Sunday, May 27, 2018

ஓர் போராட்டக்காரனின் ஓலத் தூது: கவிஞர் தணிகை

ஓர் போராட்டக்காரனின் ஓலத் தூது: கவிஞர் தணிகை


Image result for tn police marching 18 at tuticorin

எங்கள் "பணம்" தானே
உங்கட்கு "எல்லாம்"
உங்கள் "பலம்" தானே
எங்கட்கு "எல்லாம்!"

FIRING ORDER

சுட உத்தரவு
கிடைத்தவுடன்
கற்ற வித்தையை
கருணையின்றி
காட்டி விடுகிறீர்

எங்கள் மீதே!

இழப்பது யார்?
உங்கள் குடும்பங்களேயல்லவா?
வருந்திய்ழுவது யார்?
உங்கள் தாய்களேயல்லவா?

நீங்காவலி நமக்கேயில்லையா?

தங்களை வேறு வழியின்றி
கவசத்துள் நுழைத்துக் கொண்ட‌
இளகியவரே

நீங்கள் கூட‌
சிந்திப்பதில்  தவறில்லை.

CEASFIRE
போர் நிறுத்தம்
நமக்குள் தேவை!

நாங்கள்
நியாயத்துக்காக‌
போராடுகிறோம்
Related image
நாங்கள் வைத்த  வேலைக்காரர்கள்

நியாயமென
உறுமிக் கொண்டு
எங்கள் தலை மீதே
கை வைக்க நேர்கையில்
அவ்வேலைக்காரரின்
கைக்கூலிகளா(ய்)
நீங்கள்
Image result for tn police marching 18 at tuticorin
எங்கள்
போராட்டத்தில்
வெற்றி பெற்றால்
அப்பயன் பகிர்வுகள்
உங்கள் குடும்பங்களுக்கில்லையா?

காக்கச் சொன்னால்
எவனோ ஒருவன்
தாக்கச் சொன்னானென‌
எங்களை தலையில், வாயில்
ஏன் நெஞ்சுக்கும் மேலாகவே
கழுத்து எலும்புக்கும் மேல்
எல்லாம் தானியங்கி எஸ் எல் ஆர்
துப்பாக்கியால் சுட்டு
எங்கள் உடலை மண்ணிற்காக‌
சாய்த்துவிடுகிறீர்.
Related image


இளகிய எங்கள் கசாப்புக்காரரே
காப்பு மனிதரே
நீங்களும் சிந்திப்பதில் தவறில்லை

நீங்கள்
நியமனத்தின் பக்கமா?
நியாயத்தின் பக்கமா?
நிர்ணயித்துக் கொள்ளுங்கள்

இதுவரை நியமனத்தின் பக்கமே
இருந்த நீங்கள்
நியாயத்தின் பக்கம் வந்தால் மட்டுமே
நீங்கள் மனிதர்.

இது ஆய்தமேந்த‌
அங்கீகாரம் பெற்ற‌
தங்கள் சகோதரர்க்கு
ஓர் போராட்டக்காரனின்
ஓலத் தூது!

‍‍‍‍‍===================================
கவிதைகள் இளகிய மனமே புகும்
ஒலி
வெற்றிடத்தில் பயணம் செய்வதில்லை
=======================================


2007 ல் போகிற போக்கில் என்ற சிறு கவிதைத்தொகுப்பில்
சு. தணிகை

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍







Saturday, May 26, 2018

துயரத்தை எங்கே சொன்னால் சுகமாகும் சிந்தை?: கவிஞர் தணிகை

துயரத்தை எங்கே சொன்னால் சுகமாகும் சிந்தை?: கவிஞர் தணிகை


A general view shows Sterlite Industries Ltd's copper plant in Tuticorin, in the southern Indian state of Tamil Nadu April 5, 2013. Picture taken April 5, 2013. Sterlite Industries, a unit of London-based Vedanta Resources, which operates India's biggest copper smelter, which has been shut by authorities despite the firm denying its smelter was to blame for emissions in the area on March 23. Since opening in 1996, the plant has split the coastal city of Tuticorin between residents who say it is crucial for the local economy and farmers and fishermen who see it as a health hazard. Similar debates are playing out across India where disputes over safety, the environment and livelihoods overshadow the efforts of Asia's third-largest economy to industrialize.  To match INDIA-STERLITE/TOWN     REUTERS/Stringer (INDIA - Tags: ENVIRONMENT BUSINESS) - GM1E94912KX01


ஏப்ரல் 13 1919ல் ஜாலியன் வாலாபாக்கில் என்ன நடந்தது என சரித்திரத்தை நினைவு படுத்திக் கொள்ள தூத்துக்குடி சம்பவம் மே 22 2018 நடந்தேறி இருக்கிறது. மே 23லும் அதன் சாரலாக தூவானம் விட்ட பாடில்லை என மறுபடியும் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. அந்தக் கறுப்பு நாட்களை மக்கள் என்றுமே மறக்க முடியாது. மறக்கக் கூடாது.

ஒரு புறம் அரசின் பிரதிநிதியான புதிதாக அங்கே பணிக்கப்பட்டிருக்கும் மாவட்ட ஆட்சியர் ஸ்டெரிலைட் ஆலைக்கு நீரும், மின்சாரமும் நிறுத்தப்பட்டுள்ளது, இது அந்த ஆலையை நிரந்தரமாக மூடும் முன் நடவடிக்கை என்று சொன்ன அதே நேரத்தில் ஸ்டெரிலைட் முதலாளிகள் ஆலை எண் 1 ஏற்கெனவே பராமரிப்புக்கென மூடப்பட்டதுதான். அந்த ஆலையை கைவிடும் எண்ணம் ஏதும் இல்லை என்றும் சொல்லப்பட்டிருப்பதை கவனிக்க வேண்டி உள்ளது.

இதற்கிடையில் உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி போன்றோர் அந்த ஆலையை 100 கோடி அபராதத் தொகையுடன் முன்பு நடத்திக் கொள்ள அனுமதித்தது போல மறுபடியும் நடத்திக் கொள்ள அனுமதிக்கலாம்...

ஏன் எனில் இந்தியாவின் நீதி பணக்கார நீதி.

ஒரு புறம் 10 மாணவர்களுக்கும் குறைவான 800க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் மூடப்படுடும் என்ற உத்தரவு வெளியிடப்பட்டிருக்கும் அதே நேரம் கிராமப்பகுதிகளில் 800க்கும் மேற்பட்ட மதுக்கடைகள் திறந்து கொள்ளலாம் என்பதும் செய்தி. இதுதான் அரசின் நடவடிக்கை.

சசிபெருமாள் இறக்கும் வரை, கோவன் மதுவுக்கு எதிரான பாடல்களை இசைக்கும் வரை அதப்பற்றி எல்லாம் அரசு அவர்களை தண்டிக்கவே நினைத்தது...ஆனால் மக்கள் பொதுமக்கள், மகளிர் தங்கள் ஊரில் மதுக்கடைகளே வேண்டாம் என கடைகளை அடித்து நொறுக்கிய போதும் சட்டமும், நீதியும் அரசும் நீதிமன்றமும் மக்களுக்கு எதிரான நிர்வாகத்தை செய்ய தலைப்படுகின்றன என்னும்போது இது மக்களுக்கான அரசாக எப்படி கருத முடியும்?


மக்கள் அதிகாரம், புதிய ஜனநாயக முன்னணி, மார்க்ஸீய லெனினிஸ்ட்கள், அலல்து ,மாவோயிஸ்ட்கள் உள் புகுந்து மக்கள் எழுச்சியை ஏற்படுத்தி விட்டார்கள் இல்லையேல் இவ்வளவு சேதமிருக்காது என்றும் ஒரு கருத்து சொல்லப்படுகிறது.

இன்னொரு கருத்து காவல்துறையே இப்படி இவர்கள் மேல் தாக்குதல் நடத்திட காரணம் காட்ட இது போன்ற நடவடிக்கைகளை அரங்கேற்றி காலுக்கும் மேல், நீர் பாய்ச்சி எச்சரிக்கை செய்யாமல், ரப்பர் குண்டுகளை வெடித்து எச்சரிக்கை செய்யாமல் தானியங்கி துப்பாக்கி வைத்து வேட்டையாடி இருக்கின்றன  என்றும் சொல்லப்படுகிற செய்திகள் இருக்கின்றன. முன்பெல்லாம் செய்தி என்றால் அதை நம்பலாம். உறுதிப்படுத்தப்பட்டதாக இருக்கும். இப்போது செய்தி எல்லாக் கோணங்களிலும் மாறியபடியே இருக்கிறது எது உண்மை என்று உண்மையாகவே அறிய முடியாமல்..

எது எப்படி ஆனாலும் எத்தனை காலம்தான் மக்களை ஏமாற்றிக் கொண்டே இருக்க முடியும்?

100 நாளாக மக்கள் போராடி வரும்போதும் மக்கள் பிரதிநிதிகள், மந்திரிகள் அங்கு சென்று நிலையை பரிசீலித்து பிரச்சனையை முடித்து வைக்கவில்லை.

மாறாக இறந்தவர்க்கு ரூபாய் 10 இலட்சம் என்று மாநிலத் தலைநகரிலிருந்து அறிவித்துக் கொண்டே இருக்கிறார்கள். அந்த செம்பு ஆலையை மூடும் வரை இறந்தார் உடலைப் பெறுவதில்லை என்று சொன்ன அந்த இறந்தாரின் குடும்பத்துக்கு என்ன முடிவு கிடைக்கும் கிடைத்திருக்கும் என செய்திகள் இன்னும் இல்லை

உண்மைதான் இரு முறை மக்கள் மாபெரும் அணியாக இருந்து கற்களை எடுத்து வீசி காவலரை துரத்தி அடித்ததும், அவர்கள் பயந்து ஓடியதும் காட்சிப்பதிவுகளில் காணமுடிகிறது ....ஆனால்

அதற்காக சுமார் 800 மீட்டர் வரை கூட குறி தவறாமல் சுடும் தானாகவே லோடு செய்து கொள்ளும் எஸ் எல் ஆர்...செல்ப் லோடிங் ரைபிள் வைத்து நெஞ்சிலும், கழுத்திலும், விலா எலும்பின் மேம்பகுதியிலும், தலையிலும், வாயிலும் எல்லா குண்டுகளுமே மார்பு அளவுக்கும் மேலாகவே குறிவைக்கப்பட்டு சுடப்பட்டு கொன்று குவிக்கப்பட்டுள்ளனர் போராட்டக்காரர்கள்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கேட்ட கேள்விக்கு: சுடுவதற்கு ஆணை பிறப்பித்தது யார் ? என்ற கேள்விக்கு பதில் இல்லை. ஆனால் மருத்துவ மனையில் பாதிப்படைந்தவரை சென்று பார்த்ததற்கு 144 தடை உத்தரவை மீறியதாக இவர் மேலும் ஸ்டாலின் மேலும் வழக்குப் பதிவு..

நடக்கும் ஆட்சி ஜனநாயக ஆட்சியாக  மக்கள் ஆட்சியாக இல்லை. ஸ்டெரிலைட் என்னும் ஒரு முதலாளிக் குடும்பத்தைக் காப்பாற்ற எண்ணிறந்த குடும்பங்களின் சோக வரலாறை படைத்திருக்கின்றன மோடியின் மத்திய அரசும்.அ.இ.அ.தி.முக பழனிசாமி , பன்னீர் அரசும்.

அருணா ஜெகதீசன் என்னும் முன்னால் நீதிபதி விசாரித்து உண்மை அறிவாராம்...


இதனிடையே பாரதிய ஜனதாக் கட்சித் தலைவர் அமித் ஷா தமிழகம் முதற்கொண்டு எல்லா மாநிலங்களிலும் வரும் எம்.பி. தேர்தலில் அந்தக் கட்சியே வெல்லும் என்று வெளியில் பேசி இருக்கிறார்.

அந்தக் கட்சியுடன் சேரும் எந்தக் கட்சியுமே இனி எந்தத் தேர்தலிலும் தமிழகத்தில் வெல்ல முடியாது. தமிழக மக்கள் அவ்வளவு எளிதாக எல்லாவற்றையும் மறந்து மன்னிக்கத் தயாரானாவர்கள் இல்லை.

நடந்த சம்பவத்திலிருந்து அதை ஊடகத்தில் கவனித்ததிலிருந்து நமது எண்ண அலைகள் அதைச் சுற்றியே அலை பாய்ந்து கொண்டிருக்கின்றன. ஒரு நல்லாட்சியை நல்லரசை தர வேண்டியவர்கள் ஏன் இப்படி அவர்கள் உயிரை பறிப்பவராகி இருக்கின்றனர்.

சுதந்திரப் போர் தியாகிகளுக்கு எப்படி ஒரு மரியாதை தர வேண்டும் என நாடு சொல்கிறதோ அதே போல இந்த தனியார் மயத்துக்கு எதிராக போர்க்கொடி ஏந்தி உயிர் நீத்த அன்னார்க்கும் ஏன் அவர்களை விட அதிகமாக நாம் மரியாதை செய்ய வேண்டியிருக்கிறது என்று சொன்னால் அது  தவறாகாது...

இந்த துயரம் பற்றி என்ன பேசினாலும், எங்கே சென்று அழுதாலும் தீரமறுக்கிறது...என்னங்க இது பற்றியே பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்கிறார் துணைவியார், பேருந்தில் ஒரு இளைஞர் அதுக்கெல்லாம் நாம் என்ன சார் செய்ய முடியும்  நாம் இங்கிருக்கிறோம் அது அங்கு நடக்கிறது என்கிறார்....

இவ்வளவு நடந்து கொண்டிருந்த போதும் நான் பழநி ஒரு அவைக்கு பேச அழைக்கப்பட்டு கலந்து கொள்ள செல்லும்போது கவனித்தேன் முதல்வர் கொடைக்கானல், ஏற்காடு, உதகமண்டலம், பழநி எல்லாம் சென்று படு சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தார் நான் சென்ற ஈரோடு பழநி பேருந்து பழநி நுழைவாயிலில் 40 நிமிடம் ஒரே இடத்தில் நின்று கொண்டிருந்தது.

முதல்வர் எங்கு சென்றாலும் நாலுவழிச் சாலை, மேம்பாலம் பணிகள் பற்றியே பெரிதும் அறிவிக்கிறார்....ஏற்கெனவே இவர் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்தவர்தாம்...மேலும் இவர் அங்கு குழுமியிருந்த சிறு கூட்டத்துக்கே எவ்வளவு பெரிய கூட்டம் என்றார்...இவர் சென்ற சிறிது நேரத்தில் பழநி விடுதி தொலைக்காட்சியில் பார்க்கும்போது 200 ரூ தருவதாக சொன்னவர்கள் தரவில்லையே என ஒரு சாரர் கேட்க அங்கு பட்டுவடா நடத்தப்பட்டதை தொலைக்காட்சி ஒலி ஒளிபரப்பியது... இது தானா சேர்ந்த கூட்டமல்ல...காசு கொடுத்த சேர்ந்த கூட்டம் என்பதை அந்தக் காட்சிகள் உணர்த்தின...

ஒரு பேச்சரங்கில்  தொலைக்காட்சியில் தமிழக தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் என்பார்தாம் தமிழக அரசை நடத்துகிறார், இவரின் உறவினர் எஸ்.வி. சேகரை பிடிக்க முடியாத காவல்துறை இத்தனை மனிதர்களை கொன்று இத்தனை குடும்பத்தில் தீ மூட்டி இருக்கிறது என்பதை நினைத்தால் இது காவல் துறையின் தவறாகத் தெரியவில்லை....ஆளும் நிர்வாகத்தின் திரை மறை நாடகங்களாகவே தெரிகிறது.

இவர்கள் பாடம் புகட்ட நினைக்கிறார்களாம், மக்கள் இயக்க வியாலாளர்க்கு, அரசுக்கு எதிராக இயங்க ஆரம்பித்தால், தனியார் முதலாளிகளுக்கு எதிராக இயங்க ஆரம்பித்தால் நாங்கள் இப்படி காவல் துறையினரை ஏவி விட்டு கொன்று குவிப்போ. பாடம் புகட்டுவோம். இனி இப்படி சேர்ந்து உரிமைக்காக போராத்தலைப்படுவீர்களா? சேர்ந்து கோரிக்கை எழுப்புவீர்களா? நீங்கள் அடிமை நாய்கள்தாம் நாங்கள் சுட்டுக் கொல்வோம், கேட்பார் கிடையாது உங்கள் வாக்குகளைப் பெற்று விட்டால் நாங்கள் ஆண்டார்கள் தாம், நாங்கள் அதிகார வர்க்கம்தான், நாங்கள்  அரச பரம்பரைதான் என நடந்த சம்பவங்கள் பறை சாற்றுகின்றன....

நேற்று கூட சேலம் 5 வழிச் சாலையில் சேலம் சந்திப்பு நோக்கி செல்லும் பேருந்து நிறுத்தத்தில் சாக்கடையோரம் எமது இந்தியக் குடி மகன் வாயிலும் மூக்கிலும் முகத்திலும் ஈ மொய்க்க  கற்கள் மேல் ஏகாந்தமாய் படுத்துக் கிடக்கிறான்...எதைபற்றியும் கவலை இல்லாமல்...வானை நோக்கியபடி...உண்மையிலேயே உறங்குகிறானா... நாங்கள் அவரவர் பணிக்குச் செல்ல பேருந்து வந்ததும் ஏறிச் சென்று கொண்டே இருக்கிறோம்...நாடும், காவலும், ஆட்சியும் நிர்வாகமும்,  அதைத்தான் விரும்புகிறது போலும். எமது மாவட்ட ஆட்சியர் மிகவும் பிரபலமானவர் பாவம் அவர் என்ன செய்ய முடியும் ஒரு குடிமகன் இப்படி முக்கியமான படுத்துக் கிடக்கும்போது...

வாழ்க இந்திய மக்கள்
வளர்க ஜனநாயகம்
வெல்க மக்களாட்சி....

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Tuesday, May 22, 2018

தூத்துக்குடி ஸ்டெரிலைட் துப்பாக்கிச் சூடும் கலவரமும்: கவிஞர் தணிகை


சொந்த உள் நாட்டிலேயே தம் மக்களுக்கே எதிரான போராகவே இதைக் காணலாம். 100 நாட்கள் வரை மக்கள் போராடும் வரை தேர்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு வேறு என்ன அத்தியாவசிய வேலை இதைத் தீர்த்து வைக்காமல் ....
Related image



தவிர்க்க முடியாத காரணத்தால் இப்படி நேர்ந்தது என ஒரு மந்திரி கூற, நிலை கட்டுக்குள் அடங்கி இருக்கிறது மக்கள் பீதி வேண்டாம் என காவல்துறைத் தலைவர் தெரிவிக்க, இறந்த குடும்பத்திற்கு நிவாரணம் வழங்குகிறோம் என ஆட்சியாளர்கள் அறிவித்திருக்க...

வன்முறை சரியான வழி அல்லதான். ஆனால் அதற்காக தம் மக்களையே சுட்டு வீழ்த்துவதும், அடித்து நொறுக்குவதும் ஒரு சரியான மக்களாட்சிக்கு அடையாளமல்ல..

இருக்கும் கொஞ்ச நஞ்சம் செல்வத்தையும் அடித்தட்டு மக்களிடம் இருந்து பெரும் பணக்காரர்களாக இருக்கும் இது போன்ற வேதாந்தா குழுமம், ஸ்டெரிலைட் ஆலை முதலாளிகளுக்கு விற்றுக் கொடுத்து...நிலம், நீர் , கனிமம் எல்லாமே அந்த முதலாளிகள் கைக்கு சென்று விட பதிலாக உடல்பிணி பெற்று கொஞ்சம் கொஞ்சமாக சாவதை விட இப்படி போராடி சாகவும் தயார்தான் என்ற முடிவு இந்த சம்பவத்திலிருந்து அறிய முடிகிறது.

இது வரை  9 பேர் இறந்தும் அதில் ஒருவர் நாளை  வர விருக்கும் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவைக் காணமல் போயிருக்கும் மாணவி என்பதும் 65 பேருக்கும் மேல் படுகாயமடைந்து கிடப்பதும் கேட்கக் கூடாத செய்திகள்.

Related image


எடப்பாடி அரசுக்கு இது ஒரு இழுக்கு...நடப்பது மக்களாட்சியா இல்லை முதலாளித்துவ கேலிக் கூத்தா என கேள்விகள் எழுப்பாமல் எவருமே இருக்க முடியாது...எப்படி வன்முறையாளர்கள் உருவாகிறார்கள் எனில் அரசின் காதுகள் எப்படி கோரிக்கை எழுப்பினும் கேட்காதபோதுதானே...

Image result for today sterilight thoothukudi shootings


இப்போது அவர்களை வன்முறையாளர் எனக் கொன்று குவித்திருக்கும் அரசுக்கு ஏற்கெனவே இந்தப் பிரச்சனையின் தீவிரம் தெரியவில்லையா...அப்போதே அதை முடித்து வைக்க வேண்டும் என எந்த அரசியல் ஆளும் கட்சி மந்திரிமார்கள் எவரும் தலையிட்டுத் தீர்த்து வைத்தார்களா?  இந்தியாவிலும், தமிழகத்திலும் இதே போன்றுதான் எந்தப் பிரச்சனையுமே நடந்து முடிந்தபின் தாம் முக்கியத்துவம் பெறும்...அதன் முன் எவருமே எதைப்பற்றியுமே சிந்திப்பதில்லை, நாடாளும் மஹாராஜாக்களுக்கு மலர்கண்காட்சிகள் திறந்து வைக்கவும், சாலைப்பணிகள், மேம்பாலப்பணிகளுக்கு அடிக்கல் செய்யவுமே நேரம் சரியாக இருக்கும்போது இது பற்றி எல்லாம் என்ன...கட்சிகளாக மக்கள் கூறு பிரிக்கப்பட்டு இருக்கும்போது சில பல இலட்சங்களை வாயடைக்க நிவாரணமாக வழங்கி விட்டால் போயிற்று... என்ற வழக்கமான இவர்களின் அழுகுணி பாணி இனியும் எடுபடாது என்ற அடையாளமே இந்த செய்திகள் போராட்டங்கள்...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.





Sunday, May 13, 2018

காலம் கனிய காத்திருக்கிறாரா? காலாவை ஓட்ட காய் நகர்த்துகிறாரா?: ரஜினியைச் சுழற்றும் சர்ச்சைக

thanks: The Hindu Tamil


ன்னுடைய ‘தனிக்காட்டு’ ராஜா படத்தில் ரஜினிக்கு அப்பாவாக வரும் மேஜர் சுந்தர்ராஜன், “நீ தேர்ந்தெடுத்திருக்கிறது காந்தி வழியா... சுபாஷ் சந்திரபோஸ் வழியா?” என்று மகன் ரஜினியைப் பார்த்துக் கேட்பார். அதற்கு, “நான் யார் வழியிலும் போக விரும்பல... நான் போறதே ஒரு வழியா இருக்கணும்னு நினைக்கிறேன்...” என்பார் ரஜினி. அநேகமாக, முதன்முதலில் ரஜினி பேசிய அரசியல் கலப்பு வசனம் இதுவாகத்தான் இருக்கும். ‘தனிக்காட்டு ராஜா’ வெளிவந்து 36 வருடங்கள் கடந்துவிட்டன. இன்னமும் தன் வழி எதுவென்று ரஜினிக்கும் புலப்படவில்லை; அவரை அறிந்தவர்களாலும் அந்த வழியை அறிய முடியவில்லை!

கட்டாயத்துக்கு ஆளான ரஜினி

தேர்தல் சமயத்தில், தான் கொடுத்த கடைசி நேர ‘வாய்ஸ்’கள் கலகலத்துப்போனதால், சிறிது காலம் அரசியல் பேசாமல் இருந்தார் ரஜினி. அந்தக் காலகட்டத்தில்தான் அவரது ‘கோச்சடையான்,’ ‘லிங்கா’, ‘கபாலி’ படங்கள் வெளிவந்தன. ‘கோச்சடையான்’ எடுபடாமல் போன ஃபார்முலா என்பதை ரஜினியே ஒப்புக்கொண்டார். எதிர்பார்த்த அளவுக்கு படம் ஓடாததால், ‘லிங்கா’ படத்தின் விநியோகஸ்தர்கள் பலரும் நிதி கேட்டு ரஜினி வீட்டுக்குப் படையெடுத்தார்கள். பஞ்சாயத்துப் பேசி அவர்களுக்கு பணத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டிய கட்டாயத்துக்கும் ஆளானார் ரஜினி. ‘கபாலி’ தொடர்பாகவும் சர்ச்சைகள் இல்லாமல் இல்லை.
இதோ, ‘காலா’ வருகிறது. இப்போதும் அமைதியாக இருந்தால் மறுபடியும் பஞ்சாயத்துப் பேச வேண்டிய நிலை வந்துவிடும் என ரஜினி பயந்தாரோ என்னவோ, முன்கூட்டியே அரசியல் வசனம் பேச ஆரம்பித்துவிட்டார். “போர் வரட்டும் பார்க்கலாம்” என்று முதலில் சூசகமாய்ச் சொன்னார். கடந்த ஆண்டின் இறுதி நாளில், “நான் அரசியலுக்கு வருவேன்... சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவேன்” என்று சொன்னார். இந்த நிமிடம் வரை, ‘நான் அரசியலுக்கு வந்துவிட்டேன்’ என்று ரஜினியால் அறிவிக்க முடியவில்லை!
ஆனால், அரசியலுக்கு வருகிறாரோ இல்லையோ, அவரது அரசியல் வசனங்கள், ‘காலா’வை வெற்றிமுகம் நோக்கி இழுக்கத் தொடங்கிவிட்டன. கூடவே, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் இன்னொரு படத்திற்கும் கோடிகளில் சம்பளம் பேசி ‘ஸ்டார்ட்... கேமரா... ஆக்‌ஷன்!’ ஆகிவிட்டார் ரஜினி. அவரது முகாம் எதிர்பார்த்ததும் இந்த ரிசல்ட்டைத்தானே!

இனி, வந்தா என்ன வராட்டா என்ன?

இதையெல்லாம் சுட்டிக்காட்டும் ரஜினியால் வாழ்க்கையைத் தொலைத்த அவரது ஆரம்ப காலத்து ரசிகர்கள், “தன்னுடைய ‘காலா’ இசை வெளியீட்டு விழாவில், ‘நாற்பது ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருக்கும் குதிரை இது’ எனத் தன்னைப் பற்றி ரஜினி பெருமையாகக் குறிப்பிட்டார். கடந்த 20 ஆண்டுகளாக அந்தக் குதிரை இப்படியேதான் அரசியல் வசனம் பேசி ஓடிக்கொண்டிருக்கிறது. எங்களுக்குத் தெரிந்தவரை அது அவ்வளவு சீக்கிரம் அரசியலுக்கு வரப்போவதில்லை. அப்படியே வந்தாலும் அதனால் தமிழ்நாட்டுக்கு எந்தப் பிரயோஜனமும் இருக்கப்போவதுமில்லை”என்கிறார்கள்.
மூச்சுக்கு முந்நூறு தரம், “மொதல்ல அப்பா - அம்மா, குடும்பத்தைப் பாருங்க” என்கிறார் ரஜினி. ஆனால், என்றைக்காவது அவர் அரசியலுக்கு வருவார், நமக்கும் ஒரு அங்கீகாரம் கிடைக்கும் என்று நினைத்து ரசிகர்கள் பல ஆயிரம் பேர் தங்களது வாழ்க்கையைத் தரிசாக்கி நிற்கிறார்கள். ‘ரஜினி இனி அரசியலுக்கு வந்தா என்ன... வராட்டா என்ன?’ என்று விரக்தியின் விளிம்பில் நிற்கும் இவர்களை வைத்துக்கொண்டு தனது அடுத்தடுத்த படங்களை ரஜினி ஓட்ட முடியாது.
இதை நினைத்துத்தானோ என்னவோ, பழையவர்களை ஓரங்கட்டிவிட்டு புதியவர்களை முன்வரிசைக்குக் கொண்டுவருகிறார்கள். ஏனென்றால், ரஜினி பேசும் சினிமா வசனத்தை நிஜமென்று நம்பி விசிலடிக்கவும் பாலாபிஷேகம் செய்யவும் அவர்களுக்குப் புதிதாக ஒரு கூட்டம் தேவைப்படுகிறது. அதற்காக ரசிகர் மன்றத் தலைவர் சத்யநாராயணாவிலிருந்தே இந்த ஓரங்கட்டல் தொடங்கிவிட்டது. அரசியல் அறிவிப்புகள் வந்த நேரத்தில் சத்யநாராயணா, ராகவேந்திரா மண்டபத்தில் இல்லை. இதுபற்றி வதந்திகள் பரவியதும், அடுத்தடுத்த நாட்களில் பேருக்கு அவரையும் அழைத்து உட்காரவைத்தார்கள். ‘காலா’ இசை வெளியீட்டு விழாவில் பத்தோடு பதினொன்றாய்வந்து, நின்றபடியே எல்.இ.டி. திரையில் நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டுப் போனார் சத்தி!

அரசியலுக்கு சாதி பார்க்கிறார்கள்!

ரஜினியைவிட அவரது ரசிகர்களை நன்கு அறிந்தவர் சத்யநாராயணா. அவருக்கு நெருக்கமாக இருந்த ரசிகர் மன்றத்துப் பிள்ளைகளில் பெரும் பகுதியினர் இப்போது ஒதுக்கப்பட்டு நிற்கிறார்கள். இதுகுறித்துப் பேசிய தென்மாவட்ட முன்னாள் ரசிகர் மன்றத் தலைவர் ஒருவர், “ரசிகனாக இருந்தால் சாதி, மதம், பண வசதி இதெல்லாம் பார்க்க மாட்டார்கள்; எப்படியாவது கூட்டம்கூட்டிப் படத்தை ஓட்டினால் போதும். அதுவே, இப்போது அரசியல் என்றதும் சாதி பார்க்கிறார்கள். உதாரணத்துக்கு, ராமநாதபுரத்தில் ஆரம்பத்திலிருந்தே ரஜினி மன்றத்தைக் கட்டிக்காத்தவர் பாலநமச்சி. அவரை ஓரங்கட்டிவிட்டு, புதிதாக ஒருவரை மாவட்டப் பொறுப்பில் நியமிக்கிறார்கள். கேட்டால், ‘அது முக்குலத்தோர் மாவட்டம், அங்கே அந்த சாதிக்குத்தான் முக்கியத்துவம்’ என்கிறார்கள்.
தமிழகத்தைத் தலைகீழாக மாற்றவே அரசியலுக்கு வருவதாகச் சொல்லும் ரஜினி, எல்லா அரசியல் கட்சிகளும் செய்யும் அதே சாதி அரசியலைத்தானே தானும் முன்னெடுக்கிறார். அரசியலுக்கு வருவதாகச் சொல்லும் நிலையில், ‘வேங்கையன் மகன் வந்துருக்கேன்’ என்று வசனம் பேசுகிறார். வேங்கையன் யாருடைய அடையாளத்தை நினைவூட்ட? அப்படியானால் தன்னை யாருடைய பிம்பமாகக் காட்ட நினைக்கிறார் ரஜினி? ‘தென்னக நதிகளை இணைப்பதுதான் எனது கனவு’ என்று சொல்லும் இவர், நதிகள் இணைப்புக்காக ஒரு கோடி ரூபாய் தருவதாகச் சொல்லி எத்தனை வருடங்கள் ஆகிவிட்டன? அதற்காக இவர் எடுத்த அடுத்தகட்ட முயற்சி என்ன? ‘நதிகளை இணைத்துவிட்டால், அடுத்த நாளே நான் கண்ணை முடினாலும் பரவாயில்லை’ என்று இப்போது டயலாக் பேசும் நீங்கள், மோடி உங்களைத் தேடிவந்தபோது இதுபற்றிப் பேசி ஒரு தீர்வை அறிவிக்க வைத்திருந்தால், நாடே உங்களைக் கொண்டாடியிருக்குமே!” என்று ஆதங்கப்பட்டார்.

இதுதான் ரஜினியின் ஸ்டைல்!

தொடர்ந்து பேசிய அவர், “இப்படித்தான், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆண்டுக்கு ஒரு ஏழை ஜோடிக்கு திருமணம் செய்துவைப்பேன் என்றார் ரஜினி. மூன்று ஆண்டுகள் மட்டும்தான் அதைச் செய்தார். அத்தோடு அதை மறந்துவிட்டார். இதேபோல், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஆண்டுக்கு ஒரு லட்ச ரூபாய்க்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்குவதாகச் சொன்னார். அதுவும் மூன்று ஆண்டுதான் நடந்தது. ‘புதிதாக மன்றங்களைத் தொடங்காதே’ என்பார். ஆனால், ராகவேந்திரா மண்டபத்துக்குப் போனால், புதிய மன்றத்துக்கு தாராளமாய்ப் பதிவெண் கொடுப்பார்கள். இப்படி, ஆதியிலிருந்தே, சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றும்தான் ரஜினியின் ஸ்டைல்; சொல்வதைச் செய்வது இல்லை” என்று சொன்னார்.
எம்.ஜி.ஆர். சிலை திறப்பு விழாவில் பேசிய ரஜினி, ‘தனக்காகப் பெண் வீட்டில் பேசி தனது திருமணம் நடக்கக் காரணமாக இருந்ததே எம்.ஜி.ஆர்.தான்’ என்று ஒரு வசனத்தையும் உதிர்த்தார். அதுவும் இப்போது அவரது ரசிகர்களாலேயே விமர்சிக்கப்படுகிறது. இதுகுறித்தும் பேசிய தென் மாவட்ட மூத்த ரசிகர்கள், “ ‘சங்கர் சலீம் சைமன்’ படத்தில் நடித்த விஜயகுமாரும் மஞ்சுளாவும் பிற்பாடு திருமணம் செய்து கொண்டார்கள். அதேபோல், இணைந்து நடித்த இன்னொரு ஜோடியும் திருமணம் செய்துகொள்ள நினைத்தார்கள். கடும் நெருக்கடி கொடுத்து அந்தத் திருமணத்தைத் தடுத்தது யார்?

மறைக்கிறாரா மறந்துவிட்டாரா?

எம்ஜிஆர் அதிகாரத்தில் இருந்த அந்தச் சமயத்தில் ரஜினியின் உடல் நிலையைப் பற்றி தாறுமாறாகத் தகவல் பரப்பியதன் பின்னணியில் இருந்தது யார்? ‘பில்லா’வில் ஜெயலலிதாவை ரஜினிக்கு ஜோடியாக நடிக்கவிடாமல் தடுத்த சக்தி எது? இதையெல்லாம் ரஜினி மறைக்கிறாரா அல்லது மறந்துவிட்டாரா? நேர்மையுடன் அரசியலுக்கு வருபவராக இருந்தால், இதையெல்லாம் அந்தக் கூட்டத்தில் சொல்லியிருக்க வேண்டும்.
இப்படி, முரண்பாடுகளின் மொத்த உருவமாய் நிற்கும் ரஜினிதான், அரசியலுக்கு வந்து தமிழகத்தை தலைநிமிர்த்தப்போவதாகச் சொல்கிறார். அவரைப் பொறுத்தவரை ரூ.360 கோடிக்கு படத்தை விற்று முடித்துவிட்டார்கள். அதை ஓட்டி முடிப்பதற்கு சில விளம்பர உத்திகள் தேவைப்படுகின்றன. அதைத் தான் இப்போது அற்புதமாய் செய்து கொண்டிருக்கிறார்கள்” என்று குமுறினார்கள்.
“பணம் சம்பாதிக்கிறதுக்கு ஆயிரம் வழி இருக்கு; ஆயிரம் தொழில் இருக்கு... அதுக்கு இந்தப் புனிதமான அரசியலைப் பயன்படுத்தாதீங்க...” ‘அண்ணாமலை’ படத்தில் ரஜினி பேசிய வசனம் அரசியலுக்கு வரும் அனைவருக்கும் பொருந்தும்தானே!

Friday, May 11, 2018

மரங்களுக்கு மனித விசுவாசம் உண்டா நாய் போல: கவிஞர் தணிகை

மரங்களுக்கு மனித விசுவாசம் உண்டா நாய் போல: கவிஞர் தணிகை

Related image

மரம் செடிகொடிகள் இசை கேட்பதால் நல்ல மலர்ச்சியுடன் புத்துணர்ச்சியுடன் வளர்கின்றன நல்ல பலனளிக்கின்றன என்பதை ஆய்வு மூலம் நிரூபணம் செய்திருப்பதாக அறிந்திருக்கிறேன்.

எங்கள் வீட்டில் ஒரு கொய்யா மரம் நரை விழுந்து சுமார் 70 ஆண்டுக்கும் மேல் இருக்கிறது இன்னும் பலனளித்தபடி இருக்கிறது. அதன் கனி அவ்வளவு சுவையாய் இருக்கிறது. கொய்யா இலைகள் காய்ச்சி கஷாயம் வைத்தால் நிலவேம்பை விட மேல் என்கின்றனர் காய்ச்சல் சளி இருமலுக்கு...

நாங்கள் சிறுவராய் ஆரம்பப் பள்ளி, துவக்கப்பள்ளி,படித்து நடுநிலைப்பள்ளி வரும் காலத்தில் ஊரின் மேட்டிலிருந்து ஊருக்குள் இறங்கும்போதே தெரியும் மஞ்சள் மஞ்சளான பூக்களுடன் பூவரசு. அதை இரண்டு டைனிங் டேபிளாக்கி விட்டார்கள் அதில் ஒன்று இன்னும் எனது வீட்டு சமையலறையில்

இராமலிங்க வள்ளலார் சொல்வார்: வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் மனம் மிக வாடினேன் என்று...உயரிய சிந்தனை மிக உயரிய நோக்கம். ஆனால் நீர் வேண்டும் அவற்றுக்கு எல்லாம் நீரோட வேண்டுமே...

இங்கே சாலைகள் எல்லாமே பெருமரங்கள் நேரோடி வாழ்ந்திருந்தன. பெரும்பாலும் அவை அழிக்கப்பட்டு விட்டன. ஊரின் மாபெரும் அரசமரம் பிள்ளையார் கோவிலுக்கு நிழல் தந்தபடி...அரசை அழித்து விட்டு புதிதாக சீட் போட்டு அந்த நிழலில் பிள்ளையாரை உட்கார வைத்து விட்டார்கள். பிள்ளையார்கூட வேறு பிள்ளையாராக சிறு சிலையாக‌ இன்னும் இருக்கிறார். அந்த அரச மரம் இல்லை. அத்துடன் ஒரு வேம்பும் ஒட்டிக் கொண்டிருக்கும் .... வெட்டியதற்கும் மாறாக சிறிய அரசோ வேம்போ இல்லை.

இன்று வேப்ப இலை ஒடிக்க வேறு இடம் தேடிப்போக வந்தது...அதுவும் நிறைய இலைகள் பூச்சரித்துப் போயிருக்க... இப்படி வேண்டேமே என்கிறார்கள் எம் வீட்டில்...எங்கள் வீட்டிலெயே ஒரு வேப்ப மரம் அப்போது இருந்தது அதன் பட்டை முதல்கொண்டு இன்னும் எனக்குள் பார்வையாய் இருக்கிறது மறக்க முடியாமல் ஆனால் இப்போது அந்த  மரம் இல்லை.

சாலையோரம் எல்லாமே நிறைய புளிய மரங்கள் இருக்கும் அவை அரசுடையது எங்கள் வீட்டில் இரண்டு புளிய மரங்கள் 3 கொய்யா மரங்கள், இரண்டு கறிவேப்பிலை மரங்கள், ஒரு கொடுக்காபுளி மரம்,   ஒரு முருங்கை மரம்,ஒரு கொழிஞ்சி மரம் , ஒரு மாமரம், ஏன் ஒரு அரப்பு மரம் கூட இருந்ததாக நினைவு. நிறைய வாழைகள் வைத்தும் பலனடைந்தோம். இந்த கெம்ப்ளாஸ்ட் சன்மார் + அரசியல் முன்னணி வியாதிகளால் மறுமுறை வாழைகளின் கன்றின் கன்று எதிர்ப்பதற்கு மாறாக அவை இரசாயன நீரால் கச கச வென நச நசவென கெட்டுப் போய் அதன் வேரும், தண்டும் , சரியாக விரியாத இலையும் மடலுமாக செத்தொழிந்து விட்டன... இப்படி எல்லா மரங்களுமே இருந்தன. இருந்தன என்றால் இப்போது இல்லை. அடையாளத்துக்கு ஒரு முருங்கை, ஒரு கறிவேப்பிலை, இப்போது ஒரு சப்போர்ட்டா என இருக்கிறது.

Related image


இந்த கறிவேப்பிலை மரம் வளர்ந்து சென்று வளைந்து சென்று டம்மியாக்கப்பட்டுள்ள மின் கம்பிகளைத் தொட்டபடி இருக்கிறது  அதே போல ஒரு தானே தோன்றிய கொட்டமுத்து அல்லது ஆமணக்கு செடி மரமாகி நெடிதுயர்ந்து மின் கம்பியை தொட வேகமாக சென்றபடி இருக்கிறது... அதன் பயன்பாடு ஏதுமில்லாமல் இருந்தும் கூட அதைப் பிடுங்கி எறிய மனவலி... ஒரு முறை இரண்டு அசோகா மரம் தாமே முளைத்து வளர்ந்திருந்தது, தமது மகன் நன்றாகப் பிழைக்க தமக்கு நடக்க வேண்டிய பைபாஸ் சர்ஜரி கூட வேண்டாம் என்று அந்தப் பணத்தையும் மகன், குடும்ப நல்வாழ்வுக்காக தியாகம் செய்த தங்கமலை அர்த்தனாரி எனக்கு தாய் வழியில் மாமன் முறை ஆக வேண்டும். எனக்கு இந்த உறவு முறை எல்லாம் தெரிவதைல்லை, தெரியாது, அதுபற்றி பெரிதக அலட்டிக் கொள்வதோ அக்கறை எடுத்துக் கொள்வதோ இல்லை...ஆனால் அவர் வீட்டில் அசோகா மரம் எல்லாம் இருக்கக் கூடாது நல்லதல்ல என்றார் உரிய காரணம் விளஙக்வில்லை ஒரு வேளை திருடர்கல் சுலபமாக ஏறி தாண்டி காம்பவுண்டை தாண்டி இந்த மர வளைவுடன் எகிறி உள் குதித்து விடுவார்கள் என்று வேண்டாம் என்று சொன்னார்களோ, அல்லது இவை வீட்டுக்கு எந்த வகையிலும் பயன்படாது என்று சொன்னார்களோ, அல்லது இவை பலரும் புழங்கும் பூங்கா, அரண்மனை போன்றவற்றிற்குத்தான் என்று சொன்னார்களோ, மொத்தத்தில் அவரின் கருத்துக்கு மதிப்பளித்து அதை வெட்டி எடுத்தேன் ஆனாலும் எனக்கு அதை வெட்டி எடுத்தது பற்றி வருத்தமே...அப்படி அதை மறக்காமல் இருப்பதால் தான் அது பற்றி உங்களிடம் இன்று சொல்ல முடிந்திருக்கிறது.

Related image


கடந்த முறை நடைப்பயிற்சியின்போது பார்த்தேன் ஒட்டுப்பள்ளத்து சாலையில் ஒரு தென்னையின் கீற்று மின் கம்பியில் பட்டு தீப்பொறியை கொட்டிக் கொண்டே இருந்ததை...எவரிடமாவது சொல்லலாம் என்றால் தொடர்புடைய எவரையும் காணமுடியவில்லை...

இப்போது தினமும் காலை 6 மணி 20 நிமிட வாக்கில் தினமும் கல்லூரி செல்கையில் பேருந்து நிறுத்தத்தில் அந்த பெரிய அரச மரத்துடன் உறவாடிக்கொண்டபடி இருக்கிறேன். அந்த மரம் எப்படியோ சாலையோரம் இருந்தும் இன்னும் வெட்டுப்படாமல் வெண்ணெங்கொடி முனியப்பன் சேலத்து சாலையில் தப்பிப் பிழைத்தது போல தப்பி இருக்கிறது....மிக வளர்ந்த மரம் பரவலாக கிளை பரப்பி வார்த்தையில் சொல்ல முடியாது, சொல்லில் வடிக்க முடியாமல் அணிலும் , பறவைகளும் விளையாடியபடி அங்கிருந்து குச்சுகளை , விதைகளை, எச்சத்தை, கீழ் இருக்கும் மனிதர்கள் மேல் தலையில் போட்டபடி...மாபெரும் மரம்...
Image result for ramalinga adigalar


ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி சொல்வது போல: அந்த மரத்துடன் நாம்  அப்சர்வ் செய்யும்போது யுனைட் ஆக முடியுமா கனக்ட் ஆக முடியுமா மெர்ஜ் ஆக முடியுமா இல்லை இல்லை ஒன்நஸ் ஆக வேண்டும் நீ அதுவாக ஆக வேண்டும் என்கிறார் அது முடியுமா, இல்லையே நாம் பார்க்கும்போது அது வேறு நாம் வேறாகவுமே இருக்கத்தான் முடிகிறது. அப்படித்தான் இருக்கிறோம்... ஆனால் அவர் சொல்வது நீ அதுவாகவே ஆக வேண்டும் அப்போதுதான் அப்சர்வர் அப்சர்வ்டு என்கிறார்.


Image result for j krishnamoorthy
அந்த நிலைக்குச் சென்றால்தான் நீங்கள் ஞானி என்கிறார். அப்படி எல்லாம் மரத்தை நம்மால் நேசிக்க முடியுமா என்ன....நாம் வளர்க்கும் நாய், பூனை எல்லாம் நம்மிடம் அப்படித்தான் வந்து ஒட்டிக் கொள்கின்றன...ஆனாலும் நாம் அதனுடன் எல்லாம் அப்படி ஒன்ற முடிவதில்லை அது அன்பாக மேல் விழுந்தாலும் அதன் நகம் பட்டாலும் விஷமாயிற்றே, கீறியது, பூறியது எரிச்சலாக இருக்கிறதே என எச்சரிக்கையாக நாமும் நேசித்தாலும் தள்ளிப் போகிறோமே ஒரு இடைவெளி இருக்கிறதே...

இப்படி இருக்கும்போது எப்படி இடைவெளி இல்லாமல் மரத்துடன் எல்லாம் ஒன்ற முடிகிறது...ஒன்ற வேண்டும் என்கின்றனர்...ஞானிகள் ஞானம் பிறக்க..

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் மனம் மிக வாடினேன்
தேடியலைந்தேன் நல் நேசமிகு உயிரை காலமெலாம் பற்ற...
இறையன்றி, இயற்கையன்றி வேறெதுமிலை என்றே கண்டுற்றேன்
கால உடலில் காற்றுள் நடுவில் பற்றி எரியும் தீ சாம்பலாகும் வரை
திரிந்தபடி இருப்பேன் நானும் ஒரு காற்றாக, நீராக , நிழலாக!

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.





Thursday, May 10, 2018

காலா படவிழாவா காலப் படவிழாவா? கவிஞர் தணிகை

காலா படவிழாவா காலப் படவிழாவா? கவிஞர் தணிகை

Image result for kaala

ஒவ்வொரு படம் வெளியிடும் கட்டத்திலும் சிவாஜிராவ் கெய்க்வாட் என்னும் ரஜினிகாந்த் தமது படம் வெற்றி பெற வேண்டும் என்ற உள் நோக்கத்தில் இது போன்ற துப்பாக்கி குண்டுகளை வானை நோக்கி சுடுவது வழக்கம். அந்த ஸ்டைலைப் பார்த்து மக்கள் கூடி ஆரவாரம் செய்வதும் வழக்கம்

இந்தக் கூட்டத்தில் தென்னிந்திய நதி நீரை இணைப்பதே வாழ்வின் இலட்சியம் என்றும் அப்படி செய்து முடித்து விட்டால் அடுத்த நாளே இறந்து விட்டாலும் அது சந்தோசமே...என்று தலைவர் முழங்க... அங்கே கூடியிருந்த இரசிகப் பட்டாளம் அய்யோ அய்யா நிரந்தர முதல்வர் அம்மா மாதிரி என்றும் நிரந்தர முதல்வராக இருக்க வருவார் என்ற நினைப்புடன் இருக்க இவர் என்ன இப்படி இறப்பை பற்றி இப்போதே பேசுகிறார் என அங்கலாய்த்திருக்கிறார்கள் என்று செய்திகள் தெரிவித்துள்ளன.

லிங்கா அருமையான படம் போகவில்லை என வருத்தப்பட்டிருக்கிறார். எந்திரன் வெற்றிப் படம் வெற்றி விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை என  வருத்தப்பட்டிருக்கிறார், மேலும் மற்ற படங்களைப் பற்றி எல்லாம் பேசி  கவனமாக அரசியல் பிரவேசம் பற்றிய கருத்தை பேசாமல் ஒதுக்கி ஒதுங்கி இருக்கிறார்.

இவர்தான் முதல்வர் அடுத்த ஆண்டில் தெரியும் பாருங்கள் என சாருஹாசன் வேறு ஆருடம் சொல்லி இருக்கிறார். மத்திய தேர்தலும் மாநிலத் தேர்தலும் ஒரே நேரத்தில் நடத்துவது பற்றி தேர்தல் ஆணையம் மறுபடியும் பரிசீலித்து வருகிறது...
Image result for kaala


படம் வெற்றிப் படமானபிறகு அரசியல் கட்சி அறிவிப்பு செய்வார் போலும். மருமகன் தனுஷ் வேறு சிறப்புரையாற்றியிருக்கிறார்...ஏ.சி. சண்முகம் போன்ற மாபெரும் எம்.ஜி.ஆர். இரசிகர்கள் மாபெரும் பணக்காரர்கள் இவரது கூட்டத்தில் தவறாது இடம் பெற்றிருக்க விழா இனிது முடிந்திருக்கிறது.

அடுத்த கூட்டத்தில் 2. 0 விற்கு அல்லது அதன் முன்பாகவே இவரது கட்சி அறிவிப்பு பற்றியும் விஜய் இரசிகர் மன்ற ஒத்துழைப்பு பற்றியும் செய்திகள் வரக்கூடும்.

Image result for kaala

இதற்கெல்லாம் முன் இவர் எவ்வளவு பெறுகிறார் படத்துக்கு எனக் கேட்டுள்ள கேள்விக்கு எனது ரேட்டை எனது சம்பளத்தை தருபவர்கள் முடிவு செய்து கொடுக்கிறார்கள்...நானல்ல என அந்த கேள்வியிலிருந்தும் ஒதுங்கிக் கொண்டிருக்கிறார். எம்.ஆர்.இராதா சொன்னபடி வரி என்பது மக்களின் பணம், தியேட்டரில் டிக்கட் வாங்குவது யாவும் மக்கள் பணம் அதை வாரி சுருட்ட விழா...யாரோ ஒருவர் முதல்வர் ஆகட்டும் ஆனால் அந்த ஆட்சி மக்களுக்கு நல்ல ஆட்சியாக இருந்தால் போதும் அனைவருமே பாராட்டுவார்கள்

Related image


மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Wednesday, May 9, 2018

உச்ச நீதி மன்றமா ஆளும் கட்சி நீதிமன்றமா? கவிஞர் தணிகை

உச்ச நீதி மன்றமா ஆளும் கட்சி நீதிமன்றமா? கவிஞர் தணிகை

Image result for supreme court of india

கடந்த காலத்தில் நிகழ்ந்து வரும் சட்டம், நீதி, நிர்வாகம் ஆகிய ஆட்சித்தூண்களை கவனிக்காமல் மேலோட்டமாகப் பார்ப்பவர்க்கே தெரிந்திருக்கும் வரும் செய்தி யாவும் தற்போது ஆளும் வர்க்கத்துக்கு சாதகமாகவே உச்ச நீதிமன்றம் இயங்கி வருகிறது என்பதை எல்லா வழக்குகளிலுமே அவர்களுக்கு சாதகமான தீர்ப்புகளே கொடுத்திருக்கிறது என்பதையும்.

அதில் ஓரிரு நாள்  முன் காவிரி நதி நீர் மேலாண்மை வாரியம் பற்றியும் உச்சநீதி மன்றம் மே 14 அன்று வரை தள்ளி வைத்து அதன்பிறகே அது பற்றி தெரிவிக்கப்படும் என்ற ஒரு தேதி குறிப்பிட்டது கர்நாடகா தேர்தலை மையப்படுத்தி மே 12 தேர்தலுக்கும் பின் மே 15 ல் வாக்கு எண்ணிக்கை என்பதை எல்லாம் கருத்தில் கொண்டு.

அமித் ஷா வழக்குகள் ஏதும் எந்த நீதிமன்றத்திலும் குற்றவாளி என நிலுவையில் இல்லை

கஃபீல் கான் என்னும் குழந்தைகள் நல மருத்துவரும் உத்தரப்பிரதேசத்தின் பிரதான மருத்துவமனையின் துணை நிலையில் இருந்தவரும், ஆக்ஸிஜன் சிலிண்டர் விநியோகம் இல்லாததால் மாண்ட 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் சம்பவத்தில் நாட்டுக்கே பேருதவி புரிந்த இந்த மருத்துவரை தண்டித்து நீதி வழங்கியதும் அது பற்றி அவரது கடிதம் வெளியாகி அதன் பின் அவருக்கு பரோல் வழங்கப்பட்டதும்

கே.எம்.ஜோசப் என்னும் உத்தரகாண்ட் நீதிமன்றத்தின் தலமை நீதிபதியை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிப்பதற்கும் பதிலாக இவர் ஒரு வழக்கில் குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டுவந்தது தவறு எனத் தீர்ப்பளித்த காரணத்தால் காங்கிரஸ் கட்சிக்கு துணையாக செயல்பட்டார் என கருத்து கொண்டு நேரடியாக ஒரு  இந்து மல்ஹோத்ரா என்ற பெண் வழக்கறிஞரை அந்த  காலி இடத்தில் நியமித்து கொலிஜியம் என்னும் நீதிபதிகளை நியமிக்க பரிந்துரை செய்யும் அமைப்பின் கருத்தை தூக்கி எறிந்ததும்..

இந்த நாட்டின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக வழக்குகளை ஒதுக்கும் பிரச்சனையில் மற்ற 4 நீதிபதிகள் நேரடியாகவே போர்க்கொடி அதற்காக‌ தூக்கியதும்  காங்கிரஸ் கட்சி அவருக்கு எதிராக அவரை பதவி நீக்கம் செய்யச் சொல்லி அரசிடம் விண்ணப்பித்ததும் அதை மந்திரி நிராகரித்ததும்

தமிழகத்தின் நிரந்தர முதல்வர் ஜெ...எப்படி நீதிமன்றங்களை கையோள்வாரோ அதை விட மிக அதிகமாக மத்தியில் ஆளும் கட்சி அப்பட்டமாக நீதிமன்றத்தை தனது சார்பாக கையாண்டு வருகிறது இந்த நாட்டின் இழுக்கு.

சட்டம் பாராளுமன்றம், நீதி உச்ச நீதிமன்றம், நிர்வாகம் அரசு அலுவலகங்கள், இப்படி யாவுமே  ஆளும் கட்சியிடம் தஞ்சம் புகுந்ததை கண்கூடாக காணமுடிகிறது..

சிறந்த ஆளுமை இருக்கும்போது பாராளுமன்றம் புகழ் பெறும், சிறந்த நீதி இருக்கும்போது நீதிமன்றம் புகழ் பெறும், இப்போது பிரதமரின் பெரும் செல்வாக்கு யாவற்றையும் வீழ்த்தி இருக்கிறது என்பதை சமூக நோக்கர்கள் வெளிப்படையாகவே விவாதிக்கிறார்கள்...

நல்ல நிர்வாகம் இருந்தால் தேர்தல் கமிஷன் ,  CBI சி.பி.ஐ, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகள் யாவுமே சுதந்திரமாக செயல்பட்டால் அந்த நாடு நிறைய வெளிப்பாட்டுத் தன்மையுடன் நல்லாட்சிக்கு அடையாளமாய் விளங்கும். எப்போது இப்படி ஆளும் கட்சிக்கு, அரசாட்சிக்கு மண்டியிடும் அமைப்புகளாக மாறி விட்டது எதைக் காட்டுகிறது எனில் ஆட்சி முறையின் அவலத்தை அவர்களுக்கு ஒரு விதமான பயம் வந்துவிட்டதை, தம்மை யன்றி வேறு கருத்துடையார் முளை விடக்கூடாது என்பதையும்தான்

நீட் அதற்கு ஒரு சிறந்த உதாரணம். அட தேர்வு எழுதும்  முன் மாணவ மாணவியரின் காதில் எல்லாம் டார்ச் அடித்து பார்த்து இருக்கிறார்கள்... அதை ஊடகம் பார்த்துக் கொண்டு செய்தியாக்கியபடி சும்மா இருக்கிறது..

தமிழக அரசும் துணை போகிறது. எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒழுக்கம் யோக்கியதை போன்றவற்றில் மிகச் சிறப்புடன் இருப்பதால், ஏதாவது சொல்லிவிட்டால், செயல்பட்டால் உடனே ரெய்ட் வந்து விடுமே அதனால் பார்த்துக் கொண்டே  ஒன்றும் செய்யாமல் காலத்தை கழித்தபடி இருக்கின்றன.

அந்தக் காலத்தில் உச்ச நீதிமன்றத்தை உச்சிக் குடுமி நீதிமன்ற என்றெல்லாம் சொல்வார்கள்...இந்தக் காலத்தில் அவற்றை பாவி நீதிமன்றம் என்றும் சொல்லலாம் காவி நீதி மன்றம் என்றும் சொல்லலாம்.

எண்ணிலடங்கா நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் நிலுவையில் இருந்தும் அவற்றை கண்டு கொள்ளாத நீதிமன்றங்கள்...இப்போது கர்நாடகா செய்யும் அவமதிப்புக்கும் கண்டும் காணாமல் ஒத்துழைத்திருக்கின்றன.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Tuesday, May 8, 2018

ஒர் பயணத்தில்: கவிஞர் தணிகை

ஒர் பயணத்தில்: கவிஞர் தணிகை

Image result for lot of obesity travellers in a bus of Tamil nadu

அண்மைக் காலத்தில் பேருந்து பயணத்தை அதிகம் மேற்கொள்ள வேண்டிய நிலை. எங்கும் பரவலாக பார்ப்பது ...உடல் உழைப்பு செய்வோர் அதிகம் அல்ல...( மெல்லிய தேகமோ உடலை ஒட்டிய வயிறோ அல்ல...) எனவே பெரும் உடல் வாகுடன் இருக்கிறார்கள்.பெரிய பெரிய உடம்பு, தேவையற்ற வயிறு, தொந்தியும் தொப்பையுமாக...ஆங்கிலத்தில் ஒபிசிட்டி என்பார்களே அதுதான்...

ஒரு 9 ஆம் வகுப்பு மாணவர் வந்தார் அவரின் உடல் பளு மிக அதிகம், முன்னால் வந்திருந்த வயிறு நின்று கொண்டிருந்த என்மேல் உரசிக் கொண்டே வந்தது..

அடுத்து இடம் கிடைத்தவுடன் ஒரு கல்லூரி மாணவர் அருகே வந்து அமர்ந்தார். அவரும் தொந்தியும் தொப்பையுமாகவே இருந்தார்.


பேருந்தில் அமர்ந்திருந்த , வழியில் நின்று கொண்டிருந்த பெரும்பாலான மனிதர்கள் பெரிய உருவமாக சதைப் பிடிப்புடன் குண்டு குண்டாகவே இருந்தனர் ஒருவர்க்கொருவர் விலகி வழி விடவே முடியாதபடி அவ்வளவு மலை போல‌

 ஒரு மூவர் இருக்கையில் ஒரு பெரும் உடல் தேகமுள்ள பெண் காலை வெளியே வைத்து அமர முடியாமல் அமர்ந்தபடி அதில் வேறு அவ்வளவு கூட்டத்தில் கருமமே கண்ணாயிருக்கிறாராம், மல்லிகைப்பூவைக் கட்டிக் கொண்டே இருந்தார்...

மேச்சேரி வந்ததும் பின் இருக்கை காலியானதும் எழுந்து பின்னால் அமர்ந்து கொண்டார். 

இது போலவே அதிகம் காட்சிகளை ஒவ்வொரு பேருந்து பயணத்திலும் சகஜமாக காண்கிறேன்... எங்கெங்கும் எல்லா ஊர்களிலும் பரவலாக காணமுடிகிறது.

 காலம் மாறிவிட்டது. திடகாத்திரமான நல்ல உயரம் உருவி விட்ட உடம்பு, ஒட்டிய வயிறு ஆகியவற்றை பெரும்பாலும் காண்பதற்கு மாறாக இது போன்ற காட்சிகளே அதிகம் காணப்படுகிறது..
காரணம்...
1. உணவு முறை சரியில்லை
2. உடல் உழைப்பு போதுமான அளவு இல்லை
3. எல்லாமே தொலைக்காட்சி முன் அமர்ந்து நேரம் அதிகம் செலவளிப்பது.
4. மேலும் செல்பேசி அமர்ந்து கொண்டே இளைஞர், சிறுவர் என்ற வித்தியாசமின்றி நேரம் கடந்து பார்த்தபடியே உபயோகித்தபடியே இருப்பது..
5. எங்கும் நடந்து போகும் வழக்கமே இல்லாமல் போனது
6. எந்த விதத்திலும் உடற்பயிற்சி உடலை சரிசெய்யும் என்ற நினைவும் நம்பிக்கையும் இல்லாமல் வாழ்ந்து மடிவது...

இதில் வேறு வடக்கத்தி மனிதர்கள் நிறைய வந்து போகிறார்கள்.இங்கிதமே இல்லாமல் ஒருவர் போகிறார்கள் வருகிறார்கள் என்றா உணர்வே இல்லாமல் மரமே போல திரிந்து கொண்டே...


மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Monday, May 7, 2018

மூச்சுக் காற்று: கவிஞர் தணிகை

  மூச்சுக் காற்று: கவிஞர் தணிகை

1. நல்லதை செய்ய காலம் தாழ்த்தாதே
   கெட்டதை உடனே செய்யாதே.


Related image


2. கைபேசியின் தேவையற்ற செய்திகள் குப்பைக் கூடைக்கு
   தியான வாழ்வின் தேவையற்ற எண்ணங்கள் ஆழ்கடல் மீனுக்கு

Related image


3. உயரும் புவிச்சூட்டுக்கு நீங்களும் காரணம்
    கி.பி. 2100ல் 2 மீ கடலின் மேற்பரப்பு உயருமாம்
     எப்படியெல்லாம் தடுக்கலாம்? யோசி .செயல்படு!
Image result for global warming warning


4. நவ பாரதத்தில் காந்தி, பாரதி, கலாம் காலம் மலையேற‌
   வன்முறையும், மதவாதமும், சாதியும் தழைத்தோங்க...

Image result for religionism

5. நினைவு என்றா ஒன்றை நீக்கிப்  பார்க்கின்ற போது
   மனம் என்ற ஒன்று இல்லை...ரமண மஹரிஷி.


Image result for ramanar

6. தியானப் பயிற்சி செய், மன வெங்காயத்தின் நினைவுத் தோலை
   உரித்துப் பார்க்க‌

Image result for meditation


7. படிக்காதவரை விட அரைகுறையாய்ப் படித்தவரே அபாயகரமானவர்கள்.

Image result for half knowledge is dangerous quote

8. நாளை செய்கிறேன் , பார்க்கலாம் என்பவரை விட
   தன்னால் முடியாது என்பவரே நேரமையானவர்

Image result for spanking frank is good than hiding


9. இறக்கும் வரை முதலைக்கு வளர்ச்சி
   இருக்கும் வரை தொடரட்டும் உங்கள் முயற்சி.


Image result for try until your end

10. அரசின் இலை அசைவதாயிருந்தாலும்
    பணக்காற்று அவசியம் தேவை: இலஞ்சம்.

Related image


        முன்னோரின் முன் மொழிகளும்
         தணிகையின் மணி மொழிகளும்




            நூலில் இருந்து

மறுபடியும் பூக்கும் வரை
 கவிஞர் தணிகை.

Sunday, May 6, 2018

றாப்பு: கவிஞர் தணிகை

றாப்பு: கவிஞர் தணிகை


Image result for un known names and decayed persons slangs

ரமேஷ் ஒரு நெருக்கடியான கட்டத்தில் துணைவி வாரிசை கர்ப்பம் தரிக்கும் காலக்கட்டத்தில் பங்காளிகள் ஏற்படுத்திய ஒரு இக்கட்டான கட்டத்தில் ஒரு வீடு வாங்கலாம் என முயற்சித்தான். அலையோ அலை என்று அலைந்து அவனிடம் அப்போதிருந்த தொகையை விதைத்து ஒரு நொடிந்து போன இடிந்து போன ஒரு ஓட்டை வில்லை வீட்டை வாங்கினான்.

என்னதான் இருந்தாலும் ஒரு வீடு விலாசம் என்றெல்லாம் இருக்க வேண்டுமல்லவா அப்போதுதானே சமுதாயத்தில் மதிப்பு.

அவன் வாங்கிய வீடு எப்படியும் வருடத்தில் ஓரிரு முறை அவன் அங்கே குடி வைத்திருக்கும் வீட்டு வாடகைதாரரின் பணத்தை ரிப்பேர் என்ற செலவுக் களத்தில் விழுங்கிவிடும்.

அது கறையான் ஓட்டுக்கூரையை மென்று தின்று கொட்டிய மண்ணுக்கு பதிலாக அந்த ரீப்பர், வாரைக் கட்டைகளை மாற்றி, சுவரை சரி செய்து ஓடுகளை திரும்ப மாட்டியதாக இருக்கலாம் அல்லது

கூடுவாய் தகரம் கீழே விழுந்துவிட்டது மழை நீர் செல்ல மீண்டும் தகரத்தை ஒழுங்காக புதிதாக போட வேண்டுவதாக இருக்கலாம்.

தண்ணீர் தொட்டி சரி செய்வதாக இருக்கலாம்
அல்லது குளியலறை, கழிவறை சரி செய்த் கதவை போட வேண்டியதாக இருக்கலாம். அல்லது மின்சார ஒயரை மாற்றியே ஆக வேண்டும் மிகவும் பழையதாக இருக்கிறது என்பதாக இருக்கலாம்...

அப்படித்தான் அந்த மழைக்காலத்தில் கழிவறைகளின் மேல் மூடப்பட்டிருந்த கருங்கல் மூடிகள் அதன் அடிச் சுவர் விழுந்து அந்தமூடிகள் கழிவறை உள் விழுந்து ஒரு பிரச்சனை  மழை தூவானமாக நிற்காமல் தூவிக் கொண்டே இருந்த காலம்.

நல்ல வேளை அந்த நேரத்தில் ஓய்வறையை பயன்படுத்தச் சென்ற அந்தக் குடி இருந்த பெண் உள் விழாமல் தப்பிப் பிழைத்துக் கொண்டார். இப்படி இருக்கும்போது அந்த ஓய்வறையை/ கழிப்பறையை சுத்தம் செய்து விட்டு அந்த கழிப்பறையின்  சுற்றுச் சுவர்களைக் கட்டி அந்த தொட்டியை சரி செய்து மறுபடியும் பயன்படுத்த சீர் செய்து தர வேண்டிய நிர்பந்தம்.

தேடினான்...சாலை ஓரம் ஒரு வாகனம் டேங்கருடன் நர்மதா செப்டி டேங்க் கிளீனர் என இருந்தது...கூப்பிட்டான்...வந்தார்கள் ரேட் பேசவில்லை. அட எவ்வளவுப்பு சொல்லுங்கப்பா என்றால்... பார்த்துக் கொள்ளலாம் சார் விடுங்கள் என்று கூலியை நிர்ணயம் செய்யாமலே... சார் இது பம்ப் வைத்து இழுக்க முடியாது, ஆட்கள் கீழ் இறங்கி வேலை செய்ய வேண்டும் என்று சொல்லி கீழ் இறங்கி வேலை செய்து அள்ளிக் கொட்டினார்கள் சமயத்தில் காம்பவுண்டுக்கு வெளியே கூட அவசியத்தின் பாற்பட்டு கொட்டி விட்டார்கள், வேண்டாம் என்று சொல்லியும் கேளாமல், அது அக்கம் பக்கம் வீட்டாரிடம் எப்போதும்  விழிப்புணர்வுடன் அந்த வீட்டில் அடுத்த வீட்டில் என்ன நடக்கிறது என கண்குத்திப் பாம்பாக பார்த்து வருவோர்க்கு வாய்க்கு மெல்ல அவல் கிடைத்தாற்போல ஆக சண்டைக்கு மும்முரம் செய்தார்கள்.

ரமேஷ் சண்டை செய்யும் மன நிலையில் இல்லாததால், நான் பொறுப்பு நான் அப்புறப்படுத்தி விடுகிறேன் எனச் சொல்லி அப்புறப்படுத்த உள்ளூர் நபர்களையும் வரச்சொல்லி அவர்களுக்கும் உரிய கூலியைக் கொடுத்து நகர சுத்திகரிப்பு பணியாளர்களையும் கவுன்சிலர் வழியே சொல்லி ஏற்பாடு செய்து அந்தப் பிரச்சனை பெரும் பிரச்சனையாகாதவாறு சரி செய்து விட்டான்.

இந்த உள் இறங்கி அள்ளி எடுத்த கோஷ்டி, றாப்பு, என என்னன்னவோ புரியாத மொழியில் பேசிக் கொண்டு அது வெகு அசுத்தம் என்றெல்லாம் பாசாங்கு காட்டி,,, கடைசியில் ரமேஷால் கொடுக்க முடியாத ஒரு பெரும் தொகைக்கு வேட்டு வைத்தார்கள்...

வீராப்பு அல்ல...அந்த றாப்பு என்ற வார்த்தையையும், ஒரு கூலிக்கு எவ்வளவு எனப் பேசாமலேயே நல்ல நபர்கள் மாதிரி அப்புறாம் பார்த்துக் கொள்ளலாம் சார் என வேலையை செய்வதாக சொல்லி விட்டு கடைசியில் ஒரு மிகவும் சுமக்க முடியாத தொகையை கறந்து சென்று விட்டார்கள்...

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே என்று அந்த வேலையை செய்து முடிக்கும்வரை அவர்களுக்கு வேண்டுமானதை எல்லாம் செய்து கொடுத்தும் அவர்களின் நக்கல் பேச்சு, கேலியைப் பொறுத்தும், நமக்கு வேலை ஆக வேண்டுமே என்று பொறுத்த்ப் போய் அந்த சுவர்களை அவனுக்குத் தெரிந்த மேஷன் ஒருவரை நியமித்து எடுத்துக் கட்டி மிக நல்ல முறையில் அந்தப் பணியை செய்து முடித்த ரமேஷ்... அந்த றாப்பு என்ற சொல்லை மட்டும் அவனது வாழ் நாள் முடியும் வரை மறக்கவே இல்லை.

 அதிலிருந்து நாம் ஒன்றைக் கற்றுக் கொண்டது என்ன வென்றால் அந்தக் காலத்தில் செப்டிக் டேங்க்களில் தேவையான பக்கங்களில் சுவரை மட்டும் பூசிவிட்டு அடியில் சிமென்ட் பூச்சு பூசாமல் அப்படியே விட்டிருந்தார்கள். அது உள் செல்லும் நீரை உறிஞ்சி விட்டு அசுத்தத்தை மக்க வைத்து அப்படியே கரு கரு என ஆக்கி விட்டு துர் நாற்றம் எழுப்பாத எருவாகி இருந்ததுதான்...
Related image


அன்றுமுதல் ஒரு வேலை செய்யுமுன் அதை முடிக்க எவ்வளவு ஆகும் எனக் கேட்காமல் எந்த வேலையை செய்யவும் எவரையும் அனுமதிப்பதுமில்லை

நாணயம், மனித நா நயம்... இழி பிறவிகளும் ஈனத்துப் பிறவிகளும் எல்லா தரப்பிலும் உண்டு...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

இந்தியாவில் இப்படியும் ஒரு வாழ்க்கை


டிசைனருடன் ஆலோசனை



தென் மும்பையில், அல்டாமவுண்ட் சாலையில் உள்ள ஆடம்பரமான அரண்மனை கோபுரம் ஆன்டிலியா-வில் தான் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி வசித்து வருகிறார். முகேஷ் அம்பானியின் மனைவி நீதாவின் ஆசைக்கு இணைங்க அவர் மீதுள்ள காதலை வெளிப்படுத்தும் வகையில் கட்டப்பட்டுள்ள இந்த வீடு. உலகத்தின் மிகவும் விலையுயர்ந்த தனிநபரின் வீடாக கருதப்படுகிறது. அப்போ எவ்வளவு காதல் என்பதை நீங்களே பாருங்கள்.

குளுமையாக இருக்கும்

 இந்த வீட்டின் சிறப்பை உணர்த்தும் வகையில் ஒரு சின்ன பிட்டு போட வேண்டும் என்றால் ஆன்டிலியா ரிக்டர் 8 அளவு கொண்டு நிலநடுக்கத்தை கூட தாங்கும் அளவிற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டில் முகேஷ் அம்பானி எப்படியெல்லாம் வாழ்கிறார் தெரியுமா..?
வீட்டிற்கே ஹெலிகாப்டர்
 எப்படி யோசனை வந்தது ஒரு முறை, அம்பானியின் மனைவி நீதா, நியூயார்க்கில் மாண்டரின் ஓரியண்டலில் உள்ள ஒரு ஸ்பாவில் இருந்து சென்ட்ரல் பார்க்கை பார்த்துக் கொண்டிருந்தார். அங்குக் கண்ட சமகால உள் அலங்காரத்தால் கவரப்பட்ட அவர், அதைப் பற்றி டிசைனரிடம் விசாரித்தார். டிசைனருடன் ஆலோசனை இப்படி ஒரு வீட்டைக் கட்டும் நோக்கில் மாண்டரின் ஓரியண்டலின் டிசைனர்களான பெர்கின்ஸ் & வில் மற்றும் ஹிர்ஷ் பெண்டர் அசோஸியேட்ஸ் அவர்களை அம்பானி குடும்பத்தார் கலந்து ஆலோசித்தனர்.
தொங்கும் தோட்டங்கள்


 உயரமான ஒரு அற்புதம் இதன் அற்புதம் என்னவென்றால் கண்ணாடி மாளிகையான ஆன்டிலியாவின் கோபுரங்கள், மேகத்தைக் கிழித்து செல்லும் கோபுரத்தை போல் மும்பை தொடுவானத்தில் காணப்படும். 27 மாடி கோபுரம் 570 அடி இந்த ஆன்டிலியா 50 மாடி கோபுரத்தை விட உயரமானது, இதில் 27 மாடிகள் உள்ளது. 570 அடி உயரத்தைக் கொண்ட இந்தக் கட்டிடத்தில் சில தளங்கள் சராசரி உயரத்தை விட இரண்டு அல்லது மூன்று மடங்கு உயரமாக இருக்கும். மிகப்பெரிய வாழும் இடம் 4,532 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டது ஆன்டிலியா. இது தோராயமாக 49,000 சதுரடியாகும். 

கார்களுக்கும் கூட சொகுசு
இந்த வீட்டில் அம்பாணி குடும்பத்தார் 5 பேர் வசிக்கிறார்கள். 600 பணியாளர்கள் அம்பானி குடும்பத்தாருடன் சேர்ந்து இந்தச் சொகுசு மாளிகையைத் தினசரி அடிப்படையில் பராமரிக்க 600 பணியாளர்கள் வசிக்கிறார்கள். தனித்துவம் வாய்ந்த ஒவ்வொன்றும் ஒவ்வொரு தளத்திலும் பொதுவான அமைப்பைக் கொண்டுள்ள ஹோட்டல் அல்லது அபார்ட்மெண்ட்டை போல் அல்லாமல்,

மிகப்பெரிய வாழும் இடம்

 ஆன்டிலியாவில் எந்தத் தளமும் ஒரே மாதிரியான அமைப்பைக் கொண்டதில்லை, பொருட்களைப் பயன்படுத்தியதில்லை. ஒன்பதாவது தளத்தில் உலோகம் ஒன்பதாவது தளத்தில் உலோகம் பயன்படுத்தப்பட்டிருந்தால் பன்னிரண்டாவது தளத்தில் அதனைப் பயன்படுத்தக்கூடாது. செய்ததையே செய்யாமல், 
உட்புறத்தில் பனி உலகம்

நிலைத்தன்மையுடனான பல்வேறு பாணிகள் மற்றும் வடிவங்களைக் கொண்ட கட்டிடக்கலையின் உருவகமாக இந்தக் கட்டுமானம் இருக்க வேண்டும் என்பதையே இதன் பின்னணி. ஆடம்பரத்தின் மடியில் அனைத்து வகையிலும் ஆடம்பரத்தை அள்ளித்தெளிக்கும் ஆன்டிலியா. பல்வேறு தளங்களுக்கு சேவையளிக்க ஒன்பது லிஃப்ட்கள் உள்ளது. குடும்பத்தார், விருந்தாளிகள் மற்றும் பணியாளர்களுக்கு தனித்தனி லிஃப்ட்கள் உள்ளது. உடற்பயிற்சியுடன் கலந்துள்ள சொகுசு அம்பானி வீட்டில் ஸ்பாவுடன் கூடிய கிரிஸ்டல் சரவிளக்குகளைக் கொண்டுள்ள மிகப்பெரிய பாரூம் உள்ளது.
உடற்பயிற்சியுடன் கலந்துள்ள சொகுசு


 இந்த அறையில் உட்புற/வெளிப்புற மதுபானம் அருந்தகம், ஓய்விடங்கள், கழிப்பறைகள் மற்றும் ஒப்பனை அறைகள் போன்றவை உள்ளது. உட்புறத்தில் பனி உலகம் இந்தக் கட்டிடத்தில் தனி பனி உலகம் ஒன்றுள்ளது. இதனை ஐஸ் ரூம் என அழைக்கிறார்கள். குடும்பத்தாரும் விருந்தினர்களும் மும்பை வெயிலில் வதைபடும் போது இந்த அறையைப் பயன்படுத்துவார்கள். 
ஆடம்பரத்தின் மடியில்

கார்களுக்கும் கூட சொகுசு ஆன்டிலியாவில் அம்பானி குடும்பத்தாரின் கார்களை நிறுத்த மட்டும் ஆறு தளங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. 7-ஆவது தளத்தில் தனியார் கார் சேவை மையம் உள்ளது. தொங்கும் தோட்டங்கள் நன்றாகக் கட்டப்பட்ட இந்த மாளிகை டபிள்யு வடிவிலான தொங்கும் தோட்டங்களைக் கொண்டுள்ளது.
உயரமான ஒரு அற்புதம்

 இது கட்டிடத்தின் முகப்பிற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. குளுமையாக இருக்கும் அலங்கார நோக்கத்தைத் தவிர, இவை சூரிய ஒளியை உறிஞ்சுவதால், கட்டிடத்தின் உட்புறத்தைக் குளுமையாக வைத்து, ஆற்றல் பாதுகாப்பு சாதனமாகத் திகழ்கிறது. 

27 மாடி கோபுரம் 570 அடி

வீட்டிற்கே ஹெலிகாப்டர் ஆன்டிலியாவில் மூன்று ஹெலிபேட் உள்ளது. மேலும் ஹெலிகாப்டர்களுக்காக கட்டுப்பாடு மையத்தைக் கொண்டுள்ள ஏர் ஸ்பேஸ் தளமும் உள்ளது. பணியாளர்கள் படை உலகத்தின் மிகவும் விலையுயர்ந்த இந்த வீட்டைப் பராமரிக்க 600 பணியாளர்கள் உள்ளனர். இவர்களை வீட்டின் உரிமையாளர் மிகவும் நன்றாக பார்த்துக் கொள்கிறார். இவர்கள் ஓய்வெடுக்கக் கட்டிடத்தில் தனியாக ஒரு அறை உள்ளது. 
எப்படி யோசனை வந்தது

thanks to :www.goodreturns.in

Read more at: https://tamil.goodreturns.in/news/2016/08/03/facts-you-didn-t-know-about-antilia-an-world-richest-ambani/articlecontent-pf22867-005817.html

Saturday, May 5, 2018

கார்ல் மார்க்ஸ்: இரு நூறு ஆண்டுகள்...கவிஞர் தணிகை


கார்ல் மார்க்ஸ்: இரு நூறு ஆண்டுகள்...கவிஞர் தணிகை
Image result for karl marx 200


இரு நூறு ஆண்டுகளுக்கும் முன்பே பிறந்து, இறந்து 135 ஆண்டுகள் ஆனபோதும் இந்த மனிதர் நம்முடன் இன்னும் இருப்பது போன்ற உணர்வுக்கு என்ன காரணம்?

1818 மே 5ல் மார்க்ஸ் பிறந்து 1883 மார்ச் 14ல் வாழ்வு முடிந்ததாக காலம் சொல்கிறது. சற்றேறக் குறைய 65 ஆண்டுகள். படைவீர்ர் போர் செய்வதன்றி வேறு அலுவல் எதிலும் ஈடுபட மாட்டார்..என்பது போல எழுதுவது மனித குலத்தை எழுச்சி ஊட்டுவது தவிர வேறு எதிலும் ஈடுபடாத மாமனிதம்...பசி, சோறு கிடைக்காதபோதும் கொள்கை மாறாத ஒரு மாபெரும் தத்துவத்தை உலகிற்கு அளித்து ஆயிரம் ஆண்டுகளின் சிறந்த மனிதராக உயர்ந்து நின்றவர்.ஜெர்மனியில் பிறந்து இலண்டனில் முடிந்து போன ஒரு வாழ்வு.

வறுமை என்றால் அப்படி ஒரு வறுமை தமது 7 குழந்தைகளில் 4 இளைமக் காலத்திலேயே மரணமடைந்தபோதும், தமது 25 வயதில் 29 வயது காதலியை மணமுடித்து குடும்பத்திற்கு வறுமையைத் தந்து உலகுக்கு நல்வாழ்வை ஏந்தி வர வேண்டும் என நினைத்த ஒரு தீர்க்க தரிசி....பால் கூட தாய்ப்பால் கூட தமது குழந்தைக்கு மாரில் சுரக்க சத்தான உணவை மனைவிக்கு ஜென்னிக்கு வாங்கித்தர முடியாமல் குழந்தை மாரை சூப்ப ரத்தம் பாலுக்கு பதிலாக சுரந்ததாக சொல்லும் நிலை... எப்படி இருந்தபோதும் உலகுக்கு இந்த மனித குலத்துக்கு மாற்றம் ஏற்பட ஒரு தத்துவம் அழியாத நெறியில் தந்து சென்றிருக்கிறார்.

அவாது எழுத்துகளைப் படித்தே நிறைய நாடுகளில் அவர் வழியில் இளம்படைகள் நாட்டை கொடுங்கோலாட்சியில் இருந்து அடிமைகளாய்க் கிடந்த மக்களை விடுவித்தன பொருளாதாரத் தீர்வையும் வழங்கின.

நான் அவரது எழுத்தை மூலதனம் என்று மொழிபெயர்க்கப்பட்ட வடிவத்திலும் ஆங்கிலத்தில் டாஸ்கேப்பிட்டல் என்ற நூல் வழியே படித்தேன்.

அவரை விட காந்தி அதிகம் அதாவது காந்தி 60,000 பக்கங்கள் எழுதி இருந்த போதிலும் இந்தியா என்ற ஒரு நாட்டில் மட்டுமே ஆங்கிலேய காலனி ஆதிக்கத்திலிருந்து இந்தியா விடுபட இந்தியா விடுதலை அடைய காந்தியம் உதவி இருக்கிறது என்பது உண்மை எனிலும் பொருளாதார வழிகளுக்கு அவர் சொன்ன வழிகளை முறைகளை எவரும் கடைபிடிக்காததால் இந்தியாவின் நேரு ஆரம்பித்து வைத்த கலப்பு பொருளாதார முறை முதலாளித்துவ ஆட்சி முறைக்கு சென்றுவிட்டதை மாற்ற முடியவில்லை. மக்களாட்சி கட்சிகளாக, சாதிகளாக, மதங்களாக, வாக்கு வங்கிகளாக இலஞ்சம் ஊழல் குயுக்தி , சுய நல முறைகளால் தூர்ந்து கிடக்கிறது...

ஆனால் சோசலிச அல்லது கம்யூனிச நாடுகளைக் கடைப்பிடிக்கும் நாடுகளில் மனிதர்களின் குறைந்த பட்ச அடிப்படைத் தேவைகளாவது பூர்த்தி செய்யப்பட்டு கல்வி மருத்துவம், உணவு, உடை,இருப்பிடத்துக்கான தேவைகள் வாழ்வாதரங்களாக கிடைத்து வருகின்றன...

இந்த முறைகள் வழி லெனின் சாதித்த சோசலிஸ்ட் ரிபப்ளிக்  சோவியத் நாடு பல தலைமுறைகள் அமெரிக்க ஏகாதிபத்திய முதலாளித்துவ நாட்டுக்கு  சரி சமமாக தலை எடுத்து நின்று இப்போதும் ரசியாவில் இந்த ஆட்சி முறை விளங்கிவருகிறது என்னதான் லெனின் சிலை அகற்றப்பட்டாலும் அவரது நினவை அவரது ஆட்சி அடிப்படையை எவராலும் அகற்ற முடியாது.

சீனாவில்  இன்னும் செங்கொடி ஆட்சிதான் , கியூபாவில் இதன் ஆட்சிதான், கொரியா வியட்நாம் இப்படிப்பட்ட நாடுகளிலும்
லாவோஸ்,  போன்ற நாடுகளில் இதன் வீச்சு தான் இன்னும் விரவிக் கிடக்கிறது.
Image result for karl marx 200



காந்திய ராமராஜ்ஜியக் கனவுகள், சோசலிஸ்ட் வளர்ந்து கம்யூனிஸ்ட் அல்லது பொதுவுடமை ஆட்சி முறைக்கு மாறி ஸ்டேட்லஸ் கவர்ன்மென்ட் ஆட்சி முறையில் இல்லாத ஆட்சி என்ற நிலை எல்லாமே கீழ் நிலையில் பொருளாதாரத்தில் உள்ள அடித்தட்டு மக்களை வாழவைக்கும் இலக்கு கொண்டதுதான். ஆனால் செய்முறையில் செயல் முறைகளில் வெகுவான வேறுபாடு உடையன.
 கார்ல் மார்க்ஸ் கூட எடுத்தவுடன் எல்லா முதலாளிமாரையும் வெட்டித்தள்ளி சுட்டுத் தள்ளி பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை கொண்டுவர வேண்டும் என்று சொன்னதாகத் தெரியவில்லை மாறாக நீ எந்த ஆய்தம் ஏந்த வேண்டுமென்பதை உன் எதிரிதான் தீர்மானிக்கிறான் என்கிறார்.

எனவே முதலாளிகள் கோடிக்கணக்கான கோடிகளில் ஆட்சியை விலைக்கு வாங்கி விட்டு, மருத்துவ முகாம் செய்கிறோம், படிக்க வைக்கிறோம் என கண்ணா மூச்சி செய்து ஏமாற்றிக் கொண்டிருக்க, நீரை விலை கொடுத்த வாங்க விலைவாசி பேருந்து கட்டணத்தை முடிவு செய்ய..
இங்கு எல்லாமே தனியார் மயம், தாரளமயம், உலகமயம்...எனவே இந்தியாவில் மார்க்ஸ் கொள்கை இன்னும் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வரவிடாமல் ஏகப்பட்ட தடைகள்...


வேலை இல்லாத் திண்டாட்டம் பற்றியும், கல்வி தனியார் கைகளில் திண்டாடுவது பற்றியும் சொல்லவே வேண்டாம், அதிலும் இப்போது இருக்கும் நடக்கும் மதவாத ஆட்சி தேர்வு எழுதவும் மாணவர்களை ராஜஸ்தானுக்கும் கேரளாவுக்கும் இழுத்தடிக்கிறது...கேட்பார் இல்லை

கேட்கவும் நாதி இல்லை. ஐ.பி.எல் இடம் மாறுதல் நடந்தது. ஆனால் ஐ.பி.எல் ஒவ்வொரு வீடுகளிலும் இளைஞர்கள் வழி வந்து கொண்டுதான் இருக்கிறது. எவருமே அதன் நச்சுத்தனம் வியாபார உத்திகளை உணர்வதாகக் காணோம்.

வங்கிகள் ஏழைகளின் பணத்தைப் பிடுங்கி பணக்கார முதலைகளுக்கு வாய்க்கரிசி வாங்கிக் கொண்டு வாராக் கடனாக வாரி வழங்கி விடுகின்றன.

முதலில் நீரை, நிலத்தை, கட்டடங்களை, ஆலைகளை, தொழிற்சாலைகளை, கல்வி நிலையங்களை, அறக்கட்டளைகளை கோவில்களை மசூதிகளை, தேவாலயங்களை எல்லாம் பொதுவுடமையாக்கி அரசுடைமை செய்து நதி நீரை இணைத்து மக்களுக்கு கல்வி, மருத்துவம், இருப்பிடம், உடை உணவுக்கு உத்தரவாதம் Image result for karl marx 200செய்யும் அரசு வரவேண்டிய நிலை வேண்டும்.




காலம் எல்லா மாறுதலையும் உள்ளடக்கி இருக்கிறது. இந்தியாவிலும் கூட உலகெங்கிலும் இது போன்ற நல்ல மாறுதல் வரவேண்டும், அல்லதை அப்புறப்படுத்தி நல்லதை ஏற்படுத்தி மனித குலத்தை நிறைவாக வாழ வைக்கும் பாகுபாடற்ற ஆட்சி முறை வரவேண்டும் என்பதே நமது அவா.
அதற்கு உரிய மார்க்கமே இந்த கார்ல் மார்க்ஸ் சொன்னது.. . காந்தியத்தை கூட இவர்கள் பின் தொடர் வெகு காலம் ஆகும். ஆனால் கார்ல் மார்க்ஸ் லெனின் கண்ட வழியை மிக விரைவாகவும் எளிதாகவும் கொண்டு வர முடியும்தான். ஆனால் அதற்கும் சுயநலமற்ற தலைமை வேண்டும்.. நல்ல கல்வி அறிவும் புரிந்து செயல்படும் கல்வி தெளிவான சிந்தனை எல்லாம் வேண்டுமே... அதை நோக்கி இயற்கை இந்த உலகை கொண்டு செல்லட்டும்

மதம் அபின் மாதிரி, ஓப்பியம் மாதிரி என்பார் மார்க்ஸ் அதை முழுதாகச் சொல்லப் போனால் அவை போதை வஸ்து என்பதற்காக மட்டுமல்ல மனிதம் படும் வேதனையை அப்படிப்பட்ட ஒரு மனலயிப்பிலாவது இடைக்காலத்தில் கொண்டு செல்லட்டுமே என மார்க்ஸ் சொல்லி இருப்பதாக  ஒரு நண்பர் குறிப்பிட்டிருக்கிறார்...ஆனால் இவை ஒன்றுக்கொன்று முரணாக இருக்கிற கருத்துகள்...ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டியதாக இருக்கிறது.

பெரியார் சொல்லும் கடவுள் இல்லை இல்லவே இல்லை என்ற கூற்றை அவரின் மூடத்தனமின்றி காசு செலவின்றி யாரும் எந்தக் கடவுளையும் வணங்கலாம் என்று சொல்வது எப்படி ஒன்றுக்கு ஒன்று எப்படி முரணாகிறதோ அப்படி...


Image result for karl marx 200


பின்னால் வந்த காந்தியம் உயர்ந்த மார்க்கம் சொல்லியது நிறைய பேருக்கு அது விளங்குவதல்ல, சுலபமாக நடைமுறையில் கடைப்பிடிக்க முடிவதுமல்ல... மார்க்ஸியம் அறிவார்ந்த ஒரு உன்னதமான குழு நாட்டை நல்ல முறையில் கொண்டு செல்ல முடியும் என நிரூபித்த உண்மைகள் பலப் பல. அவை இப்போது நடக்கும் ஆட்சி முறைக்கு மாற்றாக வர வேண்டிய  ஒன்றுதான் அதில் ஏதும் ஊறு இல்லை.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.