இது மனித குலத்தின் ஒரு நுட்பமான கூறு: கவிஞர் தணிகை
நான் ஒன்றும் துறவியோ ஞானியோ அல்ல. ஆனாலும் அவ்வப்போது மானுட சக்திக்கு மீறிய ஒரு ஓசையற்ற ஒலி ஒன்று என்னை வழி நடத்துவதை அவ்வப்போது குறிப்பிடுவதுண்டு. உடனே மன நிலை பற்றி எல்லாம் பேச ஒன்றுமில்லை. நான் தியான வழிப் பாதையில் சுமார் 34 ஆண்டுகளாக உள் புகுந்து பயணம் சென்று கொண்டிருப்பவன். அதாவது 1985 ஜனவரி 5 முதல்.
நேற்று எடுத்துக்காட்டாக இரண்டு விடயங்கள். சில சமயம் அவற்றையும் நான் மீறிச் செல்வதுமுண்டு அதனால் கிடைக்கும் பாதிப்பை விளைவு அனுபவமாக எடுத்துக் கொள்வதுமுண்டு.
ஒன்று: புரை நீக்கு அறுவை சிகிச்சை முடித்து சரியாக ஒரு வாரம் ஆன நிலையில் பணிக்குச் சென்றிருந்தேன். அதற்கான பேருந்தின் பயணம் சுமார் 100 நிமிடம் வரை இருக்கும் போக வர சுமார் 3 மணிகள் ஆகலாம். அது மட்டுமின்றி மிக கடுமையான வெயில். எனது பணி இருப்பிடத்தில் எனது வரவேற்பு மேசையுடனான இருக்கை திறந்த வெளியில் இருப்பது போல் காற்றின் போக்கில் தூசும், மண் துகள்களும் எளிதில் அடையும் வண்ணமே இருக்கும். இதை எல்லாம் மீறி சொட்டு மருந்தை எடுத்துக் கொண்டு அங்கேயே சில சொட்டுகள் விட்டுக் கொண்டு பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தேன். இதனிடையே வழக்கமாக வேம்படிதாள அரசு மருத்துவமனைக்கு செவ்வாய், வியாழன்களில் வழக்கமாக செல்லும் முகாமையும் அடியேன் தான் ஒருங்கிணைப்பு செய்வது வழக்கம். கண் மருத்துவரும் அறுவை சிகிச்சை செய்து பத்து நாள் ஆகிவிட்டதா என்று கேட்டார் இல்லை என்றேன்.
அவரின் அறிவுரையை பெற்றுக் கொண்டு இருசக்கர வாகனத்தில் சுமார் இரண்டு கி.மீ நண்பர் சந்திரனுடன் சென்றுவிட்டு வரும்போது அந்த பேருந்து நிறுத்தத்தில் சாதாரணமாக நிற்காத பேருந்துகளிடம் மன்றாடிவிட்டு ஒரு நகர் புற பேருந்து மூலம் வந்து சேர்ந்தேன். மதியம் சுமார் 12 மணியளவிற்கு முன்பே : ஒருவாரம் லீவு போடப் போறே...என ஒரு வாசகம் வந்திருந்தது.எனக்குள்ளிருந்தா எனக்கு வெளியிலிருந்தா மரு.கிரிஜா ஆதித்யா கேட்ட கேள்விக்கு அதாவது இவை எல்லாம் எங்கிருந்து கிடைக்கிறது என்று கேட்டுப் பார்த்தீர்களா என்ற கேள்விக்கு பதில் இன்னும் தெளிவாக கிடைக்கவில்லை. தெளிவாகவும் இல்லை. ஆனால் எனக்கு வெளியிலிருந்தும் கிடைக்கிறது என்பது மட்டும் தெளிவாகச் சொல்ல முடிகிறது
பொதுவாகவே நான் எவரின் சொல் பேச்சையுமே கேட்காதவன். கல்லூரி சென்றவுடன் சிலர் எப்போது அறுவை சிகிச்சை நடந்தது...,ஏன் இன்னும் கொஞ்ச நாள் ஓய்விலிருக்கலாமே...உடனே ஏன் வரவேண்டும் என்ற கருத்துகளை தெரிவித்தபடியே இருந்தனர்.
அதற்கேற்றாற் போல ஒரு மூத்த மருத்துவப் பேராசிரியர்: நீங்கள் பணி புரிவது மருத்துவமனை சார்ந்த பகுதி எனவே கிருமித் தொற்று ஏற்படுவது எளிது இப்படி ஏன் அவசரமாக வர வேண்டும் போங்கள் சார் இன்னும் ஒரு வாரம் லீவு போட்டு விட்டு நன்றாக ஓய்வெடுத்து விட்டு வாருங்கள் சார் என்றார் அவர் சொல்லியது ஏற்புடயதாகவே இருக்க மறுக்க முடியவில்லை.
ஆக அடுத்து மகனிடம் பேசும்போதும் கூட முடிவெடுக்காமலேயே இப்படி நிலை இருக்கும்போல இருக்கிறதே என்று உறுதிப்படுத்தாமலேயே சொன்னேன்.
இவைக்கேற்றாற்போல மதியம் 2 மணி சுமாருக்கு கண் எரிச்சல் ஆரம்பித்தது. அது மருத்துவர் ஒருவர் ஏ.சி. காரில் என்னைக் கொண்டுவந்து குரங்குச் சாவடியில் இறக்கும் வரை நீடித்து நான் செய்தது சரிதான் என்று சற்றேறக் குறைய இருந்த தீர்மானத்துக்கு முற்றுப் புள்ளி வைத்தது.
ஆக அடுத்த செய்ய வேண்டியது ஒரு வடிவத்துக்கு வந்தது. முதல்வர் இல்லா நிலையில் அவர் வந்த பின் சொல்லி விட்டு விடுமுறை எடுத்துக் கொள்ளலாமே என்ற கல்லூரி நிர்வாகி ஒருவரின் சொல்லையும் கடந்து செல்ல வேண்டிய நிலையில் அதைக் கவனத்துடன் பரிசீலித்து அவற்றுக்கு செய்ய வேண்டிய முறைகளை செய்து மருத்துவ விடுப்பை எடுத்துக் கொண்டேன்
அதாவது அந்த முடிவு என்னால் எடுக்கப் பட்டது அல்ல என்ற போதிலும்... அது ஏற்கெனவே எடுக்கப்பட்டிருந்தது... அதன் வழியே நான் வந்த வண்ணமே இருக்கிறேன் இது இன்று நேற்றா அல்ல பல்லாண்டுகளாக இப்படித்தான்...
சரி அதை விடுங்கள் அதே நாளில் நேற்று வீடு வந்து சுமார் 5 மணிக்கு பேருந்தில் தான் வந்து சேர்ந்தேன்.
சரி ஐந்து மணிக்கு வந்து விட்டோமே வழக்கமாக போகும் நடைப்பயிற்சிக்கு செல்வோமே என்று நினைக்கும்போதே: போவாதரா....(போகாதே என்ற பொருள்): என்று ஒரு சொல் தடுக்கி விட...சிறிது நேரம் தியானக் களம் புகுந்து அமைதியாக அமர்ந்து அந்த நேரத்தைக் கடத்த ஆரம்பித்தேன்.
ஏன் எனில் என் வாழ்வில் தியானமும், நடைப்பயிற்சியும் வாழ்வில் இரண்டறக் கலந்தவை. ஒன்று உடல் நலத்துக்கு மேலும் மாலை அந்த நேரத்தில் எங்கள் வீட்டில் என்னை மட்டுமே தேடி வந்து கொசுக்களிடமிருது தப்பிக்க மாலையில் அவசியம் நான் நடைப்பயிற்சிக்கு கிராமிய சாலைகளில் சென்று வருவேன் அதற்கு சுமார் இரண்டு மணி நேரம் ஆகிவிடும்.
இப்படி இருப்பதை ரத்து செய்துவிட்டு வீட்டில் இருக்கும் நேரத்தில் மூத்த சகோதரியின் மகன் வெளியூரிலிருந்து எனை வந்து பார்க்க வந்திருந்தார். அவரும் வரப் போகிறேன் என்று சொல்லாமலும், நானும் இருக்கிறேன் என்று சொல்லாமலும் இந்த சந்திப்பை நிகழ்த்த அந்த இயற்கையான வார்த்தை ஏற்பாடு செய்திருந்தது...நான் நடைப்பயிற்சிக்குச் சென்றிருந்தால் நான் இல்லாத நேரத்தில் எம்.ஜி.ஆர் ஆம் அவரது தாய்தந்தை இவரது முதல் எழுத்தைச் சேர்த்தால் அதுதான்...நமது எம்.ஜி.ஆர் எமாந்திருப்பார் அவருக்கு ஒரு ஏமாற்றம் அல்லது காத்திருக்க வேண்டிய சூழல் நிகழ்ந்திருக்கும்.
இவை இரண்டும் அடுத்தவரைப் பொறுத்துப் பார்க்க சிறிய சிறிய அற்ப விடயமாகத் தோன்றலாம். ஆனால் இந்த நுட்பமான செய்திகள் வாழ்வின் இருள் பயணத்தின் போது நல்ல ஒளிப்புள்ளிகளாக விளங்கி என்னை வழி நடத்தி வருவதை என்னால் உறுதியாக கூற முடிகிறது. எனவே பல சமயங்களில் பலரும் இவன் எப்படி இயங்குகிறான் புதிராக இருக்கிறதே என்று எனது தீர்மானங்களில் குழம்புவார்கள்...நான் இயங்கினால் தானே...நான் இயக்கப்படுகிறேன் என்று சொல்வதுதானே பொருந்தும்.
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:
Post a Comment