Sunday, June 9, 2019

TRANSLATY PRO40 மொழிகளை மொழிபெயர்க்கும் கருவி

புதுடில்லி : உலகின் 40 மொழிகளை மிக விரைவாக மொழிபெயர்க்கும் திறன் கொண்ட புதிய கருவி ஒன்று சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது. Translaty pro எனப்படும் இந்த கருவி, மொழி தெரியாமல் வெளிநாடுகளுக்கு செல்வோருக்கு பெரிதும் உதவுகிறது.

ஆங்கிலம், இந்தி, ஜெர்மன், பிரெஞ்சு, சீன மொழி உள்ளிட்ட 40 மொழிகளை சிரமமின்றி இதில் மொழிபெயர்க்க முடியும். இந்த புதிய கருவி தற்போது ஆன்லைனில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்தியர்களிடையே இந்த கருவி மிக வேகமாக பிரபலமாகி வருகிறது.
எப்படி பயன்படுத்துவது :
இந்த கருவியில் நமது கலந்துரையாடலுக்கு தேவையான 2 மொழிகளை மட்டும் தேர்வு செய்தால் போதும். நாம் பேசும் மொழியை பதிவு செய்து கொண்டு, எதிரில் இருப்பவருக்கு தேவையான மொழியிலும், அவர்கள் பேசுவதை நமக்கு தேவையான மொழியிலும் மாற்றி தந்து விடும்.
இதில் கொடுக்கப்பட்டுள்ள பட்டன்களை பயன்படுத்தி பேச்சுக்களை பதிவு செய்யலாம். Translaty pro கருவி விரைவில் செயலியாகவும் கொண்டு வரப்பட உள்ளது.

எதற்கெல்லாம் பயன்படுகிறது :
* தொழில்நுட்ப பத்திரிகைகளுக்கு சிறந்த முறையில் மொழி பெயர்க்க இது பயன்படுகிறது.
* உலக அளவில் வர்த்தகம் செய்வோருக்கு பங்குதாரர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்ள சிறந்த சாதனமாக பயன்படுகிறது.
* பல பகுதிகளுக்கும் பயணம் செய்ய விரும்புவோர் தடையின்றி பிறரை தொடர்பு கொள்ள இது பயன்படுகிறது.
சிறப்பம்சங்கள் :
* உடனடி மொழிபெயர்ப்பு. 1.5 நொடி அல்லது அதற்கும் குறைவான நேரத்தில் மொழி பெயர்ப்பு.
* 40 மொழிகளில் தொடர்பு கொள்ள முடியும்.

* 97 சதவீதம் மிக துல்லியமான மொழி பெயர்ப்பு.
* ஒரே சமயத்தில் இரு மொழி மொழிபெயர்ப்பு.
* எழுத்து வடிவிலும் மொழி பெயர்ப்பு
* எளிதாக பயன்படுத்தலாம்.
* அதிக சத்தமாக சூழலிலும் தேவையற்ற சத்தங்களை தவிர்த்து நமது பேச்சுக்களை மட்டுமே பதிவிடக் கூடியது.
* ஒருமுறை சார்ஜ் ஏற்றினால் 4 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.

எதற்கெல்லாம் பயன்படுகிறது :
* தொழில்நுட்ப பத்திரிகைகளுக்கு சிறந்த முறையில் மொழி பெயர்க்க இது பயன்படுகிறது.
* உலக அளவில் வர்த்தகம் செய்வோருக்கு பங்குதாரர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்ள சிறந்த சாதனமாக பயன்படுகிறது.
* பல பகுதிகளுக்கும் பயணம் செய்ய விரும்புவோர் தடையின்றி பிறரை தொடர்பு கொள்ள இது பயன்படுகிறது.
சிறப்பம்சங்கள் :
* உடனடி மொழிபெயர்ப்பு. 1.5 நொடி அல்லது அதற்கும் குறைவான நேரத்தில் மொழி பெயர்ப்பு.
* 40 மொழிகளில் தொடர்பு கொள்ள முடியும்.ஆங்கிலம், இந்தி, ஜெர்மன், பிரெஞ்சு, சீன மொழி உள்ளிட்ட 40 மொழிகளை சிரமமின்றி இதில் மொழிபெயர்க்க முடியும். இந்த புதிய கருவி தற்போது ஆன்லைனில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்தியர்களிடையே இந்த கருவி மிக வேகமாக பிரபலமாகி வருகிறது.
எப்படி பயன்படுத்துவது :
இந்த கருவியில் நமது கலந்துரையாடலுக்கு தேவையான 2 மொழிகளை மட்டும் தேர்வு செய்தால் போதும். நாம் பேசும் மொழியை பதிவு செய்து கொண்டு, எதிரில் இருப்பவருக்கு தேவையான மொழியிலும், அவர்கள் பேசுவதை நமக்கு தேவையான மொழியிலும் மாற்றி தந்து விடும்.
இதில் கொடுக்கப்பட்டுள்ள பட்டன்களை பயன்படுத்தி பேச்சுக்களை பதிவு செய்யலாம். Translaty pro கருவி விரைவில் செயலியாகவும் கொண்டு வரப்பட உள்ளது.

thanks: dinamalar -9 6 2019

No comments:

Post a Comment