சொல் ஓசை இல்லாமலே: கவிஞர் தணிகை
அடுத்தவன் போட்ட தாளத்துக்கெல்லாம் ஆடாதே என்று ஒரு கட்டளை அன்று ஒரு நாள் விடியலில் கிடைத்தது. என்னதான் நடக்கிறது என்று பார்ப்போமே...காலையில் மணி 6. 25க்குள் பேருந்தில் ஏறி பயணம். கணேஷ் வந்திருந்தான் பெயர் மாற்றப்பட்டுள்ளது...அவனது சொந்தக் கதை சோகக் கதையை சொன்னான். யாரும் எவருக்கும் படி அளக்க முடியாது. சொந்தக் காலில் நின்று பழகு. எவர் என்ன சொல்கிறார் என்பதைப் பற்றி எல்லாம் கவலைப்படாதே. நீயே சிந்தித்து ஒரு முடிவு எடுத்து விட்டால் பின் வாங்காதே. என்றெல்லாம் அறிவுரை அவனுக்கு. அதுதான் நமக்கு கை வந்த கலை ஆயிற்றே.
சொல்கிறவர் எவரும் சோறிடப்போவதில்லை பசிக்கு, இருக்க இடம் அளிக்கபோவதில்லை பின் ஏன் எவராவது எதையாவது சொல்லி விடப் போகிறார்களோ சொல்லி விடுகிறார்களோ என்ற கவலையெல்லாம் பட வேண்டும் நீ உழைக்கிறாய் நீ வாழ்கிறாய்...பிறர் சொல் பற்றிய கவலை நீக்கு என்றெல்லாம் கூறினேன்
அதுதானோ அந்த அடுத்தவன் போட்ட தாளத்துக்கு எல்லாம் ஆடாதே என்பது என எனக்குள் கேட்டுக் கொண்டேன்.
தர்மபுரி டாக்டர் தீன தயாள் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வந்து வணக்கங்கள் பரிமாறிக் கொண்டோம். 5 வழிச்சாலை சென்னை சில்க்ஸ் வரை அப்படியே இருக்க ரிலையன்ஸ் வாசலை மெய்யனூர் சாலைக்கு மாற்றிக் கொள்ள அங்கிருந்து மேல் பை பாஸ் பாலம் அந்த கீழ் செல்லும் 5 வழிச் சாலையை 4 வழியாக்கி விட்டது.
நாங்கள் இடிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அந்த ரத்னாவின் கேட்டில் பையை மாட்டிக் கொண்டு சில நிமிடங்கள் அங்கே நிற்பது வழக்கம் எங்கள் கல்லூரி பேருந்து வரும் வரை. தீனதயாள் வந்த உடன் பையிலிருந்து ஒரு டைரி மில்க் சாக்லெட் எடுத்து நேற்று எனது பிறந்த நாள் எனக் கொடுத்தார். பரவாயில்லையே நேற்று போன பிறந்த நாளுக்கு இன்று நினைவு வைத்து ஞாயிறு பார்க்காமல் திங்களில் சாக்லெட் தருகிறாரே என இரசித்துக் கொண்டே அவர் கொடுத்த சாக்லெட்டை பையில் போட்டுக் கொண்டேன் வாயில் போடாமல்.
அடுத்து கண்ணுக்கு பவர் கண்ணாடி போடவேண்டியது பற்றி பேச்சு வந்தது. உடனே அவர் லென்ஸ்கார்ட் பற்றி எல்லாம் பேசி ஒரு கண்ணாடி வாங்கினால் ஒரு கண்ணாடி இலவசம், ரொம்ப விலை மலிவாகவும் நன்றாகவும் இருக்கும் அங்கேயே போங்கள் என்று ஆன்லைன் பார்த்து விலாசம் எல்லாம் சொன்னார்....எனக்குள் இருந்த சிக்கன மனிதர் விழித்துக் கொன்டார் எங்கே போனால் குறைவாக இருக்குமோ அங்கேயே செல்லலாமே...
30 ஆண்டுகளுக்கு முன் தொடர்பிலிருந்த பழைய பேருந்து நிலைய கீதா ஆப்டிகல்ஸ் போகலாமா, லென்சோமம் ஜங்ஷன் வழியில் ஐந்து வழிச்சாலை வழியில் போகலாமா அல்லது பார்க்கலாம் லென்ஸ்கார்ட் போகலாம் என கண்ணனை (பேர் மாற்றப்பட்டுள்ளது) கல்லூரி முடிந்ததும் விடச் சொன்னேன் அந்த ஐந்து தியேட்டருக்கும் எதிரில் இருந்த கடை நோக்கி விட்டார். மழை பிடித்துக் கொள்ள சிறிது நேரம் கழித்து கடை நோக்கி சென்றேன்
மெம்பர் சிப் சேர ரூ. 600 வேண்டுமாம். அப்ப்போதுதான் அப்படி ஒரு கண்ணாடி வாங்கினால் இன்னொரு கண்ணாடியாம். சாதாரணமாகவே இரண்டாயிரம் அதற்கும் மேலும் சொன்னாள் அந்தப் பெண். மேலும் எனது பழைய பிரேமில் கண்ணாடி போட்டுத் தரமுடியாது என்றும் சொன்னாள் கடையில் எவரும் இல்லை ஆன்லைனில் அப்பாய்ன்மென்ட் வேறு வாங்கிக் கொள்ளலாம் என பீற்றல் வேறு. நான் சும்மா ஆன்லைன் வை பை கல்லூரியில் இருந்ததால் மதியம் என்று போட்டு வைத்தேன் பதில் ஏதும் இல்லை.
தீன தயாள் என்ற பேர் மறந்துவிட்டது போனில் இருந்து நினைவு படுத்தி எடுத்து நீங்கள் லென்ஸோ கார்ட்டில் உறுப்பினரா எனக் கேட்டேன் இல்லை என்றார்.அங்குள்ள நிலை பற்றி விளக்கினேன். சரி சார் விட்டு விடுங்கள் சார் என்றார்.
அங்கிருந்து மத்திய பேருந்து எந்தப் பக்கம் எனக் கேட்டு வந்து பேருந்து / ஏறி வீடு வந்து சேர்ந்தேன். அன்று முடிந்தது நடைப்பயிற்சி கோவிந்தோ..
மறு நாள் பேட்டரி வாங்காதே... சொல் ஓசை இல்லாமலே...
எனது டெஸ்க் டாப் யு.பி.எஸ் பேட்டரி வாங்கும் திட்டம் முனைப்பில் இருந்த எனக்கு அன்றைய கட்டளை ....அதையும் பார்க்கலாமே. சில நேரங்களில் நான் மீறல் செய்வதுண்டு. அன்றும் அப்படித்தான்.
முதலில் லென்ஸோமம் கடை சென்று கண்ணாடி செய்யச் சொல்லி அதே பிரேமில் போட்டுத் தருவதாக பேசி முடிக்கப்பட்டு முன் பணம் ரூ.500ம் கொடுத்து விட்டு அடுத்து பக்கத்து கடையில் சென்று டாட்டா லோ சோடியம் சால்ட் இரண்டு கிலோ வாங்கிக் கொண்டு அப்படியே 5 வழிச் சாலை நோக்கி நடராஜா சர்வீஸ், ரிலையன்ஸ் கார்ட் வழி சென்று வாங்கலாம்தான் ஆனால் அது மிகுந்த நேரம் பிடிக்கும் சில ரூபாய்கள் மீதி ஆகும்...ஆனால் ரிலையன்ஸ் வேண்டாம் என்று ஜெயம் என்ற டிபார்ட்மென்ட் ஸ்டோரில் வாங்கிக் கொண்டு தூக்கிக் கொண்டு 5 ரோடு அருகே போகும்போதே ஒரு மாதேஸ்வரன் மலை பேருந்து புறப்பாட்டில் ஓடி இருந்தால் ஏறி இருக்கலாம் வேண்டாம் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என நினைக்க நினைக்க அது போய்விட்டது. ஏறி இருந்தால் தெரிந்திருக்கும் இருக்கை இருப்பதும் இல்லாததும் வெளி இருந்து பார்க்க இருக்க இருக்கும் போலவே தோன்றியது அவ்வளவு மக்கள் நெருக்கமின்றி..
பேட்டரி கடைக்குச் சென்று பேட்டரி கேட்டேன் ரெல் இல்லை ஸ்டாக், வந்ததா எனக் கேட்டபடியே...எத்தனை பேட்டரி வேண்டும் என்றார்கள் நான் ஒரு சிறு தொழில் அதிபராக இருப்பது போல அட வீட்டுக்க்குத்தான் ஒன்றுதான் என்றேன்
இது அதை விட நல்ல பேட்டரி என எக்ஸைட் ஒன்றைக் கொடுத்தார்கள் அது முன் சொன்னதை விட சுமார் 125 ரூ விலை அதிகம் கூட கனமும் கூட. வருடா வருடம் 100 ரூபாய்க்கும் மேல் ஏற்றிக் கொண்டுதான் இருக்கிறீர், 6 மாதம் வாரன்டி என்கிறீர், ஒரு வருடத்துக்கு ஒரு பேட்டரி ஆகிக் கொண்டுதான் இருக்கிறது. கரண்ட் பட்டென போக இது சட்டென்று போய்விட...மானிட்டர் சி.பியு போவிடக்கூடாதே என்றுதான் வாங்கி விட வேண்டி இருக்கிறது எப்படி சார்ஜ் ஏற்றுவது எப்படி நீண்ட நாள் தக்க வைப்பது எனப் பேசியபடி இருக்க...மழை பிடித்துக் கொண்டது...மழை விட்டவுடன் போகலாம் உள்ளே சென்று உட்காருங்கள் சார் என்றார்கள் அங்கு பணி செய்த எல்லாருமே ஒரே கருத்தொருமிப்பில்.
இப்போதெல்லாம் காலை சிறிது நேரம் வை பை ஆன் செய்தபடி, மாலை கொஞ்ச நேரம் என டெஸ்க் டாப்பின் நேரம் சுருங்கி விட்டது. கடமை கடமை.
அடிக்கடி கரண்ட் திடீர் திடீர் என கட் எனவே பேட்டரி தாங்காமல் சிறிது நேரம் கூட பேட்டரி பேக் அப் இல்லாமல் பயமாகிவிடுகிறது எது போகுமோ எப்படி போகுமோ..எப்படி இவற்றை தக்க வைப்பது என...
நினைவோடிக்கொண்டிருந்தது...மழை வெளியில் நிற்காமல்
சுமார் ஒன்னரை மணி நேரம் இரண்டு இரண்டு கடையாக பேருந்து நிலையம் நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தேன்.
கன மழை. சாலை எங்கும் முழங்கால் அளவு நீர்த் தேக்கம். வாகனங்கள் சாதாரணமாக கடந்து செல்ல வழியின்றி...
எப்படி போவது...விழித்தபடி...நான் வேறு நடந்து சென்று பேருந்து நிலையம் போவதற்காக சாலையின் அந்தப் பக்கம் போய்விட்டேன். நகர முடியவில்லை.
ஒரு மொத்த வியாபார செருப்புக் கடை... முகமதியர்கள் இளைஞர்கள் சிலர்...அடைக்கலமாக நிற்க இடமளித்தார்கள். இன்னொரு 3 பேரும் முகமதியர்கள் கணவன், மனைவி, மகள் ஒரே வாகனத்தில் நிறைய பொருட்களுடன் அவர்களும் அங்கே வாகனத்தை நிறுத்தி உள்ளே நிற்க வர,அவர்களுக்கு உள்ளே இருக்கை எடுத்துப் போட்டு அமர வைத்தார்கள்...பின் சிரித்தபடி விடைகொடுத்தார்கள். நானும் மனிதன் தாண்டா...என்னிடமும் குரான் இருப்பதை நான் அவர்களிடம் சொல்ல வில்லை எனது மையம் வேறிடத்தில் இருந்தது. ஷூ பாலிஸ் ஒன்று கேட்டேன். பக்கத்துக் கடையில் உள்ளது என்றார்கள் அதை வாங்கிக் கொண்டு முன்னேற முடியாமல் ஒரு நகரப் பேருந்தில் நனைந்தபடி ஷூ உள் எல்லாம் தண்ணீர் ஏற சாக்ஸ் எல்லாம் நனைந்து ஷூ உள் எல்லாம் தண்ணீர் நிறைய எப்படியோ ஏறி பேருந்து நிலையம் சேர்ந்து பேருந்தில் ஏறும்போது மணி மாலை 6.40 என பேருந்தின் கடிகாரம் நேரம் காட்ட அன்று வீடு வர சுமார் இரவு 8 மணி.. ஆஆக அன்று பேட்டரி வாங்காமல் வேறு நாள் ஒன்றில் கூட வாங்கி இருக்கலாம்...பையில் ஒரே கனம். மழையில் வேரு நனைய விடக் கூடாது...ஆஹா என்னா அனுபவம்... என்ன்ன வார்த்தைகள்... அது எப்போதும் வெல்கிறது. எது...இயற்கைதான்.
நமது கணினிமெக்கானிக்கை வரச் சொன்னேன். தாரையில் இருப்பதாகச் சொன்னார். அடுத்த நாள் வந்தார். அன்று முழுதும் பழைய பேட்டரியை சார்ஜ் செய்ததால் யு.பி.எஸ் சூடாகி இருந்தது. பேட்டரி சற்று சத்தம் செய்தது..இல்லை இல்லை பேட்டரி போய் விட்டதுதான். இல்லையெனில் வெடிப்பது போல் இருக்கும் என்றபடி மாற்றிக் கொடுத்தார்.
அவர் கேட்டதைக் கொடுத்தேன்...சிலருக்கு எல்லாம் குறை வைக்கக் கூடாது என... பேட்டரி அதுவும் ட்ரை செல் ....உலர் மின்னூட்ட பேட்டரி என்ற தொழில் நுட்பம் உண்மையிலேயே இந்தியாவில் இன்னும் முன்னேறவில்லையா...அப்படி எல்லாம் சொல்லி நுகர்வோரை (ஏ)மாற்றி வருகிறாரகளா...ஏற்கெனவே ஒரு ட்ரை செல் பேட்டரி வைத்த குழல் விளக்கு மின்சாரம் இல்லாதபோது மின்னூட்டம் பெற்று வெளிச்சம் தரும் என்றதும் ஒரு வருடம்தான் இயங்கியது அதன் பின் அதற்கு பேட்டரி வாங்க சலித்துப் போயே அதை எடுத்து மூலையில் போட்டது நினைவுக்கு வந்தது...
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.
பி.கு: எந்த பேட்டரி ஆனாலும் முழுதாக ட்ரை ஆகிய பின்னால் சார்ஜ் போட்டால்தான் அதிகம் நீடிக்கும் அதிக நாள் நீடிக்கும் அதற்கு ஏற்ப இரண்டு மூன்று முறை முழுதாக ட்ரை செய்து காலி ஆக்கி சார்ஜ் போடுக என்றார் ஒரு நபர். அது சரிதான் ஆனால் அது எப்போது முழுதும் ட்ரை வடிகிறது என்றுதான் எப்படி தெரிந்து கொள்வது...எப்போதும் எனது யு.பி.எஸ் ஒரே மாதிரிதான் ஒரே லைட்டில் தான் இருக்கும். அணையாமல் எரியும் பயன்படுத்தும்போது . சும்மா இருக்கும்போது அணைந்து அணைந்தபடிதான் எரியும் சில பேட்டரிகளில் லைட்கள் இரண்டு இருக்கும்....அதில் காண்பிக்கும் பேட்டரியில் சார்ஜ் இருக்கிறதா எவ்வளவு இருக்கிறது என்பதை...

No comments:
Post a Comment