Friday, May 31, 2019

உலக புகையிலை மறுப்பு தினம்: மே 31: கவிஞர் தணிகை

உலக புகையிலை மறுப்பு தினம்: மே 31: கவிஞர் தணிகை



விநாயகா மிஷன்ஸ் சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரியின்  வாய், முகம் மற்றும் தாடை அறுவை சிகிச்சை பிரிவு மிகவும் சிறப்பாக வாய் புற்று நோய் விழிப்புணர்வு மற்றும் புகையிலை மறுப்பு விழிப்புணர்வு இலவச முகாம் மற்றும் பல் பரிசோதனை முகாமை சேலம் மத்திய பேருந்து நிலையத்தில் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை நடத்தியது.

முகாமை கல்லூரியின் முதல்வரும் இந்திய சிறுவர் பல் மருத்துவ சங்கத்தின் தலைவருமான பேராசிரியர் மருத்துவர் பேபி ஜான் எம்.டி.எஸ் அவர்கள் தலைமையில் காவல் துறை ஆய்வாளர் சாலை ராம் சக்திவேல் துவக்கி வைத்தார். இந்த முகாமை பேராவலுடன் வாய் முகம் மற்றும் தாடை அறுவை சிகிச்சைத் துறையின் தலைவராக விளங்கி வரும் பேராசிரியர். மருத்துவர் ரீனா பேபி ஜான் கல்லூரி மற்றும் இந்திய முகம், வாய் மற்றும் தாடை அறுவை சிகிச்சை சங்கத்தின் சார்பாகவும் பெரு முயற்சி செய்து நடத்த தலைமை ஏற்றார்.

இந்த முகாமில் சுகாதாரத் துறையின் சதீஷ் அவர்களும், கல்லூரியின் வாய் நோய் கண்டறியும் பிரிவின் தலைவர் பேராசிரியர் மருத்துவர் மோகன் , சிறுவர்  பல மருத்துவப் பிரிவின் தலைவர் பேராசிரியர். மருத்துவர் சுரேஷ்குமார், பல் கட்டும் பிரிவின்  தலைவர் ஜெயஸ்ரீ மோகன்  ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்க\

முகம் , வாய் மற்றும் தாடை அறுவை சிகிச்சையின் மருத்துவர் அருண், மருத்துவர் சரவணன், மருத்துவர் நரேந்திரன்,. மருத்துவர் பாலமணிகண்டன் மருத்துவர் மனோ, மருத்துவர் டிப்னி, போன்ற மருத்துவர்களுடன் முதுகலை இளங்கலை மருத்துவர்களும் பெரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பணியாற்றினர்

காவல் துறை ஆய்வாளர் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி முதல்வர் பேபிஜான் புகையிலை மறுப்பு தினத்தின் முக்கியத்துவத்தை விளக்கினார். அதில் மருத்துவர்கள் பங்கு பணி பற்றி தெளிவு படுத்தினார்.

காவல் துறை ஆய்வாளர் இது போன்ற அரிய நிகழ்வுகளில் அதை ஒரு வாய்ப்பாக மக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.

இந்த முகாம் பேருந்து ஓட்டுனர்களை மையப்படுத்தி அவர்களுக்காக நடந்த போதிலும் கூட ஆர்வமாய் கலந்து கொள்ள வந்திருந்த பொது மக்களான பயணிகள் நடத்துனர்கள், அங்குள்ள கடைகள் வைத்து பிழைப்போர் , இளைஞர்கள் ஆகியோர் 200க்கும் மேற்பட்டோர் பயன்பெற்றனர்.

பரிசோதனை முகாம் வெகுவாக பயனுள்ள முறையில் பல் பரிசோதனை மற்றும் சுவாசத்தில் கரி அமில வாயு கலந்துள்ள சதவீதம் பற்றிய முடிவுகளை அறிக்கை ஆகியவற்றை கணித்து சில நிமிடங்களில் முகாம் பங்கெடுப்பாளர்களிடம் வழங்கியது பாராட்டத் தக்கதாக இருந்தது.

இந்த முகாமில் வரவேற்பு மற்றும் நன்றியுரையாற்றி முகாமிற்கு கை ஒலிபரப்பி எடுத்துச் சென்று புகையிலை மறுப்பு விழிப்புணர்வு செய்திகளை அறிவித்து அனைவர்க்கும் எடுத்துச் சென்று முகாமுக்கு அழைக்கும் பணியும் ஒருங்கிணைப்பு பணிகளும் அடியேனுக்கு கிடைத்தது எனது ஆர்வத்துக்கேற்றபடி பெரும்பாக்கியமாக அமைந்தது.

இந்த முகாமிற்கு பேட்டரியுடன் கை மைக்ரோபோன், நோயாளி சோதனை இருக்கை மற்றும் பயிற்சி மருத்துவர்களை வழங்கி சமுதாய பல் மருத்துவத் துறையும் அதற்கு அனுமதி வழங்கிய துறைத் தலைவர் மரு.சரவணன்

மற்றும் தமிழகக் காவல் துறை, சுகாதாரத் துறை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாநகராட்சி மற்றும் கலந்து கொண்ட பயன்பெற்ற அனைவர்க்கும் நிகழ்ச்சி சிறப்பிக்க தேனீக்களாய் பணியாற்றிய பயிற்சி மருத்துவர்கள் யாவருமே நன்றிக்கு உரித்தானவர்கள்.

சமுதாய நோக்கம் அதன் சேவை நல்ல முறையில் அதன் இலக்கை எட்டி நிறைவேறியது பற்றி எமக்கெல்லாம் மகிழ்வே.

முகாம் நேரம் முடியும் தருவாயில் கூட பொது மக்கள் வந்திருந்து மதியம் இரண்டு மணிக்கும் மேல் கூட முகாமை நீட்டித்தும் மனம் கோணாமல் மருத்துவர்கள் பணியாற்றியது அருமையிலும் அருமை.

இந்த முகாமில் வாய், பல் ஈறு பரிசோதனை செய்து நோய் கண்டறிந்ததுடன், வாய் புற்று நோய்க்கான காரணங்களாக புகையிலையை சுவைத்தல், புகைத்தல் பற்றியும், தொடர்ந்து மது அருந்துதல் பற்றியும் கூர்மையான பற்களால் ஏற்படும் புண் ஆகியவை புற்று நோய்க்கான காரணங்கள் எனச் சுட்டிக் காட்டப்பட்டன‌



Image may contain: 2 people, people standing
இரண்டு வாரங்களுக்கு மேல் ஆறாத வாய்ப்புண்கள் இருந்தாலும், வாயில் வெள்ளை, சிவப்பு படலம் இருந்தாலும் வாய் வீக்கம் இருந்தாலும் வாய் திறக்க முடியாமல் இருந்தாலும் கண்டிப்பாக பல் மருத்துவரை அணுகி சிகிச்சை செய்து கொள்ள வேண்டி வலியுறுத்தப்பட்டது.

கல்லூரி வருவோர்க்கு மேற்கொண்ட சிகிச்சை முறைகளைத் தொடர்வது பற்றியும் பையாப்சி  எனப்படும் நுண் திசு பரிசோதனை இலவசமாக செய்து தரப்படும் என்றும் எடுத்துரைக்கப்பட்டது.

வாய்ப்புற்று நோய்க்கான காரணங்கள், ஆரம்ப அறிகுறிகள், அதை வரும் முன் எப்படி காப்பது  வந்த பின் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்  பற்றியும் ஆலோசனை தரப்பட்டன‌

பொதுவாக புற்று நோயைத் தடுக்க வேண்டும் எனில் புகையிலை, மது, பான்மசாலா ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும் என்றும் கூர்மையான பற்கள் ஏதாவது இருப்பின் அதையும் உரிய கவனம் கொண்டு சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment