Monday, August 31, 2020

இளங்கோ இல்லத் திருமண வாழ்த்து

                            இளங்கோ இல்லத் திருமண வாழ்த்து


மணமகன்: கௌதம்   B.E, M.B.A                                     மணமகள் வைபவி.B.E

நாள் 30.08.2020                                             இடம்: ஹோட்டல் சென்னீஸ் சேலம்.

                                        Kailasanathar Temple (Salem) - 2020 What to Know Before You Go (with  Photos) - Tripadvisor

காலக் குறுக்கீட்டையும் மீறி வளர்ந்த செயல் பாட்டாளர்கள் தலைமை ஏற்கிறார்கள்

இளங்கோ பெரியசாமி ஒரு தொழில் முனைவரானார் காலத்தை சரியாகப் பயன்படுத்தி

                                                   Vanakkam - Art & Design Photos - KT.Sambandan Photoblog

சுமார் 40 வருடங்களுக்கும் முன் ஒரு சாதாரண பதினைந்து பைசா அஞ்சல் அட்டையில்

ஆண்களிறுடன் பெண்ணதுவும் சேர்ந்து வர என ஒரு பொங்கல் வாழ்த்தை எழுதினேன்


அதை தந்தை தாரை T.A  பெரியசாமி மிகவும் பாராட்டியதாக இளங்கோ வழியாக கேள்விப்பட்டேன்

எங்கள் நட்பு நடந்து ஆண்டுகள் கடந்தது இருவருமே குடும்பம் தெரியவும் சேர்ந்தே சென்றோம்.


சென்னை சென்று ஒரு சில நாள் இவரது அறையில் முகாமிட்டு காமிரா வாங்கினேன்

அது அடையாளப் பொருளாய் இன்றும் இருக்கிறது அதன் தலைமுறை முடிந்த பின்னும்.


இளங்கோ கௌதம் வைபவி ஒரு சொல் கொண்டு பொருள் கொள்ள முடியாப் பெயர்கள்

இவர்கள் பெயர் விரிவது போல இவர்கள் வாழ்வும் விண்ணளாவ விரிந்து புகழ் பெறட்டும்


எப்படி இப்படி சிலர் வாழ்வில் மட்டும் எல்லாம் நன்றாகவே அமைந்திருக்கிறது என்பார்

அவர்கள் வாழ்வில் உள்ள ஒழுங்கமைவையும் உழைப்பையும் முயற்சியையும்  காண வேண்டும்


கண்டிருக்கிறேன் இளங்கோவை, அவரது தாய் தந்தையை சகோதர சகோதரியை குடும்பத்தை

காலத்தின் முன்னோடிகளாக பொருளாதாரத்தின் மெய்ப்பொருள் நாடி வாழ்ந்து வரும்


இவரை  மணமக்களை எந்நாளும் போற்றுகிறோம் என்றென்றும் பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ‌

வாழ்த்துகிறோம். உங்கள் காற்று எங்கள் பக்கம் வரும் போது எங்கள் வீடு நோக்கியும் வீசட்டும்.

Comment estimer la taille de vos portions avec vos mains

என்றும் என்றும்

வாழ்த்துகள்.


கவிஞர் சு. தணிகை

த.சண்முக வடிவு

த.க.ரா.சு. மணியம்.

Kaveripattinam .k.r.p dam new view | Kaveripattinam .k.r.p d… | Flickr


Friday, August 28, 2020

அன்பு வழி இன்ப ஒளி மக்கள் மன்ற நண்பர்களுக்கு: கவிஞர் தணிகை

 அன்பு வழி இன்ப ஒளி மக்கள் மன்ற நண்பர்களுக்கு: கவிஞர் தணிகை

மறுபடியும் பூக்கும்: July 2019

27.08.2020ல் மாலை நடைப் பயிற்சியின் போது அமரக்குந்தி லெனின் கண்ணன் என்னுடன் பேசிய பேச்சால்  ஏற்பட்ட எண்ண அதிர்வலைகள் இன்னும் என்னுள். எனவே அனைவர்க்கும் அதை அஞ்சலிடுகிறேன்.


சுமார் அல்லது ஏறத் தாழ 40 ஆண்டுகள் நவ இந்திய நிர்மாணிகள் இயக்கம், காந்திய வழியில் ஊருக்குப் பத்துப் பேர் இயக்கம், தமிழக இலட்சியக் குடும்பங்கள் என இந்த  அமைப்புகளை எல்லாம் ஒருங்கிணைத்த அதே சகோதர நண்பர் கொ.வேலாயுதம் இப்போது அன்பு வழி  இன்ப ஒளி மக்கள் மன்றம் என ஒருங்கிணைத்துள்ளார். நிறுவனர் என்று சொல்வதில் ஒன்றும் குறை இல்லை.


சின்னப்பையன் சேலம் வடக்குத் தொகுதி மதுவிலக்கு வேட்பாளாராகி போட்டி இட்டார் அவர் இன்று இல்லை.சசி பெருமாள் தமிழக இலட்சியக் குடும்பத்தின் விதையெனப் புறப்பட்டு காந்தியவாதி மதுவிலக்குப் போராளி எனப் பேர் வாங்கி சென்றவர் அவர் இன்று இல்லை. செயல் வீரரான அன்புத் தம்பி பொறியாளர் மணி இன்று இல்லை. இவர்கள் எல்லாம் தியாக தீபங்கள் தான். மணியை சேலத்து மேயர் என்றெல்லாம் சொன்னோம்...கலாம் கண்ட கனவு 2020 பலிக்க வில்லை, புறா(நகரிலிருக்கும் எல்லா வசதிகளையும் கிராமத்திற்கு கொண்டு செல்லும் கலாமின் திட்டம் புறாவும்) தோல்வி என அரசே சொல்லி விட்டது.

மறுபடியும் பூக்கும்: மகாத்மா காந்தி----: கவிஞர் தணிகை

அவர்களோடு எல்லாம் சேர்ந்து தோளோடு தோள் நின்று பயணப் பட்டும்,பல்வேறு நிலைகளிலும் இயக்கம் வளர உறு துணையாகி உரைவீச்சை நல்கி உழைத்த நிகழ்வு எல்லாம் நினைவிலாட முரண்பட்ட நிலைகளில் சில நச்சு விதைகளை களையெடுக்கவும் குரல் கொடுத்த பின் ஏன் எங்கு எப்படி எல்லா முயற்சிகளும் எதிர்பார்த்த அளவில் பரிமளிக்காமல் போனதே என நினைவிறுத்தும் போது விடியல் குகன் என்ற நண்பரையும் கொ.வேலாயுதம் என்ற மூத்த சகோதர நண்பரையும் இணைக்கும் சிறு முடியாகி இந்த இன்றைய அன்பு வழி மக்கள் ஒளி மன்றம் உருவாக காரணமானேன் என்ற திருப்தியும் மகிழ்வும் எனக்குண்டு. 


ஏன் எனில் தமிழக இலட்சியக் குடும்பங்கள் கலைக்கப் படும் நிலையில் காங்கிரஸ் கட்சியில் இணையட்டும் என நிறுவனர் சொல்ல நாம் தான் இயங்கவில்லை என இயக்கத்தை கலைத்தாயிற்றே அதன் போக்கில் அவரவர் விருப்பப் படி அவரவர் செல்லட்டும் விட்டு விடுங்கள் காங்கிரஸ் மிகவும் நலிவடைந்து கொண்டிருக்கிறது என்ற எனது கருத்தை முன் வைத்தேன்.  இதனிடையே இயக்க‌ ஆற்றின் போக்கில் நீர் மொண்டு பருகி தவறிப் போன வெள்ளாடுகள் பற்றி எல்லாம் நான் இங்கு குறிப்பிட்டால் இந்தப் பதிவு வெகுவாக நீளும். இப்போது மறுபடியும் ஒரு குடை உருவாகி இருப்பது பற்றி மகிழ்வும் திருப்தியும் .

மறுபடியும் பூக்கும்: July 2019

இப்போது மறுபடியும் பூக்கும் என அன்பு வழி இன்ப ஒளி மக்கள் மன்றம் என பூத்திருக்கிறது.


 இந்தியாவின் பல்வேறுபட்ட மாநிலங்களில் உள்ள பழங்குடியினர் மலைவாழ் மக்கள் சேவை பிரிவினர் என்ற மக்களுக்காகவும் சுமார் 10 ஆண்டுகள் கடுமையான உழைப்பு எனக்கு சாலையோரத்தில் படுத்துறங்கும் நிலையையும் இந்த நாட்டின் உன்னத குடியரசுத் தலைவர் ஆ.ப.ஜெ அப்துல்கலாம், உச்ச நீதி மன்றத் தலைமை நீதிபதி பிரபல்ல குமார் நட்வர்லால் பகவதி அவர்களுடனும் சேர்ந்து சென்ற தருணங்களையும், எழுதிய 11 புத்தகங்களில் முதல் புத்தகம் உலகின் மாபெரும் அமெரிக்க நூலகக் கூட்டத்தில் வாழ்க்கை குறிப்போடு இடம் பெற்றமையும் இப்படி பல்வேறு பட்ட  பரிமாணங்களில் சேவையும் உழைப்பும் ஒரு சேர எனது வாழ்வு பயணித்த படி இருக்கிறது. யாருக்கு எந்த  மக்களுக்கு செய்தாலும் அது மக்கள் சேவைதான். அது இயக்கம் தழுவியதாக இருந்தாலும் இல்லாவிட்டாலும். இவை பற்றி சொல்லப் புகின் அதுவும் இந்த பதிவை நீட்டி விடும்.


சுருங்கச் சொல்லின்: கீழ்த் தட்டு மக்களுக்கான உழைப்பு, தியாகம், நடைப் பயிற்சி, இலஞ்ச ஊழலுக்கு எதிரான எனது தனித்துவமான போராட்டங்கள், தவறான வழியில் செல்லாமை கொள்கை மாறாத வாழ்க்கை, முழுமையான மதுவிலக்கு, முழு மத மறுப்பு அல்லது மத நல்லிணக்கம்  போன்றவை எனது கொள்கை பிடிப்புகள். கலாமை, அன்னை தெரஸாவை, காந்தியை ஏதோ ஒரு கைப்பிடியில் தொட்டு செல்லும் வாழ்க்கையுடன் நானும் எனது செயல்பாடுகளும் எப்போதும்.

மறுபடியும் பூக்கும்: இந்திரா காந்தி சுடப்பட்ட தினம் சில நினைவுகள் பகிர்...  | Couple photos, Places to visit, Couples

நண்பர்களுக்கு எல்லாம் சொல்ல வேண்டுவது என்ன வெனில்: கொள்கை நெறிக் குழு, வழிகாட்டுதல் குழு, உயர்மட்டக் குழு, ஆலோசனைக் குழு, எல்லாமே இருக்கட்டும். சிறப்பு ஆலோசகர்கள், ஆலோசகர்கள், கௌரவத் தலைவர்கள், எல்லாமே ஒரு இயக்கம் வளரத் தேவைதான்.

மறுபடியும் பூக்கும்: சிற்பி கொ.வேலாயுதம்: கவிஞர் தணிகை

இயக்கம் என்பது தனிமனித மூளைகளை விட மேலான ஒரு மையம். தன்னிச்சையாக செயல்படுவதிலிருந்து மாற்றிக் கொள்ள வேண்டிய செயல்பாட்டு வழி.


இப்போது தேவை ஒரு தீ அது எங்கும் பரவ வேண்டியது பெரும் தீயாக வேண்டியது

இப்போது தேவை  பெரு மழை  எங்கெங்கும் பெய்ய வேண்டியது

இப்போது தேவை ஒரு பெரும் புயல் எங்கும் வீச வேண்டியது

இப்போது தேவை ஒரு தூயக் காற்று எங்கெங்கும் சுவாசமாக நிறைய வேண்டியது


அதற்கு சசிபெருமாள் போல சின்ன பையன் போல ஓடித் திரியும் நபர்களே தலைமை ஏற்க வேண்டும் அமர்ந்து எழுதிக் கொண்டும் பேசிக் கொண்டும் இருக்கும் தலைமையகங்கள் அல்ல வாகனத்தில் அல்ல ஏதும் வசதி வாய்ப்பு கிடைக்க வில்லை என்றாலும் நடந்தாவது சென்று மாநிலம் எங்கும் திரியும் சரியான தலைமை அவசியம்.


கொடியை அடையாளத்தை சின்னத்தை ஏற்படுத்தி  அமைத்து வடிவமையுங்கள்... நல்லோரை எல்லாம் ஒருங்கிணைக்க கொரானா கோவிட் 19 தீ நுண்மி காலம்  தணிந்ததும் இயக்கம் புறப்படட்டும்....

சமதர்மச் சாதனையாளர் விருது: கவிஞர் தணிகை in 2020 | Lab coat, Blog, Blog  posts

சசிபெருமாள், சின்ன பையன்,அன்புத் தம்பி பொறியாளர் மணி போன்றோர்க்கு  அடுத்த களப் பலியாக  தயாராக இருக்கிறேன். இனி செயல்பாட்டை நிறுத்த நினைக்கும் உடலை எப்போதோ போயிருக்க வேண்டிய உயிரையும் மறுபடியும் அர்ப்பணிக்க சிலராவது முன் வரும் போதாவது அங்கிருந்தாவது பற்றிக் கொள்ளுங்கள் பரவச் செய்யலாம்... பேராசிரியர் பழனித்துரை சொல்லியதை தனது உரை நடை வீச்சில் குறிப்பிட்டதை தணிகையின் பார்வையில் தலையாய குறள்கள் என்ற எனது சிறு நூலில் பதினைந்து ஆண்டுகளுக்கும் முன்பே 2005ல் நான் குறிப்பிட்டதை எனது அந்த நூலை இப்போதும் வைத்து இருப்பார் எடுத்துப் பார்த்துக் கொள்ளலாம். ஒவ்வொருவரும் ஆன்மத் தியாகம் செய்யத் தயாராகாத வரை வெற்றி வராது. 

மறுபடியும் பூக்கும்: 2018

விவேகானந்தர் சொல்லியது போல சாதிக்க வேண்டுமானால் சாகவும் தயாராக இருக்க வேண்டும். நான் தயாராக இருக்கிறேன். அப்படித்தான் தனியாக இருக்கும்போதும் இயக்கமாக ஆனாலும் வாழத் தலைப் பட வேண்டும்.


அவ்வளவுதான் சொல்ல முடியும்.

மறுபடியும் பூக்கும்: இயக்கத்தின் துவக்கம்: கவிஞர் தணிகை

இதை எல்லாம் தகுதிக் குறைவு என்று நினைத்தால் பிறகு உங்கள் விருப்பம்


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.

Sunday, August 23, 2020

திருமண வாழ்த்து To. Dr.S. Prathap Metha B.D.S and Dr.N.Sujithra B.D.S.

 

திருமண வாழ்த்து

 

மணமகன்:Dr.S.  பிரதாப் மேத்தா   B.D.S                         மணமகள்: N.சுஜித்ரா B.D.S

இடம்: ப்ளோரா பார்க் இன் ஹால் கோவை            நாள்: 24.08.2020

 

பூமி, சூரியன் விண்மீன்  நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம் மழை யாவும் இயற்கை

இந்த உறவேற்படுவதும் அப்படித்தான்.

 

விட்ட குறை தொட்ட குறை போல பூர்வ ஜென்மத் தொடர்பு

மணப் பெண் சுஜித்ரா

நான்கு வருடமாக இருந்திருக்கிறாள் எனது உறவாக நாங்கள் அறியாமலேயே

Cute Wedding Wishes for Friend - Congratulations to Friend 

நான் பணி புரியும் கல்லூரியில் போகும் போதும் வரும் போதும்

எனக்கு கையை அசைக்காமல் என்னுடன் அங்கிள் அங்கிள் எனப் பேசாமலும்

சென்றதே இல்லை.

 

திருமண அழைப்பிதழ் குடும்ப அழைப்பாயிருக்க அவசரத்தில் அதையும்

சரியாக கல்லூரியில் பார்க்காமல் வீடு வந்து பிரித்துப் படித்தால்

 

அதில் ஒரு இன்ப அதிர்ச்சி

இயற்கையின் விந்தையாக‌ 

காலத்தால் இடை நாட்களை நழுவ விட்ட ஒரு பேரன்பு

மணப் பெண்ணின் தாய் மாமாவாக பெயர் விரியக் கிடந்தது

சண்முகம் நாகரத்தினம் மணிமாறன் என ஒரு காலத்தில்

எங்கள் கல்லூரிக் காலத்தில் இரு குடும்பமும் ஒரு சேரபாராட்டிய நட்பாக...

 The Unexpected Gifts Inside Borderline Personality | Psychology Today

காலம் பெரும் உண்மையான நட்பை பிரிக்கவே முடியாத சக்தியற்றதாக

அதை விட அன்பு அதிக சக்தி மிக்கதாக வாழ்வெலாம் தொடர்கிறது

நாம் எல்லாம் மூன்றாம் சுற்றில் இருப்பதை மறந்து

மறுபடியும் முதல் சுற்றுக்கு சென்றது எனது இளமையும் வாழ்வும்...

மறுபடியும் பூக்கும்: மரகதப் பொண்ணு ... 

நேசம் உண்மையானதாக இருந்தால் அவர்கள் இணைவார்கள்

எங்கள் நட்பு மட்டுமல்ல எல்லா உறவுகளுமே அப்படித்தான்.

 

வழக்கமாக திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப் படுவதாக சொல்வார்கள்

பிரதாப் மேத்தா            சுஜித்ரா      திருமணமும் அப்படித்தான்

நிச்சயிக்கப் பட்டு இருக்கிறது

 

அழைப்பிதழை இருவரும் நீட்டிய ஒரு கண நொடிப் பொழுதில்

உண்மை மிளிர்ந்தது...உங்கள் வாழ்வில் எனது பேரும் இடம் பெறட்டும்

வரையறையுள் அடங்காத வாழ்த்துகள் அத்துடன் எங்கள் நேசமும்

எங்கள் குழந்தைகளான உங்களுக்கு என்றும் தொடர....

 

என்றும்

கவிஞர் தணிகை

.சண்முக வடிவு

..ரா.சு. மணியம்

மனம் கொள்ளா வியப்புடனும் மட்டற்ற மகிழ்வுடனும்

மடல் அவிழும் மலர்களுடனும் இந்த வார்த்தை வித்தை விரிகிறது 

 திருமண வாழ்த்து

மறுபடியும் பூக்கும்: July 2019

Monday, August 17, 2020

அன்பு வழி இன்ப ஒளி மக்கள் மன்றம்: கவிஞர் தணிகை

 அன்பு வழி இன்ப ஒளி மக்கள் மன்றம்: கவிஞர் தணிகை

Which Grass is Best for Horses & What to avoid | Greenpet

அன்பு வழி இன்ப ஒளி மக்கள் மன்றம் என்ற ஒரு புதிய பயணத்தில் எனது நண்பர்கள் 74 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா பேச்சு, கவிதை, கட்டுரைப் போட்டிகளை மாணவ மாணவியர்க்கு நடத்தினர். அதில் எனது பதிவு செய்யப் பட்ட கருத்துகள்


தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் 

தோன்றலின் தோன்றாமை நன்று....குறள்


நமது முன்னாள் குடியரசுத் தலைவர் எஸ். ராதாகிருஷ்ணன் அவர்களின் :

THERE IS NO FREEDOM WITH OUT RESTRICTION

THERE IS NO INDEPENDENCE WITH OUT DISCIPLINE

THERE IS NO ACHIEVEMENT WITH OUT SACRIFICE

கட்டுப்பாடு இல்லா விடுதலை இல்லை

ஒழுக்கமில்லா சுதந்திரம் இல்லை

சாதனை என்றால் தியாகமில்லாமல் இல்லை



என்ற வரிகளை நினைவு கூர்ந்தேன்..சுதந்திரம் நினைவு கூற வேண்டிய தினமல்லவா அதைப் பற்றிக் குறிப்பிட வேண்டுமல்லவா...


வார்த்தை  உயிர்ப்பூட்டுகிறது, உயிர்ப்புற வைக்கிறது, எண்ணத்திலிருந்து எழுந்தாலும் அது பிறர்க்கும் ஆகிறது. எண்ணம் அவர்கள் உள்ளே மட்டும். வார்த்தை அனைவர்க்கும் உள்ளேயும் வெளியேயும்.


வார்த்தைக் குதிரைகள் எண்ண வெளியில்  பரந்து விரிந்து வெளியில் திரியும் அதைப் பிடித்துச் சரியாக கட்டத் தெரிந்தவர்க்கே அது ஒரு வரம்.


கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டி மட்டுமல்ல வார்த்தைகள் வாழ்வின் தருணங்களை முடிவு செய்கின்றன. கவனமாக தேர்ச்சியுடன் கையாள்பவர் சொல்லின் செல்வர். 


கம்பன் அனுமனை சொல்லின் செல்வன் என்பார். அந்தக் கதை கற்பனையோ உண்மையோ ஆனால் அந்தக் கதா பாத்திரம் தனது துணையை தொலைத்து விட்டு விரக்தியில் என்ன ஆயிற்றோ ஏது ஆயிற்றோ என்று தவித்துக் கிடக்கிற நிலையில் தேடிச் சென்ற  அனுமன் வந்தவுடன் ஒரே வார்த்தையில் கண்டேன் சீதையை என்றதாக கம்பன் சொல்வார்.

அந்த வார்த்தையில் அவர் இன்னும் உயிரோடு இருக்கிறார் உங்கள் சீதையாகவே இருக்கிறார் நான் கண்ணாரக் கண்டேன் என்ற பல பொருள் பொதிந்த வார்த்தைகள் அடங்கும்.


" வார்த்தை கடவுளாயிருந்தார் " என்கிறார் பைபிளில் யோவான்

 அல்லா கொடுக்க நினைப்பதை எவராலும் தடுக்க முடியாது என்கிறது முகமதியக் குரான்

என்ன கொண்டு வந்தாய்? கொண்டு செல்ல என்கிறது கீதை


வாகனத்தில் செல்லும் போது கூட சில வேடிக்கையான சொற்களை வாகனங்களில் எழுதி இருக்கின்றதைக் கண்டேன்

முயலும் வெல்லும் ஆமையும் வெல்லும் முயற்சி செய்தால் என்கிறது ஒரு வாசகம்

மோதி விடாதே மொத்தமும் கடன் என்கிறது ஒரு வாகனத்தின் பின் புறம்

கொம்புகிட்ட வம்பு வச்சுக்காதே என மாட்டுக் கொம்பை  படமாகப் போட்டு ஒரு வாசகம்

இப்படி எல்லாம் இரசிக்கும்படியாக ஆனால் அதில் பொருள் செறிவுடன்


பாட்டி காக்கா வடை சுட்ட கதையைக் கூட நீட்டலாம், விரிக்கலாம் சுருக்கலாம் வேண்டியபடி...காக்கா கூட்டமாக படை திரட்டி வந்து நரியை பயமுறித்தி மறுபடியும் வடையை பிடுங்கியதாக, அதை அடுத்து அந்த வடை அனைவர்க்கும் போதாமல் எல்லா காக்கைகளும் ஒன்றை ஒன்று உணவுக்காக சண்டையிட்டுக் கொள்கிறது  என்ற படி, பாட்டி இந்த அடுப்பை பார்த்துக் கொள் உனக்கு ஒரு வடை தருகிறேன் என காகத்துக்கு கூலியாக கொடுப்பது போல, காகம் கிடைத்த வடையை தவற விடாமல் காலுக்கும் கிளைக்கும் இடையே தவற விடாமல் பிடித்துக் கொண்டே நரியின் தந்திரத்தைப் புரிந்து கொண்டு பாடியதாக... இப்படி எல்லாம் வார்த்தை விளையாட்டு செய்யலாம் ( இதைப் பற்றி நேரம் கருதி சொல்ல வில்லை பாட்டி காக்கா.... கதை நீட்டலை)


ஒரு நல்ல கவிதையின் படிக வரிகள் 

மனதை விட்டகலாது

ஒரு சிறந்த விதை 

மண்ணுக்குள்ளேயே மக்காது..


முடியவே முடியாது என்ற களங்களில் தான்

என் வெற்றியே நிகழ்ந்திருக்கிறது

பூக்களை உதிர்த்து விட்டாலும்

செடி காத்திருக்கிறது

அது 

மறுபடியும் பூக்கும்.


முள்ளின் முனையில் அமர்ந்து கொண்டு ரோஜாவைப் பற்றிப் பாடுகின்ற ஆற்றல் வேண்டும் என்பார் கண்ணதாசன்

பாரதியாரின் அக்கினிக் குஞ்சு என்பதன் பொருள் வரையறையற்றது.

பாரதி தாசன் விசாலமாக்கு விண்ணைப் போல விரியட்டும் உங்கள் மனம் என்பார்

இப்படி 

வார்த்தைகள் வாளை விடக் கூர்மையானவை

துப்பாக்கி தோட்டாக்களில்  ஏற்படும் புரட்சியை விட வார்த்தைகளால் செய்யப் படும் ஏற்படும் புரட்சி பொருள் பொதிந்தது எனவே வார்த்தை வழி சிகரம் தொடுங்கள். சிகரம் ஏறுங்கள்


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.

Monday, August 3, 2020

விசித்திரமானவை உயிர்கள்: கவிஞர் தணிகை

விசித்திரமானவை உயிர்கள்: கவிஞர் தணிகை

National Bird of India | Birds | Animals | Pixoto

இன்று இரண்டு செய்திகளைப் படித்ததன் ரீங்காரம் என்னுள் அடங்கவில்லை. அதன் அதிர்வலைகளை உங்களுக்கும் பரவச் செய்யவே இந்தப் பதிவு.

ஆந்திராவில் ஒரு கோசாலை: பசுமாட்டுக் கூடம் என்று சொல்லலாம், அதை ஒரு மண்டல் பரிஷத் அப்படித்தான் அங்கே தாசில்தார், கோட்டாட்சியர் வட்டாட்சியர் எல்லாம் அழைக்கப் படுவர். மண்டல் பரிஷத் ஜில்லா பரிசத் என்றெல்லாம் சொல்வார்கள்.

அப்படி ஒரு மண்டல் பரிஷத் ஒரு கோசாலையை காலி செய்து அப்புறப் படுத்தி இருக்கிறார். இது சட்ட ரீதியாகச் செய்யப் பட்டதா என்பது பற்றி இங்கு சொல்லப் படவில்லை. சட்டத்திற்கு புறம்பாக இந்த கோசாலை இருந்ததாகவே இருந்திருக்கலாம் அதை அப்புறப் படுத்தி இருக்கலாம். அதெல்லாம் முக்கியச் செய்தியாக இல்லை.

ஏன் நமது ஊர்களில் கூட கோவில்களே கூட இது போன்று அப்புறப் படுத்தப் பட்டு இருக்கின்றன என்ற செய்திகள் உண்டு.
 
இங்கு அந்த அப்புறப்படுத்தப் பட்ட கோசாலையின் ஒரு பசுமாடு அந்தக் கோசலையை காலி செய்யக் காரணமான அந்த மண்டல் பரிஷத்  தலைவரை இராமராஜன், தேவர், ராம நாராயணன் படங்களில் வரும் மிருகம் பறவை பாம்புகளை விட மிகவும் அதிகமாக உணர்ச்சி பூர்வமாக உண்மையாகவே பழி வாங்கத் துடித்துக் கொண்டிருப்பதாகவும், அவர் வீட்டு முன் அவர் எப்போது வெளியே வருவார் எனக் காத்திருந்து அவர் வெளியே வந்தவுடன் அவரை முட்டித் தள்ள வருவதாகவும் மேலும் அவர் காரில் வெளியே சென்றாலும் அதைத் தொடர்ந்து துரத்தி அவரை காயப்படுத்தி முடித்துக் கட்ட முயல்வதாகவும் இது பெரும் செய்தியாக அந்த வட்டாரங்களில் வழங்கி வருவதாகவும் இன்றைய  செய்தி ஒன்றைப் படித்தேன்.
Petition · HE President of India: Barbed wire killing animals and ...
அது முதல் அந்த பிராணிகளின் நேசம், பறவைகளின் நேசம் பற்றி எல்லாம் எண்ண அலைகள் விரிய ஆரம்பித்தது எங்கோ விட்டு விட்டு வந்த பூனை பல நாள் கழித்துப் போராடி சொந்த வீடு வந்து சேர்வதும் விற்று விட்ட கால்நடைகள் பழைய எஜமானர்களை வீடு வந்து ஊர் கடந்து வந்து சேர்வதும் பூனை நாய் கிளி பறவைகள் ஏன் பிற நாடுகளில் சிங்கம் புலி போன்ற காட்டு விலங்குகளைக் கூட வசப்படுத்தி அன்பு பாராட்டி வைப்பதும்

அதை அடுத்து மற்றும் ஒரு செய்தியாக: உ.பியில் ஆட்டுக்கு முகக் கவசம் மாஸ்க் ஏன் அணியவில்லை என ஒரு காவலர் அதைப் பிடித்து அதன் முதலாளியிடம் வம்பு வளர்த்து வருவதாகவும் திரும்பிக் கேட்டதற்கு நாய்களுக்கு எல்லாம் முகக் கவசம் அணிந்து வரும் காலத்தில் ஏன் ஆட்டுக்கு அணிந்து வரக்கூடாதா என்று கேட்டு தனது அதிகார மேதாவித் தனத்தை காட்டினாராம். நாலறிவு ஐந்தறிவு ஆறறிவு என்பதெல்லாம் மனிதரை விட அந்த நேசமிகு உயிர்களுக்கு அதிகம் இருப்பதாகவே படுகிறது.
Animal Killing In India In The Name Of God
ஒரு வேளை அந்தக் காவலர் அந்த ஆட்டை  அடுத்த நாள் கசாப்பு போட்டு விட நினைத்தாரோ? ஒரு வேளை படிக்காத பாமர ஆட்டுக்காரரிடம் இவர் தனது அதிகாரத்தை நிறுத்தி பொருள் பிடுங்க நினைத்தாரோ...யாமறியோம்...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Sunday, August 2, 2020

2020 ஆடிப் பெருக்குத் திருவிழா கோவிட் 19 வைரஸ் நோய்த் தொற்றால்...கவிஞர் தணிகை

2020 ஆடிப் பெருக்குத் திருவிழா கோவிட் 19 வைரஸ் நோய்த் தொற்றால்...கவிஞர் தணிகை

After 11 years, Tamil Nadu to open Mettur Dam for paddy ...
இது ஒரு சாதி மத இன வேறுபாடற்ற பொதுத் திருவிழா மேட்டூர் நீர்த்தேக்கத்தில் குவியும் மக்கள் கூட்டத்துக்கு அளவே இராது. இந்த திருவிழா மாநிலம் தழுவிய அளவில் மக்கள் கூடும் ஒரே பெரு விழா.

 தொன்று தொட்டு நடைபெற்று வந்தது எனக்குத் தெரிந்தே 58 ஆண்டுகளாக பெரும்பாலும் தவறாமல் செய்து கொண்டிருந்த ஆடிப் பெருக்குத் திருவிழா இன்று கோவிட் 19 கொரானா நோய்த் தொற்று காரணத்தால் கைவிடப் பட்டது. 59 ஆம் ஆண்டு இந்த விளைவு உலகளாவிய வைரஸ் பரவலால் நிகழ்ந்துள்ளது. அதிலும் இந்த ஞாயிறு முழு அடைப்பு. எவரும் வெளி வரக்கூடாது என்ற அரசின் கட்டளை. அவ்வளவு கூட்டம் சேர்ந்தது ஆனாலும் மக்கள் கூட்டம் பெரும் திமிலோகப் பட்டது ஆனாலும் பெரும் பாலான குற்றங்கள் ஏதும் நடக்காது. அங்கொன்றும் இங்கொன்றுமாக திருட்டு இருக்கும். ஆனால் உடல் பிணி எல்லாம் தொற்றுமளவு  இருக்காது.

இதை பதிவு செய்தாக வேண்டிய நிலை

பொதுவாகவே காலம் செல்லச் செல்ல இந்த நீர்ப் பெருக்குத் திருவிழாவின் சிறப்பு குறைந்தே வந்தது. பழைய மனிதர்கள் காலம் போகப் போக இதன் சுவை குறையவே ஆரம்பித்தது.

நீர் குறைந்திருந்தால் ஆடி 18 அல்லது ஆடி 28 என்றால் மக்கள் கூட்டம் குறைந்திருக்கும் என்றாலும் அப்படி எல்லாம் வராமல் இருக்க முடியாது என்பார்கள் வந்து கலந்து கொண்டே இருப்பார்கள்

ஒரு காலத்தில் வெளியூர்களில் இருந்தெல்லாம் உறவினர்கள் அதன் முன் நாளிலேயே வந்து படுத்துறங்கி அதிகாலையில் எழுந்து சென்று ஆற்றில் குளித்து தலை முழுகுவார்கள்.. 

Mettur Dam - Wikipedia

அந்தக் காலங்களில் அந்த நாளுக்கு  முன் சில நாட்களில் இருந்தே மண் சட்டி, கலயம், பேரிக்காய், அன்னாசி,கொய்யா ,பொம்மைகள், புதிய புதிய விளயாட்டுச் சாமான்கள், உண்டியல் , தட்டு முட்டுச் சாமான்கள்,பரமபதம், பல்லாங்குழிகள் கட்டையால் செய்தவை, நகவெட்டிகள், தண்ணீர் பந்து, பலூன்கள், ஊதிகள் , கேட்வில்கள், இப்படி பலவித பொருள்களாய் ஆற்றங்கரையில் வியாபாரிகளால் வந்து குவிந்திருக்கும். சினிமா அதிகாலை காட்சி முதல் நள்ளிரவு இரண்டாம் ஆட்டம் வரை 6 காட்சிகள் நடக்கும் எங்கும் எங்கும் ஜனத் திரள். ஒரு பக்கம் நீர்த் திரட்சி மறுபக்கம் மக்கள் கூட்டம். மேலே ஹேர்பின் வளைவு கொண்டை ஊசி வளைவுகளில் இருந்து பார்த்தால் மக்கள் எறும்புகள் போல் ஊர்ந்து கொண்டும் நதியின் வாய்க்கால்கள் வளைந்து வளந்து முழு நீருடன் பாம்புகள் போல் வளைந்து வளைந்து சென்று கொண்டிருக்க கண் கொள்ளாக் காட்சி.  மேட்டூர் அணைக்கட்டு முனியப்பன் கோவில் மிக்க கோலகலத்தில் திளைத்திருக்கும் அருகிருக்கும் மீன் கடைகள் வறுவல் குழம்பு என ஏக தடபுடல் வருவாய். லால் பகதூர் சாஸ்த்திரி பூங்கா மக்கள் ஜனத் திரளால் பிதுங்கி வழியும்...

ஆடி பதினெட்டாம் பெருக்கு கிராமங்களில் இருந்து எடுத்து வந்த விக்கிரகங்கள், கற்சிலைகள், கத்தி, வேல், போன்ற கூரிய ஆய்தங்கள் எல்லாம் முழுக வைத்து கழுவி எடுக்கப் பட்டு அலங்கரித்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும்
Cauvery delta in distress
 காவிரி ஆற்றிலும் மேட்டூர் அணையிலும் கட்டுப் பாட்டு வேலி எல்லாம் அப்போது கிடையாது. எல்லாக் குடும்பங்களையும் அந்த நீர்க்கரையில் பார்க்கலாம். மேலும் பல நாட்களுக்கும் முன்பிருந்தே முளைப்பாரி அதாவது பாலி அல்லது பாலிகை பல தானியம் கொண்டு தாம்பாளத்தில் அல்லது மண் சட்டியில் அல்லது ஏதாவது பாத்திரத்தில் முளைக்க வைத்து திருமணமாகாத பெண்கள் எடுத்து வந்து நதி தீரத்தில் மிதக்க விடுவார்கள்...ஓ... அந்தக் காட்சிகளை எல்லாம் பார்க்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். வெற்றிலையில் காதோலைக் கருகமணி வைத்து கற்பூரம் ஏற்றி அதை வேறு நீரில் விடுவார்கள். பச்சை மாவு அல்லது மாவு இடித்து விளக்கிட்டு படையல் முடித்து அனைவர்க்கும் கொண்டு வந்த தின்பண்டங்களை பரிமாற்றம் செய்து கொள்வார்கள்... கடலை பொறி வியாபாரம் மட்டும் அளவில்லாமல் இருக்கும். இப்போது அந்த சுவை பொறி கடலைக்கு இல்லை. 

அணையின் மேல் அக்கா தங்கைகளின் கைகளைப் பிடித்துக் கொண்டு நடந்த நாள் எல்லாம் இனி என்றும் வாராது

இப்போது 16 கண்மாய்ப் பாலத்தின் மேலே கூட போக வழி இல்லை என்னும் போது எங்கே அணையின் மேல் செல்வது...

மனிதம் வளர்கிறதா தேய்கிறதா?

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.