Tuesday, November 29, 2016

மறதி...வயோதிகத்தின் அடையாளமா? ....கவிஞர் தணிகை

கூப்பிட்டா மலர் தேடி வண்டு வரும்
தேதி குறிப்பிட்டா கொய்யாவைக் கிளிகள் கொத்தும்
சாப்பிட்டால் வருகின்ற ஏப்பம் போலே
கண்கள் சந்தித்தால் வரவேண்டும்
உண்மைக் காதல்!

பாலுணர்வு பொருட்டல்ல காதலுக்கு
உணர்ச்சிப் பரிமாற்றம் பொருளல்ல காதலுக்கு
தோலுறவு பொருட்டல்ல காதலுக்கு
நெஞ்சத் தொடர்பொன்றே மூச்சாகும் காதலுக்கு

கல்யாணக் கட்டடத்தைக் கட்டுதற்கு
நான்கு கண் கலந்து நாட்டுகின்ற கால் கோள் விழா
இல் வாழ்க்கை காவியத்தை முதலில்
இரு நெஞ்சம் எழுதி வைக்கும் காப்புச் செய்யுள்

கடல் கொண்ட நுரை போல முடி வெளுத்தும்
பசுங் கதிர் முற்றிப் போனது போல் முதுமை வந்தும்
உடல் கொண்ட இச்சைகள் ஓய்வெடுத்தும்
நல்ல உள்ளத்தே உயிர்த்திருக்கும் உண்மைக் காதல்

   மறைந்த கவிஞர் வாலி
Image result for vaali,

பில்கணீயம்

பேரன்பு கொண்டோரே பெரியோரே பெற்ற தாய்மாரே
நல் இளஞ்சிங்கங்கங்காள்

நீரோடை நிலங்கிழிக்க‌
நெடுமரங்கள் நிறைந்த பெருங் காடாக்க‌ நேரோடி வாழ்ந்திருக்க‌
பருக்கைக் கல்லின்
நெடுங்குன்றில் பிலஞ்சேரப் பாம்புக் கூட்டம்

போராடி பாழ் நிலத்தை புதுக்கியவர்
யார்  அழகு நகருண்டாக்கி
 அவரெல்லாம் எலியாக முயலாக இருக்கின்றார்கள்
ஏமாந்த காலத்தில் ஏற்றங் கொண்டோன்
புலி வேடம் போடுகின்றான்
பொது மக்களுக்கு புல் அளவு மதிப்பேனும் தருகின்றானா?

அரசனுக்கும் எனக்குமொரு வழக்குண்டாக‌
அவ்வழக்கை பொதுமக்கள் தீர்ப்பதேதான்
சரியென்றேன் ஒப்பவில்லை அவளும் நானும்
சாவதென்றே தீர்ப்பளித்தான் சாவ வந்தோம்...


அரசன் மகள் தன் நாளில் குடிகட்கெல்லாம்
ஆள் உரிமை பொதுவாக்க நினைத்திருந்தாள்
...... மறைந்த கவிஞர் பாரதி தாசன்

Image result for bharathidasan

மராட்டிய வீரர் சிவாஜி:

தாழ்ந்த சாதி, அரசியலை அறியாதவன்
ம்..யார் தானும் நாடும் ஒன்றெனக் கண்டு
தன்னையே தந்த மன்னன் சிவாஜி
தாழ்ந்த ஜாதி, அரசியலை அறியாதவன்
மன்னர் குலத்தில் பிறவாதவன், பரம்பரை உரிமை இல்லாதவன்
மானம் காக்கும் குடியானவன் மகுடம் தாங்க முடியாதா?

தார்த்தாரியர் தந்த புரவியில் அமர்ந்து ஆர்த்தெழுந்த சிவாஜியைக் கண்டு
நாட்டுக்குரிய நல்லவெனென்றும் போர்ப்பாட்டுக்குரிய மன்னவனென்றும்
ஆரத்தி எடுத்த மக்கள் எங்கே....
அதன் ஓரத்தில் நின்று வெற்றி வரட்டும் தாளத்தை மட்டும் அனுபவிப்போம் எனக் காத்திருந்த‌
ஆணவக்காரர்கள் எங்கே?.....Image result for cn annadurai
 
          யார் எழுதிய வசனம் இது: அறிஞர் அண்ணாவா? மறந்து விட்டதே..

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

மறதி...வயோதிகத்தின் அடையாளமா?


இறையாமல் சிக்கியபடியே...Not spreads But fix it with...

All my times reflected fishy thoughts
always caught by a hook
Image result for missed a beautiful time and chance
Is it God or victim

Image result for hook with worm bite fish

எனது காலத்தின் மீன்/மீள் எண்ணங்கள்
ஏதாவது ஒரு தூண்டிலில் எப்போதுமே
Related image
இறையா இரையா?

Monday, November 28, 2016

மோடிஜியின் கேஷ்லஸ் இந்தியா இப்போதைக்கு லஸ்கேஷ் இந்தியா: கவிஞர் தணிகை.

மோடிஜியின் கேஷ்லஸ் இந்தியா இப்போதைக்கு லஸ்கேஷ் இந்தியா: கவிஞர் தணிகை.

Image result for scratching debit cards in india in commercial shops and mallsImage result for scratching debit cards in india in commercial shops and malls


மேற்கத்திய நாடுகள் போல கார்டுகளை உரசி பணத்தை பரிமாறிக் கொள்ள படித்தவர்கள் படிக்காத முதியோர்களுக்கு சொல்லித் தர வேண்டும் அதுவும் முறைசாராக் கல்வி கற்பிப்பது போல ஒருவர் சுமார் 30 பேருக்கு அப்படி சொல்லிக் கொடுக்க வேண்டும் என்றெல்லாம் வானொலி வீணொலி செய்கிறார் எமது பிரதமர்.

இந்தியா என்பது இன்னும் கிராமங்கள் நிறைந்த நாடு. அதற்குள் உள்ள பெரும் எண்ணிக்கையிலான மக்களுக்கு இன்னும் படிப்பறிவும் இல்லை,எழுத்தறிவும் இல்லை, வங்கிக் கணக்கும் இல்லை. வங்கிகள் எண்ணிக்கை 100 பேருக்கு ஒன்று என்று இருந்தால் இவ்வளவு கூட்டம் வழிந்திருக்குமா? இறப்புகளும், காத்திருப்புகளும் நடந்திருக்குமா? அதில் இருந்தே நாம் தெரிந்து கொள்ள முடியும் இந்தியாவின் நிலை எத்தகையது என்று

அடுத்து உரசி உரசி பார்த்து கணக்கை முடித்துக் கொள்க என்கிறார். யோவ் காசு இருக்கறவன், கார்ட் இருக்கறவன் மால்களில் உரசி உரசிப் பார்க்கலாம் அய்யா கடன் வாங்குவார் எப்படி உரசி உரசிப் பார்ப்பார்?

இந்த நாட்டின் முக்கிய முன்னணி வங்கி ஸ்டேட் பாங்க் விஜய் மல்லய்யா கணக்கை முடிக்க முடியாமல் திணறி வருகிறதே, அந்த ஆள் சொத்தை ஏலம் எடுக்க எவருமே முன் வரவில்லையே அதெல்லாம் என்ன கணக்கு?

சில மாதங்களுக்கும் முன் தான் சீனாக்காரன் எல்லா மெஷின் வழியாகவும் ஊடுருவி விட்டான். எல்லாம் பாஸ்வேர்ட் மாற்றிக் கொள்க என ஓலமிட்டன எல்லாவகையிலும் முன்னணியில் உள்ள ஸ்டேட் பாங்க் உட்பட...

செல்போன் திருட்டை நம்மால் எப்போது தடுத்து நிறுத்த முடியுமோ, அப்போது செல்போன் வழியே எல்லாம் செய்து கொள்ளலாம்....மேலும் ஏமாந்தால் வங்கியில் இருக்கும் கொஞ்சம் பணத்தையும் ஸ்வாகா செய்வதை தடுக்க முடியாத அரசு பணத்தை எப்படி கார்டு வழியில் செலவளிப்பது என சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று மட்டும் சொல்கிறது

பணத்தை எப்படி சம்பாதிப்பது, வேலை கொடுப்பது போன்றவற்றில் துளியும் கூட கவனமில்லாத அரசு இருக்கிற பணத்தை எப்படி எடுப்பது கழிப்பது, கொடுப்பது என்பது பற்றி மட்டும் அதிக கவனத்துடன் சொல்லித் தரத் தயாராக இருக்கிறது

Image result for scratching debit cards in india in commercial shops and malls

இன்னும் பெரும்பாலானவர்களுக்கு வங்கியின் நடைமுறைகள் பிடிமானமாகவில்லை என்னும்போது 130 கோடிக்கும் மேல் இருக்கும் இந்த பெருநாட்டுக்கு எந்தவித தயாரிப்புமில்லாமலே எல்லாமே சொல்லிக் கொடுத்து முடித்து விட்டார் வானொலியில் மோடிஜி.ஹி ஹி ஹி என பெரும்பாலான பிரபலங்கள் மோடி போல உண்டா என பாராட்டுகின்றன.

பாமரன் இதனால் அடையும் துன்பம் துடைக்க வழியும் சொல்லப்படவில்லை. அதை எல்லாம் கணக்கில் வைத்து திட்டம் தீட்டப்பட்டு  நாட்டின் பொருளாதார சீர்திருத்தம் மேற்கொள்ளப் படவில்லை. இதெல்லாம் உங்கள் கவனத்தில் இருக்க வேண்டும்.Related image



இன்னும் அடிமட்டத்தில் இருக்கும் இந்தியனுக்கு சுகாதாரம், உணவு, குடிநீர், பாசன நீர்,உடை, இருப்பிடம், மருத்துவத்திற்கும், பாதுகாப்பான வாழ்க்கைக்கும் எந்த அரசுகளாலும் உத்தரவாதம் அளிக்க முடியவில்லை. காரணம் இதெல்லாம் தான் என மோடி அயரா துணிச்சலும் இந்த மாற்றத்தைக் கொண்டு வந்து விட்டதாக சொல்கிறார்கள். சரி எதுக்கு இந்த 2000 ஒரே நோட்டு...இந்த காமன் மேனை வாழவைக்கவா? சம்திங் ராங்..

Image result for scratching debit cards in india in commercial shops and malls

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Sunday, November 27, 2016

ஃபிடல் காஸ்ட்ரோ பற்றிய ஆதங்கம்: கவிஞர் தணிகை

ஃபிடல் காஸ்ட்ரோ பற்றிய ஆதங்கம்: கவிஞர் தணிகை
Related image



638 முறை அமெரிக்க கொலை முயற்சியிலிருந்து தப்பி 90 வயதில் இயற்கையாக காலமான ஃபிடல் காஸ்ட்ரோ பற்றி 20 ஆம் நூற்றாண்டின் மாமனிதர்களில் ஒருவர் மறைந்த நிகழ்வை உலகே உச்சரிக்கின்றபோது நானும் எழுத வேண்டியதாகிறது. காலத்தைப் பதிவு செய்ய வேண்டியாவது. இவரின் வாழ்க்கை நமக்குச் சொல்லும் பாடம் உயிர் போக வேண்டும் என்பது இயற்கையில் முடிவாக வேண்டி அதன் கையில்தான் இருக்கிறதோ என்ற ஒரு ஐயப்பாட்டை ஏற்படுத்துகிறது. வியப்பேற்படுத்தும் வாழ்க்கையும் அதன் முடிவும்.

Related image

tyrant  கொடுங்கோலன் தமது மக்களை சர்வாதிகாரம் கொண்டு அடக்கியவன் என அமெரிக்க வருங்கால குடியரசு தலைவர் டொனால்ட் ட்ரம்ப் மட்டுமல்ல கியூபாவிலிருந்து பஞ்சம் பிழைக்க வெளியேற்றப் பட்டு அமெரிக்காவில் தஞ்சம் அடைந்த‌ பல முதியவர்களும் கூறுகின்றனர்.

prop   கியூபாவை பெரும்பாலும் ரஷியாவே முட்டுக் கொடுத்து வாழ வைத்துக் கொண்டிருந்ததாக் வரலாறு சொல்கிறது. அமெரிக்காவின் நுழைவாயிலில் உலகின் சர்க்கரைக் கிண்ணமான இந்த கியூபாவை அமெரிக்காவின் ஆதரவு பெற்ற பாடிஸ்டா என்ற அதிபரை கொரில்லாப் படைத் தாக்குதல் மூலம் மிகச் சொற்பமான 82 படை வீரர்கள வைத்தே ஆரம்பத்தில் போராடி பிடித்த சரித்திரம் ஃபிடல் காஸ்ட்ரோவுடையது... ஆனால் அதற்கு சே குவேராவின் துணையும் வீரமும் இன்றியமையாதிருந்திருக்கிறது.

கம்யூனிச நாடு ஆட்சி அதிகாரம் என்ற போதிலும் இந்த நாடு அதிபரின் பிடியிலிருந்து இன்று வரை விலகியதாக செய்திகள் இல்லை.இவருக்கும் பின் இவர் தம்பி ரேல் காஸ்ட்ரோவே குடியரசு தலைவர் மற்றும் பிரதமர்.

இங்குதான் சற்றே நெருடல்: இவருக்கு அடுத்த இடம் படை நடத்தும்போது சேகுவேராவுக்கே இருந்திருக்கிறது. நாட்டை இவர்கள் கைக்கொண்டது முதல் சே வுக்கு நிதி, மத்திய ரிசர்வ் வங்கி அதிகாரம் போன்றவை வழங்கப்பட்டிருந்தாலும் ரேல் காஸ்ட்ரோவின் இடையூறுகள் சேவுக்கும் ஃபிடலுக்கும் இடையே இருந்ததாக வரலாற்றிலிருந்து நாம் படித்தறிய முடிகிறது. அப்படி நேரும்போது ஃபிடல் ரேலின் பக்கம் சாய்வது போன்றே சே உணர்ந்ததையும் அறிய முடியுமளவு எழுத்திலக்கியம் நமக்கு போதிக்கிறது.

அதனாலும் அடிப்படையிலேயே ஓரிடத்தில் இருந்து ஆட்சி ,அதிகாரம், பதவி, நிர்வாகம் போன்றவற்றில் நாட்டமில்லாமல் சே இருந்ததாலும் கிடைத்த இடத்தை விட்டுப் புறப்பட்டு விடுவதாகவும் உலக வலம் வர விரும்பியதாகவும் அவர் வரலாறு குறிப்பிடுகிறது.

ஃபிடல் அணி சேரா நாடுகள் பணியில் பெரும் ஒத்துழைப்பு நல்கியதாக நேரு காலத்திலிருந்தே இந்தியாவும் அதன் ஆட்சியாளர்களும் அவரை நல்ல நண்பராக கருதுகிறார்கள். இந்தியா கியூபாவின் தேவையான பஞ்ச நேரத்தில் நிறைய தானியமாக பணமாக உதவியிருக்கிறது.இந்தியா கொடுத்த பிரட் என பெருமையாக அதை ஃபிடல் சொல்லி இருப்பதாகவும் சான்றுகள் உள்ளன.

அடுத்து அவர் தமிழ் ஈழப் பிரச்சனையில் இலங்கை ஆட்சி அதிகார கொடுங்கோலன் மஹிந்த இராட்சச பட்சே  பக்கமே சாய்ந்ததாகவும் தமிழ் ஈழ பிரபாகரனின் விடுதலைப்புலிகளுக்கு ஒரு போதும் ஆதரவாக இல்லை என்றும் ஈழத் தமிழ் பதிவர்கள் முக நூலில் பல முறை தங்கள் ஆதங்கத்தை வெளியிட்டிருந்தார்கள்.

தமது தாடியை நாட்டை நல்ல முறை ஆள்வேன் நல்ல வழி காட்டுவேன் என நம்பிக்கை வரும்போது  எடுப்பேன் என்றும் இயற்கை தம்மை விடுதலை செய்யும் என்றும், நம்பிக்கை கோட்டை ஃபிடல்: நம்பிக்கை, காஸ்ட்ரோ : கோட்டை என்றும் பெயர் கொண்டிருப்பவர். பணக்கார தந்தைக்கு பிறந்து தமது நிலத்தை எல்லாம் அனைவர்க்கும் பிரித்துக் கொடுத்து ...இப்படி கலவைக் குவியலாக விளங்கிய ஃபிடல் தமது எச்சமாக‌ உடலை விட்டுப் போய்விட்ட அதை டிசம்பர் 3 /4 தேதிகளில் உலகும் கியூபாவும் முடித்து வைக்கிறது.

Image result for fidel castro rare photos

தமது நாட்டின் விபச்சாரிகள் கூட பட்டதாரிகளாக இருக்கிறார்கள் எனப் பெருமைப் பட்ட ஒரு நாட்டின் தலைமையை காலமும் இயற்கையும் முடித்து வைத்திருக்கிறது. இன்னும் ரஷியாவில் இருக்கும் கம்யூனிசம்...அடையாளமாக இருக்கிறது. உலகெங்கும் மறுபடியும் கம்யூனிசம் பூக்கும் முன் நாமெல்லாம் இருக்க மாட்டோம் என எண்ணுகிறோம்.

எல்லாம் அமெரிக்கா சார்பாகவே காலம் இயற்கை எல்லாம் தற்காலத்தில் சென்று கொண்டிருக்கிறது...டொனால்ட் ட்ரம்ப் போன்ற முதலாளி அந்த நாட்டின் தலைவராக மறுபடியும்  மறுஓட்டு எண்ணிக்கை ஒரு சிறு கீற்றாக தடுப்பரணாக இருக்கிறது. என்னதான் இருந்தாலும் நமது கணக்கு ட்ரம்பை விட மிஸஸ் கிளின்டன் வந்தால் பரவாயில்லை என்றே தோன்றுகிறது. ஆனால் ட்ரம்புக்குத்தான் ரஷியாவும் புடினும் ஆதரவாய் இருக்கிறார்கள் என்கின்றன செய்திகள்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.





Saturday, November 26, 2016

நல்ல கேள்விகள்தான்: கவிஞர் தணிகை.

படித்த உடன் இதை பதிவு செய்ய வேண்டும் என விரும்பினேன். நன்றி கலையகம் உங்கள் மின் மடலுக்கு
//மார்க்ஸ் என்ன சொல்கிறார் என்றால்.... மார்க்ஸ் சொல்வது இருக்கட்டும்... நீ என்ன சொல்கிறாய் என்பதைச்சொல்!//
Image result for karl marx and friedrich engels


1. எட்டு மணிநேர வேலை, எட்டு மணிநேர ஓய்வு, எட்டு மணிநேர உறக்கம் என்பது மார்க்ஸ் சொன்னது. இன்று சர்வதேச சட்டங்களாலும் ஏற்றுக் கொள்ளப் பட்டு விட்டது. ? தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் சிலநேரம் 16 மணித்தியாலங்கள் வேலை செய்கின்றனர்.

மார்க்ஸ் சொல்வது இருக்கட்டும்.... இந்த நிலைமையை மாற்றுவது பற்றி நீ என்ன சொல்கிறாய் என்று சொல்!

2. உழைக்கும் மக்கள் அனைவருக்கும் சமமான சம்பளம் கொடுக்க வேண்டும் என்பது மார்க்ஸ் சொன்னது. உலகின் முதலாவது பொதுவுடைமைப் புரட்சியான பாரிஸ் கம்யூனில் எல்லோருக்கும் சமமான ஊதியம் வழங்கப் பட்டது.  இன்றைய செலவினத்தைப் பொறுத்தவரையில், ஒருவர் நாற்பதாயிரம் ரூபாய் சம்பளம் பெற வேண்டும் என்று பொருளாதார அறிஞர்கள் கூறுகின்றனர். அது எல்லோருக்கும் கிடைகிறதா? ஒரே நிறுவனத்தில் பணி புரியும் தொழிலாளி ஏழாயிரம் ரூபாயும், மனேஜர் ஒரு இலட்சம் ரூபாயும் சம்பளம் வாங்கும் கொடுமையும் நடக்கிறது.

மார்க்ஸ் சொல்வது இருக்கட்டும்.... இந்த நிலைமையை மாற்றுவது பற்றி நீ என்ன சொல்கிறாய் என்று சொல்!



4. ஆண், பெண் சமத்துவம் பேணப் பட வேண்டும். சிறார் தொழிலாளர்களை சுரண்டுவது ஒழிக்கப் பட வேண்டும் என்பது மார்க்ஸ் சொன்னது. ஆண், பெண் உழைப்பாளிகளுக்கு சமமான ஊதியம் வழங்கப் படுகின்றதா? 

மார்க்ஸ் சொல்வது இருக்கட்டும்.... இந்த நிலைமையை மாற்றுவது பற்றி நீ என்ன சொல்கிறாய் என்று சொல்!

5. நேரடி ஜனநாயக அமைப்பான தொழிலாளர் பாராளுமன்றம், ஆட்சி நிர்வாகத்தை பொறுப்பேற்க வேண்டும் என்பது மார்க்ஸ் சொன்னது. அதிகாரப் பரவாலாக்கல் மூலம், ஊருக்கு ஊர் தொழிலாளர்கள் நேரடியாகப் பங்கு பற்றும் பாராளுமன்றம் அமைப்போம். அதன் மூலம், உழைக்கும் மக்கள் தமது நலன்களை பிரதிநிதித்துவப் படுத்த முடியும். தொழிற்சாலைகளையும் தொழிலாளர்கள் நிர்வகிக்கும் அமைப்பை உருவாக்குவோம். இதற்கெல்லாம் நீ சம்மதிக்கிறாயா?

மேற்குறிப்பிட்ட விடயங்களை நடைமுறைப் படுத்தாமல் விடுவதற்கு, நீ ஆயிரம் நியாயங்களை அடுக்கலாம். அந்தக் காரணங்களையும், இங்கே கூறப்பட்ட விடயங்களையும் தமிழ் மக்கள் முன்னால் வைத்து பொது வாக்கெடுப்பை கோருவோம். யார் சரி, பிழை என்பதை மக்கள் முடிவு செய்யட்டும். அதற்கு நீ சம்மதிக்கிறாயா?

மார்க்ஸ் சொல்வது இருக்கட்டும்.... குறைந்த பட்ச மக்கள் ஜனநாயகத்தை கொண்டு வருவது பற்றி நீ என்ன சொல்கிறாய் என்று சொல்!

யானை பார்த்த குருடர்கள் மாதிரி, "மார்க்சியம் பார்த்த மடையர்கள்" இருக்கிறார்கள். காலங்காலமாக முதலாளித்துவம் பரப்பி வரும் மக்கள் விரோதக் கருத்துக்களை, தமது சொந்தக் கருத்து மாதிரி சொல்லிக் கொள்வார்கள்.

"மார்க்சிய‌ பூச்சாண்டி" காட்டி, பாமர மக்களை ப‌ய‌முறுத்துகிற‌வ‌ர்க‌ள் எந்த‌ள‌வு ப‌டித்திருக்கிறார்க‌ள்? பொருளிய‌ல், ச‌மூக‌விய‌ல், அர‌சிய‌ல், வ‌ர‌லாறு, மெய்யிய‌ல், விஞ்ஞான‌ம், மானிட‌விய‌ல் போன்ற‌ ப‌ல‌ பாட‌ங்க‌ள் மார்க்சியத்திற்குள் அட‌ங்குகின்ற‌ன‌ என்பதை அவர்கள் அறிவார்க‌ளோ?

இன்றைய கல்வி அமைப்பு முதலாளிகளுக்கு சேவகம் செய்யும் அடிமைகளை உருவாக்குகின்றது. அதற்கு மாறாக கல்வியை மக்களின் நலன்களுக்காக மாற்றி அமைப்பது தான் மார்க்சியத்தின் குறிக்கோள். அதற்காகத் தான் நடைமுறையில் உள்ள கல்வியை விமர்சனபூர்வமாக அணுகுகின்றது.

மார்க்ஸ் சொன்னது இருக்கட்டும். "சுயமாக சிந்திக்கும் அறிவுஜீவிகள்", அடிமைகளை உருவாக்கும் கல்வி தொடர்பாக என்னென்ன விமர்சனங்களை வைத்திருக்கிறார்கள்? நடைமுறையில் உள்ள கல்வி அமைப்பை கேள்விக்குட்படுத்தாமல், "கற்றவைகளை ஒப்புவிக்கும் இயந்திர மனிதர்கள்" மார்க்சியத்தை விமர்சிப்பது வேடிக்கையானது.

மார்க்சியம் ஒரு தத்துவமாக கருதினால், பண்டைய கிரேக்க தத்துவ அறிஞர்களையும் குறை கூற வேண்டியிருக்கும். சோக்கிரடீஸ் முதல் ஹெகல் வரையில் எழுதி வைத்த தத்துவங்கள் மார்க்சியத்தில் உள்ளடக்கப் பட்டுள்ளன. இதையெல்லாம் இன்றைக்கும் கற்பிக்கும் பல்கலைக்கழகங்களை பற்றி என்ன சொல்லப் போகிறார்கள்?

மார்க்சியத்தை நிராகரிப்பவர்கள் உலக மக்களுக்கு செய்த, இனிமேல் செய்யப் போகும் உதவிகள் என்ன? வறுமையை ஒழிப்பதற்கு வைத்திருக்கும் திட்டங்கள் என்ன? பட்டினியால் வாடும் மக்களை காப்பாற்றுவதற்கான கொள்கை என்ன? அனைவருக்கும் கல்வி, சுகாதாரம், உணவு, இருப்பிடம் போன்றவற்றை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான தத்துவம் என்ன?

மார்க்சியத்திற்கு மாற்றாக, மக்கள் நலன் சார்ந்து இவர்கள் முன்வைக்கும் தத்துவம் அல்லது கொள்கைகள் என்ன? ஒன்றுமேயில்லை. இதுவரையும் இல்லை. இனிமேலும் வரப் போவதில்லை. அதனால், மக்கள் தமது உரிமைகளுக்காக போராடுவது எந்த வகையில் தவறாகும்? அப்படிப் போராடுங்கள் என்பதையும் மார்க்சியம் தானே சொல்லிக் கொடுத்தது?

அது ஒரு புறம் இருக்கட்டும். //மார்க்ஸ் சொல்வது இருக்கட்டும்... நீ என்ன சொல்கிறாய் என்பதைச்சொல்// என்று அறிவுரை கூறும் அறிவாளிகளுக்கு, மார்க்ஸ், லெனினை விட்டால், உலகில் வேறு யாரையும் தெரியாதா?

19 ம் நூற்றாண்டில் சோஷலிசத்தை முன்மொழிந்த ஜாகோபின், புருதோன், பகுனின் என்று ஏராளமான தத்துவ அறிஞர்கள் இருக்கிறார்களே? அவர்களை பற்றியும் பேசலாமே? சமதர்மம் போதித்த சங்க கால தமிழ்ப் புலவர்கள் பற்றிப் பேசலாமே?

"யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று பாடிய சங்க காலப் புலவர் கணியன் பூங்குன்றனார் பற்றி இவர்கள் கேள்விப் பட்டதே இல்லையா? "உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல்பவர்." என்று கார்ல் மார்க்ஸ் பிறப்பதற்கு மூவாயிரம் வருடங்களுக்கு முன்னரே மார்க்சியம் பேசிய திருவள்ளுவர் பற்றி என்ன நினைக்கிறார்கள்?

"தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்" என்று பாடிய பாரதியார் ஒரு கம்யூனிஸ்டா? "ஊசியின் காதுக்குள் ஒரு ஒட்டகம் நுழைவது இலகு. ஆனால், பணக்காரன் பரலோகம் போக முடியாது" என்று போதித்த இயேசு கிறிஸ்து மார்க்சிஸ்ட் அல்லவே?

“நான் ஏழைக்கு உணவளித்தேன். அவர்கள் என்னை புனிதர் என்று போற்றினார்கள். ஏழைக்கு ஏன் உணவு கிடைப்பதில்லை என்று கேட்டேன். என்னை கம்யூனிஸ்ட் என்று அழைத்தார்கள்!” – Dom Hélder Pessoa Câmara (பிரேசில் நாட்டு கத்தோலிக்க பாதிரியார்)
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.


Wednesday, November 23, 2016

ஜெயமோகனால் வங்கி முன் நின்று இறந்த ஒரு உயிரையாவது மீட்டுத் தர இயலுமா? : கவிஞர் தணிகை

ஜெயமோகனால் வங்கி முன் நின்று இறந்த ஒரு உயிரையாவது மீட்டுத் தர இயலுமா? : கவிஞர் தணிகை

Image result for Economic crisis of india 2016

பைபிளில் சொல்வார் மனிதரால் ஒரு மயிரை வெளுக்க வைக்கவோ கறுக்க வைக்கவோ முடியாது என்று...அதே போல நான் கேட்கிறேன் 500 ,1000 ரூபாய் பழைய நோட்டு செல்லாது என்ற அலையில் இழந்து போன ஒரு உயிரையாவது ஜெயமோகனால் மீட்டுத் தர முடியுமா? என்பதுதான்.

நல்ல எழுத்தாளர்தான் அவர் இந்தக் காலக் கட்டம் எழுதிய ஒரு எழுத்தாக்கத்தை படிக்க நேர்ந்தது. இவர் சொல்வதை எல்லாம் அப்படியே ஏற்றுக் கொண்டாலும் ஒவ்வொரு தனி மனிதனும் தமது உரிமையை உடமையை நாட்டின் வங்கி முந்தானையில் முடிந்து விட்டு அவிழ்க்க முடியவைல்லையே என க்யூவில் நின்று இரத்தம் கொதிப்படைந்து அதில் பல உயிர்கள் போயிருக்கின்றனவே, எத்தனையோ பேருக்கு உடல் நலம் குன்றிவிட்டதே அதை எல்லாம் இந்த எழுத்தாளரால் மீட்டுத் தர முடியுமா? என்பதுதான்.

அதனால் எல்லாம் சாகவில்லை, அவர்கள் உடல் நலம் அவ்வளவுதான், உரிய மருத்துவ சிகிச்சை செய்து கொள்ளாதது உரிய மருத்துவ சிகிச்சையை அவர்களுக்கு பெற்றுத் தராத குடும்பத்தின் தவறு என்கிறார்.ஒரு நாட்டில் தமது உடமையை எல்லாம் இழந்து விட்ட மனிதர்க்கு அந்த நாடுதானே உரிய மருத்துவமும் அளித்திட வேண்டும். எனவே இதுபோன்ற அரசின் செயல்பாடுதானே இதற்கு அடிப்படை...பிறகு ஏன் மனிதர்கள் அரசை கேட்க மாட்டார்கள், வசை பாட மாட்டார்கள்?

Image result for Economic crisis of india 2016

பெரும்பணக்காரர்கள் பெற்ற வங்கிக் கடனை திரும்பச் செலுத்தாதற்கு வக்காலத்து வாங்குகிறார். பெரிய வியாபாரத்தில் இதெல்லாம் நடக்கும், இப்படி பிசகுகள் ஏற்படுவது இயல்புதான், அவர்கள் வேண்டும் எனச் செய்யவில்லை என்கிறார். யார் வீட்டுப் பணத்தில் இவர்கள் வியாபார சரியா தவறா விளையாட்டு விளையாடு செல்வத்தை இழந்து கட்டாமல் இருக்கிறார்கள்? அவர்கள் அப்பன் வீட்டுப் பணத்தில்தானா? பொதுமக்கள் சேர்த்து வைத்திருக்கும் வங்கிக் கணக்கிலிருந்துதானே? மூன்று இலட்சம் பெறுமான நகையை வைத்துக் கொண்டு ஒன்னரை இலட்சம் கொடுத்து விட்டு வருடம் வருமுன்னே வாய்தா வந்து விட்டது என வாடிக்கையாளரை நெருக்கும் நெருக்குதலுக்கு அளவில்லை கீழ் மட்டத்தில் ஆனால் பல இலட்சம் கோடியை ஸ்வாகா செய்தும் அப்படியே சொகுசு வாழ்க்கை வாழ்வாரிடை எந்த மாற்றமும் இல்லையே....2018 -2019 வாக்கில் இருந்து ஆரம்பிக்கும் கணக்குகளுக்கு விவரம் தருமாம் ஸ்விஸ் வங்கி....அதற்குள் என்ன இருக்கப் போகிறது?

எங்குமே உரிய ரசீதுகள் வழங்கப் படுவதில்லை. எவரும் கேட்பதில்லை. அப்படியே ஒளித்து வைத்திருந்து வெள்ளையாக்கிக் கொள்கிறார் தமது கள்ளப்பணத்த எல்லாம் என்கிறார். உண்மைதான் பெரும்பாலும் இவர் சொல்வது எல்லாம் உண்மைதான். ஆனால் அதற்காக‌ இந்த அளவு பொருளாதார சீரழிவு நடக்கும் வண்ணம், சோற்றுக்கும், துணிக்கும், பயணத்துக்கும் காசு கிடைக்காமல் மனிதரை தமது பணத்தை நாட்டுக்கு முடிஞ்சி கொடுத்து விட்டு பிச்சை எடுக்க விட வேண்டுமா?

மகனும் இவரும் சென்றார்களாம், சுலபமாகவே  குறைந்த பட்ச நேரத்திலேயே கிடைத்து விட்டதாம். எனக்கும்கூட நிற்காமல் ஒரு பத்தாயிரம் கிடைத்துவிட்டதுதான் கையிலிருந்து சிறு தொகையை வங்கியில் கட்டி விட்டோம்தான்...ஆனால் நமது தனிப்பட்ட செல்வாக்கான ஒரு அனுபவத்தை மட்டுமே வைத்து பொதுக்கருத்தை எட்டுவது சரியான எழுத்தாளர்க்கு அழகல்லவே. நான் தினமும் பயணம் செய்கிறேன், செல்லும் இடம் எல்லாம் மேம்போக்காகப் பார்த்தாலும் வங்கி இருக்கும் இடத்தை பார்த்தாலே இங்கு வங்கி இருக்கிறது என டாஸ்மாக் அடையாளம் போல புரிந்து கொள்ள முடியுமளவு கூட்டம் நிறைய இருப்பதைக் காணமுடிவதை எப்படி இல்லை என மறுக்க முடியும்?

அல்லது எந்த ஏடிஎம்மிலும் பணம் இல்லை, வங்கியிலும் இல்லை, அல்லது  2000 மட்டும் பெற்றுக் கொள்ளுங்கள் எனக் கொடுத்த கதை எல்லாம் இல்லையா? வங்கிக் கணக்கையே முடித்துக் கொள்கிறோம் என்று சொன்ன ஒரு வாடிக்கையாளர்க்கு அப்படி முடித்தாலுமே உங்கள் பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக் பிற்காலத்தில்தான் கொடுக்க முடியும் எனச் சொன்ன சேதிகள் எல்லாம் இல்லையா?

Image result for Economic crisis of india 2016
ஒரு வீட்டின் எஜமானி சொல்கிறார்....ஒரு கெட்ட வார்த்தையை மொழிந்து விட்டு குடும்பம் என்று ஒன்று இருந்தால் தானே தெரியும்? என...காய் கறி கூட காலையில் சென்று வாங்க முடியவில்லையாம், மாலையில் சென்றால் கொஞ்சம் உயிர் வாழ முடியும் என்று தோன்றுகிறது என்கிறார்....விலைவாசி அப்படியாம்...சாப்பிடலையா பேருந்தில் எவருமே கூட்டமாகக் காணோம் என்கிறார் ஒரு நடத்துனர், பெங்களூர் பேருந்தில் ஒருவர் மட்டுமே இருக்க அத்தனை இருக்கையுமே காலியாக இருக்க பேருந்து செல்வதை நானே 5 ரோட்டு சாலையில் சேலத்தில் பார்க்க நேர்ந்தது.

இப்படி மக்களை முடக்கிப் போட்டிருக்கிறது. அடுத்து சில மாதங்களில் உணவு, தானியம், காய்கறி கூட கிடைக்குமோ என்னவோ...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

Monday, November 21, 2016

2000 ரூபாய் நோட்டில் பிரதமர் மோடி பேசுகிறார் என்பதே பேச்சு: கவிஞர் தணிகை

2000 ரூபாய் நோட்டில் பிரதமர் மோடி பேசுகிறார் என்பதே பேச்சு: கவிஞர் தணிகை
Image result for modi speaks in 2000 rupee note in the place of mangalyaan satellite


பூனை வெளியே வந்து விட்டது. எலி அம்மணத்தோடு ஓடியது ஏன் என்பதும் தெரிந்து விட்டது. 2000 ரூபாய் நோட்டை சில்லறை கிடைக்கவில்லையே என்பதற்காக மட்டுமே வாங்காதீர் என்பதை விட மோடி பேசுகிறார் என்ற காரணத்தை காட்டியே புறக்கணிக்கலாம் என்கின்றனர் எதிர் அணியினர்.மேலும் இது சரியா என்றால் 20000 கோடி சொத்துள்ள ராகுல் காந்தியே கியூவில் நிற்கிறார் அதனால் இதில் எல்லாம் என்ன என்கிறார் மற்றொருவர்.

இன்று டாக் ஆப் த டவுன் என்னவென்றால் அந்த 2000 ரூபாய் நோட்டை திருப்பினால் மங்கள்யான் செயற்கைக் கோள் தெரிகிறது. அதை குறிப்பிட்ட ஆப் பயன்படுத்தி செல்பேசியில் பார்த்தால் அதில் மோடி பேசுவது நேரடியாக ஒளிபரப்பாகிறது.

புதிய 2000 ரூபாய் நோட்டில் அந்த சிறப்பு அம்சம் இந்த சிறப்பு அம்சம் என்றெல்லாம் வரை கோடிட்டு 15 வகையில் சொன்னவர்கள் இதை ஏன் சொல்லவில்லை இந்த ஊடகத்தார் என்பதுதான் அறிய முடியவில்லை.

ஒபாமா வரும்போது பல கோடி செலவில் கோட் தைத்து அதில் மோடி மோடி என போட்டுக் கொண்டவர் பின்னால் எதிர்ப்பு வலுத்ததும் அதை ஏலம் விட்டு நல்ல காரியத்துக்காக சேவை செய்ய பயன்படுத்த அந்த கோடிகளை மோடி தந்தார் என்பது முன்னால் செய்தி.

இந்நாளில், காந்தி, மேலும் சுதந்திரப் போராட்ட வீரர்கள், அசோக சக்கரம், சூரியன் இப்படி எல்லாம் நாம் பணத் தாள்களில் பார்த்தோம் இந்தியாவில். ஆனால் இது புதிது. மிகவும் புதிது. செல்பேசியின் ஒரு குறிப்பிட்ட அப்ளிகேஷன் ஆப் பயன்படுத்தி ஸ்கேன் செய்வது போல, அல்லது போட்டோ எடுப்பது போல அல்லது வீடியோ எடுப்பது போல 2000 ரூபாய் நோட்டின் பின் பக்கம் திருப்பிப் பார்த்தால் மங்கள்யான் செயற்கைக் கோளில் இருந்து மோடி பேசுவது புலப்படுகிறது.

அறிவியல் பயன்பட்டிருக்கிறது. சுமிதா என ஐயப்பனுக்கு ஸ்மிர்தா பேர் கொஞ்சம் மாற்றி ஸ்பெஷல் ரயில் ஐயப்பமலைக்கு விட்டிருப்பது போல,இதில் எந்த அனுமதியும், எந்த அங்கீகாரமும், இல்லாமல் பிரதமர் என்ற ஒரே கோதாவில் தமது உருவத்தை வெளிப்படுத்தி பேசுவதை வைத்துள்ளார். இதற்கு முன் எந்த பிரதமரும் இந்த விதமான பணத்தாளில் தமது உருவத்தை அச்சடிக்க வில்லை இரகசியமாக உள்ளீடு செய்யவில்லை.. அவர்களுக்கு அந்த வாய்ப்பில்லை.
Image result for modi speaks in 2000 rupee note in the place of mangalyaan satellite


சத்தமில்லாமல் ஒரு தன்னைத் தானே வியந்து கொண்டு புகழ ஒரு சாதனை என நினைத்து இப்படி செய்து கொண்டார் போலும். இந்த பழைய 500, 1000 நோட்டு வேண்டாம் என்பவர் மறுபடியும் 500, 1000 நோட்டுகளை வெளியிடும் முன் இந்த 2000 நோட்டை ஏன் இவ்வளவு அவசரமாக வெளியிடுகிறார் என்றால் எலி அம்மணத்தோடு ஆற்றோடு போகிற ரகசியம் இன்றுதான் வெளியாகி இருக்கிறது.

இந்த நோட்டை வங்கிகள் தருகிறதே தவிர வாங்குவதில்லை. எவரும் சில்லறை தர அஞ்சுகிறார்கள். மேலும் இன்று ஒரு 13 வயதான கேரளத்து சிறுமி ஸ்கேன் செய்து கலர் பிரிண்ட் எடுத்து கடையில் மாற்றி அதை பக்கத்து கடைக்காரர் சில்லறை தரும் முன் கண்டறிந்துள்ளார். இது போல எத்தனையோ பேர் ஜெராக்ஸ் எடுத்து பயன்படுத்த கள்ளப் பணமாக பயன்படுத்த முனைந்துள்ளனர்.

பொருளாதார சீர் திருத்தம் செய்ய புறப்பட்டிருப்பதாக சொல்லும் மோடி அரசு தக்க கால அவகாசம் எடுத்துக் கொன்டு பணக்கற்றைகளை நல்ல முறையில் எந்தவித சிறு கள்ளத்தனத்துக்கும் இடம் கொடாத வகையில் செய்து கொண்டு வந்திருந்தாலும், 100 ரூபாய் நோட்டோடு நிறுத்திக் கொண்டிருந்தாலும் , நன்மையே.மேலும் இந்த 2000 நோட்டை கொண்டு வராமலிருந்திருக்க வேண்டும். இப்படி எல்லாம் இல்லாமல் மக்களை பாடாய்படுத்தி தடம் மாறி மறுபடியும் பண எவரெஸ்ட்களின் சாதகமாக நாட்டை கொண்டு செல்வதன் மூலமாக என்ன செய்ய விருக்கிறது என்பதை சில மாதங்களுக்கும் பின் அனைவரும் காணத்தான் போகிறோம். அவர்கள் சொல்கிறபடியே...

பேசாமல் இந்த நோட்டை திரும்பப் பெற்றால் அது நாட்டுக்கு நல்லது. இல்லையேல் இனி வரும் பிரதமர்கள் இதே நடைமுறையை எதிர்காலத்தில் பயன்படுத்தினால் அந்த அந்த பிரதமர்கள் ஆளும் காலத்தில் அந்த அந்த பிரதமர்களின் உருவத்தை சினிமாக்களை விடியோக்களை பெருமதிப்புடைய இந்திய நாட்டின் பணத்தில் பார்க்கலாம் .

மேலும் நதி நீர் இணைப்பு போன்ற மாபெரும் திட்டங்களை செயல்படுத்தி விட்டு இப்படி போட்டுக் கொண்டால் கூட நாம் திருப்தி பெறலாம்.அல்லது இப்படி போட்டுக் கொண்டதன் தண்டனையாக இவர் நதி நீர் இணைப்பு பணியை இவர் காலத்துள் செய்து முடித்தாலும் ஏற்கலாம். அதை எல்லாம் விட்டு விட்டு சும்மா இவர் பாட்டுக்கு இவரது அம்மா க்யூவில் நின்று பணம் வாங்குகிறார் என வேடிக்கை காட்டியபடி, இவரது மனைவியை யார் என்றே தெரியாமல் ஒதுக்கி விட்டு நாட்டின் மாபெரும் தலைவராக சரித்திரம் சொல்ல வேண்டும் என இப்படி ஏதாவது செய்து கொண்டிருந்தால் சுயஸ்துதி பாடிக் கொண்டிருந்தால் அவமானம் அடையப் போவது உறுதி.

கர்வம், அகந்தை, என்றெல்லாம் சொல்வார்கள். தம் புகழை தாமே பாடிக் கொள்ளக் கூடாது என்பது இந்திய நாட்டின் எழுதப்படாத விதி. அதை மோடி செய்து மறுபடியும் ஒரு கெட்ட பெயரை ஈட்டி இருக்கிறார். காலம் அவரை மன்னிக்கிறதா, தண்டிக்கிறதா பொறுத்திருந்து பார்ப்போம்.

அம்மாவும் மோடியும் இது போன்ற விஷயங்களில் ஒன்றாகவே ஒற்றுமையுடனேயே இருக்கிறார்கள் என்பதுதான் நமது ஆள்வோரைப் பற்றி நாம் அறிய முடியும் சேதி.

பாராளுமன்றத்தில் விவாதிக்க பிரதமர் மோடி வரவழைக்கப்பட்டு இது பற்றி எல்லாம் விவாதம் நடத்தப் பட வேண்டும் அது நல்ல நாட்டுக்கு நல்லது.தனிமனித துதி என்றுமே சர்வாதிகாரத்துக்கு வழி வகுத்தது போல அது இந்திய முதலாளித்துவ நாட்டுக்கும் நல்லதல்ல..
Image result for modi speaks in 2000 rupee note in the place of mangalyaan satellite

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

நான் பார்த்தேன். அந்த நோட்டின் பின்புற மோடியின் உருவப் படத்துடனான பேசும் மோஷன் பிக்சரை 2000 ரூபாய் நோட்டின் பின்புறம் உள்ள மங்கள்யான் செயற்கைக் கோள் உள்ள இடத்தில் செல்பேசியை வைத்துப் பார்த்தால் அந்த விந்தை தெரிந்தது. தொழில் நுட்பம் என்ன என்று மேலும் அறிய அவா, அது பற்றி வேறு எவராவது விளக்கிக் கூறினால் மேலும் தெரிந்து கொள்வேன்.

Saturday, November 19, 2016

ஆக்சன் மோடியின் அதிரடித் தாக்குதலும் அம்பானிகளின் அசைவின்மையும் ஒரு சந்தேகம்: நகைச்சுவை பார்வை. கவிஞர் தணிகை

ஆக்சன் மோடியின் அதிரடித் தாக்குதலும் அம்பானிகளின் அசைவின்மையும் ஒரு சந்தேகம்: நகைச்சுவை பார்வை. கவிஞர் தணிகை


Image result for modi economy


அம்பானி, அதானி, மோடி, லலித், மல்லையா இப்படி பல பேர்கள் எல்லாம் வட இந்திய பேர்கள், நம்பள்கி ஜெ பர்மெனட்கி ஜெ...தாய் மண்ணே வணக்கம். அண்ணே வணக்கம். தற்கொலை செய்யும் சத்தம் அடங்கி மை வைக்க வரிசைக்குள் போய் நின்று நாலு ஆயிரத்தை இரண்டாயிரமாக்கினாலும் வயிறு பசிக்க க்யூவில் நிற்கும் இந்திய ஜனநாயகம் ஓட்டுப்போட்டாலும், மை, வங்கியில் பணம் எடுக்கையிலும் மை, கொஞ்ச நாள் பொறு தலைவா மிரகிள் நடக்கும் என்கிறார் ஜெட் லீ..நாற்பது ஐம்பது பேர் அம்பேல் ஆன பிறகும்

கொஞ்ச நாளில் என்ன நடக்கும் என்பதே தெரியாத நிலை என நண்பர் ஒருவர் பயமுறுத்துகிறார், மற்றொருவரோ எல்லாம் நன்மைக்கே நீங்கள் செத்தாலும் பரவாயில்லை எல்லாருக்கும் நல்ல நேரம் பின்னால் இருக்கிறது கொஞ்சம் பொறுத்திருந்து பாருங்கள் இந்தியப் பொருளாதாரம் நிமிர்ந்து எழுந்து நம்மை வாழவைக்கப் போகிறது என்கிறார் இன்னொருவர். இரண்டு பேருமே பதிவர்கள். நண்பர்களே..

இரண்டுக்கும் நடுவே இடையே நடு சென்டரில் நாம்....இன்டியன்ஸ் அட் கிரஸ் ரோட், இன்டியன் எகானாமிக்ஸ் அட் கிராஸ் ரோட், ஒருவர் சொல்கிறார் அம்பானி எல்லாம் வரிசையில் வந்து நின்றால்தான் நிலை சரியாகும் என நம்புவீர்களா என...எனக்கும் கூட ஏதோ தப்பா தப்புத் தப்பா எக்குத் தப்பா நடக்கறா மாதிரியே தெர்யுதே...அடங்கொய்யால நம்பள் கிட்ட டாஸ்மாக் பயக்கம் எல்லாம் இல்ல சாமி...

Image result for modi economy

ஆனா டாஸ்மாக் சூபர்வைசர் சொல்றார், அவிக கடைக்கு வரும் சுமார் இரண்டு இலட்சம் பணம் அன்னாடம் பேங்கல கட்டறதெல்லாம் அப்படியே அரசியல் வியாதிகள் கிட்ட சாரி அரசியல் சாமிங்ககிட்ட முச்சூடும் சில்லறையா அந்த பழைய நோட்டுக்கு பதிலா போய்டுதாமே...இது என்னா நியாயம்? எப்படி எப்பூடி? இது எந்த க்யூ, இது எந்த வரிசை? வரிசையே இல்லாம, க்யூவே இல்லாம...

அதே போலதான் அதாங், எங்க எப்படி சில்லறையா வந்த பணம் வந்தாலும் இந்த பணக்காரப் பயங்ககிட்டயும் அரசியல் வியாதிங்க கிட்டயும், அரசாங்க பதவி மாருகிட்டயும் அப்படியே சில்லறை 100  50 எல்லாம் பூடுதாமே...
Image result for modi economy



யோவ் மோடி நான் ஒன்னே ஒன்னு கேக்கறேன்: ஸ்ரீ புரம், அம்மா அமிர்தம், ஈசா பூசா, மேல்மருவத்தூர் 4 அம்மா, திருப்தி எழ்மலை,ஐயப்ப நாடு நம்பூதிரி பாடு தேவசம் போர்டு, திருவனந்தபுரத்து பாதாளம்,இப்படி நம்ம நாட்டில் எக்கச் சக்கம் கொட்டிக்கெடக்குதே , அத்தை விடு, எத்தனை டிவிக்கள், எத்தனை அறக்கட்டளைகள், பள்ளிகள், கல்லூரிகள் அத்தை எல்லாம் முந்தி எடுக்கறதை வுட்டுப் போட்டு எங்க அடி வயித்துல கை வைச்சுட்டியே அய்யா, உம் மூஞ்சில பீச்சாங்கையை வைக்க...அட அவங்க இன்னும் 500 1000 அப்படியே பழ்சானும் போடுங்க என நன்கொடை, வாங்க அது எப்படிய்யா செல்லும் ? அவகளுக்கு ஒரு நீதி, சட்டம், ஒரு அவசர்மா ஒரு ஒன்னுக்கு, ரெண்டுக்கு அல்லா நடுத்தர கீழ்த்தட்டுக்கும் வேற ஒன்னா? இதே நீதியா? மோடி ஒன்னை இன்னா இன்னாவோ சொன்னாங்க ஓட்டைப் போட்டாங்க, வெளி நாட்டுல பாச்சா பலிக்கல..இங்க எங்க கிட்ட கை வச்சிட்டிய மவராசா  ஏர் இந்தியா மவராசா
Image result for modi economy


முச்சூடும் எங்க பணத்தை மறுபடியும் புடுங்கி பேங்க் வழியா அதானி, மதானி, அம்பானி, பிர்லா, டாட்டா எல்லாம் டிங்கிகளுக்கும் கொடுத்துட்டு வாராக் கடன்னு சொல்லி அவனுங்களுக்கு விசுவாசம் காட்டப் போறீயா? அவங்க காசலதான் பதவிக்கு வந்த அவங்களுக்கு நேர்மையா நடந்துக்கறே. காங்கிரஸ் அடுத்து மறுபடியும் வர வழி செஞ்சுப்புட்டியே கோட்டை வித்த மோடியே...அங்க ட்ரம்ப் பல்ப்..இங்க உனக்கு இனி ஆப்புதான்..

மறுபடியும் பூக்கும்  வரை

கவிஞர் தணிகை.

முருகவேலும் லைலா ஓ லைலாவும்: கவிஞர் தணிகை

முருகவேலும் லைலா ஓ லைலாவும்: கவிஞர் தணிகை

Image result for laila o laila


லைலா ஓ லைலா என மலையாளத்தில் மே 2015 14ஆம் தேதி வெளி வந்த அதே படம் தமிழில் முருகவேல் என நவம்பர் 11ல் முருகவேல் என சத்யராஜ் டைட்டில் ரோல் செய்வதாக வெளி வந்துள்ளது. ஜோஷியின் படம். முருகவேல் அதில் சா‍ஹித் காதராக இருந்தவர் இதில் முருகவேல் ஆகியிருக்கிறார் அவ்வளவுதான் படம் ஒன்றுதான் மொழியும் சற்றேறக் குறைய ஒன்றுதான்.

மலையாளம், தமிழ், ஹிந்தி என மும்மொழிக் கலவையில் வந்துள்ள படம் மொழி மீறியது சினிமா என்று காட்டுகிறது. நேர்த்தியான படப் பிடிப்பு, நல்ல இடங்கள் பளிச்சென சுத்தமாக , இது இந்தியாவில் தானா எடுக்கப் பட்டது என்பது போல..
Image result for murugavel movie review


சுமார் 2 மணி 48 மணித்துளிகள். நல்ல கதை வழக்கம் போல  Raw  ரிசர்ச் அன்ட் அனலைசிங் விங் உளவாளிகளின் தலைவனாக சா‍ஹித் கபூர் எனச் சொல்லப்படும் முருகவேல் தமிழில். அவரின் கீழ் பணிபுரியும் ஏஜன்டாக ஆக்சன்கிங் மோகன்லால் . நேர்த்தியாக அவரவருக்குரிய ரோலை செய்து பார்க்கும்படி செய்துள்ளார்கள்.

பாகிஸ்தானின் தீவிரவாதக் குழு வழக்கம்போல குண்டு வைப்பு, முன்னால் அமெரிக்க குடியரசுத் தலைவரை விமானத்தில் தரை இறங்கும்போதே ஏவுகணைத் தாக்குதல் மூலம் அழிக்க வேண்டும் என்பது இலக்கு. லைலா என்ற ஒரு பணக்கார ஹோட்டல் டேன்சரின் தொடர்பு, தீவிர வாதிகளின் குருரமான கொலை,கொலைகள் இப்படி ஒரு பக்கம், மறுபக்கம் முதல் மனைவியை விவாகரத்து செய்த ஜெயமோகன் இரண்டாம் மனைவியின் அமலாபால் அஞ்சலி மேனனுடன் திருமணத்துக்கே தாமதமாக வரும் நிலை அனைவரும் அவரைப் பற்றி புரிந்து கொள்ளாவிட்டாலும் காதலி புரிந்து கொள்கிறார் மனைவியாக சந்தேகப் படுகிறார். சந்தேகம் தெளிந்த பின்னே அஞ்சலி கணவனின் பணிக்கு உயிரைப் பணயம் வைத்து துணை புரிகிறார். சூப்பர் ஸ்டார் மோகன்லால் தமக்கு அளிக்கப்பட்ட காப் கமாண்டர் பணியை நல்ல முறையில் செய்து இளமை பறை சாற்றுகிறார்.
Image result for murugavel movie review


டிடக்டிவ், ஜேம்ஸ்பாண்ட் ஸ்டோரி... நல்லாதான் இருக்கு. ஆனால் இதில் வழக்கம் போல் புதுமை ஏதும் தேடாமல் இருந்தால் ஒரு நாவலைப் படிப்பது போல இருக்கிறது. படம் தெளிவாக நகர்கிறது. அருமையான கண்ணாடி போன்ற பளிச் பிரிண்ட்டில் சாதாரண காட்சிகள் கூட கண்ணில் ஒற்றிக் கொள்ளும்படியாக..

நள்ளிரவில் விடக் கூடாது எனப் பார்த்தேன் பொழுது போகாதவர்களும் சத்யராஜ், மோகன்லால் ரசிகர்களும் பார்க்கலாம் இரசிக்கலாம். அமலாபால் நன்றாக நடித்திருக்கிறார். சந்தேகப்படும் மனைவியாக, நல்ல காதலியாக, நல்ல துணையாக..

Image result for laila o laila

நூற்றுக்கு 45 .சத்யராஜ் இது போன்ற ரோல் செய்வது அவசியம்தான் . பார்க்க நன்றாக இருக்கிறது பாஹு பலியில் செய்ததைவிட...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

செல்லாத ரூபாய்:வீரியம் புரியாமல் அமைதி காக்கிறோம் Posted on 17/11/2016 by செங்கொடி

500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பைத் தொடர்ந்து மக்கள் இதுவரை சந்தித்திராத பல இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். கருப்புப்பணத்தை, கள்ளநோட்டுகளை இந்த நடவடிக்கை ஒழிக்குமா? ஒழிக்காதா? மோடியின் நோக்கம் என்ன? பெருமுதலாளிகள் இதனால் இழந்தது பெற்றது என்ன? அறிவிப்புக்கு முன்னமே பணம் மாற்றிய தகவல்கள் என நாள்தோறும் செய்திகள் மக்களைத் தாக்கி செயலிழக்கச் செய்து கொண்டிருக்கின்றன. செய்தி ஊடகங்கள் முழுக்க முழுக்க மக்களைக் கை கழுவி விட்டு அரசின் ஊது குழலாய் அப்பட்டமாய் மாறி நிற்கின்றன. இணையத்தில் சமூக ஊடகங்கள் மட்டுமே மக்களுக்கான விளக்கங்களை சொல்லிக்  கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் தோழர் வில்லவன் எழுதிய இந்தக் கட்டுரை அந்த விளக்கங்களினின்று விலகி யதார்த்தத்தை நேரப்போகும் அபாயத்தை எளிமையாய் மக்களுக்கு புரியவைக்க முயல்கிறது. படித்துப் பாருங்கள்.
money_3079003f

மோடியின் பொருளாதாரக் கலவரம்- முதலிரவோடு கலைந்துபோன மோடி பக்தர்களின் சொப்பன ஸ்கலித சுஹானுபவம்!

மோடி ஆர்ப்பாட்டமாக அறிவித்த ரூபாய் நோட்டு புரட்சி பாமர மக்களை நாடோடிகளாகவும் பிச்சைக்காரர்களாகவும் மாற்றி தெருவில் நிறுத்தி ஒரு வாரமாகிறது. இளைஞர்களுக்கு ஈவ்டீசிங் செய்ய கற்றுக்கொடுக்கும் சினிமா மக்களுக்கு கருப்புப் பணம் என்றால் என்னவென்றும் கற்றுத்தந்திருக்கிறது. அந்த விழிப்புணர்வின் உச்சபட்ச ஆர்கசத்தில் இருந்த மிடில்கிளாஸ் மக்கள் தமது சொப்பன ஸ்கலித சுகானுபவத்தில் கூச்சலிட்டார்கள். எதிர்ப்பதா ஆதரிப்பதா என குழம்பிய கட்சிகள் மையமாக கருத்து சொல்லின. மோடியின் காலை நக்கும் வாய்ப்புக்கு காத்திருந்த எலைட் குடிகள் அல்லது தம்மை அப்படி கருதிக்கொள்ளும் மனிதர்கள் மோடியை புகழும் ஒரு நல்வாய்ப்பை இறுக பற்றிக்கொண்டார்கள். தந்தி டிவி பாண்டே நள்ளிரவுவரைக்கும் நற்செய்தியளித்தார்.
அன்றிரவு முதல் ஏடிஎம்கள் முற்றுகைக்கு உள்ளாயின. மறுநாள் நாடே 100 ரூபாய்க்கு அல்லாடியது. கிரெடிட் கார்டு வைத்திருக்கும் பக்தர்கள் தேசபக்தி வகுப்பெடுப்பதில் பிஸியானார்கள். விவரம் தெரியாமல் பயணித்த மக்கள் குழந்தையின் பாலுக்குக்கூட பணமின்றி தவித்தபோது புதிய இந்தியா பிறந்ததாக பூரித்தார் ரஜினி. சொன்ன கையோடு அந்த குழந்தைக்கு பொம்மை வாங்க வெளிநாட்டுக்கும் பறந்துவிட்டார். அவரது ஆதர்ச நாயகன் மோடியோ பேடிஎம் விளம்பரத்தில் என் மூஞ்சியை பார்த்துக்கொள்ளுங்கள் என சொல்லாமல் சொல்லிவிட்டு சிங்காரம் குறையா முகத்தோடு ஜப்பான் கிளம்பிவிட்டார்.
அன்று துன்பப்பட்டவர்கள்கூட இது ஓரிரு நாளில் தீர்ந்துவிடும் சங்கடம்தான் என நம்பினார்கள். ஆனால் இந்தியர்கள் நம்பிக்கை ஒருநாளும் உண்மையாவதில்லை. செய்தி வந்த அன்றே வங்கிப் பணியாளர்கள் அச்சமடைந்தார்கள். அந்த அச்சம் வங்கிகள் திறந்தபோது எல்லா மக்களுக்கும் பரவிற்று. பணமிருந்தும் செலவளிக்க இயலாமல் அல்லாடிய மக்களின் கதை மெல்ல சமூக வலைதளங்களை ஆக்கிரமிக்க ஆரம்பித்தன. அப்போதும் இது ஒரு தற்காலிக பிரச்சினை எனும் பார்வையே இருந்தது. வங்கிகளில் இரண்டாம் நாள் கொடுக்கும் பணத்துக்கு தட்டுப்பாடு வந்தபோதுதான் சிக்கலின் தீவிரம் உறைக்க ஆரம்பித்தது. பல வங்கிகளில் இரண்டாம் நாளே பணம் இல்லை. பணம் இருக்கும் வங்கிகள் தமது வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பணம் தரப்படும் என அறிவித்தன. ஏடிஎம்களில் 2 லட்சத்துக்கு மேல் பணம் வைக்க முடியாது என்பதும் புதிய 2000 ரூபாய் தாள் ஏடிஎம் டிரேயில் பொருந்தாது எனும் தகவல்கள் வந்தன. ஏடிஎம்களை புதிய நோட்டுக்கு தக்கவாறு மேம்படுத்த 100 நாட்களாவது ஆகலாம் எனும் செய்திகளும் எட்டிப்பார்த்தன. புழக்கத்தில் உள்ள 87 சதம் பணத்தை மாற்ற உள்ள பெரிய கட்டமைப்பில் இருக்கும் கோளாறுதான் முதல் எச்சரிக்கையாக அமைந்தது.
இந்த அடிப்படை குறைபாடு குறித்த தகவல்கள் வந்தவுடன் மோடியின் கால் நக்கிகள் பேச்சில் பதற்றம் தென்பட்டது. அறிவிப்பு வந்த முதல் இரவோடு தமக்கு ஏற்பட்ட பரவச உணர்வு இத்தனை சீக்கிரம் தீரும் என அவர்கள் எதிர்பார்க்கவில்லை, வழமைபோலவே அது ஒரு சுயஇன்ப பரவசம்தான் என அறிந்தபோது பதற்றம் ஆத்திரமாக உருவெடுத்தது. 10 மாதங்களாக திட்டமிடப்பட்டது என பாஜக வட்டாரங்கள் சொல்கின்றன, எனக்கே அரை மணிநேரம் முன்னால்தான் தெரியும் என அருண்ஜெட்லீ சொல்கிறார். அப்படியானால் 10 ஆண்டுகளாக மோடி திட்டமிட்டது யாருடன் எனும் குழப்பம் தோன்றியது. பாஜக ஸ்லீப்பர் செல்கள் மெல்ல நழுவ ஆரம்பித்தன, முட்டுக்கொடுப்பதா விலகி ஓடுவதா எனும் குழப்பம் சமூக ஆர்வலர்களிடமும் பொருளாதார நிபுணர்களிடமும் வெளிப்பட்டது. கலவரம் செய்து நாற்காலியை தக்கவைப்பதுபோல இதையும் ஒருசில நாளில் முடித்து சீன் காட்டிவிடலாம் என நாக்பூர் பெருந்தரகர்கள் எண்ணியிருக்கக்கூடும். ஆனால் அந்த புரிதலில் ஒரு பெரும் பிழை நேர்ந்துவிட்டது என்றே நம்ப வேண்டியிருக்கிறது. சங்கிகளிடம் ஒரு கலவரத்தை ஆரம்பிக்கவும் முடிக்கவும் போதிய ஆள்பலம் இருக்கிறது. அதில் முக்கால் நூற்றாண்டு முன்னனுபவம் இருக்கிறது. ஆனால் ரூபாய் நோட்டு விவகாரம் அப்படியானதல்ல. இந்தியா இதற்குமுன் இப்படியான ஒரு நடவடிக்கை எடுத்த அனுபவமில்லை
இதன் முதல் பேரபாயம் புதிய ரூபாய் நோட்டுக்களின் இருப்பில் இருந்து துவங்குகிறது. பணம் அச்சடிப்பது பிட் நோட்டீஸ் போல இலகுவான பணியல்ல. புழக்கத்தில் இருக்கும் நோட்டுக்களை மாற்றீடு செய்ய போதுமான அளவு புதிய நோட்டுகள் கையிருப்பு இல்லை. அவை முடிய பல மாதங்கள் ஆகலாம். அதனால்தான் மை வைப்பது, ஆதார் அட்டை கேட்பது என பல குறுக்கு யோசனைகள் படையெடுக்கின்றன. இப்படியான அறிவிப்புக்கள் நாள்தோறும்கூட வரலாம். ரிசர்வ் வங்கியின் பணம் அச்சிடும் திறனுக்கும் நாட்டின் இன்றைய தேவைக்கும் பாரிய இடைவெளி இருப்பது அப்பட்டமாக தெரிகிறது. இது சரியாக மே மாதம் வரை ஆகலாம் என செய்தி வாசிக்கிறது கலைஞர் டிவி. சில ஊடகங்கள் 4 மாதம் ஆகும் என்கின்றன.
இப்போது வங்கிகளில் செலுத்தப்படும் பணத்தில் பெரும்பங்கு தினசரி தொழிலுக்கான முதலீடு அல்லது உடனடி தேவைக்கான கையிருப்பு அல்லது சேமிப்பு. இப்போது தரப்படும் 4500 பணம் கைச்செலவுக்கானது மட்டுமே. ஏடிஎம்கள் சர்வ நிச்சயமாக முழுமையாக செயல்படப்போவதில்லை. மக்களிடம் பணத்துக்கான தேவை சில நாட்களில் உருவாகையில் வங்கிகள் பெரும் நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும். மக்கள் பல செலவீனங்களை ஒத்தி வைக்கிறார்கள் (வாடகை, மளிகை பாக்கி ஆகியவை) இது நீண்ட நாட்களுக்கு சாத்தியமல்ல. டிசம்பர் முதல் வாரத்தில் இந்த நெருக்கடி இன்னும் தீவிரமடையும். பணமாக ஊதியம் கொடுக்கும் நிறுவனங்கள் ஏராளமாக இருக்கின்றன. அவையும் வங்கிகளை விரைவில் நெருக்க ஆரம்பிக்கும்.
இப்போதே சிறுவணிகர்கள் வியாபாரம் 75% சதவிகிதம் பாதிக்கப்பட்டுவிட்டது. கிருட்டினகிரியில் விவசாயிகள் விளைபொருளுக்கு உரிய விலை இல்லை. இது கிட்டத்தட்ட பாமர மக்களுக்கான ஒரு கலவரச்சூழல். காரணம் இங்கு வங்கியில் முடங்குவது அவர்கள் சேமிப்பல்ல மாறாக அவர்கள் தினசரி வாழ்வுக்கான முதலீடு. இதனை எத்தனை நாட்களுக்கு அவர்கள் தாங்குவார்கள்?
பண இருப்பு குறைகையில் அடிவாங்கும் அடுத்த தொழில் கட்டுமானம். அதில் பெருமளவு பணம் கைமாறுவது வங்கி பரிமாற்றமாக அல்ல. வங்கிக்கடனில் வீடு கட்டுவோரும் நகைகளை அடகுவைப்பது கைமாத்து வாங்குவது சேமிப்பை உடைப்பது என பல நடவடிக்கைகளை மேற்கொண்டே அதனை முடிக்கிறார்கள். இந்த சாதாரண வங்கி நடவடிக்கைகள் கொஞ்ச நாளுக்கு மிகவும் சிரமப்படுத்தக்கூடியவை. இதில் தொடர்புடைய பல துறைகள் பணமாக மட்டுமே வியாபாரம் செய்யக்கூடியவை. ஆகவே கட்டுமானம் முற்றாக முடங்கும். அது சார்ந்த தொழிலாளிகள் வேலையிழப்பார்கள்.
இதன் வேறுவகையான அவலத்தை வங்கி ஊழியர்கள் எதிர்கொள்கிறார்கள். கற்பனைக்கெட்டாத அளவுக்கு பரிவர்த்தனைகளும் குழப்பங்களும் அவர்களை மூச்சுத்தினற வைக்கின்றன. மோடியிடமும் ஜெட்லியிடமும் கேட்கவேண்டிய கேள்விகளை வங்கி காசாளர் எதிர்கொள்கிறார். பணம் கையிருப்பு இல்லாமல் பதில் சொல்லி சலித்துப்போகிறார்கள் அவர்கள். வங்கிகள் பெரும் ஆள்பற்றாக்குறையில் இயங்குகின்றன. இனி வரப்போகும் ரூபாய் நோட்டு நெருக்கடி அவர்களைத்தான் நேரடியாக தாக்கும். இடையே மை வை, நாமம் போடு என அரசு புதிய கடமைகளை திணிக்கிறது. நான் பேசியவரை அவர்கள் கடுமையான மன அழுத்தத்திலும் களைப்பிலும் இருப்பது தெரிகிறது. வங்கிகளுக்கு இனி 100 மற்றும் அதற்கு குறைவான ரூபாய்கள் சில மாதங்களுக்கு மக்களிடமிருந்து வராது. நாடு முழுக்க இருக்கும் வங்கிகளுக்கு பணம் சப்ளை நடந்துகொண்டே இருக்க வேண்டும். வழக்கமான வங்கிப்பணிகள் எப்போது ஆரம்பிக்கும் என்பதும் தெரியவில்லை. அதற்கான திட்டங்கள் என்ன என்பதும் தெரியவில்லை.
சுற்றுலாத்துறை முதல் கோயில்கள் வரை வருமானக்குறைவை சந்திக்கவிருக்கின்றன.
கிராமங்களின் கதி என்னவாகும் என தெரியவில்லை. இப்போதே கூட்டுறவு வங்கிகளை அரசு கைகழுவிவிட்டது. கூலி வியாபாரம் என இரண்டு பக்கமும் ரொக்கத் தேவையுள்ள விவசாயம் பற்றி இப்போதைக்கு கவலைப்படக்கூட ஆளில்லை.
வங்கிகளின் கையிருப்பு அதிகமாவதால் அதனை கார்ப்பரேட்டுக்களுக்கு கடனாக கொடுப்பார்கள். சேமிப்புக்கான வட்டி குறைக்கப்படும். முதியோர் பாதுகாப்புக்கு எந்த திட்டமும் இல்லாத இந்தியாவில் முதியோர் தன்மானத்தோடு வாழ்வது அவர்களது சேமிப்பை நம்பியே. விளம்பரத்தால் வாழும் ஒரு கிழவனால் எண்ணற்ற முதியவர்கள் தங்கள் ஓய்வுகால வருமானத்தை இழக்கவிருக்கிறார்கள். ஆனால் பெரு நிறுவனங்கள் இதன் சாதகங்களை மட்டும் அனுபவிக்கவிருக்கின்றன. இப்போதே ஸ்டேட் வங்கி மல்லையா உள்ளிட்ட கார்ப்பரேட்டுக்களின் கடன் 7000 கோடியை தள்ளுபடி செய்திருக்கின்றன. பேரங்காடிகள், பேடிஎம் வகையறாக்கள் எல்லாம் பெரும் லாபத்தில் திளைக்கிறார்கள்.
சற்றேறக்குறைய 99 சதவிகிதம் மக்களை நிர்மூலமாக்கும் எல்லா தகுதியும் கொண்ட ஒரு பெரும் தாக்குதலை மோடி தொடுத்திருக்கிறார். இதைவிட மென்மையாக இந்த சர்வாதிகாரத்தை கண்டிக்க முடியாதும் எனும் அளவில் ஊடகங்கள் இதனை கையாள்கின்றன. இப்படியான ஒரு ரூபாய் நோட்டு தட்டுப்பாடு இதற்கு முன்னால் எந்த நாட்டிலும் வந்திருப்பதாக தெரியவில்லை. இதன் பின்விளைவுகள் அனுமானிக்க முடியாதை, அவை நல்லவையாக இருக்க இயலாது என்பது நிச்சயம். இந்தியா ஒரு பெரும் பொருளாதார பேரழிவை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. அதன் வீரியம் புரியாமல் நாம் அமைதி காக்கிறோம்.
 thanks: Sengodi and Villavan

marubadiyumpookkum varai
Kavignar Thanigai.

Thursday, November 17, 2016

ஜஸ்டிஸ் ஜான் மைக்கேல் டி குன்‍ஹா பற்றிய ஒரு நற்செய்தியும்...ம்ம்ம் : கவிஞர் தணிகை

ஜஸ்டிஸ் ஜான் மைக்கேல் டி குன்‍ஹா பற்றிய ஒரு நற்செய்தியும்...ம்ம்ம் : கவிஞர் தணிகை
Image result for john michel d cunha


கூடுதல் நீதிபதியாக கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் பணியாற்றுவார் அதன் பின் சில ஆண்டுகளில் உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக‌ பணிபுரிவார். இது போல தமிழகத்திலும் நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்ற போதிலும் இந்த குன்ஹா செய்தி என்னைக் கவர்ந்தது. எனவே...

ஜஸ்டிஸ் ஜான் மைக்கேல் டி குன்ஹாவை இந்தியாவின் நீதித் துறை மறந்திருக்க முடியாது. பார்ப்பன அக்ரஹாரகச் சிறையும், தமிழகத்தின் மாபெரும் கட்சியும் அதன் நிரந்தர முதல்வரும் வாழ்க்கையில் மறந்திடவே முடியாது. நினைவிருந்தால் தானே மறப்பதற்கு....மறந்திருந்தால்தானே நினைப்பதற்கு.. நான் காதல் பாடலைச் சொல்கிறேன்

காலச் சக்கரம் எப்படி எல்லாம் சுழல்கிறது பார்த்தீர்களா? மைக்கேல் டி குன்ஹா சொன்ன தீர்ப்பு சரியில்லை என்ற குமார சாமி ஓய்வு பெற்று இருக்கும் இடம் தெரியாமல் இருக்க அந்த தீர்ப்பால் பாதிப்படைந்த தமிழக முதல்வர் சில மாதங்களாக தம் இன்முகம் காண்பிக்காமல் படுத்த படுக்கையாக இருக்க‌

தர்மம் சக்கரமாய் மெல்லச் சுழல்கிறது.

இந்த நீதிபதியும் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியாக  அங்கே 65 பேர் வேண்டுமாம் 28 பேர் தான் இருக்கிறார்களாம்....எனவே தற்போதைய உயர்வு பெற்ற நீதிபதிகளில் குன்ஹா முதன்மையாக கருதப் பட்டு பதவி உயர்த்தப் பட்டு கூடுதல் நீதிபதியாகி சில ஆண்டுகளில் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருப்பார் என செய்தி ஊடகங்கள் தரும் செய்தி எவ்வளவு உண்மையாய் வாய்மையே வெல்லும் என்று சொல்கிறதோ?!

இந்த ஒரு செய்திக்குள் எப்படிப்பட்ட செய்திகள், எப்படிப்பட்ட உண்மைகள், தர்மங்கள், நீதிகள் சொல்லப் படுகின்றன, சொல்லப்பட்டிருக்கின்றன என மனித குலம் உணரத் தலைப்பட வேண்டுவது அவசியம். எனவே கதையை விட வாழ்க்கை நிதர்சனமான சம்பவங்கள் மிகவும் முக்கியமானவை. என்ன காலம்தான் பொறுமையாய் நம்மை காத்திருக்க வைத்து காலத்தின் வல்லமை எத்தகையது என நிரூபணப்படுத்த தக்க கால அவகாசம் எடுத்துக் கொள்கிறது

Image result for john michel d cunha

குன்ஹா தமது கடமையை செவ்வனே செய்திருக்கிறார். அவருக்கு காலம் கை கொடுத்திருக்கிறது. இது மத்திய அரசின் ஒப்புதலுடன் செய்யப்படும் ஒரு பதவி உயர்வு. இந்த வழக்கில் உள்ள ஏனையோர் பற்றி குறிப்பிட என்னதான் பெரிதாக சிறப்பாக இருக்கிறது...என்று எனக்குத் தெரியவில்லை. நவநீதகிருஷ்ணன் என்பார் பலனடைந்திருக்கிறார், குமாரசாமி பலனடைந்திருக்கிறார், குற்றம் சாட்டப்பட்டு குற்றவாளியாய் தண்டனை பெறப்பட்ட தமிழக முதல்வர் பலனடந்திருக்கிறார் இந்த நீதிபதி கொடுத்த தீர்ப்பை மாற்றி  அமைத்ததன் மூலம்...ஆனால் இன்றையக் காலக்கட்டத்தில் சொல்லப் போனால் சொன்னால் அதெல்லாம் பெரிய பலனாகத் தோன்றவில்லை. ஆனால் குன்ஹாவுக்கு கிடைத்த பதவி உயர்வு ஒரு நல்ல சமுதாயத்தின் அடையாளமாய் அவரின் உழைப்புக்கு கிடைத்த் அங்கீகாரமாய் இருக்கிறது.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

நவம்பர் 18 வ.உ.சிதம்பரம் பிள்ளை நினைவு நாள் மட்டுமல்ல எம் தந்தை சுப்ரமணியம் தாய் தெய்வானை நினைவு நாளும் கூட: கவிஞர் தணிகை

நவம்பர் 18 வ.உ.சிதம்பரம் பிள்ளை நினைவு நாள் மட்டுமல்ல எம் தந்தை சுப்ரமணியம் தாய் தெய்வானை நினைவு நாளும் கூட: கவிஞர் தணிகை





செக்கிழுத்த செம்மல், கப்பல் கை விட்ட பின்னும் இல்லை இல்லை இந்திய மக்கள் கை விட்ட பின்னும் வக்கீல் தொழில் புரிய விடாமல் எவ்வளவோ சூழ்ச்சிகள், அவரின் வாரிசுகள் மிகவும் கீழ் தட்டில் வாழ்ந்தது வரலாறு,சூரியன் எமைக் கேட்டுத்தான் எழும் விழும் என்ற மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை எதிர்த்த மாமேதை மாபெரும் துணிச்சல் பேர்வழி. எம் தந்தை 4 விசைத்தறியின் பிரேக் தள்ளி இரவு பகல் சிப்ட் பாராமல் உழைத்து எமது குடும்பத்தில் அப்போது இருந்த 10 பேரின் வாயும் வயிறும் நிறையக் காரணமாயிருந்தார். இருவருக்குமே சொல்லிக் கொள்ள ஏதும் கிடைக்கவில்லை. கடமை முடிந்ததும் காடு சென்றேகினார்கள். அவர்கள் இருவரையும் வணங்குகிறேன் உடன் என் தாய் படிக்காத தெய்வானை பெரும் குடும்பத்தை நிர்வகித்து அனைவரையும் மேலுக்கு கொணர்ந்த தமிழன்னை அவருடனும் சேர்த்து.

Image result for very huge trees

கவிதை ஒன்றும் எழுதத் தோன்றவில்லை. உழைத்து விட்ட வந்த உடல் அயற்சி.என்றாலும் நாளையை நான் நினைத்துப் பார்க்கிறேன். பிரார்த்தனை செய்வதன்றி பெரிதாக வேறு ஏதும் செய்ய இல்லை. வழக்கப்படி இப்போதும் சொல்கிறேன், எனது தந்தையின் உடல் வீடு வந்து சேர ஒரு வாடகைக் காருக்கு பயன்பட்ட எனது அப்போதைய சேமிப்பு வெறும் 750 ரூபாய் மட்டுமே நான் அவருக்காக செலவு செய்தது இல்லை இல்லை அவர் உடலை வீட்டுக்கு கொண்டு வர நான் செலவு செய்தது.

காலம் தான் எவ்வளவு விரைவாக போய்விட்டது. நான் பிறக்கும்போது அவர் வயது தோராயமாக 40 .1986ல் அவரது 65 வயதுடைய‌ மறைவு எனக்கு அவ்வளவுதான் என்ற பேருணர்வைக் கொடுத்தது. அதற்கும் மேல் என்ன செய்ய வேண்டும் அவரது மறைவுக்குப் பின் என்ற உணர்வு பொறுப்பை, கடமையை எப்பாடுபட்டாவது அவரது துணையான எனது தாயை அவரது , எனது தந்தையின் கோணத்திலிருந்து காத்து செல்ல வேண்டும் கண்ணும் கருத்துமாக போற்ற வேண்டும் என.

Related image

அதை நிறைவேற்றி விட்டதாகவே நம்புகிறேன். தந்தை இறந்து 30 ஆண்டுகள் ஓடி விட்டன. தாய் இறந்து 10 ஆண்டுகள்.ஆம் அவர் மறைவு 2006.

எனது தாயுடன் தாம் எத்தனை மன்றாடல்கள், அவரை அவ்வளவு சாதாரணமாக எவருமே நிறைவடைய வைத்து விட முடியாது. அவ்வளவு பேராசை உடையவர் என்றா பொருளில்லை இதற்கு தாம் என்ன எண்ணுகிறாரோ அதன் வழி செல்ல வேண்டும், அதன் வழி மட்டுமே செல்ல வேண்டும் என்ற குணாம்சம் நிறைந்தவர்.



அவர்களின் இருவரின் கலவை தான் நாங்கள் அனைவரும். சமுதாயத்தின் நல்ல மரங்களாக கிளைவிட்டிருக்கிறோம். வேர் ஊன்றி இருக்கிறோம்.அனைவருக்கும் பயன்படும் வண்ணம் .பூமிக்கு பாரமாக அல்ல புனித பூமியின் புதல்வராகவே. அந்தளவுக்கு படிக்காத பாமரத் தனம் உடைய பெற்றோர், இந்த அளவுக்கு எம்மை உருவாக்கியமைக்கு ஒரு நன்றி சொல்ல வேண்டாமா? எப்படி நன்றி சொன்னாலும், எத்தனை நன்றி சொன்னாலும் அதற்கெல்லாம் ஈடாகுமா?

தந்தையின் மறைவுக்குப் பிறகு சுமார் 20 ஆண்டுகள் எம் தாயுடன் இருந்த வாய்ப்பு எமக்கு. இதை பாக்யம் என்று சொல்லமா எனத் தெரியவில்லை. ஏன் எனில் பெரும் குடும்பத்தின் அத்தனை பூசல்களும் அதில் அடக்கம் என்பதை சொல்லாமல் விட முடியாது. எனக்கு மூடி மறைத்து பேச எப்போதுமே பிடிக்காது. பேசாமல் இருந்து விடுவேன். பேச ஆரம்பத்தால் அத்தனையும் உண்மை வரவேண்டும், வெளிப்படையாக வேண்டும்...

Related image

ஆனால் இதெல்லாம் மனித குலத்திற்கு சற்று அல்ல பெரிதும் இடைஞ்சலானவை அது பிறர்க்கு இடைஞ்சலாகிறதோ என்னவோ எமது வளர்ச்சிக்கு பெரிதும் முட்டுக்கட்டைகளே.

அந்த அந்த காலத்தின் உண்மை உணர முடியாமல் போய்விடுவதுதான் வாழ்க்கை என நான் அடிக்கடி குறிப்பிடுவது உண்டு. இதே வீட்டில் சற்று மாறுபட்டு காட்சி அளிக்கும் இதே வீட்டில் பிறந்தவன் இன்றும் இப்போது உங்களுடன் பேசிக் கொண்டிருக்கும் இதே சூழலில் வளர்ந்தவன். எத்தனை பேருக்கு இப்படிப் பட்ட வாய்ப்பு கிடைக்கும். எனது வீட்டின் கூரை ஓடுகள் மேல் விழாத குறை ஒன்றுதான் மற்றபடி எதற்கும் குறை சொல்ல முடியாது.

இங்கேதான் சிறுவர்களாக சண்டையிட்டு,விளையாடி, கோடை,குளிர் என பருவ காலம் மாறி மாறிச் செல்ல, பருவம் அடைந்த பெண்கள், திருமணமாகிய பெண்கள், பிள்ளைபேறு பெற்ற பெண்கள், பெயரன் பெயர்த்தி எடுத்த பெண்கள் இப்படி சென்று கொண்டே இருக்கிறது...
Related image


எத்தனை மர வகை, எத்தனை செடி வகை, எத்தனை மனித வகை என எத்தனை தொடர்புகள்..எத்தனை பாம்புகள், எத்தனை தேள்கள், எத்தனை பூச்சி இனங்கள், எத்தனை பறவை இனங்கள் எல்லாவற்றுடன் வளர்ந்தோம். காடு, மாடு, பதநீர், கடலைக் கொடி, கடலைச் செடி,கொட்ட முத்து எனும் ஆமணக்கு,அரப்புத் தூள் கொடுக்கும் அரப்பு மரம், சீத்தாப் பழம், எத்தனை விளையாட்டு எல்லாம் எப்படி சொல்ல முடியும்? ஆனால் சொல்ல வேண்டும்

எந்தையும் தாயும் மகிழ்ந்தது இந்நாடே என்ற பாரதியின் வரிகளுக்கேற்ப கடன் , பொருளாதாரப் பிரச்சனைகள் எத்தனை வந்துற்ற போதும் வயிறுகள் முழுதாக நிறையாத காலக்கட்டஙக்ள் எப்படி இருந்த போதும்..வளர்ச்சி இருந்து கொண்டே இருந்து...



சிட்டுக் குருவியை வாயுக்குள் அனுப்பிக்கொண்டிருக்கும் பச்சைப் பாம்புகள் தலை கீழாய் தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்திருக்கிறீர்களா? எமது சிறுவயதில் அந்த வாய்ப்பெல்லாம் எமது வீட்டின் புழக்கடைத் தோட்டத்தில் எமது மரத்திலேயே எமக்கு கிடைத்தது குருவி உயிர் போகும் மரண அவஸ்தையுடன் கீச் கீச் எனக் கத்தியபடி சத்தம் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கும் பாம்பின் வாயுள்...அதற்கு இரை வேண்டுமே....அதுதான் நிதர்சனமான வாழ்வின் தடம்.

எல்லாம் மனிதம் என்று சொன்னாலுமே மிருக குணம் இல்லா மனிதமே இல்லை. குறைந்தபட்சம் அப்படி பிறந்து இருக்க வாய்ப்பில்லை என்று கூட சொல்லி விடலாம்.  அதிலிருந்து மேல் எழும் ஆன்மாவின் பயணம்தான் இந்த வாழ்க்கை.
Image result for very huge trees


நான் உங்களை எங்கோ இட்டுச் செல்கிறேன் அது எம் நோக்கமல்ல. குமுதம் வாங்கி படித்த அப்பா,(இவர் மில் தொழிலாளியாக பியர்ட்செல் நிற்வனத்தில் இருந்து தொழில் முறையில் கல்வி கற்றவர் சுமார் 5 ஆம் வகுப்பு வரை படித்த  அளவில் சான்றிதழ் அந்த தொழிலாளர்க்கு கல்வி அளித்த நிறுவனமே சான்றிதழும் அளித்திருந்ததை பல்லாண்டுகள் எமது சுவரில் சட்டமிட்டு பிரேம் செய்து மாட்டியிருந்தோம். அது இப்போது கூட எங்கோ இருக்கிறது. அது எங்கிருக்கிறது எனத் தேடி எடுக்கத்தான் இப்போது நேரமில்லை.

கோபத்தில் உடல் எல்லாம் கிடு கிடுவென நடுங்கும் அப்பா, இரத்த அழுத்தம், மாரடைப்பால் இருதய அடைப்பால் இறந்த அப்பா, நாங்கள் அண்ணன் என்று அழைத்த அப்பா, அதிகமாக கோபம் வந்தால் எமை அடித்த அப்பா, அன்பாக செல்லமாக பால் டீ வாங்கிக் கொடுத்த அப்பா,தொண்டைப்புண் வாய்ப்புண் நீக்க விட்டா கெக்ஸ்ட், பிலாஸம் என்ற ஒரு டானிக்கை, தூள் மருந்துப் பொடியை மருத்துவரிடம் சென்று பரிசோதித்துப் பார்த்து வாங்கிக் கொடுத்த அப்பா, மறுபடியும் அதை வாங்கிக் கொடுத்து தொடர முடியாமல் பொருளாதாரம் இடம் கொடுக்காதப்பா,நான் ஆண்பிள்ளைகளில் கடைசி.

கடைசியில் எமது இப்போது உங்களுக்கு இந்த செய்திகளை பரிமாறும் அதே அறையில் கிடத்தி வைக்கப் பட்ட உடலாகியிருந்த அப்பா,24 வயதில் 4 வயதிலிருந்து நினைவு என எடுத்துக் கொண்டாலும் நான் அவருடன் 20 ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறேன். தாயுடன் சுமார் 40 ஆண்டுகள் அனுபவத்துடன் வாழ்ந்திருக்கிறேன்.

நாமெல்லாம் யார், விவேகானந்தர் சொல்வது போல ஒரு அலையின் தொடர், மறு அலையாக, நமது மக்கள் சொல்ல வேண்டும் இதே போல...

ஆமாம் நீ பெரிய காந்திதான் என ஒரு முறை அவர் எனைச் சொன்னாலும், எனது வளர்ச்சியில் பொறுப்பான மருத்துவர்கள், எனது பதிவேட்டில், எனது வேலை மகாத்மா காந்தி, மதர் தெரஸா வேலை போன்றிருக்கிறது என ஆதாரத்துடன் பறை சாற்றி சென்றிருக்கிறார்கள்...ஆக தந்தை சொல் மிக்க மந்திரமில்லை வெறுப்பில் சொன்னாலும் அதில் பலிக்கும் முகாந்திரங்கள் அமைந்து விடுகின்றன.

அதிலும் திருமணம் என்ற கட்டத்தில் ஒவ்வொரு தந்தையின் பங்கும் தலையானது உச்சக் கட்டமானது. ஆனால்  தாய் தவிக்கிறார் மகனானானல் எங்கே எமை விட்டு விடுவானோ என, ..

எம் வீட்டு பூவரசு டைனிங் டேபிள் கால்களாகி இன்னும் பேர் சொல்கிறது.கொய்யா மரங்கள் இல்லை . அடையாளமாக நரை விழுந்த, முடிந்து போன எச்சமாக அத்தனைக்கும் சாட்சியாக ஒரு மரம் மட்டும் இன்றோ நாளையோ எனக் கதை முடிய கரணமாயிருக்கிறது. ஆனால் எத்தனை கதைகளைப் பார்த்த சாட்சியாய் இருக்கிறது.

மலையாக மண்ணாக கோயிலாக, மரமாக ஆகியிருக்க வேண்டும் நமது ஆயுள் அதிகமாக...
வரலாறுகள் மாறுகின்றன. மனிதம் சுருக்கமாக சேதி சொல்லி சென்று விட...நிறைய பேர் எதுவும் செய்யாமல் சொல்லாமல் பூமிக்கு பாரமாக இருந்தே சென்று விட...அப்படிப்பட்ட பிறப்பு இல்லை நான் தற்போது பகிர்ந்து கொண்டுள்ளது. நாட்டுக்கும் வீட்டுக்கும் எதை எதையோ எத்தனையோ பகிர்ந்துண்டு வாழ்ந்து சென்றிருப்பது. தியாகத்தின் திருவுருவமாய்.. ஒரு மனிதன் தனக்கு கிடைத்த கூட்டுறவு சங்கத்தின் வழியே கிடைத்த ஒரு சிறு பாக்கெட்ட, அதில் சில இனிப்புகள் மட்டுமே இருக்கும் கொஞ்சம் மிக்சர் இருக்கலாம் அதைக் கூட தம் குடும்பத்தாரிடம், பிள்ளைகளிடம் பகிர்ந்தளிக்க வேட்டியில் வைத்து எடுத்து வந்து வளர்ந்த கதை எங்கள் குடும்பக் கதை. ஆனால் அது இப்போது இருக்கும் மது அடிமைகள் கதையை என்றும் பிரதிபலிக்காது.

Related image


சுருக்கமாக் சொல்ல வேண்டும்: அவர்கள் சிகரத்தில் எமை ஏற்றி வைக்க ஆழ ஆழ புதைந்து போனார்கள்...அவர்களுக்கு என்றும் எமது தலை தாழ்ந்த வணக்கம். அஞ்சலி. தாய் மண்ணே வணக்கம். என்பது போல அவர்கள் வாழ்ந்த உண்டு உறங்கி, நடந்து உயிர்த்து, மரித்த அதே மண்ணில் வாழ்ந்து வருகிறேன் என்ற ஒரு பிடிப்புடன் என்றும் எம் இணக்கம். இந்த வணக்கம். பதிவு. இசைவு.




மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.


Wednesday, November 16, 2016

மோடி மஸ்தான் பை.Black Magician bag(back)

non removable ink touches to slaves
Democracy lies and manipulation of rights

Image result for 500 1000 2000 notes and black magics

500,1000 - 2


Image result for 500 1000 2000 notes and black magics

அழியாத மை அடிமை நாய்களுக்கு
ஜனநாயகப் பொய் உரிமை பேய்களுக்கு
Image result for 500 1000 2000 notes and black magics

ஐநூறு ஆயிரம்- 2.

Sunday, November 13, 2016

நதி நீர் இணைப்புக்கு இந்தப் பணத்தை விரயமாக்காமல் பயன்படுத்த அரசு திட்டமிடலாமே? :‍ கவிஞர் தணிகை

நதி நீர் இணைப்புக்கு இந்தப் பணத்தை விரயமாக்காமல் பயன்படுத்த அரசு திட்டமிடலாமே? :‍ கவிஞர் தணிகை

Image result for Indian money 500 1000 burned out

தொப்பூர் கணவாய்ப் பள்ளத்தாக்கில் 12.5 கோடி பணம் தூக்கி விசிறப்பட்டது, உ.பி கணக்கிலடங்கா பணம் எரிக்கப்பட்டது, காடு விற்ற பணத்தை 45 இலட்சத்தை வைத்துக் கொண்டிருந்த பெண் தற்கொலை செய்தார் மாற்ற முடியாதோ செல்லாது என உறவுகள் எல்லாம் சாட‌, ஏ.டி.எம் மில் பணம் எடுக்க க்யூ வரிசையில் நின்ற 2 பேர் சாவு, இரண்டாயிரம் புது நோட்டை (ரூ.2000 )செலுத்த முடியாமல் கூலித் தொழிலாளி அதை சாலையில் கிழித்து எறிந்தார். அரவிந்த் கெஜ்ரிவால் சொல்வது போல ஏற்கெனவே பாரதிய ஜனதாக் கட்சியினர்க்கு ஏற்கெனவே இந்த நிகழ்வு தெரிந்ததால் கடந்த செப்டம்பர் முதல் வங்கிகளில் இருப்பு உயர்ந்தது, உதாரணமாக மேற்கு வங்கம் கொல்கொத்தாவில் அந்தக் கட்சிப்பணம் வங்கியில் போடப்பட்டுள்ளதாகவும் அந்த நாள் மட்டும் அந்த வங்கி இரவு 8 மணி வரை செயல்பட்டதாகவும் ஆதாரங்களுடன் தெரிவித்திருக்கிறார்கள் ஊடகவியலாளர்கள்.

எங்கு பார்த்தாலும் ஒரே களேபரமாக காணப்படும் சூழல், அஞ்சலகத்தில் தபால் வில்லைகள் கூட வாங்க முடியவில்லை தபால் அனுப்ப(போஸ்டல் ஸ்டாம்ப்ஸ்) ஏகக் கெடுபிடி. காவல்துறையும் வங்கித்துறையும் மட்டுமே சுறுசுறுப்பாக செயல்படுகின்றன என்ற தோற்றம்.

ஆனால் ரயில்வே நிலையம், மருத்துவமனை, அரைகுறையாக பெட்ரோல் பங்குகள், எல்லாம் வாங்கி வருகின்றன.மேலும் இந்த பழைய நோட்டுகளை த.நா.மி.வாரியம் மின்சார கட்டணத்துக்காகவும்‍‍ பில்லுக்காகவும், பி.எஸ்.என்.எல் பில்லுக்காகவும் வாங்குவதாக அறிவித்து வாங்குகின்றன.ஊராட்சி ஒன்றியங்கள் குடிநீர் கட்டணத்துக்காக இந்த பழைய நோட்டுகளை வாங்கி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Image result for merger of Indian rivers

இப்படி எல்லாம் அரை குறையாக இருப்பதற்கு மாறாக எல்லா அரசு அலுவலகங்களுமே பெற்றுக் கொள்ளலாம் என்று விதி சட்டம் இருப்பின் பொதுமக்கள் அவதி பெரிதும் தீர்ந்திருக்கும் வியாபாரிகள் தவிக்கிறார்கள். எங்கும் வியாபாரம் இல்லை. கறிக்கடைக்காரர் வெட்டிய கறி வீணாகக் கூடாதே என கடனுக்கு கொடுத்து விடுகிறார். உணவகம், ஒன்றில் செய்து வைத்த பொருட்கள் வீணாகிடக் கூடாதே என இலவசமாகவும் கொடுப்பதை கொடுங்கள் எனப் பயணிகளுக்கு வாரி வழங்குவதாக புண்ணியம் கட்டிக் கொள்வதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Image result for merger of Indian rivers

200 சதம் வரி, அதையும் மீறி வரி தண்டனை என்றெல்லாம் பயமுறுத்துவதை விட இந்தப் பணம் செல்லாதுதான் ஆனால் நதி நிர் இணைப்புக்கு பயன்படுத்தப் படும் என்றும் வரிவிலக்கு உண்டென்றும் அப்படி வழங்குவோர்க்கு அவரவர் அளவுக்கேற்ப பரிசு, விருது , கௌரவம் அளிக்கப்படும் என்றும் அந்த திட்டம் நிறைவேற்றும்போது அவர்கள் பெயர்கள் பொறிக்கப்படும் என்றும் சொல்லி எல்லாப் பணத்தையும் அரசு திரட்டி இருக்க வேண்டும், நதி நீர் இணைப்புக்கு பயன்படுத்த வேண்டும், அந்த அரிய பெரிய வாய்ப்பை இந்த மோடி அரசு நழுவ விட்டு விட்டு கோட்டை விட்டு விட்டு ஏதோதோ சொல்லி பயமுறுத்தி பொதுமக்களுக்கு அல்லல் செய்து வருகிறது.
Image result for merger of Indian rivers


காசு வைத்திருக்கும் மகாப் பிரபுக்களும் இந்த வாய்ப்பை வரி கட்டி பயன்படுத்தி வெள்ளையாக்காமல் எரித்தும், கரைத்தும், விரயம் செய்து இந்தியாவின் செல்வ வளத்தை கேலிக் கூத்தாக்கி வருகிறார்கள்

பெரும் மோசடியாக, எண்ணற்ற 130 கோடி மக்கள் தொகைக்கும் மேலான உள்ள நாட்டில் சரியாக திட்டமிடாமல் பொதுமக்களின் வாழ்க்கையை தமது வாழ்வின் ஆதாரத்துக்காக தாம் ஈட்டிய  தமது செல்வத்தையே பெற விடாமல் மக்களாட்சி என்ற பேரில் முதலாளித்துவ ஆட்சியாக நெருக்கடி கொடுத்து வருகிறார்கள்.

Image result for merger of Indian rivers

Image result for merger of Indian rivers



மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.