Saturday, December 31, 2016

விநாயகா பல் மருத்துவக் கல்லூரியும் வேம்படிதாளம் அரசுப் பொது மருத்துவ மனையும்:கவிஞர் தணிகை

விநாயகா பல் மருத்துவக் கல்லூரியும் வேம்படிதாளம் அரசுப் பொது மருத்துவ மனையும்:கவிஞர் தணிகை

Related image


வேம்படி தாளம் அதிகம் நெசவுத் தொழிசல் செய்யும் மக்கள் நிரம்பிய ஊர். இங்கு ஒரு தாலூகா அளவில் இருக்கும் பொது மருத்துவ மனை நல்ல முறையில் மக்களுக்கு மருத்துவம் செய்து வருகிறது.இதில் விநாயகா சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரியின் பல் மருத்துவப் பிரிவும் செயல்பட்டு வருகிறது.

இது பற்றி ஏன் குறிப்பிட வேண்டுமெனில் எனக்கும் இந்த இடத்திற்கும் ஒரு தொடர்பு ஏற்பட்டு சுமார் 9 மாதங்கள் நிறைவு பெறுகிறது. இந்த பொது மருத்துவ மனையை பேரறிஞர் அண்ணா முதல்வராக இருந்த போது 1967ல் திறந்து வைத்திருக்கிறார். வேம்பு அடி தாளம்...வேப்ப மரத்தின் அடி விழுதுகளில் அமைந்த ஊர் இது என ஊர் பேர் காரணப் பெயராக அமைந்துள்ளது

பொதுவாகவே அரசுப் பொது மருத்துவமனைகள் என்றாலே மக்களுக்கு சென்று பார்க்க ஒரு அச்சம், வெறுப்பு, அருவெருப்பு, இருக்கும். ஆனால் இங்கு அப்படி எல்லாம் இல்லை. இப்போது இதன் மருத்துவ அலுவலராக மருத்துவர் நவீன் பணியாற்றுகிறார். அத்துடன் மரு.ராஜன்,குழந்தைகள் மருத்துவர்: ரவி, சித்த மருத்துவர் ரவி,மருத்துவர் லதா, ஆகியோருடன் தாதியர்: சங்கீதா, இன்னும் எனக்கு பேர் தெரியாத 3 நர்ஸ்கள், திருநிறைச் செல்வி, லாவண்யா என்னும் சிட்டுக் குருவிகளைப் போல சுறு சுறுப்புடன் பணி புரியும் பொதுமக்களுடன் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வரும் சிறு நீர் சர்க்கரை, இரத்த அளவில் உள்ள சர்க்கரை அறிந்து ஆய்ந்து சொல்லும் சிறு பெண்கள், சித்தமருத்துவ பார்மஸிஸ்ட் கலாவதி இப்படி அனைவரும் நட்பு முறையில் பணியாற்றி வருகின்றனர். டைட்டன் உதவியாளராக இருந்து பணி புரிய கம்பவுண்டர் மற்றும் தாஸ், அம்பிகாபதி உதவியாளர்கள் பம்பரமாக சுழழ...

சேலத்தில் இருந்து கூட இங்கு வந்து மருத்துவம் பார்த்து செல்லுமளவு நன்றாக செயல்படும் இந்த மையத்தில் பல பிரிவுகள் நன்கு செயல்பாட்டில் உள்ளன. குழந்தைகள்  , பொது மருத்துவம், சித்த மருத்துவம், பிரசவம், பல் மருத்துவ பிரிவு ஆகிய தனிப் பட்ட சிறப்புப் பிரிவுகளும் உண்டு. சர்க்கரை நோய்க்கு சிறப்பாக உடல் பரிசோதனைக்குட்படுத்தப் பட்டு அதற்கும் மருத்துவம், நாய்க்கடி, அவசர சிகிச்சை இப்படி எல்லாம். நலமும் பேணப்பட்டு வருகின்றன.

Image result for vinayaga dental college salem

நாங்கள் விநாயகா பல் மருத்துவக் கல்லூரியின் சமுதாய மருத்துவப் பிரிவின் கீழ் பிரதி வாரம் செவ்வாய், வியாழன் ஆகிய இரு நாட்களிலும் காலை 10 மணி முதல் 12 மணி வரை ஒரு5 பேர் கொண்ட மருத்துவக் குழுவினராக சென்று அங்கு முகாம் செய்து பல் பரிசோதனை, வாய் தாடை, ஈறு  தொடர்பான நோய்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்குவதுடன் பல் எடுத்து மருந்துகளும் தருகிறோம்... அதற்காக ஒரு மருத்துவர், இரண்டு பயிற்சி மருத்துவர்கள், ஒரு நர்ஸ் ஆகியோருடன் முகாம் அலுவலராக அடியேனும் சென்று பணிச்சேவை செய்து வருகிறோம். இதற்கென ஒரு வாகனம், அதற்கு ஒரு ஓட்டுனர், எரிபொருள் ஆகியவற்றை விநாயகா பல் மருத்துவக் கல்லூரி வழங்கி செயலாற்றி வருகிறது.

இந்த பணிகள் சிறக்க எமது கல்லூரி முதல்வர் : ஜா.பேபிஜான், சமுதாய மருத்துவப் பிரிவுத் தலைவர் மருத்துவர்: என்.சரவணன் ஆகியோர் உறுதுணையாக இருந்து வழிகாட்டி வருகின்றனர்.

இது மட்டுமின்றி : விநாயகா பல் மருத்துவ சிறப்பு முகாம்கள் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள், தனியார், மற்றும் அரசுப் பள்ளிகள், பல்வேறுபட்ட வேண்டுகோளுடன் பல நிறுவனங்களுக்கும் சேவையாற்றி வருகிறது. இந்த முகாம் நோயாளிகளுக்கு கல்லூரி வளாகத்திலும் இலவச மருத்துவம் செய்யப் படுகிறது.

இது மட்டுமின்றி;: வேம்படிதாளம், பாலமலை, அன்பு இல்லம் சேலம் ஆகிய இடங்கலிலும் ரெகுலர் முகாம்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. வேம்படிதாளத்தில் வாரம் இருமுறை, அன்பு இல்லத்தில் வாரம் ஒரு முறை புதன் கிழமை, பாலமலையில் பிலச்சிங்க் யூத் மிஷன் அமைப்புடன் சேர்ந்து ஒவ்வொர் மாதமும் கடைசி ஞாயிற்றுக் கிழமை அங்கு சிறப்பு முகாம் செய்து பல் சிகிச்சை செய்யப்படுகிறது.

காலத்தின் முன் இதை எல்லாம் அவசியம் பதிவு செய்ய அவசியமாகிறது. இதை எல்லாம் ஒருங்கிணைக்கும் பணியை அடியேன் 2016ல் பெற்றமைக்கு கல்லூரியின் முதல்வர் ஜா.பேபி ஜானும், நிர்வாக அலுவலர்: நடராஜன் அவர்களும் முன் காரணமாக அமைந்தனர். இந்தக் கல்லூரிக்கு நானும் பல் மருத்துவம் செய்து கொள்ளவே சென்றேன். நிர்வாக அலுவலர் : 1. பாபு முரளியே எமக்கு முதல்வர் பற்றிச் சொல்ல...அவரை நான் சந்திக்க...பாதை 2016ல் மறுபடியும் மக்கள் பணியில் இணைந்து இப்போது 2017க்கு எமை , நமை எடுத்து சென்றபடி இருக்கிறது..

காலத்தின் வல்லமைக்கு முன் சிரம் தாழ்த்தி கரம் கூப்பியபடி வணங்கி நிற்கிறோம். சேவையை நாம் விட்டபோதிலும் அது நம்மை விடாமல் தொடர்வதற்கு இயற்கையை வணங்கி நிற்கிறோம்

பி.கு: கல்லூரியில் அனைத்து அரசுப் பள்ளி மாணவர்கள் 12 வயதுக்குட்பட்டவர்களுக்கு பல் மருத்துவம் இலவசமாக வழங்க முதல்வர், நிர்வாக அலுவலர்கள்,அடியேன் ஆகியோர் முயற்சி எடுத்துக் கொண்டு ஒரு சுற்றறிக்கையை அனுப்பி அனைவரின் ஒப்புதலும் பெற்று இலவச மருத்துவம் வழங்கி வருகிறோம்.இச் சமுதாயம் பயன்பெறவே. இளைய சமுதாயம் பற்கள் உறுதியாகவே வாய்ப்பை பயன் படுத்திக் கொள்ள வேண்டுமாய் அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம். இதைப் பார்ப்பார், படிப்பார் அனைவரும் இதை தேவைப்படுவார்க்கு அறிவுறுத்த வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொண்டு

இந்த 2016டன் பழையன கழிதலும் வரும் 2017ல் புதியன புகுதலுமாய் அனைவரின் வாழ்விலும் ஒளி உருவாகிட வாழ்த்துகள் சொல்லி
மகிழ்கிறேன். வணக்கம். நன்றி.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

எனது 1350 பதிவுகளுடன் marubadiyumpookkum.wordpress.com வேர்ட்.பிரஸ்.டாட்.காம் முடக்கப்பட்டது

முடியவே முடியாது
என்ற
களங்களில் தான்
என் வெற்றியே நிகழ்ந்திருக்கிறது...

பூக்களை உதிர்த்துவிட்டாலும்
செடி காத்திருக்கிறது
அது
மறுபடியும் பூக்கும்


 marubadiyumpookkum.blogspot.com என இப்போது பிலாக்.ஸ்பாட்.டாட்.காமில் வலைய வருகிறது. எப்போதும்போல காலப்போக்கில் இந்த தளமும் உங்கள் அனைவருடன் இணையும் என நம்புகிறேன்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.


ஒன்றே குலம் ஒருவனே தேவன்:‍ அம்மாவே தெய்வம்: கவிஞர் தணிகை

ஒன்றே குலம் ஒருவனே தேவன்:‍ அம்மாவே தெய்வம்: கவிஞர் தணிகை

Image result for periyar anna


கடவுள் இல்லை என்று சொன்ன பெரியாரின் திராவிடர் கழகம் சுய மரியாதைக் கட்சியிடமிருந்து பிரிந்தது,அவை எல்லாமே காங்கிரஸ் கட்சியுள் இருந்தன ஒரு காலத்தில்.மணியம்மை வந்த பின் கண்ணீர்த் துளிகள் என பெரியாரால் பரிகாசம் செய்யப் பட்ட அண்ணாவும் தம்பிகளும் திராவிட முன்னேற்றக் கழகம் அதன் தலையாய கொள்கை ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற அண்ணாவின் தம்பிகளாய் மக்கள் சேவையே மகேசன் சேவை என தேர்தலில் பங்கெடுத்து ஆட்சியைக் கைப்பற்றினர். காமராசரை பின் தள்ளி.

Related image

இந்த நாட்டுக்கு ஒரு சாபக் கேடு அது தமிழகம் மாநிலம், இந்திய மத்தியம் இரண்டுக்குமே நல்லவர்கள், மக்கள் சிந்தனை உள்ளார் அதிக ஆயுளுடன் ஆண்டது கிடையாது. அங்கே லால் பகதூர், இங்கே அறிஞர் அண்ணா.குறுகிய கால நல்ல ஆட்சியாளர்கள்.

கலைஞர் எம்.ஜி.ஆரை துணைக்கொண்டு பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தவர், நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன், மதியழகன் போன்றவர் வரிசையில் அடுத்திருந்தவர் ஆட்சிக் கட்டில் ஏறி விட்டார் முதல்வராக... இன்னும் உயிர் வாழ்கிறார் நிறைய பேரை எடுத்து விழுங்கி விட்டு ஆயுள் 94ம் கடக்க...இவர் குயுக்தியில் அன்றைய தி.மு.கழக பொருளாளர் நட்சத்திர அந்தஸ்தில் இருந்த எம்.ஜி.ஆரை துணைக்கொண்டு முதல்வராகிறார் அதிலிருந்து தமிழகத்திற்கு பிடித்தது சனி.

ஒரு குடும்ப ஆட்சி, அவர் குடும்பமே கட்சி, தலைவர் இல்லாத கழகத்திற்கு தலிவர், செயலாளர், பொருளார் அல்லாமே அவருடைய குடும்பத்துள் இருக்க வேண்டுமென எம்.ஜி.ஆரை கட்சியில் இருந்து நீக்குகிறார் வைகோவை நீக்கியது போல...எம்.ஜி.ஆர் மக்கள் செல்வாக்குடன் உருவெடுக்கிறார் அவர் இருக்கும் வரை கலைஞர் இருக்கும் இடம் கட்சியில் மட்டும் தெரிய பொது வாழ்க்கை அதாவது ஆட்சி அந்தஸ்து ஏதும் இல்லாமல் இலக்கியப் பணி கலைப்பணி சன்டிவியின் மாலைகளிடம் தம்மை அர்ப்பணித்துக் கொள்கிறார். அவருக்கு பல குடும்பங்கள் எனவே பொழுதெல்லாம் நன்றாகவே போகிறது.

அவருக்கும் பின் ஸ்டாலினை உருவாக்கி, அடம் பிடிக்கும் அழகிரியிடம் சமாதானம் செய்ய முடியாமல் இன்னும் தலிவராகவே இருக்கிறார். மக்கல் இவர் முதல்வராக இருக்கும்போது உயிர் பிரிவார் என எதிர்பார்க்க, இவர் தி.மு.க தலீவராகவே இருந்து வரும் ஆண்டுகளில் சென்றடைவார்.ஒரு ஸ்லிப்: இவர் முதல்வராக இருந்தபோதே கடைசி இரண்டாண்டு அல்லது ஓராண்டு ஸ்டாலினை முதல்வராக்கி அழகு பார்த்திருக்கலாம்.ஆனால் இன்னும் ஸ்டாலின் தம் மகனே ஆனாலும் பதவியை விட்டுத் தரத் தயாரில்லை. ஆவியானாலும் அவரது ஆவி தி.மு.க தலைமைப் பதவியை விடவே விடாது...ஆனால் அறிஞர் அண்ணா பெரியார் மட்டுமே இயக்கத்துக்கு தலைவர் என இருக்கையை காலியாகவே வைத்து பொதுச்செயலாளர் பதவியை மட்டுமே ஏற்பதாகச் சொன்னார் ஒரு குரு மரியாதை...அதிலிருந்து அந்த பாணியுடன் அ.இ.அ.தி.மு.க....எம்.ஜி.ஆருடன்...

நிலை இப்படி இருக்க எம்.ஜி.ஆரின் லீலைகளை அறிந்த அம்மணி, கொ.ப.செவாக உள் புகுந்து போராடி வென்று எடுத்து அடுத்துள்ளவரை, உதவி செய்தாரை எல்லாம் களை எடுத்து.களம் கொண்டு என்றும் தெய்வம், நிரந்தர முதல்வர் என்றெல்லாம் சொல்லப் பட்டு, புரட்சித் தலைவி செல்வி ஜெ.ஜெயலலிதாவாக பெட்டியில் இட்டு எம்.ஜி.ஆர் சமாதி அருகே பெட்டியில் வைக்கப் பட்ட ஜெ முதலவராக இருந்து மறைந்தார்

ஆனால் அவருக்கு கால்கள் இருந்தனவா , பல் பிடுங்கப்பட்டதா, அவரது பிணத்தை தோண்டி எடுக்கவா, நோண்டி எடுக்கவா என்றெல்லாம் பட்டி மண்டபங்களும், எம்.ஜி.ஆர் கழகத்தை கட்டிக் காத்த அம்மா ஜெவா, சின்னம்மா வி.கே.சசி சிறந்தவரா என கருத்தரங்கங்களும், மேலும் பல வழக்குகள் போடப்பட்டாலும் அவை முதல்வராகி விட்டால் நெருங்க முடியாது நொறுக்கி விடலாம் என முதல்வராக அவரே என கட்சி, குடிகார மக்கலால் தேர்வு செய்யப்பட்ட அனைத்து எம்.எல்.ஏக்களும் விரும்ப...

அந்த 75 நாட்கள் என மர்ம முடிச்சுகள் நிறைந்த வரலாற்றுப் புத்தகங்கள் இன்னும் சில காலத்தில் கைக்கு கிடைக்கலாம். இவர் தமிழக அரசுப் பள்ளிப்பாடப் புத்தகத்தில் அச்சடித்த சில கலைஞரின் வாசகத்தை நினைவுறுத்தும் இடங்களை எல்லாம் அடித்து மாற்றி, எடுத்து கிழித்து, பக்கங்களை மாற்றி ஒட்டி, இன்னும் எப்படி எல்லாமோ செய்தவர், எங்கு பார்த்தாலும் அம்மா மயம் எனச் சொல்ல வைத்தவர்...கட்டப்பட்ட சட்டசபையை ஏற்காமல் அறிஞர் அண்ணா நூலகத்தை குழந்தைகள் மருத்துவமனையாக்க வழக்கு அரசு சார்பாக நடத்தி...

ரெயில் நிலையத்திலும் பேருந்து நிலையத்திலும் அடி மட்ட அ.இ.அ.தி.மு.க தொண்டர்கள், ஐ மீன் எம்.ஜி.ஆர், ஜெ இரசிகர்கள் பேசிக் கொள்கிறார்கள் இது உட்கட்சி சனநாயகமின்றி நடக்கிறது என...

எந்தக் காலத்தில் அந்தக் கட்சியில் சனநாயகம் இருந்தது? எம்.ஜி.ஆர் காலத்திலா, அம்மா ஜெ காலத்திலா, அப்படி இருந்தால்: மாநிலம் எங்கும் உள்ள கிளைகளில் எல்லாம் ஒரு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு முறைக்கு விடப்பட்டல்லவா பொதுச் செயலாளர் தேர்வு செய்யப் பட்டிருக்கக் கூடும், எல்லாம் நியமனமே, கட்சி பொதுச் செயலாளர் ஆக 5 ஆண்டு உறுப்பினர் ஆக இருக்க வேண்டுமாமே...ஊ ஹூம் அதெல்லாம் உங்களுக்கு அம்மாவுக்கு, சின்ன அம்மாவுக்கு அதெல்லாம் தேவையில்லை....

செல்வியை அம்மா என்றார்கள், 60 வயதுடைய சசியை இப்போது சின்னம்மா என்று சொல்லிவிட்டார்கள். இப்படி எல்லாம் வாய்ப்புகள் இருக்க, நாங்கள் ஐ மீன் நாங்கள் என்றால் சசி பெருமாள், வேலாயுதம், தணிகை ,செம்முனி, இராமலிங்கம், சின்ன பையன், மணி போன்ற இயக்க வரலாறு உள்ள நாங்கள் எல்லாம் வாழ்நாளை சேவை, மக்கட் பணி, மதுவிலக்கு, கிராம முன்னேற்றம், ஆக்கபூர்வமான வளர்ச்சி, காந்திய வழியில் ஊருக்குப் பத்து பேர் இயக்க, நவ இந்திய நிர்மாணிகள் இயக்கம், தமிழக இலட்சியக் குடும்பம் என்றெல்லாம் விரயம் செய்து விட்டோமா?

29 வயதிலிருந்து அம்மாவுடன் இருந்து தற்போது 54 வயதாகும் சின்னம்மா கட்சியின் பொதுச்செயலாளர், பொன்னையன் , செம்மலை, எல்லாம் மோடியின் கீழ் இருக்கும் அத்வானி, முரளி மனோகர் ஜோசி, ராஜ்நாத் சிங் போல...எளிய வழி, சுலபமான வழி ...

கட்சியில் எப்படி மேல போகணும் எப்படி கட்சியை வளர்க்கணும்னு தெரியுனும்னா அது சசியின் வழி தனி வழி ....அடிச்சதய்யா யோகம்...இனிமே பார்க்கலாம் தமிழகத்தின் நல்லாட்சியை பொற்கால மாட்சியை...ரஜினி காந்த் படம் வருகையில் அடிக்கும் ஸ்டன்ட் போல...நல்ல நல்ல திருப்பங்கள், விருப்பங்கள்...


Related image

ஒன்றே குலம் ஒருவனே தேவன், மக்கள் சேவையே மகேசன் சேவை, அம்மாவே தெய்வம், அம்மாவே நிரந்தர முதல்வர் போய் சின்னம்மாவே தெய்வம், சின்னம்மாவே நிரந்தர முதல்வர் , யானை மாலை போட்டது போய், சிங்கம் கண்டு ஒடுங்க..சின்னம்மா ஜிந்தாபாத். நமக்கென்ன ஓ.பி ஆண்டால் என்ன சின்னம்மா ...என்ன...மோடி ஆட்சி, மோடி மஸ்தான் ஆட்சி,....இதோ பாருங்கள் கூட்டமே பாம்புக்கும் கீரிக்கும் சண்டை உடப் போறேன்..பாருங்க..பாருங்க...நல்லா பாருங்க....

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Tuesday, December 27, 2016

அமீர்கானின் டங்கல்(யுத்தம்) தமிழில் அவசியம் பாருங்கள்: கவிஞர் தணிகை

அமீர்கானின் டங்கல்(யுத்தம்) தமிழில் அவசியம் பாருங்கள்: கவிஞர் தணிகை


Image result for dangal


நீண்ட நாள் கழித்து ஒரு நல்ல அரிய படம்.குடும்பத்துடன் அமர்ந்து இரசிக்க வேண்டிய படம்.இது போன்ற கதையமைப்பு ஏன் கமலுக்கு கிடைப்பதில்லை எனக் கேட்கத் தோன்றும் படம். ஆணுக்கு பெண் நிகர் சரி சமானமாய் வைப்போம் என்ற சொல்லை அடி நாதமாகக் கொண்டு இருக்கும் படம்.

எனக்கும் கூட குத்துச் சண்டை பிடிக்குமளவு மல்யுத்தம் பிடிக்காது.ஆனால் இந்தப் படத்தைப் பார்த்தால் பிடிக்கிறது. ஒலிம்பிக் பதக்கம் வெல்ல முடியாமல் போன இந்திய மல்யுத்த வீரர் மஹா வீர் தமது வாரிசாய் ஒருவரையாவது உருவாக்கி அவரது கனவான ஒலிம்பிக் அனுப்பி தங்கம் வெல்ல வேண்டும் என முயற்சிக்கிறார். அந்த முயற்சிக்கு ஏற்படும் முட்டுக்கட்டைகள் அதை அவர் எப்படி தகர்த்தெறிந்து குறிக்கோளை எட்டுகிறார்  என்பதே கதை. எனக்கு இவரது படமான லகான் நினைவுக்கு வருகிறது

அதில் கிரிக்கெட். ஆங்கிலேயருடன் இதில் மல்யுத்தம் பெண் ஆண்களுடன்.முதலில் தமக்கு ஒரு மகன் பிறப்பான் அவனை உருவாக்கலாம் என எல்லா பயிற்சிகளுடன் தயாராக இருந்தும் அடுத்தடுத்து இவருக்கு நாலும் பெண் பிள்ளைகளாகவே போக மற்றவர் எல்லாம் வந்து மகன் பிறந்திருக்கிறான் மஹாவீர், ஸ்வீட் எடுத்துக் கொள்ளுங்கள் எனச் சொல்லும்போது மஹாவீர் அந்த லட்டை பிட்டு தமக்கு இரு புறமும் வரும் தம் பெண்களுக்கு கொடுக்கிறார். யாரையும் கண்ணியக் குறைவாக நடத்த விரும்பாத நாகரீக மனிதராய் வாழ்கிறார்.

தம் இரு பெண்களையும் பாடாக படுத்தி விடுகிறார். முதலில் அவை ஒத்துழைக்க மறுத்தாலும் ஒரு தோழியின் திருமண வைபவத்தன்று அந்த தோழி இவரது தந்தையின் கரிசனத்தை விளக்க முற்பட அப்போதுதான் இவர்களுக்கு ஒர் தெளிவு ஏற்படுகிறது. அது முதல் தந்தை தரும் பயிற்சிக்கு ஒத்துழைக்கிறார்கள். ஆனால் அதற்காக அதற்குள் நிறைய இழக்கிறார்கள், கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகிறார்கள். தமது நேசமிகு  கூந்தலை இழக்கிறார்கள். உணவை, உறக்கத்தை, உடையை யாவற்றையும் இழந்து ஒரு முனைப்பாக கல்வியை விட இந்த பயிற்சியையே உயிராக பயிரக்குகிறார் மஹாவீர்.

ஊர் எதிர்க்கிறது, கேலி பேசுகிறது, தாயும் மனைவியுமானவளே எதிர்த்து பேசுகிறாள். ஏன் அந்தப் பெண்களே கூட தரக்குறைவாய் அப்பாவை எண்ணுகின்றன...ஆனால் எதையும் பொருட்படுத்தாமல் இலட்சிய புருஷனாய் வலம் வந்து எல்லா சூழ்ச்சிகளையும் முறியடித்து கடைசியில் காமன்வெல்த் கோல்டு அடிக்குமளவு தமது மூத்த மகளை ஆளாக்கி விடுகிறார்.

Related image


கீதாவாக பபிதாவாக வரும் இளைய வயது பிள்ளைகளும், வளர்ந்த இளமைப்பருவத்தில் இருந்து அப்பாவுக்கு பேர் வாங்கித் தருவாராக நடித்திருப்பாரும் தமது ரோலை நன்குணர்ந்து செய்திருக்கின்றனர்.

அமெரிக்காவில் டிசம்பர் 21லும் இந்தியாவில் 23லும் வெளியான இந்தப் படத்தை மஹாவீர் சிங் பொகாட் என்னும் உண்மையான மல்யுத்த வீரரின் வாழ்வை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கி இருக்கிறார்கள்.70 கோடி முதலீட்டில் உருவான இந்தப் படம் 4 நாளில் 245 கோடி வசூலித்து விட்டது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடைசியில் ஒரு இன்டர்நேஷனல் லெவல் போட்டியை நாம் ஆர்வமாக பார்க்க நேர்வதாக படத்தை நேர்த்தியாக உருவாக்கி இருக்கிறார்கள். தயாரிப்பு அமீர்கான் குழுவினரே.

மஹாவீர் பொகட்டை பெரியப்பாவாக கொண்டிருக்கும் ஒரு சிறுவன் சொல்வதாக ஆரம்பத்தில் நகரும் கதை, நகைச்சுவையை நாசூக்காக கொண்டிருக்கிறது நல்ல இரசிக்கும்படியான சம்பவங்கள் நல்ல முறையில் செதுக்கப்பட்டிருக்கின்றன.

என்றாலும் நான் விரும்பாத ஒரு காட்சி உண்டென்றால் அது மகனும் அதாவது தம்பி மகனும் பெரியப்பாவான மஹாவீரும் சேர்ந்து மது அருந்தும் ஒரு காட்சி மட்டுமே. அதை நீக்கி விட்டால் மேலும் நன்றாக இருக்கும்.

எப்போதும் கிளைமாக்ஸில் கதாநாயகன் அடித்து துவம்சம் செய்து அநியாயத்தை தட்டிக்கேட்டு நமக்குள் சூடேற்றுவார், ஆனால் இதில் அமைதியாக தந்திரமாக தம்மை உள் வைத்து பூட்டப்பட்ட அறையில் உள்ள தந்தையும் குருவுமான மஹாவீர் கதவை உடைக்க முயன்று தோல்வியுற்று அமைதியாக அமர்ந்து தியானம் செய்து கொண்டிருக்கிறார் அல்லது பிரார்த்தனையில் ஈடுபடுகிறார் போட்டி முடிந்து இந்திய தேசிய கீதம் ஒலிக்கிறது அதைக் கேட்டு தமது குறிக்கோள் நிறைவேறியதைக் காணாமலே கண்டு பெரிதும் மகிழ்கிறார். இது வித்தியாசமான கதை நகர்வு.

நல்ல கிராமிய சூழ்நிலையில் அருமையான பதிவுகளை நமக்குத் தருகிறது.
தவற விடக் கூடாத படங்களுள் இதுவும் இடம் பிடிக்கிறது. இதன் வெற்றி பேசப்படும்... துணிச்சலான முயற்சி. அனைவரும் பாராட்ட வேண்டும் பார்க்க வேண்டும்.

தாரளமாக நூற்றுக்கு அறுபது கொடுக்கலாம்.தமிழில் உடனே மொழிபெயர்ப்புடன் கொண்டு வந்திருக்கிறார்கள் அதற்காக நாம் நன்றி சொல்லவும் வேண்டும்

Image result for dangal poster


அமைதியாக ஆர்ப்பாட்டமில்லாத அடக்கமான‌ ஆழமான பாத்திரம், நிறைகுடம் ததும்பாது என அமீர்கான் மஹாவீர் பொகாட்டாக வாழ்ந்து காட்டியிருக்கிறார்.எளிமையாக அனைவரையும் கவர்ந்து விடுகிறார்.

இன்னும் நிறைய இது பற்றிப் பேசிக் கொண்டே இருக்கலாம் ஆனாலும் அது நீங்கள் பார்த்து மகிழும் நிறைவை அளிக்காது என இத்துடன் முடிக்கிறேன்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Sunday, December 25, 2016

பிடித்த‌ பணத்தை எல்லாம் மக்களுக்கு திருப்பி விடலாமே?: ‍ கவிஞர் தணிகை

 பிடித்த‌ பணத்தை எல்லாம் மக்களுக்கு திருப்பி விடலாமே?: ‍ கவிஞர் தணிகை

இந்தியாவில் குடியரசுத் தலைவர் தவிர பிரதமர், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி,படைத்தளபதிகள், மாநில முதல்வர்கள், தலைமைச் செயலர்கள் தொடங்கி ஊராட்சி உறுப்பினர் வரை ஏன் வாக்குக்கு மதுப்புட்டி,பிரியாணி,200ரூபாய் இலஞ்சம் வாங்கும் குடிமக்கள் வரை யாவுமே ஊழல் மயமான நிலையில் அரசு என்ற ஒன்று அவசியமா?


Image result for Rajendra Prasad

ஏன் குடியரசுத் தலைவரில் கூட கண்ணாடி போட்ட பிரதீபா பட்டேல் என்னும் பாட்டியம்மா சினிமா பார்ப்பதற்கே மக்கள் பணத்தை எண்ணிலடங்காமல் வாரிவிட்டு செலவு செய்து தியேட்டரை இராஜ்பவனில் அமைத்திருந்ததும் உண்டு என்று செய்திகள் உண்டு.ஆக அடி முதல் நுனி வரை அத்தனையும் இங்கு ஊழல் மயமே...இதில் மோடி மிகவும் யோக்கியசாலி என ராகுல் காந்தி போன்றோர் சஹாரா,பிர்லா, அம்பானி மார் கதை எல்லாம் வெட்டி வெளிச்சமாக்கி  விடப்படுகிறது. இவர் மக்களுக்கு நல்லது செய்கிறாராம். முதலில் இவரது கட்சியின் அத்வானி போன்ற முதியவருக்கு நன்மை செய்திருக்கிறாரா என்று பாருங்கள்...

பழைய நோட்டைப் பிடிக்கிறேன் கள்ளப்பணத்தை கறுப்புப் பணத்தை என ஒருத் திட்டம் ஆனால் அச்சடித்த பணத்தில் முக்கால் வாசி இந்த ஆண்டைகளுக்கே ரிசர்வ் பாங்கிலிருந்து நேரடியாக சப்ளை ஆகிவிட்டது. வங்கி முன் வரிசையில் நிறபவர்கள் நின்று கொண்டே இருக்கிறார்கள் 50 நாளாக.. இதில் டிஜிட்டல் இண்டியா, கோடிக்கணக்கில் ஏப்ரல் பரிசு ஏப்ரல் ஃபூல்...
Image result for Sarvepalli Radhakrishnanநாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக அங்கே இவ்வளவும், இங்கே அவ்வளவும், அவரிடம் ,இவரிடம் என செய்திகள் வந்த வண்ணமே உள்ளன, இது இப்படி இருக்குமானால் அதில் வங்கி மேலான்மையும், அரசியல் பிரபலங்களும், ஆட்சி அதிகாரிகளும் (இவர்களை அலுவலர்கள் என்று சொன்னால் நிறைய பேருக்குப் பிடிக்காது)சிவில் சர்வன்ட்களும் மந்திரிமார்களும் எல்லாமே உடந்தைதான். இதைபற்றிய செய்திகளே தினமும் பாதிக்கும் மேல் மாதக் கணக்கில்...

ரெயில்வே நிலையம், மின்வாரியம், பி.எஸ்.என்.எல் எந்த மத்திய மாநில அரசு அலுவலகங்களிலுமே ஸ்வைப் இல்லை இது வரை. தனியார் கேக் கடைக்காரர் வைத்துள்ளார். இதில் எல்லா மக்களும் மாறுக மாறுக மாற்றுக என மறுபடியும் ஒரு மங்கி பாத். எல்லா வியாபாரமும் படுத்துவிட்டன. மக்கள் வாங்கும் சக்தி இற்றுப் போய் விட்டனர்.

பணம் பிடிப்பதில் வேறு பாலிடிக்ஸ், இவர் ஆளும் கட்சியா அவர் வேண்டாம், இங்கு தமிழகத்தில் பிஜேபி எப்படி கால் பதிப்பது அதைப்பார்த்து காய் நகர்த்து என மோடி பிலான்...

அம்பானிகளுக்கு ஆதரவாக ஒரு நாடே ஒரு இந்திய அரசே இயங்குகிறது என்பது கண்கூடு.

Image result for A. P. J. Abdul Kalam


இங்கே இருக்கும் சிறு வியாபாரிகளும், குறு வியாபாரிகளும், பாதிக்கப் பட,நமது கோயம்பேடு சென்னை காய்கறி மார்க்கட் வியாபாரம் 7ல் 1 பங்காக சுருங்கி விட்டதாம். அதாவது தினமும் சுமார் 7 கோடி அளவுக்கு வியாபாரம் ஆவது 1 கோடி கூட ஆவதில்லை எனச் செய்திகள். நடுத்தர மக்களும், சிறிய தொழில் முனைவோரும், கணக்கில் வராத அனைவரும் கணக்கில் வரவேண்டும் , தணிக்கையில் வரவேண்டும், வருமானவரிக் கோட்டுக்குள் கோட்டைக்குள் வரவேண்டும் ஆனால் இந்த உச்சியில் உள்ள பிணந்தின்னிக் கழுகுகள் மட்டும் அப்படியே வாழ வேண்டும். என்னே மோடியின் திட்டம்...

கடைசியாக: இந்த பிடிக்கும் பணத்தை எல்லாம் கீழ் தட்டுக்கு வந்து சேரும் வண்ணம் எல்லா வங்கிகளுக்கும் அனுப்பி எல்லா மக்களுக்கும் சமமாக பங்கிட்டுக் கொடுக்க மடை மாற்றி திருப்பி விட்டாவது குறை தீர்க்கலாமே..செய்யுமா இந்த மாடி அரசு மோடி ஆட்சி...
Image result for A. P. J. Abdul Kalam

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Saturday, December 24, 2016

INDIA AND ME:மறு சுழற்சியின் முதற் புள்ளியில்: கவிஞர் தணிகை.

மறு சுழற்சியின் முதற் புள்ளியில்: கவிஞர் தணிகை.
Image result for RE CYCLE STARTS...டி மானிடேசன் என்ற மோடியின் வித்தையால்,காய் கறி வியாபாரம் ஆகவில்லை என வியாபாரிகள் கவலைப்பட, விலை வீழ்ச்சிக்குப் பின்னும் காசில்லாமல் எவருமே வாங்காமல் நுகர்வோர் பணமின்றி அவதிப்பட ஒரு மனிதன் கேட்கிறான் என்னிடம் நடைப்பயிற்சியின் வீட்டு முன் உள்ள வேப்ப மரத்தில் தூக்கிட்டு இறந்து போகட்டுமா என்று. அவன் ஒரு மது அடிமை.இன்று நுகர்வோர் தினம் என்று ராம்விலாஸ் பாஸ்வான் மத்திய மந்திரி அனுப்பியதாக குறுஞ்செய்தி ஒன்று எனது பேஸிக் மொபைல் செல்லுக்கும்.

தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மதுக்கடைகளை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஜெ இருக்கும்போதே பல முறை சொன்னது என்றாலும் எந்த செயல்பாடும் இல்லை. இப்போதுகூட எடுக்கிறோம், ஆனால் எடுத்து ஊருக்குள் மாற்றி வைத்துக் கொள்கிறோம் என்கிறார்கள். எந்த வித டி மானிட்டேஷன் ஆனாலும் சரி இந்த மதுக்குடி வியாபாரம் மட்டும் அப்படியே குறையாமல் நடந்து கொண்டே இருக்கிறது காய் கறி வியாபாரிகள் கூட வியாபாரம் ஆக வில்லையே என சலித்துக்கொண்டிருக்கும்போதும்....அது எப்படி என்றுதான் விளங்கவே இல்லை.

Related image

ஒரு சமுதாய மறுமலர்ச்சியை சீரழித்த பெருமை இரு கழக கலக ஆட்சிகளுக்குமே உண்டு. மதுவை இவர்கள் அனுமதித்திருக்கவே கூடாது.
ஒரு மது அடிமை அவனது வீட்டில் அவனுக்கென்று இப்போது எவருமே கிடையாது ஒரு மாற்றுத்திறனாளியாக இருந்த‌ வயோதிக தந்தையும் இறந்த பின்னே இவன் தனிமனிதனாகவே வாழ்க்கை நடத்தியபடி இருக்கிறான் வயது 30 முதல் 40 வரை இருக்கலாம்.

எனது நடைப்பயிற்சியின் போது நெடு நாள் கழித்து சில நாளுக்கும் முன் அந்த வழியே சென்ற என்னைப் பிடித்துக் கொண்டு ஒரு அடி கூட முன்னேறிச் செல்ல விடாமல் அவன் புராணம் பாடினான். தற்போது மூன்றாம் பாகம் ஆரம்பித்து விட்டது என் வாழ்விலும் பணி பொருட்டு முன் போல அதிகமாக எமது வழக்கமான பாதையில் நடைப்பயிற்சியில் ஈடுபடச் செல்ல முடியவில்லை. சேலத்து ரயில்பாதை நடைமேடையில் நடைப்பயிற்சி முடிந்து போகிறது . ஆனால் அது எனக்கு முழுதாக நிறைவளிக்காது...பல உடற்பணிகள் சில உடற்பிணிகள், தளர்வு இப்படியாக நமக்கிருக்க..
Related image


விடுமுறை எடுத்துக் கொண்டு நாம் அந்த பழகிய பாதையில் செல்ல, இவன் வந்து முதலில் சார், சொல்லுங்கள், நான் முன்னால் இருக்கும் வேப்ப மரத்தில் தூக்கு போட்டு செத்துப் போகலாம் என நினைக்கிறேன் சார் என்றான்.

வேண்டாம், நீ இப்போதே குடித்து, குடித்து பாதி இறந்து விட்டாய், இன்னும் மீதமிருக்கும் நாட்களை எப்படியாவது கழித்து விடு. இயல்பாக இற.எல்லோருக்கும் இறப்பு வரும் அது என்றும் மாறாது.அதுவரை நமது வாழ்வை நாம் தொடர்ந்தேயாக வேண்டும், இல்லாவிட்டால் நீ உடலை இழந்தும் ஆவியாகி அப்போதும் நிம்மதி இல்லாமல் அலைந்து அடுத்தவரை தொந்தரவு  செய்வாய், உனது சகோதரி குழந்தைகளுக்கு உன்னால் முடிந்தால் ஏதாவது உனது வருவாயில் இருந்து நல்லதை செய், தேவைப்படும் குழந்தைகளுக்கு படிக்க உதவி செய்,என்று கூறினேன்.

ஓ! அப்படியா சொல்கிறீர்கள், சரி என்று சொல்லி இருக்கிறான். சொந்த வீடும் வாசலில் சில மரங்களும், ஒரு குடி நீர் குழாய் இணைப்பும் அவனது சொத்து, மற்றபடி மது இல்லாமல் அவனால் வாழ முடியாது, எப்போதாவது கூலி வேலைக்கும், அல்லது லாரித் தொழிலில் கிளீனராகவும் பணி புரியச் செல்வான் அவன்...
Related image

பி.எஸ்.என். எல் எவருமே இல்லையென்றாலும், மதியம் 1.30 முதல் 2.30 வரை சாப்பாட்டு இடைவேளை என கறாராக கடைப் பிடிக்க, ரிலையன்ஸ் பையன் மார்ச் வரை இலவசம் ஆதார் எண் மற்றும் 4ஆம் அலைக்கற்றை செல்பேசியின் அடையாள எண் இருந்தால் போதும் சிம் இலவசம் என எப்போதும் கூவிக் கூவி அழைத்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறான் அவனுக்கு எந்தவித மதிய உணவு இடைவேளை இருப்பதாகவும் தெரியவில்லை.

நேற்று சேலத்தில் மத்திய கூட்டுறவு வங்கியின் திருமண மண்டபத்தருகே ஒரு வேலையாக செல்ல வேண்டி இருந்தது. அங்கே கூட்டம், 64 முக்கியபணியாளர்களை முடக்கி, வங்கியின் தலைமையகத்தில் புதுக் கற்றை புது நோட்டு, புதுக் கணக்கு பரிசோதனை, இளங்கோ என்பவர் நமது சேலத்து மந்திரிக்கு மிக நெருங்கிய சொந்தமாம், 150 கோடி, 70 கோடி என்று பேச்சு அடிபட‌ செய்தியாகிறது அந்த சோதனை அங்கு 3 ஆம் நாளில் நடைபெறுகிறதாம்.

எல்லாம் உருகுகிறார்கள், ஆனால் வரலாறு என்ன சொல்கிறது எனில் ஜெவுக்கு சசியை அறிமுகப் படுத்திய சந்திரகலாவின் முகத்தில் ஆசிட்டும், தலைமைத் தேர்தல் கமிஷனராக இருந்த  டி.என் சேஷனை ஓட்டலில் புகுந்து அடிக்க யத்தனித்ததும், இந்து ராம் பயந்து பெங்களூர் ஓடியதும், தி.மு.க பன்னீர் செல்வம் என்ற வழக்கறிஞர் குற்றுயிரும் கொலையுயிருமாக படுக்கையில் கிடக்க காரணமாக இருந்ததும், மணி சங்கர அய்யரை சட்டை கிழிய அடித்து விரட்டியதும்,திருநாவுக்கரசு கே.கே.எஸ்.எஸ்.ஆர் மற்றும் ஒருவர் அவரைக் காப்பாற்றியபோதும் அவர்களை வெளியேற்றி கே.கே.எஸ். எஸ்.ஆர் முகத்தின் மேல் ஆசிட் வீச்சு நடந்ததும், நெடுஞ்செழியன் போன்ற சிலர் விலகியபோது உதிர்ந்த ரோமம் என்றதும், கலைஞர் கருணாநிதியை, முரசொலி மாறனை டி.ஆர். பாலுவை நள்ளிரவில் குண்டுக் கட்டாக தூக்கிச் சென்று சிறையில் அடைத்ததும்,அட நம்ம ட்ராபிக் இராமசாமியை போஸ்டரை கிழித்தார் எனச் சொல்லி அதிகாலையில் சிறைக்கு அனுப்பியதும்,

கோவனை மதுவிலக்குக் கோரி பாடினார் என சிறை செய்ததும், சசி பெருமாள் என்ன செய்தாலும் அதைப்பற்றி கண்டு கொள்ளாமல் ஒரு வார்த்தை கூட இறந்தபோதும் கூட பேசாமல் இருந்ததும், சென்னையும், கடலூரும் வெள்ளத்தில் மூழ்கியபோதும் ஒன்றுமே செய்யாமல் பொது நல ஆர்வலர்கள் கொடுத்த தான தர்மத்திலும் அம்மா ஸ்டிக்கர்தான் இருக்க வேண்டும் எனப் பண்ணியதும்...

Related image

இப்படியாக ஏராளமாக சொல்லிக் கொண்டே போகலாம். இதில் அரசின் நடவடிக்கையாக அரசாங்க நடவடிக்கையாக ஒரு நியாயத்துடன் இவை நடந்திருந்தால் அனைவருமே ஏதும் சொல்ல வழி இல்லை. எல்லாமே தாம் என்ற கர்வ ஆணவ உணர்ச்சியால் விளைந்தபடியால் தெய்வம் நின்று கொல்லும் என்ற பழமொழி உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.

நாம் யார் யார் எல்லாம் நமக்கு பெரிய எதிரி என நினைக்கிறோமோ அவர் எல்லாம் பெரிய எதிரியே அல்ல. உண்மையில் எதிரியே அல்ல. அவர்கள் எல்லாமே உனது மரணத்தில் வந்து தமது சோகத்தை சொல்லிச் சென்றார்கள். உண்மையில் அவரவர்க்கு அவரவர் குணாம்சங்கள், அவரவர் உடல்நிலைகள், அவரவர் எண்ண அலைகளே பெரிய எதிரி. அவரவர் ஒழுக்க நெறிகளே அல்லது ஒழுக்கமின்மையே பெரும் எதிரிகள் அதைத்தானே நன்மையும் தீமையும் பிறர் தர வாரா என கணியன் பூங்குன்றனார் வரிகள் செப்பின.


சிவாஜி சிலையும், கண்ணகி சிலையும், அண்ணா பெரு நூலகமும், இடம் மாறி இருக்க வேண்டிய சட்டசபை வளாகமும் அனைவர்க்கும் தேவைப்படும் உழவர் சந்தையும் ஒரு தனிமனித விருப்பு வெறுப்பின் முன் நாட்டின் ஆட்சி முறைமைகளாகி சின்னா பின்னப்பட்டன...அந்த தமிழக ஆண்டுகள் முடிவுக்கு வந்து விட்டன...

மற்றொரு சுழற்சியின் முதற் புள்ளி ஆரம்பமாகிவிட்டது. இனியாவது தமிழகத்தின் தலைவிதி நன்றாக ஆட்சி செய்வோரின் வசம் ஆகட்டும்...

அப்பல்லோவும், சசியும் சேர்ந்து ஆடிய நாடகத்தை உலகறியும், இதில் மோடியும் உள்ளடக்கம், 11.30க்கு செய்தியாக அறிவிக்க ஜெவின் மரணச் செய்தி 11.09க்கு மோடி இறந்த வருத்தத்தை தெரிவித்ததாக செய்திகள் குறிப்பிட்டுள்ளன. அப்பல்லோவில் இருந்த ஒரு நர்ஸ் ஒரு துண்டுக் காகிதம் அதில் ஒரு மாத்திரை அல்லது மருந்து பெயர் எழுதி கீழே கிடந்ததாக கொண்டு சென்று நிர்வாகத்திடம் கொடுத்ததால் அவர் பணியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். ஆக மூன்றாம் தளத்தில் இரும்பு ஷட்டருடன் தமிழகத்தில் முதல்வராக இருந்த ஒருவர் எவருக்கும் தெரியக்கூடாது என்ற நிலையில் உள் வைக்கப்பட்டு, கவர்னர் மத்திய மந்திரிகள் வரை எல்லாமே தரை தளம், முதல் தளம் வரை வந்து சென்று அம்மா உப்புமா சாப்பிட்டார், நல்லா தண்ணீர் குடித்தார், மருத்துவரிடம் நகைச்சுவையாக பேசினார், கொடநாட்டு டீ தருகிறேன் எமது போயஸ் வாருங்கள் என எம்பால்மிங் முறையில் இருந்த ஒரு உடலை வைத்துக் கொண்டு ஆடிய நாடகம் இமாலயம்....எந்த உலகிலும் இல்லாதது.அடுக்காதது...

தமிழகமும், இந்தியாவும் அடுத்த சுழற்சிக்கு தயாராகிறது...எனது வயதும் உடலும் கூட...

Related image

அனைவர்க்கும் கிறிஸ்மஸ் சீசனல் புத்தாண்டு வாழ்த்துகளை உலகெங்கும் இருந்து இந்த வலைதளத்தை படிப்பார்க்கு மறுபடியும் பூக்கும் வலைப்பூவின் சார்பாக உரித்தாக்குகிறேன்.

 பி.கு: ஜெவின் மரணம் பற்றி தமிழச்சி ஒருவர்தான் முன்பே சொன்னார் ஒரு காவல்துறையின் நண்பர் வழியாக செய்தி கசிந்ததாக பயமின்றி அந்த நபர் ஒருவர்தான் சரியான பதிவராக செய்தியாளராக இருந்திருக்கிறார்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.Wednesday, December 21, 2016

தமிழக அரசைக் கலைத்து விட்டு புதியதாக தேர்தல் நடத்த வேண்டும்: கவிஞர் தணிகை

தமிழக அரசைக் கலைத்து விட்டு புதியதாக தேர்தல் நடத்த வேண்டும்: கவிஞர் தணிகை
Image result for chief secretary ram mohan rao


மோடியின் ஆட்சியின் வண்டவாளம் வெளியில் வர ஆரம்பித்து விட்ட நிலையில் அவர் கம்பி கட்டி அதில் ஆடி வரும் தமிழக ஆட்சியும் ஜெவுடன் செத்து விட்டது. எனவே நடைபெறும் இந்த ஆட்சி துளியும் மக்களுக்கு தொடர்புடையதல்ல... ஜெ அப்பல்லோவின் மரணத்தருவாய் இருந்த நிலையில் மருத்துவமனை லீலைகளை கடசி வரை வெளியிடாமல் வெளிப்படைத் தன்மை இல்லாத ஒன்றே போதும் இது ஆட்சி அல்ல என்பதற்கு அதற்கும் மேலாக தலைமைச்  செயலகத்திலும், தலைமைச் செயலரின் வீட்டிலும் புகுந்த சி.பி.ஐ சோதனையும் அதன் வெளிச்சமும் அதை பட்ட வர்த்தனமாக தெளிவு படுத்தி விட்டது.இராம் மோகன் ராவின் மகனே முறைகேடுகளை ஒப்புக் கொண்டுள்ளார்.மேலும் கிரானைட் ஊழலும் மணல் ஊழலும் இப்படியாக தொடர்ந்திடும் தொடர்கதை மிக அதிகம். ஆள இவர்களுக்கு எல்லாம் ஒரு தகுதியும் இல்லை.

 ஜெவுக்கும் எம்ஜிஆருக்கும் இரட்டை இலை சின்னத்துக்கும் தான் மக்கள் வாக்களித்தனர். இப்போது ஜெ இல்லாத நிலையில் இந்த ஆட்சிக்கு அந்தக் கட்சியைச் சார்ந்தார் சொந்தம் கொண்டாடுவதும் முறையல்ல. சரியான அணுகுமுறையாக இருந்தால் அவர்கள் தாமாகவே சேர்ந்து அம்மா இல்லாத நிலையில் ஆட்சி , பதவி, எல்லாம் வேண்டாம் என வெளியேறி ஆட்சி துறந்து மறு தேர்தலுக்கு கோரிக்கை வைக்க வேண்டும்.ஜெ இல்லாவிட்டால் தாமும் செத்து விடுவோம் என்றோர் எல்லாம் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் அடுத்து சசிகலாவை நிரந்தர முதல்வர் , சின்ன அம்மா இது மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரின் இளைய மகனையும் குறிக்கும் சொல்லாக சக்திகள் கருத இப்போது இந்த சின்ன அம்மா தமது தெய்வம் என காலில் விழுந்து கும்பிடுவது, அவரை முதல்வர், பொதுச்செய்லாளர் என ஜெவின் சிம்மாசனத்தில் வைத்துள்ளனர். அம்மாவிடம் பால்குடி மறவாத உண்மையான மகவுகள் தமிழகத்தில் எண்ணற்ற கணக்கில் உண்டு. பாலுக்கு பதில் பீர் குடித்த மகன்கள் அல்லவா? அதையும் அம்மாதானே அனைவர்க்கும் தாராளமாக்கினார்.

அது மட்டுமின்றி இவர்கள் ஆட்சியின் தெளிவை நாம் இவர்களின் தலைவரை வைத்து தெரிந்து கொள்ளலாம். மேலும் மோடியின் காவலர்கள் சொல்கிறார்கள் இராகுல் இராபர்ட் வடேராவைப் பற்றி பேசாதிருந்தவர் இப்போது மோடியை பிர்லாவிடம், சகரா குழுமத்திடம் பெற்ற நிதி விவரங்களை புள்ளி விவரங்களை தருகிறார். இந்தக் குழந்தை இப்போதுதான் பேசவே ஆரம்பித்திருக்கிறது. அதற்குள் அதை இதை ஏன் இவர் பேசுகிறார் என்கிறார்கள் இவரை பகுதி நேர அரசியல்வாதி என்றெல்லாம் கேலி செய்தபடி...ஏன் அப்போது பேசாதிருந்தவர் இப்போது பேசினால் என்ன? பேசுவது உண்மையா பொய்யா என்று சொல்வதை விட்டு விட்டு தேவையில்லாமல் தனி மனித கேலியும் நக்கல்களுக்கும் என்ன அவசியம்?

எனவே தமிழக அரசு இன்றிருக்கும் நிலையில் குடியரசுத் தலைவர் ஆட்சி கூட இருக்கக் கூடாது அப்படி இருந்தால் அதுவும் மோடி ஆட்சி ஆகிவிடும். மக்கள் ஆட்சி ஆகாது எனவே உடனே விரைந்து மறுபடியும் ஒரு மாநில அரசு அமைப்பதற்கான தேர்தலை நடத்துவதுதான் சரியாக இருக்கும்.

மோடி பிர்லா, அம்பானி, சகாரா கூட்டுக் கொள்ளை பற்றி சொல்லப் போனால அவர்களும் ஆட்சியில் இருக்கக் கூடாதாவர்தான் ஆனால் இப்படியேதான் எல்லாம் இருக்கின்றனர் அப்படிப் பார்த்தால் இங்கு எவருக்குமே ஆள அருகதை இல்லை. நல்ல மனிதரை தேடிப் பிடியுங்கள்.

ஆனால் இந்த நாட்டு அரசியலமைப்பில் அப்படி திடீரென ஒரு எழுச்சி ஏற்பட்டு புதியவர்கள், நல்லவர்கள், தியாகிகள் ஆட்சிக்கு வருவார்களா என்பதுதான் மிகப் பெரிய கேள்விக்குறியும் புதிராகவும் இருக்கிறது.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Tuesday, December 20, 2016

மேட்டூர் அணையின் காவிரி நீர் அளவு பெரிதும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: கவிஞர் தணிகை

மேட்டூர் அணையின் காவிரி நீர் அளவு பெரிதும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: கவிஞர் தணிகை

Image result for mettur dam  is drying with out water


அனைவரும் அறிந்ததே தமிழகத்தின் குடி நீரின் அமுத சுரபி, தஞ்சை விளை நிலங்களின் பாசன அட்சய பாத்திரமான மேட்டூர் அணையின் காவிரி நீர் அளவு  38 அடிக்கும் கீழ் இறங்கி வருகிறது. இது பெரிதும் மனித வாழ்வின் ஆதாரத்தின் மேல் கேள்வி எழுப்பவும் கவலையூட்டவும் செய்யும் செய்தி.

இதைப் பற்றி எல்லாம் எவரும் நினையாமல் சசிகலா புராணம், பாடிக் கொண்டே இருக்கின்றனர். ஆளும் கட்சியினர்.

128 அடி கொள்ளளவு உள்ள அணையில் 38 அடி, இந்தப் பனிக்காலத்தில் குளிர் காலத்தில் இனி மழை பெய்ய வாய்ப்புகள் மிகவும் குறைவு. கர்நாடகா கொள்ளேகால், மைசூர், கூர்க் போன்ற மலைப்பாங்கான பகுதிகளில் மழை ஏற்பட்டு பெரு மழை ஏற்பட்டு அந்த மழை நீர் அருவி வடிந்தால் இங்கு வந்தால் மட்டுமே அணைக்கு நீர். அல்லது கர்நாடகா அரசு மத்திய அரசு, நடுவர் மன்றம், நீதிமன்றம் உத்தரவுக்கிணங்க ஏதாவது நீர்ப் பங்கீடு அளித்தால் உண்டு.

Image result for mettur dam  is drying with out water

இல்லையேல் குடிக்கவும் நீர் இல்லாமல் மிக வறட்சி ஏற்படும், காடு, கழனி, மாடு கன்று கால்நடைகள் பறவைகள் பற்றி எல்லாம் சொல்லவே வேண்டாம்...

இயற்கையே பார்த்து கருணை கூர்ந்து மாறுதல் செய்தால் உண்டு.
இல்லாவிட்டால் இந்தக் குளிர் காலம் மாறுவதற்குள்ளேயே நாம் வரலாறு காணாத வறண்ட அணையை வெற்று நிலத்தை சேறும் சகதியுமான அணைக்குள் நீரில் மூழ்கி இருந்த நிலப்பிரதேசத்தை காண்பது உறுதி.

இயற்கை அன்னையே மனித குலத்தை தமிழினத்தைக் காப்பாற்று. நீராகி உறுதுணையாகி துன்பம் நீக்கி கரை காட்டு. வழி காட்டு. மேல் ஏற்று.

பாராளுமன்றத்துக்கு வாஸ்து சரி இல்லை என்கிறார்கள், தமிழகத்துக்கும் வாஸ்து சரியில்லையோ, எங்கள் வீடு வீதியில் கடைசி வீடு அது போல நம் தமிழ் நாடு இந்தியாவில் கடைசி மாநிலம். மேல் இருந்து நீர் வரவில்லை எனில் இயறக்யே தஞ்சம். அதுவும் இல்லையெனில் மாபெரும் பஞ்சமே மிஞ்சும்.  இதில் பொருளாதாரப் பற்றாக்குறையை மோடி கொண்டு வந்துள்ளது எல்லா மாநிலைத்தையும் விட தமிழகத்தையே அதிகம் பாதிக்கும்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Monday, December 19, 2016

ஜூன் 3 2016ல் வெளிவந்த இறைவி: கவிஞர் தணிகை

ஜூன் 3 2016ல் வெளிவந்த இறைவி: கவிஞர் தணிகை

Related image


நேற்று பார்த்த இந்த படத்தை என்னால் மறுக்கவும் மறக்கவும் முடியவில்லை எனவே இந்த பதிவு. பார்க்காமலிருந்தால் அனைவருமே பார்க்க வேண்டிய படம்தான். படம் மனதில் அப்படியே தைத்து விட்டது.

ஆண்பிள்ளைத்தனம் மிக்க இந்த ஆணவ ஆண்கள், பொம்பளைக்கி பிறந்தவர்கள்.ஆண் என்றாலே நெடில் இருக்க, பெண் என்பது வெறும் குறில்தான். எனவே அவர்கள் பொறுத்துக் கொள்ளப் பிறந்தவர்கள், ஆண்கள் அவசரப் படவும், பொறுமையின்றி தமது உணர்வுகளை அனைத்தையும் அப்படியே வெளிக்காட்டப் பிறந்தவர்கள் எனச் சொல்லி ஆனால் அவை எவ்வளவு தாறுமாறுகளை விதைத்து விளைத்து விடுகின்றன என உணர்தலின் பாதிப்பை கொடுத்து உள்ளது

எவருமே எதிர்பார்க்காத திருப்பங்கள், தன்னை தமது உயிரை காப்பாற்றும் நபரையே கடைசியில் கொல்லும் அண்ணன் , இயக்குனர் சூரியா விஜய் சேதுபதியிடம் சொல்லும் வசனம், நீ தம்பி மாதிரிடா, ஆனால் அவன் பாபி சிம்ஹா என் தம்பிடா என தம்மைக் காப்பாற்றி தம்மைக் கொல்ல இருந்த வில்லனை கொன்றவன் என்றும் பாராது கொன்றுவிட்டு படத்தின் மெசேஜை கடைசியில் சொல்லி முடிக்கிறார்.

Image result for iraivi

கோயில் சிலை செய்யும் குடும்பம் அது ஒரு கலையகம் நடத்தி அதன் மூலம் விற்பனை செய்யும் கலைக்குடும்பம் அதில் ஒரு சினிமா பட இயக்குனர் படும் பாடு. அதில் 2 சகோதரர்கள், அவர்களுடன் ஒட்டிய பிறப்பாக விஜய் சேதுபதி என்ற ஒரு கிறித்தவ நண்பர். ஆனால் இவர்களுக்காக தமது குடும்பத்தைக் கூட விட்டு விட்டு அவர்களுக்காக சிறை செல்வதும், மறுபடியும் அவர்கள் கூப்பிடுகிறார்கள் என கேரளாவுக்கு சிலை திருட புறப்பட்டு மாட்டிக் கொள்வதும் அதன் பின் பாபி சிம்ஹாவின் கதை ஆரம்பிப்பதும், பெண்கள் ஆண்களிடம் மாட்டிக் கொண்டு சித்ரவதைப் படுவதை தடுக்க வேண்டும் என்றும், தமக்குத் தெரிந்த பெண்களுக்கு எல்லாம் நல்வாழ்வு தர   எண்ணிக் கொண்டு அஞ்சலி விஜய் சேதுபதியின் மனைவிக்கு விஜய் சேதுபதியை அப்புறப்படுத்தி விட்டு அவருடன் வாழ ஆசைப்படுவதாகவும் அது கடைசியில் அவரின் உயிருக்கு வேட்டு வைப்பதாகவும், அதற்காக அண்ணன் சூரியா பழி வாங்கி விட வரும்போது நேர்ந்து கொண்ட செம்மறி ஆடாக அங்கேயே விஜய்சேதுபதி திகைத்து நின்று துப்பாக்கி குண்டை வாங்கிக் கொண்டு மரணிப்பதாகவும் கதை.

சொல்ல வந்தது: பெண்கள் முதல் காட்சியிலேயே தாம் எப்படி வாழவேண்டும் என்ற கல்யாணக் கனவு எப்படி நிதர்சனத்தில் தகர்ந்து போகின்றன என்றாலும் கணவனைக் கட்டிக் கொண்டு எதிர்ப்பார்த்த வாழ்வுக்கு மாறாக இந்த வாழ்வு இருந்த போதும் அதற்காக தம்மை அர்ப்பணித்துக் கொள்வாராகவும் கதை செல்கிறது.

Related image

எல்லாருமே நன்றாக நடித்திருக்கிறார்கள்....எவரையுமே குறை சொல்ல வழி இல்லை நல்ல கதை. நாட்டில் உள்ள ஒவ்வொரு வயது வந்த ஆணும் பெண்ணும் பார்த்து புரிந்து கொண்டு இதில் சொல்லப்பட்ட செய்தி, கொஞ்சம் பொறுமை காட்ட வேண்டியது பெண்ணுடைய செயல் மட்டுமல்ல, ஆணுடைய செயலும் அப்படி இருந்தால் நிறை வாழ்வு வாழலாம் என சொல்லாமல் சொல்லும் ஏன் உணரவைக்கும் படம்.

நாளை தமது இலட்சியப் படம் பல்வேறு இன்னல்களைத் தாண்டி வெளி வரப் போகிறது என்ற சூழ்நிலையிலும் தம்மைக் காத்தவனையே தமது தம்பி  உயிருக்கு பலி வாங்க‌ கொன்று விட்டு தமது மனைவியை வேறு பாதைக்கு திருப்ப குடித்தவர் போல கெட்ட வார்த்தைகளில் தமது மனைவியையே தேவடியா எனப் பேசுவதும் எல்லாமே கொஞ்சம் மிகைதான் ஆனாலும் அதுகதைக்குத் தேவைதான் கதை ஆரம்பம் முதலே வித்தியாசமான கதைக்களத்துடனே திருப்பங்களுடன் செல்கிறது.

சுத்தியால் தலையில் அடித்து கொல்லும் விஜய் சேதிபதி எப்படி வேண்டுமானாலும் நடிக்க தோதுப்படுவார் என்பதான மெட்டல் எப்படி வேண்டுமானாலும் வளைத்துக் கொள்ளலாம் என்ற கதாபாத்திரம். அடுத்தவருக்காக கொலையும் செய்து சிறைக்கும் செல்லும் தமது முழுகாத மனைவி சொல்லச் சொல்லக் கேட்காமலும்.

இராதாரவி நன்றாக பாத்திரமுணர்ந்து செய்திருக்கிறார். வடிவுக்கரசி அதிகம்
ஸ்கோப் இல்லை என்றாலும் இருக்கிறார். கமலினி முகர்ஜி அஞ்சலி, பூஜா தேவரியா என்ற 3 பேருமே நடிக்க அருமையான வாய்ப்பு பெற்றிருக்கிறார்கள்.

கண்ணகி சிலையில் கை வத்தால், கோவில் சிலை திருடினால் என்ன என்ன விளைவு ஏற்படும் என்பது போலும் கண்ணகி கோவலன் கதையான சிலப்பதிகாரம் கதைபோலும் இறைவி பெண் தெய்வம் என்பது சொல்லப் பட்டிருப்பது நன்றாக இருக்கிறது.

Image result for iraivi

இதில் சொல்லப்பட்ட 3 முக்கியமான பெண் பாத்திரங்களுமே தனித்து வாழ முற்படுகின்றன. தனித்து வாழத் தகுதியானவை  அவை என்ற போதிலும் தாம் ஆசைப்பட்ட வாழ்க்கை கிடைக்காமல் இருப்பதற்காக வருந்தவும் செய்கின்றன. தம் அடுத்த தலைமுறையை தமது துன்பத் தடைகளிலிருந்து நீக்க முனைவார்கள் என்பது போல முடித்து இருக்கிறார்கள்.

எவ்வளவுதான் சொன்னாலும் இந்தப் படம் பார்க்காமல் அதன் சுவை உணரும் தன்மையாய் கொடுக்காது எனவே பார்த்து அனுபவித்து விடுங்கள் பெண்கள் மேல் இருக்கும் நமது பார்வையே மாறும்.

மேலும் வழக்கம் போல இதிலும் ஆண்களின் அதிகபடியான மதுக் குடியும் போதை வெடியும் கலந்திருக்கின்றன ஆனால் இந்தக் கதையில் வரும் பாத்திரங்கள் அப்படிப் பட்டவைதான் எனவே பொறுத்துக் கொள்ளத் தோன்றுகிறது. ஆனால் அந்தக் குடியிலிருந்து தமது குடியை அழித்துக் கொண்ட பிறகும் வெளி வர முடியவில்லை இவற்றிலிருந்து எல்லாம்

தமிழக இந்திய கலாச்சாரப் பின்னணியை ஆண் பெண் நுட்பமான உறவுகளை துல்லியமாக கையாண்டிருக்கிறார் இயக்குனர் சுப்புராஜ் கார்த்திக். அவரையும் இதை துணிச்சலுடன் தயாரித்த தயாரிப்பாளர்களையும் நாம் பாராட்டியே ஆகவேண்டும். கற்றுக் கொள்ள வைக்கும் படம், நல்ல மெசேஜ் இருக்கும் படம் ஆனால் இந்தப் படம் நன்றாக பேசப்பட்டது. ஆனால் எப்படி ஓடி வசூலித்தது என்பதை நானறியேன். சூரியாவின் குடிகாரப் பாத்திரம் மிகை என்ற போதும், அது இயல்பாக அப்படித்தான் இருக்கும். மது போதையிலிருந்து வெளியேற்ற அடித்து மருத்துவம் செய்யும் மையம் முதலில் கொடூரமாய் தோன்றியபோதும் அப்புறம் அதன் நன்மையை நாமும் உணர்கிறோம். நல்ல நல்ல உணர்தல்தரும் படம் எத்தனை பேருக்கு பிடிக்கிறதோ இல்லையோ நெஞ்சை பிசைய வைக்கும் படம். ஆணவமான ஆண்களின் அவலமான சோகமான வாழ்வுக்கு காரணம் என்ன என அலசி ஆய்ந்து தீர்வு சொல்லி இருக்கும் படம். பாருங்கள் அவசியம் அனைவருக்கும் சொல்வேன் எனது மேஜரான 18 வயது  வந்த மைந்தனையும் அவசியம் பார்க்கச் சொல்வேன்.

நன்றி இதனை ஆக்கியோருக்கு.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Sunday, December 18, 2016

இந்தியாவில் என்ன நடக்கிறது? மாய பிம்பங்கள் எப்போதும் கவர்ச்சியானவை கண்ணாடியில் தெரியும் அழகு போல... கவிஞர் தணிகை

இந்தியாவில் என்ன நடக்கிறது? மாய பிம்பங்கள் எப்போதும் கவர்ச்சியானவை கண்ணாடியில் தெரியும் அழகு போல... கவிஞர் தணிகை

Image result for mirror images always beautiful


இரண்டு இராணுவ பிராந்திய முதிய தளபதிகளை ஒதுக்கி ராவத் என்பவரை இராணுவ தளபதி ஆக்கி இருப்பதும், ரிசர்வ் வங்கியின் மேலாளர்களே பணப் பரிவர்த்தனையில் குற்றம் சாட்டப்பட்டு  பிடிபட்டிருப்பதும், முன்னால் விமானப்படைத் தளபதி ‍ஹெலிகாப்டர் வாங்கிய ஊழலில் கைது செய்யப்பட்டிருப்பதும்,500 ரூ 1000 ரூ பழைய நோட்டுகள் செல்லாது என ஆழம் தெரியாமல் காலை விட்டு மோடி காலை வெளி எடுக்கத் தெரியாமல் விழிப்பதும்...இந்தியாதான் உலகிலேயே அதிக சாலை விபத்துகளை சந்தித்து ஆண்டுக்கு சுமார் 85,500 உயிரிழப்பை 2.50 இலட்ச காயமுடையவர்களை உருவாக்கி உலக அளவில் முதல் நாடாக விளங்கி வருவதுமாக இப்படி பல செய்திகள் யாவுமே இந்தியாவை நற்பேருக்கு இட்டுச் செல்வதாக இல்லை. இந்தியாவின் உச்ச இடங்களில் உள்ளவை எல்லாம் கீழிருந்து மேல் வரை என்ன நிலை என உள்ளங்கை நெல்லிகனி போல படம் பிடித்துக் காட்டுகிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை அம்மா கலாச்சாரத்துள்தான் என சசிகலா நடராசனிடம் அனைத்து ஆட்சியாளர்களும் மண்டியிட்டிருப்பதும், குழந்தை தவழ்ந்து பேருந்திலிருந்து கீழே விழுவது கூடத் தெரியாமல் பெற்றோர் அசந்து தூங்கி வழிந்ததும்...இப்படியாக செய்திகளைப் படித்த பிறகு வெறெதிலும் எண்ணம் இலயிக்கவில்லை..இந்தியா எங்கே போய்க் கொண்டிருக்கிறது? இந்தியாவில் என்ன நடந்து கொண்டிருக்கிறது?

நெட் டவுன் எனவே பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது என நடைமுறை சொல்ல ஆட்சியாளர்களோ டிஜிட்டல் ட்ரான்சாக்சன் எனக் கூவி வருவதும் மத்திய நிதி மந்திரி இனி நோட்டுகளை பழைய நோட்டுகளுக்கு இணையாக அடிக்க மாட்டோம், இப்படி ஸ்வைப், கார்ட், ட்ரான்சர்களை செய்து கொள்ள வேண்டியதுதான் எனச் சொல்ல....ரெயில்வே நிலையமும், மின் அலுவலகமும், அனைத்து அலுவலகங்களும் இன்னும் அதெல்லாம் இல்லை சார் ரொக்கம் கொடுங்க சார் என்று கேட்க..என் 10 ரூபாயை கொடுக்க நான் இன்டர் நேஷனல் பே பால்,பேடைம் போன்ற வற்றில் எல்லாம் கணக்கு ஆரம்பிக்க வேண்டும் என்பதும்...யோவ் கடன் கட்ட வழி சொல்லுங்கய்யா என்றால், இருக்கிற பணத்தை இறுக்குகிற வழி மட்டும் சொல்லும் அரசு...எல்லாம் மெஷின் எல்லாம் நெட் வொர்க், சர்வர்,யோவ் மனிதருக்கு மனிதர் பழகும் முறை யாவுமே மண்ணோடு குழி தோண்டி புதைக்கப் பட்டு விட்டது. எமது இளந்தலைமுறை நரம்புகளும் கண்களும் சேதமுற எப்போதும் இரத்தமும் சதையும், அனுபவமுமாய் மனிதர் கண் முன் உலவினாலும் அவரை கண்ணெடுத்து பார்க்க மறுத்து எப்போதும் அந்த மின்பொருள்களிலிருந்து அந்த மாயத் தோற்றம், பொய் பிம்பங்களிலிருந்து அதன் அரக்கத் தொடர்பிலிருந்து வெளிவரவே மாட்டேன் என்கிறது தானும் கெட்டு தம் தலைமுறையும் கெட்டு நாடும் கெட்டு வீடும் கெட்டு...

Related image


வியாபார வர்க்கமோ காசை ரொக்கமாகத் தாருங்கள் அதை கணக்கில் கட்ட வேண்டாம் கணக்கெல்லாம் காட்ட முடியாது என தங்கள் தொடர்பில் உள்ள வாடிக்கையாளர்களை முடுக்கி விட மேல் சொல்வது ஒன்றும், கீழ் நடப்பது வேறொன்றுமாய் நடந்து கொன்டிருக்கிறது.

பெரிய மேன்சன் உடைய வாடகை வசூல் செய்வார் கூட ரொக்கமாகக் கேட்கிறார்கள், மளிகை வியாபாரத்தினர் எல்லாம் கூட ரொக்கமாகவே விரும்புகிறார்கள் என்கின்றன உண்மைச் செய்திகள். கணக்கில் கட்ட வேண்டாம் என்கின்றார்கள்.


Image result for mirror images always beautiful
கணக்கில் கட்டச் சென்றால், சர்வர் பால்ட், கணக்கு ஏறவில்லை, நெட் ஒர்க் ஆக்வில்லை சர்வீஸ் ரொம்ப வீக் இப்படியாக எந்த வகையிலும் வங்கிப் பரிவர்த்தனை செய்யும் உபகரணங்கள் எங்கும் முறையாக பணி செய்யாத போது இந்த டிஜிட்டல் ட்ரான்சக்சன் என்ன ஆகப் போகிறதோ?

ஒரு ஸ்வைப் வழியாக 10,000 கொடுத்த ஒரு நண்பர் அந்த கம்பெனிக்கு 10,000 ஏறவேயில்லை அவர் தினமும் கேட்டு வருகிறார் என்றார். இவர் கணக்கில் குறைந்து விட்டது ஆனால் கடைக்காரர் கணக்கில் ஏறவில்லை.அதுதான் அப்படி என்றால் ஒரு வங்கியில் நெட் ஒர்க் வெரி ஸ்லோ, ஒன்னும் கவலைப்படாதீங்க சார், பணம் அந்தக் கணக்கில் ஏறி விடும் என என் கண் முன்னே வங்கிப் பணியாளர் ஒருவர் வாடிக்கையாளருக்கு ஆறுதல் கூறிக் கொண்டிருந்தார். இதெல்லாம் இப்படி இருக்க வாங்குவாருக்கும் விற்பாருக்கும் இடையே இந்த பணப் பரிவர்த்தனை செய்ய முகவர்கள், இடைத்தரகர்கள் என இன்டர் நேஷனல் கம்பெனிகள், அவற்றிற்கு சேவை வரி பிடித்தங்கள் வேறு நம் கணக்கில் இருந்து தர வேண்டுமாம். அது நூற்றுக்கு சமயத்தில் 2.75% கூட இருக்குமாம்.என் காசை அவருக்கு கொடுப்பதற்குள் ஒரு இடைத்தரகு கமிஷன்.வாங்குவாருக்கு விற்பாருக்கும் இடையே எவரும் தேவையில்லை என்றார்கள் உழவர் சந்தையில்...ஆனால் இனி இந்திய சந்தையில் இவை எல்லாம் இல்லாமல் இல்லை. நாம் சம்பாதிக்கும் ஊதியம் இனி குறிப்பிட்ட அளவு இந்த இடைத்தரகு கமிஷனுக்காக போகும். இதுதான் உண்மையான மோடியின் திட்டத்துக்கு கிடைத்த பலன்.

Image result for mirror images always beautiful


பே பால் கம்பெனி தமது 45 கஸ்டமர்கள் சுமார் 6.50 இலட்சம் ரூபாயை ஏமாற்றி விட்டனர் என குய்யோ முறையோ என வழக்கு தொடர வழி இல்லை என வேறு வழிகளில் எல்லாம் கேட்கிறதாம். ஆன்லைன் வர்த்தகத்தில் பெற்ற பொருள்கள் சரி இல்லை என திருப்பி அனுப்பி அதன் பிறகு மறுபடியும் உரிய பொருள்களை திருப்பிக் கொடுத்ததன் கணக்கு வழக்காம்...என்ன மண்டையை சுற்றுகிறதா...நாம் தேங்காய் தக்காளி வாங்குவதற்கு தேங்காய் சரியில்லை, தக்காளி அழுகி விட்டது என நெட் ஒர்க்கில் சர்வர் பால்ட் இல்லாதபோது மின்சாரம் தடை இல்லாத போது , ஆங்கிலம் நன்றாக அறிந்த போது, தொழில் நுட்பம் எல்லாம் 130 கோடி மக்களுக்கும் சென்றடைந்தது எனச் சொல்லி கேட்டு மாற்றிக் கொள்ளலாம்.

வாழ்க மோடி, ஏழையை மண் மூடி அது வெளித் தெரியதவரை  இருள் மூடி அதன் பிறகு இந்தியா டிஜிட்டலில் ஒளிரும்...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.


Image result for mirror images always beautiful

பி.கு: கொசு கடிக்குதய்யா, முதலில் அதை ஒழிக்க என்ன திட்டம்?
கழிப்பறையே இல்லாமல், ஒரிஸ்ஸாவில் இன்னும் ஆடையே அணியாத
பழங்குடிகள் வாழ்கின்றனரே அவர்க்கு மேல் வர என்னத் திட்டம்...அதெல்லாம் வேண்டாம் டிஜிட்டல் இண்டியா  ஒளிரட்டும் மலரட்டும்,வாழட்டும் அம்பானிகள்...

Friday, December 16, 2016

மங்கி பாத்: மோடிஜி இதர் ஆவோஜி தேக்கோஜி இந்தியாகி கிராம் இன்டர்நேஷனல் லெவல் நைஜி: கவிஞர் தணிகை

மங்கி பாத்: மோடிஜி இதர் ஆவோஜி தேக்கோஜி இந்தியாகி கிராம் இன்டர்நேஷனல் லெவல் நைஜி: கவிஞர் தணிகை

Related image

பரிசு அறிவிப்பு பணமில்லா இ.மின்னணு முறையில் வர்த்தகம் செய்வாரைத் தேர்ந்தெடுத்து கோடிக்கணக்கில் நக்கில் பரிசு அறிவிப்பு.உர்ஜித் படேல் ரிசர்வ் வங்கி கவர்னரை கீழே தள்ளி கறுப்புக் கொடியை மேல் வீச போலீஸ் காவலுடன் தப்பினார், ஆங்காங்கே நாடு தழுவிய அளவில் வங்கிகளின் பணக் கட்டுப்பாட்டுக்கு எதிராக தட்டுப்பாட்டுக்கு எதிராக சாலை மறியல், வங்கி முன் மறியல், ஆர்ப்பாட்டம், பற்பல இடங்களில் திருட்டு நாய்களுக்கு அரசும் வங்கிகளும் புது நோட்டு கோடிக்கணக்கில் வாரி வழங்கியது பிடிபட்டுக் கொண்டே இருக்கும் செய்திகள் இன்னும் பிற.

டிசம்பர் 30க்குள் சீரடையும் என மோடிஜி ஒரு புறம் சொல்ல பொருளாதார விவகாரத் துறை செயலராம் விவகாரமாக மோடி சொல்வது போல நடக்காது அது 2017 ஏப்ரல் வரை இப்படித்தான் இருக்கும் எனச் சொல்ல, நிதி மந்திரி அருண்ஜெட்லி இன்னும் பல மாதங்கள் இப்படித்தான் இருக்கும் எனச் சொல்ல நிர்மலா சீத்தாராமன் என்னும் மத்திய மந்திரி இசைவிழா என்றாலே அது சென்னை எனச் சொல்லி என்ன ஆட்சி நடத்துகிறார் பாருங்கள்...சென்னையில் இன்னும் மின்சாரமும், தொடர்பும், குடிநீரும், அத்தியாவசியத் தேவைகளும் நிறைவேறாத நிலையில் இவர்களுக்கு எல்லாம் இருந்தால் போதும்...நீதிபதிகளுக்கு சம்பளம் உயர்வு, அரசு ஊழியர்களுக்கு இணையாக த.நா.அரசு ஊழியர்களுக்கு 7% அகவிலைப்படி உயர்வு, எம்.பி மார்களுக்கு இரட்டிப்பு சம்பளம்... இப்படியாக‌


Related image

அனுதினமும் சாலையில் , வங்கி முன்னால் செத்துக் கொண்டிருக்கிறார்கள் இந்தியா எங்கும், கேட்டால் ஆயிரத்து எட்டு காரணம். ஏ.டி எம். மெஷின் புது நோட்டை வைக்குமாறு இப்போதுதான் சீர் படுத்தி வருகிறார்களாம். 50% செய்திருக்கிறார்களாம், அது 80% ஆக்கும்போது நிலை மேம்படுமாம்.தனியார் வங்கிகளுக்கு கரன்சி சப்ளை அதிகமும் , பொதுத்துறை வங்கிகளுக்கு அதை விட குறைவாகவே சப்ளை இருக்கிறதாம். எல்லாமே நகரியம் நோக்கிய வளர்ச்சி. எல்லாமே மேல்தட்டு மக்களுக்கும் அரசியல் தரகர்களுக்குமான தேர்வு செய்யப்பட்ட செயல்பாடுகள்.

ரிசர்வ் வங்கியிலிருந்து வங்கிகளுக்கு நேரடியாக விதிவிலக்காக அச்சடிக்கப்பட்ட நோட்டுகள் சப்ளை செய்தது போல இந்த இடைத்தரக நாய்களுக்கு கோடிக்கணக்கில் எப்படி கொடுக்கப்பட்டன? அதற்கு எந்த நாய்கள் எல்லாம் காரணம்? கண்டறிய வேண்டாமா? பிடித்தால் மட்டும் போதுமா? படித்தால் மட்டும் போதுமா? நாய்கள் நாய்கள் என்றால் நாய்களும் தமது தகுதிக்கு பங்கம் வந்தாற்போல கோபித்துக் கொள்ளும்.

முன்னணியில் ஆட்சியில் அதிகாரத்தில் கட்சியில் உள்ளார் எல்லாம் பணத்தை கோடிகளில் பிடித்துக்கொள்ள சாமான்யருக்கு அவர்களுடைய ஊதியத்தைக் கூட செலவுக்கு எடுக்க முடியா நிலை,வங்கியில் அறிவிப்பு பலகைகள்: பனம் போடுவதாயிருந்தால் போடலாம், எடுக்க வழியில்லை, இன்று கொடுப்பது இல்லை ஏடிஎம்களில் எடுக்க முடியாது கொடுக்க முடியாது என... என்றெல்லாம்...

Image result for monkey bath


இதில் வேறு பணத்தை புழக்கத்தில் வேறு விட வேண்டுமாம், வைத்திருக்காதீர் என மோடியும் ஆட்சியும் அதிகாரமும் மக்களுக்கு அறிவுரை. என்னடா தகுதி இருக்கிறது உங்களுக்கு எல்லாம் மக்களுக்கு அறிவுரை சொல்ல...வாக்கு வாங்கி வாக்கு வங்கியை கையில் பிடித்து விட்டால் நீங்கள் எல்லாம் ஆளும் வர்க்கம், அடக்கும் வர்க்கம் எல்லாரையும் ஆட்டுவிப்பீரா, ஆங்காங்கே பொறுக்க முடியாத மகக்ள் பொங்கி எழ ஆரம்பித்து விட்டார்கள் மறியல் , சாலை மறியல், போராட்டம், ஆர்ப்பாட்டம் என

Image result for lot of new 2000 new notes catches in india


பிடிக்க வேண்டிய கள்ளப்பணம், கறுப்புப் பணம், எல்லாம் வாராக்கடன்களாக இருக்க ஏழைகளை எல்லாம் வங்கியில் போடச் சொல்லி அவை அத்தனையும் அள்ளி அவன்களுக்கு வாரி வழங்கி கடனாக கொடுத்து அவை வந்தாலும் சரி வாராவிட்டாலும் சரி என வாரி விடும் ஆட்சி உமது அதற்கு வங்கி மேலாளர் போல கைக்கூலி பெற்று நடத்தும் ஆட்சி உமது ஆட்சி. வாங்கிய இலஞ்சப்பணத்துக்கும், தேர்தல் செலவுக்கும் வாங்கிய நன்றிக் கடனுக்கும் நேர்மையாக வாரி வழங்கி அவர்கள் பக்கம் நிற்கும் உங்கள் ஆட்சி...எல்லாரையும் வரி கட்ட வளையத்துக்குள் இழுத்து மேல்தட்டுக் குடிகளை காக்கப்பார்க்கிறது.

Image result for lot of new 2000 new notes catches in india

உலகளாவிய அளவில் இன்டர் நேஷனல் லெவலில் இ.மின்னணு வர்த்தகம்  என்றெல்லாம் பேசும் ஆட்சீ நிர்வாகம் என்ன செய்திருக்கிறது என்று பார்த்தால்: மின் கட்டணம் ரூ.80 கட்ட சென்றால் அங்கு ஸ்வைப் மெஷின் இருக்கிறதா என்றால் இல்லையாம்,ரொக்கம் மட்டுமே பெற்றுக்கொள்வாராம் இது மாநில அலுவலகத்தில்

மாதம் ஒன்றுக்கு ரெயில்வே பாஸ் கட்டணம் எடுக்கச் சென்றால் 185ரூபாய்க்கு ரெயில்வேயிலும் ரொக்கப் பணம்தான் வாங்குவாராம், ஸ்வைப் மெஷின் எல்லாம் இல்லையாம், இன்னும் எந்த வித கட்டமைப்பு/ இன்பிராக்ஸ்டரக்கருமே இல்லாமல் எப்படிடா கேஷ்லஸ் வர்த்தகம் செய்யப் போகிறீர்கள்?

Related image

இந்த இலட்சணத்தில் காய்கடைக்காரர், கீரை விற்கும் பெண்மணி எல்லாம் ஸ்வைப் மெஷின் வாங்கி வைக்க வேண்டுமாம், ஏன்டா டேய் முதல்ல வங்கிகளில் ஏடிஎம், வரவு செலவு எல்லாம் சரி செய்து அவரவருடைய காசை ஒழுங்காக கிடைக்கச் செய்ய வழி செய்யாமல் வாய் கிழிய பேச்சு வேறா? டேய் ரிலையன்ஸுக்கு எல்லாவற்றையும் விட்டு விட்டு, விற்று விட்டு அவனுங்க கிட்டதான் ஸ்வைப் எல்லாம் இருக்கிறது, அதுவும் சர்வர் பால்ட் ஆனால் சர்க்கரையை காகிதத்தில் எழுதி நக்க வேண்டியதுதான் நன்றாக இனிப்பாக இனிக்கும்

எல்லாமே மெட்ரோபாலிடன், காஸ்மோபாலிடன் ஸ்டைல், ஏன்டா சென்னையில் வர்தா புயலில் வாரிப் போட எந்த ஸ்வைப் மெஷின் வழித்து போடப் போகிறது? எங்கு போனாலும் ரொக்கமே கேட்கிறார்கள் நாமாகப் போய் கார்டை வைத்துக் கொண்டு அலைந்த போதும் பயனில்லை.
Related image


இந்நிலையில் இந்தியா என்பது 130 கோடி மக்கள் தொகை உள்ள உபகண்டம்.இங்கு ஒரு கணக்குக்குச் சொன்னால் கூட 5 அல்லது 6 பெரு நகரங்களும் சுமார் 400 ‍லிருந்து 500 சிறு நகரங்களும் இருக்கலாம், ஆனால் சுமார் 7 இலட்சம் கிராமங்கள் இருக்கின்றன. அவற்றுக்கு எல்லாம் உங்களால் வங்கிக் கணக்கு ஆரம்பித்து மின்னணு வரவு செலவு புடுங்கி விட்டீரா எந்த கட்டமைப்பும் , ஆரம்பக் கட்ட முன் ஏற்பாடுகளுமே செய்யாமல் மக்களை வதைத்து கொன்று எடுக்கிறீரே இது எந்த வகையில் சேர்ந்தது>

இணைய வங்கிச் சேவை என்று சென்றாலும் நிரந்தர வங்கி கணக்கு இருக்கிறாதா பேபாலா,பே டைமா என இன்டர் நேஷனல் அளவைகளில் யூனிட்களில் தகவல் தரவேண்டியதிருக்கிறதே, அவை மேலும் சில நகர்களுக்கு மட்டுமே சேவையளிக்க, இரண்டு டைப்பில் எந்த டைப்பில் நீங்கள் பணப் பரிவர்த்தனை செய்கிறீர் என்றெல்லாம் கேட்க ஓரளவு இதில் பரிச்சயம் இருப்பார்க்கே புது அனுபவமாய், பிடிபடாத தொழில் நுட்பங்களுடன் ஏமாற்றுகிற மொழி நுட்பமாய் இருக்கும்போது இன்னும் சரியாக வெளியே போய் கால் கழுவத் தெரியாத, இன்னும் மருத்துவம், சுகாதாரம், கழிப்பிட வசதிகள், உணவு உடை உறையுள் என்ற அன்றாடத் தேவைகள் பூர்த்தி அடையாத,பூர்த்தி செய்து கொள்ளத் தெரியாத, யார் தமது தலைவர் எனக்கூடப் புரியாமல் வாழ்க்கை நடத்தும் தராதரம் தெரியாத, தமது வாக்குகளை 200 ரூபாய்க்கும், ஒரு கோர்ட்டர் கோழி பிரியாணிக்கும் விற்கிற எமது பாமர மக்களுக்கு எப்படி இதெல்லாம் ஒத்து வரும் ஏற்புடையதாய் இருக்கும்...

அட , இவ்வளவு நடந்து கொண்டிருக்கும்போதும் மதுக்கடைகளில் விற்பனை குறையாமல் நடந்து வருவதும், போக்கு வரத்துகள் பாதிக்காதிருப்பதும், நமது இருள்,

மக்கள் போராட ஆரம்பித்து இந்த முடிவு மோடியின் மன்கி பாத் மங்கி பாத் முடிவு முற்றும் தவறானது என்பது நமது வெளிச்சம்.

அப்படி என்னதான் இந்த திட்டம் சாதித்து விட்டது? ஏற்கெனவே இருந்த கள்ளப்பணம் எதையும் ஐ மீன் கறுப்புப் பணம் எதையும் பிடித்து சாதித்ததாகத் தெரியவில்லை 14 இலட்சம் கோடியில் 12.2 இலட்சம் கோடி ஏற்கெனவே வங்கிக்கு வந்து விட்டதாக செய்தி...இன்னும் 15 நாட்கள் இருக்கின்ற நிலையில். இவர்கள் இப்போது பிடித்தாடும் பித்தலாட்டம் எல்லாம் புதுநோட்டுக் கற்றைகள் 2000 ரூபாய் நோட்டுகள் எப்படி பிடிபட்டன என்ற கூத்துதான்...பிடிக்கிறீர்களே அதன் வில் எங்கு அதையும் சொல்ல வேண்டுமே,அம்பை மட்டும் நோகடித்து பிடித்து விட்டதாய் மார்தட்டி எமது தமிழக முதல்வர் கதை போல அழுகுணி ஆட்டம் ஆடுகிறீர், ஆமாம் மோடிஜி மறுபடியும் மறுபடியும் கேட்கிறேன் அதென்ன நீங்கள் பேசும் ஆப்பு அதற்காகத்தானே 2000ரூபாய் நோட்டு? பழைய ஆயிரம் ஐநூறுக்கு மாறாக புது நோட்டு சரி அதென்ன ஏற்கனெவே இல்லாதிருந்த புதிதான 2000 ரூ நோட்டு ஏழையால் சில்லறை மாற்ற முடியவில்லை, பணக்காரக் கழுதைகள் பதுக்க எளிதாக இருக்கட்டுமே என்றா? படு தோல்வி உம் திட்டம்.

நான் பரிசு அறிவிக்கிறேன் உமக்கு இந்தத் திட்டம் நீங்கள் சொல்லியபடி டிசம்பர் 31க்குள் வெற்றி அடைந்தது என ஆதாரப்பூர்வமாக தெரிவித்தால் அறிவித்தால் எனக்குள்ள 4 இலட்சம் கடனையும் உங்களுக்கு பரிசாக அளிக்கிறேன், கட்டி விடுங்கள்...அப்படியே எனது கணக்கில் உள்ளவற்றையும் எடுத்துக் கொண்டு 3 பேரே உள்ள எனது சிறிய மைக்ரோ லெவல் பேமிலிக்கு கடைசி வரை தேவைகளைப் பூர்த்தி செய்து கொடுங்கள் எனது ஒரே மகனுடைய படிப்புச் செலவை அரசே ஏற்றுக் கொள்ளச் சொல்லுங்கள்....இந்த நாட்டில் உள்ள அனைவர்க்கும் வேலை தேடும் அனைவர்க்கும் ஒரு வேலை கொடுங்கள் அவர்கள் அவர்களது தேவையைப் பார்த்துக் கொள்வார்கள், மேலும் இடையறா பொய் புரளிச் செய்திகளை பரப்பாதிருங்கள் மதுக்கடைகளை அகற்றி, புகை பிடிப்பது, போதையில் ஈடுபடுவது ஐ மீன், கஞ்சா, பான் பராக், குத்கா, போன்றவற்றிலிருந்து அவர்களை மீட்க திட்டம் சட்டம் செய்யுங்கள்.அவர்களை சுயமாக சிந்திக்க விடுங்கள் பாரதம் வல்லரசாகும் நல்லரசாகும்.
Image result for lot of new 2000 new notes catches in india


என்னதான் எப்படித்தான் திட்டங்கள் இருந்த போதும் அது ஒரு நாட்டின் பெரும்பானமையான மக்களை பஞ்சத்தில் ஆழ்த்தி, பசிக்கலையவைத்து பிச்சை எடுக்க வைத்து ரோட்டில் நிற்கவைப்பதை எவருமே ஏற்க முடியாது
இந்த நாட்டின் அமைப்பு எப்போதுமே பணக்காரர் மேலும் பணக்காரர் ஆவதாகவும் ஏழை மேலும் ஏழை ஆவதாகவும் இருக்கும் அமைப்பு. இந்த நாட்டின் சொத்துகள் இந்த நாட்டின் சிறு எண்ணிக்கையில் உள்ளாரிடம் நாட்டின் உச்சியில் குவிந்து விட்டன. பெரும் எண்ணிக்கையிலானவர்கள் எந்தவித சொத்துகளின் கட்டமைவும் இல்லாதிருக்கின்றனர். இதை முதலில் மேம்பட வைக்கவும், நதி நீரை இணைக்கவும் எந்த தலைவர் வருகிறாரோ அவரே இந்த நாட்டின் சிறந்த தலைவராக இருக்க முடியும், வர முடியும், அப்படி எவராவது வந்தால் அவருக்கு என் உழைப்பும், அன்பும், ஆசிகளும், வாழ்த்துகளும் என்றும் இருக்கும்.

இதுவே 2017க்கு உலகுக்கு இந்தியா சார்பாகவும் இந்திய மக்கள் சார்பாகவும் இந்த மறுபடியும் பூக்கும் வலைப்பூ சார்பாக நாம் தரும் செய்தி.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Wednesday, December 14, 2016

முகாந்திரமில்லா முடிச்சுகள்: கவிஞர் தணிகை

முகாந்திரமில்லா முடிச்சுகள்: கவிஞர் தணிகை

Image result for people are very bad than animals

மிருகங்கள் உணர்ச்சிகளை அப்படியே காண்பிக்கின்றன அப்பட்டமாக அப்படியே.ஆனால் மனிதர்கள் அறிவுடையவர்களாக காட்டிக் கொள்வார்கள் உணர்வுகளை மூடி மறைக்கும் கலை ஒன்றை வைத்துக்கொண்டு எப்படி எல்லாம் விளையாடுகிறார்கள் அது மட்டுமில்லாமல் எந்தவித அடித்தளமுமில்லாமலே எப்படி எல்லாம் கூசாமல் ஒருவரை ஒருவர் பற்றி  எப்படி எல்லாம் மறைமுகமாகவும் அவதூறு பரப்புகின்றனர்.

Image result for people are very bad than animals

காணமல் பேசுவார் கழுதைக்கு சமானம் என்பார். இந்தப் பழமொழி எப்படி வந்தது என ஆய்வுக்குட்படுத்தப் பட வேண்டியது. ஏன் எனில் எந்தக் கழுதையுமே இப்படி நடந்து கொள்வது இல்லை. மேலும் கழுதை தமது கர்ணக் கொடூரக் குரலாயிருந்தாலும் (நமக்கு தான் அது அப்படி அதற்கு அது ஒரு வெளிப்பாடுதானே?) அது சத்தமிட்டு கத்தி விடுகிறதே அப்படிப் பார்க்கும்போது அது மூடி மறைக்காததன் இயல்பு நன்கு விளங்கும். எனவே மூடி மறைத்தல் என்ற குணாம்சம் அதற்கும் கிடையாது.

எப்போதோ நடந்த சம்பவத்தை அடிப்படியாக வைத்து இப்போது எந்தவித தொடர்புமில்லாதிருந்த போதும் ஒருவர் மற்றொருவரை வேறொரு சம்பவத்தில் தொடர்பு படுத்தி பேசுகிறார் அதை என்னால் எப்படி சரி செய்ய இயலும்? இவராகவே யூகமாக. அது இல்லை என நானறிந்தபோதும் அவரிடம் விளக்கிச் சொன்னாலும் அவர் அதை நம்பும்படியாய் இல்லை என்ன செய்ய?

மற்றொரு பதர் எந்தவித முகாந்திரமுமில்லாமலே  நெருப்பு மாதிரி என்ற ஒருவரை  இல்லாத கேள்வி எல்லாம் கேட்டு வழக்கறிஞர் வைத்து நோட்டரி வாங்கி நிரூபிப்பது போல நிருபித்தாரா? தணிக்கை செய்வார்தானே இந்த உலகில் பெரும்புள்ளிகளை, பணக்காரர்களை வேறு வேறு தொழில் செய்ய கொண்டு விட்டு அவரை அரசை ஏமாற்றும் காரண கர்த்தாக்காளகின்றனர். அப்படிப்பட்ட தணிக்கையாளர்களை வைத்து எல்லாம் செய்யப்பட்டதா என பாண்டே கேள்வி கேட்பது போல எல்லாம் கேட்பாராம் பதில் சொல்ல முடியாதாம்...தங்களிடம் உள்ள குறைகளை எல்லாம் மறைக்க எதிரில் உள்ளாரை இது போன்ற பல கேள்விகள் எழுப்பி கேட்டு வாயடைத்து விடலாம்...என்ற மமதை ஆனால் உண்மைதான் எல்லாரையும் விட பெரியது என்பதை காலம் சொல்லுமே...ஆனால் அதுவரை நிறைய பேர் காத்திருந்து அதை எல்லாம் சந்திக்க சாதிக்க இருப்பதில்லை.
Image result for people are very bad than animals


கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் ஓடி ஒளிந்து கொண்டிருந்து விட்டு பதில் கேள்விகளை ஆண்டுகள் ஓடி மறைந்த பின்னே காதில் சேரும்படி கதைத்திருக்கிறார்கள். கதைக்காமல் அது எப்படி கை கால் முளைத்து உரியவரிடம் சேர்ந்திருக்கும்?

ஜோதிபாசு பிரதமராக கேட்கும்போது கட்சிதான் அதை தடுத்து விட்டதாம். இந்த நாடு தழுவிய உண்மையே எம் போன்றோருக்கு இப்போதுதான் தூங்கு மூஞ்சி தேவகவுடா பிரதமரான கதையை வெளியே சொல்லும்போதுதான் தெரிய நேர்ந்தது. அப்படி அவர் பிரதமராக பதவி ஏற்றிருந்தால் நன்றாக நாடு விளங்கி இருக்கும்.

3 முறை குஜராத் ஆண்டதாக அரற்றும் மோடியிடம் சிக்கி சின்னாபின்னாப் படும் மக்கள் கூட்டம் 23 ஆண்டுகள் மேற்கு வங்கத்தை ஆண்டவரிடம் கிடைத்திருந்தால் ஒரு வேள நல்ல திருப்பங்களுடன் சிறந்திருந்திருக்கலாம். கம்யூனிஸ்ட்களுக்கு அது போன்ற வாய்ப்பு இனி என்றுமே இந்தியாவில் வருமா என்று தெரியாது .மேலும் கம்யூனிஸ்ட்கள் கிடைத்த வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ளவில்லை நழுவ விட்டு விட்டனர் என்பதே சரித்திரம். இதை முகாந்திரமில்லாமல் மறுப்பாரும் உண்டு பாரதியை படிக்காமலே படித்த பேரறிஞர்களாக அவன் வெறும் கஞ்சாப் பேர்வழி என்று கேவலப்படுத்திக் கொண்டு. அதில் அவன் கேவலம் தெரியவில்லை. இவர்களின் கேவலாமான கோணல் முகம்தான் வெளிப்படுகிறது,

75 நாள் உறங்கிய இந்திய ஊடகமும், சட்ட வல்லுனர்களும் இப்போது தமிழக முதல்வராயிருந்த ஜெவின் வாழ்வை ,அவரின் இறுதிக் காலச் சம்பவங்களை நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்றும், நர்ஸ் சொன்னார், உப்மா சாப்பிட்டார், கொடநாட்டு எஸ்டேட் டீயை போயஸ் கார்டனில் சாப்பிடக் கூப்பிட்டார் என்றெல்லாம் மொழிகின்றன...ஆடித்தார், கீழே தள்ளி விட்டார் சசி முக்கிய பதவியை தமது உறவுகளுக்கு கேட்டு என்றெல்லாம். சரி இதை எல்லாம் முன் கூட்டியே கொண்டு வர முடியவில்லை...?
Related image


தமிழச்சி ஒருவர்தான் பாரதிய ஜனதா கட்சிதான் இவரை படுக்கைப் படுக்கையாய் படாதபாடு படுத்தி வைத்தது என்று முன்பிருந்தே மொழிந்தார்.

இவருடன்  திருப்பூரில்  சிக்கிய 570 கோடி பற்றி மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி நடத்திய கடைசி பேரம்தான் இவருடன் அப்பால் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு அனுப்பிய சம்பவத்துக்கு முன் நடந்தது என்றெல்லாம் செய்திகள் உலவியது உண்டு.போயஸ் கார்டனுக்கு இரவில் கன்டெய்னர் லாரி சென்றதாக இதே பச்சோந்திப்பயல்கள் கூட குரல் எழுப்பியதுன்டு...ஆனால்..

Image result for people are very bad than animals

இப்படி தனிமனிதர் வாழ்வு, குடும்பம், ஊர், சுற்றம், உறவு, நாடு உலகு எல்லாம் முகாந்திரமில்லாமல் போடும் முடிச்சுகள் அவிழ்க்கப் பட முடியாததாகவே  போய்விட ...குன்ஹா போன்றோர் சொன்ன நீதி எல்லாம் காற்றாய்ப் பறந்தன...ஏன் அதில் அப்படியே உண்மை இருந்தும் அவரையும் அவமதித்த கதை நிகழ்ந்ததே... உண்மைக்கு ஒருவர் கூட துணைவராமையும் பொய்களுக்கும், புனை சுருட்டுக்கும் படை பரிவாரம், அணி அணியாக சேர்வதும் இன்று நேற்றா, காலம்காலமாக பாரதி சொல்படி பாஞ்சாலி சபதப் பாடல்களில் நெட்டை மரங்களென நின்றார் என்பது போலத்தானே இப்போதும் எப்போதும், நானும் கூட எழுதி வடிகாலாய் ஆற்றாமையை வெளிப்படுதுவத தவிர வேறென்ன முடிகிறது?

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Sunday, December 11, 2016

சென்னை 600 028 II : கவிஞர் தணிகை

சென்னை 600 028  II     : கவிஞர் தணிகை

Related image

முதலில் வெறுப்பேற்றி பார்க்காமல் விட்டு விடலாமா என்னுமளவிற்கு சராசரி நட்பு, மது போதை, குடும்பம் , பார்ட்டி என்றே போகிறது. ஜெய் சானா காதல் திருமணத்தை அனுவாக நடிக்கும் சானா வின் கிராமத்தில் வைத்து ஒரு திருவிழாவாக நடத்தலாம் என்ற பேச்சு வார்த்தையின் அடிப்படையில் கிராமம் போகிறது நண்பர்கள் குடும்பம் எல்லாம். அங்கும் மது, பார்ட்டி என்றே செல்ல...

சும்மா இருக்காமல் அங்கிருக்கும் நண்பரின் வேண்டுகோளுக்கிணங்க கிரிக்கெட் ஆட்டம் விளையாடி அதில் வென்றுவிடுவார்கள் என எதிர் அணியினர் உள்ளூர்க்காரர் இவர்களுக்கு மது மங்கை என பார்ட்டி வைக்க கடைசியில் ரகு 4 நாட்களில் நிச்சயம் செய்ய விருந்த நிலையில் இன்னொரு ஆட்டக்காரப் பெண்ணுடன் தாலி கழுத்தில் இருக்கும் நிலையில் போதையில் படுத்துக் கிடக்கிறார்.நல்ல வேளை செல்போனில் படமாக இல்லை என ஆறுதல் அடைகிறார். ஆனால் அந்தப்பெண் கழுத்தில் இரவில் தாலி இல்லை ஆனால் இப்போது தாலி இருக்கிறது

காலையில் எழுந்தால் பயம் தொற்றிக் கொள்ள, தாலியைக் கழற்றி விட்டு தப்பித்துக் கொள்ளலாம் என நினைக்க, எதிரணித் தலைவர் நீங்கள் கிரிக்கெட் விளையாட்டில் தோற்று விட்டால் அந்தப் புகைப்படத்தை எங்கும் பரப்ப மாட்டோம் என மேட்ச் பிக்ஸிங் செய்து கொள்ள அவரிடம் இருக்கும் செல்போன் போட்டோவை காண்பிக்கிறார். அவ்வாறே இவர்கள் தோற்று விட்டு புகைப்படத்தை டெலிட் செய்யலாம் எனக் கேட்டால் அங்கு அந்த ஊரில் இருக்கும் உறவுப் பையன் பெண் கேட்டு தர மறுத்த கோபத்தில் அந்த போட்டைவை வைரலாக்கி அனைவர்க்கும்  சமூக தளங்களில் எல்லாம் தெரிவிக்க‌ திருமணம் நின்று விடுகிறது. அது மட்டுமல்லாமல் இந்த நட்புக் கூட்டணி உடைபட மனைவி மார் வேண்டுகிறார்கள். காதலியின் குடும்பம் வெகுண்டெழுகிறது. காதலி திருமணத்தை ஏற்க மறுக்கிறார்.அதை எல்லாம் மீறி சிகை அலங்காரக் கடை இளவரசு ஊக்கப்படுத்த எல்லா நண்பர்களும் சேர்ந்து மறுபடியும் அதே கிராமத்திற்கு சென்று கிரிக்கெட் ஆடி காதலியை மணமுடிக்கின்றனர். அதற்குள் நிறைய தில்லுமுல்லுகள் திருப்பங்கள், சச்சு மனோரமா, சரண்யா வேடம்போல காதலர்களுக்கு உதவுகிறார்.

ஏராளமான மதுப் புட்டிகளை சினிமாவில் பயன்படுத்தி இருக்கிறார்கள். இவர்கள் இந்தப் படத்தை எஸ்.பி.பாலசுப்ரமணியம்,மற்றும் அவர் மகன்: எஸ்.பி சரண் தயாரிக்க, வெங்கட் பிரபு, பிரேம்ஜி ஆகியோர் இரு குடும்ப கூட்டு முயற்சியில் விளைந்த படம் இதற்கு யுவன் சங்கர் ராஜா இசை பின்னணி இசை பிரேம்ஜி...
Image result for chennai 60028 II

மொத்தத்தில் இளையராஜா கங்கை அமரன் குடும்பம், எஸ்பி பாலசுப்ரமணியம் குடும்பம் தமது வாரிசுகளுக்கு சினிமாத்துறையில் வாய்ப்பும் பணியும் வழங்கி இருக்கிறது.

இந்தப் படத்தின் 3 ஆம் பாகம் தொடரும் என்ற நிலையில் படத்தை முடித்திருக்கிறார்கள்

பார்க்கலாம் , பார்க்காமல் இருந்தாலும் ஒன்றும் தவறு இல்லை.
நிறைய நடிகர்கள், நிதின் சத்யா, சிவா, பிரேம்ஜி,ஜெய்,ஆகாஷ், வைபவ் இப்படி ஒர் கூட்டமே இருக்கிறது. இரு அணியின்  கிரிக்கெட் டீம் கணக்குப் படி பார்த்தாலும் 25 அல்லது 30 பேர் வேண்டுமல்லவா, அதன் பின் அவர்கள் பெற்றோர், மனைவி,குழந்தைகள் என...கூட்டம்...இளவரசு , பரவாயில்லை, சந்தான பாரதி ரோல் விரயம்...

எல்லாமே மதுப் பிரளயமாய் பொங்கி வழிகிறது. அதற்கு கங்கை அமரன் வேறு 2 காட்சிகளில் துணையாகிறார் அந்தக் காலத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியமும் நாங்களும் கோவா போவோம் என பிரேம்ஜியிடம் அழுது வடிகிறார்...

இந்த சென்னை ட்ராக் ஒன்றும் சாதனை படமாக வழியில்லை. ஆனாலும் குறிப்பிட்ட கட்டத்திற்கும் மேல் கதையில் முடிச்சுகள் விழுந்து அதை அவிழ்க்கும் வரை மேல் திரைக்கதை விறுவிறுப்பாக இருந்து படத்தை பார்க்கும்படி வைக்கிறது.
Image result for chennai 60028 IIசுமார்  சென்னை சார்க்ஸ் அணி பிஷன் சிங் பேடி இந்திய அணிக் காப்டனாக இருந்தபோது மழையை வேண்டி கிரிக்கெட் ஆடுவது போல இதிலும் இயற்கையாக கடவுளை வேண்டி மழை வருகிறது. பிட்ச் நனைகிறது. சார்க்ஸ் ஜெயிக்கிறது இப்படி சில கட்டங்கள்...

பரவாயில்லை முதல் அரை மணி நேரம் பொறுத்துக் கொண்டால் பார்க்கலாம்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Saturday, December 10, 2016

பாரதியார் மேல் ஏன் இந்த துவேஷம்? கவிஞர் தணிகை

பாரதியார் மேல் ஏன் இந்த துவேஷம்? கவிஞர் தணிகை

Image result for bharathiyar


39 ஆண்டுகளுள் முடிந்து போன ஒரூ காவியம், அரிய மானிடம், அற்புத மனிதர், இவரைப் படிக்காமலே இவரது எழுத்து குப்பை எனச் சொன்னதால் எனக்கு அரிய நட்பில் 15 ஆண்டுகாலம் தொடர்ந்த ஒரு நண்பரை இழக்க நேரிட்டது.துச்சமாக நம்மை எண்ணித் தூறு செய்த போதினும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே....தினைத்துணையாம் நன்றி செயினும் பனைத்துணையாம் கொள்வர் பயன் தெரிவார் என்ற நன்றியறிதலை உடைய யாம் இன்று வலைதளத்திற்கு இணையத்திற்கு வந்தது அந்த நண்பரால் என்றபோதும் கூட  நச்சை வாயிலே கொணர்ந்து நண்பரூட்டும் போதினும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே...

பாரதி தாசனை எவருமே குறைவாக மதிப்பிடுவது கிடையாது. ஆனால் கடவுள் மறுப்பு சிந்தனையாளர்களில் சிலர் பாரதி தாசனை உயர்த்தி பாரதியை கேவலப்படுத்திப் பேசுவது பாரதியை தெரிந்த எவராலும் ஏற்றுக் கொள்ளவே முடியாதது.

Image result for bharathiyar

பாரதி தாசனே தமது பெயரை தமது குருவின் பெயருடன் இணைத்து சொந்தப் பெயரில் அழைப்பதை விட இதையே தேர்ந்ததும் நேர்ந்ததும், பாரதியின் கவிதா மண்டலத்தில் இருந்து உதித்த ஒரு விண்மீனாக கருதி அதை வெளிப்படுத்தி இருக்கும்போது இவர்கள் சொல்வதை எல்லாம் நாம் பொருட்படுத்தியிருக்க வேண்டாம்தான். ஆனாலும் நம்மையும், நாம் மதிக்கும் ஒருவரையும் நாம் யாரையுமே குறைத்து மதிப்பிடாதபோதும் துச்சமாக தூக்கி எறியும்போது அது எப்பேர்ப்பட்ட உறவாக இருந்தபோதும் அதுவும் பொது இடத்தில் வைத்து அவமானப்படுத்தும்போது அதை எவ்வாறு ஏற்க இயலும்?

இன்று மகாக் கவி பாரதியின் பிறந்த நாள் அனேகமாக இது 134 வது பிறந்த தினமாக இருக்கும். அவரின் அச்சமில்லை அச்சமில்லைப் பாடலை பலவேறான இசையில் கேட்டேன் ... ஒன்றா இரண்டா அவ்வளவு எழுச்சிப்பாடல்கள்...இசை ஞானம் கொண்டு பொழிந்தவை, மேலும் சமுதாய ஒருமைப்பாடு, ரஷ்யா உதித்ததை பாராட்டும் உலகளாவிய பார்வை,விடுதலை வேட்கையை தட்டி எழுப்பும் விழிப்புணர்வு பாடல்கள், கவிதைகள், முதல் வசன கவிதை,சாதி மறுப்பு சிந்தனை மற்றும் செயல்பாடு, இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். அவரை தமிழறிந்த யாவருமே அறிவர்.

நல்ல எழுத்தாளர், கவிஞர், பாடலாசிரியர், பத்திரிகையாளர், சுதந்திரப் போராட்ட வீரர், தமக்கடுத்து அடுத்த தலைமுறையை உருவாக்க நினைத்த நல்ல ஆசான், எவரின் தூண்டுதல் இன்றியே தாமே உண்டான உணர்ச்சிப் பிழம்பு.

Related image


இராமகிருஷ்ணர், விவேகானந்தர், நிவேதிதா, பாரதியார், பாரதிதாசன், சுரதா,இப்படி 6 தலைமுறை குரு சிஷ்ய பரம்பரை உண்டு. இதில் ஒருவரை மட்டும் பிரித்து தனியே பார்ப்பது என்பது இயலாதது.

வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு நூற்றாண்டுகளில் பிறந்த கலிலியோவும் ஐசக் ந்யூட்டனையும் குரு சிஷ்யனாக விளங்கும்போது நமது நாட்டில் உதித்த மனிதர்களில் இவர்கள் எல்லாம் பேசப்படவும், எழுதப்படவும் கொண்டாடப் படவும் வேண்டியவர்கள்.

மற்றபடி இவர்களைப் பற்றிய புள்ளி விவரம் சொல்ல இந்தப் பதிவை யாம் இணைக்கவில்லை

விண்மீன்கள் எல்லாமே சூரியன் எனவே எதுதாம்  கிழக்கு. நமக்கு வசதிப்பட மனிதர்க்கு வசப்பட நமது சூரிய மண்டலத்தின் சூரியனை பூமி பார்க்கும்போது அதை நாம் பார்க்கும் போது கிழக்கு எனச் சொல்கிறோம். ஆனால் சூரியன் என்றும் நடுவில்தான் இருக்கிறது.

இயற்கையை பாரதி இரசித்த மாதிரி நமக்கெல்லாம் இரசிக்கவே தோன்றாது.

சுவாசிக்க காற்று, தேவைக்கு நீர், இரவு பகல், கால அளவு, பருவ காலங்கள்., உணவுப் பயிராக்க கனிமங்கள், எரிபொருள் உள்ளடங்கிய, உற்பத்தி உண்டாக்க நிலம்,பிரமிக்க ஆகாயம் இப்படி எல்லாம் இயற்கை சொல்லி வைத்த மாதிரி நமக்கு கிடைத்திருக்க காந்தி சொன்னபடி மனித தேவைகளுக்கு போதுமான அளவு எல்லாம் இங்கு இருக்க பேராசைக்கும் அதன் அளவுக்கும் ஏற்ப ஏதும் கிடைக்காதுதான்...

வாழ்க வாழ்க பாரத சமுதாயம் ....
அச்சமில்லை அச்சமில்லை
அக்கினிக் குஞ்சொன்று..

தேடிச் சோறு நிதந்தின்று...

நெஞ்சு பொறுக்குதிலையே...

நெட்டை மரங்களென நின்றார் ....பாஞ்சாலி சபதம்

சிந்து நதியின் மிசை ,..நதி நீர் இணைப்பு
நிலவுக்கு பாலம் அமைப்போம்....

இப்படி அவனின் சிந்தனைகள் எங்கும் எப்போதும் பரவியபடியே இருக்க தனிமனிதர் வீறு கொண்டு எழவும், பெண்ணடிமைத்தனம் மாயவும், சமுதாய நோக்கம் மலரவும் பாடிப்பாடி ஆடி ஆடி ஓய்ந்த போன உன்னதம் அந்த பாரதியை நாம் வணங்குகிறோம். அவரை நமது குருமார்களின் ஒன்றாகவே எண்ணுகிறோம்.

Image result for bharathiyar

சோறில்லாமல் அவன் வறுமையில் பாடி, வாடி வதங்கிப் போன பிறகும் கூட எப்படி இவர்களால் இப்படி தூற்ற முடிகிறது என்பதுதாம் நமக்கு விளங்காத புதிராக இருக்கிறது.


Image result for bharathiyar