Tuesday, January 28, 2020

நம்பினால் நம்புங்கள்: கவிஞர் தணிகை

நம்பினால் நம்புங்கள்: கவிஞர் தணிகை

Image result for mating crows

இரண்டு காகங்கள் ஒன்றையொன்று புணர்வது கண்ணில் பட்டால் குறைந்த நாட்களுக்குள்ளாகவே நெருங்கிய உறவினர் இறந்து போவார்.

முதன் முதலில் இதை ஒரு கிராமத்திலிருந்து குடி பெயர்ந்த ஒரு குண்டுப் பெண் மூலம் கேள்விப்பட்டேன். அப்படிப் பட்ட காட்சி ஒன்றைக் கண்ட பிறகு அவரது கணவர் இறந்திருந்தார். அந்த இறப்புக்கும் பின் தாம் அந்தக் காட்சி பற்றி எல்லாம் அந்தப் பெண் விளக்கிக் கூறி இருந்தாள்.

இப்போது இந்த புராணம் எதற்கு என்கிறீர்களா?
வழக்கம் போல் 4 மணிக்கு நாங்கள் எழுந்து  அன்றைய கல்லூரி வேலை நாளுக்காக புறப்பட்ட படி இருந்தோம். துணைவி எனக்குத் தேவையான உணவு தயாரித்துக் கொடுப்பது வழக்கம்.

வேலையை முடித்து விட்டு நான் கல்லூரிக்கு புறப்படுவதற்குள் அதாவது விடிந்தும் விடியாத பொழுது சுமார் காலை 6 மணி இருக்கலாம். அவர் கடைக்கு ஏதாவது வாங்க சென்று விட்டு வீடு வருவார்.

 கடைக்கு போய் வந்த போது,ஏங்க , இன்னைக்கு ஒரு காகமும் இன்னொரு காகமும் அணைவது கண்ணில் பட்டது என்றார். சரியாகப் பார்க்க வில்லை என்று சமாளித்தார்

எப்படியோ உன் கண்ணில்  பட்டு விட்டதுதானே கொஞ்ச நாளில் தெரியும் பார் என்றேன்.

நேற்று இரவு 1.45க்கு உறக்கம் நீங்க சிறு நீர் கழித்து விட்டு மறுபடியும் 4 மணி வரை நேரம் இருப்பதால் மறுபடியும் உறங்க முயற்சித்தேன் உறக்கமே பிடிக்க வில்லை. ஒரு நொடி நேரம் கூட உறங்கவில்லை. அப்படியே 4 மணிக்கு அலாரம் அடிக்க எனது நாளை ஆரம்பித்தேன்.

துணைவியும் அவர் பணிகளில் இருக்க...சுமார் 5 மணிக்கும் மேல் ஒரு தொலைபேசி செல் சிணுங்க...
 இந்த நேரத்தில் யாராக இருக்கும் எனத் தொடர்பு கொண்டால்: துணைவியாரின் தாய் மாமா ஒருவர் அதாவது 62 வயது அவரது தாயின் சித்தப்பா மகன்...ஏஞ்சியோ ப்ளாஸ்ட் செய்தவர் மாரடைப்பால் காலமான செய்தி.

இது போலவே தென்னை மட்டை விழுவது, பனம்பழம் விழுவது வீட்டுள் பன்றி புகுவது போன்ற பல சம்பவங்களை நான் கவனித்திருக்கிறேன். ஏன் வீட்டுள் பாம்பு புகுந்தால் வீட்டில் கலகம் நடப்பதையும் பார்த்திருக்கிறேன். அதேபோல திரைச்சீலை பற்றி எரிவது, எண்ணெய் விளக்கை நம் கையே தட்டி விடுவது, எது எடுத்தாலும் தவறுவது, அடிக்கடி வீட்டில் எரியும்  மின் விளக்கு ப்யூஸ் போவது இப்படி எல்லாம் நிறைய இயற்கை தொடர்பலைகளைக் கண்டு அவற்றை பொருளுணர்ந்து நடக்கும் சம்பவங்கள், நடைபெறும் சம்பவங்கள், நடைபெறப் போகும் சம்பவங்கள் ஆகியவற்றை தெரிந்திருக்கிறேன்.

பூனை வலம், இடம் போதல், பல்லி விழுதல் யாவற்றிலுமே நாம் புரிந்து கொள்ள வேண்டிய மொழி இருக்கிறது

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Sunday, January 26, 2020

திரு மண வாழ்த்து மடல்:கவிஞர் தணிகை

                                   திரு மண வாழ்த்து மடல்

                                          நாள் 27.01.2020          
இடம்: கரபுரநாதர் கோவில்        உத்தமசோழபுரம்      விகாரி: தை13.

                                                       மணமக்கள்
   சௌந்தரராஜன் வி.மி.ச.ப.க                               சசிகலா  த.நா.அ.ம.

image.png

என் வாழ்வில் எத்த‌னையோ வாழ்த்துகள் வந்திருக்கின்றன, தந்திருக்கிறேன்
எனினும் இது எனக்கு மிகவும் பிடித்த வாழ்த்து இது, வாழ்க்கை இது...

2020ன் பெரும் செய்தி எனக்கு சௌந்தரராஜன் மணம் பெறும் செய்தி
பொங்கலை விட தித்திக்கும் செய்தியிது பொங்கிப் பெருகும் நிதியாய்.

உலகின் உயர் நவீன கணினித் தொழிலும்
மனித குலத்தின் மாபெரும் சேவையான
செவிலியர் சேவையும்  உண்மையுடன்
சௌந்தரராஜன் சசிகலா மணத்துடன்
கை கோர்க்கின்றன மெய் சேர்கின்றன‌
உயிரும் மெய்யும் இணைந்தால் உயிர்மெய்தானே!

பிறர் மகிழ்வைப் பார்ப்பதில் பகிர்வதில்
எனக்கு எப்போதுமே பெரு மகிழ்வு
நானிருக்கும்போதும் இல்லாதபோதும்
எனது பேர் சொல்லும் இந்நிகழ்வு
எங்கள் கல்லூரிப் பணியில் கிடைத்த கொடையாக‌

அருமருந்து மானிடத்தின் பெருமருந்து
அமிர்தம் என்றாலும் அளவோடு
என்கிறது நமது தமிழ் ஆதிச் சுடர் குறள்

தீயவைக்கு தீயை வை தமிழ்ப் புகழ்
மணக்கப் பெரும் பொங்கல் வை சௌந்தர்:
வாழ்த்துக் குவிய எழுதி வை...
வாழ்த்துக் குவியும் எடுத்து வை...

இந்த விழாக் காலத்துடன்
உங்கள் திருமண விழாக் கோலமும் சேர‌
உங்கள் உணர்வுப் பொங்கலுடன்
எல்லாம் வல்ல இயற்கையின் வல்லமை
இறைந்து கிடக்கிறது வணங்கிப் பணிவோம்
ஒளி(ர்)ந்து கிடக்கும் பேருண்மையை

பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ‌
என்றும் வாழ்த்தி மகிழும்

கவிஞர் தணிகை
த.சண்முக வடிவு
த.க.ரா.சு.மணியம்.
மேட்டூர் அணை.3.


image.png














மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை
Attachments area

Tuesday, January 21, 2020

கண்ணால் காண்பதும் காதால் கேட்பதும் பொய்.......கவிஞர் தணிகை

கேள்விப் பட்டது எல்லாவற்றையும் உண்மையென‌
எழுதவோ பேசவோ முடியாது ரஜினிகாந்த்: கவிஞர் தணிகை

Image result for RAJINIKANTH 1978 periyar protest

அவுட்லுக் பத்திரிகையில் வந்திருந்ததையும் கேள்விப்பட்டதையும் பேசினேன். அதுதான் உண்மை. அதற்காக மன்னிப்புக் கேட்க மாட்டேன் என்று ரஜினி கூறியதாக செய்திகள் இன்று வந்துள்ளன.

மன்னிப்பு கேட்பதும் கேட்காததும் அவரவர் விருப்பம். ஆனால் எது சரி எது தவறு எனத் தெரிந்து கொள்ள வேண்டியது மனிதரின் தலையாய கடமை.

சரியாக இல்லாத செய்திகள் மேல் குதிரையேறிக் கொண்டு அதுதான் சரி உண்மை எனப் பிடிவாதம் பிடிப்பது மக்கள் பணியாளர்க்கு அழகல்ல. கேள்விப்பட்டதெல்லாம் உண்மை என்று நம்பி விடவும் கூடாது. நம்பவும் முடியாது. அது தலைமைக்கு ஏற்புடையதல்ல.

பொது வாழ்வுக்கு  வந்து விட்டாலே நம்மை எல்லாம் எல்லாக் கண்களும் உற்று நோக்கிக் கொண்டே இருக்கின்றன என்ற உள்ளுணர்வோடு நாம் பேசவும் எழுதவும் கற்றுக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் இப்படித்தான் இருக்கும்.

நான் உண்மையை எழுதியே சரியான சார்பு சாட்சியங்களும், உறுதிப்பாடான அத்தாட்சிகளும் இல்லாமல் வெகு பாடு பட்டிருக்கிறேன்.
எனவே இதன் மூலம் தெரிவிப்பது என்ன வெனில் தலைவராக வேண்டியவர்கள் பொது வெளிகளில் பேசும்போது மிக்க கவனத்துடன் பேச வேண்டும்.
அல்லது அதற்கான தவறே செய்தபோதும் அதன் பின் நிற்கின்ற அயோக்யத்தனமான கூட்டம் வேண்டும் அப்போதுதான் எதையும் சமாளித்து நிற்க முடியும்...அரசியல் அப்படித்தான் இருக்கிறது.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

Sunday, January 19, 2020

விஷம் நுரைக்கும் கோப்பைகள்: கவிஞர் தணிகை

குடி மிருகமே குடி உன் மனைவி மக்களைக் கிழித்தெறிந்து வழிந்தோடிடும் இரத்தத்தை நக்கி நக்கிக் குடி மிருகமே! 
 மதுவே எல்லா பாவங்களுக்கும் அடிப்படை என்ற‌ தேசப்பிதாவின் புதல்வரா? பாரதப் பதரா நீ!

Image result for liquor consumption is basic to all sins  காந்தியின் சிலைக்கு மலக்குளியல் நடத்து பெரியார் சிலைக்கு செருப்பணிவித்து சிறுநீருடன் தாயின் தலையில் கல்லைத் தூக்கிப் போடு தந்தையின் தலையை அரிவாளால் சீவு மகனே ஐந்து வயதுக்கும் கீழான சிறுமியையும் வன்புணர்! 


Image result for tasmac especially to women in madurai

 கள்ளுண்ணாமை சொன்ன தமிழ்த்தலைவன் நாணியழ‌ சனநாயகத்துக்காக விஷமருந்திய சாக்ரடீஸ் செத்துவீழ‌ சனநாயகப் படுகொலையாய் தேர்தல் ஆட்சி அரசுடன் யாவும் வெக்கித்து மக்கி மனிதம் மறந்தாய்! மதுவிலக்க உலக மதுவெலாம் குடித்து முடிப்பேனென்ற‌ கண்ணதாசனை நுரைக்கோப்பை உயிர்குடித்து முடித்தது நாய் உடன் இலாத தேவதாஸ்கள் சாலையெங்கும்

Image result for tasmac especially to women in madurai  மெய் மறந்திருக்கிறார்கள் நுரை வாயில் தள்ள‌ சாலையில் வாயூதி ஆல்கஹால் சோதனையில் காவலர் தமிழகமே சாலைவிபத்தில் நாட்டின் முதன்மையென‌ தமிழக இலட்சியக் குடும்பத்தின் சிற்பிகளும் சசிபெருமாள்களும் சின்னப்பையனும் நடத்திய வேள்விகள் வேணிலின் கானலா?

Image result for tasmac especially to women in madurai  விஷம் நுரைக்கும் மதுக்கோப்பை ஏந்திய பெண்களும் ஆண்களும் உயிர்குடிக்கும் கோப்பையாகவே ஆனார்கள்....

மறுபடியும் பூக்கும் வரை கவிஞர் தணிகை 11/125 புதுசாம்பள்ளி மேட்டூர் அணை 636 403 செல்பேசி:8015584566
Image result for tasmac especially to women in madurai


Image result for tasmac especially to women in madurai

படைப்பு இணைய தளமும் தமிழகக் காவல் துறையும் இணைந்து நடத்திய நுரைக்கும் விஷக் கோப்பைகள் என்ற மதுவிலக்குப் போட்டியில் கலந்து கொண்டேன்.
கவிதை மட்டும் படைப்பு இணைய தளத்துக்காக‌ படங்களை எனது வலைப்பூவுக்காக சேர்த்துள்ளேன்.


Saturday, January 18, 2020

சமதர்மச் சாதனையாளர் விருது: கவிஞர் தணிகை

சமதர்மச் சாதனையாளர் விருது: கவிஞர் தணிகை

Image may contain: 2 people, people standing

17.01.2020 வெள்ளிக் கிழமை திண்டுக்கல் வி.ஜி.எஸ் மஹால், கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. கூடத்துக்கு வெளியே கூட மக்கள் கூட்டம்.(வெள்ளம் என்ற மிகையான வார்த்தை எல்லாம் சொல்ல வில்லை அறிக்கை கொடுக்கும்போது உண்மை மட்டுமே இருக்க வேண்டும் என்பதும் எப்போதும் உண்மை ஒளிர வேண்டும் என்பதும் எனது பேரவா)

சென்னை  தமிழக அரசின் செயலகத்தில் பணி புரியும் சமதர்மப் பாண்டியன் என்னும் ஆர்வலர் இந்த நிகழ்வு வடிவமைய காரணகர்த்தா.

இவர் தந்தை சமதர்மம் காமராசர் அவையில் தூய்மைக்குப் பேர் பெற்ற அமைச்சராக இருந்த ஏழ்மையில் இருந்தும் மந்திரியாக இருந்த கக்கன் அவர்களை எதிர்த்து சட்டசபையில் தேர்தலில் நின்று தோற்றுப் போய் புகழ் பெற்றவர்
Image may contain: 2 people, including குகன், people standing
திண்டுக்கல் தமிழக அரசியலில் ஒரு முக்கிய மைல் கல். எம்.ஜி.ஆர் தனது முதல் தேர்தல் பயணத்தை துவக்கிய இடம் அங்கு நடந்த இடைத்தேர்தல் ஒன்றில் மாயத்தேவர் என்னும் பாராளுமன்ற உறுப்பினரை அ.தி.மு.க வழியாக இரண்டு இலட்ச வாக்குக்கு அதிக வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்து அனுப்பிய ஒரு அருமையான தொகுதி. அதிலிருந்துதான் அ.தி.மு.க அதன் பின்.அ.இ.அ.தி.மு.க தனது வெற்றிப் பயணத்தை மாநில அளவில் பெற்றதும் உற்றதும் நாடறியும் இன்னும் அதன் வீச்சு தொடர் இருந்தபடி தான் இருக்கிறது.
Image may contain: 2 people, people standing
நான் காந்திகிராம கிராமியப் பல்கலையில் 1984 வாக்கில் பயிற்சி எடுக்கும் போது அங்கு விலாஸ் இசை வாத்தியங்களுக்கு கொடும் கோட்ஸே அங்குத் தோன்றினான் திடும் என்றே சுட்டான் அண்ணல் காந்தியை என்ற பாடலை அவர்கள் இசைக்கேற்ப பாடி இசைத்த இடம்...
No photo description available.
அது மட்டுமல்ல அங்கு நடந்த அப்போதைய ஜேசீஸ் (ஜீனியர் சேம்பர்ஸ் ஆப் காமர்ஸ்) நிகழ்வின் போது கடைசி நேரத்தில் இளம் புயலாக பேராசிரியர் ரங்கராஜன் அவர்களின் காலம் கருதியமையையும் கருத்தில் கொள்ளாது தடை உடைத்து  உள் நுழைந்து அப்போதே எழுதி இருந்த தலைப்பிற்கேற்ற ஃபெயித் இன் காட் என்ற தலைப்பில்
 புறம் கட உள் பார்க்க புறம் கட கடவுள் பார்க்க‌
என்ற கவிதையை எழுதிய இடம்
அடுத்து சொல்ல வேண்டுமெனில்
விடியல் குழு வைத்து இன் செயல்கள் நடத்தி வரும் என்னுடன் 43 ஆண்டில் அடி எடுத்து என்னுடன் தொடர்ந்து வரும் நண்பர் விடியல் குகன் எனை அழைத்து ஒரு முறை: வாழ்வியல் வழிகாட்டி" என்ற பட்டம் கொடுத்த இடம்.

ஆக இது போன்ற இடத்தில் மறுபடியும் என்னை
சமதர்ம சாதனையாளர் விருது
எனத் தந்து கௌரவிக்க விரும்புகிறோம் என அழைப்பு.
உண்மையிலேயே அதற்கு எனக்குத் தகுதி உண்டு... எப்படி எனில்:
நெடுங்காலமாக  என்னிடம் பைபிள், குரான், கீதை ஆகியவை எண்ணத்திலும் சொல்லிலும், ஏட்டிலும், செயல்பாட்டிலும் உண்டு. அந்த நூல்கள் எனது ஆய்விலும் உண்டு.பல முறை படித்து அதன் பயன்பாடுகளை அனுபவித்ததும் உண்டு. அது மட்டுமல்ல புத்தம், ஜைனம், மதமற்ற கோட்பாடுகள் யாவும் என்னிடம் உண்டு.

எனக்குப் பிடித்தமான மனிதர்கள் என நான் திட்டமிட்டு அமைக்காமலேயே : காந்தி, தெரஸா, கலாம் என்ற மூன்று பேருமே மதம்‍ பிடிக்காத தலைவர்கள் அவர்கள் இயல்பிலேயே பிறப்பால் இந்து, கிறித்தவர், முகமதியர் என்ற கோட்பாடு கொண்டு வாழ்ந்தவர்கள்
Image may contain: 1 person, sitting and table
நான் திட்டமிடாமலேயே இந்தப் பொங்கல் திருநாளில் கூட எங்கள் வீட்டுக்கு பொங்கல் கொண்டாட ஒரு கேரளாவை தாய் இடமாகக் கொண்ட கிறித்தவப் பெருந்தகை    Orthodontics  துறைத் தலைவர் முன்னால் கல்லூரி முதல்வராக இருந்தவர். மருத்துவப் பேராசிரியர்  .   சுநீல் சன்னி என்பார் வந்திருந்து என்னுடன் அன்றைய பொழுதை களித்து மகிழ்ந்தார்.

இவற்றிற்கு எல்லாம் மேலாக சாதி, மத, மொழி, இன வேறுபாடு எல்லாம் மறந்து இந்தியா மாநிலங்களில் பெரும்பான்மையான பின் தங்கிய மாநிலங்களில் சுற்றி அலைந்து திரிந்து அதன் பின் சுமார் 10 ஆண்டுக்கும் மேல் மலைவாழ் மக்களுக்கு திட்ட அலுவலராக இருந்து நூற்றுக் கணக்கான குக்கிராமங்களில் எவரும் எளிதில் சென்றடையாத சென்று அடைய முடியாத பகுதி மக்களுக்கான சேவையை செய்து நற்பேர் ஈட்டியவன் அதைப் பற்றி எல்லாம் சொன்னால் அது ஒரு பெரிய புராணமாகிவிடும்.

 நாங்கள் அப்போது நிலை தாழ்ந்த பட்டியல் பிரிவில் உள்ள தாழ்த்தப்பட்ட்ட மக்கள்,மலைவாழ் மக்கள்,சேரிப்பகுதி மக்கள், சேவை புரியும் தொழில் சார்ந்த மக்கள் ஆகியோர்க்கு கை தூக்கிவிடும்  சேவையை செய்து வந்தோம். அந்த நாளுக்கு நாங்கள் செய்தது இந்த நாளில் கௌரவமாகி இருக்கிறது. இயல்பாகவே நாங்கள் தேடிச் செல்லாமலே. பொதுவாக விருதுகள் விற்கப்படுகின்றன என்கிறார்கள். ஆனால் இந்த விருது அவர்களாகவே எனது பேரை தேர்வு செய்து போக்குவரத்து செலவும் கொடுத்து அழைத்தார்கள். அந்த பெருமை ஏற்பட முக்கியக் காரணம் விடியல் நண்பர்கள் குழுவின் விடியல் குகன் மட்டுமே. அவர் அதை முன் மொழிந்திராவிட்டால் ஒரு வேளை நானறியாத எவரேனும் அதை முன் மொழிந்திருந்தால் ஒரு வேளை நான் அதை புறக்கணித்திருக்கவும் கூடும்...சர்.சி.வி ராமனைப்போல, ஜெயமோகனைப்போல, இன்னும் விருதுகள் தேடி வந்தும் வேண்டாம் என்று சொன்ன மேன்மக்கள் போல... எப்போதோ செய்ததற்கும் இப்போதும் எனது வாழ்வில் போக்கு மாறாமல் போவதற்கும் இப்போது கிடைத்திருக்கிறது இந்த விருது ஒரு அங்கீகாரமாக.
Image may contain: 2 people, people standing
அப்படி பல வகையிலும் அந்த விருதுக்கு அதாவது சம தர்ம சாதனையாளர் என்னும் சமய நல்லிணக்க விருதுக்கு நான் தகுதி பெற்றவராக இருந்த காரணத்தால் தஞ்சை முதன்மை நடுவராக இருக்கும் கு.கருணாநிதி அவர்களால் எனது பெயர் பரிந்துரைக்கப்பட்டு எனது சேவைக்காக இந்த விருது தேனி மாவட்ட நீதிபதி: அ.முகமது ஜியாவுதீன் மற்றும் சிறப்பு மாவட்ட நெடுஞ்சாலைத் துறை  வருவாய்அலுவலர் ச.கந்தசாமி ஆகியோர் முன்னிலையில் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.
Image may contain: 1 person, standing
நான் மேட்டூரிலிருந்து சுமார் 11.40 மணிக்கு சென்று அடைந்தேன். போகும்போது மிகுந்த தாமதம். வழியில் பள்ளப்பட்டி என்னும் ஊரில் அது ஒரு முகமதியர்கள் நிறைந்த ஊராக இருக்கக் கண்டேன். பள்ளப்பட்டி என்ற ஊரை 1992 அல்லது அந்த ஆண்டுக்கும் மேலான கால நிகழ்வுகளில் சென்னை டான் போஸ்கோ செய்திப் பரிமாற்ற கலை நிறுவனத்தில் ஊடகத்தின் சுரண்டல் என்ற ஒரு இரண்டு அல்லது மூன்று நாள் பணிமணையில் ஒரு கிறித்தவப் பெண்மணியை சந்தித்தேன் அவர் அப்போது அவரது ஊர்: பள்ளப்பட்டி என்றார். (அந்தப் பணிமனையில் ஹிந்து என்.ராம் ,ஆசியா நெட் சசிகுமார், இப்போதைய ஹிந்து பன்னீர் செல்வம் இப்படி பல பிரபலங்களுடன் என்னிடம் திட்டு வாங்கிய ஞாநி... அது வேறு கதை) பள்ளப்பட்டி என்றால் அது ஏதோ ஒரு குக்கிராமமாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் அந்த ஊர் எவ்வளவு பெரிய ஊர் என்பதும் அதில் பெரும்பான்மையாக முகமதியர்களே இருக்கிறார்கள் என்பதையும் ஊரைச் சுற்றிக் காட்டி எல்லா பேருந்து நிறுத்தங்களிலும் எல்லாரையும் ஏற்றிச் சென்ற நான் ஏறிய தனியார் பேருந்து நல் அனுபவத்தை தந்தது.நான் காலதாமதமாகவே செல்கிறேன் என்ற நினைவும் என்னை நெருட உறுத்த...

அங்கு சென்றால் நல்ல கூட்டம் மேடையில் இந்து அர்ச்சர்கர்கள், கிறித்தவப் பாதிரியார், முகமதிய மௌல்வி எல்லாம் அவரவர் வழியில் பிரார்த்தனை செய்தனர். பொங்கல் வைக்கப்பட்டது. மேடையில்  நான் முன் சொன்னவர்கள் இருந்தனர்.

கலாம் போன்ற பிரபலங்களுடன், பி.என். பகவதி போன்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அவைகளில் கூட இடம் பெற்ற எனக்கு இப்போதெல்லாம் மேடைக்கு கீழே அமர்வது என்பதெல்லாம் கூட ஏற்றுக் கொள்வதாகிவிட்டது...

நான் என் மணத்தை எந்தவித பிராமணரும் புரோகிதம் சொல்ல இடம் அளிக்காமல் பார்ப்பன ஐயர் இன்றி பெரிய மனிதர்கள் முன்னிலையிலேயே தாயை முன் வைத்து தந்தை அப்போது இல்லாததால் நடத்திக் கொண்டவன்.

விருதுகள் வழங்கப்பட்டன...எல்லாம் மின்னல் வேகம்.
அடுத்து மதியம் முதல் போக மறுத்து அங்கே இருந்த சுமார் 50க்கும் அதிகமான பேருடன் விருது எப்படி பொருத்தமானது இலட்சிய வாதிகளின் பயணம் எத்தகையது, இலட்சியங்கள் தோற்பதில்லை அவை தொடர்கின்றன...என விவேகானந்தா, கலாம் 2020, வள்ளலார் ஆகியோர் மறைந்தபோதும் அவர்களின் பணிகள் எப்படி தொடர்கின்றன என முழங்கினேன் எனது சிற்றுரையில்.

மதிய நிகழ்வின் போது நிகழ்வை ஒருங்கிணைத்தேன் : விதை சிகிச்சை: மனவளக்கலை பேராசிரியர் பாண்டியராஜன், சிரிப்பு ராஜேந்திரன், செஞ்சிலுவை சங்க துணைத்தலைவர் ஜியாவுத்தீன், ஆசிரியர் குமர குரு,ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்க விடியல் குகன் நிகழ்வை தனது உரையை நிகழ்த்தி முடித்து வைத்தார்.

 நாட்டில் குடியுரிமை சாசன அறிக்கை பராளுமன்றத்தில் அமல்படுத்தியதை ஒட்டி நாடே கொந்தளித்துக் கிடக்கிற இந்தக் காலக்கட்டத்தில் இது போன்ற சமதர்ம சமய நல்லிணக்க விழாக்கள் நடத்துவதன் அவசியமும் அதில் இப்படி எனைப் போன்று சாதி மதம் பேதமின்றி பணி புரிந்தோர்க்கு விருது அளித்து கௌரவித்ததும் மிகவும் குறிப்பிடத்தக்கதாகிறது.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரின் சார்பாகவும் விருது பெற்றவர்களின் சார்பாகவும் பிரதிநித்துவம் அளித்து அவர்களது கருத்தை பதிவு செய்து கொள்ள பதிவு செய்து கொடுக்க ஏற்பாடு செய்திருக்க வேண்டும்.

தமிழ் நாடெங்கும் உள்ளவர்களை எல்லாம் பொறுக்கி எடுத்து பெரும் கூட்டமாக ஆக்குவதை விட ஆண்டுக்கு பல முறை ஒவ்வொரு துறையாக தேர்வு செய்து இன்னும் சிறப்பாக செய்ய வேண்டும்...மேலும் அந்த விருதின் போது இலட்சக்கணக்கான பணம் பரிசளிக்காவிடிலும் ஆயிரக்கணக்கிலாவது பண முடிப்புகள் பரிசளிக்குமாறு இருந்தால் இன்னும் நிகழ்வு சிறப்பாக இருக்கும் எனத் தோன்றுகிறது....அப்பதாங்க பட்ட கஷ்டத்துக்கு இன்னும் படுகிற கஷ்டத்துக்கு ஒரு ஆறுதலாக இருக்கும்

இல்லையென்றால் நல்ல கண்ணுவாகவும் கக்கனாகவும் அரசு மருத்துவ மனைக்கே போய்ச் சேர வேண்டியதுதான்....

தீயவைக்குத் தீயை வை
தமிழ் மணக்கப் பெரும் பொங்கல் வை
வாழ்த்துகள் எழுது.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.




Thursday, January 16, 2020

இந்த நாட்டின் தலைவனாக :கவிஞர் தணிகை

இந்த நாட்டின் தலைவனாக வருவார் இதை எல்லாம் செய்ய வேண்டும்.


1. மதுக்கடைகள் மூடப்பட்டு மதுவிலக்கு அமலாக்கப்படவேண்டும்
   அனைத்து மது ஆலைகளும் மூடப்பட வேண்டும்
2. அனைத்து புகைக்கும் சிகரெட்,பீடி தயாரிப்பு ஆலைகள் மூடப்பட வேண்டும்
போதையூட்டும் கஞ்சா, அபின், போன்ற எல்லா போதைப் பொருட்களும் முற்றிலும்
தடை செய்யப்படவேண்டும்
3. பொது இடங்களில் மட்டுமல்ல புகை என்பதே நாட்டில் தடை செய்யப்பட வேண்டும்
4. சினிமாத் துறை 5 வருடம் அரசின் முழுக் கட்டுப்பாட்டுக்கு வரவேண்டும்
5. தொலைக்காட்சி, ஊடகங்கள் (பத்திரிகை, வானொலி) யாவும் அரசின் முழுக் கட்டுப்பாடில் இருக்க வேண்டும்
6. மண், நீர் யாவும் அரசுடமை அல்லது பொதுவாக்கப்பட வேண்டும்
7. தொழில், கல்வி, மருத்துவம் யாவும் தனியார் உடமை அகற்றப்பட்டு அரசுடமையாக்கப்படும்
8. நதிகள் இணைக்கப்படும்
9. விவசாய மற்றும் அதன் சார்ந்த தொழில்கள் மேம்படுத்தட வேண்டும்
10.தேர்தல் முறைகள் மாற்றம் செய்யப்பட்டு ஒரேதேர்தல் முறை வழிகாட்டப்படும். கட்சிகள் தனியே செலவு செய்தல் கூடாது.
11. நாட்டின் அனைத்து இளைஞர்களுக்கும் இரண்டாண்டு இராணுவப் பயிற்சி அல்லது கிராமியப் பயிற்சி தவறாமல் கொடுக்கப்பட வேண்டும்.
12. சட்டம் நீதி நிர்வாகம் யாவும் மக்களை அலைக்கழிக்காமல் நேர்மையான நியாயமான குறுகிய காலத்துள் விசாரணை மற்றும் தீர்வுகள் தரப்படல்வேண்டும்
13. வழக்கறிஞர்கள், தணிக்கையாளர்கள், அரசு அலுவலர்கள், போன்றோர்  அரசின் கட்டுப்பாட்டில் மட்டுமே இயங்க முடியும்.
14. தனியார் முதலாளித்துவம் இருக்கக் கூடாது.
15. வங்கிகள் அனைத்தும் அரசுடமையாக்க வேண்டும் அது மட்டுமல்லாமல் விவசாய குறு சிறு விவசாயிகளுக்கு மட்டுமே கடனுதவி, பெரு முதலாளிகளுக்கு கடனில்லை என்றும் அவர்கள் கட்ட வேண்டிய முதலுக்கு அவர்களாக ஈடு செய்ய முடியாத பட்சத்தில் அவர்களின் உடமை அனைத்தும் மட்டுமல்ல பொதுவாகவே அனைத்து தனியார் சொத்துகளும் அரசுடைமையின் கீழ் கொண்டு வரப்படும்.
16. இலஞ்சம் ஊழல் நிரூபிக்கப்பட்டால் உடனடியான பணி நீக்கம், அவர்கள் குடும்பமும் தலைமுறையும் அரசுப் பணிக்கே வர முடியாதபடியும் கடுமையான தண்டனையும்
17. இணையம் அரசின் கட்டுப் பாட்டில் மட்டுமே இருக்கும்
18. எரிபொருள்,இரும்பு, பிளாஸ்டிக், பெட்ரோலியப்பொருட்கள்,போன்ற எந்தவித கனரகத் தொழில்களும் தனியார் இருக்கவே கூடாது
19. பள்ளிகள், கல்லூரிகள், ஆய்வு நிறுவனங்கள் அனைத்துமே அரசு மட்டுமே நடத்தும்.
20. ஒரு குடும்பத்துக்கு ஒரு கார் மட்டுமே இருக்க வேண்டும்
21. ரயில்வே, போக்குவரத்து, விமானப் போக்குவரத்து அனைத்துமே அரசு மட்டுமே நடத்த வேண்டும்
22. ஒரு வழக்கு முடிய 3 மாதத்துக்குள் மட்டுமே கால அளவு இருக்க வேண்டும்.
23. வன்புணர்வு, போன்ற குற்றங்களுக்கு ஆயுள் தண்டனையுடனான மனமாற்ற ஆலோசனையுடன் பாலியல் கல்வி வழங்கப்படும்
24. உண்மையான சேவையாளர்க்கு மட்டுமே ஊராட்சி, நகராட்சி பதவிகள் வழங்கப்படும்
25. எம்.எல்.ஏ,எம்.பி மந்திரிகளுக்கு வேறு எந்த தொழிலும் இருக்கக் கூடாது. அவர்களுக்கு ஊதியம் இருக்காது. பராமரிப்பு செலவு மட்டுமே உரிய தேவையான அளவில் வழங்கப்படும்.
26. கூட்டுறவு பண்ணை விவசாய முறைகளும் அரசுப் பண்ணைகளும் ஏற்படுத்தப் பட வேண்டும்.
27. இயற்கை சைவ உணவு வகைகள் மக்களுக்கு ஆலோசனை மூலம் ஏற்றுக் கொள்ள அறிவுறுத்தப் படும்.

இப்படி நாட்டை மக்களை நலமாக்கும் இராமராஜ்ஜியக் கனவுகளும், கலாம் 2020 கனவுகளும் கம்யூனிசக் கனவுகளும் நிறைவேற்றப் படும் அரசான நல்லரசை வழங்க வேண்டும்

சுமார் 10 ஆண்டுக்கும் மேல் கிராமிய முன்னேற்றத்துக்கு பாடுபட்டவன் என்ற முறையில் எனக்கு அந்த தகுதி இருக்கிறது என நினைத்து அப்படி நான் ஒர் தலைவன் ஆனால் இதை எல்லாம் செய்வேன்.
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

ரஜினிகாந்தின் தவறான பேச்சு: கவிஞர் தணிகை

ரஜினிகாந்தின் தவறான பேச்சு: கவிஞர் தணிகை

Image result for rectify the mistakes rajinikanth


செய்கிற தவறுகளை தமது சத்திய சோதனை மூலம் ஒப்புக் கொண்ட காந்திய வாழ்வையே குறை சொல்வார் உண்டு.

ரஜினிகாந்த் துக்ளக் 50 ஆண்டுவிழாவில் ஜனவரி 14 அன்று பேசியதில் நிறையப் புள்ளிவிவரங்கள் தவறாக குறிப்புகளாகக் கொடுக்கப்பட்டு பேசப்பட்டுள்ளன. அவரிடம் அந்த குறிப்பு கொடுத்தவர்கள் செய்தியை உறுதிப்படுத்தி இருக்க வேண்டும். தவறான செய்திகளை உலவ விடக்கூடாது அது எவருக்குமே நல்லதல்ல.
நாம் துக்ளக், முரசொலி திமுக அறிவாளி பற்றி எல்லாம் சொல்லப் புகவில்லை. உதய நிதி ஸ்டாலின் போன்றோர்க்கும் சப்பைக் கட்டு கட்ட முற்படவில்லை.

சேலத்தில் ஜி.டி.நாயுடுவால் துவக்கப்பட்ட 1971 ஜனவரி 23  24ல்  மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாடு நடத்தும்போது
"1971ல் சேலத்தில் பெரியார் அவர்கள், ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியையும் சீதாவையும் உடை இல்லாமல் செருப்பு மாலை போட்டு ஊர்வலம் போனார்கள். அதை யாரும் செய்தித் தாளில் போடவில்லை. அதை சோ துக்ளக் அட்டையில் போட்டு கடுமையாக விமர்சித்தார். என ரஜினிகாந்த் பேசி இருப்பதாக செய்திகள்....

ஆனால் இராமர் சீதை படங்கள் ஆடையில்லாமல் இல்லை என்றும் அதற்கு செருப்பு மாலைகள் அணிவிக்கப்படவில்லை என்றும் உண்மையறியாமல் பேசி இருக்கிறார் எனவும் தெரியவந்துள்ளது.

அந்த செய்தி மிகவும் தவறானது என்றும் அன்றைய ஊர்வலத்தின்போது பெரியார் மீது செருப்பு வீசப்பட்டது என்றும் அது அவர் வாகனம் முன்னால் போய்விட அந்த செருப்பு குறி தவறி பின் வந்த வாகனத்தில் விழுந்தது என்றும் அதை எடுத்து கோபம் கொண்ட ஊர்வலத்தின் முன்னணியினர் ராமர் படத்தை செருப்பாலடித்ததாகவும் அன்றைய நிகழ்வில் கலந்து கொண்ட கலி.பூங்குன்றன் என்பவரிடம் பி.பி.சி தமிழ் நேரடிப் பேட்டி எடுத்து வெளியிட்டுள்ளது.

அது மட்டுமல்ல அந்த செய்தி வேறு எந்த செய்தியிலும் இடம்பெறவில்லை என்றதற்கு மாறாக அன்றைய தினமணி அதை வெளியிட்டிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அந்த செய்தியை துக்ளக் இதழில் பெரிது படுத்தி அன்றைய முதல்வர் கருணாநிதியை அட்டையில் போட்டு ராமர் படத்தை செருப்பாலடிப்பதைப் பார்த்து கலைஞர் நல்ல அடிங்க நல்லா அடிங்க என்று சொல்வது போலவும் போட்டதால் அந்த இதழ்களை வெளியிட விடாமல் தடுத்ததாகவும், அந்த இதழ்கள் மறு அச்சிடப்பட்டு ப்ளாக்கில் உரிய விலையை விட அதிகமாக விற்றதாகவும் பேசி இருந்தது சரியாக இருக்கலாம்.

ஆனால் அதன் பின் நடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க இருந்த‌ 138 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் மாறாக 183 தொகுதிகளைக் கைப்பற்றியதாகவும் இருக்கிற செய்திகளையும் நாம் கவனிக்க வேண்டும்.

ரஜினிகாந்த் எந்தப்பக்கம் நகர்ந்து கொண்டிருக்கிறார் என்பதை எல்லாம் இது போன்ற நிகழ்வுகளும் பேச்சுகளும் காட்டி வருகின்றன.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

நன்றி: பி.பி.சி. தமிழ்:
ஜனவரி: 15.2020

Sunday, January 12, 2020

எல்லோர்க்கும் எல்லாமும்: கவிஞர் தணிகை

எல்லோர்க்கும் எல்லாமும்: கவிஞர் தணிகை
Image result for all to all


100 இளைஞர்களைக் கொடுத்தால் இந்தியாவை மாற்றிக் காட்டுவதாகச் சொன்ன விவேகானந்தா தினம் இன்று இளையோர் தினமாகும்.  54 கோடி பேருக்கு மேல் இளைஞர் உள்ள இந்தியா உலகில் அதிகம் இளைஞர் உள்ள நாடுகளில் தலையாய நாடாகும்.

முதலாளித்துவ சிந்தனை தவிர வேறு மார்க்கங்கள் யாவுமே உலகை உலக மாந்தரை பட்டினிப்பிடியிலிருந்து மேல் உயர்த்துவதாகச் சொன்ன தத்துவங்களே...

வழிமுறைகள்  வேறாக இருந்த போதும் மார்க்சீயம் கூட கீழ் இருக்கும் மனித வாழ்வை மேம்படுத்த முயன்று வெற்றியடைய இதுவே எளிய வழி என்று சொன்னதேயாகும்.
Image result for vallalar and vivekanandaImage result for vallalar and vivekananda
அதன் பின் வள்ளலாரின் கொள்கையோ வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் மனம் மிக வாடியது...பசி தீர்த்தலே மானிடத்தின் தலையாய முதல் பணி என்று பசிப் பிணி தீர்க்க வடலூரில் சத்திய சன்மார்க்க சங்கம் நிறுவியது.

அதன் பின் வந்த காந்தி தத்துவமும் கூட கடையனுக்கும் கடைத்தேற்றம் என்றும் இராமராஜ்ஜியக் கனவு என்ற பேரில் மிகவும் பின் தங்கிய குக்கிராமத்தில் இருப்பார்க்கும் நாட்டின் நல் வசதி வாய்ப்புகள் சென்று அடையவேண்டும் எனக் கருதியதே...

கலாம் கூட தமது 2020 விசன் என்ற தொலைநோக்கப் பார்வையில் கிராமங்கள் அனைத்துக்குமே நகர்ப்புற வசதிகளான கல்வி, மருத்துவம், தகவல் தொடர்பு போன்ற அத்தியாவசிய தேவைகள் எல்லாம் சென்றடைந்திருக்க வேண்டும் என்று  அந்தக் கருத்துக்கு வலிவூட்டி இருக்கிறார்.

 இந்து மதம், முகமதியம் , கிறித்தவம் , ஜைனம், புத்தம் யாவற்றின்  இலக்குமே இல்லார்க்கும் எல்லோர்க்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்ற கருத்துருக் கொள்கையை கொண்டு சேர்த்தும் கருத்திலிருந்து மாறுபட்டதாக இல்லை.

இப்படி எல்லா இலக்குகளும் எல்லார்க்கும் எல்லாமும் சென்று சேர வேண்டும் என்று இருக்கையில் ஏன் அவை நடைமுறையில் சாத்தியமாகவில்லை...?

 சிந்தித்திப் பார்த்தால் பிரிவினை என்ற ஒன்றும் சுயநலம் என்ற ஒன்றும் முக்கியக் காரணிகளாகின்றன. அது சாதி, கட்சி, மொழி, மதம், இனம், இப்படிப் பட்ட பெயர்களுடன்...

ஊடகமும், பொய்களும் அதன் துணைக் காரணிகள்....

கொடுக்கும் கல்வியில் கூட மேல்மட்டக் கல்வி, கீழ் மட்டக் கல்வி, வளர்த்தும்போதே பிள்ளைகளை பிரிவினைகளோடு வளர்த்தும் நாடும் அதன் கூட்டமும் சட்டமும், நீதியும் நிர்வாகமும்...இலக்கை வெவ்வேறாக ஆம் வெவ்வேராக கொண்டு செலுத்தும்போது எப்படி எல்லார்க்கும் எல்லாமும் கிடைக்கும்...

எல்லார்க்கும் எல்லாமும் கிடைக்க முதலில் அந்த எண்ணம் எல்லார்க்கும் வர நாம் நம்மாலானதை செய்வோம் செய்து வருகிறோம். பேதங்களைக் களைய முடியாது என கண்ணாமூச்சி பூதம் காட்டுதலை அறிவு சார் கல்வி எனும் பூதக் கண்ணாடி கொடுத்து அது வெறும் காட்சி தான் அதை தெளிவு படுத்தி மீட்சி பெறச் செய்வோம்.சிந்தனை சென்று கொண்டிருக்கிறது. நண்பர்கள் முயன்றபடி இருக்கிறார்கள். வளமான வாழ்த்துகள்

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Thursday, January 9, 2020

முரண்கள்: கவிஞர் தணிகை

முரண்கள்: கவிஞர் தணிகை

Image result for bat


1. இந்தியக் குடியுரிமை மசோதா தாக்கல் செய்ததால் சகோதரர்களாக இருந்து வந்த இந்து, முஸ்லீம்,கிறித்தவ மத வழிபாடு சார்ந்த மக்களிடையே பிரிவினை வாதம் வந்துள்ளது என பாதிக்கப்படும் கவலையில் உள்ள சிறுபான்மை மதம் சார்ந்த நண்பர்கள் தெரிவிக்கின்றனர்.

2. அவர்களது கவலையை எப்படி இந்த அரசு தீர்க்க முடியும்?

3. தமிழக அரசு இந்த மசோதா தாக்கல் செய்யும்போது அதற்கு ஆதரவாக வாக்களித்துவிட்டு அதன் தமிழக மாநில அமைச்சர்களில் ஒருவர் பேசியுள்ளார் அதை தமிழகத்தில் குடியுரிமை பதிவேட்டை அனுமதிக்க மாட்டோம் எதிர்ப்போம் என...

இது நாடு பற்றிய முரண்

எனக்குள்ளான ஒரு முரண்

ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியை தினமும் 5 பக்கம் முதல் 10 பக்கம் வரை இன்னும் வாசித்து வருகிறேன் நல்ல அறிஞர். அவரது நிறைய இடங்கள் சொல்லியதையே திரும்ப சொல்வதாகவே தெரிகிறது.

மேலும் அவர் தியானத்துக்கு அடிமைப்பட்டு விடக்கூடாது தினமும் அதை செய்தாக வேண்டும் என்ற நிர்பந்தங்களை  எல்லாம் வைத்துக் கொள்ளாதீர் என்று.

தியானத்திலும் அவரது கருத்துகளுக்கும் மேலும், அவருக்கு எப்படி இருந்தது எனத் தெரிய எனக்கு வாய்ப்பில்லை. ஆனால் எனக்கு ஒலியற்ற வார்த்தைகள் ஒவ்வொரு தருணத்திலும் வந்து கொண்டேதான் இருக்கின்றன தியானம் எப்போதும் தொடர வேண்டிய நிலையில் இருப்பதாகவே உணர்கிறேன்.

பேட்ட நெம்பர் 2...தர்பார் ரஜினி இரசிகர்களுக்கு மட்டும்

சேலம் இரசிகர்கள் 200 பேருக்கு ஹெல்மெட் வாங்கி கொடுத்திருக்கிறார்கள்

நேற்று நடைப்பயிற்சிக்கு செல்லும் வழியில் இரு காக்கிச்சட்டைகள் இரு சக்கர வாகனசாரிகளை மடக்கிப் பிடித்துக் கொண்டிருந்தனர்.
எங்களது ஊரைச் சுற்றி ஒரு ஹெலிகாப்டர் போய் வந்ததை உண்மையிலேயே இன்று பார்த்தேன் ஒரு வேளை ரஜினிகாந்தின் தர்பார் திரையிடப்பட்ட தியேட்டர்கள் மேல் எல்லாம் பூ தூவ வந்து விட்டுச் செல்கிறதோ!

எங்கள் ஊர் இலட்சுமி தியேட்டரில் கொஞ்சம் பேர் இருந்தனர் இன்று விடுமுறை எடுத்துக் கொண்டு மூழ்கிக் கொண்டிருக்கும் பி.எஸ்.என்.எல் நெட்  பில் கட்டச் செல்லும்போது கவனித்தேன்.
 திரும்பி வீடு வரும்போது  தியேட்டர் வாசலில்பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தது
ஒரு நாய் அதைக் கேட்டு ஓங்கி ஓங்கி குரைத்தபடி இருந்தது.
Image result for helicopter flower darbar salem city

வௌவால் கழிப்பதும் வாயில்தான் தான்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

Wednesday, January 8, 2020

தர்பாரும் ஹெலிகாப்டர் பூக்களும்: கவிஞர் தணிகை

தர்பாரும் ஹெலிகாப்டர் பூக்களும்: கவிஞர் தணிகை
Image result for helicopter flower darbar salem city

அடுத்து வரும் தமிழக சட்டசபைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளாராக களம் இறங்க இருப்பதாக செய்திகள் அடிபடும் நடிகர் ரஜினிகாந்த் தர்பார் படம் நாளை 09.01.2020 வியாழனில் வெளி வர இருக்கும் நிலையில் சேலத்தில் உள்ள 5 தியேட்டர் அரங்கில் உள்ள போஸ்டர் விளம்பரத் தட்டிகள் மேல் அவரின் இரசிகர்கள் ஹெலிகாப்டர் கொண்டு பூத் தூவ மாவட்ட நிர்வாகத்தை அனுமதி கேட்க அதற்காக பெங்கலூரிலிருந்து ஹெலிகாப்டர் வாடகைக்கு அமர்த்தி இருப்பதாக செய்திகளை ஊடகங்கள் வெளியிட்டிருந்தன.

அதை அடுத்து மாவட்ட நிர்வாகம் மக்களுக்கு  அது இடையூறாக இருக்கும் என கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பாக கொடுத்த மனுவின் பேரிலும் கள ஆய்வினை முடித்து அனுமதிக்க முடியாது என தெரிவித்திருப்பது வரவேற்க வேண்டிய நிலையில் உள்ளது.

முதல்வர் வேட்பாளாராக களம் இறங்க இருக்கும் ரஜினிகாந்த் முதலில் தமது இரசிகப் பெருமக்களுக்கு நல் ஆலோசனை வழங்கி இது போல் தம் போஸ்டருக்கு பால் ஊற்றுவது , பூ போடுவது, பிரம்மாண்டம் என்ற பேரில் ஹெலிகாப்டரிலிருந்து பூ தூவல் போன்ற முட்டாள்தனமான செயல்களில் இருந்து விடுபட கற்றுத் தர வேண்டும். பயிற்றுவிக்க வேண்டும் அறிவுறுத்த வேண்டும்.

மக்கள் பணியை எப்படி கையில் எடுத்து அவர்களின் முக்கிய பிரச்சனைகளான கல்வி மருத்துவம், வேலைவாய்ப்பு, குடி நீர், விலைவாசி போன்ற முக்கிய அடிப்படைப் பிரச்சனைகளுடன் வாழ்வாதாரமான  உணவு, உடை  உறையுள் போன்ற பிரதானமான தேவைகள், போதை ஒழிப்பு, புகை மறுத்தல், சுற்றுச் சூழல் மேம்பாடு, மரம் நடுதல், போன்ற ஆக்கபூர்வமான பணிகளில் இவர்களை ஈடுபட ஈடுபடுத்த நல்வழிப்படுத்த வேண்டும். சாதி மத பேதமற்ற ஒரு நல்லாட்சியை தர முயலட்டும் வாழ்த்துவோம்.
Image result for helicopter flower darbar salem city
அதை விட்டு இந்த போஸ்டருக்கு பூ தூவ ஹெலிகாப்டர் வர அனுமதி மறுப்பதைக் கண்டு ரசிகர்கள் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்தனர் என்ற செய்தி வெளியீடுகள் யாவும் அவர்களது தரத்தை வெளிப்படுத்துவதாக அமைகிறதே அதிலிருந்து எல்லாம் வெளிவந்து அகரம் பவுண்டேசன் போல நல்லதை செயல்படுத்த முயலட்டும்...

ப்ளக்ஸ் கட் அவுட் வைக்கும் முறைகளை  நீதிமன்றங்கள் தமிழக அரசுக்கு தடை செய்ய வேண்டும் என உத்தரவு இருந்தும் ஒரு முறை பயன்படுத்தும் ப்ளாஸ்டிக் பொருட்களைத் தடை செய்வது, பொது இடங்களில் புகை பிடிப்பது போன்று இந்த சட்ட வடிவையும் நீதி முறையையும் சட்டை செய்யாமல் இருப்பது வருத்தத்துக்குரியது.

முதலில் இது போன்ற இரசிகர்கள் தங்கள் பெற்றோரை, குடும்பத்தை நல்ல நிலையில் காப்பாற்ற கற்றுக் கொண்டு இது போன்ற செயல்பாட்டுக்கு எல்லாம் வந்தால் தேவலாம்.

ஒரு வேளை வெறும் விளம்பரத்துக்கு இது போன்ற சாகசங்களை செய்து வேடிக்கை காட்டி செய்தியில் இடம் பெற வேண்டுமென்றே ஊடகங்களை பயன்படுத்தி படத்துக்கு செலவில்லாமல் விளம்பரம் தேடும் யுக்திகளில் இதுவும் ஒன்றோ?


Image result for helicopter flower darbar salem city
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

Monday, January 6, 2020

அமைதியற்றுப் போனது இந்தியா? இதற்காகத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா? : கவிஞர் தணிகை

அமைதியற்றுப் போனது இந்தியா?
இதற்காகத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா? : கவிஞர் தணிகை

Image result for citizenship Act  struggles in india"

வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்குள் குடியேறும் மக்களுக்காக இந்திய குடியுரிமைச் சட்டம் என்று கொண்டு வந்திருந்தால் இத்தனை போராட்டங்களும், கூச்சல்களும், குழப்பங்களும், நாடு இரண்டாக வேறுபட்டு ஒரு கட்சியை பிற கட்சிகள் குறை சொல்லி போராடுதல்களும், கல்லூரி மாணவரிடையே ஏற்படும் அடி தடி தகராறுகளும் தவிர்க்கப்பட்டிருக்கலாம்.

ஜக்கி வாசுதேவ் போன்ற  சாமி யார்கள் எல்லாம் அரசியல் பேச வேண்டிய அவசியம் நேர்ந்திருக்காது. ஹா ஹா ஹா என தோள்களை குலுக்கியபடி வெளிநாட்டினர் பற்றியும் நாய்களுக்கே அடையாளம் தேவைப்படும்போது இந்தியக் குடிமகன்களுக்கும் தேவைதானே எனப் பேசும் இது போன்ற நபர்கள் கொடுத்திருக்கும் அடையாள அட்டைகளை ஏன் ஒழுங்காக பிழையின்றி இந்த அரசால் தரமுடியவில்லை அவற்றைப் பற்றி பேசாமல் ஆறு போகும் போக்கில் மடை மாற்றமின்றி நாடு போகும் போக்கில் தனக்கு என ஏதும் வந்து விடக்கூடாது என அரசோடு சேர்ந்து ஒத்துப் போடுகிறார்கள்.

ஒரு பக்கம் இந்தியாவில் இருப்பார்க்கு எந்த வித இடைஞ்சலும் இருக்காது என ஆளும் கட்சியினர் இதைப்பற்றி விளக்கம் சொல்ல ஊர்வலம் வீடு நோக்கிய பயணம் செய்து வருவதும்

எதிர் அணியினர் அவர்கள் பக்கத்துக்கு ஊர்வலம் , அணி வகுப்பு, எதிர் மறியல் செய்து வருவதும், நாடே கொந்தளித்தபடி இருக்கிறது.
இப்போது இருக்கவே இருக்கிறது என ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் இரு தரப்பு மோதல்கள் இரு தரப்பு காவல் துறை புகார்கள் இருவேறுபட்ட கோணங்களில்...

இதில் வேறு நாடு தழுவிய அளவில் ஒரே மூவ்மென்ட் அட்டையாம்...ஒரே நாடு ஒரே அட்டை என...

எங்க தமிழ் நாட்டில் எங்கு பார்த்தாலும் இந்திக்கார முகங்கள். திட்டமிட்ட ஊடுருவல்களா...அடுத்து வரும் தேர்தல்களில் இவர்களின் பங்களிப்புகள் தேர்தலில் ஒரு முக்கியத்துவ முடிவுகளுக்கும் காரணமாகாலாம்...

எப்படியோ இப்படி எல்லாம் செய்தபடி

விலைவாசி ஏற்றம்,  கல்வி மருத்துவம், நதி நீர் இணைப்பு, ஜி.எஸ்.டி, டிமானிட்டிசேசன்  வேலைவாய்ப்பின்மை போன்ற நாட்டின் முக்கியப் பிரச்சனைகளிலிருந்து மக்கள் பிரச்சனைகளிலிருந்து அனைவர் மனங்களையும் திசை திருப்பலாம் இது போன்ற அடையாளம் அட்டை என்ற பேர் சொலியே../

இத்தனைக்கும்  நடுவில் ஏப்ரல் முதல் இந்த சோதனை முயற்சிகள் குடியுரிமை மசோதா, கணக்கெடுப்பு, பதிவுகள், ஏடுகள், மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவேடுகள்...மத சாதி, இன்னபிற பிரிவினகளோடு நாட்டின் பதிவுகளில் இடம் பெறும் பணி இருக்குமாம் என அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். அதன் முன் நிகழ்வே இந்த மசோதா தாக்கல் பதிவு ஏற்பாடுகள் என்ற கருத்துகள் உள்ளன.
Image result for citizenship Act  struggles in india"
இதை எல்லாம் வரும் காலங்களில் எதிர்பார்க்கலா, நாட்டு மக்கள் தங்கள் உரிமைகளை நிரூபிக்க மீண்டும் இரவு பகலாக தெருவுக்கு வந்து காத்திருக்கும் நிலை ஏற்படலாம்...

அப்படி இல்லாமல் வீடு நோக்கி வந்து அரசு அலுவலர்கள் பிழையின்றி இவற்றை எல்லாம் செய்து அடையாளப்படுத்தி பதிவு செய்து கொண்டால் பாராட்டலாம்தாம்.

ஒரு சார்புடைய அரசாட்சியாக இல்லாமல் பொது மக்கள் யாவருக்கும் நடுநிலை  தவறாத சிறந்த ஆட்சியை தந்தால் இந்தியா இன்னும் உலகில் பேர் சொல்லும் மக்களாட்சியை மலரவைத்த நாடாக பெருமை பெறும்.

நாடு ரெண்டுபட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்...பழமொழி...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Wednesday, January 1, 2020

2020 vision of A.P.J.ABDUL KALAM.

welcome2020,Vision2020,apjabdulkalam,2020,RememberingAbdulkalam,abdulkalam,NewYear2020,கலாம்,அப்துல்கலாம்,வல்லரசு

நன்றி: தினமலர்.

தமிழகத்தை சேர்ந்த, மறைந்த அணு விஞ்ஞானி அப்துல் கலாம், 2002 முதல், 2007 வரை, இந்திய ஜனாதிபதியாக இருந்தார். அவர் ஜனாதிபதியாகும் முன், 1998ல், 'விஷன் - 2020' என்ற, தொலைநோக்கு திட்டம் குறித்த புத்தகத்தை வெளியிட்டார். அந்த புத்தகத்தில், அனைத்து தரப்பு முன்னேற்றம், இந்தியாவின் வளர்ச்சிக்கான சவால்கள், அதை முறியடிக்கும் விதம் குறித்தும் கூறியிருந்தார்.

பின், அப்துல் கலாம் ஜனாதிபதியானதும், மத்திய திட்ட கமிஷன் மேற்கொண்ட திட்டங்களுக்கு, அவரது, விஷன் - 2020 என்ற தொலைநோக்கு திட்டம் பயன்படுத்தப்பட்டது. கலாமின் தொலைநோக்கு பார்வையை அடையும் ஆண்டான, 2020 பிறக்கும் நிலையில், கலாம் கண்ட கனவு என்ன; அவை நனவானதா என்பது இன்னும், கேள்வியாகவே தொக்கி நிற்கிறது.





அது என்ன, 'விஷன் 2020?'

* நாட்டில் உள்ள நகரங்களுக்கும், கிராமங்களுக்குமான இடைவெளி பெருமளவு குறைக்கப்பட வேண்டும்; நகரம், கிராமம் இரண்டிற்கும் பாகுபாடின்றி, அனைத்து வசதிகளும் கிடைக்க வேண்டும்.

* நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும், அனைத்து பகுதிகளுக்கும் போதிய மின் வசதியும், பாதுகாப்பான குடிநீரும் கிடைக்கச் செய்ய வேண்டும்.

* வேளாண்மை, தொழிற்துறை மற்றும் சேவை துறைகள் இணைந்து செயல்படும் நிலை வர வேண்டும்.

* நல் ஒழுக்கத்துடன் நிறைந்த கல்வி, அனைத்து வகை இளம் தலைமுறைக்கும் கிடைக்க வேண்டும்; பொருளாதார மற்றும் சமூக வேறுபாடுகளால், கல்வி மறுக்கப்படும் நிலை கூடாது.

* சர்வதேச அளவில் திறமையான கல்வியாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு, இந்தியா சிறந்த இடமாக மாற வேண்டும்.

* அனைத்து தரப்பினருக்கும், மிகச்சிறந்த மருத்துவ சேவை கிடைக்க வேண்டும்.

பெருமையான தலைமை:

* நாட்டின் அரசு நிர்வாகம், சமூக பொறுப்புகள் நிறைந்த, வெளிப்படையான மற்றும் ஊழல் அறவே அற்றதாக மாற வேண்டும்.

* இந்த நாட்டில், அனைத்து தரப்பு மக்களின் ஏழ்மை நிலை அகற்றப்பட வேண்டும்.

* படிப்பறிவு இல்லாத நிலை ஒழிய வேண்டும்.

* பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அறவே இருக்க கூடாது. இந்த சமூகம் தன்னை கைவிட்டு விட்டது என்ற நிலை யாருக்கும் வரக்கூடாது.

* வளமும், பாதுகாப்பும், ஆரோக்கியமும், அமைதியும், மகிழ்ச்சியும் நிலவ வேண்டும்.

* பயங்கரவாதம் இல்லாத நிலை வேண்டும்.

* நிலையான வளர்ச்சி பாதையில் நாடு செல்ல வேண்டும்.

* நாட்டின் தலைமைத்துவத்தின் செயல்பாடுகள் நன்றாக இருக்க வேண்டும்; அந்த செயல்பாடுகளை பெருமையாக கருதி, ஒவ்வொரு நாட்டு மக்களும், 'வாழ்வதற்கு இந்தியாவே சிறந்தது' என்ற நிலை ஏற்பட வேண்டும்.





வளர்ந்த நாடாக...

* இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக மாற, ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

* ஐந்து முக்கிய துறைகளை ஒருங்கிணைத்து, பணிகளை மேற்கொள்ள வேண்டும். வேளாண்மை, உணவு பதப்படுத்துதல், கல்வி, சுகாதாரம், தகவல் தொழில்நுட்ப துறை ஆகியவற்றில், வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

* முக்கியமான தொழில்நுட்ப துறையில் தன்னிறைவு பெற்ற நிலை ஏற்பட வேண்டும்.

* நகரங்கள் மற்றும் கிராமங்கள் என, நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும், நம்பத்தகுந்த மற்றும் தரமான மின்சார வசதி, பல்வகை போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு, அப்துல் கலாம் கூறியிருந்தார்.

இந்த இலக்கை எட்டுவது குறித்து, அவர் கூறியிருந்ததாவது: தேசிய தொலைநோக்கு பார்வையை எட்ட, குறைந்தபட்சம், 15 ஆண்டுகள் தேவை. இவை அரசியல் கட்சிகளின் கொள்கையாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், தேர்தல் அறிக்கையில் அவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த, விஷன் - 2020 என்பது ஒரு கட்சி, அரசு மற்றும் தனி நபருக்கானது மட்டும் சொந்தமானதல்ல. நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான தொலைநோக்கு பார்வை. இதை பார்லிமென்டில் மக்களின் பிரதிநிதிகள் கூடி விவாதித்து, அனைத்து தரப்பின் ஒப்புதலை பெற்று, நடவடிக்கை மேற்கொள்ளலாம். இவ்வாறு, அப்துல் கலாம் தெரிவித்திருந்தார்.

2020ல் வல்லரசாகும்?

கடந்த, 2007ல் அப்துல் கலாமின் ஜனாதிபதிக்கான பதவிக்காலம் முடிந்தபோது, நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது, 2020ல் இந்தியா வல்லராசாகும் என, சூளுரைத்தார்.

அவரது உரை வருமாறு: வரும், 2020ல் இந்தியா வளர்ந்த நாடாக, வல்லரசு நாடாக திகழும். நம்முடைய இளைஞர்கள் துணையுடன், திறமையான, வெளிப்படையான நிர்வாகமும், அப்பழுக்கற்ற, ஊழலற்ற ஆட்சியும் இருந்தால் நிச்சயம் நாம், 2020ல் வல்லரசு நாடாக மாறி விடுவோம். நாட்டில் உள்ள, 25 வயதுக்குட்பட்ட, 54 கோடி இளைஞர்களையும் ஊக்கப்படுத்தி, உத்வேகத்துடன், அவர்களை சரியான பாதையில் நடைபோட வைக்க வேண்டும். அவர்களுக்கு சிறந்த கல்வி கிடைக்க வேண்டும். அவர்களுடைய ஆளுமைத் திறனை மேம்படுத்த வேண்டும்.





சூளுரை:

இளைஞர்கள் தான் இந்த உலகின் மாபெரும் சக்தியாவர். வளர்ந்த, வல்லரசு நாடாக இந்தியா நிச்சயம் மாறும். மிகச் சிறந்த திறமை வாய்ந்த அரசு நிர்வாகம் உள்ள நாடாக, அமைதியான நாடாக, அனைவரும் வசிக்க ஆசைப்படும் அழகிய நாடாக, நம் இந்தியா நிச்சயம் மாறும். நம் நாட்டில் இரண்டாவது பசுமைப் புரட்சி வர வேண்டும். தங்களது வளமான நிலங்களைப் பாதுகாக்க விவசாயிகளுக்கு முழு சுதந்திரமும், சக்தியும் கொடுக்க வேண்டும். விவசாய நிலங்கள் பாழ்பட்டுப் போக அனுமதிக்கக் கூடாது. விவசாயிகளும், வேளாண் விஞ்ஞானிகளும், தொழிற்துறையினரும் இணைந்து சீரிய முறையில் உழைத்தால், நம் விவசாய பொருளாதார வளர்ச்சியை, ஆண்டுக்கு, 4 சதவீதம் அதிகரிக்க முடியும். இவ்வாறு, கலாம் சூளுரைத்தார்.

இந்த சூளுரைகளை, இதுவரை நிறைவேற்ற முயற்சிக்காத, அரசியல் கட்சி தலைவர்கள், இளம் தலைமுறையினர், மாணவர்கள், வேளாண் துறையினர், கல்வியாளர்கள், ஊடகங்கள், நீதித்துறையினர் என, அனைவரும் இந்த ஆண்டின் இறுதிக்குள் வல்லரசு கனவை நனவாக்க உழைக்க வேண்டும் என்பதே, அனைவரின் விருப்பம்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை