Friday, May 31, 2019

உலக புகையிலை மறுப்பு தினம்: மே 31: கவிஞர் தணிகை

உலக புகையிலை மறுப்பு தினம்: மே 31: கவிஞர் தணிகைவிநாயகா மிஷன்ஸ் சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரியின்  வாய், முகம் மற்றும் தாடை அறுவை சிகிச்சை பிரிவு மிகவும் சிறப்பாக வாய் புற்று நோய் விழிப்புணர்வு மற்றும் புகையிலை மறுப்பு விழிப்புணர்வு இலவச முகாம் மற்றும் பல் பரிசோதனை முகாமை சேலம் மத்திய பேருந்து நிலையத்தில் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை நடத்தியது.

முகாமை கல்லூரியின் முதல்வரும் இந்திய சிறுவர் பல் மருத்துவ சங்கத்தின் தலைவருமான பேராசிரியர் மருத்துவர் பேபி ஜான் எம்.டி.எஸ் அவர்கள் தலைமையில் காவல் துறை ஆய்வாளர் சாலை ராம் சக்திவேல் துவக்கி வைத்தார். இந்த முகாமை பேராவலுடன் வாய் முகம் மற்றும் தாடை அறுவை சிகிச்சைத் துறையின் தலைவராக விளங்கி வரும் பேராசிரியர். மருத்துவர் ரீனா பேபி ஜான் கல்லூரி மற்றும் இந்திய முகம், வாய் மற்றும் தாடை அறுவை சிகிச்சை சங்கத்தின் சார்பாகவும் பெரு முயற்சி செய்து நடத்த தலைமை ஏற்றார்.

இந்த முகாமில் சுகாதாரத் துறையின் சதீஷ் அவர்களும், கல்லூரியின் வாய் நோய் கண்டறியும் பிரிவின் தலைவர் பேராசிரியர் மருத்துவர் மோகன் , சிறுவர்  பல மருத்துவப் பிரிவின் தலைவர் பேராசிரியர். மருத்துவர் சுரேஷ்குமார், பல் கட்டும் பிரிவின்  தலைவர் ஜெயஸ்ரீ மோகன்  ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்க\

முகம் , வாய் மற்றும் தாடை அறுவை சிகிச்சையின் மருத்துவர் அருண், மருத்துவர் சரவணன், மருத்துவர் நரேந்திரன்,. மருத்துவர் பாலமணிகண்டன் மருத்துவர் மனோ, மருத்துவர் டிப்னி, போன்ற மருத்துவர்களுடன் முதுகலை இளங்கலை மருத்துவர்களும் பெரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பணியாற்றினர்

காவல் துறை ஆய்வாளர் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி முதல்வர் பேபிஜான் புகையிலை மறுப்பு தினத்தின் முக்கியத்துவத்தை விளக்கினார். அதில் மருத்துவர்கள் பங்கு பணி பற்றி தெளிவு படுத்தினார்.

காவல் துறை ஆய்வாளர் இது போன்ற அரிய நிகழ்வுகளில் அதை ஒரு வாய்ப்பாக மக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.

இந்த முகாம் பேருந்து ஓட்டுனர்களை மையப்படுத்தி அவர்களுக்காக நடந்த போதிலும் கூட ஆர்வமாய் கலந்து கொள்ள வந்திருந்த பொது மக்களான பயணிகள் நடத்துனர்கள், அங்குள்ள கடைகள் வைத்து பிழைப்போர் , இளைஞர்கள் ஆகியோர் 200க்கும் மேற்பட்டோர் பயன்பெற்றனர்.

பரிசோதனை முகாம் வெகுவாக பயனுள்ள முறையில் பல் பரிசோதனை மற்றும் சுவாசத்தில் கரி அமில வாயு கலந்துள்ள சதவீதம் பற்றிய முடிவுகளை அறிக்கை ஆகியவற்றை கணித்து சில நிமிடங்களில் முகாம் பங்கெடுப்பாளர்களிடம் வழங்கியது பாராட்டத் தக்கதாக இருந்தது.

இந்த முகாமில் வரவேற்பு மற்றும் நன்றியுரையாற்றி முகாமிற்கு கை ஒலிபரப்பி எடுத்துச் சென்று புகையிலை மறுப்பு விழிப்புணர்வு செய்திகளை அறிவித்து அனைவர்க்கும் எடுத்துச் சென்று முகாமுக்கு அழைக்கும் பணியும் ஒருங்கிணைப்பு பணிகளும் அடியேனுக்கு கிடைத்தது எனது ஆர்வத்துக்கேற்றபடி பெரும்பாக்கியமாக அமைந்தது.

இந்த முகாமிற்கு பேட்டரியுடன் கை மைக்ரோபோன், நோயாளி சோதனை இருக்கை மற்றும் பயிற்சி மருத்துவர்களை வழங்கி சமுதாய பல் மருத்துவத் துறையும் அதற்கு அனுமதி வழங்கிய துறைத் தலைவர் மரு.சரவணன்

மற்றும் தமிழகக் காவல் துறை, சுகாதாரத் துறை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாநகராட்சி மற்றும் கலந்து கொண்ட பயன்பெற்ற அனைவர்க்கும் நிகழ்ச்சி சிறப்பிக்க தேனீக்களாய் பணியாற்றிய பயிற்சி மருத்துவர்கள் யாவருமே நன்றிக்கு உரித்தானவர்கள்.

சமுதாய நோக்கம் அதன் சேவை நல்ல முறையில் அதன் இலக்கை எட்டி நிறைவேறியது பற்றி எமக்கெல்லாம் மகிழ்வே.

முகாம் நேரம் முடியும் தருவாயில் கூட பொது மக்கள் வந்திருந்து மதியம் இரண்டு மணிக்கும் மேல் கூட முகாமை நீட்டித்தும் மனம் கோணாமல் மருத்துவர்கள் பணியாற்றியது அருமையிலும் அருமை.

இந்த முகாமில் வாய், பல் ஈறு பரிசோதனை செய்து நோய் கண்டறிந்ததுடன், வாய் புற்று நோய்க்கான காரணங்களாக புகையிலையை சுவைத்தல், புகைத்தல் பற்றியும், தொடர்ந்து மது அருந்துதல் பற்றியும் கூர்மையான பற்களால் ஏற்படும் புண் ஆகியவை புற்று நோய்க்கான காரணங்கள் எனச் சுட்டிக் காட்டப்பட்டன‌Image may contain: 2 people, people standing
இரண்டு வாரங்களுக்கு மேல் ஆறாத வாய்ப்புண்கள் இருந்தாலும், வாயில் வெள்ளை, சிவப்பு படலம் இருந்தாலும் வாய் வீக்கம் இருந்தாலும் வாய் திறக்க முடியாமல் இருந்தாலும் கண்டிப்பாக பல் மருத்துவரை அணுகி சிகிச்சை செய்து கொள்ள வேண்டி வலியுறுத்தப்பட்டது.

கல்லூரி வருவோர்க்கு மேற்கொண்ட சிகிச்சை முறைகளைத் தொடர்வது பற்றியும் பையாப்சி  எனப்படும் நுண் திசு பரிசோதனை இலவசமாக செய்து தரப்படும் என்றும் எடுத்துரைக்கப்பட்டது.

வாய்ப்புற்று நோய்க்கான காரணங்கள், ஆரம்ப அறிகுறிகள், அதை வரும் முன் எப்படி காப்பது  வந்த பின் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்  பற்றியும் ஆலோசனை தரப்பட்டன‌

பொதுவாக புற்று நோயைத் தடுக்க வேண்டும் எனில் புகையிலை, மது, பான்மசாலா ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும் என்றும் கூர்மையான பற்கள் ஏதாவது இருப்பின் அதையும் உரிய கவனம் கொண்டு சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Wednesday, May 29, 2019

மழை இல்லை என்றாலும் இன்று காற்று ஓய்ந்தது : கவிஞர் தணிகை

புழுதிக்காற்று: கவிஞர் தணிகை


Image result for wind and dust in tamil nadu

சில நாட்களாக எங்கள் ஊரில் மட்டுமல்ல சேலம் மாவட்டத்தில் பல இடங்களிலும் சூறைக்காற்று, புழுதிப் புயல் மண்ணை வாரி வாரித் தூற்றியபடி இருந்தது மழையே இல்லை. எனவே பாலை நிலத்தின் விளைவு போலவே...

அந்தக் காற்று வடமேற்கே இருந்து தான் வந்தது.ஆனாலும் தமிழகத்தில் மக்கள் தொகை குறைவாக இருந்ததாலும்  படை சிறியதாக இருந்ததால் பெரும் சைன்னியத்தை தடுக்க மட்டுமே முடிந்தது என்றாலும் வடக்கே இருந்த புழுதிப் புயலின் முன் ஈடு கொடுக்கவே முடியவில்லை. அது ஜெயித்தே விட்டது.

வெற்றி பெற்ற மாந்தரில் பாதிக்கும் மேல்  குற்ற வழக்குகள் உள்ளவர் என்றும் புள்ளி விவரங்கள் சொல்லி இருக்கின்றன.

சாதியை மதமும் மதத்தை பணமும் வென்ற சரித்திரம் இங்கே நடந்தது. வாக்கு எந்திரங்கள் பல இடங்களில் கண்டதான காணொளிகள் பார்க்கக் கிடைத்தவை பொய்யா மெய்யா என்றே தெரியவில்லை

ஆனால் எதிரிக்கட்சி அல்லது எதிர்க்கட்சிகளை ஒன்றுமில்லாமல் செய்ய திட்டமிட்டே ரெய்டுகள் நடந்தேறின...பண முடக்கம் செய்யப்பட்டன  தேர்தலிலும் திட்டமிட்டே எதிர்க்கட்சிகளிடம் பெரும்பான்மையான தேர்தல் ஆணையத்தின் பார்வை இருந்தன. ஆளும் கட்சியை வல்லமையாக்க‌ எதிர்க்கட்சியை சூன்யமாக்கும் காட்சிகள் நன்றாகவே அரங்கேறிவிட்டன.காவி என்பது துறவு என்பதைக் குறிக்கும்... இங்கு நடந்தது எல்லாம் வேறு.

இனி காபந்து சர்க்கார் என ஆளும் கட்சியை பயன்படுத்தாமலே  குடியரசர் ஆளுகையில் தேர்தல் நடந்தால் மட்டுமே எந்தவித மாய்மாலங்களும் இல்லாமல் தேர்தல் என்பது இருக்கும்

சூப்பர் ஸ்டார் என்ன சொல்லி இருக்கிறார் எனில் அந்த ஒரே மனிதர்க்காக மட்டுமே இந்த வெற்றி நிகழ்ந்த்து என தனி மனித துதி பாடியுள்ளர். இதெல்லாம் எங்கே போய் நிற்குமோ எனில் இரண்டு வருடம் கடந்து பார்க்கலாம் என்கிறார்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

Friday, May 24, 2019

மோதி என் நண்பன்: கவிஞர் தணிகை

மோதி என் நண்பன்: கவிஞர் தணிகை

Image result for modi with dog

அப்போது இரண்டாம் வகுப்பு அல்லது மூன்றாம் வகுப்புதான் வயது 8 இருக்கலாம் . 1970களாக இருக்கலாம். மோதி என் நண்பன் என்ற திரைப்படத்தை பள்ளியிலிருந்து ஆசிரியர்களே கூட்டிக் கொண்டு போனார்கள். அதற்கு காசு கொடுத்தோமா இல்லையா என்பது கூட சரியாக நினைவில்லை. அந்தப் படம் பள்ளி மாணவர்களுக்காகவே எடுக்கப்பட்டு அரசால் திரையிடப்பட்டு காண்பிக்கப்பட்டிருக்கலாம் என்று இப்போது ஒரு முடிவுக்கு வர முடியுமளவு அறிவு இருக்கிறது ஆனால் அப்போது அதெல்லாம் இல்லை. சினிமா, சினிமா மிகப்பெரிய கொண்டாட்டம்.

அந்தப் படத்தில் பூபதி, பார்த்திபன் போல் ஏதாவது ஒரு நண்பன் கதை இருக்கும் என நினைத்துப் போய்ப் பார்த்தால் . மோதி என்பது ஒரு வீட்டின் அந்த சிறுவனின் வளர்ப்பு நாய். அரிய தோழன். அந்த நாயை அவன் ஒரு நாள் பள்ளியிலிருந்து வீட்டுக்கு வரும்போது சாலையோரத்தில் அடிபட்டு முனகிக் கிடக்கும் ஒரு குட்டி நாய் அதுவும் ஒரு பெண் நாய் என்றே எவரும் அதை சீண்டாமல் இருக்க, சிறுவன் அதை எடுத்து வந்து அவனது தந்தையிடம் திட்டு வாங்கினாலும் அந்த நாய்க்கு மருந்திட்டு , நீர் கொடுத்து , உணவு கொடுத்து பிழைக்க வைத்து காப்பாற்றி விடுகிறான். அது முதல் அந்த நாய் அவனது உயிர்த் தோழமை கொள்கிறது.

ஏன் அது முதல் அவனுடன் பள்ளி சென்று வாசலில் காத்திருந்து அழைத்து வருவதும் இருவரும் சேர்ந்து திருடனை பிடிப்பதும், காவல்துறைக்கு நன்மை செய்வதும் கடைசியில் அவனது உயிரைக் காப்பாற்ற கொள்ளையர்களின் குண்டுக்கு பலியாக உயிரை விடுவதுமாக இருக்கும்.

*************************************************************************
Image result for modi with dog
இந்தியக் குடிமகனாக இருந்து அபார வெற்றி பெற்று மறுபடியும் பிரதமராக இருக்கும் நரேந்திர மோடிக்கு  ஒரு கடிதம் அஞ்சல் செய்ய அவசியமாகிறது.
அப்துல் கலாம் போன்ற மாமேதைகளுக்கும் கூட தமது உச்ச பதவியில் இரண்டாம் முறை அமர வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஆனால் இந்தியாவின் மக்கள்   2019ல் தேர்தலில் அளித்த தீர்ப்பு வரலாற்றில் பதிவு செய்யப்பட்டு விட்டது 1971க்கும் பிறகு  ஏற்கெனவே ஆண்ட அதே பிரதமர் மறு வாய்ப்பைஉடனே திரும்பவும்  பெற்றதேயில்லை உங்களைத்தவிர‌  என்கின்றன செய்திகள்.

மாபெரும் வாய்ப்புதான் அதில் எவருக்கும் சந்தேகமில்லை.

அதை எப்படி பயன்படுத்தப் போகிறீர்கள்....கடந்த காலத்தில் பணக்காரர்களுக்கு குடை பிடிக்கும் நிலையை அப்படியே நீடிக்க விடப்போகிறீர்களா அல்லது உங்களுக்கு தங்களது நம்பிக்கையின் சின்னமாக வாக்களித்த ஏழை எளியவர்களுக்காக திட்டம் தீட்டி மாபெரும் மனிதராக மாறப் போகிறீர்களா அவர்கள் கண்ணீர் துடைத்து.

குடிநீர், மருத்துவம், வேலைவாய்ப்பு, இருப்பிடம், ஆகியவை பற்றிய‌ துன்பம் தொடர்வதன் துயர் துடைக்கப்போகிறீகளா?


இராமகிருஷ்ணர் சொல்வார் மழை என்பது மேல் இருந்து பூமியை நனைத்து பயிர் முளைக்க கீழ் இறங்கி வருவது போல மாந்தர் மிக உயரும்போதும் கீழ் இறங்கி வர வேண்டும் என்பார்.

இந்தியாவின் தந்தை மகாத்மா போட்டிருக்கும் பணப் புழக்கத்தின் நோட்டை மாற்றிக் காட்டினீர், இரவு நேரத்தில் பணத்தை மதிப்பிழக்க வைத்து மக்களை வங்கி வாசலில் உயிர் போக வைத்தீர், படேலுக்கு உலகின் மாபெரும் சிலை வைத்தீர், ஐந்து ஆண்டு கழித்த பின்னே பத்திரிகையாளரை
சந்தித்தீர், உலகின் நாடெல்லாம் சுற்றி வலம் வந்தீர், பாராளுமன்றத்தில் கேள்வி பதில் நிகழ்வுகளில் கூட பங்கெடுத்து பதில் அளிக்க பெரும்பாலும் விரும்பியதில்லை என்றாலும் இந்திய மக்கள் உங்களை நம்பி இரண்டாம் முறை உங்களை கடவுளாகவே தம்மை இரட் சிக்க வந்தவர் என்றெண்ணி அரசியலையும் பக்தியையும் கலந்தே பார்த்தே வாக்களித்துள்ளனர். ஆதிகடவூரின்  அபிராம பட்டர் சொல்லிய பதினாறு செல்வங்களுள் ஒன்றான கோணாத கோல் என்ற ஆட்சியைத் தருவீர் என்று...இராமனும் கிருஷ்ணனும் நல்லதொரு ஆட்சி அமைக்க உதவியிருக்கிறார்கள்
Image result for modi with dog
எதுவும் வேண்டாம், தயவு செய்து நதிகளை இணைத்து தேசியமயமாக்குங்கள்.

மகாத்மா காந்தியை தேசப்பிதா என்றவரை
இந்த நாட்டின் நீர்ப்பாசனத் தந்தை என்ற சர் ஆர்தர் காட்டன் என்றவரை
 எல்லாம் அவர் பேரை எல்லாம் பின் தள்ளி

உங்கள் பேர் முன் வரும். இந்திய சரித்திரத்தில் இடம் பெறும்
இதன் தடையாக வரும் எந்த சக்தியையும் முறியடியுங்கள்

எந்த மாநிலமாவது எதிர்த்தது என்றால் அந்த மாநில ஆட்சியைக் கலைத்து அதை குடியரசுத் தலைவரின் நேரடி மத்திய ஆட்சியின் கீழ் கொண்டு வந்து திட்டத்தை எப்பாடுபட்டாவது உங்களின் இந்த 5 ஆண்டு நிறைவடைவதற்குள் செயல்படுத்தி விட்டால் இந்தியாவே உங்கள் புகழ் பாடும்.
Image result for modi with dog
இதைப்பற்றிய மேலான கருத்துகள் செறிவான பகிர்தல்கள் தேவைப்பட்டால் இந்த நாட்டின் வல்லுனர்களிடம் இருந்து பெறலாம். நானும் கூட நதி நீர் இணைப்பு பற்றி பல இடங்களில் எப்படி எல்லாம் செய்யலாம் என வடிவமையும் வண்ணம் எனது கருத்துகளைப் பதிந்து பகிர்ந்துள்ளேன் அவற்றைப் பற்றி உங்களிடமும் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருக்கிறேன்.

வாழ்த்துகள் என்றும்.
Image result for modi with dog
உங்கள் கட்சியின் நெறிகளில் இரண்டு முறைக்கும் மேல் மறுபடியும் இது போன்ற மாபெரும் பதவி வகிக்க தேர்தலில் அதற்காக போட்டியிட‌ அனுமதி மறுக்கப்படும் என்பது உண்மையா இல்லை அது போன்ற வழிமுறைகள் அமெரிக்க நாட்டில் உண்டு... இங்கு நமது நாட்டில் உண்டா என்று தெரியவில்லை. உங்கள் கட்சியின் ஒரு தொண்டர் இனி தேர்தலும் வேண்டாம் நீங்களே போதும் என உங்களைக் கடவுளாகவே வணங்குவதாக என்டி டி வியில் பிரண்ணாய் ராய் பேட்டியில் பார்த்தேன். பிரண்ணாய்  ரீடர்ஸ் டைஜஸ்ட் மே மாத இதழிலில் தேர்தலுக்கும் முன்பே நீங்களே வருவீர் பிரதமராக உங்கள் கட்சியே வெற்றி பெறும் என்றும் புதிதாக வாக்களிக்க உரிமை பெற்ற இளையவர் எல்லாம் நீங்கள் தலைமை ஏற்கவே ஆர்வமாக உள்ளனர் என்று குறிப்பிட்டிருந்தார். அவர் சொல்லியது உண்மை. அது நிரூபணமாகிவிட்டது. இந்தியாவில் அடுத்த தேர்தல் முதல் வாக்கு சீட்டு முறையைக் கூட மறுபடியும் கொண்டுவந்து சிலர் படும் சந்தேகங்களையும் தீர்த்து வையுங்கள். நன்றி.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

Monday, May 20, 2019

அட அப்படியா மறுபடியுமா மத்தியில் பி.ஜே.பி ஆட்சியா? கவிஞர் தணிகை

அட அப்படியா மறுபடியுமா மத்தியில் பி.ஜே.பி ஆட்சியா? கவிஞர் தணிகை


Image result for contradiction news about opinion of success of election

அட அப்படியா மறுபடியுமா? மத்தியில் பி.ஜே.பி ஆட்சியா?

ஏழைகள் மட்டும் நள்ளிரவிலும் நோட்டு மாற்ற வங்கி முன் நிற்க வேண்டுமா மறுபடியுமா?

அந்நிய நாட்டு முதலீட்டை தருவித்து இந்தியர்க்கு அள்ளி வழங்கப் போவதான வாக்குறுதி மறுபடியுமா?

இந்திய நதிகளை மறுபடியும் இணைப்பு செய்யப் போவதாக அறிவிப்பு வரவேண்டுமா?

எட்டு வழிச் சாலை போட்டு தீர்வோம் என்ற நிதின் கட்காரியின் உரை நிகழ வேண்டியா? உயர் நீதிமன்றத் தீர்ப்பை மதிக்க அவசியமில்லையா>?

கெயில் குழாய்கள் தஞ்சையின் நெற்களஞ்சியத்தில் இடை புக வேண்டியா?

அம்பானி அதானி போன்ற உலகின் மாபெரும் இந்தியப் பணக்காரர்கள் தழைக்க வேண்டியா?

புயலுக்கு நிவராணத்துக்கு எட்டிப் பார்க்காத பிரதமர்
கமலுக்கு பதில் சொல்லிய அக்கறை வேண்டியா?

மேலும் சுற்றுப் பயணம் செல்ல வேண்டிய நாடுகள் எத்தனை அதையும் பார்க்க வேண்டியா?

5 ஆண்டுக்கும் பிறகு தேர்தல் முடிவின் கட்டத்தில் பத்திரிகையாளரை சந்தித்த பிரதமர் மறுபடியும்  5 ஆண்டு கழித்து சந்திக்க வேண்டியா?

வடக்கு வாழட்டும் தெற்கு தேயட்டும்

நிர்மலா சீதாராமன் போன்றோர் கொடி பறக்கட்டும்
தமிழிசை பரவாதிருக்கட்டும்

மேலும் டோல்கேட்கள் அப்படியே மறு ஐந்தாண்டுகளிலும் கணக்கின்றி வசூல் செய்தபடியே இருக்கட்டும் இன்னும் அவர்கள் கஜானா நிறைய வில்லை என்றே சொல்லிக் கொண்டிருக்க...

குடி நீரும், மருத்துவமும், கல்வியும் சொல்லில் அடங்காமல் நாசமாகப் போகட்டும் என்றா...என்றா...

என்றா அப்படியா அட அதற்காக மறுபடியும் பி.ஜே.பி ஆட்சி...தனிப்பெரும் கட்சியாக வரும் என்று நினைத்திருந்தேன்...ஆனால் இந்தியாவை ஆள மறுபடியும் அவர்களை விட்டால் ஆள் இல்லை என்ற முடிவை கருத்து கணிப்புகள் சொல்லி இருப்பதைப் பார்த்தால்

அட அப்படியா மறுபடியும் பி.ஜே.பி. ஆட்சியா?....என்றே கேட்கத் தோன்றுகிறது.

கமலுக்கு முன் ஜாமீன் கிடைத்திருப்பது வரவேற்கத் தக்கதே...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Sunday, May 19, 2019

எவரையும் எதையும் பேசலாம் ஆனால் செய்ய வேண்டியது>? கவிஞர் தணிகை

எவரையும் எதையும் பேசலாம் ஆனால் செய்ய வேண்டியது>? கவிஞர் தணிகை

Image result for 17th lok sabha

கெய்ல் இராட்சதக் குழாய்கள் தஞ்சை விளைநிலத்தின் மத்தியில் போய்க் கொண்டிருக்க பணிகள் ஆரம்பத்திருக்க..

குடி நீர்த் தேவைக்காக தமிழகமே அல்லோகலப்பட்டுக் கொண்டிருக்க‌

கல்வி, மருத்துவம், வேலை வாய்ப்பு ,  ஆகிய பிரச்சனைகள் தலைவிரித்தாட கொடும் கோடையில் உயிர்கள் பிழைப்பதா மாய்வதா என்று போராட்டத்தில் கிடக்க...

தேர்தல் பிரச்சாரத்திற்காக கமல் பேசிய பேச்சை தமக்கே உரிய கருத்துகளின் புரிதலில் பெரிது படுத்தப் பட்டு பிரச்சனைகளை திசை திருப்பி வருகிறார்கள் என்ற கருத்தை நிறைய பேர் பதிவு செய்திருக்கிறார்கள்.

உண்மைதான் ஆளும் அரசுகள், அது மாநில அரசானாலும், மத்திய அரசானாலும் இருக்கும் நிலவி வரும் பிரச்சனைகளை தீர்க்காமல் அதை திசை திருப்ப  அன்று புதிதாக வரும் செய்திகளை ஊதிப் புடைத்து அதில் தானிய மணிகளுக்குப் பதிலாக வெறும் உமியை எடுத்து வருகிறார்கள்.

ஊடகமும் எந்த செய்தி முக்கியமோ அதைப்பற்றி கவனம் கொள்ளாமல் அக்கறை எடுத்துக் கொள்ளாமல் வெறும் சளசளப்புக்கான செய்திகளை வெளிப்படுத்தி ஏற்கெனவே உள்ள கோடையை மேலும் கொதி நிலைக்கு கொண்டு சென்று விடுகிறது.
Image result for contradiction news about opinion of success of election of India
மேலும் ஒரு சாரர் மோடி அணிக்கு 100 சீட் கிடைத்தாலும் அதிகம் காங்கிரஸ் பக்கமே பெருத்த எண்ணிக்கை என்று அவர்கள் சார்பு ஊடகமே தெரிவித்து வருவதாகவும்

மறு சாரர் இல்லை இல்லை அவர்களுக்கு தனிப்பெரும் கட்சியாக ஏன் அமித் ஷா சொல்வது போல முன்பு வென்றிருந்த எண்ணிக்கையை விட அதிக எம்.பி சீட்களை வெல்வோம் என்ற பாணியில் பேசி வர‌

இன்னும் சில நாட்கள்...காத்திருப்போமே...

இடையே இடைத்தொகுதி தேர்தல் எம்.எல்.ஏவுக்காக‌
 பல நூறு கோடி ஆளும் கட்சி செலவளித்திருப்பதாக ஒரு செய்தியில் முன்னால் மந்திரி சொல்வதாகவும்
தி.மு.க அடையாளத்திற்காக இரண்டாயிரம் ரூபாய் நோட்டை ஜெராக்ஸ் காபி  எடுத்து கொடுத்துள்ளதாகவும் அதை வாக்களித்த பின் கொண்டு வருவார்க்கு இரண்டாயிரம் வழங்கப்படும் என்ற செய்தியும்
Image result for contradiction news about opinion of success of election of India

கமல் செருப்பும் முட்டையும் கற்களும் தாங்கி சினிமாவிலிருந்து பொது வாழ்க்கைக்கு வந்தே விட்டார். இனி அவருக்கு நல்ல நேரம் தாம் போலும்.

இன்றைய 7 ஆம் கட்ட வாக்குப் பதிவு நாளில்..

தேர்தல் ஆணையம் ஒட்டு மொத்தமாகப் பார்க்கையில் தேர்தலை நன்றாக அமைதியான முறையில் நடத்தி இருக்கிறது என்றே சொல்லலாம். கட்சிகள் தங்கள் கை வண்ணத்தை காட்டி இருந்த போதிலும்.

அதே போல வாக்கு எண்ணிக்கையையும் எந்த வித சூது வாது இல்லாமல் நேர்மையாக செய்து முடித்து விட்டதென்றால் உலகின் மாபெரும் ஜனநாயக நாட்டின் 17 வது மக்கள் அவை பணி முழுதும் நிறைவடைந்ததாகவே கருதலாம் அதன்பின் எண்ணிக்கை சாய்வுகளும் நகர்தல்களும் பதவி ஏற்புகளும் இயல்பாக நடைபெற்றுவிடும்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

ஜான் விக் 3., காற்றின் மொழி,கனா: கவிஞர் தணிகை

ஜான் விக்  3., காற்றின் மொழி,கனா: கவிஞர் தணிகை


Related image

ஜான் விக் மூன்றாம் பகுதி, காற்றின் மொழி, கனா ஆகிய படங்களைப் பார்த்தது பற்றி நான் ஏதும் சொல்லாமல் இருந்து விட்டேன். பேரன்பு பற்றி மட்டும் எழுதி இருந்தேன்.

காற்றின் மொழி குடும்பத்துடன் பார்த்தேன் கடந்து போன வாரத்தில் ஏதோ ஒரு தொலைக்காட்சியில் பார்த்தேன். மனம் இலயித்தது. எனவே பார்த்து முடித்து விட்டுத்தான் விடுவது என மனதைக் கட்டாயப் படுத்திக் கொண்டு எல்லா விவரங்கள் நீட்டல் விளம்பரங்கள் அடங்கிய எல்லா தொல்லைக் காட்சிகளையும் பொறுத்துக் கொண்டு பார்த்து முடித்தோம்.

Image result for kaatrin mozhi

வேலைக்கும் போகும் பெண்களின் தன்னம்பிக்கையை வளர்க்கும் விதமாக ஜோதிகாவின் நடிப்பு ஜொலித்தது. மோகன்பாபுவின் மகளான லட்சுமி மஞ்சு நன்றாக செய்திருந்தார். இளங்கோ குமரவேல் அதற்கென்றே பொருத்தப்பட்ட கும்கி கும்பக்கரை கிருஷ்ணமூர்த்தியாகவும்  விதார்த் மிகவும் பொருத்தமான மெல்லவும் முழுங்கவும் முடியாத கணவனாகவும் நன்றாகவே செய்திருந்தார்கள். ஒருவரின் எழுத்தறிவுக்கும் வேலைக்கும் அனுபவத்திற்கும் நிறைய இடைவெளி என்பதை சொல்லி உள்ள படம். இடையே அதற்கு தீனிபோடும் நிறைய சிறு சிறு பாத்திரங்கள் ஊடுருவலாக ஒத்துழைக்க நல்ல படமாக இராதா மோகன் செய்திருந்தார். இவர் 1980களில் நான் சென்னைத் தொலைக்காட்சியில் ஒரு பேட்டிக்கு நேரடி ஒளிபரப்பில் கலந்து கொள்ளச் சென்று இருந்த காலத்தில் சினிமாவா தொலைக்காட்சி வேலையா என்ற இரண்டுக்கும் நடுவில் தடுமாறிக் கொண்டிருந்தார். ஆனால் நல்ல படங்களைக் கொடுத்து தனக்கென ஒரு முத்தீரை பதித்து வருகிறார். ஆனால் ஒரேமாதிரியான படங்கள் இவருடையது

கனா: அமீர்கான் இந்தியில் டங்கல் படத்தில் தமது குடும்பத்தில் இருந்து தனது கனவான ஒரு மல்யுத்த சாம்பியனை உருவாக்க வேண்டும் என்ற ஆசையை தனது மகளை  பெண் மல்யுத்த வீராங்கனையை உருவாக்குவது போல் சத்யராஜ் ஒரு ஏழை விவசாயி முருகேசனாக ஐஸ்வர்யா ராஜேஸ் கௌசல்யா முருகேசனாகவும், சிவகார்த்திகேயன் அனைவரும் பாராட்டும் பயிற்சியாளராகவும் சமுதாயப் புறக்கணிப்புகளையெல்லாம் புறம் தள்ளி தமது குறிக்கோளில் எவ்வாறு வெற்றி அடைகிறார்கள் என்பதே கதை நல்ல ஆக்க பூர்வமான கதைகள் வருவது நல்ல அறிகுறிதான். அது மட்டுமல்லாமல் விவசாயமும், கடன் வாங்கிய ஒரு விவசாயியின் நிலை பற்றியும் நல்ல முறையில் சித்தரித்துள்ளார்கள்.
தயாரிப்பாளர் சிவ கார்த்திகேயன் இதில் நடித்துமுள்ளார். நல்ல முயற்சி. வாழ்த்துகள்.

Image result for john wick 3

ஜான் விக் 3. மூன்றும் பார்த்து விட்டேன் இதை இளைஞர்கள் பெரிதும் விரும்புகிறார்கள். இப்படிப்பட்ட பாகத்தில் அடுத்து ஜான் விக் 4 வர இதிலேயே கடைசியில் காட்சியை முடித்து தயாராக வைத்திருக்கிறார்கள்.

இதன் காட்சிகளில் சில எனக்கு என்டர்  த ட்ராகன்: புரூஸ் லீ கிளைமாக்ஸ் காட்சியில் கண்ணாடி மாயா பிம்பங்களை உடைத்து அதன் பின் தெளிந்து எதிரியை சமாளிப்பாரே அவற்றை நினைவு படுத்தியது.

ஒரே நபர் என்னதான் புல்லட் புரூப் ஜாக்கெட் உடன் இருந்தாலுமே எப்படி சளைக்காமல் இவ்வளவு எதிரிகளைக் கொல்கிறார் என்பதும் சட்டம் காவல் நீதி என்பதே இல்லாத நாட்டில் நடப்பதாக இவற்றைக் கொண்டால் ஒரு சினிமாவாக கதையாக பார்த்தால் பிரமிப்பூட்டும் படங்கள் தாம் ஆங்கிலப் படங்கள் என்ட்கேம் உட்பட....ஆனால் எல்லாம் கம்ப்யூட்டர் கேம் விளையாடும் சிறு பிள்ளைகளுக்கு உற்சாகமூட்டும் பொழுது போக்குகளே.

இடையே நாயின் பாசம். ஒரு நாயைக் கொல்வதிலிருந்து அந்தப் படம் மறுபடியும் வெகு வேகமாக கிளம்புகிறது...

கவிஞர் தணிகை

மறுபடியும் பூக்கும் வரை

Thursday, May 16, 2019

தீவிரவாதிகளுக்கு மதமும் இல்லை ஆன்மீகவாதிகளுக்கும்: கவிஞர் தணிகை

தீவிரவாதிகளுக்கு மதமும் இல்லை ஆன்மீகவாதிகளுக்கும்: கவிஞர் தணிகை


Image result for bjp pragya thakur

தீவிர வாதிகளுக்கும் ஆன்மீகவாதிகளுக்கும் மதம் என்பதே இல்லை. என்னடா இப்படி சொல்கிறோமே என்று வியப்படைய ஒன்றுமில்லை. இரண்டுக்குமே சமய நெறி தழுவிய கோட்பாடுகளும் வரையறைகளும் எல்லைகளும் இல்லைதான் . ஆனால் இரண்டுக்கும் மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடு உண்டு. தீவிரவாதிகள் எந்தக் கோட்பாட்டையும் கடைப்பிடிப்பதாக இருந்தால் வன்முறையை கையால் கூடத் தொட மாட்டார்கள். உயிர்ப்பலிகளும் மதம் என்ற பேர் சொல்லி நடைபெறாது. ஏன் கூட்டம் கூட்டமாக இலட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் ஓரிடத்தில் கூடி வழிபடும் தேவை கூட இருக்காது.

ஏன் எனில் எந்த மதத்திலுமே அன்பு நெறியே போதிக்கப்பட்டிருக்கிறது. அடுத்தவர் நலமும் கணக்கெடுத்துக் கொள்ளப்படுகிறது. எதிரியாக எவரையுமே கருத வேண்டிய அவசியங்கள் இல்லை. எல்லா மதத்திலுமே பிற உயிருக்குத் தீங்கு செய்யாதிருத்தல் என்ற அமைதி வழி பிறர் பொருள் மேல் ஆசைப்படாதிருத்தல் போன்றவை சொல்லப்பட்டிருக்கின்றன.

அப்படி இருக்கும்போது அதைத் தீவிரமாக கடைப்பிடிக்கும் ஒருவர் எப்படி ஆய்தமாக மனித வெடிகுண்டாக மாறுவதும் ஆய்தத்தை கையில் எடுத்து மதத்தின் இனத்தின் பேர்சொல்லி மற்றவரைக் கொல்வதுமாக இருக்க முடியும்...எல்லாம் மனித மன பேதங்கள்.


அதே போல ஆன்மீகம் என்றாலும் உயிரும் அதை ஒட்டிய உறவுமே. இந்த நெறிகளில் ஆழ்ந்தவர்கள் எந்த மதம், இந்த மதம், அந்த மதம் என்று வேற்றுமை பாராட்ட மாட்டார்கள்..

நடக்க விட மாட்டோம், நாக்கை அறுப்போம், கொல்வோம், செருப்பறிவோம்  என்றெல்லாம் சொல்லித் திரிய மாட்டார்கள். அப்படி செய்ய மாட்டார்கள்...

ஆன்மீகவாதிகள் மதங்களைக் கடந்தவர்கள், மதங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் மதம் என்பது நல்நெறி காட்டும் வரை நல் வழி கூட்டும் வரை நல்ல பசுமாடாகவே இருக்கிறது. ஆனால் அதில் வெறி வந்து சேரும்போது மதம் பிடித்த யானையாக மாறி எல்லாவற்றையும் துவம்சம் செய்து விடுகிறது. புயலடித்த ஓய்ந்த பகுதியைப் போய்ப் பார்த்தால் அதில் ஒரு ஓலத்தின் ஒலியும் தொனியும் ஊடுருவி இருக்கும்  பார்க்கவே கோரதாண்டவமாடிய காட்சிகள் கண்களை  பனிக்கச் செய்யும்.

எனவேதான் உலகை திருத்த முனையும் உத்தமர்கள் அனைவரும் சாதி மத, இன மொழி பாகுபாட்டில் எல்லாம் மூழ்கி விடாமல் உலகில் உள்ள வெறுமையை வறுமையை பசியை, நீர் வறட்சியை, உயிர் படும் துன்பத்தை  மருத்துவம் உணவு மற்றும் கல்வி வழியே போக்க முனைந்தார்கள்...
சேவையை விட ஒரு உயர்ந்த மார்க்கமோ மதமோ இல்லை.

உணவு உற்பத்தி குறைந்து கொண்டு போகும்போது

தண்ணீருக்காக  மற்றுமொரு உலகப் போர் கூட மூளும் அபாயம் இருப்பதாக மாமனிதர்கள் குறிப்பிட்டு கவலைப்பட்டுக் கொண்டிருக்கும்போது ஒரு தேர்தலும் பிரச்சாரமும் வாக்குகளும் வாள் வீசி வருகின்றன வாய் வீசி வருகின்றன..

இந்த நிலையில் ப்ரக்யா தாகூர் கோட்ஸே பற்றிபேசிய கருத்துக்கு   மன்னிப்புக் கோர வேண்டும் என்று அவர்கள் பாரதிய ஜனதா கட்சியே கோரி இருப்பது வரவேற்கத் தக்கது. கமல் ஹாசனுக்கு மோடி இந்தியப் பிரதமராக இருப்பவர் பதில் சொல்லி இருப்பது ...எல்லாம் கவனிக்கத்தக்கவையே.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.


Wednesday, May 15, 2019

நானும் கூட இந்துதான் பிறப்பால்: கவிஞர் தணிகை

நானும் கூட இந்துதான் பிறப்பால்: கவிஞர் தணிகை


Related image

காணபத்யம், கௌமாரம், சக்தேயம், சௌரம்,சைவம், வைணவம் என்ற சமயக் கூறுகளை உள்ளடக்கியதுதான் இந்து மதம்.  எல்லாவற்றிலும் நிறைய கதைகள். மக்கள் நம்பிக்கைகளாக. அதன் அடியில் இராமாயணம் மஹாபாரதம் என்னும் இதிகாசம் இரண்டும். என்னிடம் இவை மட்டுமல்ல  பைபிள், குரான், கீதை, யாவும் பல முறை படித்து முடிக்கப்பட்டு ஒரு வரையறை செயல்பாட்டுடன் உள்ளது. மேலும் பௌத்தம், ஜைனம், ஜென் , ஜி.கிருஷ்ணமூர்த்தி போன்ற எல்லா தத்துவங்களிலும் ஈடுபாடு உள்ளது அவை நன்மை பயக்குமெனில். இவை யாவற்றிலும் உள்ள நல்லதை எடுத்து செரித்து அதன் ரசத்தை உறிஞ்சிக் குடித்து வளர்ந்த செடி.

மதங்களைக் கடந்து பார்க்கத் தெரிந்திருந்தால் மட்டுமே மனிதம் முழுமை பெறும். அவர்களே மனிதர் என்று அழைக்கப்பட சரியான பொருள் பெறுவர்.

பிறப்பால் நானும் கூட ஒரு இந்து தான் என்றாலும் கலாம் ஐநாவில் உரையாற்றும்போது குறிப்பிட்டது போல  யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கணியன் பூங்குன்றனார் வழியே சிறந்தது என்று எண்ணி வாழ்வது எங்கள் வழி.
Image result for ramalinga vallalar
மூடத்தனமின்றி காசு செலவின்றி யாரும் எந்தக் கடவுளையும் வணங்கலாம் என்ற பெரியாரையும் பிடிக்கிறது

ரூபக்கடவுளும் பூசாரிகளும் இருக்கும் வரை இந்த உலகில் ஒழுக்கம் தோன்ற வழியே இல்லை என்ற விவேகானந்தரின் நெறியும் பிடிக்கிறது என ஏன் சொல்ல முடிகிறது எனில் அவை எவருக்கும் ஊறு விளைவிக்கவில்லை என்பதால்

கலாம், தெரஸா, காந்தி போன்ற மாமனிதர்களை எல்லாம் நாம் மதம் என்ற ஒரு அளவுகோல் வைத்து அதற்குள் அடைத்து விட முடியாது. அவர்கள் முழு மானிட சமுதாயத்துக்கே சொந்தம். ஏன் எனைப்போன்றோர் கூட எந்த மதம் சார்ந்தும் இயங்குவது இல்லை. ஆனால்  எல்லா மதத்தின் வழிகாட்டுதலும், நெறிகாட்டுதலும் உவமைகளும் சொற்றொடர்களும் எமது பேச்சின் புழக்கத்தில் அவ்வப்போது தலைகாட்டவே செய்யும் ஏன் எனில் அவை எம்முள் ஊறி இருப்பதால் .ஆனால் அவை காட்டும் முட்டாள் தனங்களையும், மூடத்தனங்களையும் யாம் ஒரு போதும் ஏற்பதில்லை.

விவேகானந்தர் சொல்வது போல உருவ வழிபாடு என்பதே மிகவும் கீழான நிலை...அதிலிருந்து தியான மார்க்கம் சென்று கடவுளை அறிந்து பட வேண்டும்.
Image result for all are human beings eventhough from various religions
எனவே நானும் கூட இந்துதான் பிறப்பால் ஆனால் எனக்கு கிறித்தவ நண்பர்கள் ஏராளம், முகமதிய நண்பர்களும் இருக்கிறார்கள். நான் அவர்களுக்கு உவப்பானவனாகவே இருக்கிறேன்.

ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி சொல்வது போல மனிதரை நாடு, மதம், மொழி, இனம், இவை போன்ற எதுவும் அடையாளப்படுத்தி விடக் கூடாது. மனிதர் எவராயிருந்தாலும் அவர் மனிதர்தாம். அவரின் உயிர் அரியதுதான். பாகிஸ்தான் மனிதர் இறப்பு  இந்தியாவில் வசிப்பதால் நமக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தால் அதுவும் தவறுதான்.

கியூபாவில் வாழும் ஒரு மனிதரின் துன்பம் அமெரிக்காவில் இன்பமாக மற்றொருவரால் கருதப்பட்டால் அது மனிதமல்ல...


இது போன்ற மேன்மையான கோட்பாட்டால் உலகும் மக்களும் மகிழ்வடைவார் குண்டு மழைக்குத் தேவையிருக்காது. குடிக்க நீர் கூட இல்லாமல் அரசியல் பேதங்களும், சாதி மத பேதங்களும் இங்கும் எங்கும் தலை விரித்தாட முடியாது.
Image result for all are human beings eventhough from various religions
இதையே மாமனிதராக வாழ்ந்தார் எல்லாம் சொன்னார்கள்... ஆனால் கீழான சிந்தை படைத்தார் தமது சுய நல மேன்மைக்காக தேவையில்லாத இவற்றை எல்லாம் உயிர்ப்பித்து உருவம் கொடுத்து மனித உயிர்களைக் கொத்துக் கொத்தாக எண்ணிக்கை அளவின்றி வாங்கி உலகை வன்முறைக் களமாக , இரத்தம் சிந்தும் அரங்கமாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

அது போன்ற நபர்கள் எல்லாம் சமுதாய பொது வாழ்வு வெளியிலிருந்தே அப்புறப்படுத்தப் பட வேண்டியவர்கள்.

சந்திரசேகர சங்கராச்சாரியார் அவர்கள் தமிழ் மொழி நீச மொழி என்று சொன்னதாக  வரலாறு உண்டு. மொழி கடவுளை அடைய ஒரு ஊடகம் எனில் அதிலும் சமஸ்கிருதம் போன்ற வட மொழி மட்டுமே அதற்கு தகுதியுடையது எனில் அதுவும் எவர்க்குமே புரிபடாமல் அவற்றை மந்திர தந்திர வழிகள் என்று ஏமாற்றும் வழிகள் எனில் கடவுளும் கூட ஒரு ஏமாற்றுதான் என்றே கருத முடியும்.

புறம் கட உள் பார்க்க‌
புறம் கட  கடவுள் பார்க்க‌

இராமலிங்க வள்ளலார் போன்ற மகான்கள் அவதரித்த நாட்டில் இப்படிப்பட்ட பெரு ஓலம். ஒர் மனிதர்க்கு பேசவும் , எழுதவும் பேச்சுரிமை, எழுத்துரிமை ஆகியவை சட்டபூர்வமாகவே உண்டு. அதற்காக அவரை நிந்திப்பதும், அவர் மேல் வழக்கு தொடுப்பதும், அவரது நாக்கை அறுப்பதாக சொல்வதும் இவை எல்லாம் மக்களை ஒரு கொந்தளிப்பு நிலைக்கு கொண்டு செல்லும் முயற்சியாகும்
Related imageஇராமலிங்க வள்ளலாரே முதலில் சென்னையில் உள்ள கந்தகோட்டத்துப் பெருமான் முருகனை வணங்கிப் பாடல் புனைந்திருக்கிறார்... ஆனால் இறுதியில் பக்குவத்தில் அருட் பெருஞ் சோதி, தனிப்பெருங்கருணை என்கிறார் மக்கள் பெரும்பசி தீர்த்தல் பெரும் கடைத்தேற வழி என்கிறார்.

இந்தியா மகாத்மா கோட்ஸே, ராஜிவ் தனு பிரபாகரன், இந்திரா பியந்த் சிங் பொற்கோவில் இப்படி ஒருவரைப் பற்றிச் சொல்லும்போது அதன் பின் வரும் சில பெயர்களும் இருக்கத்தான் செய்யும் அதற்காக அதைப்பற்றி பேசுவது எழுதுவது கூடாது என்பதெல்லாம் வன்முறையைக் கிளப்பும் ஆதிக்க வெறிகள். அவற்றுக்கு மக்களும் நாடும் நெறிகளும் நீதியும் இரையாகிடக் கூடாது

Image result for all are human beings eventhough from various religions

முதலில் மக்களின் குடிநீர்த் தேவையை நிறைவு செய்யுங்கள் அதன் பின் நீங்கள்  எந்த மதம், கட்சி, ஆட்சி, அதிகாரம் என்று அடித்துக் கொள்ளலாம்

கமல்ஹாசன் முன் ஜாமின் கேட்டு விண்ணப்பித்துவிட்டு மறுபடியும் அது சரித்திரப்பூர்வமான உண்மைதான் என பிரச்சாரத்தில் இறங்கி இருப்பது அவரைப்பொருத்தவரையிலும், அவர்கள் மக்கள் நீதி மையக் கட்சியைப் பொறுத்தவரையிலும் ஒரு ஆரோக்யமான முயற்சியே.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

உள்ளம் பெருங் கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாயதுவே கோபுர வாசல்
தெள்ளத் தெளிந்தார்க்கு சீவனே சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளா மணி விளக்கே!
 திருமூலம்

Tuesday, May 14, 2019

கமல் காந்தி கோட்ஸே: கவிஞர் தணிகை kamal gandhi kotse...kavignar thanigai.

கமல் நாதுராம் கோட்சேவைச் சொன்னால் இவர்களுக்கு ஏன் இத்தனை எரிச்சல்?  கவிஞர் தணிகை

Image result for kamal gandhi kotsey
தமிழிசை, சு. சுவாமி, ஹெச்.ராஜா இப்படி ஒரு சாரர் இவர்கள் எல்லாம் அந்த இந்துசேனாவிலிருந்தும், ஜனசங்கத்திலிருந்தும்,பாரதிய ஜனதாவின் பூர்வீக ஆரம்பத்திலிருந்தும் வந்த வழித் தோன்றல்கள் என்று சொல்லாமல் சொல்லி கோட்சே அவர்கள் ஆள்தாம் என்று சொல்லாமல் சொல்லி தம்மைத் தாமே காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழிசை தேர்தல் முடிவு தேதியும் மறு தேர்தல் நாளும் நெருங்க நெருங்க உளறிக் கொட்டிக் கொண்டே இருக்கிறார். உதாரணமாக ஸ்டாலின் பாஜகவுடன் இரகசியமாக பேசிக் கொண்டிருக்கிறார் பதவி பெற என்று சொல்லிவிட்டு ஸ்டாலின் அப்படி ஏதும் இருந்தால் தாம் பதவி விட்டே விலகத் தயார் என்றவுடன் தமக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் பேசியதாகவும், கருணாநிதி மகன் ஸ்டாலின் அரசியலில் இருப்பதே தமது விருப்பம் என்றெல்லாம் பேசியிருக்கிறார்.Image result for kamal gandhi kotsey


டில்லியில் வழக்கும் அரவக்குறிச்சியில் இரு வழக்கு என கமல்ஹாசன் மீது மிகவும் காட்டமாக இருக்கிறது நாட்டின் மாபெரும் கட்சி ...ஒரு மாநில மந்திரி அவரது நாக்கை அறுக்க வேண்டும் என்கிறார்

இவர்கள் எல்லாம் என்ன தாங்கள் மகாத்மா காந்தி என்ற சமாதான நல்லிணக்கத்துக்காகவும், மத நல்லிணக்கத்துக்காவும் பாடுபட்ட   மோகன்தாஸ் கரம் சந்த் காந்தியை 120 வயது வரை வாழ்வேன் எனச் சொன்ன ஒரு உலகத் தலைவரை 78 ஆண்டுகளில் கொன்று முடித்ததை ஆதரிக்கிறார்களா? வேறு என்ன இதற்கு பொருள்?

அந்த கோட்ஸே கொன்றது உண்மை என்பதை சரித்திரம் சொல்கிறது அதை ஒரு கட்சித் தலைவர் பேசியது தவறு என்றால் பாபர் மசூதி இடித்தது இன்னும் கூட முடிவடையாமல் உள்ள நிலையில் அதன் அடிப்படியில் ஒரு ஆட்சி தேர்தலில் நின்று வாக்கு கேட்பதும் மறு முறையும் தாமேதாம் ஆட்சிக்கு வருவோம் என்பதும் என்ன நியாயம்?


Image result for kamal haasan
இந்த கூட்டம் எப்படி வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் செய்யுலாம் என்று அறிந்த கமல் கட்சியின் தலைவர் என்ற முறையில் அன்றைய அரவக்குறிச்சிக் கூட்டத்தை ரத்து செய்துவிட்டு மதுரை சென்றதும் அந்தக் கூட்டத்தை 16 அன்று தொடரலாம் என்று விட்டு வந்திருப்பதும் நல்லதே.

இதனிடையே அந்தக் கட்சியையே ரத்து செய்ய வேண்டுமா வேண்டாமா என்றெல்லாம் ஊடகங்கள் வியாபாரம் செய்ய ஆரம்பித்துவிட்டன‌

ஊருக்கு இளைத்தவன் ஆண்டி என்னும்படியாக கமல் மேல் ஆரம்பத்தில் இருந்தே இந்த ஆளும் வர்க்கத்தார்க்கு பேதம், கோபம்,வெறுப்பு எல்லாம். இந்த காலக் கட்டத்தில் ரஜினி மாதிரி தோழர்கள் இது பற்றிக் கருத்து சொல்லவிரும்பவில்லை என்பது யார் எந்த நேரத்தில் எப்படி நடந்து கொள்வார் என்றதை தெளிவு படுத்துகிறது.

கமல் காந்திய வழியில் பயம் கொள்ளாது வழக்குகளைச் சந்திக்க வேண்டும் தேவைப்பட்டால் சிறைக்கும்  செல்ல வேண்டும். அது அவரை மேலும் நாடெங்கும் பிரபலமான தலைவராக்கும்.

அரவிந்த் கெஜ்ரிவாலை அடித்துவிட்டு அவரது கட்சிக்காரன் தான் அடித்தான் என்று சொல்வதும்...தேர்தல் என்ற ஒரே இலக்குடன் பதவி என்ற ஒரே இழுக்குடன் இவர்கள் ஆடும் ஆட்டத்திற்கு எல்லாம்
என்றுதான் ஒரு முடிவு வருவது அது இந்தப் புள்ளியில் இருந்தாவது ஆரம்பிக்கட்டும்...இவரது கட்சியை தடை செய்தால் தேர்தல் முறையை எல்லாம் கூட தடை செய்து விட வேண்டியதாக இருக்கும்.

ஏன் எனில் எல்லாம் வரையறையை சட்ட விதி முறைகளை மீறியதாகவே நடந்து வருகிறது என்பதை உலகு பார்த்தே வருகிறது. எங்கே எம்.எல்.ஏ சீட் இந்த கட்சிக்கு கிடைத்து விடுமோ என்ற ஒரு
எதிர்ப்பில் எனவே அந்தக் கட்சியையே தடை செய்து விட்டால் சரியாக இருக்கும் என்ற தப்புக் கணக்குகள்...எம்.எல்.ஏக்களை கட்சி பதவி நீக்கம் செய்து ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளும் முயற்சிகள் போல‌

எங்கோ அடித்தால் இங்கேன் வலிக்க வேண்டும், அவரது நாக்கு ஏன் அறுக்கப்பட வேண்டும்... தப்பும் தவறுமாக பேசியே பதவி சுகத்தில் கிடந்து வரும் உழன்று வரும் நபர்களாய் இருக்கும்போது ஒரு மனிதன்  உண்மை பேசியதற்காக அவரது நாக்கு அறுக்கப்பட வேண்டுமென்றால் அது கூட தவறில்லை தான் கலிலியோ உண்மை கண்டறிந்தபோது வீட்டுச் சிறையில் அடைபட்டது போல, கோபர்நிகஸ் நாக்கு அறுபட்டது போல,சாக்ரடீஸ் விஷக்கோப்பை ஏந்தியது போல...

கமல்ஹாசன் இனி புகழ் பெறுவார் அது நிச்சயம்...
இந்த சிறு நரிகளின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் வாலாட்டலுக்கும் அவர் பயந்து விடக்கூடாது...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Monday, May 6, 2019

தமிழ்நாடு அரசின் கல்விக் கொள்கையின் அபாயம்: கவிஞர் தணிகை


தமிழ்நாடு அரசின் கல்விக் கொள்கையின் அபாயம்: கவிஞர் தணிகை
ஜெ அரசின் வழித் தோன்றல்களில் செங்கோட்டையன் கல்வி அமைச்சர் சிறப்பாக பணி புரிகிறார் என்ற ஒரு மாயா பிம்பம் பிரமை தோற்றுவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போதைய செய்திகளால் அந்த பிரமை அகன்று விட்டது.

8 ஆம் வகுப்பு வரை படித்தாலும் படிக்காவிட்டாலும் தேர்ச்சி,ப்ளஸ் ஒன்றுக்கு தனியான தேர்வு, ப்ளஸ் டூவுக்கு மறுபடியும் தேர்வு இப்படி பல மாற்றங்கள் என்றாலும் கடைசியில் ரிசல்ட் எல்லாம் 100க்கருகே வந்தாலும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகவே போய்விட்டது.

இன்றைய செய்தி என்னவெனில் ப்ளஸ் ஒன் தவறிய மாணவர்கள் தவறிய பாடங்களில் அதாவது ப்ளஸ் டூ தேறிய போதும் ப்ளஸ் ஒன் தவறிய பாடங்களில் தேறவில்லை எனில் மேற்படிப்புக்கு செல்ல வழியில்லை என்ற நிலையில் மறு தேர்வு எழுதியவரில் 52 சதவீதம் மட்டுமே தேர்ச்சி அடைந்தனர். 48 சதவீத மாணவர்கள் தோல்வி.

இந்நிலையில் ப்ளஸ் டூ, பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதமோ மிக அதிகம்.
எல்லாம் நூற்றுக்கு நூறுக்கு மிக அருகே. இவர்கள் என்ன படிக்கின்றனர்
எங்கே வேலை பார்க்கப் போகின்றனர் எவ்வளவு மாத ஊதியம் கிடைக்கும்
இது பற்றி அரசுக்கு கவலை இல்லை.

பள்ளியில் கற்றல் வழி, கேட்டல் மொழி, ஆய்வு வழி என்று என்ன என்னவோ சொல்லப்பட்டாலும் மெக்காலே கல்வி முறை மட்டும் அடிப்படையில் அப்படியே இருக்கிறது.

யானையும் காடும் கடலும் பாடத்தில் படத்தில் மட்டுமே காட்டப்படுகின்றன. மேலும் எண்ணும் எழுத்தும் ஆங்கில வழிக்கல்வியுமே பெரிதான கல்வி எனச் சொல்லும் மாயை இன்னும் விலகவே இல்லை.

இந்த நேரத்தில் எனது நினைவில்:

 எமது கல்லூரிக்கு வந்திருந்த ஜப்பானிய ஆய்வு அறிஞர்கள் இருவர்க்கும் ஆங்கிலம் அறவே வரவில்லை. ஒரு மொழிபெயர்ப்பாளர் அவசியம் தேவைப்பட்டார். அவருக்கும் கூட பாராட்டுமளவு மொழி அறிவு இல்லை.

விவசாயம் நலிந்து விட்டது ஆனால் விவசாயப் படிப்புக்கு மௌஸ்.வேலையே இல்லை அதனாலோ என்னவோ காமர்ஸ் படிப்புக்கு மௌஸ். பொறியியல் படிப்பு பாடாய் படுத்துகிறது வேலைக்கு அரசு வேலைக்கு ஒர் ரேட் இருக்கிறது இல்லாமல் கிடைக்காத என்ற செய்தி அனைவரிடமும் பொதுவாக நிலவுகிறது.   

 தமிழகப் பள்ளிகளில் பெரும்பாலும் காலத்துக்கேற்ற கட்டமைவே இல்லை. அர்விந்த் கெஜ்ரிவால் முயற்சியில் டில்லியில் பொதுப்பள்ளிகள் எப்படி என ஒரு காட்சிப் பேழை பார்த்த்தேன் . கண்களில் ஒற்றிக் கொள்ளலாம் போல பள பள வென அயல் நாட்டுப் பள்ளிகள் போல காட்சி கொடுத்தன.

மொத்தத்தில் எல்லாம் இலவசம் என்று பள்ளியின் தரத்தை மாணவர்களின் கல்வித் தரத்தை படித்தாலும் படிக்காவிட்டாலும் தேர்ச்சி என்று சொல்லி வேலை வாய்ப்பை அதற்கான கல்வி தேர்ச்சிய முக்கியமான கல்விக் கட்டத் தேர்வில் மாணவர்களை அவர்கள் தரத்தின் தாழ்ச்சியை உறுதிப்படுத்தி விட்டன இந்த தமிழக அரசின் மாண்புகள்

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Sunday, May 5, 2019

பேரன்பு: கவிஞர் தணிகை

பேரன்பு: கவிஞர் தணிகை

Image result for peranbu


1. உணர்வுக்கு அதன் வடிகாலுக்கு அழகு அழகில்லை என்பதெல்லாம் தேவையில்லை. வயதும் பருவமும் மட்டுமே..

2. ஆண் பெண்  நடுவண்பால்  என்ற இனம் எல்லாம் தேவையில்லை அன்பைக் கொட்டுவதற்கு

3. எப்பாடுபட்டாவது வாழ வேண்டுமேயல்லாமல் எவருமே சாகத் துணிவதில்லை பிச்சை எடுப்பாரும் உடலை அசைக்க முடியாதாரும் கூட...

4. இயற்கை பெரு வலிமையுடையது அது தமிழ் நாட்டுக்கு சேதமின்றி ஆந்திரா ஒடிஸா, மே.வங்கம், கிழக்கு வங்கம்  வழி கூட செல்லும் ஃபானி போல...

5 உரிய பருவம் வரும்போது உணர்வுகள் கிளர்ந்தெழுந்து சுய இன்பம் அனுபவிக்க விரும்பும் இளம் பருவத்தினர்க்கு நெறிப்படுத்தல் அதுவும் பெற்றோர் வழியே வழிகாட்டப்படல் வேண்டும்...

இப்படி பல வாரியான உயரிய அவசியமான சமூகத்திற்கு தேவையான கருத்துகள் ஒரு கவிதை நடையில் சொல்லப்பட்ட படம்.

இப்போதெல்லாம் படம் பார்க்கும் தொடர்பு விட்டுப் போய்விட்டது அல்லது பார்த்தாலும் அது எழுதும்படியான உந்துதலோடு இல்லை.

ஒரு கட்டத்தில் பார்த்தால் எதற்காக இந்த சோகப்படங்களை எல்லாம் பார்க்க வேண்டும் நாமும் துயரப்பட வேண்டும் வாங்க போங்க என குத்தாட்டம் ஆடிவிட்டு எல்லோரையும் போல விட்டு விட வேண்டியதும் சரிதானோ எனத் தோன்றும்...

அப்படித்தான் இந்த பேரன்பு, கனா போன்ற படங்கள் என் கை வசம் வந்து பல நாட்களாகிய பின்னும் பார்க்காமலே இருந்து வந்தேன். பணிச்சுமையும் பயணச் சுமையும் அன்றாட அலுவல்களின் போக்கும் கூட காரணங்கள்.

முன்பு போல சினிமா பார்ப்பதை ஒரு கடமையாகச் செய்துவிட்டு அதை உங்களுக்குப் பகிர்ந்து கொடுக்க வேண்டும் என்ற அவா எல்லாம் இந்தக் காலத்துள் அமிழ்ந்து போய்விட்டது.

ஆனால் பேரன்பை பார்க்காமல் இருந்தால் பார்த்து விடுங்கள் எனச் சொல்லவே இந்தப் பதிவு. நீங்கள் எல்லாம் கொடுத்து வைத்தவர்கள்... என்னைப் போல் ஒர் பெண் பிள்ளை இல்லாதவர்கள்...நான் அதை வைத்துக் கொண்டு பட்டதை பட்டு மீண்டதை எழுதி பல அத்தியாயமாக புத்தகமாக்கியிருக்கிறேன் படித்துப் பாருங்கள் என்கிறார் அமுதவன்.

அமுதவன், பாப்பா பற்றிய கதை நம் கண் முன் காட்சி ஓவியமாய் விரிந்தோடுகிறது...அதில் இடையே தேவைப்பாட்டுக்காக அஞ்சலி,என்னும் விஜயலட்சுமி, . அஞ்சலி அமீர் என்னும் மீரா போன்ற நல்ல படைப்புகளும் இணைந்து வருகின்றன என்றாலும் ஊரும் உறவும் உலகும் அவர்களை தூற வீசி எறிய அவர்கள் எப்படி யாருமற்ற கானகத்திற்கு போய் அங்கும் வாழமுடியாமல் மறுபடியும் நகர்புற வாழ்வுக்கே வந்து படாத பாடு படுகிறார்கள் என மிகவும் இயல்பாக படமாக்கப்பட்டிருக்கிறது .இந்த உலகத்தரமான படம். டாக்டர் தனபாலாக சமுத்திரக்கனி அளவாக, அஞ்சலி போன்றோரும்

இந்தப் படத்தைப் பற்றி சொல்ல முயற்சிக்கும் முன் பார்த்து விடுவதே சரியாக இருக்கும்
Image result for peranbu
நல்ல துணிச்சலுடன் சுய இன்பம் என்ற ஒரு தீங்கு எப்படி இளையவர்களை தீண்டி அவர்களை பாழ்படுத்துமளவு சென்றுவிடும் அதை எவ்வாறு கையாள்வது என நுட்பமாக நுணுக்கத்துடன் அலசி இருக்கின்றனர்.

பழங்காலத்தில் பெற்றோர்க்கு, முதியவர்க்கு தாத்தா பாட்டிகளுக்கு எல்லாம் ஒரு சகிப்புத்தன்மையுடன் செய்தார்கள் அதே போல குடும்பத்துள் எவராவது ஒருவர் தப்பிப் பிறந்தால் ஊமையாகவோ, முடமாகவோ, ஏதோ ஒரு குறைபாட்டுடன் இருந்தாலும் அரவணைப்பு கிடைத்தது...ஆனால் அது நாட்பட நாட்பட காலப்போக்கில் எப்படி மாறியது மனிதர்கள் எப்படி சுயநலக்கிருமிகளாகிப் போனார்கள் என்ற வட்டத்தை தெளிவாக தொட்டுக் காண்பித்திருக்கும் படம்

சமுத்திரக் கனி ஒரு படத்தில் எப்படி ஒரு பெண் குழந்தையுடன் இரவு விடுதிகளில் சென்று அவதிப்படுவாரோ,அதே போல சாலையோரம் கடற்கரையோரம் என்ற காட்சிகள் நமது சமூகத்தின் வெளிப்பாட்டுக் குணமாக ஈரமில்லாத நெஞ்சுகளை எளிதில் புலப்படுத்துவதும் சுற்றம் சூழம் எவ்வாறு மனித நச்சு மிருகங்களுள் முடங்கிப் போய் உள்ளன என்பவற்றையும் காட்டுகின்றன.

மோகன்லால், மம்மூட்டி கமல், அமீர்கான் போன்றோர் மட்டுமே இது போன்ற கேரக்டர்களில் செய்ய முடியும். மம்மூட்டி அமுதவனாக மாறி இருக்கிறார். கொஞ்சம் கூட மிகையான நடிப்பில்லை. அறை வாங்குகிறார், அடி வாங்குகிறார் ... நான் நம்ம ரஜினியை நினைச்சுப் பார்த்தேன்....அந்த ரோலில்... கதை நகர்கிறது நகர்த்துகிறது நடிப்பார் அல்லாமல்...அவர்கள் வழியே...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Thursday, May 2, 2019

SC 57+2என்பது சீட் கெப்பாசிட்டிதானா? கவிஞர் தணிகை

57+2 என்பது சீட் கெப்பாசிட்டிதானா? கவிஞர் தணிகை


Image result for Standing overload buses in salem to mettur buses

57 + 1 இது சிட்டிங், 57+ 1 இது ஸ்டேண்டிங் என்றும் இருக்கலாம் அல்லது 57 டு த பவர் ஆப் ஸ்கொயர் டூ... என்பதும் சரியாக இருக்கும். இந்தியன் cinema சீனியர் கமலும்  ஜூனியர் கமலுமாக நினைவாட... கார்ல் மார்க்ஸ் கம்ப்ய்யூனிசம் எல்லாம் கனவிலாட இந்த அரசுகள் பற்றி எல்லாம் மனதில் திட்டியபடியே பயணம்...

சாலை போக்குவரத்து அலுவலகங்கள் எல்லாம் எப்பவுமே மிகவும் பிஸியாகவே இருக்கும். எல்லாம் ஆன்லைனிலேயே செய்யலாம் என்பார்கள் அதில் சாலை போக்குவரத்து அலுவலகமும் அடக்கம்.

ஆனால் இவர்கள் பேருந்துக்கு கொடுக்கும் அனுமதி பற்றி அலச வேண்டுமென்பது இந்தப் பதிவின் நோக்கமல்ல...

எங்கள் ரூட்டில் ஒரு தனியார் பேருந்து கம்பெனியின் வண்டிகள் எப்போதும் தாங்க முடியாத கூட்டத்துடன் சென்று கொண்டிருக்கின்றன. இன்னொரு தனியார் பேருந்தின் கம்பெனியின் இரண்டு பேருந்துகள் அடுத்தடுத்த ஒரே நேரத்தில் பயணிகளை நெருக்கி அடித்தபடி சென்று கொண்டிருக்கின்றன.

அரசு பேருந்திற்கு ஏன் இல்லை இந்த நிலை...

எல்லாம் திட்டமிடப்பட்ட பணிகள்.

இவ்வளவு கூட்டம் ஏற்றப்படும் என்று தெரிந்திருந்தால் நான் அந்த பேருந்தில் ஏறியிருக்கவே மாட்டேன்.

கல்லூரி இரண்டு மணிக்கே 20 ஆம் தேதி வரை எனச் சொல்லி விட்டது எனக்குப் பிரச்சனைதான். அப்போது கூட்டம் இருக்காது என்று நினைத்தது எவ்வளவு மடத்தனம் என்பதை இன்று முதல் நாளே தெரிந்து கொண்டேன்

பேருந்தில் பேருந்து நிலையத்தில் ஏறும்போதே இரண்டு பேருந்துகளை விட்டு விட்டால் தான் நமக்கு இருக்கை  கிடைக்கிறது. அதல்லாமல்  5 ரோடு, குரங்குச் சாவடி போன்ற இடங்களில் ஏறினால் நிச்சயம் மேச்சேரி வந்தால் தான் இடம் கிடைக்கிறது...

நமக்குத்தான் வேலைக்குச் செல்ல வேண்டும் இவர்களுக்கு எல்லாம் என்ன வந்தது இந்த விடுமுறைக் கோடைக்காலத்தில் என்னும்படியாக குடும்பமும் குழந்தைகளுமாக இடமே இல்லா பேருந்துகளில் எதற்கு இப்படி வேறு பேருந்தே இல்லாதமாதிரி ஏறுகிறார்கள்...

நான் பொதுவாகவே இருக்கை இருக்கும் பேருந்தையே தேடி காத்திருந்து பேருந்து நிலையத்துக்கே சென்று ஏறி அமர்வது வழக்கம். பெரும்பாலும் அரசு பேருந்தாக இருந்தால் இன்னும் மகிழ்வே...

ஆனால் இந்த ஜே.என்.பி போன்ற பேருந்து நடத்துனர்கள் அடுத்து அரை மணிக்கு பேருந்து ஏதுமே இல்லை என்று சொல்லி எல்லாம் பேருந்து நிலையத்திலேயே 57+ 57 எல்லாமாக ஏற்றிச் செல்வதை நான் கண்டிருக்கிறேன். ஆனால் உண்மையில் 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து இருப்பது உண்மை. அப்படியே இருந்தாலும் மதிய உணவு இடைவேளை சமயத்தி பத்து பதினைந்து நிமிட இடைவெளி இருக்கலாம். நள்ளிரவில் கூட அரை மணி ஒரு மணி கழிந்ததும் போக்குவரத்து இடைவிடாமல் தொடர்கிறது

மேலு தொடர் வண்டியை இல்லாமல் செய்த நிலையில் அனைவரும் பேருந்தையே நம்பி இருக்கும் சூழலில் இந்த பேருந்து இயக்கங்கள் எப்படி எல்லாமோ இயங்குவது பற்றி அரசுக்கும், ஏன் நகரப் பேருந்தில் ஏறும் ஏற வேண்டிய பயணிகள் கூட இது போன்ற பேருந்துகளில் ஏறி தொல்லையாக பெரும் பெரும் உருவங்களுடன், சுத்த ஆரோக்யமற்ற நிலையில் எப்படி எலாம் இருக்கக் கூடாதோ அப்படி எல்லாம் இருந்தபடி

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக பேருந்து பயணத்தை கெடுத்து தனியாருக்கு மேலும் மேலும் இலாபத்தை பெருக்கிக் கொண்டே இருக்க நாம் எனைப்போன்றோர் எல்லாம் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Wednesday, May 1, 2019

உழைப்பு என்பது குருதியில் ஊறி விளைவது: மேதினச் செய்தி: கவிஞர் தணிகை.

உழைப்பு என்பது குருதியில் ஊறி விளைவது: மேதினச் செய்தி: கவிஞர் தணிகை.

Image result for world workers dayஉழைப்பு என்றவுடன் மூலதனம் கார்ல் மார்க்ஸ், சிகாகோ, 8 மணி நேர வேலை, மேதினம், போன்ற எண்ண அலைகள்...

எனது நினைவலைகளை சற்று சுருக்கி சிறிய வட்டத்தில் பார்க்கும்போது மேதினமான இன்று உலக உழைப்பாளர் தினம் விடுமுறை தினமான போதிலும் கட்டடப் பணியாளர்கள் தம் பணியைச் செய்தபடிதான் இருக்கின்றனர்.

மூளை வேலை, உடல்வேலை ஆகிய பிரிவுகளில் உடல் உழைப்பு சார்ந்ததாகவே பெரிதும் மேதினம் குறிப்புகள் இடம் பெறுகின்றன.

இன்று உலகும் இந்தியாவும் தமிழகமும் இருக்கும் காலக்கட்டம் ஒரு தீர்மானத்துக்கு வர முடியாக் காலமாக இருக்கிறது

கட்டட, மர, மற்ற உடல் உழைப்பு வேலைகளுக்கு போதிய ஊதியம் இருப்பதாகவே சொல்லலாம். அவர்களுக்கு நிரந்தரபணி இல்லாத போதும் அரசும் அதன் சங்கங்களும் ஏதோ அவர்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதாக நம்பிக்கையூட்டிக் கொண்டிருக்கின்றன

விவசாயமும் அதைச் சார்ந்த பணிகளும் மிகவும் நலிவடைந்து இருக்கின்றன‌

எல்லாத் தொழிலாளருமே பெரும்பாலும் பாதிக்கும் மேல்  மது அடிமைகளாக மாறி விட்டனர். எல்லாம் கழக ஆட்சிகள் தந்த பரிசு. ஆனால் அதற்கு முன்பும் கூட கள், சாராயக் கடைகள் இருந்தன என்றாலும் குடிகாரரை இழிவாகப் பார்த்த சமுதாயம் இப்போது குடிக்காதவரை தனிமைப்படுத்தி கேவலமாக பார்க்கும் நிலையில் உள்ளது. மேலும் சைவ வழி வாழ்வு முறை அறவே அழிந்து வருகிறது. எல்லாருமே ஊன் தின்னும் உணவு முறையில் பெரும்பாலும் வந்து விட்டனர்.

பத்து ரூபாய்க்கு 3 நுங்குகள் ...எல்லா பனை மரங்களும்  பயந்து கொண்டு இருக்கின்றன. ஏன் எனில் பெரும்பாலான பனை மரங்கள் கொஞ்சம் கூட தொலைநோக்கின்றி செங்கல் சூளைக்காகவும் பிற காரணங்களுக்காகவும் வேரோடு வெட்டி சாய்க்கப்படுகின்றன. பனை என்ற தமிழகத்தின் சொத்து அடியோடு அழிக்கப்படுகிறது. இது ஒரு எடுத்துக்காட்டு இது போல ஆயிரக்கணக்கான சொல்லத் தக்க விவசாய அழிவுகள் உண்டு.

பனை வெல்லம் ஆலை வழியே தயாரிக்கப்படும்போது வெறும் சுண்ணாம்பே அதிகம் கலக்கப்பட்டு நாக்கு உரிந்து எதைத் தின்றாலும் எரிச்சல் ஆகி விடுமளவு. குடிசைத் தொழில் யாவும் நலிவடைந்து விட்டன‌

குயவர்களின் சூளை காணப்படுவதில்லை. மட்பாண்டங்கள் பயன் அறவே அழிக்கப்பட்டுள்ளன...

இப்படி நிலம், நீர், நெருப்பு, ஆகாயம், காற்று யாவும் அடியோடு துர்செயல்களுக்கு ஆளாக்கப்பட்டுள்ளன. ஆண்டுக்கு ஆண்டு புவிச் சூடு 5 டிகிரி அதிகமாகி இருக்கிறது. ஒரிஸ்ஸாவில் 115 டிகிரிவரை..இப்போது பானி புயலும் அங்கேதான்.

எல்லாம் உலக மயம். ஹல்திராம் கடலைபர்பி ரூ5  ரூபாய்க்கு தயாரிக்கப்பட்டு விற்பனை மயமாகி இருக்கிறது.

இச்சூழலில் படித்த பையன்களுக்கு  ரூ. 8000 கூட  மாத ஊதியம் கிடைக்க வழியில்லாமல் எங்கள் மேட்டூர் கெம்ப்ளாஸ்ட் நிறுவன வாசலில் தொடர் உண்ணாவிரதம் இளைஞர்களால் நடத்தப்பட்டு வருகிறது.

இந்தக் காலக் கட்டத்தில் தனியார் நிறுவனங்களில் ரூ. 2000க்கும் கூட ஆசிரியர்கள் கிடைக்க பல தொழில்கள் செய்ய ஆள் இல்லாமல் காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன.

அரசுப்பணிகள் பெற வேண்டுமானால் 5 ஆம் வகுப்பு படித்தவர் போதுமென்றால் முனைவர் பட்டம் பெற்றவர் கூட விண்ணப்பிக்கும் சூழல் இருக்கிறது.

இது போன்ற ஒரு காலக்கட்டத்தில் இந்த மேதினம் 2019. இதைப் பற்றி பதிவு செய்ய எனக்கு எல்லாத் தகுதியும் உண்டு.

ஏன் எனில்: எனது பெற்றோர் நெசவுத் தொழில் சார்ந்த குடும்பத்தில் இருந்து உருவான நல்ல உழைப்பாளிகள்

என் தந்தை மேட்டூர் பியர்ட்செல் அன்றிருந்தது இன்று இல்லை அதில் 4 விசைத்தறி இயக்கி இரவு பகலாக 3 வேலை முறைகளில் அன்றைய காலக் கட்டத்தில் ஒரு வாரத்திற்கு ஒரு வேலை முறை. புல் நைட், ஆப் நைட், டே சிப்ட் என்று...

வீட்டில் கதர் வாரியத்தில் பதிவு செய்து கொண்டு கை ராட்டை நூல் நூற்று அதை கதர் வாரியத்தில் கொடுத்து சிறு சிறு செலவுக்கெல்லாம் ஊதியம் செய்து கொள்வார்கள் எனது தாயும் சகோதரிகளும்.

அதை அடுத்து தோட்டவேலையில் மிக்க ஆர்வம். எல்லா பூச்செடிகளும்,கனிமர வகைகளும், காய் கனிகளும் ஒரே சொல்லில் சொல்ல முடியாது.அதை தமது பயன்பாட்டுக்கு மட்டுமல்ல பிறர்க்கும் விற்பனை செய்து பொருள் ஈட்டுவர்.

வீட்டில் ஒரு நல்ல குடி தண்ணீர்க் கிணறு...மிக அரிய வாழ்வு. காவிரியில் சென்று குளித்து துணிகளை துவைத்து வந்த வாழ்வு அவர்களுடையது. அவர்கள் அனைவர்க்கும் நீச்சல் தெரியும் உடல் நல்ல ஆரோக்கியம் இருந்தது.

எங்கள் வீட்டில் தொழில் செய்து அதன் வாழ்வின் முறையில் இருந்தவர்களின் புதல்வர்கள் வியாபாரம், ஆசிரியப்பணி,  இலக்கியம்,சேவை என்ற முறைகளுக்கு மறுபடியும் பூத்துள்ளனர்.

ஒரு மனிதர் உழைப்பில் உருவான எங்களது பத்து பேர் அடங்கிய குடும்பம் பெற்றோரை இழந்த பின்னே 8 குடும்பங்களும் அதன் துளிர்களுமாக தலை முறை தலைமுறையில் உழைப்பின் கனிகளை, பூக்களைப் பெற்று காலம் காலமாக வளர்ந்து வருகிறது நல்லோரின் குடும்பம் வாழையடி வாழையாக.

அவர் அறுந்து போன நூலிழையை திரும்பவும் எடுத்து கோர்த்து வாழ்வை செப்பனிட பயன்படுத்திய நூலிழை வாங்கிய ஊசி இன்னும் நினைவுப் பொருளாய் வணங்கத் தக்கதாய் இருக்கிறது

உழைப்பின் கருவிகளே வணங்கப்படத்தக்கதாய் இருக்கும்போது உழைப்பு எத்தனை மடங்கு வணங்கத்தக்கதாய் இருக்கும்...

முதலாளித்துவம் என்பது பணம் சொத்து மட்டுமல்ல, முதலாளித்துவ சிந்தனை என்பதுதான் அது கீழிருந்து மேல் வரை ஊறுக் கிடக்கிறது எல்லா தளங்களிலும்...அவை மாறினால் ஒரு வேளை உழைப்பாளர்களுக்குரிய தினமும் சிறப்புகளும் உருவாகலாம்...இந்தியாவில் முதலில் குறைந்த பட்ச கூலியே முதலில் எவருக்கும் இல்லை...மேலும் சார்பு, மதம், ஆண் பெண் பால் , இனம் எப்படி எத்தனையோ பிரிவினங்கள்...அவற்றுக்கு யாவுமே காரணம்தான்  ஊடகம், அரசியல் ,ஆட்சி, யாவுமே..

மறுபடியும் பூக்கும் வரை...
கவிஞர் தணிகை.