Sunday, June 9, 2019

சுற்றுச் சூழல் தினமாமே: கவிஞர் தணிகை

சுற்றுச் சூழல் தினமாமே: கவிஞர் தணிகை

Image result for heat wave india


நேற்று இந்தி பற்றி அரற்றினோம் இன்று ட்ரேன்ஸ்லேட்டரி ப்ரோ என்ற கருவி இந்தி உட்பட சுமார் 40 மொழிகளை மொழி பெயர்ப்பு செய்யும் ஆற்றல் உள்ளது விலைக்கு கிடைக்கிறது என்றும்  அது விரைவில் செயலியாக அறிமுகப்படுத்தப்படும் என்றும் மொழிபெயர்க்க அதற்கு ஆகும் கால அளவு ஒன்னரை நொடிகளே என்றும் 97 சதவீதம் துல்லியமாகவும் இரைச்சலுடன் இருக்கும் இடத்திலும் இது தெளிவாக மொழி பெயர்க்கும் என்றும் சார்ஜ் போட்டது 4 நாட்களுக்கு இருக்கும் என்றும் செய்தி...அப்பாடா மொழிப் பிரச்சனைக்கு ஒரு தீர்வு வந்துவிட்டது சில மொழிகள் தெரிந்தாலும் போதும் அல்லது ஒரு மொழி தெரிந்தாலும் போதும்..,

மற்றபடி மொழி ஆற்றல் வேண்டுவோர் மட்டும் அந்த அந்த மொழியை கற்றால் போதும். அப்பாடா ஒரு வழியாக மொழிப் பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளியை அறிவியல் கொடுத்து விட்டது. இதை இந்தியாவில் அனைவரும் வாங்கி பயன்படுத்துவார் அதிகம் என்ற செய்தி வரும் நாள் அதிக தொலைவில் இல்லை.

சரி அதை விடுங்க: சுற்றுச் சூழல் தினம் என்றால் ஒருவர் நீர் நிலையைப் பற்றி பேசுகிறார், ஒருவர் காற்று மாசுபாடு, மற்றொருவர் நிலம் விவசாயம் இரசாயன உரம், மரம் ஒருவர் வாகன மாசு, ஒருவர் எரிபொருள், ஒருவர் ஆகாயம் மழை இப்படி ஆள் ஆளுக்கு பேசிக் கொள்கிறோம்
Image result for heat wave india
உடனே நீர் விற்பனையை நிறுத்தி முதலில் இருக்கும் குடி நீரை பொதுவாக்கி அரசுடைமை செய்து அதை சரியாக சமமாக விநியோகம் செய்ய துப்பு இருக்கிறதா இருக்கும் அரசுகளுக்கு....அந்த நீர் சுத்திகரிப்பு செய்து அடைத்து விற்பனை செய்யும் குடி நீர் ஆலைகளுக்கு முதலில் மூடு விழா செய்ய துப்பு இருக்கிறதா இந்த அமைப்புகளுக்கு..
Image result for heat wave india
என்ன போய் சுற்றுப் புறம் தினம் இங்கே கொண்டாடுவது...

வெறும் பேருக்கா
Image result for heat wave india
அரசு அமைக்கும் நிறுவன அமைப்புகளே ஏரிகளில் இருக்கும்போது என்ன செய்ய   அடுத்து மரத்தைப் பற்றி பேசுவோம் அதற்கு ஒரு தன்னார்வ நிறுவனம் இதோ மரங்களை நடுங்கள் நாங்கள் திருமணத்திற்கும் மரக்கன்றுகள் தருகிறோம் என்று சொல்ல விருக்கிறோம்.

அடுத்து ஏதோ ஒரு சேகர் கபூர் நான் கார் வைத்துக் கொள்வதில்லை என்று சொல்வது செய்தியாகப் போகிறது...இப்படி நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம் அத்தனை இயற்கை பூதங்களையும் அழித்து விட்டு சுற்றுப் புற தினம் என கடைப்பிடிக்கவும் நமக்கு அருகதை இருக்கிறதா இன்று டில்லியின் வெப்ப நிலை 45 டிகிரி சென்டிகிரேட் என்கிறது வெதர்மேன்.113 டிகிரி பாரன்ஹீட்டில்  உயிர்கள் வாழும் நிர்பந்தம்.98.டிகிரிதான் மனித உடலுக்கே ஏற்றது மீதம் உள்ளதெல்லாம் ஏற்றியது...கேடு கெட்ட செயல்காளால் தமக்குத் தாமே புவியின் மேல் ஏற்றிக் கொண்டது.

இது வரை இங்கு 3 முறை மழை பொழிந்தது. ஆனாலும் இன்னும் புவிச்சூடு குறையவே இல்லை...
வெறும் 384 கன அடி நீர் வருவதையே காவிரி நீர் வரவு அதிகரிப்பு என செய்தி ஏடுகள்...கர்நாடகா மந்திரி சிவகுமார் நீர் வந்தால் மட்டும் விடுவோம் இல்லையேல் நீர் இல்லை என்று விட்டார்...நிதின் கட்காரியின் நதி நீர் இணைப்பு பேச்சு காற்றோடு போம், ஏன் எனில் ராஜ் நாத் சிங்கும், கட்காரியும் பொருமிக் கொண்டிருப்பதாகச் செய்திகள்...
Image result for heat wave india
திண்டாட்டம் மனித உயிர்கள் எல்லாம்...
எனவே பெரும் பின்னடைவில் உள்ள இந்த மனிதர்கள் பின் திரும்பி இயற்கை வாழ்வுக்கு செல்ல போவது உண்மையா...

இயற்கையை மாந்தரால் வெல்லவே முடியாது அதற்கு பணம் உதவவே உதவாது

வெனிசுலாவின் சாலையில் பணம் கொட்டிக் கிடக்கிறதாம் எவரும் எடுப்பாரின்றி விவசாயமில்லாத அந்த நாடு அழிந்து வருகிறதாம்.

எமது விவசாயிக்கு உதவித் தொகை வழங்கத் திட்டமிடும் அரசு, விவசாயி சொல்லும் இங்கு உரம் போடவில்லை எனில் விவசாயமே நடக்காது என்ற அளவுக்கு மண்வளம் மாறிவிட்டது என்ற பேச்சுக்கு எதை செய்யப்போகிறது

எம்.எஸ் சுவாமிநாதன் இதே நபர்தான் பசுமைப்புரட்சி என்றவர் இப்போது மொழிப்புரட்சியில் இந்தி கற்போம் என்று சொல்லி அறிக்கை கொடுத்திருக்கிறார்...

இந்தியா சுற்றுச் சூழலில் தப்புவது கடினம் ஏன் எனில் 130 கோடியை தாண்டிய மக்கள் நெருக்கம்... இன்னும் நெகிழியை எவரும் விடுவதாக இல்லை...பிளாஸ்டிக் பாட்டில் குடி நீரை படித்தவர்களும் பயன்படுத்த, ஆர்வோ வாட்டரை அனைவரும் கேன்களில் எடுத்துக் கொண்டிருக்க...எல்லாம் பிழைப்பு வாதம், பொருளாதார மாயம் எதிர்கால தொலை நோக்கின்றி...வரும் தொலவில் வரும் தலைமுறைகள் வெப்பக்காட்டில் கருகி சாவதை மானசீகமாக பார்க்க முடிகிறது

மறுபடியும் பூக்கும் வரை\
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment