Wednesday, June 30, 2021

new police story: Kavignar Thanigai Tamil Nadu Law and order D.G.P Sailendra babu I. P.S...

 இங்கு சட்டம் ஒழுங்கு காவல் தலைவராக தமிழகத்தின் மதிப்பிற்குரிய சைலேந்திர பாபு ஐ.பி. எஸ் பொறுப்பேற்றிருக்கிற நாளில் இந்தப் படத்தை நான் சமர்ப்பிப்பதில் பெருமையுறுகிறேன்



 தமிழகத்தில் ஒரு அணி நல்ல அணி உருவாகிக் கொண்டிருக்கிறது

தலைமைச் செயலாளர் இறையன்பு ஐ.ஏ.எஸ்

காவல் துறைத் தலைவர் சட்டம் ஒழுங்கு: சைலேந்திர பாபு ஐ.பி.எஸ்.

பொருளாதார நிபுணர் குழு: ரகுராம் ராஜன், எஸ்தர் டப்ஃல், இன்ன பிறர்

சித்த வைத்தியர் சிவராமன் போன்றவர் அடங்கிய சுகாதாரக் குழு



தமிழகம் நல் பாதையில் அடி எடுத்து வைக்கும் காலத்தில் நாம்

தூத்துக்குடி, பெரிய குளம் போன்ற சம்பவங்களையும் நினைவில் கொள்ள வேண்டியதாகிறது...


மிக நல்ல படம். ஒரே வார்த்தையில் சொல்லப் போனால் சினிமா ஆர்வலர்களுக்கு அரிய விருந்து

ஹாங்காங் பவுண்ட் வசூலில் இரண்டு கோடிக்கு மேல் வசூலான படம்

நண்பர்களை கண் முன்னே இழந்த மனிதர் குடிக்கு அடிமையாகி வீழ்ந்து

மறுபடியும் அன்பால் எப்படி எழுந்து

குற்றவாளிகளை தண்டிக்கிறார் என்பதே கதையும் படமும்.



பிரமிப்பு

மற்ற ஜாக்கி சான் படங்களை விட இது ஒரு வகையில் டாப்

என்னே ஒரு தொழி நுட்பம்

2004ல் வந்த படம்

என்றுமே இளமையாய் இருக்கும் இது போன்ற படங்களை பார்க்காமல் விட்டால் அது நமக்கு இழப்புதான்.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை

100க்கு 80க்கும் மேல் மதிப்பிட வேண்டிய அரிய படம் . நல்ல பொழுது போக்கு...




ஒரு பெண்பல ஆண்களை மணக்கலாம் தென் ஆப்பிரிக்கா: கவிஞர் தணிகை

 பச்சை அறிக்கை சமர்ப்பிப்பு: ஒரு பெண் ஒரே நேரத்தில் பல ஆண்களை மணக்கலாம் தென் ஆப்பிரிக்கா: கவிஞர் தணிகை



ஒரு பெண் ஒரே நேரத்தில் ஒரே பாலினத்தாரை மணந்து கொள்ளலாம் மேலும் பல ஆண்களையும் மணந்து கொள்ளலாம் என்ற சட்ட முன் வரைவு பச்சை அறிக்கையாக சமர்ப்பிக்கப் பட்டதாகவும் அதற்கு ஆதரவு இருப்பதாகவும் சொல்லப் படுகிறது...


ஏன் அனைவரும் பிறக்கும் பிள்ளைகளும் கூட்டுக் குடும்பத்தினர் தாம் என்று சொல்லுங்களேன் என நியாயப் படுத்தலும் இருப்பதாக செய்திகள் இருக்கின்றன‌




மிஜோரம் போன்ற இடத்தில் கூட ஒரு பெண் பல சகோதரர்களை மணக்கும் வழக்கம் இருப்பதாக செய்தியும் ஒரு நபர் 34 மனைவிகளுடன் 84 குழந்தைகளுடன் ஒரே வீட்டில் வாழ்ந்ததாக ஒரே வீடு அல்ல அது ஒரு காம்ப்ளக்ஸ் அதைப் பார்க்கவே வெளி நாட்டினர் எல்லாம் வந்ததாகவும் அவர் சமீபமாக இறந்த செய்தியும் கண்டோம்.


கிறித்தவப் பிரிவில் கூட அது போன்ற ஒரு பிரிவு இருப்பதாகவும் செய்தி இருக்கிறது


பெண் வழிச் சமுதயாம் என்ற ஆரம்ப நிலைக்கே  உறவு மீறிய நாகரீகத்தை எல்லாம் பின்னோக்கித் தள்ளி உறவு சகோதர சகோதரி என்பதை எல்லாம் மீறி பழைய காட்டுமிராண்டித் தனத்துக்கு இட்டுச் செல்ல உலகு பலவாறாக அரசியலமைப்பு முறையில் முயல்கிறது என்பதற்கான சான்றுகளே இவை...


ஆனால் இயற்கைக்கு முரணான இவை எல்லாம் சீர் படுத்தப் பட வேண்டியவை. குழந்தைக்கு ஒரு அடையாளமில்லாமல் எல்லா குழந்தைக்கும் டி.என்.ஏ பார்க்க வேண்டிய நிலை அல்லது அவர்கள் குடும்பம் என்ற நிலை ஆனால் அதுசீர் குலைந்தால் உலகின் ஒழுக்க நியதிகள் எல்லாமே தலைகீழாகி விடும்...


கொலை, கொள்ளை, களவு யாவுக்கும் போதை சமுதாயத்துக்கும் இது வித்திடும் என்ற நீட்டல் பார்வை எல்லாம் பார்த்தால் இந்த உலகு இப்படியான சட்டம் வழியாக எல்லாம் மனித குலத்தை எங்கு கொண்டு செல்கிறது என்றே தெரியாத போது நாம் கொரானா அலை 3ல் இருக்கிறோம்.


ஒரே பால் இன மணமே ஏற்றுக் கொள்ள முடியாத போது இதெல்லாம் எப்படித்தான் அரசு எந்த அறிவியல் பார்வையுடன் ஏற்றுக் கொள்கிறதோ என விளங்க வில்லை...எனைப் போன்ற தீனமான குரல் மனித குலத்தை அழிவிலிருந்து காக்க...


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை




இடைவெளிகள் இடவெளிகள்: கவிஞர் தணிகை

 இடைவெளிகள் இடவெளிகள்: கவிஞர் தணிகை



சண்டையிட்டாலும் நாம் சகோதரரன்றோ? நண்பர்கள் நண்பர்களே!

கண்ணுக்கு கண்ணாய் இமையாய், உடுக்கை இழந்தவன் கை போல இருக்கும் உறவுகளே நட்புகளே!

மதிப்பிற்குரிய கக்கனைப் போல நானும் ஒரு இலவச வைத்தியம் செய்தேன் ஒரு கண்ணுக்கு அப்போது பிச்சைக்காரனாக நடத்தப்பட்டேன். காலம் என்னை கைவிட்டிருந்தது. நானே பல் வேறுபட்ட முகாம் நடத்தி வந்த எனது இளமை பல்லோருக்கும் நன்மை செய்ய வைத்தது எனக்கு என்று வரும் போது கைவிரித்து விட்டது

ஏலி ஏலி லெமா செபக்தானி என்ற யேசுவைப் போல நான் கடவுளை கேட்காமல் கிடைத்ததை பயன்படுத்தி 

இரண்டாம் கண்ணுக்கு செய்த போது ஒரு மரியாதையுடன் நடத்தப் பட்டேன் நட்பும் உறவும் காரணமாக...தேர்வு செய்த நல்ல லென்ஸ் வைத்துக் கொண்டேன்.


தினைத் துணையாம் நன்றி செயினும் 

பனைத் துணையாக் கொள்வார் பயன் தெரிவார் என்பதற்கேற்ப எதையும் நான் எப்போதும் மறப்பவனல்ல... அவை எல்லாம் வேறு...  கொள்கைப் பிடிப்பு என்பவற்றுள் போலித்தனம் இருக்கக் கூடாது...



1. மது எதிர்ப்பு பூரண மதுவிலக்கு என்ற கொள்கை, மதுவே எல்லா பாவங்களுக்கும் அடிப்படை என்பதில் இருக்கிறது...மகாத்மாவின் மூத்த மகனே குடிகாரர் என்பது வேறு...அவரின் வழி வந்த பேத்தி ஒருவர் தென் ஆப்பிரிக்காவில் சுங்க வரியிலிருந்து விலக்கு வாங்கித் தருகிறேன் என ஏமாற்றி பல கோடிகள் ஏய்த்து விட்டார் என கடந்த சில வாரங்களுக்கும் முன் தென் ஆப்பிரிக்க அரசால் தண்டிக்கப் பட்டு சிறை செல்ல காரணங்கள் இருந்தன என ஒரு வழக்கின் நீதி செய்தியாக வந்திருந்தது... அதெல்லாம் வேறு அவர் எண்ணம் சொல் செயல் யாவும் நமது மானிடத்துக்காக இருந்ததால் அவர் மகாத்மா...நல்ல வேளை நாம் பரவாயில்லை நமது நட்பு, உறவு, பிறரிடம் எல்லாம் மதுவின் தீமையை சொல்லி அதிலிருந்து விலக்கியே வருகிறோம்.


2. சைவ உணவை குடும்பத்தில் கடைப்பிடிக்கிறீர்களா? நான்,எனது தங்கை, இப்போது இல்லாத நண்பர் ஒருவர், எனது மகன் , எனது தாக்கத்தில் சைவ உணவையே கடைப்பிடித்து வருகிறோம்...நீங்கள் எப்படி என நீங்கள் தாம் முடிவு செய்து கொள்ள வேண்டும்.


3. பிச்சையிட வேண்டாம் என்கிறார் காந்தி அதில் உங்கள் நிலை என்ன?


4. காப்புறுதித் திட்டம் தேவையில்லை என்கிறார் காந்தியத்தில், நீங்கள் எப்படி? நாங்கள் எவருக்குமே வாழ்வுக் காப்புறுதித் திட்டம் ஏற்றுக் கொள்ள வில்லை அதற்கு எல்லாம் செலவு செய்து சேமிக்க எங்களிடம் ஒன்றும் இல்லை என்பதும் கூட காரணமாக நீங்கள் எடுத்துக் கொண்டாலும் சரி...



5. மதக் குறியீடுகள், சின்னங்கள் இன்னும் வேண்டுமா? நாங்கள் அதில் தெளிவாகி விட்டோம். ஆனால் எனது தாய்க் காலத்தில் எங்கள் வீட்டு முன் வைத்த சிறு விநாயகர் சிலைக்கு அனுதினமும் நீரும், நெருப்பும், சமர்ப்பித்தல் உண்டு.


6.  இலஞ்ச மறுப்பு எதிர்ப்பில் உங்கள் பணி என்ன? எனது பணி நிறைய வாங்குவதையும் கொடுப்பதையும் நான் வாழ் நாள் எல்லாம் கடைப்பிடிப்பதால் தான் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய நிலைக்கு சென்றுள்ளேன்.


7. இப்போது கொரானா கோவிட் 19 நோய்த் தொற்றுக்கு எதிராக தடுப்பதற்கான ஊசி என்று போடுகிறார்களே அந்த களப்பணிகளில் சென்று பாருங்கள் அதில் உங்கள் பிரதிநிதித்துவம் என்ன: எனது குரல் அவ்வப்போது அதன் நேரமையான விநியோகத்துக்காக ஒலித்தபடியே இருக்கிறது.


8. தூய்மை பாரதம் என்பதில் உச்சமாக மலம் அள்ளிய சேவையும், கழிப்பக தூய்மையும் செய்வதில் காந்தியம் உள்ளது அன்னை தெரஸாவின் சேவையும் உள்ளது அது என்னிடம் உள்ளது அதில் உங்கள் பங்கீடு என்ன?


9. கிராமியத் தொண்டில் எனது முக்கியமான 10 ஆண்டுகள் ஓடி வேண்டாத பகை  விடாத பிணி வாங்கிக் கொண்டேன் அதில் நீங்கள் எப்படி?


10 காந்தியம் + அரசியல் + ஆட்சி+  திட்டங்களில் மக்களுக்கு தேவையானதை ஆதரிப்பும், மது போன்ற திணிப்பில் எதிர்ப்பும் போராட்டமும் எடுக்கும் நிலை என்னுடையது உங்களுடையது...


11. காந்தியம் என்பது ஒரு பகுதி நேரப் பணியல்ல. வாழ்வின் பயன்.


12.சுட்டுப் பொசுக்குவது மட்டுமல்ல வன்முறை பிறர் பேசுவதை தடுப்பதும் குறுக்கிட்டு பேசுவதும் கூட‌

13. நாட்டுச் சர்க்கரை, பனை வெல்லம் மட்டும் பயன்படுத்துகிறீரா ?அஸ்கா வெண் சர்க்கரை பயன்படுத்தல் உண்டா?

14. செல்பேசி, மூடப்பட்ட அறையிலிருந்து எல்லாம் வெளியே வர வேண்டும்...

15. ஊர் உலகில் காந்தி அடையாளம் என்று காட்டிக் கொண்டு மிகவும் கீழ்த்தரமான மனிதராக இருந்தார் எல்லாம் நானறிவேன்.


இந்த நாட்டில் அஸ்ட்ரா ஜெனகா ஊசி மருந்தைக் கண்டறிந்த சீமாட்டி , சாரா கில்பெர்ட் விஞ்ஞானிக்கு விம்பிள்டன் அரங்கில் எழுந்து நின்று கைத்தட்டலும் பாராட்டும் கிடைத்தது போல நல்லது செய்வார்க்கு கிடைப்பதில்லை...மகாத்மா புகழ் பெற அயல் நாட்டு மனிதர்களும் ஒரு காரணம்.


ஆசான் ஜி என்னும் ஒரு குரு சொல்வது போல இங்கு புகை, மது, போதை, அத்துடன் நீலரேகை காதுகள் உள் புகும் வெளித் தெரியா சத்தம் என்று இளைய சமுதாயம் மூழ்கிக் கொண்டிருக்கிறது...இதை எடுத்து எழ வைக்க வேணுமெனில் அதற்குரிய அழுத்தம் வேண்டும்...மிக வேகமாக வளரும் தாவரம் வலுவாக இருக்காது...

தியான மார்க்கத்தில் யமத்தில் சொல்லப்படும் 5 மாபெரும் அம்சங்களில் ஒரிரண்டாவது இருந்தால் தான் தியானம் செய்ய முடியும் அதே போல நான் முன்பே கூறியவற்றுள் ஒரு சிலவாவது இருந்தால் மட்டுமே நீங்கள் அல்லது நாம் போதுமான நிலையில் வளர வாய்ப்பு இருக்கும்...


அதெப்படி தலை முழுதும், ஒன்று முடியின்மை, அல்லது நரை, மீசை மட்டும் ஒரே கறுப்பாக இருக்கிறதே அதெப்படி என்றே எனக்குத் தெரியவில்லை...முடிக்கு சாயம் பூசிக் கொண்டிருக்கும் தோற்றத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் காந்தியம் இல்லை...


உடனே எனது தொப்பியும், கண்ணாடியும் காரணமாக்கிக் கொண்டிருந்தீர், நான் எப்போதுமே ஒரு களப்பணியாளர் என்ற முறையில் அது என்னுடன் இப்போதும் ஒட்டிக் கொண்டிருக்கிறது...அதை எப்போது வேண்டுமானாலும் நான் கழட்டி எறிந்து உண்மையைச் சொல்ல வர முடியும்...


 உப்பென்றும் சீனியென்றும் உள் நாட்டுச் சேலை என்றும் செப்பித் திரிவாரடி கிளியே செம்மை மறந்தாரடி...

    சொந்த அரசும் புவிச் சுகங்களும் மாண்புகளும் அந்தகர்க்குண்டாகுமோ .... இன்பமுண்டோ....

    சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தையிரங்காரடி கிளியே செய்வதறியாரடி...


நன்றி

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை


பி.கு.

உங்கள் விருப்பப் படி என்னை சேர்த்துக் கொள்ளும் போதும் நான் கேட்க வில்லை

விலக்கும் போதும் கேட்க வில்லை

இப்போது துணைக் குழு என்று சொல்லும் போதும் 

யார் தலைமைக் குழு என்று அறியாத போதும்... அதிக கவனம் கொள்வதில்லை...

அமைப்பு ரீதியாக , இயக்க முறைமைகளுக்கு ஏற்ப  செயல்பாடுகள் இருந்தால் மட்டுமே எதுவும் வளப்படும் வலுப்படும்... இது ஒரு மனிதன்  பின்னே அனைவரும் ஒருங்கிணைய மகாத்மாவின் பாதையாய் தெரியவில்லை...





    


Sunday, June 27, 2021

உயிர் காக்கும் முயற்சியில் க.முகமது சாஹுல் அமீத் இளம் விஞ்ஞானி : கவிஞர் தணிகை

 thanks: BBC Tamil

Natarajan Sundar

உயிர் காக்கும் முயற்சியில் க.முகமது சாஹுல் அமீத் இளம் விஞ்ஞானி அவசியம் அறிக: கவிஞர் தணிகை

ஆக்சிஜன் அளவு குறைந்தால் செல்போனில் எச்சரிக்கை - விழுப்புரம் இளைஞரின் புதிய

முயற்சி

உடலில் ஆக்சிஜன் அளவு குறைந்தால், அதை அலைப்பேசியின் மூலம் தெரிந்து கொண்டு முன்னெச்சரிக்கையாக இருப்பதற்கு உதவும் புதிய கருவி ஒன்றை உருவாக்கியுள்ளார் விழுப்புரத்தை சேர்ந்த க.முகமது ஷாகுல் ஹமீத்.

25 வயது முகமது ஷாகுல் ஹமீத் மின்னியல் தகவல் தொழில்நுட்ப பிரிவில் இளங்கலை பொறியியல் முடித்துள்ளார். கடந்த ஆண்டு தனது படிப்பை முடித்த இவர், கொரோனா நோய்த்தொற்று காரணமாக வீட்டிலிருந்தபடியே பல்வேறு தொழில்நுட்ப சாதனங்களை உருவாக்கியுள்ளார். அதில் ஒன்றுதான் ஆக்சிஜன் எச்சரிக்கை பாதுகாப்பு சாதனம் (Oxygen Alert Safety Device) .

கொரோனா இரண்டாம் அலையால் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு பலர் உயிரிழந்ததை கருத்தில் கொண்டு, இந்த புதிய கருவியை உருவாக்கியுள்ளார்.

ஆக்சிஜன் அளவு குறைந்தால் செல்போனுக்கு தகவல்

கொரோனா இரண்டாம் அலையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக மருத்துவமனைகளின் வெளியே ஆம்புலன்ஸ் வாகனங்கள் வரிசையாக நிற்பதை செய்தி ஊடகங்களிலும், சமூக வலைத்தளத்திலும் பார்த்தபோது மிகவும் வேதனையாக இருந்தது. ஆகவே இதனை மையமாக கொண்டு ஆக்சிஜன் எச்சரிக்கை பாதுகாப்பு சாதனத்தை உருவாக்கினேன் என்கிறார் பொறியாளர் முகமது ஷாகுல் ஹமீத்.

குறிப்பாக இது வீட்டில் தனியாக இருக்கும் வயதானோர் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களுக்கு பெரிதும் பயன் தரும் என்கிறார் முகமது ஷாகுல் ஹமீத்.

"வீட்டில் தனிமையாக இருக்கும் வயதானவர்கள், நோய்வாய்ப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் அளவு குறைந்தால், உடனே அவர்களது குடும்பத்தினர் செல்போனுக்கு எச்சரிக்கை தகவல் கொடுக்கும் வகையில் இந்த சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒருவருக்கு மூச்சுத்திணறல் அல்லது ஆக்சிஜன் அளவு குறைந்தால் அவர் ஆபத்தான நிலைக்கு செல்வதற்கு முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள இந்த சாதனம் உதவும்.

இந்த சாதனம் வாட்ச் போன்று கையில் அணியும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. வீட்டில் தனியாக இருப்பவர் இந்த சாதனத்தை பொருத்திக்கொண்டால், அவருக்கு உடலில் ஆக்சிஜன் அளவு குறையும் போது உடனடியாக அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் செல்போனுக்கு எச்சரிக்கை தகவல் அனுப்பிவிடும்," என்கிறார் இளைஞர்.

மருத்துவமனைகளிலும் பயன்படுத்தலாம்

கூடுதலாக இதற்கென செயலி ஒன்றையும் இவர் உருவாக்கியுள்ளார். அதன் மூலமாகவும் ஆக்சிஜன் அளவை செல்போனில் தெரிந்துகொள்ளலாம்.

"இந்த செயலியின் முக்கிய செயல்பாடானது, மருத்துவமனையில் அதிகமானோர் அனுமதிக்கப்பட்டிருந்தால், அவர்கள் அனைவரது ஆக்சிஜன் அளவு எவ்வளவு உள்ளது என்று ஒரே நேரத்தில் மருத்துவர்கள் கண்காணிப்பது கடினமாகும். ஆனால் நோயாளிகள் அனைவரும் இந்த ஆக்சிஜன் எச்சரிக்கை பாதுகாப்பு சாதனம் அணிந்திருந்தால், அவர்களின் அனைவரது ஆக்சிஜன் அளவு எவ்வாறு உள்ளது என்பதை ஒருங்கிணைக்கப்பட்ட இந்த செயலியில் பார்க்கமுடியும்.

அதில், நோயாளிகளுக்கு ஆக்சிஜன் அளவு 95க்கு கீழ் குறையும்போது அதனை இந்த செயலி மூலமாக சுலபமாக தெரிந்துகொள்ள முடியும். இதனால் ஆக்சிஜன் உதவி தேவைப்படும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கருவியை மருத்துவர்கள் பொருத்திக் கொள்ளலாம். இதன் மூலமாக மருத்துவர்களுக்கு பணிச்சுமை குறையும், நோயாளிகளும் பயம் இல்லாமல் இருக்கலாம்," என்கிறார் ஷாகுல் ஹமீத்.

கொரோனா மட்டுமின்றி அன்றாட வாழ்விலும் பயன்படுத்தலாம்

இந்த சாதனத்தை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமின்றி, அன்றாட வாழ்விலும் பயன்படுத்தும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார் அவர்.

"வீட்டில் முதியவர்கள் அல்லது நோய்வாய்ப்பட்டவர்கள் எதிர்பாராத விதமாக மூச்சுத் திணறல், மாரடைப்பு ஏற்பட்டால் உடனடியாக குடும்பத்தினரை உதவிக்கு அழைக்க முடியாத சூழல் ஏற்படலாம். அப்போது, ஆக்சிஜன் எச்சரிக்கை பாதுகாப்பு சாதனத்தின் மீது பொருத்தப்பட்டுள்ள அவசர அழைப்பு பொத்தானை (Button) அழுத்தினால், அவர்களது குடும்பத்தினர் செல்போனுக்கு உடனடியாக எச்சரிக்கை தகவல் மற்றும் கால் சென்றுவிடும். இதனால் வீட்டில் அல்லது தனியறையில் இருக்கும் முதியோர் அல்லது நோய்வாய்ப்பட்டவருக்கு அவசர மருத்துவ உதவி உடனடியாக வழங்க முடியும்," என்கிறார் இந்த இளம் பொறியாளர்.

குடும்பத்தினர் வேலைக்குச் சென்றாலும் அல்லது வெளியே எங்கு சென்றாலும் வீட்டில் இருப்பவர்கள் உடல்நலம் குறித்து முன்னெச்சரிக்கையாக இருக்கவே இந்த சாதனத்தை உருவாக்கியதாக ஷாகுல் கூறுகிறார்.

இந்த கருவி எப்படி செயல்படுகிறது?

"வாட்ச் போன்று கையில் அணிந்திருக்கும் இந்த சாதனம் கைவிரலில் பொறுத்த பட்டிருக்கும் ஆக்சிஜன் மீட்டர் சென்சார் உதவி மூலமாக உடலில் உள்ள ஆக்சிஜன் அளவை கண்காணிக்கிறது. ஒருவேளை உடலில் ஆக்சிஜன் அளவு 95க்கு கீழ் குறையும்போது, கையில் இருக்கும் மைக்ரோ கன்ட்ரோலருக்கு (Micro Controller) ஆக்சிஜன் குறைவாக இருக்கிறது என்ற தகவலை தெரிவிக்கும்.

இதைக் கையில் பொருத்தப்பட்டிக்கும் ட்ரான்ஸ்மீட்டர் அதனோடு இணைக்கப்பட்டிக்கும் ரிசீவருக்கு எச்சரிக்கை தகவலாக உடனடியாக அனுப்பும். பின்னர் குடும்பத்தினர் செல்போன் எண்கள் சேகரிக்கப்பட்ட அந்த ரிசீவர் கருவியானது, இதனோடு இணைக்கப்பட்ட குடும்பத்தினர் தொலைபேசி எண்களுக்கு உடனே எச்சரிக்கை குறுஞ்செய்தி அனுப்பிவிடும். பிறகு அடுத்த 30 வினாடிகளில், அவசர எச்சரிக்கை அழைப்பு செல்லும் வகையில் இந்த சாதனம் வடிவமைக்கப்பட்டுள்ளது," என்றார்.

"தற்போது இந்த சாதனத்திற்கு காப்புரிமை பெறுவதற்கான வேலையில் ஈடுபட்டுள்ளேன். கொரோனா ஊரடங்கு காலத்தில் இதனைத் தயார் செய்ததால் எனக்கு தேவையான உபகரணங்கள் கிடைக்க சிரமமாக இருந்தது. அதன் காரணத்தினாலேயே இந்த சாதனம் கொஞ்சம் பெரிய வடிவில் உருவாக்கப்பட்டது. வரும் நாட்களில் இதை மேலும் சிறிய வடிவில் மாற்றி, மக்கள் செயல்பாட்டிற்கு கொண்டும் செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்.

மேலும் எதிர்காலத்தில் அன்றாட வாழ்வில் மக்கள் பயன்படுத்தும் விதமாக, ஐஓடி (Internet Of Things) மையமாக கொண்டு இயங்கும் வகையில் பல்வேறு சாதனங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளேன்," என முகமது ஷாகுல் ஹமீத் தெரிவித்துள்ளார்.

இளம் பொறியாளரின் பிற கண்டுபிடிப்புகள்

இதற்கு முன்னதாக இவர், சாலையில் வாகன விபத்துக்களை தடுக்கும் சாதனத்தை உருவாக்கினார். இதற்காக இந்திய அளவில் முதல் பரிசையும், ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற சர்வதேச போட்டியில் மூன்றாம் பரிசும் பெற்றுள்ளார். இதனையடுத்து வெளியே செல்லும் பெண்களுக்கு மற்றவர்களால் இடையூறு ஏற்பட்டால் செல்போன் இல்லாமல் அருகேயுள்ள காவல் துறையினருக்கும் மற்றும் பெற்றோருக்கும் எச்சரிக்கை தகவல் அனுப்பும் சாதனத்தை உருவாக்கியிருக்கிறார்.

மூன்றாவதாக கொரோனா முதல் அலையின் போது தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்து கொடுக்கும் ரிமோட் மூலமாக இயங்கக் கூடிய சிறிய கார் (Tiny Robot) உருவாக்கினார்.

இவர் கண்டுபிடித்த சாதனங்களை‌ பாராட்டி இவருக்கு ரோபாட்டிக்ஸ் அகாதமி, விருது வழங்கியுள்ளது. மேலும் இவரின் படைப்புகளால் சர்வதேச சாதனையாளர் புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளார்.

நன்றி: பிபிசி

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள தமிழக வீரர்கள்

1. பவானி தேவி - வாள்சண்டை
2. சத்தியன் ஞானசேகரன் - டேபிள் டென்னிஸ்
3. சரத் கமல் - டேபிள் டென்னிஸ்
4. இளவேனில் வாலறிவன் - துப்பாக்கிச் சுடுதல்
5. நேத்ரா குமணன் - பாய்மரப் படகுப்போட்டி
6. கணபதி - பாய்மரப் படகுப்போட்டி
7. வருண் - பாய்மரப் படகுப்போட்டி



8.சாஜன் பிரகாஷ் நீச்சல் வீரர் நெய்வேலி

Thursday, June 17, 2021

தணிகை தடுப்பூசி போட்டுக் கொண்ட கதை: கவிஞர் தணிகை

 தணிகை தடுப்பூசி போட்டுக் கொண்ட கதை: கவிஞர் தணிகை



முதலில் கல்லூரியில் இருந்து 10 செவிலியர்களும் நானும் டீன் மற்றும் நிர்வாகத்தின் உத்தரவுப் படி நாட்டாண்மைக் கட்டடத்தில் இயங்கி வரும் சேலம் இணைச் சுகாதார இயக்குனர் அலுவலகத்திற்கு கூட்டம் கவனிக்கச் சென்றோம். அரசு அலுவலர்கள் அவர்கள் வழக்கப் படி தடுப்பு மருந்து கொடுப்பதை பிரமாதமாக எடுத்துரைத்தனர்...


கல்லூரியில் ஒரு தடுப்பூசி மையம் அமைக்கலாமா என்ற நிலை மாறி அது இணைச் சகோதர கல்லூரிக்கு மாற்றி அமைக்கப் பட்டது.


 மருத்துவர்கள், நிர்வாகிகள் அனைவரும் சென்று தடுப்பூசி போட்டுக் கொண்டனர். எனைப் போல பாதி பேர் அதை எப்படி தவிர்க்கலாம் என யோசித்துப் பார்த்து போடாமல் இருந்தோம் என்னதான் டீன் அவர்களும், நிர்வாக அலுவலரும், மருத்துவமனையின் முதுநிலை மேலாண்மை நிர்வாகியும் சொன்ன போதும்.


ஒருக் கட்டத்தில் நிறைய பேர் இறந்த செய்திகளும் வந்து தாக்கின.

எனதருமை நண்பர்கள் சிலர் சிகிச்சைக்காக மருத்துவ மனைகளின் படுக்கைகள் வரை சென்று வந்தனர் பல நாட்கள் அவர்களுடைய அனுபவம் செய்திகளாக எங்கள் காதுகள் வரை எட்டின. அதிலும் எனது நண்பர் அமீன் பாஷாவின் 80 சதவீதத்திற்கும் அதிகமான நோய்த் தாக்குதலும் அதிலிருந்து துணிச்சலுடன் மீண்டு மறு வாழ்வுக்கு மீண்ட வரலாறும் குறிப்பிடத் தக்கவை.


இது ஒரு உலகளாவிய மருத்துவ வியாபாரத்தை ஊக்குவிக்கும் நிகழ்வுகளாகவே இருந்த போதிலும் சாதாரண மனிதர்கள் பிழைக்க குறைந்த பட்சம் உயிர் விடாமல் இருக்க தற்காலிக தடுப்பூசிகள் அவசியம் என்றும் அப்படி போட்டுக் கொண்ட போதும் அவர்கள் தற்காப்பு நடவடிக்கைகளே காக்கும் என்ற நிலைப்பாடும் எல்லா அலைகளுக்கும் தடுப்பரணாக ஒரு தடுப்பூசி தயாரிக்கும் பணி நிறைவடைந்தால் அதை ஓரிரண்டு ஆண்டுகளில் மறுபடியும் உலகு பயன்படுத்த நேரிடும் என்பவை யாவும் செய்திகள்.


மரணம் வரை கொண்டு செல்லாது என எல்லாராலும் அறிவுறுத்தப் பட்டதால் நானும் தடுப்பூசி போட முயன்றேன்.

அதன் கதை தான் இது...கல்லூரியில் சுலபமாக போட்டுக் கொண்டிருக்கலாம் ஆனால் அப்படி போட்டுக் கொண்டிருந்தால் இவ்வளவு அனுபவம் கிடைக்குமா என்பது கேள்விக்குறிதான். அனுபவமே கடவுள் என்பார் கவிஞர் கண்ணதாசன்.


அரட்டை அரங்கப் பேச்சரங்கில் தேர்வு பெறுவார்க்கு 6 மாதம் கணினி பயிற்சி இலவசம் என தாரையில் ஒரு பயிற்சிப் பள்ளி சொல்லியது போகவில்லை,

நேருயுவக் கேந்திரத்தில் கணினி பயிற்சி தந்தார்கள்...போக வர இருந்தும் போகவில்லை

ஆனால் கணினிப் பணி எனக்கு எழுத உதவுகிறது...


தங்கை இந்தி இந்திப் பண்டிட் பாலசுப்ரமணியம் என்னும் எனதருமை வரலாற்று ஆசிரியரிடம் சென்றார் அவர்க்கு அது பயன்பட்டதாக இல்லை...

கற்றுக் கொள்ள மறுத்த எனக்கு இந்தியா எங்கும் சுற்றும் பணி...தேவைப்பட்டது ஆனால் கற்கவில்லை.


அதே போல செவிடன் காதில் ஊதிய சங்கைப் போல அவர்கள் சொல்வதை எல்லாம் கேட்காமல் இருந்த நாங்களே ஊசி போட வாய்ப்பை மருத்துவக் கல்லூரியில் வழங்கினர், செல்லவில்லை

சரி இளம்பிள்ளை பொது சுகாதார மையத்திற்கு நேரம் குறித்து வரச் சொன்னார்கள் செல்லவில்லை.

அப்படியே கொஞ்ச காலம் போயிற்று...


நான் முதலில் கல்லூரி விடுமுறை இடைவெளியில் முழு ஊரடங்கின் போது நடந்தால் எட்டி விடும் தூரத்தில் உள்ள கோம்பூராங்காடு பொது சுகாதார மையத்தை அணுக விசாரிக்க நடைப்பயிற்சியின் போது துணைவியுடன் சென்றேன்...அங்கிருந்த பெண் எப்போதும் காலை சுமார் 7 மணியிலிருந்து 8 மணிக்குள் வந்து பாருங்கள் என்றார்.


எந்தவிதமான பதிவும் அனுமதிச் சீட்டு போன்ற எந்தவித அங்கீகாரமும் வந்து போனதற்கும் தரவில்லை.

மறு நாள் காலை சென்றேன்...கயிறு கட்டி அதில் ஒரு கணினியால் அச்சடிக்கப் பட்டு இன்று ஊசி போடுவது இல்லை என்று கட்டி வைத்திருக்க பார்த்து விட்டுத் திரும்பினேன்.


திரும்பும் போது அருகே உள்ள எனது குடும்ப நண்பர்கள் வீட்டில் நண்பர் குருவை தடுப்பூசி'/ தடுக்காத ஊசி போட வேண்டும் எனக்கு கொஞ்சம் தெரிவி காலையின் நான் வரத் தேவையிருக்காது என்றேன்.


ஒரு நாள் ...இரண்டாம் தவணை போடுவதற்கும், உங்களுக்கு எல்லாம் இல்லை என்றார்கள் நான் யார் என்று அறியாமலேயே ...


உடனே அங்கிருந்த சுகாதார மையத்தின் மருத்துவரை அணுகி என்னைப் பற்றி நான் ஒரு சுகாதார முன் களப் பணியாளர் எனக்கு அவசியம் வேண்டும் என்றேன், கல்லூரிக்கு சென்றால் நான் தான் முதல்வனாக நின்று மக்களை எல்லாம் சந்தித்தாக வேண்டும் என்ற நிலை, மேலும் பொதுப் பேருந்தில் தினமும் சுமார் 4 மணி நேர பயணம் பணிக்காக...எனவே தேவை உணர்ந்தேன்...


அவர் இத்தனைக்கும் எனது வழக்கறிஞர் நண்பர் ஒருவரின் தம்பி மகன் என்பதும், அவர் எங்களது குழுமத்தின் கல்லூரியில் தாம் பயின்றவர் என்பதும் செய்திகளாகத் தெரிந்தன...


நாளை வாருங்கள் பார்ப்போம் என்றார், மறு நாள் செல்ல அன்று ஊசி வரவில்லை என பதில்


அதை அடுத்து மற்றொரு நாள் சென்று ஒன்று அனுமதிச் சீட்டு தரும் ஏற்பாடையாவது செய்து தரவேண்டும் இல்லையேல் வரிசையாக வருவார்க்கு உரியபடி முன் பின் வந்தவர்க்கேற்ப வழங்க வேண்டும் முதலில் வந்தவர்க்கு முதல் ... என இருக்க வேண்டும் எனச் சொல்லி விட்டு


அங்கு அத்தனை பேரும் வரிசையில் நின்றிருக்க அரசியல் கட்சி பிரமுகர்கள் இருவர் மிகவும் ஒய்யாரமாக தங்கள் மனைவி மார்களுடன் உள்ளே சென்று இருக்கையில் அமர்ந்திருந்தனர்...


வெளியில் நிற்பார் எல்லாம் மனிதராக இருப்பதாக அவர்களுக்குத் தெரியவில்லை

உடனே நான் மருத்துவரிடம் மறு நாள் வரச் சொன்னவரிடம் தொடர்பு எண் கேட்க அவரோ முன் எழுதி ஒட்டப்பட்டிருந்த நிலவழித் தொடர்பு எண் குறித்துக் கொள்ளச் சொல்ல, நான் அதைப் பற்றி எனது முதல் சந்திப்பிலேயேக் கேட்டதற்கு அந்தப் பெண் அங்கிருந்தவர் நிலவழி தொடர்பு பேசியை எவருமே எடுக்க மாட்டார்கள் பயனில்லை என்றாரே எனக் குறிப்பிட்டேன்


உடனே ஒரு தொடர்பு எண்ணைக் குறிப்பிட்டார், அது யாருடையது எனக் கேட்டேன் பெயர் தந்தார் அது மருந்தாளுனர் பெயர்...அவர் நல்ல மனிதர் போதுமான முறையில் பொறுப்புடன் பேசி உதவி வர அந்த முதல் நாளிலேயே நங்கவள்ளி சென்றால் போட்டுக் கொள்ளலாம் என்றனர்.8 கி.மீ தள்ளி எல்லாம் சென்று போட்டுக் கொள்ள வாகனம் இல்லை நான் இங்கேயே போட்டுக் கொள்கிறேன் என்றேன்...


மறு நாள் மறுபடியும் முற்றுகை அப்போது மருந்து இல்லை இங்கே வராது வேண்டுமானால் உங்களுக்கு கோவி ஷீல்ட் போட நான் ஏற்பாடு செய்வதாக இரண்டு  நண்பர்கள் என்னுடன் இருசக்கர வாகனத்தில் வர...ஒருவர் என்னை அழைத்துச் செல்லும் எனது அன்புத் தம்பி பாலா அவர் மின்வாரியத்தில் முன்களப் பணியாளர், மற்றொருவர் ஒரு கல்லூரியின் முதல்வர் அவர் மகா எளிமையாக வந்திருந்தார், அவருக்கும் எனக்கும் நீண்டகால நட்பு தேசிய சேவை மாணவர் பணிகள் மூலம்...எல்லாம் சென்றோம் செவிலியரை சந்தித்தோம். சகோதரி நல்ல நிலையில் தாம் இருந்தார்.


வழிகாட்டினார்...ஆனால் அன்று மாவட்ட ஆட்சியரின் உத்தரவு எவருக்கும் போட வேண்டாம் என்று...மேலும் நாங்கள் அலுவலக ரீதியாக மட்டுமே வேண்டும் என்றும் செய்தி சொல்லி இருந்தோம்.


அங்கேயும் வேலை நடக்க வில்லை...மீண்டும்...நங்கவள்ளியிலும் வேலை நடக்கவில்லை என்று திரும்பினோம்


அதை அடுத்த மறு நாள் உள்ளூரிலேயே  11 மணி வாக்கில் வந்து ஊசி போட இருக்கிறார்கள் கேட்பவர்க்கு சொல்லுங்கள் என்றார் ஒரு வீட்டுக்கு வந்து ஆக்ஸிஜன் மற்றும் வெப்ப நிலையை அறிந்து செல்லும் இளைஞர்...


அந்த நாளில் எவருமே வரவில்லை...அன்று மாலை மீண்டும் குரு குறுஞ்செய்தி வந்திருக்கிறது நாளை ஒவ்வொரு மையத்துக்கும் 150 கோவிஷீல்ட், ,40 கோவேக்சின் பொது மக்களுக்கு என,, சேலம் கேம்ப் 300, சந்தைதானம்பட்டி 150 அதே போல 40 , நங்கவள்ளி 300 இப்படி பல ஊர்களிலும் பட்டியல் செய்தியாகத் தெரிவிக்கப்பட்டிருக்க‌ Covi Shiled result is 90% Covaxin 81% But covi Shield price is very less than Covaxin...

அதை அடுத்த நாளான இன்று காலை வழக்கம் போல கல்லூரிக்கு செல்வது போல 4 மணி வாக்கில் விடியலில் எழுந்து எல்லா முறைமைகளையும் முடித்து விட்டு 6 மணி சுமாருக்கு கோம்பூராங்காடு சென்றால் அங்கே எனக்கு முன்பே சுமார் 60 பேர்...அவர்களை விட்டு விட்டு இடத்தைப் பார்த்துக் கொள்ளச் சொல்லி சென்ற சிலர் இப்படி கட்டிய கயிறுக்கு வெளியே 10 பேர் கடந்து நான் 

 அதிகாலை 4 மணியில் இருந்தே காத்திருக்கிறார்கள் என்றார்கள். எனக்கும் பின் இருந்த பெண் உறுதியாக கிடைக்கும் என்றால் நான் பாருங்கள் இன்று இரவு 2 மணிக்கெல்லாம் வந்து விடுகிறேன் என்றார். நான் இங்கேயே வந்து படுத்துத் தூங்கிக் கொள்வது இரவெல்லாம் என்றேன்.

சுமார் 8.30 மணிக்கு அறிவிப்பு பலகையில்

18 வயதுக்கு மேற்பட்டு 45 வரை 150 கோவி ஷீல்ட்

இரண்டாம் தவணைதாரர்க்கு 12 covaxin

முதல் தவணை போட்டுக் கொள்ள விரும்பும் 45 வயதை மீறியவர்க்கு 18 என்றும் 


அனைவர்க்கும் அறிவித்தனர்...


அதே நேரம் மீதி இருக்கும் நபர்களுக்கு இல்லை போகலாம் என்றதும் அதுவரை ஒரே வரிசையில் இருந்தாரில் பலர் பின் இருக்க சிலர் முன்னே சென்று நின்று கொண்டனர்...காவலர் அதை முடிந்த வரை சரி செய்ய முயன்று வந்தார் எனினும் அது சரியாக வில்லை. வரிசை இரண்டு சிறு வரிசைகளும் ஒரு நீண்ட வரிசையும் என மூன்று வரிசையாகியிருந்தது...


மருத்துவரும் வந்து விட்டார்.


என் போன்றோர்க்கு மறுபடியும் இல்லை என்றார்கள்... ஆனால் கபாலீஸ்வரர் கோவிலின் முட்டைக்கார கெமிகல் கம்பெனியின் அதிபர் சாமியார் வேடம் பூண்ட எனது நண்பர் கிருஷ்ணன் சிறப்பு அனுமதி அளிக்கப் பட்டு உள் புகுந்து ஊசி போட்டுக் கொண்டு சென்றார் என்னையும் அவர் பார்த்தார்,சற்று நேரம் கழிந்தது பெரியவரே போங்கள் போங்கள் என்றார் என்னைக் காவலர்.


நான் சென்று மருத்துவரை அணுகினேன், அவரோ காவலரை அணுகச் சொன்னார், அவரையும் அணுகினேன் அவரும் எனது அடையாள அட்டையை வாங்கிப் பார்த்து விட்டு பதில் சொல்வதற்குள் அவரை பிறர் அழைக்க உள் சென்றார், அதன் பின் நான் மறுபடியும் அணுக, உங்களுக்குத் தான் முதலிலேயே சொல்லி விட்டேனே காத்திருங்கள் என்றார்.


நானும் வரிசையில் நின்ற இடத்தில் இருந்த நண்பரிடம் சொல்லி விட்டு தனிமையாக ஒதுங்கி அமர்ந்தேன் நிழலில் சற்று நேரம் செல்ல சிலரை தனி வரிசையாக முன்களப் பணியாளர் என்ற முறையில் 10 பேருக்கு அனுமதி நீங்கள் தாம் கடைசி என்றார்.


அந்த டீ சர்ட் போட்டவர் பின் நில்லுங்கள் என்றார்

அதன் பின் வந்தவரை எங்களுக்கும் முன் நிற்க வைத்தார்

எனக்கும் பின் வந்த ஒரு போக்குவரத்துப் பணியாளரை எனக்கும் முன் அனுமதித்தார்

கடைசியாக என்னையும் அனுமதித்தார்.


உடனே பக்கத்தில் இருந்த ஒரு நபர் மிகக் கடுமையாக பேச ஆரம்பித்தார் முதல் தவணை போடத்தான் நாங்களும் வந்திருக்கிறோம் என...இவர்களை மட்டும் ஏன் அனுமதிக்கிறீர் என்றார், முன்களப் பணியாளர் என்ற முறையில் என்றார் காவலர், நாங்களும் அரசுப் பணியாளர்தாம் என்று இவர் கூட நேற்று சரியாகப் பேசினார் இன்று இவருக்கு முன் நாங்கள் வந்து விட்டோம் என்று என்னையும் சேர்க்க ஆரம்பித்தார் தனது சாடலுக்கு.


இதற்கிடையே எனது முன் இருந்த டீ சர்ட்காரர் தனது இரு மகள்களையும் கொண்டு வந்து நிறுத்த பக்கத்து வரிசையில் இருந்த ஒரு பெண் பிடித்துக் கொண்டார் உடனே கடைசி இரண்டு பேரை நிறுத்துங்கள் என என்னையும் சேர்த்து போடாமல் நிறுத்த முயல‌


எழுதுபவரோ இவரது கார்டை வாங்கி எழுத முயன்று விட்டேன், என எனது ஆதார், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை வாங்கியவரை எழுதாதீர் என உத்தரவளிக்க ஆள் ஆள் ஆரம்பித்துவிட்டனர்.

அதில் வேறு நான் இவர்களைப் பற்றி எல்லாம் உரிய முகத்தைக் காட்டி விடுவேன் என அவர்களுக்குத் தெரியாமல் நான் ஒன்றுமே தெரியாதார் போல அமைதியாக அதுவரை இருந்தேன்...


கடைசியாக காவலர், மருத்துவரைக் காண்பிக்க, மருத்துவர் காவலரைக் காண்பிக்க இருவரும் என்னிடம் பதில் சொல்லாமல் தவிர்த்தனர்.

அதற்குள் ஒரு வாகன ஓட்டி ஒரு பெண்ணுக்கு சார்பாக பேசி நீங்கள் எங்கிருந்து வருகிறீர் , தங்கமாபுரி பட்டணம் இவருக்கு போடுங்கள், சார் நீங்கள் தான் தினமும் காலை மாலை இங்கு தானே நடைப்பயிற்சிக்கு வருகிறீர் பின்னால் தாமே போட்டுக் கொள்ளலாமே என்றார் நுழை நரியாக.


கடைசியாக எனது ஆய்தமான நாவை நானும் சுழட்ட ஆரம்பித்தேன் , எல்லாரையும் ஒரு பிடி பிடித்தேன், அந்த நுழை நரியை நீ பேசக்கூடாது என்று தடுத்தேன்.

காவலரை, மருத்துவரை ஏன் முதலில் வருவார்க்கு முதல் என்றிருந்திருந்தால் எனக்கும் கிடைத்திருக்கும் ஏன் அல்லது அனுமதி முன் சீட்டு கூட கொடுக்கலாமே யாரை ஏமாற்றப் பார்க்கிறீர்கள், வரிசைப்படி பார்த்தாலும் முன் கள சுகாதாரப் பணியாளர் என்ற முறையிலும் எனக்கு போட்டாக வேண்டும் என்று சொல்லி சத்தம் போட ஆரம்பித்தேன்...

அதன் பின் கோவிஷீல்ட் போதும் என்றேன்...போட்டார்கள் அதன் பின் அங்கு ஒரு நொடியும் நிற்காமல் வந்து சேர்ந்தேன்...


முதல்வர் எல்லாம் கவனிக்கலாம், மருத்துவ மனையில் வரிசையில் முன் நிற்பார்க்கு இல்லை என்ற நிலையும் பின் வருவார்க்கு இருக்கும் என்ற நிலையிலும் இருக்கும் சீர் கெட்ட நிலையை சீர் படுத்த மேலும் கண்டிப்பான காவல் நடவடிக்கைகள் வேண்டும், சிறுமைத் தனங்களைப்  பொறுப்பில் இருப்பார்  செய்யாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்


மேலும் மக்களும் முன் வந்தாரை மதித்து தங்களது இடத்தை மட்டும் ஒழுக்கம் நிலவ பொது இடத்தை புனிதப் படுத்த வேண்டும் அசிங்கப் படுத்தக் கூடாது...

எங்கிருக்கிறது கோளாறு, தவறு, குற்றம் எனில் வெளிப்படைத் தன்மை இல்லா நிலையால்...நிர்வாகக் கோளாறுகளால்...


இதே நிலை நான் அடுத்த முறை எங்கு சென்றாலும் நீடித்தால் அது முதல்வருக்கு தரவேண்டிய புகார் மனுவாகவே இருக்கும்


விநியோகம் சரியில்லை

தடுப்பூசி  விநியோகம் சரியில்லை

கவனம் செலுத்த வேண்டும் ஆட்சியாளர்களே!


மக்கள் இப்போது வேண்டும் என்கிறார்கள்...பெற்று சரியாக விநியோகம் செய்து அனைவரையும் காப்பாற்ற நடவடிக்கை எடுங்கள்.

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.








Wednesday, June 16, 2021

நண்பர்களே நண்பர்களே: கவிஞர் தணிகை.

எனக்கு  புத்தகம் எழுதுவதை விட ,காந்தியை எனது அறிமுக விலாச அட்டையில் போட்டுக் கொண்டிருப்பதை விட எனது கடித தலைப்பில் போட்டுக் கொண்டிருப்பதை விட, எல்லாவற்றையும் விட இது முக்கியத் தேவை என்று கருதியதால் செய்தேன்...நான் அப்போது எனது நடைப்பயிற்சியை முடித்துக் கொண்டு அந்த தனிமையில் இருந்த கோவிலில் சற்று தியானம் செய்கிற போது அந்த குழந்தையின் விளையாட்டுக் குரல் கேட்டது அதற்காக அவர்கள்அங்கிருந்து கிளம்பிப் போவதற்குள் நாம் இதை அவர்களிடம் சொல்லி விட வேண்டுமே எனச் செய்தேன்... நீங்கள் இப்படி எல்லாம் செய்யக் கூடாது என்று சென்று அவர்களிடம் சொன்னேன்...அதற்காக நான் காந்திய வழி செல்கிறேனா காந்திய வழிக்கு மாறாக செல்கிறேனா என்பதெல்லாம் தேவையா என எண்ணிப் பார்க்கிறேன்.



 நண்பர்கள் மூவருமே என் மேல் மதிப்பு மரியாதை இருப்பவர்கள் ஆதலால் எனது கருத்தை எதிர்த்து "எங்களுக்கு அதெல்லாம் தெரியும் நீங்கள் ஒன்றும் சொல்ல வேண்டாம்" என்றெல்லாம் என்னை எதிர்த்து பேசவில்லை.அவர்கள் என்னைப் புரிந்து கொண்டவர்கள், நான் இந்த நாட்டை, மனிதர்களை நேசிப்பவர் என்பதெல்லாம் அவர்களுக்கு நன்கு தெரியும் நான் அவர்களையும் எந்த அளவு நேசிக்கிறேன் என்பதும் அவர்கள் அறிவார். எப்போதும் எனக்கு மரியாதை நிமித்தம் முகமன் கூறி வணக்கம் தெரிவிப்பவர்கள்... நல்ல இளைஞர்கள் அவர்களை எல்லாம் இலக்கு நோக்கி இந்த நாடு செலுத்தவதற்கு மாறாக திசை திருப்பி விட்டதற்கு அரசியல், சூழ்நிலை, குடும்ப அமைப்பு, வாழ்வுத் தேவைகள் யாவுமே காரணம் ஏன் நான் கூட ஒரு காரணமாக இருக்கலாம் இன்னும் சசிபெருமாள் போல் மதுவுக்கு எதிராக களமிறங்கி சாவுக்குத் துணியாமல் இருப்பதால்...


விளையாட்டுத் தனமாகவே சிறு குழந்தைகளை அருகில் வைத்துக் கொண்டு தந்தை புகைப்பது, மது அருந்துவது போன்ற பழக்கங்களை செய்யத் துணிவது பேராபத்தானது. அது எதிர்வரும் தலைமுறையை அதன் பின் தொடரும் தலைமுறைகளை முற்றிலும் நாசமாக்கி விடுகிறது.


இந்த புவியில் புகைப்பதால் எப்படி காற்று மாசுபட்டு சுவாசமண்டலங்கள் பாதிக்கப் படுகின்றன எனச் சொல்லித் தர வேண்டும்


இந்த புவியில் போதைக்கு அடிமையாகும் குடும்பங்கள் எப்படி சீரழிகின்றன என்று சொல்லித் தர வேண்டும்.


இந்த புவியில் மதுவுக்கு அடிமை ஆனவர் எப்படி அதிலிருந்து மீண்டு வரவே முடிவதில்லை எப்படிப் பட்ட எழுந்து வர முடியாத மீள முடியாத பழக்கம் என்பதைச் சொல்லித் தரவேண்டும்


பாதைகளில் , சாலைகளில், பொது இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை பழக்கப் படுத்திச் சொல்லித் தர வேண்டும்.


அந்த இளம் பிஞ்சுகளுக்கு நல்லது எது? கெட்டது எது? என்றும் நல்ல‌ உணவுப் பழக்கங்கள், சுகாதாரம் , ஆரோக்கியம், மலம் கழித்தல், சிறுநீர் கழித்தல் அதன் பின் உடலை எப்படி எல்லாம் தூய்மை செய்து கொள்ள வேண்டும் தினமும் குளித்தல் என படிமானம் அதாவது பழக்கம் ஏற்படுமாறு பெற்றோர்கள் அவர்களுக்கு அறிவு , நினைவு ஏற்படுகின்ற தருணத்தில் இருந்து அதாவது ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பார்கள் குறைந்த பட்சம் 5 வயதில் இருந்தாவது ஆரம்பிக்க வேண்டும்...


இந்தக் கொரானா கோவிட் 19 சமயத்தில் இது தேவையா என்றெல்லாம் கேட்கக் கூடாது இது போன்ற உயிர் பயம் உள்ளக் காலக் கட்டத்தில் தாம் இதெல்லாம் மிக அவசியம்....


எனக்கு  புத்தகம் எழுதுவதை விட ,காந்தியை எனது அறிமுக விலாச அட்டையில் போட்டுக் கொண்டிருப்பதை விட எனது கடித தலைப்பில் போட்டுக் கொண்டிருப்பதை விட, எல்லாவற்றையும் விட இது முக்கியத் தேவை என்று கருதியதால் செய்தேன்...நான் அப்போது எனது நடைப்பயிற்சியை முடித்துக் கொண்டு அந்த தனிமையில் இருந்த கோவிலில் சற்று தியானம் செய்கிற போது அந்த குழந்தையின் விளையாட்டுக் குரல் கேட்டது அதற்காக அவர்கள்அங்கிருந்து கிளம்பிப் போவதற்குள் நாம் இதை அவர்களிடம் சொல்லி விட வேண்டுமே எனச் செய்தேன்... நீங்கள் இப்படி எல்லாம் செய்யக் கூடாது என்று சென்று அவர்களிடம் சொன்னேன்...அதற்காக நான் காந்திய வழி செல்கிறேனா காந்திய வழிக்கு மாறாக செல்கிறேனா என்பதெல்லாம் தேவையா என எண்ணிப் பார்க்கிறேன்.

PART II

 காந்தி என்று நினைக்கும் போது சில நினைவாடல்களும் வந்து விழுகின்றன: 

சத்தியம், அஹிம்சை, இவையும் சத்யாக்கிரஹ முறைகளுமே காந்தியத்தின் அடிப்படை வழி, மதுவே எல்லாப் பாவங்களுக்கும் அடிப்படை என்று அவர் சொல்லி இருப்பதால். களப்பணி இல்லாத காகிதப் பணிகளும் எழுத்துகளும் எடுபடாது. போராட்ட முறை மட்டுமே எடுபடும். மற்றபடி போலித்தனங்களும், அரசின் பதவிகளும்  பணிகளும் போய்விடுமே என்பதற்காக‌ அரசியலில் ஈடுபடக் கூடாது அரசுக்கு எதிராக செயல்படக் கூடாது என்றெல்லாம் சொல்லக் கூடாது அதெல்லாம் காந்தியம் அல்ல...  அல்ல. மேலும் அவர் எல்லா இடங்களிலும் அரசை எதிர்க்கவில்லை அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்த போதெல்லாம் மக்களுக்கான பிரச்சனைக்காக நின்றதால். எனவே இதற்கு இடையே  எதிர் வரும் எல்லாவற்றையுமே அவர் எதிர்த்திருக்கிறார்.   காந்தியம் என்பதே அரசியல் தான். அரசியல் இல்லாமல் காந்தியம் இல்லை , காந்தியம் இல்லாமல் அரசியலும் இல்லை. இரண்டும் பிரிக்க முடியாதவை...இதைப் புரிந்து கொண்டால் சரியாக இருக்கும்.

 

எது பெரியது எது உயர்ந்தது எல்லாம் என்பதெல்லாம்  கூட அவசியமில்லை. தியாகத்தில் பெரியது சிறியது என்பதெல்லாம் கூட இல்லை. பகத்சிங், திருப்பூர் குமரன், மகாத்மா, போஸ் அனைவரின் தியாகமுமே மாசு மருவில்லாததுதான்.செயல்பாடு எல்லாம் கண்ணில் ஒற்றிக் கொண்டாடப் பட வேண்டியதுதான்.


இதில் எது சரியானது எது சிறந்தது என்பதெல்லாம் என்னால் யோசிக்கவும் முடியாதது...சொல்லப் போனால் சுபாஷ் சந்திரபோஸைப் பற்றி பேசும்போது எப்படி ஒசாமா பின் லேடன் வருகிறார் என்பதும் மோதிலால் நேருதான் அது போன்ற ஆடையை அணிந்தவர் என்பது எல்லாம் தேவையில்லாத பேச்சின் நடைமுறைகள்...


காந்தியம் என்பது அப்பட்டமான உண்மை சத்தியம் மேல் அமர்ந்துள்ளது. அதற்கு மேல் பூச்சு, போலிப் பூச்சு எல்லாம் அவசியமில்லாதவைதான்.


திருப்பூர் குமரன் எனக்கு சொல்லித் தந்தது தியாகம் மட்டுமல்ல எனது தங்கையின் திருமணக் காலமான 1980களிலிருந்தே மொய் வைக்கும் மொய் வாங்கும் முறையை என் வாழ்விலிருந்தே விலக்கி வைத்துள்ளார்.

1997ல் எனது மணத்தில் நான் எனது விதவைத் தாயின் பேரையே முன்னிறுத்தி அழைப்பிதழ் முதல் அடித்து பெரியவர் ஒருவரை தாலி எடுத்து கொடுக்கச் சொல்லி மணம் செய்து கொண்டவன்...இதை எனது தமிழ் முறை சொல்லிக் கொடுத்தவை..

.இன்று எனக்கு கோவிலில் எவர் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம் பெண்கள் உட்பட என்ற  தமிழ் அரசின் கொள்கை பிடித்திருக்கிறது, மதுவிலக்கின்மை கொண்டிருப்பது பிடிக்கவில்லை..

.காந்திய வழி என்பதே இப்படித்தான் இருக்கும். இருக்கிறது . இருந்திருக்கிறது...



எல்லாம் வாழ்வின் நடைமுறைகளில் வேண்டும். அது தான் காந்திய வழியைக் கடைப்பிடிப்பது. எழுதுவது பேசுவது மட்டுமல்ல வாழ்வின் போக்கில் அதைக் கடைப்பிடிக்கும்  அப்படிப் பட்ட நெறியாளர்களை உலகு கொண்டாடாவிட்டாலும் அவர்களுக்கு தோல்வி இருக்காது. புரிந்தவர் நெருங்கி வாழ்வர்.


எதையுமே முடிந்தால் இப்போதிருந்து கூட நீங்கள் ஆரம்பிக்கலாம் நீங்களாகப் படியுங்கள்  சிந்தித்து உணருங்கள் அது ஒளி கொடுக்கும் நல் வழிப்படுத்தும், ஊக்குவிக்கும் எழுத்துகளைக் கூட ஏடுகளைக் கூட ஊடகங்களைக் கூட அவரவர்க்கேற்ப மாற்றிக் கொள்கிறார்கள். பிறர் கருத்துகளை வெட்ட வெளிக்கு கொண்டு வருவதை எல்லாம் தடுக்க முனைகிறார்கள் .  சிகரெட் புகைப்பவர் சிகரெட் புகைப்பது பற்றி நன்றாக பாடம் எடுக்கவும் கூடும். ஆனால் அது நடைமுறைக்கு உதவாது...

நன்றி நண்பர்களே...ஆனால் எனது கோரிக்கையை இனி நீங்கள் நிறைவேற்ற ஆரம்பித்தால் இந்த உலகு உங்களுக்கு கடமைப்பட்டிருக்கிறது.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.


நண்பர்களே நண்பர்களே: கவிஞர் தணிகை.


Tuesday, June 8, 2021

என்ன தான் நடக்குது த.நா.மி.வாரிய மின் கட்டண முறைகளில்: கவிஞர் தணிகை

 என்ன தான் நடக்குது த.நா.மி.வாரிய மின் கட்டண முறைகளில்: கவிஞர் தணிகை







எங்களுடைய கட்டணம் நேற்று 07.06.2021ல் கணக்கெடுக்கப் பட வேண்டியது...கடந்த மாத கட்டணத்தையே கட்டுவதற்கு இந்த மாதம் 15 .06.2021 வரை கட்டலாம் என்றார்கள், மேலும் 31.06.2021 வரை கூட கட்டலாம் என்ற பேச்சும் நிலவுகிறது...இதெல்லாம் பரவாயில்லை மக்களுக்கு ஆதரவான நடவடிக்கைதான்.

இவர்கள் இந்த ஆண்டு இப்போது கணக்கெடுப்பதற்கும் மாறாக 2019 மே மாதத்தில் எடுத்த கட்டணத்தை இந்த மாதத்திற்கு கட்ட வேண்டும் என்று குறுஞ்செய்தி வந்து கொண்டிருக்கிறது.

தாறுமாறு தர்பாராக ஏதோ தப்புந் தவறுமாக அதிகமாக‌ எல்லாம் வருவதாக எல்லாம் பயனீட்டாளர்கள் பொருமிக் கொண்டிருக்கிறார்கள்.

மற்றொரு மாற்று என்னவென்றால் அவர்கள் வந்து கணக்கிட வில்லை எனில் நுகர்வோர் தாங்களாகவே மீட்டர் ரீடிங் எடுத்து கொடுத்தால் அதை ஏற்கிறோம் என்றார்கள்...

அப்படி எடுத்துக் கொடுக்கும் போது ஒரு கடிதம் எழுதி அதில் கட்டணப் பயன்பாட்டைக் குறித்துக் கொண்டு வந்து அதைக் கட்டி விடுவதாக உறுதி கொடுக்க வேண்டும் என்று ஒரு தகவல்...

காலை முதல் எங்களுடைய மின் கட்டணத்தை சீர் செய்து கட்டி வருவதற்கு 3 முறை நான் உதவி மின் பொறியாளர் அலுவலகம் செல்ல வேண்டியதானது. இத்தனைக்கும் எங்கள் உதவி மின் பொறியாளர் அலுவலகம் அடுத்த வீதியில் தான் இருக்கிறது...வெளியூர்க்காரர்கள் என்ன செய்வார்கள்?

இத்தனைக்கும் உதவிபொறியாளர் AE TNEB அலுவலர் எனது தொடர்பில் இருப்பதால் அவரை தொடர்பு கொண்டு கேட்டுச் சென்ற எனக்கே முதலில் லைன்மேன் கடிதம் எழுதிக் கொடுக்க வேண்டும் என்றார்(கள்). சரி என்று வீடு வந்து எனது கடிதத் தலைப்புடன் மின் கட்டண பயன்பாடு, முன் அவர்கள் குறித்திருந்த இரண்டு மாதத்துக்கு முன்பிருந்த பயன்பாடு, யாவற்றையும் குறித்துக் கடிதம் எழுதிக் கொண்டு சென்றேன்.

அங்கே ஒரு தற்குறி மக்களுள் ஒருவர்தான், மீட்டர் எண் எல்லாம் போட வேண்டும் என்று தனக்குத் தெரியும் என்று வேறு அறிவுரை செய்து கொண்டிருந்தது மற்றவர்களிடம்... எஸ்.சி. நெம்பர் இருந்தால் போதுமே இதெற்கெதற்கு மீட்டர் நெம்பர் எல்லாம் என எனக்குள் சுறீர் என்ற கேள்வி பிறந்தது..

கடிதம் எழுதிக் கொண்டு மின் பயன்பாட்டை குறித்துக் கொண்டு முதலில் மின் பயன்பாட்டை பதிவு செய்து கொள்ள ஒரு வரிசை.

அதில் மக்கள் எப்படி போனால் என்ன என சமூக இடைவெளி எல்லாம் இல்லாமலே...

அதே நேரத்தில் அதே இடத்தில் மற்றொரு பக்கம் நியாய விலைக்கடைப் போராட்டத்தில் காவல் துறையின் இடையூறு தேவைப்பட்டிருக்கிறது கூட்டத்தை சீர் படுத்த‌

அதில் சிலர் நிறைய எண்களுடனான  பட்டியலையே கொண்டு வந்திருந்தார்கள், ஒரு பெண்  தொழிற்பேட்டையின் எண்களை எல்லாம் கொண்டு வந்திருந்தார் ஒரே கடிதத்தில் பட்டியலிட்டு.. ஒருவர் என்ன கயிறு கட்டி இருந்தாலும் எந்த கவுண்டர் இருந்தாலும் நான் ஒரு வி.ஐ.பி என உள்ளே சென்று உரையாடியபடி இருந்தார். அதே ஈர வெங்காயத்துக்காகவே அனைவரும் வெளியே இருக்கிறார்கள் என்பதை அவர் பொருட்படுத்தாமல்... அதனால் வேறு தாமதமாகிக் கொண்டு இருந்தது.

மக்களும் புரியாமல் கட்டணம் கட்ட இருக்கும் ஒரு வரிசை, மின் கட்டணப் பதிவீடு செய்ய மற்றும் ஒரு வரிசை , கடிதம் எழுதி வர வேண்டும் என்பதெல்லாம் தெரியாமலே சிலர் தடுமாறிக் கொண்டிருந்தனர். 

கூட்டம் குறைவாகவே இருந்தாலும் ஒழுக்க நெறி இல்லாமல் இருக்கும் நபர்களாகவே பெரும்பாலும் இருந்தனர். நம்மைப் போன்ற சிலரே இடைவெளி விட வேண்டும் ஒருவருடன் ஒருவர் மோதக்கூடாது என்ற சிந்தனையில் இருந்தவ‌ர். அந்த அலுவலகம் இருக்கும் சந்தும் மிகக் குறுகிய சந்து... அதில் அதிகம் பேர் நிற்கவும் முடியாது இதனிடையே வாகனத்தில் வேறு ஓரிருவர் அதே வழித்தடத்தில் தாம் செல்வோம் என...

ஒரு அம்மா யார் முன் இருந்தால் என்ன என எவரையும் சட்டை செய்யாமல் இந்த செயல்பாட்டில் பெண் வேறு,ஆண் வேறு என அது அதன் வேலையை முடித்தால் போதும் என அரைகுறையாக சரியாக எழுதாத பேப்பர்களைக் கொண்டு வந்து பேப்பரில் பேனா கொடுங்கள், எழுதிக் கொடுங்கள் எனக் கேட்டு கவுண்டரில் உள்ளே கையை நீட்டியது , அந்த இருக்கையை பார்த்துக் கொண்டிருந்தவர்,ஒரு அரை மணி நேரம் ஆகும் அம்மா என அந்த அம்மா பேப்பரை வாங்கி வைத்துக் கொண்டு நாளைக்குத்தான் கணக்கு ஏறும் என வழி அனுப்பி வைத்தார்.

இப்படி ஒரு ஒழுங்கு முறைக்குள் அடங்கா மக்கள் இவர்களை வைத்து என்ன திட்டம் செய்தாலும் அதை நிறைவேற்ற இரும்புக் கரம் கொண்டு சட்ட திட்டங்களை அமல்படுத்த வேண்டும் இல்லையேல் கொஞ்சம் நெக்கு விட்டாலும் இவர்கள் திருந்தவே போவதில்லை... அவரவர் ஒழுக்கம் பேண எல்லாம் காவலர் தேவை நிர்வாகம் தேவை எனில் இந்த நாட்டை யார் தான் காப்பாற்ற முடியும்? ஒழுக்கமில்லாமல் சுதந்திரம் இல்லை என்ற நமது தத்துவ வேதாந்தி முன்னால் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி  ஆசிரியர் இராதாகிருஷ்ணன் சொல்லியதை நாம் ஒவ்வொரு கணமும் பொது இடங்களில் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எனது பணியை சரியாக நிறவேற்றி பதிவீட்டை செய்து பின் எப்படியோ அரை மணி ஒரு மணி நேரத்துக்கும் பின் வீடு வந்து இரண்டாம் முறைக் குளித்து விட்டு காலை உணவை முடித்துக் கொண்டு சரியான சில்லறையாக எடுத்துக் கொண்டு எங்களைச் சார்ந்த இரண்டு பில்லையும் கட்டி வந்து சேர்ந்து மறுபடியும் ஒரு குளியல்...

2019 மே மாத பில்லான ரூ. 50, ரூ 50 எனக் கட்டி விடுங்கள் கடைசித் தேதி 28.06.2021 என குறுஞ்செய்தியாக இரண்டு சர்வீஸ் இணைப்பு எண்ணுக்கும் வந்திருந்தது... கட்டி முடித்து வந்த பின் அந்த செய்தியை எனது செல்பேசி தெரிவித்திருந்தது.

இதற்கு மாற்றாகத் தான் காலையில் இருந்து 3 முறை நான் உதவி மின் பொறியாளர் அலுவலகம் சென்றிருந்தது.

நாங்கள் கட்டிய தொகை ரூ. 95,+260க்கு நாங்கள் அப்டேட் செய்து விட்டோம்...தலைவலி அடுத்த ஆகஸ்ட் மாதம் வரை இல்லை, இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம்...

எனக்கு குறித்துக் கொண்டவர் மின் குறிப்பேட்டு விவர அட்டையில் ஏதோ தாமே அவர்கள் இலாகவினர் வந்து மின் பயன்பாட்டு குறியீட்டு அளவை எடுத்துச் சென்றது போல வழக்கம் போல  அவர்களாக வந்து கணக்கெடுத்தது போல 07.06.2021 தேதியில் நான் குறித்து தந்திருந்த விவரங்களை முன் தேதியிட்டு குறித்து தந்தார் ஆனால் நான் எனது கடிதத்தில் இன்றைய தேதி  அதாவது 08.06.2021 அதுவும் சுமார் 9.30 மணியளவில் காலையில் எடுக்கப் பட்ட மின் பயன்பாட்டு அளவு இது என்பதற்கு மாறாக...

பெட்டி நிரம்பி விட்டது, கை எல்லாம் வலிக்கிறது என பணம் வாங்கிப் போடும் இருக்கையில் இருந்தவர் தனது சக  அலுவலகத் தோழியிடம் சொல்லியபடி இருந்தார்... கை விரல்களை வளைத்துப் பிடித்து ஆசுவாசப் படுத்திக் கொண்டார்.

ஆக அரசு அலுவலர்கள் ஒரு புறம்,இந்த விவரம் தெரியாமல் ,அடங்க மறுத்து திரியும் மக்கள் மறுபுறம், ஒழுக்கம் மீறிய வெற்று பந்தாப் பேர்வழிகள் உள்புறம் என 

இந்த த.நா.மி.வாரிய கணக்கெடுப்பு இல்லா இன்றைய நடைமுறை, கட்டணம் செலுத்தல் கோவிட்...19 இரண்டாம் அலையின் நீட்சியை இன்னும் அதிகப் படுத்தி விடும் போலான முறையில் செயல்படுகிறது என்பதை இங்கு குறிப்பிட வேண்டியதாகிறது.

வீடு வீடாக அவர்களே சென்று வீட்டுக்காரர்களையே கணக்கெடுக்கச் சொல்லி வாங்கி பயன்படுத்தி இருந்தாலும் இந்தளவான தொல்லைகளை தவிர்த்திருக்கலாம். 

அது சரி எவர் செத்தால் என்ன எவர் வாழ்ந்தால் என்ன எவருக்கென்ன ?

அரசும் நிர்வாகமும் நடந்தால் சரி என்கிறீர்களா?

அரசு இன்னும் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்...சரியான முறையில் தாம் ஸ்டாலின் தலைமையில் இருக்கும் அரசு சென்று கொண்டிருப்பதாக நாங்களும் மக்களும் நம்பிக் கொண்டிருக்கிறோம்...

ஒரு நாளில் எத்தனை முறை மின் வெட்டு செய்வீர்கள்? கணக்கே இன்றி வரையறையே இன்றி எங்கள் மேட்டூர் பகுதிகளில் அடிக்கடி நிகழும் மின்வெட்டை சகிக்க முடியவில்லை.... எங்கள் வீட்டு மின் சாதனப் பொருட்கள் எல்லாம் செயல்  இழக்கின்றன....தி.மு.க அரசாட்சிக்கு வந்தால் மின் வெட்டு இப்படித்தான் இருக்கும் என அ.இ.அ.தி.மு.க தேர்தல் பிரச்சார உரையில் சொல்லியதை நீங்கள் நினைவு வைத்து அதற்கு மாற்றை ஏற்படுத்துங்கள் மறுபடியும் இது ஒரு சாதாரண மனிதனின் வேண்டுகோள் முதல்வருக்கு....


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை...

பி.கு: மாதா மாத மின்சாரக் கட்டண கணக்கீட்டு முறை வரும் என தி.மு.க தேர்தல் அறிக்கையில் சொன்னதாக நினைவு அது எப்போதிருந்து அமலாகும்?...ஒரு வேளை எனக்கு நினைவுப்பிறழ்தல்கள் வழக்கம் போல உண்டே அதே போலா இதுவும்...





Saturday, June 5, 2021

Cinema சினிமா Cinema: நவம்பர் 16, (தமிழ்) சார்ல்ஸ் ஏஞ்சல்ஸ் (ஆங்கிலம்)

சினிமா: நவம்பர் 16, (தமிழ்) சார்ல்ஸ் ஏஞ்சல்ஸ் (ஆங்கிலம்)

2019க்கும் பிறகு பெரும்பாலும் சினிமாப் படங்கள் வெளிவருவதில் கோவிட் 19 கோர தாண்டவத்தால் அங்கும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மாஸ்டர் ,கர்ணன் ஆகிய‌ படங்கள் மட்டுமே வெளியே வந்து காலத்தின் போக்கில் வெற்றி அடைந்திருக்கிறது

இந்நிலையில் மேலை நாடுகள் போல தொலைக்காட்சித் தொடர்கள் வெளிவருவது போல சினிமாவும் பகுதி பகுதிகளாக எபிசோட் அத்தியாயம் என்ற பேரில் வெளி வர ஆரம்பித்து நவம்பர் 16 என்ற தொடர் சினிமா நிறைய விளம்பரங்களுடன் வெற்றி பெற்றதாகவே சொல்லப் படுகிறது

எனது முக நூல் நண்பர் ஜி.எம்.குமார் அவர்களை சுகன் என்ற பேரில் எழுத்தாளராக மையப்படுத்தி இதன் கதை நிகழ்வுகள் குற்றப் பின்னணியுடன் நகர்கின்றன.
தமன்னாவுக்கு நல்ல வாய்ப்பு என்றே சொல்லலாம். அவர் பெரும்பாலான படத்தின் பகுதிகளில் மூஞ்சை தொங்க வைத்தபடி சோகமாகவே பேசுவது போன்ற கதை நெருக்கம்.
அவர் தந்தை ஒரு மனநோயாளியாக இருக்க அவரக் காப்பாற்ற வேண்டும், நண்பர்க்கு கொடுத்த வாக்குறுதியுடன் சைபர் கிரைம் காவல் துறையுடன் ஒத்துழைத்து பணி புரிந்து ஊதியம் ஈட்ட வேண்டும்
அத்துடன் கொலை நடந்த சம்பவ இடத்தில் இருந்த தந்தையைக் காப்பாற்றியாகவேண்டும் அல்லது அவரே அந்தக் கொலையை செய்திருந்தாலும் அவரை மீட்க வேண்டும் என்ற பாத்திரம் 
அவரைப் போன்ற ஒரு அழகிய பெண் அந்தப் பாத்திரத்தை செய்ய வில்லை என்றால் அவ்வளவு நேரம் பார்க்க முடியாது
இந்திரா சுப்ரமணியம் செய்திருக்கும் படம். பார்க்கலாம். ஆனால் முதலும் கடைசியுமான பாகங்கள் முக்கால் மணிநேரத்துக்கும் அதிகம் இடையில் வரும் 5 பாகங்கள் சுமார் 30 நிமிடங்கள் இருக்க...
தேவைப்படும்போது அதை நினைவு படுத்திப் பார்க்க வேண்டும் என்பதற்கு பதிலாக நமக்கெல்லாம் சினிமாவை ஒன்றுசேரப் பார்ப்பது தானே பழக்கம். பார்த்து வைத்தேன்...




பசுபதி பாத்திரம் மெதுவாக ஆரம்பித்து கடைசியில் வலுவாக நிற்கிறது. அது மட்டுமின்றி ...எல்லாம் சொல்லி விட்டால் உங்களுக்கு பார்க்க சுவை இருக்காது... பிரேதப் பரிசோதனை பற்றிய காட்சிகள் சற்று அதிகமாக இருப்பதாகவும், காவல்துறைக் காட்சிகள் சில தேவையற்று புகுத்தி இருப்பது குறைகள். கடைசியில் தமிழ் சினிமாவில் வரும் காவல் துறை இதில் இல்லை. பொழுது நிறைய இருப்பார் பார்க்கலாம். கோவிட் 19 தொடர் காலம் அல்லவா திரைக்குள் உங்களை திசை திருப்ப விரும்புவார் பார்க்கலாம். கண்கள் பத்திரம்.

சார்ல்ஸ் ஏஞ்சல்ஸ் ஒரு ஹாலிவுட் படம் மூவிஸ் நவ் தொலைக்காட்சியில் பார்த்தேன் 4 பெண்களை மையப்படுத்தி அவர்களும் உளவு செய்வதாக வெற்றி அடைவதாக இன்னும் தமிழில் நாம் அவ்வளவு தொழில் நுட்பங்களை கையாளமுடியுமா என்று கேள்வி கேட்பது போன்ற விரைவான பட நகர்வுகள்....சிறப்பு... முடிந்தால் பாருங்கள்

நன்றி கலந்த வணக்கங்களுடன்
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

Friday, June 4, 2021

கோடி ரூபாய் கொடுத்தாலும் மது அருந்தும் காட்சிகளில் நடிக்க மாட்டேன் எனச் சொல்வாரா? கவிஞர் தணிகை...கவிஞர் தணிகை


கோடி ரூபாய் கொடுத்தாலும் கார்த்திக் மது அருந்தும் காட்சிகளில் நடிக்க மாட்டேன் எனச் சொல்வாரா? கவிஞர் தணிகை
 கார்த்திக் கோடி கொடுத்தாலும் மது அருந்தும் காட்சிகளில் நடிக்காமல் எம்.ஜி.ஆர் வழி நடப்பாரா ? நடிப்பாரா?  கவிஞர் தணிகை



ஒரு வாரத்துக்கும் முன் கோடி கொடுத்தாலும் புகைக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என சிவகுமார் அவர்களின் இளைய மகன் கார்த்திக் சொல்லி இருந்ததாக செய்தி கண்டு மகிழ்ந்து ஒரு பதிவை "மறுபடியும் பூக்கும்" வலைப்பூவில் செய்திருந்தோம். இதற்கு நல்ல வரவேற்பு இருந்தது.

சிவகுமார் குடும்பத்துக்கு சினிமாத் துறை சார்ந்து மட்டுமல்ல பொது சமூக வாழ்வியல் மட்டத்திலும் மிக நல்ல பேரும் செல்வாக்கும் இருக்கிறது.

தமிழக இலட்சியக் குடும்பத்தின் வழி உருவான சசிபெருமாள் மதுவிலக்குப் போராளியாக இருந்து தனது இன்னுயிரை நீக்கும் முன் சென்னையில் மதுவிலக்கு கோரி உண்ணாநோன்பு இருந்த போது அவரைச் சென்று சந்தித்து வாழ்த்து தெரிவித்து விசாரித்த பிரபலங்களில் சிவகுமார் முக்கியமானவர். சிவகுமாருக்கும் சசிபெருமாளுக்கும் பொது நண்பராக இருந்தவர் சசிக்குமார் என்ற ஒரு நடிகர் அவர் தீவிபத்தில் இளம் வயதிலேயே சினிமாத் துறையில் ஏறுமுகமாக இருந்த தருணத்திலேயே மாண்டது இப்போதைய இளம் வயதினர்க்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

சிவக்குமார் குடும்பம் அகரம் கல்வி அறக்கட்டளை வழி செய்து வரும் கல்வித் தொண்டு உலகறிந்தது. கார்த்திக் விவசாயியாக நடித்துள்ளார். மேலும் இவர் தேர்வு செய்து இதுவரை 20 படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.இவர் அமெரிக்க நியூ யார்க் நகரில் பொறியியல் மேற்படிப்பு படித்தவர் மணி ரத்தினம் சினிமா இயக்குனரிடம் உதவியாளராகவும் இருந்தவர் என்பவை எல்லாம் யாவரும் அறிந்ததே.



கண்ணதாசன் எம்.ஜி.ஆருக்காக எழுதி இருப்பார் சிலர் குடிப்பது போலே நடிப்பார், சிலர் நடிப்பது போலே குடிப்பார், சிலர் பாட்டில் மயங்குவார் சிலர் பாட்டிலில் மயங்குவார் என சங்கே முழங்கு என்ற படத்தில் அதில் காட்சிப்படுத்தும் போது அந்த இடத்தில் இருப்பார்க்கு குடிப்பது போல காட்டியபடியும் திரையை பார்க்கும் மக்களுக்கு அதை அவர் பூந்தொட்டியில் ஊற்றி விட்டு குடிக்காதவராக இருப்பதாகவும் காட்சிகள் இருக்கும். அப்படி தனது ஒவ்வொரு செயல்பாட்டையும் காட்சியையும் உருவாக்குவதில் எம்.ஜி.ஆர்கவனம் செலுத்தி  இனத்தால் வேறானாலும்  தமிழகத்தை நாடாண்ட கதை  யாவரும் அறிவர்.

அது போல சிவகுமாரின் மகன் கார்த்திக் அவர்களும் எத்தனை கோடி கொடுத்தாலும் மது அருந்தும் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என உறுதி எடுப்பாரா?  உறுதி கொள்வாரா?

தமிழக இலட்சியக் குடும்பங்கள் என்ற அமைப்பே இப்போது பதிவு பெற்று தமிழ்நாடு அன்பு வழி அறப்பணி மன்றமாக செயல்பட்டு வருகிறது அந்த இயக்கத்தின் இணைத்தலைவர் என்ற முறையில் அந்த இயக்கத்தின் சார்பாகவும், எனது தனிப்பட்ட மனிதரான சமுதாயப் பொறுப்பு சார்பாகவும் இந்த வேண்டுகோளை அவருக்கு வைக்கிறேன்.

ஏன் எனில்  மலையாளம், இந்தி, இப்படி பல மொழிகளிலும் மது அருந்தும் காட்சிகள் தாராளமாக இருந்தது போல இப்போது தமிழ் தொலைக்காட்சித் தொடர், சினிமா யாவற்றிலும் மிகவும் மலினமாக அது கதாநாயகனாக இருந்தாலும் வில்லனாக இருந்தாலும், நல்லவராக இருந்தாலும் கெட்டவராக இருந்தாலும் மது அருந்தும் காட்சிகள் தனியாகவும் கூட்டமாகவும் இருப்பதாக காட்சிகள் உள்ளன அதுவும் பெரும் தீங்கே...

தலைமைப் பண்பு, தலைவராக வேண்டியவர்களுக்கு இது போன்ற‌ ஒவ்வொரு செயல்பாட்டிலும் மக்கள் நெருக்கம் அதிகரிக்கிறது. எனவே திரைப்பட நடிகர் கார்த்திக் எத்தனை கோடி கொடுத்தாலும் மது அருந்தும் காட்சிகளில் நடிக்காமல் மறுப்பாரா என்று கேட்பதற்கே இந்தப் பதிவு.

மதுவே எல்லா பாவங்களுக்கும் அடிப்படை ....மகாத்மா

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.
பி.கு: ரஷிய நாட்டினர் கொடுத்த ஒரு விருந்தில் மக்கள் குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர். ஏ.பி.ஜெ அப்துல் கலாம் விஞ்ஞானியாக இஸ்ரோவில் இருந்த போது மது அளிக்கப் பட அதை அந்த டம்ளரை அருகே இருந்த சுஜாதா கையில்( எழுத்தாளரும் அறிவியல் அறிஞராகவும் இருந்த அதே சுஜாதா கையில் தான் இருவரும் கல்லூரித் தோழர்கள் நண்பர்கள்), கொடுத்து விட்டு குடிநீர் ஊற்றிய டம்ளரை ஏந்திக் கொண்டு இருந்ததாகவும் அந்த தர்ம சங்கடமான சூழ்நிலையை அவர் சமாளித்ததாகவும் அவரது நூலில் அவரே தெரிவித்திருப்பார்....

கார்த்திக் எம்.ஜி.ஆர் வழியில் குடிக்காமல் நடப்பாரா நடிப்பாரா?