Friday, June 21, 2019

நதி நீரை நாட்டின் நிலத்தை அரசு பொதுவுடமையாக்குவதும் நல்லதுதான்: கவிஞர் தணிகை

 நதி நீரை நாட்டின் நிலத்தை அரசு பொதுவுடமையாக்குவதும் நல்லதுதான்: கவிஞர் தணிகை

Image result for rajasthan yoga day

பிரதமர் வழிகாட்டும் 5 ஆம் உலக யோகாதினம் நல்லதுதான்.

தமிழக அமைச்சர் செங்கோட்டையன் சொல்வது போல வாரம் ஒரு நாள்  பள்ளிகளில் பாடம் யோகா பற்றி பயிற்றுவிப்பதும் நல்லதுதான்

நாட்டின்  நதிகளை அதன் நீரை அரசுடைமையாக்கி தனியார் ஆலைகளை அதிலிருந்து நீக்கி யாவர்க்கும் பொதுவுடமை ஆக்குவது அதை விட நல்லதுதான்.

நாட்டின் நிலத்தை தேசிய உடமை ஆக்குவதும் தனியார் அவற்றின் பால் உரிமை கொண்டாடுவதையும் நீக்கி அனைத்து மக்களுக்கும் உரிமையாக்கி தொழில் பல உருவாக்கி வேலைவாய்ப்பை உருவாக்குவதும் அதை விட நல்லதுதான்.

மனித நலம் யாவுமே உணவின் வளத்தில் இருக்கிறது.

உணவை காய்கறிகள் பழங்கள் போன்றவற்றிற்கு யோகா மாற்றச் சொல்லும் இயற்கை முறைக்கு போகச் சொல்லும் அடிப்படையில் இந்தியாவில் அனைவர்க்கும் உணவு உடை, உறையுளை உத்தரவாதமாக்கும் திட்டங்கள் யாவற்றிலும் நலலதுதான்.

பிரதமர், குடியரசுத் தலைவர், மந்திரி பிரதானிகளுக்கு 2100 கோடி செலவில் பாதுகாப்பு தனி விமானம் தயாரிப்பும் வசதியும் செய்து வரும் வேளையில்
யோகா தினம் நல்லதுதான்.

 ராஜஸ்தானில்  தார் பாலைவனத்தில்   நமது இராணுவ வீரர்கள் யோகா தினம் கொண்டாடுவதும்

 ஜக்கி வாசுதேவ் ஈஸா நிறுவனர் முப்படைகளுக்கும் யோகா தினத்தில் பயிற்சி அளித்ததும் செய்திகள் யாவும் வருவதும் நல்லதுதான்.

கல்வி வேலைவாய்ப்பு மருத்துவம் யாவும் எளிமையாக அனைவர்க்கும் கிடைக்க சமமாக கிடைக்க தேர்தல் கட்சி ஆட்சி முறைகள் ஒழுங்கமைய அரசு பாடுபடல் நல்லதுதான்.

இன்னும் இலஞ்சம் வாங்கிய தாசில்தாரும் ஜீப்டிரைவரும் கைது செய்யப்படும் செய்தியும் எல்லாம் ஆன் லைனில் சுலபம் என்று சொல்லியபடியே பழைய இலஞ்ச இலாவண்ய முறைகள் மாறாமல் மனிதரும் இந்திய ஆட்சியும் நிர்வாகமும் செயல்பட்டு வருவதும் நல்லது அல்லதுதான்...
Image result for rajasthan yoga day



மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment