Wednesday, March 29, 2017

10 ரூபாய் காசு செல்லுமா செல்லாதாடா?: கவிஞர் தணிகை.

10 ரூபாய் காசு செல்லுமா செல்லாதாடா?: கவிஞர் தணிகை.

Image result for 1o rupee coin

இந்திய ரிசர்வ் வங்கி இரண்டு முறை இந்த 10 ரூபாய் நாணயம் செல்லும் புழக்கத்திற்கு பெற்றுக் கொண்டு பரிவர்த்தனை செய்து கொள்ளவும் என்று அரசு ஆணையாய் அறிவிப்பு செய்த போதும் இந்தப் புல்லுருவிப் பதர்கள் அதை ஏற்க மறுத்து வாங்கவே மறுப்பதால் இந்திய ரிலையன்ஸ் குழுமத்திற்கு ஒரு பாதிப்பும் வரப்போவதில்லை...ஆனால் என்னிடம் ஒரு காசும், என் மகனிடம் ஒரு காசும் வந்து மாட்டிக் கொண்டுள்ளது. அதை கோவிலுக்கு காணிக்கையாகக் கூட கொடுக்க எங்களுக்கு மனமில்லை. அரசு சொல்வதை எந்த சாமி கேட்கிறது? அல்லது எந்த அம்மா சாமிகள் சொல்வதை அரசு கேட்கிறது? இயலாதார்க்கு கொடுத்தாலும் ஊ ஹூம் வேண்டாம் சாமி செல்லாத காசை எங்கிட்ட கொடுக்கலான்னு பார்க்கிறீரா என சர்வ ஜாக்கிரதையுடன் இருக்கிறார்கள் பிச்சைக்காரர்கள்,அட நம்ம மோடி அரசு வித்தை இதுதான்...காய் கறிகளும் , சமையல் எரிவாயு விலையும் எக்கச்சக்கமாக ஏறி எட்ட முடியாமல் போக‌,

அட இப்போ கோதுமைக்கும் துவரம்பருப்புக்கும் 10 வரியாம், நுகர்வோருக்கு அடி, விவசாயிகளுக்கு நல்லதாம், டில்லியில் உண்ணா நோன்பிருக்கும் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கும் நல்லதுதான் டில்லையை என்ன்னைக்கு அவர்கள் சுற்றிப் பார்ப்பது, சோறில்லாமல் செத்தாலும் டில்லியில் சாவது நல்லதுதானே? மோடி மஸ்தான் பாபு கீரிக்கும் பாம்புக்கும் சண்டை விடறார் பார்க்கலாம் வாங்கோ வாங்கோ...அட நம்ம ஆதித்யநாத் இன்னும் எம்.எல்.சி,எம்.எல்.ஏ ஆகாமலே உ.பி முதல்வர் காதலரை சூத்தா மட்டையில் குண்டாந்தடியால் போலீஸை விட்டு அடிப்பதென்ன, கசாப்புக்கடைக்காரர்கள் பொல்லாப்பை பெற்று இப்போது டில்லியில் கூட மாமிசக் கறி விலை ஏறிப்போச்சாம்...

உப்பு விலை கிலோ 750க்கு கல் உப்புதான், ஏறிய புதிர் உங்களுக்குத் தெரியும்தானே? இனி உப்பே கிடைக்காது என்ற புரளியை நம்பி அனைவரும் மூட்டை மூட்டையாக வாங்கி இருப்பு வைத்துக் கொண்டார்கள் ...ரிலையன்ஸில் அதை அடுத்த சில மாதங்கள் வரை டாட்டா லோ சோடியம்  லைட் சால்ட் கூட கிடைக்கவில்லை.

அதெல்லாம் போகட்டும் நம்ம கதைக்கு வாரோமுங்க: இரயிலில் போகலாமா பஸ்ஸில் போலாமா ஒரு பெரிய போராட்டம் எனக்கு 5 ரோடு சேலத்தில் இருந்தபடி...சரி ட்ரெயின் பாஸ் இப்படியே வீணாகப் போகிறதே என  பஸ்ஸில் வந்திருந்தா நேரத்தில் வந்து ஒரு 4+4 கி.மீ வாக்கிங்க் அடித்திருக்கலாம். ஆனால் அந்த வாக்கிங்க்குக்கான விலை 25 கொடுக்க வேண்டியதிருக்கிறது எனக்கு.நேரம் நிறைய இருந்தது டெஸ்க் டாப் யு.பி.எஸ் பாட்டரியை வாங்கிக் கொண்டு மணி பார்த்தால் 4.15 மாலை...சரி வேண்டாம் என யோசித்தபோது நமது போராட்டத்தை தீர்க்க ஒரு ஜங்ஷன் பஸ்...உடனே ஏறிக் கொண்டேன் மனப்போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி. 4.25க்கு  ஜங்ஷன் போனேன் அது வேறு. அந்த பிளாட்பார்மில் நடை 5.40க்கு ட்ரெயின் எடுத்து 7 மணிக்கு வீடு வந்து சேர்ந்தது வேறு வேறு கதை.

ஆனால் அந்த பேருந்தில் நல்ல நடத்துனர்,மேட்டூருக்கு செல்ல எடுத்து வைத்திருந்த 20 ரூபாய் நோட்டுக்கு சலித்துக் கொள்ளாமல் சில்லறை கொடுத்தார் 16 ரூபாய் எல்லாமே நாணயங்கள். அதில் ஒன்று 10 ரூபாய் நாணயம். மற்றவை 3 இரண்டு ரூபாய் நாணயஙகள். டிக்கட். 4 ரூபாய்.

என்னைப் பார்த்தால் சில சமயம் இளிச்ச வாயனைப் பார்ப்பது போன்று இருக்குமோ என்னவோ, சில சமயம், பழம் வாங்க சென்றால் அழுகிய பழத்தை தலையில் கட்டி விடுவார்கள், காய் கறி வாங்க சென்றால் காய்ந்து போனதை முற்றியதை போட்டு விடுவார்கள், தேங்காய் வாங்கினால் கூட ஏமாந்து விடுவேன் இப்படி எதை எடுத்தாலும் சொதப்புவதால் வாயை கையை  கட்டிக் கொண்டு விடு விட்டா வேலை வேலை விட்டா வீடு என வாலை சுருட்டிக் கொண்டு வந்து விடுவதுண்டு..

அந்த 10 ரூபாய்க்கு நாணயத்துக்கு வேறு நோட்டு கேட்டுப் பார்க்கலாமா அந்த நடத்துனரிடம் வாங்கலாமா என யோசித்தபடியே வாங்காமலே வந்து விட்டேன்.

இங்கு எனது டெஸ்க் டாப்பிற்கு  யு.பி.எஸ்  பேட்டரி மாற்ற‌ வந்த எமது வீட்டு ஆஸ்தான சர்வீஸ் மேன் சதீஸ் அண்ணா, ஒரு க்விக் பிக்ஸ் வாங்கி வாருங்கள், 5 ரூபாய் தான் இருக்கும் என்றார், சாந்தா மளிகை கடைக்கு ஓடினேன், வீட்டில் யாரும் இல்லை...அங்கே மாலைக் கூட்டம், அருகில் உள்ள கடை அதுதான்.என்னைப் பார்த்தவுடன் அந்த க்விக் பிக்ஸை எடுத்து கொடுத்தார் அந்த 10 ரூபாய் நாணயத்தைக் கொடுத்தேன் , என்னிடம் யாரும் வாங்குவதில்லை அது வேண்டாம் என்று கண்ணியமாக மறுத்தார், எனக்கு இப்போதுதான் டவுன் பஸ்ஸில் கொடுத்தார்கள், நான் வாங்கிக் கொண்டேனே என்றேன்,இங்கு யாரும் வாங்குவதில்லை என்றார், இது இப்படி நடக்கும் என்று  தெரிந்தே சில்லறை 2 இரண்டு ரூபாய் நாணயமும் ஒரு ஒரு ரூபாய் நாணயமும் கொண்டு சென்றதக் க்கொடுத்து விட்டு வந்து  நாணயமாக வந்து சேர்ந்தேன்...

யோவ் மோடி வெளி நாட்டில் இருக்கும் இந்தியப்பணத்தைக் கொண்டு வந்து எங்களது கணக்குக்கு ஓவ்வொரு வங்கிக் கணக்கும் 15 இலட்சம் போடுவதாக வாக்களித்து வாக்களித்த மக்களை ஏமாற்றி விட்டு நல்லாட்சி நடத்துகிறீர்? நினைவிருக்கிறதா? நாணயமே இல்லையே....அந்த ஒரு ரூபாய் செல்லுகிறது இந்த 10 ரூபாய் செல்லாக்காசாகி பள பள என்று புத்தம் புதிதாய் சிரிக்கிறதே.... இதுதாய்யா ஒங்க ஆட்சி...

யோவ் சுப்ரீம் கோர்ட் தண்ணீ விடச் சொன்னதை கர்நாடகா அரசு பின்னால ஒட்டிய மண்ணைப் போல  தட்டி விட்டுக் கொண்டிருக்கிறதே, அவர்களுக்கே கிருஷ்ணராஜ சாகரில் தண்ணீ இல்லையாமே என்ன செய்யப் போகிறாய் ஈஷா ஜக்கியுடன் வந்து சேர்ந்து மழை வேண்டி யாகம் நடத்து...பிரார்த்தனை செய் யாவும் நடந்து விடும் எங்க அம்மா நிரந்தர முதல்வரானது போல....

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை..

Image result for 1o rupee coin

   ஒன்று ஜனங்க அரசு, சட்டம், நீதி, நிர்வாகம் சொல்வதை கேட்க வேண்டும் அல்லது அரசு ஜனங்க சொல்லும், நினைக்கும் கருத்துக்கு மதிப்பளித்து ஆள வேண்டும்..இங்கு இரண்டுமே இல்லை...நாங்கதான்யா நடுவில கிடந் து
அல்லாடறோம் இந்த 10 ரூபாயை செலுத்தவும் முடியாமல் வாங்காமல் இருக்கவும் முடியாமல்....

Monday, March 27, 2017

வைகோவும் ஊடகங்களும், ஹைட்ரோ கார்பனும் மத்திய அரசும்: கவிஞர் தணிகை.

வைகோவும் ஊடகங்களும், ஹைட்ரோ கார்பனும் மத்திய அரசும்: கவிஞர் தணிகை.
Related image


பொதிகை இராமகிருஷ்ணன் ஓய்வு பெற்றவர் இப்போது சன் டிவியில் இருக்கிறது நேற்றுத்தான் வைகோ மூலம் நான் தெரிந்து கொண்டேன். ரஜினிகாந்த் பற்றி டில்லியில்  போராடும் விவசாயிகளை சந்திக்க சென்ற வைகோவிடம் கேள்வி கேட்ட ஊடகம் மட்டி மடத்தன இரகத்தை சார்ந்தது, வைகோ என்னும் மனிதர் எவ்வளவு தரக்குறைவானவராக இருந்து நாட்டின் தலைவிதியை குட்டிச் சுவர் செய்தபோதும் அங்கு அவர் நடந்த கொண்ட விதம் ஊடகங்களின் முகத்திரையை கிழித்து அவரை விட ஊடகம் எல்லாம் எவ்வளவு கேவலம் என்று சொல்லாமல் சொல்லியது

ரஜினிகாந்த் என்ன நாட்டை திருத்த வந்த உத்தமரா? பிஜேபி ஆதரவாளர் என்ற ஒரே காரணத்தால் ஆடத் தெரியாத அவர் மகளை ஐ.நாவில் ஆடவைத்த பெரும்புள்ளிதானே? she is wife of actor Tanush.

அவர் இலங்கைக்கு செல்லாததுதான் நாட்டில் பெரும்பிரச்சனையா? இந்த ஊடகவியலாளர் எல்லாம் அந்த அம்மாவின் 73 நாட்களில் என்ன செய்து கொண்டிருந்தனர், இன்னும் என்ன நடந்தது என வெளிக் கொண்டு வர இயலா இந்திய ஊடகம் என்ன மண் ஊடகம்? மதுவை விலக்காமல் இன்னும் இருக்கும் தமிழக அரசை என்ன கிழித்தார்கள்? உச்ச நீதிமன்றம் காவிரி நீர் விடச் சொல்லியும் விடாத கர்நாடக அரசை என்ன செய்தார்கள்?

இந்தியாவின் 4 வது தூண் இப்படி காசுக்காக, சுய இலாபக் கணக்குடன் எந்தவித பத்திரிகை தர்மமுமே இல்லாமல் செயல்படுவதால்தான் இந்தியாவும், தமிழகமும் இந்த இலட்சணத்தில் இருக்கிறது... தேவையற்றதுக்கு பெரும் விளம்பரம் தரும் செய்திகள், ஆக்கபூர்வமான செய்திகளுக்கு இருட்டடிப்பு, அதை வெளியிடக் கூட பெரும் எதிர்பார்ப்பு இதை எல்லாம் இன்னும் நம்பிக் கொண்டிருக்கும் பாமர மக்கள்

Image result for suntv journalist Ramakrishnan

அவரவர் ஒரு டி.வி, ஒரு பத்திரிகை, இதில் எது உண்மை எது பொய் எனக் கண்டறிய முடியா கேவல நிலை...இதில் ஊடகம் என்ன கிழித்து நாட்டின் தலைவிதியை மாற்றிய விதை விதைத்திருக்கிறது. என்ன ஒரு வேறுபாடு எனில் செய்தி ஊடகங்கள் அறிவியல் மலர்ச்சியால் நொடிக்கு நொடி புதிதாக செய்திகளை உடனுக்குடன் உலகெங்கும் பரப்புவது ஒன்றுதான் பலன்

மற்றபடி வைகோவும் இதுவும் ஒன்றுதான். எதை வேண்டுமானாலும் சுய இலாபத்துக்காக எதையும் செய்யக் கூடிய விஷயத்தில்..

எனவே ஒருவருக்கு ஒருவர் பழி சொல்லக் கூட அருகதை இல்லை.

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.

Sunday, March 26, 2017

விஜய் மில்டனின் கடுகு: கவிஞர் தணிகை

விஜய் மில்டனின் கடுகு: கவிஞர் தணிகை


Image result for kaduku movie

கடுகு சிறுத்தாலும் காரம் போகாது, கடுகு அதிகம் பயன்படுத்தினால் உடல் சூடேறி விடும். எல்லா வகையிலும் பாராட்டிப் பார்க்க வேண்டிய படம் இந்தக் கடுகு. அருமையான திரைக்கதை, இயக்கம், நடிப்பு,  சமூக விழிப்புணர்வை ஊட்டும் படம்,வியாபார உத்திகளுடன் சொல்லப்பட்டிருப்பினும் இது போன்ற படங்கள்தான் இந்த நாட்டின் இன்றையத் தேவைகள். என் மேல் விழுந்த மழைத்துளியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்? என்று ஒரு பாடல் எனது மனதில் இந்தப் படத்தைப் பார்த்த உடன் கேட்டுக் கொண்டே இருக்கிறது, இத்தனை நாளாய் எங்கிருந்தாய் விஜய் மில்டன் அவர்களே என்று? ஒரு நல்ல படத்தை பார்த்த திருப்தி என்னுள் நீங்காதிருப்பதால் இதை உங்களுக்கு உடனே சொல்லத் தோன்றியது.

இது போன்ற படம் சிறிய அளவிலான பொருட் செலவில் எடுப்பதை விட்டு விட்டு சங்கர் போன்றோர் 2.0 என பல நூறு கோடிகள் ஒரு நூறு கோடி அதற்கு இன்சூரன்ஸ் என தமிழ் இரசிகர்களை திசை திருப்பிக் கொண்டிருக்கின்றனர் பெரிய இயக்குனர்கள் என பேர் சொல்லிக் கொண்டு...அவர் எந்திரன் கூட அப்படித்தான். மேலும் சந்திரமுகியிலேயே பல் செட்டை வைத்து இருந்த நமது சூப்பர் ஸ்டார் தான் என்றுமே சூப்பர் ஸ்டாராம்.

எல்லா சமையலிலும் கடுகை,கறிவேப்பிலையை,கொத்துமல்லிக் கீரையை, பொதினாக் கீரையைப் போட்டு கடைசியில் தாழிப்பார்கள். இன்று நான் முதலில் தாழித்து விடலாம் என நினைக்குமளவு கடுகு முதல் இடம் பிடித்து விட்டது.

Related image


பொதுவாகவே கடுகு விதை மிகச் சிறியதே ஆனாலும் அதன் மரம்தான் மரங்களில் மிகப் பெரிது என்கிறது பைபிள். அப்படி இந்தப் படம் மிகவும் பிடித்துப் போனது எனக்கு. பரத் நீண்ட நாள் கழித்து இந்தப் படத்தில் ஒரு பாடி பில்டராக ஊரில் முக்கிய புள்ளியாக எல்லா பிரச்சனைக்கும் இவரைத்தான் ஊரில் உள்ளோர் நாடுவாராக, ஏன் மிகப் பெரும் பணக்காரராகவும் நடித்து கடைசியில் புலி பாண்டியால் ,மாட்டி வைக்கப் படாமல் மாற்றி வைக்கப்பட்டு கதையை நிறைவு செய்கிறார். ( இராஜகுமாரன்) அதாங்க தேவயானியின் கணவர் தேவகுமார் நீ வருவாய் என...எனக்கென்ன சொல்லத் தோன்றுகிறது எனில் "அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ ஒத்துக்கோ" கமல் நேர்த்தியாக ஒரு இன்பக் கலவையாக புலி வேஷம் போட்டிருப்பார் அதை மறக்க முடியாது....ஆனால் இந்த இராஜகுமாரன் இந்தப் படத்தில் அதையும் மிஞ்சி விட்டார் புலிவேஷம் போட்டு புலிப் பாண்டியாகி...அந்த அளவு மெச்சூரான கனமாக ஒரு மறக்க முடியாத மறு வாழ்க்கை கிடைத்திருக்கும் பாத்திரம் இராஜகுமாரனுக்கு. நல்ல திரைக்கதை அமைப்பு. நல்ல பாத்திரப் படைப்புகள். சராசரியான வாழ்வில் நாம் சந்திக்க வேண்டிய முத்துகள்.

உருவத்தில் எள்ளி நகையாடப்படும், தோற்றத்தில் மிகவும் கீழான ஒரு மனிதர் சமூக நீதியில் எவ்வளவு மேலாக இருக்க முடியும் எனச் சொல்லியிருக்கும் பாத்திரம். நடந்து கொள்ளவும் ஏன் பிறரை அந்த வழிக்கு நடந்து கொள்ள வைக்கவும் கூடிய முதிர்ச்சியுடனான குணாம்சமுள்ள பாத்திரம் படைப்பு. இதற்கு அந்த புலிப்பாண்டி, அநிருத் என்னும் பாரத் சீனி, அந்த ஆசிரியாக வரும் சுபிக்ஷா என்பார் பாசிடிவ்வான சமூக முன்னோடிகள் எனவரும் அனைவரும் ஏற்று பாராட்டும் படைப்புக் கதா பாத்திரங்கள்.

Related image

மினிஸ்டர் அதன் கூட்டம், கடைசியில் அவர்களின் கைப்பாவை எஸ்.ஐ.ஆகியோர் நெகடிவ்வான படைப்புகள். அங்காடித்தெரு வெங்கடசேனா, அல்லது தமிழரசனா எனத் தெரியவைல்லை அந்த எஸ்.ஐ ஒரு சமுதாயத்துக்கு செய்ய நினைத்தும் செய்ய முடியாத பாத்திரம், அது போலவே நம்பி நல்லவர்தான் ஆனால் அநியாயம் கண் முன்னே நடக்கும்போதும் அதை பல்வேறு காரணம் பற்றி நினைத்து யோசித்து ஊர்நலம் என்று கெட்டதுக்கு துணை போகும் பாத்திரம்...ஆனால் இதை திருந்தி பின்னால் வில்லனை முடிக்கும் கருவியாக மாற்றி பரத்தை நெகடிவ்  கேரக்டரிலிருந்து மாற்றி நமது கதாநாயக நல்லவர் எனச் சொல்லி முடித்திருக்கிறார்கள்.
Image result for kaduku movieபெண்கள் நல்ல முறையில் பயன்படுத்தப் பட்டிருக்கிறார்கள். அந்த டீச்சர் கேரக்டர் செய்யும் சுபிக் ஷா எக்ஸ்ட்ரார்டினரி கேரக்டர்.பாராட்டும்படி அந்த நடிப்பும் படைப்பும் இருக்கிறது.

புலிப்பாண்டி புலிவேசத்தில் புலி வேசம் என்றுதான் முதலில் படத்துக்கு பேர் வைக்க இருந்தார்களாம், ஆனால் எவ்வளவுதான் சிறியதாக மனித குலத்தில் இருந்த போதும் மதிக்கப்பட்ட போதும் தம்முடைய குணாம்சத்தை கைவிடக்கூடாது என்னும் கடுகு (அருமையான டைட்டில்) பாத்திரம் கதை மாந்தராக சமுதாய வழிகாட்டியாக  எழுந்து நிற்கிறது... கூரை, உயரங்களில் எல்லாம் புலி பாய்ந்து அசத்துவது போல உண்மையில்யே இந்த பயற்சியும் சினிமா முயற்சியும் பாய்ச்சலும் இராஜகுமாரனுக்கு வெகுவாக பேரை கொடுக்கும் என எதிர்பார்க்கிறேன்.

Related image


அதாவது இன்று மட்டுமல்ல என்றுமே மஹாபாரதக் கதையில் கூட தீயது செய்வாரை விட தீயது செய்வாரைத் தடுக்காமல் நெட்டை மரங்கள் என நின்றார் என மகாரதர்களான பிதாமகர் பீஷ்மர், துரோணர் ,கிருபாச்சாரியார்,போன்ற மாமனிதர்களும் வீதியில் ஓராடையில் இருக்கிறேன் மாதவிடாயில் இருக்கிறேன் எனச் சொல்லியும் கேளாமல் மயிரைப்பிடித்து வீதியில நகரில் சாலையில் இழுத்து வரும்போது அதை வேடிக்கைப் பார்த்த படி இருந்த மக்களையும் பாரதி சாடுவார், அதே மக்கள்தான் இன்றைய தமிழக நிலைக்கும், இந்திய நிலைக்கும் குடி நீர் பற்றாக்குறைக்கும், கர்நாடகா நீர் விடாமைக்கும் போன்ற எல்லா செயல்பாடுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் காரணம்.

அந்த நாடித் துடிப்பைத்தான் இந்த படம் உணர்த்தி சமூகத்தில் ஒரு அவலம் நடைபெற்று வருவதைக் கண்டும், அதைத் தட்டிக் கேட்க வேண்டிய உடலளவில் மிக வலுவான சக்தியாக இருக்கும் பரத் கேரக்டர் அதை வேடிக்கை பார்க்க, ஆனால் டீச்சர் கேரக்டர் தம்மை இழந்து (தியாகம் அதற்கு பட்டப் பெயர் வேசி) அந்த சிறுமியைக் காத்தும், அந்த சிறுமி தம் உயிரை மாய்த்துக் கொள்ளல், அதற்கு புலி உறுமல்....இப்படிச் செல்லும் படம் ஓர் உயர் ரகப் படம்தான்.

ஒரு படத்தை பார்த்தால் பார்த்த உடன் ஒரு நல்ல திருப்தி கிடைக்கும் அந்த திருப்தி இந்தப் படத்தில் கிடைக்கிறது. இந்தப் படத்தை உண்மையிலேயே நாம் தியேட்டருக்கு சென்று பார்க்க வேண்டும் அங்கும் நிகழும் அநியாயத்தை இராஜகுமாரனின் பாணியில் தட்டிக் கேட்கவும் கேட்டுக் கொள்கிறேன்.

பாரத் சீனி என்ற துணைப் பாத்திரமும், புலிபாண்டி பாத்திரமும் மிகவும் சமூகத்தில் கேலியான பாத்திரம்தான் ஆனால் அவை எப்படி உயர்வானவை என்று சொன்ன விதம் மிக நேர்த்தி. சூரியா என்று சொல்கிறார்கள் அது நடிகர் சூரியாவா வெளியிட்டது தயாரித்தது எனத் தெரியவில்லை...நல்ல காரியம் செய்திருக்கிறார்.

Related image

பல வகையிலும் பாராட்ட வேண்டிய படம் என்று சொன்னேன், அதிகம் குடி மதுக்குடி காண்பிப்பது இல்லை காண்பித்த இடம் மினிஸ்டர் பாட்டிலுடன் குடிப்பது புலிப்பாண்டியும் அநிருத்தும் குடிப்பது என 2 காட்சிகள் தாம் என நினைக்கிறேன்.

அன்றாடம் நாம் இது போன்ற பாத்திரங்களை சந்திக்கலாம், ஆனால் அதை பாரட்டாமல் கவனத்தில் கொள்ளாமல் விட்டுச் செல்கிறோம் அவசரகதி என...நேற்று கூட பேருந்து பயணத்தில் ஒரு கல்லூரி இளைஞர் காசு போதாமல் நடத்துனரிடம் கெஞ்சுகிறார், கையில் அரசுப் பேருந்து பாஸ் உண்டு, இது தனியார் பேருந்து, கையில் டிக்கட்டுக்கு போதாமல் சில ரூபாய் காசு குறைவு, நான் நிலை என்ன ஆகிறது எனப் பார்க்கலாம் இந்த இளைஞர் உண்மையானவர்தானா என கொஞ்சம் சமயம் எடுத்துக் கொண்டிருந்த நேரத்தில் ஒரு குழந்தை மனைவி என இருந்த ஒரு தோற்றத்தில் டல்லாக இருந்த ஒருவர், அவருக்கும் சேர்த்து டிக்கட் எடுத்து விட்டார், சில்லறையை இந்த கல்லூரி இளைஞர் அவரிடம் தரும்போது, எனக்கது ஒரு டீ குடிக்கற காசு, வைத்துக் கொள்ளுங்கள் எனச் சொல்லி விட்டார், இருவரையும் பாராட்டினேன்...

அப்படி சிறு சிறு விஷயத்திலிருந்து, விஷத்திலிருந்து நாட்டை நாட்டு நடப்பை மாட்டி விடாமல் மாற்றி விடத் தெரிந்த மனிதர்கள் கொள்கை மாறாத குணக்குன்றுகள் எண்ணிக்கை புலிப் பாண்டி போல அந்த டீச்சர் போல, அந்த அநிருத் போல ஏன் கடைசியில் மாறி விடும் நம்பி போல வரும்போது இந்த நாட்டின் நிலை மாறலாம் அதிலும் புலிப்பாண்டீ பாத்திரம் எக்ஸலன்ட். ஆனால் இதை எல்லாம் சினிமாவாக பார்க்காமல் அன்றாட வாழ்வின் நிதர்சன நடப்புகளாக பார்க்கக் கற்றுக் கொண்டு நல்லன செய்ய இந்த மனிதர்கள் முன் வரவேண்டும் அதற்கான தூண்டுகோல்கள் தாம் இது போன்ற படங்கள்.

Related image

நம்பிக்கையூட்டும் படம், நம்பிக்கயூட்டும் படைப்பு, பாத்திரப் படைப்புகள்

தணிகையின் அரசில் இதற்கு நூற்றுக்கு அறுபது மிகச் சுலபமாக தரப்படுகிறது. மறுபடியும் மறுபடியும்  இது போன்ற நாட்டுக்குத் தேவையான திரைப்படங்கள் பூக்கட்டுட்ம். நல்ல‌ திரைக்கதை அமைப்பு, அருமையான வசனங்கள்...

கெட்டது நடந்தாலும், நடக்காமல் மயிரிழையில் காப்பாற்றப் பட்டு இருந்தாலும் இதெல்லாம் நாட்டுக்குத் தேவையா? இதற்கெல்லாம் தண்டனை ஏதும் இல்லையா? இதை எல்லாம் கேட்பாரே இல்லையா என்று புலிப்பாண்டி இன்ஸ்பெக்டரிடம் அழும்போது நாமும் கடையனுக்கும் கடைத்தேற்றம் என்னும் காந்தியின் வழியை எண்ணுகிறோம்..

என்னால் இடையில் எந்த வேலையும் செய்ய விடாமல் என்னை முழுதாக முழு முனைப்புடன் காலையில் முதல் வேலையாக பார்க்க வைத்தப் படம் நீங்களும் பாருங்கள்...நல்ல அனுபவமும், நல்ல சிந்தனையும் தெளிவும் தோன்றும்.Related image

ஆனாலும் எதிரியின் வலுவைப் பொறுத்துதான் அன்றாட வாழ்வில் நம்மால் மோதமுடியும் என்றும் அதற்கு நாம் பலியாக தயாராக முடியாது என்று சொல்வாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அவர்கள் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை. ஏன் எனில் அவர்களுக்காகத்தான் இந்தப் படம்

Related image

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Thursday, March 23, 2017

உதிர்ந்த இரட்டை இலை மீண்டும் துளிர்க்குமா? கவிஞர் தணிகை

உதிர்ந்த  இரட்டை இலை மீண்டும் துளிர்க்குமா? கவிஞர் தணிகை

உதிர்ந்த மலர்
மீண்டும் கிளைக்குத் திரும்புகிறது

ஓ! வண்ணத்துப் பூச்சி.Image result for haiku kavithai in tamil

என்ற ஒரு ‍ஜப்பானிய ‍ஹைக்கூ கவிதையை ஹைக்கூ கவிதைக்கு ஒரு நல்ல அடையாளம் என்பார்கள். அந்த கவிதைதான் எனக்கு இப்போது நினைவுக்கு வருகிறது. இரட்டை மின் விளக்கு கம்பம் இரட்டை இலைக்கு சமம் என பன்னீர் அணி கனவு அதிலும் இதிலும் இரட்டை என்ற சொல் இடம் பெறுகிறாதாம். வண்ணத்துப் பூச்சி பூமி மேல் அம்ர்ந்திருந்தது பறந்து சென்று மரக்கிளையில் ஒட்டிக் கொண்டதைப் பார்த்தால் காய்ந்து கீழே கொட்டி இருந்த மலரில் ஒன்று மரக்கிளையில் ஏறி மறுபடியும் ஒட்டிக் கொண்டது போலத் தெரிந்ததாம் அந்த கவிஞருக்கு. கவிதைக்கு நன்றாகவே இருக்கிறது. கட்சிக்கு நன்றாக இருக்குமா என்பதுதான் கேள்வி. ஆனால் இவர்கள் 1989ல் இரட்டைப் புறா, சேவலுமக சண்டையிட்டவர்கள் மறுபடியும் இரட்டை இலையை தக்க வைத்துக் கொண்டார்கள். ஆனால் அப்போதைய நிலை வேறு. இப்போதைய நிலை பல கூறு(கள்)

சில ஆயிரம் பக்கங்களை பரிசீலிக்க நேரம் காலம் இடம் கொடுக்காததால்தான்  சசிகலா அணிக்கு இரட்டை இலை ஒதுக்கப்படவில்லை எனச் சொல்லி இருக்கிறது தேர்தல் ஆணையம், மேலும் இது இடைக்காலத் தீர்ப்புதான் என்றும் சொல்லி இருக்கிறது

எப்படியோ பாரதீய ஜனதாக் கட்சி எண்ணிய நாடகம் இரண்டு பிரிவுக்குமே இரட்டை இலைச் சின்னத்தை தராமல் முடக்கி வைப்பது என்ற எண்ணம் நிறைவேறி விட்டது.

இனி இரட்டை மின் விளக்கு கம்பத்தை இரட்டை விரலை நீட்டி பன்னீர் அணி காட்டும் தொப்பியை தினகரன் எடப்பாடி சசிகலா அணி காட்டும் தீபா அணி வெற்று அணி படத்தை காட்டும்.

அம்மா அ.இ.அ.தி.மு.கவாம், அ.இ.அ.தி.மு.க புரட்சித் தலைவி அம்மாவாம். அய்யய்யா எங்க பார்த்தாலும் இந்த அம்மா என்ற சொல் நாரசமாய் விட்டது. பெற்ற அன்னையின் புனிதம் கூட இந்த சொல்லில் காணாமல் போய்விடுமோ என்று சொல்லுமளவு...

வாரிசாக யாரையும் குறிப்பிடாத கட்சி அமைப்புகள் தமிழகத்தை ஆண்ட கட்சிகளாக இருக்கும் வரை இந்த நிலை நீடிக்கும். இனியும் வெல்ல முடியவில்லை எனில் ஸ்டாலின் கட்சி அதோகதிதான் என்று சொல்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

நிரந்தர முதல்வர் என்ற கட்சி இன்று சின்னத்தை இழந்து சின்னா பின்னப் பட்டு உடைபட்டு மண்குடமாய் உதைபட்டு பந்தாய் கிழிந்து கிடக்கிறது. சுக்கல்களாய், சிக்கல்களுடன்

இந்த அவதியிலிருந்து இனி இது தேறுமா?  மறுபடியும் கூடுமா? ஒன்று பட்டு தமிழகத்துக்கு ஒரே தனிப்பட்ட பெரும்பான்மை ஆட்சி தர முடியுமா? எடப்பாடி தாங்குவாரா? என்பது போன்ற நிறைய கேள்விகள்.

உதிர்ந்த ரோமங்கள், உதிர்ந்த இலைகள் , சட்ட சபைகள், சென்னா ரெட்டிகள், துரைமுருகன்கள் எல்லாவற்றையும் ஏற்கெனவே சந்தித்த இந்தக் கட்சி இம்முறை எப்படி தேறப் போகிறது என ஏப்ரல் 12 வரை பொறுத்திருந்து பார்க்க வேண்டியது அவசியம்.

மேலும், இந்த தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் எடப்பாடி முதல்வராக நீடிப்பது உறுதி என்ற ஒரு ஆருடம் எனக்குத் தோன்றுகிறது. ஸ்டாலின் கட்சி ஜெயித்தாலுமே தமிழக அரசை ஆளும் கட்சியை அதன் தலைமையை இது ஏதும் பாதிக்காது என்றே தோன்றுகிறது. அவ்வளவு சீக்கிரம் ஆட்சியை பதவியை விட மாட்டார்கள் மேலும் அப்படி நடைபெறும் பட்சத்தில் சசி தமிழ்நாட்டுசிறைக்குள் மீட்கப்படுவதும், மேலும் இரட்டை இலையை அவர்கள் தக்கவைத்துக் கொள்வதும் எளிது என்பதும் சாத்தியமே என்று சொல்லத் தோன்றுகிறது. எல்லாவற்றுக்கும் பணம் இருக்கிறது.இடையில் பெரிய மாற்றம் என்ன நிகழப் போகிறது என்பதை பார்க்க தமிழகம் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறது.இன்று சட்ட சபையில் சபாநாயகர் மேல் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி அடைந்த அதே கெட்டி அப்படியே இருந்தால்... அட நம்ம எடப்பாடிக்கு நல்ல இராசி இருக்கும் போல இருக்கே..

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.
Wednesday, March 22, 2017

எல்லாப் புகழும் இறைவனுக்கே என்னும் அல்லா ர‍ஹ்ஹா ரஹ்மானும்,எல்லாப் பணமும் எனக்கே என்னும் இளையராஜாவும்: கவிஞர் தணிகை.

எல்லாப் புகழும் இறைவனுக்கே என்னும் அல்லா ர‍ஹ்ஹா ரஹ்மானும்,எல்லாப் பணமும் எனக்கே என்னும் இளையராஜாவும்: கவிஞர் தணிகை.

Image result for ar rahman and ilayaraja


உலகை தம் இசையால் வென்ற மேதையாய் ஏ.ஆர்.ரஹ்மான் இருக்க 2 ஆஸ்கார் விருதுகளுடன் கொடி கட்டிப்பறக்க அந்த 4 வயதில் தந்தையுடன் இசைக்கருவியை கையில் எடுத்த சிறுவன் நினைத்திருக்கவே மாட்டான்.9 வயதில் தமது தந்தையை பறிகொடுத்த அந்த சிறுவன் முயற்சியை மட்டும் கைவிடவே இல்லை.

அவனிடம் என்றுமே இருக்கும் ஒரு அடக்கம்: எல்லாப் புகழும் இறைவனுக்கே என்னும் இறை நெருக்கம்...அது ஏற்ற முடியா இன்னும் ஏற முடியா ஏணிகளையும் ஏற்றி வைத்தது இனி ஏற படிகளே பெரும்பாலும் இல்லை.அவ்வளவு உயரம்...

ஆனால் இளைய ராஜா என்னும் மாமனிதரும் ஒரு இசை மேதைதான். ஆனாலும் இவரிடம் எப்போதும் இருக்கும் தலைக்கனம். இவர் நிறைய ஆன்மீக பக்தி, கடவுள் சார்ந்த வழிபாட்டுப் பாடல்களைப் படைத்த போதும் இவர் எப்போதும் தம்மையே வியந்து பார்த்துக்கொள்ளும் குணத்தை இன்னும் விட்டார் இல்லை ஏற்கெனவே ஒருமுறை ஒரு பத்திரிகையாளரை நீ யார் என கொச்சையாய் துசாய், துரும்பாய் மதித்து அனைவரது அதிருப்தியை பெற்றுக் கொண்டார்.


Related image


இப்போது எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் விட்டு பேரைக் கெடுத்துக் கொண்டார். எல்லாவற்றுக்கும் வாரிசுகளும், பெரும்பண விளையாட்டுமே காரணம். இந்த சினிமாக்காரர் எல்லாமே யோக்யம் எல்லாம் இல்லை. இந்த எஸ்.பி.பாலசுப்ரமணியமும்தான். சரண் , கார்த்திக் இளையராஜா இவர்களுக்கு எதிர்கால பேஸ்மட்டத்தை அமைத்து தரும் இந்த போராட்டத்தில் தான் இப்படி நண்பர்கள் அசிங்கப் பட்டுப் போய் இருப்பது பேராசைக் களத்தில் பெரும் புகழுடும் பெரும்பணத்தை பெறவே பங்கு போட்டுக் கொள்ளவே இந்தப் வாய் மொழிப்போர் யாவுமே...

ஒரு தயாரிப்பாளர் முதல் போட்டு ஒரு படத்தை ஒரு இயக்குனரைத் தேர்த்நெடுத்து திரைக்கதை அமைத்து, பாடல் செய்யச் சொல்லி,இப்படி எல்லா நிலைகளிலும் ஒரு கூட்டு முயற்சியை செய்கிறார்கள், பாடல் எழுதுவோரும் இசை அமைப்பாருமாக...எல்லாம் பணத்துக்காக...

இதில் கற்பனை கலக்கிறது வார்த்தைகள் பிறக்கிறது இசை மலர்கிறது இதில் வரும் எல்லா இலாப நஷ்டம் பெரும்பாலும் எல்லாத் துறைகளையும் சார்ந்து பணி செய்தோரை பாதிக்கிறது. ஆனாலும் இலாபத்தை பெரும்பாலும் தயாரிப்பாளர் மட்டுமே எடுத்துக் கொள்கிறார் அது தோல்வி அடைந்து நஷ்டம் வந்தாலும் சம்பளம் வாங்கிய அனைவரும் தப்பித்துக் கொள்ள தயாரிப்பாளர் தற்கொலை செய்யும் நிலையெல்லாம் இந்த சினிமாவில் உண்டு.

பேருந்தில்  தமது பாடல் ஒலிபரப்பாவதை இளையராஜாவால் தடுக்க முடியாது,வானொலியில், தொலைக்காட்சிகளில் ஒலிபரப்பாவது,ஒளிபரப்பாவது யாவற்றையும் வேண்டாம் என்று சொல்லப்போவதில்லை

மேலும் சொல்லப் போனால் இவரது தனிப்பட்ட ஆல்பம் போன்ற இசைக் கோர்வை பற்றி இவர் காபி ரைட் கொண்டாடினால் அது நியாயம். அடுத்தவர் காசில் எல்லாம் செய்து விட்டு பிறர் சொத்துக்கு உரிமை கொண்டாடுவது சிந்திப்பார்க்கு விளங்கும் இளையராஜாவின் நிலைப்பாடு கேலிக் கூத்தானது என்று...

Image result for ar rahman and ilayaraja


மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

உலக தண்ணீர் தினம் மார்ச் : 22: கவிஞர் தணிகை

உலக தண்ணீர் தினம் மார்ச் : 22: கவிஞர் தணிகை


Related image

உலகின் அசுத்தமான நீரைப் பருகும் முதல் 10 நாடுகளில் முதல் நாடு இந்தியா.எல்லா குடிநீர் எடுக்கும் மினரல் வாட்டர் என்று கம்பெனி நடத்துவோரை எல்லாம் கைது செய்ய வேண்டும்,அந்த ஆலைகளை எல்லாம் தேசிய உடைமை ஆக்க வேண்டும் அல்லது நிரந்தரமாக மூடிவிட வேண்டும்.

நொடிக்கு 2000 கன அடி குடி நீர்  ஜூலை 11 வரை கூட கொடுக்காத உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு மதிப்பளிக்காத கர்நாடக அரசை கலைத்து விட்டு மத்திய குடியரசு  தலைவர் ஆட்சி குடி நீருக்காக காவிரியை அதன் நீரைக் கொடுத்து தமிழ் நாட்டுக்கு குடிநீர் தாகம் தீர்க்க வேண்டும்

உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் குடிநீர் பொது உடமை என்றும் அனைவர்க்கும் சம வாய்ப்பளித்து குடி நீரை சமமாக பிரித்தளிக்கும் ஆட்சி நியமங்கள் முறைமைகள் வேண்டும்.

அப்போதுதான் உலக தண்ணீர் தினம் எனக் கொண்டாடப்படுவது சரியாக இருக்கும், இல்லையேல் இதெல்லாம் வெறும் பேருக்கு, இதெல்லாம் பேருக்கு சொல்லி என்ன பயன்?

நதி நீர் இணைப்பின் தற்போதைய வடிவம், நவீன நீர்ப் போக்குவரத்து தேசிய மாநாடு என்று சேலத்தில் 29 அன்று ஒரு மாநாடு நடைபெறுவதாகவும் அதில் கார்த்திகேயன் அதாங்க ராஜிவ் காந்தி கொலை வழக்கு புலனாய்வாளர் முதற்கொண்டு பல பிரபலங்கள் கலந்து கொள்வதாகவும் ஒரு விளம்பர பேனர் பார்த்தேன். முயற்சி வெல்லட்டும் வாழ்த்துகள்.

நாங்களும் முயன்றோம், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பெல்லாம் உண்ணா நோன்பு எல்லாம் செய்தோம், அங்கே நான் நிகழ்த்திய உரை சிறு நூலாகவும் கூட வெளியிடப்பட்டு அனைவர்க்கும் விநியோகிக்கப்பட்டது. நதி நீர் இணைப்பு ஒன்றைத் தவிர வேறு மார்க்கமே இல்லை இந்தியா உய்ய...

இது தான் இந்த உலக தண்ணீர் தினத்தின் தணிகை தரும் செய்தி.

இந்தியாவின் எல்லாப் பிரச்சனைகளுக்கும், குடி நீர்ப் பிரச்சனை தீரவும் ஒரே தீர்வு..கங்கையைக் கழுவுகிறோம் வாருகிறோம் என்பதெல்லாம் ஏமாற்று வேலைதான்....சிந்திக்கும் மக்கள் ஒருங்கிணையட்டும் நாட்டுக்கு அந்த மகோன்னதப்பணியை செய்யும் தலைமை நாட்டை முன்னெடுத்து சென்று மகாத்மாவை விட அதிகம் புகழ் பெறட்டும்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Tuesday, March 21, 2017

இதுக்குத் தான் அப்பவே சொன்னேன் அரசியல் பத்தி எல்லாம் பேசாதே எழுதாதேன்னு: கவிஞர் தணிகை

இதுக்குத் தான் அப்பவே சொன்னேன் அரசியல் பத்தி எல்லாம் பேசாதே எழுதாதேன்னு: கவிஞர் தணிகை


Image result for politics tamil nadu politics at present

ஆதித்யநாத் அதாங்க உ.பி .துறவி முதல்வர், இந்து மத வாதி இவர் ராகுல் காந்தியை விட ஒரு வயது இளையவராம் அகிலேஷ் யாதவ்வை விட ஒரு வயது மூத்தவராம் இடையில் 44 வயதில் இருப்பதால் இருவரையும் தோற்கடித்து விட்டாராம்.இவருக்கு இதில் ஒரு பெருமகிழ்வு.இந்த துறவி தமது மாநிலத்தில் மாபெரும் இராமயணக் காட்சிகளை வைக்க மத்திய அரசு பெரும் பணம் ஒதுக்கியதாக செய்திகள்.


எனக்கும் தான் 55 வயசு ஆச்சு, இது வரை சேவை என்றே காலம் எல்லாம் போச்சு,உடல் நிலை கெட்டும் போச்சு ஏதாவது பதவி நிர்வாகம் செய்ய முடிந்ததா?

சிற்பி வேலாயுதம் வயது 74 ஆச்சு, என்ன வாச்சு? ஏதாவது பதவி நிர்வாகம் என வர முடிந்ததா? தேர்தலில் நிற்க முடிந்ததா? தேர்தலில் நிறுத்திய மதுவிலக்கு வேட்பாளர் சின்னபையன் எட்டு நூத்து சொச்சம்தானே வாங்கி டெபாசிட் போச்சு,அட இந்த இரோம் சர்மிளாவுக்கு 90 வாக்கு வாங்கி டெபாசிட் போகலையா? இல்லை உ.பியில் சிறையில் இருந்தே சமாஜ்வாதி கட்சியின் அதிருப்தி வேட்பாளர் பிரச்சாரம் செய்யாமலே , சிறையில் இருந்து கொண்டே எம்.எல்.ஏ வாக ஜெயிக்கவில்லையா?

91 வயதான நல்லகண்ணுவுக்கு என்ன கிடைத்தது? 92 வயதான கலைஞர் கருணாநிதி 5 முறை முதல்வாராக இல்லையா? எம்.ஜி.ஆரால் அண்ணாவுக்கும் பிறகு தூக்கி விடப்பட்டு நெடுஞ்செழியனை நெடு வழியில் அல்லாது குறுக்கு வழியில் கடந்து...அதன் பின் எம்.ஜி.ஆரை தூக்கி எறிந்து....

ஆதித்யநாத் அதாங்க உ.பி .துறவி முதல்வர், இந்து மத வாதி இவர் ராகுல் காந்தியை விட ஒரு வயது இளையவராம் அகிலேஷ் யாதவ்வை விட ஒரு வயது மூத்தவராம் இடையில் 44 வயதில் இருப்பதால் இருவரையும் தோற்கடித்து விட்டாராம்.இவருக்கு இதில் ஒரு பெருமகிழ்வு.இந்த துறவி தமது மாநிலத்தில் மாபெரும் இராமயணக் காட்சிகளை வைக்க மத்திய அரசு பெரும் பணம் ஒதுக்கியதாக செய்திகள்.

அமெரிக்காவில் ஒபாமா கூட சமூக சேவை செய்தவர் எனது சம வயதினர் 8 ஆண்டுகள் தொடர்ந்து குடியரசு தலைவராக இருந்து விடைபெற்றார்,

இங்க பாருங்க கலைஞர் சாகும் வரை தி.மு.க தலைவராகவே இருந்தாலும் எந்தக் கட்சிக்காரராவது அந்தக் கட்சியிலிருந்து வெளிவந்து அது சரியில்லை எனச் சொல்கிறாரா என்று?


அட இப்ப பாருங்க யாருன்னே தெரியாது நேற்று வரை இருந்த இந்த தி.தி.வி தினகரனும், ஜெவின் எடுபிடி சசியும், அடிமையாய் ‍ஜெவின் ‍ஹெலிகாப்டர் ஏறிய பின்னும் காற்றையும், மண்ணையும் தொட்டு நக்கிய, சாரி தொட்டு வணங்கிய , காரை பல மீட்டர் போனபின்னும் மண்ணைத் தொட்டு வணங்கிய பன்னீரும், எங்கோ இருந்த எடப்பாடிக்கு யோகம் அடிக்க வழி செய்த அரசியலும்...ஆஹா ஓஹோ பேஷ் பேஷ்...

விஜய்காந்த் கட்சி நிற்குதாம், பாமக நிற்கலையாம், வைகோ நிற்கலையாம், வாசன் கட்சி நிற்கலையாம், வி.சி.க தி.மு.கவுக்கு ஒத்துழைப்பாம் மறைமுகத்தில்,அட நம்ம கங்கை அமரன் கோழி கூட கூவ நினைக்குது...மத வாத அரசியலில்,

Image result for adityanath


இங்க எல்லாமே பணமய்யா பணம், பணம் இல்லைன்னா அரசியல்ல ரணமய்யா ரணம், இங்க எல்லாமே மதம் அய்யா மதம், யானையின் அடக்க முடியா மதம், சாதி அய்யா சாதி சாதிக்க அல்ல சாதிக்குள்...

ராதாகிருஷ்ணன் நகர் தேர்தல் இந்தியாவில் இந்தியில்  அல்ல தமிழகத்தில்  தமிழில் ஒரு தறுதலை நிகழ்வுகள் ஏற்பட வழி விடுகிறது...

ஆசிரியர் தின இராதாகிருஷ்ணன் சொல்லியதுதான் நமக்குத் தெரியும், நம் நினைவுக்குத் தெரியும்....

அது இதுதான்:

1. கட்டுப்பாடில்லா விடுதலை
2. ஒழுக்கமில்லா சுதந்திரம்
3. தியாகமில்லா சாதனை

நம்ம ஜனநாயகத்தில்... நம்ம தேர்தலில்... நம்ம நாட்டில், நம்ம ஸ்டேட்டில்...


இந்த நாடு உருப்படும் என்கிறீர்கள்?

யோவ் 2000 கன அடி நொடிக்கு ஜுலை 11 வரை கர்நாடகா தமிழகத்து காவிரிக்கு  நீர் கொடுத்து விட வேண்டும் என உச்ச நீதிமன்றம் மறுபடியும் பூத்துள்ளது இந்த முடிவுக்கு என்ன ஆட்டம் கர்நாடகம் ஆடப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்...

இந்த நாடு உருப்படும் என்கிறீர்கள்?


Image result for politics tamil nadu politics at present


மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Sunday, March 19, 2017

தமிழகத்தில் என்ன நடக்கிறது? கவிஞர் தணிகை.

தமிழகத்தில் என்ன நடக்கிறது? கவிஞர் தணிகை.

Related image


அ.இ.அ.தி.மு.கவை யாராலும் அழிக்க முடியாது,என்கிறார்கள் பதவி ஆசையில் இருக்கும் அந்தக் கட்சிக்காரர்கள், பதவி கிடைக்கவில்லை என்றதும் தூய்மை பற்றி பேசுகிறார்கள் ஏசுகிறார்கள்...ஆனால் அந்தக் கட்சி மட்டும் அழியாதாம்  ஏன் எனில் அது தானாகவே அழிந்து விடும். ஜெவை அப்படித்தான் சொன்னார்கள், அவர் முடிவை காலம் நமக்கு காட்டிக் கொடுத்தது...இப்போது யார் யார் எல்லாமோ என்ன என்னவோ சொல்கிறார்கள்,ஜெவுக்கு வாரிசாக ஜெயக்குமார் என்ற இளைஞர் நீதிமன்றத்தில் சோபன்பாபுவுக்கும், ஜெவுக்கும் தாம் பிறந்த வாரிசு என்கிறார்,எம்.ஜி.ஆரின் அண்ணன் மகன் சந்திரன் என்பவர் கட்சி ஆரம்பித்துள்ளதாக செய்தி வருகிறது, ஜெ.தீபா மாடி மேல் இருந்து கொண்டு,தமது அடிமைகளுக்கு காட்சி கொடுக்கிறார், அவரது கணவர் ஒரு புதிய கட்சி ஆரம்பித்துள்ளதாக சொல்கிறார்,

Image result for election RK nagar 2017

ஜெ.தீபாவும், ஓ.பி.எஸ்ஸும் அடிக்கடி ஜெ சமாதியை போதி மரம் என நினைத்துக் கொண்டு புத்தராக நினைக்கிறார்கள், ஜெவோ குற்றவாளி எண் ஒன்று, உச்ச நீதிமன்றத்தில் தண்டனை தரும் முன்னே இயற்கை தந்த தண்ட்னையைப் பெற்று தாக்குப் பிடிக்க முடியாமல் நிரந்தர முதல்வர் என்றவர் நிரந்தரமாக நீளா மீளா துயில் கொண்டு விட்டார்,

சசி கலா என்றார்கள் அவர் உள்ளே இருந்து வெளி வரமுடியாமல் தமிழகத்து சிறைக்கு வர முயற்சிக்கிறார், இவருக்கு பதிலாக லகானை கையில் வைத்துக் கொண்டு எடப்பாடியை ஆட்டி வைக்க சசிகலா நியமித்த டி.டி.வி. தினகரன் இவர் அ.இ.அ.தி.மு.கவால் பாரளுமன்ற இராஜ்யசபாவுக்கு எம்.பியாக நியமிக்கப் பட்டவராம், என்.ஆர்.ஐ, கார் வழக்கு எல்லாம் இருக்கிறதாம், ஆனால் இராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் இவர்தாம் எடப்பாடியார் கட்சியின் வேட்பாளராம், இப்போதைக்கு எடப்பாடியாருக்கு போட்டியாக முதல்வராக வர மாட்டேன் என  உறுதியாக உரை நிகழ்த்துகிறார், எடப்பாடி நெற்றியில் வைக்கும் திருநீர் நிரந்தர முதல்வராக வேண்டி குலதெய்வத்திடம் வேண்டி வைப்பதாக கட்சியினர் வத்தி வைத்து அதை இவர் விசாரித்து எடப்பாடியார் அதை வைக்காமலே இரண்டு கூட்டத்தில் கலந்து கொண்டார் என்ற செய்திகளும் வருகின்றன‌

Image result for deepa jayalalitha

மக்கள் நலக் கூட்டணி உடைந்து கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை இராதாகிருஷ்ணன் நகரில் நிறுத்துகிறது, பா.ம.க வு நிற்கவில்லை எனச் சொல்லிவிட விஜய்காந்த் கட்சி பிரேமலதாவை நிற்கச் சொல்ல அவரோ யாரோ வேறு ஒருவரை நிற்கச் சொல்லி விட்டார், மதுசூதனன் ஓ.பி.எஸ் கட்சியாம், மருது கணேஷ் என்பார் தி.மு.கவாம், இவர்கள் எல்லாம் இல்லாமல் எத்தனை பேரோ என்ன வெல்லாம் கூத்தோ?

சொல்ல மறந்தே விட்டது பெரிய வேட்பாளராக இந்தியாவின் பெரிய தேசியக் கட்சியின் வேட்பாளராக‌ பி.ஜே.பி கங்கை அமரனை நிறுத்துகிறது.
என்ன வென்று சொல்ல இந்தக் கெட்ட காலத்தை ஆர்.கே நகர் ஏற்கெனவே ஒரு முதல்வர் வேட்பாளரை வேறு கொன்றிருக்கிறது 6 மாதம் ஆவதற்குள்ளே, இந்த தேர்தல் மூலம் எத்தனை பேரை பலி வாங்கப்போகிறதோ ஐ மீன் ஒருவர் தானே வெல்ல முடியும்? மற்றவர் எல்லாம் தோற்றுதானே ஆக வேண்டும் அதைத் தான் சொன்னேன்...

இந்நிலையில் இரட்டை இலை உண்டா இல்லையா என்பது 22 ஆம் தேதியில் அல்லது அதன் பிறகு எடப்பாடியா ஓ.பி.எஸ் கட்சிகளுக்கா என்பதை முடிவு செய்ய புதிய தேர்தல் கமிஷனரை தி.மு.க போன்ற கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு செவி சாய்த்து தேர்தல் ஆணையம் அல்லது அரசு நியமித்ததாக செய்திகள்...

ஏப்ரல் 12 தேர்தல் அதற்குள் எத்தனை ஆட்டம் பாட்டமோ? அசிங்கங்களின் தெறிப்புகளோ? அடுத்த நாள் தெரியும் யார் அதிகம் செலவு செய்தார் என...இதுதான் தேர்தல், இதுதான் மக்களாட்சி...ஆனால் இவர்களுக்கு எவருக்குமே தேர்தலில் நிற்கவோ மக்களை ஆளவோ மக்களுக்கு சேவை செய்யவோ ஒரு தகுதியும் இல்லை என்பதுதான் உண்மை...

இந்த என்.ஆர்.ஐ தினகரனுக்கு தேர்தலில் நிற்கவே தகுதி இல்லை என்கிறார்கள் இதெல்லாம் எப்படி முடிகிறது என்று பார்ப்போம்...

இனியும் தமிழக மக்கள் யார் மக்களுக்கு சேவை செய்வார் எனப் பார்த்து வாக்களிக்கும் கடமையை ஒழுங்காக நிறைவேற்ற வில்லை எனில் ஜனநாயகமும் தேர்தலும் ஒரு பயனையும் விளைவிக்கப் போவதில்லை.

From this Election onwards D.M.K will re - starts its career again..I think that is different...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

இதைப் பற்றி எல்லாம் எழுத வேண்டும் என்கிறார்கள், நான் இதைப்பற்றி எல்லாம் எழுத விரும்புவதே இல்லை, குற்றவாளி சமூகம், குற்றவாளிப் பிரதிநிதிகள் எல்லாம் இப்படி ஆன பின் இரோம் சரிமிளா போன்றோர் 90 வாக்கு பெற்றதே அதிகம்தானே? தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவே இப்படித்தான் இருக்கிறது..உ.பிக்கு இன்று ஆதித்யநாத் என்ற இந்து மத பி.ஜே.பி துறவி துறவியா, மதம் சார்ந்த ஒரு சார்புடைய மனிதரா, இவர் முதன் மந்திரி ஆகி இருக்கிறார் இந்தியாவின் மாபெரும் முக்கியமான இருதயம் போன்ற மாநிலத்தில்...ஆக அரசியலும், நாடும் ஒரு வழியாகிக் கொண்டிருக்கிறது. மோடியும் தி.மு.கவும், அ.இ.அ.தி.மு.கவும் தேர்தலில் வெல்வது எப்படி எனக் கற்றுக் கொண்டுள்ளனர்.ஆனால் மக்களுக்கு எந்த பயனும் இன்றி ஜனநாயகம் நகர்ந்து கொண்டிருக்கிறது.

Saturday, March 18, 2017

மேல் மருவத்தூர் அம்மாவாடா, இதுதான் அம்மா செய்யற வேலையாடா? கவிஞர் தணிகை

மேல் மருவத்தூர் அம்மாவாடா, இதுதான் அம்மா செய்யற வேலையாடா? கவிஞர் தணிகை.

Image result for melmaruvathur amma

இந்த நாட்டில் அம்மாக்கள் பெற்றவரைத் தவிர மற்றவர் அதிகம். அதில் ஒரு அம்மா இல்லை அம்மாக்கள் பங்காரு  என்பவரும், அவரது மகன்களும் அவரது குடும்பமும்..


Image result for melmaruvathur amma

ஏற்கெனவே மருத்துவ கல்லூரி என்றுதான் நினைக்கிறேன் மறந்து விட்டது, அங்கீகாரம் கோரிய விஷயத்தில் கையும் களவுமாக இலஞ்சம் கொடுத்தவரும், வாங்கியவருமாக இந்த மேல்மருவத்தூர் அம்மாக்கள் வழக்கு அளவில் செய்தி ஊடகங்களில் செய்தி அலை பாய்ந்து கொண்டிருந்தது.
Image result for melmaruvathur ammaRelated image

Related imageRelated image


அம்மாக்கள் சும்மாவா விட்டிருப்பார்கள், என்ன செய்தாரோ, ஏது செய்தாரோ, அரசும் அடிமைகளும் அதாங்க இலஞ்சம் ஊழல் அடிமைகளும் இருக்கும் வரை இது போன்ற அம்மாக்கள் வெளிவருவது கஷ்டமா என்ன? ஜெயலலிதாவை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு சொன்னபிறகும் குற்றவாளி அம்மாவை தியானபீடத்தில் ஏற்றி வைத்திருக்கிறார்கள் ஒரு அம்மா கூட்டம்

அது போல இந்த அரசுகள் இருக்கும் வரை , இப்படிப்பட்ட அரசியல் தமிழகத்தை சீரழிக்கும் வரை, குமாரசாமி போன்ற நீதிபதிகள் இருக்கும் வரை இந்த அம்மாக்கள் வெளிவருவதில் எந்த கஷ்டமும் இல்லையே...

இப்போது அந்த விஜய் என்னும் திருநெல்வேலி மாணவரை அடித்து அவர் மருத்துவமனையில் அனுமதி, காவல் துறை நிர்வாகியை தேடி வருகிறதாம்..

பெற்றவருக்குத்தானே பிள்ளையின் அருமை தெரியும், நீங்கள் எல்லாம் அம்மாவாடா, அம்மா என்றால் சும்மா இல்லைடா, பால் வரும் பெற்ற பிள்ளைக்கு தாய்ப்பால் ஊற்றி வளர்க்க.... உங்களுக்கு எது எங்கடா வருது? பார்த்து தெரிந்து கொண்டு அதன் பிறகு நீங்க அம்மாவா இல்லை ஆட்டுக்குட்டியா என்பது பற்றி முடிவு செய்து கொள்ளுங்கள்...

விஜய் என்ற மாணவரை தாக்கிய இந்த மேல்மருவத்தூர் கூட்டத்தை வன்மையாக கண்டிக்கவே இந்த பதிவு. இவர்களை எல்லாம் தூக்கி உள்ளே வைத்து இவர்கள் நடத்தி வரும் அத்தனை அறக்கட்டளை அமைப்பையும் அரசே உடனே எடுத்துக் கொள்ள வேண்டும், அதுதான் நீதி, சட்டம் இருக்கும் நாட்டில் செய்யப்பட வேண்டியவை.

Image result for melmaruvathur amma


ஆனால் இந்த நாட்டில் ஏதாவது அப்படி இருக்கிறதா என்ன?

மறுபடியும் பூக்கும் வரை

 I request Podhigai TV may investigate this news and telecast about it...

கவிஞர் தணிகை.

Wednesday, March 15, 2017

லோகனும் யாக்கையும் மாநகரமும் : கவிஞர் தணிகை

லோகனும் யாக்கையும் மாநகரமும் : கவிஞர் தணிகை

Image result for logan review

ஆங்கிலப் படங்கள் ஒன்று பிரமிப்பூட்டும் விதத்தில் இருக்கும், அல்லது சிறுவர் சிறுமியரை மையப்படுத்தி இருக்கும், அல்லது அறிவியல் பூர்வமாக இருக்கும்..

லோகன்: தமிழ் டப்பிங் வசனத்துடன் நன்றாக செய்யப் பட்டிருக்கிறது. அந்த அதி வேக சிறுமிதான் மையக் கதையை நகர்த்தி செல்கிறார் நியூட்டன் என்ற மனித இனத்தை இந்த சிறுவர் சிறுமியைக் கொண்டு உருவாக்குகிறார்கள். பின் அவர்களும் வேண்டாம் என அதை விட அதிக சக்தி படைத்த ஒரு படைப்பை உருவாக்கி விடுவதால் இந்த நியூட்டன் சிறுவர் சிறுமிகளை கொன்று விட அந்தக் கூட்டம் துரத்துகிறது .அந்தக் கூட்டத்திலிருந்து லோகன் தனது மகளை எப்படி காப்பாற்றுகிறார், லோகனின் குரு அதற்கு எப்படி உதவுகிறார், லோகன் தம் குருவுக்கு எப்படி உதவுகிறார் மேலும்

வெயில் அல்லது வெளிச்சம் பட்டாலே அழியும் இனமாக லோகனின் உதவி செய்யும் பாத்திரம், ஒவ்வொரு சிறுவர் சிறுமியரும் ஒவ்வொரு சக்தி, புகை விடுதல், நார்க் கொடியால் கட்டுதல், மேலே தூக்கிச் செல்ல, கீழே இறக்கிவிடல் இப்படி பலவகை வித்தைகளை தம்முள் வைத்திருக்கும் இந்த அரிய சிறுவரை படாத பாடு படுத்தி வைக்கும் கூட்டம்.

இந்தப் படம் கல்லூரி மாணவ மாணவியருக்கும், சிறுவர் சிறுமியர்களுக்கும் அரிய படமாகவே இருக்கிறது. ஒரு காமிக்ஸ் புத்தகம் படிக்கும் சுவாரஸ்யத்துடன்.

Image result for yaakkai


யாக்கை: உடல், மனித உடலின் எல்லா உறுப்புகளையும் விற்கலாம், ஏன் இரத்தத்தையும் விற்க கொலையும் செய்யலாம் என்னும் மையக்கருவுடனான கதை. பிரகாஷ்ராஜ் நல்ல போலீஸ் ஆபிசராக மிடுக்குடன் அளவுடன் கொலைகளை இன்வெஸ்டிகேட் செய்கிறார். செல்வா சுப்ரமணியபுர கதாநாயகி ஸ்வாதி ரெட்டி இருவரும் நன்றாகவே கல்லூரி மாணவ மாணவியராகவும் காதலராகவும் செய்துள்ளனர். கடைசியில் காதலியின் கொலையை பிரிவை தாக்கு பிடிக்க முடியாமல் யார் இதற்கு காரணமோ அவர்களை எல்லாம் கொலை செய்கிறார் ஈவு இரக்கமின்றி சுத்தியலால் தலையில் அடித்தும்....

ஏற்றுக் கொள்ளக் கூடிய கதையாகவே எளிமையாகவே இருக்கிறது. இரத்தத்திற்காக அதன் தேவைக்காக மற்றவர்களை கொன்று பயனடையும் கூட்டம் இருக்கிறது என்பது கதையின் வல்லமையான சொல்.
Image result for maanagaramமாநகரம்: நல்ல திரக்கதை அமைப்பு. எல்லாம் புதிய இளையவர்களை வைத்தே கதை நகர்த்தப் பட்டிருக்கிறது. சென்னை மாநகரம் வந்தாரை வாழவைக்கும் என்ற கருவுடன்.

சார்லி இயல்பாக நடிக்கிறார். கிராமத்திலிருந்து நகரத்துக்கு காதல் வெற்றி பெற வரும் ஒரு நல்ல இளைஞருக்கு என்ன என்ன பாதிப்புகள், காதலியை அடைய என்னவேண்டுமானாலும் செய்யத் துணிந்த வலுவான இளைஞர்க்கு நேர்ந்த பாதிப்பு, சிறுவன் கடத்தல் என பல தளங்களில் படம் பிரவேசித்து புகுந்து சென்றாலும் தெளிவாக கடைசியில் ஒருங்கிணைத்து விடுகிறார்கள். யாரோ செய்த தவறுக்கு இந்த கிராமத்து இளைஞர் தண்டனை பெறுவதும், சாலையில் அடித்து வீழ்த்தப் படுவதும், காவல் நிலையம் செல்வதும் நமக்கே நல்ல பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது.

குறைவான பொருட்ச் செலவில் நிறைவான படமாக இதை சொல்லலாம்.
நாம் முன் சொன்ன 3 படங்களும் குற்றம் 23 படமும் பார்க்கலாம் என்ற வரிசையில் நிற்கிறது. குற்றம் 23, மாநகரம் ஆகியவை நல்ல வரவேற்பை பெற்றுள்ளன என்றும் யாக்கை அந்த அளவு போகவில்லை என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும் நல்ல நோக்கம் நல்ல தெளிவான கதை அமைப்பு. முதலுக்கு மோசமில்லை.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.


Sunday, March 12, 2017

சேலம் 5 ரோடு: கவிஞர் தணிகை

சேலம் 5 ரோடு: கவிஞர் தணிகை
In Tamil Nadu Salem stood 6th place in city line.
Related image

முன் ஒரு காலத்தில் அதாவது 1980களில் சேலம் 5 ரோடு சேலத்து டவுனிலிருந்து வெளியில் இருந்தது இன்று இதுதான் சேலத்தின் மையப்பகுதி.சேலத்தில் இருந்தது அன்று ஒரே நகர பேருந்து நிலையம், இன்று டவுன் பஸ் ஸ்டேன்ட் எனச் சொல்லப்படுவது நகர் பேருந்துகளும், வெளியூர் பேருந்து களும் நகர இடமின்றி பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் வெளியேறவே அரை மணிக்கும் மேலான நிலையைப் போக்கி பேறு பெற்றது தற்போதைய பாரத ரத்னா எம்.ஜி.ஆர் மத்திய பேருந்து நிலையம்.

 இது வெளியூர் பேருந்துகளுக்கும், பழைய பேருந்து நிலையம் நகர பேருந்து நிலையங்களுக்கும் என்று பிரித்து போடப்பட்டது அந்தக் காலம் மலையேறி இன்று சேலத்தில் இரண்டு அடுக்கு பால வேலைகள் நடைபெற்று வருவதில் சேலம் அடுத்த கட்ட பரிமாணத்திற்கு செல்கிறது.

சேலத்து வியாபாரிகள் சேலத்து பேருந்து நிலையத்தை  மாற்றுவதற்கு இல்லாமல் வழக்கிட்டு ஸ்டே வங்கியபடியே இருந்தனர். எமது நண்பர் எம்.எப். ஃபாருக்கி கலெக்டராக இருந்த காலக் கட்டத்தில் நள்ளிரவில் அர்ச்சுவான் ஏரிக்கு வெளியூர் பேருந்து நிலையத்தை மாற்றினார் மார்ச்சிங் செய்து நடந்தே சென்று துவக்கி வைத்தார். நல்லது செய்தார்.

அது முதல் அந்த பேருந்து நிலையம் வெகுவாக இயங்கி வர, அதனருகே இருக்கும் ஐந்து வழி சாலையும் பெரும் முக்கிய பங்கு வகிக்க ஆரம்பித்து விட்டது அது எந்தவிதமான துறை சார்ந்த வியாபாரம், பணிகளானாலும் இப்போது போக்குவரவில் 5 வழிச் சாலையை மையப்படுத்தி நடந்தேறி வருகிறது.

காலை வந்து பார்த்தால் இந்த கட்டுமானப் பணியாளர்கள் இங்கு தயாராக இருப்பார்கள். சில்லறை வேலைக்கு அவர்களை அங்கேயே பேசி அழைத்துக் கொள்ளலாம், அழைத்துச் செல்லலாம்.\


Image result for salem city and 5 roads
இன்னொரு பெரிய விஷய்ம் என்ன வெனில், இந்த 5 வழிச்சாலை 2 கி.மீ அருகே சேலம் ரயில் சந்திப்பும் இருப்பது. அது மட்டுமின்றி இப்போது இந்த 5 வழிச்சாலை இப்போது இரு அடுக்கு பால வேலைகளில் பெரும்பங்கு வகிக்கிறது. ஒரு வழி வந்து இரண்டாய் பிரிந்து போவதாக ....நல்ல டிசைன்.பெரும்பாலும் பயணிகளுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு இன்றி இந்தப் பணிகள் நவீன தொழில் நுட்பத்துடன் வெகு விரைவாக நடந்து வருகிறது.

இந்தப் பணிகளை இன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சம்பந்தி என்னும் இராமலிங்கம் என்பாரின் மதுரை சார்ந்த இன்ஃப்ரா என்ற  கம்பெனியே ஒப்பந்ததாரராக இருந்து செய்து வருகிறது.

சேலம் ஸ்மார்ட் சிட்டி என்ற மத்திய அரசின் திட்ட ஒதுக்கீட்டின் படி பல்லாயிரக்கணக்கான கோடிகள் இந்த சேலத்து நகர்புற மேம்பாட்டுக்கு செலவிட இருப்பதாகவும் அதில் பல நூறு கோடிகள் இந்த பாலத்திட்டப் பணிகளுக்கும் ஒதுக்கப்படுகிறது.

மேலும் சேலம் ரெயில்வே கோட்டம் இதனருகில் இருப்பது இதன் முக்கியத்துவத்தை மேலும் கூட்டுகிறது. சேலம் என்றாலே சைலம் மலைகள் அடர்ந்த பகுதி. அதில் 5 வழிச் சாலை சரித்திரம் சொல்லி வருகிறது.

சென்னைக்கு கத்திப்பாரா போல இந்தப் பாலம் கட்டி முடிக்கப்பட்டால் சேலம் 5 ரோடும் ப்ளை ஓவரில் பறக்க வைத்திடும் பயணங்களை, சிட்டிக்குள் நுழையத் தேவையில்லாதாரை விரைவாக சிட்டியை தாண்டிச் செல்ல தாண்டிச் சொல்ல...

ஒரு காலத்தில் தியேட்டர்களுக்கென்றே புகழ் பெற்றிருந்த இந்த நகரம் இப்போது நிறைய தியேட்டர்களை இழந்து விட்டது, நிறைய மண்டபங்களை கூட இழந்து எல்லாமே சாப்பிங்க் காம்ப்ளக்ஸ் மால்களாக மாற்றி வைத்துள்ளது.

Image result for salem city and 5 roads

இந்த சாலையருகே வரும்போது பிறந்த குழந்தைகளுக்கு பஞ்சமூர்த்தி என்ற பேரும் வைக்கப்படுகிறது. எப்போதும் ஜனத்திரள் உள்ள பகுதி, நாலுரோடு பகுதி போல இந்தப் பகுதியில் பிக்பாக்கெட் ஜோன் ஏதும் கிடையாது. இது என் வாழ்வில் ஒன்றாகி விட்ட ஒன்றாகிவிட்டது.

கடந்த ஒராண்டாக இந்த 5 வழிசாலையை தினமும் சந்திக்கிறேன், விடுமுறை நாள் தவிர, பேருந்து நிலையத்தை விட சுத்தம் அதிகம் ஆனாலும் ரத்னா காம்ப்ளக்ஸ் அருகே உள்ள பெரிய சாக்கடையில் பிளாஸ்டிக் கழிவுகளுக்கு பஞ்சமில்லை. நகரியம் இதை எல்லாம் கண்டு கொண்டதாக தெரியவில்லை. எப்போதாவது ஒரு முறை சுத்தம் செய்வதையும் கண்டதுண்டு, ஆனால் அதன் மறு நாளே அந்த சாக்கடை அப்படியே பிளாஸ்டிக் கழிவுகளின் மேற்பரப்புடனே காட்சி அளிக்கும்.

அதிகாலை சுமார் 6.30 மணியளவில் அங்குள்ள ஒரு ரத்னா காம்ப்ளக்ஸில் எனது சாப்பாட்டு குடிநீர் பையை மாட்டி விட்டு 15 நிமிடம் அந்த சாலையின் வேகத்தை நிதானமாக அவதானித்துக் கொண்டிருப்பேன். ஒரே இயக்கம். ஒரே வேகம்.( Salem பேருந்து நிலையத்தில்    முடை நாற்றம் அதிகம், மேலும் பை மாட்ட எந்த ஒரு கேட்டும் கிராதிக் கம்பிகளும் லகுவாக உதவிகரமாக இருப்பதில்லை)

சென்னை செங்கல்பட்டு, காஞ்சீபுரம் வரை விரிவடைந்து வருவது போல இன்றைய  சேலமும், தனது பரப்பை அதிகரித்தபடியே எல்லா சாலைகளிலும் எடுத்துக் காட்டாக இந்த 5 வழிச்சாலையின் நீட்சி, குரங்குச் சாவடி, சேலம் ஸ்டீல் பிரிவு ரோடு, முனியப்பன் கோயில், ரேடிசன் மாமங்கம், என விரிந்து கொண்டபடியே இருக்கிறது...அது போலவே எல்லா வழிகளிலும்...மேட்டூர் சாலையைப் பொறுத்தவரை மணிப்பால் மருத்துவமனை வரை விரிந்து சுங்கச் சாவடி வரை கூட ஒரு நாளுக்கு வந்து விடலாம்.... சேலத்தை இப்படி 5 வழிகளில் தொட இந்த 5 வழிச்சாலை உதவுகிறது. இதை அடுத்துத்தான் 4 ரோடு, 3 ரோடு எல்லாமே..Related image

மறுபடியும் பூக்கும் வரை
மறுபடியும் பார்க்கும் வரை

சேலத்து 5 தலை நாக வழிச் சாலையுடன்
சேலத்து 5 தலை நரக வழிச் சாலையுடன்
சேலத்து 5 தலை நகர வழிச் சாலையுடன்

கவிஞர் தணிகை.

Related image

Saturday, March 11, 2017

இதுதான் இந்தியா: அந்த 90 பேரை வாழ்த்தி வணங்குகிறோம். கவிஞர் தணிகை

இதுதான்  இந்தியா: அந்த 90 பேரை வாழ்த்தி வணங்குகிறோம். கவிஞர் தணிகை

இந்த நாட்டில் தியாகத்துக்கு எவ்வளவு மதிப்பு இருக்கிறது என்பதற்கு இந்த இரோம் சர்மிளாவின் தேர்தலில் பெற்ற வாக்குகள் ஒரு அடையாளம், மேலும் சசிபெருமா ள் மது விலக்குப் போராளியின் மூத்த இயக்க நண்பர் சின்ன பையன் நமது சேலம்  வடக்குத்  தொகுதியில் பெற்ற வாக்குகள் நல் அடையாளம். சின்ன பையனும் சசிபெருமாளும் நம்மிடையே இல்லை. இந்த இரோம் சர்மிளா இருக்கிறார்.

சின்னபையனுக்காவது எமது இயக்க பிரச்சாரங்கள் சுமார் 860க்கும் மேலான வாக்குகள் பெற்றுத் தந்தன.ஆனால் இந்த இரோம் 16 வருடம் நல் கோரிக்கைக்காக உண்ணா நோன்பிருந்து வெறும் 90 வாக்குகள் பெற்று இனி அரசியலில் கலந்து கொள்ள மாட்டேன் என விலகுவது இந்தியாவின் நிலையை தெள்ளத் தெளிவாக படம் பிடித்துக் காட்டுகிறது. சேவைக்கும் நல் கொள்கைக்கும் எவ்வளவு மதிப்பு இருக்கிறது என்பதை சொல்லாமல் சொல்லி இருக்கிறது. அந்த 90 பேரை வாழ்த்துவோம். வணங்குகிறோம்.news follows:

90 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வி: அரசியலில் இருந்து விலகுவதாக இரோம் ஷர்மிளா அறிவிப்பு

irom


மணிப்பூர் பேரவைத் தேர்தலில் வெறும் 90 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்த சமூக சேவகி இரோம் ஷர்மிளா, அரசியலில் இருந்து விலகப் போவதாக அறிவித்துள்ளார்.
தற்போதைய அரசியல் நடைமுறைகளைக் கண்டு தாம் விரக்தியடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மணிப்பூரில் அமலில் உள்ள ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கடந்த 16 ஆண்டுகளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார் இரோம் ஷர்மிளா.
இதையடுத்து, அவர் மீது தற்கொலை முயற்சி உள்பட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்நிலையில், உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடுவதாக அண்மையில் அறிவித்த இரோம் ஷர்மிளா தீவிர அரசியலில் இறங்கினார். மக்கள் எழுச்சி மற்றும் நீதிக் கூட்டணி என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கிய அவர், மணிப்பூர் சட்டப் பேரவைத் தேர்தலில் மாநில முதல்வர் இபோபி சிங்கை எதிர்த்து தெளபால் தொகுதியில் போட்டியிட்டார்.
மாநிலப் பேரவைத் தேர்தல் முடிவுகள் சனிக்கிழமை அறிவிக்கப்பட்ட நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அந்தத் தொகுதியில், வெறும் 90 வாக்குகளை மட்டுமே பெற்று இரோம் ஷர்மிளா படுதோல்வியடைந்தார். இதனால் அதிருப்தியடைந்த அவர், அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக, இம்பாலில் செய்தியாளர்களிடம் இரோம் ஷர்மிளா சனிக்கிழமை கூறியதாவது:
தற்போது உள்ள அரசியல் நடைமுறைகள் மனவிரக்தியைத் தருகின்றன. இதன் காரணமாக தீவிர அரசியலில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன். அரசியல் ரீதியாக தோல்வியடைந்தாலும், சமூக சேவகராக எனது பணிகள் தொடரும்.
ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்யும் வரை எனது போராட்டம் முடிவடையாது. தற்போது எனக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவில் இருந்து மீண்டு வரவும், மன நிம்மதிக்காகவும், சில நாள்களுக்கு தென்னிந்தியாவில் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளேன் என்றார் அவர்.

5 மாநில சட்டமன்றத் தேர்தலில் கோவாவில்தான் அதிகமான நோட்டா ஓட்டுகள் பதிவாகியுள்ளன. கோவாவில் 1.2 சதவிகித ஓட்டுகள், நோட்டாவுக்கு பதிவாகியுள்ளன. உத்தரகாண்டில் 1 சதவிகிதம், உத்தரப் பிரதேசத்தில் 0.9 சதவிகிதம், பஞ்சாபில் 0.7 சதவிகிதம், மணிப்பூரில் 0.5 சதவிகித ஓட்டுகளும் நோட்டாவுக்கு கிடைத்துள்ளன.

உ.பி தேர்தல் ... சிறையில் இருந்த படியே வென்ற கொலை குற்றவாளி

உத்தரப்பிரதேசத்தில் மனைவியை கொன்ற வழக்கில் கைதானவர் சுயேட்சையாக தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.


சுயேட்சை வேட்பாளராக நவுடன்வா தொகுதிகளில் அமன்மணி திரிபாதி என்பவர் போட்டியிட்டு 80 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இவர் தம்மை எதிர்த்து போட்டியிட்ட சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளர் குன்வர் கவுசல் கிஷோர் சிங்கை தோற்கடித்துள்ளார். அமன்மணி திரிபாதிக்கு முதலில் சமாஜ்வாதி கட்சியில் போட்டியிட சீட் கொடுக்கப்பட்டது. ஆனால் அகிலேஷ் யாதவ் அமன்மணி திரிபாதிக்கு கொடுத்த வாய்ப்பை பறித்துவிட்டார். இதனிடையே மனைவியை கொன்று நாடகமாடிய வழக்கில் அமன்மணி சிக்கினார். அவர் சிறையில் இருந்தபடியே தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டார். தற்போது பிரசாரம் செய்யாமலேயே அமன்மணி வென்றிருப்பதும் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. குறிப்பாக அகிலேஷ் யாதவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

OUR VOTING SYSTEM PROVED AS CORRUPT.
மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை

நன்றி: தினமணி.

Thursday, March 9, 2017

விநாயகா மிஷன் சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரியின் பல் மருத்துவ முகாம்கள் : கவிஞர் தணிகை

விநாயகா மிஷன் சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரியின் பல் மருத்துவ முகாம்கள் : கவிஞர் தணிகை

1. மயூரப்பிரியா மழலையர் மற்றும் துவக்கப்பள்ளி ‍‍வீரபாண்டி

2. மயூரப்பிரியா மழலையர் மற்றும் துவக்கப்பள்ளி மணியனூர்

3. அக்கரைப்பாளையம் அரசினர் ஊராட்சி ஒன்றியப் பள்ளி எனப்படும்
    ராமைய்யா நிதி உதவிப் பள்ளி
ஆகிய 3 ஆரம்பப் பள்ளிகளிலும் விநாயகா மிஷன் சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரியின் பல் பரிசோதனை முகாம்கள் சீரிய முறையில் நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் டாக்டர் ஜா.பேபிஜான் அவர்கள் அனுமதியின் பேரில் நடைபெற்ற இந்த முகாம்கள் நடைபெற சமுதாய மேம்பாட்டுத் துறைத்தலைவர் டாக்டர் என்.சரவணன் வழிநடத்தினார்.

சுமார் 300 பள்ளிக் குழந்தைகளும், பொதுமக்களும், ஆசிரியர்களும் பயன்பெற்றனர் .இவர்களுக்கு டாக்டர் துர்கா மற்றும் 15 மருத்துவர்கள் கொண்ட குழு தமது அரிய சேவையை ஆற்றியது. இந்திய பல் மருத்துவக் கழகம், மற்றும் கோல்கேட் கம்பெனி சார்பாக அரசு துவக்கப்பள்ளிக்கு பேஸ்ட் பிரஸ்களும் வழங்கப்பட்டன.மேலும் பற்பராமரித்தல், சுத்தம் செய்தல் பற்றிய அறிவுரைகள் வழங்கப்பட்டன. முகாமுக்கு உறுதுணையாக அந்த அந்தப் பள்ளி ஆசிரியர்களும் மயூரப்பிரியா பள்ளியின் தாளாளர் பி.வி .தாமோதரன் அவர்களும் இருந்தனர். அக்கரைப்பாளையம் பள்ளியின் தலைமை ஆசிரியை மல்லிகா மற்றும் துணை ஆசிரியரும் கலந்து கொண்டனர். உதவிக் கல்வி அலுவலர் அன்பழகன் தமது ஆதரவை தொலைப்பேசி மூலம் தெரிவித்தார்.

Displaying 20170303_103229.jpg

எமது கல்லூரியின் முதல்வர், துறைத்தலவர் ஆகியோரின் பெயரைக் குறிப்பிட்டும் எனது அனுபவக் கோவையை இணைத்தும் இந்தப் பள்ளிக் குழந்தைகளும் ஆசிரியர்களும் பயன் பெறும் முறையில் எனது நல்லுரை நிகழ்த்தப்பட்டது.அக்கரைப் பாளையம் துவக்கப்பள்ளி முகாம் நடைபெற நமது ஓரல் மெடிசன் துறையில் ஊடுக்கதிர் பிரிவில் பணிபுரியும் சக்திவேல் பெரிதும் ஆர்வம் காட்டினார் அது அவரது கிராமம் என்பதால்.


Displaying 20170303_104751.jpg
 முதல் முறை வந்து நமது முகாம்களில் கலந்து கொள்ளும் பயிற்சி மருத்துவர்கள்  முகாம்களை பெரிதும் தமது விருப்பத்தை தெரிவித்தனர். மலேசியாவில் இருந்து இங்கு வந்து பயின்று இன்னும் சிறு கால அளவில் மருத்துவர்களாக திரும்ப இருக்கும், டாக்டர் லின்,டாக்டர் மஞ்சித் டாக்டர் கிருத்திகா, டாக்டர் கீர்த்தனா..போன்றோரும் டாக்டர் மஞ்சு போன்றோரும் முகாமை நல் அனுபவமாக்கிக் கொண்டனர்.பல் மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு மார்ச் 6 அன்று கல்லூரி வளாகத்தில் துறைத்தலைவர்கள் முன்னிலையில் மரக்கன்றுகளை நடும் நிகழ்வு நடைபெற்றது.

Displaying 20170303_104846.jpg


கன்சர்வேட்டிவ் அல்லது என்டோ எனப்படும் பற் பாதுகாப்புத் துறையின் சார்பாக நடைபெற்ற நிகழ்வுகளில் பாரப்பட்டியில் உள்ள ஜீவா பப்ளிக் ஸ்கூல் சி.பி.எஸ்.சி மாணவர்கள் பெரிதும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

Displaying 20170303_104909.jpg


மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Displaying 20170303_105021.jpg

Displaying 20170303_105744.jpg

Displaying 20170303_105751.jpg

Displaying 20170303_104751.jpg

Displaying 20170303_103237.jpg


Displaying 20170303_101523_Burst01.jpg
Wednesday, March 8, 2017

குற்றம் 23: கவிஞர் தணிகை

குற்றம் 23: கவிஞர் தணிகை


Related image

23 குரோம்சோம்களின் எண்ணிக்கையைக் குறிக்கும். செயற்கை முறை கருத்தரித்தல், கருவூட்டல் என்பார் கால்நடைகளுக்கு, அது விந்து தானத்தில் வந்து இந்த உலகில் அந்த விந்து விற்பனை நல்ல மதிப்பு மிக்க சந்தையை உலகில் கொண்டு வந்திருக்கிறது என்பதை நல்ல திரைக்கதையுடன் சொல்லும் படம்.

அருண் விஜய்க்கு இது ஒரு சொல்லிக் கொள்ளும் படம்.மஹிமா நம்பியார் சரியாக செய்திருக்கிறார் நடிப்பதாகத் தெரியாமல் இயல்பாக செய்திருக்கிறார்.தம்பி இராமய்யாவுக்கு வெற்றி மாறன் ஐ.பி.எஸ் என்கிற அருண் விஜய்க்கு துணை செய்யும் காவல் துறைப் பாத்திரம் சோபித்திருக்கிறார்.


நல்ல கதை தேர்வு இராஜேஸ்குமாரின் கதை. படத்தின் முக்கால் பாகம் நன்றாகவே பார்க்கும்படி செய்யப்பட்டிருக்கிறது. அறிவியல் தொழில் நுட்பம் விளக்கும் கடைசிக் கட்டத்தில் கொஞ்சம் அதிகம் காட்சிகளும், இன்னும் எளிமைப் படுத்தி தெளிவாக விளங்கும்படி செய்திருக்கலாமோ என்று தோன்றுகிறது.

அதாவது புருஷனின் விந்தணுவை வாங்கிக் கொண்டு வயிற்றில் வளர்க்க முடியாமல் வேறு அந்நிய நபர்களின் விந்தணுவை வாங்கி வயிற்றில் வளர்ப்பது பற்றிய சர்ச்சை. அதைப்பற்றி பிளாக் மெயில் செய்வது அதை உலகுக்கும், ஊருக்கும், உறவுக்கும், உற்றாருக்கும் வெளிப்படுத்துவோம் என்று சொல்லி பெரும்பணத்தை மிரட்டி வாங்குவதாக 4 பேர் அடங்கிய நபர்கள் அதில் ஒருவர் மருத்துவம் தெரிந்த நபர்.

இதனிடையே மற்ற 3 பேருக்கும் காசு பணம் பேராசை என்றால் ஒருவருக்கு அவரின் விந்தணுவை வாங்கிக் கொண்ட பெண் அதை வளர்த்து பிள்ளையாகப் பெற்று வாழ வளர்க்க வேண்டும் இல்லையேல் கொலை என்ற நிலை.

இந்தப் படம் எல்லா தரப்பு சினிமா இரசிகர்களையும் எட்டி வெற்றி ஈட்டுமா என்பது சற்று சந்தேகமே. ஏன் எனில் அருண் விஜய் கதாநாயக வேடத்தில் அதுவும் ஐ.பி.எஸ் வேடத்தில் நல்ல படியாக செய்திருந்த போதிலும்,கதை நல்லபடியாக நகர்ந்த போதிலும், இறுதியில் சற்று காட்சிகளும் சொல்லிய கதையும் சற்று அழுத்தம் அதிகத்தை கொடுத்து விடுகிறது.

நன்றாக கற்று இந்த விஷயத்தில் தெளிந்து தேர்ந்தவர்களுக்கு ஏற்றுக் கொள்ளும் புரியும் படம். வெற்றி மாறனின் அண்ணி குழந்தை இல்லாதிருந்து நல்லபடியாக கருத்தரித்து விட்டாள் என்னும்போதே கதையை நாம் ஊகித்தறிய முடிகிறது. அதன் பின் கொலையின் பின்னணிகளும் எல்லா கொலை செய்யப்பட்ட பெண்களின் அறிக்கைகளும் 23 என்ற எண் நிழலாக பின் புலத்தில் இருப்பதும் கதைக்கு வலு சேர்க்கிறது
என்றே சொல்ல வேண்டும்.

துப்பறியும் கதை, சொந்த வாழ்வில் பின்னிப் பிணைந்து அறிவியல் கூறுகளை அள்ளித் தெளித்திருக்கும்படம்.மேலை நாடுகளில் விந்தணு வியாபாரம் நன்கு இருக்கிறதாம், விந்தணுவுக்கு நல்ல விலை கிடைக்கிறதாம்.

ஆனால் இப்படிப் பார்த்தால் எந்தப் பெண்ணுக்கு யாருடைய விந்தணு வேண்டுமோ அவர் விருப்பப் பட்டால் அதை வாங்கி பெற்றுக் கொள்ளலாம் என்றால் அறிவியல் விற்பன்னர்களும், சாதனையாளர்களும், தலைவர்களும் நல்ல விலைக்கு எதிர்பாராத விலைக்கு கனவிலும் நினைக்காத விலைக்கு தமது விந்தணுக்களை விற்க முடியுமே.

இந்த நாட்டில் இப்போதே 140 கோடி மக்கள் தொல்லை, எனவே இந்த ஒரு சிலரின் பிரச்சனையான குழந்தையில்லா நிலைக்கு தீர்வு சொல்வதாக விந்தணு தானம், வியாபரம் என்ற ஊக்குவிப்பு செய்வதை விட அனாதைகளை,  ஆதரவற்றாரை தத்துக்கு எடுப்பதும் கொடுப்பதும் தான் சமூக அளவில் சரியானத் தீர்வைத் தரமுடியும்.

Related imageசினிமா என்பதற்கு சரிதான்.

மற்றபடி பாடல் தயாரிப்பு பற்றி எல்லாம் பெரிதாக சொல்ல ஏதுமில்லை. நல்ல முறையில் முயற்சி செய்து தயாரிக்கப் பட்டிருக்கும்படம். எதற்காக கொலை செய்யப்படுகிறார்கள் இந்த விந்தணுவைத் தாங்கிய தாய்மார்கள் என்பதை இன்னும் தெளிவு படக் கூறியிருக்கலாம் எனத் தோன்றுகிறது.

கணவனது இல்லாமல் வேறொருவரின் விந்தை ஏற்கும் விஷயம் வெளியே தெரியாமல் இருக்க ப்ளாக் மெயில் செய்யப்பட்டு கொலை செய்யப்படுகிறார்கள் கட்டளைக்கு கீழ்ப்படியாமல் பிறரிடம் இந்த உண்மைகளை வெளிப்படுத்த முனைவரையும் அதைப்பற்றித் தெரியவருகிறவரையும் ....அந்த முதல் காட்சியில் சர்ச் பாதர்....கொலை செய்து விடுகிறார்கள் அதை  யார் செய்கிறார்கள் எதற்காக செய்கிறார்கள் என உண்மை கண்டறியும் காவல்துறை முயற்சி என சுருக்கமாக சொல்லி விடலாம்,

48 மார்க் கொடுக்கலாம்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.