Tuesday, October 31, 2017

ஆசன வாய் சுத்தம்: கவிஞர் தணிகை

ஆசன வாய் சுத்தம்: கவிஞர் தணிகை

Image result for indian method of toilets


நேற்று வாய் சுத்தம் பற்றி எழுதிய பதிவை பார்த்திருப்பீர்கள், படித்திருப்பீர்கள், பயன் அடைவீர் என நம்புகிறேன்.

இன்று ஆசன வாய் சுத்தம் பற்றிய பதிவும் அது போல மிகவும் பயனுடைய பதிவு. ஏன் எனில் ஆசன வாய் என்பது பத்மாசனம் போல சம்மணமிட்டு ஒரு தாமரை வடிவ பூ போல அமர்வது, பத்மம் என்றால் தாமரை. அப்போது நமது குதம் மலத்தை வெளியேற்றும் பகுதி சுருங்கி இருக்கும் ஆனால் சூடாகி விடும் அதிக நேரம் அமர்ந்த நிலையிலேயே இருப்பார்க்கு. அதன் சுருங்கி விரியும் தன்மை தானாக இயல்பாக நடப்பது. அது நன்றாக பணி செய்யும் வரை அந்த உறுப்புக்கு எந்த இடையூறும் ஏற்படவில்லை எனப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

அதில் ஏதாவது வலி ஏற்பட்டாலோ,புண், வெடிப்பு, சிறு சிராய்ப்பு போன்றவை ஏற்பட்டாலும் அது மரண அவஸ்தை விளைவிக்கும் நாம் மலம் கழிக்கும்போது. ஒவ்வொரு உயிருள்ள ஜீவனும் தாம் உண்ட உணவை செரித்து தமது உடலுக்கு தேவையான சக்தியை எடுத்த பிறகு எச்சத்தை அனுதினமும் வெளியேற்றியே தீரவேண்டும் அப்படி இல்லாவிட்டால் அது மிகபெரும் விஷத்தன்மையாக மாறி உடலுக்கு ஊறு விளைவிக்கும்.

அதுவும் நமது தமிழ் மருத்துவ முறைப்படி தினம் செய்ய வேண்டிய வேலையாக மலம் கழித்தலை இருமுறை செய்தால்தான் உடல் நல்ல நலமாக இருக்கும் என்றும் இருக்கிறது.

மேலை நாட்டார் அல்லது வெள்ளை மற்றும் இதர பிற இனங்களில் எல்லாம் மலம் கழித்தபிறகு தண்ணீர் விட்டு கழுவும் முறைகள் இல்லை. டிஷ்யூ பேப்பர் கலாச்சாரம் என்பார்களே அதன் படி துடைத்து எறியும் பழக்கமே இருக்கிறது. அவர்கள் உணவு முறை எப்படிப்பட்டதாக இருந்தாலும் அப்படிச் செய்வது தவறான சுகாதாரமின்மைக்கு வழிகூட்டுகிறது.

எனவே அந்தக் கற்காலத்தில் வாழ்வது போல சில மனிதர்கள் மலம் கழித்தபிறகு கற்களை, இலையை, எடுத்து துடைத்து எறியும் பழக்கம் எல்லாம் உடையவராய் இருந்தனர் ஆனால் அவை எல்லாம் மிகவும் கிருமிகளை உண்டாக்கி உடல் நோய்க்கு வழிகாட்டுவதாகவே இருந்தன.

 மூன்று கல் எடுத்து துடைத்தால் முழங்கால் அளவு தண்ணீரில் கால் கழுவியது போல என்று ஒரு பழமொழியே இருந்தது இருக்கிறது என்றால் அவற்றை எப்படிச் சொல்வது?

தண்ணீர் விட்டு மட்டுமல்ல குளியல் சோப் போட்டு அந்த ஆசன வாயைக் கழுவிக் கொள்ளுதலும், கைகளை சுத்தமாக கழுவிக் கொள்ளுதலுமே முறையான அணுகுமுறையாகும்.

மேலும் அது மட்டுமல்ல, ஆசன வாயுள் இடது கையின் நடு விரலை செலுத்தி மலக்குடலை சுத்தம் செய்து அங்கு ஏதாவது அசுத்தம் இருந்தால் அவற்றை எல்லாம் சுத்தமாக வழித்து எடுத்து விட்டு சோப் போட்டு கழுவிக் கொள்ள வேண்டும்.

அது மட்டுமல்ல, தமிழ் நாடி வைத்திய முறைப்படி பார்க்கப் போனால், உடலில் மலச்சிக்கலே இருக்கக் கூடாது. மலச் சிக்கல் இருந்தால் அது உடலுக்கு பெரும் கேடு விளைக்கும், எனவே அதற்கேற்ற மலச்சிக்கல் ஏற்படாத உணவைத் தேர்வு செய்து உண்ண வேண்டும். அதாவது காய்கறிகள்,.பழங்கள், கீரை வகைகள், இரசம், போன்றா மலமிளக்கி பொருட்களை உண்பார்க்கு இந்த மலச்சிக்கல் என்றுமே தோன்றாது

மகாத்மா காந்தி அந்தக் காலத்தில் அதை மலஜலம் கழிப்பது என்பார். மலமானது கெட்டியாக இல்லாமல் இளகி, நீர்மப் பொருளாக வெளியேறுவது சரியானது என்பார், அதற்காக வய்ற்றுப் போக்கு என்று சொல்லுமளவு நீர்மமாக இருக்கக் கூடாது என்பதும் கவனிக்கப்பட வேண்டியது.

அரை வயிறு உணவு,கால் வயிறு நீர், கால் வயிறு வெற்றிடம் அல்லது காற்று இருப்பார்க்கு எந்த வித செரிமான பிரச்சனைகளுமே ஏற்பட வழியில்லை.

நிறைய நீர் குடித்துப் பழக வேண்டியதவசியம்.\

அதாவது காலையில் கழிக்கும் மலம் துர்நாற்றம் எடுப்பதாக இருந்தாலே நீங்கள் உங்கள் முன் நாளில் உண்ட உணவு சரியில்லை என்று பொருள் கொள்ள வேண்டும். சாப்பிடும் உணவுக்கும் மலம் வெளியேறுதலுக்கும் ஒன்றுக்கொன்று நேர்விகிதம்.

சுஜாதா கூட சொல்லியிருப்பார் தமது 70 வயதில் காலையில் எழுந்ததும் மலம் கழித்தல் சுலபமாக இருந்தாலே அது ஒரு சுகமான அனுபவமாக இருக்கும் என்கிறார்.

எனவே நடுவிரல் ,கொண்டு உள்ளே கெட்டிப் பட்டிருந்தாலும், கைக்கு எட்டும் வரை அந்த உடலுள் சேர்ந்த கழிவை வெளியே எடுத்துவிட்டு குளியல் சோப் இட்டு கைகளையும் ஆசனவாயையும் கழுவதே சுகாதாரமானது.

எனவே நாம் உண்ணும் உணவை நன்கு தேர்வு செய்து உண்பதுடன் நாம் கழிக்கும் மலம் நல்ல எருவாக பயன்படுவதுடன் துர்நாற்றமில்லாமல் இருக்கும்படியாகவும் பார்த்துக் கொள்ள வேண்டியதவசியம். எனவேதான் அந்தக் காலத்தில் காடு கழனிகளில் எல்லாம் ஒரு குழி பறித்து அதில் கழித்து அதை நன்கு ஈ மொய்க்காதாவாறு மூடி வைப்பார்கள் மண்ணால்.

ஆனால் இப்போது இவை எல்லாம் நவயுகமாக அறிவியலாக மாறி குந்தி இருக்கும் முறை எல்லாம் மாறி தவறான முறையில் அமர்ந்திருப்பதே நாகரீகம் என்றுகருதப்பட்டு உடல் நலம் கெடுக்கப்படுகிறது. இந்திய முறையில் அமர்ந்து மலம் கழிக்கும் வழியே சிறந்தது என்றும் உலகு ஏற்றுக் கொண்டுள்ளது.



மிக முக்கியமானது மலம் கழிக்கும் குதம் மிகவும் மென்மையான சதையால் ஆனது நகம் எல்லாம் வளர்த்துவோர் அப்படி எல்லாம் குதத்தின் உள்ளே விரலை விட்டு சுத்தம் செய்யவும் கூடாது, முடியாது. ஏன் எனில் அந்த நகக் கீற்றுகள் கெடுதல் செய்து சதை எங்காவது கிழிபட்டால் அதுவே நன்மை செய்வதற்கு மாறாக பெரும் தீங்காக முடிய தோற்றுவாயாக அமைந்துவிடும்.

அது மட்டுமல்ல நகக் கண்களில் இந்த மலம் ஒட்டிக் கொண்டு துல்லியமாக சோப்பினால் கழுவ முடியாமல் போகுமானால் அதுவே வியாதி பரவ காரணமாகிவிடும் எனவே நகம் வளர்ப்பது எந்த வகையில் பார்த்தாலும் மோசமான தீமை விளைக்கும் பழக்கம். உடல் ஓம்பும் முறைக்கு ஒவ்வாதது.


மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Monday, October 30, 2017

வாய்ச் சுத்தம்: கவிஞர் தணிகை

வாய்ச் சுத்தம்: கவிஞர் தணிகை

Image result for oral hygiene

உண்மையாக பேசுவாரை வாய்ச் சுத்தம் உடையார் என்பார் பெரியார் ஆனால் இது அந்தப் பொருள் பட சொல்லப்படுவதல்ல மாறாக உடல் ஓம்பும் முறைகளின் கீழ் வருவதே. பயம் வேண்டாம். படியுங்கள்.

மிக முக்கியமான இந்த உடலோம்பும் முறைகள் பற்றி ஏற்கெனவே மறுபடியும் பூக்கும் வேர்ட்பிரஸ் டாட் காமில் எழுதி இருந்தேன் அது இப்போது பயனில் இல்லை என்பதால் இதை இங்கே மறுபடியும் சொல்ல முயல்கிறேன்.

வாய்ச் சுத்தமும், ஆசன வாய் சுத்தமும் சரியாக பராமரிக்கப்பட்டால் மனித உடலுக்கு ஏற்படும் வியாதிகளிலிருந்து பாதிக்குப் பாதி உங்களுக்கு விடுதலைதான். இன்று வாய்ச் சுத்தம் பற்றி மட்டும் பார்ப்போம்.

வாய்ச் சுத்தம்:
‍000000000000000

உண்மையில் சொல்லப் போனால் மனிதர்களுக்கு எல்லாவற்றையும் பெற்றோர்களும் ஆசிரியர்களும் கற்றுக் கொடுக்கிறார்கள். ஆனால் அதை சரிவர அவர்கள் தெரிந்து கற்றுக் கொடுக்கிறார்களா? அப்படி சொல்லிக் கொடுக்கப் பட்டாலும் அவற்றை கற்றுக் கொள்வார் சரி வர கற்றுக் கொள்கிறார்களா அதைக் கடைசி வரை கடைப்பிடிக்கிறார்களா என்பதெல்லாம் கேள்விக் குறிகள்.

ஒருவர் அப்படி கற்றுக் கொண்டார் எனில் அவர் , அவர் குடும்பம், அவர் நட்பு ஏன் அவரைத் தொடர்பு கொள்ளும் அனைவர்க்குமே அந்தக் கல்வி அறிவு சென்று சேர்ந்து விடும். அதைத்தான் நாம் கல்வி எனச் சொல்ல வேண்டும்

பொதுவாக அந்தக் காலத்தில் ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்னும் பழமொழி பல் சுத்தம் செய்யலுக்கும் வாழ்க்கைக்கு வேண்டியவற்றையும் சுட்டிக் காட்டும் ஆனால் அதெல்லாம் எந்த அளவு சரியானது என்று ஆய்வுக்குட்படுத்த வேண்டும்.

2 நிமிடத்திற்கு மேல் பல் துலக்கக் கூடாது. ஒரு பட்டாணி அளவுக்கு மேல் பற்பசையை பயன்படுத்தக் கூடாது. உறங்கி விழித்ததும் பல் துலக்குவதை விட உறங்கும் முன் பல் துலக்கி வாயை சுத்தம் செய்வது மிகவும் அத்தியாவசியமான பழக்கம் இதை வழக்கமாகக் கொள்வது ஆரம்பத்தில் கைக்கொள்வதும் கடினமே.

பற்பசையைத் தேர்ந்தெடுக்கும்போது பச்சை அடையாளக் குறியிட்ட அதாவது அந்த பற்பசையை வைத்திருக்கும் அந்த மேலுறை மேல் கறுப்பு, நீலம், சிவப்பு, மஞ்சள், பச்சை இப்படி வண்ணங்களை சிறு சதுரமாக அல்லது செவ்வகமாக போட்டிருப்பார்கள். நாம் பச்சை அடையாளம் உள்ளதையே தேர்வு செய்ய வேண்டும். மேலும் உபயோகப்படுத்தும் பிரஸ் மிகவும் மென்மையானதாக சாஃப்டாக இருக்க வேண்டும். அந்த பிரஸ் உருவம் உருக்குலைந்த  உடன் மறுபடியும் புதிய பிரஸ்ஸை வாங்கிக் கொள்ள வேண்டும்.

ஆக மேற்சொன்ன அளவு பேஸ்ட்டை எடுத்துக் கொண்டு எல்லாரும் செய்வது போல வாயில் நீளவாக்கில் ஒரு புறமிருந்து இன்னொரு புறத்துக்கு பிரஸ்ஸை செலுத்தி பற் தேய்ப்பது மிகவும் தவறு. அதனால் பல் எனாமல் போய் சீக்கிரம் பற் கூச்சம் ஏற்படும், ஈறு தேய்ந்து பற்கள் அசைவு கொடுக்க ஆரம்பிக்கும்.

Image result for oral hygiene

எனவே பற்கள் மேல் தாடையில் மேல் இருந்து கீழாகவும் கீழ் இருந்து மேல் நோக்கி கீழ் தாடையில் இருப்பதால் அதனிடையே இருக்கும் இண்டு இடுக்கு, சந்தில் சிக்கியுள்ள மாட்டியுள்ள உணவுத் துணுக்குகளை வெளியேற்றுவதுதான் பல் துலக்குவதன் மிக முக்கியமான நோக்கமே. எனவே பிரஸ்ஸை கீழ் பற்களுக்கு மேல் நோக்கியும், மேல் புற பற்களுக்கு கீழ் நோக்கியும் செலுத்த வேண்டும், கடைவாய்ப் பற்கள் மேலும் , உள் வாயுள் உள்ளிருந்து வெளி நோக்கியும் செலுத்தி சிக்கியவற்றை நீக்க முயலவேண்டும் மேல்  கடைவாய்ப் பற்களை மேல் நோக்கிய பிரஸ் , கீழ் கடைவாய்ப் பற்களை கீழ் நோக்கிய பிரஸ் செலுத்துவதும் இருக்க வேண்டும்.

அடுத்து நாக்கை பிரஸ்ஸின் பின் புறம் திருப்பு அதில் உள்ள கோடுகள் மூலம் நன்கு வழிக்க வேண்டும்.

Related image

அதன் பின் நன்றாக நீர் கொண்டு அலசி வாயைக் கொப்பளித்து விட்டு ஈறுகளை நன்றாக அழுத்திக் கொடுக்க வேண்டும். மேலண்ணம் தூய்மை செய்ய தமது வலது கை கட்டை விரலை வைத்துப் பாருங்கள் அது அதற்காகவே படைக்கப்பட்ட பொருத்தமுடையதாக தோன்றும், ஜாடிக்கேத்த மூடி என்பார்களே அது போல , எனவே வலது கை கட்டை விரல் கொண்டு தேய்த்து சுத்தம் செய்து கொள்ளலாம்.

இப்படி செய்வதுதான் முழுமையாக பல் துலக்கி வாயைச் சுத்தம் செய்வதன் வழிமுறை. மேலும் முடிந்தால் ஒரு சிறு தேக்கரண்டியில் நல்லெண்ணெய் எடுத்து வாயில் விட்டு நன்கு பத்திலிருந்து 20 நிமிடம் கொப்பளித்து வந்தால் அந்த நல்லெண்ணெய் பால் வண்ணமாக வெள்ளையாய் மாறுவதுடன், மேலும் கொப்பளிக்கும்போது எண்ணெயின் கடினத் தன்மை மாறி பச்சைத் தண்ணீராய் கனம் குறைந்திருக்கும் அப்போது வெளியே துப்பி விடலாம். இவ்வாறு செய்வதால் உடல் சூடு குறையும், ஏன் இரத்தக் கொதிப்பு போன்ற உடல் சமநிலை இல்லாதாருக்கும் கூட இரத்த அழுத்த நிலை சம நிலையடைய வாய்ப்புண்டு.
Image result for oral hygiene


மேலும் இந்த எண்ணெய் விட்டு நீரான திரவத்தை தொடர்ந்து ஒரு செடி மேல் துப்ப ஆரம்பித்தீர் என்றால் அந்த செடி சில நாளிலேயே கருகி உயிர் விட்டிருப்பதைக் காணலாம். அந்த திரவத்தில் அவ்வளவு விஷமிருக்கும்.

நல்லெண்ணெய் கொப்பளிக்காமல் மவுத் வாஸ் செய்வாரும் உண்டு. அதை எல்லாம் நாம் இங்கு குறை சொல்ல முனையவில்லை. அது அவரவர் விருப்பம்.

இந்த எண்ணெய்க் கொப்பளிப்பு காலை மட்டும் செய்தால் போதும், இரவுப் படுக்கைக்கு முன் செய்யவேண்டியதில்லை. பல் துலக்கினாலே போதுமானது.

இப்படி எல்லாம் செய்வதுதான் பல் துலக்கி வாய் சுத்தம் செய்வதன் முழு செயல்பாடு முழு பயன்பாட்டை உடல் சுகாதாரத்திற்கு கொடுக்கும் . அல்லாமல் முறை தவறி வாய் சுத்தமின்றி பல் துலக்கத் தெரியாமல் நாடெங்கும் நிறைய மனிதர்கள் இருக்கிறார்கள். நீங்கள் தெரிந்து கொண்டு பயன் அடைய, பிறர்க்கும் சொல்லி பயனடைய வைக்க வாழ்த்துகள்.

Image result for oral hygieneImage result for oral hygiene

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.

பி.கு: இந்தப் பதிவின் தொடர்ச்சியாக, அடுத்து ஆசன வாய்ச் சுத்தம், நிறைவான நடைப்பயிற்சி பற்றி இனி வரும் நாட்களின் பதிவு தொடர்ந்து இருக்கும். பயன் பெறுக.

நன்றி.
வணக்கம்.

Sunday, October 29, 2017

முடக்கு அறுத்தான் கீரை: கவிஞர் தணிகை

முடக்கு அறுத்தான் கீரை: கவிஞர் தணிகை

சித்த மருத்துவத்தில் வாதம் கபம் பித்தம் என மூன்று வகையான உடல் இருப்பதைப் பார்த்து அதற்கேற்ற மருந்து கொடுப்பார்கள் மருத்துவர்கள்.

வாதம்  என்பதில் இணைப்புகள், மூட்டுகள் , வாயுப் பிடிப்புகள் என கை கால்கள் மற்றும் உடல் உறுப்புகளை செயல் படாமல் வைத்து விடும் வியாதி வாதம் எனப்படுகிறது.

கபம் என்றாலே ஆஸ்த்மா, சளி,  குளிர் போன்றவற்றால் பாதிக்கப்படும் உடல் நிலை

பித்தம் என்பது பித்த நீர் சுரப்பு, உடல்கிறு கிறுப்பு வந்து தலை சுற்றல், எடுத்துக்காட்டாக நிலக்கடலை சாப்பிட்டால் சிலருக்கு பித்தம், வாந்தி, குமட்டல் போன்றவை இருக்கும் இதற்கு நிலக்கடலை சாப்பிடும்போதெல்லாம் பனை வெல்லம் சாப்பிட்டால் சரியாகிவிடும் என்பார்கள் ஏன் எனில் அதில் இருக்கும் சுண்ணாம்பு சத்து அதை ஈடுகட்டி விடும்

இப்போது இதைப் பற்றி எல்லாம் பேச இந்தப் பதிவில்லை. முடக்கு அறுத்தான் கீரை பார்த்திருக்கிறீர்களா?

நான் வேப்ப இலை, கற்பூரவல்லி ...ஓமவல்லி, கொய்யா இலை மற்ற மூலிகைகள், சப்போட்டா அரைத்துக் குடிப்பது, இப்படி உள்ளுக்கு சாப்பிடும் ஆவாரை, வில்வம், இனிசுலின் யாவற்றையுமே மென்று சாப்பிடும் ஆட்டுக் குட்டி இனத்தைப் போன்றவன்

விஷத்தையே கொடுங்கள் குடித்துப் பார்த்துவிட்டு ருசி எப்படி இருக்கிறது எனச் சொல்லி விடுகிறேன் என பெருமை பேசித் திரிபவன்.

அதே போல எதுவாக இருந்தாலும் கொஞ்சம் ருசி பார்த்து விடுவது என்பதில் குறியாக இருப்பவன். ஆனால் அதற்காக பீடி, சிகரெட், மது, கள், சாரயாயம் எல்லாம் என்று நினைத்துக் கொள்ளாதீர். உட்கொள்ளும் மருந்துப் பொருட்களைப் பற்றி மட்டுமே இங்கு பேசுகிறோம்.
Related image




அப்படிப்பட்ட எனக்கு இந்த முடக்கறுத்தான் கீரையை அரைத்து சட்டினியாக சாப்பிட்டாலும் கசப்பு அதிகமாக நாக்கை கெடுக்குமளவு இருக்கிறது என இன்று வணக்கி கீரையாக சோற்றில் வைத்து சேர்த்து சாப்பிட்டுப் பார்த்தேன் அப்போதும் அது மிகவும் கசப்பாகவே இருக்கிறது.


Related image

எனவேதான் அரிசி மாவு போன்றவற்றில் போட்டு அரைத்து தோசை, இட்லி போன்றவற்றில் போட்டு சாப்பிட்டுவிடுகிறார்களாம். இது மூட்டு வலிக்கு நல்ல  மருந்து. அதுவும் எங்கள் வீட்டில் முருங்கைக் கீரை ஒரு பக்கம் செய்தபடி இது வேறா என இலையை மட்டுமல்லாது இதன் கொடித்தண்டையும் சரியாக பிய்த்தெடுக்காமல் போட்டு செய்து விட்டார்கள்...ஆகா ஒரே கசப்பு போங்கள்...

ஆனால் கசப்புதான் நல்லதாமே...

Related image


இனிப்பு தான் கெட்டதாமே...அஸ்காவுக்கு விலை ஏற்றினால்தான் என்ன இரு மடங்கு ...பாரதிய ஜனதா அரசுக்கு , தமிழக அரசுக்கு மக்கள் மேல் எவ்வளவு நல்ல எண்ணம் தெரியுமா இல்லையெனில் இந்த ரேசன் அஸ்காவுக்கு 13.50 ரூவிலிருந்ததை 25க்கு ஏற்றியிருப்பார்களா? எல்லாம் மது சுலபமாக தேடாமல் உடனடியாக டாஸ்மாக் அரசுக் கடைகளில் கிடைக்க வேண்டும் என்பது போன்ற நல்ல எண்ணம்...யாருக்கும் சர்க்கரை வியாதி வந்து விடக்கூடாதல்லவா? அஸ்காவில் இருப்பது பெரும்பாலும் கரி மேலும் கெமிகல்தானே...உங்கள் உடல் நலம் கெட்டுவிடக்கூடாது என்றுதான் அதை அரசு செய்திருக்கிறது. எதை செய்தாலும் அவர்களை அரசை குறை சொல்லக்கூடாது அன்பர்களே. திட்ட வேண்டாம். சிகரெட் விலை ஏறட்டும், மது விலை எகிறட்டும், அது போல அஸ்காவின் விலையை ஏற்றி நாட்டுச் சர்க்கரை பனைவெல்லம், நாட்டு வெல்ல விலையை எல்லாம் குறைக்கட்டுமே...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Saturday, October 28, 2017

என்ன செய்யலாம் இவர்களை எல்லாம் கொன்று விடலாமா? கவிஞர் தணிகை

என்ன செய்யலாம் இவர்களை எல்லாம் கொன்று விடலாமா? கவிஞர் தணிகை
Related image



1. சாலையில் போய்கொண்டே எச்சில் துப்புவார்களை தினமும் பார்க்கிறேன் சேலம் 5 வழிச் சாலையில் ....

2. பேருந்தில் வாசல் படிக்கட்டில் நின்றபடியே நடத்துனர் சாலையில் உமிழ்ந்தபடியே இருக்க பேருந்து ஊர்கிறது

3. துப்புரவு பணியாளர் குப்பையைக் கூட்டி... பெண் தான்.... பெரும் சாக்கடைக்கு வைக்கப்பட்டுள்ள மழை நீர் புக வேண்டிய மூடப்பட்ட கான்க்ரீட் பெரும் துளையுள் தள்ளுகிறார் தினமுமே...

4. பெரும்பாலானவர் ஆங்காங்கே குப்பையை , காகிதங்களை, அதுவும் பிளாஸ்டிக் காகித நெகிழிகளை ஆங்காங்கே விசிறி எறிந்து மறந்து போய்க் கொண்டே இருக்கிறார் அதனால் என்ன விளைவுகள் என அறிய, புரிய, தெரிய நேரம் ஒதுக்காமல்...

5. விற்காத ஃப்ரூட்டி காலாவதியான ஒரு லிட்டர் பாட்டில்களை கேஸ் கேஸாக பெரும் அட்டைபெட்டி பேக்கிங்களுடன் சின்ன யானை வண்டியில் வந்து எமது புதுசாம்பள்ளி சுடுகாட்டில் கழட்டி ஊற்றிக் கொண்டே இருக்கிறார்கள்

6. அந்த சுடுகாடு எல்லாம் ஒரே குப்பைகளின் நகரமாக நரகாக‌  எங்கு எப்போது எதுவானாலும் பஞ்சாயத்து, ஊர், தனியார் இப்படி பாகுபாடின்றி எல்லாக் குப்பைகளுமே ஏற்கும் ஒரு குப்பை மாநகராக நாய்களுக்கு ஏற்ற இடமாக மாறி விடச் செய்துவிட்டார்கள்

7. அது அதிகாலை அழகிய விடியற்காலம் ஆறுமணிதான் கடந்து இருக்கும் அதற்குள் வாயில் துர்நாற்றத்துடன் பீடியை பிடி பிடி என்றும் சிகரெட்டை திகட்டாத அணயாமல் சுடராக புகையை சுவாசித்து அனைவரும் சந்திக்கும் பொது இடம் பற்றிய துளி சிந்தனையுமின்றி அவர்களும் கெட்டு அடுத்தவரையும் கெடுக்கிறார்களே...

8.தினமும் ஒரு நாள் காலை ஒருவர் படித்தவராக, பணி இருப்பாராக பார்வைக்குத் தெரிவார், ஒரு ஒயர்கூடையுடன் பால் வாங்க வாயில் பிரஸ் வைத்து பல் (விளக்க சரியாகத் தெரிந்து கொண்டாரா...ம்..கேட்கக் கூடாது) விளக்கியபடியே அந்த பேஸ்ட் எச்சிலை சாலையில் ஆங்காங்கே துப்பியபடியே வருவார்... துப்பியபடியே சென்று பாலும் வாங்குவார் மறுபடியும் துப்பிக் கொண்டே புறப்படுவார், வீட்டிலிருந்து பால் வாங்கி வரும் வரை அதற்குள் பல் துலக்கி விடும் திட்ட மிட்ட பிழைப்பாம்...

9. சாலை என்றும் பொது இடம் என்றும் பாராமல் கண்ட இடத்தில் எல்லாம் சிறு நீர் கழிக்கும், மலம் கழிக்கும் ஆண்களும் பெண்களும், குழந்தைகளை கழிக்க வைக்கும் பெற்றோரும்...

 10. அதே போல பொதுக்கழிப்பறைகளை உபயோகித்து விட்டு சுத்தம் செய்யாமல் சென்று பழகிடும் விஷக்கிருமிகள், பொது இலவசக் கழிப்பறைகள் என சொல்லிக் கொண்டு அரசு பராமரிப்பே செய்யாத நோய் உற்பத்திச் சாலைகள்...அதை நடத்தும் ஆட்சிமுறைகள், ஆட்சியாளர்கள், மனிதர்களாக இல்லாத மிருகங்கள், எவரையுமே மனிதராக எண்ணாமல் பதர்களாக எண்ணும் அரசியலும், ஆட்சியும், நிர்வாகமும்...அதன் வழி சுயநலப்பயனடைவோரும்...

ஸ்வச் பாரதத்திற்கு ஸ்மிர்தா இராணி கூட்டி போஸ் கொடுத்த போட்டோ ரம்ப நன்றாக வந்திருந்தது , ஆண்டுகள் பல ஆயிற்று நாடும் குப்பையும் அசுத்தமும் மிக நன்றாக வளர்ந்திருக்கிறது...


இப்படியேதான் போய்க் கொண்டிருக்கிறது நம் நாடு,,,அதற்காக இவர்களை எல்லாம் என்ன கொன்று விட முடியுமா?

எமது ரோகினி நல்ல மாவட்ட ஆட்சித் தலைவர்தாம்,முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்த காரியத்தில் இது ஒன்று தமது மாவட்டத்திற்கு ஒரு நல்லவரை ஆட்சி நிர்வாகம் ஏற்கச் செய்திருக்கிறார். ஆனால் அவர் மட்டுமென்ன எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு அது அரசு விழாவா கட்சி விழாவா எனத் தெரியாமலே பணி புரிந்துதான் ஆக வேண்டும்... மேலும் தீபாவளிக்கு டாஸ்மார்க் வசூல் ஏன் எதிர்பார்த்த இலக்கை எட்டாமல் சற்றும் எதிர்பாராமல் குடிகாரர் விழுவது போல் விழுந்தது என்றும் ஆராய வேண்டும், படு சுறு சுறுப்புதான்

ஆனால் ஹோட்டல்கள், மருத்துவமனைகள், கல்லூரிகள்  தனியார் நிறுவனங்கள் பேருந்து நிறுவனங்கள் எல்லாவற்றிலும் சென்று டெங்கு பரவ நீங்கள் எல்லாம் ஒத்துழைக்க வில்லை என பல இலட்சங்கள், பல ஆயிரங்கள் அபராதம் விதிக்க வேண்டும்... சகாயம் கோஆப் டெக்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருக்கும்போது அது இலாபம் ஈட்டியதாம்... ஆனால் அது போல 64 பொது தொழில் நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குகிறதாம் அரசின் சரியான ஆட்சியின் நிர்வாகக் கோளாறுகளால்..

எனவே டாஸ்மார்க் மூலமும், இது போன்ற அபராதங்கள் மூலமும் நிதி திரட்ட ஆரம்பித்து விட்டார்கள்...டெங்குவின் உண்மைச் சேதியை திசை திருப்ப...அரசுப் பணியாளர்கள் சரியாக தம் பணியைச் செய்யாததாலே எல்லா அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் எல்லாம் ஏகப்பட்ட சுமக்க முடியா அழுக்கை, சுமையை வைத்துக் கொண்டு தனியார் மேல் மட்டும் நடவடிக்கைகள்...

இன்னும் 5 வழிச்சாலையில் ரத்னா காம்ப்ளக்ஸ் அருகே உள்ள பெரு வாய்க்கால் போன்ற சாக்கடையே இன்னும் குப்பைகளால் மூடி மேல் செடிகள் எல்லாம் முளைக்க ஆரம்பித்து விட்டன. ஆனால் அரசின் எந்த செயல்பாட்டையும் காணோம். இத்தனைக்கும் நான் எனது சொந்தக் காசில் ஒரு கடிதம் எழுதினேன் மாவட்ட ஆட்சியருக்கு அது அவரால் படிக்கப்பட்டதா அவருக்கு சேர்ந்ததா என்றே தெரியவில்லை....ஆனால் அந்த பெரும் சாக்கடை அப்படியே இருக்கிறது. சேலத்தின் இதயப்பகுதியில்

எவருமே அலுவலர்கள் நல்லவராக வந்தாலும் இவர்கள் எல்லாம் சேர்ந்து அவர்களை எந்தரத்தனமாக அரசு என்ற பிரோக்கிரட் செட் அப்புக்குள் அழுத்தி மூழ்க அடித்து விடுவார்கள்...

ஆக அரசுப் பணியில் ஏகப்பட்ட ஊதியத்தில் பணி செய்துவரும் பணியாளர்களை, உடைய நிறுவனங்கள் எல்லாம் அப்படியே கிடக்க... தனியார் நிறுவனங்களில் மிகவும் சொற்ப ஊதியத்துக்கு பணி புரிவார் பணி செய்யும் இடங்களில் எல்லாம் இவர்கள் இப்படி அபராதம் விதிப்பது தனியார் நிறுவன முதலாளிகளை முறுக்கி விட்டு தமது நிறுவனத்தில் பணி புரியும் எளியவர்களை மேலும் மேலும் அடக்குமுறைக்கு உள்ளாவது இந்த ஆட்சியாளர்க்கு தெரியவில்லையா?

இவர்களால் ஒரு தொழிலாளிக்கு அவர் தனியாராக இருந்தாலும் வாழ்க்கை உத்தரவாதமாக குறைந்த பட்ச மாத ஊதியமாக 15,000 அல்லது 20,000 பெற்றுத் தர முடியுமா? பிறகு அவர் மட்டும் இந்த விலைவாசி உச்சத்தில் இருக்கும் காலக் கட்டத்தில் எந்த வாழ்வாதாரமும் இல்லாமல் எப்படி பிழைப்பர்>? இதெல்லாம் அரசுக்கும் நிர்வாகத்துக்கும் தெரியாதா?

மோடி மகராஜ் சொல்கிறார் இனி விலைவாசீ இறங்கும் என....கடவுளுக்கே இயற்கைக்கே வெளிச்சம்.

இவர்கள் டெங்குவின் இழப்பையும், சரக்கு மற்றும் சேவை வரியின் பாதிப்பையும் மெர்சல் போன்ற சினிமாபற்றி பேசி திசை திருப்புவதும், தனியார் நிறுவனங்களை பயமுறுத்தி அபராதம் விதிப்பதுமாக வேடிக்கை காட்டிக் கொண்டு வருகிறார்கள் ஊடகத்திற்கு பெரும் தீனிபோட்டு மக்களை எல்லாம் அடிப்படைப் பிரச்சனைகளிலிருந்து எல்லாம் திசை திருப்ப....
Image result for spitters , smokers, drinkers, money swindlers in tamil nadu and india

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.


Lakshmanan Marimuthu

8:01 AM (7 hours ago)
to Chinnu, bcc: me

Translate message
Turn off for: Tamil
மோடியின் சாமர்த்தியம்
As Received:
ஊரான் வூட்டு நெய்யே... ஏம் 
பொண்டாட்டி கையே...
--------------------------------------------
டாட்டாவும்,அம்பானியும் 10 வருடங்கள் முன்பு சென்டரல் வங்கியில் 45 ஆயிரம் கோடி கடன் பெற்றனர்.
எதற்காகக் கடன் பெற்றார்கள்?
அணுமின் நிலையம் தொடங்குவதற்கு. எதற்காக? மின் உற்பத்தி செய்வதற்காக.
ஆனால் கடந்த பத்து வருடங்களாக தொடங்கவில்லை.
பத்துவருடமாக தொடங்காதவர் இப்போது தொடங்குகிறோம் என இருவரும் கூறுகிறார்கள்.
ஆனால் அனல் மின் நிலையத்திற்கு தேவையான நிலக்கரி ஒரு டன் ரூபாய் 2500 க்கு தர வேண்டும் என கண்டிசன் போடுகிறார்கள்.
ஒரு டன் நிலக்கரி 25ஆயிரம் விலை இருக்கும்போது எப்படி 2500 க்கு கொடுப்பது என கோல் இந்திய சேர்மன் மறுத்துவிடுகிறார்.
உடனே பிரதமர் தலையிடுகிறார். பிரதமர் மோடி தலைமையில் டாட்டா அம்பானி ,கோல்இந்திய சேர்மன் பேச்சுவார்த்தை நடந்த்து.
உலகப் பணக்காரர்களுக்கு ஆதரவாக மோடி முடிவெடுத்தார். அதாவது இந்திய மக்கள் வரிப்பணத்தில் இயங்கும், இந்திய அரசாங்கத்திற்கு சொந்தமான கோல் இந்தியா நிறுவனம் ஒரு டன் நிலக்கிரியை 25ஆயிரத்திற்கு ஆஸ்திரேலியா,இந்தோனிசியா ஆகிய இரு நாடுகளிலிருந்து வாங்கி ரூபாய் 2500 க்கு டாட்டாவுக்கும், அம்பானிக்கும் கொடுப்பதாக.
மக்கள் வரிப்பணத்தை யாரிடமிருந்து பிடுங்கி ஆர்எஸ்எஸ்-பாஜக மோடி யாரிடம் கொடுக்கிறார் என்பதை இந்த நாட்டின் கோவணங்கட்டி விவசாயிகளும், நடுத்தர வர்க்க முழி பிதுங்கிகளும் தெரிந்து கொண்டீர்களா?
இத்தோடு கதை முடியவில்லை. இனிதான் இருக்கிறது உச்சகட்டம். அது என்னான்னு கேக்குறீங்களா? பொறுங்க... சொல்றேன்...
கோல் இந்தியா நிறுவனம் டாட்டாவுக்கும், அம்பானிக்கும் டன் ரூ.2500 விலையில் தருவதற்காக டன் ரூ.25000க்கு ஆஸ்திரேலியா, இந்தோனீசியா நாடுகளிலிருந்து வாங்குகிறதில்லையா?
அந்த ஆஸ்திரேலியா, இந்தோனீசியா ஆகிய இரு நாடுகளிலும் நிலக்கரியை வெட்டி எடுக்கிற கான்டிராக்ட் பணியை அம்பானியும்,டாட்டாவும் செய்கிறார்கள். இப்போது கூடுதலாக அதானியும் அதில் சேர்ந்துள்ளார்.
அதாகப்பட்டது, டாட்டா,அம்பானி ஆகிய இருவரும் வெட்டி எடுக்கிற நிலக்கரியையே, இருவரிடமிருந்துமே ஒரு டன் ரூபாய் 25ஆயிரத்திற்கு கோல் இந்தியா நிறுவனம் வாங்கி, அதே டாட்டா, அம்பானி முதலாளிகளுக்கு நிலக்கரியை ஒரு டன் ரூபாய் 2500-க்குக் கொடுக்கிறார்கள்.
ஊரான் வூட்டு நெய்யே, ஏம் பொண்டாட்டி கையேன்னு சொம்மாவா சொன்னாங்க?
100 வருசத்துல இந்தியப் பெருமுதலாளிகளோட சொத்து 26% உயர்ந்திருக்குன்னா, எம்மாம் வேர்வை சிந்த உழைச்சிருக்கானுங்க!
நீங்கள்ளாம் இந்து... காக்கி முழுடவுசர் போட்டுட்டு, கையில கத்தியோ சூலாயுதமோ தூக்கிக்கிட்டு, ராமா ராமான்னு கத்திக்கினே ஊர்வலத்துல பசுமாட்டப் பத்தி கத்திக்கினு போய்க்கிட்டே இருங்கப்பூ...
Image result for spitters , smokers, drinkers, money swindlers in tamil nadu and india


--
M.Lakshmanan.
00919080213233
00919344455566

Skype id:  lakshmanan17
Twitter: lakshmanan17


Wednesday, October 25, 2017

சில நாள் இப்படியும் இருக்கும்: கவிஞர் தணிகை

சில நாள் இப்படியும் இருக்கும்: கவிஞர் தணிகை


Related image

காலை 6. 20 பேருந்தில் ஏறியதும் காதுகளில் பஞ்சை செருகி வைத்துக் கொண்டு அமைதியாக இருந்தேன். பாட்டு சத்தம் கேட்டுக் கொண்டுதான் இருந்தது.

சிறிது நேரம் சென்றதும், பயிற்சி நடத்துனர் குரல், காசில்லேண்ணே , எதுக்கய்யா பஸ்ல ஏறுகிறாய்? எனப் பேசி அந்தப் பயணியிடம் காசில்லை என்ற நிலை அறிந்து சலித்துக் கொண்டிருந்தார், இந்தக் காலத்திலும் இப்படி இருப்பார்களா? நடத்துனரின் குரலும் சேர்ந்து கொண்டது , அந்த நபரை எப்படி சமாளிப்பது என இருவரும் முயன்று வந்தனர். காசில்லாமல் பேருந்து ஏறிய பேர்வழி டோல்கேட்டில் இறங்கிக் கொள்வதாக வேண்டுகோள் விடுத்தார், நிற்காது, நிற்காது என சேலத்தில் 5 ரோட்டில்தான் நிறுத்துவோம் என மிரட்டி வந்தார்கள்...அதன் பின் எங்கே அந்த நபர் இறங்கினாரோ தெரியவில்லை..

அடுத்து இன்னும் இருவர் அந்த கூட்ட மிகுந்த நிறைய பேர் நின்று கொண்டே பயணம் செய்யும் பேருந்தில்: மோதாதே, வேண்டுமென்றே யாரும் மோதுவார்களா? காரில் வா, பேருந்தில் வந்தால் அப்படித்தான். இப்படியாக மாறி , மாறி வழக்கம் போல ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டதை பெரிது படுத்தி பேசியபடி, சண்டையிட்டபடி வந்தார்கள்...

ஏன்யா, நான் தினமும் உங்க பேருந்தில் வருகிறேன், எனக்கு இந்த சலுகை இல்லையா என்று கேலி செய்ய முயன்றபடியே பேருந்தை விட்டு இறங்கினேன்.

கல்லூரி பேருந்திலும் அந்த ஓட்டுனர் மாணவ மாணவியரிடம் தமது மேன்மையைக் காண்பித்து எப்போதுமே எரிச்சல் வரும்படி மேலாண்மை செய்தபடியே வாகனம் செலுத்துவார்.

அடுத்து மாலை தொடர் வண்டிப் பயணம் வீடு திரும்பல், ஒரு கல்லூரி மாணவன் முளைச்சி 3 இலை விடாத கேஸ்தான், தொடர்ந்து பீடி குடித்து ரயில் பெட்டியையே நாறடித்து வந்தான். என்னுடையது கடைசிப் பெட்டி, கடைசி சீட் / இருக்கை...அவர்கள் மத்தியில் இருந்தனர். சென்று எச்சரித்து வந்தேன் என்றாலும் அவர்கள் சட்டை செய்வதாக இல்லை.என்ன வயசு?  படிக்கிற பசங்களுக்கு இது தப்புன்னு தெரியாதா? ஏம்பா இப்படி பீடி குடித்து உடலைக் கெடுத்து வருகிறீர்கள் என்று எனது கடமைப் பணியை நிராகரிக்காமல் செய்தேன். ஆனால் பயன் ஒன்றுமிருப்பதாக இல்லை. இன்றும் கூட அவர்கள் புகைத்து வந்ததே அதற்கு சான்று.


Related image


அன்று எனக்கு தலைவலி வேறு அவர்கள் விட்ட புகையை தாக்குப் பிடிக்கவே என்னால் முடியவில்லை. அங்கிருந்த மற்றொரு உயரமான பையனையும் அழைத்து ஏம்பா நீங்களாவது சொல்ல மாட்டீர்கள்? என்றேன் பயனின்றி...அடுத்து நின்று கொண்டிருக்கும் அந்த ரயில் பெட்டிகளை இளம் பையனும் பெண்ணும் வந்து தவறான செயல்ளுக்கு பயன்படுத்துவது ரயில் புறப்படும் தருவாயில் இறங்கி சென்று விடுவது, ரயில் கழிப்பறையை நிலையத்தில் சந்திப்பில் நின்று கொண்டிருக்கும்போதே கழிப்பறையை பயன்படுத்துவதற்கென்றே வந்து செல்வது, பொது இடங்களில் புகைப்பது... எல்லா இடங்களிலும் அங்கிங்கெனாதபடி எல்லா இடங்களிலும் குப்பை...

எப்படி எப்போது நாம் சரி செய்யப் போகிறோம்?\

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Sunday, October 22, 2017

மெர்சல் ஆயிட்டேன் மெர்சல் ஆயிட்டேன்: கவிஞர் தணிகை

மெர்சல் ஆயிட்டேன் மெர்சல் ஆயிட்டேன்: கவிஞர் தணிகை


Related image

130 கோடி செலவில் எடுக்கப் பட்ட படம் இன்று 4 ஆம் நாளில் 100கோடி வசூலைத் தாண்டி விட்டதாம், பாரதீய ஜனதாக் கட்சி நல்ல நாடெங்கும் விளம்பரம் கொடுத்து விட்டது, நமது மாநிலத் தலைவர்கள் ராஜாவும் தமிழிசையும் அந்த படத்துக்கு நல்ல பிரச்சார பீரங்கிகள் ஆனார்கள்

படத்தைப் பார்க்காமல் எழுதக் கூடாது என்றே இது வரை எழுதாமல் இருந்தேன். இன்று பார்த்து விட்டேன். விஜய் இரசிகர்களுக்கு ஒரு நல்ல விருந்து. அட்லீ குமார் 31 வயது இளைஞர் இன்று இந்தியாவின் சினிமா உச்சத்தை தொட்ட இயக்குனர் ஆகிவிட்டார்.

படம் பொதுவாக சொன்னால் நன்றாக இருக்கிறது. பார்க்கலாம். விஜய் தமது தளபதி, தலைவர் பாணியில் நடித்திருக்கிறார். கை கூப்பி தொழுவதில் எம்.ஜி.ஆர் ஸ்டைல் வேறு. சினிமாவை சினிமாவாப் பார்த்தா சினிமா மெர்சல் நல்லாதான் இருக்குங்க...

கடவுளுக்கும் கூட மசிரைத்தான் கொடுக்கிறோம், மருத்துவருக்குத்தான் உசிரையே கையில் கொடுக்கிறோம், டாக்டர் ஆக இருக்க வேண்டுமென்றால் நல்லவராக இருக்க வேண்டும், நல்ல டாக்டராக இல்லையென்றால் டாக்டர் தொழில் உனக்கு எதுக்கு என அகங்காரமாக கேள்வி கேட்டிருக்கிறார்கள் மக்கள் குரலாக.

உண்மைதான், இந்தியாவில் மருத்துவம் நகர் புறம் சார்ந்ததாகவே இருக்கிறது, மருத்துவமனையில் நிறைய ஊழல்கள் நிறைந்துள்ளன. எல்லாமே ஒரு குடைக்கீழ் இயங்கும் மருத்துவ மனைகள் இதன் சான்றுகள்.
காலம் காலமாக இருந்து வரும் உயிர் காக்கும் தொழில் வடிவங்கள் மாறி வியாபாரமாக , பிணந்தின்னும் சாத்திரமாக மாறிவிட்டது என்பதெல்லாம் உண்மைதான். உண்மையைச் சொன்னால் எப்போதுமே உடம்பெரிச்சல்தான் இருக்கும்

ஆளும் கட்சி நீங்க சினிமாவை சினிமாவாப் பார்க்காமல் ஏதோ உங்கள் குப்பையை கிளறிவிட்டதாக, குட்டையை தோண்டி விட்டதாக நினைத்ததன் விளைவு படக் கம்பெனிக்கு ஏகப் பட்ட இலாபமும், நாடு தழுவிய விளம்பரமும்

மருத்துவம் உயிர்காக்கும் சேவையா?, வியாபரத்திற்கா என்ற எப்போதும் கேட்கப்படும் கேள்விகள் தான் விஜய்யின் வெற்றி மாறன் என்றும் ஏ.ஜே சூரியா என்ற மருத்துவர் கேரக்டர்களுமாக.

கோவிலை எல்லாம் சேர்ந்து கட்டுவார்கள், கடைசியில் ஒரு பிராமணப் பூசாரி உள்ளே சென்று பூஜை செய்துகொண்டு கட்டியவர்களிடமே காசு வாங்கிக் கொண்டு அப்போதுதான் சாமியைக் காண்பிக்க முடியும், நிற்காதே ஓடு ஓடு எனத் துரத்துவது போல, இன்னும் கொஞ்ச நேரம் அங்கே நின்றுஇருந்தால் நிற்க விட்டு விட்டால் வாழ்வே மாறும், மாறிவிடும் என்ற போலிக் கற்பனையை ஏற்படுத்தி விடுவது போல‌

வெற்றி மாறன் கட்டிய மருத்துவமனையில் ஏ.ஜே.சூரியா மருத்துவர் ஆளுமை செய்து கட்டிய குடும்பத்தையே நிர்மூலம் செய்கிறார், அதர்கு கட்டிய குடும்பத்தின் வாரிசுகள் தலையெடுத்து சூரியாவை எப்படி நிர்மூலமாக செய்கிறார்கள் என்பதே கதை. ஆனால் அதற்குள் நேரம் காலம் போவது தெரியாமல் த்ரில்லிங்காக விறு விறுப்பு குன்றாமல் செமையாக சம்பவங்களைக் கோர்த்து விளையாடி இருக்கிறார்கள்.

வடிவேலு, சத்யராஜ்,காஜல் அஹர்வால்,சாமந்தா, நித்யாமேனன் எல்லாமே ஓகே டபுள் ஓகே. ஏ.ஜே சூரியா இப்போதெல்லாம் நல்ல வில்லனாக வந்து கதையை தூக்கி நிறுத்தி சமுதாயத்தில் உள்ள ஓட்டைகளை எல்லாம் தூசு தட்டுவது போல கேள்வி கேட்டு மற்றொரு சமுத்திரக் கனியாக மாறி வருகிறார் எதிர்மறை நாயகனாக நடித்த போதும்.

உண்மைதான், தானாக பிறக்க வேண்டிய சுகப்பிரசவங்களை எல்லாம் கத்திரிக்கோல் பிரசவங்களாக மாற்றி வெட்டி எடுப்பது அதிகமாகிவிட்டதா இல்லையா? கத்திரிக்கோலை வயிற்றில் வைத்து தைத்த கதை எல்லாம் நிகழ்ந்ததா இல்லையா?

புற நகர் பகுதிகளில் இன்னும் சரியான மருத்துவமனைகள் எல்லாம் இல்லாமல் நிறைய மரணங்கள் எல்லாம் இரவில் நடக்கிறதா இல்லையா? எனது தாயே அப்படி இறந்தவர்களுள் ஒருவர்தான் 8 கி.மீ தள்ளித்தான் சென்று மாரடைப்புக்கு நள்ளிரவில் வாகனமின்றி தவித்து அப்போது 108 வேறு இல்லை...மருத்துவ மனையில் சேர்த்தோம். உள்ளூரில் இருக்கும் ஒரு சில மருத்துவர்கள் நள்ளிரவில் சென்று கதவைத் தட்டினால், அழைப்பு மணியை அடித்தாலும் எழுந்து வராமலே எத்தனை மரணங்கள் நிகழ்ந்துள்ளன தெரியுமா?

இதில் சொல்வதெல்லாம் உண்மைதான். சில தனியார் பெரு மருத்துவமனைகளில் இறந்து போன பிணத்தை தர மறுத்து காசை இலட்சக்கணக்கில் பிடுங்குவது என்பது தெரிந்த கதைதானே? காலம் காலமாக மருத்துவம் செய்து வரும்போது நோய் குறைந்து மருத்துவமனைகள் குறைந்தல்லவா இருக்க வேண்டும்? எப்படி பேரரண்மனைகளாக இன்னும் மருத்துவ மனைகள் தோன்றிக் கொண்டே இருக்கின்றன புதிதாக புதிது புதிதாக...Image result for mersal

 படம் இந்தியன் பட நினைவைக் கொடுக்கிறது... குரு இயக்குனர் சங்கரின் சிஷ்யப் பிள்ளை அட்லீ என்பதாலோ?  ஆமாம் உண்மைதான் சரக்கு சேவை வரி என்று உண்ணும் உணவுக்கும் தகவல் தொடர்பு சாதனங்களுக்கும் மக்கள் பரவலாக பயன்படுத்தும் அனைத்துக்கும் வரி போட்ட அரசு இந்த பா.ஜ.க அரசுதான் இதில் என்ன சந்தேகம்?

நல்ல மருத்துவர்கள் கோபப் பட இதில் ஏதுமே சொல்லப்படவில்லை. மருத்துவர்கள் ஏன் கோபப் பட வேண்டும்? வருவாய் இழப்பு ஏற்படுமே என்றா> அரசுத் தொடர்புடைய அனைவருமே அரசு மருத்துவமனைகளையே நாடவேண்டும், அரசுப்பள்ளிகளில்மட்டுமே தம் பிள்ளைகளைப் படிக்க வைக்க வேணும் என்று வந்துவிட்டால் பள்ளிகளும், மருத்துவமனைகளின் நிலையும் நன்னிலையை எய்திவிடும் என்ற கருத்து சரியானதுதானே?

சிங்கப்பூர்  7 சதம் வரி வாங்கும் நாட்டில் மருத்துவம் இலவசமாக கொடுக்கப்படும் போது 28 சதம் ஜிஎஸ்டிவாங்கும் இந்தியாவில் ஏன் இலவச மருத்துவம் இல்லை என்ற ஒப்பீடு நெருடலானதுதான், ஏன் எனில் இந்தியா பெரு நாடு உபகண்டம், இங்கு வரிகட்டுவோரும் அதாவது நேரடியாக வருமானவரி கட்டுவோரும் குறைவுதான். சிங்கப்பூர் கணகெடுத்துக் கொண்டால் 277 சதுர மைல் பரப்பும் சுமார் 56 இலட்சம் மக்கள் தொகையுமே உள்ள நாடு அல்லது நமது மாநிலத்தில்  மிகச் சிறியதை விட சிறியது இதில் 18.5 சதவீதம் பேர் எந்த மதத்தையுமே சாராத அறிவுடையார் என்பதும் தமிழை ஆட்சி மொழியாகவும் கொண்டிருக்கும் நாடு என்பதிலும்  இப்படி இந்தியாவும் அதன் ஒப்பீடும் மாறுகிறது. வேண்டுமானால் சீனாவை ஒப்பிட்டிருக்கலாம். அங்கு மருத்துவம் கிராம அளவில் சென்று சேர மாவோ  கால்நடை செவிலியர் என பயிற்சி பெற்ற பேர் ஃபூட் மெடிகல் ஒர்க்கர்ஸ், என பாரா மெடிகல் ஒர்க்கர்ஸை அவ்வளவு பெரிய நாடெங்கும் பரவச் செய்தார்

டிமானிட்டேசன், அப்துல்கலாம், கமல் அமெரிக்க விமான தள சோதனை எல்லாமே நடந்த சம்பவங்களின் கோர்வையாக அனைவர்க்கும் தெரிந்த நிகழ்வுகளாக கதை செய்யப்பட்டிருப்பினும் எல்லாம் உண்மைதானே? மறுக்க முடியாதே?

கோவிலுக்கு பதிலாக மருத்துவமனைகளே அவசியம் என்று சொன்ன கருத்து சரியானது. அந்தக் காலத்தில் பள்ளி வேண்டும் என்று சொன்னது போல இந்தக் காலத்திற்கு மருத்துவமனையே அவசியமானது. அதில் எப்போதும் பணியில் நல்ல மருத்துவர் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டியதும் அரசின் கடமை.

மேலும் இலவச மருத்துவம் வேண்டும் என்ற கோஷத்தையும் முன் வைத்துள்ளது வரவேற்கத்தக்கதே.

இந்தப் படம் விஜய்யின் நடிகர் தாக்கம் மிஞ்சி இருந்த போதிலும் சமுதாயத்திற்கு மிக அவசியமான மருத்துவக் கருத்துகளை எடுத்து வெளிப்படையாக இரசிக்கத்தக்க முறையில் பேசி இருப்பதால் இதற்கு மறுபடியும் பூக்கும் தளம் நூற்றுக்கு 60 மதிப்பெண்களை தருகிறது. அனைவரும் பார்க்கலாம்.

இவர் சும்மா நடிக்கட்டும் நாங்களும் காசு வாங்காமல் பார்க்கிறோம் என்று மருத்துவர்கள் சொல்வதை விட அரசு எங்களுக்கு செலவில்லாமல் மருத்துவப் படிப்பை தகுதியுள்ளார்க்கு ஒரு சம அளவு கோலை நிர்ணயம் செய்து அளிக்கட்டும் நாங்களும் சேவை செய்யத் தயங்க மாட்டோம் என  மருத்துவர்களும் மருத்துவ சங்கமும் அதன் தலைவர்களும் சொன்னால் அது நல்லது சிறந்ததாகக் கருதப்படும்.

அது சினிமா, நடிப்பு, என்று விட்டு விடாமல் செய்தியாக ஊடகத்தில் தீயாக பரவுகிறது அது தம்மையும் பற்றிக் கொள்ளுமோ என நல்ல மருத்துவர்கள் பயப்படத் தேவையில்லை.

ஒரு பக்கம் மேஜிக், இன்னொரு பக்கம் மருத்துவம், மற்றொரு பக்கம் மக்கள் சேவை இன்னொரு பக்கம் வெற்றி மாறனின் நேர்மை வீரம் விஜய்க்கு பாரட்ட நல்லcharacter  தேர்வு ஆனால் ஏன் எதுக்கு எப்படி என்ற லாஜிக் எல்லாம் பார்க்கக் கூடாது , கேட்கக் கூடாது கதையை சினிமாவாக சுருக்கமாக பார்க்க புரிந்து கொள்ள வேண்டும்.
Related image

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.
Inline image 1

thanks to this mail

Lakshmanan Marimuthu

Oct 20 (2 days ago)
to Chinnu, bcc: me
 Sankara Narayanan <psn.1946@gmail.com>:

Oct 20 (2 days ago)



Saturday, October 21, 2017

சே குவாராவின் இறுதி நிமிடங்கள் : கிளையர் பூபையர், கார்டியன்

சேகுவாரா தன்னுடைய இறுதி நாள்களையும், நிமிடங்களையும் கழித்த இடங்களுக்கு கிளையர் பூபையர் என்பவர்  பயணித்து எழுதியுள்ள, கார்டியன் இதழில் வெளியான,  அனுபவக்கட்டுரையின் மொழிபெயர்ப்பு வடிவம் 
பத்திரிக்கை.காம் இதழில் (சே குவாராவின் 50 ஆவது நினைவு தினமான 9 அக்டோபர் 2017இல் வெளியானது).  
அதன் மேம்படுத்தப்படுத்தப்பட்ட வடிவத்தைப் பகிர்வதில் மகிழ்கிறேன், அவ்விதழுக்கு நன்றியுடன்.


தென் பொலிவியா. வெள்ளையடிக்கப்பட்ட வீடுகள், புனிதத்தலமாக மாறிய பள்ளி வகுப்பு. இந்த பள்ளி வகுப்பில்தான் உலகின் மிகப்புகழ் பெற்ற புரட்சிக்காரரான எர்னெஸ்டோ சே குவாரா 50 ஆண்டுகளுக்கு முன் இதே அக்டோபர் மாதத்தில் கொல்லப்பட்டார்.

அப்போது 39 வயதான, அந்த அர்ஜென்டைனா நாட்டுப் புரட்சிக்காரர் 9 அக்டோபர் 1967இல் கொல்லப்பட்ட அந்த அறை தற்போது படங்களாலும், கொடிகளாலும், செய்திகளாலும், கொடிகளாலும், வாகன உரிமங்களாலும் அஞ்சலி செலுத்த வருகின்ற பார்வையாளர்களால் நிரப்பப்பட்டுள்ளது.

உலகின் பல பகுதிகளிலிருந்து லா ஹிகேரா என்ற அந்த கிராமத்திற்கு வருவோர் அதனை ஒரு யாத்திரைத் தலமாகக் கருதுகிறார்கள். (லா ஹிகேரா அருங்காட்சியகம், 8.00 மணி முதல் நடுப்பகல், மதியம் 2.00 முதல் 6.00 வரை, கட்டணம் 1 பவுண்டு).

பொலிவியப் படையினரால் சேகுவாரா பிடிக்கப்பட்ட இடத்திற்கு ரோலி கலார்சா மெனீசீஸ் என்ற பெயருடைய வழிகாட்டியுடன் நான் கிளம்பினேன். ரோலியின் தந்தை ஒரு செவிலியர் ஆவார். அவர் சமைபடா என்னுமிடத்தில் சேகுவாராவின் ஆஸ்துமாவிற்காக மருந்து கிடைக்க உதவியவர்.

லா ஹிகேராவின் வடக்கே மூன்று கிமீ தொலைவில் தொடர்ந்து கியூபிராடா டெல் சூரா பள்ளத்தாக்குப் பகுதி உள்ளது. அங்கிருந்து பனை மரங்களும், வாழை மரங்களும் நிறைந்திருந்த பகுதியின் வழியாக சுமார் ஒரு கிமீ நடந்து சென்றோம். அப்பகுதிதான் சேயின் தோழர்கள் அக்காலகட்டத்தில் ஒளிந்திருந்த இடமாகும். அங்கே ஒரு நினைவிடமும், பொலிவியப்படைகளால் பிடிக்கப்பட்டபோது காயப்பட்டிருந்த சே ஒளிந்திருந்த அத்தி மரமும் அங்கே இருந்தன. அவ்விடத்தில் ரோலி சில கோகோ இலைகளை சிதறவிட்டார். “சே குவாராவிற்கு நன்றி கூறுவதற்காக அவருடைய ஆன்மாவிற்கு நான் இந்த கோகோ இலைகளை அர்ப்பணிக்கிறேன்,” என்றார் அவர்.  “சே தனித்த குணமுடையவர்; அவருடைய முயற்சி தோல்வியே, இருந்தபோதிலும் அவர் தன் முயற்சியை தொடர்ந்து மேற்கொண்டார். நான் இங்கிருக்கும்போது என் மனதில் ஒரு அநீதி உணர்வு கிளர்ந்தெழுகிறது. சே குவாராவின் தோழர்களை எதிர்த்து நின்றவர்கள் 500 பேர்.”
அப்பள்ளத்தாக்கினைக் கடந்து நாங்கள் உயர்ந்த இடத்தில் 17 வீடுகள் அமைந்திருந்த இடத்திற்குச் சென்றோம். சேகுவாரா பிடிக்கப்பட்டு அழைத்துச் செல்லப்பட்ட பாதையிலேயே இப்போது நாங்கள் சென்றோம்.  அங்குள்ள அனைத்துக் கட்டடங்களிலும சேகுவாராவின் முகங்கள் காணப்படுகின்றன. வண்ணமடிக்கப்பட்ட அவ்விடத்தில் 70 வயதான இர்மா ரோசடா என்ற பெண்மணியை அவருடைய எஸ்ட்ரெல்லா ஸ்டோரில் சந்தித்தேன். அமெரிக்க உளவுப்படையால் தேடப்பட்டு, அப்பள்ளியின் அறையில் ராணுவ வீரர்களின் பாதுகாப்பில் இருந்த சேகுவாராவிற்கு கடலை சூப்பினை எடுத்துச் செல்லும்படி அவர்களால் கேட்டுக்கொள்ளப்பட்டவர் இந்த இர்மா. மதியம் 1.10 மணியளவில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.  “அப்பப்பா. எனக்கு ஒரே நடுக்கமாக இருந்தது. செம்மறியாட்டினைப் போல பெரிய தாடி வைத்திருந்ததால் அவரை முழுதாகப் பார்க்க முடியவில்லை.”


1966இல் சேகுவாரா மாறுவேடத்தில் பொலிவியா வந்தபோது அங்கிருந்த ஒரு விடுதியில் அறை எண்.504இல் தங்கினார். தற்போதும்கூட விடுதியில் கேட்டால் அவர் தங்கியிருந்த அறையைக் காட்டுவார்கள். அனைவருடைய ஆதரவைப் பெறவும், போராளிகளைத் திரட்டவும் பொலிவியாவின் தென் பகுதயில் அவரும் அவருடைய கொரில்லாக்களும் அங்கு தங்கியிருந்து ஆயத்தம் ஆயினர்.

அவர் கொல்லப்பட்ட 50ஆம் ஆண்டினை ஒட்டி அதிகமான சேயின் ஆதரவாளர்கள் வருவாளர்கள் என்று அப்பகுதியிலுள்ள இரு விடுதிகள் எதிர்பார்க்கின்றன. அப்போது ககாட்சிகளும், விவாதங்களும் அங்கு நடத்தப்படவுள்ளன. அந்த இடங்களைப் பார்க்கச் செல்வோருக்கு உதவி செய்ய வழிகாட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சேகுவாராவின் உடல் லா ஹிகேராவிற்கு வடக்கே 60 கிமீ தொலைவில் உள்ள வல்லேகிராண்டேயிலுள்ள மருத்துவ மனைக்கு ஹெலிகாப்டர் வழியாக எடுத்துச்செல்லப்பட்டது. அது ஒரு சிறிய நகரம். அங்கு சேகுவாராவின் இறுதிப்பயணத் தடம் வடிவமைக்கப்பட்டுள்ளது.  அப்பகுதியில் சே தொடர்பான அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள மூன்று இடங்கள் பார்க்கப்பட வேண்டியனவாகும்.  அங்குள்ள மருத்துவ மனை இன்னும் செயல்பட்டுவருகிறது. ஒரு நாளைக்கு ஆறு முறை அப்பகுதிக்கு வழிகாட்டியோடு செல்லும் வகையில் வசதிகள் உள்ளன. 

அங்கிருந்த வழிகாட்டிகளில் ஒருவரான லியோ லினோ எங்களுடன் சேர்ந்துகொண்டார். வல்லேகிராண்டே மருத்துவ மனையின் பின் பகுதியில்தான் அடையாளம் காட்டப்படுவதற்காகவும் உலக ஊடகங்களின் பார்வைக்காகவும் சேகுவாராவின் உடல் வைக்கப்பட்டிருந்தது.  அங்குள்ள சுவரிலும், கழுவுமிடத்திலும் ஓவியங்கள் எழுதப்பட்டுள்ளன. உள்ளூர் மக்கள் அங்கு மெழுகுவர்த்தியினை ஏற்றி வைப்பதாகக் கூறுகின்றனர். தம் நோய் இவ்விடத்தில் குணமடைந்துவிடுவதாக மக்கள் நம்புகின்றனர். உயிரற்ற கண்கள் அந்த அறையில் உள்ளோரைக் கவனிப்பது போல இருக்கும் நிலை சே குவாரா உயிரோடு இருப்பதைப் போன்ற அதிசயத்தை அம்மக்களிடம் ஏற்படுத்துகிறது.  அதுவே மக்களின் இதுபோன்ற நம்பிக்கைக்குக் காரணமாகும். அந்தக் காட்சியைப் புகைப்படம் எடுத்தவர் பொலிவிய புகைப்பட நிபுணர் பிரெட்டி அல்போர்ட்டா என்பவராவார். 1968இல் கலை விமர்சகர் ஜான் பெர்கரின் இதனை இத்தாலிய நாட்டு ஓவியக்கலைஞரான ஆண்டிரியா மென்டேக்னா வரைந்த மரணித்த இயேசு என்ற ஓவியத்தோடு ஒப்பிடுகிறார்.

50 வருடங்களுக்கு முன் சேகுவாரா இறந்தபோதிலும் பொலிவியாவில் தற்போது அவருடைய பெயர் புனர்வாழ்வு பெற்றுள்ளது எனலாம். அனைவருமே சேகுவாராவை கதாநாயகராகப் பார்க்காவிட்டாலும்கூட வல்லேகிராண்டேயில் ஒவ்வொரு அக்டோபர் மாதத்திலும் அவரை நினைவுகூறும் வகையில் பல நிகழ்வுகள் நடத்தப்பெறுகின்றன. இவ்வருடமும் அவ்வாறு கொண்டாடப்படுகிறது.  ஒரு நிகழ்வில் கியூபாவின் முதல் துணை ஜனாதிபதியான மீகேல் டயஸ் கேனலும் கியூபாவில் தற்போது வாழும் சேகுவாராவின் நான்கு குழந்தைகளும் கலந்துகொள்வர்.  

எங்கள் பயணத்தில் மருத்துவமனையின் முன்னாள் பிணவறையாக இருந்த இடத்திற்கு நாங்கள் நுழையும்போது ரோலி, “இங்குதான் அவர்கள் சேகுவாராவின் கைகளைத் துண்டித்தனர்” என்று முணுமுணுத்தார். கைரேகை அச்சுக்காக ஒரு மருத்துவரால் சேகுவாராவின் கைகள் வெட்டப்பட்டன. பின்னர் அவை காணாமல் போய்விட்டன. பிணவறையிலிருந்து நாங்கள் திறந்த வெளிக்கு வந்தோம். சேகுவாராவின் பொலிவியா முகாமின்போது இறந்த தோழர்களுக்காக நடப்பட்டிருந்த நினைவுக் கற்களைக் கண்டோம். 1967இல் சேகுவாராவின் உடல் வைக்கப்பட்டிருந்த இடத்தில், விமான ஓடுதளத்தை அடுத்துள்ள இடத்தில் கடந்த அக்டோபரில், சேகுவாரா அருங்காட்சியம் என்ற புதிய அருங்காட்சியகம் திறக்கப்பட்டது.
அந்த அருங்காட்சியகத்தில் சேகுவாரா மற்றும் அவருடைய போராட்டங்களைப் பற்றிய புகைப்படங்கள், போஸ்டர்கள், ஓவியங்கள் காணப்படுகின்றன. அதற்கு அருகில் அவருடைய உடல் இருந்த இடத்தில் கட்டப்பட்ட அடையாளப்படுத்தப்படாத கல்லறையில், 1990கள் வரை தோண்டியெடுக்கப்படாத இடத்தில், நினைவுக்கட்டடம் எழுப்பப்பட்டுள்ளது.

ரோலியிடம் நான் சேகுவாராவின் பொலிவியச் சோதனை தோற்றதற்கான காரணத்தைக் கேட்டபோது அவர்  “உள்ளூர் மக்கள் கொரில்லாக்களுக்கு உணவு வகைகளை விற்கப் பயந்தனர்.  டாலரைக் கண்டும் அவர்கள் பயந்தனர். தவிரவும் கொரில்லா எதிர்ப்பு உத்திகளுக்காக பொலிவிய படை வீரர்களுக்குப் பயிற்சி தருவதற்காக அமெரிக்கா ரால்ப் ஷெல்ட்டன் என்ற மேஜரை அனுப்பிவைத்திருந்தது.
அவர்கள் பயிற்சி பெற்ற இரண்டு வாரத்திற்குப் பின்னர் சேகுவாரா பிடிக்கப்பட்டார். பொலிவியத் தலைவர்களிடமிருந்து சேகுவாராவைக் கொல்வதற்கான ஆணை வந்தது. அவரைக் கொல்வதற்கான குறியீடு “அப்பாவிற்கு காலை வணக்கம் சொல்” என்பதாகும்.
50 வருடங்களுக்கு முன் சே இறந்தாலும் அவருடைய இருப்பை தக்க வைத்துள்ளார் ஈவா மொரேல்ஸ். சேயின் பெயர் பொலிவியாவில் எங்கும் உச்சரிக்கப்படுகிறது. : “சே, எப்போதையும்விட இப்போது மிகவும் நெருக்கமாக இருப்பதாகவே உணரப்படுகிறார்.”

இக்கட்டுரையின் மூலக் கட்டுரை :
Revoilutionary road : On the trail of Che Guevara's last days in Bolivia, Claire Boobbyer, Guardian   

சே குவாராவின் 50ஆவது நினைவு தினத்தன்று தி இந்து இதழில் வெளியான என் மொழிபெயர்ப்புக் கட்டுரை :
என்றென்றும் நாயகன் சே குவாரா, லாரன்ஸ் பிளைர், டான் காலின்ஸ், கார்டியன்