Thursday, April 27, 2023

தமிழ்ப் பற்றாளர் விருது: மூவேந்திர பாண்டியன் அவர்களுக்கு: கவிஞர் தணிகை

 தமிழ்ப் பற்றாளர் விருது: மூவேந்திர பாண்டியன் அவர்களுக்கு: கவிஞர் தணிகை



அகில இந்திய காந்திய இயக்கம் என்ற நாமக்கல் சார்ந்த சேவைப் பணியாற்றும் அமைப்பின் கீழ் திரு. செந்தில்முருகன் (துத்தி குளம்) அவ்வப்போது தாதியரை, ஆட்டோ ஓட்டுனர்களை இப்படி நற்சேவையாளர்களை எல்லாம் ஊக்கப் படுத்தி ஏதாவது செய்து கொண்டே இருக்கும் சமூக ஆர்வலர்.


இவர் பெண் எடுத்திருக்கும் ஊர் எமது ஊர், எனது நெருங்கிய நண்பர் குவெய்ட் செந்தில்குமாரின் கல்லூரி காலத் தோழர். எனவே இவர் என்னுடன் பழக்கம். சில ஆண்டுகளாக எனது நண்பர்.யார் என்ன சொல்கிறார் என்பதைப் பற்றி துளியும் கவலைப் படாத சமூக சிந்தனையாளர் இயல்பில் பொறியியல் பட்டயம் பெற்ற பொறியாளர்.


புத்தக படைப்பாளர் என்ற முறையில் குறளுக்கு தெளிவுரை எழுதி காலத்தின் பக்கங்களில் இடம் பெற்று விட்ட நமது நண்பர் மூவேந்திர பாண்டியன் அவர்களுக்கு "தமிழ்ப் பற்றாளர்" என்ற விருதளிக்கும் நிகழ்வு2023.4.27 இன்று வியாழன் வீரக்கல் புதூர் ஊராட்சி புதுசாம்பள்ளியில் உள்ள சுப்ரமண்ய சாமி திருக்கோவில் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் மிகவும் சிறப்பாக நடந்தேறியது.


ஒரு தமிழ் நிகழ்வுக்கு அதிலும் பகற்பொழுதில் இவ்வளவு பேர் குழுமியது மகிழத் தக்கதாக இருந்தது.

நமக்குத் தான் ஒரு நல்ல நிகழ்வுடன் இணைவதென்றால் ஆயிரத்தெட்டு தடங்கல் வருமே...எப்படி கலந்து கொள்வது எப்படியும் கலந்து கொள்வது என ஆர்வத்தில் இருந்தேன்...


அந்த நேரத்தில் குடி நீர் வர வேண்டிய நாள் பிடித்து வைக்க வேண்டும்

இல்லத்தரசி உடல் நலக் குறைவாக இருக்கும் தாயைப் பார்க்க சென்றிருந்தார்

வாழ்வோட்டத்தின் மிக முக்கியமான கட்டத்தில் ஒரு தலைமை இன்றிலிருந்து எனை பணிச்சேவைக்கு அழைத்து விடுவாரோ என்ற பதற்றம்...


இப்படி எல்லாவற்றையும் மீறி அப்பாடா:  விருது ஏற்பாளர் மூவேந்திர பாண்டியன், மற்றும் சமூக ஆர்வலர் செந்தில் முருகனுக்காகவும் மணி காலை 11.00க்குள் போய் சேர்ந்து விட்டேன்.


அங்கே தாய்மார்கள், ஊராட்சியின் மக்கள் பிரதிநிதிகள்,தமிழ் சான்றோர், நடை பயணம் வழி மதுவிலக்கு வேண்டும் காந்திய போராட்டக்காரர், அவேர்னஸ் அப்பா, இவர் பிச்சை எடுத்தாவது சேவை செய் என்கிறார், மதுவை, புகையை மறுத்து அதற்காகாவும் எல்லாவற்றுக்காகவும் சேவை செய்கிறார் அவர் பனியன் வாசகம் இன்சூரன்ஸ் பற்றி ,மது விலக்கு பற்றி இன்ன பிற பற்றி  எல்லாம் எடுத்துச் சொல்கிறது.  இப்படி பலவாறான நண்பர்கள் கூட்டம். நீண்ட நாட்களுக்கும் பின் எனைச் சார்ந்த நண்பர்கள் வட்டத்தில் நான் இருப்பதாக உணர்ந்தேன்.


என்னையும் பாராட்டி பேசச் சொன்னார்கள்: நல்ல தலைமையிருந்தால் ஆட்சி வழிமுறைகள் நன்றாகவே இருக்கும் என்ற சான்றாக குடி நீர் விநியோகம் சீராகி இருப்பதையும், சொத்து வரி விகிதத்தில் வசூலில் ஒரு நியாயமான போக்கும், புதுசாம்பள்ளியில் தயாராகி வருகிற‌ எரிவாயு தகன மேடை பற்றி எல்லாம் குறிப்பிட்டேன். 

மேலும் குடி நீர் விநியோகத்தில் குளோரின் கலப்பு விகிதத்தை பொருத்தமாக‌ முறைப்படி கலந்து கொடுப்பதை சற்று கவனித்து நெறிப்படுத்துங்கள் என்றும் கோரிக்கை வைத்தேன் மக்கள் சார்பாக.

நீண்ட நாள் ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழ்வது வேண்டுமா? குறுகிய காலத்தில் சாதனை நிகழ்த்தி சென்று சேர்வதென்பது வேண்டுமா என்பதை மனிதர் தம் இலக்காக‌ நிர்ணயிப்பது என்பது பற்றிக் குறிப்பிட்டேன் சான்றுகளுடன்

குறைபாடுகள் விமர்சனங்கள் என்ற போக்கை விட்டு நல்லவற்றை பாராட்டவே வேண்டும் என சிலரின் செய்கைகளைக் குறிப்பிட்டேன். பசி தீர்த்தல், ஜீவ காருண்யம், இன்ன பிற... உள்ளூர் பிரதிநிதிகள் மாணிக்க சேகர், எஸ்.என். ராஜன்,இப்படி பலரையும் இந்த விழா ஒருங்கிணைத்திருந்தது. தங்களால் ஆன முயற்சிகளுடன் மக்களுக்காக சேவை செய்யும் நபர்களும் வந்திருந்தனர்.


மேதின மக்கள் கிராம சபைக் கூட்டம் எப்படி இருக்குமோ ஆனால் இந்த பாராட்டு விழாவில் நல்லதைக் கொண்டாடும் பாங்கு எல்லோரிடமும் இருந்ததைக் காணமுடிந்தது. எல்லோரின் முகத்திலும் ஒர் இனிமை கலந்த மகிழ்வு இருந்தது


எனவே அனைவரும் பொன்னாடை போர்த்தி, அவரைக் கௌரவப் படுத்தி பாராட்டு விருதை அளிக்க, நானும் கலந்து கொண்டு எனது வார்த்தைகள் மூலம் பெருமைப் படுத்தினேன். இருக்கும் போதே நல்லதைக் கொண்டாட தமிழ் சமூகம் கற்றுக் கொள்ள வேண்டியதைக் குறிப்பிட்டேன்.


தமிழ்ப் பற்றாளர் என்பதையும் விட உயரிய விருதுக்கும் இவர் பொருத்தமானவர்தாம். எனவே இவரை நான் தமிழ்க் குயில் என்றே குறிப்பிட்டிருக்கிறேன். மேலும் நல்ல தமிழ்ப் பெயர் வைக்கும் குழந்தைகளுக்கு இவர் தமது சொந்த ஊதியத்தில் இருந்து ரூபாய் ஆயிரம் பரிசளிக்கிறார் என்பதை அனைவரும் குறிப்பிட்டனர் இந்த அலை நாடெங்கும் ஏன் உலகெங்கும் பரவி இவரது ஊதியத்தை எல்லாம் காலி செய்யுமளவு வளர்ந்தாலும் வளர்ந்து விடும் அப்போது இவர் என்ன செய்வார் என மனதுக்குள்ளேயே எண்ணி மகிழ்ந்து கொண்டிருந்தேன்.உள்ளூர சிரிப்பு எனது எண்ண அலையில் தவிர்க்க முடியாமல்... ஏன் என்றால் இந்தியாதான் இப்போது உலகின் நெம்பர் ஒன் மக்கள் தொகை நாடாக மாறி விட்டதே...


நன்றி கலந்த வணக்கங்கள்

ஒரு தமிழ் விழாவில் நானும் கலந்து கொள்ளச் செய்தமைக்கு: நன்றி: மூவேந்திர பாண்டியன் மற்றும் செந்தில் முருகன் மற்றும் அனைவர்க்கும்.



மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.


Thursday, April 13, 2023

தமிழும் அமுதும்: 60 தமிழ் ஆண்டுகளின் உண்மைப் பெயர்கள் ஒரு அறிமுகம்: கவிஞர் தணிகை 60 Tamil years name and its meaning

 




1.பிரபாவ:               நற்றோன்றல் 
2.விபவ:                 உயர் தோன்றல்
3.சுக்ல :                  வெள்ளொளி
4.பிரமோதூத:      பேருவகை
5.ப்ரஜோற்பத்தி:   மக்கட் செல்வம்
6.ஆங்கீரச :           அயல் முனி
7. ஸ்ரிமுக்ஹா  :திருமுகம்
8. பாவ     :             தோற்றம்
9. யுவ      :             இளமை
10.தாது     :            மாழை*
11.ஈஸ்வரம் :      ஈச்சுரம்
12.வேஹூ தான்ய : கூல வளம்
13.ப்ரமாதி:        முன்மை
14.விக்கிரம:     நேர்நிரல்
15.விஷு:          விளைபயன்
16.சித்ரபானு:   ஓவியக் கதிர்
17.சுபானு:         நற்கதிர்
18.தாரண :       தாங்கெழில்
19.பார்த்திப:    நிலவரையன்
20.விய:          விரிமாண்பு
21.சர்வஜித்:   முற்றறிவு(ஞானம்)
22. சர்வதாரி: முழு நிறைவு
23.விரோதி  : தீர்பகை
24.விக்ருதி:   வளமாற்றம்
25.கர  :            செய் நேர்த்தி
26.நந்தன:       நற்குழவி
27.விஜய :      உயர் வாகை
28.ஜெய  :      வாகை
29. மன்மத:   காதன்மை
30.துன்முகி: வெண்முகம்
31.ஹேவிளம்பி: பொற்றடை
32.விளம்பி:       அட்டி
33.விஹாரி:  எழில் மாறல்
34.சார்வரி:     வீறியெழில்
35. பலவா:    கீழறை
36.சுபக்ரித்:    நற்செய்கை
37.சொபக்ரித்: மங்களம்                         திருவள்ளுவர் ஆண்டு: 2054- 2055
38.குரோதி:   பகைக் கேடு
39.விஸ்வாசுவ: உலக நிறைவு
40.பரபாவ   :  அருட் தோற்றம்
41.பிலவங்க : நச்சுப் பிழை
42.கீழாக :     பிணைவிரகு
43.சாம்ய :    அழகு
44.சாதாரண : பொதுநிலை
45.விரோதிக்கிரித்து: இகல்வீறு
46.பரிதாபி:     கழிவிரக்கம்
47.பிரமாதிச : நற்றலைமை
48. ஆனந்த  : பெருமகிழ்வு
49.இராச்சஷ : பெருமரம்
50.நல     :      தாமரை
51. பிங்கள‌ :  பொன்மை
52.காலயுக்தி: கருமை வீச்சு
53.சித்தார்த்தி: முன்னிய முடிதல்
54.ராவ்திரி  : அழலி
55.துன்மதி :  கொடுமதி
56. துந்துபி :   பேரிகை
57.ருத்ரோத்காரி: ஒடுங்கி
58. ரக்டஷி:   செம்மை
59.குரோதன: எதிரேற்றம்
60.அஷய :   வளங்கலன்

மாழை: அழகு: அறிவின்மை,உலோகக் கட்டி, ஓலைத் திரட்சி,புளிமா, பொன், மாமரம், இளமை, பேதமை,மான்,மாவடு, மாதர் கூட்டம்

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை
thanks:Google search engine
            Sakalam.org

அட பாகிஸ்தானிலிருந்து ஒரு அற்புத செய்தி: கவிஞர் தணிகை

 நன்றி: தினத் தந்தி

ஏப்ரல் 10




இந்த பள்ளத்தாக்கின் மலைகளின் அழகைக் காண உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் இங்கு வருகிறார்கள். இந்த பள்ளத்தாக்கில் 'ஹன்ஜா' சமூகத்தினர் வாழ்கின்றனர். எப்போதும் இளமையாகவும் அழகாகவும் இருக்க வேண்டும் என்று எல்லோரும் கனவு காண்கிறார்கள். அதற்கு நீங்கள் 'ஹன்சா பள்ளத்தாக்கில்' பிறந்திருந்தால் உங்கள் கனவும் நனவாகும். ஆனால் அது பாகிஸ்தானில் உள்ளது.
பாகிஸ்தானின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஹன்சா பள்ளத்தாக்கும் இடம்பெற்று உள்ளது. பலுசிஸ்தானின் ஹன்சா-நகர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பள்ளத்தாக்கு. "ஹன்ஜா இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான கட்டுப்பாட்டுக் கோடு வழியாக செல்கிறது. இந்த கிராமம் இளைஞர்களின் சோலை என்றும் அழைக்கப்படுகிறது. புவியியல் ரீதியாக, ஹன்சா பள்ளத்தாக்கு மூன்று பகுதிகளை உள்ளடக்கியது: மேல் ஹன்சா (கோஜல்), மத்திய ஹன்சா மற்றும் கீழ் ஹன்சா (ஷினாகி).

இந்த பள்ளத்தாக்கின் மலைகளின் அழகைக் காண உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் இங்கு வருகிறார்கள். இந்த பள்ளத்தாக்கில் 'ஹன்ஜா' சமூகத்தினர் வாழ்கின்றனர். சிலர் இந்த மக்களை ஐரோப்பிய இனத்துடன் தொடர்புபடுத்துகிறார்கள்.

ஹன்சா பள்ளத்தாக்கு மக்கள் மற்ற மக்களை விட மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் மிகவும் வலிமையானவர்கள். ஹன்சா சமூகத்தின் மக்கள் 150 ஆண்டுகள் வரை வாழ்கிறார்கள் என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். இதுமட்டுமின்றி இந்த சமூகத்தின் பெண்கள் 90 வயதிலும் தாயாக முடியும், 80 வயது வரை இளமையாக காட்சியளிக்கிறார்கள்.

உடல் ரீதியாக இந்த சமூக மக்கள் மிகவும் வலிமையானவர்கள். இவர்கள் மருத்துவமனைக்கு செல்வதில்லை. இங்குள்ள மக்களின் சராசரி ஆயுட்காலம் 120 ஆண்டுகள். இந்த சமூகத்தின் பெண்களும் உலகின் மிக அழகான பெண்களில்இடம்பெற்று உள்ளார்கள். இச்சமூகப் பெண்களின் வயது சுமார் 60-70 ஆக இருக்கும் போது கூட அவர்களின் வயது 20-25 ஆக மதிப்பீடில் இருக்கும்.இந்தப் பெண்கள் அழகாக இருப்பதற்குக் காரணம், அவர்கள் இமயமலைப் பனிப்பாறையிலிருந்து உருகிய தண்ணீரைக் குடித்து, அதில் குளிப்பதுதான். இந்த நீரில் மினரல்ஸ் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம். "ஹுன்சா மக்கள் தேன் அதிகம் சாப்பிடுகிறார்கள்." ஹன்சா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 'புருஷோ' என்றும் அழைக்கப்படுகிறார்கள். இங்குள்ள மக்களின் முக்கிய மொழி 'புருஷாஸ்கி'. பாகிஸ்தானின் மற்ற சமூகங்களைக் காட்டிலும் ஹன்சா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் படித்தவர்களாகக் கருதப்படுகிறார்கள். அவர்களின் எண்ணிக்கை ஹன்சா பள்ளத்தாக்கில் 87 ஆயிரத்திற்கும் அதிகமாகும். இந்த சமுதாய மக்கள் இஸ்லாம் மதத்தை பின்பற்றுகின்றனர். இவர்கள் அதிகாலை 4 மணிக்கு எழுவார்கள். இது தவிர, இங்குள்ள மக்கள் சைக்கிள் மற்றும் வாகனங்களைப் பயன்படுத்துவதில்லை, பெரும்பாலும் கால்நடையாகவே நடந்து செல்கின்றனர்.தினமும் 15 முதல் 20 கிலோமீட்டர் வரை நடைபயிற்சி மற்றும் ஜாகிங் செய்வது அவரது வாழ்க்கைமுறையில் அடங்கும்.அவர்கள் குறைவாக சாப்பிடுகிறார்கள், அதிகமாக நடக்கிறார்கள். இங்குள்ள மக்கள் இறைச்சியையும் சாப்பிடுகிறார்கள், ஆனால் மிகக் குறைந்த அளவில், அவர்கள் சிறப்பு சந்தர்ப்பங்களில் மட்டுமே இறைச்சியை உட்கொள்கிறார்கள்." இந்த சமூகத்தைப் பற்றி பல புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன. இந்த புத்தகங்களில் 'தி ஹெல்தி ஹன்சாஸ் (The Healthy Hunzaz) மற்றும்தில் லூஸ்ட் கிங்டம் ஆப்தி ஹிமாலயாஸ் (The Lost Kingdom of the Himalayas) போன்ற முக்கிய புத்தகங்கள் அடங்கும். இந்நூல்களில் இச்சமூகத்தின் வாழ்க்கை முறை சித்தரிக்கப்பட்டுள்ளது.

மறுபடியும் பூக்கும் வரை

  கவிஞர் தணிகை

Wednesday, April 12, 2023

மூவேந்திர பாண்டியனின் சிகரம் தொடுவதற்கே மற்றும் வர்தா சிவப்பு ரோஜா பேசுகிறேன்: கவிஞர் தணிகை

 மூவேந்திர பாண்டியனின் சிகரம் தொடுவதற்கே மற்றும் வர்தா சிவப்பு ரோஜா பேசுகிறேன்: கவிஞர் தணிகை



தமிழ்க் குயில் மூவேந்திர பாண்டியனின் இரண்டு கவிதை நூல்களையும் படித்தேன். 1. சிகரம் தொடுவதற்கே  150 பக்கங்கள்.2. வர்தா சிவப்பு ரோஜா பேசுகிறேன்  அட்டை உட்பட 292 பக்கங்கள். தனித்தன்மை,பெரிய எழுத்துகள் எவரும் சிரமமின்றி படிக்க சிறப்பான பதிப்பு. நல்ல தயாரிப்பு


தமிழையும் இவரையும் பிரிக்க முடியாத மதுரை தமிழ் சங்கத்துக்காரர். தமிழ் நெஞ்சங்கள்,தமிழ் உறவுகள், தமிழ் மண்... என்றே அதிர்வலைகள். கீழடி மேனிலைப் பள்ளி வேறு பக்க துணை...மண் வாசம் நன்றாக இருக்கிறது.


இவர் தம் கவிதைகளில் கவிச் செறிவை விட சமுதாயத்தை உயர்த்தும் நோக்கம் சிகரமாகி இலட்சியத்தை அடையாளம் காட்டுகிறது. 

 

சாக்ரடீஸ் தேடியது போல என் தேடலிலும் ஒரு உண்மையான மனிதரைக் கண்டறிந்துள்ளேன்,உண்மையிலேயே வீரியமான நல்ல விதை நமது மண்ணுக்கு கிடைத்திருப்பது நல் வாய்ப்பே.


இவரது வரிகளில், வார்த்தைகளில் வாழ்வின் உணர்தல். அதாவது உழைப்பு + அறிவு‍= மேன்மை ‍(கழித்தல் வறுமை)நன்றாகவே பலப்படுகிறது. 


கலாமுக்காவது சகோதரியின் வளையல்கள் கிடைத்தன மேற்படிப்பு தொடர இவருக்கோ அதுவுமின்றி எதுவுமின்றி பல்வேறுபட்ட சொந்த முனைப்பில் கடின உழைப்பில் எல்லாப் பணிகளையும் இளமையிலேயே படிப்பதற்காக செய்து அஞ்சல் வழி மூலம் கல்லூரிப் படிப்பை முடித்து தமிழக தேர்வாணைய பிரிவு நான்கின் கீழ் தேர்வு எழுதி பணி வாய்ப்பு பெற்று நிலை உயர்த்திக் கொண்டுள்ளார். வார்த்தையில் சிக்கா வாழ்வின் பயணம்.

 நிறைய சிட்டாள் வேலையெல்லாம் செய்து கல்வி தேவதையின் கரம் பிடித்திருக்கிறார்.இப்படி படித்த சுசீல் குமார் ஷிண்டே பற்றிய நிழலற்ற பயணம் என் நண்பர் சுபாஷ் ஹைதராபாத் செய்த நூல் நினைவு இவரது வாழ்விலும் ஆடியது. தாயில்லாமல் ஆதரவில்லாமல் மிக கடினமான காலத்தை கடந்துள்ளார். இனியெலாம் சுகமே...நிறைய அனுபவக் கல்வி உடையவராக இருக்கிறார்.

புகைப்படத்தில் கை கட்டிய அடக்கமான கம்பீரம் கை காட்டுவதோ இமாலயம்.


என்னை விட இவரிடம் உழைப்பும், பொறுமையும் அதிகம் இருப்பதாகவே நான் கருதுகிறேன். எனக்கு எப்போதுமே குழந்தைகளிடம் இருப்பது போன்ற சிறுபிள்ளைத் தனமான புத்தக‌ ஆர்வம் உண்டு எதையுமே உடனே படித்து விட வேண்டுமென... இவரை தொந்தரவு செய்து இவருடைய வேலை அழுத்தத்துக்கிடையே இந்த இரு நூல்களையும் வாங்கிப் படித்து விட்டே இந்தப் பதிவை செய்துள்ளேன்.


சரி இனி சுருக்கமாக புத்தகங்களை பேச வைப்போம்:


1. சிகரங்கள் தொடுவதற்கே:

புத்தகங்க‌ளை தமது செல்வங்கள் என்று குறிப்பிடுகிறார்...சான்றோர் அனைவரும் அப்படியே...

அமைச்சர் வருகையால் கட்டிய பேனர்கள் பின் வீட்டுக் கூரையான ஏழ்மை பறை சாற்றுகிறார்


உழைப்பாளி: எப்போதாவது நாங்கள் உழைக்காதிருந்தால் அப்போது மண்ணோடு மண்ணாக கலந்திருப்போம்


உங்க கல்யாணத்தப்போ நான் எங்கே அப்பா?

 என்னும் மகனுடைய கேள்விக்கு நான் 60 ஆம் திருமண நிகழ்வில் அவனை மட்டுமே முன்னிறுத்தி மேச்சேரி காளி கோவிலில்  எளிய ஒரு நிகழ்வை நடத்திக் காட்டினேன் என்பது எனக்கு நினைவுக்கு வர...குழந்தையாக ஒரு கவியூட்டல் 


சிம்பொனி...சிட்டுக் குருவியின் சிணுங்கும் கவிதை

இப்படி திறந்த வெளி வீடு, தலைப்புச் செய்தி, முரண்பாடு, சிக்கல் , தகுதி, ஆ(ண்) தவனே...ஆண்டவனே என்று எனக்குத் தோன்ற‌


அவள் கூட்டிச் சென்றதால் குப்பை என்னுள்...

இப்படி இளமையில்  எழுதியதை 2013ல் வெளியிட்ட நூல் சிகரம் தொடுவதற்கே...


அவரே 2017ல் வர்தா சிவப்பு ரோஜாவாக பேசுகையில்:



தொழுதோர் தொழாதோர் அனைவர்க்கும் கருணை செய் எனும் போது : எம் இறை எம் மதம் என்ப உயிர்த்திரள் அம்மதம் என்றருள்வாய் அருட்பெருஞ்சோதி என்னும் வள்ளலாரை நினைவு செய்கிறார். வாக்களித்தார்க்கும் வாக்களிக்காதார்க்கும் ஆட்சி பொது என்பது போல‌


சிகரம் தொட்ட ஹனுமந்தப்பா சியாச்சின் பனி மலை பள்ளதாக்கு பனிப் படுகையின் அடியில் 6 நாள் உயிர் மூச்சுடன் இருந்த நிகழ்வை அஞ்சலியாக தந்துள்ளார்.


பூதவுடல் போகும் போது அது புகழ் உடம்பாய் இருக்கும் உறுதி இருக்க வேண்டும் என்கிறார். நல்லோர்க்கு எல்லாம் அது வழிகாட்டும்


பூங்கற்கள்,மழை வரம், குளத்தை துர்த்து கட்டிய கோயிலில் முன் மழை வேண்டி பக்தர்கள் தொழுகை என்கிறார் .

மின் தடை : நிலவுக்கு அமாவாசை யன்று என்று சொல்லாமல் விட்டாரே என்பதற்கும் நிலவுக்கும் ஒரு நாள் வேலை நிறுத்தம் என ஈடு கட்டி விடுகிறார்.


அறிவுத் திருக்கோயில் : நூலகம் என்கிறார்

நகர்மயமாதல் கிராமத்து விதவைக் கூவல் குறிப்பிடத்தக்கதாய் இருக்கிறது

ஆசையே அழிவுக்கு காரணம் என்ற புத்தர் சிலை வாங்க ஆசை என்கிறார்

மாந்தர் சவ நிலையை அடைவதற்குள்ளாக  அதற்கு முன்பு சம நிலை அடைய வேண்டும் என்கிறார்

வார விடுமுறை இல்லாத நாட்காட்டி வேண்டும் அம்மாவுக்கு என்பதுடன் பெண்/மனைவி மார்களுக்கு என்றும் சேர்த்துக் கொள்ளலாம் என நினைக்கிறேன்


எம்.ஜி.ஆர் தனி மனிதராக நல்லவர்தாமே என்று இவர் சொல்லியபடியே நானும் சொல்ல ஒரு இளைஞரின் நட்பை இழக்க வேண்டியதாயிற்று...ஆனாலும் எல்லாம் நினைவுள்


நகைச்சுவை : நான் சிரித்து விட்டேன். நன்றாகவே இருக்கிறது  கவிதையின்  நாயகனாக மட்டுமே என்னை இவர்களுக்குத் தெரியும் எனக்கு மட்டுமே தெரியும் நான் கவிதாவின் நாயகன் என்பது...


பாவையின் கோவைக்கனி வயது வந்தோர்க்கு மட்டும் என்று சொல்லி விடலாம்


இரவு 10 மணி வரை கூட  பூ விற்பவர் காத்திருப்பார்களா சார், நான் மனைவியை சொல்லப் போகிறீர் என நினைத்தால் நீங்கள் பூக்காரி என்கிறீர்... சொல்ல முடியாது நகர் புறம் சார்ந்து இருக்கலாம்...


வாகை சூடலாம் ...அபாரம். சூப்பர் தீர்க்க தரிசனம்... நல்லவர்க்கு அறிவுரை...


இப்படி இரண்டு நூல்களுமே குறிக்கோள் பற்றி நிறைவுடன் இருக்கின்றன‌


படிக்கும் வாய்ப்பளித்து எங்கள் வீட்டு நூலகத்தில் இடம் பெறச் செய்தமைக்கு நன்றி. உண்மைதான் எனது மகனுக்கும் உண்மையிலேயே நான் சேர்த்து வைத்த செல்வங்கள் இந்த நூல்கள் தாம்.

 வணக்கம்.



மறுபடியும் பூக்கும் வரை

நன்றி.

கவிஞர் தணிகை

Writer can achieve more and many mile stones in his life time;

Best wishes and hearty greetings to the responsible person of our society.









Thursday, April 6, 2023

கோவைப் பெண் ஷ்ருதி பாபுவின் சக்கர நாற்காலி கழிவறை சாதனை: கவிஞர் தணிகை

 நன்றி:

பி பி சி. தமிழ்

05/04/2023

சக்கர நாற்காலி கழிவறை: தமிழ்நாட்டு பெண் உருவாக்கிய மாடலின் சிறப்பும், கிடைத்த முதலீடும்

ஷ்ருதிபாபு

பட மூலாதாரம்,SHRUTI BABU

  • எழுதியவர்,திவ்யா ஜெயராஜ்
  • பதவி,பிபிசி தமிழ்

”மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், நோயுற்றவர்கள் உட்பட இந்தியாவில் சக்கர நாற்காலி தேவைப்படுவோரின் எண்ணிக்கை பெருமளவில் இருக்கிறது. இவர்கள் அனைவரும், தாங்கள் கழிவறை பயன்படுத்துவதற்கும், இயற்கை உபாதைகளை கழித்த பின்பு தங்களை சுத்தப்படுத்தி கொள்வதற்கும் அடுத்தவர்களின் உதவியை நம்பியே இருக்கின்றனர்.

ஆனால் இனி அவர்கள் அடுத்தவர்களை நம்பி இருக்க தேவையில்லை, தாங்களே சுயமாகவே இயங்கிகொள்ள நான் உருவாக்கியுள்ள பிரத்யேக சக்கர நாற்காலி அவர்களுக்கு உதவியாக இருக்கும்” என்கிறார் ஷ்ருதி பாபு.

கோயம்புத்தூரைச் சேர்ந்த ஒரு நடுத்தர வர்க்க பெண்ணான ஷ்ருதி, 2016ஆம் ஆண்டு கோவை அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்தில் பயோமெடிக்கல் இன்ஸ்ட்ருமெண்டேஷன் பொறியியல் (Biomedical Instrumentation engineering) படிப்பை முடித்தார். படிப்பை முடித்த பிறகு தொழில் முனைவோராக விளங்க வேண்டும் என்ற அவரின் கனவு இன்று நனவாகியிருக்கிறது.

கழிப்பறை வசதியுடன் சக்கர நாற்காலி

மருத்துவம், மாற்றுத்திறனாளிகள்

“படிப்பை முடித்த பிறகு உடனடியாக எந்த வாய்ப்பும் அமையவில்லை. ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வந்தேன். ஆனாலும் மனதிற்குள் தொழில்முனைவோர் ஆகவேண்டும் என்ற கனவு மட்டும் அதிகரித்துக்கொண்டே இருந்தது. எனவே வேலை முடிந்து வந்தவுடன் அதற்கான வாய்ப்புகள் குறித்து ஆய்வு செய்துவந்தேன். அப்போதுதான் மத்திய அரசின் BIRAC ஏஜென்ஸியுடைய ஃபெல்லோஷிப் (fellowship) கிடைத்தது. எனது லட்சியத்தை அடைவதற்கு இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திகொள்ள முடிவு செய்தேன்” என்று பிபிசியிடம் கூறினார் ஷ்ருதிபாபு.அவர் தொடர்ந்து பேசுகையில், “ இந்த ஃபெல்லோஷிப்புடைய கரு “முதியவர்கள்” என தெரியவந்தது. அதாவது முதியவர்களுக்கு உதவி செய்யக்கூடிய வகையில் ஏதேனும் ஒரு தயாரிப்பை நாம் உருவாக்க வேண்டும்.

எனவே, முதியவர்களின் தேவை பற்றி அறிந்துக்கொள்ள மருத்துவமனை, முதியோர் இல்லங்கள் போன்ற இடங்களுக்கு சென்று ஆராய்ந்து வந்தேன். அப்படி ஒருநாள் மருத்துவமனையில் நான் பார்த்த காட்சி ஒன்றுதான் ’சஹாயதா’ என்னும் பிரத்யேக சக்கர நாற்காலி உருவாவதற்கு காரணமாக அமைந்தது.

மருத்துவமனையில் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டிருந்த முதியவர் ஒருவர், இயற்கை உபாதைகளை கழிப்பதற்கு செவிலியரிடம் ’பெட்பேன்’ (Bed pan) கேட்டார். ஆனால் அப்போது பெட்பேன் எதுவும் இல்லை என்று அவர் கூற, முதியவரின் இரண்டு மகள்களும் அவரை சக்கர நாற்காலியில் அமர வைத்து கழிப்பறைக்கு அழைத்து செல்ல முயன்றனர். அந்த இரண்டு மகள்களும் தங்களது தந்தையை தூக்கி சக்கர நாற்காலியில் அமர வைப்பதற்குள் மிகுந்த சிரமத்தை சந்தித்தனர்.

மருத்துவம், மாற்றுத்திறனாளிகள்
படக்குறிப்பு,

ஷ்ருதி பாபு

அதோடு தன்னுடைய பெண் பிள்ளைகள் தன்னை கழிப்பறைக்கு அழைத்து செல்லும் நிலை வந்துவிட்டதே என்று எண்ணி அவர் வேதனையடைந்தார். கழிவறைக்குள் சென்றதும் தன்னுடைய உடலை மறைத்துக் கொள்வதற்கு முயன்ற அவர் வெட்கத்தில் கூனி குறுகிப் போனார். இப்படியொரு நிலை வந்ததற்கு பதில் நான் இறந்து போயிருக்கலாம் என கண் கலங்கினார். இந்த சம்பவம் என்னை வெகுவாக பாதித்தது” என்று கூறுகிறார் ஷ்ருதி.

அவர் மேலும் கூறுகையில், "இது இவர் ஒருவருடைய பிரச்னையா அல்லது இவரை போல இருக்கும் அனைவரது பிரச்னையா என்பதை உறுதிப்படுத்திகொள்ள, மேலும் பல மருத்துவமனைகளுக்கும், காப்பகங்களும் சென்று ஆராய்ந்தேன். மும்பை, ஒடிசா, கேரளா போன்ற பிற மாநிலங்களுக்கும் பயணித்தேன். இறுதியில், சக்கர நாற்காலிகளை பயன்படுத்தும் அனைத்து தரப்பு மக்களும், இயற்கை உபாதைகளை கழிப்பதற்கு தங்களுடைய சுய மரியாதையை இழக்கும் அளவிற்கு பெரும் சங்கடங்களை தினசரி சந்தித்து வருகிறார்கள் என்பது எனக்கு தெளிவானது.

எனவே சந்தையில் கழிப்பறை வசதியுடன் கூடிய சக்கர நாற்காலியே இல்லையா என்று தேடத் துவங்கினேன். கழிப்பறை வசதிகளுடன் சக்கர நாற்காலிகள் இருந்தன! ஆனால் என்ன இல்லை என்று பார்த்தால், இயற்கை உபாதை கழித்தப் பிறகு பயன்படுத்துபவர்கள் சுயமாக சுத்தப்படுத்தி கொள்ளும் வசதி எதுவும் அவற்றில் இல்லை. எனவே கழிப்பறை வசதியுடன், சுயமாக சுத்தப்படுத்திகொள்ள கூடிய வகையில் நான் சக்கர நாற்காலியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டேன். அது வெற்றியும் பெற்றுவிட்டது” என்று விவரிக்கிறார் ஷ்ருதிபாபு.

சஹாயதா எப்படி செயல்படுகிறது

மருத்துவம், மாற்றுத்திறனாளிகள்

தன்னுடைய தயாரிப்பு எப்படி செயல்படுகிறது என்பது குறித்து அவர் கூறும்போது, ”சஹாயதா பார்ப்பதற்கு ஒரு சாதாரண சக்கர நாற்காலி போன்றுதான் தோற்றமளிக்கும். ஆனால் அது சக்கர நாற்காலியாக மட்டுமல்லாமல், கழிப்பறையாகவும் அதனுடன் உடலை சுத்தப்படுத்துவதற்கான தொழில்நுட்பத்துடனும் செயல்படும்” என்று கூறுகிறார்.

”நாற்காலியின் உட்காரும் இடத்திற்கு அடியில் இயற்கை உபாதைகளை கழிப்பதற்கு ஏதுவாக சில வடிவமைப்புகளை செய்துள்ளோம். மிக முக்கியமாக அதனுள்ளே சுயமாக சுத்தப்படுத்தி கொள்ளும் வகையில், சில தொழில்நுட்ப அமைப்புகளைப் பொருத்தியுள்ளோம். நாற்காலியின் மொத்த தொழில்நுட்பமும், பயன்படுத்துபவர்கள் எளிதாக இயக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இயற்கை உபாதைகளை கழித்த பின், உடலை சுத்தப்படுத்தி கொள்ளும் தொழில்நுட்பத்தை பேட்டரியில் இயங்கும் வகையில் வடிவமைத்துள்ளோம்.

இதனை பிடே தொழில்நுட்பம் (Bide Technology) என்று கூறுவோம். இது ஏற்கனவே நவீன கழிப்பறை வடிவமைப்புகளில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம்தான். ஆனால் உலகளவில் இந்த தொழில்நுட்பத்தை முதன்முறையாக சக்கர நாற்காலியில் பொருத்தி, வடிவமைத்துள்ளது நான்தான்.

சஹாயதா பயன்படுத்துபவர்கள் உடல் உபாதைகளை கழித்து, சுயமாகவே சுத்தம் செய்துகொண்ட பிறகு, கழிவுகளை எடுத்து அப்புறப்படுத்துவதற்கு மட்டுமே பிறரின் உதவி தேவை. இது ஒரு குறைந்தபட்ச உதவிதான்” என்று விவரிக்கிறார் ஷ்ருதிபாபு.

சோதனை முயற்சியில் கிடைத்த வெற்றி

“நாம் உருவாக்கிய தயாரிப்பு நன்றாகத்தான் இருக்கிறது என நாம் நினைத்து கொள்வோம். ஆனால் அதை பயன்படுத்துபவர்களின் கருத்துகளை கேட்கும்போதுதான் தயாரிப்பு உண்மையிலேயே பொருளுள்ள வகையில் உருவாகியிருக்கிறதா என்பது நமக்கு தெரியவரும்.

எனவே சஹாயதா உருவான பின்பு சோதனை செய்வதற்காக, பல மருத்துவமனைகளுக்கு சென்றேன். ஆனால் தனியார் மருத்துவ கல்லூரியான சென்னை தாகூர் மருத்துவ கல்லூரிதான் தங்களது நோயாளிகளிடம் சோதனை செய்து பார்ப்பதற்கு எங்களுக்கு அனுமதியளித்தது. அப்போது இதை பற்றி தெரிந்துகொள்வதற்கும், பயன்படுத்துவதற்கும் அங்கிருந்தவர்கள் மிகுந்த ஆர்வத்தை வெளிப்படுத்தினர்.

பயன்படுத்திப் பார்த்தவர்கள் வசதியாக இருப்பதாக கூறினர். இதில் என்ன ஆச்சரியம் என்றால், சோதனை முயற்சிகாக சென்ற இடத்திலேயே, சஹாயதாவை வாங்குவதற்கு 50 முன்பதிவுகள் கிடைத்தன. என்னுடைய தயாரிப்பின் வெற்றி இதுதான்” என்று மகிழ்கிறார் ஷ்ருதி பாபு.

”இதில் மற்றொரு நிகழ்வையும் நான் குறிப்பிட வேண்டும். சஹாயதா பயன்படுத்திய முதியவர் ஒருவர் என்னிடம் வந்து கண்கள் கலங்க நன்றி கூறினார். சாப்பிட்டவுடன் தனக்கு மலம் கழிக்கும் நிலை உருவாகும் எனவும், அதன் காரணமாகவே இத்தனை நாள் தனது மகன் மாலை வீட்டிற்கு வரும் வரை சாப்பிடாமல் இருந்ததாகவும் தெரிவித்த அவர், தற்போது நான் தயாரித்த சக்கர நாற்காலியை பயன்படுத்த தொடங்கிய பிறகு யாருடைய உதவியும் இல்லாமல் தானாகவே உபாதைகளை கழித்து கொள்வதாக கூறினார். அவருடைய சொற்கள் என்னை நெகிழ வைத்தன.

” முதலில் ஒரே ஒரு மாடலில்தான் இந்த சக்கர நாற்காலியை நான் உருவாக்கினேன். அதை நாற்காலியாகவும் பயன்படுத்தி கொள்ளலாம், படுக்கையாகவும் மாற்றி பயன்படுத்தி கொள்ளலாம். ஆனால் சிலர் எங்களுக்கு படுக்கை வசதியெல்லாம் தேவையில்லை என்றனர். எனவே சக்கர நாற்காலியாக மட்டும் இயங்க கூடிய ஒரு வடிவிலும், படுக்கை வசதிகளுடன் கூடிய மற்றொரு வடிவிலும் இப்போது இரண்டு வகைகளில் சக்கர நாற்காலிகளை உருவாக்கியுள்ளேன்” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

பக்கபலமாக இருந்த தந்தை

மருத்துவம், மாற்றுத்திறனாளிகள்
படக்குறிப்பு,

தந்தை பாபுவுடன் ஷ்ருதி

”சஹாயதாவின் தொழில்நுட்பமும், வடிவமும் என்னுடைய சிந்தனையில் உருவானவை. ஆனால் இதனை உருவாக்கும் முயற்சியில் என்னுடைய தந்தை எனக்கு மிகப்பெரும் பலமாக இருந்து உதவினார்” என்று கூறுகிறார் ஷ்ருதி.

அவர் மேலும் கூறுகையில், “ எனது தந்தை ஒரு மெக்கானிக்கல் பொறியாளர். சிறியதாக ஒரு பட்டறை வைத்து வேலை செய்து வந்தார். சஹாயதாவின் மருத்துவ ரீதியிலான தேவை, வடிவமைப்பு போன்றவற்றை கையாள்வது என்னுடைய பொறுப்பாக இருந்தது. அதை உருவாக்குவதற்கு தேவையான மெட்டீரியல்களை தேர்ந்தெடுப்பது, தொழில்நுட்ப ரீதியாக வடிவமைப்பது போன்றவற்றை எனது தந்தை கையாண்டு வந்தார்.

மொத்தம் 118 முறை பல்வேறு வடிவங்களில்(Prototype) இதை உருவாக்கி பார்த்தோம். அனைத்தும் தோல்வி அடைந்தன. குறிப்பாக முதன்முதலாக உருவாக்கிய வடிவம் பார்ப்பதற்கு ஒரு ரோபோ போல காட்சியளித்தது. அதை எடுத்துக்கொண்டு மருத்துவமனை சென்றபோது எங்களை உள்ளேயே விடவில்லை. அந்த ரோபோவை பார்ப்பதற்கு பயமாக இருக்கிறது என்று கூறினர்.

பின் மீண்டும் பல வடிவங்களில் முயற்சி செய்து, இறுதியில் தற்போதைய வடிவில் இந்த சக்கர நாற்காலி உருவாகியுள்ளது. என்னுடைய அத்தனை முயற்சியிலும் எனது தந்தை எனக்கு ஆதரவாக இருந்தார். இந்த தயாரிப்பை முறையாக சந்தைப்படுத்த வேண்டும் என்பதற்காகவே `தன்வந்திரி பயோமெடிக்கல்` என்ற நிறுவனத்தை நிறுவினோம்.

சஹாயதா முழுமையான வடிவம் பெற்ற பிறகு, இதை எப்படி சந்தைப்படுத்துவது என்பது பற்றி தெரிந்துகொள்வதற்காகவும், ஒரு கண்காட்சியில் கலந்துகொள்வதற்காகவும் நான் சென்னை சென்றிருந்தேன். கண்காட்சியில் கலந்துகொள்வதற்காக நான் தயாராகி கொண்டிருந்தபோது வீட்டிலிருந்து அழைப்பு வந்தது. என் தந்தை மாரடைப்பில் இறந்துவிட்டதாக அவர்கள் தெரிவித்தனர். அந்த கனம் நான் முற்றிலும் உடைந்துவிட்டேன்” என்று தனது தந்தையின் நினைவுகள் குறித்து கலங்குகிறார் ஷ்ருதி.

“என் தந்தை இறந்தபிறகு, குடும்பத்தின் பொறுப்பு என்னிடம் வந்தது. என்னுடைய அம்மாவையும், தம்பியையும் இனி நான்தான் கவனித்துகொள்ள வேண்டும். எல்லாவற்றையும் விட, எனது தந்தையுடன் சேர்ந்து நான் துவங்கிய இந்த முயற்சியை வெற்றிபெற செய்ய வேண்டும் என்ற லட்சியமும் எனக்குள் வந்தது” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

ஒரு பெண் தனியாக முன்னேறுவது அவ்வளவு எளிதல்ல

மருத்துவம், மாற்றுத்திறனாளிகள்

”என் தந்தை இறந்து அடுத்த மூன்று மாதங்களில், தீவிரமாக உழைத்து எனது பிரத்யேக சக்கர நாற்காலியை நான் சந்தைக்கு கொண்டு வந்தேன். பல வணிக ரீதியான நிகழ்ச்சிகளில் பங்கேற்று, இது குறித்து விளம்பரப்படுத்தினேன்.

ஆனால் எனக்கு எதுவும் அவ்வளவு எளிதாக அமையவில்லை. ஒரு பெண்ணாகவும், குறிப்பாக நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பெண்ணாகவும் ஒவ்வொரு விஷயத்தையும் எதிர்கொள்வது எனக்கு மிகவும் சவாலாக இருந்தது.

பி.ஆர். கிருஷ்ணகுமார் என்ற மருத்துவர் இந்த பயணத்தில் எனக்கு வழிகாட்டியாக இருந்தார். அவர் எனக்களித்த ஒரு சிறு இடத்தில்தான் இப்போது வரை இந்த நாற்காலியின் தயாரிப்பு நடைபெற்று வருகிறது. அதேபோல் அனைத்து சூழல்களிலும் எனது குடும்பம் எனக்கு துணையாக நின்றது. எனது கணவர் எனக்கு பிடித்ததை செய்யுமாறு ஊக்கப்படுத்துகிறார். அவர்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்காகவே நான் தொடர்ந்து முன்னேற வேண்டும்.

சமீபத்தில் கூட` ஷார்க் டேங்க்` (shark tank) நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் அளவிற்கான முதலீட்டை இந்த சக்கர நாற்காலிக்காக பெற்றுள்ளேன். எனவே இதனுடைய தயாரிப்பை இனி பெரிய அளவில் எடுத்துச் செல்லவிருக்கிறேன். அடுத்த ஐந்து ஆண்டுகளில் குறைந்தது 10,000 நாற்காலிகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான முயற்சியைத் துவங்கியுள்ளேன். இந்திய அளவிலும், உலக அளவிலும் உள்ள மக்கள் இதனால் பயன் அடைய வேண்டும், அவர்களது சுயமரியாதை காக்கப்பட வேண்டும் என்பதே என்னுடைய அடுத்த லட்சியம்” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் ஷ்ருதிபாபு.

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை

Tuesday, April 4, 2023

உண்மையான பாஹுபலி இந்த மஹா வீரர்தான்: கவிஞர் தணிகை

 உண்மையான பாஹுபலி இந்த மஹா வீரர்தான்: கவிஞர் தணிகை



கட்டியிருந்த இடுப்பு பட்டுத் துண்டைக் கூட இடது கையால் அவிழ்த்துக் கொடுத்து விட்டு சிலையாய் நின்றவர் மேல் செடிகொடிகள் கூட மேல் ஏறிச் செல்ல முக்தி அடைந்தவர் இந்த பாஹுபலி. இவருடைய கதை, கதையல்ல, வாழ்வு படித்தறிய மிகவும் ருசிகரமானது ஆர்வத்தை தூண்டி கதையைப் போல சிந்திக்க வைக்கக் கூடியது.

  இஷ்வாகு குலம் சார்ந்து அயோத்தியைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட அரச குலம், தந்தை ரிஷபானந்தா என்றும் முதல் தீர்த்தங்காரர் என்னும் பேருடன் ஜைன மதத்தாரால் அழைக்கப் பெற்ற இவருக்கு இரண்டு மனைவிகள் இரண்டு மகன்கள். இரண்டு மகன்களுக்கும் தமது இராச்சியத்தை பிரித்துக் கொடுத்து விட்டு துறவு பூண்ட பின்,மூத்த சகோதரர் பரத சக்ரவர்த்தி உலகை வெல்வதே வீரம் என்று எல்லா தேசத்தாரையும் வென்ற பிறகு சொந்த தம்பியையும் விட்டு வைக்காமல் அவர் இராச்சியத்துக்காகவும் மண்ணாசையுடன் போரிட்டு தமது வீரம் யாவற்றையும் விட பெரியது என்று நிரூபிக்க விரும்பி அது பலிக்காமல் தம்பியிடம் தோற்ற பிறகு....

அண்ணனை வென்ற பின் உலகை வெல்வதல்ல வீரம் , தன்னை வெல்வதே வீரம் என்று எல்லாவற்றையும் வெறுத்து விட்டு வென்ற பின்னும் இராஜ்ஜியத்தையும் அண்ணனுக்கே விட்டுக் கொடுத்து விட்டு தர்மத்தால் இராஜாவாக இருந்த நிலை வேண்டாம் என்று அனைவர்க்கும் எல்லாம் கொடுத்து விட்டு கடைசியில் துறவு நிலைக்குச் செல்லும் போதும் தன்னிடம் தர்மம் கேட்டார்க்கு இதுதான் மிச்சம் என்ற நிலையில் தனது இடுப்பு பட்டு வேட்டியையும் இல்லை என்று சொல்லாமல் அவிழ்த்து கொடுத்து விட்டு சென்று தவக் கோலம் பூண்டவர் மேல் செடி கொடிகள் எல்லாம் கூட படர்ந்த பின்னும் நின்றவர் நிர்வாணக் கோலத்தில் நின்றவராகவே இருக்கிறார் என்ற சரித்திரச் சான்றுகள்:

( இவருக்கும் முன்பே இவருடைய 98 சகோதரர்களும் துறவு பூண்டதாக எல்லாம் ரிஷபானந்தாவுக்கு 100 குழந்தைகள் என்றெல்லாம் செய்திகள் இருக்கின்றன அவை பற்றி எல்லாம் சரியாகத் தெரிய வில்லை. பரதர் என்னும் சகோதரர்க்கு அயோத்தி முதலான வட பகுதியையும் பாஹுபலிக்கு தென்பகுதியும் பிரித்தளிக்கப் பட்டன என்றும் இந்த வாழ்வின் சரித்திரம் சுமார் 10 ஆம் நூற்றாண்டில் நடந்திருக்கின்றன என்பதான செய்திகளும் இருக்கின்றன).

சிரவண பெலகோலா,தர்மதஸ்லம், மற்றும் கர்நாடகா ஆந்திரப் பகுதிகளில் இவருக்கு நிறைய இடங்களில் சிலை காணப் படுகிறது.

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை