Wednesday, August 30, 2017

ரெயில்வே நிர்வாகத்தின் அலட்சியம்: கவிஞர் தணிகை

ரெயில்வே நிர்வாகத்தின் அலட்சியம்: கவிஞர் தணிகை


Related image

நேற்று மாலை 5. 43 மணிக்குத்தான் எமது மேட்டூர் பயணிகள் ரயில் புறப்பட்டது காரணம் வழக்கம் போல கோவை சூப்பர் பாஸ்ட் ட்ரெயின் அதே நேரத்தில் குறுக்கிட்டதல்ல...கார்ட் அப்போதுதான் வேகமாக ஓடி வந்து எல் வி எனப்படும் லாஸ்ட் வெயிக்கிள் போர்டை மாட்ட இன்னொருவரின் உதவியை நாடி, அதன் பின் ஓடி புறப்படலாம் என சிக்னல் கொடுத்தது.

இந்த மனிதர் ஒருவருக்காக ஒரு மத்திய ரெயில்வே பணியும் முழு ரயிலும் அதில் இருந்த அத்தனை பயணிகளும் காத்திருக்க வேண்டி வந்தது இந்த மனிதர் வந்து இவரது பணியை சுமார் 5 மணிக்குள்ளாகவே செய்து முடித்து தயாராக வேண்டியது அது மட்டுமல்லாமல் இவர் வரவில்லை வர முடியவில்லை எனில் ரயில்வே நிர்வாகம் மாற்று ஏற்பாடு செய்திருக்க வேண்டியது ...இது எல்லாம் இல்லாமல் இன்னும் கற்கால முறைகளிலியே இந்த கார்ட் வரவேண்டும் அவர் வந்தபிறகுதான் சொல்லிய பிறகுதான் ரயிலை  புறப்படச் செய்ய வேண்டும் என்பதெல்லாம்...

சரி அதை விட்டு விடலாம், வழக்கமாக மாற்றி மாற்றி 2 ரயில்கள் மேட்டூர் ரயிலுக்கு விடப்படும் அதில் ஒரு ரயிலில் கடைசிப் பெட்டி எண் 11602 என நினைக்கிறேன் அல்லது 11604 ஆகவும் இருக்கலாம். அதில் |ஸ்விட்ச் பாக்ஸ் எல்லாம் திறந்த நிலையில் அதன் கதவுகள் மூடாமல் திறந்தபடியே இருக்க அதைப்பற்றி பலரிடமும் பேசிப் பார்த்து விட்டு தொடர்புடைய ரெயில்வேத் துறையினரிடம் தாம்.

அதன் பின் ஒரு கல்லூரி மாணவரை விட்டு , நிலைய பணி இட மேலாளரை அணுகி இந்த மேட்டூர் ரயிலில் நிலை கடைசிப் பெட்டியில் மிக்க அச்சமூட்டுவதாய் இருக்கிறது என்பதை தெரியப்படுத்தினால் அவரும் உடனே இரண்டு பேரை அனுப்பினார். அவர் வட நாட்டுக்காரராக இருந்தபோதும் துரித நடவடிக்கை எடுத்தார் போனிலேயே கூப்பிட்டுச் சொல்லி இரண்டு ஊழியர்கள் வந்து அதெல்லாம் ஒன்றுமில்லை ஈரோடு லோக்கோ ஸ்டேஷன் போனால் எடுத்துச் செய்தால் மட்டுமே சரி செய்து தர முடியும் என்று சொல்லி விட்டு போய் விட்டனர். ரயில் புறப்பட ஆரம்பித்தால் போதும் அந்த கதவுகளும் அதை ஒட்டி இருக்கிற ரயில் வாயில் கதவும் அடித்து யார் இருந்தாலும் கூட எச்சரிக்கை இல்லாவிட்டால் கீழே தள்ளி விட்டு விடும்.

இந்திய ரயில்வே வடக்கே 2 பெரும் விபத்தை சந்தித்திருப்பதும் , மேட்டூர் ரயில் எப்போதும் கோவை சூப்பர் பாஸ்ட் குறுக்கிடுவதாக சொல்லி எப்போதும் தாமதித்தே புறப்படுவதும் எந்த குறையை சொன்னாலும் அதை சரி செய்யாத போக்குகளும் இந்திய ரயில்வேக்கு நல்ல பேரை விளைக்கப் போவதில்லை.

அந்த ரயிலில் கடசி ஜன்னல் என்னதான் சரியாக செய்தாலும் சற்று ஏமாந்து  எவராவது ஜன்னலில் கை வைத்தால்  கை துண்டாகுமளவு திடீரென கீழ் இறங்கிவிடும் படார் என்ற சத்தத்துடன்...

இதை எல்லாம் என்றுதான் சரி செய்வார்களோ? இதில் வேறு இளைஞர்கள் அடிக்கடி மேச்சேரி ரோடு, ஓமலூர் ரயில் நிலையப் பகுதிகளில் ரயில் அங்கேயே நிறுத்தம் இருந்தும், ரயில் நிற்கும் முன்னே இறங்க முயன்று சில நேரம் காயப்படுத்திக் கொள்வதும் தான்.

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.

Tuesday, August 29, 2017

கடவுள் குர்மீத் ராம் ரஹீம் சிங் கெஞ்சி தண்டனையை குறைக்கச் சொல்லி...அழுதிருக்கிறார் நீதியைப் பார்த்து: கவிஞர் தணிகை.

கடவுள் குர்மீத் ராம் ரஹீம் சிங்  கெஞ்சி தண்டனையை குறைக்கச் சொல்லி... அழுதிருக்கிறார் நீதியைப் பார்த்து: கவிஞர் தணிகை.கெஞ்சி தண்டனையை குறைக்கச் சொல்லி...

Related image


கடவுள் அழுமாடா நாயே குர்மீத் சிங். அந்த 10 ஆண்டுகள் அதை அடுத்து மறுபடியும் 10 ஆண்டுகள் சிறையில் இருந்தாகவேண்டும், அபராதம் கட்ட வேண்டும் என்ற 15 ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கின் தீர்ப்பை பார்த்த தன்னை கடவுள் என்று சொல்லி அனைவரையும் ஏமாற்றித் திரிந்த நாய் எனக்கு குறைந்த பட்சம் தண்டனை கொடுங்கள் நான் நிறைய முகாம் எல்லாம் நடத்தி மக்களுக்கு சேவை செய்திருக்கிறேன் என்று அழுதிருக்கிறது.

கெட்டவனாயிருந்தாலும் பெட்டையன் இவன் ஆம், நான் செய்தேன் தண்டனையை பெற்றுக் கொள்கிறேன் என்றெல்லாம் சொல்லாத  சொல்ல முடியாமல் இவன் பயந்தாங்கொள்ளித்தனம் வெளிப்பட்டிருக்கிறாது.

இவனுக்கு உலகெங்கும் 350 கிளைகளாம், 5 கோடி பேர் பக்தர்களாம், பின் தொடரும் இரசிகர்களா அடிமைகளா, நல்ல கொடுமைடா சாமி.
பஞ்சாப் காரர்களுக்கு முட்டியில் மூளை என்று ஒரு நக்கல் சொல்லாடல் இருப்பது எவ்வளவு உண்மை? எள்ளளவிலாவது உண்மை இருக்குமா உரசிப் பார்த்தேன்

இவனுக்கு குடும்பம் பிள்ளைகள் எல்லாம் இருக்கின்றன மேல் மருவத்தூர் அம்மாக்கள் போல...ஆனாலும் இவன் நடிகனாக, தயாரிப்பாளனாக, இயக்குனராக, பாடகராக, இசையமைப்பாளராக அடக் கருமமே எல்லாமாக இதை எல்லாம் இரசிக்க ஒரு பெரும் கூட்டம்... தூ...

ஹிட்லர் கூட கடைசியில் பங்கர் என்னும் பதுங்கு குழியில் பயந்து வாழ்ந்து மருந்தை விஷத்தை சாப்பிட்டு உயிரிழந்தான், சதாம் உசேன் மறைந்திருந்து வாழ்ந்து அமெரிக்கர் கையில் மாட்டி தூக்கிலிடப்பட்டான். பின் லேடன் ஏர் ஸ்ட்ரைக் பற்றியும் உடலை கடலில் கடாசியது பற்றியும் உலகே அறியும்.

ஏன் பிரபாகரனின் மரணம் கூட மெச்சத்தகுந்ததாய் இல்லை.

உயிரிகளுக்கு மரணம் ஒரு தவிர்க்க முடியாத முடிவே. இந்த ஏமாற்றுக்காரனை ஏன் கொன்றிருக்க கூடாது? சட்ட ஒழுங்கில் இந்த சரத்து அம்பேத்கார் எழுதவே இல்லையா? இல்லை கறபனை கூட செய்திருக்க முடியாது என்றே தோன்றுகிறது

தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப் பட்ட நீதி என்ற ஆங்கிலப் பழமொழி மெய்ப்பிக்கப் பட்டிருக்கிறது... இவனது வழக்கும் ஜெ வழக்கும் மிக நீண்ட காலம் இந்த நாட்டில் நடந்த வழக்குகளில் இடம் பெறுகின்றன.

Related image

15 ஆண்டு கழித்து இவன் காமுகன் தான் என்று சொல்லி இருக்கிறது நீதிமன்றம் அப்படியானால் இந்த 15 ஆண்டுகளில் இவன் வாழ்ந்த வாழ்வு தூய்மையானதா? இந்த 15 ஆண்டுகளில் எத்தனை பெண்களை அவர் தம் வாழ்வைக் கெடுத்திருப்பான் அதற்கெல்லாம் தண்டனை இல்லையா? மரணம் கூட இவனை மன்னிக்காது என்னும் போது இவன் தலைமுறை தழைக்கவே வழியின்றி செய்தால் மட்டுமே பூமிக்கு நல்லது.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Sunday, August 27, 2017

அரசே அறக்கட்டளைகளை எல்லாம் தடை செய்து அரசுடைமையாக்க வேண்டும்: கவிஞர் தணிகை

அரசே அறக்கட்டளைகளை எல்லாம் தடை செய்து அரசுடைமையாக்க வேண்டும்: கவிஞர் தணிகை
Image result for gurmeet ram rahim singh albums

31 பேர் இறப்பு 300 பேருக்கும் மேல் காயம், துப்பாக்கிகள்  குண்டுகள் எல்லாம் இந்த அமைப்பினரிடமிருந்து பறிமுதல்...இப்படியாக....


தேரா சச்சா சௌதா அமைப்பு பற்றியும் அதன் கடவுள் என்று சொல்லிக் கொண்ட நடிகர் குர்மீத் சிங் ராம் ரஹீமை பொது இடத்தில் வைத்து கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும் அல்லது அரபு நாடுகளில் செய்வது போல பொது இடத்தில் வைத்து தூக்கில் இட வேண்டும். இது போல் செய்தால்தான் மற்ற போலிசாமியார்கள் எல்லாம் அடங்குவார்கள். இவர்களை எல்லாம் அடக்கி நாட்டில் இருக்கும் கோடிக் கணக்கான கோடிகளை அரசு பொதுவுடமை ஆக்க வேண்டும்

இருக்கும் நீர் , நிலத்தையே பொது உடமை ஆக்கத் தெரியா அரசு இதை எங்கே செய்யப் போகிறது என்று கேட்கிறீர்களா? 2002ல் வாஜ்பேயிக்கும் உயர் நீதிமன்ற நீதிபதிக்கும் எழுதிய கடிதத்தின் விசாரணை முடிவுகளே இப்போதுதான் செயல்பட ஆரம்பித்திருக்கிறது எனில் நமது நீதியும் சட்டமும் எவ்வளவு வேகத்தில் செயல்படுகிறது என்பதை தெரிந்து புரிந்து கொள்ளுங்கள்

இப்படி இருக்கும்போது எப்படி ஒரு சாதாரண மனிதர் அல்லது எந்தவித வசதி வய்ப்புமே இல்லாத இந்தியாவின் கடைக்கோடியில் இருக்கும் மனிதர் நீதியை எட்டுவது? அம்பேத்காரின் சட்டம் பாய்வது அவ்வளவுதானா?

இந்த மனிதர் சீக்கிய பொற்கோவில் அதிகார பூர்வ அமைப்பில் இருந்து விலக்கப்பட்டவர், தம் பேரை பாருங்கள் எப்படி வைத்திருக்கிறார் என, ராம் என்று இந்துவாக, ரஹீம் என்று முகமதியமாக, குர்மீத் என்று சீக்கியராக கிறித்தவர் மக்கள் தொகை குறைவாக இருப்பதால் ப்ராங்க்ளின் என்று ஏதும் வைத்துக் கொள்ளாதது தெரிகிறது.

50 வயது கோடீஸ்வரன், நடிகர், பாடகர், இயக்குனர் டாடா சாஹேப் பால்கே  விருது பெற்றவர், மத்திய அரசின் இஜட் பிரிவு பாதுகாப்பு படையின் பாதுகாப்பில் உள்ள‌,இவர் தேரா சச்சா சௌதா அமைப்பின் 4 ? ஆம் தலைவர், இவர் பிறக்கும் முன்பே 5 ஆண்டுகளுக்கும் முன்பே இவர் இந்த அமைப்பின் தலைவர் ஆவார் என்று இவரது முன்னால் தலைவர் முன் கூட்டியே சொன்னாராம்.

இவரே இவரது ஆஸ்ரமப் பெண்களை எல்லாம் புணரவேண்டும் என சுமார் 400 ஆஸ்ரமத் தொடர்புள்ள ஆண்களை எல்லாம் ஆண்மை இழப்பு அறுவை சிகிச்சை செய்து கொள்ளவைத்துள்ளாராம். அதிக பட்சம் 400க்கும் மேற்பட்ட ஆஸ்ரம பெண்களை எல்லாம் இவர் புணர்ந்துள்ளதாக தகவல். அந்தக் கடிதத்தில் எழுதியுள்ள பெண்கள் கேட்ட கேள்விக்கு ஏன் கிருஷ்ணன 360 கோபியர்களுடன் கூடிக் களிக்கவில்லையா அவரை கடவுள் என நீங்கள் வணங்கவில்லையா? என்று கேட்டாராம் , துப்பாக்கி, நீலப்படம், பாதாள அறை ஒவ்வொரு பெண்ணையும் மிரட்டியே ஆண்டுக் கணக்கில் உடலுறவு கொள்ள வைத்தாராம் இந்த சாமி. இவருக்கு வளர்ப்பு மகள் ஒரு நடிகை, அவருடன் காவ்ர் என்ற மனைவிக்கு 3 பெண்கள் ஒரு ஆண் குழந்தை. அவருக்கு காங்கிரஸ் பிரமுகரின் மகள் திருமண முடிப்பு. இப்படி செல்கிறது  இந்த மிருகத்தின் கதை.இங்கே இருக்கும் மேல் மருவத்தூர் அம்மாக்கள் மாதிரி, ஈஸாவின் மகளுக்கு  நல்ல மணமகன் வேண்டும் என்கிற மாதிரி இவர்கள் எல்லாமே சாதாரண மனிதர்கள் தான் இவர்கள் பின் ஏன் இவ்வளவு பைத்தியக்காரத்தனமான கூட்டம்> யமுனையின் கரையில் நடைபெற்ற கூட்டத்தின் மீறலுக்கு இன்னும் 5 கோடி ரூபாய் அபராதத் தொகையை வாழும் கலை ரவி சங்கர் நிறுவனம் கட்டி விட்டதா என்பது தெரியவில்லை. ஈஸாவுக்கும் வாழும் கலைக்கும் பிரதமர் கலந்து கொண்டது சரியா இது போன்ற கேள்விகளுக்கு பாரதிய ஜனதா கட்சியிடம் பதிலை எதிர்பார்க்க முடியாது. பிரதமர் அலுவலகம் மட்டுமே பதில் சொல்ல வேண்டும். சரி விடுங்கள் இந்த சீக்கிய இனத்திலிருந்து விலக்கப்பட்ட குர்மீத் கதைக்கு வருவோம்...

இவருக்கு கார் பைத்தியம் உண்டு. சுமார் 300 காருக்கு சொந்தக்காரராம்.சிர்ஸாவில் 700 ஏக்கருக்கும் மேல் நிலம் உண்டு. சுமார் 350 கிளைகள் உலகெங்கும். சீடர்கள் 5 கோடி பேர். எல்லாம் தாழ்ந்த சாதி மக்கள் மாக்கள். இவனிடம் இருக்கும் ஒரு காரின் விலை 16 கோடியிலிருந்து 18 கோடி வருகிறதாம்.

இவரை இது வரை எல்லா அரசும் ஆதரித்தே வந்துள்ளன அது காங்கிரஸ் அல்லது பாரதிய ஜனதா .இப்போது ஏன் எப்படி? விசாரணையும்  நாளை வெளிவர இருக்கும் தண்டனையும் இவரின் வாழ்வை பெரிதும் பாதிப்பன‌

அவன் வாழ்ந்துள்ளான் ஒரு சர்வாதிகாரம் படைத்த இராஜா போல. ஏகப்பட்ட சொத்து சுகங்களுடன், பெண்களுடன். இது மக்களாட்சி அல்ல எனச் சொல்லி காரணம் காட்டி... இவன் வரும் போகும் இடங்களில் எல்லாம் காட்சிப் பொருட்களாக எல்லாம் ஆடுகிறார்கள் ஆர்ப்பரிக்கிறார்கள் இவன் கடவுள் என்று சொல்லிக் கொள்வானாம்.

ஏன் எதற்கு இந்த கூட்டலும் நீட்டலும்...இவன் போன்ற பதர்கள் நடத்தும் அத்தனை அறக்கட்டளை, தன்னார்வ தொண்டு நிறுவனம் யாவற்றையுமே அனைத்தையுமே அது இவனுடையது அவனுடையது என்றெல்லாம் பாராமல் அனைவரது அமைப்புகளையும் அரசு எடுத்துக் கொள்ள வேண்டும். அவற்றை பொது உடமையாக்க வேண்டும். இதைத் தவிர வேறு வழியே இல்லை இந்த முட்டாள்தனத்துக்கு எல்லாம் முடிவு கட்ட...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Saturday, August 26, 2017

விவேகம் இல்லா சர்ச்சை தேரா சச்சா சௌதாவை விடவா: கவிஞர் தணிகை

விவேகம் இல்லா சர்ச்சை தேரா சச்சா சௌதாவை விடவா :கவிஞர் தணிகை.

Image result for vivegam poster
நானூறு ஐநூறு பேருக்கு ஆண்மை நீக்கம் செய்து ஆஸ்ரம பெண்களை எல்லாம் அவர்கள் எவரும் புணர்ந்து விடக் கூடாது தாமேதாம் புணர வேண்டும் என்ற குர்மீத் ராம் ரஹீமை விட இந்த விவேகம் சினிமா போஸ்டருக்கு ஆடு வெட்டி இரத்த அபிஷேகம் செய்த மடையர்களும் விஜய் மில்டனும், ராகவா லாரன்ஸும் விவேகம் படமும் தேவையில்லா சர்ச்சையை தமிழ் மண்ணில் தொங்கு சட்டசபையை மறந்து முக நூல் மற்றும் மின் ஊடகங்களில் சமூக ஊடகங்களில் ஓடிக் கொண்டிருக்கின்றன இத்தனைக்கும் அஜித் குமார் ஒன்றும் ஐஸ்வர்யாவேதான் நாயகியாக நடிக்க வேண்டும், எமி ஜாக்ஸனேதான் நடிக்க வேண்டும் என்று கேட்கும் கிழட்டுப் புயலுமல்ல...

சினிமா விமர்சனத்துக்கு அப்புறம் வருவோம். முதலில் இந்த மடையர்களையும் மடத்தனத்தையும் முன் பார்ப்போம். அஜித் குமார் நல்ல மனிதர் அடிப்படையில் இயல்பில் நல்ல குடும்பம், நல் வாழ்வு என வாழ்ந்து வருவார் மட்டுமல்ல தம்மிடம் பணி புரியும் அத்தனை பேருக்கும் வீடு கட்டிக் கொடுத்தவர், சூட்டிங் ஸ்பாட்டில் தம் கையால் பிரியாணி சமைத்து அனைவர்க்கும் போடுபவர் எல்லாரையும் சமமாக நடத்த விரும்புவார், ஏர் போர்டில் கூட வரிசையில் நின்றே வருவார் இப்படி எல்லாம் நல்லவை அவர் பால் உண்டு.அதே போல லாரன்ஸ் நன்கொடைகள் முடியாதவர்க்கு உதவி, எல்லாம் தெரியும் இந்த விஜய்மில்டன் எடுத்த கடுகு படம் சமூகத்தின் நாடித் துடிப்பை வெளிப்படுத்தி எழுச்சி ஊட்ட முயல்கிறது அனைவரும் பாருங்கள் பாருங்கள் என பார்ப்பார் இடம் எல்லாம் எம் வட்டத்தில் சொல்லியபடியும் பேசிய கரூர் மேடையில் கூட அனைவர்க்கும் நெட்டை மரங்களென நிற்பதுவோ என்ற தலைப்பில் உரை நிகழ்த்தும்போது கடுகு எத்தனை பேர் பார்த்திருக்கிறீர் அந்த ஒன்றுமில்லாத கபாலி லிங்கா பாபாவை எத்தனை பேர் பார்த்திருக்கிறீர் என கை உயர்த்த சொல்லி பார்க்கக் கூடாததை எல்லாம் விளம்பரம் நம்பி பார்க்கிறீர் பார்க்க வேண்டியதை எல்லாம் விட்டு விடுகிறீரே என கடுகு படத்தை பார்க்க தூண்டினேன். என்னால் சுமார் 300 பேராவது பார்த்திருப்பர்.

இப்படி ஊடகத்தில் இருப்பார்க்கு நல்லா இருப்பதை நல்லா இருக்கிறது என்றும் நல்லா இல்லைன்னா நல்லா இல்லைன்னும் சொல்ல உரிமை உங்களிடம் வாங்கிய பின் தான் சொல்ல வேண்டுமா மில்டன் லாரன்ஸ் ? நீங்கள் எல்லாம் எந்த ? உடன் படம் எடுக்கிறீர்களோ அதே ? நியாயம் படம் பார்ப்பாருக்கும் உண்டு. அதை நீங்கள் எந்த மேதாவித்தனம் காட்டியும் நீலச்சட்டை கறுப்புச் சட்டை காக்கி சட்டை காட்டியும் காட்டி பயமுறுத்தி விட முடியாதுநீங்களாவது கறுப்பு வெள்ளை வரி என்றெல்லாம் மாற்றி மாற்றி பேசுவீர் ஆனால் இந்த பயமில்லாத பயல்கள் வெறும்பயல்கள் எப்படி வேண்டுமானாலும் தம் வெளிப்பாட்டை செய்து விடுவார்கள். நீங்கள் எல்லாம் வைத்த வேட்டுதான் அரசியல் ஓட்டாய் மாறி மது மாது என ஆண்டுகொண்டு தமிழகத்தை இருளடித்த நிலமாய் மாற்றி உள்ளது.

கமல்ஹாசனாவது சில விமர்சனங்கள் செய்து வருகிறார். மற்ற நடிகர் எல்லாம் ஏதாவது வாய் திறக்கிறாரா இந்த இலட்சணத்தில் இதை எல்லாம் ஏன் பேசி தற்போது இருக்கும் தொங்கு சட்டசபையை, குதிரை பேரத்தை மாற்றி விடலாம் என காட்சி  மாற்றம் செய்கிறீர்? தேரா சச்சா பச்சாக்களை விடவா இதெல்லாம் பெரிய பிரச்சனை?

15 வருடத்திற்கு முன் ஒரு பெண் வாஜ்பேயி பிரதமருக்கும் பஞ்சாப் உயர் நீதி மன்ற தலைமை நீதிபதிக்கும் எழுதிய கடிதம் இன்று அடிப்படையாய் ஆட  இங்கு ஜெயலலிதாவின் அந்த 75 நாட்களைப் பற்றி மூச்சும் விடாமல் இப்போது சர்சையைக் கிளப்புவது போல அப்போதும் எல்லாவற்றைப் பற்றியும் திட்டமிட்டே பிரச்சனையை திசை திருப்ப ஏதோ உப்பு பெறா சர்க்கரை காரணங்களுடன் பிரச்சனையை கிளப்பிக் கொண்டே இருந்த ஊடகங்களைப் பற்றி நீங்கள் எல்லாம் ஏதாவது வாய் திறந்து பேசியதுண்டா?

எனவே நல்லா இருந்தா நல்லா இருக்குதுன்னும் நல்லா இல்லைன்னா நல்லா இல்லை என்றும் தான் சொல்வார்கள் எந்த ? எதுவும் செய்து விட முடியாது. இந்தப் படத்துக்கு விமர்சனம் எழுதவே கூடாது என்று இருந்தேன். இன்று கண்ட செய்திகள் எழுத வைத்து விட்டன.

விவேகம் : ஏண்டா விவேகம் எனப் பேர் இருந்தா போதுமா? அஜித் ரசிகர்கள் அந்த போஸ்டருக்கு விவேகமே கொஞ்சமும் இல்லாம ஆடு வெட்டி இரத்த காவு கொடுத்து அந்த போஸ்டரில் இரத்த்தை தடவுவதைப் பார்த்து இது பாலாபிசேகத்தை விட புல்லரிக்கும் விடயம் என்ற காரணத்தினால் எழுதுகிறேன்.
Related imageமுதலில் ஒரு அரை மணி நேரம் படம் காதில் பூ. ஆங்கில படம் மாதிரி என்று சொல்லலாம் என்றால் அவர்கள் டெட்டனஸ், பாம் என்று முடித்துவிட்டு செல்வார்கள் ஆனால் இதில் ஒரே நபர் கைத்துப்பாக்கி , துப்பாக்கி பயன்படுத்தி ஒரு பெரும் படையை சுட்டு வீழ்த்தி தப்புகிறார். அவர்கள் குண்டு மழை இவரை ஒன்றும் செய்வதில்லை. இவரின் ஒவ்வொரு குண்டும் ஒவ்வொருவரை வீழ்த்துகிறது. சரி அதன் பின் அக்சரா கமல் ஒரு காரணமுமின்றி பெரிதான சொல்லிக் கொள்ளுமளவில்லா பாத்திரத்தில் வீணடிக்கப்பட்டிருக்கிறார்.

தொழில் நுட்பம், வெர்ச்சுவல் , இதை ஜீன்ஸ் படத்திலேயே சுஜாதா வழியே  சங்கர் சொல்லி விட்டார். இது பற்றி சுஜாதா எழுதி பல்லாண்டுகள் ஆகிறது.
சரி கதை ஆங்கிலக் கதை அளவும் எடுத்ததும் அப்படியே அதன் பின் அதாவது அஜித் தம்மை நண்பர்கள் துரோகம் செய்து வீழ்த்தியது தெரிந்த பின் நன்றாக இருக்கிறது என்று சொன்னாலும் இந்தக் கதையை புரிந்தவரை விட புரியாதார் அதிகம் பார்க்கக் கூடும். அவர்கள் இதை நன்றாக இருக்கிறது எனச் சொல்லப்போவதில்லை. என்ன செய்வீர்கள் ? விடுவீரா?

காஜல் அகர்வாலுக்கு ஒரு நல்ல ரோல். நன்றாகவும் நடித்திருக்கிறார். அஜித்குமார் முகம் கிழடு தட்ட ஆரம்பித்து விட்டது என பார்த்த ஒரு குடும்பப் பெண் சொல்கிறார்.  மொத்தத்தில் மிரேகில் நம்ப வழியில்லாமல் ஒரு படத்தை பிரமிப்பு ஏற்படுத்த வேண்டும் என்ற தவறான கற்பனையுடன் எடுத்திருக்கிறார்கள் முற்றிலும் மேலை நாட்டு புதிய லொக்கேஷன்களில்.

விவேக் ஓப்ராய்,  நிழல் உலக அரசாங்கம் 80 நாடுகளால்  தேடப்படும் குற்றவாளி என ஒரே பில்ட் அப். ஆனால் எடுபடவில்லை. இந்தப் படம் அஜித் தல இரசிகர்களுக்குப் பிடித்திருக்கலாம், அட ஒரு ஆட்டுத்தலையை போஸ்டருக்கு இரத்தம் தடவ வெட்டி வீழ்த்தி விட்டார்களே என்ற எங்கள் போல் பரிதாபப் படும் நபர்களுக்கு பிடிக்கும் என்றும் சொல்ல முடியாது இதைப் பார்த்தே தொலைக்க வேண்டும் என சாப்பிட்டே ஆக வேண்டும் எனச் சொல்லத்தான் வேண்டுமா? பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் எந்தக் குடியும் முழுகிவிடப் போவதில்லை. எனவே பார்த்து விட்டு தமதூ கருத்துகளை எவரும் எழுதினாலோ சொன்னாலோ அவரை தூக்கிவிடவா முடியும் நீங்கள் எல்லாம் மூ...கொண்டு இருந்தால் அதுவே படத்துக்கு நல்லது அஜித்குமாருக்கும் நல்லது  . ஆடு வெட்டி போஸ்டருக்கு இரத்தம் தடவிய அந்தப் படுபாவிகளை அஜித்குமாரும் சும்மா விடக் கூடாது. அரசும் காவல் துறையும் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.

இது தவறான முன் உதாரணமாகிறது எனவே வன்மையாக கண்டிக்கவே இந்தப் பதிவு.

அட இதை எல்லாம் யாருக்குய்யா பார்க்க நேரம்? உங்களை எல்லாம் யாரு கண்டுக்கப் போறா , ஆக்டிங் கவர்னர் வருவாரா ஆட்டம் கண்டு கொண்டிருக்கும் இ.பி.எஸ் ஓபிஎஸ் கூட்டணி மந்திரி சபை என்ன ஆகும் தினகரன் அடைத்து வைத்திருக்கும் எம்.எல்.ஏக்கள் ஏன் பெண் எம்.எல்.ஏக்கள் விநாயக சதுர்த்திக்கும் கூட வராமல் ஒன்னுக்கு போனார்களா இல்லை அங்கும் காவலா? மோடி அடுத்து எப்படி காய் பழம் நகர்த்துவார் ஸ்டாலினுக்கு எப்போதுமே இராசியே வராதா, கலைஞர் இன்னும் இருக்கிறார் இதை எல்லாம் பார்க்க பேசவே நேரம் இல்லை ஜனங்களுக்கு இதில் ஒங்க தல விவேகமா வேகமா இல்லையா என்று என்ன பார்த்து என்னய்யா ஆகப் போகிறது எப்படியோ நீங்க கல்லா கட்டப் போவது புஸ் எனப் போய்விடுமோ என பயம் கொள்கிறீர் ...பயப்படாதீர் நீங்கள் சொல்லியபடி பாலச்சந்தரும் பாரதி ராஜாவும் இப்போது சங்கர் போன்றோரும் கூட கொடி கட்டிய சினிமா எப்போதும் கட்டிய கொடியை அவிழ்க்காமல் எவருமே இருந்ததில்லை என்கிறது காலம்

தங்கத் தட்டில் சாப்பிட்ட தியாகராச பாகவதர் கடைசியில் சீந்துவாரின்றி மருத்துவத்துக்கும் கூட வழியின்றி நோய்வாய்ப்பட்டு மருத்துவ மனையில் இருந்ததாக காலம் சொல்கிறது. மேலும் பாக்யராஜ், பாரதிராஜா, பாலச் சந்தர், ரஜினி கமல் எம்.ஜி.ஆர் சிவாஜி எல்லாருமே காலத்தின் முன் சுஜிபி.

இதில் நீங்கள் ஏன் விஜய் மில்டனும், லாரன்ஸும் பேரைப் போட்டு ஆட்டுக்கல்லில் உரலில் போட்டு ஆட்டிக் கொள்கிறீர்

சொல்வோம் சொல்லிக் கொண்டே இருப்போம் நன்றாக இருந்தால் நன்றாக இருக்கிறது என நல்லா இல்லைன்னா நல்லா இல்லைதான். இந்தப் படத்துக்கு பார்க்க 50% வாய்ப்பு கொடுங்கள் . வாய்ப்பிருந்தால் பார்க்கலாம். பார்க்கா விட்டாலும் ஒன்றும் குடி முழுகப் போவதில்லை . பெரிய இழப்பு ஒன்றும் இல்லை. டங்கல் தசாவதாரம் விஸ்வரூபம் போன்ற பார்க்க வேண்டிய படமெல்லாம்  இருக்கும் தரம் இந்தப் படத்துக்கு இல்லை என்று சொல்லியே ஆக வேண்டும்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

விநாயகா மிஷன்ஸ் சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரியில் கவிஞர் தணிகையின் சிற்றுரை.

விநாயகா மிஷன்ஸ் சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரியில் கவிஞர் தணிகையின் சிற்றுரை.

Image result for vivekananda in chicago speech


வீட்டிலும் , சொந்த ஊரிலும் தவிர இறைவாக்கினர் வேறெங்கும் மதிப்புப் பெறுவர் என்றொரு வரி பைபிளில் இருக்கிறது.  ஆனால் எனது இந்த உரை வீச்சு நிகழ்வை ஏற்படுத்தி தந்ததன் மூலம் அது போன்றக் குறை நீங்கி விட்டது. இதன் முழு முதல் காரணம் கல்லூரியின் முதல்வர் டாக்டர்.ஜா.பேபிஜான் அவர்களையே சாரும்.

Image result for vinayaka mission's sankarachariyar dental college


சர்வ சமய ஆராய்ச்சிக் கழகத்தில் விவேகானந்தர் ஒரு ஓரமாய் அமர்ந்தபடி கடைசியாக பேச அழைக்கப்பட்ட போது சிகாகோவில் ஓரு சில நிமிடங்கள் மட்டுமே பேசினார் ஆனால் அது வரலாற்றுப் பதிவாகிவிட்டது. அதன் பின் அவர் எப்போது பேசுவார் என அங்கிருந்த அறிஞர் கூட்டமே எதிர்பார்த்தது என்கிறது காலம்.

அது நடந்தது: 1893 செப்டம்பர் 11. நான் இந்தக் கல்லூரியில் பேசியது ஆகஸ்ட் 24  2017. நான் அந்த அளவு பெரிய மனிதரில்லை என்பது அனைவரும் அறிந்ததுதான். என்றாலும் ஒரு முகாம் அலுவலராக பணி செய்யும் கல்லூரியில் பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள், உதவி முதல்வர்கள், கல்லூரியின் முதல்வர், நிறுவனர் குடும்பம் சார்ந்தவர், முதுகலை இளங்கலை பல் மருத்துவ நிபுணர்கள் முன்னிலையில் சுதந்திரம் பெற்ற 70 ஆம் ஆண்டு மற்றும் வெள்ளையனே வெளியேறு இயக்க 50 ஆம் ஆண்டு நிறைவுச் சொற்பொழிவு சிறிது நேரம் ஆற்றிய நிறைவு கிடைத்தது.

நான் ஏற்கெனவே பல கல்லூரிகளில் பல்வேறுபட்ட மேடைகளில் நாடெங்கும் உரை வீச்சு செய்தவன் என்பது எனை அறிந்த அனைவரும் அறிந்ததே. ஏன் இந்த நாட்டின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாய் மேதகு பி.என்.பகவதி இருந்த போது ஹைத்ராபாத்தில் 1988 89 ல் அப்போதைய ஆந்திரப் பிரதேச சட்டமன்ற வளாகத்தின் ஜூபிலில் ஹாலில் அவர் உரையாற்றிய மேடையில் நானும்    நிமிடங்கள் பல‌ ஆங்கிலத்தில் உரையாற்றும் வாய்ப்பை பெற்றிருக்கிறேன் அதுவும் திடீரென கிடைத்த வாய்ப்புதான். இதுவும் திடீரென கிடைத்த வாய்ப்புதான்.

 நான் இப்போதெல்லாம் அல்ல அல்ல கடந்த பல்லாண்டுகளாகவே பெரிதும் எதையுமே எதிர்பார்க்காத மனநிலைக்கு வந்து விட்டேன். ஏன் எனில் நமது இந்தியத் தாய்த் திரு நாட்டில் எதுவும் நடக்கும் என்பதாலும் எதுவும் எப்போது வேண்டுமானாலும் நடக்காதும் போய்விடும் என்பதாலும்.

 எனது சிறு வயதில் ஒரு சாணக்ய சபதம் என்ற நாடகத்தில் எனக்கு தனநந்தன் வேடம் சிறுவன் நந்தர்களின் வம்சத்துக் கடைசிக் குலக் கொழுந்து. மாபெரும் நாடகம். சிவாஜி கணேசன் நாடகத்திற்கு தலைமையேற்று நடத்துவதாக ஏற்பாடு. கடைசியாக சிவாஜி கணேசன் வரவில்லை நாடகமும் அப்போது அரங்கேறவில்லை. அப்போதிருந்தே எனக்கு இது போன்ற மேடை நிகழ்வெல்லாம் கடைசி நிமிட மாறுதலுக்குட்பட்டவை என்பது எனக்கு நன்றாகத் தெரியும் அப்போது எனது வயது சுமார் 12 இருக்கலாம். இப்போது 55 வயதுடன் நான்.

உரை சிறு நேரமே என்றாலும் முக்கியக் கருப்பொருளுடன் கனமாகவே இருந்தது எனக் கருதுகிறேன். திருப்பூர் குமரன், லால்பகதூர் ,காமராஜர், பகத் சிங், சுபாஷ் சந்திரபோஷ், மகாத்மா ,கோகலே, டால்ஸ்டாய், ரஸ்கின், தாகூர், இப்படிப்பட்ட மாமனிதர் அனைவருமே இருந்தார்கள் குறிப்பிடப்பட்டார்கள். டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்களின் சுதந்திரம், விடுதலை, சாதனை பற்றிய சொல்லாடலுடன் உரையைத் துவக்கினேன். மகாத்மாவின் 3 குரங்கு பொம்மை, மதுவே எல்லா பாவங்களுக்கும் அடிப்படை உதாரணங்களுடன் முடித்தேன் இடையே சத்யாக்ரகம், சகிப்புத் தன்மை விதைகள் ஆங்காங்கே தூவப்பட்டன.

யாவரும் எதிர்பார்க்கும் முன்பே முடித்து விட்டேன் . அப்போது எனக்கு ஜீவானந்தம் நினைவில் வந்தார், ஒரு சில நிமிடங்கள் பேசுவதாக வாய்ப்பளிக்கப்பட்டு சில மணி நேரம் அவரது உரையை கேட்டு மயங்கி நிற்கும் சபை..,

ட்விட்டர், ட்விட்டர் லாங், முக நூல் கூகுள் ப்ளஸ் வலைப்பூ பொது சந்திப்பு சுவர் எழுத்துகள் போன்ற எல்லா நவீன மின் ஊடகங்களிலும் பல்வேறு பட்ட கால அளவுகளுடன் பதிவு அளவுகளுடன் எழுதப் பழக்கப்பட்ட எனக்கு ட்விட்டரில் எழுதுவதும்  கை வருகிறது, வலைப்பூவிலும் என்னால் எழுத முடிகிறது, சுவர் எழுத்திலும் எழுத முடிகிறது. அது போல இந்தக் குறும்பேச்சு வழியாகவும் அவர்களைத் தொட முடிந்தது பற்றி எனக்கு மகிழ்வே. இப்படிப்பட்ட அனுபவங்களை பயிற்சிகளை தந்ததற்கு நாம் நவீன அறிவியல் ஊடகங்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.

ஏன் எனில் தேசிய சேவை முகாம்களிலும் மற்ற கல்லூரிகளிலும் என்னை சிறப்பு பேச்சாளராக அழைக்கும் இடங்களிலும் குறைந்தது ஒரு மணி அல்லது அதற்கும் மேல் எவ்வளவு மணி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் என வேறு எந்தப் பேச்சாளரையும் என்னுடன் சேர்க்காமல் எனக்கு களம் அமைத்து தந்து விடுவார்கள் நானும் பேசிக் கொண்டே செல்வேன் சில மணிகளாவது. ஆனால் இது நிமிடத் துளிகளை கணக்குப் பார்க்கும் அரிய அவை.
Image result for vinayaka mission's sankarachariyar dental collegeஅது அங்கு காட்டாறு போன்ற பொங்கிப் பிரவாகித்து ஓடும் பேச்சு. இது கட்டுப்பாடட‌ங்கிய பேச்சு.

நேரக் கட்டுப்பாடு அவசியம் தான். அனைவருமே நேரத்தை கண்ணாக பொன்னாக பார்க்கும் அவை= சபை அது.

முன்னதாக பேராசிரியர் டாக்டர் ரமேஷ் அவர்கள் மருத்துவ வல்லுனர்களை கூகுள் ஸ்காலர், ஸ்கோப் அப், ஆர்சிட் போன்ற தளங்களை எப்படி பயன்படுத்துவது என்ற ஒரு அரிய தெளிவான உரை கொடுத்தார், அவரது துணைவியார் மாயாவும் பேசினார்.

பல் அறுவை சிகிச்சைத் துறையின் தலைவர் டாக்டர் ரீனா ஜான் அவர்கள் வரவேற்புரை ஆற்றி சுதந்திரம் பற்றி விடுதலை பற்றி தாகூர் மை பிரேயர் பற்றிய வரிகளைக் குறிப்பிட்டார்.

கல்லூரி முதல்வர் டாக்டர் பேபி ஜான் அவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து தமது வழக்கம் போன்ற நடையுடன் சிறு நகைச்சுவைகளை  தூவி/ பேசி ஒரு மகிழ்வான சூழலை ஏற்படுத்தினார். மேலும் எனது உரைக்கு கிடைத்த குறைவான கால அளவு அதைவிடக் குறைவான தயாரிப்பு நேரம் பற்றி எல்லாம் சொல்லி நெகிழ வைத்தார்.

அது ஒரு பல் மருத்துவ‌ இதழியல் சார்ந்த  ஜர்னல் கிளப் மீட்டிங். அதில் என் போன்ற ஜர்னலிஸ்ட்டுக்கும் இடம் கிடைத்தது பற்றி மகிழ்வே.

நன்றிகளும்

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.


Related image

Tuesday, August 22, 2017

சாதனையாளர்களை மறுப்பதும் மறப்பதும் உலகுக்கு ஒன்றும் புதியதல்ல :கவிஞர் தணிகை

சாதனையாளர்களை மறுப்பதும் மறப்பதும் உலகுக்கு ஒன்றும் புதியதல்ல அதிலும் இந்தியாவிலும் தமிழகத்திலும் சொல்லவே வேண்டாம்: கவிஞர் தணிகை

இப்போது நாம் பதிவிட்ட செய்தி போல உண்மையான சாதனையாளர்கள் எண்ணற்றோர் எவருமறியாமலே மண்ணில் மறைந்து போயினர் அவர்களைத் தேடி அவர்கள் செய்த சாதனையை உலகுக்கு வெளிக்காட்ட எவராவது முன் வந்தால் கூட நல்லதுதான். எனக்கும் கூட உ.வே.சாமி நாதய்யரைப்போல இதற்காக நாடெங்கும் சுற்றித் திரிய ஆசைதான். அதற்கு இன்னும் 5 ஆண்டுகளுக்கும் மேல் ஆகும் எனத் தோன்றுகிறது. இளமையில் இந்தியாவை ஒரு வலம் வந்திருக்கிறேன். முதுமையில் உலகை வலம் வர வேண்டும் இதற்காகவாது..

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

thanks:BBC

இந்தியாவில் எய்ட்ஸ்: கசப்பான உண்மையை உலகறியச் செய்த தமிழ் மருத்துவ மாணவி

நிர்மலா
Image captionநிர்மலா
கட்டுப்பாடான இந்திய சமூகத்தில் ஹெச்ஐவி தொற்று ஏற்பட்டு, எய்ட்ஸ் வருவதற்கு வாய்ப்பே இல்லை என்று எண்ணப்பட்டு வந்த நேரத்தில், தன்னுடைய மருத்துவ ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பிக்க எடுத்த முயற்சி, இந்தியாவில் எத்தகைய திருப்புமுனையை ஏற்படுத்தியது என்பது பற்றி மருத்துவர் நிர்மலா நினைவுகூர்கிறார்.
முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் 6 பாலியல் தொழிலாளர்களுக்கு ரத்தப் பரிசோதனையில் ஹெச்ஐவி தொற்று இருப்பதை உறுதி செய்து, இந்தியாவிலும் ஹெச்ஐவி தொற்று பரவி இருப்பதைக் கண்டறிந்தபோது, அந்நோய் பற்றிய அச்சம் உச்சநிலையை அடைந்தது.
இளம்பெண் ஒருவரின் முயற்சிகளால்தான் இந்த ஹெச்.ஐ.வி தொற்றை கண்டறிய முடிந்தது. ஆனால், இப்போது அவருடைய கன்னி முயற்சிகள் அனைத்தும் மறக்கப்பட்டுவிட்டன என்றுதான் கூற வேண்டும்.
ஹெச்ஐவி / எய்ட்ஸ் பரவலை கண்டறிய முதலில் பரிந்துரைக்கபட்டபோது நிர்மலா செல்லப்பன் எவ்வாறு அதனை முன்னெடுத்துச் செல்வது என்பது பற்றி தெரியாமல் தவித்தார்.
ஆய்வு
Image captionஆய்வகத்தில்
1985 ஆம் ஆண்டின் முடிவில் சென்னை மருத்துவ கல்லூரியின் நுண்ணுயிரியல் மாணவியான 32 வயதான நிர்மலா, தன்னுடைய ஆய்வறிக்கையை சமர்ப்பிப்பதற்கு தலைப்பைத் தேடி கொண்டிருந்தார்.
இந்தியாவில் ஹெச்ஐவி பரவல் ஏற்பட்டிருக்கிறதா என்பதை ரத்த மாதிரிகள் சேகரித்து, பரிசோதனை செய்து கண்டறியும் ஆலோசனையை அவருடைய பேராசிரியரும், ஆசானுமாகிய மருத்துவர் சுனிதி சாலமன் வழங்கினார்.
அமெரிக்காவில் எய்ட்ஸ் பற்றிய சோதனையும், கண்காணிப்பும் 1982 ஆம் ஆண்டு தொடங்கியது. இந்தியாவின் சுகாதார அதிகாரிகள் இதுபற்றிய எவ்வித முயற்சியும் 1985 ஆம் ஆண்டு வரை எடுக்கவில்லை.
ஒருவேளை எய்ட்ஸ் இந்தியாவில் பரவி இருந்தால், தாங்கள் தூங்கிக் கொண்டிருப்பதாகக் கூறப்படும் விமர்சனத்தில் மாட்டிகொள்வதற்கு இந்தியாவிலுள்ள மருத்துவ அதிகாரிகள் விரும்பவில்லை என்பதுதான் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்காமல் இருந்ததற்கு காரணமாகும்.
அந்நேரத்தில், இந்தியாவில் இந்தத் தொற்று பரவி இருக்கிறது என்பது எண்ணிக்கூட பார்க்க முடியாத ஒன்றாகத்தான் கருதப்பட்டது என்று கூறும் நிர்மலா, அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகளை அதிர்ச்சியும், ஆச்சரியமும் கலந்து பிபிசியின் கீதா பாண்டேவிடம் பகிர்ந்து கொண்டார்.
பாலியல் உறவு சுதந்திரமும், ஓரினச்சேர்க்கையும் அதிகமாக இருந்த மேற்குலக நாடுகளின் ஒழுக்கக் கேடுகளால் உருவானதே இந்த நோய் என்று இந்திய ஊடகங்கள் அந்நேரத்தில் எழுதி வந்தன.
மறுபக்கம் இந்தியர்கள் இயல்பான வேற்றுப்பாலின உணர்வு கொண்டவர்கள் என்றும், ஒருவனுக்கு ஒருத்தி என வாழ்கிறவர்கள் என்றும், கடவுளுக்கு அஞ்சுபவர்கள் என்றும் சுட்டிக்காட்டப்பட்டனர்.
நிர்மலா
Image captionநிர்மலா
இந்த நோய் இந்தியாவில் பரவுவதற்குள் அமெரிக்கர்கள் அதனை குணப்படுத்துவதற்கு மருந்து கண்டுபிடித்து விடுவார்கள் என்றும் சில பத்திரிகைகள் மிகவும் பெருமையாக வெளியிட்டிருந்தன.
மேலும், சென்னை நகரமும், தமிழ்நாட்டைச் சுற்றியுள்ள பகுதிகளும் மிகவும் பாரம்பரிய சமூகங்கள் நிறைந்தவைகளாக பார்க்கப்பட்டன.
ஒழுக்கக்கேடு மிக்க நகரமாக கருதப்பட்ட மும்பையிலிருந்து நூற்றுக்கணக்கான ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, இந்தியாவின் மேற்கு பகுதியில் அமைந்திருக்கும் நகரான புனேயின் நச்சுயிரியில் நிறுவனத்தில் ஏற்கெனவே பரிசோதனை செய்யப்பட்டிருந்தன. அதுவரை எய்ட்ஸ் நோய் அறிகுறி இருந்ததற்கான எந்தவித அடையாளமும் தென்படவில்லை.
இத்தகைய பின்னணியில், நிர்மலா இது தொடர்பான சோதனைகளை மேற்கொள்ளத் தயங்கியதில் வியப்பு எதுவும் இல்லை.
"இதில் கிடைக்கக்கூடிய முடிவு எதிர்மறையாகத்தான் இருக்கும் என்பதில் மிகவும் உறுதியாக இருக்கிறேன் என்று நான் மருத்துவர் சாலமனிடம் கூறினேன்" என்கிறார் நிர்மலா
இருப்பினும், மருத்துவர் சாலமன் அது தொடர்பாக ஒரு முயற்சியை மேற்கொண்டு தான் பாாக்கலாமே என்று தன்னுடைய மாணவியை தூண்டினார்.
ரத்தம்படத்தின் காப்புரிமைSPL
Image captionரத்தப் பரிசோதனை
அதிக ஆபத்து நிறைந்த குழுக்களாக எண்ணப்பட்ட பாலியல் தொழிலாளர்கள், ஒரு பாலுறவுக்காரர்கள் மற்றும் ஆப்ரிக்க மாணவர்கள் ஆகியோரிடம் இருந்து 200 ரத்த மாதிரிகளை நிர்மலா சேகரித்து பரிசோதனை செய்வார் என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால், அது எளிதான வேலையாக இருக்கவில்லை.
இதற்கு முன்னதாக, ஒரு விலங்கினத்திடம் இருந்து இன்னொரு விலங்கினத்திற்கு பரவிய மஞ்சள் காமாலை (லெப்டோஸ்பைரோஸிஸ்) பற்றிய பிரிவில் நிர்மலா பணியாற்றியிருந்தார்.
அதாவது, நாய்களிடம் இருந்து கொறித்து உண்ணும் பிராணிகளுக்கு பரவிய பாக்டீரியா நோய் தொற்று பற்றி பணிபுரிந்து வந்ததால் ஹெச்ஐவி அல்லது எய்ட்ஸ் பற்றி எதுவும் நிர்மலாவுக்கு தெரியாது.
சிவப்பு விளக்கு மாவட்டங்களை கொண்டிருக்கும் மும்பை, டெல்லி மற்றும் கொல்கத்தா நகரங்களைத் தவிர தன்னுடைய ஆய்வுக்குத் தேவையானோரை எங்கே கண்டறிவது என்பது பற்றியும் அவருக்கு எந்த சிந்தனையும் அப்போது இருக்கவில்லை.
சென்னையில் பாலியல் தொழிலாளர்கள் இருப்பதற்கான குறிப்பான இடங்கள் எதுவும் இருக்கவில்லை.
சென்னை
Image captionஆய்வின் மையப்புள்ளி - தமிழக தலைநகர் சென்னை
எனவே, பால்வினை நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த சென்னையின் அரசு பொது மருத்துவமனைக்கு நிர்மலா அடிக்கடி செல்லத் தொடங்கினார்.
"அங்கு பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்த ஓர் இணையோடு (ஜோடியோடு) பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் தான் பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்த பிறரை நிர்மலாவுக்கு சுட்டிக் காட்டினர்.
அவர்களுடைய படிவங்களை பார்த்தபோது, பலவற்றில் "வி ஹோம்" என்று எழுதப்பட்டிருந்ததை பார்த்தேன். அதனை பற்றிக் கேட்டபோது, அது விலைமாதர்களையும், கைவிடப்பட்ட பெண்களையும் அதிகாரிகள் தடுத்து வைக்கின்ற "கண்காணிப்பு இல்லம் (விஜிலன்ஸ் ஹோம்)" என பொருள்படுவதாக என்னிடம் தெரிவிக்கப்பட்டது".
பணத்திற்காக பாலுறவு கொள்வது இந்தியாவில் அப்போதும், இப்போதும் சட்டத்திற்கு புறம்பானது. எனவே இவ்வாறான பெண்கள் கைது செய்யப்படுவர். பிணை பெறுவதற்கு பணம் செலுத்த முடியாமல் இருப்பதால் இத்தகைய தடுப்பு இல்லங்களுக்கு அனுப்பப்படுவர்.
அதனால், ஒவ்வொரு நாள் காலையிலும், வேலைக்கு செல்வதற்கு முன்னால், நிர்மலா இந்த தடுப்பு இல்லத்தில் இறங்கி பாலியல் தொழில் செய்வோரை சந்தித்து விட்டு, அதன் பிறகு வேலைக்கு செல்ல தொடங்கினார்.
சிறியதொரு கிரமத்தில் பாரம்பரிய குடும்பத்தில் வளர்க்கப்பட்ட அவர் திருமணம் முடித்து இரண்டு குழந்தைகளுக்கு தாயானவர்.
"நான் பொதுவாக அதிக கூச்ச சுபாவம் உள்ளவள். தமிழ்தான் பேசுவேன். அமைதியான வாழ்க்கையை விரும்பினேன்" என்று நிர்மலா தெரிவிக்கிறார்.
ஆனால், அவர் கடந்து வந்த இந்த பாதையின் ஒவ்வொரு அடியிலும் அவருடைய கணவர் வீரப்பன் ராமமூர்த்தியால் அவர் ஊக்குவிக்கப்பட்டார்.
தங்களுடைய தொழில்முறை வாழ்க்கையை தொடங்கிய அந்த இணையிடம், இதற்காக ஒதுக்குவதற்கு பண வசதி இருக்கவில்லை. எனவே, அவருடைய கணவர் தினமும் தன்னுடைய மோட்டர் சைக்கிளில் தடுப்பு இல்லத்தில் இறக்கிவிட்டு உதவியதால், பேருந்து கட்டணத்தை சேமிக்க முடிந்தது.
கணவர் வீரப்பன் ராமமூர்த்தியுடன்
Image captionகணவர் வீரப்பன் ராமமூர்த்தியுடன்
மூன்று மாதங்களாக அவர் 80 மாதிரிகளைத் தான் சேகரித்து இருந்தார். கையுறையோ, பாதுகாப்பு கருவிகளோ எதுவும் இல்லை.
அந்த பாலியல் தொழிலாளர்களுக்கு அவர் எதற்காக பரிசோதனை செய்து வருகிறார் என்று எதுவும் தெரியாது.
"நான் எய்ட்ஸூக்காக சோதனை செய்து வருகிறேன் என்று சொல்லவில்லை. அவர்கள் அனைவரும் படிக்காதவர்கள். நான் எய்ட்ஸூக்காக சோதனை செய்கிறேன் என்று சொல்லி இருந்தால் கூட அவர்களுக்கு எதுவும் புரிந்திருக்காது. பால்வினை நோய்கள் பற்றி ஆராய்வதற்காக நான் ரத்த மாதிரிகள் எடுப்பதாக அவர்கள் நினைத்தனர்".
இதய மற்றும் நுரையீரல் அறுவை சிகிச்சை மருத்துவரை திருமணம் செய்திருந்த மருத்துவர் சாலமன், நிர்மலாவின் கணவர் வீரப்பன் ராமமூர்த்தி, நண்பர்கள் என பலரிடம் இருந்து கடன் வாங்கிய கருவிகளைக் கொண்டு, எடுத்துச் செல்லக்கூடிய எளிய சிறிதொரு நடமாடும் ஆய்வகத்தை நிர்மலா உருவாக்கினார்.
அவருடைய பரிசோதனை வழிமுறையின் முக்கிய பகுதியாக இருந்த ரத்தத்திலிருந்து, ரத்த நீரை பிரித்தெடுப்பதை தான் உருவாக்கிய ஆய்வகத்தில் அவர் மேற்கொண்டார்.
பதப்படுத்தி உறைநிலையில் வைத்துக்கொள்ள நல்ல சேகரிப்பு வசதி இல்லாததால் தன்னுடைய வீட்டில் வைத்திருந்த குளிர் சாதனப் பெட்டியில் நிர்மலா அவற்றை வைத்திருந்தார்.
சென்னையில் எலிசா பரிசோதனை வசதி இல்லாமல் இருந்ததால் 200 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த வேலூர் கிறிஸ்தவ மருத்துவ கல்லூரியில் இந்த மாதிரிகள் அனைத்தும் பரிசோதனை செய்யப்பட மருத்துவர் சாலமன் ஏற்பாடுகளைச் செய்தார்.
"1986 ஆம் ஆண்டு ஒரு நாள் தன்னிடம் இருந்த இரத்த மாதிரிகளை எல்லாம் ஒரு ஜஸ் பெட்டியில் வைத்து எடுத்துக்கொண்டு காட்பாடி ரயிலில் இரவு ஏறினோம். அங்கிருந்து ஒரு தாணி (ஆட்டோரிக்ஷா) பிடித்துக்கொண்டு கிறிஸ்தவ மருத்துவ கல்லூரிக்கு சென்றோம்"
அங்கு நச்சுயிரியல் துறையின் இயக்குநர் ஜேக்கப் டி. ஜான், மருத்துவர் நிர்மலாவுக்கு உதவுவதற்கு பி.ஜார்ஜ் பாபு மற்றும் எரிக் சிமோயஸ் ஆகிய இரு இளைய மருத்துவர்களை பணித்தார்.
அடுத்து என்ன நடந்தது என்பதை பார்ப்பதற்கு முன்னால், ஹெச்ஐவி / எய்ட்ஸ் ஆகியவற்றை பற்றி அறிந்து கொள்வோம்.
எய்ட்ஸ்
Image captionஎய்ட்ஸ் இலச்சினை
ஹெச்ஐவி / எய்ட்ஸ் என்பது என்ன?
ஹெச்ஐவி (மனித நோய் எதிர்ப்பை குறைக்கும் நச்சுயிரி - HIV) என்பது கனித உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு அமைப்பை பாதிப்படையச் செய்து, நோய் தொற்றுக்களையும், நோய்களையும் எதிர்த்து போராடுகின்ற திறனை பலவீனப்படுத்துவதாகும்.
பாதுகாப்பு இல்லாத பாலுறவு, நோய் தொற்றிய ஊசிகளை பகிர்ந்து கொள்வது, ஹெச்ஐவி தொற்று இருக்கின்ற தாயிடம் இருந்து பிறக்கின்ற குழந்தைகளுக்கு, பிறப்பு மற்றும் தாய்ப்பாலுட்டுதல் ஆகியவற்றால் ஹெச்ஐவி பரவுகிறது.
இதற்கு மருந்துகள் இல்லை. இந்த தொற்று இருப்போர் பெரும்பாலும் எவ்வளவுக்கு நீண்ட மற்றும் ஆரோக்யமான வாழ்க்கை வாழ்வதற்கு மட்டுமே சிகிச்சைகள்அளிக்கப்படுகின்றன. குணப்படுத்த முடியாது.
வாழ்க்கையை முடித்துவிடும் நோய் தொற்றுகளை எதிர்த்து போராட முடியாத ஹெச்ஐவியின் கடைசி நிலையே எய்ட்ஸ்.
நெஞ்சை உறைய வைத்த நேரம்
"காலை 8.30 மணிக்கு நாங்கள் பரிசோதனையை தொடங்கினோம். மதிய வேளையில் மின் துண்டிப்பு ஏற்பட்டது. அதனால் தேனீர் அருந்த இடைவேளை எடுத்துச் சென்றோம். திரும்பி வந்தபோது, மருத்துவர் ஜார்ஜ் பாபுவும் நானும் முதலில் ஆய்வகத்தை சென்றடைந்தோம்" என்று நிர்மலா நினைவு கூர்கிறார்.
"மருத்துவர் ஜார்ஜ் பாபு மூடியை திறந்தார். திறந்த வேகத்தில் மூடினார். 'விளையாடாதே' என்று என்னை எச்சரித்தார். அங்கே ஆறு ரத்த மாதிரிகள் மஞ்சளாக மாறியிருந்ததை என்னால் காண முடிந்தது. நான் அதிர்ச்சியடைந்து உறைந்து நின்றேன். இது போல் நடக்கும் என்று நான் துளியும் எதிர்பார்க்கவில்லை".
ஒரு நிமிடத்திற்கு பின்னர் சிமியோஸ் உள்ளே வந்தார். அவரும் முடிவுகளை சோதனை செய்தார். "சில முடிவுகள் ஹெச்ஐவி தொற்று இருப்பதை காட்டுகின்றன" என்று கூறிவிட்டு, மருத்துவர் ஜானை அழைக்க அறைக்கு ஓடினார்.
இனி ஹெச்ஐவி தொற்று இருப்பதாக அவர் அந்த ரத்த மாதிரிகளை பார்த்துதான் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இருக்கவில்லை. அவர்களின் முகமே அதனைக் காட்டி கொடுத்தது.
"இந்த ரத்த மாதிரிகளை எங்கே சேகரித்தீர்கள்" என்று மருத்துவர் ஜான் நிர்மலாவிடம் கேட்டார்.
சென்னைக்கு திரும்புவதற்கு முன்னால், நிர்மலாவும், அவருடைய கணவரும் ரகசிய இடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு அறிவுறுத்தப்பட்டனர்.
"இது உணர்வலைகளை எழுப்பக்கூடிய விடயம். இதனை யாரிடமும் வெளிப்படுத்த வேண்டாம் என்று அறிவுத்தப்பட்டோம்" என்று ராமமூர்த்தி கூறுகிறார்.
சென்னைக்கு திரும்பியவுடன் மருத்துவர் சாலமன் அலுவலகத்திற்கு சென்ற நிர்மலா, அந்த செய்தியை அவரிடம் மட்டும் தெரிவித்தார்.
வாசிப்பு
Image captionவாசிப்பதில் ஆர்வம் அதிகம்
உடனடியாக அந்த தடுப்பு இல்லத்திற்கு சென்றார்கள். இந்த முறை மருத்துவர்கள் சாலமன், பாபு மற்றும் சிமியோஸ் ஆகியோரும் உடன் வந்திருந்தனர்.
அவர்கள் இணைந்து அந்த ஆறு பெண்களிடம் இருந்து மீண்டும் ரத்த மாதிரியை சேகரித்தனர்.
மருத்துவர் சிமியோஸ் அந்த ரத்த மாதிரிகளைக் கொண்டு அமெரிக்கா பறந்து சென்றார். அங்கு மேற்கு போல்டில் நடைபெற்ற பரிசோதனையில் ஹெச்ஐவி தொற்று எய்ட்ஸ் - உண்மையை உலகறியச் செய்த தமிழ் மருத்துவ மாணவிஉண்மையிலே இந்தியாவை வந்தடைந்து பரவி வருவது உறுதியானது.
இந்த கவலைக்குரிய செய்தி இந்திய மருத்துவ ஆய்வுக் கவுன்சிலுக்கு உடனடியாகத் தெரிவிக்கப்பட்டது.
அப்போதைய இந்திய பிரதமர் ராஜிவ் காந்திக்கும், அப்போதைய தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் ஹெச். வி. ஹண்டேவுக்கும் இச்செய்தியை இந்திய மருத்துவ ஆய்வுக் கவுன்சில் அறிவித்தது.
மருத்துவர்கள் நிர்மலாவும், சாலமனும் பார்வையாளர்கள் அரங்கில் வீற்றிருக்கையில் மே மாதம் சட்டப்பேரவையில் அமைச்சர் ஹண்டே இந்த செய்தியை அறிவித்தார்.
தொடக்கத்தில் மக்கள் யாரும் இதனை நம்பவில்லை. சிலர் பரிசோதனையை கேள்விக்குட்படுத்தினர். சிலர் மருத்துவர்கள் தவறிழைத்து விட்டனர் என்றனர்.
கடந்த ஆண்டு இயற்கை எய்திய மருத்துவர் சாலமன், மகாராஷ்டிராவில் இருந்து வந்தவர் ஆனதால் தனிப்பட்ட முறையில் அவர் மீது விமர்சனங்கள் பாய்ந்தன.
ஆரவாரமில்லாத வெற்றி
Image captionஆரவாரமில்லாத வெற்றி என்ற தலைப்பில் வெளிவந்த மருத்துவர் நிர்மலா பற்றிய செய்தி
"மக்கள் மிகவும் கோபமாக இருந்தனர். இந்தியாவின் வட பகுதியை சேர்ந்த ஒரு பெண், நாம் மிகவும் மோசமானவர்கள் என்று எவ்வாறு சொல்லலாம் என்று கொதித்தார்கள்.
ஆனால், இதனை அறிய வந்தது முதல் என்னுடைய தாய் உள்பட அனைவரும் அதிர்ச்சியடைந்தோம்" என்கிறார் அவருடைய மகன் சுனில் சாலமன்.
ஆட்சியாளர்கள் எதேதோ பதில்களை சொல்லி கேள்விகளை சந்திக்க முடியாமல் குழம்பிப் போயினர்.
"இந்த சோதனையில் பெரியதொரு பனிக்கட்டியின் நுனியை மட்டுமே அறிய வந்துள்ளோம். நாம் உடனடியாக இறங்கி வேலை செய்தாக வேண்டும் என்று இந்திய மருத்துவ ஆய்வகப் பேரைவையின் இயக்குநர் என்னிடம் கூறினார்" என நிர்மலா தெரிவிக்கிறார்.
பெரிய அளவில் பரிசோதனை மற்றும் ஹெச்ஐவி தடுப்பு திட்டங்களை ஆட்சியாளர்கள் செயல்படுத்த தொடங்கினர்.
தொடர்ந்து வந்த ஆண்டுகளில் ஹெச்ஐவி-எய்ட்ஸ் இந்தியாவில் விரைவாக நாட்டின் எல்லா மூலைகளிலும் பரவிய நோயாக மாறிவிட்டது.
மருத்துவர் நிர்மலா
Image captionமருத்துவர் நிர்மலாவின் ஆய்வு பற்றிய செய்திகள்
பல ஆண்டுகளாக 5.2 மில்லியன் ஹெச்ஐவி தொற்றுடையோர் இந்தியாவில் இருப்பதாக நம்பப்பட்டு வந்த நிலையில், 2006 - ஆம் ஆண்டு கணக்கெடுப்பு அந்த எண்ணிக்கையில் பாதிதான் உள்ளதாக தெரிவிக்கிறது.
இருப்பினும் இன்றும் 2.1 மில்லியன் மக்கள் ஹெச்ஐவி தொற்றுடையோராக இந்தியாவில் வாழ்ந்து வருகின்றனர். இன்று வரை உயிர்க் கொல்லியாக விளங்கும் இந்த நோய்க்கு மருந்து இல்லை.
தன்னுடைய பங்கிற்கு நிர்மலா தன்னுடைய படிப்பை தொடர்ந்தார். தன்னுடைய ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க பரிசோதனை செய்வதாக சொல்லியிருந்த 200 ரத்த மாதிரிகளில் இன்னும் நூறுக்கும் அதிகமானவற்றை அவர் சேகரிக்க வேண்டியிருந்தது.
அடுத்த சில வாரங்களுக்கு பாலியல் தொழில் செய்வோர் மற்றும் ஒரு பாலுறவுக்காரர்களின் தடுப்பு இல்லங்களை சந்திப்பதை நிர்மலா தொடர்ந்தார்.
1987 ஆம் ஆண்டு "தமிழ்நாட்டில் எய்ட்ஸ் கண்காணிப்பு" என்ற தன்னுடைய ஆய்வறிக்கையை சமர்ப்பித்தார். தேர்வுகளில் வெற்றி பெற்று, சென்னையில் இருக்கும் கிங் தடுப்பு மருந்து நிறுவனத்தில் தடுப்பூசி தயாரிப்புத் திட்டத்தில் இணைந்தார். அதிலிருந்து 2010 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றிருக்கிறார்.
மிகவும் திருப்புமுனையாக அமைந்து, இந்தியாவில் ஹெச்ஐவி-எய்ட்ஸ் இருப்பதாக உறுதி செய்யப்பட்டு சரியாக 30 ஆண்டுகளுக்கு பின்னர் நிர்மலாவை அனைவரும் மறந்து விட்டனர்.
அவருடைய வெற்றிகரமான பரிசோதனையைப் பற்றி அவ்வப்போது சில ஊடகச் செய்திகளை தவிர அவருடைய பரிசோதனை பணி பற்றி மிகவும் குறைவான அங்கீகாரமே அவருக்குக் கிடைத்திருக்கிறது.
உங்களுக்கு போதுமான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று எப்போதாவது உணர்ந்தது உண்டா?
"நான் ஒரு கிராமத்தில் வளர்க்கப்பட்டவள். இத்தகைய விடயங்கள் பற்றி யாரும் உணர்ச்சிவசப்படவோ அல்லது மனம் நொந்து போகவோ மாட்டார்கள். எனக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்ததில் மிகவும் மகிழ்கிறேன். நான் சமூகத்திற்காக ஏதோ செய்திருக்கிறேன்" என்று மன நிறைவுடன் நிதானமாகப் பதிலளித்தார் நிர்மலா.