Thursday, February 21, 2019

மேச்சேரி ஒன்றியம் நரியனூர் ஊராட்சி இடை நிலைப்பள்ளியில் பல் மருத்துவ பரிசோதனை முகாம்: கவிஞர் தணிகை

மேச்சேரி ஒன்றியம் நரியனூர் ஊராட்சி இடை நிலைப்பள்ளியில் பல் மருத்துவ பரிசோதனை முகாம்: கவிஞர் தணிகைபாலமுருகன் கலை அறிவியல் கல்லூரியின் இந்த ஆண்டு தேசிய மாணவர் சேவைத் திட்டத்தின் கீழ் மேச்சேரி ஒன்றியம் நரியனூர் இது மல்லி குந்தம் அருகே உள்ளது.... மேச்சேரியிலிருந்து பென்னாகரம் சாலையில் சென்று மல்லிகுந்தம் பிரிவு சாலை வழியே மல்லி குந்தத்தை அடுத்து இந்த ஊர் உள்ளது. சிறிய கிராமம்தான்.

இந்த இடைநிலைப்பள்ளியைத் தேர்ந்தெடுத்து பாலமுருகன் கலை அறிவியல் கல்லூரி மாணாவர் சேவைத் திட்ட முகாமை 14 பிப்ரவரி முதல் 20 பிப்ரவரி வரை நடத்தியது

அதில் 18 பிப்ரவரியின் திங்கள் அன்று எமது விநாயாகா மிஷன்ஸ் சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரியின் பல் பரிசோதனை முகாம் நடத்தியது
Image may contain: 7 people, crowd
கலைக்கல்லூரியின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சரவணன் வழியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த முகாமில் எமது கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் பேபிஜான் அனுமதியின் பேரில் பொது பல் சுகாதாரத்துறையின் தலைவர் என் சரவணன் வழிகாட்டுதலின் பேரில் மருத்துவர் பரத் தலைமையில் 6 மருத்துவர்கள் கலந்து கொண்டு சுமார் 150 பள்ளி மாணவ மணவியர்க்கும் சுமார் 150 கல்லூரி இரண்டாம் ஆண்டு தேசிய சேவை மாணவ மாணவியர்க்கும், திருவிழா இருந்த போதும் அதையும் பொருட்பட்டுத்தாமல் முகாமுக்கு வந்திருந்த பொது மக்களுக்கும் பல் பரிசோதனை செய்தனர்.
 முகாம் ஒருங்கிணைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்க்கும் விழிப்புணர்வு உரை வீச்சை வழங்கினேன். பல் மற்றும் வாய் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு கருத்துகளை மருத்துவர்கள் வழங்கினார்கள்

பெரியார் பல்கலையின் கணிதவியல் பிரிவைச் சார்ந்த பேராசிரியர் ஒருவரும்  அன்று எதிர்பாராமல் வந்திருந்து முகாமை சிறப்பித்தார்.
Image may contain: 1 person, sitting and table
முகாமில் கலந்து கொண்ட கல்லூரி மாணவ மாணவியர் முதலில் ஏனோதானோ என்றே இருந்தார்கள். முகாமின் உரையை துணை நிலை இராணுவ வீரர்களின் மௌன அஞ்சலியுடன் ஆரம்பித்த நான் என்னை அடையாளப்படுத்திக்கொள்ளவும் அவர்களின் கவனத்தை ஈர்க்கும் வண்ணமும் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டபோது அதுவும் கலாம் அவர்களின் தொடர்பில் இருந்தவன் என்று தெரிந்தவுடன் கை தட்டி ஆரவாரம் செய்து உரையை எந்தவித இடைஞ்சலும் செய்யாமல் கவனித்துக் கேட்டனர். எனக்கு நான் பேசியதில் , அதுவும் எதிர்பாராமல் பேசியதில் பெரும் திருப்தி. எனக்குத் திருப்தி வந்தது என்றாலே அன்று மிக அருமையாக எனது உரை நேர்ந்தியாக இருந்திருக்கிறது என்றே பொருள்.
Image may contain: 3 people, people standing and indoor
செல்லுமிடம் எல்லாம் எனது கருத்து விதைகளை தூவி வருவதோடு மட்டுமல்லாமல் எமது பல் மருத்துவக் கல்லூரியின் சேவையை விரித்துரைத்து அனைவரையும் பகிர்ந்து கொள்ள வேண்டிக் கொண்டேன்.அனைவர்க்கும் பயனுடைய அரிய நிகழ்வாய் அரிய நாட்களுள் ஒன்றாக அது அமைந்திருந்தது.
Image may contain: 13 people, including Panneerselvan Athiba, people sitting
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Tuesday, February 19, 2019

வீரக்கல் புதூர் பி.என்.பட்டி பேரூராட்சிகளின் குடி நீர்க் கட்டண அநியாய உயர்வு: கவிஞர் தணிகை

வீரக்கல் புதூர் பி.என்.பட்டி பேரூராட்சிகளின் குடி நீர்க் கட்டண அநியாய உயர்வு: கவிஞர் தணிகை

Image result for water bill problem started

வீரக்கல் புதூர் மற்றும் பி.என்.பட்டி பேரூராட்சிகள் ஊராட்சி மன்றங்களில் மிகவும் பெரிய மற்றும் வசூலில் பெரும் தொகை வசூலிக்க வாய்ப்புள்ளவை. இங்கு கெம்ப்ளாஸ்ட் சன்மார், மால்கோ எனர்ஜி (ஸ்டெரிலைட்) போன்ற பெரு நிறுவனங்களும் உள்ளன தங்கள் விருப்பப் படி காவிரியிலிருந்து பெருவாரியான நீரை உறிஞ்சியபடி. அதே நேரத்தில் தனியார் குடிநீர் பாட்டிலிங் கம்பெனிகளும் இருக்கின்றன.

வீரக்கல் புதூர் மற்றும் பி.என்.பட்டியின் விளைநிலங்கள் நிலத்தடி நீர் காற்று, யாவும் இந்த இரசாயனக் கம்பெனிகளின் கழிவால் கெட்டுப்போய் சுமார் 59 ஆண்டுகள் ஆகிவிட்டன.

அதற்காக இழப்பீடாக இந்தக் கம்பெனிகளிடமிருந்துஒரு குறிப்பிட்ட காலன் கொள்ளளவில் குடி நீரை வாங்கி குடி மக்களுக்கு விநியோகிப்பதாக சொல்லி வந்த காலம் மலையேறிவிட‌

பராமரிப்புச் செலவுக்கென குடி நீர்க் கட்டணம் மிகவும் குறைவாக எனச் சொல்லி வாங்கப்பட்டு கடந்த செப்டம்பர் 2018 வரை மாதக் குடி நீர்க் கட்டணாமாக ரூபாய் 50 வசூலிக்கப்பட்டது.

இடையே கட்சி, உறவு, வேண்டியவர், வேண்டாதவர் என பாகுபடுத்தி குடிநீர் விநியோகமும் தெரிந்தும் தெரியாமலும் தவறுகளுடன் நடந்து வந்தன ஏன் சொல்ல்ப்போனால் அலுவலக முறைப்படி இல்லாமல் திருட்டு இணைப்புகளிலும் குடி நீர் திருடப்பட்டன.

அனைவர் வீடுகளிலும் நிலத்தடி தொட்டி கிணறுகள் போலவும், வீடுகள் மேல் பெரிய தொட்டிகளும் இடம் பெற ஆரம்பித்து அதற்கு வேறு ஒரு ஆதாரமும் இல்லாமல் காவிரி நீர் மட்டுமே குடிக்க, துவைக்க, தூய்மை செய்து கொள்ள, குளிக்க போன்ற அனைத்து அன்றாடத் தேவைகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வர வேண்டிய நிர்பந்தம் உள்ளதால் இங்கு மாதமொன்றுக்கு பத்து முதல் பதினைந்து நாட்களுக்கு குடி நீர் வீட்டு இணைப்பு மற்றும் தெரு பொதுக் குழாய்கள் மூலமும் விநியோகிக்கப்பட்டு வந்தன

இந்நிலையில் திடீரென கடந்த அக்டோபர் முதல் குடி நீர் கட்டணம் 220 ரூபாய் வீரக்கல் புதூர் ஊராட்சி மன்றத்திலும் ரூபாய் 200 பி.என்.பட்டி பேரூராட்சியிலும் வசூலிக்கப்படுவதுடன் முன் எப்போதும் கண்டிராத வகையில் தாமதக் கட்டணமும் ரூ. 20 முதல் 150 வரை வசூலிக்கப்பட்டும் வருகின்றன.

சரியாக குடி நீர் வாராத குடி நீர் இணைப்புகளுக்கு சீராக்கும் பந்து வால்வுகள் பொருத்தப்பட்டு குடி நீர் சமமாக சீராக வரும் என்றும் பஞ்சாயத்தாரல் சொல்லி ஆறுதல் படுத்தப்பட்டன.

இத்தனைக்கும் காரணம்  பெரும்பாலான வீடுகளில் மின்சார மோட்டாரை வைத்து அவரவர் வீட்டுக்கு தேவைக்கதிகமான நீரை இழுத்து வைத்து அவரவருடைய வீட்டின் நீர்த் தொட்டிகளில் எவர் வாழ்ந்தால் என்ன இருந்தால் என்ன செத்தால் என்ன என்ற மக்களின் மனப் பாங்கே காரணமாய் விளங்க  மின்சார இணைப்பு இல்லா காலக்கட்டத்தில் குடிநீர் சுமாராக அனைவர்க்குமே வராத இணைப்புகளுக்கும் சிறிது அளவு எட்டிப் பார்க்கவே செய்தது.

யாவற்றையும் அறிந்த அரசு நிர்வாகம் இவர்களை  கட்டுப்படுத்த முடியாமல் மீட்டர் வைத்து நீர் எடுக்கும் அளவை கணக்கெடுத்து பில் அல்லது கட்டணம் வசூலிப்பதற்கும் மாறாக இந்த பால் வால்வுகளை வைத்த்ப் பார்த்தது. அதிலும் குடி நீர் வராத இடங்களுக்கு மட்டுமே வைத்துள்ளது. சிலர் மறுபடியும் பேருராட்சிக்கும் தெரியாமல் அந்த பந்தை எடுத்து விட்டு மறுபடியும் குழாய்களை இணைத்து குடிநீர் எடுத்து வருகின்றனர் என்பதும் செய்தி

இந்நிலையில் அலுவலக நிர்வாகம் இப்படி ஒரேயடியாக ஏழை எளியார்க்கும் இருப்பார்க்கும் இல்லார்க்கும் ஒரே கட்டணமான 220 மற்றும்  200 என மாதமொன்றுக்கு வசூலிப்பதை நூற்றுக்கு 90 சதம் பேர் விரும்பா நிலையில் அதை எதிர்த்து போராட்டங்களும் நடைபெறுவதாக கம்ப்ய்யூனிஸ்ட் கட்சி சார்பாக விளக்க துண்டறிக்கைகள் விழிப்புணர்வூட்டி போராடி வெல்ல அழைப்பு விடுத்தன. ஆனால் வசூல் செய்வது தொடர்ந்தே வருகிறது மேலும் கட்டணத்தை மாதா மாதம் தவறாமல் அலுவலகம் வந்து கட்டியே தீரவேண்டும் என நிர்பந்திக்கின்றன. இல்லையேல் இணைப்பைத் துண்டிப்போம்  எனவும் பயமுறுத்தி வருகின்றன.

கோடை வந்து விட்டது. அணையில் சுமார் 65 அடி நீரே இருப்பு உள்ளது எப்படி கோடையை சமாளிக்குமோ  குடி நீரை இல்லாமல் வறட்சியில் நா வறண்டு போகுமோ என்ற நிலையில் உள்ளது மேட்டூர் காவிரிக்கரையில் இருக்கும் ஊர்கள்...

அதன் ஏழை எளிய மக்கள்

இதற்காக முதல்வர், ஆட்சியர், நுகர்வோர் நீதிமன்றம், நீதிமன்றம் ஆகியவற்றில் கோரிக்கை விடுக்க மக்கள் தயாராகி வருகிறார்கள். நூறு ரூபாய் என்றாலும் நியாயமாக இருக்கும் ஒரேயடியாக 220 ரூபாய் என்பது ஏற்க முடியாததுதானே ஏழை எளியார்க்கு. இதன் அருகாமை ஊர்களில் குடி நீர் வரும் நாட்களின் எண்ணிக்கை குறைவாக இருந்த போதிலும் கட்டணம் 70 ரூ என்றிருக்கும்போது நீரை கையாள் அள்ளியும், துணி துவைத்தும் ஆறுகளில் குளித்து முடித்தும் வந்து கொண்டிருந்த உரிமையுடைய மக்களுக்கு இன்று இந்தநிலை இனி எந்த நிலையோ...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

ஸ்நேகா மும்தாஸ் ஜென்னிஃபர்: கவிஞர் தணிகை

ஸ்நேகா மும்தாஸ் ஜென்னிஃபர்: கவிஞர் தணிகை

Image result for sneha mumtaj jennifer


இந்தியாவில் முதன் முதலாக சாதி மதமற்ற மனிதர் என சான்றிதழ் பெற்ற ஸ்நேகா வழியை எவ்வளவு பேர் தொடர்கிறீர்கள் என அரசுகள் கேட்க வேண்டும்  அவரை முன்னோடியாகக் கொண்ட ஒரு நல்ல சமுதாய  அமைவுக்கு இட்டுச் செல்ல ஆரம்ப அரிச்சுவடியின் சிறு கை விளம்பலாக இதை கொண்டாலும் சரியே.

சான்றிதழ் இல்லாமலேயே நாமெல்லாம் அப்படித்தான் இருக்கிறோம் என்பதெல்லாம் வேறு. குரான், பைபிள், கீதை, புத்தம், ஜைனம் எல்லாம் படிப்பதும் வைத்து மேற்கோள் காட்டி வாழ்வது வேறு. ஆனால் இப்படி அரசு, சட்டம், நீதி யாவற்றுக்கும் அத்தாட்சி நல்குவதாய் அமைந்த வேறுபட்ட‌ இந்த செயலை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

கமல் இந்த விஷயத்தில் அனைவரையும் முந்திக் கொண்டு பார்த்திபராஜா ஸ்நேகா அவர்களை பாராட்டியுள்ளார். பாராட்டுவதோடு மட்டுமல்லாது இவருக்கு மக்கள் அங்கீகாரம் பெற தேர்தலிலும் இவரை நிற்க வைத்து ஒரு ஜனநாயகப் பெருமை பெற்றுத் தரலாம். ஆனால் மக்கள் வாக்களிப்பாரா என்பதுதான் விளங்காத புதிர்.

இவருடைய கணவர், குடும்பம், பெற்றோர் பிள்ளைகள் யாவரையுமே நாம் பாராட்டவேண்டும்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

Sunday, February 17, 2019

எனக்கு எழுத தடையாக இருப்பவை எவை? கவிஞர் தணிகை

எனக்கு எழுத தடையாக இருப்பவை எவை? கவிஞர் தணிகை


Related image

தினமும் பணி ,பயணிகள் ரயில் மறு அறிவிப்பு வரும் வரை ஓடாது என நிறுத்தம், பேருந்தில் சென்று வருவது அவலமாக சோர்வாக மாற்றம்,வந்து உடல் நிலை பேண அலுவலக பையை எடுத்து மதிய உணவு டப்பாக்களை திறந்து வைத்து விட்டு நீர்க் குடுவையை திறந்து வைத்து விட்டு நடைப்பயிற்சி ஆறு மணிக்கும் மேல் சென்றால் எட்டு மணி சுமாருக்கு வீடு திரும்பல். அதன் பின் ஒரு சிறு உடல் கழுவும் குளியல்.

உடல் நலம் இருந்தால்தானே தியானம்..கட்டுகளிலிருந்து விடுபடல், இணையத்தின் தொடர்பு எழுதல் படிப்பு யாவுமே...எனவே  கையில் கட்டிய சுகாதாரப் பட்டை ஹெல்த் பேண்ட் அவசியம் நடைப்பயிற்சி மேற்கொள்ள உதவிட  சுமார் 10000 முதல் 20000 ஆயிரம் அடிகள் குறைந்தபட்சம் 6 கி.மீ முதல் அதிகபட்சம் 10 கி.மீ வரை ஒரு நாளுக்கான நடை...

அதன் பின் எளிய இரவு உணவு.

செய்தி பார்ப்பது இணையத்தில்

இடையே ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் சில அத்தியாயங்கள் படிக்க முயற்சி செய்வது அதுவும் படிக்க முடியாதது சில நாட்களில்

துணைவியின் தொலைக்காட்சி தொடர் தொல்லைகள்

சுமார் 10 மணியானதும் தூக்கம் சொக்க‌

10. 30 மணிக்கு அல்லது 11 மணி வரை தாக்குப் பிடிக்க முயற்சி செய்தாலும் எதுவும் எழுதவே முடிவதில்லை

மறுபடியும் அதிகாலை 4 மணிக்கு தூக்கத்துடன் போராடியபடி  விழித்து எழுந்து விடியல் துணையாக‌ தினமும் எழும் துணைவியின் உணவு தயாரித்தளித்த உதவியுடன் எல்லா உடல் ஓம்பும் முறைகளையும் அனுசரித்து விட்டு சுமார் 6.25 மணிக்கு பேருந்து ஏறி பணிக்கு  பயணம்...மறுபடியும் ஒரு நாள் ஓட்டம்..

கல்லூரியில் அலுவலகப் பணி, நோயாளிகள் குறை தீர்ப்பு, மருத்துவமனை, பள்ளிகள், கல்லூரிகளில் முகாம் பல் பரிசோதனை முகாம்கள் விழிப்புணர்வுக் கூட்டங்கள் ....நண்பர்கள் தரும் அரிய புத்தக இணைவுகள்.. முதல்வருக்கு கல்லூரியில் மேம்பாட்டுக்கு உதவிகரமாக இருத்தல், தமிழில் தேவைப்பட்டால் கடிதங்களின் தேவையை செய்து கொடுத்தல்

இப்படியாக  ஒரு நாளின் ஓட்டம் உடன் மத்திய ரிசர்வ் போலீஸ் 44 பேரின் மரணம், தேர்தலில் நிற்க மாட்டேன் என்னும் ரஜினி, ஸ்டாலினை தன்னை காப்பி அடிப்பதாகச் சொல்லும் கமல்,   வழக்கறிஞர் ஸ்னேகா மும்தாஜ் ஜென்னிபர் இப்படி கேள்விப்படும் செய்தி பற்றி எல்லாம் ஆதரவு தெரிவிக்க வேண்டும், எதிர்ப்பு  தெரிவிக்க வேண்டும் அதைப்பற்றி இதைப்பற்றி எல்லாம் எழுத வேண்டும் என நினைத்துக் கொண்டே நாள் ஓடி மறைய சூட்டோடு சூடாக எழுதினாலே கொஞ்சம் பேர்தான் படிப்பர் சூடு ஆறிய பின் எத்தனை பேர் படிப்பார்கள் இந்த வலைப்பூவில் என்ற நினைவுடன் எழுதாமலே போய்க்கொண்டிருக்கிற நாட்கள்
Related image
இடையே கீதகோவிந்தம் , துப்பாக்கி முனை, மிடில் கிளாஸ் ஆம்பள, ஆண் தேவதை என சினிமாக்கள் தேவையான பணிக்கு மின்னஞ்சல்

சனிக்கிழமையானால் சனி நீராட எண்ணெய்க் குளியல், விட்டுப் போன தியானம், அமைதி சூழல் கண்டு அமர்தல், ஞாயிறு கண்டால் முகமழித்தல் சிகை சீர் செய்தல், கற்றாழை சாப்பிடல், பணிக்குத் தேவையான ஆடைகளை சலவை செய்து வைத்தல், பெரிய காரியம், திருமணம் போன்றவற்றுக்கு தவிர்க்க முடியாதிருந்தால் செல்லல்...

மகன் வந்திருந்தால் அவனோடு சிறு நேரப் பகிர்வு...

என்னை கல்லூரி உள் வாங்கி விட்டது. விடுமுறை என செல்லாமல் இருந்தாலும் அந்த  4 மணி சுமாருக்கு கல்லூரி நினைவோட்டமே மூளையில் ஓட விழித்தபடியே படுத்துக் கிடக்க பிடிக்காமல் இடையே எழுந்து ஏதாவது ஆக்க பூர்வமாக செய்ய முனைவது புழக்கடைப்பக்கம் நாய் மலம் சுத்தம் செய்வது, கீழே விழுந்து கிடக்கும் மர இலைகளைக் கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்வது  இடையில் கொஞ்சம் நேரம் வாட்ஸ் அப் பார்ப்பது அதையும் தொடர்புக்காக சாதனமாக பயன்படுத்துவது

இப்போது கல்லூரி கொடுக்கும்  அந்த ஊதியம் போதாமையால் அவர்கள் கொஞ்சம் கூட இந்த மூன்று ஆண்டுகளில் கல்லாக நின்று கனியாததால் ஒரு நல்ல மனிதரின் தொடர்பாக வாரத்தில் சில மணிகள் ஒரு போலந்திலிருந்து இஸ்கான் வந்துள்ள ஒரு அயல் நாட்டு மனிதருக்கு தமிழ் பயிற்றுவிக்க ஏற்பாடும் செய்ய முனைந்துள்ளேன்...அதனால் கிடைக்கும் சிறு வருவாய் விழுங்கி வரும் பேருந்து செலவுக்கு ஈடு கட்டட்டுமே என்று...மேலும் சகோதரியின் வீடுகளின் வாடைகையும் மாதமொரு நாள் கொண்டு சென்று கொடுக்க சில மணி நேரமும்

இடையே பொது நல போராட்டங்களை கையில் எடுக்க விருப்பமும்...ஆக‌

நாளை நரியனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு மேச்சேரி அருகே மல்லிகுந்தம் வழியில் பாலமுருகன் கலை அறிவியல் கல்லூரியின் தேசிய மாணவர் சேவைத்திட்டத்தின் கீழ் எமது பல் பரிசோதனை முகாமை நடத்தச் செல்ல இருக்கிறோம். விழிப்புணர்வை ஊட்டிக் கொண்டே இருக்கிறோம் அதிக நேர விழிப்புடன் போதுமான ஊதியமோ வரவோ சிறப்பாக பெரிதாக இல்லாமல்...இதன் பேர் என்ன சேவைதானே....எப்போதுமே பராமரிப்புக்கென கிடைப்பது மட்டுமே இயற்கையின் கொடை எனக்கு.
Related image
இடையே வங்கிகள் , அரசு, தொலைபேசி நிறுவனங்கள் கொடுக்கும் தொல்லைகளை களைய முனையும் முயற்சிகள் அதற்கான பயணங்களும்

அட நீ எழுதி மட்டும் என்னய்யா ஆகப்போகிறது என்ன கிழிக்கப் போகிறீர் என்ற உங்களில் சிலர் கேட்பதும் சரிதான். ஆனால் எழுதுவதை சுமார் 50 ஆண்டுக்கும் மேலாக கடைப்பிடித்து வருகிறேன் அதை விட்டு விட முடியாதே சுமார் 180 நாட்களுக்கு கடைபிடிப்பதே ஒரு பெரு வழக்கமாகிவிடும் எனச் சொல்ல இந்த அரிய பழக்கம் என்னை விட்டு விடுமா? எழுதாவிட்டால் எதையோ இழந்தது போல அல்லவா இருக்கிறது...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Monday, February 11, 2019

சேலம் மேட்டூர் மற்றும் சேலம் கரூர் ரயில்களின் ரத்து அப்பட்டமான தனியாருக்கான சுரண்டல்: கவிஞர் தணிகை

சேலம் மேட்டூர் மற்றும் சேலம் கரூர் ரயில்களின் ரத்து அப்பட்டமான தனியாருக்கான சுரண்டல்: கவிஞர் தணிகை


Image result for salem to mettur train cancelled?
56102 சேலத்திலிருந்து மேட்டூர் செல்லும் ரயில் முதலில் 5.30 மாலையில் நேரம் குறித்தபடி செல்ல முடியாமல் 6 மணி வரை கூட எடுக்கப்பட்டு வந்தது ஆனால் நிறைய கூட்டத்துடன்

உடனே அந்த ரயிலை மாலை 5 மணி என்று மாற்றினார்கள்...அதாவது ரயில்வே நேரப்படி 17 .00 மணிக்கு புறப்பட்டு செல்ல ஆரம்பித்தது. அப்போதே இப்படி கால நேரத்தை முன்னதாக வைத்து போக்கு காட்டி விட்டு ஒரு நாள் நிறுத்த இருக்கிறார்கள் என்பது முன் கூட்டியே யூகித்ததுண்டு.

அதே போல கடந்த 4 பிப்ரவரி முதல் சேலம் மேட்டூர் ரயில் மற்றும் சேலம் கரூர் ரயில் நிறுத்தப்பட்டுவிட்டது.

காரணம் ஏதேதோ சொல்லப்படுகின்றன. இயக்க...ஆப்ரேட்டிவ் சிஸ்டம் என்றும் நிறைய அனல்மின் நிலையத்துக்கான ரயில் பெட்டிகள் வந்தபடி இருக்கின்றன என்றும்...

ஆனால் வெட்டியாக காலையில் அந்த ரயிலை  மேட்டூருக்கு அனுப்பி விட்டு மேட்டூரில் வெட்டியாக காலை முதல் மாலை 7 மணி வரை நிறுத்தி அதன்பிறகு  இரவு சுமார்  7 மணிக்கும் மேல் ஏன் எடுத்துச் செல்கிறார் என்பதும் கேட்க வேண்டிய பதில் தெரியாக் கேள்வி.இது பற்றி ரயில்வே ஊழியர்களுக்கும் கேட்கீப்பர்களுக்கும் கூட புரியவில்லை தெரியவில்லை. அவர்களும் பயணிகளான எங்களைப்போலவே இருக்கிறார்கள்.

இதற்கிடையே எனக்கு வரும் 21.02.19 வரை கொடுத்த அனுமதிச் சீட்டு விரயமாகி வருகிறது. கடந்த 4 ஆம் தேதி பிப்ரவரி முதல் ரயில் மறு அறிவிப்பு வரும் வரை ஓடாது என தினசரிகள் மூலம் அறிவிக்கப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளது.

தேர்தல் நெருங்கி வரும் வேளையில் இன்னும் இரண்டு மாதங்களுக்கு ரயில் ஓடாது என்ற செய்திகள் தனியார் பேருந்து முதலாளிகளின் கை வண்ணமே இவர்கள் கட்சிக்காரர்களுக்கு கொடுக்க வேண்டிய தேர்தல் நிதியை இப்படி ரயிலை நிறுத்தி வைத்து கணிசமாக சம்பாதித்துக் கொண்டு கொடுக்கத் தயாராகி உள்ளனர் என்றும் அதற்கு ரயில்வே நிர்வாகம் உடந்தையாகி உள்ளது என்றும் இதுபோல்தான் திருச்சி ரயிலில் நிறைய கூட்டம் இருந்த போதும் அது நிறுத்தப்பட்டது என்றும் மேட்டூர் முதல் சேலம் செல்லும் ரயிலை காலையில் வேண்டுமென்றே கால தாமதம் செய்து கல்லூரி செல்லும் மாணவர்களையும்,அலுவலகம் செல்லும் அலுவலர்களையும் ஏற விடாமல் காலை 8. 40 மணி முதல் 9.15 மணி வரை எடுத்து காலதாமதப்படுத்தி சேலம் செல்லும்போது சுமார் 10.30 செய்துள்ளனர் என்றும் மக்கள் பரவலாக உண்மையை பகிர்ந்து கொள்கின்றனர்.

மேலும் இது குறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சியில் கவிஞர் தணிகையாகிய நான் அப்போதைய எம்.எல்.ஏ வேட்பாளர்கள் ஜி.கே. மணி, எஸ்.ஆர்.பார்த்திபன் முன்னிலையில் பேசியதை ஒலி ஒளி பரப்பினார்கள் என்பதும் செய்திகள்.

ரயிலில் தினசரி செல்லக் கட்டணம்  ஒரு நடைக்கு ரூ. 10, மாதம் ஒன்றுக்கு அனுமதிச் சீட்டு: 185 ரூ, 3 மாத அனுமதிச் சீட்டுக்கு ரூ.500. ஆனால் பேருந்தில் மேட்டூர் சேலம் சேலம் மேட்டூர் ஒரு நடைக்கு ரூ. 35. ஒரு நாளுக்கு சென்று வரவே ரூபாய்: 70.தெரிந்து கொள்ளுங்கள் தனியார் தில்லுமுல்லுகளையும் அரசியல் சேவையையும், ரயில்வே ஊழியத்தையும்.

மறுபடியும் பூக்கும் வரை\
கவிஞர் தணிகை.

Sunday, February 10, 2019

பூனைகள் வெளியே வருகின்றன தேர்தல் முடிந்ததும் உள்ளே சென்று விடும்: கவிஞர் தணிகை

பூனைகள்  வெளியே வருகின்றன தேர்தல் முடிந்ததும் உள்ளே சென்று விடும்: கவிஞர் தணிகை

Image result for cats are politically out for election
போக்குவரத்துக் கட்டண உயர்வு, எரிபொருள் விலை உயர்வு, குடிநீர்க் கட்டண உயர்வு, விலை வாசி உயர்வு இப்படி எல்லா அநீதிகளையும் சாதாரண மக்களுக்கு எதிராக செய்துவிட்டு அவர்கள் வேர்வைத்துளியில் விளைந்த வருவாயையும் கட்டுப்படுத்தி வங்கியில் திட்டங்கள் சட்டங்கள் என்று கொண்டு சென்று முடக்கி விட்டு...

இன்று தேர்தல் வந்துவிட்டது என்று கட்சிகள் காட்சிகள்... பழைய காங்கிரஸ் கிருஷ்ணா பாஜகவின் மேடையில் ராகுலை விமர்சித்து, நமோ மேடையில் சிதம்பரத்தை மறுஎண்ணிக்கை வேட்பாளர் எனச் சொல்லி இருக்க சிதம்பரமோ எப்போருள் யார் யார் வாய்க் கேட்பினும் என்றும் நமோ வோ வெள்ளத்தனைய மலர் நீட்டம் என்றும், திருப்பூர் குமரன் என்றும் காமராஜர் ஆட்சி தம்முடையது என்றும்...

 கமல்ஹாசன் பிரதமர் வருவதை நாம் கேட்க முடியாது வராததை கேட்கமுடியும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரிக்கு பதில் சொல்ல அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை எதிர்த்து அ.இ.அ.தி.முக ஜெயிக்க முடியாது என அவர்கள் சொல்ல, நமோவிடம் சென்று 21 எம்.எல்.ஏ இடைத்தேர்தல் இப்போது வேண்டாமே என அ.இ.தி.மு.க பிரதமரிடம் சொல்ல இருப்பதாகவும் தேர்தல் ஆணையம் அந்த 21 எம்.எல்.ஏவுக்கான இடைத்தேர்தலையும் பாராளுமன்றத் தேர்தலுடன் நடத்தத் தயாராக உள்ளோம் என்றும், மமதாவை மற்றவர்களும்,  சந்திரபாபு நாயுடு பற்றி என்.டி.ஆரை ஏமாற்றியவர் என நமோ சொல்ல... மமதா மாயாவதி, அகிலேஷ் யாதவ், நிதின் கட்காரி, சத்ருஹன் சின்ஹா, ஸ்டாலின், இப்படி எலலாமே பேசுவார்கள் பேசுவார்கள் பேசிக் கொண்டே இருப்பார்கள் மே மே என்று மே மாதம் வரை...


முட்டாள்தனமாக எல்லாவற்றையும் ஏமாற்றிவிட்டு தேர்தல் முடிந்தவுடன் ஆட்சி அதிகாரம் பதவி மந்திரி என இந்தப் பக்கம் இருந்தவர்கள் அந்தப்பக்கம் கூட மாறுவார்கள் எல்லாம் அரசியல்ல சகஜமப்பா என்பார்கள்...மக்களை எல்லாம் முட்டாள்களாக்கிவிட்டு...அது அவர்களுக்கு யோகம் மக்களோ பாவம்...
Image result for cats are politically out for election
சரியான வேடிக்கை காட்சிகள் இனிதான் அரங்கேறும் இன்னும் 3 முழுமாதஙகள் இருக்கின்றனவே...

 முதல்ல குடிக்கறதுக்கு நாடு முழுதும் இருக்கிற அனைவர்க்கும் குடிநீர் வழங்க பாருங்க....

செல்போன் இருக்கிற அளவு ஓய்வறைகள் இது முதலாளித்துவ மொழி கழிவறைகள்  கீழ் தட்டு மொழி...அதுக்கு ஏற்பாடு பண்ண முடியுமான்னு பாருங்க‌...

மருத்துவம், கல்வி, வேலைவாய்ப்பு, ஆரோக்யம்  உணவு, உடை, உறையுள்...போன்ற அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றப் பாருங்க எங்க தேசியக்கொடி ஒசரமாப் பறக்கறதை எல்லாம் ஏற்ற வருவார் எல்லாம்...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

Monday, February 4, 2019

கடவுள் , பணம் இரண்டும் மனித உயிர்க்கு மட்டுமே : கவிஞர் தணிகை

வேதாச்சலம் மறைந்த சேதி கேட்டேன்: கவிஞர் தணிகை
Image result for money and god is only for humanbeings
கடவுள் , பணம் இரண்டும் மனித உயிர்க்கு மட்டுமே தேவைப்படுவதாய் இருக்கிறது.

கொண்டலாம்பட்டி வரை செல்லும்  நகரப் பேருந்தில் அந்த பெரிய கறுப்பு பெரிய பேக் ஆதரவற்று கிடக்க அதை வேறு இரண்டு பேர் எடுத்துச் செல்ல முயல வேதாச்சலம் அதைப் பார்த்து எடுத்து அதைப் பிரித்துப் பார்த்தார். எல்லாம் அவரது ஊருக்கருகே உள்ள பல் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மாணவரது பல் வைத்தியத்துக்கு உதவும் கருவிப் பொருட்களாகவே இருந்தது.

அடுத்த நாள் கல்லூரிக்குத் தேடி வந்து பையை ஒப்படைத்தார். அந்தப் பையே ரூபாய் 500 வரை இருக்கலாம். அதில் உள்ள பொருட்கள் மதிப்பிட்டால் ஆயிரக்கணக்கில் இருக்கும். அதுவும் புதிதாக கொடுக்கப்பட்டுள்ளது மாணவர்களுக்கு என அந்தப் பொருட்களைப் பார்க்கும்போதே தெரிய வந்தது.

பைபை ஒப்படைத்தார் பொது உறவு அலுவலரிடம். அப்போது கல்லூரியின் முதல்வரும் வரவே அவரைப் பாராட்டினார் கை குலுக்கி.

அவருக்கு ஏதாவது செய்ய வேண்டுமே என மறுபடியும் வந்து பாருங்கள் என பொது உறவு அலுவலர் கேட்டுக் கொண்டார். அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் சார், எனக்கு இந்தப் பை உரியவரிடம் போய் சேர்ந்தால் அதுவே போதும் என்றார்  வேதாச்சலம் .

 வேதாச்சலம் சுப்ரமணி அதுதான் அவரின் முழுப்பேர், அந்தக் கல்லூரியின் அருகே இருக்கும் ஒரு பக்கத்துக் கிராமத்தின் முக்கிய புள்ளி. அது மட்டுமல்லாமல் அந்த ஊரின் மாரியம்மன் கோவிலின் அர்ச்சகர். அவர் அம்மனுக்கு பூஜை முடித்து திருநீர் கொடுக்கும்போது கை நடுங்கும் எனப் பார்த்தவர்கள் சொல்வதுண்டு.

எல்லாம் தமிழக அரசின் நீண்டகால டாஸ்மாக் கைங்கரியம்.
Image result for money and god is only for humanbeings
அவருக்கு அந்த ஒரு பழக்கம் மட்டும் இல்லையெனில் அவர் மிகவும் நல்ல மனிதர்.

மறு நாள் பொது உறவு அலுவலர் மாணவர் தலைவரை அழைத்து வாட்ஸ் ஆப்பில் செய்தியை புகைப்படத்துடன் உலவ விட முதலாண்டு மாணவர் அந்தப் பைக்கு உரியவர் என வந்து வாங்கிச் செல்ல வந்து சேர்ந்தார். அவர் தினமும் சேலத்தில் உள்ள தனது வீட்டிலிருந்து கல்லூரிக்கு வந்து செல்லும் மாணவர் விடுதியில் தங்கி வருவார் அல்ல.

அவரிடம் இந்த நல்ல மனிதருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ன மனமுவந்து கொடுக்க விருக்கிறீர் எனக் கேட்க அவரோ தம்மிடம் கொடுக்க நூறு ரூபாய் உள்ளது அதை நாம் அவருக்கு உரிய பரிசாக வழங்கலாம் என ஒப்படைத்தார் பையை பெற்றுச் சென்றார்.

அந்த நூறு ரூபாயை ஒப்படைக்க அவருக்கு மறுபடியும் செல்பேசி வழியே தகவல் தரப்பட்டது. அப்போதும் அதை அவர் ஏற்றுக் கொள்வதாயில்லை. வேண்டாம் சார் விட்டு விடுங்கள் என்றார். இல்லை இல்லை அந்த மாணவரிடம் இருந்து வாங்கி விட்டோம் அது உங்களுக்கு சேரவேண்டியது நீங்கள் வந்து கையெழுத்துச் செய்து பெற்றுக் கொள்ள வேண்டும் அதுவே எங்களது  கல்லூரி அலுவலக நடைமுறையாக உள்ளது என தெரிவிக்க பார்க்கலாம் சார் என பேச்சை முடித்துக் கொண்டார்.
Related image
அவருடைய ஊரிலிருந்து வரும் மாரியம்மாள் அலுவலக உதவியாளர் வேண்டாம் விடுங்கள் சார் அதைக் கொடுத்தாலும் அவர் உடனே அரசு மதுபானக்கடைக்கே கொடுத்துவிடுவார் என்று சொல்லி விட்டார். மேலும் அதுபற்றி அவரின் குடும்பம் அறிந்தாலும் அதை ஏற்க மாட்டார்கள். கேவலமாகப் பேசுவார்கள் என்றார். பெரியவரின் ஒரே ஊராக இருந்தாலும் தூரத்தில் இருவரின் வீடுகளும் இருப்பதாலும் அவரிடம் கொடுத்து அதை சேர்க்கச் சொல்வதில் முறையில்லை என்பதாலும் அவரிடம் கொடுத்தனுப்பவும் அலுவலக நடைமுறை இடம் கொடுக்க வில்லை.

ஒரு நாள் வழக்கம் போல பொது உறவு அலுவலர் ஒரு வழக்கமான முகாமுக்கு வேம்படிதாளம் அரசு மருத்துவமனைக்கு முகாம் சென்றவந்த பின் காசாளர் கேட்டார் அந்தப் பெரியவர் அவருக்கு சுமார் 70 வயது இருக்கும். உங்களைப் பார்க்க  வந்து காத்திருந்தார். என்றார்

அடடா, என்னைப் பார்க்கவில்லையே, சென்று விட்டார் போல் இருக்கிறதே..பார்த்திருந்தால் கொடுத்திருக்கலாமே..அந்த நூறு ரூபாயை என்று பொது உறவு அலுவலர் அங்கலாய்த்துக் கொண்டார்.

இரண்டு நாள் மட்டுமே சென்றது....அன்று உங்களைப் பார்க்க வந்தாரே உஙக்ளைப் பார்த்தாரா சார், அவர் இறந்து விட்டார் என்றார்கள். அவர் பார்க்க வில்லையே,,,
Related image
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

P.S: Name  only changed in this real story.

Sunday, February 3, 2019

தி புக் ஆப் மிடாட்: மிக்கைல் நெய்மி: கவிஞர் தணிகை

தி புக் ஆப் மிடாட்: மிக்கைல் நெய்மி: கவிஞர் தணிகை
Image result for mikhail naimy


ஹெரால்ட் ராபின்ஸ், இர்விங் வாலஸ், சிட்னி செல்டன், அலிஸ்டர் மெக்லீன், கமலாதாஸ் , கமலா மார்கண்டேயா, ஆர்.கே நாரயண் இப்படி பல ஆங்கில எழுத்தாளர்களின் பல நூல்களை நான் கடந்ததுண்டு. ஆனால் இந்த தி புக் ஆப் மிடாட் என்னும் நூல் ஓசோ சொல்லியது போல புத்தகங்களிலே ஒரு தனி இடம் வகிப்பது.

கலீல் கிப்ரான் தலைவராகவும் நெய்மி செயலாளராகவும் இருந்து மற்ற 8 எழுத்தாளர்களும் சேர்ந்து நியூயார்க் பென் லீக் என்று ஆரம்பித்து நடத்தியிருக்கிறார்கள். கலீல் கிப்ரான் மறைவுக்கும் பிறகு லெபனான் பெய்ரூட்டுக்கு திரும்பி வந்து தனது 98 ஆம் வயதில் நிமோனியா காய்ச்சலால் மறைகிறார் நெய்மி என்ற செய்திகள் ஆங்கில இலக்கியம் அறிந்த அனைவர்க்கும் தெரிந்திருக்கும்.

அன்புத் தம்பி குவெய்ட் பிரவீன்குமார் இந்த புத்தகத்தை ஒரு நாள் தருவித்து  இதைப் படித்துப் பாருங்கள்  அண்ணா, என்னால் 10 பக்கத்துக்கும் மேல் படிக்க முடியவில்லை என்றார். இதை மொழிபெயர்க்கும் நபரின் கருத்துகளைப் பார்த்துவிட்டு இதை நீங்கள் படிக்க வேண்டும் என வாங்கினேன் உங்களுக்காக என்கிறார் எனது புதல்வனைப்போன்ற எனது தியான வழி சீடர் பிரவீன்குமார் தங்கவேல்.

எளிதில் அனைவரும் படிக்க முடியா புத்தகம்தான். ஆங்கில அறிவை நன்கு வளர்த்திக் கொண்டால் மட்டுமே படிக்க முடிகிறது. உடன் இணையத்தில் வார்த்தைகளுக்கான பொருள் தேடலுடன் படித்து முடித்தேன். 191 பக்கம். சில பக்கங்களுக்கே ஒரு மணி நேரத்துக்கும் மேல் தேவைப்படுமளவு வார்த்தைகளின் கனம். சாதாரணமாக லைட்டான புத்தகங்களை  சுமார் 60 லிருந்து 70 பக்கங்களுக்கும் மேல் படிக்க முடியும் என்னால் இந்தப்புத்தகத்தை படிக்க ஒரு பக்கத்துக்குக் கூட ஒரு மணி நேரம் எல்லாம் செலவளிக்க வேண்டி வந்தது.
Image result for the book of mirdad
இணையத்தில் பி.டி.எப் ஃபைல் மூலம் பதிவிறக்கம் செய்வார்க்கு 140 பக்கம் கிடைக்கிறது. நான் பதிவிறக்கமும் செய்து வைத்தேன்.யு.எஸ் டாலரில் 14. 95 , யு.கே பவுண்ட் 8. 99  724 ரூ என இந்திய ரூபாயில் கிடைக்கிறது.

ஷேக்ஸ்பியர் படிக்கும்போது எப்படி வார்த்தைகள் நம்மை அந்த பொருளுக்குள் செல்லவிடாமல் தடுக்குமோ அப்படி வார்த்தை வளம்.

ஆனால் இது ஆர்க் என்னும் மலைச் சிகரத்தில் இருக்கும் மடாலாயத்தில் வசித்துவரும் 9 அதாவது 8 சீடர்கள் அவர்களின் ஒரு குரு பற்றிய உரைவீச்சு வாழ்வின் முறை பற்றியும் அந்த குருவான மிடாட் தமது சீடர்களுக்காக பேசிய பல்வேறுபட்ட போதனைகளின் பதிவும் இடம்பெற்றிருக்கிறது.

சமாதம் என்னும் சீடர்களில் ஒரு சீனியர் மிடாட் என்னும் குருவாகிய இவருக்கு நிறைய தொல்லைகளும் தருகிறார் என்றாலும் மிடாட் குருவாக தமது பொலிவை சீடர்களுக்கு மட்டுமல்ல உலகுக்கே நல்கி இருக்கிறார். மிடாட் இந்த ஆர்க் என்னும் மலைக்கோவிலுக்கு ஒரு வேலைக்காரராகவே அந்த ஒன்பது நபருள் ஒருவராக கருதப்பட்டு பணியாளராக இருந்தவர் எப்படி குருவாக விளங்குகிறார் என்பதும், அங்குள்ள பசுவை அடிமாட்டுக்கு கொண்டு செல்வதை எப்படி குணப்படுத்துகிறார், எப்படி இருள் பள்ளத்தாக்கில் கொண்டு சமாதாம் ஆட்களால் அடைத்து வரப்பட்டவர் திரும்பி வந்து மலைப்பிரசங்கம் செய்கிறார் என்பதும், அந்த நாட்டின் மன்னர் ஆணையுடன் இவர் எப்படி கைகால்கள் இரும்புச்சங்கிலியால் பிணைக்கப்பட்டு அந்த மலையை விட்டு கடத்திச் செல்லப்படுகிறார் என்பதும் அதிலிருந்து அந்த மன்னரே திரும்பி எப்படி இவரை அந்த மலையின் குருவாக தலைவராக ஏற்று அங்கீகரித்து சமாதமை கீழ் இறக்குகிறார்கள் என்பதெல்லாம் கதை...ஆனால் மிடாட் மூலம் உலகுக்கு என்ன என்ன சேதிகள் செய்திகள் சொல்லப்பட்டிருக்கின்றன என்பதுதான் இந்தப் புத்தகத்தின் சாரம்.

கடவுள் மறுப்பு, கம்யூனிச சிந்தனைகளுக்கு அப்பாற்பட்டு நின்று இந்த உலகளாவிய சித்தாந்த முறைகளை வடிவைமைத்துள்ளார்.

பைபிளில் வரும் நோவா, ஆதாம் ஏவாள், ஆதாமிலிருந்து அவன் எலும்பிலிருந்து உருவான ஏவாள் அவர்களின் மகன் கெயின் அடுத்து பிறந்த ஏபிளைக் கொலை செய்வது போன்றவையும் இருக்கிறது...ஓர் உயிரிலிருந்துதான் இந்த உலகின் அனைத்து மனிதர்களும் உண்டானதாக இருக்கிறது டார்வின்ஸ் தியரியான குரங்கிலிருந்து மனிதம் தோன்றியது என்ற அறிவியல் கருத்துக்கு முரணானதாகவே இருந்த போதிலும்

இதில் சொல்லப்பட்டிருக்கும் மனித தத்துவம் யாவும் நிகரற்ற நிலையில் சொல்லப்பட்டு விளங்குகிறது.

நேர்க்கோட்டின் சகோதரம் தாம் கோணல் கோடு என்பதும், காட்டில் உயர்ந்து நெடிய வளர்ந்த மரங்கள் மட்டுமே இல்லை காடு என்பது புதர்களும்,கொடிகளும், செடிகளும், நிரம்பியதுதான் என்பது...

எல்லா சினைமுட்டையும் விந்தணுவும் சேர்ந்துதான் யாவும் தோன்றின என்றபோதிலும் ஒவ்வொன்றிற்கும் உண்டான உணவு அதன் செரிமான அளவு அதற்கு எடுத்துக் கொள்ளும் நேரம் போன்றவற்றில் அவை ஒன்றுக்கொன்று மாறுபட்டே இருக்கின்றன. எனவே உலகில் ஒரு உயிர் போல மற்றது இல்லை என்பது.
Image result for mikhail naimy
கடவுளை மேக்ரோ காட், மைக்ரோ காட் என்பது, 35 ஆவது அத்தியாயம் நூலின் மகுடமாக விளங்குகிறது. உண்மைக்கு நிரூபணம் அவசியமில்லை என்பது எல்லாவற்றுக்குமே உண்மையும் நேரமையுமே அடிப்படையாக இருக்கிறது என்று நிறுவுவது..

களைகளை நீங்கள் வெறுக்க வேண்டாம் ஏனெனில் அவை உரமாகவும் மாறும் என்பதால்

ஆக்கபூர்வமான வார்த்தையே அன்பு அந்த அன்பு என்பது புரிதல் வழியே ஆரம்பிக்கிறது

உலகில் எல்லாம் உள்ள அனைவருமே ஒருமையிலிருந்து பார்க்கப்படுதலே  சிறந்த தத்துவம். இப்படி எல்லாம் பேசுகிறது

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை