Thursday, July 27, 2023

கலாம் பெரியார் அளவு துணிச்சல் கொண்டவர் இல்லை என்றாலும்...: கவிஞர் தணிகை

 கலாம் பெரியார் அளவு துணிச்சல் கொண்டவர் இல்லை என்றாலும்...: கவிஞர் தணிகை



பெரியார் பெண் விடுதலை பற்றி பேசிக் கொண்டிருந்த கூட்டத்தில் ஒருவர் குறுக்கிட்டு, அப்ப, மணியம்மையை(உங்கள் மனைவியை) எனக்கு கூட்டிக் கொடுப்பீர்களா என்று கேட்டதற்கு, அதை நீ மணியம்மையிடம் தான் (எனது மனைவியிடம் தான்) கேட்க வேண்டும், என்று கூலாக சொல்லி விட்டு குறுக்கிட்டு பேசியவரின் நோக்கம் கிஞ்சித்தும் நிறைவேற விடாமல் சிரித்துக் கொண்டே பேசி கூட்டத்தை தொடர்ந்து நடத்தியதாக அவரின் வரலாறு சொல்கிறது.


அது மட்டுமல்ல அதற்கு மேல் அதைப் பற்றி மேல் நடவடிக்கை என்று அவர் எதையுமே செய்ய வில்லை, அதுவே ஒரு சாதாரண மனிதர் வாழ்வில் நிகழ்ந்திருந்தால் ஒன்று செந்தில் கவுண்டமணி காமெடி போல , அண்ணே, பூவும் அல்வாவும் வாங்கி வந்து ஆத்தங்கரையோரம் கூப்பிட்டேன் அண்ணே, அடிக்க வராங்க என்று கும் வாங்கியதாகவோ அல்லது கொலையிலேயேக் கூட முடிந்திருக்கலாம். அப்படிப்ப பட்ட சமுதாயமாகவே இன்னும் இந்த சமுதாயம் இருக்கிறது.


ஆனால் நாம் சொல்லிக் கொண்டிருக்கும் தலைவர்கள் இந்த தமிழ் சமுதாயம், அல்லது இந்த உலகம் மேலும் மேலும் உயர வேண்டும் உயர்த்த வேண்டும் என தம் உயரத்துடன் எடுத்துச் செல்ல நினைத்தவர்கள்.


எதற்காக என்றே தெரியவில்லை , எனக்கு இன்று கலாமையும் பெரியாரையும் சேர்த்து வைத்து எழுத தோன்றிவிட்டது.


கலாம் தனக்கு 9 ஆம் நபராக வந்ததால்( 8 பேருடன் தேர்வு நிறைவு பெற்று பணி வாய்ப்பு கை நழுவிப் போனதால்) இந்திய விமானியாக வாய்ப்பின்றி சோர்ந்த போது இமயமலைச் சாரலுக்கு செல்கிறார் அங்கு ஒரு இந்து சமயக் கூட்டத்தில் கலந்து கொண்டு இந்து சமயத் துறவியிடம் ஆறுதலும் ஆசிகளும் இரண்டு புத்தகங்களும் பெறுகிறார். இது இவரின் வரலாறில் உண்டு.


எல்லா மதக் கோவில்களுக்கும் செல்கிறார், ஏன் திருப்பதிக்கும் கூட குடியரசுத் தலைவர் என்றானபோதும் கூட கையெழுத்துவிட்டு பிறமதக்காரர் செல்லலாம் என்பதற்கேற்ப சாதரணர்களுக்கு இருப்பது போன்ற விதிகளை கடைப்பிடித்து சென்று வணங்குகிறார், மதத் தலைவர்கள் இடையே சென்று தாம் தம் நிலை எல்லாம் மறந்து கீழ் அமர்ந்து கொண்டு அவர்கள் மேல் அமர போதனை பெறுகிறார்.


எல்லாம் சரிதான். ஆனால் வாஜ்பேயி பிரதமரால் குடியரசுத் தலைவராக முன் மொழியப்பட்டு பதவி ஏற்கும் காலக் கட்டம். பதவி ஏற்பு நாள் அட்டமி (அஷ்டமி) ஆக இருக்கிறதே என்கிறார்கள்...அதற்கு புவி சூரியனைச் சுற்றும் நாள் எல்லாம் எனக்கு நல்ல நாளே...என மறு மொழி பகர்ந்து விட்டு பதவி ஏற்கிறார். மக்கள் குடியரசுத் தலைவர் என வரலாற்றில் அழிக்க முடியாத புகழ் பெற்று என்றும் வாழ்கிறார்.


27.07.2023 கலாமின் நினைவு நாள் இன்று.


ஏனோ 3 மணிக்கு விழிப்பு வந்து அது முதல் அவர் சொல்லுக்கேற்ப: கனா உறங்க விடாமல் செய்துள்ளது(உறக்கத்தில் வருவதல்ல கனவு உறங்க விடாதது என்பதற்கேற்ப)


பூனை இடம் வலம் போதல், கண்ணதாசன் அர்த்தமுள்ள இந்து மதத்தில் சொன்ன பொருள்,கௌளி சொல்லுக்கு பலன்(பல்லி), விரிகூந்தல் பெண் அபசகுனம், பாம்பு வீட்டுள் புகுந்தால்  நல் விளைவில்லாதது...இப்படி எல்லாம் பார்க்கும் நமை எல்லாம் விட இந்த தலைவர்களின் துணிச்சல் எல்லை அற்றதுதான். பாராட்டத் தக்கதுதான்... சந்திராட்டமம், அட்டமி, நவமி... இப்படியாக குழப்பத்தில். நாம் பெரும்பாலும் மய்யத்தில்தான் இருக்கிறோம்.கலாமும் பெரியாரும் தெளிவாக இருந்திருக்கிறார்கள்.துணிவாக இருந்திருக்கிறார்கள். அவர்களிடம் இருந்து கற்க வேண்டியது இன்னும் உலகளவு இருக்கிறது


எல்லாம் கருத்துருவாக்கம்தான் என்கிறார் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி...


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை




Monday, July 24, 2023

TRINITITE:மனித அழிவின் விசித்திரங்கள்: கவிஞர் தணிகை

 நன்றி: பிபிசி தமிழ்

  • செசார் மெனோர்-சல்வான்
  • பதவி,தி கான்வர்சேஷன்
அணுகுண்டை முதலில் தயாரித்து பயன்படுத்திய அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோவிலிருந்து உருவான‌ இந்த டிரினிடைட் பற்றி ...

டிரினிடைட்: முதல் அணுகுண்டு வெடிப்பில் உருவான பல வண்ண 'ஒளிரும் கற்கள்




Trinitite – ட்ரினிடைட். இந்தப் பெயரைக் கேட்டால் இது ஒரு தாது அல்லது கனிமம் என்று தோன்றலாம். ஆனால் இது ஒரு கனிமம் அல்ல. இயற்கையானதும் அல்ல.

இது அறிவியலும் அரசியலும் சந்தித்துக் கொண்ட ஒரு முக்கியமான வரலாற்று நிகழ்வின் போது உருவான ஒரு பொருள்.

1945-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோவின் அலமோகோர்டோ என்ற இடத்தில் நடந்த முதல் அணு வெடிப்பின் போது உருவானதுதான் இப்பொருள்.

அந்தச் சோகமான வரலாற்று நிகழ்வின் போது என்ன நடந்தது என்பதை ட்ரினிடைட் நமக்குத் தொடர்ந்து நினைவுறுத்துகிறது.

இரண்டாம் உலகப்போரின் முடிவு நெருங்கிக் கொண்டிருந்தது. முதல் அணுகுண்டைத் தயாரிக்கத் துவங்கப்பட்ட மன்ஹாட்டன் திட்டம் (Manhattan Project) 1941-ம் ஆண்டு முதல் நடைபெற்று வந்தது.

அமெரிக்க ஜனாதிபதி ஃப்ராங்க்ளின் டி ரூஸ்வெல்ட், ஜெர்மனி ஒரு புதிய வகை பேரழிவு ஆயுதத்தை உருவாக்கும் சாத்தியக்கூறுகளால் உந்தப்பட்டு, வரலாற்றிலேயே மிகப்பெரிய தொழில்நுட்ப மற்றும் அறிவியல் சவால்களில் ஒன்றைச் சோதித்துப் பார்க்க அனுமதித்தார்.இந்தத் திட்டத்திற்காகப் பல இயற்பியலாளர்கள், வேதியியலாளர்கள், பொறியாளர்கள், கணிதவியலாளர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் நேரத்தைப் பொருட்படுத்தாமல் உழைத்தனர்.

மன்ஹாட்டன் திட்டத்தின் தொழில்நுட்பச் சாதனைகள் அமெரிக்காவின் தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஊக்கமளித்தன. பனிப்போருக்கான விதைகளையும் விதைத்தன. ஆனால் அதன் முதல் பலன்: கேட்ஜெட்.

ஜூலை 1945-ல் நியூ மெக்ஸிகோவில் உள்ள லாஸ் அலமோஸ் ஆய்வகத்தில் பிறந்த இந்த ‘கேட்ஜெட்’.

‘கேட்ஜெட்’ - முதன்முதலில் உருவான அணுகுண்டு

கேட்ஜெட் என்பது முதன்முதலில் வெற்றிகரமாக உருவாக்கப்பட்ட அணுகுண்டின் முன்மாதிரி.

1945-ம் ஆண்டு ஜூலை 15-ம் தேதி, கோட்பாட்டு ரீதியான கணிப்புகளைச் சோதித்து உறுதிசெய்யும் நோக்கில் வெடிக்கத் தயாராக இருந்தது. இந்தச் சோதனைக்கு ‘டிரினிட்டி சோதனை’ (Trinity Test) என்று பெயரிடப்பட்டிருந்தது.

சாதாரணமாகச் சொன்னால், ‘கேட்ஜெட்’ உள்நோக்கி வெடிக்கும் ஒரு குண்டு. ஒரு சாதாரண வெடிபொருள், இந்தக் குண்டின் புளூட்டோனியம்-239- ஐசோடோப்பால் ஆன மையக்கருவை அழுத்துகிறது. இந்தப் புளூட்டோனியம் அதன் பொருண்மை உச்சவரம்பை (critical mass) அடைகிறது. இது ஒரு சங்கிலிப் பிளவை ஏற்படுத்துகிறது. அதுவரை யாரும் கண்டிராத பெருமளவு ஆற்றலை இது வெளியிடுகிறது.

புளூட்டோனியம்-239 என்பது, நியூட்ரான்களுடன் கூடிய யுரேனியத்தின் கதிர்வீச்சை உள்வாங்குவதன் மூலம், எளிதில் அணுப் பிளவுக்கு உட்படக்கூடிய ஒரு ஐசோடோப் ஆகும்.

அணுகுண்டு, ஓப்பென்ஹெய்மர், அமெரிக்கா, ஹிரோஷிமா, நாகசாகி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

'கேட்ஜெட்' - முதன்முதலில் வெற்றிகரமாக உருவாக்கப்பட்ட அணுகுண்டின் முன்மாதிரி.

தனிப்பட்ட முறையில் புளூட்டோனியம் இயற்கையில் காணப்படுவதில்லை. சில யுரேனியம் படிவுகளில் புளூட்டோனியத்தின் சுவடுகள் மட்டும் காணப்படும்.

யுரேனியத்திலிருந்து போதுமான அளவு தூய புளூட்டோனியத்தைப் பெறுவதே மன்ஹாட்டன் திட்டத்தின் முக்கியச் சவாலாக இருந்தது. இதற்காக அவர்கள் வாஷிங்டனில் இருக்கும் ரகசிய ஹான்போர்ட் புளூட்டோனியம் உற்பத்தி ஆலையை பயன்படுத்தினர்.

இப்போது இது ஒரு அருங்காட்சியகமாக இருக்கிறது. அப்போது அது புளூட்டோனியம் உற்பத்திக்கான முதல் வணிக அணு உலை ஆகும். இது DuPont நிறுவனத்தால் இயக்கப்பட்டது. இந்நிறுவனம் இது அதன் லாபங்களைத் துறந்து, வெடிகுண்டின் வளர்ச்சியுடன் தொடர்புபடுத்தப்பட விரும்பாமல் தன்னை விலக்கிகொண்டது.

1945-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி, காலை 05:29 மணிக்கு, ஜோர்னாடா டெல் மியூர்டோ என்ற தொலைதூரப் பகுதியிலிருக்கும் பாலைவனத்தில் ‘கேட்ஜெட்’ வெடிக்கப்பட்டது. இதுதான் வரலாற்றில் முதல் அணு வெடிப்பு. தோராயமாக 19 கிலோ டன் அளவுக்கு ஆற்றலை வெளியிட்டது. இது கணக்கிடப்பட்டதை விட அதிக சக்தி வாய்ந்ததாக இருந்தது. பாதுகாப்பான தொலைவில் இருந்த சில கருவிகளையும் அழித்தது.

முதல் செயல்முறை அணுகுண்டுகள்

அணுகுண்டு, ஓப்பென்ஹெய்மர், அமெரிக்கா, ஹிரோஷிமா, நாகசாகி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ஜப்பானிய நகரமான நாகசாகியில் வீசப்பட்ட ‘ஃபேட் மேன்’ அணுகுண்டு

இந்த ‘கேட்ஜெட்’டின் செயல்முறை ராணுவப் பதிப்புகளான ‘லிட்டில் பாய்’ மற்றும் ‘ஃபேட் மேன்’ என்று அழைக்கப்படும் அடுத்த இரண்டு அணு குண்டுகள் ஜப்பானிய நகரங்களான ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் சுமார் 2 லட்சத்துக்கு மேலான மக்களைக் கொன்றன. இதில் பாதி பேர் வெடிப்பினாலும், வெடிப்பிலிருந்து வெளிப்பட்ட கதிரியக்கத்தாலும் இறந்தனர்.

சூரியனின் மேற்பரப்பை விட அதிக வெப்பத்தில் உருவான 'டிரினிடைட்'

அணுகுண்டு, ஓப்பென்ஹெய்மர், அமெரிக்கா, ஹிரோஷிமா, நாகசாகி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

எல்லாம் முடிந்ததும், பாலைவன நிலப்பரப்பு வண்ணக் கண்ணாடிச் சில்லுகள் போன்ற பொருட்களால் மூடப்பட்டிருந்தது

கேட்ஜெட் வெடித்தபோது உருவான வெப்பம் சூரியனின் மேற்பரப்பின் வெப்பத்தைவிட அதிகமாக இருந்தது. வெப்பம் பாலைவன மணலை உருக்கியது. நூற்றுக்கணக்கான மீட்டர் சுற்றளவில் ஒளிரும் கண்ணாடித் துகள்கள் போன்ற சில்லுகள் மழைபோல் பொழிந்தன.

எல்லாம் முடிந்ததும், பாலைவன நிலப்பரப்பு வண்ணக் கண்ணாடிச் சில்லுகள் போன்ற பொருட்களால் மூடப்பட்டிருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டனர். இவை பெரும்பாலும் பச்சை நிறத்தில் இருந்தன. சில அழகான கண்ணாடிக் கற்கள் போல இருந்தன. இந்த வரலாற்று நிகழ்வின் நினைவாக இக்கற்களின் மாதிரிகளைச் சேகரித்தனர்.

இவை ‘டிரினிடைட்’ என்று அழைக்கப்பட்டன.

இவற்றில் சிலவற்றை வைத்து சிலர் நகைகளையும் செய்துகொண்டனர்.

ஆனால் இது ஒரு மோசமான யோசனை என்பதை மிக விரைவிலேயே உணர்ந்தனர்.

டிரினிடைட்டில், அணு வெடிப்பினால் உண்டான தனிமங்கள் மற்றும் தீவிர கதிரியக்கத்தன்மை இருந்தது.

இன்று, டிரினிடைட் அதன் கதிரியக்கத்தின் பெரும்பகுதியை இழந்துவிட்டது. அதனை நாம் பாதுகாப்பாகக் கையாள முடியும்.

ஆனால் அது இன்னும் அணு வெடிப்புக்கான சாட்சிகளைக் கொண்டுள்ளது.

கதிரியக்க கூறுகள் காலப்போக்கில் மறைந்துவிடும், ஆனால் இந்தப் பொருளின் விசித்திரமான பண்புகள், மற்றும் விசித்திரமான கட்டமைப்புகள் மனித நாகரிகம் மறைந்த பிறகும் இருக்கும்.

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை


Sunday, July 23, 2023

தெரிந்ததும் தெரியாததும்: கவிஞர் தணிகை

 தெரிந்ததும் தெரியாததும்: கவிஞர் தணிகை





ஞாயிற்றுக் கிழமை காலை 6 மணி,ஸ்கூட்டரில் எடுத்துச் செல்லும் அந்த ஆட்டுக்குத்  தெரியாது இன்னும் சற்று நேரத்தில் தான் செத்துப் போகப் போகிறமென்று,


கிழக்கிருந்து மேற்கே ஆற்றங்கரை நோக்கிப் பறக்கும் அந்தக் கழுகுக்கு தெரியாது சற்று நேரத்தில் தனக்கு ஒரு பெரிய மீன் கிடைக்குமென்று ( கெண்டை ரகமே இப்போது கிடைப்பதில்லையாம் அழிந்து விட்டதாம் ஒரு 86 வயது மீனவரின் கவலை)


வடமேற்கிருந்து தென் கிழக்காக பறந்து செல்லும் அந்த கருங்கொக்கு கூட்டத்தின் கேப்டன் கொக்குக்குத் தெரியாது நாளை நாம் கேப்டனாக இருக்கப் போவதில்லையென்று


விரிசலுடன் எப்போ எப்போ? என்று கிடந்த பாலத்துக்குத் தெரியாது அடுத்த நொடி அது இடிந்து விழப் போகிறதென்று?


நிறம் மாறி காட்சி தந்த அந்த பூக்களுக்குத் தெரியாது  அவை எத்தனை மனித உள்ளங்களுக்குள் உற்சாகம் ஏற்படுத்தி விடுகிறதென்று?


இனப் பெருக்கத்தில் பெருகிக் கிடக்கும் நத்தைகளுக்குத் தெரியாது அரிக்கரண்டியால் அவை எத்தனை தூரம் வீசி எறியப் படப் போகிறோமென்று?


சில விளக்குகள் மட்டும் அணைப்பார் இன்றி நாளெல்லாம் எரிந்து கிடக்க, இந்த தெரு விளக்குக்கு மட்டும் தெரியாது அது சரியாக தினமும் அணைக்கப்பட்டு நீட்சி பெற்று வெளிச்சம் தரப் போகிறெமென்றும், ஒரு நாள் உழைத்து தேய்ந்து எரியாமல் எடுத்து எறியப் படப் போகிறோமென்று?


கறிவேப்பிலைக்குத் தெரியாது இப்போதெல்லாம் எப்படி இந்த‌ மனிதர்க்கு நல் அறிவு வந்தது அவர்கள்  நம்மை தூக்கி எறியாமல் மென்று தின்று இரும்புச் சத்து போன்ற பல சத்துகளை நம் மூலம் அடைகிறார்களென்று?


வாசகர்கள் இது போல் நிறைய  தெரிந்தது தெரியாதது, புரிந்தது புரியாதது, அறிந்தது அறியாதது பற்றி நக்கீரனும் சிவமும் திருவிளையாடலில் பேசுவது போல பேசிக் கொள்ளலாம் நேரத்தை பயன்படுத்த நேரத்தை பயப்படுத்த... இது விரயமல்ல சிந்தையை செப்பனிடுவது...


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை


Saturday, July 22, 2023

தமிழருவி மணியனுக்கும் கவிஞர் தணிகைக்கும் ஒரு தொடர்பு உண்டு: கவிஞர் தணிகை

 தமிழருவி மணியனுக்கும் கவிஞர் தணிகைக்கும் ஒரு தொடர்பு உண்டு: கவிஞர் தணிகை



நல்ல தமிழ் அறிஞர், தமிழருவி மணியன் அவர்கள் 1992 என நினைக்கிறேன் எனது மறுபடியும் பூக்கும் என்ற நூல் வெளியீட்டு விழாவில் மேட்டூர் தமிழ் சங்க நிகழ்வில் சிறப்பு சொற்பொழிவாற்றினார். நிகழ்வின் ஒருங்கிணைப்பாளராக‌ அன்றைய கொ.பெ.நா (கொ.பெ.நாராயணசாமி) என்னும் தமிழ் ஆசிரியர் அல்லது தமிழ் அறிஞர் தமிழ் சங்கத்தின் பொறுப்பாளர் இருந்தார் பூவோடு சேர்ந்து நாராக மணந்து அனைவரையும் கட்டி. நூலை நான் அந்த வெளியீட்டுக்கும் முன்பே விற்பனை செய்ய அல்லது கேட்பவர்க்கு விரும்புவார்க்கு விநியோகம் செய்ய ஆரம்பித்திருந்தேன் என்பதெல்லாம் வேறு கதை.


இன்று தமிழருவி மணியன் அவர்களின் துணைவியார் இருதய நோய் மற்றும் மருத்துவம் பற்றி அவர் பகிர்ந்திருந்த‌ ஒரு காணொளியை காலையில் பார்க்க நேர்ந்தது. சித்த மருத்துவ மேன்மை பற்றியும் இரு சித்த மருத்துவர்கள் அல்லது சித்தர்கள் பற்றியும் குறிப்பிட்டிருந்தார்.


பலனாக காலையில் இனி கறிவேப்பிலையை நானும் உட்கொள்வது என்று முடிவெடுத்து செயல் படுத்த ஆரம்பித்திருக்கிறேன்.  எங்கள் வீட்டில் கறிவேப்பிலை செடி நிறைய உண்டு. மண் சாரம் அதற்கு ஒத்துக் கொண்டது போலும். இவ்வளவு நாட்களாக அதைச் செய்யாதிருந்த நான் இன்று தமிழருவி மணியனின் காணொளி பார்த்து அந்த தூண்டு உணர்வோடு செய்ய ஆரம்பித்து உள்ளேன். நல்ல தூண்டு உணர்வைக் கொடுத்துதவியது அந்த பகிர்தல். இனி அதை என்றும் கடைப் பிடிப்பேன்.


 ஏன் எனில் ஒரு கைப்பிடிக் கறிவேப்பிலை ஒரு டம்ளர் நீரில் போட்டு மிக்ஸியில் இட்டு அரைத்துக் குடிக்க வேண்டுமாம்.காலையில் வெறும் வயிற்றில் அது நரம்புகளை புத்துணர்வூட்டி நமக்கு நல் புத்துணர்வு சக்தி தருகிறதாக சித்த வைத்தியம் சொல்கிறதாம். ஆனால் நான் வாயை மிக்ஸி ஆக கருதி அதன் பின் அத்துடன் ஒரு டம்ளர் பழைய சோற்றுத் தண்ணீருடன் சேர்த்துக் கொள்ள முடிவு செய்திருக்கிறேன்.


எனது அன்பு நண்பர் இப்போதெல்லாம் எழுதுவதில்லை எழுதினாலும் சில எழுத்துகள்  மட்டும் (ஹைகூ)எழுதி புரியாமல் முடித்துக் கொள்கிறீர் என அன்பாக உரையாடும்போது குறிப்பிட்டார். அவருக்காக இந்த பதிவு.


நிறைய விடயங்கள் தெளிவாக விளங்க வில்லை.அதில் ஒன்று:


குழந்தைப் பருவத்தில் எனது தலையில் மேல் பகுதியில் நீர்க்கட்டி தண்ணீர்பந்து போன்று உருண்டபடி இருந்ததாம். தாய் கதை கதையாக சொல்லக் கேள்வி...எப்படி வைத்தியம் செய்வது, என்ன செய்வது என அந்த சவாலை முறியடிக்க முடியாமல் மொத்த குடும்பமே திணறிக் கொண்டிருந்த போது அது 1962ன் காலம். நான் கைக்குழந்தை வயது ஒராண்டு கூட இல்லையாம்.


ஒரு சாமியார் அல்லது சித்தர் வந்திருந்தாராம் வீடு தோறும் பிச்சையெடுத்தபடி...அவர் குழந்தையாயிருந்த எனது தலையில் அவர் இடுப்பு பையில் இருந்த திருநீறை எடுத்து கண்மூடி தியானித்து அந்த தண்ணீர்பந்தளவு தலை மேல் இருந்த  நீர்க்கட்டி மேல் பூசி தடவி விட்டு, சரியாகி விடும் கவலைப்படாதீர் என்று சொல்லி சென்று விட்டாராம்.


மறு நாள் காலை விடிந்த போது தூங்கி எழுந்து பார்த்தால் அந்த நீர்க்கட்டி காணாமல் போயிருந்ததாம்... என்னாலும் இப்போது நம்பமுடியவில்லை. ஆனால் நடந்த உண்மை அதுதான். 


அதன் பின் காலத்தில் தவழ்ந்தபடி இருந்த குழந்தையான நான் அம்மா, அக்கா போன்றோர் கால் சேற்றுப் புண்ணுக்கு தடவி குணப்படுத்த‌ வைத்து இருந்த களிம்பு மருந்தை எல்லாம் எடுத்து வாயில் பூசிக் கொண்டிருக்கிறேனாம். அதை எல்லாம் எனது தாய் கவனித்து காப்பாற்றி இருக்கிறார் என்பது போன்ற செய்திகள் மேலும் உண்டு.


ஆதிபராசக்தி படத்தில் ஒரு காட்சி:உணர்ச்சி நடிகர் சுப்பைய்யா ஒரு உறி கட்டி கீழ் நெருப்பு மூட்டி பராசக்தியை அழைத்துப் பாடுவார் அபிராம பட்டராக . விண்ணில் தோன்றிய பராசக்தி தனது காதில் இருந்து ஒரு தோட்டைக் கழட்டி வானில் வீச அது நிலவாக ஒளிவீச‌ அன்று நிறை நிலவு நாள்தான் என்று நிலவில்லா நாளை மாற்றிக் காட்டி மன்னர் முதலினோர்க்கு ஆதிக் கடவூர் சார்ந்த அபிராம பட்டருக்கு சார்பாக அவர் உயிர் காக்க நடந்தது என்றெல்லாம் சொல்கிறார்கள்...


அவர் எழுதிய அபிராமி அந்தாதி இருக்கிறது 100 பாடல்களுடன் முதல் பாடலின் அந்தம் அடுத்த பாடலில் ஆதியாக...


பதினெட்டு சித்தர்கள் இருந்த பூமி, இன்னும் என்ன என்ன இருக்கிறதோ என தெரிந்து கொள்வதற்குள் ஆயுள் போதாது போலிருக்கிறது..


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.




 பி.கு:

ஒரு வில் ஒரு சொல் ஒரு இல்: இராமயணச் சுருக்கத்தில் இராமனுக்கு ஒரு வில், இராமனது ஒரு சொல் ராம,ஒரு இல் என்பது சீதை மட்டுமே என்பதைக் குறிக்க...


அதை அடுத்து: ஒரு வாள், ஒரு குதிரை, ஒரே பெண் (ஒரு மனைவி) இது சாண்டில்யன் காலத்தில் குறிப்பிட்ட மன்னர்கள் கதையில்


இப்போது ஒரு நாடு ஒரே வரி ஒரே தலைமை...இப்படிச் சொல்லலாமா?

 


Tuesday, July 11, 2023

தணிகைச் சித்தரின் பொன்மொழிகள் 2

 தணிகைச் சித்தரின் பொன்மொழிகள் 2



1. வாழ்வு முழுதும் கல்விதான்


2. பிரார்த்தனை மனமுருகி மௌனமாக இருந்தால்...


3.கடவுளுடைய முகங்களாக நிற்பவை மனிதர்களுடையதே


4. புவியின் பெரும் அதிசயம் தாஜ்மஹால் போன்றவையல்ல‌

   உயிரும் பிறப்பும்தான்.


5.மூளையை உறுப்பு தானம் செய்து இன்னும் 

  பயன்படுத்த முடியவில்லை மனிதத்தால்


6. உட்கொள்வதும் வெளித்தள்ளுவதும் நேர் விகிதம்


7. எங்கும் இருக்கிறது கடவுள் மொழி இயற்கை வழி.


8. தாயுடன் தாரம் தரும் உண(ர்)வுதான் அமிர்தம்


9. உடல் துன்பமும் வளர்சிதை மாற்றமும் ஞானிகளுக்கும் உண்டு


10. வாழ்வு முழுதும் தொடராதே கலவியை...