Friday, March 30, 2018

பேசும் முன் வார்த்தைக்கு நீ எஜமான் பேசியபின் வார்த்தை உனக்கு எஜமான்: கவிஞர் தணிகை

Image result for abdul kalam quotes in tamil

பேசும் முன் வார்த்தைக்கு நீ எஜமான் பேசியபின் வார்த்தை உனக்கு எஜமான்: கவிஞர் தணிகை

முதலில் ஊழல் மிக்க அரசு எடியூரப்பா அரசுதான் என்ற உண்மையை அவரை வைத்துக் கொண்டே சொன்னார் தைரியமாக அதே கட்சி சார்ந்த அந்தக் கட்சியின் தலைவர் அமித் ஷா , மிக நேர்மையானவர் உண்மையை ஒத்துக்க் கொண்டிருக்கிறார் இவரது உண்மை, நேர்மை பற்றி லோயா என்ற நீதிபதி வழக்கை கவனித்தார்க்குப் புரியும், இப்போது அவரது பேச்சை மொழி பெயர்த்த  பா.ஜ.க எம்பி பிரகலாத் ஜோசி...பிரகலாதன் எப்போதும் உண்மையே பேசுவான் யாருக்கும் எதற்கும் பயப்படமாட்டான், ஹரி தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று சொன்ன பேராயிற்றே...அந்த வாரிசாக இந்த எம்.பியும் நரேந்திர மோடி அரசு ஏழைகளுக்கும், தலித்துகளுக்கும் ஒன்றுமே செய்ததில்லை. மேலும் மோடி நாட்டை சீர்குலைத்து விடுவார் என கன்னடத்தில் மொழி பெயர்த்து பேசினார்.

இப்போது இங்கு வரும் ஏப்ரல் 15 அன்று கருப்புக் கொடி பிடிப்போம்  பிரதமருக்கு எதிராக என தி.மு.கவும், காவிரி மேலாண்மை  வாரியம் அமைக்காமல் விட மாட்டோம், உண்ணாவிரதம் இருப்போம்,யோசித்து முடிவு செய்வோம் வழக்கு தொடர்வது பற்றி யோசித்து வருகிறோம் என்றும் 3 குரல்கள் அ.இ.அ.தி.முகவிலிருந்து எழுந்திருக்கின்றன.

காவிரியை, தென்னகத்தின் நெற்களஞ்சியம் எனப் படும் தஞ்சையை குறி வைத்து தமிழகத்துக்கு எதிராக யுத்தம் நடத்தப்படுகிறது துப்பாக்கி குண்டுகளின்றி...மீத்தேன், நியூட்ரினோ இதற்கெல்லாம் தஞ்சை பூமி நஞ்சை பூமி தான்கிடைத்தா? எளிதில் நம்ப முடியவில்லைதான்..

ஆனால் சாகர் மாலா, தூத்துக்குடி ஸ்டெரிலைட் செம்பு வம்பு விவகாரம், அங்கு கூடி எதிர்க்கும் இலட்சக்கணக்கான மக்கள்  பள்ளிச் சிறார் முதல், பெரியோர் வரை, அதை மறைக்கும் ஊடகங்கள், அதற்காக மாணவர்கள் ஸ்ட்ரைக் செய்யும்போது கல்லூரியை காலவரையறை இன்றி மூடுவதாக சொல்லும் கல்லூரி நிர்வாகம் போன்று 15 நாளுக்கு கம்பெனியை மூடுவதாக அறிவித்திருக்கும் ஸ்டெரிலைட் ஆலை,

இங்கே மேட்டூரில் தொழிற்சங்கமே இருக்கக் கூடாது என திட்டமிட்டு சதி செய்து படித்த இளம் இளைஞர்களை ஏமாற்றும், உழைப்பை உறிஞ்சும் தனியார் நிறுவனங்கள்,,,,எங்கு பார்த்தாலும் பஸ்போர்ட், நெடுஞ்சாலை, எனவும், தமது காலத்திலேயே பதவி விட்டு இறங்கி விடும் முன் என்ன என்ன செய்து பேர் விளங்கச் செய்து கொள்ளலாம் என எடப்பாடி பேரில் மாவட்டம் செய்யலாமா என வரும் செய்திகள்...இதனிடையே மேட்டூர் அணையில் வெகுவாக குறைந்து குடி நீருக்கே கூட பஞ்சம் வரும் நீர்ப்பற்றாக்குறை...கொளுத்தும் கோடை....

இப்படியாக நாளும், காலமும் நகர்ந்து வருகிறது...யாராவது எப்போதாவது சொல்லி இருக்கிறீரா, அட நீங்கள் கூட பத்தாண்டுக்கும் மேல் மிகவும் பின் தங்கிய இந்தியப் பழங்குடி மக்களுக்கு உழைத்திருக்கிறீர் இவர்கள் எல்லாரையும் விட நீங்கள் பிரதம்ரானால், அட தமிழகத்தின் முதல்வரானால் மிக நல்ல நாட்டை மக்களை மேன்மைப்படுத்துவீர் என்று?

முதலில் நீரை, நிலத்தை, அதன் மேல் உள்ள கட்டடங்கள் யாவற்றையும் நாட்டுடமை ஆக்குவேன்

இரண்டாவதாக நதி நீரை இணைப்பேன்

மூன்றாவதாக அறக்கட்டளை யாவற்றையும் அது ஈஷா ஆனாலும், ஈசனே ஆனாலும் அம்மா ஆனாலும் ஆதி பராசக்தி ஆனாலும், அமிர்தம் ஆனாலும் தங்க மாளிகை ஆனாலும், திருப்பதி வேங்கடவன் ஆனாலும் திருவனந்தபுரத்து பத்மனாபன் ஆனாலும்,  திருவரங்கத்து அரங்கன் ஆனாலும் அனைவர்க்கும் நாட்டுக்கு பொது உடமை ஆக்குவேன்..

நான்காவதாக தனியார் எந்தத் துறையிலுமே இருக்காமல் அனைத்தையும் அரசின் பொதுத் துறை நிறுவனமாக்கி ஏமாற்று வேலை செய்வாரை நீக்கி, உண்மையான பணி செய்யும் இளைஞர்க்கு பணி கொடுத்து உலகின் முன்னணி நிர்வாகம் நடக்கச் செய்வேன்

ஐந்தாவதாக நாட்டில் தேர்தல் என்றால் அது மத்திய மாநிலம் எல்லாம் ஒரே நேரத்தில் மட்டும், தேர்தல் செலவு யாவும் அரசுடையது...நிற்பார் எந்த செலவும் செய்யக் கூடாது...ஊழல் நிருபிக்கப்பட்டால் உடனே பதவி நீக்கம் தண்டனை உறுதி...அதையே லோக்பால் மசோதா என்கிறார்களோ?

ஆறாவதாக கல்லூரி இளைஞர் அனைவர்க்கும் இராணுவப் பயிற்சி இரண்டு வருடம் உறுதி உடன் உதவித் தொகை அவர்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்

வங்கிகள் யாவும் தேசிய பொது உடமையாக்கப்பட்டு,,, பெரு முதலாளிகளுக்கு  என்று எந்த கடனுதவியும் இல்லாமல் செய்து விகிதாசார முறைப்படி பொருளாதார உதவிகள் செய்யப்படும்...

கல்வி, மருத்துவம் யாவும் அரசு பார்த்துக் கொள்ள தனியார் துறை என்பது இல்லாமல் செய்யப்படும்...

நாட்டில் மூன்றாம் அணி என்றெல்லாம் அமைத்து மறுபடியும் பி.ஜே.பி கட்சிக்கே வாய்ப்பு சென்று விடாமல் காப்பது போல நடவடிக்கை எடுத்து....இரு கட்சி ஆட்சி முறை அமல்படுத்தப்பட்டு ஒரு ஆட்சிக்காலம் ஒரு கட்சி, அடுத்து எதிர்க்கட்சியாக இருந்தது ஆளும் கட்சி என்ற நிலைக்கு வரவழைக்க நடவடிக்கை, தேர்தல் இருக்குமாறு பார்த்துக் கொள்ள சட்டம் நீதி நிர்வாகம் எல்லாம்செய்யப்படும்...

இப்படி எல்லாம் செய்யும்போது தனியார் கல்வி நிறுவனங்கள் என்ற பேச்சுக்கே வழி இல்லாமல் சாதனையாளர்க்கு, அறிவியல் விஞ்ஞானிகளுக்கு தனிப்பட்ட ஆய்வுக்கு ஆராய்ச்சிக்கு உண்டான அத்தனை வழிவகைகளும் செய்யப்படும்...

மானியம், இலவசம் எல்லாம் இல்லாமல் ஒழிக்கப்பட்டு அரசே அனைத்தையும் கொடுக்கும்...

மது ஒழிப்பு, மனிதர்களின் சக்திக் குறைபாட்டுக்கான, நோய்கள் உற்பத்தி செய்யும் அனைத்து விதமான உணவுகளும் தடைசெய்யப்படும்..

விவசாயம் நாட்டின் பிரதான முதுகெலும்பான தொழிலாக அங்கீகரிக்கப்பட்டு அனைத்து உதவிகளும் உழவுத் தொழிலுக்கு செய்யப்படும்

பிளாஸ்டிக் நெகிழிகள் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் காகிதம் போன்றவை அடியோடு உற்பத்தி தடைசெய்யப்பட்டு  பயன்பாடு ஒழிக்கப்படும்.

....தனியார் போக்குவரத்து அறவே இல்லாமல் ஒழிக்கப்படும்...தொழில் செய்வோர்க்கு பயண ஏற்பாடுகள் அரசின் மூலமே செய்யப்படும்...

ஏங்க இதெல்லாம் செய்ய முடியாதா என்ன?
செய்யலாம்....மக்கள் நினைத்தால்...
unnaal ethaiyum saathikka mudiyum...apj quotes in tamil க்கான பட முடிவு
பேராற்றல்
உன்னிடம் மறைந்திருக்கிறது
உன்னால் எதையும் சாதிக்க முடியும்..

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Thursday, March 29, 2018

ஒன்னு காதில மாட்டிக்கிறாங்க இல்லைன்னா காதல்ல மாட்டிக்கிறாங்க: கவிஞர் தணிகை

ஒன்னு காதில மாட்டிக்கிறாங்க இல்லைன்னா காதல்ல மாட்டிக்கிறாங்க: கவிஞர் தணிகை

Image result for one to one cbe to salem


கோவை முதல் சேலம் வரை இரவு நேரப் பயணம் ஒன் டூ ஒன் பேருந்து...கல்லூரி விடுமுறை என்பதால் எங்கள் பேருந்தில் மட்டும் 8 காதல் ஜோடிகள்...இறங்கும் இடத்திற்கு முன் அந்த இளைஞன் இறங்கிய பிறகு அவன் தோளில் சாய்ந்துறங்கிய அந்தக் கல்லூரி மாணவி சிகையை தடவு தடவென்று தடவி பின்னுக்கு இழுத்து விட்டு கிளிப் போட்டு சரி செய்கிறாராம்...துணையாக வந்தவர்கள் வேறு இதெல்லாம் கடைசி வரை சேர்ந்து வாழ்ந்தால் பரவாயில்லை வாழுமா என்று சந்தேகம் எழுப்பினார், மேலும் ஒரு ஜோடி பின்னால் அவர்கள் செய்வது தெரியாமல் இருக்க பனியன் ஒன்றை மறைப்பாக போட்டுக் கொண்டனர், அவர்களுக்கு வசதியாக ஓட்டுனரும் பேருந்தின் விளக்கை அணைத்து பயணிகளுக்கு இது போன்ற பயணிகளுக்கு வசதி செய்து தந்தார்...

இவர்களுக்கு எல்லாம் நியூட்ரினோ, மீத்தேன், தஞ்சை நெற்களஞ்சியம், தூத்துக்குடி ஸ்டெரிலைட் பிரச்சனை ஏதும் ஏன்... அம்மா அப்பா வீட்டுப் பிரச்ச்னை சகோதர சகோதரிகள்..நாடு, வீடு ஏதும் பெரிதாகத் தெரியவில்லை. தெரியாதுதான்.

நாங்களும் காதலித்தவர்கள் தாம். அது வேறு. இது வேறு...காதல்னா என்னாங்க அது கல்யாணந்தானே, செல்வச் சீமானே...என்று காதல் அங்கொன்றும் இங்கொன்றும் பேசப்படும்... பணக்கார வீட்டுப் பையன்கள் தாம் காதலிப்பார்கள்...மீதி இருப்பார்க்கு பிழைக்க வழி தேட , ஒரு வாய் வயிறு சோறு சம்பாதிக்கவும், பெற்றோர்க்கும், வீட்டார்க்கும் செய்யவே கடமை இருக்கும் காதல் என்பதற்கெல்லாம் நேரமே இருக்காது...

நாவல்கள், கதைகளில் இருக்கும், சினிமாவில் இருக்கும், மீறி எங்காவது இருந்தால் அதில் இரண்டில் ஒன்று இறக்கும்...ஒரு கடிதம் எழுதி சேர்த்துவதற்குள் அது சேராமலே படாத பாடு படுத்தி எடுக்கும், ஊரே காறித் துப்பும் அந்தப் பையன் லவ் லெட்டர் கொடுத்தானாமே அந்தப் பிள்ளைக்கு என அதுக்கு பயந்தே எந்தப் பெண்ணுமே யாரையுமே ஏறெடுத்துப் பார்க்கவே மாட்டாள் எந்த லவ் லெட்டரையும் யாரும் வாங்கவே மாட்டார்கள்... இது போன்ற காதல் எல்லாம் ஒரு தலைமுறைக்குள்ளாகவே மாறி இவ்வளவு தூரம் வந்தது செல்பேசியால்...

ஒன்னா இவர்கள் தம் சுற்றத்தில் வெளியிடத்தில் என்ன நடக்கிறது என்று கூடத் தெரியாமல் காதில் ஹெட் செட் இயர் போன் என மாட்டிக் கொண்டு திரிகிறார்கள்...அல்லது காதல் என்ற பேரில்...உண்மையிலேயே காதல் தான் இதன் பேரா...பிப்ரவரி 14ல் ஒரு பொறியியல் இரண்டாமாண்டு மாணவன் சாரி ஃபார் திஸ் என தமது 170 தொடர்பு எண்களுக்கும் செய்தி அனுப்பிவிட்டு எப்படி தூக்கு மாட்டிக் கொள்வது என யூ ட்யூப்பில் கற்றுக் கொண்டு எனது முடிவுக்கு யாரும் காரணமல்ல என அவர்கள் ஊரில் இருந்து ஒரு பெண் இவனது கல்லூரிக்கு வந்து கொண்டிருந்தவளுக்கும் இவனுக்கும் ஏதோ இருந்தும் இல்லாதிருந்ததுமாக இருந்ததால்...யாரும் காரணமே அல்ல என இரண்டடுக்கு கட்டில் மேல் ஏறி துணி காயவைக்கும் நைலான் கயிற்றில் மின் விசிறியில் தூக்குப் போட்டுக் கொண்டு மிகவும் பர்பெக்ட்டாக செத்துப் போனான்..

பேராசிரியர்களும் மாணவர்கள் அவனுடன் படித்த அவனது துறை மாணவர்கள் 70 பேரும் அவனது ஊருக்கு சிறப்பு பேருந்து எடுத்துக் கொண்டு அவனது உடலை இறுதி அடக்கம் செய்து வந்தார்கள்...அப்படி சென்றவர்க்கு ஒரு சிறு உணவகத்தில் சிற்றுண்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது...ஒரு மாணவன் தோசைதானா, புரோட்டா, சப்பாத்தி,பூரி மாதிரி ஏதும் இல்லையா எனக் கேட்க வாய் எடுக்க இன்னொரு மீசைக்கார மாணவன் அவனை அடக்கினான்

எல்லாமே சொன்னார்கள் அவனது படிக்காத அப்பா, எதனால செத்தான், அந்தக்  காரணத்தை மட்டும் சொல்லுங்கப்பா என்று எல்லாரையும் கேட்டு கேட்டு அழுது கொண்டிருந்ததையும் மறக்க ஆரம்பித்து விட்டார்கள்...சிலர் விடுதியை விட்டு வெளியே போய்விடலாம் என்றார்கள்.நாளாக நாளாக மறக்க ஆரம்பித்து விட்டார்கள்...

அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு ஊடகம் அந்தக் கல்லூரி நிர்வாகத்திடம் அது கொடுத்த அழுத்தம்தாம் அந்தப் பையனுக்கு அந்தமுடிவு ஏற்படக் காரணம் என செய்தி வெளியிட்டு...பழம் பறிக்க ஆசைப்பட்டு ...தொலைக்காட்சி, பத்திரிகை செய்திகளை வெளியிட்டு ....காவல்துறையும்  சீக்கிரம் இந்தக் கேஸை இழுத்து மூடவே முனைந்தது...அது சந்தேகமில்லா தற்கொலைதான் என...கல்லூரியும் சில நட்கள் விடுமுறை விட்டு பிரச்சனையை அமைதியான சுமூகமான முறையில் தீர்த்தது... அடுத்து செமஸ்டர் வந்துவிட்டது, எக்ஸாம் பீஸ், அட்டன்டஸ் 80% எல்லாம் மறந்தே விட்டார்கள்....

அந்தப் பையனை இழந்த குடும்பம்... காதல் என்றால் என்னாங்க அது கல்யாணந்தானே...என்ற எப் எம். ரேடியோவில் காற்றலையில் மிதந்த பாடலை நிறுத்த முடியாமல் கேட்டுக் கொண்டிருந்தது...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Sunday, March 25, 2018

கொஞ்சம் கீதை கொஞ்சம் பைபிள் கொஞ்சம் குரான்:- கவிஞர் தணிகை.


கொஞ்சம் கீதை கொஞ்சம் பைபிள் கொஞ்சம் குரான்:- கவிஞர் தணிகை.
Image result for gita bible quran

கொஞ்சம் கீதை,கொஞ்சம் பைபிள்,கொஞ்சம் குரான் என்று  மூன்று பிரதானமான மதங்களின் சிறு துளிகள் உங்கள் பார்வைக்கு.இதை நேர்மறையாக பார்ப்பதும், எதிர்மறையாக பார்ப்பதும் அவரவர் அறிதல் புரிதல்,தெளிதல் உணர்தல் அகம் புறம் சார்ந்தது.



கீதை:

எது தொடக்கத்தில் விஷத்தை ஒத்ததும் விளைவில் அமிர்தம் ஒப்ப மாறுவதோ,அந்த இன்பமே சாத்விகம் ஆகும். அது தன் மதியின் விளக்கத்திலே பிறப்பது.

 விஷியங்களிலே புலன்களைப் பொருத்துவதனால் தொடக்கத்தில் அமுதைப் போலிருந்து விளைவில் நஞ்சு போன்றதாய் முடியும் இன்பம் ராஜசம் எனப்படும்.

தொடக்கத்திலும் இறுதியிலும் ஒருங்கே ஆத்மாவுக்கு மயக்கம் விளைவிப்பதாய்,உறக்கத்தினின்றும் சோம்பரினின்றும் தவறுதலின்றும் பிறக்கும் இன்பம் தாமசம் என்று கருதப்படும்.

இயற்கையில் தோன்றும் இம் மூன்று குணங்களினின்றும் விடுபட்ட உயிர் மண்ணுலகத்திலும் இல்லை. வானுலகத்திலும்  இல்லை.

குரான்:

பாகம் 10.ஸுரத்துத் தவ்பா அத்தியாயம்:9 ருகூஃ 10.

77. அல்லாஹ்வுக்கு - அவனுக்கு வாக்களித்ததில் - அவர்கள்  மாறு செய்த காரணத்தினாலும், அவர்கள் பொய்யுரைத்துக் கொண்டிருந்த காரணத்தாலும் ; அவனை அவர்கள் சந்திக்கின்ற (கியாமத்து) நாள் வரை அவர்களுடைய நெஞ்சங்களில் நிபாக்கை (நயவஞ்சகத் தன்மையை)அவர்களுக்கு இறுதி முடிவாக ஆக்கிவிட்டான்.

78. நிச்சயமாக அல்லாஹ் அவர்களுடைய இரகசியத்தையும், அவர்களின் இரகசிய ஆலோசனையையும் அறிவான் என்பதையும்,நிச்சயமாக அல்லாஹ் மறைவானவற்றை எல்லாம் மிக்க அறிந்தவன் என்பதையும் அவர்கள் அறியவில்லயா?

79. (ம்முனாபிக்கான)வர்கள் எத்தகையோரென்றால்,முஃமின்களில் தாரளமாக தருமங்கள் செய்கிறவர்களையும்,இன்னும் தங்களுடைய உழைப்பைத் தவிர (வேறு எதனையும் தானம் செய்வதற்குக்) காணமாட்டார்களே (அதாவது இயலாது இருக்கின்றார்களே)அத்தகைய (எளிய)வர்களையும் குறைகூறி,அவர்களைப் பரிகாசம் செய்கின்றனர்.அல்லாஹ் அவர்களைப் பரிகசிக்கிறான் - மேலும் ,நோவினைத் தரும் வேதனையும் அவர்களுக்கு உண்டு.

பைபிள்:

லூக்கா 8.இரத்தப் போக்குடைய பெண் நலம் பெறுதல்
மத்9:18 - 26; மாற் 5: 21 - 43

40. இயேசு திரும்பி வந்தபோது (கெரசேனர் பகுதியில் இருந்து கலிலேயாவுக்கு) அங்கே  திரண்டு காத்திருந்த மக்கள் அவரை வரவேற்றனர்.41.அப்போது தொழுகைக் கூடத் தலைவர் ஒருவர் இயேசுவிடம் வந்தார். அவர் பெயர் யாயிர். அவர் இயேசுவின் காலில் விழுந்து  தம்முடைய  வீட்டிற்கு வருமாறு வேண்டினார். 42.ஏனெனில் பன்னிரண்டு வயதுடைய அவருடைய ஒரே மகள் சாகும் தருவாயில் இருந்தாள் இயேசு அங்குச் செல்லும் வழியில் மக்கள் கூட்டம் அவரை நெருக்கிக்  கொண்டிருந்தது. 43. பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப்போக்கினால் வருந்திய பெண் ஒருவர் அங்கு இருந்தார். அவர் தம் சொத்து முழுவதையும் மருத்துவரிடம் செலவழித்தும் எவராலும் அவரைக் குணமாக்க இயலவில்லை.

44. அப்பெண் இயேசுவுக்குப் பின்னால் வந்து அவரது மேலுடையின் ஓரத்தைத் தொட்டார்.  உடனே அவரது இரத்தப்போக்கு நின்று போயிற்று...45.என்னைத் தொட்டவர் யார்? என்று இயேசு கேட்டார். அனைவரும் மறுத்தனர்., பேதுரு,ஆண்டவரே,மக்கள் கூட்டம் சூழ்ந்து நெருக்கிக் கொண்டிருக்கிறதே என்றார்...46. அதற்கு இயேசு "யாரோ ஒருவர் என்னைத் தொட்டார்;என்னிடம் இருந்து வல்லமை வெளியேறியதை உணர்ந்தேன்" என்றார்.47. அப்பெண் தாம் இனியும் மறைந்திருக்க முடியாதென்று கண்டு நடுங்கிக் கொண்டே வந்து  அவர்முன் விழுந்து,தாம் அவரைத் தொட்ட காரணத்தையும் உடனே தமது பிணி நீங்கியதையும் பற்றி மக்கள் அனவரின் முன்னிலையிலும் அறிவித்தார்..  48. இயேசு அவரிடம் "மகளே உனது நம்பிக்கை உன்னை நலமாக்கியது. அமைதியுடன் போ" என்றார்.

கவிஞர் தணிகை
மறுபடியும் பூக்கும் வரை.

Tuesday, March 20, 2018

சேலத்து ரயில்வே நடை மேடை அசுத்தம் தான் நாடெங்கும்: கவிஞர் தணிகை

சேலத்து ரயில்வே நடை மேடை அசுத்தம் தான் நாடெங்கும்: கவிஞர் தணிகை
Image result for salem railways station 3 platform
மேட்டூர் ரயில் 3 ஆம் எண் நடைமேடையில். 4 ஆம் எண் நடைமேடைக்கும் 3 ஆம் எண் நடைமேடைக்கும் இடையில் ஒரு உணவகம்.அதிலிருந்து வரும் கழிவு நீர் நடைமேடையில் கால்வாய் போல வழிந்தோட, அந்த வழி போவோருக்கு வெகு தொல்லை தருவதாக இருந்தும் யாரும் அதைப்பற்றி அக்கறை எடுத்துக் கொண்டு கேட்பதாக இல்லை.

நான் அது பற்றி புகார் தெரிவிக்கலாம் என்று பார்த்தால் நிலைய தலைமை அலுவலர் அறையும், துணை நிலை தலைமை அலுவலர் அறை இரண்டுமே மூடப்பட்டு யாரையும் தொடர்பு கொள்ளும் நிலை இல்லை. அந்த உணவகத்தின் பின் புறம் எனவே அது பற்றி யாரை அணுகி சொல்வதென்றும் புரியவில்லை.

எனது பையோ மேட்டூர் ரயில் பெட்டியில். எனது இறங்கும் நிலைக்கு வசதிக்காக கடைசியில் வைக்கப்பட்டு இடம் போடப்பட்டு இருந்தது. எனவே அதை எடுத்துக் கொண்டு சென்று பேசவும் நான் விழையவில்லை.

எப்போதும் இருக்கும் கல்லூரி மாணவர்களும் அப்போது இல்லை. அங்கிருந்த  ஒரு பலகையில் : ரயில்வே நிலையத்தை அசுத்தப்படுத்துவது குற்றம் என்று இருக்க அதனருகிலேயே இப்படி...

காவலர் எவரும் வருவாரா என்று பார்த்தால் எவரும் அந்தப் பக்கம் வருவதாக இல்லை. எனவே அங்கிருந்து உணவகம், ரயில் நிலைய அலுவலர் இரண்டுக்கும் மாறி மாறி இரண்டு மூன்று முறை நடந்து அலைந்து பொறுக்காமல் இருந்தேன்...

அதற்குள் சாரி சாரியாக பயணிகள் போவதும் வருவதாகவும் அந்த வழியில் நடந்தபடி இருந்தது, முடிந்தவரை அனைவரையும் எச்சரித்தபடி இருந்தோம். மேலும் குழந்தைகளும், 10 ரூபாய்க்கு பயணிகளை ஏற்றிச் செல்லும் சிஸ்கால் உபயம் செய்யும் வண்டியும் சர் சர் என நீரை அடித்தபடி சென்றபடியும் வந்தபடியும் இருந்தது....

எனது தடுமாற்றத்தையும் அலைச்சலையும் பார்த்த அந்த உணவகத்தினர் ஒரு இளையவரை அனுப்ப, அவரிடம் நான் அங்குள்ள நிலையை எடுத்துக் கூறினேன். அவர் வந்து ஒரு மூடப்பட்டிருந்த கடப்பாக் கல்லை எடுத்து அந்த உணவகத்திலிருந்து வரும் கழிவு நீர் செல்வதற்காக இருந்த கழிவு நீர் கால்வாயை சுத்தம் செய்ய முயன்றார். அடைப்பை எடுத்துவிட்டு விட்டு,

ஒரு கிளீனர் பிரஸ்ஸை எடுத்து வந்து வழிந்தோடிய இடத்தை எல்லாம் சுத்தம் செய்தார்...அவருக்கு நன்றியறிதலை தெரிவித்து உனைப் போலவும், எனைப்போலவும் இருந்து விட்டால் இந்த உலகு இப்படி இருக்காது....என வாழ்த்தினேன். அவரை அந்தக் கடைக்காரர் எவராவது அனுப்பி இருந்தாலுமே அந்த இளைஞர் முறையாக நடந்து கொண்டார். எந்த வித கோபமோ கூச்சமோ அசிங்கம் என நினைக்கவோ இல்லாமல் தமது கடமையை சரியாக செய்தார்...

ம்ஆமாம் இந்த உலகுக்கு நல்லதையே செய்ய தம்மை தத்தம் செய்து கொண்டிருக்கும் நபர்களை எல்லாம் ஏன் இந்த உலகு நம்பி பொறுப்பை கொடுக்காமல் இப்படி ஏமாற்றி ஏமாந்தபடியே போய்க் கொண்டிருக்கிறது?

எல்லாம் எனக்கென்ன நமக்கென்ன என போய்க் கொண்டே இருக்கிறார்கள்...இப்படி இருந்தால் எப்படி மலரும் நல்லாட்சி?

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Monday, March 19, 2018

கந்தன் கருணையும் கீற்றுக் கொட்டாயும் : கவிஞர் தணிகை

கந்தன் கருணையும் கீற்றுக் கொட்டாயும் : கவிஞர் தணிகை

Image result for kandan karunai movie


நடைப்பயிற்சியில் இருந்தேன். ஒரு டெம்போ முன்னால் கந்தன் கருணை என எழுதப்பட்டதைப் பார்த்தவுடன் எனது நினைவு பட்டுத் தெறித்தது 50 ஆண்டுகள் பின்னோக்கிப் பாய்ந்தது.

அப்போது எனக்கு 5 வயதாக இருக்கும். அனேகமாக ஒன்றாம் வகுப்பில்தான் இருந்திருப்பேன். ஆனால் அந்தப்படத்தை பார்த்ததை இன்னும் மறக்க முடியவில்லையே...இப்போது திரையரங்குகளில் சினிமாக் காட்சிகள் இரத்தானது சமூகத்தில் எந்தவித பாதிப்புமே ஏற்படுத்தவில்லையே...அந்தளவு சினிமா இன்று வீட்டுக்குள் வந்து ஒவ்வொரு வீட்டையுமே சினிமா தியேட்டராகவே மாறி உள்ளது...

எனது தாய் தெய்வானையம்மள் இறந்தே இப்போது 12 ஆம் ஆண்டில் இருக்கிறோம். 50 ஆண்டுக்கும் முன் அவருடைய வனவாசி அத்தை , எங்களுக்குப் பாட்டி...ஆனால் பெரியவர்கள் அப்பாவை அண்ணா என்று சொன்னால் நாங்களும் அண்ணா என்பதும் அவர்கள் அத்தை என்றால் நாங்களும் அத்தை என்பதும் அப்போதைய வழக்கம்....

அந்த அத்தைக்கு அதாவது அந்த பாட்டிக்கு கால் விரல் எல்லாம் வலைந்து நெளிந்து கோணலாக இருக்கும், அவர் வீட்டுக்கு வந்திருந்தார். அவர்களுடன் சுப்பி அத்தை  அதாவது தாரமங்களத்திலிருந்து வேறொரு பாட்டியும் இருந்ததாக நினைவு...

எல்லாரும் சேர்ந்து குடும்பத்துடன் கந்தன் கருணை கீற்றுக் கொட்டகைக்கு ஆமாம் அப்பொது அது டென்டுக் கொட்டாயோ தகரக் கொட்டாயோ கூட இல்லை. கொஞ்சம் நடக்கும் தூரம் தான். ஒரே மணல் பரப்பு. சினிமா அப்போதெல்லாம் ஒரு வித்தை, வாழ்விற்கு மாறான ஒரு விந்தை.அந்த நடிகர்கள் எல்லாம் தேவைதைகளாகவே தெரிந்தார்கள்...கமல் இன்று மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்று மக்களுள் மக்களாக ஒருவராக வரத் துணிந்தை நாம் பாராட்ட வேண்டும்.

ஆனால் அப்போது  அந்த நடிகர்கள் எல்லாம் விண்ணிலிருந்து வந்த தேவ தூதர்களாகவே இருக்க வேண்டும் என்பது போன்ற ஒரு பெருமை,கற்பனையும் கூட... தொழில் நுட்பம் பெரிதும் மலராத அந்தக் காலத்திலேயே ஏ.பி. நாகராஜன், கே.வி.மகாதேவன், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், சாவித்ரி, ஜெயலலிதா, கே.ஆர்.விஜயா, குழந்தை ஸ்ரீதேவி, சிவகுமார், நாகேஷ் கே.பி. சுந்தராம்பாள், மனோரமா, கே.பி.சுந்த்ராம்பள் எல்லாம் ஒரு கலக்கு கலக்கி இருப்பார்கள்...

 ஆனால் அதே சிவாஜியை கல்தூண் படப்பிடிப்புக்காக பொள்ளாச்சி சேத்துமடையில் ஒரு நண்பரை அவரது இரசிகர் என நான் அறிமுகப்படுத்தியபோது தலையெல்லாம் கர்வம் தொனிக்க அவர் ஏதும் பேசாது போனபோது அந்த மனிதர் மிகவும் சிறியவராக மாறிப்போனார் நெஞ்சில்...எவ்வளவு பெரிய கலைஞர் ஆனாலும் கர்வம் அவர்களை கீழே இறக்கி விட, எம்.ஜி.ஆர் போன்றோர் மக்களிடையே பழகி மேல் ஏறிப் போனார்

அதற்காக அந்த சிவாஜியை மறக்கவா முடியும், அது அதிக பட்சமான நடிப்பு என்றாலும் கூட அந்த வீரபாகு நடக்கும் நடையும், திருவிளையாடலில் அந்த சிவன், நடக்கும் நடையும் வேடிக்கை பார்க்கும் அளவிலான மிகையான நடிப்பிலேயே இருந்தன...மனிதரை ஒட்டி படங்களில் நடித்தே போலியாக பக்கத்தில் வாழ்ந்த எம்.ஜி.ஆர் கலைஞர் என்னும் நட்பு துரோகத்தில் இருந்து விடுபட்டு ஒரு மாநிலத்தில் இரட்டை இலை என்னும் இருவிரலைக் காட்டி நாடாண்ட முதல்வரானார். அவரின் வெள்ளைத்தொப்பியும், வலதுகை சட்டை மேல் கட்டிய வாட்ச்சும், கையில் எப்போதும் இருக்கும் கைக்குட்டையும் அவரது தலை சொட்டை என ஒன்றிரண்டு புகைப்படங்கள் காண்பித்தாலுமே மக்கள் மனதில் நின்றவை அந்த புஸு புஸுவென்ற தொப்பியும் வேட்டியும் சட்டையும் மன்னனாக ஆண்டு விட்டான் அந்த நாடோடி.Image result for kandan karunai movie

ஜெயலலிதா போன்றோர் அவரிலிருந்து உருவாகி வெளியேறி எப்படி தன்னையும், நாட்டையும் ஆட்டிப் படைத்து இறந்தது எப்போது எனக் கூடத் தெரியாமல் சேர்த்த சொத்துள்ளேயே புதைந்து போனார்...எல்லாமே ஒரு பாடம் மனித வாழ்வில் அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.

அதே வனவாசி அத்தை பள்ளிப்பளையத்தில் வாழ்ந்தபோது எங்களது குடும்ப த்திலிருந்து மூத்த பிள்ளை ஒருவரை அந்த ஊரில் இருந்த சேஷசாயி பேப்பர் மில் என இப்போதுமிருக்கும் ஆலையில் ஐ.டி.ஐ முடிந்து அரசு பயிற்சிக்கு அனுப்பியபோது மாதா மாதம் ஒரு தொகையையும் வாங்கிக் கொண்டு அந்தப் பிள்ளைக்கு அந்த அத்தை சரியாக உணவளிக்கவில்லை என்பதும் அதன் பின் அங்கு பணியில் இருந்தோர் எல்லாம் சேர்ந்து வேறொரு வீட்டுக்கு குடி பெயர்ந்து ஒரு முதியவளை சாப்பாடு செய்ய ஏற்பாடு செய்த கதையால் அந்த அத்தைப்பாட்டியின் முகம் உரிந்து போன கதையும் மறக்க முடியாமலே பின் தொடருகிறதே...அந்த மூத்தப் பிள்ளை ஒரு காலத்தில் நடக்கவும் முடியாமல் தாயிடம் தேடி வந்து தீவிரமான அம்மை நோயிலிருந்து தப்பிப் பிழைத்த கதையும் அதற்கு வீட்டில் எடுத்துக் கொண்ட அத்தனை முயற்சியும்...இளநீர், வேப்பிலை அரைக்கச் சொல்லிக் குளித்து, என்னன்னவோ தாய் அவரின் சாமியாரம்மாவின் அறிவுரைப்படி செய்த கதையை எல்லாம் தொடராக நினைவுக்கு வருவதை நிறுத்த முடிவதில்லையே...


Image result for kandan karunai movie


சினிமாவைச் சொல்வதாக சொல்லி விட்டு நாடு அரசியல் என்று போய்விட்டது எழுத்தின் நீரோட்டம்.

அந்த முருகனுக்கு வள்ளி தெய்வானை என்னும் இரண்டு மனைவிகள்...ஆனால் அவரின் அப்பாவுக்கு விநாயகர், முருகன் என்னும் இரண்டு பிள்ளைகள்...என்றாலும் முருகனுக்கும் விநாயகனுக்கும் எந்தப் பிள்ளையுமே பிறக்க வில்லை என்று எப்படி சொல்கிறார்கள் எனக் கேட்டுப் பழகும் வண்ணம் மாறிவிட்டாலும் ...அந்தக் காலத்தில் நமது தாய்மார் எல்லாம் எவ்வளவு பக்தியோடு அந்தப் படங்களை எல்லாம் பார்த்தார்கள்...பக்தி காட்டினார்கள்... சொல்லத்தான் வேண்டும்

இப்போது அம்மா என்ற பேரில் மேல் மருவத்தூர் பங்காரு அடிகளார் என்பார் மிகப்பெரிய அறக்கட்டளைக்கு சொந்தக்காரராக செவ்வரி ஆடைக் கூட்டம் அவர் பின் நிற்கிறது என்றாலும் அவரும் இன்ன பிற அனைவருமே ஒரு நாளைக்கு மருத்துவம் தேடி மருத்துவமனை சென்று சித்தி அடைந்த ஜெயேந்திரரைப் போல மறைவார்கள்தானே...உயிராய்ப் பிறந்த அனைவர்க்குமே அது உண்டுதானே...அதற்குள் ஏன் அனைவரும் ஏமாற்றிப் பிழைக்க வேண்டும்...

கீற்றுக் கொட்டாய் டிஜிட்டல் தியேட்டராய் மாறி இன்று சினிமாக்காட்சிகள் ரத்து என்றாலும் நாட்கள் எந்தவித பாதிப்பின்றியும் நகர்ந்து கொண்டேதான் இருக்கிறது

கிழமைகளின் பேரோடு காலம், நேரம் , நாட்கள் போய்க் கொண்டேதான் இருக்கிறது யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும், இருக்கும் வரை இருக்கும் இடத்தில் இருக்கும் இடத்தை நல்ல படியாக எல்லா உயிர்களும் வளமாக வாழ முயல வேண்டும் அதுதானே வாழ்க்கை...

தமிழ்க் கடவுள் கந்தனின் பேரோடுதாம் இங்கு தமிழ் நாட்டில் நிறைய பேர்கள்: சுப்ரமணி, தணிகை, செந்தில், வடிவேல், பழநி, கந்தசாமி, சண்முகம் இப்படி இன்னும் சொல்லச் சொல்ல இனிக்குதைய்யா முருகா...

மருத மலை மாமணியே முருகைய்யா ஒரே பாடலில் சோமு உச்சம் தொட்டு விடவில்லையா....பாவனைப் பேருணர்வு அவசியம் என்பார் விவேகாநந்தரும் கடவுள் நிலை அடைய...

மதுவும், உயிர்ப்பலியும், பொய்களும், வேட்கை, மற்றும் பிற உயிர்களைத் துன்புறுத்தி இன்பம் காண்பதும் எப்படி பக்தியாக இருக்க முடியும்....எதை எடுத்தாலும்  இந்து மதத்துக்கு எதிராக ....என்றொரு கோஷம் வேறு கேட்க  ஆரம்பித்து விட்டது அபாயகரமாக...

ஒரு ஊழி மழைக்காலத்தில் எனக்கு முதல் முடி எடுக்க பழநி நோக்கி அழைத்துச் செல்லும்போது நான் தான் முருகன் என்றும் நினைத்ததுண்டு...ஒரு ஜட்டி மட்டும் போட்டு, முடியை பின்னால் தொங்கவிட்டு கையில் அப்போதே ஒரு மோதிரம் போட்டு வாட்ச் எல்லாம் கட்டி வெறும் உடம்பில் எடுத்த முருகனைப் போன்ற போட்டோ இன்றும் என் வீட்டில் ஆனால் அது எடுக்கப்பட்ட ஆண்டு: 1967 அல்லது 1968 ஆக இருக்கலாம்
Image result for kandan karunai movie
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Saturday, March 17, 2018

பழைய முறையில் வாக்குப் பெட்டித் தேர்தலும் எண்ணிக்கையும் வைத்தால் பா.ஜ.க நிச்சயம் தோற்கும்: கவிஞர் தணிகை.

பழைய முறையில் வாக்குப் பெட்டித் தேர்தலும் எண்ணிக்கையும் வைத்தால் பா.ஜ.க நிச்சயம் தோற்கும்:  கவிஞர் தணிகை.
Related image


கடந்த உ.பி  இடைத்தேர்தலில் 3 பாராளுமன்றத் தொகுதிகளையும் இழந்திருக்கிறது பாரதிய ஜனதா நாடாளும் நாட்டின் மாபெரும் முதலாம் கட்சி.அது மட்டுமல்ல இவர்கள் தேர்தல் முடிவு பெறும் முன்னே முடிவை அறிந்து கொள்கிறார்கள் வாக்கு எந்திரப்பதிவில் அதுவும் ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டியது.

மேலும் மக்களின் பிரச்சனைகளை திசை திருப்ப செய்திகளை புதிதாக உருவாக்கி மக்களை ஊடகங்களை வேறுபக்கம் அலை பாய ஏமாற்றி அலைக்கழித்து அழைத்துச் சென்று விடுகிறார்கள். இதுவே இவர்களின் இவர்கள் கட்சியின் முக்கியமான உத்தி. இதற்கு மக்களும் மற்ற கட்சிகளும் ஏமாந்து விடக்கூடாது...

அமெரிக்கா என்னதான் முன்னணி நாடாக இருந்த போதும் இன்னும் வாக்குப் பெட்டித் தேர்தலையே வைத்திருக்கிறார்கள். அவர்கள் சொல்வதை அப்படியே வழி மொழியும் நாடாக விளங்கும் இந்தியா இந்த விஷயத்தில் தமது வசதிக்கேற்ப இந்த முறையில் செய்து தில்லு முல்லுகளை தேர்தல் கமிசனும் உடந்தையாகச் செய்ய தேர்தல் விழாவை அரங்கேற்றி வருகின்றன.

உதாரணமாக டி.டி.வி. தினகரனின் ஆர்.கே நகர் பழைய ஜெவின் தொகுதி தேர்தலையும் அதன் பணப் பரிமாற்றம் வெளிப்படையாக தெரிந்தபோதும் தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்தியதைச் சொல்லலாம்.

இந்நிலையில் தமிழிசையும், ஹெச் இராஜாவும் கமல்ஹாசன் ஆரம்பித்துள்ள மக்கள் மைய நீதி மய்யம் கட்சியில் உறுப்பினர் ஆக விண்ணப்பித்துள்ளனர்...உண்மையிலேயே நாடாளும் அந்த மாபெரும் நாட்டின் முதல் பெரும் தனிக்கட்சி தமிழகத்தில் ஒன்றுக்கும் உதவாது என கட்சி மாறாட்டம் செய்ய இப்போதே அட்வான்ஸாக இடம் தேடிக் கொள்ளப் பார்க்கின்றனரா அல்லது எவ்வளவு எண்ணிக்கையில் கமல்ஹாசனின் கட்சியில் உறுப்பினர் எண்ணிக்கை இருக்கிறது என்று நாசூக்காக அறிந்து கொள்ள இந்த யுக்தியைப் பயன் படுத்திக் கொண்டுள்ளனரா என்று அவர்களுக்கே வெளிச்சம்...வெளிச்சம் என சூரியனைப் பற்றிச் சொல்லி விட்டால் அதற்கும் கூட இந்து மத தர்ம நியாய நேர்மைப்படி சூரியன் எங்களது மதத்தின் ஒரு கடவுள், மஹாபாரதத்தில் குந்திக்கு தொடாமலே இரண்டு வரம் கொடுத்து குந்தி மணம் ஆகும் முன்பே கர்ணனை குழந்தையாகக் கொடுத்த அவதாரம் எனப் போராட ஆரம்பித்தாலும் ஆரம்பிப்பார்கள்...

அவர்களுக்கு தேவை எல்லாம் இப்போது ஒரு சூடு கிளப்பும் பிரச்சனை , கிளர்ச்சி, மக்களின் பலிகள், இரத்தத் தெறிப்புகள்..அது எங்கும் பரவ அவர்களின் கட்சிக்கான சில பதவிகள் வெற்றிகள் தேர்தலில் கூட்டு சேர்தல்கள்

ஆனால் தமிழக மக்களும் கேரள மக்களும் ஏன் ஆந்திர மக்களும் மே.வங்க மக்களும் அவ்வளவு சாதாரணமாக ஏமாற மாட்டார்கள் போல் இருக்கிறதே...

எல்லா இடங்களிலும் இந்தி, வடக்கிலிருந்து தெற்கே வரும் இந்தியர் இதெல்லாம் அவர்கள் அவர்களின் இலக்காகவே மாறி இருக்கிறது.  அவர்களை ஜெயிக்க வைத்தால் தமிழக மக்கள் மேலும் நிறைய நெருக்கடிகளை சந்திக்கலாம்... வாழ்வாதாரங்களை இழக்கலாம்...


அவர்களைத் தோற்கடிக்க ஏழைகள் சுயமாக சம்பாதித்த தம் பணத்தை வங்கியில் போட வைத்து இரவு பகல் பனி வெயில் பசி பட்டினியுடன் சாலைகளில் நிற்க வைத்த ஒரு செயலே போதும் மேலாக ஏழைகள் பணத்தை வங்கிக்கு வரவழைத்துவிட்டு பண்க்கார கனவான்களின் கடன்களை திரும்பப் பெற முடியாமல் வங்கிகளை வாழ வைத்துக் கொண்டிருக்கும் பணக்கார ஏமாற்று புத்தி ஒன்றே போதும் அவர்களைத் தோற்கடிக்க மேலும் போதாதற்கு ஜி.எஸ்.டி வரிகளும், ஏதோ இதன் செயல்பாட்டால் ஏழைகளை வாழவைக்கப் போவதாகவும் அந்த மறுமலர்ச்சியில் காய்கடைக்காரர்களும், சிறு தொழில் புரிவோரும், கூலித்தொழில் செய்வாரும் ஸ்வைப் மெஷின் வைத்துக் கொள்வார்கள் என்று எல்லாம் கூவி விட்டு ...பெரும் வேலையில்லாத் திண்டாட்டத்தில் நாட்டையே மூழ்கடித்து விவசாயத்தை அடியில் குழி தோண்டி புதைத்து, படித்த இளயவர்க்கு பணி ஏதும் இல்லாமல் செய்து குடி நீருக்கும் கூட ஒரு வழியும் இன்றி பன்னாட்டு குடி நீர்க்கம்பெனிகளுக்கு அனுமதித்து பாட்டில்களை அடைத்து நாட்டையே சூறையாடிக் கொண்டிருக்கும் அவர்களை பேச்சில் விஷத்தை விதைத்து நாட்டில் அனைவரும் அடி தடி கொலை கொள்ளையில் ஈடுபட விதைத்து வரும் அந்த அரசியல் கட்சிக்கு  நல்ல பாடம் புகட்ட வில்லை எனில் மக்கள் அனுபவிக்கப் போகும் துன்பம் கொஞ்சமாயிருக்காது...

எதிர்க்கட்சியாயிருக்கும்போது ஆதார் வேண்டாம் என்பார்கள், ஆளும் கட்சி ஆன போதும் வேண்டும் என்பார்கள், எதிர்க்கட்சியாய் இருக்கும்போது மேலை நாடுகளில் உள்ள இந்தியர்களின் கறுப்புப் பணத்தை பிடித்து இழுத்து வந்து பரிமாறுவோம் என்பார்கள்...ஆளும் கட்சியாகிவிட்டால் அங்கு ஒன்றும் இல்லை இருந்தாலும் அதெல்லாம் சொல்ல முடியாது இரகசியப் பிராமணத்துக்கு முரணானவை என்பார்கள்...வேறு எங்கும் சிலை இருக்கக் கூடாது படேலுக்கு மட்டும் உலகிலேயே பெரிய சிலை வைப்போம்  என்பார்கள்...இப்படியாக இவர்கள் இருப்பதற்கு மறுபடியும் இவர்களை ஆளும் கட்சியாகக் கூட அமர வைக்காமல் மக்கள் புறக்கணித்த கட்சியாக மாற்ற வருகிற பாராளுமன்றத் தேர்தலைப் பயன்படுத்த வேண்டும்.

ஆனால் இந்த இடைத் தேர்தலில் தோற்றதால் விழித்துக் கொண்டிருப்பார்கள் எப்படி எல்லாம் மக்களை திசை திருப்ப, எப்படி எல்லாம் அவர்கள் வாக்குகளை திரும்பப் பெற என்றெல்லாம் மாபெரும் கார்ப்ரேட் திட்டம் எல்லாம் இருக்கும் ஆனாலும் மக்கள் நினைத்தால் வீழ்த்தலாம்...மறந்து விடக்கூடாது நமது பணத்தை நாம் தொடக் கூட இவர்கள் நடு ராத்திரியில் எழுதிய பூஜ்யமாக எதிரிடையாகச் சென்ற வரலாற்றுப் பிழைகளை எல்லாம்... ஒரு போதும் மறந்து விடக்கூடாது...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.




ஆ.ப.ஜெ அப்துல் கலாம் நினைவு அறிவியல் பூங்கா: கவிஞர் தணிகை

ஆ.ப.ஜெ அப்துல் கலாம் நினைவு அறிவியல் பூங்கா: கவிஞர் தணிகை

Image result for malco school in mettur damImage result for malco school in mettur dam


மேட்டூர் மால்கோ (வேதாந்தாக் குழுமம்) வித்யாலயா மெட்ரிக் மேனிலைப்பள்ளியில் இன்று ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் நினைவு அறிவியல் பூங்காவை சந்திராயன் புகழ் அறிவியல் அறிஞர் டாக்டர். மயில்சாமி அண்ணாதுரை திறந்து வைத்தார்.

அப்துல் கலாம் சிலை மையத்தில் வீற்றிருக்க, சுற்றிலும் ஐன்ஸ்டீன், கலிலியோ,சர்.சி.வி. ராமன்,இயற்பியல் மேதை சந்திரசேகர், அலெக்ஸாண்டர் கிரகாம்பெல்,ஐசக் நியூட்டன், விக்ரம் சாராபாய், ஹோமி பாபா, மேடம் ஐரி க்யூரி, இப்படி 27 உலக அளவிலான அறிவியல் அறிஞர்களின் மார்பளவு சிலைகள் சுற்றிலும் வீற்றிருக்க உள்ளே சுமார் 20 அறிவியல் புதிர் அல்லது பரிசோதனை ஆய்வுக்குரிய  செயல் முறை விளக்கங்களுக்கான அறிவியல் வித்தைகள் செய்து வைக்கப்பட்டுள்ளன.

நெம்புகோல் தத்துவம், இராட்டினப் புள்ளிகள், எதிரொலி விளக்கும் தட்டுகள்,ஊசலாட்ட குண்டுகள், உலோகம், மரம் சூடு குளிர் ஏற்புகள், குவி ஆடி, இப்படி எளிமையாக புரியும்படியாக விளக்கும் அறிவியல் பூங்கா ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

இது மேட்டூருக்கு ஒரு புதிய முயற்சி. இதை செய்து முடித்த மால்கோ பள்ளி நிர்வாகம், முதல்வர், தாளாளராக தற்போது இருக்கும் தேவராஜுலு போன்றோரைப்  பாராட்டலாம்.

இதை பாங்காக காலத்தை வெல்லும் வகையில் யாவருக்கும் முக்கியமாக படித்து வரும் இளைய தலைமுறையினர்க்கும் இனி வரும் குழந்தைச் செல்வங்களுக்கும் உரிய முறையில் கொண்டு சேர்த்தி அவர்களுக்குள் ஒரு விதையை மயில் சாமி அண்ணாதுரை சொன்னது போல விதைக்கும் கடமை அந்த நிறுவனத்துக்கும், அந்தப் பள்ளிக்கும் உள்ளது.ஏன் எனில் அது நன்கு பாதுகாக்கப்பட்ட இடத்தில் கம்பெனி வளாகத்தில் பல அடுக்கு வேலிக்கப்பால்தாம் உள்ளது. எந்தக் கட்சி, அரசியல், அரசு அலுவலர் எல்லாம் இல்லாமல் இதன் திறப்பு விழாவுக்கு குருவுக்கு ஏற்ற சீடரான கலாமின் சீடர் மயில்சாமி அண்ணாதுரையை அழைத்து வந்து இதை செய்தது மிகவும் உயர்ந்த விசயம்.

தமது தமிழ் உரையில் மயில்சாமி அண்ணாதுரைக் குறிப்பிட்டது போல இவ்வளவு சிறந்த கட்டமைவில் எல்லாம் கலாமோ, நாங்களோ படிக்க வில்லை என்றாலும் எங்களின் கேள்வி கேட்டு விடை காண வேண்டுமான தேடல் எங்களை எல்லாம் இங்கு வந்து நின்று பேச வைத்துள்ளது.  அந்தளவு எங்கள் பள்ளிகளை விட மிக மேன்மையுடன் இந்த பள்ளியும் இதன் நிர்வாகமும் பெரு முயற்சி எடுத்து செயல்படுகிறது.

Related image



இதில் ஒரு பகுதி சி.பி.எஸ்.சி பகுதியும் இருப்பது என்பது குறிப்பிடத்தக்கது.

மயில்சாமி அண்ணாதுரை கவுண்ட் டவுன் என்றால் என்ன என விளக்கம் கொடுத்தார், மேலும் நிலவின் வேகம் நொடிக்கு ஒரு கிலோமீட்டர் என்றும் அத்துடன் ஒரு அடி கீழே இறங்கி இறங்கி பயணம் செய்கிறது என நியூட்டன் இரண்டு விதிகள் இதற்கு எப்படி பயன்படுத்தப்பட்டன என்று குறிப்பிட்டார். நாசா நிலவில் நீர் இல்லை என ஆர்ம்ஸ்ட்ராங்க் எடுத்து வந்த கல்லை வைத்து கணித்திருக்க அந்த ஆண்டில் பிறந்த மயில் சாமி அண்ணா துரை போன்ற நாங்கள் இஸ்ரோ மூலம் நிலவை எல்லாப் பக்கங்களிலும் ஆய்ந்து நிலவில் நீர் இருந்த அத்தாட்சியை நீர் இருக்கிறது என்றும் சொல்ல இது போன்ற கேள்வி கேட்கும் அறிவியல் அறிவுதான் பயன்பட்டது என்றார்.

இயல் இசை நாடகம் , சங்கத் தமிழ் மூன்றுக்கும் அப்பால் அறிவியல் தமிழ் என்ற ஒன்றை நாங்கள் அவாவுற்றோம் அதை அடைந்திருக்கிறோம் அது போல மாணவர்களாகிய உங்களில் இருந்து ஓரிருவராது வர வேண்டும் எனவேதான் இஸ்ரோவில் திங்கள் முதல் வெள்ளி வரை பணி புரிந்து விட்டு நாங்கள் சனி ஞாயிறு இந்த இரண்டு நாட்களில் உங்களைப் போல் உள்ளோரை வந்து சேர்கிறோம் என்றும் இதுதான் கலாம் எங்களுக்கு காட்டிய வழி என்று அற்புதமான அனுபத்தை விளக்கினார்.

Related image

புத்தரின் அனந்தர் என்னும் சீடர் தாம் தேனீ வாழ்க்கை நம்முடையது என்று சொன்னார் அதாவது நமக்கான வயிற்றுப்பாடு, குடும்பம், நாடு இவை 3 பிரிவுக்குமே வாழ்வதுதான் எமது சிறந்த வாழ்க்கை என்று குறிப்பிட்டார் புத்தர் சீடர் கதை மூலம்.

Related image

நிரந்தர முதல்வர் என்றார்கள் ஜெவை அவர் போன இடம் சென்னைக் கடற்கரையைக் கேட்டுப் பார்த்தால் தெரியும்..அது போல இங்கு ஹோல் டைம் அல்லது ஆல் டைம் டைரக்டர் என்று முருகேஷ்வர் என்ற மால்கோ நிர்வாகத்தின் இயக்குனர் ஒருவர் நிகழ்வுக்கு நிறுவனம் சார்பாக கலந்து கொண்டிருந்தார்....அவர் மிகவும் நல்லவர்தாம், நன்றாகவே பேசினார்.

ஆனால் இந்த வேதாந்தாக் குழுமம், ஸ்டெரிலைட் குரூப் போன்ற தனியார் முதலாளிகளின் நிறுவன ஆதிக்கம் அதன் பள்ளி...அந்தப் பள்ளியில் இது போன்ற அரிய நிகழ்வு...அதை முழுதாக கேட்க விடாமல் மாணவர்கள் கேள்வி கேட்க அதற்கு அவர் என்ன பதில் சொல்கிறார் எனக் கேட்க விடாத மாணவ்ர்களின் இறைச்சல் பேச்சு இவை யாவற்றையும் நீக்கிப் பார்த்தால் இந்த நிகழ்வு மேட்டூரின் ஒரு அரிய சரித்திரப் பதிவு பெறும் நிகழ்வே...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Friday, March 16, 2018

மனுசங்களாடா மிருகங்களே பரவாயில்லடா: கவிஞர் தணிகை

மனுசங்களாடா மிருகங்களே பரவாயில்லடா: கவிஞர் தணிகை
Image result for responsibility of travellers of tamil nadu and india


8 ஆம் ஆண்டு படித்து முடிக்கும் நிலையில் உள்ள முதுகலை மருத்துவர் ஒருவரும் நானும் அவரது காரில் கல்லூரியிலிருந்து சேலம் நோக்கி கல்லூரி முடிந்ததும் சென்று கொண்டிருந்தோம்.

எமது காரை ஒரு வெள்ளை நிறமுடைய கார் முந்திச் சென்றது...அது சேலம் கோவை நெடுஞ்சாலை...சென்ற வண்டியிலிருந்து ஒரு பச்சை பந்து போன்ற பொருள் தூக்கி வெளியே வீசி எறியப்பட்டது...அது சாலையில் பட்டு தெறித்து எகிறி பின்னால் வந்து கொண்டிருந்த எமது காரில் பட்டு சென்றது..

நண்பர் தெரிந்து கொண்டார்...எனக்குத்தான் அது என்னவென்று விளங்கவில்லை.அது குடித்து முடித்து வெளியே வீசி நெடுஞ்சாலையில் வீசி எறியப்பட்ட இளநீர் மட்டை. அனேகமாக அது மதுக்குடித்து விட்டு செல்லும் வாகன ஓட்டிகளால் அவர்களால் மட்டுமே இப்படி எல்லாம் செய்ய முடியும்...அது காரின் சக்கரத்தில் பட்டிருந்தால் காரே சாய்ந்து போக வேண்டிய நிலை நேர்ந்து எமக்கு விபத்தில் சேதம் ஏற்பட்டிருக்கலாம்.

ஆனால் நண்பர் மிகவும் கட்டுப்பாட்டுடன் காரை செலுத்தி திருப்பி சென்றதால் எந்த விபத்தும் நேராமல் தப்பித்தோம். மாறாக அந்த இளநீர் மட்டை வாகனத்தில் பட்டு தெறித்து சென்றது நல்ல வேளை சக்கரத்தில் படாமல்


நண்பர் வண்டி அருகே  சென்று அந்த மனிதப் பதர்களிடம் சென்று எச்சரிக்கை செய்யலாம் என எத்தனித்தார்....ஆனால் அந்தக் கார் வெகு விரைவாக சென்றது மேலும் கண்ணாடிகளை மேல் ஏற்றி விட்டபடி சென்று மறைந்தது...

இப்படித்தான் காடு நோக்கு போவோரும், சுற்றுலா நோக்கி செல்வோரும், தனிமை விரும்பி செல்வாரும் தமது இஷ்டப்படி எந்தவித சமுதாயப் பொறுப்பும் கடமையும் இன்றி தான் தோன்றித் தனமாக எவருக்கு என்ன நேர்ந்தால் என்ன, எந்த விபத்து எப்படி ஏற்பட்டு எவர் செத்தால் என்ன பிழைத்தால் என்ன என புகைத்து அணைக்காமல் போடுவதும், மதுக் குடித்த பாட்டில்களை வீசி எறிவதும், உடைத்து சில்லுகளாக விட்டுச் செல்வதும்,
உண்டுவிட்டு, குடித்து விட்டு எச்சங்களை, பாக்கெட்களை, பிளாஸ்டிக் பாக்கெட்களை ஆங்காங்கே போட்டுச் செல்வதுமாய்...

Related image

இருக்கும் உலகை பாழ் படுத்தி விடுகிற நீங்கள் எல்லாம் மனிதரா, மிருகமா...அவை கூட பரவாயில்லை,,,கண்ட இடங்களில் எச்சில் உமிழ்வதும், சிறு நீர் கழிப்பதும், மலம் கழிப்பதுமாய்... உலகையே ஒரு மலக்கிடங்காய், சிறுநீர்க்கழிப்பிடமாய், எச்சில் துப்பிய தொட்டிலாய் மாற்றி விடுகிறிர்களே எவ்வளவு நாளைக்கு இந்தியாவை இப்படியே செலுத்திக்க் கொண்டு இருக்கப் போகிறீர்கள்...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.


திருவரங்கம் ஆசியாவிலேயே  மிகப்பெரிய இராஜகோபுரத்தில் அடிப்பாகத்தில் விரிசலாம் அதுவும் 2010 லிருந்தாம் 300 ஆண்டுகள் பழமையான கோபுரத்தின் அடிப்புறத்தில்...எல்லாம் மனித சேவையே...

Thursday, March 15, 2018

எனது பயணத்தில் இயற்கை வழிகாட்டி: கவிஞர் தணிகை

எனது பயணத்தில் இயற்கை வழிகாட்டி: கவிஞர் தணிகை

Image result for railway conspiracy


கேரளத்து அரசு, விபத்தில் சிக்கிய மனிதர்களுக்கு தனியார் மருத்துவ மனையிலும் 48 மணி நேர மருத்துவ உதவிகள் கிடைக்க சட்டம் செய்திருக்க அரியானா அரசில் 12 வயதுக்குட்பட்ட பெண்களை வன்முறையில் கெடுக்கும் நபர்களுக்கு தூக்கு தண்டனை என்பதை சட்டமாக்கி இருக்கும்போது...அதைப் பாராட்டிக் கொண்டே...எனது அகமும் புறமுமான வாழ்வின் ஒரு சிறு பயணத்தை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். அதன் மூலம் இந்த நாளின் ஒரு பகுதியை பதித்துக் கொள்ளவும் விழைகிறேன்.

வழக்கம் போல மேட்டூர் ரயிலில் மாலை அமர்ந்திருந்தேன். மாலை 5. 40க்கு வண்டி புறப்பட்டது. கடைசியில் ஒரு இளைஞர் ஓடி வந்து ரயில் புறப்படும்போது ஏறினார். அவர் டிக்கட் கடைசியாக வாங்க கவுண்டருக்கு சென்றபோது மேட்டூர் ட்ரெயின் கேன்சல் என்றும் 7 மணிக்குத்தான் செல்லும் என ஹிந்தி மொழியில் பேசியதாகவும் எனக்கு அது புரியவில்லை ஆனாலும் இங்கு வந்து பார்த்தால் மேட்டூர் ரயில் புறப்பட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்தேன் ஏறிக் கொண்டேன் என்றார்.

எப்படியோ ஒரு வழியாக மேட்டூர் வரும் ரயிலை நிறுத்தி விடலாம் எனத் திட்டமிடுகிறார்களோ என்ற சந்தேகம் எல்லாப் பயணிகளிடமுமே இருக்கிறது.

வண்டி மேச்சேரி ரோடு அதாவது சிஸ்கால் எனப்படும் ஜே எஸ் டபள்யூ எனப்படும் ஜிந்தால் ஸ்டீல் ஒர்க்ஸ் கம்பெனிக்காகவே ஏற்படுத்தப்பட்டிருக்கும் ரயில் நிலையத்தில் நிறுத்தப் பட்டது. என்னுடன் பேசி விட்டு முன் சென்று அமர்வதாக சொல்லிச் சென்ற அசோகர் என்னுன்ம் மாணவனிடமிருந்து போன் . ரயில் மேட்டூர் போகாதாம், மேச்சேரி ரோட்டுடன் இப்படியே திருப்ப இருக்கிறார்களாம்.

சேலம் சந்திப்பில் அதை ஏன் சொல்லவில்லை, அதை ஏன் காட்சி பலகையில் காட்டாமல் மேட்டூர் செல்லும் எனப் போட்டார்கள்,,,வாருங்கள் அனைவரும் சேர்ந்து சென்று கேட்போம் எனப் புறப்பட்டேன். எவருமே வரவில்லை. அனைவருமே அதாவது முதியவர்கள், பெண்கள், சுமையுடன் இருப்போர், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள், இளைஞர்கள் என கலவையாக காட்சி அளித்த கதம்ப மனிதர்களில் இருந்து பெரும்பாலும் எவருமே ரயிலை விட்டு இறங்கவே இல்லை.

சிலருடன் சென்று வெண்ணிற ஆடை தரித்த டி.டி.ஆரிடம் விசாரித்தோம், ரயில் நிலையத்து நபர்கள்  முன்னே சென்ற கூட்ஸ் ரயிலின் எஞ்சின் பழுதாகி நின்று விட்டது. எனவே இந்த பயணிகள் ரயில் போகவே வழி இல்லை.

எனவே இந்த எஞ்சினைப் பிரித்து முன் இணைத்து மறுபடியும் சேலம் செல்ல இருக்கிறோம் பயணிகள் அனைவரிடமும் தெரிவிக்கச் சொல்லி சேலம் சந்திப்பிலிருந்து தகவல் வந்து விட்டது என்றார்கள். எனவே அங்கிருந்து ரயில் மேட்டூர் வர வாய்ப்பில்லை என்றனர்.

விவாதம் புரிய நேரமில்லை, அதில் பொருள் இருப்பதாகவும் தெரியவில்லை. எனவே கருப்பு சாமி காக்கி உடை தரித்த மின் பணியாளரும் நானும் சாலை வாகன கடக்கும் வாயிலில் சென்று நின்று பேருந்து ஏறலாம் என நடக்க ஆரம்பித்து விட்டோம். அங்கிருந்து  சுமார் 5 கி.மீ தூரம் மேச்சேரிக்கு அதன் பின் தான் பேருந்தை பிடித்து வீடு வர முடியும்.

கையில் இருத காசில் 2 கிலோ லோ சோடியம் சால்ட் வாங்கி விட்டது நினைவில் வந்தது...மேலும் கண் பார்வைக் குறைபாட்டை சரி செய்ய கண்ணாடியின் பிரேம் உடைந்ததால் அதை புதிதாக செய்து தர கடைக்காரர் கேட்ட முன் பணமும் கொடுக்கவில்லை. கண்ணாடி தயாராகி கைக்கு கிடைக்கும்போது முழுப்பணத்தையும் தருவதாக சொல்லி விட்டதும் உடன் நினைவிலாடியது

செல்பேசியில் இது போன்ற அவசரத் தேவைக்காக சில பத்து ரூபாய் நோட்டுகள் இருக்கும் நினைவு தைரியமும் தெம்பும் தர ...இரு சக்கர வாகனசாரிகளிடம் மேச்சேரி வரை வர கொண்டு விட முடியுமா எனக் கேட்க  ஆரம்பித்தேன்...கருப்பு சாமி நீங்கள் போங்க சார், நான் பின்னால் வருகிறேன் என என்னை வழி அனுப்பினார்...* (உடன் வந்தவரை தனியே கத்தரித்து விட்டு செல்கிறோமே அதுவே சரியில்லைதான்...என்றாலும் அதை செய்ய வேண்டியதாகவே இருக்கிறதே....)

ஒரு ஹெல்மெட் அணிந்த நபர், தேனிக்காரராம், பேர் பாண்டியன். தமிழ் நாடு மின் வாரியப் பணிக்காக இங்கு வந்து ஏரியூரில் இருக்கிறாராம். இந்தப் பக்கம் வருவது அவருக்கும் இது முதன் முறைதானாம்...தேனியருகே அவருக்கு குடும்பம்,,,மாதம் ஒரு முறைதான் செல்கிறாராம்...குரங்கணிக் காடி காட்டுத்தீ பரப்பிய செய்தி பரிமாறிக் கொண்டோம்...அவரும் நானும் முதல் சந்திப்பிலேயே நண்பர்களானோம்...
Image result for railway conspiracy

மேச்சேரி பேருந்து நிலையத்தில் எனது விசிட்டிங் கார்ட் கொடுத்தும், எனது புத்தகங்களில் ஒன்றான "முன்னோரின் முன் மொழிகளும், தணிகையின் மணி மொழிகளும்" பரிசளித்தேன் நன்றி பரிமாறிக் கொண்டேன். தொடர்பு எண்களை பரிமாறிக் கொண்டோம்...

இது போன்ற ஒரு நண்பரை சந்திக்கத்தான் இந்த சம்பவம் நடந்ததோ எனும்படியான மலைப்பில் நகர்புற பேருந்தில் ஏறி இடம் இருக்க அமர்ந்தேன். அங்கிருந்து 10 ரூபாய் எனது ஊருக்கு.

நினைவு ஓட ஆரம்பித்தது: ஏன் இந்த ரயில் நிர்வாகம் ரயிலை ஓமலூரிலேயே நிறுத்தி இந்த செய்தியை சொல்லி பயணிகளை அனுப்பி இருந்தால் அருகிலேயே பேருந்து பிடிக்க பயணிகளுக்கு வசதியாக இருந்திருக்குமே...

இன்று காலையில் உலக ஊனமுற்றோர் தினம் என்று சொல்லக் கூடாது எனவே உலக மாற்றுத் திறனாளிகள் தினம் என்று கல்லூரியில் தலைப்பிட்டு எழுதினோமே....இந்த ரயிலில் கண் குருட்டுடன், கால் இழந்து தினமும் வரும் பயணியின் நிலை என்ன, அந்தப் பெண்கள், சுமையுடன் பயணம் செல்ல வந்திருக்கும் அந்தப் பயணிகள் நிலை, ஏன் எனக்கு தோழமை காட்டும் அந்தக் கல்லூரி மாணவர்கள் ...அவர்கள் கூட ஏதாவது வழி செய்து கொள்வார்கள்..இள ரத்தம், காசில்லாதார் எல்லாம் எப்படி போய்ச் சேர்வார்கள்...

பேருந்து இடையில் நின்றால் பணத்தை திருப்பித் தருவது போல இந்த ரயில் நிலையத்தில் நாம் ஏன் அனைவரையும் அழைத்து கேட்டு வாங்கிக் கொடுக்க வில்லை...

இப்படியாக பேருந்து நெருங்கியது...கால் ஊனமுற்ற ஒரு இளைஞர் இரு கைககளுக்கும் அக்குளில் கட்டை வைத்து நடப்பவர் ஒருவர் ஏறினார்.அவர் எங்கள் ஊர். அவர் இறங்க அவரை முன்னால் இறங்கச் சொல்லி அவருக்கு உறுதுணையாகும் அந்த ஊன்று கோல்களை அவருக்கு எடுத்துக் கொடுத்து எனது ஆதங்கம் அத்தனையையும் முடித்தபடி எனது இன்றைய  பயணம் முடிந்தது....

ஒரு தலைவனாயிருந்தால் இந்த சூழலில் இப்படி வீடு வந்திருப்பானா, இதை எல்லாம் செய்து தானே ஆக வேண்டும்.,,எனவே தான் நாம் தலைமை ஏற்க இன்னும் தயாராகவில்லையோ...திருமணம், வீடு, குடும்பம், பிள்ளை இதெல்லாம் இல்லாமல் சிறைக்கும் போக தயாராக, இரவு வீடு வராமலே எங்கு வேண்டுமானாலும் தங்க நேரிடும் துணிச்சலும், அனைவருக்கும் நல்லது செய்து  நமக்கு ஒன்றுமே இல்லாமல் உடலுக்கு ஏற்படும் இன்னலைப் பொறுத்துக் கொண்டு உயிர்விடவும் தயாராக இருக்கும்போது நினைத்தை செய்வோம்....

அதற்கு முன் மறுபடியும் ரயில்வே நிர்வாகத்துக்கு மறுபடியும் ஒரு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும்...இப்படியே செய்து மேட்டூர் ரயிலை நிரந்தரமாக நிறுத்தி விடுவதாக உத்தேசமா எனக் கேட்டு...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Monday, March 12, 2018

நாடா இது இடுகாடா ?கேள்விப் படும் செய்தி எல்லாம் பொய்களாக மாறாதா? கவிஞர் தணிகை

 நாடா இது இடுகாடா ?கேள்விப் படும் செய்தி எல்லாம் பொய்களாக மாறாதா? கவிஞர் தணிகை

Image result for is it our  nation india and Tamil Nadu  or buriyal yard?


தேனி மாவட்டம் குரங்கணிக் காட்டில் 10 உயிர்கள் காட்டுத் தீக்கு இரையாயினர்,மேலும் பலர் கவலைக்கிடமாக மருத்துவ மனையில்...

மாணிக் சர்க்கார் போன்ற நல்ல மனிதர் தேர்தல் களத்தில் தோற்கடிக்கப் பட்டிருக்கிறார் வாக்களிக்கும் எந்திர முறையிலான வாக்குப் பதிவில்...

கமல்ஹாசன் ஈரோடு வருவது தள்ளிப் போகலாம் அவர் வேறு மாவட்டச் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார் சென்னை அருகே என ஒரு தனியார் கல்லூரி மாணவர்கள் நிகழ்ச்சி ரத்து என வீடுகளுக்கு வந்த பிறகு கமல் ஈரோடு மாவட்டத்தில் நல்ல வரவேற்புடன் சுற்றுப் பயணம் மேற்கொண்ட செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன.

வங்கிகள் எல்லாமே ஏழைப்பணத்தை ஏப்பம் விட்டு கோடிகளில் உறங்கும் கேடிகளிடை நட்புறவு பாராட்டி இந்திய வங்கிப் பயணத்தை காயடித்ததாக வரும் செய்திக்கு மாறாக எவர் எவ்வளவு சேமிப்பு, வரவு செலவு செய்கிறார்களோ அந்த அளவுக்கு அவர்களுக்கு கடனுதவி, மானியம், வங்கிச் சேவை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுத்த இந்த மானங்கெட்ட அரசால் முடியாதா?

விவசாயிகளின் போராட்ட முகத்தில் ஒரு ஆளும் கட்சி சார்ந்த பெண் அறைந்து விட்டு, அவர்கள் தம்மை தாக்கியதாக மருத்துவ மனையில் சென்று படுத்துக் கொண்ட பாசாங்கு எவ்வளவு பழைய ஈனத்தனம்?

அது ஒரு நெடுஞ்சாலையில் உள்ள பல்கலை வளாகம் சார்ந்த பகுதிகள் அடங்கிய பிரதேசம்....அதில் ஒரு மிகவும் நல்ல மருத்துவர், தம் உழைப்பின் மூலம் வாங்கி பயன்படுத்தி வந்த சுமார் ஒன்னரை இலட்ச ரூபாய்  மோட்டார் சைக்கிள் இன்று திருடு போய்விட்டதாம்...

அதை காவல் நிலையத்துக்கு சென்று புகார் அளிக்கலாம் என்றால் அனேகமாக மாவட்டத்தில் வருகை தந்திருக்கும் முதல்வரின் பாதுகாப்புக்காக டூட்டி போடப்பட்டு சென்றிருக்கலாம்....எனவே அவர் நிலையத்தில் இல்லாததால் புகார் ஏற்கப்படவில்லையாம்.

முதல் தகவல் அறிக்கை தரவே மாட்டார்களாம், இது போல ஒரு அனுபவத்தில் மாவட்டக் கண்காணிப்பாளர் வரை சென்றும் கூட அந்த அறிக்கையை பெறவே முடியவில்லையாம்...ஆனால் அது கிடைத்தால் மட்டுமே காப்புறுதி மூலம் ஓரளவாவது தொகை கிடைக்குமாம்...

ஆனால் எதுவுமே கிடைக்காமல் வெட்டிச்செலவிலேயே பல ஆயிரங்கள் போய்விடுகிறதே என..அமைதியாக விட்டு விடுவதுதான் பொருளை இழந்த நட்டப்பட்டவர்கள் செய்ய வேண்டிய செயலாம்...புகார் அளிப்பது கூட இந்த வாகனம் வேறெங்காவது பிடிபட்டு அது குற்றப் பின்னணிக்கு உள்ளாக்கப்படும்போது வாகனத்தின் உரிமையாளர் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டு விடக் கூடாது என்பதற்காகத்தானாம்...

இதே போல ஒரு கல்லூரி வளாகத்திலேயே திருடு போன ஒரு வாகனத்தை பிடிக்கவே முடியவில்லையாம் என்னதான் எவ்வளவுதான் முயன்று செலவு செய்தபோதும்

உள்ளூர் நண்பர் ஒருவர் சொல்கிறார், அடித்து செல்பேசியை பிடிங்கிப் போய்விட்டார்கள் என்ற புகாருக்கே விசாரித்த காவல் துணை ஆய்வாளர், உனக்கு அந்த நேரத்தில் அங்கே என்ன வேலை, அதுவும் செல்போனுடன் அங்கு எதற்கு சென்றாய்? என புகார் கொடுத்தவர்கள் பக்கமே எதிரிடையாக கேள்விகள் கேட்டு மடக்கி அனுப்பி விட்டாராம், மேலும் நானே இரவு ரவுண்ட்ஸ் போகும்போது ஒரு வழியிலும் வரும்போது வேறு வழியிலும் வர வேண்டியதிருக்கும்போது நீங்கள் எல்லாம் எதுக்கு இரவில் போகிறீர்? அவர்கள் என்னையே அடித்து விட்டு, அட, நம்ம எஸ்.ஐயா தெரியாமல் அடித்து விட்டோம் என்று சொல்லி விடுவார்கள்...அது போன்ற சம்பவங்கள் நடக்கக் கூடாது என்றுதான் மாற்று வழியில் நாங்களே செல்கிறோம் என்றாராம்

அதை விட ஒரு எஸ்.பி வீட்டில் குடியிருந்தவர் கார் தொலைந்து போனதாம். ஆனால் அது பற்றி எந்த தகவலுமே அதற்கு பிறகு கிடைக்கவில்லையாம்..

Related image
நிலை மிகவும் சொல்லத் தரமில்லாதிருக்கும் நிலையில், நமது முதல்வர் மரம் நடும் விழா, ஸ்கூட்டி வழங்கும் விழா என கலக்கு கலக்கி விட்டு தமது வீடு நெடுஞ்சாலை நகர் செல்லும் வரை சாலையெங்கும் பதாகை, விளம்பர பேனர், நிறைய காவலர்கள் பாதுகாப்பு,  வழி நெடுக வழிகாட்ட,...சாலையின் இருமருங்கும் கோலப்பொடி வட்டங்கள்...அவர் வீட்டுக்கு செல்லும் வழியெங்கும் தோரண வாயிலாக...மேலும் பாடல் சத்தம்....

அத்வானியை கண்டுக்காத பிரதமர்....மேடையில் அழைக்காமலே இருந்திருக்கலாமே....

இப்படிப்பட்ட நாட்டில் தாம் நாம் வாழ்கிறோம்...இதில்  வேறு...அச் , அச், என தேறாத சத்தத்தில் வெறும் குரைப்பாக நிறைய சத்தங்கள்..அட எனக்கு சளி இருமல்...அதையே நான் சொன்னேன்..

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.



Saturday, March 10, 2018

தமிழக பூமி ஒரு நாளும் கலவர பூமி ஆகாது: கவிஞர் தணிகை

https://thanigaihaiku.blogspot.in/2018/03/changed-as-philosophy.html?showComment=1520676548523#c141748162373984600


தமிழக பூமி ஒரு நாளும் கலவர பூமி ஆகாது: கவிஞர் தணிகை

Image result for tamil nadu never changed as riot land

 தம் கட்சியின் மூத்தவரான அத்வானியை மதிக்காத  பிரதமர் ஆளும் நாட்டில்
சூரியனே எங்களைக் கேட்டுத்தான் எழும் விழும் என ஆங்கிலேயர் சொன்னது போல... நாடெங்கும் ஒரே ஆட்சி என அந்தக் கட்சியின் தலைவர்கள் மனப்பால் குடிப்பதுடன் தமிழகத்தில் கலவரம் தலைவிரித்தாட நினைத்தபடி எல்லாம் வார்த்தையை தீயை அள்ளிக் கொட்டி வருகிறார்கள்...ஆனாலும் தமிழர்கள் எப்போதுமே அறிவாளிகள்...கேரளத்து மலையாளச் சகோதரர்கள் அளவுக்கு இல்லை எனிலும் அவரை அடுத்து இந்த நாட்டின் அறிவார்ந்த மனிதர் எங்குள்ளனர் என்றால் அது தமிழகம், மே.வங்கம் போன்ற மாநிலங்களில்தாம் என்று உறுதியாகச் சொல்லலாம்...

காந்தி, அம்பேத்கார், பெரியார், லெனின் இது போன்ற சிலைகள் அசுத்தப்படுத்தப்படுவதும் அல்லது அப்புறப்படுத்தப்படுவதும், அல்லது சிதைக்கபடுவதும்..நிகழ்ந்து வருகையில்...நீங்கள் எல்லாம் ஏன் அதுபற்றி ஒன்றும் எழுதாமல் இருக்கிறீர் என ஒரு 20 வயது பொறியியல் படிக்கும் மாணவர் என்னைக் கேட்க அதற்கு முன்பே இந்த தலைப்பு பற்றி சிந்தித்து வந்தேன் ஆனாலும் நேரம், காலம், உடல் அலுப்பு, பணிச் சோர்வு இப்படி எல்லாம் அதை எழுத விடாமல் இருக்கிறது எனக் குறிப்பிட்டேன். இளைஞர் சுமார் இரண்டு மணி நேரம்,,,மார்க்ஸீயம், லெனின், அம்பேத்கர்,காந்தி,காமராஜ்,இந்திரா,மொரார்ஜி தேசாய், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ஆர்  பெரியார், இப்படி பல தலைவர்கள் பற்றியும்  பேச்சு சென்றபடி இருக்க கேட்டபடி இருந்தார்...அவருக்காக இன்று  இந்தப் பதிவு என்று முழுவதும் சொல்ல முடியாவிட்டாலும்...

ஒரு கம்ப்யூனிஸ்ட் நண்பரும், தந்தை பெரியார் திராவிடர் கழகத் தொண்டரும் பெட்ரோல் குண்டை பாஜக அலுவலக போர்டின் மீது வீசி கைதாகி உள்ளனர்.

 இது போன்ற சில விரல் விட்டு எண்ணக் கூடிய விரும்பத் தகாத சம்பவங்கள் அன்றி வேறு ஏதும் நிகழ்ந்திடவில்லை. ராஜிவ் காந்தி மனித வெடிகுண்டால் துண்டாடப் பட்ட போது சென்னையில் ஏகப்பட்ட கொள்ளை நடந்ததாக சான்றுகள் உண்டு.

அப்போதும் கூட அது மாநிலமெங்கும் தலைவிரித்தாட வில்லை. அவ்வப்போது கர்நாடகா கர்நாடகமாய் காவிரி நீருக்காக இனவெறி பிடித்து ஆடி அங்கே செல்லும், அங்கே இருக்கும் தமிழ் மக்களை வன்முறை கொண்டு தாக்கியபோதும்..அவர்கள் விலங்குகளான போதும், நாங்கள் மனிதர்கள் தாம் என்று பண்பாட்டுடன் நடந்து கொள்கின்றனர்.

கேரளத்தில் மலப்புரம் என்ற மாவட்டத்தில் முஸ்லீம் சகோதரர்கள் குடி இருப்ப்களுக்கு நடுவே ஒரு இந்துக் கோவில் கட்ட பணம் இல்லாதபோது அனைத்து முஸ்லீம் மக்களும் இணைந்து பணியாற்றி கோவிலுக்கு இருபது இலட்சம் திரட்டி கொடுத்து கோவிலின் பணியில் இணைந்து தோள் கொடுத்தனர் என்ற ஒரு செய்தியை வாட்ஸ் அப் மூலம் நண்பர்கள் பகிர்ந்தனர்....அவர்களுக்கு நன்றி பாராட்டும்பொருட்டு ஒரு பொது விருந்துக்கு ஏற்பாடு செய்தனர் அந்த கோவில் சார்ந்த மக்கள் என்பதும் கேட்கவே மனதிற்கினிய செய்தியாகி இருந்தது.


அது மனிதப் பண்பாடு...இங்கு இந்த சிலைகளை எல்லாம் உடைத்தும், சிதைத்தும், அசிங்கப்படுத்தியும் செய்து என்ன செய்து விட முடியும்....அவை எல்லாம் தத்துவங்கள்...அவரவர்க்கு பிடித்தமான மனிதர்களை அவர்கள் நினைவில் நீங்காமல் வைத்திருக்க செய்த ஒரு சிறு உத்திதானே இந்த சிலைகள்....ஆனால் அதைக் களங்கப்படுத்துவார் எல்லாம் எந்த வகை மனிதர்களாக வருகிறார்கள்...என்பதை சொல்ல மொழியும் வார்த்தை செலவும் செய்யத் தேவையில்லைதான்...

இதை நல்ல முறையில் தாம் கமல் சொன்னார் உடனே...வைகோ எனது அரசியல் 54 ஆண்டு, கமல் யார் வாயை மூடச் சொல்ல...என வெகுண்டு வார்த்தைகளை பொது அரங்கில் கொட்டி தமது சிறுமையை மேலும் வெளிப்படுத்தி உள்ளார்....

இவர் தி.மு.கவை ஜெவுக்காக பதவி ஏறக்கூடாது என விஜய்காந்த், திருமா,போன்றோருடன் சேர்ந்து தடுத்து விட்டு, இப்போது ஜெவின் மரணத்துக்கும் பின் தி.மு.கவை ஸ்டாலினை தூக்கிப் பிடிக்கிறாராம்...இப்படி இவர் போன்ற என்ன ஏது என்ன பேசப்பட்டது< எதற்காக பேசப்பட்டது அதன் நோக்கம் என்ன எனத் தெரியாமலே இருக்கும் இது போன்றவரால்தாம் தமிழக அரசியல் இந்த கதிக்கு ஆளாக்கப்பட்டு முடங்கிப் போய் வடக்கத்தி நாட்டாமைகளில் தேய்ந்து கொண்டிருக்கிறது.

வடக்கே உள்ளார் எல்லாம் ஜெ போடலாம், அதற்காக தமிழகம் ஜெ போடுமா என்பது தெரியாமல்... மத்திய நாடாளுமன்றத் தேர்தலுடன் மாநிலத் தேர்தலும் நடத்தி விடலாமா என்று காய்கள் நகர்த்தப்படுவதாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்க>

Related image


தினகரனுக்கு குக்கர் சின்னம்,அம்மாவின் ஆட்சி  பெண்களுக்கு ஸ்கூட்டி, மோடியின் திட்ட வீடுகள், ஏழைகளுக்கு பட்டா என்று தமிழக அரசும், மத்திய அரசும் ஓட்டப்பந்தயத்தில் ஓடக் களம் இறங்கி வருகின்றன...

பட்ஜெட்டிலும் இதன் முகங்கள் பளிச்சிடுகின்றன.

காவிரி மேலாண்மைத் தீர்ப்பாயம் அமைப்பது பற்றிய செய்திகளை இருட்டடிப்பு செய்யவே இந்த செய்தி திசை திருப்பம் என கமல் மக்கள் நீதி மய்யம் கருதுவது சரியாகவே எனக்கும் தோன்றுகிறது..இது போல்தாம் ஜெவின் ஆட்சியில் சென்னை புயலின் போதும் மற்ற நேரங்களிலும் மக்களின் பிரச்சனைகளை திசை திருப்ப...பீப்.பாப் என்ற ஓசைகளும் எழுப்பபட்டன என்பதை எல்லாம் நாம் மறந்து விடக் கூடாது...

பெரியார் தமிழை விரும்பினாரா, வெறுத்தாரா என்பதை விட பிராமண ஆளுமையிலிருந்து தமிழர் விடுபட விழிப்புணர்வு ஏற்படுத்த உழைத்தாரா இல்லையா என்பவைதாம் நம் முன் உள்ள கேள்விகள்...அதற்கான பதிலை அனைவரும் அறிவர்...எனவே தமிழர்களும், மனிதர்களும் இது போன்ற சிறு சிறு வாய் வீச்சுக்கு எல்லாம் உணர்ச்சி வசப்படாதிருப்பதே...சரியான அறிவுடைமை...அதே சமயம்...இவர்களின் முகத்திரையை இவர்களே கிழித்துக் கொள்வதை கவனித்தபடி தேர்தல் களம் என்று வரும்போது  விவசாயத்திற்காக போராடி வரும் அய்யாக்கண்ணுவை அறைந்த கட்சியை தோற்கடித்தே ஆக வேண்டிய கட்டாயம் தமிழ் மண்ணுக்கு ஏற்பட்டிருக்கிறது..பாடம் அதிலாவது அவர்கள் கற்றுக் கொள்ளட்டும்..

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை


Monday, March 5, 2018

தமிழ்சினிமா முகம் மாறிப் போச்சு: கவிஞர் தணிகை

தமிழ்  சினிமா  முகம் மாறிப் போச்சு: கவிஞர் தணிகை
Image result for solo tamil movie


எம்.ஜி.ஆர், சிவாஜி, எஸ்.எஸ்.ஆர், முத்துராமன், ஜெமினி, சிவகுமார், இப்படி இடைக்காலத்தில் நடித்த நடிகர்களின் படங்களில் ஒரு ஃபார்முலா இருக்கும்....அதிலும் முக்கியமாக எம்.ஜி.ஆர். சிவாஜி படங்களில் 6 பாடல்கள், ஐந்தாறு சண்டைகள், கொஞ்சம் அழுகை, இப்படி சென்டிமென்டலாக சொல்லி ஏமாற்றி விடுவார்கள் இரசிகர்களை....

ஆனால் காதல் இல்லாமல் சினிமாவைப் பார்ப்பது அரிதாகவே இருக்கும் மேலும் பாலச்சந்தர் வசனங்களும், கருணாநிதி வசனங்களும் வகைக்கு வேறாக இருந்தாலும் அந்தக் காலத்தில் வசனங்கள் இருப்பது இரசனைக்குரியதாகவே இருக்கும்.

பாலு மகேந்திரா போன்ற இயக்குனர்கள் வந்தபோது சினிமா ஒரு பார்வை ஊடகம் அதற்கு கேட்பு ஒலி அளவைகள் அதிகமாகத் தேவையில்லை. அவை இல்லாமலேயே சொல்ல வேண்டியதைச் சொல்லி விட முடியும் என்ற இயக்கம் வந்தது.

ஒரு படி மேலே ஏறி பேசாமலேயே பேசும்படம் என்று கமல்ஹாசன் படம் செய்து காண்பித்தார். ஆனால் இப்படி தமிழில் பரீட்சார்த்த முறைகள் ஏற்படும் முன்னரே சார்லி சாப்ளின் அதை எல்லாம் செய்து காண்பித்து விட்டார்

சரி விடுங்கள் அதைப்பற்றி எல்லாம் சொல்ல இந்தப் பதிவை நான் இடவில்லை
சினிமா புதியதாக வெளியிட மாட்டோம் என்று முடிவெடுத்த பின் தியேட்டரில் எல்லாம் பழைய படங்கள்... அதிலும் எங்கள் ஊரில் மொட்ட சிவா கெட்ட சிவா 30 ரூபாய்க்கு என ஏலம் போட்டு விற்பது மாதிரி போஸ்டரில் ஒட்டி வைத்தாலும் யாரும் போகக் காணோம்....

இது போன்ற மாற்றங்களிடையே காலா, 2.0 படங்கள் வருகை இருக்கும்...சங்கர் எப்படியும் இந்தப் படத்தை பார்க்க 3 டி கிளாஸ் வைத்துப் பார்த்தே ஆக வேண்டும் தியேட்டருக்கு வர வேண்டும் வைத்து தீட்டிக் கொள்ளலாம் என்ற முயற்சியில் இருக்கிறார்....ஆனால் மை டியர் குட்டிச் சாத்தான் என்ற மலையாள, தமிழ் படம் இந்த வேலையை பன்னெடுங்காலத்துக்கும் முன்பே செய்துவிட்டது...

இப்போது காலா, 2.0 படங்களை ஓட வைக்கவோ, அல்லது உண்மையாகவோ எம்.ஜி.ஆர். சிலையை திறந்து வைத்து எம்.ஜி.ஆர் ஆட்சியை தரமுடியும் என ஸ்டைல் மன்னன் ரஜினிகாந்த் சொல்லி இருக்கிறார்.

எம்.ஜி.ஆர் ஆட்சி பொற்காலமாகத் தெரிகிறது இப்போது இருந்து பார்க்க...பச்சை குத்திய மடத்தனமும், அ.இ.அ.தி.மு.க எனப் பேர் மாற்றிய படலங்களும், திருச்சிக்கு தலைநகரை மாற்ற முனைந்து கை விட்ட  படலங்களும் அப்போதும் நிகழ்ந்தன...

அட அதை எல்லாம் விடுங்கள்...எம்.ஜி.ஆர். குடிக்காத, சிகரெட் பிடிக்காத நடிகராக, தம்மை சினிமாவிலும் சொந்த நிஜ வாழ்விலும் காட்டிக் கொண்டார் வாழ்ந்தார் அதை முதலில் ரஜினியால் செய்ய முடியுமா? அதன் பிறகு அந்த ஆட்சி தருவது பற்றி யோசிக்கலாம்...

அட அதை எல்லாம் விடுங்கள் இப்போது சோலோ, அத்தியாயம் 6 என்ற படங்களை பார்க்க நேர்ந்தது...ஒரே படம் என்கிறார்கள்...அதில் படத்துக்குள் படம் என பல கதைகளை பல படங்களை உள்ளடக்கித் தந்திருக்கிறார்கள்...இமை, இலை, இப்படி நிறைய குறும்படங்கள் வரிசையாக வந்தபடியே இருக்கின்றன...

சினிமாவுக்கான இரண்டு மணிக்கும் மேல் மூன்று மணி நேரம் பார்க்க வேண்டிய நிர்பந்தம் எல்லாம் போய்விட்டது...சொல்ல வந்ததை சொல்லி விட்டு அத்தோடு முடித்துக் கொள்கிறார்கள்...

நவரசமும் இருந்தால் தான் சினிமா என்ற தமிழ் சினிமா முகம் மாறிப்போச்சு... அதற்கு அருவி கூட ஒரு நல்ல எடுத்துக் காட்டுதான்...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Thursday, March 1, 2018

திரு மண வரவேற்பு வாழ்த்து.... கவிஞர் தணிகை

                                     திரு மண வரவேற்பு வாழ்த்து
                                                       02 03 2018

                  வேதநாராயணன்  B.E,M.B.A          ஐஸ்வர்யா M..C.A

                                     இடம்: சேலம்  வசந்தம் உணவகம்

Image result for flowers and birds wallpaper




                                       பத்ரி சார்  உங்கள் எளிமை
                                    எப்போதும் எனக்குப் பிடிக்கும்

                                     தொலை தூர இலக்கையும்
                                 நிதானமாக அணுகித் தொட்டு
                           வெற்றி பெறும் விவேகம் பிடிக்கும்

                              இன்று என்னை மறந்து விடாமல்
                                    உங்கள் குடும்ப விழாவுக்கு
                               அழைத்திருக்கும் பண்பு பிடிக்கும்
Image result for flowers and birds wallpaper

                                                    எனவே
                            தனிமையைப் பிடிக்கும் எனக்கும்
                           உங்கள் வேதநாராயணன் என்னும்
                               விக்னேஷ்குமார் ஐஸ்வர்யா
                                மண வரவேற்பு  விழாவில்

                 கலந்து வாழ்த்தும் வாய்ப்பு வந்திருக்கிறது. 
            விதை ஒன்னு போட்டா சுரை வேறா முளைக்கும்?
             மனிதக் கடலின் மறு அலையல்லவா வாரிசுகள்?

                    பத்ரி நாராயணன் வேத நாராயணன் என
                        விதைகள், விதைகளின் விதைகள்
                       மறுபடியும், மறுபடியும் பூக்கட்டும்
                    விதைக்கப்படட்டும் வழி வழியாய் வளர‌
                                   உலகுக்கு வழி காட்ட!

Image result for flowers and birds wallpaper



                           என்றும் வாழக் குன்றாய் உயர‌
                           குணக் குன்றுகளுக்கு என்றும்
                          எனது குடும்பத்தின் வாழ்த்துகள்....

                               மறுபடியும் பூக்கும் வரை
                                         கவிஞர் தணிகை
                                            குடும்பத்தார்.