Saturday, June 15, 2019

தமிழ் நாடு தேர்வாணையத்தின் புதிய அரசிதழ் வெளியீடு: கவிஞர் தணிகை

தமிழ் நாடு தேர்வாணையத்தின் புதிய அரசிதழ் வெளியீடு: கவிஞர் தணிகை


Image result for is it truly on merit basis?

கடந்த முறையை விட இந்த முறை ஆன் லைனில் விண்ணப்பம் செய்வது மிகவும் எளிதாக சுலபமாக பயன்படுத்துவோரின் தோழமையுடன் இந்த செயல்பாட்டை வடிவைமத்துள்ளார்கள். அதற்காக பெரிதும் நன்றி பாராட்ட கடமைப்பட்டுள்ளோம்.

ஒவ்வொரு முறையும் மிகத் தெளிவாக கொடுக்கும் தகவல்களை சரி பார்த்துக் கொள்ளுங்கள் என திரும்பத் திரும்ப கேட்டு விவரம் அளித்து தவறுகள் நேராமல் மிகவும் அருமையாக பக்கங்களை திறந்து விண்ணப்பத்தை விவரங்களை உள்ளீட்டு பெட்டிகளுக்குள் தர வாய்ப்பு தந்திருக்கிறார்கள்.

மேலும் முதல் முறை நிரந்தரமாக பதிவு செய்து கொண்டவர்க்கு சில முறைகள் அதாவது ஊனமுற்றோர், பட்டியலிடப்பட்ட இனம், முன்னால் இராணுவத்தினர் ஏன் வழக்கத்துக்கு மாறாக பிற்படுத்தப்பட்ட இனத்தார்க்கும் கூட மூன்று முறை இலவசமாக கட்டணம் கட்டாமலேயே இந்த தேர்வுகளை எழுத அனுமதித்துள்ளார்கள்.

எல்லாம் சரிதான் இப்போது செப். 1 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை இந்த தேர்வு அவரவர்கள் தாலுக்கா அளவில் இருக்கும் மையங்களில் எழுத வாய்ப்பு மேலும் இந்த முறை விண்ணப்பிக்க‌ ஜூலை 14 வரை விண்ணப்பிக்க‌ கடைசி நாள் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

சுமார் 6400 பணியிடங்களுக்கு நடக்கும் இந்த தேர்வில் கிராம நிர்வாக அலுவலர்க்கு வயது 21 நிறைவடைந்திருக்க வேண்டும் ஜூலை 1 2019 அன்று எனக் குறிப்பிட்டுள்ளனர். மற்றபடி சுருக்கெழுத்து, தட்டெழுத்து, சர்வேயர் ட்ராப்ட்மேன் பயிற்சி பெற்றவர் தவிர பொதுவாக மூவாயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள் இளநிலை உதவியாளர்கள். பில் கலெக்டர்கள் போன்றவற்றில் உள்ளன.

ஒரு முறை நிரந்தரமாகப் பதிவு செய்து விட்டாலே 5 ஆண்டுகள் வரை அந்த பதிவை வைத்தே எளிமையாக விவரங்கள் அளித்து விண்ணப்பிக்கலாம் ஆனால் வேலை கிடைக்குமா என்பது பற்றி எவருமே உறுதி சொல்ல முடிவதில்லை.

ஏன் எனில் மெரிட் அடிப்படையில் இருந்தாலும் தமிழக அரசுப் பதவிகளுக்கு ஒரு செல்வாக்கு தேவைப்படுகிறது என பொது நீரோட்டம் நிலவுகிறது ஆனால் இதற்கு ஆதாரம் கேட்பார்கள். எவரும் ஆதாரத்துடன் இப்போது எந்த தவறையும் செய்வதில்லை. செய்ய அனுமதிப்பதுமில்லை.

ஊடகம் நேற்றைய தினம்கூட ஆளும் கட்சி அவசர அவசிய கூட்டம் பற்றிக் காணொளி மற்றும் செய்தி தரும்போது இரு கோஷ்டிகளும் எதிரும் புதிருமாக பேசிக் கொண்டன அதில் வருவாய் வரும் முக்கியமான 3 துறைகளுமே இ.பி.எஸ் முதல்வர் அணியிடம் உள்ளதாக் ஓ.பி.எஸ் அணி குற்றம் சாட்டியதாக செய்திகளைத் தெரிவித்தனர். வருவாய் என்றால் எப்படி சாலை, பாலம் , மற்றும் அரசுப் பணிகளை நிறைவேற்றித் தரும் ஒப்பந்ததாரர்களிடம் பெறும் வேலையை ஒப்படைப்பதற்காக பெறும் தொகை, பணியை ஏனோ தானோவென்று செய்து விட்டு அதில் அடிக்கும் தொகை மாறாக இப்படி பணி நிரந்தரம், பணி, மாறுதல் இதற்கெல்லாம் என ஒரு ரேட் இப்படி கைமாற்றுவார்க்கே மிக எளிதாக வேலைவாய்ப்புகள் இருப்பதாக பரவலாக பேச்சுகள் நிலவி வருகின்றன.

இது எந்த அளவு உண்மையோ பொய்யோ ஆனால் ரயில்வே சர்வீஸ் கமிஷனை விட த.நா.தேர்வாணையத்தின் அணுகுமுறை மாநில அளவில் அது நாடு தழுவிய அளவில் என்பதால் தமிழக இளையவரை மற்ற மாநிலத்துக்கு சென்று எழுதச் சொல்லுமளவு சித்ரவதை எல்லாம் இல்லாமல் நடத்துகிறார் என்பது மட்டுமே இதைப்பற்றி நாம் கருத்தில் கொள்ளும் மென்முகம்.
Image result for is it truly on merit basis?


மற்றபடி பணி வாய்ப்பு பற்றி எல்லாம் எதைப்பற்றியும் சொல்வதற்கில்லை.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.


No comments:

Post a Comment