Thursday, August 30, 2018

புதுசாம்பள்ளி தெய்வானை சுப்ரமணியம் மகனாகிய நான்: கவிஞர் தணிகை

 புதுசாம்பள்ளி தெய்வானை சுப்ரமணியம் மகனாகிய நான்: கவிஞர் தணிகை


சிறு சிறு உதவிகளில் சிலிர்த்திடும் நெஞ்ச‌ம்
அடுத்தவரை மகிழ்ச்சிப் படுத்த மகிழ்ந்திடும் நான்..

தந்தையின் பேர் யாருக்காவது இருந்தாலும் அவர்களுக்கு நன்மை செய்யத் தோன்றும், அம்மாவின் பேரும் அப்படித்தான். நமக்குகந்த நண்பர்கள் சகோதர சகோதரிகள் பேரும் அப்படித்தான். அவர்கள் இல்லாதபோது அருகில்லாதபோது மேலும் மேலும் அந்நியராக இருந்தாலும் அவர்களிடம் நமக்கு ஏதோ ஒரு இனம் புரியவில்லை என்றாலும் ஒரு பிடிப்பு ஒரு ஈர்ப்பு, ஒரு நெருக்கம்.

சுப்ரமணிய ஆசாரி தச்சு வேலை செய்தவர் வயது 76. அவரது மகன்கள் இருவரும் என்னிடம் சிறிய வயதில் இலவச தனி வகுப்பில் பயின்றார்கள். அவர் நேற்று கல்லூரிக்கு பல் மருத்துவம் செய்து கொள்ள வந்திருந்தார். என்னால் ஆன அனைத்து உதவிகளையும் செய்தேன்.

எக்ஸ் ரே இலவசமாக கிடைக்க ஏற்பாடு செய்தேன். இரத்தச் சர்க்கரையின் அளவைத் தெரிந்து கொள்ள நானே அழைத்து சென்று நீலக்கண்ணனிடம் சொல்லி பக்குவமாக இரத்தம் எடுக்கச் செய்தேன். அவர் மிகவும் சிறந்த தொழில் விற்பன்னர். கையில் சுருக் எனக் கூட வலிக்காமல் மிகவும் நல்ல முறையில் தமது பணியை நிறைவேற்றுபவர். இரத்த சர்க்கரை அளவு 124 மில்லி கிராம் அளவே இருந்தது.

Image result for little things small helps


அந்த அறிக்கையை அவரை மேல் ஏற விடாமல் நானே பெற்று அறை எண் 2 அறுவை சிகிச்சி அறைக்கு அழைத்து சென்று என்னுடன் பாலமலைக்கு வந்த பயிற்சியில் இருந்த டாக்டர் இலக்கியா, டாக்டர் பீட்டர் , டாக்டர் ஆசிக்கா ஆகியோரிடம் ஒப்படைத்து நல்ல முறையில் பல்லை எடுக்கச் செய்தேன்

மேலும் மருந்துகளை எங்களுக்கு உள்ள சலுகை விலையில் 10சதவீதம் குறைத்து பெற்றுக் கொள்ள்ச் சொல்லி அதன் பின் எங்கள் கல்லூரிப் பேருந்திலேயே என்னுடன் அழைத்துவந்து  தொடர் வண்டியில் ஏற்றி எங்கள் ஊர் வரை அழைத்தும் வந்து சேர்த்தேன்.

இடையில்: தொடர் வண்டி கால நேர மாறுதல் குறித்து வணிக நிலை துணை மேலாளரைக் கண்டு கல்லூரி மாணவர்களுக்கு மாலை 5 மணிக்கு புறப்படுவது இடைஞ்சலாக இருப்பது பற்றி புகார் கூறிவிட்டு

விசாரணைப் பிரிவில் புகார்ப் புத்தகம் இருக்கிறது என்ற அறிவிப்பை பார்த்து உள் சென்று கேட்டேன் முதலில் இல்லை நீங்கள் சென்று நிலைய மேலாளரைப் பாருங்கள் என்றவர்கள் எனது கேள்விக்கணைகளைத் தாங்க மாட்டாமல் இடையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ரிஜீஸ்டர் வரிசைக்குள்ளிருந்து எடுத்து தந்தார்கள் . ஆங்கிலத்தில் ரயில் நேரம் 5. 30 மாலையில் இருந்து முன் கூட்டி 5 மணிக்கு என மாற்றிய ஆட்சேபக் கருத்துகளை புகாராக பதிவு செய்தேன். அவர்கள் நேரப்படி 17. 30 மணி முதல் 17 மணி...

மேலும் தமிழ் இந்து நாளிதழ் வைத்திருக்கும் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு நிலையைப் பதிவு செய்தேன்.

இப்படிப்பட்ட செயல் எதிலுமே எனக்கு துளியளவும் பயனில்லை அடுத்தவர் நலம் சார்ந்த செயல்பாடுகளே இவை...என்னைப்பொறுத்த வரை நேரத்தில் வந்தால் கொஞ்சம் அதாவது பாதி வாக்கிங் போகலாம், கொஞ்சம் எழுதலாம், கொஞ்சம் தியானம் செய்யலாம்...ஆனால் கல்லூரி மாணவர்களின் கைக்காசு பேருந்துக்கு அதனால் ரூ 10க்கும் மாறாக 30 செலவாகிறது மட்டுமல்லாமல் எவருமே வந்து குறித்த நேரத்தில் தொடர் வண்டியைப் பிடிக்க முடியாத சூழல் பற்றிய பிறர் நலமே பொது நலமே இவையெல்லாம் நான் செய்யும் காரணங்களாகின்றன‌.

Image result for little things small helps


மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Tuesday, August 28, 2018

எப்படியும் நடக்கலாம்...நாம் இல்லாதபோதும் அது இருக்கலாம்: கவிஞர் தணிகை.

 எப்படியும் நடக்கலாம்...நாம் இல்லாதபோதும் அது இருக்கலாம்: கவிஞர் தணிகை.

மாறிவரும் புவிச் சூழல், பூமி வெப்பமயமாதல், எல் நினோ விளைவுகள் இப்படி வெள்ளமான வெள்ளம், வெயிலான வெயில், வறட்சியோ வறட்சி இவை பூமியை மாற்றி வரும் சூழலில் ஸ்டீபன் ஹாக்கிங் சொல்லிய சில விஷயங்கள் தொடர்பு இல்லாதிருப்பது போலத் தோன்றினாலும் ஏன் அப்படியும் நடக்கலாமே...நடக்கக் கூடாது என்றாலும் நடந்தால் யாரால் என்னதான் செய்ய முடியும்? 
அழிவு சாத்தியமே :

அண்டவியல் (cosmology) மற்றும் குவாண்ட்டம் ஈர்ப்பு (quantum gravity) ஆகிய ஆய்வுத்துறையில், உலகின் மிகவும் முக்கியமான கோட்பாட்டு இயற்பியலாளர்களில் ஒருவரான ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் (Stephen William Hawking) கடந்த மார்ச் மாதம் 14-ம் தேதி இயற்கை எய்தினார். இனி இந்த உலகத்திற்கான எச்சரிக்கை மணி ஒலிக்காது என்றே கூறலாம். ஏனெனில் விசித்திரமான கருத்துக்களையும், அதன் விளைவாய் ஏற்படப்போகும் ஆபத்துகளையும் வெறும் வாய் மொழியாய் மட்டுமில்லாது, கோட்பாடுகளாய் முன்வைப்பதில் இவருக்கு நிகர் இவரே.! தொழில்நுட்ப நுண்ணறிவு சார்ந்த வசதியுடன் மிரட்டும் ஓப்போ எப்9 ப்ரோ.! தனது இறுதி மூச்சுவரை பல வகையான ஆய்வுகளை நிகழ்த்திய டீபன் வில்லியம் ஹாக்கிங் ஒரு குறிப்பிட்ட 3 விடயங்கள் மனித இனத்தையே அழிக்கும் வல்லமை பெற்றது என்று நம்பி வந்தார். அவைகள் என்னது.? மிகவும் மர்மமான கருத்தியாலான பிளாக் ஹோல்கள் நிஜம் தான் என்பதை நிரூபித்ததுடன் சேர்த்து, கருங்குழி மற்றும் ஈர்ப்பு ஒற்றைப்படைத்தன்மைகள் (gravitational singularities) ஆகியவைகளில் சிறப்பான ஆய்வு பணிகளை மேற்கொண்ட ஸ்டீபன் ஹாக்கிங், மனித இன அழிவை ஏற்படுத்தும் 3 விடயங்கள் பற்றி விளக்கம் அளித்தபோது உலகத்தினால் அதை ஏற்றுக்கொள்ளாமல் தவிர்க்க முடியவில்லை. முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.! 

01. செயற்கை நுண்ணறிவு : மனித இனத்தையே அழிக்கும் வல்லமை பெற்றது என்று ஸ்டீபன் ஹோக்கிங் நம்பும் முதல் விடயம் - ஆர்டிஃபிஷியல் இன்டெல்லிஜன்ஸ் (Artificial intelligence) எனப்படும் செயற்கை நுண்ணறிவு..! புலனாய்வு அறிவு : இயந்திரங்கள் அல்லது மென்பொருள்களுக்கு புலனாய்வு அறிவை செலுத்துவதே செயற்கை நுண்ணறிவு எனப்படும். கருத்து : செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது மனிதர்களுக்கு சமமான முறையில் செயல்படுகிறது. மேலும் சில சமயம் மனிதர்களை மிஞ்சி விடுகிறது என்றும் சில விஞ்ஞானிகள் கருதுகிறார்கள் அழிவு சாத்தியமே : அப்படியாக, மனிதர்களால் உருவாக்கம் பெறும் இயந்திரங்கள் மனிதர்களை விட அதிக அறிவை பெறும்போது மனித இனத்தின் அழிவு சாத்தியமே என்கிறார் ஸ்டீபன் ஹாக்கிங். சாத்தியமான ஆபத்துக்கள் : மேலும், அதீத செயற்கை நுண்ணறிவு மூலம் ஏற்படக்கூடிய சாத்தியமான ஆபத்துக்களை தவிர்க்கும்படியான ஆய்வுகளில் நுண்ணறிவு விஞ்ஞானிகள் ஈடுபடுவது மிகவும் முக்கியம் என்றும் அவர் கூறியுள்ளார்.

 02. மனித ஆக்கிரமிப்பு : மனித இனத்தையே அழிக்கும் வல்லமை பெற்றது என்று ஸ்டீபன் ஹோக்கிங் நம்பும் இரண்டாவது விடயம் - மனித ஆக்கிரமிப்பு..! தன்னைத்தானே : அதாவது அதீத செயற்கை நுண்ணறிவு கொண்ட இயந்திரங்கள் மனித இனத்தை அழிக்கவில்லை என்றால், மனித இனம் தன்னைத்தானே மனித ஆக்கிரமிப்பு மூலம் அழித்துக்கொள்ளும் என்கிறார் ஸ்டீபன் ஹாக்கிங். ஆக்கிரமிப்பு பண்பு : மனித குறைபாடுகளில் எதை நீங்கள் மாற்ற விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு மனிதனின் ஆக்கிரமிப்பு பண்பு என்று விடை அளித்துள்ளார் ஸ்டீபன் ஹாக்கிங். வல்லமை : ஆதிகாலங்களில் உணவு உறைவிடம் மற்றும் இனப்பெருக்கம் போன்ற காரணத்தால் வளர்ந்த ஆக்கிரமிப்பு பண்பு இப்போது மனித இனத்தையே அழிக்கும் வல்லமை பெற்றுள்ளது என்று கருத்து கூறியுள்ளார். உறுதி : மேலும், அதிகப்படியான விண்வெளி ஆய்வுகள் மூலம் மனித இருப்பை உறுதி செய்யலாம் என்று நம்புவதாகவும், ஸ்டீபன் ஹாக்கிங் கருத்து கூறியுள்ளார்.

 03. ஏலியன்கள் : மனித இனத்தையே அழிக்கும் வல்லமை பெற்றது என்று ஸ்டீபன் ஹோக்கிங் நம்பும் மூன்றாவது விடயம் - ஏலியன்கள்..! எச்சரிக்கை : 2010-ஆம் ஆண்டிலேயே ஏலியன்கள் இருப்பது உறுதி, மற்றும் அவைகள் பூமிக்கு நட்பு பாராட்டும் முறையில் நடந்து கொள்ளாது என்றும் ஸ்டீபன் ஹாக்கிங் எச்சரிக்கை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நாடோடித்தன்மை : ஒருவேளை மேம்பட்ட ஏலியன் நாகரீகங்கள் என்பது கண்ணில் தென்பட்ட கிரகங்களை கைப்பற்றுவது, சொந்தம் கொண்டாடுவது போன்ற நாடோடித்தன்மை கொண்டதாய் கூட இருக்கலாம் என்று ஸ்டீபன் ஹாக்கிங் நம்புகிறார். பயணம் : அப்படி இருந்தால், ஏலியன்கள் மேலும் மேலும் பயணிக்க பிற கிரகங்களின் பொருட்களையும், வளங்களையும் பயன்படுத்திக் கொள்ளும் நோக்ககத்தில் இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார் ஸ்டீபன் ஹாக்கிங். எல்லை : மேலும் அவர், எது எல்லை என்று யாருக்குமே தெரியாது என்பதை நாம் மறந்து விடக் கூடாது என்ற கருத்தையும் முன் வைக்கிறார்.சாத்தியமான ஆபத்துக்கள் :

நன்றி
மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.


மனித இனம் அழியும்; ஏன், எப்படி.? - ஸ்டீபன் ஹாக்கிங்கின் திகிலான விளக்கம்.! Posted By: Muthuraj Updated: Tuesday, August 28, 2018, 16:59 [IST]

 https://tamil.gizbot.com/

Sunday, August 26, 2018

மாண்புமிகு அமைச்சர் கே.சி. வீரமணி பேசியது அ.இ.அ.தி.மு.க அரசின் கொள்கை முடிவுதானே? கவிஞர் தணிகை.

 மாண்புமிகு அமைச்சர் கே.சி. வீரமணி பேசியது அ.இ.அ.தி.மு.க அரசின் கொள்கை முடிவுதானே? கவிஞர் தணிகை.

குடிகார மணிகளுக்கு வீரமணியின் ஆதரவு...

Related image


அன்று காந்தி என்ன சொன்னார்?
எல்லா பாவங்களுக்கும் மதுவே அடிப்படை என்று சொன்னார்...

இன்று வீரமணி என்ன சொன்னார்?
எல்லா ஆசிரியர்க்கும் சம்பளம் கொடுக்க மதுவே தருது வருமானம் என்று சொன்னார்.

காந்தியை எடுத்துக்கறவங்க காந்திய எடுத்துக்கங்க‌
வீரமணியை எடுத்துக்கறவங்க வீரமணியை எடுத்துக்கங்க..
.வீரமா நிற்க முடியாது மது போதையால்... தள்ளாட வைக்கும்
அது ஒன்னுதான் இடிக்குது..


வேலூர் மாவட்டம் சின்ன மூக்கனூர் கிராமத்தில் பள்ளியைத் துவக்கி வைக்க 25.08.2018 சென்ற வணிக வரித்துறை அமைச்சர் கே.சி. வீரமணி குடிகாரரை குடிக்காதே என்று சொல்ல முடியாது, அவர்கள் தரும் வருவாயில் தாம் இது போன்ற பள்ளிகள் எல்லாம் உருவாகிறது, அதிலிருந்துதான் ஆசிரியர்க்கு எல்லாம் ஊதியம் அளிக்கப்படுகிறது, குடிக்க வேண்டாம் என்று சொன்னால் இது போன்ற பணிகள் எல்லாம் கெட்டுப் போய்விடும் என பேசியிருக்கிறார். இவர் வணிகவரித்துறைக்கு வரும் வருவாய் எல்லாம் இதிலிருந்துதான் வருகிறது என்றும் சொல்லி இருக்கிறார்.

Related image


இவர் தமிழ்நாடு அ.இ.அ.தி.மு.க அரசின் கொள்கை முடிவைத்தான் வெளிப்படையாக பேசி இருக்கிறார். ஏன் எனில் தமிழக அரசின் நிரந்தர முதல்வர் ஜெ மதுவுக்கு எதிராக ஒரு  வார்த்தையும் பேசியதில்லை. நீதிமன்றத் தீர்ப்பின் காரணமாகவே சாலையோர நெடுஞ்சாலையில் இருக்கும் டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட்டனவே அல்லாமல், பெண்களின், பொதுமக்களின் மதுவுக்கு எதிரான எழுச்சி காரணமாக டாஸ்மாக் கடைகள் இடம் மாற்றப்பட்டதே அல்லாமல் அரசுக்கு கடைகளின் மேல் கை வைக்க எப்போதும் விருப்பமே இல்லை. சொல்லப் போனால் இந்த தற்போதிருக்கும் அரசு மதுவின் ஒத்துழைப்பாளர்களின் வாக்குகள் காரணமாகவே அரசு பதவியை பிடித்தது என்றும் சொல்லலாம்.

ஏன் எனில் சசிபெருமாள் மதுவிலக்குப் போராளி... கலைஞர் கருணாநிதியை சந்திக்க வேண்டுகோள் விடுக்க வாய்ப்பளித்து தமது தி.மு.க கட்சி வென்றால் பதவிக்கு வந்தவுடன் முதல் கை எழுத்து மதுவிலக்குக்கு ஆதரவாக அரசின் டாஸ்மாக் கடைகளை இழுத்து மூடுவதுதான் என்று வெளிப்படையாகவே சொல்லியதன் எதிரொலியாகவே இந்த மனிதர் கடந்த முறை ஆட்சிக்கு வந்ததும் ஒருரூபாய்க்கு நியாயவிலைக்கடைகளில் அரிசி போடுவதற்கான கையெழுத்தைப் போட்டது போல செய்து விடுவார் என்ற காரணம் பற்றியே இந்த நாட்டின் தமிழ் நாட்டின் உண்மையான குடிமகன்கள் ஜெ வை அரசுக் கட்டில் ஏறவைத்து விட்டார்கள்... அந்த வித்தியாசமான வாக்குகளே தி.மு.கவை விட அ.இ.அ.தி.மு.கவுக்கு அதிகம் நன்மை செய்தது. கிடைத்தது ஆட்சிக்கட்டின் பொற்கனி.
Related image
இந்த ஒரு காரணம் போதும் எழுச்சி பெற்ற மக்களாய் இருந்தால் இந்த மந்திரியை எந்திரி என்பதற்கும் இந்த அரசை பதவியிலிருந்து விலக்கி வைக்கவும்

செப். 5 ஆசிரியர் தினம் அருகே வரும் தருவாயில் ஒரு முக்கியமான மந்திரியின் வாயிலிருந்து இப்படிப்பட்ட வார்த்தைகள் உதிர்க்கப்பட்டிருக்கின்றன.

எதற்கெடுத்தாலும் இந்த டாஸ்மாக் வருவாய்  ஒன்றைத் தவிர தமிழகத்தில் வேரு எந்த வருவாயுமே இல்லாதது போல ஒரு காட்சியை ஒரு பொய் பிம்பத்தை  இந்த அ.இ.அ.தி.மு.க அரசு ஜெ காலத்திலிருந்தே உருவகப்படுத்தி வருகிறது.

டாஸ்மாக் கடைகளை எடுத்துத் தான் பார்க்கட்டுமே...தமிழகம் அந்த வருவாய் ஒழிந்ததால் அழிந்து விடுகிறதா என்றுதான் பார்ப்போமே...சொல்லப்போனால் அழியும் குடும்பங்கள் மதுக்குடியால் அழிந்து வரும் குடும்பங்கள் நற்பாதைக்குத் திரும்பும். நல்ல மக்கள் வாழ்த்துவர். எல்லாரும் செத்தா விடுவர்? அப்படிப்பார்த்தால் எல்லாரும் ஒரு நாள் செத்துதானே ஆகவேண்டும்...

பள்ளியின் தலைமை ஆசிரியரே குடித்துவிட்டு பள்ளியில் விழுந்து கிடக்கும் நிலையை ஏற்படுத்தி விட்டது இந்த அரசு.  இது போன்ற ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுகளும் குறுக்கு வழியில் கட்சி, சாதி, மதம் , பரிந்துரை, அது நம்ம ஆளு என்ற நியாயத் தராசிலிட்டு கொடுத்து மற்ற ஆசிரியர்களை அவமதித்து வருகிறது. பள்ளியை அயோக்யத்தனமாக நடத்தி வரும் ஆசிரியர் பணிக்கே இலாயக்கற்ற மனிதர்கள் நல்லாசிரியர் விருதை பெற்றிருக்கிறார்கள். சில நல்ல ஆசிரியர்களுக்கும் விருது கிடைத்திருக்கிறது கிடைக்கிறது என்பதெல்லாம் வேறு வேறு விஷயங்கள்.

மேலும் இனி மத்திய அரசால் தமிழகத்துக்கு ஒரு நல்லாசிரியர் விருது மட்டுமே இருக்கும் என்ற அறிவிப்பும் தற்போதைய செய்தியாக வந்திருக்கிறது.


Related image

இது போன்ற வசைமொழிகளின் வழியே வாழ்வு நடத்த ஒவ்வொரு ஆசிரியரும் இந்த அரசின் கீழ் பணி புரிய வெட்கப்படவேண்டும்.அதாவது அவர்கள் தெளிவாகச் சொல்லி விட்டார்கள்: குடும்பங்களை சீரழித்து இந்த குடிகார வெறி பிடித்த மனிதர்கள் தரும்  பாவப்பட்ட காசில் தான் உங்களுக்கு சம்பளம் வழங்குகிறோம் அதைக் கொண்டுதான் நீங்களும் உங்கள் குடும்பமும், பிள்ளைகளும் வாழ்வு நடத்துகிறீர் என...இதை விட வேறு அவலம் வேண்டுமா...? ஒரு நல்ல ஆசிரியர்க்கு...உடனே எல்லா ஆசிரியப் பெருமக்களும் இந்த அரசுக்கு எதிராக தங்களது ஒத்துழையாமையை வெளிப்படுத்த வேண்டும் அரசை, அமைச்சரை பதவியிலிருந்து தூக்கி எறிய ஒரு இயக்கமாக பேரியக்கமாக மாற வேண்டியதவசியம். இல்லையேல் எந்த ஆசிரியருமே பணி செய்யக்கூடாது.

 இந்த அரசின் கீழ் பணிபுரிவதிலிருந்து நல்ல மனிதர்கள் எந்தத் துறையிலிருந்தாலும் அவர்கள் பதவியைத் துறக்க வேண்டும். நல்ல வேளை நான் ஒரு ஆசிரியனான பணி புரியவில்லை. மேலும் அவர்கள் துறக்கும் பணிக்கு வேறு எவருமே ஆசிரியப் பணி அல்லது அரசுப் பணிக்கு சேராமல் பார்த்துக் கொள்ளும் இயக்கங்கள் கட்டி அமைக்கப்படல் வேண்டும். ஆனால் அப்படிப் பட்ட மக்கள் இருக்கிறார்களா? அப்படிப்பட்ட இயக்கங்கள் இந்த நாட்டில் கட்டப்பட்டு நாடும் மக்களும் உயர்வார்களா? இதெல்லாம் நடக்குமா?

நல்ல முறையில் செய்வதாக கூறிக்கொள்ளும் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் போன்றோர் இது பற்றி என்ன சொல்லப்போகிறார்>? முதல்வர் என்ன செய்யப் போகிறார்?

இப்படிப் பேசலாமா ஒரு அமைச்சரே இப்படிப் பேசலாமா அதுவும் ஒரு பள்ளியின் துவக்க விழாவில் பேசலாமா?இந்தக் கட்சியின் ஆட்சியை வரவழைக்க கடந்த தேர்தலின் போது எல்லாமே பிரிவினை வாதம் செய்தார்கள்...அவர்களில் ஒரு தலைவருக்கு சிறந்த தேசிய குடி மகன் விருது வேறு வழங்கப்பட்டிருக்கிறதாம்...கொடுக்கப்பட அவர் பொருத்தமானவர்தான்.

இப்படிப்பட்ட நாடும், கட்சிகளும், தலைவர்களும் மக்களும்...

உருப்பட்டு விடும்..

நல்லா சொன்னேள் போங்கோ...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

thanks:
One India Tamil
Posted by: Lakhsmi Priya Aug.26. 018. 9.53  IST

அவிங்க குடிச்சாதாங்க ஆசிரியர்களுக்கு சம்பளம் தர முடியும்- தமிழக அமைச்சர் பேச்சால் சர்ச்சை 

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/minister-veeramani-speaks-like-he-supports-tasmac-328293.htmlதிருப்பத்தூர்: டாஸ்மாக் வருமானத்தில்தான் புதிய பள்ளிகள் கட்டப்படுகின்றன, பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது என்று வணிக வரித்துறை அமைச்சர் கே.சி. வீரமணி பேதியதால் சர்ச்சை எழுந்தது. பொதுமக்கள் குடித்தால்தான் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க முடியும்- அமைச்சர் வீரமணி வேலூர் மாவட்டம் சின்னமூக்கனூரில் நேற்று பள்ளித் திறப்பு விழா ஒன்று நடந்தது. இந்த விழாவில் வணிகவரித்துறை அமைச்சர் வீரமணி கலந்து கொண்டு பேசினார். புதிய பள்ளிகள் திறப்பு அப்போது அங்கு குடித்துவிட்டு முதியவர் ஒருவர் ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அவரை போலீஸார் அப்புறப்படுத்தினர். இதைத் தொடர்ந்து அமைச்சர் பேசுகையில், டாஸ்மாக் கடை வருமானம் அனைத்தும் என் துறைக்குத்தான் வருகிறது. அதிலிருந்துதான் புதிய பள்ளிகள் திறக்கப்படுகின்றன. குடிக்க வேண்டாம் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. தற்போது ரகளையில் ஈடுபட்ட அந்த முதியவரை நான் குடிக்க வேண்டாம் என்று சொன்னால் இந்த பணிகள் எல்லாம் கெட்டுப்போய்விடும் என்றார். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. படிப்படியாக மூடல் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியிலும் டாஸ்மாக் கடைகள் படிப்படியாக மூடப்படுவது என்பதுதான் என்பதை அமைச்சர் மறந்துவிட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஜெ. கூறியிருந்தது டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று தாய்மார்கள் ஆங்காங்கே போராட்டங்களில் ஈடுபட்டனர். அவ்வாறு திருப்பூரில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணை டிஎஸ்பி ஒருவர் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. டாஸ்மாக் கடைகளை அகற்றினால் மக்கள் கள்ளச்சாராயத்தை நாடி சென்றுவிடுவர் என்று ஜெயலலிதா கூறியிருந்தார். சலசலப்பு எனினும் மக்களின் கோரிக்கையை ஏற்று படிப்படியாக குறைக்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்தார். ஆனால் அமைச்சர் வீரமணியோ மக்கள் குடித்து நாசமானாலும் பரவாயில்லை, வருமானம் எந்த விதத்திலும் பாதிக்கக் கூடாது என்ற தொனியில் பேசியது ஆச்சரியத்தையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Saturday, August 25, 2018

மணோகரா மறக்க முடியுமா?...கவிஞர் தணிகை


Image may contain: 2 people


மணோகரா மறக்க முடியுமா?...கவிஞர் தணிகை

இது கலைஞரின் மணோகரா திரைப்பட வசனமல்ல...வாழ்க்கையின் ஒரு அங்கம் பற்றிய பதிவு.

வாழ்வின் ஒவ்வொரு முக்கியமான‌ கட்டத்திலும் உறுதுணையாகி நின்றாய். தந்தையின் இறப்பின்போது இராணுவ விடுப்பு முடிந்தும் போகாமல் நீயாகவே  லீவை நீட்டித்துக் கொண்டு அதன் பின் அங்கு சென்று தண்டனை ஏற்றுக் கொண்டாய் என்பதையும் சொன்னாய்.
தாயின் இறந்த கடைசிக் காரியங்களிலும் பங்கு கொண்டாய்...உனக்கு தாய் இளமையிலேயே இல்லாதிருந்தன் அருமை உனக்குத் தெரிந்திருக்கிறது.

சகோதர சகோதரிகள் அனைத்து மண‌ நிகழ்வுகளிலும் பங்கு கொண்டாய்.
நீயும் நானும் பள்ளித் தோழர்கள் மட்டுமல்ல வகுப்புத் தோழர்களும் கூட.
நீ அப்போது படித்துக் கொண்டே பத்மா ரேடியோ ஹவுஸ்ஸில் பணி புரிந்து கொண்டிருந்தாய். நிகழ்ச்சிகளுக்கு ஒலிபெருக்கி அமைக்கும்போதும் அந்த ரேடியோ கடைக்காரர் சொல்லும்போதும் பள்ளிக்கு அடிக்கடி லீவு எடுத்துக் கொள்வாய். அங்கே கிடைக்கும் வருவாயில் அப்போதே திரைப்படம் பார்த்து வந்து கதை சொல்லி சினிமா பற்றிய ஆர்வத்தை அதிகப்படுத்துவாய்.
அதன் பின் கபடி ஆடினோம் சேர்ந்து. கையை ஒடித்துக் கொண்டாய். அதிலிருந்து கபடி ஆட்டத்தைக் கை விட்டாய்.

இராணுவத்துக்கு ஆள் சேர்க்கிறார்கள் என சென்று சேர்ந்து கொண்டாய். அது முதல் உனது குடும்பத்துக்கும் வறுமை அகன்றது. அதிலிருந்து படிப்படியாக உயர்ந்து உனது பெண்ணை இன்று எம்.ஈ. படிக்க வைத்து மணமுடித்துக்  கொடுக்கிறாய்.

இதைக் கவிதையாக்குவதை விட கடிதமாக்குவதே நன்றாக இருக்கும் என்றே உனக்கு எழுதிக் கொண்டிருக்கிறேன்.

 நீ சலுகை விலையில் வாங்கி வந்த 3 வி.ஐ.பி சூட்கேஸ்களில் ஒன்றை இப்போது எனது மகன் மணியம் கல்லூரிக்கு எடுத்து சென்று விடுதியில் தங்கிப் படித்து வருகிறான்.

நீ வீட்டுக்கு ஒரு சலுகை விலையில் குக்கர் கூட ஒன்று வாங்கிக் கொடுத்தாய்.

இவை மட்டுமே இப்போது என் நினைவிலாடும் நீ செய்த உதவிகளாய்...

மணோகரன் மிலிட்டரியிலிருந்து லீவில் வருகிறான் ஒரு மாதம், இரண்டு மாதம் என்றாலே எங்களுக்கு எல்லாம் அது நீ வரும்போதெல்லாம் ஒரு இனிய நிகழ்வு, நல்ல பொழுது. எனது மாமா கணேசன் அவர்களை அடுத்து நீயும் அது போன்ற வாழ்வின் சுவையை தந்தாய்...அதெல்லாம் வஸந்த காலம் .

வஸந்தம் சென்று விடும் பூக்கள் திரும்ப மலரும்
யௌவனம் சென்று விடும் அந்த நாட்கள் திரும்பி வரா...

இவை மட்டுமே இப்போது என் நினைவிலாடும் நீ செய்த உதவிகளாய்...

நீ எந்த நிலையில் இருந்து பார்த்தாலும் எனக்கு நல்லவனாகவேத் தெரிகிறாய். ஆனால் நான் தான் உனக்கு நல்லவனாக இல்லாமல்: ஒரேமுறை நீ கேட்டாய் என்று...எனது நீல வண்ண யமஹா பைக்கை உனக்காகக் கொடுத்தேன்...எனது அந்த வாகனத்தை இது வரை சவாரி செய்தது நான், நீ, எனது மகன் மட்டுமே. வேறு எவருக்குமே வண்டியைத் தராதவனாயிருந்தேன். இன்று அதை நானும் தொடுவதில்லை. மகன் மட்டுமே ஓட்டுகிறான். நீ உனது தின்னபெல்லூருக்கு எடுத்து சென்று திருப்பித் தருவதற்குள் கால தாமதமாகிவிட்டது. வண்டி பஞ்சர் என்றும் சொன்னாய், ஆனால் அதே நேரத்தில் இங்கு இளைய சகோதரியின் இரண்டாம்பிள்ளையின் பிரசவக் காலம்...அதற்கு வண்டி பயன்படவில்லையே என உன்னைக் கடிந்து கொண்டேன்...

எனக்கும் நண்பனாக பள்ளித் தோழனாக இருந்தவன் எனது மூத்த சகோதரனுக்கும் நண்பனானாய்... நாளடைவில் நமது நட்பு அப்படியே இருக்க உஙக்ளின் நடப்பும் நட்பும் அதிகமாக இருந்த போதும் குடும்பத்தையே நேசித்தாய்..

ஆனால் காலம் பல நம்மை மாற்றி இடம் மாற்றி வாழ்வை மாற்றிப் போட நீ ஒரு விவசாயி ஆனாய்...இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்று. நல்ல முடிவுதான். ஏவல் சேவகம் புரியாமல் உலகின் உன்னத பணி...

இடையில் நீ உனது மூத்த சகோதரனை இழந்தாய்.
தந்தையை இழந்தாய்...நாங்களும் பெற்றோரை இழந்தோம்

காலம் பல கடந்து விட்டது...அடுத்த தலைமுறை அடி எடுத்து வைத்துவிட்டது

நீ மணம் புரிகிறாய் மகளுக்கு...
வாழ்த்தை வார்த்தையில் மட்டுமே தான் சொல்ல முடியுமா? சொல்ல வேண்டுமா?

என்றும் வாழ்வாய், என்றும் தொடர்வாய் என்றும் வளர்வாய்...
நல்லோரின் குலம் வாழையடி வாழை எனச் சொல்லும் மூதுரை...

என் வாழ்வின் ஒவ்வொரு மணித்துளியையும் மிகவும் இரசித்து பூவின் தேனை உறிஞ்சிக் கிடக்கும் தேன் சிட்டாய் மாறிக் கொண்டிருக்கிறேன். நாம் நிறைய காலம் கடந்து விட்டோம் எது வாழ்வென்று தெரியாமலே...

அடுத்தவரை இன்பப் படுத்தி நாமும் இன்பம் காணும் வாழ்வே உயர்ந்தது...
அதை நீ படிக்காமலே அனுபவப் பாடமாகவே கற்றதோடு மட்டுமல்ல அதை வாழ்வில் கொண்டு செலுத்தவும் அறிந்திருந்தாய்...

Image result for honey sucking bird
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Wednesday, August 22, 2018

வாழ்வியல் வழிகாட்டி: கவிஞர் தணிகை

 வாழ்வியல் வழிகாட்டி: கவிஞர் தணிகை

கடந்த ஜுன் மாதம் 24 ஆம் நாள் திண்டுக்கல் நகரில் விடியல் சிறப்பு சந்திப்பு நடைபெற்றது அதற்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ள அழைக்கப்பட்டு " புறம் கட கடவுள் பார்க்க" என்ற தலைப்பில் உரை வீச்சு செய்தேன் . அந்த அவையில் வந்திருந்த பொறுக்குத்தரமான நீதிபதிகள், மாவட்ட அளவிலான அரசு அலுவலர்கள், கோட்ட வட்டாட்சியர் மற்றும் வழக்கறிஞர்கள் சபையும் அவர் தமைச் சார்ந்த குடும்பத்தினரும் கலந்து கொண்ட விழா அது . அதில் முத்தமிழ் மன்றம் சார்பாக அதன் தலைவர் இரண்டாம் இளங்கோ முன்னிலையில் உங்கள் நண்பரான கவிஞர் தணிகைக்கு வாழ்வியல் வழிகாட்டி என்ற பட்டமும், விருதும் வழங்கப்பட்டன.

அப்போது ஒரு பக்கம் பாலமலை உறைவிடப் பயிற்சி முகாம் வேறு மிகவும் கடின உழைப்புடன் மேற்கொள்ள வேண்டியிருந்தது. அத்துடன் இந்த விருதையும் பெற திண்டுக்கல் வரை சென்று திரும்பி மறுநாள் முகாம் பணிகளை மேற்கொள்ள பாலமலைக்கும் செல்ல வேண்டியிருந்தது. என்றாலும் ஏற்றுக் கொண்டோம். ஏன் எனில் இது போன்று முற்காலத்தில் பல முறைகளில் நல்ல நல்ல வாய்ப்புகளை காலத்தின் இறுக்கம் கருதி கை நழுவி விட்டதன் அனுபவம் இன்று இதையும் ஏற்றுக் கொள்ள வைத்தது.
வீட்டில் என்னை பிழைக்கத் தெரியாதவன் என்றே சொல்கிறார்கள், உங்களுக்கு எப்படி தெரிந்தது நான் வாழ்வியல் வழிகாட்டி என்பது என்றே ஆரம்பித்தேன்...

பாலியல் விழிப்புணர்வு நூல்: அளவுக்கு மிஞ்சினால் வெளியிட்டபோது பாலியல் வல்லுனர், செக்ஸாலஜிஸ்ட் என்றார்கள்...ஆனால் அதை முறிக்கவே அடுத்த நூலை இயல்பை விட விரைவாக வெளியிட வேண்டி வந்தது யார் எப்படி அழைத்தாலும் சேவையை நான் விட்டுப் பிரிய நினைத்தாலும் நான் உண்மையாக நடந்து கொண்டு, உண்மையைப் பேசி, உன்மையாகவே வாழ்ந்து வருவதால் சேவை என்னைவிட்டுப் பிரியவே மறுக்கிறது உயிரை விட்டு உடல் பிரியும்போதும் அதற்கும் மேலும் சேவை தொடரலாமோ என்னவோ...எனக்கு உடலை இழந்த பின் உயிர் இருக்கும் உணர்வுகளில் நம்பிக்கை அனுபவங்கள் உண்டு என்பதால் இந்த வார்த்தைகள் இல்லையேல் அது இப்படி முடிந்திருக்கும்: உடலை விட்டு உயிர் போகும் வரை சேவை தொடர்ந்திருக்கும் என்று...

No automatic alt text available.


 அந்த சான்றோர் நிரம்பிய சபைக்காக இது வரை நாலைந்து முறை பேசி இருக்கிறேன் ஒவ்வொன்றும் ஒரு மைல்கல்தான்.  சேலம் நேரு யுவக்கேந்திராவின் இளைஞர் ஒருங்கிணைப்பாளராக இருந்த அதன் பின் இந்தியாவில் அதன் படிகளில் பலவாறு உயர்ந்த எனது நணபர் கொ.வேலாயுதம் அவர்கள் என்னை பலவாறாக உபயோகித்த பின் இந்த விடியல் நண்பர் குகனும், அதை அடுத்து விநாயகா மிஷன் தற்போதைய சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரியின் முதல்வரான பேராசிரியர் டாக்டர் பேபிஜானும் என்னை வெகுவாக பயன்படுத்தி வருகின்றனர். அல்லது இந்த வைரத்தை பட்டை தீட்டி வருகின்றனர். அல்லது துருப்பிடிக்காமல் இந்த ஆய்தத்தை பதப்படுத்தி கூர்மை படுத்தியே வருகின்றனர் அவர்களுக்கு எனது வாழ்வில் ஒரு பகுதி நன்றிகடப்பாடு உண்டு. அதிலும் விடியல் குகன் எனது எல்லா முக்கியான கட்டத்திலும் அதாவது கல்லூரிப்பருவமான 1978ல் அறிமுகமாகியது முதல் எனது வாழ்வின் எல்லாக் கட்டத்திலும் பங்காற்றியது கண்டால் அவருக்கும் எனக்கும் ஏதோ ஒரு பூர்வ ஜென்மத் தொடர்பு இருந்திருக்கும் போலும்... மேலும் பொருள் இல்லா நிலையில் நான் மார்க்ஸ் ஆகவும் அவர் ஏங்கெல்ஸ் ஆகவும் இருப்பது போன்ற உணர்வு எனக்குள் என்றும் உண்டு.உரை வீச்சு மிக நன்கமைந்திருந்து அனைவரும் ஒரெ சேர பாராட்டும்படிஅனைவர்க்கும் பயன்படும்படி அமைந்திருந்தது கண்டு எமக்கும் மகிழ்வே.

இந்த உரை வீச்சுக்கும் முன் நமது அறிமுகத்தை வழக்கம்போல் எதுவும் சொல்லாமல் ஆரம்பித்ததை விட பின் வரும் சிறு குறிப்புகளை வழங்கி ஆரம்பித்தேன் அதனால் நல்ல கவன ஈர்ப்பு கிடைத்தது. இடையில் அவர்களை புத்துணர்வு செய்து கொள்ள, சிறிது புத்தாக்கப் பயிற்சியும் கொடுத்தேன்.

கவிஞர் தணிகை
கவிஞர் தணிகை என்ற சுப்ரமணியம் தணிகாசலம் காவிரிக்கரை ஓரத்தில் மேட்டூர் நீர்த் தேக்கத்தின் அருகே பிறந்து (Puthu Samballi)

இந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர்..பெ.ஜெ.அப்துல் கலாம் அவர்களின் மதிப்பு மிக்க கடிதத் தொடர்புடன் இணைந்து

இந்தியாவின் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாய் இருந்த மேதகு.பி.என்.பகவதி அவர்களின் அவையில் பங்கெடுத்துப் பேசி அவருடன் உண்டு மகிழ்ந்து கலந்து அளாவளாவி

11 சிறு நூல்களை தம்மால் முடிந்த அளவு நாட்டுக்கு ஈந்து ஆனால் எனது புத்தகங்கள் படிக்க அல்ல பயன்படுத்த…. ¦¾Õ  ºó¾¢ôÀ¢ø °¡¢ý Ó츢 «¨¼Â¡ÇÁ¡¸ò ¾¢¸Øõ ¦¾öÅ¡ ¾¢Â¡Éô À¢üº¢
¸Õõ ÀĨ¸Â¢ø ¦À¡ý¦Á¡Æ¢¸û ÀøÄ¡ñθǡ¸ ±Ø¾¢ ÅÕõ Ҹؼý ....
 ¯Õš츢 ¯ÕÅ¡¸¢.

தெய்வா பதிப்பகம், தெய்வா ஆலோசனை மையம், தெய்வா தியானப்பயிற்சி மையம் ஆகியவற்றுடன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பயிற்சி பெற்றும் பயிற்சி அளித்தும்

முதல் நூலான மறுபடியும் பூக்கும் உலகின் மிகப் பெரும் நூலகத்தொகுதியான அமெரிக்கன் நூலகக் கூட்டத்தில் வாழ்க்கைக் குறிப்போடு இடம் பெற்று

இந்தியாவின் பழங்குடிகள், ஆதிவாசிகள், மலைவாழ் மக்களுக்காக 10 ஆண்டுகளுக்கும் மேல் திட்ட அலுவலராக இணையிலா உழைப்பை ஈந்து இந்தியா எங்கும் பல மாநிலங்களுக்கும் சென்று ஊதியமாக உடல் பிணிகள் பல பெற்று இவரின் உழைப்பு மகாத்மா காந்தி, மதர் தெரஸா ஆகியோரின் பணிகளைப் போன்றது என சான்று வழங்கப் பட்டு

நேரு யுவக்கேந்திரா, காந்திய கிராமியப் பல்கலைக்கழகம், பயிற்சி பணி செய்து, காந்திய சிந்தனையில் வள்ளியம்மை கல்வி நிறுவனத்தில் முதல் பரிசு பெற்று....

வேர்ட்பிரஸ் டாட் காம் வழி 1150 பதிவுகளை மறுபடியும் பூக்கும் தளம் வழிப் பகிர்ந்து அதன் அடையாளமாக மறுபடியும் பூக்கும் சர்வீஸஸ் என சேவை தொடர்ந்து...

இப்போது மறுபடியும் பூக்கும்.பிளாக்ஸ்பாட்,டான் பேஜஸ் டாட் காம், தணிகை ஹைக்கு தளங்களிலும், முக நூல், ட்விட்டர், கூகுள்+ போன்ற சமூக தளங்களிலும் உங்களோடு இணைந்து...
3 கோவில்களை நிர்மாணிக்க அடிப்படைப் பணிகள் செய்து,Tree plantation,A.P.J.Movement etc.

¦¾¡¨Ä측𺢸û, Å¡¦É¡Ä¢ Àò¾¢¡¢¨¸¸û °¼¸í¸Ç¢ý ¦ÅÇ¢îºõ ÀÄÓ¨È ¦ÀüÚ...
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் உங்களுக்கு அது ஆர்வமாக இருந்தால்... மது விலக்குப் போராளி சசிபெருமாள் போன்ற இளைஞர்களின் தயாரிப்புக்கு உறு துணையாகி...

சுயமாக சேவையை விட்டுப் பிரிய நினைத்தாலும் அது வாழ்வின் இறுதி வரை இயற்கையாகவே இணைந்து பின்னிப் பிணைந்து செல்ல வாழ்ந்து

எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே என வாழ்ந்து...visit:www.marubadiyumpookkum.blogspot.com  www.thanigaihaiku.blogspot.com

www.dawnpages.wordpress.com Having Bible,Quran,Geeta with equal status.


இவை மட்டுமல்லாது: சசிபெருமாள், சின்ன பையன் போன்ற மதுவிலக்கப் போராளிகளை கட்டி உருவாக்கிய இயக்கங்களின்: 1. நவ இந்திய நிர்மாணிகள் இயக்கம் , 2. காந்திய வழியில் ஊருக்குப் பத்துப் பேர் இயக்கம்,3. தமிழக இலட்சியக் குடும்பங்கள் ஆகியவற்றை விதைத்த நிறுவனர் எனது சகோதர நண்பர் ச.மே.சிற்பி  எனப்படும் சமூக மேம்பாட்டு சிற்பி என்ற கொ. வேலாயுதத்துக்கும் அடுத்த நிலையில் இயக்கத்தின் முகமாக முன்னணி படைத்தலைவனாக இருந்து வழி நடத்தியவன் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்...இதை எல்லாம் நான் சொல்ல வில்லையெனில் காலம் நீரில் கிழித்த கோடாக்கி விடும் என்பதால்..மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

Tuesday, August 21, 2018

பாலமலையில் பிளாஸ்டிக் அரிசி?! ...கவிஞர் தணிகை

பாலமலையில் பிளாஸ்டிக் அரிசி?! ...கவிஞர் தணிகை
பாலமலை சேலம் மாவட்டத்தில் மிகவும் கடைசி விளிம்பில் இருக்கும் ஒரு எவரும் எளிதில் எட்ட முடியாத மலை. இதில் சுமார் சிறிய சிறிய கிராமங்கள் முப்பது இருக்கும். மக்கள் தொகையோ சுமார் 4347 என தற்போதைய கணக்கு சொல்கிறது. இது கடல் மட்டத்திலிருந்து 3927 அடி உயரமான மலையாகும்.


இங்கு போக்குவரத்து வசதி, ஏன் பாதிக் கிராமங்களுக்கு இன்னும் மின் வசதியே இல்லை.

இப்படி இருக்கும்  ஒரு மலைக்கிராமத்தில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை நடக்கிறது. நடந்துள்ளது.

பிளாஸ்டிக் அரிசி என்பதெல்லாம் இல்லை. அறவே இல்லை. அதைத் தயாரிக்க அதிக செலவாகும் என்றெல்லாம் ஒரு சாரர் கருதுகின்றனர்.

ஆனால் இதை வாங்கிச் சாப்பிட்டுப் பார்த்து விட்டு சில வேளை கழித்து வாங்கிய அரிசியைத் திருப்பிக் கொண்டு கொடுக்கச் சென்ற ஒரு சமூகத்தில் மதிக்கத் தக்க மாவட்ட ஆட்சியரின் நன் மதிப்பையும் பரிசையும் பெற்ற ஒரு செவிலியர் ஒருவரிடம்: இதுவரைக்கும் எந்தப் புகாரும் வரவில்லையே என்றே கடைக்காரர் சொல்லி விட்டு அந்த அரிசியை வாங்கிக் கொண்டு மாற்றிக் கொடுத்திருக்கிறார். அந்த அரிசியின் பிராண்ட்: மூன்று கோடிட்ட நாமம் போட்டிருக்கிறதாம் அந்த அரிசிப் பைகளில். நாங்களும் கூட இதையே வாங்கி சாப்பிட்டு வருகிறோம் எந்தப் பிரச்சனையும் இல்லையே என்கிறாராம் ஒரு இளைஞர்.ஆனால் இந்த நர்ஸ் அதை நன்கு பரிசீலித்துப் பார்த்து விட்டு உணவின் ருசியின்மை, உண்வருந்திய பின் வயிற்றில் ஏற்பட்ட பிரச்சனை, தரையில் தட்டிப் பார்த்து பந்தைப் போல் அந்த உணவின் கவள உருண்டி எழும்பி மேல் செல்வது ஆகியவற்றை எல்லாம் செய்து பார்த்து விட்டு முழு கவனத்துடனும் சமுதாயப் பொறுப்புடனும் பெரும் கவலையுடனும் இதைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

இது பற்றி ஒரு கூட்டத்தில் பேச பேசுமளவு நா நுனி வரை சொற்கள் வந்து விட்டன எமது கூட்டத்தில் ஆனால் நாங்கள் அங்கு நடத்திய முகாம்களுக்கு உறுதுணையாக இருந்த கிறித்தவ நண்பருக்கு எந்த பின் விளைவும் ஏற்பட்டு விடக்கூடாதே என விட்டு வந்தோம்.எந்த எட்ட முடியாத பகுதிக்கும், பான் பராக், குத்கா, ஹான்ஸ் போன்ற புகையிலைப் பொருட்களும், சிகரெட், பீடிகளும், மதுவும் அங்கேயே காய்ச்சும் கள்ளச் சாராயம் போன்றவையும் ஏன் எய்ட்ஸ் நோய்களும் கூட அங்கு பரவி சரளமாகி புழங்குகின்றன. தொலைக்காட்சிகளும் மின்சாரம் உள்ள பகுதிகளில் மக்களை அடிமைப்படுத்தி  விடுகின்றன. ஆனால் நல்லது மட்டும் எங்கேயும் அங்கேயும் போகாமல் இங்கேயும் இல்லாமல் அல்லாடிக் கொண்டே இருக்கின்றது...

பள்ளிகளையும் ஆசிரியப் பெருமக்களையும் கூட நாம் இந்த குறிப்பிட்ட சாராம்சங்களில் குற்றம் சொல்ல முடியாது. எல்லாமே இந்த மாக்கள் கையில் மட்டுமே...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Monday, August 20, 2018

சேர நன்னாட்டின் வெள்ளத்துடனே: கவிஞர் தணிகை

சேர நன்னாட்டின் வெள்ளத்துடனே: கவிஞர் தணிகை

Related image


எவ்வளவு நாளைக்குத்தான் மனிதர்கள் ஏமாற்றிக் கொண்டு இருப்பார்கள்? இயற்கை வென்ற காட்சிகளைத்தான் கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் ஓரிரு வாரங்களாக கண்டு வருகின்றன.

விடியற்காலத்திலும் சற்று மேடான பகுதியிலும் சென்று நின்றால் வெள்ளம் எங்களது மேட்டூர் அணையிலிருந்து வெளியேறும் சத்தப் பேரிரைச்சல் இரண்டு கிலோமீட்டருக்கும் அப்பால் கூட கேட்கிறது.

மாபெரும் சக்திகளான‌...நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம் ஆகிய ஐம்பெரும் பூதங்களை பகைத்துக் கொண்டதால் நிகழும் அழிவுகளையே இப்போது நாம் பார்த்து வருகிறோம்.

கேரளத்தில் உள்ள நிலையை மிகவும் அதிகபடியாக காட்டி பணக் குவிப்பு செய்து வருவதாகவும், இப்போது அங்கே தேவை பணமோ, உணவோ, பழந்துணிகளோ அல்ல தேவை எல்லாம் மின் பணியாளர்கள், நீர்ப்போக்கு வரத்து சாதனப் பணியாளர்கள்...பிளம்பர்ஸ், மரவேலை செய்வோர் போன்ற  தொழில் விற்பன்னர்கள்தாமே அன்றி வேறு யாவும் அத்தியாவசியமல்லாதன என அங்கிருந்தே ஒரு நபர் பேட்டி கொடுத்த செய்தி வாட்ஸ் அப் எங்கும் பிரபலமாகிவிட்டது.

உண்மையிலேயே கேரளா கடவுளின் பூமிதான். எனவேதான் அவர்கள் செய்த தவறுகளுக்கு எல்லாம் சேர்த்து தண்டித்து விட்டது.

எனக்கு கேரளத்தவர், அல்லது மலையை ஆளும் மலையாளிகள், அதிலும் கிறித்தவப் பெருமக்கள் பல்வேறுபட்ட நிலைகளில் சில மாநிலங்களில் எனக்குப் பேருதவி புரிந்தனர்.

அதில் கொச்சியைச் சார்ந்த எர்ணாகுளத்து கிறித்தவ கன்னியாஸ்த்ரி ஒருவரும் அவர் ஒரு சில நாட்கள் நடந்த கருத்தரங்கில் எனக்கு ஒருவனுக்கு மட்டும் மரக்கறி உணவு சமைத்து மனங்கோணாமல் என்னையும் மாமிச உணவு உண்பர்க்கு ஈடாக நடத்தியவர்

ஒரிஸ்ஸாவில் இருக்கும்போது முரளிதர்ன் கிடாவ் என்னும் செக்சன் ஆபிசர் ஒருவர் வாரத்தில் விடுமுறி ஞாயிற்றுக்கிழமையில் உணவு விருந்து அளித்து பெருமை பெற்றவர்.

Related image

மற்றொருவர் எனக்கு மலேரியாவாக இருக்குமா என்றிந்த காலக்கட்டத்தில் கொஞ்ச்ம் கூட யோசிக்காமல் தமது வீட்டில் தங்க வைத்து என்னை வீட்டில் விட்டு விட்டு பணிக்குச் சென்றவர், நோயாளியாய் இருந்த எனக்கு முழு ஓய்வு அளிக்க அவரது வீட்டை அடைக்கலமாக கொடுத்தவர்.

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். எனவே என்னைப் பொறுத்தவரை தனிப்பட்ட முறையில் என் வாழ்வில் இன்றியமையாத நன்றிக்கு வித்தானவர்கள் இந்த கிறித்தவ மற்றும் மலையாள நண்பர்கள்...அவர்கள் சாதாரண வாழ்வுக்கு திரும்ப எல்லாம் வல்ல இயற்கையை பிரார்த்திக்கிறேன்.

மனிதத்தவறுகளே காரணம்
கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவு வெள்ளம் குறித்து கட்கலிடம் கேட்டபோது, அவர் கூறுகையில், “ பொறுப்பற்றதனத்தோடு அனைத்துச் சுற்றுச்சூழல் கொள்கைகளையும் கையாண்டால் இப்படித்தான் நேரும். இந்த பாதிப்புகள் அனைத்தும் இயற்கையில் ஏற்பட்டவை அல்ல. மனிதத்தவறுகளேஅனைத்துக்கும் காரணம்.

வெள்ளத்தில் இருக்கும் மதுபானபாட்டில்களை எடுக்கும் காட்சியும் கேரளாவின் கலாச்சாரம் காண்பிப்ப்தாகவே...

மனிதர்களின் பேராசை, வனங்களையும், இயற்கைகயையும் அழித்ததே காரணம். அதிலும் குறிப்பாகக் குவாரிகளை வனப்பகுதிகளில் செயல்படுத்தியதே நிலச்சரிவுக்கும், மலைப்பகுதியில் மண் சரிவுக்கும்காரணம்”தெரிவித்தார்.
கேரளாவில் உள்ள மேற்கு தொடர்ச்சி வனப்பகுதியில் கல்குவாரிகளையும், மண்குவாரிகளையும்செயல்பட அனுமதித்ததும், பணம் ஈட்டும் நோக்கத்துடனும், வர்த்தக நோக்கிலும் வனங்களையும், இயற்கையையும் அழித்து ஹோட்டல்களையும், ரிசார்ட்களையும் கட்டியதும் சூழல் கெடுவதற்கும், இத்தகைய பேரழிவு ஏற்படுவற்கு முக்கியக் காரணமாகும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்தெரிவிக்கின்றனர்.
இயற்கை ஆர்வலர்களும், சூழலியல் வல்லுநர்களும் கூறிய அறிவுரைகளையும், ஆலோசனைகளையும்புறந்தள்ளி செயல்பட்டதன் விளைவை இப்போது கேரள மாநிலம்அனுபவித்து வருகிறது. இனிமேலாவதுகட்கில் அறிக்கையைப் பரிசீலிக்க வேண்டிய கட்டாயத்துக்கு கேரள தள்ளப்படலாம்.
விழிக்குமா தமிழகம் ?
கேரள மாநிலத்துக்கு வந்த நிலைமை தமிழகத்துக்கும் வராது என்பதற்கு எந்தவிதமான உத்தரவாதமும்இல்லை. ஏனென்றால், மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியையொட்டி அமைந்திருக்கும் தேனி, நெல்லை, கோவை, நீலகிரி, கொடைக்கானல் போன்ற மலைப்பகுதிகளில் கனமழை பெய்தால் நிலச்சரிவுஏற்படுவதற்கு ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன. ஆதலால், தமிழகத்தில் உள்ள சுற்றுச்சூழல்ஆர்வலர்கள் கூறும் நல்ல கருத்துக்களை ஏற்று அரசு செயல்படுவது சிறப்பாகும்.

thanks: Tamil Hindu.


மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.


Sunday, August 19, 2018

சுடர் விடும் மணம் சுவை தரும் இணை

                                             
Image may contain: indoor
                                                        திருமண     வாழ்த்து

                                                            தூக்கிப் போடற‌
                                                                பத்திரிகைக்கு
                                                       இவ்வளவு செலவா?

                                                          நோட்டீஸ் மாதிரி
                                                           கொடுத்தாலும்...

                                                          கஞ்சப் பிசிநாறி..

                                                              அப்படியும்
                                                              இப்படியும்
                                                         பேசுவதே உலகம்!

                                                              அதைப் பற்றி
                                                          கவலைப்படுவார்
                                              முன்னோடிகளாக முடியாது

                                                               இருப்பதை
                                           கொண்டாடத் தெரிய வேண்டும்
                                              மனிதர்க்கு இருக்கும்போதே!

                                                                  நீங்கள்
                                                  கொண்டாடத் தெரிந்த
                                                          முன்னோடிகள்

                                                          அவரவர் உயரம்
                                             அதிக பட்ச உச்சம் தொட(ல்)
                                              அதிக பட்ச உச்சம் தொடர‌
                                         அவரவரே அவரவர் வழிகாட்டி

                                                   விக்னேஷ் பாலாஜி
                                                         நல்ல உயரம்
                                                  அதன் உள் உருவாக‌
                                                        "காயத்ரி" ஜெபம்
Related image

                                                           எனக்களிக்கும்
                                                         அழைப்பிதழ்கள்
                                             ஒருபோதும் வீணாவதில்லை

                                                     உங்கள் வாழ்வுடன்
                                             என் ஒரு சிறு காலக் கீற்றும்
                                    இன்றைய நாளில் சங்கமமாகிறது

                                                                  என்றும்
                                                                பதினாறு
                                                செல்வங்களும் பெற்று
                                               நலம் வாழ "வாழ்த்துகள்"

                                         வந்து ஆசீர் வாதம் செய்யுங்கள்
                                                     என்று அழைத்தீர்
                                                        வந்து விட்டேன்
                                             ஆசிகளைத் தந்துவிட்டேன்...

                                                             அன்புடன்
                                                       கவிஞர் தணிகை.

                              சுடர் விடும் மணம் சுவை தரும் இணை
No automatic alt text available.
22/23.AUGUST.2018.