முகநூலின் முக மாற்றம்: கவிஞர் தணிகை
முக நூலில் நேற்று உள் புகுந்தேன் வெளி வரவேத் தோன்றவில்லை. நீண்ட நாள் கழித்து பல மாதங்கள் கழித்து ஏன் சில ஆண்டுகள் கழித்து என்றே கூட சொல்லலாம். முக நூல் பக்கம் நான் சென்று. நேற்று ஒரு குறிப்பெடுக்கச் சென்றவன் அசந்து விட்டேன் வெளிவரவேத்தோன்றவில்லை அவ்வளவு மாற்றம்.
எல்லாம் விடீயோ பதிவுகளாக விட்டன. எழுதுவதும் படங்கள் போடுவதுமிலிருந்து முற்றிலும் முக நூல் விடுபட்டு விட்டது என்றாலும் ஒவ்வொரு விடீயோவும் மிகவும் பயனுள்ளதாகவே இருந்தன.
ஒன்று நானறிந்த என் வீட்டில் உள்ள எனக்கு கருத்து ஒத்துப்போக்கும் சோற்றுக் கற்றாழை பற்றிய பதிவு அதன் மருத்துவச் செய்தி முகம், சருமம், முடி போன்றவற்றுக்கு அது எப்படி மருந்தாகிறது என்பது பற்றி..
எனக்கு இப்போது நினைவு உள்ளதை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன்.
ஒரு பதிவில் ஒரு காவல் துறை ஆய்வாளர் ஆக்ரோஷமாக தலைக்கவசம் அணிந்தே ஆக வேண்டும் என சாலை மறியல் செய்து கற்பிக்கிறார். அவரின் பயணிகள் மீதான அக்கறையை அந்தப் படத்தைப் பார்த்தால் மட்டுமே தெரிந்து கொள்ள முடியும் . சொன்னால அதன் ஆழம் கிடைக்காது.
மற்றொரு பதிவில் அது எடுக்கப்பட்ட படம் என்று தெரிந்தாலுமே அது குடிக்க நீர் கிடைக்காத சிறுவன் ஒருவன் சாக்கடைத்தண்ணீரை எடுத்து குடிக்கும் நிலை. முதலில் ஒரு இருசக்கர வாகனத்தில் செல்லும் ஒருவர் அவன் மீது அவன் குடி நீர்க் கேட்டதற்காக முகத்தில் எச்சில் நீரை தாம் குடித்த நீரை உமிழ்ந்து செல்கிறார். மற்றொரு கடைக்காரரும் அந்த சிறுவனுக்கு உதவ நினைக்கும் ஒரு பத்திரிகையில் எழுதி பணி புரிந்து வரும் பெண்ணை அனுப்பி விட்டு ஒரு வேண்டாத பொருளை விட்டெறிந்து போடா என விரட்டுகிறார் அந்த சிறுவன் அந்தப் பக்கம் அடிக்கடி சென்று வரும் ஊமைதான் என்கிறார்.
தன்னிடம் இருந்த பணத்தை தனது சக ஊழியர் ஒருவருக்கு கொடுத்து அதை மறந்த பெண்ணோ ஏ.டி.எம்மில் சென்று பணம் எடுத்து வந்து குடிநீர் பாட்டிலுடன் வரும்போது சிறுவன் சாக்கடை நீரை எடுத்து பருகி நிற்கிறான் மற்ற ஒரு வீட்டில் ஒருவன் குடி நீரை வீணாக்கிக் கொண்டிருந்தவன் இதைப் பார்த்து விட்டு வீணாவதை தடுத்து காசுக்கு மற்றும் ஒரு கேன் வேண்டும் எனக் கேட்கிறான். குடி நீர் வியாபாரப் பொருளானதன் விளைவை சித்தரித்துள்ளார்கள். இனி குடி நீரும் காசுள்ளார்க்கே கிடைக்கும் ஒரு வியாபாரப் பொருளாகவே ஆகிவிட்டது.
அடுத்த விடியோ சமையல் செய்து சாப்பிட வேண்டாம், தேங்காய் பழம் போன்றவற்றை உண்டு வாழ்ந்தால் எல்லா நோயும் போய்விடும். என்பது ஆ.வீ அப்பா என்பார் அதில் தமது சகோதரர் அப்படி எழுதி இருந்த தபால் கார்டைப் படித்து அதன் வழி நின்றதால் தனக்கு தொழு நோய் குணமானது என்றும் அது முதல் தனது குடில் அந்த வரலாற்றை எழுதி வருகிறது என்கிறார்
அதை அடுத்து கண்கள் பார்வை இல்லா நிலையில் பெனோ ஜெபின் என்ற கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ் அகடமியின் பெண் தனது அனுபவத்தையும் இன்று யூனியன் சர்வீஸ் கமிஷன் போவோர்க்கும் அறிவுரை கூறியது...
உலகின் தலை சிறந்த திறம் சார்ந்த நிகழ்வுகளைக் கொண்டிருந்ட பொழுது போவதே தெரியாத காட்சிக் கோர்வை அதில் பல நிகழ்வுகள்... பிரமிப்பூட்டுமபடியாக மனிதரால் செய்ய முடியாதவை எல்லாம் பயிற்சியால் வரும் செய்ய முடியும் என்பதற்கேற்ப சீட்டுக் கட்டிலிருந்து தேர்வு செய்யப்பட்ட சீட்டை குவியலில் இருந்து கண்களை மூடிக்கொண்டு கத்தி வீசி எறிந்து அதை எதிரில் நின்றுள்ள மனிதர் மேல் தைக்க வைப்பது அவருக்கு ஊறு விளையாமல், பூட்டுகள் போடப்ப்ட்டு நீரில் மூழ்கியவர் சில நிமிடங்களில் வெளியே வருதல், சிறு பிள்ளைகளின் சாகச நிகழ்வு, விழியற்றவரிம் பாடல் மற்றும் பியானோ வாசிக்கும் வல்லமை இப்படி சொல்லிக் கொண்டே போகுமளவு நீண்டு கொண்டே இருக்கும் காட்சிகள்
எல்லாவற்றையும் விட மாதவிடாய்ப்பருவத்தில் பெண்களுக்குத் தேவையான பிறப்புறுப்பில் செருகி அந்த எச்சத்தை தேக்கிக் கொள்ளும் குப்பி இது புதிய கண்டுபிடிப்பாம், சேனிட்டரி நாப்கின் தொல்லையும் அதை அழிக்கும் வேலையும் இனி இல்லை. அதை எப்படி செருகி வைத்துக் கொள்வது அது எப்படி சிறப்பாக உதவுகிறது என்பது பற்றி மகப்பேறு மருத்துவர் அருணா முரளிதரன் விளக்குகிறார். அரிய காலத்த்துக்குத் தேவையான அதிலும் பெண்களுக்குத் தேவைப்படும் அதி முக்கியமான திரைக்காட்சி அதில் அந்த மருத்துவர் 4 மணி முதல் 6 மணி வரை அதை உள் வைத்து அதன் பின் அதை எப்படி வெளியில் எடுத்து சுத்தப்படுத்தி மறுபடியும் உபயோகிப்பது என அறிவியல் முறைப்படி அழகாக விளக்குகிறார் இது ஒன்று போதுமாம் சுமார் 7 ஆண்டுவரை உபயோகிக்கலாமாம் விலையோ குறைவு. சேனிட்டரி நாப்கின் செலவை சிக்கலை ஒப்பிட்டுப் பார்க்கும்போது இது பெண்களுக்கே கிடைத்த ஒரு வரப்பிரசாதம்.பின்னர் இதைப்பற்றி அறிந்து கொண்டேன் இது 1930களிலேயே அறிமுகமான ஒன்றுதானாம் எனக்கு இப்போதுதான் தெரிந்திருக்கிறது. தெளிவாக புரியும்படி மருத்துவர் விளக்கி இருந்தார்.
இப்படி எத்தனை எத்தனை செய்திகள், அறிவியல், நையாண்டி, கேலிக்கை, அரசியல் சார்ந்த பதிவுகள் ஒன்னும் சொல்லிக்க முடியலை போங்க...
ஜக்கி வேறு அவர் பங்குக்கு இறந்த உடலை எப்படி சில குருக்கள் உயிர் கொடுத்து எழுந்து நடக்க வைத்தார் என்றும், எப்படி ஒரு சிட்டுக்குருவி கொஞ்ச நேரம் சூரிய ரேகையில் தொடு சிகிச்சை மூலம் உயிர் பெற்று பறந்து சென்று மறுபடியும் விழுந்து இறக்கிறது என்றும் அது மனிதரிலும் சாத்தியமானது எப்படி என்றும் மனிதரின் இறுதி நிலை அதன் உடல் இயக்கம் நிற்காது பற்றியும் விரல் நகங்கள் முடி வளர்ச்சி, பாதத்தின் பெருவிரல் இரண்டையும் இணைத்துக் கட்டல், எரிப்பதை விட புதைப்பதன் தேவை எனவும் அவர்களின் ஈஷா அந்த அந்திமச் சடங்கை நல்ல முறையில் செய்ய ஆர்வமாக இருக்கிறது என்றும் அதைக் காரணம் காட்டி பணம் பறிக்கும் கும்பல் பற்றியும் பேசினார். தெரஸாவுக்கு அப்புறம், காசிக்கு அப்புறம் தெளிவாக இறுதிச் சடங்கு பற்றி அதில் சேவை பற்றி பேசுகிறார் இது போல ஒரு தமிழ் இளைஞர் கோவையில் அல்லது நான் மறந்துவிட்ட ஏதோ ஒரு ஊரில் அனாதைப் பிணங்கள் தேடிச் சென்று இறுதிச் சடங்கு செய்வதாகவும் நாம் கடந்து வந்த பாதையில் வந்த செய்தி இப்போது நினைவுக்கு வருகிறது.
நித்யானந்தா வேறு ரஞ்சிதாவுடன் தத்துவம் பேசினார், கும்ப மேளா சென்ற கதை சொன்னார், ரஞ்சிதா நித்யானந்தாவின் சிஷ்யை என்றார். காவல் துறை நெருக்கியதையும் பத்து இலட்சம் தரவில்லை எனில் மேலும் பல வேலைகள் வெளிவரும் என்றார்கள் என்று மிரட்டியதை எல்லாம் பதிவேற்றி இருந்தார்கள். காலையில் முதலில் எட்டு மணி முதல் தன்னை நாடி வருவார்க்கு காட்சி கொடுத்து ஆலோசனை சொல்வதாகவும் அது மணி மதியம் மூன்றானாலும் அவசியம் தொடரும் என்றும் நித்யானந்தா கூறினார்.comedy ...
மேலும் எட்டாம் வகுப்பே படித்த ஒரு மூதாட்டி தனது மகனிடம் கற்றுக் கொண்டதை வைத்து வெளி நாட்டுக் கம்பெனிகளில் பணி பிடித்து இங்கிருந்து பணி செய்து நிறைய பேருக்கு உதவி வருகிறார் என்றும்...
இப்படி ஒரு மூளைக்குள் திணிக்க முடியாத அளவு முக நூலின் பக்கங்கள் மாறி இருந்தன. என்னால் அதில் இருந்து வெளிப்படவே முடியவில்லை. உடலுக்கு ஊறு வந்து விடுமோ என்றும் எங்கள் ஊரில் த.நா.மி.வா சொல்லாத மின்வெட்டை அனுசரிப்பதாலும் அதிலிருந்து வெளிவந்தேன்.
இப்போதெல்லாம் பெண்களும் ஆண்களும் முகநூல் பெட்டியில் பேசிக்கொள்ளக் கூட அஞ்சுவதையும் கவனித்தேன். அப்படி எல்லாம் யாருமே பேசுவது இல்லை போலும். கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் முன்பு சுலபமாக பேசிக் கொண்டிருந்ததை பொள்ளாச்சி பாய்ஸ் போன்றோர் முடித்துக் கட்டி விட்டார்கள் போலும்...வாழ்க முக நூல் வளர்க அதன் பிணி.
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:
Post a Comment