Wednesday, June 5, 2019

வொய் த ஸ்டோன் ஃபார் டேனி ஃபிசர்? கவிஞர் தணிகை

வொய் த ஸ்டோன் ஃபார் டேனி ஃபிசர்? கவிஞர் தணிகை

ஹெரால்ட் ராபின்ஸ் நாவல்கள் படித்திருக்கிறீர்களா நம்ம ஊர் தமிழ் எழுத்தாளர் சுஜாதா மாதிரி அவர்.  இர்விங் வேலஸ், சிட்னி செல்டன், கமலா மார்கண்டேயா, கமலாதாஸ், ஆர்.கே நாராயண் இப்படி பல ஆங்கில நாவலாசிரியர் இருந்தபோதும் ஒவ்வொருவருக்கும் ஒரு நடை ஸ்டைல் இருக்கும் அதில் ஹெரால்ட் ராபின்ஸ் நடை தனித்துவமானது

படிக்கும்போது அதில் ஒரு த்ரில், கிக் இருந்து கொண்டே இருக்கும், செக்ஸ் கூட இருக்கும் தான் ஆனால் சுஜாதா வார்த்தை சிக்கனமாக எழுதி முடித்து படித்தவர்க்கு யூகிக்க தளம் அமைத்துக் கொடுப்பாரே அப்படி.
Image result for harold robbins
ஒரு காலத்தில் ஆங்கில எழுத்தாளர்களையும் அவர் தம் நூல்களையும் எங்கள் பகுதி நூலகங்களில் தமிழ் நூல்கள் இல்லாமல் இருக்கும்போது மால்கோ மனமகிழ் மன்ற நூலகத்திலிருந்து எடுத்துப் படித்தது உண்டு.

அதில் எ ஸ்டோன் ஃபார் டேனி பிசர் என்ற நூலை மறவாதிருக்கக் காரணம் அதில் வரும் டேனி ஒரு அனாதை போன்றவன் தன் வாழ்வை தாமே அமைத்துக் கொள்ள முயல்பவன். அனைவர்க்கும் தீங்கு ஒன்றும் புரிய நினைக்காதவன்.

அவன் காதலியை தேடிக் கொள்வான். அவன் காதலி ஏதோ ஒரு மார்கட்டிங் ஸ்டாலில் பணி புரியும் ஸேல்ஸ் கேர்ள் ஆக இருப்பாள். அவன் அதில் வெறுப்படைந்து ஒன்று சொல்வான் தன்னை நொந்து கொள்வான்...எல்லாருக்கும் யேசு அவரவர் தட்டில் அப்பங்களை வைத்தபோது என் தட்டில் மட்டும் ஏன் கற்களை இட்டார் என்று...
Related image
அது சிலரின் ராசி. அப்படித்தான் வேலை செய்யும் அனைவர்க்கும் ஏதாவது செய்யலாம் என்றால் அது கை கூடி வரும் நன்றாக செய்ய முடியும். அவரவர்க்கு என்றால் அது பிரம்மப் பிரயத்தனமாக இருக்கும்.

கொள்கைப் பித்து அது இது என்று மனிதர்க்கு எதுவும் தேவையில்லை போலும் என்றால் சேகர் கபூர் காரே வைத்துக் கொள்ள வேண்டாம் என்று மும்பையில் ஆட்டோவில் மட்டுமே பயணம் செய்து வருகிறாராம். அவரிடம் கார் கிடையாதாம். மேலும் ஒவ்வொருவரிடம் ஏன் 20க்கும் மேற்பட்ட கார்கள் என்று கேட்கிறார்

இலஞ்சம் கொடுத்து ஆஸ்கார் சிண்ட்லர் என்பவர் ஆயிரம் பேரை பட்டியலிட்டு ஜெர்மானிய நாஜிப்படையிடமிருந்து யூத அடிமைகளை விடுவித்து அவர்கள் குலம் தழைக்க காப்பற்றியதாக சரித்திரம் சொல்கிறது.

இலஞ்சம் கொடுத்து தமது வாழ்வை செப்பனிட்டுக் கொண்டவர்களில் எனது நண்பர்களிலும் சிலர் இருக்கின்றனர் ஆனாலும் அவர்கள் இலஞ்சம் வாங்காமல் போதிய வரை நிறைய மனிதர்களுக்கு சிறந்த சமூக சேவை ஆற்றி வருகிறார்கள்

அப்படிப் பார்த்தால் இலஞ்சம் என்பது கண்ணதாசன் பாணியில் சொல்லப்போனால் மனிதகுலம் பிறக்கும்போதிருந்து இருக்கும் வரை இருக்கும் என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டுமா?

அப்படிப்பார்த்தால் இலஞ்சம் கொள்வதும் , கொடுப்பதும் தண்டனைக்குரிய குற்றம் என்பதை ஒரு நாடு ஏன் சொல்லிக் கொள்ள வேண்டும் வெறும் வார்த்தைகளுக்காக மட்டும்...
Image result for sujatha rangarajan
அப்படிப் பார்த்தால் கலாம் போன்ற மாமனிதர்கள் எல்லாம் இலஞ்சம் என்பது தமது குடும்பத்திலிருந்து வாங்காதும் கொடுக்காதிருக்கும் அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும் என ஏன் சொல்லி இருக்க வேண்டும்?

அது போன்ற கொள்கைப் பிடிப்புகளால் மட்டுமே அதை கடுமையாக கடைப்பிடிப்பார் கடைத்தட்டு மக்களாக வாழ்ந்து வர நேரிடுகிறதோ?பொருளாதாரம் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது எனவே மனிதகுலம் அதன் பின்னே ஓடிக் கொண்டே இருக்கிறது...கொள்கை எல்லாம் தேவையில்லை. வாழ்வின் தேவை குடி நீராக, உணவாக, இருப்பிடமாக, ஆடையாக , மருத்துவமாக, கல்வியாக பொருளாதாரத்தின் வேறு வடிவங்களில் கோலோச்ச ஆரம்பித்து விட்டது...

பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்!
படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்!
அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்!
அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!
பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்!
பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!
முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப் பாரென இறைவன் பணித்தான்!
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்!
'
அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்' எனக் கேட்டேன்!
ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
'
அனுபவம் என்பதே நான்தான்' என்றான்!
By Kannadasan

Related image


மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment