Saturday, June 22, 2019

நல்ல பேர் வரும் கூடவே கெட்ட பேரும்...எனவே: கவிஞர் தணிகை

நல்ல பேர் வரும் கூடவே கெட்ட பேரும்...எனவே: கவிஞர் தணிகை

Image result for jeyamohan

ஜெமோவும் புளிச்ச மாவும் பற்றிய பதிவுகளை நிறைய பார்த்தேன். அது தேவையா என்ற கேள்விகளைக் கொண்டிருக்கிறது இந்தப் பதிவு. பிரபலமானவர்களின் தவறுகளும், குறைபாடுகளும் உலகுக்கு பளிச்சென ஒரு வெள்ளை நிற சுவரில் கரும்புள்ளியாகத் தெரியும் இதைப்பற்றி குறள் கூட சொல்லி உள்ளது.

இந்த செய்தியை நானும் செய்தித்தாளைப் பார்த்தவுடன் இப்படி இந்தப் பதிவர்கள் செய்வார்கள் என எதிர் பார்த்தேன் அவரை எதிரியாகப்பார்த்து பதிவிட்டதையும் பார்த்தேன். நானும் கூட சூட்டோடு சூடாக இவர்களுக்கு முன்பாகவே நிறைய வருகையாளரை எனது வலைப்பூவிற்கு வரவழைக்க எழுதியிருக்க முடியும். ஆனால் அவை அற்பமானவை என்பதை நான் தெரிந்திருந்ததால் அப்படி எல்லாம் எழுத முனைவதில்லை. எழுதவில்லை

எனைப் பொறுத்தவரை தனிமனித துதிபாடல்கள் கூட மன்னிக்கப்படலாம் ஆனால் தனிமனிதம் பற்றிய இழிவான பார்வையும் அதன் பதிவுகளும் அவசியமா என்பதுதான் கேள்வி.
Image result for jeyamohan attacked
 சுஜாதா,பாலகுமாரனுக்கும் பிறகு அதிகம் எழுதும்  சினிமாவுக்கு எல்லாம்  இயக்குனர் சங்கருடன் சேர்ந்து பணி புரியும் எழுத்தாளர்,  அதை எல்லாம் கூட நாம் கணக்கில் கொள்ள வேண்டியதில்லை அது அவரின் தனி மனித முன்னேற்றத்தில் இருக்கிறது. அதெல்லாம் தாண்டி ...

குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகை நாடி மிக்க கொளல்  என்ற குறளில் சொல்வது போல...இங்கு எவரின் தவறு இருக்கிறது என்பதைப் பற்றி தீர விசாரித்து தெரிந்து கொள்ளாமலேயே பல பதிவுகள் பேசியுள்ளன.

நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார் வாய்ச்சொல்

என்னும் குறளுக்கேற்ப எந்த நிலத்தில் என்ன பயிர் விளையும் என்பதை அதன் முளை காட்டுவது போல ஒருவர் என்ன மாதிரியானவர் என்பதை அவர் பேசும் மொழிமூலம் அறிந்து கொள்ளலாம். அதையும் வள்ளுவரே சொல்லியிருக்கிறார்.

ஜெமோ நூல்கள் முழுதும் நான் படித்தவனில்லை. சில படித்த நினைவுண்டு.

எல்லாரும் மனிதர்கள்தாம் சுஜாதா முதல் பாலகுமாரன் ஜெமோ எல்லாமே மனிதர்கள்தாம்

அவர் கன்னியாகுமரி என்பதும், அவர் கேரள மலையாள இலக்கியம் மற்றும் தமிழிலும் நிறைய எழுதியுள்ளார் என்பதும் பத்மஸ்ரீ மறுத்தவர் என்பதும் அதன் பின் நான் அவர் பற்றித் தெரிந்து கொண்டவை.

அதன் முன் நாஞ்சில் நாடன் போன்றோர் இவருடைய தூண்டு உணர்வால் இவருக்கும் அவருக்கும் வயது வித்தியாசம் 15 ஆண்டுக்கும் மேலானாலும் தன்னை விட வயதில் சிறிய ஜெமோவை ‍‍‍‍  முன்னிலைப்படுத்தி  தனக்கு சாகித்ய அகாடமி கிடைக்குமளவிற்கு தனது எழுத்துகளை தரத்தை முன்னேற்ற ஜெமோ கொடுத்த ஊக்கம் காரணம் என்றும் தான் முன்னேறியது எவ்வாறு என எழுதிய‌ அவரது கட்டுரையை படித்ததுண்டு. ஒரு வேளை இருவரும் ஒரே மாவட்டம் இவர்களது ஒரு சுலபமான சந்திப்புக்கு காரணமாக இருக்கலாம்

நாஞ்சில் நாடனுக்கு மது அருந்திய/அருந்தும் பழக்கம் உண்டு என்பதை அவரது எழுத்து மூலம் அறிந்தேன். ஜெமோவுக்கு இருக்கிறதா என்று உறுதியாகத்தெரியவில்லை அல்லது இவர்கள் எல்லாம் சேர்ந்து அருந்தியது பற்றி படித்ததை நானும் மறந்தும் இருக்கலாம்.

வீட்டின் முறைமைகள் சிற்றுண்டிக்கு மாவை கடையில் வாங்கும் பழக்கத்தை வெளிப்படுத்தி உள்ளது. மற்றபடி அவர் சொல்லும் விதமாகவே இப்போது நல்ல மனிதர்கள் குடிகாரர் மத்தியில் உலவும் நிலையே பார்வதி புரத்தில் மட்டுமல்ல நிறைய இடங்களில் நிலவுகிறது. எனவே அது போன்ற இடங்களில் மாறுபட்ட குணாதிசயம் உள்ளவர்கள் புழங்குவது சிரமம்தான்.

ஜெமோ போன்றோர் சென்னைக்கு இதற்குள் குடி பெயர்ந்திருக்க வேண்டும். இன்னும் கடல் சங்கமத்திலேயே இருப்பதில் இவர் சுகம் காண்கிறார்போலும். சென்னையில் இப்போது தண்ணீர் இல்லாதிருப்பது வேறு ...

மாவு புளித்துவிட்டது வேண்டாம் என்ற தர்க்கத்தில் மாவை தூக்கிப் போட்டதற்கு வீடுவரை வந்து மிரட்டப் பட்டிருக்கிறார் என அவரே சொல்லி இருப்பதுடன், அந்தக் கடை அருகிலேயே  அடித்து தள்ளப்பட்டிருக்கிறார். இவற்றை அவரே சொல்லி இருக்கிறார் காணொளி மூலம் அரசு மருத்துவ மனையின் படுக்கையில் அமர்ந்தபடி.

இதெல்லாம் நடப்பதுதான் ஏமாந்தவர் என்று தெரிந்தால் எல்லாமே இந்த சமூகத்தில் நடக்கும்.. பொதுவாகவே இடைத்தரகு எனப்படும் வியாபார உலகத்தில் நாம் இயங்குகிறோமென்பதை நாம் அப்படி ஒரு பிரச்சனையில் சிக்கும்போதுதான் உணரமுடியும்.  இவர் மாவை கடையில் வாங்க வேண்டுமா என்பதுதான் எனது கேள்வியே...

Image result for jeyamohan pulicha maavu


நான் இது போன்ற பல பிரச்சனைகளை நிறைய சந்தித்ததுண்டு...எனவே என்னால் ஓரளவு பிரச்சனை எப்படி போயிருக்கும் என்று கிடைத்த செய்திகளிலிருந்து கிரகிக்க முடிகிறது.

பொதுவாகவே இலக்கியவாதிகள் யதார்த்தமான நடைமுறை உலகோடு ஒத்துப் போகமுடியாது என்பது உண்மைதான். அப்படி இருந்தால்தாம் அவர்கள் இலக்கியவாதிகளாகவும், சமுதாய மேம்பாட்டு சிந்தனை படைத்தவர்களாகவும் இருக்கவே முடியும்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை




No comments:

Post a Comment