Thursday, June 13, 2019

கண்களைக் கவனியுங்கள்: கவிஞர் தணிகை

கண்களைக் கவனியுங்கள்: கவிஞர் தணிகை


Image result for eyes cataract symptoms and operations


Image result for eyes cataract symptoms

மின்னல் கேந்திரங்கள் உன் விழிகள் மெய் ஞானப் புறப்பாடு உன் மௌனப் புன்னகை என்று எழுதினேன் உருப்படி இல்லாமப் போச்சு.

சத்தமில்லாமலே பேச முடியும் அன்பிருந்தால்
யுத்தமில்லாமலே ஜெயிக்க முடியும் அன்பிருந்தால்

அதுவும் உருப்படாமதான் போச்சு.

பொதுவாகவே ஒருவர் கண்களைப் பார்த்து பேசினால் அவர் உண்மை சொல்கிறாரா பொய் பேசுகிறாரா என்று கண்டறிந்து கொள்ளலாம் என்பார்கள். இப்போது அதெல்லாம் செல்லுபடியகா அளவில் பெரிய பெரிய ஆட்கள் எல்லாம் இருக்கிறார்கள் வந்துவிட்டார்கள் துளியும் எதையும் கண்களிலோ முகத்திலோ காட்டாமலே வித்தை காட்ட எல்லாம் தெரிந்து கொண்டு விட்டது மனித குலம்.

முகத்தையும் கண்களையுமே பார்த்து பழக்கப்பட்ட நல்ல குணம் எல்லாரிடமும் காணப்படுவதில்லை.

ஆனால் எண் ஜான் உடலுக்கு சிரசே பிரதானம், சிரசுக்கு கண்களே பிரதானம் அல்லது காவல் என்ற பழமொழி சில வடமொழி கலந்த வார்த்தைகளுடன் உண்டு.

கண்களற்ற ,மாற்றுத் திறனாளிகள் எல்லாம் எப்படி பிழைக்கிறார்கள் என்று நாம் சிந்திக்க நேரமற்று பறந்து கொண்டிருக்கிறோம்.

முதலில் கண்களில் நரை போல திரை விழுவதையும் தடுக்க முடியாது என்கிறார் கண் மருத்துவர்.

Image result for eyes cataract symptoms and operations


தாய்க்கு இந்நிலை வந்தபோது சாய்பாபா ட்ரஸ்ட் மூலம் இலவசமாக செய்கிறார்கள் கண்புரை நீக்கு அறுவை சிகிச்சை அவருக்கு தனியாக டோக்கன் எடுத்து வைத்து விடுகிறோம் அழைத்து வாருங்கள் என்றார்கள். 10 பேரை சுமந்த தாய்க்கு இலவசமாகச் செய்வது சரியென அப்போதும் படவில்லை இப்போது கூட இலவசமாகச் செய்வது சரியெனப்படவில்லை அறுவை நீக்கு சிகிச்சை புரை நீக்கி செய்வது அதன் பின் லென்ஸ் வைப்பது இரண்டுமே முக்கியமானவை.

என்னதான் சினரேரீயா மார்ட்டிமா என்ற ஜெர்மன் இம்போர்ட்டட் ஹோமியோ மருந்தை வாங்கி 3 வருடம் தொடர்ந்து இடைவிடாமல் விட்டாலும் வளரும் புரை வளர்ந்தே இருந்தது. அதை எல்லாம் நம்பாமலிருப்பதே நல்லது.

வேண்டுமானால் உடல் சூட்டை தணிக்க எண்ணெய்க் குளியல் குளிப்பது, கண்களுக்கு தூய எண்ணெய் என்றால் விட்டுக் கொள்வது...இதைக் கூட வேண்டாம் என்பது ஆங்கில மருத்துவம்.

சரி கதைக்கு வருகிறேன் அம்மாவை அழகாக அழைத்துச் சென்று நகரின் ஒரு குறிப்பிட்ட மருத்துவமனையில் அப்போது 1980கள் என நினைக்கிறேன் அப்போதே பல்லாயிரம் செலவு செய்து நல்ல லென்ஸ் வைத்து அறுவை சிகிச்சை செய்து காரில் அழைத்து வந்து வீடு சேர்ந்து அவரை சொட்டு மருந்து எல்லாம் சரியாக இட்டு பராமரித்துக் காத்தேன்.

இரண்டாம் கண்ணுக்கு செய்யவில்லை...கண்ணாடி போடுவது எழுதுவதற்கு அல்லது படிப்பதற்காக என்றால் போட்டுக் கொள்ளலாம் என்றார்கள்...அது அவர்க்குத் தேவைப்படவில்லை.

எனது காலம் வந்தது...விடு விடு என ஓடி 5 ஆம் வகுப்பு வரை என்னுடன் உடன் படித்த பூபதிக் குடும்பத்தாரின் முத்துசாமி அறக்கட்டளை நடத்திய முகாமில் கலந்து கொண்டு உடனே செய்ய வேண்டும் புறப்பட்டு வாருங்கள் என்ற உடன் சாப்பிட்டு இரண்டு போர்வை மட்டும் எடுத்துக் கொண்டு சேலம் சென்று அரவிந்த் கண் மருத்துவ மனையில் இலவசமாக செய்து கொண்டேன்.

அப்போதுதான் தெரிந்தது அது மிகவும் கீழ் தட்டு ஏழை மக்களுக்காக நடத்துவது என்று. நல்ல லென்ஸாக வைக்க முடியுமா நான் அதற்கான செலவை தந்துவிடுகிறேன் என்றதற்கு மறுத்துவிட்டார்கள்...அந்த லென்ஸ் வைத்ததில் எனக்குத் திருப்தி இல்லை. ஏதோ ஒளி இல்லாமல் போவதற்கு பதிலாக ஒளி கொடுத்த புண்ணியம். அந்த அறக்கட்டளை, அந்த மருத்துவமனை மற்றும் பார்வை இழப்போர் சங்கம் ஆகியவை சார...

ஏன் இந்த நாட்டில் நல்ல மருத்துவம் நல்ல கல்வி, நல்ல விளையாட்டு, நல்ல உணவு, நல்ல உடை, நல்ல உறைவிடம் கீழ் தட்டு மக்களுக்கு இன்னும் சென்று சேராமலேயே இருக்கிறது என அவ்வப்போது சிந்திப்பேன். முடியரசு, அடிமை வாழ்வு, கல்வியின்மை, ஆங்கிலக் காலனி ஆதிக்கம், கிறித்தவ அனுசரணைப்பள்ளிகள் கல்வி...அதன் விளவாக இந்தியாவில் தொடரும் ஆட்சிகள்...

அப்போதே நான் முடிவு செய்து கொண்டேன் அடுத்த முறை நல்ல முறையில் செய்து கொள்ள வேண்டுமென.

அதே போல இனி வருவதை படியுங்கள் அதுதான் முக்கியம்:

அதாவது கண்புரை நீக்கும் அறுவை சிகிச்சை செய்து புரை நீக்குவத் என்பதற்கும் லென்ஸ் வைப்பதற்கும் ஆகும் கால அளவு வெறும் பதினைந்து நிமிடங்கள் மட்டுமே. ஆனால் அதற்குரிய தயாரிப்பு செய்வதற்கும் அதை அடுத்து பின் மருத்துவம் தொடர்வதற்கும் மருத்துவர்கள் எடுத்துக் கொள்ளும் அக்கறை கவனிப்பு அதை நோயாளி பின் பற்றுவது இவற்றில் தாம் முழு வெற்றியே அடங்கி இருக்கிறது.

Image result for vinayaka mission hospital salem

வினாயகா மிஷன்ஸ் கிருபானந்த வாரியார் மருத்துவக் கல்லூரியில் லேசர் முறையில் மிகவும் அருமையாக இந்த அறுவை சிகிச்சை முற்றிலும் இலவசமாக செய்து விடுகிறார்கள். இப்போது இதன் தலைவர் பிரகாசம் முன்பு இந்திய மருத்துவக் கழகத்தின் தலைவராகவும் சேலம் மாவட்ட மற்றும் துணை இயக்குனர் மருத்துவ மனையிலும் பணிபுரிந்த புகழ் பெற்ற மருத்துவர்

கண் துறைக்கு பேராசிரியர். மருத்துவர். எழில் வேந்தன் தலைமை ஏற்று நடத்தி வருகிறார். அதில் மரு.ஜெயப் பிரகாஷ் போன்ற புகழ் பெற்ற மருத்துவர்கள் எல்லாம் இருக்கிறார்கள்.



எனக்கு ஏற்கெனவே இலவசமாக அரவிந்த் கண் மருத்துவ மனையில் இலவசமாக செய்த நினைவு இப்போது நல்லபடியாக செய்து கொள்ள முடிவெடுக்க உதவியது.

மருத்துவரை கலந்தாலோசித்தேன் முன் மருந்துகள் கொடுத்து அதை ஒரு சில நாட்கள் விட்டு வரச் சொன்னார். லென்ஸை தேர்ந்தெடுத்துக் கொண்டோம். அதில் பல வகை ரூ. 5000 முதல் 60,000 வரை கூட இருக்கிறதாம். பல வகைகளில்.

அதை நமது சக்திக்கேற்றவைகையில் நமக்குப் பொருத்தமானதாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.  நான் மிகவும் உயரச் செல்லாமல் மிகவும் தாழ்நிலையில் அல்லாமல் மருத்துவரின் ஆலோசனைப்படி ஒரு நடுத்தர விலையில் தேர்வு செய்து கொண்டேன். ரூ. 32,000க்கு மல்டி லேட்டரல் லென்ஸ் எல்லாம் கூட உண்டாம்.

5000 பேசிக் ஃபோல்டபள் லென்ஸ்
7000 அஸ்பெரிக் ஃபோல்டபள் லென்ஸ்
10,000 ஹைட்ரோபோபிக் லென்ஸ்
15,000 இண்டியன் ஹைட்ரோபோபிக் எல்லோ லென்ஸ்
20,000 இம்போர்ட்டட் ஹைட்ரோபோபிக் அக்கர்லிக் யெல்லோ லென்ஸ்

இப்படி பல வகை உண்டாம். எல்லாம் டாக்டர் சொன்னதுதான்.

அதில் பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் போவது நன்றாக இருக்கும் என அறிவுரை கிடத்தது. எனவே நான் பணி செய்யும் கல்லூரியின் சகோதர மருத்துவக் கல்லூரியில் சென்று உள் நோயாளியாக பதிந்து கொண்டு  ஒரு நல்ல லென்ஸைத் தேர்வு செய்து கொண்டு  ஆமாம் முன் சொன்னது போல உள் நோயாளியாக சேர்ந்தவுடன் ஒரு டி.ட்டி போடுகிறார்கள் சில முறை சொட்டு மருந்து விடுகிறார்கள். அதன் பின் பின் தொடையில் அல்லது குந்துபுறத்திலொரு  ஊசி. அதன் பின் நேராக அறுவை சிகிச்சை அரங்கம் மிகவும் எளிதாக பதினைந்து நிமிடத்தில் அதாவது மதியம் 12.45க்கு உள் சென்றேன் ஒருமணிக்குள் லேசர் கதிர்கள் மூலம் அந்த புரை நீக்கப்பட்டு புரை நீக்கப்பட்டு விட்டது சார், இப்போது லென்ஸ் வைக்கிறோம் என்று வைத்து விட்டார் மருத்துவர்.  ஒரு ப்ளாஸ்டர் போட்டு விட்டு சிறிது நேரம் ஓய்வு இரண்டு மணிக்கு கட்டையும் பிரித்து கண்ணாடி போட்டுக் கொள்ளச் சொல்லி விட்டார்கள். லென்ஸ்க்கும் மேற்கொண்டு தோராயமாக ஒரு ஆயிரம் ரூபாய்க்கும் மேல் செலவாகி இருக்கும். ஆனால் இதன் மதிப்பு வெளியில் செய்து கொள்ளும் போது ரூபாய் 40,000க்கும் மேல் ஆகிவிடும் என்று எனது மருத்துவர் கூறியது நூற்றுக்கு நூறு சரியே. இந்த முகாம் அலுவலரும் பொது உறவு அலுவலரையும் ஒரு முகாம் நோயாளியாக வைத்து மருத்துவம் பார்த்த அந்த மருத்துவ மனைக்கும் அதன் நிர்வாகமான விநாயகா மிஷன் கல்விக் குழுமத்திற்கும் எனது நினைவறிதலும் நன்றியறிதலும் எப்போதும் உண்டு. மேலும் அதற்கான மருத்துவ விடுப்புடன் அனுமதி அளித்த எங்கள் கல்லூரி முதல்வர் பேரா.மரு.பேபிஜான் அவர்களுக்கும்தான்.

 கண் துறைத் தலைவர் மரு.எழில் வேந்தனும், மரு. ஜெபியும் குழந்தைகளுக்கு சொல்வது போல சொட்டு மருந்து விடுவது பற்றி விளக்கிச் சொல்கிறார்கள் கண்ணாடி தலை மேலிருந்து போடுங்கள், ஒரு வாரம் தலைக்கு குளிக்காதீர்கள், சொட்டு மருந்து: 6, சொட்டு மருந்து 4, சொட்டு மருந்து 3 என தினமும் பிரித்துக் கொடுத்திருந்தார்கள். சொட்டு மருந்தின் குப்பியின் முனை படாமல் கை படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்...கண்களில் எக்காரணம் கொண்டும் கை வைக்காதீர்கள்.... எக்ஸ்ட்ரா, எக்ஸ்ட்ரா

நான் சொல்வது என்ன வெனில் மிகவும் தாமதமாக முதிர் நிலையில் முதிய வயதில் செய்து கொள்வதை விட உடலில் சத்து இருக்கும்போதே இதை செய்து கொள்வது மிகவும் எளிதானது. பிறர் உதவி கூட அவசியமில்லாமல் போய்விடுகிறது.

நான் கட்டைப் பிரித்ததும் கண்ணாடி போட்டுக் கொண்டு மருத்துவக் கல்லூரியிலிருந்து இரண்டு பேருந்து மாறி ஊருக்கு வீட்டுக்கு பேருந்திலேயே வந்து சேர்ந்து அது முதல் அவர்கள் சொன்ன சொட்டு மருந்து மாத்திரைகளை அப்படியே செய்து வருகிறேன். கண்களை இப்போது திறந்து  பார்த்தால் மிகவும் வெளிச்சமாக இருக்கிறது. அறிவியலை மருத்துவ அறிவியலை, வியக்காமல் இருக்க முடியாது இதற்கு உதவிய அத்தனை பேரையும் நான் நினைக்காமல் இருக்கவும் முடியாது...

இவ்வளவு வெளிச்சத்தையும் விட்டு விட்டு அந்த மூடு மந்திரத் திரையில்தானா இத்தனை நாட்களை கழித்து விட்டேன்...

ஆனால் இதற்கு முதல்வர் காப்புறுதித் திட்டம் புரை நீக்கு அறுவை சிகிச்சைக்கு இல்லை,மேலும் ஏதாவது காப்புறுதித்திட்டம் நீங்கள் தனிப்பட்ட முறையில் வைத்திருந்தால் அது பலனளிக்கலாம். ஆனால் குரூப் காப்புறுதித் திட்டம் எல்லாம் பலனளிக்காது நமக்கு பொருளாதார உதவி புரியாது என்பதும் எனக்குக் கிடைத்த கூடுதல் தகவல்கள். அனைத்தும் உங்களிடம் பகிர்ந்துள்ளேன். உங்களக்கு எவருக்காவது உதவக்கூடும் என்ற நம்பிக்கையில். எனக்கு உதவியவர்கள் போல உங்களுக்கும் உதவுவார்கள் என்ற நம்பிக்கையில்

மறுபடியும் பூக்கும் வரை\
கவிஞர் தணிகை.




2 comments:

  1. உங்கள் தொடர்பு‌ எண் கொடுங்கள்‌ சார்.

    ReplyDelete
    Replies
    1. please give your details with name in comments. my contact number is: 9384037978( for the time being)

      Delete