Sunday, July 30, 2017

கொண்டலாம்பட்டி,வேடுகத்தாம்பட்டி பள்ளிகளில் விநாயகா மிஷன்ஸ் பல் மருத்துவக் கல்லூரியின் முகாம்கள்: கவிஞர் தணிகை

கொண்டலாம்பட்டி,வேடுகத்தாம்பட்டி பள்ளிகளில் விநாயகா மிஷன்ஸ் பல் மருத்துவக் கல்லூரியின் முகாம்கள்: கவிஞர் தணிகை

கடந்த வாரத்தில் கொண்டலாம்பட்டி வித்யாமந்திர் சிபிஎஸ் ஈ பள்ளியிலும் வேடுகத்தாம்பட்டி அரசினர் துவக்கப் பள்ளியிலும் விநாயகா மிஷன்ஸ் சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரியின் பல் பரிசோதனை, மற்றும் பல் பராமரிப்பு முகாம்கள் நடந்தன.

இந்த முகாம்களை கல்லூரி முதல்வர் டாக்டர் பேபிஜான் நடத்துவதற்கான அனுமதி அளித்தார், சமுதாய பல் மருத்துவத் துறைத் தலைவர் டாக்டர்.என்.சரவணன் வழி காட்டுதலுடன் நடந்த இந்த முகாம்களில் சுமார் 1500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர் பயன் பெற்றனர்.




தலைமை ஆசிரியை சிரூன், காத்ரீன் மற்றும் ஆசிரியர்கள் உறு துணை புரிந்தனர். டாக்டர் மூகாம்பிகை உட்பட 20 கை தேர்ந்த கல்லூரியின் மருத்துவர்கள் சேவை புரிந்தனர். வாய் சுத்தம், பல் தூய்மையின் அவசியம்
தினமும் இரு முறை பல் துலக்குவதன் முக்கியத்துவம், பல் துலக்கும் சரியான முறைகள், பராமரிக்கும் வழிகள் போன்றவை செய் முறை விளக்கங்கள் வழியாகவும் விழிப்புணர்வுக் கருத்துரை வழியாகவும் அனைவர்க்கும் கொண்டு சேர்க்கப்பட்டது...



முக்கியாக வேடுகத்தாம்பட்டி 300 தொடக்கப்பள்ளி மாணவர்களை இடப் பற்றாக்குறை பள்ளியில் இருப்பதாலும் பள்ளியின் வகுப்புகள் 3 இடங்களில் இருப்பதாலும், தற்போது கட்டட வேலை நடைபெறுவதாலும் ஊருக்குப் பொதுவான முனியப்பன் கோவில் அருகே வேப்ப மரத்தடியில் விழிப்புணர்வு கருத்துரை இயற்கையான சூழலில் நடத்தப்பட்டது மிகவும் ரசிக்கும்படியாக இயல்பாக இயற்கையான கல்வி முறையாக அமைந்திருந்தது.

முகாம்களை முகாம் அலுவலர் சு.தணிகாசலம் ஒருங்கிணைத்து நடத்தி வைத்தார்.



இது ஒரு அறிக்கை

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Saturday, July 29, 2017

சேலம் ரெயில்வே நிலையத் திருடன்: 27.07.2017. : கவிஞர் தணிகை


சேலம் ரெயில்வே நிலையத் திருடன்: 27.07.2017. : கவிஞர் தணிகை
Related image
3 காவலர்கள் எங்கிருந்தார்கள்? எப்படி வந்தார்கள் என்றே தெரியவில்லை அந்த 15 வயதுக்குள் இருக்கலாம் என மதிப்பிடும் அந்த திருடனை கையும் களவுமாக நான் பிடித்தபோது ...

காலம் என்னை சேலத்து ரயில் சந்திப்பில் நடைப்பயிற்சியை சுமார் 1 மணி நேரம் செய்ய வைத்து அதன் பின் மாலையில் வீடு நோக்கி கொண்டு வந்து சேர்த்து வருகிறது.

நான் ரயில் சந்திப்பை அடையும்போது என்றுமே மாலை 4.30 அல்லது 4.40 மணியில் கடிகார முள் அல்லது சிவப்பு விளக்கு நேரம் காட்டிக் கொண்ட்ருக்கும்.

27. 07 .17 அன்றும் அப்படித்தான் நேரத்துடன் சென்று விட்டேன் இப்படித்தான்  ஓராண்டுக்கும் மேல் மாதாந்திர அனுமதிச் சீட்டு பெற்று மாலை வேளை மட்டும் அதை பயன்படுத்தி வீடு வந்து சேர்ந்து வருகிறேன்.

மேட்டூர் ரயில் எப்போதுமே 5. 30 மணிக்கு மாலையில் புறப்படுவதாக இருக்கும் அப்படியே குறித்த நேரத்தில் எடுக்காமலும் இருந்ததில்லை. கரூர் ரயிலும் இதுவும் ஒரே நேரத்தில் எடுத்து நான் பார்த்ததும் உண்டு. ஆனால் எப்போதும் கரூர் ரயில் குறித்த நேரத்தில் கிளம்பி விடும். இந்த மேட்டூர் ரயில் மட்டும் ரயில் சந்திப்புக்குக் காவலாக அங்கேயே இருக்கும். கோவை விரைவு வண்டி சென்னை வரை செல்வது இந்த நேரத்தில் குறுக்கிட்டு அதே 5. 30 நேரத்தில் சென்றவுடன் அதிலிருந்து 10 நிமிடம் கழித்தே இந்த மேட்டூர் ரயில் புறப்படும். சதாப்தி கூட ரயில் நிலையம் வந்து சேர்ந்து விடும் கோவைக்குப் பின் சென்னை செல்லும் ரயில்.

அது கடைசிப் பெட்டி அப்போதுதான் எங்கள் ஊரில் ரயில் மெதுவாக சிக்னலுக்காக மெதுவாகச் செல்லும்போது ஆபத்தின்றி இறங்கிக் கொள்வதும் நடந்து வருகிறது. குடியரசுத் தலைவர், பிரதமர், ரெயில்வே மந்திரி, தென்னக ரயில்வே, சேலம் கோட்டம் மேலாளர் அனைவரிடமுமே எங்கள் ஊரில் அதிக எண்ணிக்கையினர் இறங்குவதால் ஒரு நிமிடம் நிறுத்தி எடுத்துக் கொள்ளவும் என ஆயிரம் பிரதிநிதித்துவம், குரல் கொடுத்தும் அது நடக்காத கதை எல்லாம் வேறு...

எனவே மிக்க நேரம் இருப்பதால் நான் எனது முதுகில் தூக்கும் பையை உள்ளே கடைசிப் பெட்டியில் இறங்குவதற்கு வசதியாக வைத்து இடம் போட்டு விட்டு வெளி வந்து நடந்து வருவது வழக்கம்.

இந்த முறை சரியானதில்லை என ஏற்கனவே ஒரு காவலர் சொல்லியிருந்தபோதும் வேறு வழியில்லாமல் அப்படி செய்து வந்தேன. ஒரு  முனைவர் பட்டம் பெறும் நோக்கத்தில் உள்ள ஆய்வுப் படிப்பு படித்து வரும் ஒரு பெண்மணி அவரிடம் பார்க்கச் சொல்லி வைத்திருந்த தோள் பையை சொல்லாமல் கொள்ளாமல் விட்டுச் சென்றதிலிருந்து இப்படித்தான் செய்து வருகிறேன். அங்கே நடைப்பயிற்சித் தோழர் எல்லாம் எனக்கு உண்டு.

ஆனாலும் என்ன செய்தாலும், பை மேல் ஒரு கண் இருக்கும். பையில் பெரிய மதிப்புடைய பொருள் எதுவுமிருக்காது எனினும் ரயில் பயண மாதாந்திர அனுமதிச்சீட்டு, சில அலுவலகக் குறிப்புகள் தொலைபேசி எண்கள் குறித்த நோட்டு, சாப்பிட்டு விட்டு கழுவி வைத்த இரண்டு டப்பாக்கள் அதில் ஒன்று எனக்கு மேடையில் பேசியதற்கு பரிசாக அளித்த  உணவை சூடு குறையாமல் வைத்திருக்கும் டப்பா, டப்பர் வேர் குடி நீர் பாட்டில், அப்துல் கலாம் கடிதம் அதன் பின் எனது ஒரு பக்க வாழ்க்கைச் சுருக்க அறிமுக விவரங்கள், ஒரு துண்டு அவ்வளவுதான். அத்துடன் அலுவலக என் மேஜையின் லாக்கர் சாவிகள்...

இதற்கே ஒரு திருடன் வந்து விட்டான் பாருங்கள். நான் சற்று வெளி வந்து சில முறை கூட நடந்திருக்க மாட்டேன், அதே பெட்டியில் வடநாட்டை சேர்ந்த ஒரு கணவன் மனைவி...அந்தப் பெட்டியின் அடுத்த வாயிலின் அருகே..

இந்தப் பையன் அல்லது இளைஞன் சில முறை நடந்து பார்த்தான் ,நானும் அவனைப் பார்த்தேன் .ஆனால் அந்த வேலையை செய்வான் என எதிர்பார்க்கவில்லை. பொதுவாகவே எவரும் சந்தேகப்படும்படி இருந்தால் பையை கவனத்தில் இருந்து சிதற விடாத எனக்கு...

அவன் என் ரயில் கடைசிபெட்டியில் கடைசி இருக்கையில் இருந்த எனது தோள் பை அருகே அமர்ந்து பைக்குள் கையை விட்டு துழவிக் கொண்டிருந்த  காட்சி கண்ணில் பட, இது யார் பை, என்னடா பண்றே என நான் கேட்டுக் கொண்டே சென்று அவனைப் பிடிக்க ,அவனோ பை திறந்திருந்தது, சாவிதான் இருந்தது எனச் சொல்லிக் கொண்டே தப்பி ஓடி ரயில் பெட்டியின் வாயிலருகே ஓடி இறங்க முனைந்தான் அந்த வட நாட்டு ஆணும் அருகே வந்தார், நான் அவரை இவன் உங்க சொந்தம் என்றல்லவா நினைத்து விட்டேன் எனச் சொல்ல அவர்கள் அறிந்திருந்த தமிழில் இல்லை என மறுத்தனர்...

அவனைப் பிடித்து இழுத்தபடி போலீஸ்ல பிடிச்சுக் கொடுக்கப் போறேன் எனச் சொல்ல அவனோ ஒரு சீட்டின் அருகே உள்ள கம்பியை இழுத்து பிடித்தபடி நான் இழுத்த இழுப்புக்கு வராமல் நகராமல் அடம் பிடிக்க எங்கிருந்தனரோ , எப்படி வந்தனரோ, 3 காவலர்கள் உடனே அங்கு வந்து சேர்ந்தனர், அவர்களில் ஒருவர் எனக்கு ஏற்கெனவே அறிமுகமானவர், அவர் அந்த பையை அப்படி எல்லாம் வைக்காதீர்கள் என ஏற்கனவே ஒரு முறை அறிவுறுத்தியவரும் கூட.

அதை அடுத்து வேறு எங்கிருந்தோ இரு இளைஞர்கள், அவனை விட சற்று வயதில் உருவத்தில் பெரியவர்கள் வந்து விட்டு விடுங்கள் எனக் கெஞ்ச ஆரம்பிக்க, காவலர் வந்து விட்டனர், அவர்களாச்சு, இனி இவன் ஆச்சி, என்ன வேண்டுமானாலும் அவர்கள் செய்து கொள்ளட்டும் என விட்டு விட்டேன்.


அவர்களில் ஒருவர் என் பொருள் யாவும் இருக்கிறதா எனப் பார்த்துக் கொள்ளுங்கள் என்றார். பார்த்தேன் எல்லாம் இருந்தது. அதில் சாவிகள் இருந்தது உனக்கு எப்படிடா தெரியும், திருடலைன்னா, ஏன்டா ஓடறே,என்று கேட்டு விட்டு விட்டு விட்டேன்.

காவலர்கள்: எங்கு போகிறீர் என விசாரித்து , அனுமதிச் சீட்டு இருக்கிறதா எனக் கேட்டுக் கொண்டு அவர்களை கூட்டிக் கொண்டு 3 ஆம் எண் நடைமேடைக்கு கொண்டு சென்று விட்டனர்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.



Image result for THIEVES AND POLITICAL THIEVES

THIS MAIL I RECEIVED FROM 
LAKSHMANAN MARIMUTHU
HE GAVE TRANSLATION ALSO.
JUST I AM POSTED HERE
IF IT IS RELEVANT ....



Image result for THIEVES AND POLITICAL THIEVES







Lakshmanan Marimuthu

Jul 27 (2 days ago)
to Chinnu, bcc: me
   
Translate message
Turn off for: Tamil
விக்கி லீக்ஸ் (WIKI LEAKS) வெளியிட்டு உள்ள இந்திய கருப்பு பண முதலைகளின் முதல் 30 பேர் கொண்ட முதல் பட்டியல்... (பணம் கோடி கணக்கில்)
1. அம்பானி ₹5,68,000
2. அதானி ₹7,800
3. அமித்ஷா ₹1,58,000
4. ராஜ்நாத்சிங் ₹82,000
5. அருண்ஜெட்லி ₹15,040
6. சுமித்ரிதி இரானி ₹28,900
7. எடியூரப்பா ₹9,000
8 . ரவிசங்கர் குருஜி ₹15,000
9. பாபா ராம்தேவ் ₹75,000
10. ஜனார்த்தன ரெட்டி ₹50,000
11. நளின் கோலி ₹5900
12. தேவேந்தர ஃப்ட்னாவிஸ் ₹2,20,000
13. லலித் மோடி ₹76,888
14. சுஷ்மா சுராஜ் ₹5,82,114
15. நரேந்திர மோடி ₹19,800
16. ஷர்ஷத் மேத்தா ₹1,35,800
17. கத்தான் பாரத் ₹8,200
18. கட்டா சுப்ரமணிய நாயுடு ₹14,500
19. லாலு பிரசாத் யாதவ் ₹28,900
20. ஜேஎம்.சிந்தியா ₹9,000
21. கலாநிதி மாறன் ₹15,000
22. வையாபுரி கோபாலசாமி ₹35,000
23. வசுந்திரா ராஜ் ₹5,900
24. ராஜ் ஃபவுண்டேசன் ₹1,89,008
25. என்.சந்திரபாபு ₹1,68,009
26. ஜெ.ஜெயலலிதா ₹2,57,500
27. சோனியா காந்தி ₹3,00,089
28. சுப்ரமணிய சுவாமி ₹2,20,060
29. சசிக்கலா ₹1,54,700
30. டிடிவி.தினகரன் ₹12,870
இந்தியர்களின் கருப்பு பணம் மட்டும் சுவிஸ் வங்கியில் இருப்பது ₹358,679,863,300,000 (1.3 ட்ரிலியன் டாலர்; ரூபாயில் போட தெரிந்தவங்க போடுங்க!) இந்த பணம் 10 அமெரிக்காவுக்கு சமம். அடுத்த 100 வருடங்களுக்கு உலகில் சக்தி வாய்ந்த முதல் நாடாக இந்தியா இருக்கலாம்.
ஊழலுக்கு எதிரான போருக்கான ஆயுதம் இதோ..! இதுபோல் 2,000 இந்தியர்கள் இதுமாதிரி வரி ஏய்ப்பு நடத்தி திருட்டுத்தனமாக சுவிஸ் வங்கியில் பணம் வைத்துள்ளனர்!
இதை விட்டுபுட்டு ஜிஎஸ்டியாம்; பண மதிப்பு இழப்பு நடவடிக்கையாம்; என்னடா கூத்து இது! யாரை ஏமாத்த இந்த டுமீல்!
(புதுச்சேரி சப்தர் ஹஸ்மி கலைக்குழு நிர்வாகி தோழர் அன்பு வாடஸ்அப் மூலம் பெறப்பட்டது சங்கதி இது; ஆங்கில மூலத்தின் அடியேனின் தமிழாக்கம்!)

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Sunday, July 23, 2017

வந்தே விட்டது பேராபத்து. :கவிஞர் தணிகை

புலி வருது புலி என்ற பழமொழிக் கதை மெய்யாகி புலி வந்தே விட்டது: கவிஞர் தணிகை

Related image

வந்தே விட்டது பேராபத்து. குடிநீரும் , நீரும் பணக்காரர்களுக்கு கிடைக்கும் பேரமிர்தமாகிவிட்டது.ஏழைகள் வாங்கவும் தேக்கிக் கொள்ளவும் முடியா நிலை. மேட்டூரில் நீர் நிலை தூய்மை செய்கிறார்கள் என்று 8 நாட்கள் நீர் வராது என்று அறிவிப்பை செய்து விட்டார்கள்.

வீட்டுக்கு ஒரு கிணறு இருந்த சூழலை கெம்ப்ளாஸ்ட் அயோக்ய நாய்கள் மக்களின் நலனை சிறிதும் சிந்திக்காத நிலையில் முன்னால் இருந்த அரசியல் பேய்களின் பேச்சைக் கேட்டு சிமென்ட் குழாய்கள் வழியே அனுப்பாமல் கழிவு நீரை நன்னீர் ஓடையின் வழியாக அனுப்பி இந்தப் பகுதி வாழ்வாதரத்துக்கே வஞ்சகம் விளைத்து விட்டார்கள். விளைவாக இன்று எல்லா பயன்பாட்டுக்கும் காவிரி நீரை நம்பியே மேட்டூர் மக்கள்.
\
ஆனால் காவிரியில் 25 அடி இந்த ஆடி மாதத்து உச்சக் கட்டக் காலத்தில் .மக்கள் எல்லாம் நீரின்றி இதே நிலை நீடித்தால் குடி பெயர்ந்தாக வேண்டிய நிலை வரும் என்றே எண்ணுகிறேன்.

தங்கத்தை விட குடி நீரின் விலை அதிகம் கூட ஆகலாம். வீட்டின் மேல் தொட்டி டேங்குகள் வைத்திருப்பார் எல்லாம் நீரை நிறைத்து வைத்திருப்பார் எல்லாம் பிழைத்துக் கொள்ளலாம் ஆனால் அது மட்டும் காலம் முழுதும் வந்து விடுமா? டேங்கரில் நீர் வாங்கி வருகிறார்கள். நிலத்தடி நீர் மட்டும் எவ்வளவு நாளுக்கு வரும்...எங்கும் போதாமை இல்லாமை...

இதில் ஆடி அமாவாசைக்கென்று புரோகிதர்களின் சமஸ்கிருத சத்தம் கோவில் எங்கும்....

டெல்லியில் உயிரியில் பூங்காவில் புலிக்கும், சிம்பன்ஸி குரங்குக்கும் பிறந்த நாள் விழா என கேக் ஊட்டியபடி கொண்டாடிப் பார்க்கிறார்களாம் அங்கே விவசாயிகள் மண்டையோடுகள், எலும்புகள் வைத்து போராடியவண்ணம் அரை மொட்டை அடித்துக் கொண்டு போராடியும் கேட்க நாதியில்லை. அதை மத்திய அரசுக்கு எடுத்துச் சொல்லும் தமிழக அரசும் இல்லை.

இந்நிலையில் ஜந்தர் மந்தரில் இந்த விவசாயிகளுக்கென ஒதுக்கப்பட்ட கழிப்பகம் வேண்டுமென்றே சில நாட்கள் சுத்தம் செய்யா நிலையில் கழிவு நீர் வெளியேறாமல் இவர்கள் போராட்டம் நடத்தும் இடத்துக்கே வந்து நாற்றம் எடுக்கிறதாம்.

இதெல்லாம்தான் இந்த அரசின் ஆட்சியின் இலட்சணங்கள்..இராம் நாத் கோவிந்த், வெங்கய்யா நாயுடு இருவரே பாக்கி.இனி இந்த நாட்டின் பிரச்சனைக்கெல்லாம் இந்த நாட்டின் முதல் குடிமகனாய், இரண்டாம் குடிமகனாய் வந்து தீர்வு செய்து விட...

நீர் பணக்கார சொத்தாக மாறி விட்டது, தனியார் மயம் குடிநீரில் கொண்டு வந்து நீரை எடுத்து விற்பனை செய்தார் எல்லாம் நாட்டுக்கு சேவை ஏன் உலகுக்கே சேவை செய்த வள்ளல்களாய் உலகே பாராட்டுப் பத்திரம், விருதுகள் வழங்க கௌரவிக்கப்படுகிறார்கள்...

இனி நீர் திருட்டு, நீர்க்கொள்ளை, நீர் கொண்டு செல்லும் வாகனம் வழி மறிப்பு, கடத்தல், நீருக்காக கொலை எல்லாம் நடக்கும்...

இந்த நிலை மாற வேண்டுமானால் நீரும் நிலமும் பொது உடமையாக அரசே கையகப்படுத்த வேண்டியதன்றி வேறு வழியே இல்லை...

நிலை ஒரு படி அதிகமாக போய்க்கொண்டிருக்கிறது. சொல்லத் தரமில்லா நிலை என்று சொன்னால் ஒரு படி இன்னும் கீழே இறங்கிக் கொண்டிருக்கிறது. இணையத்தை, வலை தளத்தை வாட்ஸ் ஆப்பை, வலைப்பூக்களை ,முகநூலை வைத்துக் கொண்டு தாகம் தீர்க்க முடியாது...நாக்கை கூட வழிக்க முடியாது. எல்லாம் சர்க்கரை என்று சொன்னவுடன் இனிக்கும் என்ற கதைதான்...

பிக் பாஸ் கமலை முதல்வராக்கலாம்.

அதைக்கூட அப்படி சொல்வதற்கு எஸ்.வி. சேகர் போன்றோர் ரஜினி முதல்வராம், கமல் துணை முதல்வராம் என கமலை தாழ்த்தி ரஜினியை உயர்த்தி பேசி ஒத்த கருத்தைப் போல தமது வேறுபாட்டை காட்டி இருக்கிறார்

வேண்டாம் அரசியல் வேண்டாம் என்னும் ரஜினிக்கு வாய்ப்பளிப்பதை விட மகக்ள் வாக்களித்தால் நானும் முதல்வர்தான் என அரசியலுக்கு வர விரும்பும் கமலுக்கு வாய்ப்பளிப்பது நல்லதுதான்...

தேசிய நீர்வழிச்சாலை சொல்லும் ஏ.சி.காமராஜ் அவரது காலத்தில் அமையுமா இல்லை சசியின் கர்நாடக புராணமாய் நீளுமா என்பதெல்லாம் காலம் காட்சிப் பொருளாய் காட்டிக் கொண்டிருக்கட்டும்...
Related image


குமாரசாமி தீர்ப்பு செய்த போது இந்த கர்நாடகம் மிகவும் தூய்மையாக இருந்தது இந்த சசியின் செயலால் மட்டுமே சிறைத்துறை கெட்டுவிட்டதாம்.
என்றாலும் ரூபா காவல்துறை களங்கமில்லாப் பெண்மணி, உண்மையை வெட்ட வெளிச்சமாக்கியதற்கு அவர்க்கு மாறுதல் பரிசளித்த கர்நாடகம் அவரை தமிழகத்துக்கு அனுப்புவது நல்லது.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Thursday, July 20, 2017

பச்சோலைக்கு இல்லை ஒலி (அ) தலைமுறை இடைவெளி: கவிஞர் தணிகை.

பச்சோலைக்கு இல்லை ஒலி (அ) தலைமுறை இடைவெளி: கவிஞர் தணிகை.


Related image


சாகர சங்கமம் அல்லது சலங்கை ஒலியில் கமலஹாசனுக்கு நேர்ந்தது போல எனக்கும் பவர் பாண்டியில் ராஜ் கிரணுக்கு நடப்பது போல எனக்கும் ஆனால் அந்த மதுக்குடியும், காதலும் இதன் கருப்பொருள் இல்லை, 55 வயதுடனான என்னுடன் 18 வயதுகள் போட்டியும் மோதலும் செய்து, அவர் தான் மாஸ் காண்பிக்க வேண்டும், நாம் எல்லாம் காண்பிக்கக் கூடாது , முடியாது என எங்கள் மேட்டூர் பயணிகள் ரயிலில் இன்று ஒரு இளைஞரின் கமென்ட்.

ரயில் அங்கு சிக்னலுக்காக சற்று வேகம் குறைந்து செல்லும்போது நான் முதன் முதலாக கடைசிப் பெட்டியிலிருந்து எங்கள் ஊரில் இறங்கிக் கொண்டிருக்கிறேன் அது என் நிலை. அந்த நிலைக்குத்தான் எத்தனை போட்டிகள், எத்தனை பொறாமைகள், எத்தனை எதிர்மறை எதிரிமறை சிந்தனைகள்...

வேறு எதுவுமே வேண்டாம், இந்த நாட்டின் பழங்குடி ஆதிவாசிகளுக்கு 10 ஆண்டுகள் உழைத்து உடற் பிணிகள் பல பெற்று இன்று மகனை படிக்க வைப்பதற்காக இப்படி ஊசலாட்டம் ஆடிக் கொண்டிருக்கிறேனே அதில் ஒரு மயிர்க்கால் அளவு இவர்களுக்கு தகுதி இருந்தால் இவர்களும் என்னை போட்டி என நினைக்கலாம்...

இந்த உலகில் ஒவ்வொரு உயிரும், ஒவ்வொரு மனிதருமே தனித் தனி. தனித்தன்மை பெற்றவரே. எவருக்கும் எவருமே போட்டியாளராக இருக்க முடியாது. இந்த சிந்தனையில் நான் தெளிவாக இருக்கிறேன். என்னால் எவரையுமே போட்டியாளராக எண்ணி செயல் படவும் முடியாது.

நான் சொல்வதெல்லாம் கடந்த 50 ஆண்டுகளில் அறிவியல் மாறுதல்கள் ஆயிரம் வகையில் தொடர்பு வழி சாதனங்களை வெகு எளிதாக இந்த இளைஞர்க்கு கையில் கொணர்ந்து சேர்த்தி இருக்கலாம், ஆனால் எமது வாழ்வில் இருந்த சுவையில் நூற்றில் ஒரு பங்கு கூட இவருக்கு இல்லை. இவரிடம் எந்த வித தியாக உணர்வும், நேர்மையான சிந்தனையும் இல்லை.

நான் பார்த்தவரை இவர்களுக்கு எல்லாப் பிரிவு சார்ந்த மக்களும் உதவ வேண்டும் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கின்றனரே அன்றி இவர்கள் எவருக்குமே எதையும் செய்ய ஆரவமாக இருப்பதாகத் தெரியவில்லை.

நான் இந்த உலகு, நாடு, மாநிலம், மாவட்டம், வட்டம், ஊர் என்ற அடிப்படையில் ஏற்பட்ட சமூக, கல்வி, பொருளாதார, அரசியல், கலாச்சார, விளையாட்டு சார்ந்த அனைத்து துறைகளையும் சார்ந்தே சொல்கிறேன்.

நிறைய உறவுகளை இழந்து விட்டனர், நிறைய நட்பை இழந்து விட்டனர், நல்ல நல்ல விடயங்களை இழந்து விட்டனர், வெறும் போலித்தனமான கையளவு ஸ்மார்ட் போன் பெட்டி மட்டுமே இவர்களின் வடிகாலாகி விட்டது.

நான் விளையாடிய கில்லி தாண்டல், பச்சைகுதிரை, சூறைப்பந்து, ஒக்காந்தா கை குடுக்கறது, கோலி குண்டுகளின் பல விளையாட்டுகள், கபாடி எனப்படும் சப்பாளாங்க் குடுகுடு சடுகுடு,குச்சியை தள்ளிக் கொண்டே போதல், கண்ணாமூச்சி, நொண்டி, பாண்டியாட்டம், ஓடி விளையாடி அவுட் ஆக்குவது, பம்பரம் விடுதல், பட்டம் விடுதல், காத்தாடி பறக்க விடுதல், காத்தாடிக்காய் சுழட்டி விட்டு காற்றில் அழகு பார்த்தல்,சூட்டுக்காய் தேய்த்து சூடுவைத்து சண்டை செய்து கொள்ளல், பரம பதம், தாயம், வேர்க்குரு ஒருவருக்கொருவர் எண்ணியபடி கிள்ளிக் கொள்ளல் அல்லது கீறி அதை உடைத்து விடுதல்,ஆடு புலி ஆட்டம், வாசல் கூட்டும் வெளக்கமாறு வைத்து கையை மூடி விளையாடுதல்,பல்லாங்குழி,கேட்வில் கொண்டு காய் அடித்தல் ஏன் குருவி காகம் துரத்துதல், ஊஞ்சல் ஆடுதல் ஆட்டுதல், ஸ்கிப்பிங் இப்போது பேர் அப்போது உயரத் தாவி எண்ணிக்கை எண்ணுதல், இன்னும் எத்தனையோ இன்னும் முழுதாக சொல்லி நிறைவு செய்து விட எனக்கு எண்ணமில்லாமல் குறைவாகவே மனக்குறையாகவே இருக்குமளவு எண்ணிறந்த விளையாட்டுகள்...கருக்காட்டம் பழம் சாப்பிடல், வேப்பம்பழம் சாப்பிட்டு கொட்டையை காசுக்கு விற்றல்..
Related image

விளையாட்டுத் துறை ஒன்றுமட்டுமே இங்கு சொல்லி உள்ளேன். இது போல எல்லாத் துறைகளிலும் ஏகப்பட்ட துறைகளிலுமே இப்போது வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது. கடந்த 15 முதல் 20 ஆண்டுகளாகவே மதுக்குடி இல்லா இளைஞரை பார்ப்பது அரிதாகிவிட்டது. நல்ல பெண்ணுக்கு நல்ல மணமகனும் நல்ல மணமகனுக்கு நல்ல மணப்பெண்ணும் மதுக் குடி இல்லாமல், ஒழுக்க நேறிய நெறிகளுடன் கிடைப்பதே அரிதாகிவிட்டது.

பெற்றோர்கள் தம் பிள்ளைகளுக்கு துணை சேர்க்க ஆண்டுக்கணக்காய் அலையோ அலை என அலைய வேண்டியதிருக்கிறது. அப்பொதெல்லாம் எங்கு எவர் வீட்டில் காட்டில் செல்லும் வழியில் நீர் கேட்டால் கொடுப்பார்கள் குடிக்கலாம் உடல் நலம் கெடாது...எந்தக் காட்டிலு எந்தப் பண்டமும் விளைச்சலில் சும்மாவே கொடுப்பார்கள் தின்ன,,, இப்போது எந்த விவசாயிடமும் சென்று எதையாவது சும்மா கேட்டுப்பாருங்கள் எனச் சொல்வதே தவறு பெரும் குற்றம், விவசாயம் அவர்களுக்கு சுருக்குக் கயிறாகிவிட்டது.

வரலாறு காணாத அளவு இந்த 50 ஆண்டிலும் காணாத அளவில் மேட்டூர் அணையில் நீர் 24 அடி மட்டுமே இந்த ஆடி மாதம் கரை புரண்டு ஓட வேண்டிய காவிரி நதி காய்ந்து கிடக்கிறது...அப்போது எங்கள் ஊர்களில் வீட்டுக்கொரு குடிநீர்க்கிணறு இருந்தது சில அடிகள் வெட்டினாலே அருமையான நீர் கிடைத்தது, அதில் ஒரு ஆவியிலேயே பருப்பு வெந்துவிடும் என்பார்கள்.. அத்தனையும் பாழ் இன்று நீருக்கு நாட்டுக்கே வழிகாட்டும் எமது காவிரி எங்கள் ஊருக்கே குடி நீர் கொடுக்க போதாமல் தவிக்கிறது...

இப்படி பல மனித இயல் அடிப்படையில்  திருமணம், குடும்பம், மதம், சாதி, பிரிவுகள், மொழி, கலாச்சாரம் எல்லா அடிப்படையிலும் முகம் சிதைந்து போய்விட்டது  எனவே இன்றைய இளைஞர்களுக்கு ஒரு நல்ல தமிழ் சிந்தனையை எழுதியுள்ளதை பகிர்ந்து கொள்ளக் கூடத் தெரியவில்லை. ஆனால் இவர்கள் எல்லாம் தெரிந்து கொண்டது போல வயது வித்தியாசம் தெரியாமல் மரியாதை தெரியாமல் பேசி உறவின் நல்லுறவை அழித்து வருகிறார்கள்...

எல்லா இலையுமே துளிர் விட்டு, விரிந்து பச்சையாக இருந்தது பழுப்பாகி, காய்ந்து ஒரு நாளில் உதிர்ந்து போகத்தான் வேண்டும். ஆனால் அவைகள் செய்யும் ஆர்ப்பாட்டம் காட்டவே இந்தப் பதிவு...

நான் வீண் பெருமைக்காக எனது செயல்பாட்டு பட்டியலை இங்கு இணைக்கவில்ல...நான் எனது வாழ்நாளில் இதை எல்லாம் நாட்டுக்காகவும் வீட்டுக்காகவும் செய்திருக்கிறேன். அதில் ஒரு 5 விழுக்காடாவது இவர்கள் செய்து விட்டு என்னோடு போட்டிக்கு வரலாம்...

என்னிடம் மது, புகை, போதை போன்ற எந்த தீய வழக்கமும் இல்லை. இன்னும் என்னால் முடிந்தளவு இந்த நாட்டின் சமுதாய மக்களுக்கு மனமுவந்து பள்ளிப் பிள்ளைகளுக்கும், ஏனைய மாந்தருக்கும் ஒரு நல்ல பொறுப்பான பதவியில் இருந்து கொண்டு அரும்பணியாற்றியே வருகிறேன். அவை பற்றி தனியே வைத்துக் கொள்ளலாம்.

எனது தாயை தந்தையின் இறப்புக்க்கும் பின் சுமார் 20 ஆண்டுகள் நல்ல முறையில் கவனித்து அவர்க்கு செய்ய வேண்டிய காரியம் கடமைகளை நல்ல முறையில் செய்து முடித்தும் கூட இந்த ஆண்டுடன் சுமார் 11 ஆண்டு நிறைவடைந்து 12 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் 9லிருந்து அடியெடுத்து வைத்திருக்கிறேன்...இந்த தாயும், பெற்றோரும் ஊரும் உலகும் இவரைப் பெற நற்தவம் செய்தே இருக்க வேண்டும் எனப் பேர் விளங்க நல்ல சேவை செய்வதே எனது வாழ்க்கையாகிப் போனது....

நான் பின் சொல்லும் குறிப்புகளுக்கும் அப்பாற்பட்டு: இந்த நாட்டை நல்ல பாதையில் திருப்ப: அன்பு சகோதர நண்பர் கொ.வேலாயுதம் அவர்களுடன் நவ இந்திய நிர்மாணிகள் இயக்கம், காந்திய வழியில் ஊருக்குப் பத்து பேர் இயக்கம், தமிழக இலட்சியக் குடும்பங்கள் என்ற அமைப்புகளிலிருந்து எண்ணிறந்த பணிகளை செய்திருக்கிறோம்...அதில் வந்த இணைந்த பிறவிகள் தாம் சசிபெருமாள், சின்ன பையன் போன்ற தியாகிகள் யாவரும்...

எனக்கு இந்த பிறவியில் பெரும் திருப்தி இருக்கிறது. இன்னும் செய்வதில் எல்லாம் பெறும் திருப்தி இருக்கிறது...

நான் இந்த நாட்டின் மாபெரும் சபைகளில் எல்லாம் கூட எனது உரையை நிகழ்த்தி இருக்கிறேன்...எனத் பேச்சு எழுத்து பலருக்கும், நாட்டுக்கும், ஊருக்கும், எனைச் சுற்றி உள்ள அனைவர்க்கும் எப்போதுமே பயன்பட்டே இருந்து வந்திருக்கிறது இனியும் அது பயன்படும்...ஆனால் இந்த சுயநலப்பதர்கள் எல்லாம் என்னுடன் போட்டியிட்டு பேச வருவதுதான் எனக்கு ஏற்றுக் கொள்ள முடியாதிருக்கிறது...



கீழே நான் செய்ததில் சில குறிப்பிடத்தக்கதை சுருக்கமாக சொல்லில் வடித்திருக்கிறேன்...படியுங்கள் பாருங்கள்...பின்னர் பார்க்கலாம்...

கவிஞர் தணிகை
கவிஞர் தணிகை என்ற சுப்ரமணியம் தணிகாசலம் காவிரிக்கரை ஓரத்தில் மேட்டூர் நீர்த் தேக்கத்தின் அருகே பிறந்து (Puthu Samballi)

இந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர்..பெ.ஜெ.அப்துல் கலாம் அவர்களின் மதிப்பு மிக்க கடிதத் தொடர்புடன் இணைந்து

இந்தியாவின் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாய் இருந்த மேதகு.பி.என்.பகவதி அவர்களின் அவையில் பங்கெடுத்துப் பேசி அவருடன் உண்டு மகிழ்ந்து கலந்து அளாவளாவி

11 சிறு நூல்களை தம்மால் முடிந்த அளவு நாட்டுக்கு ஈந்து ஆனால் எனது புத்தகங்கள் படிக்க அல்ல பயன்படுத்த….  ¦¾Õ  ºó¾¢ôÀ¢ø °¡¢ý Ó츢 «¨¼Â¡ÇÁ¡¸ò ¾¢¸Øõ ¦¾öÅ¡ ¾¢Â¡Éô À¢üº¢
¸Õõ ÀĨ¸Â¢ø ¦À¡ý¦Á¡Æ¢¸û ÀøÄ¡ñθǡ¸ ±Ø¾¢ ÅÕõ Ҹؼý ....
 ¯Õš츢 ¯ÕÅ¡¸¢..

தெய்வா பதிப்பகம், தெய்வா ஆலோசனை மையம், தெய்வா தியானப்பயிற்சி மையம் ஆகியவற்றுடன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பயிற்சி பெற்றும் பயிற்சி அளித்தும்

முதல் நூலான மறுபடியும் பூக்கும் உலகின் மிகப் பெரும் நூலகத்தொகுதியான அமெரிக்கன் நூலகக் கூட்டத்தில் வாழ்க்கைக் குறிப்போடு இடம் பெற்று

இந்தியாவின் பழங்குடிகள், ஆதிவாசிகள், மலைவாழ் மக்களுக்காக 10 ஆண்டுகளுக்கும் மேல் திட்ட அலுவலராக இணையிலா உழைப்பை ஈந்து இந்தியா எங்கும் பல மாநிலங்களுக்கும் சென்று ஊதியமாக உடல் பிணிகள் பல பெற்று இவரின் உழைப்பு மகாத்மா காந்தி, மதர் தெரஸா ஆகியோரின் பணிகளைப் போன்றது என சான்று வழங்கப் பட்டு

நேரு யுவக்கேந்திரா, காந்திய கிராமியப் பல்கலைக்கழகம், பயிற்சி பணி செய்து, காந்திய சிந்தனையில் வள்ளியம்மை கல்வி நிறுவனத்தில் முதல் பரிசு பெற்று....

வேர்ட்பிரஸ் டாட் காம் வழி 1150 பதிவுகளை மறுபடியும் பூக்கும் தளம் வழிப் பகிர்ந்து அதன் அடையாளமாக மறுபடியும் பூக்கும் சர்வீஸஸ் என சேவை தொடர்ந்து...

இப்போது மறுபடியும் பூக்கும்.பிளாக்ஸ்பாட்,டான் பேஜஸ் டாட் காம், தணிகை ஹைக்கு தளங்களிலும், முக நூல், ட்விட்டர், கூகுள்+ போன்ற சமூக தளங்களிலும் உங்களோடு இணைந்து...
3 கோவில்களை நிர்மாணிக்க அடிப்படைப் பணிகள் செய்து,Tree plantation,A.P.J.Movement etc.

¦¾¡¨Ä측𺢸û, Å¡¦É¡Ä¢ Àò¾¢¡¢¨¸¸û °¼¸í¸Ç¢ý ¦ÅÇ¢îºõ ÀÄÓ¨È ¦ÀüÚ...
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் உங்களுக்கு அது ஆர்வமாக இருந்தால்...

சுயமாக சேவையை விட்டுப் பிரிய நினைத்தாலும் அது வாழ்வின் இறுதி வரை இயற்கையாகவே இணைந்து பின்னிப் பிணைந்து செல்ல வாழ்ந்து

எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே என வாழ்ந்து...visit:www.marubadiyumpookkum.blogspot.com  www.thanigaihaiku.blogspot.com
www.dawnpages.wordpress.com Having Bible,Quran,Geeta with equal status.




மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை...