Tuesday, July 31, 2018

ஒழுக்காமிலார் நாட்டில் சுதந்திரம்: கவிஞர் தணிகை

ஒழுக்காமிலார் நாட்டில் சுதந்திரம்: கவிஞர் தணிகை

Image result for there is no independence with out discipline


ஒரு கல்லூரி மாணவன் தனது விடுமுறை நாட்களில், மண் கல் சுமந்து, கம்பி கட்டும் வேலை எல்லாம் செய்து பத்தாயிரத்துக்கும் மேல் சேர்த்து வைத்து நண்பர்கள் வைத்திருப்பது போல தாமும் வைத்துக் கொள்ள ரூபாய் பதினோராயிரம் போட்டு செல்பேசி டச் ஸ்க்ரீன் தான் வாங்கிக் கொண்டான். அவன் செல்போன் வாங்கியது தவறுதான். அது வேறு.

அதை வாங்கிய புதிதிலேயே பேருந்தில் கால்சட்டைப் பாக்கெட்டில் வைத்திருந்தது காணாமல் போக விழித்தபடி இருக்கிறான்.

7 மாதக் குழந்தையை  என்னவோ செய்கிறார்கள் என்று செய்தி, ஆடு மாடுகளையும் விட்டு விடாமல்....

இன்று இன்னொரு நாட்டில் முகமதிய இனத்து ஒரு தந்தை தனது மகளின் தோழியை 11 வயது சிறு பெண்ணை மணந்து கொண்டதாகவும், பூப்படையும் வரை பொறுத்து காத்திருக்கப்போவதாகவும்...அந்தப் பெண்ணும் தமக்கு தமது சினேகிதியின் தந்தைக்கு ஏற்கெனவே இரு மனைவிகள் இருப்பது தெரியும் என்றும் இவரையே மணக்க எனக்குப் பிடிக்கிறாது என்றும் சொல்கிறாள். இவளது தோழியின் வயது 14.  அதுபற்றி அந்த மலேசிய நாட்டின் மந்திரி சொல்கிறார்: ஓரினப்புணர்ச்சியும், ஒரு பெற்றோர் என்பதுமே இங்குள்ள பிரச்சனைகள். மற்றபடி நாட்டின் சட்ட திட்டங்களிலேயே இப்படி கைக்குழந்தையைக் கூட மணம் செய்து கொள்ளும் முறை அனுமதிக்கப்பட்டுள்ளது என்கிறார். அது மட்டுமல்ல அவர்கள் மதத்தில் இதெல்லாம் அனுமதிக்கப்பட்டிருக்கிறது என்கிறார்.
Image result for there is no independence with out discipline
பால்ய விவாகத்தையே வேர் கெல்லி வீசி எறிந்த தேசம் இது. இப்போது இந்த தேசத்தில் சிறுமியர் பாலியல் வன்கொடுமை நடக்கிறது என்பதை நினைத்துப் பார்த்தாலும் உச்சி எல்லாம் சூடு பறக்கிறது...

ஒரு முதியவர் நோய்வாய்ப்பட்டு மரணப்படுக்கையில் இருக்கிறார் என்ற உடன் உடனே போக்குவரத்து இலக்காக்கப்படுகிறது. நாலைந்து பேருந்துகள் சேர்ந்து ஒரு எஸ்கார்ட் போலீஸ் உடன் வர சென்று ஒரிடத்திலிருந்து மற்றொரு இடம் சேர்க்கிறது
Related image

இடையில் ஒரு மனிதன் பேருந்தை நிறுத்தச் சொல்லிக் கேட்கிறார். சூழ்நிலை மற்றும் பல காரணம் கருதி பேருந்தை ஓட்டுனர் நிறுத்தாமல் ஓட்டிச் செல்ல கையைக் காட்டி நிறுத்தக் கேட்ட அந்த மனிதன் உடனே கீழ் இருந்து  கடிக்க வரும் நாயை நாம் அடிப்பது போல பாசாங்கு செய்து கல் எடுப்பது போல அந்த மனிதனும் கல்லை கீழே குனிந்து எடுத்து அடித்து விடுவதாக செய்கிறான்.. தனி மனிதராக இருந்ததால் இத்தோடு போயிற்று. இதுவே சிலர் அல்லது பலர் அந்த இடத்தில் இருந்திருந்தால் நிறைய நடைமுறைச் சிக்கல் தோன்றியிருக்கும் அல்லது இந்த ஓட்டுனரே கூட நிறுத்தி இருக்கவும் வாய்ப்புண்டு.

தமக்குப் பின் யார் என்று சுட்டிக்காட்டாத தலைமை, இந்த நாட்டில் தலைமைகளிடமும் கட்சிகளிடமும் பரவலாகி விட்டது... எவர் பார்த்தாலும் ரோட்டில் எச்சில் உமிழ்கிறார், அதிகாலை வேளையில்கூட பொது இடங்களில் ஊதித் தள்ளுகிறார். குப்பைகளைக் கண்ட இடங்களில் போட்டு விட்டு விலங்குகளை விட கேவலமாக நடந்து செல்கிறார்

இது அனைவரும் அனத்து உயிரும் வாழும் பூமி என்பதையே மறந்து செல்கிறார். சாலையில் பகலானாலும் சாலை விளக்கு எரிந்தபடியே இருக்கிறது..அனைவரும் போகிறார் வருகிறார் அதை எவருக்குமே நிறுத்த வேண்டுமென்ற எண்ணம் வர மறுக்கிறது...ஏன் அது நம் வேலையல்ல என்பதாலும், அதற்கென்று ஒரு ஆள் இருக்கிறார் என்பதாலும், அது நம் வீடல்லவே, நமதல்லவே என்பதாலும்...

குடிநீர் பாசன நீர் பயன்பாடும் விரயங்களும் சொல்லி மாளாது நீர் கொட்றி என கர்நாடகாவை மத்திய அரசை நோண்டி நோண்டிக் கொண்டிருந்த அதே மாநில தமிழக அரசு வீணாக கடலில் சென்று கலந்த பல கோடி கன அடி நீரை வீணாவதிலிருந்து தடுத்து நிறுத்த சேமித்து வைக்க எந்த நடவடிக்கையுமே எடுக்கவில்லை என்பது ஏற்றுக் கொள்ள வேண்டிய வெட்கப்பட வேண்டிய உண்மை.
Related image


எங்கு பார்த்தாலும் பொய், திருட்டு, வஞ்சகம், வஞ்சம், சூது, கொள்ளை என மனிதம் தறிகெட்டுப் போன நாட்டில் மதம், சாதி இன்னபிற பிரிவினைகள்...

எவரோ செய்யும் தவறுகள், புரிதல் இல்லா தவறுகள், அறிவுட் தெளிவுக்கு வழிகாட்டா அரசுகள்...உயிர்ப்பலிகள்...

ஒழுக்கமிலா(ர்) நாட்டில் மற்றுமொரு சுதந்தர நாள். ஒழுக்கமிலார் நாட்டில் சுதந்திரம்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Sunday, July 29, 2018

ஹரியானாவுக்கு ஹரிக்கேன் புகழ் இப்போது ஆட்டின் இறப்பில் குழி தோண்டி புதைக்கப்பட...கவிஞர் தணிகை.

ஹரியானாவுக்கு ஹரிக்கேன் புகழ் இப்போது ஆட்டின் இறப்பில் குழி தோண்டி புதைக்கப்பட...கவிஞர் தணிகை.

Image result for goat raped in haryana

இந்த வடக்கத்திப்பசங்க எல்லாம் என்ன நினைச்சிக்கிட்டு இருக்காங்கன்னு புரிய மாட்டேங்குது..அவனுக பாட்டுக்கு போறானுங்க வரானுங்க எதிரில் போற வர மனிதர்கள் எல்லாம் கூட அவர்களுக்கு ஒரு உசிராவே தெரியலை.இவனுங்களைத்தான் முதலாளி மாருங்க இப்போ சோறு போட்டா போதுன்னு வேலைக்கு வைச்சுக்க ஆரம்பிச்சிட்டாங்க...

போற வர ரயிலு, பஸ், சாலை எல்லாம் அவங்களை சுலபமா பார்க்கமுடியுது.

ஹரியானான்னாவே ஹரிக்கேன் கபில்தேவ் என்ற பேர் இப்போ ஹரியானாவுக்கு ஆட்டை போட்ட ஹரியானா என்று மாறிப்போச்சு... ஒரு குட்டி போட இருந்த முழுகாம இருந்த பொட்டை ஆட்டை ஏழெட்டுப் பேர் சேர்ந்து  அடச் சீ கருமம் பிடிச்ச சனியங்களா..இப்படி எல்லாங்கூட இந்த மிருகங்களை விட கேடுகெட்ட ஜென்மம் பண்ணுவானுங்கன்னு நெனச்சுக் கூடப் பார்க்க முடியலையே...
இதே போல இந்த நாய்கள் சே அப்படிச் சொல்லக் கூடாது நாய்கள் நன்றி உள்ளவை அரிய ஜீவன்கள் அன்பு காட்டுபவை, பூனையன்கள் நோ அப்படியும் சொல்லக் கூடாது அவை அறிவில் கூர்மை படைத்தவை நாயைப் போல நினைவு கூர்பவை
Image result for kapil dev
வேறு எப்படிதான் இந்த .....திட்டுவது... இவனுங்களை கண்டுபிடித்து நிறைய ஆடுமாடுகளை ஏற்றி ஒரு சிறைக்குள் விட்டு அவற்றின் காலடியில் மிதிக்க வைத்தே கொல்ல வேண்டும்.


முழுகாம இருந்த ஆட்டை.....அட..இதே போல இந்த வடக்கத்தி பசங்க பெருந்துறைப்பக்கம், கோவைப்பக்கம் ஒரு மாட்டுக்கொட்டகையில் புகுந்து மாட்டை ஒரு கன்னுக்குட்டியை  கெடுத்த சரித்திரத்தை நாம் சில பல வருடங்களுக்கும் முன் ஊடகச் செய்தியில் பார்த்து  சேலம் ஜெய்ராம் கல்லூரியில் கூட "நாம் எப்படிப் பெற்ற சுதந்திரம் " என்ற தலைப்பில் பேசும்போது குறிப்பிட்டுப் பேசியது நினைவிலிருக்கிறது.
Related image
இதனிடையே உபி யில் அப் என்று 60000 கோடி முதலீடு விதைத்து பிரதமர் தொழில் ஆரம்பம் செய்வதாகவும் இதுவே ரெகார்ட் ப்ரெக்கிங், எர்த் ப்ரேக்கிங் சேஞ்ச் என்று சொல்லப்பட்டதாக பேசியதாக செய்தி...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.


என்ன புரட்சி? எண்ணெய் புரட்சி..கவிஞர் தணிகை

 என்ன வேண்டும் எண்ணெய் வேண்டும்: கவிஞர் தணிகை

Image result for gingili oil plant

என்ன புரட்சி? எண்ணெய் புரட்சி...எள் + நெய்= எண்ணெய்  என்பது எல்லா தாவர எண்ணெய்க்குமாகி: விளக்கெண்ணெய் ஆமணக்கு எண்ணெய்தான், கடலை எண்ணெய்... நிலக்க‌டலை எண்ணெய்தான், நல்லெண்ணெய் எள் எண்ணெய்தான், தேங்காய் எண்ணெய்... இப்படி பிரதானமாக மனிதர்க்கும் விலங்கினத்திற்கும் அத்தியாவசியமாகத் தேவைப்படும் எண்ணெய் இப்போது தனியார் முதலாளிகள் வாணிபக் கையில் கம்பெனி வடிவத்திலிருந்து சாதாரண சாமனிய கிராமிய விவசாயப் பெருமக்கள் கையில் வந்து சேர்ந்திருக்கிறது. இது ஒருநல்ல புரட்சி. எண்ணெய் புரட்சி. இது சத்தமில்லாமலே தமிழகத்தில் அரங்கேறி இருக்கிறது.

இது நம்மாழ்வார் இயக்கம், தமிழகத்தின் விவசாய ஆதரவாளர்களாக இயங்கிய அத்தனை சமூகப் பண்பாட்டு செயல்முறையாளர்கள் அனைவரையும் சாரும்.

இப்போது ஒரு மளிகை கடை வைத்திருக்கும் எனது சகோதரியின் மகன் சொல்கிறார் எண்ணெய் வியாபாரம் எல்லாம் கடைகளில் படுத்துவிட்டது. ஏன் எனில் கிராமம் சார்ந்து அல்லது அவரவர் இடங்கள் சார்ந்து நிறைய செக்கில் ஆட்டும் அதாவது மரச்செக்கிலிருந்து எண்ணெய் பிழிந்தெடுக்கும் புராதானமான உடலுக்கு ஊறு விளைவிக்காத முறை நடைமுறைக்குத் திரும்பி இருக்கிறது. இது ஒரு நல்ல மாற்றம். வரவேற்கத்தக்க திருப்பம். சத்தமில்லாத ஒரு புரட்சி.

இதுவரை எண்ணெய் ஆலை முதலாளிகள் எல்லாம் கலப்படம் செய்து விற்று கொள்ளை இலாபம் அடித்து வந்த முறைகளுக்கு இது மாற்றாக வந்திருக்கிறது . எனவே இதை அனைவரும் பாராட்டியே ஆக வேண்டும், ஆதரித்தே ஆக வேண்டும் அவை வணிகம் சார்ந்த வியாபார நோக்கில் மட்டும் சொல்லப்படுவதல்ல...நமது உடலை நல்ல முறையில் பேணிக்காக்க வேண்டிய அவசியம் பற்றிய ஒரே காரணத்துக்காக முன் மொழியப்படல் வேண்டியதாகிறது.

நாங்கள், அதாவது எங்கள் குடும்பம் கடையில் எண்ணெய் வாங்குவதிலிருந்து விடுபட்டு வெகு நாட்களாகி விட்டது. தேங்காய் எண்ணெய்,விளக்கெண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய் ஆகிய யாவுமே மரச்செக்கில் ஆட்டிய எண்ணெய் மட்டுமே உபயோகிக்கிறோம்.

ஒரு காலக்கட்டத்தில் இரவில் அதிகம் கணினி முன் எழுதிப் படித்து பார்த்து வந்த பழக்கம் அதிகம் இருக்கும்போது இரவு மணி இரண்டு மணிக்கு எல்லாம் உறங்கச் செல்வது சர்வ சாதாரணம்...அப்போது ஒரு துளி தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் விழிகளில் விட்டுக் கொள்வது வழக்கம்.
Image result for gingili oil plant
ஆனால் நாளடைவில் அவற்றில் கலந்துள்ள கலப்படம் உறுதியாகி அவை கண்களை உறுத்தி, எரிச்சல் தருவது கண்டு முதலில் தேங்காய் எண்ணெய் கிராமப் புறத்தில் ஒரு நண்பரிடம் இருந்து பெற ஆரம்பித்தேன் அவர்கள் தோட்டத்தில் விளைந்த தேங்காய்களில் இருந்து பிழிந்தெடுத்தது... மிக அருமையான மாற்றம்...

அதன் பின் நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், கடலை எண்ணெய் ஆகிய எல்லா எண்ணெய்களுமே அதன் படி மரச்செக்கில் ஆட்டிய எண்ணெயாகவே வாங்க ஆரம்பித்து விட்டோம். மணம் மிகவும் அருமை, தனியார் ஆலை, கடைகளில் விற்கும் பாக்கெட் எண்ணெய்களுக்கும் தர வித்தியாசம் மலைக்கும் மடுவுக்கும்... இதெல்லாம் தெரியாமல் சுத்திகரிக்கப்பட்ட கடலை எண்ணெய் என ரீ பைனடு ஆயில் என்றும் போர்னா எண்ணெய் உமியில் இருந்து எடுக்கப்பட்டது என்றும் பயன்படுத்திய காலம் எல்லாம் எவ்வளவு தவறானது என்று இப்போது நன்கு புரிந்து விட்டது...

முதலில் அரிதாக ஆங்காங்கே இருந்த இது போன்ற கிராமிய முயற்சி இப்போது நாம் குடியிருப்புகளுக்கு வெகு அருகாமையிலேயே வந்து விட்டன. எனக்குத் தெரிந்தே நல்லப்பன் என்ற ஒரு நபர் கருப்பு ரெட்டியூரில் இந்த மரச்செக்கு எண்ணெய் ஆட்டி விற்பனை செய்கிறார். செல்வம் என்ற நபரும் வனவாசியில் செய்து வருகிறார். சொன்னால் வீடு தேடி கொண்டுவந்து கொடுத்து செல்வாரும் உண்டு.

எண்ணெய் உபயோகமே தவறு என்ற புரளி பரப்பப்படுகிறது. ஆனால் உண்மையில் அது நல்ல எண்ணெய் தயாரிப்பாக இல்லாத போது சொல்லப்பட்ட விவாதச் சொல். எண்ணெய்ச் சத்து வேண்டும் அது ஊறு விளக்காமல் உடல் நலம் பேண உதவுவதாக இருக்கும்போது அதை பயன்படுத்துவதில் ஒரு தீங்கும் இல்லை.உண்மையில் நன்மையே. ஏன் பசுமாட்டு நெய் கூட உடலுக்கு நல்லது என்றே மீனாட்சி சுந்தரமா தெய்வநாயகமா அவர் பேர் மறந்து விட்டது, அந்த வெண்ணிற ஆடை அண்ணல் அடிக்கடி தொலைக்காட்சியில் தோன்றி மறைந்து போனவர் தாம்பரம் புற்று நோய் மருத்துவ மனையில் சித்த மருத்துவப் பங்காற்றியவர்  அடிக்கடி கூறுவார்.

எனவே மனித குலம் மறுபடியும் சிறு தானிய உட்கொள்ளல், நல்ல எண்ணெய் பயன்படுத்தல், நல் விவசாயம் போன்ற பழங்கால மனிதர்க்கும் உயிர்களுக்கும் ஊறு விளைக்காத முறைகளுக்கு மாறிக் கொண்டிருக்கிறது இதை எல்லாம் பார்க்கும்போது ஒரு நல்ல ஆரோக்கியமான தமிழகத்தை மீட்டுக் கொண்டு வரலாம் சரியாக நோக்கத்துடன் பயணம் செய்தால் என்றே தோன்றுகிறது.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Saturday, July 28, 2018

எல்லாக் கட்சிகளும் சேர்ந்து நிற்கிற காட்சி:

எல்லாக் கட்சிகளும் சேர்ந்து கொள்கிற ஒரே இடம்: கவிஞர் தணிகை
Image result for death calls


எல்லாக் கட்சிகளும், எல்லாத் தலைவர்களும்  ஏன் எல்லா உயிர்களும் சேர்ந்து கொள்கிற ஒரே இடம்...

அந்த ஒற்றுமை மட்டும் மனித குலத்திற்கு இல்லை என்றால், உயிர்களுக்கு இல்லை என்றால் எப்படி இருக்கும் இந்த பூமிப் பந்து...சுழல்வதும் நின்று விடாதா?

அரசியலாலும், பண பலத்தாலும் வாங்க முடியாத ஒரே விலை அந்த நீதியை மட்டும் உயிர்களால் என்ன விலை எப்படி கொடுத்தாலும் வாங்கவே முடியவில்லை. அந்த சட்டத்தை மட்டும் எந்த குறுக்கு வழியாலும் உடைக்கவே முடிவதில்லை... வேண்டுமானால் இந்த அறிவியலும் மருத்துவ கண்டுபிடிப்புகளும் சற்று நீட்டிப்பு செய்து கொள்வதாக காட்டிக் கொள்ளலாம்.. மனிதம் 113 வயது என இப்போது உச்சம் ஏறிக் கொண்டிருக்கிறது...சிவாங்கி பதக் தனது 17 வயதில் அருணிமா சின்ஹா பற்றித் தெரிந்து கொண்டு பற்றி எவரெஸ்ட் சிகரம், மற்றும் கிளிமாஞ்சரோ சிகரமும் ஏறி விட்டாள் என்ற செய்திகளும் இவற்றிடை சிறு கீற்றுகளாக வெளிப்படுகின்றன..

இவர்கள் போடும் கோஷம் எல்லாம் வெற்று கோஷமாக இல்லாமல் உயிர்களை வாழ வைக்கும் எனில், குடிநீர், மருத்துவம், கல்வி, சுகாதாரம் அனைவருக்கும் எளிதாக‌ கிடைக்குமெனில் அதை எல்லாம் இவை கொடுக்குமெனில் இந்த 71 ஆம் சுதந்திர ஆண்டிலும் கூட இந்தியா மெச்சிக் கொள்ளலாமே.. எல்லாம் செய்ய எல்லாரும் சேர்ந்து கொள்ளலாமே...எல்லாமே ஏழைக்கு செய்வதாக நாட்டுக்கு செய்வதாக சொல்லித்தானே வருகிறார்கள் வந்தார்கள்...எல்லாருக்குமே தலைமைப்பதவி மேல் ஆசை இருக்கும் தான்...ஆனால் ஒரு நாற்காலியில் ஒருவர் தாமே அமரமுடியும்...ஆனால் இந்த நாற்காலி அனைவர்க்கும் தவறாமல் கிடைக்கிறதே...

நிலை இப்படி நிலையாமையில் இருக்கிற போதும் ஏன் இப்படி 7 மாத குழந்தை என்றும் பாராமல் காமம்  தலைவிரித்தாடுகிறது? ஏன் காவிரியில் வெள்ளம் அபாயம் என்று தெரிந்த பின்னும் 5 உயிர்கள் போகிறது? ஏன் விரைவு ரயில் வழித்தடம் சாதாரண பயணிகள் ரயிலுக்காக மாற்றப்பட்டு படிக்கட்டுப் பயணத்தில் கல்லூரி மாணவர்களின் உயிர்களும் தலைகளும் பந்தாடப்படுகின்றன‌

ஏன் தற்கொலைகள் கொத்துக் கொத்தாகவும், கொலைகளும், நகை பறிப்புகளும், பெரும் கொள்ளைகளும், ஏமாற்றுதல்களும், ஏமாறுதல்களும் இயல்பாக சந்திர கிரகணம் சூரிய கிரகணத்தை எப்படி மனிதர்களால் தடுக்க முடியாதோ அது போல தடுக்க முடியாது போய்க் கொண்டிருக்கின்றன?

எப்படி இந்தியாவில் அஸ்ஸாம், கர்நாடகா, தமிழ்க் காவிரிகளில் வெள்ள முறுக்கங்களில் நாடே வியத்தகு காட்சிகளும் விரிந்து போக வியந்து கிடக்கும்போதும் ஏழைகளுக்கும், கடைத்தட்டு மக்களுக்கும் குடிக்கவும் நீர் கிடைக்காமல் அல்லோகலப்படுகின்றன....

ஒரு நிறுவனமாக இருந்தாலும் அரசாக இருந்தாலும் ஆட்சியாக இருந்தாலும் கடைசியாக வந்து கை ஏந்துவாருக்கும் இல்லை என்ற நிலை இல்லாதிருக்க வகுப்பதல்லவா திட்டமாக இருக்க முடியும்...இங்கு மேல் இருக்கும் மேட்டுக்குடிகள் பெற்றது போக மிச்சம் மீதி கூட கடைசிவரை வந்து சேரவே மறுக்கின்றனவே...

வல்லபாய் படேலுக்கு சிலை ஆப்பிரிக்காவில் வைத்ததால் பல நூறுகோடிகள் இந்தியப் பணத்தை தாரை வார்க்கும் பிரதமரால் இங்கிருக்கும் ஒரு ஏழைக்கு, வேலை வாய்ப்பை ஏற்படுத்தி உழைப்புக்கேற்ற உத்தரவாத வாழ்வை வழங்க முடியவில்லையே...இதை எல்லாம் பார்க்கும்போது  எல்லாம் கோளாறுகளின் வடிவாகவே மனிதகுலம் இயங்கி வருகிறது அதை எல்லா உயிர்களுமே பகிர்ந்து கொள்கின்றன.. திட்டம் வேண்டும்...அனைவர்க்கும் ஏற்ற ஆளுக்கு ஆள் மாறாத சட்டம் நீதி வேண்டும். நிர்மலா சீதாராமனும் ஓபிஎஸ்ஸும் பதில் சொல்லியே ஆக வேண்டும்...

 அவை யாவற்றுக்கும், அவர்க்கெல்லாம், அவரவர் செயல்பாட்டுக்கு எல்லாம்,அதற்கெல்லாம் விடையாகவே அவரவர் வாழ்வு, அவரவர் பயணங்கள், அவரவர் வாழ்வு தாழ்வு பிறப்பு, வளர்ப்பு, இருப்பு இறப்பு யாவுமே...பிற வீட்டின் இறப்பு மறு வீட்டுக்கு ஒரு வேலை நாளின் சிறு பகுதி...அதுவே அவரவர்க்கு என்றால் வாழ்க்கையை திருத்தி எழுத வேண்டிய பதிப்பு. மாற்றிக் கொள்ள வேண்டிய தொகுதி...

மறுபடியு பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

பி.கு.:

27 ஜூலை கலாமின் 3 ஆம் நினைவு நாள் அதற்கு நாம் எதையும் எழுத காணிக்கையாக்க முடியவில்லை...பணிச் சுமை.

கலைஞர், தா பாண்டியன் ஆகியோர் கவலைக்கிடம் என மருத்துவ மனையில் அனுமதி என்ற செய்திகள் எல்லாம் நேற்று ஊடக வழி...அவற்றை எவற்றையும் இந்தப் பதிவு குறித்து வருவதல்ல...பொதுவான உயிர்களின் நியதியை சிந்தித்ததன் விளைவாகவே பதிவு செய்யப்படுகிறது...

உயிரோட்டமும், இயக்கமும் இருக்கும் வரை விட்டுக் கொடுக்காமல் பகை கொள்ளும் உயிரினம், அந்த கடைசி தருணம் வந்ததும் எல்லாருமே பெரும்பான்மை பற்றி எல்லாம் கவலைப்படாமல் ஓரிடத்தில் கூட வாழ வாழ வேண்டும் என இயற்கையை கூவி கூப்பி அழைக்கின்றன... சேர்ந்து நிற்கின்றன...என்னே ஒரு காட்சி என்னே ஒரு ஒற்றுமை...ஏன் எனில் நமக்கும் நாளைக்கு இதே நிலைதானே இதே கதிதானே என்ற நிதர்சன உண்மையாலா...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.





Friday, July 27, 2018

கவிதைத் தேறல்: கவிஞர் தணிகை

கவிதைத் தேறல்: கவிஞர் தணிகை


Related image


1967ல் காமராசரிடமிருந்து கடிதம் பெற்ற (அப்போது எனக்கு வயது வெறும் 5 ஆக இருந்திருக்கும்) திருவில்லிப் புத்தூர் இரத்தினவேல் அய்யா அவர்கள் மௌன அழுகை என்ற நூலை அனுப்பி மேலும் மேலும் நன்றிக் கடன் பட வைத்துக்கொண்டிருக்கிறார்.

அதை மு. கோபி சரபோஜி படைத்திருக்கிறார். இது இவரின் 3 ஆம் கவிதைத் தொகுப்பு என்றும் இது வரை 21 நூல்கள் படைத்திருப்பதாகவும் இது ஒரு அகநாழிகை பதிப்பக வெளியீடாகவும் இதன் விலை ரூபாய் 70 என்ற தகவல்களும் புத்தகத்தில் உள்ளன.

ஏற்கெனவே இருக்கும் மௌன அழுகை போதாதா இது வேறா என்ற காலக்கட்டத்தில் இந்த நூல் எனது கைகளில்.

80 பக்கம்...மேட்டூரிலிருந்து சேலம் பேருந்தில் செல்லும்போது படித்து முடித்து விட்டேன்.

60 பக்கம் நிறைய வெற்றிடங்கள் விட்டு கவிதைகள் அச்சாகியுள்ளன.

அவற்றில் எனக்குப் பிடித்த கவிதைகளில் சில:

சாமார்த்திய சதி:

பாசாங்குச் சொற்கள்
பரிசுப் பொருட்கள்
பக்குவ விளக்கங்கள்
பரம்பரைச் சாயங்கள் என‌
எந்நாளும்
உனக்கொரு கத்தி
கிடைத்து விடுகிறது

என்
சிறகுகளின் வளர்ச்சியை
வெட்டி எறிய...



புத்தகத்தின் உச்சமாய் நான் நினைக்கும் கவிதை

வசைச் சொல்

எவரிடமும் பறித்து உண்ணாது
எதன் பொருட்டும்

வாய்ச்சவடால் செய்யாது
துருத்தித் தெரியாத‌

பாவங்களைச் சுமக்காது
தன் சுகமென்பது கூட‌

தன்னை லயிப்பதே
என்றிருப்பவனை நோக்கி

எப்பொழுதும் வீசிக் கொண்டே இருக்கிறோம்
பைத்தியம் என்ற வசைச்சொல்லை.

பொய்யாகும் புலம்பல்கள்
‍‍‍__________________________
எதுவும் சாதகமாக இல்லை
எவரும் உதவிக்கரம் நீட்டவில்லை
விதியோ
விடாது சதிராடுகிறது

தோல்வியோ
அதன்போக்கில் விரட்டுகிறது

இப்படியானப் புலம்பல்களின்
செவியேறும் தருணங்களை
தகர்த்தெறிந்து மாயையாக்குக்றது.

மண்ணும்
நீரும்
உரமும்
எவரும் இடாமலே
கொழுகொம்பின்றி
உயிர் பிடித்து
பாறையிடுக்கில்
எழுந்து நிற்கும் அந்த சின்னச் செடி..

எனக்கு எனது:
முடியவே முடியாது என்ற களங்களில்தான் என் வெற்றியே நிகழ்ந்திருக்கிறது
பூக்களை உதிர்த்து விட்டாலும்
செடி காத்திருக்கிறது
அது மறுபடியும் பூக்கும் என்ற எனது வரிகளை  பாறைகளிடையே இருந்து எட்டிப் பார்க்கும் இந்தச் சின்னச் செடி  ஏற்படுத்துகிறது.

பாடம்
8888888
உன்னிப்பாய் உற்று நோக்கியபடி
அமர்ந்திருந்தாள் இலக்கியா

என்னவென்று கேட்டேன்
உஷ் என உதடு கூட்டி
நேர்க்கோட்டில் ஊர்ந்து செல்லும்
எறும்புகளைக் காட்டினாள்

சலனமின்றி கடந்து சென்றேன்
அவ்விடத்தை விட்டு....பெரிய எண்ணம் சிறிய உருவங்களில்...நல்ல நடப்பு

நினைவுகள் குழைந்த தருணம்
______________________________
பெற்றோர் , மனைவி, பிள்ளைகள், நண்பர்கள்
என எல்லோருக்கும் ஏதோ ஒரு நினைவுகளைத் தருபவனாகவே
துயில் கொண்டிருந்தது..

சடங்கேந்தி வந்த உறவினர்கள்
பொணத்தை எப்ப தூக்கறாங்க ? என‌
விசாரிக்கும் வரை...

நிறைய தருணங்களில் அடுத்தவருடைய துக்கம் நமக்கு அன்றாட அலுவல்கள்களின் ஒரு சிறு கீற்றாய்  பிறையாய் மறைந்து விடுகிறது.

எதார்த்தம்:

வாங்கிப் போட்டதோ
இருவர் தூங்க‌
இடவசதியுள்ள கட்டில்.

நித்தம் தூங்குவதென்னவோ
நீயோ நானோ மட்டும்தான் என்ற எதார்த்தம் என்னை இப்படி எண்ண வைத்திருக்கிறது...

நீயும் நானும் தனித் தனியே தரையில் பாயில் தான்...

பேருந்தில் தெரிந்தவர் வரும்போது அவர் டிக்கட் எடுப்பாரா, அவருக்கு நாம் டிக்கட் எடுக்க வேண்டி வருமே என்று பார்த்தும் பாராமல் ...இல்லை இல்லை இப்போதெல்லாம் அப்படி எல்லாம் எண்ணமே இல்லை.

ஆக உண்மையை உண்மையாக உணர்தலை உணர்ந்ததை பதிவு செய்துள்ளார்.

வாழ்த்துகள்

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.




Sunday, July 22, 2018

மேட்டூர் அணைக்கு காவிரி அன்னையே: கவிஞர் தணிகை

மேட்டூர் அணைக்கு காவிரி அன்னையே: கவிஞர் தணிகை

Image may contain: mountain, sky, outdoor, nature and water


அப்பாடா ! இந்த நீர் நிரம்பிய காட்சியை பார்க்க எத்தனை நாட்கள், மாதங்கள், ஆண்டுகள் தவம்...இயற்கை மனிதர்களின் மகத்தான கோரிக்கைக்கு செவி சாய்த்திருக்கிறது. மழையாகப் பொழிந்து. குமாரசாமி இனி நம்மைக் கேட்க மாட்டார்களே காவிரி நீருக்காக என அழுததாகக் கேள்வி.

உடனே காலை சுமார் 7.50க்கு நில நடுக்கம், தர்மபுரி, பென்னாகரம்,மேட்டூர், அம்மாப்பேட்டை, தாரமங்களம், நங்கவள்ளி போன்ற பகுதிகளில். வழக்கம்போல சேலம் மாவட்ட தலைமையகத்தில் உள்ள நிலநடுக்க அளவை கருவி பணி செய்யவில்லை...

இயற்கை ஆர்வலர்களும் அறிவியலாளர்களும் சொல்வது போல அணையின் நீர்த்தேக்கத்திற்கும் நில நடுக்கத்திற்கும் தொடர்புள்ளதாகவே இச் செயல் தோன்றுகிறது. ஏன் எனில் பல ஆண்டுகளாக நீர் இல்லாமல் வறண்டு கிடந்த பூமி மேல்  93.47 டி எம் சி...அதாவது கன அடி..ஃக்யூபிக் மெட்ரிக் டன்...இரண்டு கிருஷ்ணராஜ சாகர் அணையின் கொள்ளளவுக்கு இந்த  மேட்டூர் அணை இடம் இருக்குமாம் நீரைத் தேக்கி வைக்க...
Image may contain: sky, mountain, outdoor, nature and water
நாட்டின் மிக முக்கியமான அணைகளில் பிரதானமானது.

இவ்வளவு நீரின் அழுத்தம் உருவானதால் நில நடுக்கம் தோன்றியிருக்கலாம்.

ஜெ நிரந்தரமாக கண்மூட, ஓ.பி.எஸ் பதவி விலக, சசிகலா கர்நாடகா சிறை புக, எடப்பாடி பழனிசாமி, இப்போது எடப்பாடியார் தினகரனின் மிரட்டலுக்கு சாயாமல் அவரை வெளியனுப்பி ஆட்சியை முதல்வர் பதவியைத் தக்கவைத்துக் கொண்டு, ஆண்டுக்கு மேல் ஓ.பி.எஸ் உருவத்தை சிறிதாக்கி போஸ்டரில் தாம் பெரிதாக வளர்ந்து ...1934ல் கட்டிய அணையை 84 ஆண்டுகளில் ஒரு முதல்வர் அணையை திறந்து வைத்தார் என்னும் ஒரு பெயரைப் பதித்துக்க் கொண்டார்....நீர் இப்போது தேவையில்லை என்று ஒரு குரலும், இல்லை இல்லை குறுவை சம்பா பயிற்களுக்குத் தேவைதான் என்றும் கல்லணையிலிருந்து பாசனத்துக்கு நீர் திறப்பு என்ற செய்திகளும் முரண்பட்டாலும் செய்திகளாகின்றன.
Image may contain: people standing, bridge, sky, ocean, outdoor, water and nature
மொத்தத்தில் குடி நீர்,  கால்நடைபருக நீர், பாசனத்திற்கான நீர் எல்லாப் பஞ்சமும் போக இயற்கை அன்னை வழி விட்டிருக்கிறாள். காவிரி கரை புரண்டு தாயின் மடி மேட்டூர் அணையில் சேர்ந்திருக்கிறாள். யோவ் இது தமிழ் நதி அய்யா, இப்போது நிறுத்துங்களேன் பார்ப்போம்...

அட இப்போதும் கூட எங்க பஞ்சாயத்து: வீரக்கல் புதூர் எனப்படும் ஊராட்சி ஒன்றியத்தில் ஆறு அளவு நீர் இருந்தாலும் நாயால் நக்கி நக்கியே குடிக்க முடியும் என்ற பழமொழிக்கேற்ப எங்கள் வீதியில் குடிநீரை மிகவும் அளவாக போதாமல் விட்டு வைத்திருக்கிறார்கள் பாவிகள்...ஒரு பெண் குடிநீர் வேண்டி எங்கள் வீடு வந்து பிடித்துச் செல்லுமளவு...

இவனுங்களை திருத்தவே முடியாதய்யா...

பாலாஜி, பழனி இன்று நில நடுக்கம் வந்ததாம் இல்ல தெரியுமா?

 அந்தப் பெண் சொல்கிறாள்: கேட் எல்லாம் ஆடியது என்று...

பவர் பழனி: சார் காத்து அடித்திருக்கும் ஆடியிருக்கும் சார்,

இல்ல பழனி அவங்க பக்கத்து வீட்டில் மேலே பரணில் வைத்திருந்த டம்ளர் எல்லாம் கீழே விழுந்ததாம்  என்று சொல்கிறாரே...

பாலாஜி: அது பூனை உருட்டி விழுந்திருக்கும் சார்...

பழனியும் பாலாஜியும்: நாங்க கூட ஆடலான்னுதான் பார்க்கிறோம் பசங்க இன்னும்  வரலை...கிரிக்கெட் பந்தை வைத்துக் கொண்டு..

கவலை இல்லாத மனிதர்கள்...எதற்கெடுத்தாலும் காமெடிதான்...

ஏன் எனில் சரியான படிப்பு கூட இன்று மின் வாரிய ஊழியராகிவிட்டார்கள் நிலம் அரசு கையகபடுத்தியதற்கு பதிலாக வாரிசு வேலை பெற்றதால்..

இப்போது மட்டுமல்ல...வேலைக்கு தேர்ந்தெடுக்கப் படும் முன்பே கூட இப்படித்தான் பேசுவார்கள்..நினைத்துக் கொண்டு மறுபடியும் உவந்து சிரிக்கலாம்.... அவ்வளவுதான் வாழ்க்கை...அடுத்த நொடியில் நில நடுக்கம் அதிகமாக கனமாக இருந்தால் நாம் இருக்கிறோமோ என்னவோ? எதற்கு சோகம்...
Image may contain: bridge, sky, outdoor and water
 117 feet at 6. 30 pm on 21.07. 2018.

காவிரியை, அணையை சிறையிட்டு வைத்திருக்கிறார்கள்...இம்முறை மக்கள் அருகே சென்று பார்க்க முடியாது சுவர், கம்பி வேலி...பதினாறு கண்மாய்  பாலம் பூட்டப்பட்டு மத்திய பாதுகாப்புப் படைக் காவலுடன்.எவரும் எப்படியும் காவிரி அருகே அணைப்பகுதியில் நீர் அருகே செல்ல முடியாத நிலை. எட்டி இருந்தே பார்க்குமளவுதான். அப்படி இருந்தபோதும் நீர் ஏற்று நிலையமருகே கடைசியில் பூட்டை தெரிந்தவர் என்றா திறந்து அந்த சிலரை மட்டும் அனுப்பினார் அந்த நபர்...தெரியவில்லை... சட்டம் இந்தையாவில் எப்போதும் அனைவர்க்கும் சமமாக இல்லை....தெரிந்தவர், சொந்தக்காரர், நணபர், அரசியல்வாதி, பணக்காரர் இவர்க்கெல்லாம் மாறுபாடும் ஆளுக்கு ஆள், நேரத்துக்கு நேரம்..

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Friday, July 20, 2018

ரஜினி காந்துக்கும் விஜய்காந்துக்கும் பெரிய வித்தியாசம் இல்லை: கவிஞர் தணிகை.

ரஜினி காந்துக்கும் விஜய்காந்துக்கும் பெரிய வித்தியாசம் இல்லை: கவிஞர் தணிகை.

Image result for rajinikanth and vijayakanth acted together

சினிமா உலகில் விஜய்காந்த் டூப்ளிகேட் ரஜினிகாந்த் என விமர்சிக்கப்பட்ட ஒரு காலம் போய் அவருக்கு என ஒரு தனிப்பாதையை அமைத்துக் கொண்டு சினிமாவில் முன்னேறிய விஜய்காந்த் ரஜினிகாந்துக்கும் முன்பாகவே அரசியலுக்கு வந்து தனிக்கட்சி ஆரம்பித்தார். எதிர்க்கட்சித் தலைவராகவும் ஆனார்.

அவரது கல்யாண மண்டபம் ஒன்றும் சர்ச்சைக்குள்ளானது. அப்போது ஆளும் கட்சியானவர்கள் அதன் பின் இவரிடமே கூட்டணிக்கெல்லாம் முயன்றது காலத்தின் பதிவு. இவ்வளவு செல்வாக்கு பெருகி வரும் சூழலில் தன்னை சிறுத்துப் போகச் செய்தது அவரின் பின் தொடர்ந்த செயல்பாடுகள். மிக வீரமான படங்களை எல்லாம் கொடுத்தும், ஜெ வை சட்டசபையிலேயே நேரடியாக எதிர்த்தவரும் மதுவின் பிடியாலும், உடல் நலம் குன்றியதாலும் பேசவே முடியாத காரணத்தால் ஊடகம், சமூக வலை தளங்கள் மூலம் எள்ளி நகையாடக் காரணமானார்.

மனைவியும், மைத்துனரும் துணையாகி கட்சியை வழி நடத்த, சிங்கப்பூர் எல்லாம் சென்று தேர்தல் காலத்தில் பெரும் தொகை பேரம் பேசியதாக செய்திகள் உலவின. வைகோவால் திமுக கூட்டணிக்கு செல்லாமல் படு தோல்வி அடைந்து கட்சி நிலை நலிவடையும் காலத்துக்கு சென்று கொண்டிருக்க அவர் கட்சியிலிருந்து முக்கியமான உறுப்பினர்கள் எல்லாம் வேறு கட்சிக்குத் தாவி தப்பிப் பிழைத்துக் கொள்ள ஆரம்பித்துள்ளனர்.

அதே போல ரஜினிகாந்தும் எப்போதும் அரசியல் செய்து கொண்டுதான் இருக்கிறார். இவர் மூப்பனாரை நேரடியாகவே ஆதரித்தும், அப்போடைய ஒரு தேர்தலில் இனி மாறுதல் நிகழ வில்லை எனில் ஆண்டவரால் கூட தமிழகத்தைக் காப்பாற்ற முடியாது எனச் சொல்லியும், தேர்தலில் எந்தப் பக்கம் வாக்கு அளிக்க வேண்டும் என்று அறிவித்தும் கலைஞரின் அன்புக்கு பாத்திரமானார்.

இவரின் வீடும், ஜெ வின் வீடும் அதாவது என்றும் முதல்வரான ஜெவின் இருப்பிடமும் ஒரே இடத்தில் இருப்பதால் அதில் முரண்கள் தோன்றி ஆர்ப்பரிக்க வழியின்றி அடங்கியே இருந்தார். மன்னன் போன்ற படங்கள் அதன் பிரதிபலிப்பு எனச் சொல்வாரும் உண்டு.

இங்கும் இவரது மனைவி சொல்லே மந்திரம் என்பது போல அங்கே பிரேமலதா விஜய்காந்த் போலவே இங்கே லதா ரஜினிகாந்தின் வழிமுறைகள் இவரையும் வழி நடத்துவதாகவே சம்பவங்கள் சாட்சிகள்.

இப்போது அமித் ஷா விடம் ஆயிரம் கோடி ரூபாய் கேட்டு அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி  அப்படிக் கொடுத்தால் பாரதிய ஜனதாவுடன் ஒத்துழைப்பு செய்வதாகவும் இல்லையேல் விட்டு விடுங்கள் எனப் பேசியதாகவும் செய்திகள் உலவுகின்றன.

ஆக என்னதான் நடக்கிறது என்று பார்த்தால் விஜய்காந்த் போன அதே வழித்தடத்தில் தாம் ரஜினிகாந்தும் சென்று வருகிறார் என்பதை ஒப்பீடு செய்வார்க்குப் புரியும். இவருக்கும் ராகவேந்திரா திருமண மண்டபம் உண்டு. அதே போல கட்சி, அரசியல், அப்படி இப்படி என எட்டு வழிச்சாலை பரவாயில்லை, போலீஸ் தரப்புக்கு சாதகமாக பேசுவது என்றெல்லாம் குளறுபடிகள் இவரிடமும் உண்டு. அவர் மேடையில் உளறுவார். இவர் மேடை இல்லாமலே உளறுகிறார் . எனவே இருவருமே ஒரே வழிப்பயணத்தில் இருப்பதை அனைவரும் காணலாம்.

சிலவற்றுக்கு கருத்தே தெரிவிக்க மாட்டார். கருத்து தெரிவித்தார் என்றால் அது மிகவும் சமுதாய நெருடல்களை , முரண்பாடுகளுடன் இருப்பது அவரின் நிலைப்பாடே தவிர சமுதாயமேம்பாட்டுக்கான, அல்லது மக்கள் நலம் சார்ந்ததாக ஊன்றிப் பார்த்தால் இருக்காது.

ஓடாத படங்களை  ஓடவைக்க நிறைய பட்ஜெட்டில் படம் எடுக்க, தமிழ் சினிமாவின் அதிகம் பணம் வாங்கும் நடிகராக இன்னும் இருக்கிறார் என்றாலும் முதல்வராகவோ ஒரு கட்சிக்கு ஏற்ற தலைமைப் பண்புகள் கொண்டாராகவோ சினிமாப் பின்னணி அல்லாமல் ஆன்மீகப் பயண அனுபவங்கள் வேறு அவரிடம் சிறப்பு இயல்புகள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.

கமல் ஹாசனாவது கருத்துகளைத் தெரிவிக்கிறார். மக்களின் பக்கம் நிற்கிறார் ஆனால் அவரின் பக்கம் ரஜினிகாந்த் இடம் சேரும் கூட்டம் அளவு இல்லை என்கிறார்கள்...இவர் தனக்கில்லாத தகுதி கமல்ஹாசனிடம் இருப்பதை தெரிந்து கொண்ட பின்னும் அவரையாவது ஆதரிக்க தமது கூட்டத்தாரிடம் சொல்லலாம்...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Tuesday, July 17, 2018

புலை நாற்றம்: கவிஞர் தணிகை

புலை நாற்றம்: கவிஞர் தணிகை

Image result for bad smell and traveller

இப்போதெல்லாம் எதையாவது பார்த்து அதில் ஆழ்ந்து விடுகிறேன்...உடனே இராமலிங்க வள்ளலாராக மனம் உருகி விடுகிறது. தலை வலிக்க ஆரம்பிக்கிறது..பேருந்து நிலையங்கள், புகை வண்டி நிலையங்கள்: எல்லாவற்றிலும் சகித்துக் கொள்ள முடியாத மானிடங்கள். உடனே அன்னை தெரஸா நினைவிறங்கி இவர்க்கெல்லாம் என்ன, எப்படி உதவப் போகிறோம் என்ற எண்ணங்கள் ஆலோலம் போடுகிறது.

இன்று மேட்டூர் ரயிலில் ஏறிய உடன் புலை நாற்றமெடுக்க ஒரு மனிதன் கடைசிப் பெட்டியில் வழக்கமாக நான் இறங்குவதற்கு வசதியாக ஏறும் பெட்டியில் ஒரு பெரிய சீட் முழுதும் படுத்துக் கிடந்தான்.

ஒரு பக்கம் தாள முடியவில்லை. எங்கே போக வேண்டும் எனக் கேட்டேன். சரியாக சொல்லவில்லை. நானே மேட்டூரா எனக் கேட்டுவிட்டு எனது  பையை மற்றொரு இருக்கையில் வைத்துவிட்டு கீழ் இறங்கி நின்று கொண்டேன்.

கண்ணில் பார்த்ததால் உருவாகும் வேதனை, பார்க்காதிருந்திருந்தால் இருந்திருக்காதே...அதே இன்னும் கொஞ்சம் காலம் தாழ்ந்து வந்திருந்தால் இந்த அலைக்கழிப்பு எண்ணம் எல்லாம் தோன்றியே இருக்காதே...மேலும் அந்த இருக்கையை பயன்படுத்தினாலும் கண்ணுக்குத் தெரியா கிருமிகள், வைரஸ்கள் அதைப் பயன்படுத்துவாரையும் ஒட்டிக் கொள்ள வாய்ப்பிருக்கலாமே... என்றெல்லாம் நினைவோட்டம்...

காலம் நகர ஆரம்பித்தது. மறுபடியும் அந்த மனிதன் மணி எத்தனை , ரயில் எத்தனை மணிக்கு கிளம்பும் என கேட்டான். சொன்னேன். சிறிது நேரத்தில் மாணவர்கள் வர ஆரம்பித்தனர்.

அந்த மனிதன் மெதுவாக எழுந்து ஒரு காகித பெப்ஸி டப்பாவுடன் குடி நீர்க் குழாயருகே சென்று விட்டு மறைந்து போனான்.
அவன் மேட்டூர் ரயில் பயணியாக காட்டிக் கொண்டது பொய் என்பது புரிந்து போனாலும் இது போன்ற முகங்களும், மனிதர்களும் நிறைய நிறைய இப்போதெல்லாம் பொது இடங்களில் திரிவதை, உழல்வதை பார்க்கத் தாளமுடியவில்லையே என்றாலும் நாமும் இந்த உருப்படி இல்லா சமூகத்தில் மகனை உருப்படி ஆக்குவதற்காக ஒரு கல்வி நிறுவனத்தில் பணி செய்து உடலை உயிரை உருக்கி வாழ்பவன் தானே என்று பார்க்க நினைக்க ஆரம்பிக்கும்போதே ஹோசிமின்னாக நாமும் விளங்கி  நாட்டுக்கெல்லாம் ஒரு நல்ல தலைமையைத் தர மாட்டோமா என்று ஒரு கேள்வியும் உதி(ர்)த்தபடியே நாட்கள் போய்க் கொண்டிருக்கிறது.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Sunday, July 15, 2018

நன்றி கலையகம் அன்பரசன்: கவிஞர் தணிகை

NGO Sector, The Trojan horse of capitalism - ஒரு துண்டுப்பிரசுரம்

Image result for ngo

------------------

"அரசு சாரா நிறுவனங்கள்" (NGO) என்றால் என்ன? எதற்காக மேற்கத்திய நாடுகளின் அரசுகளும், முதலாளிகளும் அந்த அமைப்புகளுக்கு நிதி கொடுத்து வளர்க்கிறார்கள்?

நூலில் உள்ள விபரங்கள் சுருக்கமாக:

தேர்தல்களால் மாற்றம் வரும் என்றால் தேர்தல் நடத்துவதை தடை செய்து விடுவார்கள் என்று சொல்லப் படுவதுண்டு. அந்தக் கூற்று NGO க்களுக்கும் பொருந்தும். உலக நாடுகள் ஒவ்வொன்றிலும், இந்த "அரசு சாரா" நிறுவனங்களை, நடைமுறையில் உள்ள அரசுகள் சகித்துக் கொள்வதன் காரணம் என்ன?

NGO என்பது, அரசு, நீதித்துறைக்கு அடுத்ததாக, ஜனநாயகத்தின் மூன்றாவது அமைப்பாக கருதப் படுகின்றது. அதிகாரம், அடக்குமுறை, வறுமை போன்றவற்றுக்கு எதிராக NGO க்கள் போராடுவதாக காட்டப் படுகின்றது. உண்மையில், இது முதலாளித்துவத்தின் இன்னொரு ஏமாற்று வேலை. தேர்தல்கள் மூலம் மக்களுக்கு தெரிவு செய்யும் சுதந்திரம் இருப்பது போன்ற மாயை உருவாக்கப் பட்டுள்ளது. அதே மாதிரி, NGO க்கள் சமூகத்தை ஜனநாயக மயப் படுத்துவது போன்ற மாயை உண்டாக்கப் படுகின்றது.

NGO என்ன செய்கிறது? அரசுக்கும் மக்களுக்கும் நடுவில் மத்தியஸ்தம் வகிப்பதாக காட்டிக் கொள்கிறது. இதன் மூலம் அரசுக்கு எதிரான மக்களின் கோபங்களை தணிக்க உதவுகிறது. அரச எதிர்ப்பு சக்திகளை சட்டபூர்வமான, அமைதியான, கட்டுக்கோப்பான அமைப்பாக மாற்றுகின்றது. 

இதன் மூலம், மக்களை முதலாளித்துவ ஆதரவாளர்களாக மாற்றுவதுடன், ஆளும் வர்க்க கருத்தியல்களை ஏற்றுக் கொள்ளவும் வைக்கிறது. மேற்கத்திய நாடுகளில் NGO க்களின் தாக்கம் மிகக் குறைவாக இருந்த போதிலும், பிற உலக நாடுகளில் அவற்றின் ஆதிக்கம் அளவிட முடியாதது.

அரசு சாரா நிறுவனங்கள் என்று சொல்லிக் கொண்டாலும், அவற்றிற்கு கிடைக்கும் நிதியில் ஒரு பகுதி அரசிடம் இருந்து வருகின்றது. பல வகையான NGO க்கள் உள்ளன. தொண்டு நிறுவனங்கள் மட்டுமல்லாது, அதிகாரத்தை கட்டமைப்பவை, உள்நாட்டு, சர்வதேச NGO க்கள் என்று பல வகையானவை. 

NGO என்றால் என்ன என்ற கேள்விக்கு, "ஒரு தனியார் தொண்டு நிறுவனம்" என USAID கூறும் வரைவிலக்கணம் சர்ச்சைக்குரியது. அதை ஏற்றுக்கொள்ள முடியாத காரணம், அரசுகளும், கார்ப்பரேட் நிறுவனங்களும் அவற்றிற்கு உதவுவதால் மட்டும் அல்ல. ஒரு NGO அமைப்பு, மனேஜர்கள் போன்ற சம்பளத்திற்கு வேலை செய்யும் ஊழியர்களையும், இலவச தொண்டு வேலை செய்யும் களப் பணியாளர்களையும் கொண்டுள்ளது.

1945 ஆம் ஆண்டு எழுதப் பட்ட ஐ.நா. சாசனத்தில் தான் NGO பற்றிய குறிப்புகள் வருகின்றன. இருப்பினும், உலகில் மிகப் பழமையான NGO, 19 ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் உருவாக்கப் பட்ட சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஆகும்.

இந்த NGO க்களுக்கான நிதி எங்கிருந்து வருகின்றது? உலகளவில் கார்ப்பரேட் நிறுவனங்களும், அரசுகளும் நிதி கொடுக்கின்றன. அதே நேரம், கிறிஸ்தவ, இஸ்லாமிய, யூத மத அமைப்புகளும் சிறியளவில் நிதி வழங்குகின்றன. முதலாளிகளையும், அரசையும் பின்பற்றி, மத நிறுவனங்களும் தமது செல்வாக்கை பயன்படுத்த விரும்புகின்றன.

சர்வதேச மட்டத்தில், அநேகமாக நீங்கள் கேள்விப் பட்ட எல்லா பெரிய நிறுவனங்களும், NGO க்களுக்கு நிதி வழங்கும் அமைப்புகளை கொண்டுள்ளன. Microsoft, Monsanto, Nike, Ford, Starbucks... இது போன்ற பெரும் முதலாளிய நிறுவனங்கள் மட்டுமல்லாது, தனிப்பட்ட செல்வந்தர்களும் நிதி வழங்குகின்றனர். பில் கேட்ஸ், ஜோர்ஜ் சோரோஸ், ரொக்கபெல்லர் என்று பலரைக் குறிப்பிடலாம்.

கார்ப்பரேட் நிறுவனங்கள் ஏழைகள், சிறுவர்கள், நோயாளிகள் போன்றோருக்கு உதவும் திட்டங்களை செயற்படுத்துவதன் நோக்கம் என்ன?  சமூகத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு உதவும் பொறுப்புள்ள நிறுவனங்கள் என்று காட்டிக் கொள்கின்றன. இந்த நற்பெயர், மக்கள் அவர்களது உற்பத்திப் பொருட்களை பெருமளவில் வாங்க வைக்கும். அதனால் அதிக இலாபம் கிடைக்கும்.

ஆப்பிள் நிறுவனம் ஆசிய நாடுகளில் இலட்சக் கணக்கான தொழிலாளர்களை சுரண்டுகின்றது. அவர்களை நாளொன்றுக்கு பதினான்கு மணித்தியாலம் வேலை செய்ய வைத்து கசக்கிப் பிழிகிறது. ஒரு ஐபோனின் விலை தான், அதைச் செய்யும் தொழிலாளியின் ஒரு வருடச் சம்பளமாக இருக்கும். ஆப்பிள் நிறுவனம் மலேரியா தடுப்பு மருந்துக்கு கொஞ்சப் பணத்தை நன்கொடை வழங்குவதால், இந்தக் கொடுமைகள் மறைக்கப் படுகின்றன.

வளர்ந்து வரும் நாடுகளுக்கு, கார்ப்பரேட் நிறுவனங்கள் வழங்கும் குறுகிய கால உதவிகள் மூலம், அந்தப் பிரதேசங்களை அபிவிருத்தி அடைய விடாமல் பார்த்துக் கொள்கின்றன. இதனால் அவை என்றென்றும் மேற்கத்திய நாடுகளில் தங்கியிருக்கும். கார்ப்பரேட் நிறுவனங்கள், அந்த நாடுகளின் வளங்களை இரக்கமற்று சுரண்டிக் கொண்டிருக்கின்றன. இதனால் அபிவிருத்தி தடைப் படுவதுடன், NGO நிறுவனங்களின் கருணையில் தங்கியிருக்க நிர்ப்பந்திக்கப் படுகின்றன. இதனால்,வறுமை, பட்டினி, நோய்கள், எழுத்தறிவின்மை போன்றவற்றை ஒழிப்பதற்கான மக்களின் போராட்டத்தை தகர்க்கின்றன.

எதற்காக முதலாளிகள் NGO நிறுவனங்களுக்கு நிதி வழங்குகிறார்கள்? முதலாளித்துவ பொருளாதார விதியின் படி பார்த்தால் இது ஒரு "மீளப் பெறப் படாத செலவு". அதாவது, ஒரு வணிக நிறுவனத்தின் ஒரு பகுதி உற்பத்தி செலவுக்கும், இன்னொரு பகுதி மீள் முதலீட்டுக்கும் செலவாகிறது. இதில் இலாபம் தனியாக ஒதுக்கப் படுகின்றது. அப்படியானால், எதற்காக முதலாளிகள் தமது இலாபத்தின் ஒரு பகுதியை தொண்டு நிறுவனங்களுக்கு செலவிடுகிறார்கள்?

தொண்டு நிறுவனங்களுக்கு அள்ளிக் கொடுக்கும் முதலாளிகள் கொடை வள்ளல்கள் என்று சமூகத்தில் படம் காட்டப் படுகின்றது. ஆனால், இது ஒரு கொடை அல்ல. அவர்களது வர்த்தகத்தை உறுதிப் படுத்தவும், எதிர்கால இலாபத்தை நிச்சயப் படுத்துவதற்குமான முதலீடாக அந்தப் பணம் செலவிடப் படுகின்றது. இதனால் கிடைக்கும் இலாபம் நீண்ட கால நோக்கிலானது.

NGO நிறுவனங்கள், முதலாளித்துவ சமுதாயத்தின் மீதான நன்மதிப்பை உருவாக்கி, முதலாளித்துவத்தை நிலைநிறுத்துகின்றன. ஜனநாயகமயப் படுத்தலுக்காக, பொருளாதார சுதந்திரத்திற்காக பாடுபடும் NGO க்களுக்கு கார்பரேட் முதலாளிகள் அள்ளிக் கொடுப்பதும் காரணத்தோடு தான். பொருளாதாரத்தை மறு கட்டமைப்பு செய்வதன் அர்த்தம், உற்பத்தி, தொழிலாளர் உரிமைகள், ஏகபோகம் போன்ற விடயங்களில் மிகக் குறைந்தளவு கட்டுப்பாடுகளை கொண்டு வருவது தான். இதனால், பெரும் முதலாளிகளுக்கு மிகப் பெரும் செல்வம் செல்வம் சேர்வதுடன், உழைக்கும் வர்க்கத்திற்கு அவலங்களும் உண்டாகும்.

அரசு எதற்காக NGO க்களுக்கு உதவுகின்றது? நடைமுறையில் உள்ள அரசு, பணக்காரர்களை பாதுகாப்பதையும் அவர்களது நலன்களை உறுதிப் படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. அரசானது, வன்முறை மீது ஏகபோக உரிமை பாராட்டுவதுடன் அடக்குமுறையையும் ஏவி விடுகின்றது. இன்றுள்ள முதலாளித்துவ சமூக அமைப்பை பாதுகாக்கும் நோக்கில் அரசு NGO க்களுக்கு நிதி வழங்குகின்றது. அரசு உறுதியாக இருந்தால் தான், அது பணக்காரர்களுக்கு சேவை செய்ய முடியும்.

NGO க்கள் முன்னெடுக்கும் "போராட்டம்" என்றைக்குமே அரசுக்கு அச்சுறுத்தலாக இருக்கப் போவதில்லை. அவர்கள் வீதியில் இறங்கிப் போராடுவதில்லை. வன்முறை பிரயோகிப்பதில்லை. அத்துடன், மையப் பிரச்சினைகள் பற்றிப் பேசுவதில்லை. பாராளுமன்றத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசும் அளவிற்கு கோபத்துடன் இருப்பவர்களை, NGO க்கள் தம்முடன் சேர்த்துக் கொண்டு அஹிம்சா வழியில் போராடுமாறு சொல்லிக் கொடுக்கின்றன. அவர்களை கோட்டு சூட்டு போட்ட அலுவலகப் பணியாளர்களாக, அறிக்கைகள் எழுத வைக்கின்றன.

எந்த NGO வும் புரட்சிகரமாக செயற்பட முடியாது. அது தனது கணக்கு அறிக்கைகளை தயாரிப்பதிலும், அடுத்த வருடத்திற்கான நிதியை பெற்றுக் கொள்வதிலும் அதிக கவனம் செலுத்துகின்றது. நிதியின்றி எந்த NGO வும் இயங்க முடியாது. அரசும், கார்பரேட் முதலாளிகளும் புரட்சிகர NGO வுக்கு நிதி வழங்க மாட்டார்கள். சுருக்கமாக, ஒரு NGO வின் செயற்பாடுகளும், போராட்டங்களும், அந்த நாட்டின் சட்டங்களுக்கு உட்பட்டதாக அமைய வேண்டும்.

சட்டங்களுக்குள் அனுமதிக்கப் பட்ட போராட்டம் வெற்றி காண முடியாது. அது எப்போதும் அதிகார வர்க்கத்துடனான சமரசப் பேச்சுவார்த்தைகளில் தான் முடியும். அரசாங்கத்தையும், அதன் சட்டங்களையும் எதிர்க்கும் NGO போராட்டம் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மட்டுமே அனுமதிக்கப்படும். ஆனால், அது அதிகாரத்தை முழுமையாக கேள்விக்குட்படுத்த மாட்டாது. அரசைக் கவிழ்க்க நினைக்கும் NGO சட்டப் படி பதிவு செய்ய முடியாது. சமூகத்தில் NGO எந்த மாற்றத்தையும் கொண்டு வர முடியாது என்ற நம்பிக்கையில் அரசாங்கம் அமைதியாக ஆட்சி செய்கின்றது.

பிற்குறிப்பு: 
துண்டுப்பிரசுரம் போன்ற இந்த சிறு நூல், (முன்னாள் யூகோஸ்லேவிய குடியரசான) மசிடோனியாவில் உள்ள Crn Blok என்ற இடதுசாரி (Anarchist) அமைப்பால் வெளியிடப் பட்டுள்ளது.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Sunday, July 8, 2018

...நல்லதுதான் திரும்ப அழைக்கும் உரிமையும் வரட்டுமே: கவிஞர் தணிகை

 ...நல்லதுதான் திரும்ப அழைக்கும் உரிமையும் வரட்டுமே: கவிஞர் தணிகை


Image result for indian parliament election 2019


நாடு தேர்தலை நோக்கி மறுபடியும் அடி எடுத்து வைக்கிறது...வீட்டு வாசலுக்கு வாக்கை சரி பார்க்கும் ஆசிரியர்  காலை வந்து சென்றார்.பிரதமர் மோடி சுமார் 800 ஐ.ஏ.எஸ்களை நாடு தழுவிய அளவில் சுமார் 117 மாவட்டங்களில் உள்ள மிகவும் பின் தங்கிய பகுதிகளுக்கு அனுப்பி அதுவும் ஆகஸ்ட்  15க்குள் அனுப்பி அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்ய இருப்பதாக செய்திகள் வந்திறங்கியுள்ளன. எப்படி ஒரு மாதத்தில் இது போன்ற ஒரு பெரிய குறிக்கோளை நிறைவேற்றப்போகிறார்கள் என்பது பெரிய கேள்விக்குறி...தேர்தல் நோக்கிய அறிகுறி...கேலிக்குறியும் கூட.


மேலும் மத்திய மாநிலத் தேர்தலை ஒரு சேர நடத்துவது பற்றியும் கருத்துகள் மாநிலம் வாரியாக முதல்வர்களிடமும், கட்சிகளிடமும் கேட்கப்படுகின்றன. இச்சூழலில் அவரவர்களும் அவர்களுக்கு சாதகமான பதிலை வேண்டும் வேண்டாம் எனத் தெரிவித்து வருவதாக நிலை .

சுமார் 70 வயதுக்கும் மேலான எனது நண்பர் இது போல மாநில மத்தியத் தேர்தல்கள் ஒரு சேர நடத்தப்பட்ட காலம் இருந்ததுதான் என்கிறார். மக்கள் தொகையை கணக்கில் கொண்டு இது நடத்த முடியாதது என்றெல்லாம் சொல்வதில் பொருள் இல்லை. அறிவியல் முன்னேற்றம் எல்லாவற்றையும் கடந்த நிலையில் இன்னும் வளர்ந்தபடியே உள்ளது.

தேர்தல் ஆணையம் ஒரே நேரத்தில் ஒரு சேர அப்படி மாநில மத்தியத் தேர்தல்களை நடத்த சாத்தியமில்லை, அதற்கான சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தால் நடத்தலாம் என்கிறது. அந்த சட்டத்தை மத்திய அரசு கொண்டு வரட்டும். தேர்தலை அப்படியே நடத்தவும் செய்யட்டும் அதில் எல்லாம் எந்தத் தவறும் இல்லை. ஆனால் மோடி அரசு வாக்கு எந்திரங்களைத் தவறாக பயன்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டின் கறைகளை எல்லாம் கழுவி தூய்மையாக துடைத்து இந்த தேர்தலை நடத்த வேண்டும்

நாடு முழுதும் ஔரஙக சீப் ஆட்சி புரிந்தது போல ஒரே ஆட்சி மோடி ஆட்சியாக இருக்க வேண்டும் என்ற பேரவா இருக்கிறது இந்த ஆளும் கட்சி அரசுக்கு என்ற குற்றச் சாட்டுகளும் இல்லாமல் இல்லை அவற்றிடமிருந்து எல்லாம் வெளி வந்து இந்தத் தேர்தல் நடத்தப்பட வேண்டியதுவே ஒரு ஜன‌ நாயக ஆட்சிக்கு  ஒர் ஜனநாயக நாட்டுக்கு அழகு.

ஆனால் கட்சிகள், வேட்பாளர்கள் செலவு செய்யக் கூடாது. அரசே வேட்பாளர்களின் செலவை ஏற்றுக் கொள்ள வேண்டும், தவறும் வேட்பாளர்களை கட்சிகளை தேர்தல் களத்தில் இருந்தே தூக்கி விசிறி எறிந்து விட உறுதியான நடவடிக்கை வேண்டும்.

அடுத்து ஊழல், இலஞ்சம், வருவாய்க்கு மீறிய சொத்து என்பது ஒவ்வொரு ஆண்டும் பதவியிலிருப்பார், அவர்கள் உறவுகள், அவர்கள் பினாமிகள் என்னும் பார்வையில் போர்வையில் எவராவது இருந்தாலும் நிரூபிக்கப்பட்டால் அவர்களை 'திரும்ப அழைக்கும் உரிமையும்" மக்களின் வாக்குகளுக்கு வழங்கப்பட வேண்டும்.

இதெல்லாம் செய்ய முடியாததல்ல. செய்யும் அக்கறை உடையார் மட்டுமே நாடாளும் அருகதையுள்ள பதவிக்கே வர வேண்டும். இராதா கிருஷ்ணன் நகர் நடந்த தேர்தல், மற்றும் இடைத்தேர்தல்  , பொதுத் தேர்தல்கள் போன்றவற்றில் செலவிடும் சட்டத்துக்கு புறம்பான தொகையை மக்களிடம் திருப்பி விடும் தொகையை தடுத்து நிறுத்துமளவு தேர்தல் ஆணையத்துக்கு  வசதி வாய்ப்புகளோ சட்ட அங்கீகாரமோ இல்லை என்கிறார்கள் தேர்தல் முன்னால், இந்நாள் ஆணையர்கள் அவை அவர்களுக்கு இருக்க சட்ட வரைவுகள் கொண்டு வரப்படல் அவசியம்

ஆக  ஒரு சேர தேர்தல் நடக்கட்டும், அது சாதி மதமாச்சர்யங்கள் கடந்து மக்களுக்கு சேவை செய்த செய்யும் ஆட்சியாக  நல்ல வேட்பாளர்களைக் கொண்டு மலரட்டும்....


Related image

ஆனால் இதெல்லாம் நடக்கும் என்கிறீர்கள்?

பார்ப்போம் இனி வரும் எதிர்காலத்தை மேல் மேலான சுவையான செய்திகளுடன்...

                                      மறுபடியும் பூக்கும் வரை
                                            கவிஞர் தணிகை.