Tuesday, September 22, 2020

தமிழ் நாடு அன்பு வழி நற்பணி மன்றம்

 20 .09. 2020 அன்று திருச்சியில் திருவெறும்பூர் தஞ்சை சாலையில் உள்ள பரத் மஹாலில் தமிழ் நாடு அன்பு வழி நற்பணி மன்றத்தின் முதல் பொதுக் குழுக் கூட்டம் சமூக இடைவெளியுடன் சானிடைசர் மற்றும் கொரானா கோவிட் 19 தீண்டாமல் இருக்க பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடைபெற்றது.
 


சரியாக கூட்டம் 10 மணி அளவில் ஆரம்பித்து மாலை 5. 30 மணி வரை நடந்தது. இந்த முதலும் முக்கியமான கூட்டத்துக்கு மாநிலம் எங்கும் இருந்து பல மாவட்டங்களின் பிரதிநிதிகளும் திரளாக கலந்து கொண்டனர். 50 பேருக்கும் மேல் கலந்து கொண்ட இந்த அத்தியாவசியமான கூட்டத்தை தமிழ் நாடு அன்பு வழி நற்பணி மன்றத்தின் சிறப்பு ஆலோசகரும் ஆணி வேராய் இருக்கும் விடியல் குகன் ஒருங்கிணைப்பு செய்திருந்தார்.

சிற்பி கொ. வேலாயுதம் அவர்களின் மாண்பு மிகு ஆசியுடன் வழிகாட்டுதலும் வாழ்த்துகளும் சென்னையிலிருந்து இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்க்கு அமுதவாரிதியாய் இருந்து அவர் கலந்து கொள்ள முடியாத குறையை போக்கியது.

அவருக்காக அவரின் தியாக உணர்வை மையப் படுத்திய தீர்மானமும் இயற்றப் பட்டது. இந்த அரிய நிகழ்வை தலைமையேற்று நற்பணி மன்றத்தின் தலைவர்  அறிவியல் அறிஞர்  மற்றும் தமிழ் நாடு அறிவியல் இயக்க துணைத் தலைவருமான அய்யா சுகுமாறன் நடத்தி வைக்க எழுச்சி உரை ஆற்றினார். இதன் பொதுச் செயலாளர் ராமலிங்கம் அய்யா அவர்கள்.

முன்னதாக வாழ்த்துரை வழங்கினார் மன்றத்தின் சிறப்பு ஆலோசகர்: விடியல் குகன் அவர்கள்
துவக்க உரையாற்றும் பொறுப்பு என்னிடம் வழங்கப்பட்டு சிறப்பாக செய்யப்பட்டது.
எனது துவக்க உரையில்:

அப்துல் கலாம் பாணியில் : செயலே புகழ் பரப்பும் வாய் அல்ல என்ற பழமொழியையும்  Action Speaks More (than) Words ஆக்சன் ஸ்பீக்ஸ் மோர் வேர்ட்ஸ், மோர் தேன் வேர்ட்ஸ் என்ற ஆங்கிலப் பழமொழியையும் குழுமி இருந்தோரை உரத்து உச்சரிக்க வைத்தேன்.

குழந்தைக்கு எப்படி புத்துணர்வு, இளமை, அறியாமை என்ற 3 பண்புகளும் இருந்து அவர்களை வளரவைக்கிறதோ அப்படித்தான் நானும் கலந்து கொண்டிருப்பதாக குறிப்பிட்டேன்.

வயதானவர் எல்லாம் குழந்தை நிலையில் தான் கள்ளம் கபடு சூது வாதற்ற நிலைக்கு மறு சுழற்சி செய்யப் படுகிறார்கள். எனவே தான் அப்துல் கலாம் தமது முதிய வயதிலும் குழந்தைகள், பள்ளிகள், கல்லூரிகள் என நாடிச் சென்றார் என்று குறிப்பிட்டேன்

ஞானி ஒருவரிடம் ஞானோபதேசம் பெற பசியுடன் வந்தவர்க்கு முதலில் வயிறார சோறு போடவும் அதன் பின் ஞானோபதேசம் பற்றி யோசிக்கலாம் என்ற கதையை கூறிவிட்டு எங்கள் மன்றத்தின் இரு முக்கிய பணிகளாக பசி தீர்த்தலும், சுற்றுப் புறத் தூய்மையும் ஐ. நாவில் குறிப்பிட்டது போல இருக்கும் என்ற திட்டமிடல் பற்றியும் குறிப்பிட்டேன்.


. சிச்சோரி படத்தில் எப்படி 3 ஆம் நிலையில் இருப்போர் தியாகத்தை அடிப்படடையாகக் கொண்டு  போட்டிகளில் வெல்லும் நிலைக்கு செல்கிறார்கள் என்ற விருப்பமிகு, ஆசை மிகு, நேசமிகு நடவடிக்கைகளை தியாகம் செய்து கவனச் சிதறல் இல்லாமல் நாட்டு மேன்மைக்கு உழைத்தால் தாம் அர்ப்பணித்தால் தாம் ஒவ்வொரு காலத்துளியும் பயன்பட்டால் தாம் யாவர்க்கும் நன்மை வரும் என்றும் குறிப்பிட்டேன்.

அதற்கு எல்லாத் தலைவர்களும் ஏன் பிரமசாரியத்தை கைக்கொண்டார்கள் என்றும் காமம் பெரும் புலியாக பதுங்கி இருந்து கவனத்தை கபளீகரம் செய்து பாய்ந்து புறப்படும் எனவே தான் அதை அனுமதிக்காத இந்தியத் தலைவர்கள், ஞானிகள், தவசீலர்கள், சித்தர்கள் எல்லாம் பெருமைப் படுத்தப்பட்டார்கள். பெருமைப்பட்டார்கள் என்பதையும் குறிப்பிட்டேன்.

அல்லவை தேய அறம் பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்பு தோல் போர்த்த உடம்பு


என்ற குறளின் மேன்மையும், பற்றி குறிப்பிட்டேன். தலைவர் சுகுமாறன் அவர்கள்  ஆற்று வெள்ளம் போல தனது உரையில் தமது அனுபவத்தை எல்லாம் 34 நாடுகளுக்கு சென்றதையும் 6 மொழிகள் தெரிந்ததையும் குறிப்பிட்டார்.

செயலாளர் ராமலிங்கம் தமது பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டு அத்துடன் உறுதி மொழி ஏற்கச் செய்தார் அந்த உறுதி மொழி சிற்பி. கொ. வேலாயுதம் அவர்களால் முன் மொழியப் பட்டு உருவாக்கப் பட்டிருந்தது.

நிறைய மாவட்டப் பிரதிநிதிகளும் தங்கள் கருத்துரைகளை கோர்த்தனர். அது மட்டுமின்றை சேவை அமைப்புகள் வழியே முகக் கவசம்,சோப்பு, பேஸ்ட்,பிரஸ், சீப்பு இப்படி பல பொருள்கள் அடங்கிய பை கலந்து கொள்ள வந்திருந்த அனைவர்க்கும் சேவை என்ற சேவை அமைப்பினரால் வழங்கப் பட்டது. 
வந்திருந்த அனைவர்க்கும் மரியாதை செலுத்தப் பட்டு மாநில பொறுப்பாளர்களுக்கு நினைவுப் பரிசுகளும் வழங்கப் பட்டன.



மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Monday, September 14, 2020

அன்பின் வழியது உயிர் நிலை: கவிஞர் தணிகை

 அன்பின் வழியது உயிர் நிலை: கவிஞர் தணிகை

Reasons why every business needs a good leadership | Your Training Edge ®

காலை 6.45 மணி பேருந்து ஒர் இளைஞன் என்னைத் தொட நான் அந்த மூவர் இருக்கையில் நகர்ந்து ஜன்னலோர இருக்கைக்கு சென்றமர்ந்தேன். பையையும் நகர்த்திக் கொண்டேன். அந்த இளைஞரைப் பார்த்தேன் முகக் கவசம் அணியாதிருந்தான். முகக் கவசம் அணிய வில்லையா என நான் கேட்பதற்கும் நடத்துனர் வந்து அவர் பங்குக்கு அவரும் கேட்க பாக்கெட் உள்ளே வைத்திருந்த முகக் கவசத்தை எடுத்து மாட்டும் போதே கொரானா வந்திடுமா என்று கேட்டான்.


உடனே செல்பேசியை எடுத்து பேசுவது போல ஒருத்தன் கண்ணாடி போட்டிருக்கிறான் அவனை என பேசி விட்டு கையை ஓங்கி முன்னிருக்கையின் பின் அடித்தான்...

ஒரு கட்டிங் கொடுங்கள் போதும் அதற்கும் மேல் கொடுக்கவே வேண்டாம் என்றான்

அடுத்து எவரிடமோ பேசுவது போல அண்ணா அண்ணா ரீஜார்ஜ் பண்ணி விடுங்கள் அண்ணா காசு தீர்ந்து விட்டது என்றான்

மறுபடியும் இன்னொருவரிடம் பேசுவது போல 30 ஆயிரம் தானே உங்கள் மேல் நம்பிக்கை இருக்கிறது உடனே ட்ரான்ஸ்வர் செய்துவிடுகிறேன் என்றான்...


அப்படியே என்னையும் பார்த்துக் கொண்டிருந்தான் நல்ல வலுவான உடல் தான் அனேகமாக கொத்து வேலை செய்வது போல இருந்தான்...ஆனால் உடனுக்குடன் நிமிடத்திற்கு ஒரு நிறம் என்று மாற்றி மாற்றி உரக்கவும் தாழ்த்தியும் குரலை பயன்படுத்தி பேசினான் என்னையும் அப்படியே பார்த்து வந்தான். நான் அவனை கவனிக்காதது போல கவனித்து வந்தேன் எனது கறுப்புக் குளிர் கண்ணாடிக்குள் இருந்து எனது பார்வை எங்கு இருக்கும் என அறியாதபடி...


இது கடுமையான நிகழ்வாக மாறும் என தென்னாப்பிரிக்காவில் காந்தியை அடித்து பல்லை எல்லாம் உடைத்து அவர் கீழே விழுந்து கிடந்த சம்பவம் நினைவில் வந்தது...ஐந்து வழிச் சாலையில் இறங்கி நண்பராக இருக்கும் ஆட்டோ கண்ணனை எலாம் அழைக்க வேண்டி வருமோ,நடத்துனரை அழைத்து பேருந்தை காவல் நிலையத்துக்கு விடச் சொல்ல வேண்டி வருமோ, ஐந்து வழிச் சாலையில் போக்குவரத்துக் காவலரை அழைக்க வழக்கமாக இருப்பார் இப்போது கொரானா என்பதால் போக்குவரத்து குறைவானபடியால் இருப்பதில்லையே என்றெலாம் நினைவு ஓட்டம்...


அவன் அளவுக்கு நான் உடல் பலம் உள்ளவனாக இல்லை, என்றாலும் நான் சுய நினைவுடன் அவன் ஒரு நினைவின்றி என் மனப் போர் முடிவதற்குள் அவனாக என்ன நினைத்தானோ இவன் எதற்குமே அசர மாட்டேன் என்கிறானே என நினைத்தானோ என்னவோ வேறு இருக்கை காலியான பிறகு அங்கே பின்னால் சென்று அமரப் போய்விட்டான். காலையிலேயே சூடு தலைக்கேறியது இந்த அதிகாலையிலேயே நிலை இப்படி எனில் இவன் வாகனம் எல்லாம் எப்படி ஓட்டுவான் என எண்ணியபடி ஐந்து வழிச் சாலையில் இறங்கி அவன் எனைப் பின் தொடர்கிறானா என பார்த்தபடி நடந்தேன்...


நேற்று கும்பகோணத்திலிருந்து நட்பின் அடிப்படையில் ஒரு குடும்பம் காரில் எங்கள் வீட்டுக்கு வர நேர்ந்தது அவர்களுக்கு வழி தெரியாதே என பேருந்து நிறுத்தத்தில் நின்று ரோஸ் கலர் டீ சர்ட், தலையில் ஒரு நீல நிற தொப்பி, வழக்கத்துக்கு மாறாக வெண்ணிற வேட்டி என அடையாளம் சொல்லி விட்டு காத்திருந்தேன். அவர்கள் வந்து சேர்வதற்குள் ஒரு பைக் வந்து அருகே நின்றது அதில் விடலைகளாக 3 இளைஞர்கள்...வைன் சாப் எங்கே என்று கேட்டார்கள்...சுடுகாட்டில் என்றேன். விழித்தார்கள் மறுபடியும் கேட்டார்கள் அட சுடுகாட்டில் தான் என்றேன் என்னை நம்பவில்ல்லை சற்று தொலைவு சென்று தெரிந்தால் சொல்லணும் தெரியவில்லை என்றால் தெரியலை என்று சொல்லணும் என்று திரும்பி பார்த்தபடி சொல்லிக் கொண்டே சென்றார்கள்


அந்த காய்கறிக்கடையை பார்த்துக் கொண்டிருந்த சிறுவனிடம் என்னப்பா இது உண்மையைச் சொன்னால் இந்தக் காலத்தில் நம்ப மாட்டேன் என்கிறார்கள்...என சிரித்துக் கொண்டோம். உண்மையிலேயே எங்கள் ஊரில் அரசு மதுபானக் கடை சுடுகாட்டில் தான் இருக்கிறது.


அந்த சுடுகாட்டருகே வேறு திசையில் சற்றுத் தள்ளி  மேட்டில் நாங்கள் கட்டி உள்ள கபாலீஸ்வரர் கோயில் நிலமும் அவர்களுக்கு அடைக்கலாமாயிருக்கும் நல்ல வேளை கிருஷ்ணனும் நாங்களும் சேர்ந்து கோவிலாக்கிவிட்டோம். ஆனால் எல்லாப் பெயரையும் போடு என்றதற்கு அதில் சிக்கல் இருக்கிறது என்ற கிருஷ்ணன் அவர் பேர் ஒன்று மட்டும் விளங்கவேண்டும் என்று அந்தக் கதையையும் முடித்து விட்டு, எல்லோரும் சேர்ந்து கட்டிய கோவிலுக்கு யாரும் கர்ப்பக் கிருஹத்துள் நுழையக் கூடாது என  பென்னாகரம் 

பக்கமிருந்து ஒரு அர்ச்சகர் குடும்பத்தை அழைத்து வந்து பூசை நடத்தி வருகிறார். கஷ்டப் படுவது பலர். சுகம் அனுபவிக்க எனச் சிலர்.


இன்று சொல்ல நினைத்த மற்ற ஒன்று: தலைமை என்பதற்கு முடிவெடுக்கும் திறனும்,தொலை நோக்கும் அவசியம் சில நேரம் காமராசர் கணித்த கணிப்பான இந்திராவே இந்தியா என்று எமர்ஜென்சி ரூல் என்று அனைத்து தலைவர்களையும் பிடித்து உள்ளே போட்ட போது காமராசர் கூனிக்க் குறுகி அந்த விசனத்திலேயே பாதி செத்து விட்டார். 

Leadership Crisis: What Can We Do About It (Study) - Great People Inside

நாளை அறிஞர் அண்ணா பிறந்த நாள். இவர் செல்லம் கொடுத்த ஒருவர் முன் உள்ளவரை எல்லாம் தாண்டிச் சென்று தந்திர  அறிவுடன் ஆண்டதும் ஒரு குடும்ப பாராம்பரிய முறையை கட்சிக்கே கொண்டு சென்றதும் அங்கேயும் தொலை நோக்கு குறுகி விட...


அதன் பின் தமிழக ஆட்சிமை மாட்சிமை பற்றிச் சொல்லவே வேண்டாம்...

Birthday Special: 10 facts to know about great Tamil icon C.N. Annadurai |  National News – India TV

அன்பின் வழியது உயிர்நிலை அஃதில்லார்க்கு

என்புதோல் போர்த்த உடம்பு...


அல்லவை தேய அறம் பெருகும் நல்லவை 

நாடி இனிய சொலின்...


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.




Sunday, September 13, 2020

நானும் நட்பாகவே இருக்க விரும்புகிறேன்: கவிஞர் தணிகை

 நானும் நட்பாகவே இருக்க விரும்புகிறேன்: கவிஞர் தணிகை

Thala_Thalapathy Meet-up Mass Edit 😃... - Ennam Pol Vazhkai

உள்ளம் என்பது ஆமை அதில் உண்மை என்பது ஊமை

சொல்லில் வருவது பாதி நெஞ்சில் தூங்கிக் கிடப்பது நீதி/மீதி

தண்ணீர் தணல் போல் எரியும் செந்தணலும் நீர் போல் குளிரும்

நண்பனும் பகை போல் தெரியும் அது நாட்பட நாட்படப் புரியும்...கண்ண தாசன்.


சுமார் 30 ஆயிரமளவுக்கு ஊதியம் பெறும் போக்குவரத்து ஊழியர் எனது ஒரு ரூபாயை வைத்துக் கொள்ளப் பார்க்கிறார் சில்லறை அவரிடம் இருந்த போதும் எனக்கு 29 ரூபாய் கட்டணத்துக்கும் போக‌ மீதம் தரவேண்டிய ஒரு ரூபாயை..அரசும் அதை கட்டணத்தை ரூ 30 என மாற்றிக் கொள்ளலாம் அது நாட்டுக்காகவது போகும்...நாடு எனது ஒரு ரூபாயை எனக்கு எனது ஏழமை பார்த்து போய்ச் சேரவேண்டும் என எண்ணும் போது இவர்கள் இடையில் நான் அவர்களை எல்லாம் விட ஏழமையில் இருப்பது தெரிந்தும் தெரியாமலோ எனது உழைப்பை அவர்கள் சேர்த்துக் கொள்ள முனைகிறார்கள்....கேட்டு வாங்குகிறேன் எனவே நான் அவர்களிடம் நட்பாக இருக்க நினைத்தாலும் வாய்ப்பில்லை. 

Lust meaning | What does lust mean and how to tell the difference between  lust and love

பேருந்தில் கொரானா காலம் ஒதுங்கி ஜன்னலோரம் அமரலாம் என்றால் அங்கும் ஒரு பிச்சைக்காரர் அவருக்கு நான் என்னைக் கொடுத்தால் தான் உண்டு...எனவே அவருக்கும் நான் எதுவும் கொடுக்கவில்லை என ஏமாற்றம்.


சுகாதாரப் பணியாளர்கள் முன்பெல்லாம் ஊதியக் குறைவில் ஊரெல்லாம் திருவிழாவின் போது எல்லாம் வீட்டு வீட்டுக்கு கையேந்துவார்கள் ஒன்று பணமோ அல்லது பட்சணங்களோ உணவுப் பண்டங்களோ கிடைக்கும் ஊரெல்லாம். இப்போது அரசுப் பணியில் உறுதியான போதும் என்னை விட ஊதியம் அதிகமாக கிட்டும் போதும் பெறும் போதும் பழக்கத்தைக் கைவிடாமல் வசூல் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். அதைச் சுட்டிக் காட்டினால் அவர்களிடம் நட்பு பாராட்டும் வழி இல்லை.


வீட்டுக்கு சமையல் எரிவாயு கொண்டு வந்து கொடுக்கும் இளைஞர்க்கு கொடுக்கும் ஒவ்வொரு முறையும் கட்டணத்தை மீறி  சுமார் 50 முதல் 70 வரை ரூபாய் சேர்த்து கொடுக்க வேண்டும் அவர்கள் இரு சக்கர வாகனத்தில் கொண்டு வந்து கொடுப்பதால் மேலும் இவர்களுக்கும் வருடம் ஒரு முறை திருவிழா நன்கொடை வேண்டுமாம் சுட்டிக் காட்டும்போது அங்கே நட்பின் மொழி அற்றுப் போகிறது.


அடிக்கடி மின் வெட்டு நடந்து இணயும் எங்கள் மின் இலாகாவின் மின்வடப் பணியாள் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு அழைப்புக்கும் மக்களிடையே எதிர்பார்க்கிறார் அதை முறையுமாக்கிக் கொண்டார். நான் தருவதே இல்லை...எனவே அங்கும் நட்பு இடைவிரிசல் ஆகி விடுகிறது...

Thala_Thalapathy Meet-up Mass Edit 😃... - Ennam Pol Vazhkai

நீர்க்கட்டண விநியோகம் முறையில்லை எதற்கு மாதம் ஒன்றுக்கு 220 வாங்குகிறீர் இரு நாளைக்கு என்கிறீர் குழாய்  பழுது என பல நாள் நிறுத்திக் கொள்கிறீர் நீர் வரத்தும் நிறைவாயில்லை விமர்சிக்கிறேன் அங்கும் நட்பு நடைமுறை இல்லை.


ஏன் தெருவிளக்கு எரிவதேயில்லை அதை பேரூராட்சி பணியில் வருகிறது...மின்சார பணியில் இருந்து மாற்றி தலைமுறை தலைமுறை ஆகிறது...பழைய மக்கள் பிரதிநிதிகளை நன்றாக செய்ய நிழல் போரிடும்போது அங்கும் நட்பு கொஞ்சம் தள்ளிப் போகிறது..


மின் கட்டணத்தை மாதாமாதம் ஏன் எடுப்பதில்லை? ஏன் அடிக்கடி மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு மீள்கிறது? ஏன் மின் அழுத்தம் குறைவாய் இருக்கிறது...நட்பு தொடருமா? நல்லவேளை மின் கட்டணம் அதிகமாக வருமளவு நடந்து கொள்வதில்லை...


பொது இடங்களில் புகை பிடிக்காதீர் என காண்போரிடையே சொல்வதும், மது அருந்தாதீர் எனச் சொல்வதும், வாகனங்களை கண்ட இடத்தில் நிறுத்தாதீர் என்பதும், வாகனங்களை விதிமுறைப்படி ஓட்டுங்கள் என்பதும் மேலும் பொது இடங்களில் நாகரீகமாக நடந்து கொள்ளுங்கள் எனச் சொல்வதும் எனக்கு நட்பை முறித்து விடும் நடப்பாகிவிடுகிறது.பொதுக் கழிப்பிடத்தை எப்படி இந்தியா பயன்படுத்தி வருகிறது அது போதுமான அளவு இருக்கிறதா அதற்கு நீர் வசதி போதுமான அளவு இருக்கிறதா என்பதெல்லாம் நான் உள் புகா செய்தி.


சரி வீட்டில் தாம் சகோதர சகோதரி இடையே எதையாவது வெளிப்படையாக சொல்லலாம் என்று விமர்சனம் செய்து தட்டிக் கேட்டாலோ அங்கும் நட்பும் உறவையும் பெரிதாக எதிர்பார்ப்பதற்கில்லை. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை..ஊருக்கு உழைத்தாண்டி உதை பட்டு செத்தாண்டி...பொது நல வாதி வெகு ஜன விரோதி..

100+ Best Tamil quotes images in 2020 | photo album quote, quotes, life  quotes

அரசுக்கும் அரசு துறைக்கும் அரசு நிறுவனத்திற்கும் எழுதுகிறேன் சரியான பதில் ஒன்றும் இல்லை பரிசீலனையும் இல்லை எனவே நட்பு பூக்கவே வழி இல்லையே....


இதெல்லாம் அன்றாடம் தேவையான நிகழ்வுகளில் இதல்லாமல் வாகனப் பதிவு, பத்திரப் பதிவு, பட்டா மாறுதல் இப்படி எல்லாம் சொல்லப் போனால்...எனவேதான் ... மத்தியப் பிரதேசத்தில் 1.75lahk வீடு குடி மனைப் புகுவிழாவும் மன்னார்குடியில் வீடே கட்டாமல் பிரதமரின் வாழ்த்துக் கடிதம் வீடு கட்டியதற்கு வந்ததாகவே முடியும்..அதனால் நிறைய முரண்பாடுகளில் உட்புகுவதேயில்லை. ஆங்கிலத்தில் ஒரு பழமொழி : முரண்பாடு சிறு உண்மையைக் கூட சவாலாக்கி விடுகிறது என இதை மேஷன் கூலி என்பவர் சொன்னதாக...மேஷன் கூலி எல்லாம் கொடுத்து என்னால் எதுவுமே செய்யவும் முடியாது... இங்கு நிலமற்றார் எல்லாம் கூட பிரதமரின் 6 ஆயிரம் நிதி உதவி பெற்றதான 130 கோடி ரூபாய் ஊழல் மயத்தில் தண்டோரா போட்டு தவறாகப் பெற்ற பணத்தை கட்டச் சொல்லி கேட்டு வருவது இன்றைய நடப்பு... நான் அப்படி ஏதும் செய்ய வில்லை. சரி சொல்ல வந்ததைச் சொல்கிறேன்...


சமூக மேம்பாட்டுப் பணிக்கு வருவார் எல்லாமே காமராசராகவோ அன்னை தெரஸாவாகவோ மாறிவிட முடிவதில்லை. சமூக மேம்பாட்டுச் சிந்தனையாளர்களுக்கும் வாயும், வயிறும், குடும்பமும் வீடும் இருக்கக் கூடாது என்பதில்லையே...


திருப்பூர் குமரன் சென்னிமலையில் இருந்து இரவோடு இரவாக எட்டு திருமணம் ஒன்று சேர்ந்து வந்து ரூபாய் எட்டு திருமண மொய் வைக்க வழியில்லையே என்று ஊரை விட்டு ஓடி வந்து திருப்பூரில் குடியேறிய நெசவுத்தொழிலாளி என்பதை அவரது சரித்திரம் சொல்கிறது.


பாரதியார் போன்றோர் வறுமையால் வாடி இறந்ததும் செக்கிழுத்த கப்பலோட்டிய சிதம்பரனார் தமது செல்வத்தை உழைப்பின் ஊதியத்தை எல்லாம் இழந்த பெரும் வழக்கறிஞர் கடைசியில் வறுமையில் வாடி இறந்ததும் அதற்கு முன் ஒரு வாலே பிரபு என்னும் ஆங்கிலேய பிரபுவே இவரது வழக்கறிஞர் தொழிலுக்கான உரிமத்தை மீட்டுக் கொடுத்தார் என்பதும் அதனாலேதான் தமது மகனுக்கு வாலேஸ்வரன் என்று பெயரிட்டதும் அவரது வாரிசுகள் சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்களை சந்தித்து உதவிக்காக கையேந்தி நின்றதெல்லாம் உங்கள் அனைவர்க்கும் தெரியும்.


இப்போது நான் என் கதைக்கு வருகிறேன்: 


எப்படியோ சேவை தான் எனது வாழ்வின் போக்கு என ஆண்டுகள் 58 ஓடி விட்டது. மகனை படிக்க வழி என்ன என துணைவியின் இடர் போக்க விவரம் அறிந்த மகனும் வழி கேட்க ஒரு தனியார் கல்லூரியில் பணிக்கு சேர்ந்து வாகன போக்கு வரத்து செலவெல்லாம் போக ஒரு பத்தாயிரம் ரூபாய் செலவுக்கு வழி செய்து கொண்டு ஆண்டுகள் சுமார் 5 ஆகி வருகிறது...இதெல்லாம் எங்கிருந்து போதும்? எனவே உற்ற ஒரிரு சகோதரிகளும், ஓரிரு நண்பர்களும் உதவி செய்ய மகனது படிப்பை ஒரு வாறு முடிக்கும் தருவாய்க்கு வந்து நின்று விட்டேன்.


பெரும்பாலும் உடை கூட வாங்குவதில்லை. சகோதரி எடுத்து கொடுப்பதே இப்போதெல்லாம் போதுமானதாயிருக்கிறது மேலும் மகனுக்கு பொருந்தாமல் போன மேல் சட்டை எல்லாம் டிசைன் டிசைனாக  கன கச்சிதமாக பொருந்தி போட வசதியாக இருக்கிறது. மேலும் அதிலும் லேசான வெண்ணிற வேட்டித் துணியில் மகன் கேட்டான் என எனது துணைவியார் தைத்துக் கொடுத்த ஜிப்பா அவனது தோள் பட்டைக்கு பொருந்தாமல் போக அது எனக்கே என தைத்த மாதிரி போட அவ்வளவு மகிழ்வாகி நடைப்பயிற்சிக்கு மட்டுமல்ல இனி இது போன்ற பல வேட்டியால் தைக்க வேண்டும் ஜிப்பாக்கள் அதையே போட வேண்டும் என ஆர்வப்படுமளவு துணி தேவை தீர்ந்து போனது...


 மேலும் என்னிடம் உள்ள பழைய காலத் துணிகளே புதிதாக இன்னும் இருக்கிறது சுமார் 35 ஆண்டுகள் ஆன போதிலும் உங்களால் நம்ப முடிகிறதா? என்னிடம் அது போன்ற துணி ஒன்றை தொலைக்காட்சியில் பேசும்போது போட்டிருந்ததை இன்றும் கூட ரோசா வண்ணத்தில் ஒரு டி சர்ட் இருக்கிறது. எனது மனைவி ஊருக்குள் வந்த வடநாட்டுப் பையன்களிடம் வேடிக்கையாக எடுத்த ஒரு மிகவும் விலை குறைவான துணி சபாரி சூட் ஆக ரிச் ஆன தோற்றம் காண்பிக்கிறது. அதை நான் பெரும்பாலும் சிறப்பான விழாக்களுக்கும், நிகழ்வுகளுக்கும் அணிவது வழக்கம்...மேலும் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் எனது தோற்றத்தைக் கண்டு தொலைந்து போவதைப் பற்றி... இப்போது கல்லூரிக்குப் போவதால் ட்ரஸ் கோட் உண்டு. எனவே மேல் சட்டை அதைக் கூட ஒரு சர்ட்டை ரூ 100 என 3 சட்டை எடுத்தோம்...அது போடும் போது கூட மிக நன்றாக இருக்கிறதே புதிதா என்று கேட்கிறார்கள்...அதை மின் சலவை எல்லாம் செய்வது சுயமாகவே.. மறுபடியும் அது போன்று எடுங்கள் சார் அந்த வியாபாரி வருகிறார் என்றார் தொழில் முனை நண்பர் எதற்கு வேண்டாமே எனக்கு தேவைக்கும் மேல் சட்டை சேர்ந்து விட்டது என்று சொல்லி விட்டேன். .மேலும் முகச் சவரம் முடி வெட்டிக் கொள்ளுதல் எல்லாமே சுயமாகவே. எனக்கு தீய வழக்கம் இல்லை எனவே செலவு இல்லை...


மேலும் தாய் தந்தையர் கட்டிய அதே கூரை தொங்கிக் கொண்டிருக்கும் அதே ஓட்டு வீடு ...வாடகை இல்லை. ஆக இருப்பிடம் தேவையும் நிறைவாகவே ... இணையத்துக்கும் இதர திடீர் செலவெல்லாம் வராமலிருந்தால் கண்ணாடி மின் இழை இணையத்துக்கு ரூ. 577 கட்ட வேண்டி இருக்கிறது...


 ஆக இப்படி எல்லாம் இருக்கும் போது அரசுப் பணியாளர்கள் என்னை நிர்பந்தித்து இலஞ்சம் தந்தால் தான் முடியும் என்னும் கோட்டை தொடும் போது எனது நட்பு கை நழுவிப் போய் விடுகிறது.


மற்ற படி நான் இப்புவியில் உள்ள அனைத்து உயிர்களையும் நேசிப்பவன் தான். என்றாலும் களை எடுத்தால் தான் பயிர் வளரும் என்பதும் இராமலிங்க வள்ளலாரின் வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் மனம் மிக வாடினேன் என்பதுவும் என்னுள்ளும்...


அரசுப் பணியாளர் பற்றி எனது உற்ற நண்பர் ஒருவர் உங்கள் பார்வை ஏன் இப்படி இருக்கிறது என்ற கேள்வி கேட்டதன் அதிர்வலைகள் இன்னும் கூட அடங்கிய பாடில்லை...என்றாலும் இன்று எனத் தேடி வெகு தொலைவிருந்து சில நண்பர்கள் வீடு நோக்கித் தேடி வருகிறார்கள் எனவே அவர்களுக்கு நேரம் ஒதுக்க வேண்டி இத்துடன் இந்தப் பகுதியை நிறைவு செய்கிறேன்.


உள்ளதைச் சொன்னால் உடன் எரிச்சல்...என்ற பழமொழி...நாம் மனிதரை எல்லாரையுமே நேசிக்கிறோம் அவர்தம் செயல்பாடுகளையே விமர்சிக்கிறோம்.


எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன்றறியேன் பராபராமே...தாயுமானவர். பராபரக் கண்ணி..


யாதும் ஊரே யாவரும் கேளிர்...கணியன் பூங்குன்றனார்.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.


Saturday, September 12, 2020

அரசுப் பணியாளர்களுடன் எனது பயணம்: கவிஞர் தணிகை

 அரசுப் பணியாளர்களுடன் எனது பயணம்: கவிஞர் தணிகை

மறுபடியும் பூக்கும்: எப்போதும் செல்லாத ஓட்டு இப்போதும்: கவிஞர் தணிகை

எனது குடும்பத்தில் இருந்தே ஆரம்பிக்கிறேனே, எனது தங்கை முதல் சகோதரிகளின் குடும்பம் வரை நிறைய ஆசிரியர்கள் அரசு ஆசிரியர்கள்...அரசுப் பணிதான். அதில் சிலர் உதவிக் கல்வி அலுவலர் என்ற பணி வேண்டாம் என தலைமை ஆசிரியராகவே இருந்து விடுகிறோம் என்றிருப்பாரும் அடக்கம். ஏன் எனில் அங்கு அவர்களுக்கு ஏற்பட்ட தொல்லைகளால். நாம் கூட எழுதினோம் ஆசிரியர் தினத்தில் மட்டுமல்ல தினமுமே நல் ஆசிரியரை போற்றும் நாடு உலகில் சிறந்து விளங்கும் என...ஏன் எனில் ஆசிரியப் பணி ஒன்றுதான் மற்ற எல்லா பணிகளுக்குமே போதிக்கும் அடிப்படைப் பணி.


இதே போல காவல் துறையில், நீதித் துறையில் , மத்திய அரசுத் துறைகளில், மாநில அரசின் த.நா.மி.வாரியம், விவசாயம், போக்குவரத்துத் துறை, உள்ளாட்சித் துறையில் வரும் நகராட்சி, ஊராட்சிகள், பொதுப்பணித்துறை , வங்கித் துறை, இப்படி இருக்கும் 40 லிருந்து 50 துறைகள் அல்லது எல்லாத் துறைகளிலும் சுமார் அரசுப் பணியாளர்கள் 3 கோடி வரை இருக்கலாம் . ஆனால் நமது நாட்டின் மக்கள் தொகை 138 கோடிக்கும் மேல் பெருகிக் கொண்டே இருக்கிறது. இந்த மக்கள் தொகை தவிர 130 கோடிக்கும் மேல் வாழ்வாதாரம் என்பது சுயம் வணிகம்  அல்லது தனியார் மயத்தில் தான். ஆனால் எல்லாமே அரசின் எல்லைகளில் வரையறைக் கோட்டில் தொடர்புகளில் ஆணைகளில் அதிகாரத்துள் இருந்து வருவதுதான். ஆனால் இவர்களில் அந்த சில கோடி நீங்கலாக‌ இருக்கும் நூற்று முப்பது கோடிக்கும் மேல் இருப்பார் எல்லாம் சாதி,மதம், இனம், மொழி, தீயப் பழக்க வழக்கங்கள், அல்லது அரசில விழிப்புணர்வின்மை, திட்டமிட்ட சதி,போன்றவற்றால் பிரிந்து கிடக்கிறார்கள் இவர்களுக்கு குடிநீர், உணவு, இருப்பிடம் மருத்துவம், கல்வி போன்றவை எட்டாக்கனியாக இருக்கிறது எட்டி எட்டி இதற்காகவே முயன்று கொண்டு வாக்கு வங்கி வாக்குக்கு பொருள் பணம், இலவசம், என்றெல்லாம் கலைந்து போகிறார்கள் கலைக்கப் படுகிறார்கள் . களைகளாகிவிடுகிறார்கள். களைத்தும் போகிறார்கள்.

மறுபடியும் பூக்கும்: எப்போதும் செல்லாத ஓட்டு இப்போதும்: கவிஞர் தணிகை

இங்கு சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்பதே இலக்கு. எனவே புள்ளி விவரத்தைப் பற்றி எல்லாம் இங்கு சொல்ல வேண்டுவது எனது நோக்கமுமல்ல.


இப்படிப் பட்ட கொடிய காலத்திலும் இவர்களுக்கு ( அரசுப் பணியாளர்களுக்கு) வசதி வாய்ப்புகளுக்கு பஞ்சமில்லாமல் அரசு முழு ஊதியம் அல்லது போதுமான ஊதியம் மற்றும் அதல்லாமல் நிறைய சலுகைகளை வழங்கி வருகிறது மக்களின் வரிப்பணத்தில் இருந்து...இவர்கள் வாழ்வு கார், பெரும் கட்டடங்கள் உள்ள குடி இருப்புகள், எவற்றுக்கும் பஞ்சமில்லா வாழ்வு... நேரமும் குறிப்பிட்ட நேர உழைப்பு எல்லாமே இருந்தாலும் இவர்கள் ஒருங்கிணைப்பு இருப்பதால் மேலும் மேலும் போராடுகின்றனர் தங்கள் வசதி வாய்ப்புகளை வளப்படுத்திக் கொள்ள உரிமைகளை நிலை நிறுத்திக் கொள்ள..  ஆள்வோரான மக்கள் பிரதிநிதிகளும் இதில் அடக்கம்... பாராளுமன்றத்துக்கு சட்டமன்றத்துக்கு தேர்வு செய்யப் படுவோரும்..


இவர்களில் சிலர் உண்மையாகவே எனது நண்பர்கள் போலும், சில உறவுகள் போலும் வாங்கும் ஊதியத்துக்கு உண்மையாக நேர்மையாக நாணயமாக பணியாற்றுகின்றனர். இன்னும் மேலும் சொல்லப் போனால் கீழ் நிலையில் உள்ள‌ மக்கள் மேம்பாடு என்ற அக்கறை( கரிசனம் என்ற பழைய வார்த்தை) உடன் கூட பணி செய்து வருவதாகக் கொள்ளலாம். இதில் எல்லாத் துறைகளிலுமே நல்லோர் உள்ளனர். இல்லாமல் இல்லை. இவர்களை எல்லாம் உலகில் ஏன் அடையாளப் படுத்த முடிகிறது எனில் இவர்கள் சிலராக இருப்பதால் மட்டுமே. 

my best friend serial: 1.guhan…Kavignar Thanigai. | by Tanigai Ezhilan  Maniam | Medium

சரி இதல்லாத தேசிய நீரோட்டம் அல்லது முக்கிய வழி வாழ்க்கை என பெரும்பான்மையான அரசுப் பணியாளர்கள்  என்ன செய்கிறார் என்றுதானே கேட்கிறீர்....வாய்ப்புகள், சந்தர்ப்ப சூழல்களுக்கேற்ப தங்களை தங்கள் நல்வாழ்வைப் பற்றி மட்டுமே சிந்தித்து பொருள் தேடியே மூழ்கி விடுகின்றனர். நான் இது போன்றோருடன் நிறைய அனுபவப் பட்டிருக்கிறேன் போக்குவரத்து துறை, வங்கித்துறை, மின்வாரியம், உள்ளாட்சி, தனியார் , உள்ளூர் அமைப்புகள், இந்து சமயத் துறை கோவில் அமைப்புகள் வருவாய்த் துறை, நில அளவை, பத்திரப் பதிவுத் துறை, நீதித்துறை இப்படி  எல்லா அமைப்பிலுமே இலஞ்ச ஊழல், பணியை செய்யாமை  பணியை செய்ய விடாமை பொதுமக்கள் பணிக்கு ஒத்துழையாமை இப்படி நிறைய தடைகளை தாண்ட முடியாமல் உருவாக்கி விடுகின்றனர் சொல் வழியே மற்றும் செயல் வழியே ஆணைகள் வழியே. மேலும் அரசுப் பணி கிடைக்கும் வரை அதற்கான போராட்ட வழிகளை மேற்கொள்வதும் அரசுப்பணி கிடைத்தவுடன் அவர்கள் எஜமானராகிவிடுகிறார்கள்.

தங்களது பழைய வாழ்வை முழுவதுமாக மறந்து வேறு பிரிவுக்கு சென்று மேல்தட்டுவாழ்க்கையில் தொய்ந்து போகிறார்கள். அந்த அரசுப் பணியை பெற பல்வேறு குறுக்கு வழிகளையும் பயன்படுத்துகின்றனர். அவற்றுக்கு எவ்வளவு பணத்தை வேண்டுமானாலும் கொட்டிக் கொடுத்து பெறத் தயாராக இருக்கின்றனர். அங்கிருந்தே இலஞ்ச ஊழல் அவரைப் பொறுத்து ஆரம்பித்து விடுகிறது என்றும் சொல்லலாம். ஏன் எனில் நான் இவ்வளவு பணம் கட்டி வந்திருப்பது சம்பாதிப்பதற்குத் தானே என்று...இவர்கள் திருமணம் முடிக்கும் இடத்திலும் கூட இவ்வளவு செலவளித்து படித்து பணியைப் பெற்றிருக்கிறேன் இவை எல்லாம் சும்மாவா கிடைக்கும் என வரதட்சணை என்ற சமூக குற்றத்திலும் ஈடுபடுகின்றனர்.  மேலும் அந்த அரசுப் பணிகளில் நியாயமாக நேர்மையாக வாழ விரும்புவார்க்கும் அவர்கள் இந்த தீய சக்திகளுடன் ஒன்றித்துப் பயணம் செய்ய இசையவில்லை எனில் இடர்பாடுகளை உருவாக்கி எள்ளி நகையாடுமளவு வாழ்வை சீரழிக்கும் விதமாக சிதைத்தும் விடுகின்றனர்.


அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றார் குடும்பத்துக்கும் இராணுவம், கப்பற்படை,விமானப் படை அவர்தம் குடும்பம் போன்றோருக்கும் கூட வழி வழியான அரசு உதவிகள் இருக்கின்றன. இந்த அரசு உதவிகள் மட்டுமல்ல அவர்களை கெடுப்பதற்கான எல்லா தீய வழக்கங்களுக்குமான இலவச அல்லது தள்ளுபடியான விலைகளுடன் திறப்புகள் கிடைக்கின்றன. 

மறுபடியும் பூக்கும்: August 2016

இந்த மக்கள் ஏற்றத்தாழ்வு சீரமைவின்மையை சீர்படுத்த ஒதுக்கீடுகள் நூற்றுக்கு இவ்வளவு என்ற சாதிய‌ சதவீதங்கள்...சுதந்திரத்துக்குப் பின் பலவிதமான முயற்சிகளின் பால் ஏற்பட்டன என்றாலும் அவையும் திருப்தியையும் அமைதியையும் நிம்மதியையும் சமூக அமைப்பில் ஏற்படுத்தி விட முடியவில்லை முழுமையாக...


அமைப்பு சாரா மக்கள் வாழ் நிலை போராட்டமாகவே முடிந்து விடுகிறது. இவர்கள் இவ்வளவு ஜனத்திரளும் ஒன்றிணையாதபடி அவரவர் வாழ்க்கையின் போக்கில் தவறிப் போகின்றனர் தீய வழக்கங்களுக்கு ஆளாவதுடன் திட்டமிட்ட அரசியல் இன, மொழி, மத பேத சூழ்ச்சி முறைமைகளால்.. 


எனவே தாம் அரசுப் பணி என்பது பெரும்பாலும் அவர்கள் வாழ்வு சார்ந்து நலம் பயப்பதற்காகத் தான் இருக்கிறதே அல்லாமல் பொது மக்கள் நலத்துக்கான வேலையாக பெரும்பாலும் இல்லாமல் இருப்பதால் அதை விமர்சிக்க நேரிடுகிறது. இதை ஒவ்வொரு தனிமனிதரின் தனித்தன்மை என்ற அளவு கோலில் மட்டுமே வைக்கவும் முடிவதில்லை. அதை அமைப்பு ரீதியான முறை என்றே கொள்ள வேண்டியதாகிறது. அதிலும் தீயவழிகளைக் கையாள்வார் மேலே வருகிறார் என்ற மனக்குமறல்கள் இல்லாமல் இல்லை.

மறுபடியும் பூக்கும்: December 2016

அதே போல அவர்களால் அந்தப் பணியை விட்டு வெளியே வந்து போராட்ட வாழ்வையும் கையில் எடுக்கும் போதும் அந்த அரசுக்கு பட்ட நன்றி கடன் அவர்கள் பணியில் இருந்து கொண்டே இருக்கும். உப்பிட்டவரை உள்ளளவும் நினைப்பது ஒன்றும் தவறில்லையே...அப்படி துணிந்து வருவாரும் வெகு சிலரே... அதே போல மன்றம் மனமகிழ் மன்றம் ரெக்ரியேஷன் கிளப் என்பதில் கொள்கை ஒன்று உடையார் இருக்க வேண்டும் என்ற விதி முறைகள் இருக்க அவசியமில்லை...அதில் புகைப்பாரும் இருப்பார், மது அருந்துவாரும் இருப்பார் மன்றத்தில் இலக்கு வைத்து நகர வேண்டிய அவசியம் இல்லை. அல்லது இலக்குகள் பேரியக்கத்தின் பேரிலக்குகள் எல்லாம் வர வழிகள் குறைவு.அது ஒரு கூடுமிடம் அவ்வளவுதான். 


ஆனால் நாட்டின் மேடுபள்ளங்களை செப்பனிட நமக்கு  வியட்நாமுக்கு ஹோசிமின் கிடைத்தது போல, கியூபாவுக்கு பிடல் சே கிடைத்தது போல அமெரிக்காவுக்கு லிங்கன், மார்ட்டின், வாசிங்டன், கென்னடி போன்ற தலைவர்கள் கிடைத்தது போல இந்தியாவுக்கு காந்தி, போஸ், பகத், குமரன், அம்பேத்கர், கிடைத்தது போல ரஷியாவுக்கு லெனின் போல, சீனாவுக்கு மாவோ போல சிங்கப்பூருக்கு லீ குவான் யூ போல இப்படி  நல்ல தலைவர்களை நான் வேண்டும் என நினைக்கிறேன்.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.


மணப் பறவைகளுக்கு ஒரு வாழ்த்தோலைத் தூது

                           மணப் பறவைகளுக்கு ஒரு வாழ்த்தோலைத் தூது

                                                                    2020

இடம்:ஓமலூர் நடராஜன் செட்டியார் திருமண மண்டபம் நாள்: செப்டம்பர் 14 .                                                            நேரம்:7மணி10.30

       மணமக்கள் : பல் மருத்துவர் தினேஷ் தர்சன்        நிவேதா     TNGCB.                                                                                                                                                                                                                                                         Tamil Wedding Images, Stock Photos & Vectors | Shutterstock                                

VMS dental college - Home | Facebook

கல்லூரியில் என்னிடம் தான் முதலில் அறிமுகமானர் இந்த துணிச்சலான இளைஞர்


அதன் பின் வேம்படிதாள அரசு மருத்துவ மனையில் முகாம் பணி

பல் மருத்துவர் தினேஷ் பயிற்சி மருத்துவர்களுக்கு நல்லாசிரியராயிருந்தார்


நோயாளிகளுக்கு நல் மருத்துவராயிருந்ததும் கண்டேன்


மருத்துவத்துக்கும் நடன நாட்டியத்துக்கும் தொடர்பு இவர் வழியில்

ஒவ்வொரு ஆண்டும் ஆண்டு விழாவில் நடனமாடி அசத்தினார்

எங்கள் அன்பு மருத்துவர் "தினேஷ்"


இன்று "நிவேதா" தர்ஷனுடன் கரம் கோர்த்த இந்த அரிய நாளில்

நானும் அவருடன் இருக்கிறேன் என்பதில் எனக்குப் பெருமகிழ்வு.

Marriage wishes

மணமக்கள் பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ‌


 

என்றும்

கவிஞர் சு. தணிகை

த.சண்முக வடிவு

த.க.ரா.சு. மணியம்.


Wednesday, September 2, 2020

விண்ணில் இன்னும் கொஞ்சம் வெளிச்சம் இருக்கிறது: கவிஞர் தணிகை

 விண்ணில் இன்னும் கொஞ்சம் வெளிச்சம் இருக்கிறது: கவிஞர் தணிகை

Time Lapse Stars Moving Sky Night Light Clouds Side Moving — Stock Video ©  speutk #238624736

அழியாத எழுத்துகளை எழுதி வைக்கவே ஒவ்வொரு ஆக்கபூர்வமான மனிதருமே முயல்கிறார்.இந்த அபூர்வமான காலக் கட்டத்தில் ஏன் மத்திய மாநில அரசுகள் யாவுமே உச்ச நீதி மன்றம், மத்தியப் பல்கலைக் கழக மானியக் குழு எல்லாம் கல்லூரியின் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு ஒரு முடிவையுமே ஏற்படுத்தாமல் பொறுப்புகளிலிருந்து விலகி தட்டிக் கழித்தபடியே சென்று கொண்டிருக்கின்றன.

Light pollution reducing darkness worldwide

கடந்த மார்ச் மாதத்திலேயே இறுதித் தேர்வை முடிக்க வேண்டிய வாய்ப்பிலிருந்த மாணவர்கள் இப்போது 6 மாதத்திற்கு மேலான போதும் எந்த வித முடிவையும் சந்திக்க முடியாத இயலாமையில் இருக்கிறார்கள். மற்ற மாணவர்களுக்கு எல்லாம் 20 முதல் 30 வரையிலான தவறிய பாடங்களுக்கு தேர்வு எழுதாமலேயே எல்லாம் தேர்ச்சி, 10 ஆம் வகுப்பு அனைவரும் தேர்ச்சி, பள்ளி மேனிலை மாணவர்களுக்கும் ஒரு விடியல், ஆனால் இதோ நாளை எல்லாம் முடிந்து விடும் என்றிருந்த ஒரு சில தேர்வுகள் 6 மாதத்திற்கு மேலாகியும் நடைபெறாமல் அவர்கள் தேர்ச்சி, மதிப்பெண் பட்டியல், சான்றிதழ் யாவுமே கைக்கும் வராமல் எந்த நிறுவனத்திற்குமே விண்ணப்பிக்க முடியாமலும் அவர்கள் படும் பாடு சொல்லில் சொல்ல முடியாததே.

Stargazing the night sky @ Portfolio Categories @ Astrophotography by  Miguel Claro

இந்நிலையில் அவர்களை கேவலத்திலும் கேவலப் படுத்துவதாக தொழிலகங்கள் நடத்தி வருவதும், அவர்களுக்கு ஆரம்பத்திலேயே பல்விதமான வேலை நேரத்தையும் கொடுத்து கடுமையாக கசக்கிப் பிழிவதும் இப்படியாக உலகு இயங்கி வர எதற்கு இந்த படிப்பு வசதிகள் எல்லாவற்றையுமே நிறுத்தி விட்டால் அவர்கள் எதையும் எதிர்பார்க்கும் நிலையே வந்திருக்காதே.

When and How to See September's Full Corn Moon in 2020

மேலும் அவர்களுக்கும் பின் ஆண்டுகளில் படித்து வரும் நபர்களை தேர்வே இன்றி அரசு உத்தரவால் தேர்ச்சி பெறுவதை கல்வியாளர்கள் சரியானதல்ல எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

Top 10 Locations in the US for Night Sky Photography | Boost Your  Photography

ஆன்லைனில் வைத்தாலும் சரி,ஒரு மார்க் ஆப்ஜெக்ட் டைப் எனப்படும் கேள்வி பதில் தேர்வானாலும் சரி அல்லது ஒரு மார்க் கேள்வி பதில் அத்துடன் எழுதி விளக்கும் வினாவிடைகளானாலும் சரி ஒரு மணி நேரமானாலும் சரி எப்படியாவது வைத்து அவர்களை உங்கள் கல்விச் சிறையிலிருந்து விடுவியுங்கள். அந்தப் பறவைகளும் பறக்கத் துவங்கட்டும்.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.