர்ந்து செய்ய முயற்சிப்போம்," என உறுதிகூர்கிறார் ஸ்பில்கர். "நாங்கள் ஆஃப் பட்டனை அழுத்தமாட்டோம். மாறாக அதற்கான நேரம் எப்போது என்பதை வாயேஜரே முடிவெடுக்க விடுவோம்." என்றார்.

ஒரு 'வியக்கத்தக்க கண்டுபிடிப்பு'

"மனித குலத்தின் தேடலின் மிகப்பெரிய சாதனையை வாயேஜர் பிரதிபலிக்கிறது. இது உண்மையில் பிரபஞ்சத்தில் தன்னுடைய இடத்தைப் புரிந்துகொள்ள மனிதகுலம் மேற்கொண்ட சாகசம்," என்கிறார் குர்த்.

வெளிப்புற கிரகங்கள் நாம் உண்மையாக நினைத்ததைப் போல எளிமையானவை இல்லையென்று வாயேஜர் காண்பித்ததாகவும் அதன்மூலம் அடுத்தடுத்த திட்டங்களுக்கான வழியை உருவாக்கியதாகவும் அவர் நம்புகிறார்.

நாசாவில் யுரோப்பா க்ளிப்பர் விண்கலம் வியாழன் கிரகத்தில் நிலவான யுரோப்பாவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஐரோப்பிய விண்வெளி முகமையின் விண்கலமாக ஜூஸ் அதன் இலக்கான வியாழன் கிரகத்தின் நிலவுகளை 2031-இல் அடையும் எதிர்பார்க்கப்படுகிறது.

வாயேஜரின் திட்டங்கள் பூமிக்குத் தகவல்களை திருப்பி அனுப்புவது மட்டுமில்லை.

வாயேஜர் விண்கலம், நாசா, விண்வெளி ஆராய்ச்சி

பட மூலாதாரம்,NASA/JPL-CALTECH

ஒவ்வொன்றிலும் 12 இன்ச் நீளமுள்ள தங்கமுலாம் பூசப்பட்ட தகடுகள் உள்ளன. அதில் பூமியில் உள்ள மக்கள் 55 மொழிகளில் தெரிவித்த வாழ்த்துகள், 115 புகைப்படங்கள் மற்றும் நமது கிரகத்தின் வெவ்வேறு பிராந்தியங்கள் மற்றும் காலகட்டங்களின் இடி மற்று இசை போன்ற ஒலிகளும் இடம்பெற்றுள்ளன.

இவை அனைத்தும் சாத்தியமான வேற்றுகிரகவாசிகளால் அந்த விண்கலங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் மனிதகுலம் பற்றிய அறிமுகக் கடிதமாக இருக்க வேண்டும் என்பதற்கான இந்தத் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன.

இது இதர புத்திசாலி உயிரினங்களுக்கு "ஒரு வியக்கத்தக்க கண்டுபிடிப்பாக" இருக்கும் என்கிறார் ஸ்பில்கர். "அவர்கள் திரும்பி வந்து பூமி எவ்வாறு இருக்கிறது என்று பார்க்கலாம்." என்று அவர் தெரிவித்தார்.

"தங்கத்தால் உருவாக்கப்பட்ட அந்தப் பதிவு பில்லியன் கணக்கான ஆண்டுகள் தாக்குப்பிடித்து மனிதகுலத்தைத் தாண்டியும் நிலைத்திருக்கலாம்," என்கிறார் அவர்.

ஒருவேளை வேற்றுகிரகவாசிகள் வாயேஜரைக் கண்டடைந்தால் அதில் விநோதமான செய்தி ஒன்றையும் காணலாம்.

1970களில் கம்மிங்ஸஸால் தான் உருவாக்க உதவிய உபகரணம் ஒன்றில் அவரது பெயரின் முதல் எழுத்துக்களை பொறிக்கின்ற ஆர்வத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

"அது அனுமதிக்கப்படவில்லை. ஆனால் தற்போது என்னை அவர்களால் என்ன செய்ய முடியும்," என நகைப்புடன் கூறி முடித்தார்.

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை




Saturday, June 6, 2026

முடியவே முடியாது என்ற களங்களில்தான் நம் வெற்றியே: கவிஞர் தணிகை.

 நார்வே செஸ், பிரக்ஞானந்தா, புலியின் குகையிலேயே ...Anand Mahindra


நன்றி: 

பிபிசி தமிழ்.



இந்தப் பக்கம் வைபவ், அந்தப் பக்கம் பிரக்ஞானந்தா ஒன்னும் சொல்லிக்கவே முடியலை போங்க... மிக்க மகிழ்ச்சி. இந்த மாதம் புது மாதம், நல்லா விளையாடுவே...தாய்

நார்வே செஸ் தொடரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இறுதிச்சுற்றில் ஜெர்மனி வீரர் வின்சென்ட் கீமரை வீழ்த்தியதன் மூலம் பிரக்ஞானந்தா முதன் முறையாக இந்த தொடரில் சாம்பியன் ஆனார்.

அலிரேசா ஃபிரோஸ்ஜாவை வென்று வெஸ்லி சோ இரண்டாவது இடத்தைப் பிடித்தார். பிரக்ஞானந்தா தனது இறுதிச்சுற்றில் வெற்றி பெற்றிருக்காவிட்டால் வெஸ்லி சோ சாம்பியன் ஆகியிருப்பார். ஃபிரோஸ்ஜா மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

நடப்பு உலக சாம்பியனான இந்தியாவைச் சேர்ந்த மற்றொரு தமிழக வீரர் குகேஷை வீழ்த்தியதன் மூலம் நார்வேயைச் சேர்ந்த முன்னணி வீரர் மேக்னஸ் கார்ல்சன் நான்காவது இடத்தைப் பிடித்தார்.

நார்வே செஸ் தொடரில் ஒரு கட்டத்தில் பிரக்ஞானந்தா ஆறாம் இடத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தார். அதாவது, ஆறாம் சுற்று முடிவில் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருந்த வெஸ்லி சோவை (11.5)விடவும் பிரக்ஞானந்தா 5.5 புள்ளிகள் பின்தங்கியிருந்தார்.அதன் பிறகு தான் விளையாடிய 4 போட்டிகளிலும் கிளாசிக்கல் ஆட்டங்களில் வெற்றி பெற்று 12-க்கு 12 என்ற வகையில் முழுமையான புள்ளிகளை பிரக்ஞானந்தா வென்றார். இதன் மூலம் ஒட்டுமொத்தமாக 18 புள்ளிகள் சேர்த்த அவர் சாம்பியன் பட்டம் வென்று சாதித்தார். கடைசி சுற்றுக்கு முன்பு வரையிலும் முதலிடத்தில் இருந்த வெஸ்லி சோவை விட இறுதியில் அவர் ஒரு புள்ளி அதிகம் பெற்று மகுடம் சூடினார்.

இறுதிச் சுற்றில் ஒரே ஒரு ஆட்டத்தைத் தவிர மற்ற அனைத்தும் கிளாசிக்கல் செஸ் முறையிலேயே தீர்மானிக்கப்பட்டன. வெஸ்லி சோ தனது கிளாசிக்கல் ஆட்டத்தில் வெற்றி பெற்றிருந்தால், பிரக்ஞானந்தாவுக்குப் பதிலாக அவரே பட்டத்தை வென்றிருப்பார்; ஆனால் அவரால் 'ஆர்மகெடன்' (armageddon) சுற்றில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. .

ஆறாவது சுற்றில் வெஸ்லி சோவிடம் தோல்வியடைந்த போது, முதலிடத்தில் இருந்தவரை விட 5.5 புள்ளிகள் பின்தங்கி கடைசி இடத்தில் இருந்த பிரக்ஞானந்தா, அதன்பிசாம்பியன் பட்டம் வென்ற பிறகு பேசிய அவர், "நான் செஸ் விளையாட மட்டுமே விரும்பினேன். ஆனால் எப்படியோ அனைத்தும் எனக்குச் சாதகமாக அமைந்தன. நான் அதிக கட்டுப்பாட்டுடன் விளையாடத் தொடங்கியதாக உணர்கிறேன்; அது எப்போதும் ஒரு நல்ல விஷயமாகும்." என்றார்.

பிரக்ஞானந்தா வேகமாக விளையாட முயன்றாலும், தன் தாயின் நம்பிக்கையையும் கொண்டிருந்தார்.

"அலிரேசாவுடனான ஆட்டத்துக்கு முன், ஜூன் ஒன்றாம் தேதி நான் என் அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அவர், 'இது ஒரு புதிய மாதம், நீ நன்றாக விளையாடுவாய்!' என்று கூறினார். அம்மா எப்போதும் சொல்லும் வழக்கமான விஷயங்களில் இதுவும் ஒன்று; ஆனால் அதன் பிறகு நான் நான்கு ஆட்டங்களில் வெற்றி பெற்றேன். அவருக்கு ஏதோ தெரிந்திருக்கிறது என்று நினைக்கிறேன்!" என்றார் பிரக்ஞானந்தா.

அதன் பிறகு நடந்த அனைத்துமே செஸ் உலகில் வியக்கத்தக்க ஒன்று. ஃபிரோஸ்ஜா, மேக்னஸ் கார்ல்சன், குகேஷ் மற்றும் கீமர் ஆகியோரை பிரக்ஞானந்தா கிளாசிக்கல் ஆட்டங்களில் அடுத்தடுத்து வீழ்த்தினார். மீண்டு வந்து சாம்பியனானது வியக்கத்தக்கது.

பிரக்ஞானந்தாவுக்கு கார்ல்சன் புகழாரம்

பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றது குறித்துப் பேசிய மேக்னஸ் கார்ல்சன், " இது நம்ப முடியாத ஒன்று! மிக முக்கியமான தருணத்தில் மிகச் சிறப்பாகச் செயல்படுவதற்கான (clutch) ஒரு சிறந்த உதாரணம் இது. இதேபோன்றதொரு சிறப்பான ஆட்டத்தை என்னாலும் வெளிப்படுத்தியிருக்க முடியும் என்பதையே இது காட்டுகிறது; ஆனால் உண்மையில் இது வியக்கத்தக்கது. அவர் ஒரு அற்புதமான போராளி; அதற்கான பலனை அவர் பெறுவதைப் பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது." என்று புகழாரம் சூட்டினார்.

மறுபடியும் பூக்கும் வரை

 கவிஞர் தணிகை