Wednesday, May 31, 2017

சமயோசித புத்தி: கவிஞர் தணிகை

சமயோசித புத்தி: கவிஞர் தணிகை
Image result for brain


கல்வி என்பது ஒரு ஆபத்தான நேரத்தில் தமக்கோ அடுத்தவருக்கோ அந்த ஆபத்திலிருந்து அவரைக் காத்து மீட்டெடுப்பதாய் இருக்கவேண்டும். அது தான் சரியான கல்வியாய் இருக்க முடியும்.அந்தக் கல்வியை நமது அரசுகளும் சமுதாயமும் வழங்கிட வேண்டும்.நான் சொல்வது முதல் உதவி பற்றியது மட்டுமல்ல. அது ஒரு சம்பவமோ, விபத்தோ நடந்தபின்னே உதவுவது, அதற்கு பயிற்சி அளிக்கிறார்கள். ஆனால் நான் சொல்ல முனைவது.


சரியாக எழுத்தறிவின்மை இல்லார் கூட சிலரைப் பாருங்கள் அவர்களின் அறிவும் ஆற்றலும் மூளையின் செயல் திறனும் மிகப் பிரமாதமாக வேலை செய்து அவரை சமூகத்தில் பெரிய அந்தஸ்துடன் மதிப்பு மிக்கவராய் மாற்றியிருப்பதற்கு நிறைய உதாரணங்களைக் காணலாம்.

முகநூல் மார்க் ஜக்கர்பெர்க் ஹார்வேட் பலகலைக் கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்டவர் அதே பல்கலைக்கழகத்தில் அழைத்து கௌரவ டாக்டரேட் பட்டம் பெற்றதும், சுந்தர் பிச்சை, வெங்கி இராமகிருஷ்ணன், கலாம் போன்ற மாமேதைகள் உருவான கதைகள் எல்லாம் இந்த சமயோசித அறிவு அதிகமாக பயன்பட்டதால் இருக்கும் என நினைக்கிறேன்.

பொதுவாகவே எமைப் பொறுத்த மட்டில்  மற்றவர்களுக்கு என்றால் ஒரு ஆத்திரம் அவசரத்தில் சிறப்பாக ஓடிச் சென்று உதவ முடிந்திருக்கிறது நிறைய முறைகளில் நிறைய வழிகளில் அப்போதெல்லாம் மிகச் சிறப்பாக செயல்பட்ட மூளை எனது தாய் உடல்நிலை மோசமான நிலைக்குச் சென்றபோது அன்று சரியாக செயல்படவில்லையோ என்ற சந்தேகம் அவர் இறந்து 11 வருடங்களுக்கு மேலாகியும் இன்னும் என்னுள் எண்ணமாய் நிழலாடிக் கொண்டே இருக்கிறது.

யேசுநாதர் இறைவாக்கினர் தம் ஊரிலும் வீட்டிலும் தவிர வேறெங்கும் மதிப்பு பெறுவர் என்பது போல எல்லாருக்கும் நன்மை செய்கிற நம்மால் நமக்கு என்று ஒன்று வந்துவிட்டால் மட்டும் ஏதும் செய்து கொள்ள முடியாமல் மூளை அயர்ந்து விடுகிறது.

Image result for presence of mind and action

பொதுவாகவே எனைப்போன்றோர்க்கு ஏதோ ஒரு கற்பனை அல்லது எண்ண சஞ்சாரம் இருந்து கொண்டே இருக்கிறது. அது சில நேரங்களில் உடனடியான செயல்பாட்டிற்கு மிகவும் கண்ணிமைக்கும் நேரத்தில் முடிவுகளை எடுக்காமல் தாமதப்படுத்தி வருகிறது.

இன்று நான் சேலத்தில் ஒரு வாகன முனையத்தில் மேட்டூர் செல்ல பேருந்துக்காக கையில் 5 தேங்காய் உடன் டப்பர் வேர் குடிநீர் ஒரு லிட்டர் வைத்திருக்கிறேன். ஒரு ஆம்னி நான் இருக்கும் இடத்திற்கு அருகாமையில் வந்து மேட்டூருக்கு எப்படி போகிறது என வழி கேட்கிறார்கள் வாகனத்திலும் பின் பக்க இருக்கைகள் காலியாகவே இருக்கின்றன. வழி சொல்லி விட்டு அந்த வாகனம் எனக் கடந்து போன சில விநாடிகளில் அட நாம் அங்கே செல்வதாக சொல்லி அந்த வாகனத்திலேயே  லிப்ட் கேட்டு சென்றிருக்கலாமே பேருந்துக் கூட்டத்தில் 20 ரூ கட்டணம் மீதமாகியிருக்குமே என்று எண்ணிக் கொண்டிருந்த சில நிமிடங்களில் பேருந்து வந்து விட ஏறிக்கொண்டு பயணித்த நிகழ்வு இன்னும் என்னுள் எண்ண அலைகளை அலை பரப்பிக் கொண்டிருப்பதால் இந்த பதிவு.ஒரு வேளை வயது ஏற ஏற மூளை பணி புரியும் வேகமும் குறைந்து விடுமோ?

Image result for presence of mind and action

என்னை நானே சமாதானபடுத்திக் கொண்டேன், அப்படி எல்லாம் தெரியாதார் வண்டியில் ஏறிக் கொண்டு பயணம் செய்வது எல்லாம் சரியல்ல என்றும் பேருந்தில் நாம் தனிக்காட்டு இராஜாவாக பயணம் செய்வதும் அடுத்தவர் வாகனத்தில் அவர் உதவியைப் பெற்றாராகவும் செல்வதும் நம்மை நாமே ஒரு படி தாழ்த்திக் கொள்வதாகும் என்றே எண்ணிக் கொள்கிறேன்.

அடுத்தவரிடம் ஒரு உதவியைக் கேட்டுப் பெறுவதும் கூட தன்மானத்துக்கு ஒரு மாற்றுக் குறைவுதானே.

வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதில் சரியாக இருப்பதால்தானே இந்த பணிக்கு செல்ல முடிகிறது இதை விட பெரிய வாய்ப்பு வரும் எனக் காத்திருந்திருந்தால் இந்தப் பணி நிறைவு இருந்திருக்காதே...

ஒரு வாட்ஸ் அப் செய்தியில் நேற்று ஒரு நண்பர் குறிப்பிட்டிருந்தார்: ஒரு மனிதர் ஒரு இளைஞரை அழைத்து நான் வளர்த்து வரும் மாடுகள் 3 அதில் ஒரு மாட்டின் வாலையாவது நீ தொட்டுவிட்டால் நீ கேட்பதை எல்லாம் செய்வேன் என்று சொல்ல...அந்த இளைஞரும் சவாலை ஒத்துக் கொண்டு அவர் இருப்பிடம் செல்ல, முதல் மாடு வருகிறதாம், அதன் துள்ளல், ஆட்டம், சீற்றம் எல்லாவற்றையும் பார்த்த இளைஞர் அருகே செல்லவில்லையாம், அடுத்த மாடு வரட்டுமே பார்த்துக் கொள்ளலாம் என...

அடுத்த மாடு முதலில் வந்ததை விட மிகப் பெரிய அளவில் அளவில்லாத ஆர்ப்பாட்டத்துடன் ஓடி மறைந்ததாம் இவனால் நெருங்கவும் துணிய முடியவில்லையாம்.


Related image
3 வது மாடு வர வேறு வழியே இல்லை என இளைஞர் இதைப் பிடித்தே ஆகவேண்டும் வாலை என நெருங்கினால் அந்த மாட்டுக்கு வாலே இல்லையாம்.

இப்படி வாய்ப்பு வரும்போது  பயன்படுத்தாவிட்டால் இப்படியும் முடியலாம்.ஆனால் நான் முன் சொன்னவை பின் சொன்னவற்றிலிருந்து வேறுபட்டவை என்பதை நீங்களும் உணரமுடியும்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.


Monday, May 29, 2017

செம்மலை எம்.எல்.ஏவை அரசின் மேட்டூர் அணை தூர் வரும் நிகழ்ச்சிக்கு அழைக்காததது தமிழக அரசின் குற்றமே: கவிஞர் தணிகை

செம்மலை எம்.எல்.ஏவை அரசின் மேட்டூர் அணை தூர் வரும் நிகழ்ச்சிக்கு அழைக்காததது தமிழக அரசின் குற்றமே: கவிஞர் தணிகை
Related image


நெற்றிக்கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வர் அவர்களே.

இது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைக் காட்டிக் கொள்ள சிறு பிள்ளை விளையாட்டு அல்ல. பள்ளிக் குழந்தைகள் தான் இப்படி சிறு வயதில் சண்டையிட்டுக் கொள்ளும் பின் சேர்ந்து கொள்ளும்.

இது தமிழக அரசாக இருந்தால் தற்போதைய எம்.எல்.ஏ வான செம்மலையை அரசின் விழாவுக்கு அழைக்காதிருந்தது பெரும் குற்றமே. இதற்கு தமிழக முதல்வர், அமைச்சரவை, தலமைச் செயலர், முதன்மைச் செயலர் யாவருமே ஆம் யாவருமே மாவட்ட ஆட்சித் தலைவர், தொகுதி எம்.பி, மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் யாவருமே பொறுப்பேற்க வேண்டும்

ஆனால் இது எடப்பாடி பழனிசாமியின் அரசாக இருக்கிறது. எனவேதான் தமது மூத்த கட்சியின் பிரமுகரும் தற்போதைய மாற்று அணியில் இருக்கும் எதிரியாகக் கருதும் செம்மலை எம்.எல்.ஏவை அழைக்காதிருந்து இருக்கிறது/

Image result for thiruvilayadal


அவரும்‍_ செம்மலை எம்.எல்.ஏவும் அரசு அலுவலர்கள் பேச்சைக் கேட்டேன், அவர்கள் சொன்னபடி போகாமல் இருந்து கொண்டேன் என தாம் தொகுதியின் எம்.எல்.ஏ என்ற பொறுப்பை மறந்து போகமல் இருந்து பேசி இருக்கிறார். மேலும் போனால் அவமானம் வரும் என்று போகாமல் இருந்தேன் என்கிறார். இது உங்களுடைய உறவின் நட்பின் குடும்ப நிகழ்வல்ல, இது அரசு விழா 83 ஆண்டுகளாக எவரும் செய்யாத பணியை தமிழக அரசு மேட்டூர் அணையை தூர் வாரும் பணியை செய்யத் தலைபட்டிருக்கிறது. எனவே அவமானம் வந்தாலும் வரட்டுமே என கலந்து கொள்ளாதது எம்.எல்.ஏவின் தவறுதான்.

அழைக்காதது அரசின்  தவறைக் காட்ட அழைத்திருந்து போகாமல் இருப்பதும் போய் வருவதும் அவரவர் உரிமை. ஆனால் அழைக்க வேண்டியது அரசின் கடமை, ஒரே கட்சியில் இருந்து கொண்டு இப்படி இருப்பார்கள் பாராளுமன்ற உறுப்பினர் அன்பு மணியை அழைத்தார்களா என்றும் தெரியவில்லை.

நிறைய மந்திரிமார்கள் என கலந்து கொள்ளும் விழாவில் செம்மலை எம்.எல்.ஏவுக்கு அநீது இழைக்கப்பட்டிருக்கிறது. இவர் எம்.ஜி.ஆர் சீட் தரவில்லை என்பதற்காக சுயேட்சையாக நின்று வென்று மறுபடியும் கட்சியில் சேர்ந்து எம்.ஜி.ஆரால் மந்திரி ஆனவர், எம்.பியாக இருந்தவர், ஜெவால் தற்காலிக சபாநாயகராக இருந்தவர் ...எல்லாம் இப்படித்தான் அரசியலில்

இவரை விட ஜுனியரான எடப்பாடி இப்படி முதல்வராக இருக்கும்போது பெருந்தன்மையுடன் அழைத்திருக்க வேண்டும், பெறும் தன்மையில் எல்லாம் பங்கு கிடைக்கவில்லை என போராடும் எம்.ஏல் ஏக்களை சந்தித்த இவர் இவரையும் சந்தித்திருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் பெருமை இன்னும் உயர்ந்திருக்கும்.

முதல்வர் என்னும் பந்தா இந்த முறை அதிகம் சேலம் 5 ரோடு சாலையில் இருந்ததாகவும் மற்ற வாகனங்களை எல்லாம் சுமார் 2 மணி நேரம் இவர் வருவதற்காக தாமதம் செய்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன‌

ஜெவின் விண்ணளவு அளந்த நிரந்தர முதல்வர் இடமே போன இடம் தெரியவில்லை எடப்பாடியார், ஜெவின் நேரடி வாரிசு, நிரந்தர முதல்வர் என்றெல்லாம் போஸ்டர்கள் இம்முறையில் இருக்கின்றன. வாழ்த்துகள். ஆனால் எதுவும் நிலைக்கும் வண்ணம், எல்லாரிடமும் நல்ல பேர் வாங்கும் வண்ணம் எடப்பாடி பழனிசாமி அரசு எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம்.
Related image


வண்டல் மண்ணை ட்ராக்டர்களில் விவசாயிகளுக்கு விலையின்றி வழங்குவதால் ஒரு துளி சிறு துளி மக்கள் மத்தியில் நல்ல அபிப்ராயம் ஏற்பட்டிருக்கிறது. வளர்ந்து வரும் இந்நிலையை மேலும் வளர்த்துக் கொள்ளாமல், தக்கவைத்துக் கொள்ளாமல் இது போன்ற சிறு சிறு விஷயங்களில் எல்லாம் கௌரவம் பார்த்துக் கொண்டு பேரைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம். முதல்வரே.

ஆனால் இந்த செம்மலை எம்.எல்.ஏவுக்கும் வேண்டும் ஏன் எனில் புதிய தலைமுறை தொலைக்காட்சி தேர்தல் நேரத்தில் ,மோதும் வேட்பாளர்களும் கணிக்கும் வாக்களர்களும் என்ற நிகழ்ச்சிக்கு எவ்வளவு நேரம் அழைத்தும் இவரது இருக்கை காலியாகவே இருந்தது . அவர் அப்போது வந்து அந்த நிகழ்வில் கலந்து கொள்ளவே இல்லை.

இப்போது மேட்டூரில் நடைபெற்ற சரித்திரப் புகழ் வாய்ந்த நிகழ்வுக்கு அழைக்கப்படவே இல்லை அரசு விழாவுக்கு, இவரும் பொறுப்புணர்ந்து போய் கலந்து கொள்ளவே இல்லை.

இவற்றை எல்லாம் நாம் வன்மையாக கண்டிக்கிறோம். இந்தப் பதிவின் மூலம்

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Sunday, May 28, 2017

கொளத்தூர் சித்தி பாக்கியம் காலமானார்: கவிஞர் தணிகை

கொளத்தூர் சித்தி பாக்கியம் காலமானார்: கவிஞர் தணிகை

Related image
Image result for kolathur in salem district


கொளத்தூர் என்றாலே வெள்ளிக் கிழமை சந்தையும் அங்கே மிகவும் பிரபலமான வர மிளகாய், புளி வியாபரமே அனைவர்க்கும் நினைவுக்கு வரும் ஆனால் எங்களுக்கோ எங்கள் சித்தி தான் நினைவுக்கு வருவார்.

26.05 .2017 அன்று சித்தி காலமானார் வெள்ளிக்கிழமை ஆதலால் இரவு விளக்கு வைத்தவுடன் இறுதிச் சடங்கு என்றார்கள். மேட்டூருக்கு 8.கி.மீ அங்கிருந்து 11 கி.மீ கொளத்தூர். கொளத்தூரில் பேருந்து நிலையத்திலிருந்து மிக அருகேதான் சித்தி வீடு. ஆனால் ஆண்டுக்கணக்காக நான் சென்று உடல் நிலை சரியில்லாதிருந்த அவளைப் பார்க்காதிருந்த்து நெருடலாகியது உடன் எடப்பாடி பழனிசாமி முதல்வர் வருகிறார் என பாலம், மேட்டூர் பகுதிகளில் கலர், வெள்ளை என வேலை நடந்தபடி இருந்தது பாலத்தின் மேல் பேருந்து ஊர்ந்தபோது உடன் வந்தவர் சொன்னார் ஞாயிறு அன்று தூர் வாரும் பணிகளைத் துவக்க முதல்வர் வருகிறார் அதற்காகத்தான் இந்த வெள்ளை அடிக்கும் பணி என்று...

அவளுக்கு வயது 70லிருந்து 80க்குள் இருக்கும். பேரன் ஆம்பூரில் ஸ்டேட்பங்கில் பணி, மகள் பாரதிய வித்யாபவன் திண்டலில் பணி. வேலைக்காரப் பெண் அருகிருக்க உயிர் காலை 11.15 மணிக்கு பிரிந்ததாக சொன்னார்கள் உடன் உறவென்று யாருமில்லை.தனிமைப் பயணம்.

அவள் எனது தாயின் மயில் வீட்டு சொந்தம். என் தாயின் தந்தையும் இவளது தந்தையும் ஒரு வீட்டில் பிறந்த சகோதரர்கள் என்பார்கள். எனது பெற்றோரின் தாய் தந்தையரை நாங்கள் கண்ணால் கண்டதில்லை. ஆனால் இப்படிப்பட்ட ஒன்று விட்ட உறவான சித்தியும் அவர் சகோதரர்களும், அவளது தந்தையும் எங்களுடன் உறவு முறை பாராட்டி வந்தனர்.

சித்தியின் ஒரே மகள் பள்ளி விடுமுறையில் எங்கள் வீட்டுக்கு வந்து இருந்திருக்கிறாள். நான் கூட ஒரு பள்ளி கோடை விடுமுறையின் போது அவரக்ள் வீட்டு மளிகைக்கடைக்கு உதவி செய்யப் போய் இருந்திருக்கிறேன் பல நாட்கள் சினிமாப் பார்த்துக் கெட்டுப் போனது கொளத்தூர், தாரமங்கலம் போன்ற இடங்களில்தான். ஏன் எனில் நமது சொந்த வீட்டில் சொந்த ஊரில் அந்தளவு  சுதந்திரமாக செயல்பட முடியாது பெற்றோர் கண்டிப்பால்.

செய்தி தெரிவித்து விட்டால் அது எந்த நிகழ்வானாலும் வருவதற்கு தவற மாட்டாள், அங்கிருந்து அவள் வாங்கி வரும் ரஸ்தாளி பழம் மிகவும் பெரிதானதாக இருக்கும். எங்கள் தாய் இறந்து 11 வருடம் ஆகிவிட தந்தை இறந்து 31 வருடம் ஆகிவிட எல்லாத் தொடர்புமே ஏனோ தானோ என தொய்வடைந்து விட்டது. அதில் இந்த சித்தியும் போய் தேய்ந்து இன்று மறைந்து விட்டாள்

இனி கொளத்தூர் எங்களைப் பொறுத்த வரை வெறுமையாகிவிட்டது.

சினிமா என்றால் அப்படி பார்ப்பாள், அவள் ஒரு முறை அவர்கள் ஊரில் ஊராட்சி மன்றத்தில் கவுன்சிலராகக் கூட தேர்தலில் நின்று வெற்றி பெற்று பணி புரிந்திருக்கிறாள்.

அவள் வீட்டு முன் அந்த ஊர் தியேட்டரின் போஸ்டர் கொண்டு வந்து ஒட்டுவார்கள் அதற்கு பிரதியாக கடைசி நாள் கடைசி காட்சிக்கு ஒரு இலவச பாஸ் கொடுத்து விட்டுச் செல்வார்கள். அப்போதெல்லாம் வண்டி வாகனத்தில் அந்த படத்திற்கான விளம்பரம் படம் போடும் முன் ஊருக்குள் ஒரு வலம் வந்து செல்லும் ஊரே வேடிக்கை பார்க்கும் சிறுவராக இருக்கும்போது அது பெரிய காட்சி.

மற்றொரு வெறுக்கத் தக்க, கூச்சப்பட வேண்டிய மாற்றி அமைக்க வேண்டிய காட்சி, வீட்டின் பின் புறம் மலக்குழி அந்த மலத்தை மனிதர்கள் அள்ளிச் சென்று அப்புறப் படுத்தும் காட்சி ஏற்க முடியாமல் இன்று நினைத்த போதும் அருவருப்பூட்டுவதாய்...நான் அங்கேதான் அதை முதலும் இறுதியுமாகக் கண்டது.

அடுத்து மொய் வைக்கும் முறைகள்: சரியாக மொய் வந்து சேராவிட்டால் அந்த ஊரின் அதற்காக இருக்கும் ஒரு குறிப்பிட்ட சிகையழகு செய்யும் இனத்தாரை பயன்படுத்தி மொய் வைக்காதார் வீட்டுக்கே சென்று நிகழ்ச்சிக்கு மொய்யை சண்டையிட்டு வசூலிக்கும் கொடுமை எல்லாம் அந்த ஊரில் இருந்தது நான் சிறு வயதில் கண்டது, கேள்விப்பட்டது, ஆனால் இப்போது வெகுவாக நகராக காம்ப்ளக்ஸ் முதற்கொண்டு மாறிப் போய் இருந்தது அந்த ஊர்.

ஊர் நன்றாக கிராமிய  ஆற்றோரம் அழகாக வீற்றிருக்கிறது. அந்த ஊரைச் சுற்றி நிறைய கிராமங்கள் இருப்பதால் அது ஒரு வர்த்தக நகராய் மாறிப் போய் இருந்தது. வெள்ளிக்கிழமை சந்தை என்றால் கடையை எல்லாம் மூடிவிட்டு மதியம் அங்கேயே சாப்பிட்டுக் கொண்டு ஓய்வு ஒழிச்சல் இல்லாத வியாபரத்தில் மூழ்கித்திளைப்பார்கள் அந்த கடைக்காரர்கள் எல்லாம் அன்றைய ஒரு நாள் வியாபாரத்துக்கு மற்ற ஆறு நாள் சராசரி வியாபரமும் ஈடாகது கடை திறந்து வைத்து செய்யும்போதும்.

சித்தி ஒல்லியான தேகம், மோர் பால்,நெய், மாமிசம் இப்படி ஏதுமே சாப்பிட மாட்டாள். கண்ணாடி போட்டுக் கொண்டாள். அதிகம் பேசுவாள் அனைவருடனும் உடனே ஒட்டிக் கொள்வாள் அதனால் சில நேரம் வம்பையும் விலைக்கு வாங்கிக் கொள்வாள்.எதைச் சொல்ல வேண்டும் எதைச் சொல்லக் கூடாது என்று கணக்கு எல்லாம் பார்த்து அவளுக்கு நடந்து  கொள்ளவோ பேசவோ தெரியாது.

 அவளுக்கு அவள் கணவனுக்கும் ஒத்துப் போகவில்லை. இவளை விலக்கி விட்டு அவன் வேறு மணம் செய்து கொண்டான், இவளும் அவனை விலக்கி விட்டு மனம் போன படி அவளது பிள்ளை பேரன் பேத்தி என்றே இருந்து காலத்தை ஓட்டி விட்டாள் எல்லாம் ஒரு முடிவுக்கு வந்து விட்டது.

நிறைய மாரியம்மன் திருவிழாக்கள் அவள் இங்கேயும் நாங்கள் அங்கேயும் என  நினைவு படுத்த வரும். ஆனால் எனது தாய்க்கும் பின்னே எந்த பெருவிழா திருவிழா என்று எதையும் கொண்டாட முற்படாததால் எல்லாம் மறந்து போக ஆரம்பித்து விட்டது.

நான் பாலமலைக்கு சேவை செய்ய 3 மாதம் அங்கிருந்தபோது கொளத்தூர் வழிதான் வர வேண்டியதிருக்கும். அப்போது சில சமயம் அங்கே வந்து விட்டு அதன் பின் வீடு வந்து சேர்ந்ததுண்டு.

நேற்றுதான் நினைத்தேன் கடந்த 6 மாத காலமாக முடியாமல் இருந்திருக்கிறாள் சுமார் 20 கி.மீ கூட தொலைவில்லாத அந்த ஊரில் அவள் இருந்திருக்கிறாள். ஆனால் அவள் அவள் மகளுடன் இருப்பாள், பேரனுடன் இருப்பாள், பல வாறு ஆங்காங்கே அவ்வப்போது இருந்து வந்ததும் ஒரு காரணம் தொடர்பு விட்டுப் போக, வயதாகி விட்டதால் அவளும் எங்கள் வீட்டுக்கு இப்போதெல்லாம்  வரவில்லை, எங்களுக்கும் அன்றாடத் தேவை பணிச் சுமை என நாட்கள் ஓடி விட்டது அவளைப் பார்க்கச் சென்று 2 வருடம் ஆகி இருக்கும் என எனது மூத்த சகோதரியின் மகன் சொன்னான். நான் எவ்வளவு நாள் ஆகியிருக்கும் நாம் இவளை வந்துப் பார்த்துச் சென்று என்று கேட்டதற்கு.. அவளது ஒரு பேரன் ஜோதிலிங்கம் என்பவன் +2 படித்தபோது கிரிக்கெட் பார்த்து பார்த்தே இறுதித் தேர்வில் தோல்வி அடைந்து மாமா நான் பாஸாகிவிட்டேன் என்று சொல்லியபடியே வெளித் தெரிந்தால் மான அவமானம் என தற்கொலை செய்து கொண்டான் . ஆனால் அவனை அவனுடைய உடன் தோழர்கள்தான் அடித்துக் கொன்று விட்டார்கள் என சித்தியும் அவள் மகளும் ஒரே குரலில் அவனது ஒரு நினைவு நாளில் சொல்லிக் கொண்டிருந்தனர்.

காலம் சென்று கொண்டே இருக்கிறது இனி எல்லாருக்கும் எங்கள் பருவத்தார்க்கு முதுமை, மகன்களும், மகள்களும் அவரவர்க்கு மகவுகளுமாகி விட்டன...எனக்குத்தான் எதுவுமே தாமதம். எனவே இன்னும் பேரன் பேத்தி அளவுக்கு இல்லாமல் மகன் ஒருவனுடன் வாழ்க்கை கடமையுடன் நின்று கொண்டிருக்கிறது..

நானே பரவாயில்லை, எனது மகனே பரவாயில்லை, இன்று ஒசூரில் எனது மகனுடன் பயிலும் ஒரு தோழனின் தந்தை நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்த சேதி நேற்று, அவன் இன்னும் மீதமுள்ள 3 ஆண்டு படிப்பை எப்படி படிக்கப் போகிறான் தந்தை இன்றி என அவனுக்காக பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தேன்.

சித்தி எல்லாம் முடித்து விட்டாள் . அவள் ஆத்மா சாந்தி அடையட்டும். அமைதியாக எல்லாம் நடந்தது. கடைசியில் இறுதி ஊர்வலம் ஆரம்பத்திலிருந்து கடைசி வரை பட்டாசு சத்தம் தவிர, சொர்கரதம் சிவபுராணப் பாடல்கள் தவிர வேறு பெரிதான சத்தம் ஆரவாரம் ஏதுமில்லாத மௌன அஞ்சலி. பாக்கியம் சிவ பதவி அடைந்து விட்டாள் அதே வெள்ளிக்கிழமை கொளத்தூர் சந்தை நாளில்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.Image result for kolathur in salem district


தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேட்டூர் அணை நீர்த்தேக்கத்தின் தூர் வாரும் நிகழ்வை துவக்கி வைக்கிறார்: கவிஞர் தணிகை

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேட்டூர் அணை நீர்த்தேக்கத்தின் தூர் வாரும் நிகழ்வை துவக்கி வைக்கிறார்: கவிஞர் தணிகை
Related imageஇ.பி.எஸ் வெர்சஸ் ஓ.பி.எஸ் என அ.இ.அ.தி.மு.க திணறி வரும் நிலையில் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனி சாமி தனது கட்சி எதிர்ப்பு எம்.எல்.ஏ பன்னீர் செல்வ அணியின் வேர் செம்மலை எம்.எல்.ஏ தொகுதியான மேட்டூரில் மேட்டூர் காவிரி நீர்த் தேக்கத்தில் தூர் வாரும் நிகழ்வை துவக்கி வைக்கிறார். on today i.e 28.05.2017 Sunday at Mettur Dam.

அவங்க அப்பா பேர் கருப்புக் கவுண்டர், ஆனால் எடப்பாடி பழனிசாமி என்றால் தெரியுமாறு ஊர் பேரை இணைத்துக் கொண்டு இன்று தமிழகத்தின் சரித்திரத்தில் தம் கால் தடம் பதித்துக் கொண்டார் இந்த மனிதர். 83 ஆண்டுகளாக தூர் வாரப்படாமலே இருந்த மேட்டூர் நீர்த்தேக்கத்தில் இன்று முதன் முறையாக தூர் வாரும் பணியை ஆரம்பித்து வைக்கிறார்.

எல்லாம் ஒரு ராசியப்பா ராசி. பணத்து ராசி. என்னதான் ஆனாலும் நல்லகண்ணு இன்னும் நல்லகண்ணுவாகவே நீடூழி வாழ்ந்து கொண்டிருக்க இடையில் வந்த ராஜாக்கள் எத்தனையோ அதில் எடப்பாடியும் ஒருவர்.

ஓடக்கார பன்னீர் செல்வம் வெர்சஸ் எடப்பாடி பழனி சாமி என அந்த ஆளும் கட்சி துவண்டு போய் மோடியின் பொம்மலாட்டக் கயிறுகளில் சிக்கி ஆடிக் கொண்டிருந்த போதும்...

பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன்  பள்ளி இறுதித் தேர்விலும், மேனிலைத் தேர்வு முடிவுகளிலும் முதல்  3 இடங்களை ஊடகங்களில் வெளியிடத் தேவை இல்லை என்றும்  தேர்வு முடிவுகளை அவரவர் வீட்டு செல்பேசிகளிலேயே கொடுத்தும் இந்தியாவுக்கே தேர்வு முடிவுகள் இம்முறையில் வெளியிடுவதில் முன் மாதிரியாகவும் செய்து விட்டார்

பள்ளிக் குழந்தைகளுக்கு கிடைக்கும் இலவசங்கள் பள்ளி தேடியே அனுப்பி வைக்கவும் பட்டுள்ளது. செந்தில்பாலாஜி கலப்படம் செய்யும் பால் தனியார் நிறுவனங்களுக்கு எதிராக  தாம் சொல்லும் குற்றச் சாட்டு பொய் என நிரூபிக்கப் பட்டால் ராஜினாமா கூட செய்யத் தயார் என்கிறார்

ஓ.பி.எஸ், ஜெ, எம்.ஜி.ஆர், கலைஞர் கருணாநிதி இப்படி நிறைய முதல்வர்கள் வந்த போதும் சென்ற போதும் மேட்டூர் அணை கட்டித் துவக்கப்பட்ட வரலாறில் இதுதான் முதல் முறை தூர் வாரும் நடவடிக்கையை கை தொட்டிருப்பது இதனால் எடப்பாடிக்கு ஒரு நல்ல பேர்.
Related image


இத்தனைக்கும் சேலம் மாவட்டச் செயலாளராக இருந்து கொண்டு ஒரே ஒரு தொகுதியை மட்டுமே பனமரத்துப் பட்டி இராஜேந்திரன் தி.மு.க‌ பெற்று விட அனைத்து தொகுதிகளையும் அ.இ.அ.தி.மு.கவுக்கு பெற்றுத் தந்திருக்கிறார்.

செம்மலைக்கு தொகுதி ஒதுக்காமலே விட்டு விட்டார். அதன்பின் ஜெவின் பார்வையில் சீனியர் மேன் என்ற நிலையில்தான் செம்மலைக்கு தொகுதி ஒதுக்கப்பட்டது. இருவரும் எலியும் பூனையுமாக எதிரும் புதிருமாக இருக்க இந்த தூர்வாரும் நிகழ்வு இன்று செம்மலையின் தொகுதியில் நடந்து தேசிய செய்தியாக ஆகி உள்ளது.

சேலத்து இரட்டை அடுக்கு மேம்பால வேலைகள் மதுரை இன்ஃப்ரா நிறுவனம் செயல்பாட்டில் முன்னேறி வருகிற நிலையில் இன்று இந்த தூர் வாரும் பணியும். இந்த இன்ப்ரா நிறுவனம் இராமலிங்கம் என்ற இவரது சம்பந்தியுடையது என்று சொல்கிறார்கள். இவர் ஏற்கெனவே நெடுஞ்சாலை மற்றும் சிறு கப்பல் துறைமுக அமைச்சராக இருந்ததாலும் இப்போது பொதுப்பணித் துறையும் இவர் கையிலே உள்ளதாலும் இதெல்லாம் மிக எளிதாக செய்து விட முடியும். ஆனால் வரவு செலவு பற்றி எல்லாம் பொது வெள்ளை அறிக்கை எல்லாம் கேட்க முடியாது.

ஒரு கோஷ்டி எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கினார்கள், மந்திரிகளே எல்லாம் சுருட்டிக் கொள்கிறார்கள் காண்ட்ராக்ட்களில் கமிஷனை எல்லாம் எம்.எல்.ஏவுக்கும் பங்கு வேண்டாமா? ஏற்கெனவே கூவத்தூர் எம்.எல்.ஏக்களுக்கு கொடுத்த உறுதி மொழி இரகசிய உடன்படிக்கை மந்திரிசபை காப்பாற்ற போடப்பட்டதே அந்த  அக்ரிமென்ட் கிடப்பில் உள்ளது என்று செய்திகள் கட்சிக்குள் கோஷ்டி குழப்பம் என செய்திகள் வந்தபோதும் சிலர் மந்திரிகள் ஆகக் கூடும் என்ற செய்தியை மந்திரிசபை விரிவாக்கம் தற்போதைக்கு இல்லை என துணிச்சலோடு முற்றுப் புள்ளி வைத்திருக்கிறார் முதல்வர்.

ஓ.பி.எஸ் ஹோமியோபதி வைத்தியம் செய்து உடலை அதன் நலனை பார்த்துக் கொண்டிருக்க...ஓபிஎஸ் காலத்திலும் வேறு எவர் காலத்திலும் செய்யாத பணியை கையில் எடுத்திருக்கும் இ.பி.எஸ் மந்திரிசபை ப்ளஸ் மார்க்கை நிர்வாகத்தில் எடுக்க ஆரம்பித்திருக்கிறது.இந்த தூர் வாரும் பணியை செய்வதன் மூலம். இந்தப் பணிகளை முன்பே தமிழகத்தின் நீர் நிலைகளில் செய்திருக்க வேண்டும் என இருந்தாலும் இப்போதாவது செய்ய ஆரம்பித்திருக்கிறார்களே என ஆறுதல் அடையலாம்.

Image result for mettur dam images


ஜெ இல்லாத காலத்தில் மந்திரிகள் எல்லாம் பணி புரிகிறார்கள் என்ற அடையாளத்துக்கு இந்த 3 மந்திரிகளின் பணிகளும், பேட்டிகளும்...

கட்சி இணைக்க ஓ.பி.எஸ் முதல்வரானால், கட்சி பொதுச்செயலாளர் வைத்திலிங்கமாகவும், துணை முதல்வராக இ.பி.எஸ்ஸும் இருக்க வேண்டும் என்ற செய்திகளும் உள்ளன...ஆனால் இந்த 100 நாட்களுக்கும் மேலாக முதல்வராக இருக்கும் செயல்படும் இந்த எடப்பாடி பழனிசாமி இதற்கெல்லாம் மசிவாரா? விடுவாரா ? என காலம் பதில் சொல்லட்டும், மோடியை இரு அணியினரும் மாறி மாறி சந்தித்த போதும் இன்னும் ஜெவுக்குப் பின் அ.இ.அ.தி.மு.க அரசு மாறாமலிருப்பதே ஒரு சாதனைதானே?

Related image

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.


Friday, May 26, 2017

ஊடகங்களின் புலைத்தனமும் பித்தலாட்டமும்: கவிஞர் தணிகை

ஊடகங்களின் புலைத்தனமும் பித்தலாட்டமும்: கவிஞர் தணிகை

Image result for media exploitation


இந்தியாவின் சட்டம், நீதி, நிர்வாகம், அடுத்து நான்காவது தூணான ஊடகங்கள் கால் இல்லாமல் இருப்பதால் எங்கு பார்த்தாலும் ஏழைமக்களுக்கு எதிரான அரசின் போக்கு தனியார் ஆதரவு மயம், அரசுக்கு அடிக்கும் ஜால்ரா போக்கு விலை வாசி ஏற்றம், குடிநீர் பிரச்சனை போன்ற எல்லா அடிப்படைப் பிரச்சனைகளுக்கும் காரணமாக அப்படியே தீர்க்க முடியாமல் இருக்கின்றன.

கால் ஜெவுக்கு இருந்ததா? இல்லையா என ஜெவின் மர்மச் சாவு பற்றி சிறிதும் துப்புகூடத் தர முடியாமல் பணத்தடிமைகளாக விளங்கும் இந்த இந்திய மீடியாக்கள் பெரும்பாலும் அரசை சார்ந்து அதன் விளம்பரத்தை சார்ந்தே இயங்கி வர....

காவல் துறை எப்படி செய்யாத குற்றத்தை செய்ததாகவும், செய்த குற்றத்தை செய்யாததாகவும் செய்ய வல்ல வன்மை படைத்ததோ அது போலவே இந்த ஊடகங்களும் வல்லமை கொண்டவை.

ரஜினியின் காலா, என்பது, தனுஷின் பேட்டி என்பது, ஓ.பி.எஸ். இரண்டு நாளைக்கு ஹோமியோபதி சிகிச்சை என்பது இ.பி.எஸ் பிரதமர் பேட்டியில் மாணிக்கம் எதற்கு எனத் செய்தி தருவது என மக்களுக்கு பயன்படும் பயன்படா செய்திகளை தொடர்ந்து தந்த வண்ணமே இருக்கின்றன.

கௌதமி போன்றோர் பிரதமரை சந்திக்கிறார் எளிமையாக, ஆனால் இந்த நாட்டின் முதுகெலும்பு விவசாயிகள் சந்திக்க முடியவேயில்லை. ஆனால் அதற்கு ஊடகங்களாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. காவிரியில் இன்றைய நிலவரப்படி 20 அடி நீரே இருந்தும் அதற்கு எதிராகவும் ஒன்றும் செய்வதில்லை.Image result for media exploitation

ரஜினி காந்த் வருவாரா வரமாட்டாரா என மிகவும் பெரிய பிரச்சனையாக செய்யும் ஊடகங்கள் அவர் வந்தால் தமிழக அரசியல் மாறிவிடும், மக்கள் எல்லா பிரச்சனையிலிருந்தும் விடுபடுவார் என்பது போல நடிகர் நடிகையர் சார்ந்த பிரச்சனையை பூதாகரமாகவும், தேவையான பிரச்ச்னைகளை இருட்டடிப்புமாக செய்து மக்களை இந்திய மக்களை திசை திருப்பி விடுகின்றன.

அதன் எதிரொலியாக இன்றும் இவர்கள் செய்து வரும் ஓ.பி.எஸ் வெர்சஸ் இ.பி.எஸ் செய்திகள், இவர்களால் நிரந்தரமாக ஒரு கவர்னரை பெற்றுத் தர முடியவில்லை தமிழ் நாட்டுக்காக.

எல்லாம் பொருளாதாரத் தேவைகளை மனதில் கொண்டே செய்திகளை வெளியிடுவது அல்லது இருட்டடிப்பு செய்வது என இயங்கி வரும் இந்தப் போக்கும் இந்த நாட்டுக்கு பெரும் கேடாக முடிந்து வருகிறது. நேர்மறையாக வரும் செய்திகளை வெளியிட மறுத்து வரும் போக்கே இதன் இழித்தன்மைகளுக்கு எடுத்துக்காட்டு.

இந்தியாவின் வாய்ப்புற்று நோய் முதலாக விளங்குகிறது, நாளுக்கு அதன் மூலம் 14 பேர் இறக்கிறார்கள் என்று அதை மாற்ற உண்மையாகவே ஆக்க பூர்வமான சக்திகள் போராடி வருகின்றன அதைப்பற்றிய ஒரு செய்தி வெளியிடுங்கள் என்றால் அதைச் செய்ய மாட்டார்கள் ஆனால் வேறு எல்லாவகையான தரமற்ற குடி, மது பாட்டலால் குத்து, போன்றவற்றுக்கு எல்லாம் முன்னுரிமை கொடுத்து வெளியிடுவார்கள்.

முக்கியமாக ஆளும் கட்சியினர், மாநிலத்திலும் மத்தியிலும் உள்ளார் எதைச்செய்தாலும் அதைச் செய்தியாக்குகின்றனர். அரசியல், சினிமா இந்த இரண்டு பிரிவினரின் செய்தி தவிர வேறு எத்தனையோ துறைகளில் அன்றாடம் ஆக்கபூர்வமான முயற்சிகளும் சாதனைகளும் நடந்து வருகிறது நாம் யாவரும் அறிந்ததே. ஆனால் அவை பற்றி எல்லாம் ஒரு செய்தி வெளியிட பெரும் பிரயத்தனம் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. அப்படி முயற்சி செய்தபோதும் சில நேரங்களில் அவை பயனற்றவையாகவே முடிந்து போய் விடுகின்றன.

காரணம் அரசும் கூட. மேட்டூர் சேலம் தொடர்வண்டி போக்குவரத்து பற்றி புதிய தலைமுறை தொலைக்காட்சி தேர்தல் நேரத்தில் நல்ல ஒளிபரப்பாய் நேரந்தவறி அந்த வண்டி செல்வதும் அதை மக்கள் பயனபடுத்தாமை பற்றி ஒளிபரப்பை செய்தும்...இன்று வரை எந்த மாற்றமும் இல்லை மத்திய ரெயில்வே அப்படியே மலை போல அசையாது கிடக்கிறது . இது போன்ற நடவடைக்கைக்கு எதிராக இயங்க தனிமனிதரால் , சிறிய நிறுவனங்களால் முடிவதில்லை, அதற்கு ஊடகங்கள் அவசியம் செயல்பட வேண்டும். ஆனால் ஊடகஙகள் பெரும்பாலும் பணத்துக்கு அடிபணியும் சக்திகளாக தீய சக்திகளின் துணையாக சென்று விடுவதால் இந்தியா இந்தியாவாகவே இருக்கிறது பாரதமாக மாறவில்லை.

Related image

நாட்டுக்கு நன்மை செய்த தியாகம் செய்த ஆயுளைக் கழித்த பலரும் அடையாளம் தெரியாமல் இருக்க, தமிழிசையும், இங்கிலீச் இசையும், ராஜாக்களும் ராணிகளையும் பற்றியே செய்தியே என்றும் இடம்பிடிக்கின்றன போதாததற்கு சீரியல் வெங்காயம், அதன் பெங்கலூர் நடிகை,, கேரள நடிகை என அரசியல் நாய(க)ர்களும், சினிமா நடிக நடிகையரையும் விட்டால் இந்த  ஊடகப் பேய்களுக்கு வேறு எதுவும் இல்லை போலும்...

அப்படி செய்தே எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெ, ஓ.பி.எஸ். இ.பி.எஸ், சசி போன்|றோரும் வந்தனர் இன்று வெற்றிடம் நிரப்ப ரஜினி வேண்டுமாம். அவர் வருவதும் வராமலிருப்பதும், சிஸ்டத்தை சரி செய்வதும் செய்யாமலிருப்பதும் இதன் கருப்பொருள் அல்ல...இவ்வளவு தேவைக்கதிமான சிலம்பல்கள், உறுமல்கள், குரல்கள், வெளிச்சங்கள் ஊடகத்தில் தேவையா என்பதுதான் எனது கேள்வி எல்லாம்...

மோடி கேடி மஸ்தான் ஆட்சி  3 ஆண்டில் ஊழல் இல்லா ஆட்சியாம், எடப்பாடி 100 நாளை ஆட்சி கவிழாமல் காப்பாற்றிக் கொண்டாராம் இவை தான் இன்றைய பிரதான செய்திகள். மோடி ரிலையன்ஸ் அம்பானிகளின் பணத்தாலும், அமெரிக்க வழிகாட்டலாலுமே வந்தார் அது ஊழல் இல்லையா? மோடி பிரதமர் வேட்பாளர் என்றீர் வந்தீர். அவர் கட்டப் பஞ்சாயத்து தான் செய்கிறார் அதில் ஸ்டாலினோ, கண்ணதாசனோ ஊடகங்களில் சொல்வது தவறில்லை. இல்லையெனில் அதைப்பற்றிய செய்திகள் வரவேண்டுமே...நாட்டின் ஒரு மாநில முதல்வரும், நாட்டின் மத்திய பிரதமரும் அவர்கள் சொந்த வீட்டு சமாச்சாரம் பேசினால் யாருக்கும் வேண்டாம் நாட்டு நடப்பு பற்றிய பேச்சு நடத்தினால் செய்தி அவசியம் வேண்டுமல்லவா?

ஜெ மோடி இரண்டு பேரும் நாட்டின் பெரும் மக்கள் அழிவு சக்திகள். இதற்கு ராஜா போன்ற நபர்கள் வாபஸ் வாங்கு பிடிங்கு எனப் பேசி வருவது எல்லாம் மத்தியில் அவர்கள் ஆட்சி என்ற ஒன்று இருப்பதால் மட்டுமே. ஒருபக்கம் தி.மு.க ஆட்சிக்கு வந்து விடக்கூடாது எனத் திட்டமிடும் இவர்கள் மறுபக்கம் கலைஞர் கருணாநிதி மணிவிழாவுக்கு அழைப்பு விடுத்திருக்காலம் எனக் கேவுவது அசிங்கமாக இல்லையா? கருணாநிதியே அவர் விழாவுக்கு வர முடியாதபோது அது அரசியல் விழாவா அல்லது நாட்டை நினைவு படுத்தும் விழாவா என்று எதுவாக இருந்து விட்டுப் போகட்டுமே இவர்களுக்கு என்ன வந்தது? இந்த நிலையில் இராமசுப்ரமணியன் என்ற ஒரு நபர் பேசுகிறார் ஒரு மாநிலத்தின் எதிர்க்கட்சித்தலைவர் பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்க முடியாமைக்கு காரணம் சொல்லத் தெரியாமல் இவர்கள் அந்தக் கட்சியில் சேரத் துடிக்கிறார்கள் எனக் கூசாமல் பேசுகிறார் அதை ஊடகங்கள் ஒளிபரப்புகின்றன.
Image result for media press and tv exploitation of india


ஊடகங்கள் முதலில் மக்களுக்கு எதைத் தருவது, எதைத் தரக்கூடாது என்ற நெறி வகுத்துக் கொள்ள வேண்டும். மேலும் அல்லது இது போன்ற நெறி கடைப்பிடிக்க முடியாவில்லை எனில் எல்லா உண்மைகளையும் மறைக்காமல் அப்படியே தர முயல வேண்டும். காசுக்கா, மதுவுக்காக, கிடைக்கும் கவர்களுக்காக செய்தியை இல்லாமல் செய்வதும், இல்லாததை செய்தியாகத் தருவதையும் நிறுத்த வேண்டும். நாட்டு மக்களின் மேம்பாடு என்றும் கவனத்தில் கொண்டு செய்திகள் வெளியிட பாடுபட வேண்டும்.
Image result for media press and tv exploitation of india
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Thursday, May 25, 2017

பக்தி வியாபரத்தால் பேருந்து ஏற முடிய வில்லை பயணம் செய்ய முடியவில்லை : கவிஞர் தணிகை

பக்தி வியாபரத்தால் பேருந்து ஏற முடிய வில்லை பயணம் செய்ய முடியவில்லை : கவிஞர் தணிகை
Related image


அமாவாஸ்யை.என்னை(யே) ஓட்டுனர் படிக்கட்டில் நின்று வரச் சொல்லி விட்டார். உள்ளே அவ்வளவு கூட்டம். நெருக்கம்.பெண்கள் கூட்டம் எனவே  சிறிது நேரம் படிக்கட்டில் ஒப்புதல் இன்றியே இருந்தேன்.சுங்கச் சாவடி இன்னும் சாலை அமைத்த பணத்தை எடுக்க வில்லையா? அங்கே பத்ம வாணி, கல்லூரி பெரியார் பல்கலை என‌ இல்லாத பேருந்து நிறுத்தங்கள். கல்லூரி பெண்கள் கூட பேருந்தின் கூட்டம் கண்டு விலகி ஓடி விட ஒரு கர்ப்பிணிப் பெண் அவர் கணவருடன் துணிந்து படியில்  ஏறிக் கொண்டார்.

ஏம்மா இப்படி வயிற்றில் கருவை சுமந்து கொண்டிருக்கிற சூழலில் இப்படிப் பட்ட பேருந்தில் ஏறலாமா ? என்றதற்கு எவ்வளவு நேரம் தான் காத்திருக்கிறது என்றார்.

அதை விட பெரிய நிகழ்வாக போகப் போக கூட்டம் ஏறிக் கொண்டே இருந்தது ஒரு பெண் கைக்குழந்தையுடன் ஏறிக் கொண்டாள். பஸ் நகர்ந்தது நான் ஒரு இடத்தில் இறங்கி படியிலிருந்து உள்ளே போய் நின்று கொண்டேன் அது வேறு. இந்தப் பெண் படியில் இருந்து விழுந்து விடுவாள் என்பதை உணர்ந்து கொண்ட நடத்துனர்(அன்று அந்த பேருந்துக்கு கொள்ளை இலாபம்) பேருந்தை நிறுத்தி இறக்கியே விட்டு விட்டார்.

ஒன்று இது போன்ற நாட்களில் அரசு பல சிறப்புப் பேருந்துகளை இயக்க வேண்டும் அல்லது மக்களாவது நிலை உணர்ந்து வீடு அடங்கி இருத்தல் வேண்டும் அல்லது பெரிய கோவில்கள் என்பதே இருக்கக் கூடாது. அது வேறு.

வயதான பெரியவர்கள், கைக்குழந்தைகளுடன் தாய்மார்கள், கர்ப்பிணிப் பெண்டிர் இவர்கள் எல்லாம் எப்படி இவ்வளவு துணிச்சலுடன் இந்தக் கூட்டத்தில் பயணம் செய்ய புறப்பட்டு வருகின்றனர் என்றே என்னால் அறிந்து கொள்ள முடியவில்லை. அதுவும் இந்தக் கொடிய கோடையில் அக்னி நட்சத்திர கத்திரி வெயிலில்.

இத்தனைக்கும் டவுன் பஸ் உள்ள ரூட்தான் அது. அதில் யாரும் ஏற ஆர்வம் காண்பிப்பதைல்லை. அரசு பேருந்தில் எவரும் ஏற ஆர்வம் காண்பிப்பதைல்லை எல்லாம் தனியார் பேருந்துகளில் ....சிறு தொலைவும் கூட...அது சேலம் ஓமலூர் மேச்சேரி வழியாக மேட்டூர் வந்து சேரும் பேருந்து வழி. சிறு தொலைவும் கூட எங்களுக்குத்தான் வேறு வழியில்லை என்றால் சிறு தொலைவும் கூட வரவேண்டிய மக்களும் ஏன் இது போன்ற பேருந்துகளில் ஏற வேண்டும் என்பதுதான் புரியவில்லை.

எனக்கு பணி நேரம் கோடைக்கால விடுமுறை காரணமாக மதியம் 1 மணி வரை இருந்து முடிந்து விடுவதால் வேறு வழியின்றி பயணம் செய்ய வேண்டிய கட்டாயம். எனது நேரம் தனியார் வண்டியே எனக்கு கிடைக்கிறது. மதியம் 3 மணிக்குள்ளாவது வீடு திரும்பி மதிய உணவை உட்கொள்ளலாமே என்ற அவசரத்தில் நான் வந்து கொண்டிருக்கிறேன்.சாதரணமாகவே பேருந்து நிலையத்தில் சென்று இருக்கையில் அமர்ந்து வரலாம் என சென்றால் கூட சில பேருந்துகளை தவற விட்ட பின்னால் தான் 3 ஆம் அல்லது 4 வது பேருந்தில் தான் இருக்கையே கிடைக்கிறது அந்த மதிய வேளைகளில்.

எந்தக் காரணத்தைக் கொண்டுமே அரசு இதை எல்லாம் கண்டு  கொள்வதே இல்லை கூட்டம் மிக அதிகம். எல்லாம் பக்தி மார்க்கத்தில் மேச்சேரி காளியம்மனை வணங்க வருகிறார்களாம், அமாவாசையில்.


மருத்துவ மனைகளில் எங்கும் கூட்டமே இல்லை. காரணம் இந்த அமாவாசைதான்...இந்த பேருந்தே இப்படி பிதுங்கி வழிகிறபோது, பூ,பழம், கற்பூரம், எலுமிச்சை, தேங்காய் இப்படிப்பட்ட பூஜை சாமான்களுக்கும் அதனுடன் சார்ந்த விற்பனை பொருட்களுக்கும் சொல்லவே வேண்டாம், பெரும் வியாபாரம். பூசாரித் தட்டுக்கும், தனியார் பஸ் முதலாளிக்கும் நல்ல கலெக்சன்.

கல்வி நிறுவனங்களுக்கும், கோவில் நிறுவனங்களுக்கும் எப்போதுமே எப்படியோ நல்ல கலெக்சன். அதன் பாதிப்பே இந்த பேருந்து தனியார் முதலாளிகளுக்கும். நடத்துனர் ,ஓட்டுனர், உதவி நடத்துனர்கள் பேட்டா எடுக்க நன்றாக உழைக்கின்றனர். மக்களின் சாபத்துடன். ஆனால் இந்த சாபம் எல்லாம் போய்ச் சேர வேண்டியது அரசுக்கு அரசுக்கு மட்டுமே என்பது ஒரு கோணம்.

சொல்லில் வருவது பாதி
சொல்லக் கூடாதது மீதி..

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Monday, May 22, 2017

இந்திய முன்னேற்றம் பற்றிய கவலை உள்ளார்க்கு: கவிஞர் தணிகை

இந்திய முன்னேற்றம் பற்றிய கவலை உள்ளார்க்கு: கவிஞர் தணிகை

இந்த மின்னஞ்சல் சற்று வித்தியாசமாக இருக்க இதையே இன்றையப் பதிவாக்கி விடலாம் என வற்றிப் போயிருக்கிறது எனது உடல் பணிக்கு சென்று விட்டு நின்று கொண்டே பயணித்த இந்த உடல் ஒத்துழைக்க மறுக்கிற சிந்திக்க மறுக்கிற நிலை,,,,சுவர் இருந்தால் தான் சித்திரம் எழுத முடியும் என்ற நிலைக்கேற்ப எனக்குமா வந்திந்த எழுதப் பஞ்சம் என நான் என்னையே கேட்குமளவு  கொடிய கோடை , அயர்ந்த உடல், நடைப்பயிற்சிக்கு ஏங்கும் எண்ணம்...இதனிடையே இந்த பதிவு:


Image result for india 2020 in tamil

இந்தியா எப்படி? வல்லரசு நாடாகும் ?
இந்தியா எப்படி வல்லரசு நாடாகும் ?
2500 மைல் கடல் எல்லை ,
2500 மைல் மலை எல்லை ,
கிழக்கு மேற்க்காக 2000 மைல்,
தெற்கு வடக்காக 2000மைல் ,
 உலகத்தின் மொத்த நிலபரப்பில் 5.2 % ஒரு தீபகற்பநாடு இந்தியா ,

Image result for india 2020 in tamil

மண்ணுக்கு அடியில்
238 வருடங்களுக்குக்கான தேவையான இருப்பு , 138 வருடங்களுக்கு தேவையான நிலக்கரி , 1850000,கேரட் வைரம் உழைபதற்கு 103 கோடி மக்கள் , வற்றாத வளம் கொழிக்க கூடிய ,சிந்து , பிரம்மபுத்திர , கங்கை , என்றும் வற்றாமல் ஓடிகின்ற ஜீவா நதிகள் , இத்தனை கனிவளம் உள்ள ஒரு நாட்டில்
80 % மக்களுக்கு
பாதுக்காக்க பட்ட
"குடிநீர் இல்லை" !!! என்பது எவ்வளவு பெரிய இழுக்கு !
57 % மக்களுக்கு படிப்பு அறிவு இல்லை என்பது எவ்வளவு பெரிய இழுக்கு
அடிப்படை தேவைகள் கூட பூர்த்தி செய்யாமல்
எப்படி வல்லரசு
நாடக மாற முடியும் ?
எப்படி முன்னேறிய நாடு என்று சொல்ல முடியும் ?
இதுவரை ஆண்ட அரசியல்வாதிகளுக்கு ஏதேனும் பொறுப்பு உள்ளதா ! இல்லை !
இவர்களுக்கு இருந்த ஒரே பொறுப்பு அந்நிய வங்கிகளில் எவ்வளவு அடைத்து வைக்க வேண்டும் என்பது மட்டும் ஒரே குறிக்கோள்
தண்ணீரை விலைகொடுத்து வாங்கும் "குவைத் "முன்னேறி விட்டது
தண்ணீர் மிதக்கும் "வெனிஸ் "
முன்னேறி விட்டது
மாடுகளை மட்டும்
வைத்திருக்கும் "டென்மார்க் "முன்னேறி விட்டது
காடுகளை மட்டும் வைத்திருக்கும் "பிலிபைனிஷ்"
முன்னேறி விட்டது
நிலபரப்பை மட்டும் வைத்திருக்கும்
"ஆஸ்திரேலியா "முன்னேறி விட்டது
மீன்களை மட்டும் வைத்திருக்கும்
"நார்வேமுன்னேறி விட்டது
கடிகாரத்தை மட்டும் வைத்திருக்கும் "சுவிஸ் "முன்னேறி விட்டது
அறிவியலை மட்டும் வைத்திருக்கும்
"அமெரிக்க "முன்னேறி விட்டது
கூட்டு பண்ணை மட்டும் வைத்திருக்கும் "சோவித் ரஷியா "முன்னேறி விட்டது
மனித உழைப்பை மட்டும் மூலதனமாக வைத்திருக்கும் "ஜப்பான் "முன்னேறி விட்டது
ஜப்பானில்
இரண்டாம் உலக போரில் ,
ஹீரோசமா , நாகசாகி , அமெரிக்க ஏகதிபத்தியம் அணுகுண்டுகளை வீசி எரிந்து லட்சம் கணக்கான மக்கள் கொன்று குவிக்கபட்டு , இரண்டு பெரும் நகரங்கள் சூரையாட பட்டு ,
எரிமலையின் மடியில் உள்ள ஜப்பான்,
உலக நாகரிக ஓட்ட பந்தியத்தில் , நிலவளம் இல்லை, நீர்வளம் இல்லை, மக்கள் பலம் இல்லை , தனது சொந்த ஜப்பான்மொழியில் மேல்படிப்பு கற்கும் ஜப்பான்
எப்படி உலக நாகரிக ஓட்ட பந்தயத்தில் எப்படி முதல் இடத்தில் உள்ளது !!!
அணைத்து வளங்களும் உள்ள ஒருநாட்டில் ஏன் !!!
முன்னேறி நாடுகளில் இடம் கிடைக்க முக்கு முக்கு என்று முக்குகிறது இந்தியா !!!
உலக பார்வையில் இந்தியா மிக பெரிய வர்த்தக சந்தை
இந்தியா உள்ள 100 கோடி மக்களும் உலக வர்த்தகத்தின் சந்தாகாரார்கள்,
உலகத்தில் எது உருவாக்க பட்டாலும் உடனே வருவது இந்தியாவிற்க்குதான்
ஏன் ?
என்றால் இங்கு வாங்குவார்கள் அதிகம் .
உருவாக்குவார்கள் குறைவு !!!
உலகத்தின் அனைவரும் போற்றும் வைகையில் எந்த எந்த வித பொருளையும் உருவாக்க வில்லை
எப்போது பொருள்கள் உருவாக்கபடவில்லோயோ !!! முதாளிகளும் குறைவு .
அந்நிய நாட்டின் வங்கிகளில் மட்டும் இந்தியா நாட்டை ஆண்ட
அனைவருக்கும் இருப்பு தொகை உள்ளது
ஆனால் நாட்டை மட்டும் நம்பி உள்ள உள்ள மக்களுக்கு 36சதவிகிதம் மக்களுக்கு இருக்க வீடு இல்லை .
என்பது எவ்வளவு பெரிய இழுக்கு
அடிப்படை தேவைகள் பூரித்தி அடையாமல் எப்படி வல்லரசு நாடக மாறமுடியும் ?
சற்று யோசித்து பாருங்கள் காலையில் பல்துடைப்பும் தொடங்கி இரவு விளக்கி அனைக்குவரைக்கும் உங்க நாட்டில் கண்டுபிடிக்க பொருளை நீங்கள் உபயோகீர்கள் என்று எண்ணி பாருங்கள் ?
உண்மை புரியும்
இந்தியா முன்னேறிய நாடு மறாவும்
வல்லரசு நாடு எப்படி மாறும் என்று உங்களுக்கு புரியும் !!!!!!
இந்த அரசியல் , சினிமாவும் , ஊடங்களும் நம்மை ஏயித்தை தவிர வேறென்ன என்ன செய்தது
எப்படி ? வல்லரசு நாடாகும் !!!!
இந்தியா வல்லரசு நாடக மாற வேண்டுமானால் அடிப்படை தேவைகளும் ,புதிய கண்டுபிடிப்புகளும் , எப்போது உருவாகும் அப்போதுதான் இந்தியா வல்லரசு மாறும்
இந்தியா அரசியல்வாதிகளுக்கு யார் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி அந்நிய வங்கிகளில் தனது கணக்கை துவங்க வேண்டும் என்ற போட்டி அதிகமே தவிர வேறென்ன இருக்கமுடியும் !!!!
சிலம்பரசன் தமிழரசன்
21.05.2013

thanks: Lakshmanan Marimuthu.

Sunday, May 21, 2017

ரஜினிகாந்த்-- 66:கவிஞர் தணிகை.

ரஜினிகாந்த்  66:
Image result for rajinikanth66

ரஜினிகாந்த் என்னும் சிவாஜி ராவ் கெய்க்வாட் என்ற‌ தனி மனிதரின் கருத்துகளைப் பற்றி மலர் மொட்டாக இருக்கும்போதே எதற்கிந்த ஆர்ப்பாட்டம்? கவிஞர் தணிகை.

எம்.ஜி.ஆர் இதே போன்ற கனவுகளுடன் தாம் அரசியலுக்கு வந்தார் .சத்துணவு விரிவாக்கத்துடன் அவர் கனவு தகர்ந்தது. அவரின் பின் ஜெ வர அவர் காரணமாகவும், அதன் பின் இந்த நாடு இப்படி இருக்கவும் அன்று ஏற்பட்ட கருணாநிதி எம்.ஜி.ஆர் பிளவு காரணமாக அமைந்து விட்டது.

கருணாநிதி முடியும் தருவாயில் இருக்க, எம்.ஜி.ஆர், ஜெ இல்லாதிருக்க அந்த வெற்றிடம் இந்த நடிகரால் நிரப்பப் படுமா என ஒரு ஆருடம் நிலவுகிறது.

இவரை பாரதிய ஜனதா பயன்படுத்தப் பார்த்ததும் என்ன காரணத்தால் இவர் அதற்கு பிடி கொடுக்கவில்லை என்பதும் சம்பந்தப்பட்ட இரு சாரருக்கும் தெரியும். இவர் குடும்பஸ்தர் எம்.ஜி.ஆர் போன்று குழந்தை வாரிசு இல்லாதார் அல்ல. மேலும் எம்.ஜி.ஆர் ஜானகியைக் கட்டுப்படுத்தி ஆட்டம் போட்டவர் பெண்கள் தொடர்பில் அதனால்தான் ஜெ போன்றோர் வர முடிந்தது.

ஆனால் இவரது மனைவி லதா சொல்லும் சொல்லை மீறாதவர் இந்த காந்த் ரஜினி காந்த். பாலச்சந்தரால் பிரமாதமாக மேல் எடுத்துச் செல்லப்பட்ட நடிகர்.விஜய்காந்த் எப்படி சுழன்று காலை சுழட்டி சண்டையிட்டு சினிமாவில் காப்டன் பட்டம் பெற்றாரோ ஆனால் அவர் அவரின் மனைவி பிரேமலதாவின் பேச்சைத் தட்டாதிருப்பாரோ அது போல ...இவரும் மனைவி சொல்லே மந்திரம் என்று இருப்பவர் இல்லாவிட்டால் இதுகாலம் இவர் அரசியலில் இருந்திருக்கலாம் வெற்றியோ தோல்வியோ பெற்ற தலைவராக...சிவாஜி ராவ் கெய்க்வாட் சிவாஜி போல அரசியலில் ஜொலிக்காமல் போகலாம், அல்லது எம்.ஜி.ஆர் போல் எதையாவது செய்யவும் முயலலாம். அதெல்லாம் அப்புறம்.

Related imageImage result for rajinikanth66Related image

இவரின் சினிமா வெளியாக இருக்கும்போதெல்லாம் இது போல ஸ்டன்ட் இவர் செய்வார், வெறும் கபாலி விளம்பரத்தை வைத்தே எம்.ஜி.ஆர் கபாலியாக நம்பியார் சொல்வது போல அல்லாமல் பெரிய கபாலியாக ஓடி விட்டது என்பதையெல்லாம் நினைத்தால் தமிழரைப் பற்றி இவர் கொண்டிருக்கும் ஒபீனியன் சரியானதுதான். இது 2.0 க்குப் பின்னும் இதே அலை இருக்குமா என்று முதலில் பார்க்க வேண்டும்.

ஆனால் பொது வாழ்வில் பொது மேடையில் செய்தி ஊடகங்கள் முன் பேசும்போது அதுவும் பிரபலங்கள் எல்லாம் பேசும்போது சற்று நாவடக்கமாக உள்ளதை உணர்வதை எல்லாம் அப்படியே பேசி விட முடியாது, அப்படி யதார்த்தமாக பேசிவிட்டால் இவர்கள் எல்லாம் இப்போது  போராட்டம் எனச் சொல்லி போராட்டத்தை நடத்தி வரும் திராவிடர் கழகம், மற்ற கழகம் எல்லாம் எதிராகி எதிராக கிளம்பி விடும் என்பதை மறுக்க முடியாது.

நான் அந்த பேச்சைக் கேட்கும்போதே நினைத்தேன் வினை விதைத்துக் கொண்டார் என. சத்யராஜ் ஒன்றுமில்லாமல் பொத்தாம் பொதுவாக பேசியதற்கே ஒன்றுமில்லாமலே வட்டாள் நாகராஜ் போன்றோர் முடுக்கி விடப்பட்டு கர்நாடகாவில் பாஹு பலியை பல ஆண்டுகளுக்கும் பின் கூட‌ காரணமாக்கி விட்டது போல...

இவர் சொல்வதில் ஒன்றும் தவறு இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் சொல்லியதை பொது ஊடகத்தில் சொல்லியதுதான் இவருக்கு எதிரான கருத்துகளும் போராட்டங்களும் எழக் காரணமாகிவிட்டன். மதுக்கடைக்கு அடிமையாகிப் போன தமிழர்கள், கட்சி, சாதி எனப் பிரிந்து ஒரு ஒழுங்கான ஆட்சியை அமைக்க விடாமல் வாக்களித்த தமிழர்கள், யார் வந்தால் எப்படி ஆட்சி நடக்கும் எனத் தெரியாத தமிழர்கள், ஒரு பெரும் குற்றவாளியை தெய்வமாகக் கொண்டாடும் தமிழர்கள் அவர் இருக்கும் வரை அந்தப் பெரும் கட்சியில் பிரிவினை வந்தபோதும் நாடு அந்தக் கட்சியின் வசமே அதன் ஆட்சியின் வசமே இருப்பதைக் கண்டும் வாளா இருக்கும் தமிழர்கள், ஒரு குடும்ப ஆட்சியே ஒரு பெரும் கட்சியில் இருக்க அவர்கள் ஆளும்போது அதன் ஆட்சியே நிலவ அனுபவத்துக் கொண்டிருக்க பழகிக் கொண்ட தமிழர்கள் எனத் தமிழர்கள் இன்று எண்ணிறந்த பிரிவுகளில் பிரிந்து கிடக்கிறார்கள்.

 கொஞ்சமோ பிரிவினைகள் ஒரு கோடி என்றால் பெரிதாமோ என்ற பாரதியின் வரிகளுக்கேற்பவும், நெஞ்சு பொறுக்குதிலையே இந்த நிலை கெட்ட மனிதரை நினைந்து விட்டால் என மதுபான அடிமைகள் கொஞ்சம் சேர்த்துப் போட்ட வாக்கால் வேறு ஆட்சி முறையை ஆள விட்ட அடிமைகள்...விஜய்காந்த், வைகோ, பா.மா.க என வாக்குகளைப் பிரித்து தமிழரை ஆளவிடக்கூடாது என நினைக்கும் தமிழர்களை எல்லாம் வேறு எப்படி சொல்ல முடியும்?

 இந்த போட்டி சந்துகளிடை இப்போது பாரதிய ஜனதாக் கட்சி பொன் இராதாகிருஷ்ணன் போன்றோர் எந்தக் கட்சிக்குமே இங்கு கால் கிடையாது என்று துணிச்சலாகப் பேசுவதைக் கேட்டுக் கொண்டு சும்மா இருந்து கொண்டு, ஆளும் மத்திய கட்சி என்ற ஒரே கோதாவை வைத்துக் கொண்டு ஆளும் கட்சியை தாறுமாறாக பேசுவதும், தலைமைச் செயலகத்தில் வந்து மத்திய மந்திரி ஆய்வு செய்வதும் அவர்களை எல்லாம் எதுவும் பேசாமல் ஒரு நடிகர் பேசிவிட்டால் அதற்கு இவ்வளவு வரிந்து கட்டிக் கொண்டு போராடுவதுமாக இருக்கும் தமிழர்களை வேறு என்ன சொல்வது?இவர்கள் எல்லாம் சேர்ந்து கொண்டு 2.0 சங்கர் படத்திற்கு எதிராக போராட மாட்டார்கள் என்பதெற்கெல்லாம் இல்லை என்று மறுப்பு சொல்ல முடியாது.

இவர் இரசிகர்களுடன் போட்டோ எடுத்துக் கொள்வதும், நாச்சிக்குப்பம் கிருஷ்ணகிரியில் நல்லது செய்து குடிநீர் கொடுப்பதும், திருவண்ணாமலைக்கு நல்லது செய்ததும், தமிழ் நாட்டை விட்டால் இமயமலைக்குத்தான் செல்ல வேண்டும் என்பதும் எல்லாம் சரிதான்.

ஆனால் இந்த பாழாய்ப்போன அரசியலை எல்லாம் முற்றிலும் மாற்றி விட முடியுமா என்று கேள்விகள் எழுப்புவதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை.

இவர் ஸ்டாலின், திருமா, அன்புமணி ஆகியோரை பாராட்டுகிறார். ஆனால் அவர்கள், இவரது பாணியில் மகிழ்ச்சி என ஸ்டாலின் சொல்லி உள்ளதையும், அன்பு மணி இனி இந்த மாநிலத்துக்கு தேவை டாக்டர்தான், நடிகர் அல்ல என்பதும் திருமா போன்றோர் நீதிபதி கர்ணன் செய்கையில் நியாயம் காண்பதும் அவர்கள் எந்நிலையில்  இவரை அணுகுவார்கள், அணுகிறார்கள் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.

இவர் அரசியலுக்கு வருகிறாரா? வந்தால் உண்மையில் இவரால் ஏதும் மக்களுக்கு அடிப்படி வசதிகள் செய்து பிரச்சனைகள் தீர  சாதிக்க முடியுமா? சிஸ்டத்தை சரி செய்ய‌  முடியுமா என்ற கேள்விகள் ஒரு புறம் இருந்தாலும், இவர் வந்து விடுவாரா  வந்து விட்டால் நம் நிலை எல்லம் என்ன ஆவது என்ற பதைபதைப்பில் பேசுவாராகவே இவரை வரக்கூடாது என்ற எண்ணத்தையே பலர் தெறித்திருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சி, திருநாவுக்கரசு போன்றோரைத் தவிர...

முக்கியமாக பாரதிய ஜனதா கட்சிக்கு அவர் தமது கட்சியின் இழுப்புக்கு வர மாட்டார் என்று தெரிந்ததுமே அவரை தாழ்த்தி பேச ஆரம்பித்து விட்டார்கள் இதை கவனிக்க வேண்டும்.

மலையாளி, எம்.ஜி.ஆர், கர்நாடக ஜெ,( நாயுடு விஜய்காந்த்) , ஒரே குடும்ப ஆட்சி முறை ஒரே குடும்ப கட்சி முறை போன்ற கொள்கையை கடைப்பிடித்த கலைஞர் போன்றவர்களை எல்லாம் மக்கள் தலைவர்களாக முதல்வராக ஏற்றுக் கொண்ட நிலையில்  இவரை ஏன் ஏற்றுக் கொள்ளக் கூடாதா? அது பெரிய தவறா என்ற கேள்விகளை அவரது இரசிகர்கள் கேட்கிறார்கள் இதை மறுக்க அடிப்படை இல்லை.

ஆனால் இவரது இரசிகர் மட்டுமே போதுமா? போர் அதாவது தேர்தல் வரும்போதுமட்டும் அணி சேர்ந்து வெல்ல முடியுமா? எல்லா மக்களுமே ஆதரவு தருவார்களா என்பதெல்லாம் எதிர்காலத்தில் நிகழும் கனவுகளும் கற்பனைகளும்.


Related image


ஆனால் இதெல்லாம் நடந்தாலும் இவரால் சிஸ்டத்தை ஒன்றுமே மாற்றி விட முடியாது என்பதுதான் உண்மை. அப்படி மாற்ற வேண்டுமானால் இவரது கொள்கை பொதுவுடமைக் கட்சியின் அடிப்படையில் அமைதல் வேண்டும், அமைந்திருக்க வேண்டும். உண்மையில் புதிய ஜனநாயகம் போன்ற புரட்சிகர கோவன் போன்ற பாடல் புனைவில் அமைதல் கூட அவசியமாயிருக்கலாம். ஆனால் அது போன்ற கட்சியில் இவர் சேர்வாரா? புதிய கட்சி ஆரம்பித்து குறுகிய காலத்தில் மக்கள் செல்வாக்கு பெறுவாரா? புதிய ஜனநாயகம் போன்ற கட்சிகள் , சீமான் போன்ற கட்சிகள் எல்லாம் இவரை சேர்த்தாலும் அந்தளவு மக்கள் செல்வாக்கு என்று பெறுவது? இவை எல்லாம் இவர் முன் கேள்விகள்.

காங்கிரஸ், சிதம்பரம், மாநிலத்தில் உடல் நிலை சரியில்லாதிருக்கும் காங்கிரஸ் கட்சியில் உள்ளார் போன்றோருடன் சேர்ந்து புதிய‌ கட்சி அமைத்து விடுவாரா என்ற எதிர்பார்ப்புகள் இல்லாமல் இல்லை.

எனவே இது பற்றி எல்லாம் பெரிதாக இப்போதைக்கு அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. மேலும் இந்த ஊடகஙக்ள் எல்லாம் தான் அதற்கு பட்டி மண்டபம் நடத்துவதும், நேரலை விவாதம் செய்வதும், அவரது பேட்டிகளை மேலும் மேலும் மறுபடியும் போட்டுக் காட்டுவதும்., எல்லா ஊடகங்களிலும் இந்த செய்தி இடம் பெறுவதாகவும் செய்து பெரிது படுத்தி விட்டன.

இது 2.0 வுக்கு அதன் வெற்றி பெற வேண்டும் என்ற அலைக்கு வித்திடப்பட்ட விளம்பரமாகவும் இருக்கலாம். மற்றபடி அரசியலில் இன்னும் 95 வயதிலும் தி.மு.கவின் தலைவராகவே இருக்கும்போது 66 வயதில் வரக்கூடாது அரசியலுக்கு என்றெல்லாம் எவருமே சொல்ல முடியாது.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

ஆள் பிடிக்க வாராங்கப்பா ஆள் பிடிக்க வாராக:கவிஞர் தணிகை

ஆள் பிடிக்க வாராங்கப்பா ஆள் பிடிக்க வாராக:கவிஞர் தணிகை

Image result for vadiveluமழையர் பள்ளி என்றும் தனியார் பள்ளி என்றும் வாகனத்திலும், குறைவான ஊதியத்தில் வேலைச்சுமையைக் கொடுத்து உழைப்பைச் சுரண்டும் வர்க்கம் சுரண்டப்படும் ஆசிரியர் குலத்தை வைத்து ஆள் பிடிக்க வாராங்கப்பா ஆள் பிடிக்க வாராக!

அடுத்து இவக பள்ளிப் பிள்ளைகளை வேன் ப்ரீ, ஆயா ப்ரீ, என்று வாரிக் கொண்டு போன பின்னே ஓர் பள்ளியில் ஓர் மாணவனுக்கு 3 ஆசிரியர் இருக்கோம் என அரசுப் பள்ளி ஆசிரியர்களும் பக்கத்துப் பள்ளி மாணவ மாணவியரைக் கூட்டி அணி வகுப்பு ஊர்வலம் என நடத்தி ஆள் பிடிக்க பார்ப்பாங்கப்பா ஆள் பிடிக்க பார்ப்பாக..

கல்லூரி ஆசிரியர்களை களத்தில் இறக்கி இது இருந்தால் அது, அது இருந்தால் இது என கவுன்சிலிங்கிற்கும் கூட நாங்க எங்க செலவுல கூட்டிப்போறோம் பத்திரிகை பேட்டி போட்டி என அவர்களுக்கு எல்லாம்கமிசன் வெட்டி ஆள் பிடிக்கப் பார்ப்பாங்கப்பா ஆள் பிடிக்க பார்ப்பாக...

தரம் இருந்தால் தானா வாராக எதுக்கு இவ்வளவு கஷ்டம்? என்றால் அவகளும் பிழைக்க வேண்டாமா கார், ஏசி, என அவக பிள்ளைக வெளிநாடு வேலைவாய்ப்பு நிறுவனம், விமானப் பயணம் என ஆடம்பரமாக வாழ வேண்டாமா? அதை உங்களிடம் சொல்ல முடியுமா ?

இந்த நாட்டில் கல்வி, மருத்துவம், நிலம், நீர் , கட்டடங்கள், கட்டுமானங்கள் எல்லாமே பொதுவுடமை, அரசுடைமை ஆனால் மட்டுமே எல்லாம் உருப்படும் உருவாக்கப்படும். எத்தனை ட்ரஸ்ட்கள் எத்தனை ஏமாற்றுகள்...கல்லூரிகள் பல்கலைகள், கோவில்கள், சாமிகள், மதங்கள், சாதிகள், இனங்கள்....

2020ல் கலாமின் கனவு நிறைவேற இன்னும் 3 ஆண்டு கூட இல்லை. கலாமின் கனவுக்காலம் காலமாகிவிட்டது...

சரவண பவன் போன்ற நல்ல சுவையான தரமான உணவு தயாரித்துப் பரிமாறும் விலைக்கு விற்பனை செய்யும் நிறுவனம் எல்லாம் கூட அதிகாலை முதலே மனிதரை நிறுத்தி சீருடை கொடுத்து, குடை கொடுத்து அதில் கம்பெனி பேர் எழுதி, பதாகை கையில் கொடுத்து வாங்க வாங்க என அழைத்துக் கொண்டிருக்கிறார்கள்... வழியில் செல்வோரை வாகனத்தில் வருவார் போவோரை எல்லாம்...

 பசி இருந்தால் தேவையிருந்தால் தானாக வருவார்களே. எதற்கிந்த பிச்சைக்காரத்தனம் பழநியில் பஞ்சாமிர்தம் விற்க, பூஜை சாமான் விற்க, தங்க குளிக்க எல்லாம் ஒரு கூட்டம் ஈ மாதிரி மொய்க்குமே அது போல திருப்பதியில் லட்டுக்கும், பெண்பிள்ளை பிடிக்கவும் ஒரு புரோக்கர் கூட்டமும் அலை மோதுமே அப்படி,

சமயத்தில் கூட்டத்தில் பாக்கெட் அடிப்பார்கள், கூட்டத்தில் அலைமோதி தனியாய் வந்து பார்த்தால் தான் பாக்கெட் பறிபோனதும் பைகளில் ஆடைகளில் வேட்டிகளில் பிளேடு அறுபட்ட அடையாளம் வாய் கிழிந்து ஏமாற்றிச் சிரிக்கும்.  அது போல... தேவையிருந்தால் வருவார்களே அதை விட்டு விட்டு எதற்கிந்த ஏறிவிழும் போட்டிகள் இவை யாவும் தேவைக்கல்ல...ஆடம்பர சொத்து சேர்ப்புக்கு. அத்யாவசியத் தேவைக்கல்ல...

கடை வாசலில் முயல், மிக்கி மௌஸ், கரடி பொம்மைகள் சிறு குழந்தைகளை சிரிக்க வைக்கின்றன ஆடிப் பாடி       கூலிக்கு மனிதர்கள் உள்ளிருந்து அழுது கொண்டிருக்க‌
, அதில் சிலர் தரும் Tips 10ரூபாயும் 50 ரூபாயும் டாஸ்மாக் போகிறதா? அல்லது அவர் குடும்பத்துக்கு தின்ன உணவாகப் போகிறதோ?

மனிதம் மிகவும் கேவலமாக அதன் முகத்தின் மேலே காறி உமிழ்ந்து கொண்டிருக்கிறது தங்கள் கழிவுகளை தாங்களே உட்கொண்டு..

இந்தியாவில் வேலை இல்லாத் திண்டாட்டம் மிகவும் கேவலான நிலைக்குப் போய்விட்டதை இதெல்லாம் அடையாளப்படுத்துகின்றன. எது எடுத்தாலும் ஒரு இடைத்தரகு, புரோக்கர், கமிஷன் யாவும்..இது இல்லாமல் நேரடியாக அவரவர் கவுன்சிலிங், நீட்,அவரவர் நேரடி அணுகுமுறை இந்த இடைத்தரகு புரொக்கர் கமிஷன் முறை ஒழிந்தால் தான் எதுவும் உருப்படும், உருவாக்கப்படும்.

அரசுப் பணிக்கு அததற்கு ஒரு விலை இருப்பதால் தகுதி இருப்போரும் அதற்குண்டான விலையை இலஞ்சத்தை முன் பணத்தை புரட்ட முடியாததால் தனியார் கம்பெனிக்கு குறைவான ஊதியத்துக்கு தள்ளப்பட்டு  தள்ளாடிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த இடைத்தரகு புரொக்கர் கமிஷன் முறை ஒழிந்தால் தான் எதுவும் உருப்படும், உருவாக்கப்படும்.

அதுவரை...அரசும், இந்த ஆட்டங்களும் தொடரட்டும்...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Friday, May 19, 2017

+2,10 ஆம் வகுப்பு முடிவுகளில் முதல் மாணவர்கள் என்னும் போட்டி தமிழக அரசால் நீக்கப்பட்டிருப்பது வரவேற்கத் தக்கதே: கவிஞர் தணிகை.

+2,10 ஆம் வகுப்பு முடிவுகளில் முதல் மாணவர்கள் என்னும் போட்டி தமிழக அரசால் நீக்கப்பட்டிருப்பது வரவேற்கத் தக்கதே: கவிஞர் தணிகை.அன்றாடம் ஆட்டம் கண்டு கொண்டிருக்கும் அரசு என இன்றைய தமிழக அரசு அழைக்கப்பட்டு வந்த போதும், +2, மற்றும் 10ஆம் வகுப்பு முடிவுகளின் போது முதல் இடங்களைப் பெற்ற பள்ளிகள் , மாணவர்கள் என்ற நிலையை நீக்கியதன் மூலம் மாணவர்கள் மேல் எழும் வீணான ஒரு அழுத்தத்தை இந்த அரசு குறைத்திருப்பது பாரட்டத் தக்கதே.

Image result for venki ramakrishnanRelated image

மேலும் ஆங்கிலம் என்பது அறிவல்ல ஒரு மொழி சார்ந்த அறிவே, சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் தமது தாய்மொழிக் கல்வியிலேயே உலகின் முன்னணி நாடுகளாய் வலம் வருவதிலிருந்து ஆங்கிலம் அறியாமை எந்த வகையிலும் அவர்களின் வல்லமைக்கு ஊறு விளைத்திட வில்லை என்பதையும் நினைவு படுத்தி நாமும் நல்வழிக் கல்விக் கொள்கைக்கு மாறுதல் நலம்.

இந்தியா முழுதும் ஒரே பொதுமைப்படுத்தும் கல்வி என்று ஒன்று உருவாகும்போதும் நாடு தழுவிய அளவிலான  தகுதித் தேர்வுகளின் போதும் நமது தமிழ் மாணவர்கள் முற்காலத்தில் எப்படி தமிழகத்திலிருந்து எல்லாத் தேர்வுகளிலும் பிரகாசித்தார்களோ அதே அளவு தமிழகத்து மாணவர்கள் தற்காலத்திலும் இடம் பிடிக்க நிறைய பயிற்சி படிப்புகளை மேற்கொள்ள வழி வகுக்க வேண்டும் அதற்கு சைதை துரைசாமியின் கல்விக் குழுமங்கள் போன்றவை பற்றிய அனுபவப் பகிர்வுகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.

Image result for google pichai

நல்ல தரமான கல்வி சிந்தனையாளர்களை ஒட்டு மொத்தமாக திரட்டி நல்ல கல்வியை வடிவமைக்க முற்படலாம். இந்த நாட்டில் ஆங்கில வழிக் கல்வி, தாய்மொழி வழிக் கல்வி, மெட்ரிக், சி.பி.எஸ்.ஈ என்று பலவகையில் இருக்கும் கல்வி அமைப்புகளில் எது பெரிதும் உதவுகிறதோ அதன் வழியில் நாட்டில் உள்ள மாணவர்களை நெறிப்படுத்தல் வேண்டும்

போட்டித் தேர்வுகளில் நல்ல வாய்ப்பை பெறவும், தொழில் கல்வி முறைகளில் நல்ல பயிற்சி கொடுக்கவும் முற்பட்டு பழைய மெக்காலே கல்வி முறைகளை அடிப்படை எழுத்தறிவுக்கு மட்டும் பயன்படுத்திக் கொண்டு மனிதனாகவும், சிறந்த கல்வியாளராகவும், சிறந்த தொழில் முனைவோராகவும், எது சிறந்தது எனத் தேர்ந்தெடுக்கத் தெரிந்தவராகவும்,

தனி மனிதத் திறனை மேம்படுத்த  நல்ல கல்வியை கொடுப்பதாகவும் அதற்கு அடித்தளம் அமைப்பதாகவும் நாளடைவில் படிப்படியாக கல்வி முறைகள் மாற்றம் பெறும் பட்சத்தில் மாநிலம் மட்டுமல்ல நாடே நல்ல வளம் பெறும் இல்லையெனில் ஊழல் வளம் பெறுவதன்றி மாற்றமே இல்லை

மேலும் தனியார் வாசம் தனியார் வசம் மிக அதிகம் நெடிதோங்கி வளர்ந்த படி இருக்கிறது இதை கலைஞர் ஆட்சிக் காலத்தில் கொஞ்சம் கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, ஆனால் அவர் ஆட்சியை நடக்க விடாமல் முறியடித்து என்றும் நிரந்தர முதல்வர் ஜெ வந்து சமச்சீர் கல்வியை அதன் முயற்சியை சீர் குலைத்தார்...எந்த இனம், மொழி, நாடு,சமயம் சாராமல் சார்பில்லாமல் உண்மையாக உண்மையை திரிபின்றி கல்வி கொடுத்து உலகை நம் வசம் வளைக்கும்  கல்வி கொடுக்க அரசு ஆவன செய்யட்டும் அனைவரும் ஒத்துழைபோம். 64 கிராமில் மிகக் குறைந்த எடையில் விண்கோள் செய்த தமிழகம் இன்னும் என்ன என்ன சாதனை வேண்டுமானாலும் செய்யட்டும் கூகுள்  சுந்தர்பிச்சை, ராயல் சொசைட்டி ஆப் லண்டன் வெங்கி இராமகிருஷ்ணன் ஆகியோரை இந்தக் கல்வி முறையிலும் உலக அளவிலான கலாம் போன்ற மாமனிதர்களைப் பெற்ற நாடு மேலும் சாதனைகள் புரியும் அரசியல் வழி விடட்டும்.

Image result for kalam


மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Thursday, May 18, 2017

நெஞ்சு பொறுக்குதிலையே இந்த நிலைகெட்ட மாந்தரை நினைந்து விட்டால்: கவிஞர் தணிகை

நெஞ்சு பொறுக்குதிலையே இந்த நிலைகெட்ட மாந்தரை நினைந்து விட்டால்: கவிஞர் தணிகை

Image result for how can we tolerate
புளி மூட்டை மாதிரி உடலை வளர்த்திக் கொண்டு கேட்டால் உடல் வாகு அந்த மாதிரி என்னும் சோம்பேறிகள் பொது இடங்களில் அடுத்தவர் இடத்தில் அடைத்துக் கொள்வதும்,பேருந்தில் பயணம் செய்வதும் அதனால் அடுத்தவர் நலத்துக்கு ஊறு விளைப்பதும் மனித குலக் கோட்பாடுகளுக்கே ஏற்புடையதல்ல.

ஒரு அதிகம் படிக்காதவரின் கமென்ட்: பாரு வயிற்றை இவனுக்கு எல்லாம் 2 டிக்கட் போட வேண்டும் என சத்தமாகவே சொல்லி சண்டையை விலைக்கு வாங்கிக் கொள்வார் போலிருந்தது அந்த நபர்.

வேட்டியை தொடை வரை ஏற்றிக் கட்டிக் கொண்டு அப்படியே பேருந்தில் ஏறி தமிழர் பண்பாட்டைக் காப்பாற்றுகிறேன் என பக்கத்தில் உள்ளவர் வேட்டியை அவிழ்த்து விட்டு அமருங்கள் என்றாலும், அதெல்லாம் எங்களுக்குத் தெரியும் ,என அடமாக அவிழ்த்து அமராமல் இருக்கும் நாகரீகமற்றதுகள்,

அடுத்தவர் இடம் அளித்தவுடன் , அவரை அவர் இடத்திலிருந்தே தள்ளி விடுவது போல கால்களை  விரித்தபடி அமர்ந்து கொண்டு அவர் தள்ளி விட்டதற்கு இவர் எதிர்ப்பாக கொஞ்சம் தள்ளி விட்டால்

அவருக்கே தெரியும் கொஞ்சம் ஆங்கில அறிவை பயன்படுத்தி, யூ டோன்ட் நோ ஹவ் டூ பிஹேவ் இன் பப்ளிக், தள்ளறே, சொல்ல வேண்டியதுதானே? பிலட்டி பாஸ்டார்ட், கன்ட்ரி புரூட், வயசு ஆகிறதே தவிர யூ டோன்ட் நோ ஹவ் டூ பிஹேவ் இன் பப்ளிக் ப்லேஸ் என அந்தப் பேருந்துக்கே கேட்குமளவும் அனைவரும் இவர் ஒருவர்தான் நன்கு படித்தவர், மிகவும் எளிமையாக இருக்கிறார் எவ்வளவு படித்தவராக இருந்தாலும் வேட்டி சட்டையில் இருக்கிறார் என் ஆங்கிலம் கொஞ்சம் உளறத் தெரிந்ததை வெளிக்காட்டி மிகவும் பெரிய ஆள் எனக் காட்டிக் கொள்வது... இவர் தள்ளி விட்டதுக்கு பதிலாகத் தான் அந்த மனிதர் கொஞ்சம் தள்ளினார் என்பதே மறந்து போக..இவர் மிருகமாக ஒரு பொது இடத்தில் அந்த மனிதரை முட்டாள். பொது இடத்தில் நடந்து கொள்ளத் தெரியவில்லை என்பதும், முட்டள் தேவடியா மகனே என்றெல்லாம் சொல்லலாம என்பதெல்லாம் தெரியாமல் இருப்பது...இப்படியான மனிதர் என்னும் போர்வையில் மிருகங்கள்


Image result for salem to mettur bus transports


ஜன்னலிடை இன்னும் காறி காறித் துப்புவதும் , இன்னும் வாந்தி வந்தாலும் வரட்டும் அதை சமாளிக்க முன்னேற்பாட்டுடன் வராததுகளும், அடுத்தவர் மேல் தூங்கி தூங்கி விழுகிறதுகளும்,

பேருந்தி மீறினால் ஒரு மணிப் பயணத்தில் கூட திறந்த வாயை மூடாமல் தூங்கிக் கொண்டே நடத்துனர் இடம் வந்து விட்டது இறங்கு என்றாலும் இறங்க முடியாததுகளும்

மது அரக்கன் உள் தள்ள, படிக்கட்டில் இருந்து மேல் ஏற முடியாமல் அனைவரையும் திட்டிக் கொண்டே வருவதுகளும்...

கொஞ்சம் தொலைவுக்கும் கூட இருக்கும் நகரப் பேருந்துள் ஏறாமல் பிற வழித்தடப் பேருந்தில் ஏறி அனைவரையும் தொல்லைக்குள்ளாகுவதும்,

தனியார் பேருந்தில் மட்டுமே ஏறுவோம், கூட்டம் இருக்கும் பேருந்தில் மட்டுமே ஏறுவோம் என்று பயணம் செய்யும் சிறு வயது விடலைகளும்

திருவிழா என்ற பேரில் நடைபெறும் கூட்ட நெரிசலில் நாலைந்து இளைஞராக சேர்ந்தபடி செல்பேசியை கையில் வைத்தபடி அனைவரும் பார்க்க அதிசயம் செய்வார் போல யாரும் அருகே இல்லாதது போல நகர்ந்து நகர்ந்து அனைவருக்கும் தொந்தரவாகி படம் எடுப்பது போல அடுத்தவர்க்கு தொல்லை கொடுக்கிறோம் என்ற சிந்தனையே இல்லாதது போல நடித்துக் கொண்டு தொல்லை கொடுப்பது...

கண்டதை தின்று விட்டு, கண்டதை பயன்படுத்திவிட்டு அதன் குப்பையை கண்ட இடத்தில் அப்படியே போட்டு விட்டு மிகவும் இன்பமாக இருப்பதாக காட்டிக் கொள்வது..., அயோக்யத்தன மிருகங்களே நீங்கள் எல்லாம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது, மலேசியா, சிங்கப்பூர் வளர் சிறுவர் சிறுமிகளைப் பார்த்தால் தாம் உங்களுக்கு எல்லாம் புத்தி வரப் போகிறதா என்ன? அவர்கள் தாம் உபயோகப்படுத்தியதை மட்டுமல்ல அடுத்தவர் உபயோகப்படுத்தி எறிந்ததையும் கூச்சமின்றி எடுத்து சேர்த்த வேண்டிய இடத்தில் சேர்த்தி விடுகிறார்கள்...குப்பைத் தொட்டியை சரியாக பயன்படுத்துகிறார்கள். அவர்கள் மனிதராக இருக்கிறார்கள். நீங்கள் குப்பையாகி இருக்கிறீர்கள். கேட்டால் இது இந்தியக் கலாச்சாரம் என்கிறீர்,

காவிக் கட்சி வெறி, இன வெறி, மொழி வெறி, மத வெறி என்றெல்லாம் ஏதோ சொல்லி நாசமாகி வருகிறீர், நாட்டை நாட்டு மக்களை நாசமாக்கி விடுகிறீர். எதெல்லாம் முதலில் நாம் கற்றுக் கொள்ள வேண்டும் எதெல்லாம் நாம் கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதில் முதலில் கவனம் செலுத்த வேண்டும்

மாறாக எங்கு வேண்டுமானாலும் அதென்ன பழக்கம் எச்சில் துப்பி வைப்பது, குப்பையை விட்டெறிவது...?

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் இன்னும் நிறைய....சுமார் ஓராண்டு காலத்துக்கும் மேலாக‌ பேருந்தில் போவதும் வருவதுமாக ரயிலில் வருவதுமாக காலம் ஓடிக் கொண்டிருக்க நிறைய நட்புகள், நிறைய வாழ்க்கைகள் நிறைய மனிதர்கள்...அதில் இந்த மாதிரியான அனுபவங்களும்.

இப்படியாக நிறைய மனிதர்களையும் சந்திக்க வேண்டியதாக இருக்கிறது, அடிதடி தகராறு, காவல்நிலையம் எல்லாம் தேவையில்லை என அடக்கி வாசித்து நிறைய சந்தர்ப்பங்களை, சம்பவங்களாக்காமல் அமைதியாக விட்டு விட்டு பயணம் செய்ய வேண்டியதிருக்கிறது.


Image result for routine game

சில்லறையை திட்டம் போட்டே அமுக்கப் பார்க்கும் நடத்துனர்கள், அவர்களின் உதவியாளர்கள், தினமும் அந்தப் பேருந்தில் ஏறும் 500 பேரிடம் அமுக்கினால் அந்த ஒரு நாளில் எந்த வித முயற்சியுமின்றியே வருவாய் 500 ரூ வந்து விடுகிறதே என்னும் நபர்கள்,

சில்லறை ஒரு ரூ குறைவாக இருந்தாலும் வாங்கிக் கொள்ளும் நடத்துனர்கள்...

Image result for how can we tolerate


போனிலேயே பொண்டாட்டியை பேருந்து சென்று அடையும் வரை திட்டித் தீர்த்து விடும் கணவன்கள், அழுத படியே பயணம் செய்யும் பெண்கள், மேலும் அது எப்படி எனக் கேட்டுக் கொண்டே புருஷனிடம் சண்டை போனிலேயே நடத்தியபடி ஊருக்கு புறப்பட்டு செல்லும் பெண்களும், அடுத்து ஊர் சென்று சேர்ந்ததும் என்ன ஆகியிருக்கும் தற்கொலையாய் முடிந்திருக்குமோ என நாம் பயப்படும்படியான வார்த்தைகளுடன்....

இப்படியும்... பயணம்..

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.


Sunday, May 14, 2017

எடப்பாடி அரசு தற்போது செய்ய வேண்டிய முக்கியமான 3: கவிஞர் தணிகை

எடப்பாடி அரசு தற்போது செய்ய வேண்டிய முக்கியமான 3: கவிஞர் தணிகை


Image result for take immediate action

எடப்பாடி அரசு ஜெ அரசாகவே இருக்கட்டும், தமிழக அரசாகவே இல்லாதிருக்கட்டும், வீணாகப் பிடிவாதம் பிடிக்காமல் நாம் சொல்லும் இந்த 3 காரியங்களை இப்போதைக்கு செய்தாலும் போதும், இந்தக் கோடை வெம்மையிலும் பொதுமக்களிடம் நல்ல பேர் வாங்கிக் கொள்ளலாம். ஆனால் செய்யுமா, கண் காது உணர்வு, இருதயம் உள்ள அரசுதானா? அல்லது இதுவும் இவர்கள் குற்றவாளிகள் எல்லாமே என்னும் அவப் பேருடன் கறையுடன் மட்டுமே காலம் செலுத்தத் தான் போகிறதா?

1. 700 + 500 கோடி போக்குவரத்துத் தொழிலாளருக்கு நிலுவைத் தொகையைத் தருகிறேன் என வாய்மொழியால் சொன்னால் அது என்ன அரசின் நடவடிக்கையா? இதற்கு எதற்கு ஒரு மந்திரி எந்திரி எல்லாம், அரசு ஒன்றைச் செய்யவேண்டுமானால் எப்போதுமே அது அதன் எழுத்தாணையாகவே இருக்க வேண்டும் அதில் யாருடைய ஒப்பம் இடம்பெற வேண்டுமோ அது வேண்டும், தமிழக முதல்வர் அதற்கு ஒப்புதல் தந்தபின்னே அது பேசப்பட்டிருக்கிறது என்று சொல்லுகிறீர் அப்படியே அது அமைச்சரவை ஒப்புதல் வேண்டுமானால் கூட பெறப்பட்டு உடனே ஒரு எழுத்துபூர்வமாக தர முடியாதா?

உங்க அரசே தடுமற்றத்தில் இருக்கும்போது எவர் நம்புவார் உங்கள் வாய் மொழிப்பேச்சை எல்லாம்? மேலும் விஜய்பாஸ்கர் மேல் ஏகப்பட்ட தில்லு முல்லு புகார்கள் இருக்கும்போது அவரை அவர் பேச்சை எல்லாம் ஒரு பேச்சாக தொழிற்சங்கங்கள் நம்ப முடியுமா?

ஸ்டாலின் அரசுக்கு வர வேண்டிய ஆவலில் இருக்கும் தி.மு.கவின் தொ.மு.ச முக்கியமாக இதை எல்லாம் ஏற்றுக் கொள்ளும் என எப்படி எதிர்பார்க்க முடியும்?

எத்தனை தொழிற்சங்கங்கள் எல்லாம் கட்சி பேர் சொல்லி மக்களின் நலத்தில் துளியும் அக்கறையின்றி தம்மை அவரவர் ஸ்திரப்படுத்திக் கொள்ளவே போராட்டம், ஆட்சி, அதிகாரம் என மக்களுக்கு நன்மை செய்வதற்கு மாறாக ஊறு செய்யும் அமைப்பாகவே இருப்பதை நாம் கண் கூடாகவே காணமுடிகிறது. வீட்டை விட்டு வெளியில போனா வீடு வந்து சரியான நேரத்துக்கு சேரணும் சாமி, அது கூட உத்தரவாதம் இல்லைன்னா என்ன அரசு? என்ன அரசோ? என்ன ஆட்சியோ? என்ன புடலங்காவோ.? அப்படி புடலங்கா, கத்திரிக்கா, வெங்காயம் என்றெல்லாம் இனி சொல்லவும் முடியாது அதன் விலையோ உயர உயர மேலும் உயர உச்சியில்...இவர்கள் கம்பத்துக் கொடியை உச்சியில் பறக்க விடுகிறார்களோ இல்லையோ விலைவாசியை உயரத்துக்கு ஏற்றி விட்டிருக்கிறார்கள் அப்புறம் என்ன இவர்கள் ஆட்சி, ஆளுமை, கட்சி, அதிகாரம் எல்லாம்...இவனுங்க மக்கள் பணத்தில் காரில் டிரைவர் வைத்துக் கொண்டு மக்கள் பணத்தில் எரிபொருள் நிரப்பிக் கொண்டு மினரல் வாட்டர் எடுத்துக் கொண்டு சென்று விடுவார்கள், அங்கங்கே அவ்வப்போது தடையின்றி அதிகாரத் தோரணையுடன் பதவிப் பெருமையுடன் கிடைக்கும், இங்கே நடு ரோட்டில் வீடுவந்தும் சேர முடியாமல் கையிலும் காசில்லாமலும் இருக்கும் திருவாளர் பொதுஜனத்தை எந்த ஆட்சி என்றுதான் எண்ணிப் பார்க்கப் போகிறது? சங்கங்களும்தான், அமைப்புகளும்தான்...

பா.ஜ.க எப்படியாவது தமிழக அரசியலில் காட்சியில் முன்னிலைப் படுத்தப் படவேண்டும் ஆடும் நாடகம் எல்லாம் பொதுமக்களுக்கு, மதுபானக் குடியர்களுக்கு நுனிப்புல் மேய்வாருக்கு, நாட்டின் அரசின் பால் அக்கறை இல்லா நபர்களுக்கு வேண்டுமானல் தெரியாமல் இருக்கலாம் ஆனால் அதற்காக அனைவருக்குமே அது தெரியாமல் போகுமா? அனைவருமே அதை எல்லாம் ஆதரிக்க முடியுமா?

2. மக்கள் ஆதரவு இல்லாதது மட்டுமல்ல, பெரு எதிர்ப்பே இருக்கும்போது எதுக்கய்யா இன்னும் அரசு மதுபானக் கடை? இப்போது எடுத்து விட்டால் எடப்பாடி மக்களின் குரலுக்கு செவி சாய்த்து அரசாள்கிறார் என்ற நல்ல எண்ணம் ஏற்படும், இந்த அரசின் பால் மக்களுக்கு தாய்மார்களுக்கு ஒரு மென்முகம் கிடைக்கும்.

3. நாட்டில் நிலவி வரும் குடி நீர், நீர்ப் பஞ்சத்தை எப்பாடு பட்டாவது தீர்த்து வைக்க வேண்டும்.

இந்த 3 நடவடிக்கைகளை வெற்றிகரமாக செய்து விட்டால் அதுவும் இந்த உரிய நேரத்தில் செய்து விட்டால் அது நல்ல அரசாக அடிகள் எடுத்து வைத்தாக இருக்கும். எதற்கிந்த வெற்றுப் பிடிவாதம் ஜெ போல, அவர் அரசு போல அவர் வாழ்வு அவர் முடிந்த கதை ஒரு படிப்பினையாக இருக்க வேண்டாமா அவரை முன் மாதிரியாக கொண்டால் மக்கள் எல்லாம் இவர்களை எல்லாம் மூலையில் உட்கார வைத்து விட வேண்டும்.

பின் கட்டு வழியாக நுழைய முயலும் பி.ஜே.பிக்கு மக்கள் பாடம் புகட்டுவதும் இது போன்ற ஜெவின் குற்ற பரம்பரை எச்சங்களையும் அப்புறப்படுத்த மக்கள் முயல்வார்களா? அப்படி எல்லாம் முயன்றால் ஒரு மக்களாட்சி வர வழி கிடைக்கும்.

Related image

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

Saturday, May 13, 2017

வெற்று நாய்களின் குரைப்புச் சத்தம்: கவிஞர் தணிகை

வெற்று நாய்களின் குரைப்புச் சத்தம்: கவிஞர் தணிகை

Related image


50 பைசா நாணயம் பழைய ஒரு பைசா அளவாக‌, 10 ரூ நாணயம் செல்லாததாக,500ரூ நோட்டு 100 ரூபாயை விட சிறியதாக, ஆயிரம் ரூபா நோட்டே இல்லாமல் 2000 ரூபாய் நோட்டு காந்தியைக் கழட்டி விட்டு மோடியின் ஆப்புடன்...இப்படியாக எல்லாம் ஒரு வகையாக வங்கி வாசலில் வெளிக்குப் போகாமல், சாப்பிடாமல், தண்ணீர் குடிக்க வழியின்றி காத்துக் காத்து தவம் கிடந்த காலத்தின் நீட்சியாய் இன்னும் தொடர்கிற கதைகள் நிறைய உண்டு...அதில் குடி நீர் இல்லா அவதியும் தமிழகத்தின் ஆட்சியின்மையும், நீர் இன்மையும், விவசாயிகளின் மலம் தின்னும் போராட்டமுமாக இவை எல்லாம் மோடி அரசின் பெருமையும் ஜெ நிரந்தர ஆட்சி செய்த பெருமையோ பெருமையும்...


தமிழக அரசுப் பேருந்துகள் அறிவிப்பு இன்றியே பேருந்துக் கட்டணத்தை பாயின்ட் டூ பாய்ன்ட், ஒன், டூ போர் என பேர் வைத்து அதே பேருந்தை அதிக கட்டணத்தில் ஓட்டி வருவது நீங்கள் அறிந்ததே..

அதில் ஒரு நிகழ்ந்த பதிவு:

ஓமலூரில் இருந்து மேட்டூர் ஆர் .எஸ் வர வேண்டிய கோடை நிர்பந்தம். எனக்குத் தெரியும் அந்த ஒன் டூ போர் வண்டி எக்ஸ்ப்ரஸ் கட்டணத்தில் ஓடுவது என்று, அது இசை ஊர்தி என்று வேறு பேரை முன் ஸ்டிக்கரில் முன் கண்ணாடியில் அப்பிக் கொண்டு..

அதே லங்கடா சீட்டுதான், அதே அங்கடா புங்கடா வண்டிதான். ஆனால் ஓட்டுனர் தம்பி கொஞ்சம் தாடியும் சேர 35க்குள் வயதுள்..படு ஸ்டைலாக ஓட்டினார், ஓட்டுவதே தெரியாமல், ஸ்டேரிங் பிடிக்காமலே கூட கைகளை ஒன்றன மேல் ஒன்று வைத்தபடி இருந்தாலும் வண்டி நன்றாகவே சென்றது, கால்மேல் கால் ஒரு கால் மட்டும் ஆக்ஸிலேட்டரில்... எனக்கு கிடைத்தது முன் சீட்டு. எனவே ஓட்டுனரை அவர் செயலை கவனிக்க முடிந்தது.

நான் இறங்கும் இடம் வர சிறிது தூரம் முன்பு: ஒரே வாக்குவாதம்  நான் இது எக்ஸ்பிரஸ் வண்டி என்று சொல்கிறீர் சாதாரணமாகத்தானே இருக்கிறது, எல்லா இடத்திலும் நிற்கிற வண்டிதானே, இதுக்கு எதுக்கு அதிக கட்டணம்? எப்படியும் சாதாரண கட்டணத்தை விட 5 ரூ அதிகம் அதற்கு கொடுத்தால் தான் அந்த வண்டி ஏறி வர  முடியும். இது குறித்துத் தான் ஏதோ வாக்குவாதம் நடக்கிறதோ என இருந்தேன். அது கேட்க வேண்டியதுதான் என இருந்தேன் ஆனால் அதல்ல இந்த விவாதம் வேறு: வயது முதிர்நிலைப் பயணி 10 ரூ நாணயத்தை வாங்கலைன்னா உன் பேர் அடையாளம் எல்லாம் சொல்லி எழுதிப் போட்டிருவேன் என காய்ச்சு காய்ச்சு எனக்காய்ச்சிக் கொண்டிருந்தார்.

நடத்துனரோ பணிவாக வேறு ஒன்றும் செய்வதற்கில்லை, வாங்கினால் நான் அதை தூக்கி எறிய வேண்டியதுதான், என் கைக்காசைப் போட்டுத்தான் கட்டியாக வேண்டும் என்றெல்லாம் சொல்ல ஆரம்பித்து விட்டார்,...ஆனால் அந்த பயணியோ அதெல்லாம் முடியாது இது ரிசர்வ் பாங்க் ஆர்டர் வாங்கியே ஆக வேண்டும் , சர்க்குலர் இருக்கிறது , பாருங்கள் நான் அதைச் செய்கிறேன் இதைச் செய்கிறேன் என மிரட்டியபடியே இருந்தார்

Image result for foolish india and its people


தனிமனிதரைக் குற்றம் சொல்லிப் பயனில்லை, நீங்கள் வேண்டுமானால் ரிசர்வ் வங்கிக்கு வேண்டுமானால் எழுதுங்கள், ஆனால் மக்களிடம் நடைமுறையில் இந்த 10 ரூ நாணயத்தை வாங்கும்  கொடுக்கும் புழக்கம் இல்லை. ஏன் வங்கியில் கட்டினால் கூட எண்ண முடியாது, வைக்க இடம் இல்லை என்றெல்லாம் சாக்கு போக்குச் சொல்லி தவிர்த்து விடுகிறார்கள். அரசாங்க சர்க்குலர் எல்லாம் சட்ட வடிவுக்கு நல்லா இருக்கு, ஆனால் நாக்கு வழிக்கக் கூட பயன்படாது,நீங்கள் மோடிக்கு,மாடிக்கு எழுதிக் கொள்ளுங்கள் இந்த ஆளை விட்டு விடுங்கள், இவர்கள் எல்லாம் வெறும் கருவிகள் , காய்கள் என என் தரப்பு நியாயத்தை சொல்லி விட்டு இறங்கும் இடம் அதற்குள் வந்து விட இறங்கி வந்து விட்டேன்.


Related image

என்னிடம் ஒரு டவுன் பஸ் நடத்துனர் இப்படித்தான் ஒரு 10 ரூ நாணயத்தை ஒட்ட வைத்து விட, நானும் வாங்கிக் கொண்டு கடையில் கொடுத்தால் வாங்க மறுத்து விட்டனர். நான் பணி புரியும் கல்லூரியில் கூட இப்படி வரும் நாணயத்தை வங்கியில் கட்ட எடுத்துச் சென்றால் அவர்கள் தட்டிக் கழித்து விடுகின்றனர் எனவே தலைமைக் காசாளர் தமது உதவியாளர்களிடம் மக்கள் இந்த 10 ரூ நாணயத்தைக் கொடுத்தால் ஏற்க மறுத்துவிட வேண்டும் என வாய் மொழி உத்தரவு பிறப்பித்துள்ளது எனக்குத் தெரியும்.

எங்கய்யா இருக்குது ஆட்சி, இறையாண்மை, ரகுராம் ராஜன் இந்த எழவெல்லாம் வேண்டாம் என்றுதான் ஓரங்கட்டி விட்டார், மேல் நாடு மறுபடியும் லண்டனா, பிளைட் ஏறி விட்டார்,

தண்ணீர் எங்கய்யா என்றால் அதான் டாஸ்மாக் ஒயின்கடை இருக்குதுல்ல என மக்கள் போராட்டத்திற்கும் பின்னும் எடுத்து அடித்து உடைத்த பின்னும் அவர்கள் மேல் முதல்தகவல் அறிக்கைப் போட்டு கைது பிடி வாரண்ட் பிறப்பித்து காவல்துறைக் காவலுடன் மதுக் கடை நடத்தும் அரசு தண்ணீர் கொடுக்க வக்கில்லா அரசாகி இருக்க என்னய்யா ஆட்சி, இறையாண்மை, ஆளுமை, கட்சி ... எல்லாம்....

மக்கள் மதிப்பதில்லை, மத்திய மாநில ஆட்சி விதிகளை, மாநில மத்திய அரசுகள் மதிப்பதில்லை மக்கள் கருத்துகளை...இணக்கமேயின்றி இணை கோடுகளாய் போய்க் கொண்டிருக்கின்றன மக்களது வாழ்வும் நாட்டின் ஆட்சிகளும்.

Related image

இதில் நீட் வேறு தோட்டைக் கழற்று, ஹேர்பின்னை பிடுங்கு என அதில் எல்லாம் எலக்ட்ரானிக் டிவைஸ் வைத்து செருகிக் கொண்டு தமிழகத்தில் இருந்து நிறைய பேர் தேறி விடுவார் என மத்திய அரசு நினைக்கிறதாம்... ஒரு புறம் திராவிடக் கட்சிகள் ஒழிந்தன, இனி பி.ஜே.பிதான் என பிதற்றும் தலைவர்கள், தலைமைகள் கடைசி அந்திமக் கட்டத்தில் இருக்கும் தி.மு.க கட்சியின் நிரந்தரத் தலைவர் பேசிப் பேசி ஓய்ந்து ஊழல் செய்து ஒருக் குடும்பமே ஆட்சி வகிக்க தகுதி பெற்றது என வாழ்ந்து ஓய்ந்த முதிர்ந்த‌ பழம் பேச முடியா நிலையில் அரசியலுக்கு வந்த நாளை முதலாகக் கொண்டு மணி விழா நடத்துகிறதாம் அதற்கு அழைப்பு இல்லையே என ஏங்குகிறார் தமிழிசை பி.ஜே.பியின் தன்னிகரில்லாத் தலைவி நிரந்தர முதல்வர், எனச் சொல்லி 75 நாளுக்கும் மேல் தான் என்பதறியாமல் அப்படியே மக்கிப் போன அந்தக் கட்சியின் நிரந்தரக் குற்றவாளித் தெய்வத் தலைவர் போல...

Image result for foolish india and its people


கர்ணன் வெர்ஸஸ் உச்ச நீதிமன்றம், அர்விந்த் கெஜ்ரிவால் வெர்ஸஸ் எலக்ட்ரானிக்க் ஓட்டிங் மெஷின் வித் தேர்தல் கமிஷன் , மோடியும் இந்தியும், தமிழக எடப்பாடியும் ஓபி எஸ்ஸும் இப்படி எல்லாமே நம்பிக்கை இல்லாமலேதான் போய்க் கொண்டிருக்க காலமும் ....

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

ஓ.பன்னீர் செல்வம் சேலம் வந்திருந்தாக...கவிஞர் தணிகை

ஓ.பன்னீர் செல்வம் சேலம் வந்திருந்தாக...கவிஞர் தணிகை

Image result for panneer selvam vs edappadi


எங்க மேட்டூர் எம்.எல்.ஏ வாக்கு கேக்கக் கூட புதிய தலைமுறையின் மோதும் வேட்பாளர்களும் கணிக்கும் வாக்களர்களும் நிகழ்ச்சிக்கும் கூட தேர்தல் பிரச்சாரத்தின் போது வாராத செம்மலை எம்.எல்.ஏ வந்திருந்தாக,கே.பி. முனுசாமி வந்திருந்தாக, நத்தம் விஸ்வநாதன் வந்திருந்தாக இந்நாள் முதல்வராக முடியாத 3 முறை முன்னால் முதல்வராக இருந்த ஓ.பன்னீர் செல்வம் வந்திர்ந்தாக...

சேலம் போஸ் மைதானத்தில் இவர்களுக்கும் நிறைய கூட்டம் என்று பேச்சு.
பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெ என்று எல்லாரையும் மறக்காம புகழ்ந்தாக..இருக்கும் கலைஞரின் சூழ்ச்சி கயமை பற்றி பேசினாக...எல்லாரும் இங்கு வந்திருங்க இல்லாம விளங்காத போயிராதீக, வீணாகப் போயிருவீங்க ஆனால் நாங்க ஆட்சி கலைய ஒரு நாளும் துரோகம் செய்ய மாட்டோம் என்று பேச்சு இருந்தது. ஆனால் ஊராட்சித் தேர்தல் நடைபெறுமுன் பொதுத் தேர்தல் வந்து விடும் என்று சொன்னதற்கு அந்தப் பிரிவினர் அதாங்க எடப்பாடி அணி ஏகமாக வசை மாறி பொழிவதாகவும் தூற்றினாக‌

ஒரு எம்.எல்.ஏ வோடு இருந்த எம்.ஜி.ஆர் 3 முறை ஆட்சியைக் கைப்பற்றவில்லையா அது போல எங்களிடம் இருக்கும் மக்கள் செல்வாக்கு எங்களையும் ஆட்சியை பிடிக்க வைக்கும். வெறும்27 இலட்சம் இருந்த தொண்டரை ஒன்னரை கோடி அம்மா ஆக்கி விட்டாக என்றும் சொன்னாங்க..

எப்படியோ ஸ்டாலினை வர விடக்கூடாமல் பன்னீர் செய்து விடுவாரோ என்ற பேச்சும் அடிபடுகிறது.

ஜெ தெய்வம்: 10,500 சேலை,750 ஜோடி செருப்பு, 500 வைன் கிளாஸ், 2 கோடி பெறுமான வைரம்,1250 கிலோ சில்வர், சுமார் 22 கிலோ தங்கம் இதை எல்லாம் யாரும் அனுபவக்காமல் அதல்லாமல் 103 பல் நூற்றுக்கணக்கான கோடி சொத்துக்கள் ஒவ்வொன்றும். பாழாப் போக சொத்து சேர்த்த கட்சியின் சூப்பர் தலைவி, நிரந்தர முதல்வர்...தெய்வமாம்

சசி: லெஸ்பியன் தோழி என்று விமர்சிக்கப்படும் அவருக்குத் துணை போன குடும்பம் இன்று தண்டனையில் ஆனால் இறந்த மனிதர்கள் புனிதர்களாகிவிடுவதால் ஜெ தெய்வம்தான்.

எம்.ஜி.ஆர்: புனிதர்

கலைஞர் : குடும்பம் காக்க வந்த தலைவர், சிறுபான்மையினர்க்கு நாயகர்

ஆட்சிபுரிவோர் அயோக்யர் என்ற பெரியார் இவர்களின் முதல் தலைவராம்...

இரண்டாண்டுகள் கூட நிறையாமல் காலமான அறிஞர் அண்ணா கூட இவர்களுக்கு அவ்வளவு தேவையில்லை ஏன் எனில் ஆரம்பித்து வைத்தார் அவ்வளவுதானே இந்தக் கட்சியில் பதவிக்கு வரமுடியாததால் ஓ.பி.எஸ் நியாயம் பேசுகிறார், நீதி சொல்கிறார், சட்டம் பேசுகிறார் சேகர் குப்தாவின் ஆப்த நண்பர்....

எல்லாருக்குமே கூட்டம் கூடுது, ஓ.பி.எஸ் நினைச்சா ஸ்டாலினுக்கு வேர்க்குது

இவங்க எல்லாம் தெய்வம்னா, காமராஜ், கக்கன், ஜீவா, அண்ணா இவங்க எல்லாம் யாரு, பொழைக்கத் தெரியாத ஆட்சியாளர்களா? தலைவர்களா?

மக்களுக்கு இவர்கள் பின்னால் செல்ல கூசவில்லை?
நமக்கு இதைப் பேசவும் கூசுகிறது....

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

Thursday, May 11, 2017

இந்தியாவின் வேலை இல்லாத் திண்டாட்டமும் விலைவாசி ஏற்றமும்: கவிஞர் தணிகை

இந்தியாவின் வேலை இல்லாத் திண்டாட்டமும் விலைவாசி ஏற்றமும்: கவிஞர் தணிகை.
Image result for unemployment problem and price rise problems in india and Tamil Naduமத்தியில் மோடி, தமிழகத்தில் எடப்பாடி,ஓடி ஓடி ஆடி ஆடி ஆட்சி செய்கிறார்கள் ஐ மீன் ஆட்சி செய்வதாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு கிலோ சின்ன வெங்காயம் 90 ரூபாயிலிருந்து 120 ஆகிவிட வாங்கும் மாத சம்பளமோ தனியார் பள்ளிகளில் மெத்தப் படித்த பட்டதாரி ஆசிரியர்களுக்கே கூட மாதம் இரண்டாயிரம் என்றிருக்கிறது.

அட, அது அவங்க போக்கு வரத்துக்கே கூட போதாதே அய்யா என்றால் வேண்டும் என்றால் வரட்டும் இல்லை என்றால் படித்த நிறைய பேர் இருக்கிறார்கள், கிடைக்கிறார்கள் என்பது பதிலாக இருக்கிறது.

கேரளாவில் எல்லாம் படித்த மாநிலம் என்பதால் 90 சதவீதத்துக்கும் அதிகம் மதிப்பெண் பெற்றால் மட்டுமே எங்கும் இடம் கிடைக்கும். வேலையும் கிடைக்கும். படிப்பும் படிக்க முடியும்.அது போலவே தமிழகமும் வரும் நாள் வெகு தொலைவில் இல்லை. எப்படி கேரளத்து ஆண்களும் பெண்களும் எல்லா வேலைக்கும் நாடெங்கும் பரவி உலகெங்கும் விரவி கிடக்கிறார்களோ அதன் அடுத்த நிலையில் தமிழர்களும் வந்து விட்டனர், தமிழகமும் வந்து விட்டது.


Related image

தமிழகத்திற்கு என்ன கேடு காலமோ குடி நீருக்கும் பஞ்சம், நீர் வளமே அறவே இல்லை, விவசாயம் பூஜ்யமாகிவிட்ட சூழ்நிலையில் எந்தக் காய்கறியை எடுத்தாலும் கால் கிலோ 20 ரூபா என்கிறார்கள். காய்கறி வாங்கி உண்ணாவிட்டால் பலனில்லை, வெறும் அரிசி உணவைச் சாப்பிட்டு சர்க்கரை  நோயை அனுமதிக்காதீர்கள் என சுகாதாரம் சொல்கிறது.

தேங்காய் விலை 20 ஆகிவிட்டது, எல்லா தென்னைகளும் நீரின்றி கருகி விட்டன இந்த நிலையில் படித்த பிள்ளைகளுக்கு வேலை கிடைப்பதில்லை கிடைத்தாலும் சம்பளம் போதுமான அளவு இல்லை.

மாதம் முழுதும் உழைக்கும் உழைப்பாளிகளுக்கு மாதம் ஒன்றுக்கு பதினைந்தாயிரம் கூட ஊதியம் இல்லை என்றால் அவரும் அவர் குடும்பமும் எப்படி வாழ முடியும்?

ஆனால் கார்பென்டர், எலக்ட்ரீஷியன், பிலம்பர், கட்டுமான வேலைகளில் பல்வேறுபட்ட பணிகளைச் செய்வோர் அனைவருக்கும் ஏகப்பட்ட டிமான்ட். ஏகப்பட்ட ஊதியம் வாங்கி டாஸ்மாக்கில் கொடுத்து உடலைக் கெடுத்து உலகைக் கெடுத்துச் செல்ல... விவசாயம் செய்ய ஆள் இல்லா நிலை. நாட்டின் முதுகெலும்புத் தொழில் இன்று கூன் விழுந்து விவசாயி மூத்திரம் குடித்து, நிர்வாணமாக மலம் தின்று அவமானப்பட்டும் டில்லி அரசிடம் ஏதும் சாதிக்க முடியா அவலம்.

நேற்று முளைத்து  மூன்று இலை விடாத இரண்டு விடலைப் பயல்கள் மோட்டார் சைக்கிளில் இரவு 8 மணி சுமாருக்கு சித்ராபௌர்ணமி நிலவொளி நடைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த என்னிடம் மிக முக்கியமாக விசாரிக்கின்றனர். டாஸ்மாக் மதுபானக் கடை எங்கே என்று? நாட்டுக்கு மிக அவசீயம் பாருங்கள்....

மக்களின் எதிர்ப்பை சட்டை செய்யாமல் கடையை அடித்து உடைத்தாலும் மறுபடியும் அதே இடத்தில் காவல் துறைத் துணையுடன் அங்கேயே மதுபான அரசுக் கடையான டாஸ்மாக் வந்து விடுகிறது. அரசின் கொள்கை அப்படி.  ஆனால் குடி நீரைக் கொடுக்க துப்பில்லை.

என்னைக்கு நாட்டில் குடி நீரை பாட்டிலில் அடைத்து ஒரு சந்தைப்பொருளாக விற்பனைக்கு கொண்டு வந்தார்களோ, அதை அரசு அனுமதித்ததோ அப்போதிருந்தே நாட்டுக்கு இந்த இந்திய எழவு எடுத்த நாட்டுக்கு ஏழரைச் சனி பிடித்து விட்டது. சனீஸ்வரன் கூட இப்படி திட்டுவது பற்றி தம் பேரை உபயோகிக்கிறார்கள் என கோபித்துக் கொள்வார். இருந்தால்.

Image result for unemployment problem and price rise problems in india and Tamil Nadu
படித்த பிள்ளைகள் வெளி நாட்டுக்கு சென்றால் பணம் பார்க்கலாம். இல்லாவிட்டால் இங்கே செத்த பிணமாகிவிட வேண்டிய நிர்பந்தங்கள் வேலை இல்லாத் திண்டாட்டமாகவும், பெருகி வரும் மக்கள் நெருக்கமாகவும், விலைவாசி ஏற்றமாகவும்.. இந்த காலத்தை பதிவு செய்ய வேண்டிய அவசியம் இங்கு நேர்ந்திருக்கிறது.


பேயாய், பிசாசாய், அரக்கனாய் தலைவிரித்தாடும் பிரச்சனை இது இதைக் கண்டு கொள்ளாமல் குஜராத்துக்கு ஒருமாதிரி தமிழகத்துக்கு வேறு மாதிரியாகவும் நீட் தேர்வை நடத்தி இந்த மாநில மாணவர்கள் தலையில் மிளகாய் அரைத்திருக்கிறதாம் இந்த மோடி மஸ்தான் அரசு.


 மனுசனை மனுசன் சாப்பிடாறான்டா தம்பிப் பயலே, நிலை மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ப கவலை...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Wednesday, May 10, 2017

சித்ரா பௌர்ணமியும் புத்த பூர்ணிமாவும்: கவிஞர் தணிகை

சித்ரா பௌர்ணமியும் புத்த பூர்ணிமாவும்: கவிஞர் தணிகை

Image result for family of buddha


புத்தர் அவதரித்தாலும் சித்தர் சொன்னாலும் இந்த உலகு உய்யாது.சித்தர்களும் யோகிகளும் சிந்தனையில் ஞானியரும் புத்தரும் ஏசுவும் உத்தமராம் காந்தியும் எத்தனையோ உண்மைகளை எழுதி எழுதி வைச்சாஙக எல்லாந்தான் படிச்சீங்க என்ன பண்ணிக் கிழிச்சீங்க என்ற பட்டுக் கோட்டை பாதியிலே போய்விட்டார்.

,புத்தர் மனவி யசோதரா மகன் இராகுலன் எல்லாமே புத்தம் சரணம் கச்சாமி சங்கம் சரணம் கச்சாமி தம்மம் சரணம் கச்சாமி என பௌத்த சங்கத்தில் சேர்ந்து கொள்ளச் சொல்லி யசோதரையின் நச்சரிப்பு கேள்வியான‌ மகனுக்கு என்ன சொல்லப் போகிறீர் என்ற கேள்விக்கு பதிலாக சொல்லி சேர்த்து கொள்ள தம் சீடர்களுக்கு கட்டளையிட்டார்.அவர்களும் தங்களை இணைத்துக் கொண்டனர்

புத்தர் பிறந்த நாளாம் இந்த நாளுக்கு மத்திய அரசு விடுமுறையாம். எல்லாவற்றையும் தனியாருக்கு தாரை வார்த்து கொடுத்து விட்டு இன்னும் மூடாமல் சேலம் ஸ்டீல் பிளாண்ட் போல இன்னும் இருக்கும் பி.எஸ்.என்.எல் அதாங்க பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் மற்றும் தபால் துறை எல்லாவற்றுக்கும் விடுமுறையாம்.

டேய் புத்தருக்கும் உங்களுக்கும் என்னடா தொடர்பிருக்கு? எதுக்கடா மத்திய அரசு லீவு விடுறீங்க? ஊரோடு ஒத்து வாழ் என்பதற்கேற்ப உள்ளூரில் உள்ள பண்டிகைக்க்கு லீவு விட்டாலாவது அவர்களுக்கு ஆவும்...மனித குலம் யாவுமே  திருந்தினால் உலகு யாவும் உய்யும் என்ற சிந்தனையை உலகுக்கு கொடுத்த மனிதர் புத்தர். அதற்கு அடிப்படை ஆசைதான். என்றவர் இறை வணக்கத்தைப் பற்றி எல்லாம் பேசவே இல்லை. ஒவ்வொருவரின் செயல்கள் அவரின் வாழ்வில் எதிர் விளைவுகளைத் தரும் என்று மட்டுமே சொல்லியவர். அவரை கடவுள் என்றாக்கி அதற்கு ஒரு மதமும் கற்பித்துக் கொண்டு விட்டார்கள்.

அதிலும் பிரிவினைகள்.

எல்லாரையுமே துறவி ஆகச் சொன்ன மதம் என்பதால் அது தாய்லாந்து சீனா, ஜப்பான், இன்னும் கிழக்கத்திய ஆசிய நாடுகளுடன் தற்போது சுருங்கிப் போனது. இந்தியாவில் கொடி கட்டிப் பறந்த மதம் ஆனால் இந்து மதம் என்ற தாய் மதம் நாளடைவில் இந்த மதத்தையும் உள்வாங்கிக் கொண்டது.


Image result for kajuroka statuesRelated image


புத்த பிட்சுகளுக்கு தர்மமாய் உணவு கொடுக்க சம்சாரி வேண்டுமே, எனவேதான் உடல் உறவுச் சிற்பங்களை, பாலியல் தெறிக்கும் சிற்பங்களை இந்தியாவை ஆண்ட வேற்று மதத்து மன்னர்கள் முக்கியமாக கோவில்களில் செதுக்கி வைத்தார்கள்.விட்டால் எலலாரையும் புத்த பிட்சு ஆக்கிவிட்டால் படைவீரர், ஏவல் புரிவோர், விவசாயிகள், சேவை தொழில் புரிவோர் எவருமே இருக்க மாட்டாமல் போய்விடுவாரோ என்று பயந்து அந்த மதத்தை ஒளித்து விட்டார்கள், ஒழித்தும் விட்டார்கள்.

எல்லாம் கையில் ஒரு சிவப்பு, மஞ்சள் என‌ கயிறு கட்டிக் கொண்டு ஆடு மாடு பலி இட்டுக் கொண்டு நரமாமிசம் தின்னும் கூட்டமாய்  கெடா மாதிரி மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும்போது எங்கிருந்து புத்தரது தத்துவம் விளங்கும். அது சற்று நுட்பமான அறிவுக்கு மட்டுமே எட்டும். இந்த நாய்களின் வாலை நிமிர்த்தவே முடியாது. காலம் செல்லச் செல்ல மனித அவலங்களும், ஆள்வோரின் அக்கிரமங்களும், அதற்கு துணை போவோரின், துணை நிற்போரின், பணச் சிகரங்களின் மேல் ஏறி நிற்போரின் எகத்தாளங்களும் அளவிட முடியாமல் போகும்போது இராமலிங்க வள்ளல் . புத்தர், மகாவீர்ர் (இந்த மகாவீரர் பாஹுபலி எமது சினிமா பாஹுபலியால் தோற்கடிக்கப்பட்டு விட்டார்) 63 நாயன்மார்கள் , சித்தர்கள், யோகிகள், தவ சீலர்கள், ஞானிகள் எல்லாம் எம்மாத்திரம்...அரக்கர் கூட்டத்தின் ஆட்டமாய் ஆட்டம் நீக்கமற நிறைந்து விட்டது. எனவே பஞ்ச பூதங்களும் கூட முடங்கி விட்டன. முடக்கப் பட்டன.

எல்லா கஷ்டமும், எல்லா நஷ்டமும், எல்லா துன்பமும், எல்லாத் தவமும் அனுபவித்து முடித்துவிட்டு இவை எல்லாம் இல்லாமலே தவ வாழ்க்கை வாழ முடியும் இவ்வளவு கஷ்டமும் துன்பமும் அனுபவிக்கத் தேவையில்லை என்று கடைசியில் புத்தரான பின் அவரே சொல்லியதாகவும் உண்டு.

நடக்க முடிந்தளவு நடந்து விட்டு பிறகு இவ்வளவு தூரம் எல்லாம் நடந்திருக்கத் தேவையில்லை என்று சொல்வது போல...ஆனால் பட்ட அனுபவமே சித்தார்த்தனை புத்தனாக்கியது.

சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோ அடிகளால் எப்படி தமது விதியை மதி கொண்டும் மாற்றிவிட முடியவில்லையோ அது போலத் தானிந்த சித்தார்த்த கௌதம புத்தரும். அதன் பின் இவருடைய வாழ்வு பற்றி நிறைய முரண்பாடு சொல்லும் இலக்கியச் சரித்திரக் குறிப்புகளும் உண்டு.நள்ளிரவில் எழுந்து சென்று ஞானம் தேடச் சென்றதாகச் சொல்கின்றனரே அதைத்தவிர அவருக்கு வேறு வழியில்லை அப்படிப்பட்ட எதிர்ப்புகளிடையே அவர் வாழ்வு இருந்தது என்றெல்லாம் கூட முரண்பட்ட குறிப்புகளும் உண்டு.ஆனால் வள்ளுவரை யாரும் பார்த்ததில்லை போலவே அவர் வாழ்ந்து வருவது போலவே புத்தர் வாழ்க்கை வரலாறும் கதையாக சிறுவயதில் படித்தது அவ்வளவுதான் அதை நம்ப வேண்டியதாகிறது. அதன் மேல் எழுப்பப் பட்டிருக்கும் அத்தனி கட்டடங்கள், எண்ணக் கோணங்கள் யாவற்றையும் சேர்த்து.. ஆனால் இதற்கெல்லாம் எல்லாவற்றுக்குமே ஆதாரங்கள் தேடினால் கிடைக்காது. அமிர்தானந்த மயி மாதாவுக்கும், பாபா இராம்தேவுக்கும் இசட் பிரிவு பாதுகாப்பு இந்திய அரசு கொடுத்திருப்பது போல அந்த நாட்களில் இந்த மகான்களுக்கு எல்லாம் இல்லை, ஏன் எனில் இவர்கள் எல்லாவற்றையும் துறந்தார்கள் உலகுய்ய ஏதாவது மார்க்கம் தேடினார்கள். அசோகர் கூட அதைப் பின்பற்றி வாழ்ந்தார், இராஜ இராஜன் காலத்தில் கூட இந்த மதத்தினர் மக்களுக்கு சேவையாற்றியதாக செய்திகளும் உண்டு. அதை பொன்னியின் செல்வன் கல்கி கதையிலும் காணலாம்.

அந்த சாலை எங்கும் இருமருங்கும் நட்ட மரங்கள் , தேசியக் கொடியில் தேசிய சக்கரத்தில், கிணறுகள், நீர் நிலைகள் நாட்டியவை எல்லாம் உண்டு இந்திய அரசுக்கு வழிகாட்ட ஆனால் இவர்கள் குஜராத்தில் ஒரு நீட் என்பார்கள், மேற்கு வங்கத்துக்கும், கேரளாவுக்கும், தமிழ் நாட்டுக்கும் வேறு வகையான நீட் என்று தேசியம் பேசுவார்கள். தமிழகம் தண்ணீருக்காக அலையும் ஆட்சியற்ற கதியற்ற நாடேறிகளால்...ஆம். இந்தியா ஒருவகையில் புத்த மதத்தை பின் பற்றும் நாடு எனவேதான் புத்த பூர்ணிமாவுக்கு விடுமுறை என்பார்கள்...

மொத்தத்தில் புத்தர் சொன்ன கருத்தே அறிவியல் கருத்தாகவும்: ஆற்றல் மாறாக் கோட்பாட்டில் : ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது, அது ஒரு வகையில் மறையுமாயின் பிறிதொரு வகையில் வெளித் தோன்றும் சொல்வது போல மனிதம் ஐம்பெரும் பூதங்களுள் அடக்கம் அவை அறிவீயல் கூற்றும் கூட. எனவே இந்த அறிவியல் கூற்றிலிருந்தும் புத்தரது வார்த்தையிலிருந்தும் முரண்பட்ட வாழ்வு வாழும் மனிதம் ஏமாற்றங்களை சந்திக்கும்

ஸ்டீபன் ஹாங்கிங் சொல்வது போல பூமி இனி வாழ இலாயக்கற்ற கிரகம் எனச் சொல்லி மனித குலம் பயந்து வெளியேறி வேறு கிரக வாழ்வை மேற்கொண்டாலும் இந்த தத்துவத்திலிருந்து தப்ப முடியாது.

ஆசையே அழிவுக்கு காரணம்.


மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.


Sunday, May 7, 2017

தமிழக அரசியலைப் பற்றி என்னதான் எழுதுவது? கவிஞர் தணிகை

தமிழக அரசியலைப் பற்றி என்னதான் எழுதுவது? கவிஞர் தணிகை

Image result for water scarcity in tamilnadu

10 சொம்பு நீரைக் கணக்கிட்டு எடுத்து ஒரு கல் மேல் நின்று 7 சொம்பு நீரால் மொண்டு குளித்து மீதம் 3 சொம்பு நீரை சேமித்தேன். அந்த குளித்த‌ 7 சொம்பு நீரும் கூட மறு சுழற்சி முறையில் செடிகளுக்கு சென்று சேரும்படிதான் குளித்தேன். இத்தனைக்கும் நான் காவிரிக்கரையில் பிறந்தவன், வாழ்ந்து வருபவன், மேட்டூர் அணை தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்குமே நீர் கொடுக்கும் தாய் மடி.... இங்கேயே இப்படி என்றால் எப்படி எல்லா இடங்களிலும் இருக்கும் பார்த்துக் கொள்ளுங்கள்? இவர்கள் ஆண்டதன் மகிமை இதுதான் கடந்த 70 ஆண்டுகளில் நடந்த வன் கொடுமையை இன்று அறுவடை செய்கிறது மானிடம்.

அடக் கொலை பாதகர்களா, கொடும்பாவிகளா, தமிழகத்திற்கு இப்படியுமா ஒரு கொடுங் கோடையும் பெரும் தண்ணீர்ப் பஞ்சமும் கொடுப்பீர்கள்? அரசியலைப்பற்றி எழுத வேண்டுமா? என்ன எழுதுவது? அவனவன் பாகுபலிபற்றி எழுதி அந்த ஒரு குடும்பத்துக்கே ஆயிரக்கணக்கான கோடி சேரவேண்டி ஆர்வமாயிருக்கிறான். அவனாவது பரவாயில்லை முதலைப் போட்டான், அறிவைப் பயன்படுத்தி உழைத்து மக்களின் சினிமா மாயையை பயன்படுத்தி இலாபம் எடுக்கிறான்.

அதே சினிமா மாயையை வைத்து அரசியலுக்கு வந்து முதலிடாமலேயே கொள்ளையடித்து கொள்ளையடித்து வெள்ளாமையை நாசம் செய்து விட்டீர்களே உங்களைப் பற்றி என்ன எழுதுவது,? ஏன்டா எடுத்த  அதே இடத்தில் மதுக்கடையை திறக்கத் தெரிந்த அரசுக்கு அதே போலீஸ்காரர்களை வைத்து குடிக்க நீரில்லாதார்க்கு கொஞ்சம் குடி நீர் எடுத்துக் கொடுக்க செய்வதுதானே?


Image result for water scarcity in tamilnadu

காவிரியை  ஜீவ நதியை  பொன்னி நதியை அகத்தியர் அவள் கர்வம் கொண்டதால் கமண்டலத்தில் அடக்கி வைக்க விநாயகர் வந்து காக்கை ரூபத்தில் தட்டி விட்டு ஜீவ நதியாக்கிய கதை எங்கே அய்யா போவது? இந்த பொன்னி நதி ஜீவனற்றுப் போய்விட்டது.... காவிரி கரை புரண்டு ஓடுவாள் என்ற மெய்க்கூற்று பொய்க் கூற்றாக போயிற்று.

எல்லாம் மனித அரக்கத் தனம். கெமிகல் மாயம், ஒரு புறம் தனியாருக்கு நீரை விற்று விட்டு தீர்ந்த பின்னே எந்தக் கம்பெனியும் இனி தொழிற்சாலைக்கு நீர் எடுக்கக் கூடாது என்ற மாய்மாலம். இன்னும் சேலம் இரும்பாலைக்கு நீர் சென்றபடிதான் இருக்கிறது அதற்குள் இருக்கும் வட நாட்டு வசதியான வேலைக்காரர் எல்லாம் வசதியாக நீரை அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் இங்கிருக்கும் கையருகே இருக்கும் அணையை தாய் மடியாய் எண்ணிக் கொண்டிருக்கும் மேட்டூர்க்காரர்களுக்கே
நீர்ப் பஞ்சம் , கோடையின் கொடுமை சொல்லில் வர இயலா அளவு.

கால்நடைகள் செத்து விழாமல் இருக்க வேண்டுமானால் காசுக்கு டேங்கரில் குடிநீர் வாங்கி அதைப் பிழைக்க வைக்க வேண்டிய நிர்பந்தம்.

இந்நிலையில் பன்னீர் கொப்புளித்தா பன்னீர், எடப்பாடி வந்தா கூட்டம் வேண்டும், ஸ்டாலினை முதல்வராக விட மாட்டோம், இளவரசன் என்றும் இளவரசந்தான் மன்னனாக முடியாது, உதய நிதி ஸ்டாலின் அரசியலில் இறங்குகிறார், நக்மா பேரறிக்கை, ட்ராபிக் இராமசாமி அரசியல் மாற்றம் வேண்டி கோரிக்கை  இப்படியாக போய்க் கொண்டே இருக்கும் எமது தமிழக அரசியலில் இனி தி.மு.கவும். அ.இ.அ.தி.மு.கவுக்கும் வழியில்லையாம், பொன் இராதாகிருஷ்ணன் பா.ஜ.பார்ட்டிக்குத்தான் இனி தமிழகமாம் சொல்லி வாய் மூடும் முன் ஒரு செருப்பு அவருக்கு வீசப்பட்டு, அதுவும் அரசியல் சதிதான் எனப் பேசுகிறார், எனக்கென்ன வேறு வேலை இல்லையா என்கிறார் குமரி அனந்தனின் செல்வக் குமரி தமிழிசை. அவர் மதுக்கடைக்கு எதிராக புது விழிப்புணர்வூட்ட நடைப்பயணம் செல்கிறார், தம்பி வசந்த் அன் கோ தமிழகத்தில் வியாபார மறுமலர்ச்சிக்கு வித்திடுகிறார், ஸ்டாலின் வாரிசு நயன் தாரா, கனிஷ்கா போன்ற இளங் குமரிகளுடன்  படம் எடுத்து ஓய்வில் அப்பாவுக்கு துணை நிற்க சூளுரை செய்கிறார்.
Related image


என்னைக்குத் தான்டா தமிழகம் திருந்தப் போவுது? ஒரு நண்பர் சொல்கிறார் கம்யுனிசத்தில் தான் சக மனிதரை தோழர், தலைவரை கூட காம்ரேட் என்னும் பழக்கம் எல்லாம், வேறு எந்தக் கட்சியிலும் தலைவன், தொண்டன் இராஜா மந்திரிதான், இப்படி நாறி நாசமாகப் போய்க் கொண்டே.................. இருப்பதால் தாம் இதை எல்லாம் இப்போது எழுதுவதே இல்லை. எழுதி மட்டும் என்ன ஆகிவிடப் போகிறது என்கிறீரா? அதுவும் சரிதான்.

எனவே தான் சேவை, தொண்டு, நம்மால் முடிந்த பணி என சிறிய அளவிலாவது நம்மால் என்ன முடிகிறதோ அவ்வளவோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என நினைத்து சாதனையாளர் எல்லாம் ஒதுங்கிக் கொள்கிறார்கள்.

நிர்ப்யாவுக்கு 4 பேர் மரண தண்டனை, அவளின் பெற்றோர் அன்றுதான் நன்றாக தூங்கினார்களாம், இங்கு தமிழகத்தில் எதையும் கேட்க நாதி இல்லை. வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்று அப்போதே அறிஞர் அண்ணா போன்றோர் அறைகூவினர், ஆனால் அதிலும் தமிழகத்தில் யாவரும் தண்ணீர் இன்றி செத்து சுண்ணாம்பானால் கூட இந்த மோடி அரசும், இந்த  ஜெ அரசும் எதையும் செய்யப் போவதில்லை போலிருக்கிறது.

எடப்பாடி தூர் வாருகிறேன் என வார்த்தை விட்டிருக்கிறார். பார்க்கலாம் எப்படி இந்த குடி நீர்த் தேவையை எல்லாம் இவர்கள் சமாளிக்கப் போகிறார்கள் என்று? மகமாயி,மாரி, மனசு வைச்சா, மழை பொழிந்தா உண்டு என எங்கெங்கும் மாரியம்மன் திருவிழாக்கள் நடந்து விட்டன.அப்போதும் அக்னி நட்சத்திரக் காய்ச்சல் சொல்ல மாளவில்லை


Image result for water scarcity in tamilnadu

பூமியில் நிலத்தடி நீர் இல்லை , நீர் நிலைகளில் நீர் இல்லை. பூமியில் குடி நீர் நிலைகளில் இருந்தால் தானே ஆவியாகி குளிர்ந்த காற்று பட்டு மழையாக பொழியும் ஆனால் எல்லாம் வறண்ட பின்னே எப்படி எந்த நீர் ஆவியாகும்? எந்த குளிர்ந்த காற்று படும்,? மழை வரும்? நீர் நிலை வரும்...இந்த  நீரின் சுழற்சியே கத்தரிக்கப்பட்டு விட்டது.

Related image

மழை இனி புயல் மழையாக கடலில் இருந்து வாரிக் கொடுத்தால் தான் அல்லது பருவக் காற்று என எங்கிருந்தாவது எடுத்து வந்தால் தான்...

அதற்கும் இயற்கைக்கும் பெரும் தொடர்பு, அது மனிதரை அரசை நாட்டை மீறியது
Related image
இந்த சிறுமைக் குணம் படைத்தவர் மாறமாட்டார் தேறமாட்டார், இதைப் பற்றி எழுதுவதும் பேசுவதும் கால விரயம். அடுத்தவரையும் மேல் ஏறி ஆள விடமாட்டார், அப்படி மக்களும் மக்களாய் இருந்து வாக்களிக்க மாட்டார், அதை எந்த அரசு நிறுவனமும் பரிசீலிக்காது ...எப்படியோ நாடும் மக்களும் நாசமாகப் போகட்டும் போ....வீரப்பா....மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.