Sunday, March 31, 2019

தேர்தலை நிறுத்தலாம் (அ) வேட்பாளரை நீக்கலாம் (அ) கட்சியைத் தடை செய்யலாம்: கவிஞர் தணிகை.

தேர்தலை நிறுத்தலாம் (அ) வேட்பாளரை நீக்கலாம் (அ) கட்சியைத் தடை செய்யலாம்: கவிஞர் தணிகை.

ரெண்டும் ஒரே குட்டைலே ஊறின மட்டைன்னேன்...காம‌ராசர்

Image result for election 2019


சபேசன் என்னும் அ.இ.அ.தி.மு.க  மந்திரியின் பினாமியிடம் 16 கோடி பிடித்தது தேர்தல் செலவு செய்ய வைத்திருந்த பணம்தாம் என்று மாநில தேர்தல் ஆணையர் ஒப்புதல் செய்திருக்கிறார்

அவர் மின் துறை மந்திரிக்கும் தமிழக முதல் மந்திரிக்கும் வேண்டப்பட்டவர் என்று அரசியல் வட்டாரங்களின் தகவல்கள்

கனி மொழி தேர்தல் வாக்கு சேகரிக்க செல்கையில் ஆரத்தி எடுப்பாருக்கு அருகிருக்கு ஒரு நபர் பணத்தை தவறாமல் அளித்து வந்ததை காணொளி காண்பிக்கிறது

துரைமுருகன் மகனது வீடு பள்ளி கல்லூரி வளாகங்களில் சோதன செய்யப்பட்டு தேர்தல் வேட்பு மனுவில் கை ரொக்கம் 5 இலட்சம் தாம் சொல்லப்பட்டுள்ளது இப்போது எப்படி வீட்டில் 10 இலட்சம் உள்ளது எனக் கேள்விகளும் பதில்களுமாக...

இதெல்லாம் இன்றைய பதினேழாவது  லோக்சபா தேர்தல்களின் சில தமிழகக் காட்சிகள் மட்டுமே...

72 ஆண்டு ஆச்சு சுதந்தரம் பெற்று, 69 ஆண்டு ஆச்சு குடி அரசாகி குடிக்க குடி நீருக்கு உத்தரவாதமில்லாம செயற்கைக்கோள் அழிக்க ஏவுகணை ஏவி சீனா அமெரிக்கா ரசியாவுக்கு அடுத்து நாலாவது நாடோனோம் இந்த பூமிப்பந்தில் ....புல்லரிக்குது மோடிஜி.... வல்லரசாக மாறும் குடி மக்கள் பட்டினியாக மாறியும்...


அதே போல உபி முதல்வர்  யோகி ஆதித்யநாத் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்க பேர்கள் names வாசிக்கப்பட கீழ்த்தட்டு மக்கள் அனைவரும் வரிசையாக வந்து பணம் பெற்றுக் கொண்டு அவரது காலை முட்டிக்காலைத் தொட்டு வணங்கிச் செல்வது காட்டும் காணொளிகள்....

இந்தியாவில் இதே போல பல மாநிலங்களிலும் தேர்தல் கால பணத்தை பிடித்து அதில் தமிழகம் முதல் இடம் 107 கோடி உ.பி இரண்டாம் இடம் 104 கோடி என பட்டியல் இடுவதோடு தேர்தல் ஆணையத்தின் பணி முடிந்து விடுகிறதா?

கிருஷ்ணமூர்த்தி என்னும் ஓய்வு பெற்ற தலைமைத் தேர்தல் ஆணையர் காசு வாங்கிக் கொண்டு வாக்களிப்பாரை நாய்கள் என்றெல்லாம் பேசி இருப்பார் ஆனால் தேர்தல் ஆணையம் இதற்கு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க முடியாது மக்கள் தாம் எடுத்தாக வேண்டும் என்று முடித்திருப்பார்.

தேர்தலின் போது இவ்வளவு பணம் பிடிப்பட்டது உண்மை எனவே தேர்தலை நிறுத்துங்கள், கட்சியைத் தடை செய்யுங்கள், வேட்பாளரை மாற்றுங்கள் என எல்லா மக்களும் வெகுண்டு எழுந்து டில்லியில் மோடிக்கெதிராக எலிக்கறி தின்றும் நிர்வாணமாக சென்றும் போராடிய விவசாயிகள் போல் எல்லா மக்களும் அரசு அலுவலகங்கள், சாலைகள், பொது சந்திப்புகள் பொது இடங்களில் எல்லாம் சென்று போராடவேண்டுமா அதன் பின் தாம் அதற்கு விடிவு வருமா.... தேர்தல் ஆணையமும் அரசும் மக்களுக்கு வழி காட்ட வேண்டுமல்லவா,,, மக்கள் வழி காட்ட வேண்டும் என எதிர் பார்ப்பது எந்த நியாயம்? இல்லை தூத்துகுடி ஸ்டெரிலைட் காப்பர் ஆலைக்கு எதிராக கூட சுடப்பட்டு இறக்க வேண்டுமா அல்லது மெரினாவில் கூடி உலக தமிழக வரலாறை எழுதி கடல் கரையில் கூடி கடலை போட வேண்டுமா....இவை எல்லாம் இல்லாவிட்டால் ஏதும் செய்யாதா?

அமித் ஷாவின் சொத்து 4 கோடிக்கும் மேல் உயர்ந்திருக்கிறது என்றும், அவரது இல்லாத மகனது கம்பெனி கோடியாய் கோடிக்கணக்கில் இலாபம் ஈட்டி வருகிறது என்றும் செய்திகள் உள்ளன.

ஏன் தமிழக முதல்வர்  தலைமைப் பதவி ஏற்ற புதிதில் அவரது உறவினர் இளங்கோ என்பார் இவர் சேலம் கூட்டுறவு வங்கியில் மேலாளர் அப்போது சேலத்திற்கு நான் வி கார்ட் கம்பெனிக்கு அந்த வழியாக ஸ்டெபிலைசர் ஒன்றை சரி செய்ய சென்றிருந்த போது அந்த வங்கியில் சோதனை அச்சோ போச்சு போச்சு என ஏகப்பட்ட மக்களின் குரல் அதிர்வலைகள் ஆனால் ஒன்றுமே நடைபெறவில்லை மோடி அரசின் மிரட்டல்வழிகளில் ஒன்று என ஓரங்கட்டப்பட்டது இன்றளவும் அதே இளங்கோவன் அரசு விழாவில் முதல்வருடன் கலந்து வருவதை ஊடகத்தின் காட்சிகள் காண்பித்து வருகின்றன.... எல்லாம் பேரம்

ஜெ மறையவும், ஓ.பி.எஸ் இறக்கப்படவும், சசி சிறை புகவும், எடப்பாடியாருக்கு அடித்த யோகம் மாதிரி எவருக்குமே இந்திய சரித்திரத்தில் இடம் இல்லை. ஏன் எனில் எந்த தேர்தலும் வெற்றியும் இன்றி கட்சியின் தலைமை நெருக்கம் மட்டுமே காரணமெனக் கொண்டு ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் முதல்வரான வரலாறு அ.இ.அ.தி.மு.கவில்... அதில் மோடியின் சரண் புகுந்ததும் ...

மாபெரும் தலைவர்கள் எல்லாம் தேர்தலில் தோற்ற சரித்திரங்கள் உண்டு. ஆனால் சிலர்  வெற்றியே பெற்று வந்திருக்கிறார்கள்...

அரசியல் நடத்த வேண்டுமெனில் கட்சி நடத்த வேண்டுமெனில் இப்படி ஒப்பந்ததாரர் அரசுப்பதவியினர் எல்லாம் கைக்கொண்டு திரண்ட செல்வம் வேண்டும் அதை முதலீடு மறு முதலீடு செய்தாக வேண்டும் அப்படித்தான் அரசும் கட்சியும் தேர்தலும் என்று இந்திய ஜனநாயகம் சொல்லித் தந்து வருகிறது.

கமல் கூட கமீலா நாசர், ஸ்ரீபிரியா, சினேகன், கோவை சரளா இப்படி அவரை சுற்றுகிற நபர்களையே தேர்தல் வேட்பளாராக்கியதை கவனியுங்கள்
நேராக களத்தில் குறுக்கு வெட்டுத் தோற்றத்தில் இறங்கி களம் புகாதைதயே இதெல்லாம் காட்டுகிறது.

பேசாமல் அரசும் தேர்தல் ஆணையமும் வாக்காளர்க்கு வாக்களிக்கும் தினத்தில் ரூபாய் நூறு முதல் ஐநூறு வரை தந்து விருப்பப்படி வாக்களித்து விட்டு  வாருங்கள் எனச் சொல்லி கட்சிகளைக் கட்டுப் படுத்தலாம்

மேலும் வேட்பு மனு தாக்கல் செய்வதோடு முடிந்தது வேட்பாளரை வெளிப்படுத்த தேர்தல் ஆணையத்துக்கு மட்டுமே தகுதி என்றும் நிர்ணையித்து நேரடியாக சென்று வாக்களரைச் சந்திக்கும் முறையையே கூட கட்சிகளிடம் இல்லாதபடி தடைப்படுத்தி விடலாம்.

தேர்தலை நிறுத்தலாம் அல்லது வேட்பாளரை மாற்றலாம் அல்லது கட்சியைத் தடை செய்யலாம் அதை எல்லாம் விட்டு விட்டு வெறும் கணக்கு தந்து கொண்டு தேர்தல் பயணத்தை நடத்தி வருவது உலகின் மாபெரும் ஜனநாயக நாட்டின் தேர்தல் மேளா, தேர்தல் திருவிழா, தேர்தல் கூத்து  ஜனநாயகம் என்பதை ஒரு கேலிக்கூத்தாகிவிடுகிறது.

இதில் எல்லாரும் தவறாம வாக்களியுங்கள் இது ஒரு ஜனநாயகக் கடமை இல்லையேல் நீங்கள் எல்லாம் முட்டாள்கள், மடையர்கள் ஜனநாயகத் துரோகிகள் என்றெல்லாம் பட்டம் வேறு...

தி.மு.கவின் இருபது பேரில் அதே இராஜா, கனிமொழி, தயாநிதி,துரைமுருகன் மகன் இந்த  புதுமுகம் பொருளாளருக்கு அங்கீகாரத்துக்கு..(. பொருளாளர் பதவியையே குடும்பத்துக்கு வெளியில் கொடுத்ததே பெரிய சாதனையாச்சே....)
டி.ஆர் .பாலு  ஜெகத் ரட்சகன் இப்படியாக... இவர்கள் எல்லாம் விட்டால் வேறு எவருமே பாராளுமன்றம் போகத் தகுதியானவர் இல்லை...ஏன் எனில் அப்பாவே மகனுக்கு முதல்வர் பதவியையும் கட்சித்தலைமைப் பதவியையும் கடைசி மூச்சு வரை விட்டுத் தராத போது கட்சி எப்படி அடுத்தவர்க்கு விட்டுத் தரும்?

அப்போது தி.மு.கவை வரவே விடமாட்டேன் என்ற வைகோ   போன்றோர் இன்று தி.மு.கவிடம்...வீரமணிக்கெதிராக புதிதாகக் கண்டு கொண்ட கிருஷ்ண லீலைகள்...

காமராசரும் அண்ணாதுரையும் தோற்ற தேர்தல்கள்தாம் கருணாநிதி எடப்பாடி போன்றவர்கள் தோற்காத தேர்தல்கள் தாம்...

பார்ப்போம் இன்னும் ஒரு பதினைந்து நாட்கள்....
Related image
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.



Wednesday, March 27, 2019

சாவடியூர் பொட்டனேரி அருகே பெட்ரோல் டேங்கர் சாய்ந்து பதற்றம்: கவிஞர் தணிகை

சாவடியூர் பொட்டனேரி அருகே பெட்ரோல் டேங்கர் சாய்ந்து பதற்றம்: கவிஞர் தணிகை

Image result for petrol tanker


போய் சேர்வதும் வந்து சேர்வதும் பிரம்மப் பிரயத்தனமாகிவிட்டது: கவிஞர் தணிகை.

சேலம் செல்ல காலை 6.25 மணிக்கான பேருந்தை வழக்கம்போல் ஏறிப் பிடித்தேன்....சில கிமீ சென்றிருக்கும் வாகன வரிசை நிறுத்தப்பட்டது. என்ன என இறங்கிப் பார்த்தோம். பெட்ரோல் டாங்கர் ஒன்று சாய்ந்து பெட்ரோல் வழிந்தோடிக் கொண்டிருந்தது பாதையோரத்தில். மிகவும் அபாயகரமான நிலை.

அதை ஓட்டிய வாகன ஓட்டுனர் அங்கேயே மரணமடைந்ததாகவும் மதியம் திரும்பி வருகையில் செய்திகள் உறுதிப்படுத்தின.

எல்லா வாகனத்தையும் நிறுத்திய காவலர் தீ அணைப்பு வாகனத்தை மட்டும் வரவழைக்க...அதன் பின் அவர்கள் நீரை அந்த சாய்ந்து கிடந்த பெட்ரோலிய வாகனத்தின் மேல் பீச்சி அடித்துக் கொண்டிருந்தார்கள்.

காலம் வெகு வேகமாக சென்று கொண்டிருக்க....அனைவரும் கல்லூரி பள்ளி அலுவலக வேலை கட்டட வேலி என்று செல்வாரின் அதிகாலைப் பேருந்து எனவே பின்னால் பேருந்தை திருப்ப முடியாமல் திருப்பி வந்து வலது புறம் இருந்த சாவடியூர் சென்று வலைவுகளில் புகுந்து சற்று எட்ட இருக்கும் ஒர் சாலை மார்க்கத்தில் இணைந்து முதல் பேருந்து வெகு வேகமெடுத்தது. என்றாலும் வலைவு நெளிவுள்ள கிராமியச் சாலை ...சாலை முனையில் ஒரு பெரிய கோவிலும் உருவாகி உள்ளது எப்படியோ மறுபடியும் முக்கிய சாலையை எட்டியது.

எங்கேயும் நிறுத்தாமல் மேச்சேரி ஓமலூர் மட்டுமே நிறுத்த உள்ளோம் என்று சொல்ல மேச்சேரியிலேயே சுங்கச் சாவடிக்குச் செல்லும் நேரம் ஆகிவிட அப்படியும் வாடிக்கையாக ஏறும் நவயுக கிருஷ்ணன் ஒருவரை வேகத்தடையின் அருகே நிற்கச் சொல்லி ஏற்றிக் கொண்டே சென்றது. இன்னொருவரை சேலத்தில் 5 ரோடு பஸ் நிலையம் மட்டுமே நிறுத்துவோம் என்று சொன்னபோதும் குரங்குச் சாவடியில் மதிப்பிற்குரிய ஒருவரை இறங்குகிறீர்களா என இறக்கி விட்டே சென்றது. இதெல்லாம் என்ன ஆத்திரம் அவசரமாக இருந்த போதும் சில முக்கியமான நபர்களுக்கு கிடைக்கும் மரியாதை அந்த அவசியமான நேரத்தில் கிடைக்கிறது என்பதைக் குறிப்பிடவே சொன்னேன்.

பேராபத்து தவிர்க்கப்பட்டது மட்டுமல்லாமல் உரிய நேரத்தில் கொண்டு சேர்க்கும் பொறுப்பும் கடமையும் நடத்துனரிடமும் ஓட்டுனரிடமும் இருந்தன. மேலும் குறித்த நேரத்தை சென்றடைய வேண்டுமே என்ற ஆதங்கமும்...

அந்த இடத்தில் சிறு நெருப்புப் பொறி ஒன்று சிந்தி இருந்தாலும் அந்த டேங்கர் வெடித்தால் அங்கு நின்றிருந்த வாகனம் மனிதர்கள் எல்லாமே  அதோ கதிதான். எப்படி ஆயிற்றோ அந்த அதிகாலையில்...

மேச்சேரி புதன் சந்தை ஆடு மாடு கோழி சந்தை சாலையோரத்தை விட்டு அவர்களும் வாகனங்களும் மொய்த்துக் கிடக்க அங்கு சற்று  கால தாமதம் அடுத்து எமது ஏமாற்றுகிற மேட்டூர் பயணிகள் வர ஓமலூரில் ரயில்வே கேட் ஆக இப்படியே...

அனால் உரிய நேரத்தில் சென்றடைந்து எமது கல்லூரிப் பேருந்தை பிடித்து விட்டேன் என்பதுதான் ஆச்சரியமானது.

கல்லூரியில் சுமார் 25 ஆண்டுக்கும் மேலாக என்னுடன் இருந்த் ரே பேன் அட்டோமேட்டிக் ஸ்பெக்ட்ஸ் ப்ரேம் ஒடிந்து கீழே கிடந்தது. அது எப்படி நடந்தது என்றும் தெரியவில்லை...

 அதன் பின் அரசுப் பள்ளியில் படிப்பதாக ஒரு பெண்ணும் சிறுவனும் என்னிடம் முரண்பட்ட தகவல் தந்து சலுகை பெற ஆவலாக இருந்தார்கள்...

இன்று காலை நான் செய்த முதல் வேலையான வாசலைப் பார்க்கும் போது கதவு திறந்தால் ஒரு பூரானாக இருக்க வேண்டும் அதைச் சுற்றிலும் எறும்புக் கூட்டம் வேறு வழியின்றி அதை பெருக்கித் தூரத் தள்ளியாக வேண்டிய நிர்பந்தம்.

ஆனால் எனது எண்ணம் காலையில் முதல் வேலையாக இத்தனை உயிர்களின் உணவைப் பறித்து விட்டேனே என அடித்துக் கொள்ள ஆரம்பித்திருந்தது...

வழியில் நீட்டிக் கொண்டிருக்கும் ஒரு கொடியை ஒடிப்பதாக இருந்தாலும் மனது வலிக்க ஆரம்பித்துவிட்டது...

இராமலிங்க வள்ளலார் சொன்னபடி ...நானும் மிக மென்மையானவனாக மாறிவருகிறேன் என நினைக்கிறேன் வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் மனம் மிக வாட...

மழையே இரங்கும் எமது உயிரினத்துக்கு யாவுமே மழையே நீயே உயிர் தருகிறாய் ... மழையே வருக...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

Monday, March 25, 2019

கரு பழனியப்பன் தமிழா தமிழா விசு பழைய பேச்சரங்கம் சன் ஜெயா கோபிநாத் விஜய் டிவி, பாண்டே....கவிஞர் தணிகை

கரு பழனியப்பன் தமிழா தமிழா விசு பழைய பேச்சரங்கம் சன் ஜெயா கோபிநாத் விஜய் டிவி, பாண்டே....கவிஞர் தணிகை
Image result for talk shows in tamil t tvshows
கடந்த ஞாயிற்றுக் கிழமை உடல் நிலை சரியில்லாததால் நடைப்பயிற்சி மேற்கொள்ளாமல் துணைவியாரோடு சேர்ந்து சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்கும்படி நேர்ந்தது... ஆனால் அதற்கு முன் எஸ். ராமகிருஷ்ணனின் கார்ல் மார்க்ஸ் பற்றிய‌ 1.54 மணி நேர உரையையும் வலைதளத்தின் இணைய‌த்தில் யூ டியூப் வழி கேட்டேன். இன்றும் நடைப்பயிற்சி மேற்கொள்ள உடல் நிலை இடம் கொடுக்கவில்லை, எனவே சொல்லத் தகுந்த சில பகிர்வுகளை உங்களுக்காக பதிகிறேன்.

பொதுவாகவே எல்லாத் தொலைக்காட்சி தொடர்களும் ஒரே கருவில் ஒரே நடுத்தண்டில் பலரும் சேர்ந்து ஒரு சில நபர்களை சித்ரவதைப்படுத்தி வேதனை செய்து அத்திப் பூத்தாற்போல் ஒரு காட்சியில் அந்த சித்ரவதைப்பட்டவர்கள் ஒரு முறை அந்த சித்ரவதைப்படுத்தியவர்களை ஏறி ஏற்றம் கொண்டு வெல்வார்கள்...அதற்காக வருடக்கணக்காக நமது தாய்மார்கள் இந்த தொலைக்காட்சி தொடர்களுக்குள் அடிமையாகிக் கிடக்கிறார்கள்.

இவைதான் இப்படி என்றால் கோபி நாத், விசு இப்போது விட்டுவிட்டார், பாண்டே, இப்போது கரு.பழனியப்பன் போன்றோர் அவர்களின் தொடர்புடைய ஒதுக்கப்பட்ட தொலைக்காட்சிகளில் பேச்சரங்கம் நடத்தி வருகிற நட்சத்திரங்கள்....மேலும் சனி ஞாயிறுகளில் எதை எடுத்தாலும் சிரிக்கவும் பாடவுமாக சில காட்சிகள்...அதற்கு கெக்க பிக்க என சிரித்து வாழும் தரம் கெட்ட இரசிகர் கூட்டம் தங்களது மேல் இந்த தொலைக்காட்சியின் ஒளி விழுந்தால் போதுமென  தறிகெட்டு ஆடுவதும் வித்தியாசமாக சேட்டைகள் செய்வதுமாக...எங்கய்யா தமிழ் நாடும் இந்திய தொலைக்காட்சிகளும் சென்று கொண்டுள்ளன.... மதுவை ஏன் நிறுத்தவில்லை எனில் அவர்கள் செத்துவிடுவர் என்கிறார் மந்திரி...சசிபெருமாளும், சின்னபையனும் கோவனும் செய்ததெல்லாம் என்ன ....செத்துப் போறவங்கெல்லாம் போங்கடா நாங்க வசதியாக வாழ்கிறோம் என்ற எண்ண முதல் வாதத்தை முதலில் விலக்கி வைத்து தொலைக்காட்சி நிகழ்வுகள் நடந்தாக வேண்டும்  இல்லையேல் அவற்றை தடைப்படுத்தியே தீரவேண்டும். மேலும் சீனா நம்மை விடப் பெரிய நாட்டில் வெல்வெட் சில்க் பாதை போட்டு உலகையே வளைக்க நினைக்கையில் இந்தியா தேர்தல் விளையாட்டில் கேவலப்பட்டு அல்லோகலப்பட்டுக் கொண்டிருக்கிறது. மதுவுக்கு காசு கொடுக்கப்படுகிறதா என தேர்தல் ஆணையம் மாவட்ட ஆட்சியரை ஆய்வு செய்யும்படி கேட்டுக் கொண்டுள்ளது.

சினிமாவே பார்க்காதவர்கள் நல்ல நிர்வாகிகளாகவும், அறிவியல் விஞ்ஞானிகளாகவும் இருப்பாரை நண்பர்களாகக் கொண்டிருப்பவன் அடியேன். ஆனால் அவர்கள் கவிஞர்களோ அல்லது கலைஞர்களோ அல்ல.

சுமார் 20 ஆண்டுகளுக்கும் முன் ஸ்டார் குழுமத்தின் வழியே இதுபோன்ற ஆங்கிலத்தின் மொழியில் பேச்சரங்கங்கள் நடைபெற்றன. அதில் ஓப்ரா வின்வ்ரேவும் அவருக்கும் முன் இருந்த ஒரு ஆண்நபரும் முக்கியமானவர்களாக இருந்து அந்த அமெரிக்க நாட்டுக்கே பிரபலமாகி இருந்தார்கள் .மேலும் போல்ட் அன்ட் பியூட்டிவுல், பே வாட்ச் போன்ற தொடர்களில் தாராளமாக தசைப் பரிமாற்றங்களும் அதில் நடிப்பார்கள் ஒவ்வொர்வருமே அடுத்த நபர்களின் மனைவியோடு உறவு வைத்திருப்பார்கள். மேலும் எல்லாருமே ஒவ்வொருவரையும் விவாகரத்து செய்து கொண்டு அடுத்தவருடன் சேர்ந்து கொண்டே சென்று கொண்டிருப்பார்கள்..
Related image
இவர்கள் இந்த அளவு செல்லவில்லையே தவிர மகாக் கேவலாமாக தொலைக்காட்சி பார்ப்போரை முட்டாள்காளாக்கி வருகிறார்கள்.

நான் சில பல தொலைக்காட்சி பேச்சரங்கம் மற்றும் சில பேட்டிகளில் என்னை ஆரம்ப நிலையில் உட்படுத்திக் கொண்டவன் தான். விசுவின் அரட்டை அரங்கம், பாஸ்கரராஜின் அகடவிகடம், பொதிகையின் பேட்டி, விஜய் தொலைக்காட்சியின் த்ரிசா எனை செய்த தொலைக்காட்சி வழிப்பேட்டி, பல பரிசுகள், இப்படியே போகும்...ஆனால் வாய்ப்பு கிடைத்தால் போதும் என ஏங்கிக் கொண்டிருப்பவன் அல்ல.

இப்போது நான் சொல்ல வந்தது: கரு பழனியப்பன் தமிழா தமிழா பேச்சரங்கத்தில் ஒரு புறம் செலவு செய்வாரும் மறுபுறம் சிக்கனமாக இருப்பாரும் என்ற காட்சி. .. ஒரு நபரைக் கேட்கிறார். அவர் சொல்கிறார் 9 ஆண்டுகளாக இதே மிதியடியை செருப்பை நான் உபயோகித்து வருகிறேன் என்றவுடன் கரு பழனியப்பன் கமென்ட்: என்ன நீங்க செருப்பை கையிலதான் எடுத்துக் கொண்டு போவீர்களா என நக்கல் அடித்து அந்தக் காட்சியில் அந்தக் கருத்தைப் பேசியவரை மட்டம் தட்டுகிறார். உடனே காட்சி மாறுகிறது..

அப்படி எல்லாம் இருந்தால் தாம் விசுகூட ஒத்துக் கொள்வார் அவரது பேச்சரங்கில் கலந்து கொள்ள அனுமதிப்பார். எனவே அவருக்கும் எனக்கும் பல நிலைகளில் முரண்  ஏற்பட்டு  2000 ஆண்டில் தாரமங்கலத்தில் நடைபெற்ற சன் டிவியின் பேச்சரங்கோடு எனது தேர்வு விட்டுப் போனது மட்டுமல்லாமல் கடிதத் தொடர்பு மட்டுமே இருந்தது.. 3 கடிதம் எனக்கு எழுதியிருக்கிறார்.

அகடவிகடத்தில் அப்துல் காதிர் எனது உ ரையை வெகுவாக பாராட்டினார்.அப்போது நாஞ்சில் சம்பத், வி.ஜி. சந்தோசம் போன்றோரும் உடன் இருந்தனர். பவானியில்.

அடுத்து தொலைவான ஊர்களுக்கு என்னால் வந்து கலந்து கொள்வதை எனது உடல் இடம் கொடுக்காது என சில வாய்ப்புகளை மறுத்துவிட்டேன்.

கரு பழனியப்பனுக்கு வருகிறேன்: ஒரு பெண் மாதத்திற்கு 3 செருப்பு கணவர் அல்லது அத்தை ஆகியோரின் பணத்தை எடுத்து வாங்கிக் கொள்வேன் என்றார் அது எதற்கு என்ற தொக்கி நின்ற தொனி அதில் எதிர்மறை பொருளைத் தருவதாக இருந்தது.

மேலும் ஒரு கனடாவில் மேல் படிப்பு படித்த  பணியில் இருக்கும்ஒரு இளைஞர் சுமார். 3. 5 இலட்சத்திற்கு கேஜட்ஸ் வைத்திருப்பதாகவும் அவரது நண்பர் ஒருவருக்காக ஸ்போர்ட்ஸ் காரின் டயரை 8 டயரை தேய்த்ததாகவும் அதன் விலை சுமார் 8  பெருக்கல் 30 ஆயிரம் ஆக சுமார் 2 இலட்சத்து 40 ஆயிரம் இருக்கும் என்றும் அவரைப்பற்றியே அதிகம் ஸ்பேஸ் கொடுத்துக் கொண்டிருந்தார். திரு வள்ளியப்பன் அழகாக தமது கருத்தை நிலைநாட்டினார் வாரன் பவ்வட்  பற்றி இன்போஸிஸ் நாராயண சாமி ஆகியோரின் எளிமை பற்றி... இந்த பட்டியலில் ஜாம்செட்ஜி டாட்டா, சுந்தர் பிச்சை, ஏன்  பில்கேட்ஸ் உட்பட பலரும் தாம் சம்பாதிப்பதில் பெரும்பாலும் உலக மக்களுக்கு வாரி வழங்கி வருகிறார்கள்.
Image result for talk shows in tamil t tvshows
ஒரு பெண் 600 காதணி வைத்திருப்பதாக பெருமையுடன் சொல்ல அதை கரு.பழனியப்பன் அதை அணிய இரண்டாண்டுகளுக்கும் மேலாகுமே...

இப்படியேதான் பெரும்பாலும் எதிர்மறைக் கருத்துகளுக்கு அதிகம் வாய்ப்பும், நேர்மறை கருத்துகளுக்கு மூக்கறுப்புகளும் மட்டம் தட்டுவதுமாகவே இந்த கரு பழனியப்பன், விசு, கோபிநாத், பாண்டே போன்றோர் காட்சிப்படுத்தி வருவது கண்கூடு. இவர்களின் நோக்கம் என்ன இவர்கள் எதற்காக் இயங்குகிறார்கள் என்பதை கொஞ்சம் ஆய்வு மனப்பான்மையில் பார்த்தால் விளங்கி விடும்...ஜீ தமிழ் விஜய் டீவி  சன் டீவ் ஆயிரக்கணக்கான டிவிக்களை எல்லாம் தடை செய்தால் நாடு உருப்படும்.

 மதுரை வரும்போதுதான் தமிழ்பெண்ணைப் பார்த்த பின் தான் மகாத்மா மேலாடையை கைவிட்டார். வின்ஸ்டன் சர்ச்சில் கேலி செய்தபோதும் அதற்கு பதிலடி கொடுத்தபடியும் இயங்கினார்

ஒரு பக்கம் மது கொண்டு அரசு மக்களை பந்தாடிக் கொண்டிருக்கும்போது இந்த ஊடகத்தினர் போதையில் பாதை மாற்றிக் கொண்டிருக்கின்றனர் பார்ப்போரை...

என்னிடம் இருக்கும் ஒரு ரே பேன் கண்ணாடி சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக‌

ஒரு டி சர்ட் ஹைதராபாத் சர்மாவில் எடுத்தது இன்னும் 30 ஆண்டுகள் ஆனபின்னும் இன்னும் எனது பயன்பாட்டில்

1997 டிசம்பர் 4ல் எடுத்த ஒரு திருமணத்திற்கான சட்டை இன்னும் பேர் சொல்ல கிழிந்தாலும் இருக்கிறது.

ஒரு கைக்கடிகாரம் 1996ல் இருந்து  பயன்பாட்டில்

1079ல் இருந்து எங்களது வீட்டில் ஒரு பிம் bim bam பாம் சுவர்க்கடிகாரம்  40 ஆண்டுகளாக நல்ல முறையில் இயங்கி வந்தது இப்போதுதான் ஓய்வெடுத்துள்ளது..

இவை எல்லாம் என்ன கேவலமா? மேலும் இந்தக் காட்சிகளின் வழியே நகர்புறக் கலாச்சாரம் பற்றியே இந்த காட்சிகள் நகர்ந்தவண்ணம் இருக்கின்றன அவை பெரும் கவலைக்குரியது... பழமை என்றால் பெருமையுடையது... பயன்படுத்தி விட்டு தூக்கி எறியும் பொருட்களால் இந்த பூமி பந்தே புழுங்கிப் போய் வருகிறது. ஒரு நபருக்கு எதற்கு பல செல்பேசிகள் வகைக்கொன்றாக... அதிலும் பிராண்ட் நியூவாக...

சொந்த பெற்றோரை பேணாத சமுதாய அமைப்புதானே இது.. மேலும் இவர்கள் காட்சிகளை பார்க்க ஆரம்பித்த உடனே இவர்கள் எல்லாம் பெரிய ஹீரோக்களாகிவிடுகிறார்கள்...


எல்லாரையுமே சொல்கிறேன் அது விசு முதல் கரு பழனியப்பன் வரை...கரு பழனியப்பன் சதுரங்கம் பார்த்திபன் கனவு போன்ற நல்ல படங்களைத் தந்தவர் இப்போது இப்படி ஆகிவிட்டார்.

எல்லாம் பிழைப்புக்காகவா...இல்லை உண்மையிலேயே தட்டி எழுப்பும் எழுச்சிக்கான குரலை பதிவு செய்கிறார்களா? பார்க்க வருவாரை முதலில் அவமானப்படுத்தும் செயல்பாடுகளை இவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். அந்த இடத்தில் நானா இருந்திருந்தால் அந்த காட்சி எப்படி இருந்திருக்கும் என யோசனை செய்யும்போதே எனக்கு .....

சொந்த சகோதரர் துன்பத்தில் சாதல் கண்டும்
சிந்தை மறந்தாரடி  கிளியே
செம்மை மறந்தாரடி...

நெஞ்சு பொறுக்குதிலையே இந்த நிலை கெட்ட மனிதரை நினைந்து விட்டால்...



எனது 20 வயதுக்கான மகன் குழந்தையாக வெயில் காலத்தில் போட்ட ஒரு மெல்லிய சிறிய சட்டை இன்னும் எங்கள் நினைவுக்கு., பழைய பொருட்களை சேகரிப்போர் கண்டால் பாராட்டாதார் வரலாறும் சரித்திரமும் படித்து என்ன...தாஜ்மஹால் பழுப்படைந்து விட்டது ... இந்த புதிய கேஜட்ஸ் பார்ட்டிகளால்...

இந்த கேஜட்ச் gadgets  டயர் தேய்த்த காசை எல்லாம் ஒரு கிராமத்துக்கு சென்று குடிநீருக்கு ஏற்பாடு செய் இளைஞரே உனை அந்த மக்கள் கடவுளாக்கி போற்றுவார்கள்...பதர்களாகி விடாதீர். தானிய மணிகளாகி களம் காணுங்கள் புதையுண்டாலும் சிதையுண்டாலும் புதுச் செடியாகி பூப்பூப்பீர்கள்...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.









Saturday, March 23, 2019

மார்ச் 23 2019 தனியா தணியா தணிகையா மீச்சிறு மானிடமா கொள்கைக் குன்றா?

தனியா தணியா தணிகையா மீச்சிறு மானிடமா கொள்கைக் குன்றா?
 மார்ச் 23 2019
இரண்டாம் வகுப்பு குழந்தை திரேசா என்னும் ஆசிரியைதான் தனிகாசலம் என்று இரட்டை சுழி போடக் கூடாது. தணிகாசலம் என்று மூன்று சுழி .ணா தான் போட வேண்டும் என்று அறிவுறுத்தினார். தனி தனி எனக் கூப்பிட்டு கூப்பிட்டு தனியாகத் தெரிகிறேன் மாபெரும் மனிதக் கடலில் கூட.

யுனிசெப் மாதவி அசோக் ஆங்கிலத்தில் எழுதும்போது எனது  பேரை ட்டி ஏ TANIKACHALAM என்று போடலாம்   ஆரம்பத்தில் இருந்து THANIKACHALAM THA  ட்டி ஹெச் ஏ என்றுதான் முதல் எழுத்தை ஆரம்பித்து வந்ததை ஆங்கில மொழி மரபில் H ஹெச் தேவையில்லை  TA டி ஏ என்றே ஆரம்பிக்கலாம் என மாற்றினார்.

ஆனால் கல்லூரி நிர்வாகம் வங்கிக் கணக்கை ஆரம்பிக்கும்போது கல்லூரியில் THA ட்டி ஹெச் ஏ  என முதல் எழுத்து குறிக்க  உள்ளதால் அப்படியே இருக்கும் கணக்கு எண் கொடுத்தால் மட்டுமே அந்த வங்கிக் கணக்கை ஏற்போம் எனச் சொல்லிவிட்டது.


தனி, தணி, தணிகை, தணிகை எழிலன், தணிகாசலம் என்று எப்படிவேண்டுமானலும் அழைத்து வரும் இந்த பேருடனான இயக்கம் ஆரம்பித்தது தாய் உண்ட உணவுக் கரைசல் உருவாக்கிய உயிருடன் ஒர் பிண்டம் வெளிவந்ததன் பின் சில மாதங்கள் கழித்தே பேரும் ஊரும் உறவும் கூடிப்போனது.

பாரதி சொன்னபடி எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவ அதில் ஓர் விந்தின் துளி அண்டத்து சினை முட்டையுள் புக உயிர்... சிறு விதையிலிருந்தா இவ்வளவு பெரிய அரச மரமும் ஆலமரமும்...

இயற்கையை என்றும்  நேசித்து வாழும் வாழ்வு எவ்வளவு இனிமையானது அதிகாலை சுமார் 6 மணி இருக்கும் சிறு மேல் காற்று இப்போதுதான் கொழுந்து விடும் சிறு அரச இலைகள் வானாளவ வளர்ந்து நிற்கும் அரசின் கிளைகளில் கல கல என  பேசுகின்றன‌

காற்று, நீர், நிலம், நெருப்பு, ஆகாயம் இதற்கு மேல் என்ன...

என்னதான் செயற்கையுடன் மனிதம் வாழ்ந்தாலும் இயற்கையை என்னதான் செய்ய முடியும்? மணல் அப்படியே இருக்கிறது மனிதரால் தயாரிக்கப்பட்ட சிமென்ட் கலவை கொஞ்ச காலத்தில் தனது தன்மையை காற்றில் மாறி பயன்படாததாகி மாறிவிடுவதை சிமென்ட் சட்டாகிவிட்டது இறுகி கட்டியாகிவிட்டது என்கிறார்கள். அதே போல இவ்வளவு காற்று இருக்கும்போதும் அந்த சிறு இதயம் அதை எடுத்துக் கொள்ளாது துடிக்காது, அந்த நுரையீரல் அந்தக் காற்றை எடுத்து சுவாசிக்காது கட்டையாகிப் போகும் இந்த உடலுக்கு இயக்கம் இருக்கும் வரை எத்தனையோ பேர், எத்தனையோ நட்பு, எத்தனையோ உறவு, உலகெலாம் தொடரும் தொடர்பு...

மதுவிலக்குக் கொள்கைக்காக உயிரை விடாத குறைதான். ஏன் தோழன் சசிபெருமாள், சின்னபையன் ஆகியோரை விதைத்தோமே...என்றாலும் நீங்கள் என்ன சாதித்திருக்கிறீர் அதனால் மதுவை சமூக அரங்கிலிருந்து உங்களால் ஏதாவது செய்து மாற்றி இல்லாமல் செய்ய முடிந்ததா என்ற நியாயமான கேள்விகள்...

அரசு ஒரு பக்கம் கள் விற்பாரை சிறைப்பிடித்தபடி, மதுக்கடைகளை சாலையெங்கும் நடத்தியபடி மதுவிலக்குச் சேவைக்கான விருது வேறு காவல் துறை அன்பர்களுக்கே வழங்குகிற நிலை ....

என்றாலும் நான் நானாகவே...

இலஞ்ச ஊழல் ஒழிப்பு போராட்டத்திலும் அப்படித்தான்..

நண்பர்கள் குகன், சிற்பி மேலும் பலரும் கூட சிறிதும் நெக்குவிடாத எனது கொள்கை நெறி கண்டு சற்று பயமே கொள்வார்கள் என்ன நேரத்தில் எங்கே மேடையில் எதைப் போட்டு உடைத்து விடுகிறாரோ என என்னை...

 கவிஞராக, எழுத்தாளராக, சமூக செயல்பாட்டாளாராக,இதழியலாளாரக திட்ட ,அலுவலராக, பொது உறவு அலுவலராக  தேசிய சேவைத் தொண்டராக இப்படி பல முகங்களின் அடையாள மாறுதல்கள் உடன் தம்பியாக அண்ணனாக நல்மகனாக நண்பராக இப்படி சில உருவங்களுடனும்..

கெட்ட பழக்கம் ஏதுமே அண்ட  விடக்கூடாது என்பதில் நெருப்பாகவும் அன்பு நட்பு காதல் இவைகளிடத்தில் தணிக்கும் நீராகவும் அடக்கம் பொறுமையில் நிலமாகவும் கொடுமையைக் கண்டு எரிவதில் பொங்கி எழும் புயல் காற்றாகவும்  கற்பனை வான மனோ உலகில் அகண்ட ஆகயாத்துடன் தொடர்பாகவும் எப்போதும் வாழ்ந்து வர... இடையில்

அப்துல்கலாம் தொடர்பும் உச்ச நீதிமன்ற நீதிபதி அவையில் பேசிய அனுபவமும் போனஸாக கிடைத்தன... கேட்காமலேயே...அதெல்லாம் அப்படி என்ன பெரிதா என்றும் நண்பர்கள் கேட்பர். அது பெரிதுதான். என்னைப் பொறுத்த வரை...

போராட்டம் போராட்டம் போராட்டக் களமே வாழ்வாக... நேர்மையான வழிச் செல்வம் மட்டுமே வாழ்வுக்கு வழி கூட்ட ...ஒரு வீடு கூட கட்ட முடியாத குறைக்காக  என்ன வாழ்க்கை நீ வாழ்ந்தாய் என ஒரு பக்கம் கூற...

ஒரு ரூபாய் கூட பேருந்து நடத்துனருக்கும் விடக்கூடாத மனது வராத வாழ்வு... அவ்வளவுதான் பொருளாதார பலம்.

 ஒரு நண்பர் வாருங்கள் என 4 பேருடன் சென்று ஒரு எலுமிச்சை இரசம் அருந்தியே ஆக வேண்டும் என நிர்பந்தித்து வாங்கிக் கொடுத்து விட்டார். இவை எல்லாம் எனக்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் கிடைக்கும் என்றே தெரியவில்லை...

இன்று ஒரு மாண்பு மிகு மனிதர் 100 ரூபாய்க்கு டைரிமில்க் சாக்லெட்கள் வாங்கி அவர் கையால் கொடுத்து வாழ்த்திவிட்டார் இன்றைய ஒரு நாளின் குறிப்புக்கு...அதாவது இன்று தாயின் வயிற்றிலிருந்து வெளிவந்த ஒரு நாளின் குறிப்பும், சூரியனை கலாம் சொல்வது போல அரை நூற்றாண்டுக்கும் மேலாக சுற்றி வருகிற பூமியின் போக்கும் அதில் இருக்கும் எனது உயிர்ப்புமாக‌...

அன்பு நண்பரே: எனது ஆயுள் 86 என தியான வழி மூலம் நான் அறிந்திருக்கிறேன்...ஆனால் அதில் இன்னும் எத்தனை ஆண்டுகள் உங்கள் தொடர்பில் எல்லாம் அந்த இனிமையாபன‌ கல்லூரி வளாகத்தில் இருப்பேனோ என்பதற்காகவே இன்று சற்று சிரமம் மேற்கொண்டாலும் கல்லூரிக்கு அந்த சனிக்கிழமையிலும் அரை நாள் பணி  நேரம் வந்து பேருந்தில் நின்றபடியே திரும்பி வந்ததுமாக‌...

இன்றைய நாளைக் கழித்திருக்கிறேன். மிகச் சிலருக்கே இந்த நாள்பற்றி பகிர்ந்து கொண்டேன். ஆனால் இளைய தலைமுறை நண்பர் ஒருவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க இணையத்திலும் முகநூலிலும் வலைப்பூவிலும் இந்த நாளை பதிக்கிறேன்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Friday, March 22, 2019

ஊடகங்களின் தகிடு தத்தம்: கவிஞர் தணிகை

ஊடகங்களின் தகிடு தத்தம்: கவிஞர் தணிகை

Image result for world water day theme 2019


1996 என நினைக்கிறேன் சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள டான் போஸ்கோ இன்ஸ்டியூட்டில் இந்து என் ராம், ஆசியா நெட் சசிகுமார், இந்து இப்போதிருக்கும் பன்னீர்செல்வம் இன்ன பிற ஊடக நண்பர்களுடன் அப்ப்போது ஞானியும் இருந்தார். ஊடகங்களின்  சுரண்டல்  என்ற தலைப்பில் இரண்டு நாள் கருத்தரங்கில் கலந்து கொண்டிருந்தேன். அதன் பிறகும் அங்கு வேறு ஒரு நிகழ்வுக்கு சென்றிந்த நினைவு உண்டு.

முதல் முறை சென்ற பின் வந்து திருமணமானது\
இரண்டாம் முறை சென்ற பின் மகன் பிறந்திருந்தான்

அப்படியானால் அடிக்கடி வாருங்களேன் என்றார் அந்த நிறுவனத் தலைவர்.

இப்போது நான் சொல்ல முனைவது:

தேர்தல் நாட்கள் தேர்தல் ஆணையத்தால் அறிவுக்கும் முன்பே வாட்ஸ் ஆப்பில் தேர்தல் தேதி என இருமுறை போட்டிருந்தார்கள் என்னைப்போல முட்டாள்களும், ஏமாளிகளும் அதை நம்பி அடுத்தவர்க்கும் சொல்லியதை எண்ணி வெட்கமுற வேண்டியதாயிற்று.

பொள்ளாட்சி பொல்லா(ர்)ட்சி சம்பவத்தில் உள் சென்ற  4 பேரும்  பெயிலில்  வெளி வந்து விட்டனர் என்றும் சொன்னார்கள் ஆனால் அப்போதும் அவர்கள் உள் தாம் இருந்தனர் என்பது அடுத்த சில நாட்கள் செய்தி மூலம் தெரிந்தது..

வேண்டுமென்றே எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் செய்தியாக கொட்டை எழுத்தில் உள்சென்று கவனித்தால் அந்த செய்தியே இருப்பதில்லை...அதைச் சென்று படிக்கத் தூண்டிட பொய்கள் புனைசுருட்டுகள் போலிகளாக....

ஒரு வரி செய்தி இருப்பதை ஒருப்பக்கத்துக்கும் பழைய செய்தியை இட்டு நிரப்பி கடைசியில் ஒரு வரி சொல்லி இருப்பர் தலைப்பில் சொன்னதையே...

 இப்படிப்பட்ட வீடியோக்கள் ஏராளம் உண்டு...

இப்போது ஊடகங்களின் போட்டி பொறாமையிடையே தக்கவைக்க விளம்பரங்கள் மற்றும் கையூட்டு கேட்டு நிறுவனங்களின் வாசலில் சென்று தவம் கிடக்கும் ஊடகவியலாளர்கள் நிறைய உண்டு....

செய்தியை பணத்துக்காக மாற்றி  போடுவதும் இல்லாமல் செய்வதும் நல்ல செய்தியைக் கூட பணம் தராததால் போடாமல்விடுவதும்....

செய்தியாளர்கள், வழக்கறிஞர்கள், காவலர்கள், தணிக்கையாளர்கள், ஆட்சியாளர்கள் , அரசியல்வாதிகள் இவர்கள் எல்லாம் உண்மையாக நல்லவராக சமூகப் பற்றாளர்களாக இருந்தால் உலக தண்ணீர் தினம் என்று சொல்லிக் கொள்ளும் இன்றைய அளவில் அனைவர்க்கும் குடிக்கத் தண்ணீராவது கிடைத்திருக்கும்....
Image result for world water day theme 2019
எல்லா  உள்ளீடற்ற போலிகளையும் உருவாக்கித் தந்தவர்கள் இந்த பொறுப்பற்றவர்கள்தானே...

மறுபடியும் பூக்கும்வரை
கவிஞர் தணிகை.

பங்குனி உத்திரப் பெருவிழா: கவிஞர் தணிகை

பங்குனி உத்திரப் பெருவிழா: கவிஞர் தணிகை

https://www.facebook.com/tanigaiezhilan/videos/pcb.2328786477172712/2328776780507015/?type=3&theater


முருகன் எனைத் தேடி வந்தானோ? இயற்கை எனை வேண்டி விரும்புகிறதோ?

முருகனுக்கு இரண்டு பொண்டாட்டி , அவனுக்கு திருமணமாகி வள்ளி தெய்வானை என இரண்டு மனைவிகள் இருந்தும் இன்னும் குழந்தை இல்லையா என்றெல்லாம் நாத்திகம் நானும் பேசியதுண்டு.

ஆனாலும் இயற்கை எனக்குப் பல்வேறு கட்டங்களில் தனது வேடிக்கை விளையாட்டுகளாய் மாந்தரை மீறிய சக்தி இருப்பதாக புலப்படுத்தியதுண்டு. அதாவது ஸ்தூல சரீரமாய் இருக்கும் உடலும் சதையும் எலும்பும் இரத்தமுமாக இருப்பதையும் மீறிய இயக்கம் உண்டு என்பதில் எனக்கு நிறையவே அனுபவங்கள் உண்டு.

எனக்கு பெயரே மேட்டூர் சுப்ரமணியசாமி திருக்கோவிலில் வைத்ததாகச் சொல்வார்கள் எனது பெற்றோர். அந்த கோவிலில் பிரதோஷ நாளில் எனது மகன் பிறந்த அன்று வீட்டுக்கு சென்று  பார் நல்ல செய்தி காத்திருக்கிறது என்ற வாக்கு கூட வந்திருந்தது.. அங்கு சென்று ஒரு காலக் கட்டத்தில் என்னால் முடிந்த சேவையை நான் ஆற்றியதுண்டு.

அதை எல்லாம் விடுங்கள். இதை மட்டும் எடுத்துச் சொல்கிறேன். பங்குனி உத்திரம் தேர் வந்து கொண்டிருக்கிறது இருங்கள் பார்த்து விட்டுப் போகலாம் அல்லது அந்தப் பக்கம் ஒரு சுற்றி சுற்று விட்டு நடைப்பயிற்சி தொடரலாம் எனக் கூறினார் பிரபு ராஜேந்திரன். இல்லாவிட்டால் ஒரு அரைமணி நேரம் இருங்கள் வந்து விடும் என்றார். ஆனால் அதை எல்லாம் நான் ஏற்கவில்லை.

நடைப்பயிற்சிக்கு வழக்கம் போல புறப்பட்டுத் திரும்பினேன். திரும்பி வரும்போது சாலையில் சற்று தொலைவில் ஒரே வண்ண மயமாய் வேடிக்கையாய் காட்சி மிகவும் பெரியதாக தென்பட்டது.
https://www.facebook.com/tanigaiezhilan/videos/2328780667173293/
அங்கிருந்த சில அறிமுகமான நபர்கள் அது அப்படியே கீழே போகும் ஒரு எட்டு பார்த்துவிட்டு அப்படியே திரும்பலாம் என்றார்கள்...அந்த வேடிக்கையைப் பார்த்து இரசித்தபடி அது எப்படி இருக்கிறது எனப் பார்க்க சற்று அருகில் போனேன். பிரமிப்பூட்டும்படியான வண்ண விளக்குகளால் ஆன அலங்காரம்.

மேலே மடிப்பு பக்க வாட்டில் மடிப்பு என வீதிக்குத் தக்கபடி சாலைக்குத் தக்கபடி அலங்காரத் மின்விளக்குத் தட்டிகளை விரித்தும் சுருக்கியும் அலங்காரம்.

மாயா உலகாய் அந்த 8 மணி இருளில்...பிரமையை ஒரு மயக்கத்தை தோற்றுவித்தபடி இருந்தது. உண்மையிலேயே இது போன்ற மயக்கம் தருவதுதானே ஏதோ இருக்கிறது என்ற நினக்கத் தோன்றுவது நினைக்கத் தூன்டுவதுதானே பக்தி பாவனை. யாவும்.

அருகே சென்று ஈர்க்கப்பட்டு சில காட்சிகளைப் பதிவு செய்து கொண்டேன். புகைப்படம் மட்டுமே ஓரிரண்டு... காட்சி ஓட்டங்களை பதிவு செய்ய முயன்று எடுக்காமல் விட்டிருந்தேன்.

 திரும்பி வந்து விட்டேன் அதன் பின் மறுபடியும் சென்று  காட்சி ஓட்டங்களையும் பதிவு செய்து விடலாம் என எண்ணியிருக்க பழனி வந்து சோர்ந்திருந்தபோதும் எனக்காக இருசக்கர வாகனத்தில் கொஞ்சம் தூரம் கொண்டு வந்து விட....மறுபடியும் காட்சிப்பதிவுகள் செய்து கொண்டேன். ஆனால் அங்கிருந்த எனது ஆசிரியச் சகோதரியிடம் படித்த மாணவர்கள்தாம் அனைவரும் எனக்கு வாங்க சார் வாங்க சார் என ஏகப்பட்ட அழைப்புகள்...அங்கே ஒரு வீட்டில் ஊர்வலத்தில் வருவார்க்காக பாயச டம்ளர்கள் வேறு...

இரண்டு மணி நேர நடைப்பயிற்சிக்கும் பின் இந்த பாயசம் குடிக்க வற்புறுத்தப்பட்டதால் விலக்க வில்லை இனிப்பு சாப்பிட வேண்டாம் என்றிருந்த  எண்ணத்தை அப்புறம் தள்ளி விட்டு வாங்கிக் குடித்தேன்.

எல்லாமே அந்தக் காட்சிகள், அந்த இரவு, அந்த ஜோடனை, அந்த பாயசம் எல்லாமே நான் கேட்காமல் திட்டமிடாமல் அதுவாக அமைந்திருந்தது. மறக்க முடியாததாகிவிட்டது.

பொதுவாகவே உற்சவ ஊர்வலம் என்பது முடியாதவர்களுக்காக அதாவது கோவில் சென்று பார்க்க கடவுளைப் பார்க்க முடியாதவர்களுக்காக என்று சொல்வார்கள் ஆனால் அனைவரும் கடவுளை நாடி கோவில் செல்ல சரியான நல்ல தொண்டர்களை சேவையாளர்களை நோக்கி கடவுளே வருவார் என்பதற்கேற்ப அன்றைய தினத்தில் எனது திட்டமிடலுக்கும் அப்பாற்பட்டு வழியில் கிடைத்த வரப்பிரசாதமாக அமைந்திருந்தது அந்த பங்குனி உத்திரப் பெருவிழாவின் செந்தில் முருகன் உற்சவ ஊர்வலம் எனக்கு.

அது மலைக்கோயிலில் இருந்து மக்களை நோக்கி புறப்பட்ட ஊர்வலம்.
தேர் அலங்காரம் பவானி ஈரோடு குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் அதை ஏற்பாடு செய்த எமத் புதுரெட்டியூர் இளைஞர் குழுவினர் தெரிவித்தனர். எல்லாம் நமது அப்துல்கலாம் மக்கள் இயக்கத்தின் போது நமக்கு உறுதுணையாக இருந்த இளையோர் குழுவினர்தாம்... நமது அடுத்த வாரிசுகள் குறிப்பிடத்தக்க மறக்க முடியாத ஒரு நிகழ்வாக இந்த பங்குனி உத்திரத் திருவிழா தேரோட்டத்தை நடத்தி இருந்தனர்.

முருகன் என்பான் மால் மருகன்...அவனது குடும்பம் சொந்தம் பந்தம் இது போன்ற  கருத்து எல்லாம் பக்தி மார்க்கத்தில் உண்டு...அதை எல்லாம் நம்பத் தயாரில்லாத எனக்கும் ஒரு இயறகையின் கை காட்டல் அடிக்கடி நடந்ததுண்டு... அது கபாலீஸ்வரர் கோவில் கட்டும் பணிகளின் போதாகட்டும், இப்போது இருக்கும் கல்லூரிப் பணியில் சென்றமர்ந்ததாகட்டும் எல்லாமே ஒரு சொல்லி வைத்த இயக்கமாகவே இருக்கிறது...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Wednesday, March 20, 2019

ஜனநாயகப் பாதையில் இந்தியா செல்ல வேண்டிய தூரம்: கவிஞர் தணிகை



ஜனநாயகப் பாதையில் இந்தியா செல்ல வேண்டிய தூரம்: கவிஞர் தணிகை
 

தேர்தல் ஆணையம் ப்ளக்ஸ் போர்ட் மற்றும் விளம்பரங்கள் செய்யக் கூடாது என இந்த தேர்தலில் ஆணை விதித்துள்ளது பெரிதும் பொது மக்களால் வரவேற்கப்படுகிறது.

மோடி டிஜிட்டல் மணி என மக்களை கசக்கிப் பிழிந்த பின் சில ஆண்டுகள் ஆனபின்னும் வீடு தேடியும் , வாகன சோதனையிலும் உரிய ஆவணங்கள் இல்லாத பணம் பரிவர்த்தனையை முடக்கி தேர்தல் ஆணையம் அவற்றை பரிமுதல் செய்து வருகிறது...இதுவே மோடி அரசின் தோல்வியை சொல்லாமல் சொல்லி பறை சாற்றி வருவதைக் காணலாம்.

மேலும் தேர்தல் ஆணையம் வங்கிகள் எல்லாவற்றிடமும் பெருத்த பணப் பரிவர்த்தனை நடைபெறுவது குறித்து தகவலும் கேட்டு வருகிறது....

நிலை இப்படி இருக்க இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்ல வேண்டி நேர்ந்தது: பிரதான வழி பணியாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் தடை செய்யப்பட்டு காவல் கட்டுக்குள் இருந்தது... அது வேட்பு மனு தாக்கல் செய்ய வருவார்க்கு மட்டுமாம்.

 அந்த வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்துவிட்டு வாக்களர்களை எலலாம் வந்து கெஞ்சி காலில் விழுந்து காசளந்துதானே போய் பதவி என அமரப்போகிறவர்கள் அவர்களுக்கு என்ன தனி வழிகள்? அவர்கள் கூட்டணி சேர்வதற்கே சொல்லிய வார்த்தை எல்லாம் வாக்கை எல்லாம் இந்த வாக்கைப் பெறுவதற்காக அவர்கள் சொன்ன வாக்கை எல்லாம் இல்லை என்று சொல்லும் அயோக்யர்கள்தானே...அவர்களா இந்த மக்களுக்கு நன்மை செய்யப் போகிறவர்கள்...மேய்ச்சல் நிலம் மேயவிருக்கும் கால்நடைகளுக்கு அந்த வழிகளும், கோரிக்கை தாங்கி அன்றாடம் செல்லும் மக்களுக்கு வேறு வழி காண்பிப்பதுமாய் இருப்பதிலேயே நமது ஜனநாயகக் கடமை எவ்வளவு நழுவிக் கீழ் விழுகிறது என்பதைக் காணலாம். அவ‌ர்களை பக்க வாயில் வழியே செல்ல ஆணையிடுவதை விட்டு விட்டு பொதுமக்கள் பணியாளர் ஏனைய அனைவரும் பக்க வாயில்கள் வழியாகவே வரவும் போகவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது

காரணம்: வேட்பு மனு தாக்கல் செய்ய வருவார்களாம். வருகிறார்களாம். வந்தார்கள். யார் என எனக்குத் தெரியவில்லை ஒருவரை சுற்றி காவலர்கள் அதன் பின் காமிரா ஊடகம் என...

எல்லாம் இங்கு தலைகீழ். பொதுமக்களுக்குப் பாதுகாப்புத் தரவேண்டிய பாதுகாவல்சக்திகள் இவர்கள் பின்னால் போய்க்கொண்டு....மேய்ச்சல் நிலத்தை பதுகாக்க வேண்டிய சேவையாளர்களுக்கு மட்டுமே இனி இந்த நாடு பாதுகாப்புத் தருவதாக இருக்க வேண்டும்.

சுதந்திர இந்தியாவில் நேரு காமராசர் காலத்திற்கும் பின் எளிமை என்பது போய்விட்டது சேவை செய்ய வருவார்க்கு எதற்கு பாதுகாப்பு....எல்லாவற்றிலும் ஒரு பயம் ஊடுருவி உள்ளது புழங்கும் மக்களிடமும், ஆள ஆட்சியாளராக தேர்தலில் போட்டியிட வருவாரிடையும்  ஒரு இடைவெளி இருந்து கொண்டே இருக்கிறது...ஆள்வோரிடையேயும், ஆளப்படுவாரிடையேயும் ஒரு பயம் இருந்தபடியே இருக்கிறது. இந்த பயம் ஜனநாயகத்தில் இருக்க வேண்டியதல்ல... அப்படி ஆனால் இந்த ஜனநாயகம் இந்தியாவின் ஜனநாயகம் உலகின் மாபெரும் ஜனநாயகம் இன்னும் அடக்கி ஆளும் நிலை விட்டு வெளியே வந்து மக்களின் பிரதிநிதித்துவம் நோக்கி நகரவே  இல்லை என்று சொல்ல முடியாவிட்டாலும் அதன் அளவு புழு நகரும் அளவில் தானே இருக்கிறது?

ஆங்கிலேயன் கட்டிய சேலம் மத்திய சிறைக்கு முகாம் செய்ய சென்றிருந்தோம் எங்களது மருத்துவர்கள் குழு. அது 1862 ஆம் ஆண்டு கட்டியது. உள்ளே 25 ஏக்கர் பரப்பு கொண்டதாக விளங்குகிறது ஆனால் அந்தக் கட்டடம் யாவுமே நாம் அடிமையாக இருந்தபோது அடிமையாக இருக்கவே அடித்து நொறுக்கி கசக்கி காய வைத்து தொங்கப்போடவும், அங்கேயே தூங்கவும், வாழவும், மலம் கழிக்கவுமான சினிமாவில் காணும் அமைப்புடன் அப்படியே இருப்பது ....கேள்விகளை எழுப்ப...

சுதந்திர இந்தியாவில் நமது சகோதர மனிதர்களுக்கும் அதுவே அளவுகோலாக அதே சிறைக்கூடங்கள் இருப்பது நாம் ஜனநாயகத்தில் எப்படி எவ்வளவு வளர்ந்திருக்கிறோம் என்பதை காண்பிக்கிறது அவற்றை அடித்து நொறுக்கித் தள்ளி விட்டு குடியரசு இந்தியாவின் அடையாளமாய் அவை எல்லாம் அறிவியல் முறைக்கு மாற வேண்டாமா?

தேர்தல் எந்திரமும், யாருக்கு வாக்களித்தோம் என்பது தெரியவும் உதவிடும் அறிவியல் நமக்கு பொல்லா(ர்)ட்சி யாய் பொள்ளாச்சிகளும் நாக(ர்) கோயில்களும் குற்றவாளிகளைத் தோற்றுவிக்காமல் இருக்க என்ன என்ன நடவடிக்கை முன் எச்சரிக்கையாக எடுக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லித் தராதா? எதுவும் நடந்த பிறகுதான் நாம் அவற்றின் மேல் எல்லாம் கவனம் செலுத்த வேண்டுமா?

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.



Sunday, March 17, 2019

காதல் அன்றும் இன்றும்: கவிஞர் தணிகை

காதல் அன்றும் இன்றும்: கவிஞர் தணிகை

Image result for true love


மின்னல் கேந்திரங்கள்
உன் விழிகள்

மெய் ஞானப் புறப்பாடு
உன் மௌனப் புன்னகை

மொழிகளிலேயே உயர்ந்தது
உன்
மௌன மௌழி

ஜதி சொல்லும்
உன் பாதங்களுக்கு
வெறும் மேம்பூச்சு தான்
என் கண்கள் சொல்லும்\
கவிதைகள்

அளவெடுத்த
அங்கங்கள் உனக்கு
உலக சிருஷ்டியின்
முழுமி பெற்ற அழகாக!

நான் சொல்லிய
கவிதைகளை எல்லாம்
உன்
ஒரு பார்வைச் சாயல்
அர்த்தமற்றதாகிவிடுகிறது

ஏங்கியவை
எட்டியபோதும்
எட்ட மறுப்பதுதான்
திருப்தி

இதுதான் பொதுநியதி
இதன் விதிவிலக்காய்
உலகையே
ஒளிபெறச் செய்யும்
காதல் மூலம்தான்
மாறத நிலை பெற்றது
இதில்
பிரபஞ்சமே அடக்கம்

அதனால்
நீயும் நானும்
பெருமைப்படத்தக்கவர்களே!

அடித்தளம் இல்லாத‌
பார்வைகள் மூலம்
கட்டிடங்கள்
கட்டிவிட்டோம்

இந்தப் பார்வைக் கட்டிடங்களே
நம் பயணங்கள் புறப்பட‌
அடித்தளங்கள்!

நீ என்னதான்
பேசாமல்
மௌனம் சாதியேன்
உன் எண்ணங்களே
எனக்குப் புரிகிறதே!

நீ
இவ்வுலகில்
ஏதோ ஓர் மூலையில் இருப்பதால்
கடுமைப் பிரிவுகளில் கூட‌
உன் பர்வைகள்
என் செயல்களை
உறுத்துப் பார்க்கும்
உணர்வுகள் எனக்கு

உனக்கு?

      மறுபடியும் பூக்கும்

 என்ற கவிதைத் தொகுதியில் 1991ல் வெளியிட்ட கவிதை...

ஒரு தலை இராகம் என்ற படம் உண்மையிலேயே ஒரு தலை இராகம் அல்லாமல் இரு தலைக்காதலை கடைசியில் காதலனின் மரணத்தோடு இரயிலில் முடித்திருக்கும் அந்தப் படத்தை பொள்ளாச்சியில் 1980களில் பல முறை பார்த்திருந்த நினைவுகளுடன்...

பொள்ளாச்சியா இன்று பொல்லா(ர்) ஆட்சியா என்று கேட்கும்படியான நடவடிக்கைகள் அரங்கேறியதன் காலப் பதிவுகள்...

மோடியும் முகேஷ் அம்பானியும் ஒரு நாளைக்கு ஜியோவின் ஒரு ஜிகா பைட்டுக்கும் மேலும் பயன் படுத்தச் சொல்லித் தர,

எல்லா இளசுகளின் கையிலும் மொபைலும் , காமிராவும், இணையமாக இருக்க சமூக வலைதளங்களைக் குறை சொல்லியபடி...

அன்று பேசினாலே பெரிய விசியம், பார்த்தாலே பெரிய விசியம். இன்று லிவிங் டுகெதர்,  apart from that why not before marriage?....

ஜப்பான், சீனாக்காரர்களுக்கு தாய் மொழி மட்டுமே தெரிய, அவர்கள் நாட்டை மட்டுமல்ல உலகையே ஆள அவர்கள் எல்லாம் இணையத்தை தேவையில்லாததை கட்டுக்குள் வைத்து அரசாட்சி செய்ய, இங்கே எல்லAAம் திறந்த வெளியாக....என்றாலும் உயிர்களை எடுப்பது இயற்கைக்கு முரணாகும் செயலே.... மனிதர்கள், நாடுகள், சட்டஙக்ள், நீதி, ஆட்சி, குற்றம்.... குற்றம் நிரூபிக்கப்பட்ட அரேபிய சிறுமியை வன்புணர்ச்சி செய்த 7 பேரை தலை வேறு முண்டம் வேறாக்கியை வாட்ஸ் ஆப் படங்கள் உலா வர..

இங்கு கொஞ்சம் ஆங்கிலம் அறிந்த காரணம் பண்பாட்டுக் கரண‌ம்....பாலியல் படங்கள், இணையம், பள்ளிச் சிறார்களுக்கே மடிக்கணினி அதில் ஆபாசப்படம், புதுப்படம் தரவிறக்கம்...

OPM ஓபிஎம்...அதர்ஸ் பீப்பிள்ஸ் மணி என்று அடுத்தவரிடம் அவர்களிடம் உள்ள பணத்தில் வாழக் கற்றுக் கொண்டுள்ளார்கள்... அதற்கு மேலை நாடுகளிடம் இருக்கும் ஆண் விபச்சார முறையை இங்கும் கொண்டு வந்துள்ளார்கள் அது மட்டுமல்ல அறிவியல் உபகரணத்தை பயன்படுத்தி அதை பதிவு செய்யவும் அதை ஆய்தமாக்கவும் அதன் மூலம் தமது அளவற்ற ஆசைகளை தீர்த்துக் கொள்ளவும் அதற்கு அரசு, அரசியல், ஆட்சி, காவல்துறை என்ற துறைகளைப் பயன்படுத்திக் கொள்ளவும் அதற்காக ப்ளாக் மெயில் செய்து வழிகள் மேற்கொள்ளவும் கும்பல் பயன்படுத்தி நிறைய எண்ணிக்கையிலான சபலப்பட்ட பெண்களை சீர் குலைத்திருக்கின்றன....அவர்கள் தாம் இவர்களுக்கு கல்லூரிக்கு கட்டணம் கட்டுகிறார்களாம், கார் , பண்ணை வீடெல்லாம் வைத்துக் காட்டு மிராண்டிக் கூட்டமாக மாற பாதுகாத்திருக்கிறார்களாம்

அவர்கள் இவர்களை அதிக நாள் காவலில் கைதியாக விட மாட்டார்களாம். சென்னையில் ஒரு பெண் மருத்துவர் இது வரை ஒன்னரை கோடி வரை கூட செலவு செய்துள்ளாராம்

இப்படி எல்லாம் செய்திகள்...

நாட்டை சீர் குலைக்க நாட்டு மக்களை திசை திருப்பி..

சினிமா பார்த்து இவர்களும் , இவர்க்ளை பார்த்துத்தான் சினிமாக்களும் என்றபடி கடைசியில் பொதுமக்கள்தாம் பிடித்து அடித்து உதைத்து துவம்சம் செய்து காவல் துறையிடம் அரசிடம் ஒப்படைத்திருக்கிறார்கள்...

எப்படி அந்தக் காலத்தில் காட்டு மிராண்டிகளாய் வாழும்போது நாடு, எல்லைக் கோடுகள், அரசு, ஆட்சி, மொழி தலைமை, காவல் ஏதும் இல்லா நாட்கள் இருந்தனவோ அப்படியே இப்போது எல்லாம் இருந்தும் அப்படியே...காரணம் நாம் அறிவியலைக் குறை சொல்ல வசதி இருக்கிறது...அனால் இங்கு இருப்பது யாவும் சுயநலம் வானாளாவிய சுயநலம் மட்டுமே...எனவேதான் யாவும்...

ஒழுக்கம் என்பது கட்டுப்பாடு என்பதன் உள்ளடக்கம்.
இந்தியா தனித்துவம் இழந்து அமெரிக்க ஐரோப்பியர் பார்த்து அதிலும் உள்ள குற்றப் பின்னணியினர் பார்த்து வளர்ந்து வருகிறது...

எனவே இவை இப்படித்தான் இருக்கும்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.



Saturday, March 16, 2019

பசியில்லா இந்தியா: காமன்வெல்த் அமைப்பின் விருதை வென்று தமிழக இளைஞர் சாதனை

பசியில்லா இந்தியா

2019ஆம் ஆண்டுக்கான காமன்வெல்த் அமைப்பின் ஆசிய பிராந்தியத்துக்கான சிறந்த இளைஞர் விருதை தமிழகத்தை சேர்ந்த பத்மநாபன் என்ற இளைஞர் வென்று சாதனை படைத்துள்ளார்.
ஆசியா, பசிபிக், கரீபியன், அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய பிராந்தியங்களை சேர்ந்த 15-29 வயதிற்குட்பட்ட இளைஞர்களில், பிராந்தியத்தில் தலா ஒருவருக்கு ஆண்டுதோறும் சிறந்த இளைஞர் விருதினை காமன்வெல்த் அமைப்பு வழங்கி வருகிறது.
அதாவது, தத்தமது நாடுகளில் வறுமை, பாலின சமத்துவம், தூய நீர், கல்வி, சுகாதாரம் மற்றும் பருவநிலை மாற்றம் போன்வற்றில் நீடித்து நிலைக்கும் வளர்ச்சி இலக்குகளை கொண்டு செயல்பட்டு, சமூகத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் இளைஞர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
அந்த வகையில், கோயம்புத்தூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் 'நோ ஃபுட் வேஸ்ட' என்னும் தன்னார்வ தொண்டு அமைப்பின் நிறுவனரான பத்மநாபன் கோபாலனுக்கு, ஆசிய பிராந்தியத்தில் இந்தாண்டுக்கான சிறந்த இளைஞர் விருது நேற்று (புதன்கிழமை) லண்டனிலுள்ள காமன்வெல்த் அமைப்பின் தலைமையகத்தில் நடந்த விழாவில் வழங்கப்பட்டது. இவரது வயது 25.

என்ன செய்கிறார் பத்மநாபன்?

தமிழகத்தின் 16 நகரங்களில் நடக்கும் திருமணம் மற்றும் இதர விழாக்களில் சமைத்து மீதமாகும் உணவைப் பெற்று, பசியால் வாடும் ஏழை மக்களுக்கு விநியோகிக்கிறது இவருடைய அமைப்பு.
எதிர்கால திட்டம் என்ன?படத்தின் காப்புரிமைFACEBOOK
இந்த அமைப்பைத் தொடங்கியதற்கான காரணம் பற்றிக் கேட்டபோது, "நான் பிறந்தது வளர்ந்தது எல்லாமே சேலம். பிறகு பொறியியல் படிப்பதற்காக கோயம்புத்தூர் வந்தேன். கல்லூரி படிக்கும்போதே, அருகிலுள்ள பள்ளிகளுக்கு சென்று அறிவியல், கணிதம் உள்ளிட்ட பாடங்களை சொல்லிக்கொடுத்து வந்தேன். அந்நிலையில், வழக்கம்போல் பள்ளி ஒன்றுக்கு சென்றபோது, மதிய உணவு இடைவேளையின்போது மாணவர்கள் உணவுப் பொருட்களை சர்வசாதாரணமாக வீணாக்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தேன். அடுத்த முறையிலிருந்து கல்வியை தவிர்த்து உணவு பொருட்களை வீணாக்கக் கூடாது என்பதை வலியுறுத்த தொடங்கினேன்"என்று கூறினார் பத்மநாபன்.
"உணவு பொருள் வீணாக்குவது குறித்த விழிப்புணர்வை உயர்நிலை பள்ளி மாணவர்களுக்கு புரிய வைப்பதே சிரமமாக இருந்த நிலையில், தங்களது பள்ளிக்கு வருமாறு ஆரம்ப பள்ளி ஆசிரியர் ஒருவர் என்னை அழைத்தார். சற்று தயக்கத்துடனே ஒப்புக்கொண்டு, மாணவர்களுக்கு புரியும் வகையில் வரைபடங்கள் மூலம் பல்வேறு விஷயங்களை விளக்கினேன். இறுதியில் 6-7 வயதிருக்கும் சிறுமி ஒருவர் என்னிடம் வந்து, 'அம்மா வீட்டிலும், எங்கையாவது வெளியே செல்லும்போதும் எனக்கென்று தனியே பெரிய வாழை இலையில் சாப்பிட வைக்கிறார். அப்படி, நான் வீணாக்கும் உணவை எங்கு சென்று கொடுப்பது?' என்று கேட்டது என்னுள் பெரும் யோசனையை ஏற்படுத்தியது."
"அதற்கு மறுநாளே என்னுடைய அலைபேசி எண்ணை பயன்படுத்தி ஃபேஸ்புக்கில், 'உங்களிடம் வீணாகும் பொருட்களை என்னிடம் கொடுங்கள். அதை பசியால் வாடுபவர்களிடம் கொண்டு சேர்க்கிறேன்' என்று பதிவிட்டவுடன், திருமணம் ஒன்றில் மீதமான உணவுப்பொருட்கள் உள்ளதாக அழைப்பு வந்தது. கையில் கட்டை பையை எடுத்துக்கொண்டு, உணவை வாங்கி அருகிலுள்ள மருத்துவமனையில் பசியால் வாடுபவர்களுக்கு கொடுத்தேன். இதில் ஆச்சரியமான தகவல் என்னவென்றால், பேருந்தில் சென்று உணவை வாங்கி, தாளில் மடித்து, மருத்துவமனையில் கொடுப்பதற்கு எனக்கு 12 ரூபாய் மட்டுமே செலவானது. ஆனால், நான் கொண்டு சென்ற உணவால் 52 பேரின் பசி தீர்ந்தது" என்று தனது தொடக்ககால நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார் பத்மநாபன்.
மேற்கண்ட நிகழ்வுகள் 2015ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்ததாக கூறும் பத்மநாபன், அதற்கடுத்த ஆண்டே மீதமான உணவை அளிப்பவர்களையும், பசியால் வாடுபவர்களையும் இணைக்கும் திறன்பேசி செயலியை வெளியிட்டதாகவும், அதை தற்போது மதுரை நீங்கலாக தமிழகத்தின் மற்ற அனைத்து மாநகரங்களையும் சேர்ந்த 12,000 மேற்பட்டோர் பயன்படுத்தி வருவதாகவும் கூறுகிறார்.
பசியில்லா இந்தியா
"எங்களது திறன்பேசி செயலியை பயன்படுத்தி உணவு அளிக்க விரும்புபவர்கள், தங்களுக்கு அருகில் எந்த இடத்தில் பசியால் வாடுபவர்கள் உள்ளனர் என்பதை தெரிந்துகொள்ளும் வகையில் 'ஜியோ டேகிங்கை' பயன்படுத்தி இடங்களை குறித்து வைத்துள்ளோம். எனவே, எங்களை தொடர்பு கொள்ளாமல், நேரடியாக உணவு தேவைப்படுபவர்களை அடைய அது உதவும்" என்று அவர் மேலும் கூறுகிறார்.

"மேலும் பணிபுரிய தூண்டுகிறது"

2019ஆம் ஆண்டுக்கான சிறந்த இளைஞர் விருதை பெறுவதற்காக உலகம் முழுவதுமுள்ள 45க்கும் மேற்பட்ட காமன்வெல்த் நாடுகளிலிருந்து 500க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்திருந்ததாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆப்பிரிக்கா-ஐரோப்பா, ஆசியா, கரீபியன்-கனடா, பசிபிக் என்று நான்கு பிரிவுக்கான பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலிருந்து நான்கு பேர் இறுதி செய்யப்பட்டு லண்டனில் இன்று நடந்த விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
ஆசிய பிராந்தியத்தைப் பொறுத்தவரை இந்தியாவிலிருந்து பத்மநாபன், சாய் வெங்கட சத்திய கேதார் ஆகிய இருவரும், புரூனேவை சேர்ந்த சிடி நஜிஹா, பாகிஸ்தானை சேர்ந்த ஷன்ஸா கான் ஆகிய நான்கு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த நிலையில், தமிழகத்தை சேர்ந்த பத்மநாபன் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.
விருது வென்ற தருணம் குறித்து பத்மநாபனிடம் கேட்டபோது, "உலகத்தின் ஒரு மூலையில் செய்து வரும் பணிக்கு கிடைத்துள்ள இந்த சர்வதேச அங்கீகாரம் எங்களது அணியினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதுடன், மென்மேலும் திறம்பட பணிபுரியவும் தூண்டுகிறது. உணவு உற்பத்தியில் சீனாவிற்கு அடுத்தபடியாக உலகளவில் இரண்டாவது இடத்தை வகிக்கும் இந்தியா, பசி-பட்டினியால் வாடுபவர்கள் பட்டியலில் 103 வது இடத்திலுள்ளது மிகவும் கவலைக்குரிய விடயம். அதாவது இந்தியாவில் இன்னமும் மில்லியன்கணக்கானோர் ஒருவேளை உணவுக்குக்கூட வழியின்றி உள்ளனர்" என்று கூறினார்.
பசியில்லா இந்தியா
"இந்தியா முழுவதும் உற்பத்தி செய்யப்படும் பொருட்களில் கிட்டத்தட்ட 30 சதவீதம் வீணாக குப்பையில் போகிறது. நாட்டில் பசியால் வாடுபவர் ஒருவரும் இல்லை என்ற நிலையை அடையும்வரை எங்களது பணியை தொடர்வதற்கு இதுபோன்ற விருதுகள் மிகுந்த ஊக்கமளிக்கும்" என்று பத்மநாபன் கூறுகிறார்.
மேலும், நேற்று நடைபெற்ற விழாவின்போது பத்மநாபனுக்கு விருதுக்கான சான்றிதழும், கோப்பையும் அளிக்கப்பட்டதுடன், 3,000 பவுண்டுகள் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.
முன்னதாக, நேற்று முன்தினம் நடைபெற்ற காமன்வெல்த் அமைப்பின் மற்றொரு விழாவின்போது, இங்கிலாந்து இளவரசர் சார்லசை சந்தித்து உரையாடியது தனது வாழ்வில் மறக்க முடியாத சம்பவம் என்று கூறுகிறார் பத்மநாபன். "இளைஞர்களை திரட்டி, நான் 'நோ ஃபுட் வேஸ்ட்டுக்காக' செய்துக்கொண்டிருக்கும் பணிகள் குறித்து இளவரசர் சார்லசிடம் விளக்கினேன். நான் சொன்னதை பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்த அவர் இறுதியில், 'நீங்கள் செய்யும் செயலில் தெளிவாக உள்ளீர்கள். இன்னும் சில ஆண்டுகளில் பல உயரங்களை தொடுவீர்கள்' என்று அவர் கூறியது மிகுந்த ஆச்சர்யத்தோடு, வாழ்க்கையில் இன்னும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை அதிகமாக்கியது" என்று பத்மநாபன் கூறுகிறார்

எதிர்கால திட்டம் என்ன?

பசியில்லா இந்தியா: காமன்வெல்த் அமைப்பின் விருதை வென்று தமிழக இளைஞர் சாதனைபடத்தின் காப்புரிமைNO FOOD WASTE
'நோ ஃபுட் வேஸ்ட்' தன்னார்வ தொண்டு நிறுவனமாக செயல்பட்டு வரும் வேளையில், கழிவு மேலாண்மை நிறுவனம் ஒன்றை தனியே நடத்தி வருகிறார் பத்மநாபன். "வாகனம் முதல் எரிபொருள் வரை எங்களுக்கு தேவையான அனைத்தையும், அந்தந்த நகரங்களை சேர்ந்த நிறுவனத்தினரும், அரசு அதிகாரிகளும், அரசும் உதவி வழங்கி வருகின்றனர். அதுமட்டுமின்றி, பல்வேறு தரப்பினரும் தன்னார்வலர்களாக எங்களுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர்."
"நான் இந்த செயலை தொடங்கும்போது உடனிருந்த பலர், இது பொருளாதாரரீதியாக அவர்களது வாழ்க்கைக்கு உதவாததால் விலக நேரிட்டது என்னை பெரிதும் பாதித்தது. எனவே, சமுதாய நலனுக்காக உழைப்பவர்கள் அதன் மூலம் கிடைக்கும் திருப்தியைப் பெறுவது மட்டுமின்றி, வாழ்க்கையில் பொருளாதாரரீதியாக உயரவும் முடியும் என்பதை உணர்த்த விரும்புகிறேன். அடுத்த சில ஆண்டுகளில் என்னை போன்ற பல சமூக தொழில் முனைவோர்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளேன்" என்று விளக்குகிறார் பத்மநாபன்.
அதுமட்டுமின்றி, 'நோ ஃபுட் வேஸ்ட்' அமைப்பின் சேவையை இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு விரிவுபடுத்துவதற்கு திட்டமிட்டு வருவதாக கூறும் பத்மநாபன், மேலை நாடுகளைப் போன்று இந்தியாவுக்கான 'உணவு வரைபடத்தை' உருவாக்குவதே தனது அடுத்த லட்சியம் என்று குறிப்பிடுகிறார்.
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை
 நன்றி: பிபிசி


Thursday, March 14, 2019

அரச இலை ஆட்டம்: கவிஞர் தணிகை

அரச இலை ஆட்டம்: கவிஞர் தணிகை


Related image

இரட்டை இலை எம்.ஜி.ஆர். ஜெ இல்லாமல் முதல் முறையாக தேர்தல்களை சந்திக்க வருகிறது. ஆனால் அவர்கள் இருவரின் பேரை வைத்தே..

தேர்தலே இல்லாமல் எடப்பாடி ஜெ இறக்கவும், சசி சிறை செல்லவும், ஓ.பி.எஸ் வழி காட்டி தற்காலிக முதல்வர் பதவியிலிருந்து இறங்கவும் பதவி, பணம், பேரம்  நீதிமன்ற உதவி போன்றவற்றின் மேல் ஆதாரம் கட்டி பதவியைத் தக்க வைத்துக் கொண்டது தேர்தலே இன்றி...

அப்படிப் பார்த்தாலும்  தினகரன் தனியே பிரிந்து இராதாகிருஷ்ணன் நகரில் கட்சியாவது தலைமையாவது என பணத்தாலேயே அணுகுமுறை தெரிந்து எல்லாப் பெரிய கட்சிகளையும் ஈட்டுத் தொகையே இழக்க வைத்து வெற்றி வாகை சூடினார். ஆனாலும் அவையும் தேர்தல் ஆணையத்தின் விதி மீறலே.

அது ஒரு தொகுதி...அனால் 40 பாராளுமன்றத் தொகுதி மற்றும் 18 சட்டமன்றத் தொகுதியையும் அப்படி கைப்பற்றி விட முடியாது எனவே கூட்டணிகள் பாமக தேமுதிக எலலாம் வளைத்து போட்டபடி..

அப்படி இந்த அணி வெற்றி பெறுமானால் பாரதிய ஜனதா கட்சி  தேமுதிக, பாமக போன்ற கட்சிகளுக்கே சாதகமாக இருக்கும்.

இந்த அளவு கட்சியை நெல்லிக்காய் மூட்டையாக சிதற விடாமல் கட்டிக் காத்ததே இ.பி.எஸ் அரசியல் உத்தி மூலம் பெற்ற வெற்றியாக இருக்கும் மற்றபடி இலவசம் ஆயிரம் ரூபாய் பொங்கலுக்கும் அதன் பின் இந்த இரண்டாயிரம் எல்லாம் பயனளிக்கும் திட்டம் என அவர்கள் போட்டிருக்கும் கணக்கு அம்பலத்தில் ஏறுமா என்பது தெரிய இன்னும் ஒரு மாத காலமே எஞ்சியிருக்கிறது

அதற்குள் மரத்தின் இலைகள் எல்லாம் கொட்டி மழையும் இல்லாமல் இருக்கும் கொஞ்சம் இலைகளும் காற்றில் அசைந்தாடி கலகலத்து வருவது  பொள்ளாச்சி மினிஸ்டர் ஆட்சி ஆச்சி பேச்சி போச்சு என்பதாக எல்லாம் தெரியவருகிறது...
எப்படியும் வாக்கு வங்கிகள் இருக்கின்றன அவை மாறாமல் நமக்கே விழும் என்னும் கணக்கை போட்டுக் கொண்டே இந்தக் கட்சிகளை எல்லாம் வளைத்துப் போட்டு களம் காண வருகிறது ஆளும் கட்சி...மேலும் அடுத்து சட்டசபை பலம், ஊராட்சி தேர்தல் இப்படி பலவிதமான பரீட்சைகள் இருக்கின்றன ...தாங்குமா தாக்குப் பிடிக்குமா  முழு காலமும் நிறைவேறி நிறைவேற்றுமா என்பதெல்லாம் அடுத்து அடுத்து நாம் காணப்போகும் காட்சிகள்...

எதிர்க்கட்சி கூட்டணி பெரிய வலுவான அளவில் இல்லை என்றும் இவர்கள் கணக்குப் போட்டிருக்கிறார்கள். மக்கள் போடும் கணக்கு எப்படியோ அதைப் பார்ப்போம்



மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.



Wednesday, March 13, 2019

பொள்ளாச்சி ஊரும் பேரும் தலைப்பு செய்தியாகிப் போச்சு: கவிஞர் தணிகை

பொள்ளாச்சி ஊரும் பேரும் தலைப்பு செய்தியாகிப் போச்சு: கவிஞர் தணிகை

Image result for pollachi news

பொள்ளாச்சி மாபெரும் ஊர். மரவியாபாரத்துக்கு பிரபலமான ஊர்.மேலும் பொள்ளாச்சி சந்தைதான் தமிழ் நாட்டில் பெரிய சந்தை என்றும் பேர் வாங்கியது. பொள்ளாச்சியை மையமாக வைத்து செழிப்பான விவசாய நடைமுறைகள் உண்டு. அங்குள்ள மக்களும் மிகவும் மரியாதையாகத்தான் அந்நியரிடமும், அடுத்தவரிடமும் பழகுவார்கள், ஏனுங்க , போங்க வாங்க என்ற வார்த்தை தவறாதவர்கள் பேருந்தில் பணிபுரியும் நடத்துனர் உட்பட. பொள்ளாச்சியையும் அதைச் சுற்றியுள்ள இடங்களில்தான் மிகவும் முக்கியாமக சினிமா பட ஷூட்டிங் எல்லாம் நடைபெற்று இடம்பெறும்...

மக்களைப் பெற்ற மகராசியில் மணப்பாறை மாடுகட்டி...பாடல்  பொதியை ஏற்றி வண்டியிலே பொள்ளாச்சி சந்தையிலே நீயும் விருதுநகர் வியாபாரிக்கு வித்துப் போட்டு பணத்தை எண்ணு சின்னக்கண்ணு செல்லக் கண்ணு என்ற பாடல் மிகவும் பிரபலம்
எனது சகோதர நண்பர் வீட்டில் உள்ள மரம் முழுதுமே  தேக்குமரத்தால் ஆனது அதுவும் ஒரே மரம் பொள்ளாச்சியில் சென்று எடுத்து வந்தது என் எனது மதிப்பிற்குரிய நண்பரின் துணைவியார் பெருமை பிடிபடச் சொல்லியதுண்டு.

இத்தனைக்கும் காரணமான எங்கு நோக்கினும் பசுமையாக விளங்கும் பொள்ளாச்சி இப்போது வேறு காரணத்தால்  ஊடகங்களில் எல்லாம் தலைப்புச் செய்தியானது கண்டு பொள்ளாச்சி பற்றி அறிந்தவர்கள் அதிர்ச்சியடையத் தேவையில்லை.

ஏன் எனில் நிலானி சொல்வது போல ஒவ்வொரு நாளுக்கும் ஒன்னரை ஜிகாபைட் இலவசமாக மோடி அரசும் ரிலையன்ஸ் ஜியோவும் வழங்கி வரும்போது இப்படி எல்லாம் நடக்காதிருந்தால்தான் அது அரிது.

என்ன ஒரு பெண் சொல்கிறார் எனில்: நீங்க சொல்லித்தானேண்ணா வந்தேன். அடிக்காதீங்கண்ணா, அடிக்காதீங்க, நானே கழட்டிற்றேன் என தனது ஆடைகளை கழட்டி விட்டு படம் பிடிக்கத் தயாராக இருப்பதாக கதறுகிறார் என்கிறார்கள் வீடியோ காட்சிகளைப் பார்த்தவர்கள்.

நானும் பார்த்தேன் எனக்கு ஒன்றும் புரியவில்லை ஆண் குரல் பெண்குரலெல்லாம் கேட்கிறது மிரட்டுகிறது கெஞ்சுகிறது ஆனால் தெளிவாக புரியவில்லை.

 இன்று நாட்டு நடப்பு இப்படி இருக்கையில் ஒரு விவாதம்: அந்தப் பெண்கள் ஏன் அந்த ஈனப்பிறவிகளுக்காக அவர்களின் சொல் வார்த்தை கேட்டு அங்கு போனார்கள் என்பதுவும்...

ஒரு வேளை அவர்களும் தரம் தாழ்ந்தவர்களோ என்று கேள்வி எழுப்புவாரும் உண்டு அவரது நியாயத்தையும் எம்மால் பேச்சுக் கொடுத்துப் பார்த்தபின் மறுக்க முடியவில்லை.

அரசியல் , கட்சி, தேர்தல் எல்லாம் சரிதான் அதன் தாக்கம் இருக்கும்தான். இதுபோல் எல்லா இடங்களிலும் நடக்கலாம் தான்...அனால் வெளிவந்துவிட்ட இந்த செய்தியின் பின்னணி உண்மை என்ன அதை சரியான அரசாக இருந்தால் தேடிக் கொண்டு வந்து மக்களுக்கு அம்பலப்படுத்த வேண்டிய கடமை அதற்கு உண்டு.

இந்த விடலைகளின் பெற்றோர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள் , சகோதர சகோதரிகள் எவருமே இவர்களின் தவறை எப்படி வளரவிட்டனர்.  என்றைக்கு மேலை நாட்டு கலாச்சாரமும், மதுவும் போதையும், வலையமும் இணையமும் வந்து இந்த நாட்டை ஆக்ரமித்ததோ அதை எந்தவித கட்டுப்பாடுமின்றி இந்த அரசுகள் அனுமதித்ததோ பள்ளிகளில் எல்லாம் கூட மடிக்கணினியும் இணைய இணைப்பும் சுலபமான வாய்ப்புகளாகிவிட இன்று நாடே நாறிக் கிடக்கிறது ஒரு ஊரின் பேர் சொல்லி.

இவன்களுக்கு வேறு எந்த வியாபாரமுமே கிடைக்கவில்லையா? இவனுங்க அதற்காக அடித்து சித்திரவதைப்படுத்தி எதை வேண்டுமானாலும் செய்வார்களா? அதற்கும் அரசுக்கும் எந்தவித தொடர்புமில்லை என மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர் சொல்வது முற்றிலும் உண்மையா/ நூற்றுக்கணக்கானவர்கள் இதில் பாதிக்கப்பட்டது உண்மையா? அல்லது வெறும் 4 குறுந்த்தகடுகள் மட்டுமேதான் உள்ளனவா?

இப்படி புரிபடாத நிறைய புதிர்க்கேள்விகள்...வயசுக்கு வந்த பெண் எப்படி ஒரு நிறுவனம் சாராமல் பெற்றோர் குடும்பம் சாராமல் தனியாக இந்த போதைக்கார நாய்கள் கூப்பிட்டார்கள் என எதற்காக சென்றார்கள் ஏன் சென்றார்கள் இந்த கேள்விக்கு மட்டும் பதில் கிடைக்கவில்லையே

எப்படியோ மக்களை சிந்திக்க விடாமல் இது போல போதை ,மது, காமம் என திசை திருப்பி விட்டு அரசும் அரசுகளும் ஆட்சியும் கட்சிக்ளும் பொதுமக்களை பிரித்தாண்டு சூழ்ச்சி செய்து சுழலவிட்டு  தங்களது விருப்பம் நிறைவேற பயணம் நடத்திக் கொண்டிருந்தாலும் போதும் இப்போது ஒரு பொள்ளாச்சி இனி அப்படி எத்தனையோ வெளி வந்தது இது வெளிவராமல் எத்தனையோ....

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.

பேய்கள் அரசாண்டால் பிணந்தின்னும் சாத்திரங்கள் என்பான் பாரதி...

Friday, March 8, 2019

பூனை நாய் பெண்பாலாக‌ இருந்தால் வேண்டாம் என்பார் ஆடு மாடாக இருந்தால் வேண்டும் என்பார்: கவிஞர் தணிகை.

பூனை நாய் பெண்பாலாக‌ இருந்தால் வேண்டாம் என்பார் ஆடு மாடாக இருந்தால் வேண்டும் என்பார்: கவிஞர் தணிகை.

Image result for female part in our life

மனிதக் கணக்கீடுகள் எப்போதும் பொருளாதாரத் தொடர்புடையதாகவே இருக்கிறது. ஆனால் உயிர்களின் தொடர்பும் நேசமும் அப்படி இருப்பதில்லை. நேற்று முன் தினம் எங்கள் வீட்டின் பெண் நாய் ஒன்று இறந்து போனது. சொல்ல முடியாச் சோகம்.

குடிநீர் வந்தால் குரல் கொடுத்து சொல்லி நீர் பிடிக்கச் சொல்லி அழைக்கும். நீர் கீழே விரயமாகப் போய்க் கொண்டிருந்தால் அந்த நாய் குரைப்பதை நிறுத்தாது. அக்கம் பக்கம் வீட்டார் கூட இந்த நாய் குரைப்பதைக் கேட்டவுடன் நீர் பிடிக்கத் தயாராகிவிடுவார்கள்.

ஆனால் இனி அந்தக் குரல் கேட்கப் போவதில்லை.

பைக்கின் மேல் போட்டு மூடி இருக்கும் சேலைத்துணியை இழுத்துப் போட்டு படுத்துக் கொள்ளும். சமையல் கட்டு திறந்திருந்தால் உள்ளே வந்து புகுந்து தக்காளி போன்றவற்றை தூக்கி வெளியே சென்று விடும். எந்தப் பேப்பராக இருந்தாலும் துணி கிடைத்தாலும் கிழித்து சுக்கல் சுக்கலாகப் போட்டுவிடும்.

பிளாஸ்டிக்கை வேறு கடித்துத் தின்று பழகி இருந்தது.

தேவையில்லா இடங்களில் எல்லாம் சிறு நீரும் , மலமும் இருந்து கழித்து விடும் ஏகப்பட்ட குளறுபடி...ஆனால் வெளியே எங்கும் ஓடாது. தப்பித்தவறி ஓடினாலும் கூப்பிட்டவுடன் வந்து விடும். நாம் சாப்பிட்டு மீதம் வைக்கும் சப்போட்டா, கொய்யா, பழம் போன்றவற்றையும் சாப்பிடும், கோசப்பழம் போன்றவற்றின் தோலையும் விடாது.. முன் ஜென்மத்தில் ஆடாக இருந்திருக்கும் என கேலி செய்வோம்.

முன்பு ஒரு அப்பு என்ற ஆண் நாய் வளர்த்து வந்தோம் அது அடிக்கடி டிமிக்கி கொடுத்து விட்டு ஓடி விடும்.கண் தெரியவே ஓடிக் கொண்டே இருக்கும் கூப்பிட்டால் வராது. பின் களைத்துப் போய் பிஸ்கட் அது இது என்று தாஜா செய்து கூட்டி வருவதற்குள் பாடாகப் போய்விடும்

ஆனால் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே செல்கிறோம் எனில் வாசலைத் தவிர வேறு எங்குமே போகாது...நாம் வரும் வரை வாசலிலேயே தவம் கிடக்கும்...என்ன ஜென்மங்கள் இவை...

 நாங்களும் முடிந்தவரை வாரா வாரம் குளிக்க வைத்து பவுடர் கூடப் போட்டு வளர்ப்போம் என்றாலும் பெரும்பலும் சைவம் என்பதால் அதற்கான வேட்டை கிடைக்காது.

இந்த நாய்கள் பூனைகள் எல்லாமே கடைசியில் உயிர் இருக்கும் வரை நம்மை நினைவில் வைத்து வாலாட்டியபடியும் நமது குரல் பரிச்சயம் வைத்து நம்மிடம் நன்றி பாராட்டுவதும், நம் காலில் வந்து தலையை வைத்து சல்யூட் செய்வதுமாக...

ஒரு முறை கம்பளி நல்ல துணி எல்லாம் கடித்து வீணாக்கி விடுகிறதே என ஒரு பெண் பெரிய பூனையை சுடுகாட்டு கம்பெனியுள் தெரிந்த உறவினரின் கம்பெனிதான் விட்டு விட்டு வந்து விட்டோம் மூடி எடுத்துப் போய் ஆனால் அது சில நாள் கழித்து நிறம் மாறிப்போய் ஒர் விடியல் காலை வீட்டில் வந்து நின்றது... மறுபடியும் ஆறு தாண்டி மேட்டூர் சென்று எனது துணைவியார் விட்டு விட்டு வந்தார்கள் 8 கி.மீ தாண்டி...

ஆடு மாடு கூட விட்ட தடம் மாறாது திரும்பி வீடு வந்து சேர்ந்துவிடும் என்பார்கள்...அப்படி நடந்த கதைகளும் கதையல்ல உண்மைச் சம்பவங்களும் நிறைய நடந்திருக்கிறது..

ஆனால் இவை எல்ல்லாம் கடைசீ காலம் வந்து விட்டால் நம்மால் அதைப் பார்க்க சகிக்காது வேதனையில் துடித்துப் போவோம் அதற்காகவே நாங்கள் அதை அப்படி வளர்ப்பதில்லை என்றார் அலிராக்ஸ் அபராஸிவ்ஸ் என்ற கம்பெனீயின் மேலாளராய் இருந்து ஏற்காட்டில் இருந்து எனக்கு ஒரு பொமரேனியன்  நாய்க்குட்டியை ரூபாய் 650க்கு வாங்கிக் கொடுத்த எனது நண்பர் அவர் இப்போது இல்லை இந்த நாய்களும் பூனைகளும் கூட‌

இப்போது ஒரு நாயும் பூனையும் மட்டுமே இருக்கிறது...

அந்த பெண் நாய், பெண் பூனை இவற்றை பால் இனம் பார்க்காது நாங்கள் வளர்ப்பதன் ஆர்வம் கண்டு எங்களை சில நண்பர்கள் பாராட்டியதும் உண்டு.

இந்தக் காலத்தில் இது போல் நாய் பூனைக்கெல்லாம் மருத்துவம் பார்க்க கால் நடை மருத்துவரை நாம் அழைத்தால் அவர்கள் அவ்வளவு ஆர்வத்துடன் வருவதில்லை. ஆடுமாடுகளுக்கு வந்தால்  மட்டுமே அவர்களுக்கு பயன். எல்லாம் பொருளாதாரம்தான்..

அப்படி சில உயிர்களை நான் இழந்திருக்கிறேன். இதனுடனெல்லாம் இருந்து விட்டு கழிவறையில் உள்ள மலத்தொட்டியில் ஒர் எறும்பு இருந்தால் கூட அதைக் காப்பாற்றி விடலாமே உயிர் அரியதே..அதை நம்மால் உயிர்ப்பிக்க முடியாதே என்று...

நேற்று முன் தின்ம் இறந்த அந்த நாயை சோற்றுக் கற்றாழை வைத்திருக்கும் பகுதியில் குழி நோண்டி புதைத்து ஒரு பெரிய கல்லை எடுத்து கனமாக வைத்து சமாதிக்குள்ளாக்கினேன்.

மகளிர் தின வாழ்த்துகள்....

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.



Thursday, March 7, 2019

D.M. ராஜாவுக்கு என் அன்பார்ந்த நினைவாஞ்சலி: கவிஞர் தணிகை

 டி எம் ராஜாவுக்கு என் அன்பார்ந்த நினைவாஞ்சலி: கவிஞர் தணிகை


Image may contain: 1 person, standing and sunglasses

34 வயது, நல்ல இளைஞர் மிகவும் கவர்ச்சிகரமான இளைஞராக விளங்கியவர் மதுவுடன் சகவாசம் வைத்ததால் இன்று மீளாத் துயில் கொள்ள போய்விட்டார்.

சம்பள உயர்வு பற்றி பேசலாம் அய்யா உங்களுக்கு நல்ல அனுபவம் இருக்கிறது நீங்கள் சொன்னால் கேட்பார்கள் அய்யா என்பார்.

என்னை அய்யா என்றுதான் கூப்பிடுவார். இப்போது சம்பள உயர்வு வந்த சூழலில் அதைப் பார்க்காமல் கூட உலக பல் மருத்துவர்கள் தினமான மார்ச். 6ல் மறைந்து விட்டார்.

மிகவும் திறமையான தொழில் வல்லமை உள்ள இளைஞர். டென்டல் மெக்கானிக். நன்றாக பல் செட்கள் செய்வதில் கை தேர்ந்தவர்.

மிகவும் ஸ்டைலாக இருப்பார்.பழக்கத்தின் கொடுமை அவருக்கு மஞ்சள்காமாலை கல்லீரல் தொற்று எல்லாம் ஏற்பட்டிருப்பதை அவர் கண்கள் வெணிவிழிபடலம் காட்டிக் கொடுத்த வண்ணம் இருந்தன.

எனது வரவேற்பறை மேசையின் அருகே வந்து பையை வைத்து சென்றது பசுமரத்தாணியாக பதிந்து போய்விட்டது.

நாம் எல்லாமே காரணம்.  போய்க் கொண்டிருக்கும் இவர் போன்ற உயிரை நம்மால ஏதாவது செய்து காப்பாற்ற முடிகிறதா? எனவேதான் சொன்னேன் நாம் எல்லாமேதான் காரணம் இந்த இளையவரைப் போன்றோர் இந்த மண்ணை விட்டுப் பிரிவதற்கு.

அரசின் மதுக்கடைகள் இது போல் இன்னும் எத்தனை உயிர்களைப் பலி கொள்ளப் போகிறது?

ஒரு நாள் மதியம் உணவு இடைவேளைக்குச் சென்றவர் சாக்லெட்களை வாயில் போட்டபடி மென்று கொண்டு வந்தார் , என்ன அது என்று கேட்டேன் உடனே கால்சட்டைப் பாக்கெட்டிலிருந்து கையை விட்டு சாக்லெட்களை எடுத்து நீட்டினார். எப்போதும் நான் மதியம் சாக்லெட்களை நிறைய வாங்கி வைத்து சாப்பிடுவேன் என்றார். நான் இரண்டு மட்டும் எடுத்துக் கொண்டு அதையே வீட்டிற்கும் கொண்டு வந்து கொடுத்தேன்.

மறுபடியும் இன்னொரு நாளும் அதே போலச் செய்தார்...நான் இனி எனக்காக நீஙக்ள் செலவு செய்ய வேண்டாம் இதுவே போதும் இனி வாங்காதீர்கள் எனக்கு கொடுக்காதீர்கள் எனக் கட்டுப்படுத்திக் கொண்டேன்.

மற்றொரு நாள் வந்தவர் ஒரு மல்லிகை மணமுடைய ஒரு வாசனை தைலத்தை கொடுத்தார் இதை ஒரு மாணவரின் பெற்றோர் அரேபிய நாடுகளில் இருந்து வாங்கிக் கொடுத்தார்கள் நான் பயன்படுத்தப் போவதில்லை நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள் அய்யா என்றார். என்னிடம் கொடுக்க காசு ஏதும் இல்லை என்றேன். மாறாக எனது தயாரிப்பான புத்தகம் ஒன்றைக் கொடுத்துப் படிக்கச் சொன்னேன்.

 அவர் கல்லூரியில் ஒரு பிரச்சனையில் இருந்தார் ஆனால் அப்போதும் கையில் தொழில் இருக்கிறது வேறு கல்லூரி நிறுவனம் கூட செல்ல முடியும், அல்லது கிளினிக் போன்றவற்றிற்கு செய்து கொடுத்து சம்பாதித்தி விடலாம் என்றார் மிக‌வும் தைரியமாக.
Image may contain: 4 people
இவர் சுமார் 10 வருடங்களுக்கும் முன் மிகவும் அருமையாக இருப்பார் அப்போதே மணம் செய்திருந்திருந்தால் மிகவும் நல்ல பெண்கள் கிடைத்திருப்பார்க்ள் என்று அவரை அப்போது பார்த்தவர்கள் என்னிடம் கூறினார்கள்.

இவர் போன்ற நபர் எல்லாம் பாஸ்போர்ட் எடுத்து விசாவுடன் வெளிநாட்டில் குடியேறி இருந்தால் குறைந்த பட்சம் மாதம் ஒன்றுக்கு ஒரு இலட்சம் ஊதியம் ஈட்டி இருக்க முடியும். அப்படி ஈட்டி வருவார்கள் இருக்கின்றனர்.

ஆனால் இவரின் குடிப்பழக்கம் இவரைத் தின்று முடித்துவிட்டது...அவரின் நினைவு மட்டும் மிச்சம் விட்டு...

கல்லூரி பேருந்தில் என்னருகே முதல் இருக்கையில் பயணம் செய்து வரும்போது நான் வேடிக்கையாக அவரைக் கழுத்தை எல்லாம் பிடித்து நெரிப்பது போல பாசாங்கு செய்து விளையாடி இருக்கிறேன் வயது வித்தியாசமின்றி...

நான் பேருந்து ஏறும்போதே வணக்கம் அய்யா என்பார்...நான் பதில் வணக்கம் செய்தபடியே ஏறுவேன்....ஒரு மகிழ்வான தருணமாக அது அவர் இருக்கும்போதெல்லாம் இருக்கும்....இருந்தது... இனி...? முன்னால் ஓட்டுனரிடம் பாட்டிலில் இருந்து குடி நீரை வாங்கிக் குடிப்பார் என்ன காலையிலேயே தண்ணியா எனக் கேட்பேன்...அந்த ஓட்டுனரும் இவருடைய நெருங்கிய உறவினர் என்பதை இன்றுதான் அறிந்தேன் அந்த ஓட்டுனர்  வாயிலாகவே...
Image may contain: 1 person, text
அந்த இளைஞரை மறக்க முடியாது...மறக்கவே முடியாது... நான் இன்னும்கூட அவரிடம் நன்கு பழகி இருக்கலாமோ, கொஞ்சம் கட்டுப்பட்டுடன் நடந்து கொண்டதும் சரியோ என இப்போது தோன்றுகிறது

தனக்கென எவருமே அன்பு பாராட்ட இல்லையோ என ஏங்கி இருப்பாரோ

விடைபெற்றவருக்கு நான் எப்போது விடை கொடுக்கப்போவதில்லை..

எப்போதும் என் நினைவில் வாழ்வார் வாழ்கிறார்... மதியம் அவரின் தாய் செய்து கொடுக்கும் உணவை மதிய உணவாக எடுத்து வருவார் அந்த பெற்றவர்க்கு யாரால் என்ன கைம்மாறு செய்து விட முடியும்...

இயற்கையின் நியதியில் எல்லா உயிர்களும் அதில் ஒன்று ராஜாவுடையதுமாக‌

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Wednesday, March 6, 2019

1862ல் கட்டப்பட்ட சேலம் மத்தியச் சிறையில் பல் பரிசோதனை முகாம்:கவிஞர் தணிகை

1862ல் கட்டப்பட்ட சேலம் மத்தியச் சிறையில் பல் பரிசோதனை
முகாம்:கவிஞர் தணிகை

Image may contain: 11 people, including ArUn ViGgness, people smiling, people standing


கடந்த வருடம் இதே போல் இந்த முகாம் நடந்தது என்னால் அதில் கலந்து கொள்ள முடியவில்லை. இந்த முறையும் முதலில் வேண்டாமே என்றுதான் சொன்னேன் அதன் பின் அதன் முக்கியத்துவம் கருதி வந்து கலந்து கொள்வதாக டாக்டர் பரத்திடம் சம்மதம் தெரிவித்தேன்.

1862ல் கட்டிய பழமை வாய்ந்த கட்டடம் என முன் வாயிலில் ஆண்டு கணக்கு தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அங்கு உயர உயர இருந்த கட்டடங்கள் தனியறைகள் சிறைப் பிரிவுகள் தொழிற்கூடங்கள் என 25 ஏக்கருக்கு பரப்பில் இந்த சேலம் மத்திய சிறை விரிந்து கிடக்கிறது.

 நாங்கள் 12 பேர் கொண்ட பல் மருத்துவக் குழு  சிறையின் கண்காணிப்பாளர் தற்போது உயர் திரு தமிழ்செல்வன் IPS  இருக்கிறார். அவரது பேருக்காகவே அவரது பெயரை மேடையில் உச்சரித்து நன்றி பாராட்டினேன்.

எங்கள் கல்லூரிக்கும் சேலம் மத்திய சிறை அலுவலர்களுக்கும் ஊடகமாக  மாண்ட் ஃபோர்ட் தொண்டு நிறுவனம் இருந்து ஒருங்கிணைப்பு செய்தது அந்த சகோதரிகளுக்கும் சகோதரர்களுக்கும் நன்றி பாராட்டினோம் மேலும் எங்களது முகாம் நிறைவடையும் வரை எந்தவித தவறுதலுமின்றி மிகவும் தெளிவாக திட்டவரைவுகள் நடந்தேற துணைபுரிந்த காவலர்களை பாராட்டியே தீரவேண்டும்.

துவக்க விழாவை மத்திய சிறையின் தலைவரும் துணைத்தலவரும் ஆரம்பித்தனர். சகோதரியும் அறிமுக உரை செய்தார். டாக்டர் பரத் பல் துலக்குவது பற்றிய மாதிரியுடன் விளக்கினார்.

சிறையின் மருத்துவரும் சில வார்த்தைகள் பேசினார்.

வழக்கம்போல நான் எனது பயனுள்ள உரையை அடையாளத்துடன், கவன ஈர்ப்புடன் கேட்பவர்க்கு பயனாகும் வண்ணம் முக்கிய செய்திகளுடன் கல்லூரி பற்றிய விவரங்களுடன் பல் மருத்துவ சேவை பற்றிய மாண்புடன் விளக்கினேன். இடையே லிங்கன் காந்தி ஸ்மேட்ஸ் துரை வாய் சுத்தம் புற்று நோய், மாரடைப்பு, எங்களது அகில இந்திய சிறுவர் பல் மருத்துவத் தலைவர் கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் மருத்துவர் பேபிஜான், சமுதாயத் துறைத் தலைவர் சரவணன் ஆகியோர் பெயரையும் குறிப்பிடத் தவறவில்லை.

கல்லூரியின் சலுகைகள் பங்கு பணிகள் சேவைகள் யாவற்றையும் பற்றிக் குறிப்பிட்டேன்.

பரிசோதனை முகாம் சிறப்பாக நடைபெற்றது. பிரமிப்புடன். பிரமையை ஏற்படுத்தும்படி...அங்குள்ள மருத்துவ மனையைச் சென்று பார்த்தோம். உயர் பாதுகாப்பு எனக் கொடுத்துள்ள‌ ஒரு கைதிக்கும் சென்று பரிசோதனை செய்தனர் எமது மருத்துவர்கள்.

அந்தக் காலக்க்கட்டத்தில் வெள்ளைக்காரர்கள் கட்டிய கட்டடம் எல்லாம் எப்போதுமே இப்படித்தான் வலுவாக மிக உயரமாக எக்காலத்திலும் பேர் சொல்லும்படி அது இந்த சிறையாகட்டும், எமது மேட்டூர் அணையாகட்டும், அவர்கள் கட்டி இப்போது நடத்த முடியாமல் கால வெள்ளத்துள் கலைந்து போன எங்கள் குடும்பம் எல்லாம் மலரக் காரணமான மில் தொழிற்சாலை ஆகட்டும்... பெரு உழைப்பு அவற்றில் எல்லாம் உள்ளதை வாய் திறந்து ஆச்சரியத்துடன் மட்டுமே பார்க்க முடிகிறது.

நன்றாக தூய்மையாக பராமரித்து வருவதை நாங்கள் பார்த்தோம்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Tuesday, March 5, 2019

மஹா சிவராத்ரி நேற்று பார்த்தேன்,இன்று கேட்டேன்...கவிஞர் தணிகை

மஹா சிவராத்ரி நேற்று பார்த்தேன்,இன்று கேட்டேன்...கவிஞர் தணிகை

Image result for isha mahashivratri 2019


பிரமிப்பூட்டும் நிகழ்ச்சியாக இருந்தது ஈஷா யோகா மையத்தின் மஹா சிவராத்ரி. பிரமை.

இந்திய நாட்டின் முதல் குடிமகன் கலந்து கொள்ள ஜக்கி வாசுதேவ் வழக்கம் போல் தனது மேல் துணியை பெண்கள் அடிக்கடி மேலாக்கை சரி செய்வது போல் சரி செய்து கொண்டே ஆடி, பாடி, பேசி நாயகனாக விளங்க\\

பாம்பு பிரமணை சுற்றிய லிங்கம், அண்ணாந்து பார்க்கும் நிலவை சூடிய சிவன் எனச் சுற்றி வந்த காமிராக்கள் ஆடல் பாடல் மேடையில்...

மிக நேர்த்தியாக ஒருங்கிணைக்கப்பட்ட நிகழ்வு. அனைவர் கையிலும் ஒரு அடையாள வளையம் இருந்ததைக் காணமுடிந்தது.
Image result for isha mahashivratri 2019
பல தொலைக்காட்சிகளும் நேரலையை ஒளிபரப்பின‌
Image result for isha mahashivratri 2019
அங்கே நேரடியாக சென்று பார்ப்பதை விட இது நன்கிருந்தது.

ஜக்கி வாசுதேவ் தமன்னா, காஜல் அகர்வால், சுஹாசினி போன்ற நடிகையரை  எல்லாம் அருகழைத்து ஆடினார்...

உடன் பச்சை துண்டை போட்டிருந்த விவசாயிகளா அவர்கள் அவர்களும் ஒரு பாடலுக்கு மேலேறி ஆடினார்கள். அதன் பின் அந்த இடத்தை அங்கேயே தக்க வைத்துக் கொண்டார்கள்.

பாடகர் கார்த்தி மிக நல்ல வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு சளைக்காமல் அருமையாகப் பாடினார். அதில் எம்.ஜி.ஆர் பாடல் வேறு....ஆயிரத்தில் ஒருவனிலிருந்து அதோ அந்த பறவை போல ....பாரதியாரின் பாடல், இப்படி அலே அலே...என்றெல்லாம்...

இவ்வளவு கூட்டத்தை நெறிபடுத்தி இந்த நிகழ்வை செய்வாரைப் பாராட்டுதல் வேண்டும்.
Related image
இந்த ஆதி சிவன் இமயம், கங்கை, நெற்றிக் கண் ஆகியவற்றை மையப்படுத்திய மதம் சார்ந்தவர்....

இந்நிகழ்வை முடித்து விட்டு தூங்காமல் தமது காரை தாமே ஓட்டிவந்து தூங்கி வழிந்து ஒருவர் சேலம் வரும்போது விபத்துக்குள்ளாகீ மரணம் அடைந்தார் அவர் எங்களது கல்லூரி அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு மதிப்பிற்குரிய நண்பரின் நெருங்கிய உறவினரும் ஆவார்.
Related image
அதற்கு முன் தினசரியில் 60 ஆம் வயது கல்யாணம் செய்த தம்பதியர் விபத்தில் பலி என்ற செய்தியையும் கண்டேன்...
Related image

நேற்று இரவு  11.45 வரை விழித்திருந்தேன்....காரணமாக...அதன் பின் 4 மணிக்கு அதிகாலையில் எழுந்தேன்...ஆனால் அந்த உறக்கமே எனக்குப் போதவில்லை... என்றுமே இது போல முழு இரவெல்லாம் நான் விழித்திருப்பதில் உடன்படுவனல்ல. ஆனால் ஒரு முறை எமது அலுவலகத்துக்காக 3 பகல் 2 இரவு தொடர்ந்து பணி புரிந்தது ஹைதராபாத்தில் நினைவிற்கு வந்தது .அப்போது கணினி புதிதாக பயன்படுத்தப்பட்ட நேரம்...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Monday, March 4, 2019

ஏர் விங் கமாண்டர் அபிநந்தனைப் பற்றி என்னால் ஏன் எழுத முடியவில்லை? கவிஞர் தணிகை

ஏர் விங் கமாண்டர் அபிநந்தனைப் பற்றி என்னால் ஏன் எழுத முடியவில்லை? கவிஞர் தணிகை

Image result for wing commander abhinandan

புதுசாம்பள்ளி ரயில்வே குறுக்கு வெட்டுச் சாலையின் ரயில் சாலை அருகே இரண்டு சாலையோர காய்கறி விற்கும் பெண்கள் மற்றொரு பெண்ணை நீயும் வந்து இங்கேயே  கடை போடுகிறாயா? ஏதோ ஒரு நாள் போனால் போகட்டும் என விட்டால் வந்துர்ராளுக, நாங்க எப்படி பிழைப்பது ? என சாடல் பேச்சு...

இதற்கும் தலைப்புக்கும் என்னடா தொடர்பு என்கிறீர்களா? இருக்கிறது சீனா பாகிஸ்தானை ஆதரிப்பதும் அமெரிக்கா அங்கேயும் இங்கேயும் சாய்வதும் ரஷியா இஸ்ரேல் இங்கிலாந்து ஆஸ்திரேலியா போன்றவை இந்தியாவை ஆதரிப்பதும் இப்படியாக உலக நாடுகளின் நிலைகளை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டால் ஏதாவது ஒரு வியாபாரக் காரணம் இருக்கும் என்பதை எவருமே மறுக்க முடியாது...

சுமார் 200 ஆண்டுகளாக இந்த நாட்டை ஆண்ட ஐரோப்பியர் நாட்டை கூறுபோட்டு 70 ஆண்டுகளாக இரு நாடுகளுக்குள்ளும் தீராத பங்காளிபகையை ஏற்படுத்தி விட்டனர். காந்தி போன்ற நபர்கள் மறுபடியும் சகோதரரை பகையை நீக்கி தழுவிக் கொள்ள வைக்க முடியுமா என்று முயற்சிக்கும்போதே அவர் சுடப்பட்டு ஒரு முடிவு கட்டப்பட்டது. முகமது அலி ஜின்னா போன்றோர் ஆரம்பித்த அந்த நாடும் கிழக்கு மேற்கு எனப் பிரிந்து பங்களா தேஷ் என்றும் பாகிஸ்தான் என்றும் பிரிந்து போனது.

பாகிஸ்தானில் இருக்கும் முஸ்லீம் மக்கள் தொகையைப் போலவே இந்தியாவிலும் முஸ்லீம் மக்கள் தொகை அதிகம். இரண்டு நாடுகளுக்கும் புள்ளிவிவர அடிப்படையைச் சொன்னால் முதலில் இந்தோனேசியா இரண்டாவது பாகிஸ்தான் மூன்றாவதாக இந்தியா ...பாகிஸ்தானில் 11 சதம் முஸ்லீம் என்றால் இந்தியாவில் 10.9 சதம் இருக்கிறார்கள் என்கிறது புள்ளிவிவரம்.

பாகிஸ்தான் வசப்படுத்தி உள்ள ஆசாத் காஷ்மீர், இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் இதில் உள்ள மக்கள் இந்தியாவை ஆதரிப்பார், பாகிஸ்தானை ஆதரிப்பார் இரு அரசுகளுமே வேண்டாம் என தனி நாடாக விட்டு விடலாம் என்பார் இப்படி மூன்று ரகத்திலிருக்க  அவை அப்படியே நீடிக்குமளவு எல்லா அரசுகளும் ஆட்சி செய்து கொண்டிருக்க இந்திய ராணுவ வீரர்களை மகா கேவலமாக அவமானபடுத்தி வரும் மக்களின் காட்சிகளை எல்லாம் தற்போதைய சமூகவலை தளங்களின் பகிர்வுகள் அம்பலப்படுத்தி வருகின்றன.


இப்போது இது போல நடக்கும் என ஏற்கெனவே இரு மாதங்களுக்கும் முன்பாகவே பாரதிய ஜனதா ஒன்று வாக்குக்கு பணம் அல்லது இரண்டாவதாக பாகிஸ்தானுடன் போர் இந்த இரண்டு நிலையை வைத்து மக்கள் செல்வாக்கைப் பெற வேண்டும் எனத் திட்டமிட்ட செய்திகளாக வெளிவந்தது.

இப்போதும் கூட மமதா பானர்ஜி, நவ்ஜோத் சிங் சித்து, போன்றோர் இந்த அரசியல் தில்லுமுல்லு அண்டை நாட்டில் எதிரொலித்திருக்கிறது என...இந்த சம்பவங்களில் இம்ரான்கான் நன்றாக கையாண்டு அபிநந்தனை விடுவித்து உலக அரங்கில் நல்ல பேரை வாங்கியிருக்கிறார் என்பதும்.

மனித வெடிகுண்டு சுமார் 300 கிலோ வெடிமருந்துடன் அதை ஊக்குவிக்கும் நைட்ரஜன் 80 முதல் 90 கிலோ அமோனியம் நைட்ரேட்டுடன் ஈக்கோ வாகனத்தை 10 நாளுக்கும் முன் தான் இதற்காகவே வாங்கி உள்ளார்கள். வாங்கிய உடனே பயன்படுத்தி வாகன அணிவகுப்பை சிதைத்து  44 மத்திய துணை நிலை ராணுவப்படையை சார்ந்த வீரர்களை ஒரு சிறு வாகனத்தில் ஒரு மனிதவெடிகுண்டை வைத்து வெடித்து விட்ட நிலையில்... ஜெய்ஷ் இ முகமது என்னும் இயக்கம் இதை செய்ததாக ஏற்ற நிலையில்...

மோடி அரசு துல்லியமான தாக்குதல் என்ற நிலையில் 300 தீவிரவாதிகளை பாகிஸ்தான் பிடியில் உள்ள காஷ்மீருக்கு சென்று வான் வழி போர் விமானங்கள் வழி சென்று அழித்து வந்தது என்று சொன்ன நிலையில் அது பற்றி எந்த வித ஊடக செய்திகளும் வரா நிலையில்

நமது நாயகன் அபிநந்தன் பற்றி விழுந்தது, எழுந்தது, பேசியது ,தேநீர் அருந்தியது ,பதிலை சொல்ல நாசூக்காக நாகரீகமாக மறுத்தது, அதன் பின் அவர் அந்தப் பக்கமிருந்து இந்தப் பக்கம் வாகா எல்லைப் பகுதிக்கு டாக்டர் பர்ஹா என்றவரால் அழைத்து வரப்பட்டு விட்டுச் செல்லப்பட்டது, அதன் பின் மருத்துவ சோதனைகள்....அனைவரின் பாராட்டும் செய்திகளும்

ஒரு இராணுவ வீரர் ஊடகத்தை கூட ஒரு பிடி பிடித்திருந்தார்  அபிநந்தனின் அவரின் ஊர் திருவண்ணாமலை அவரது குடும்பம் பற்றி எல்லாம் குறிப்பிட்டிருந்தது பற்றி அவரே அதை தெரிவிக்காத நிலையில் நீங்கள் எல்லாம் ஏண்டா புரியாதா உங்களுக்கு முட்டாள்களாடா நீங்கள் , நாளை தீவிரவாதிகள் மூலம் அவர்கள் குடும்பத்துக்கு ஏதாவது ஒன்று என்றால் நீங்களாடா பார்ப்பீர்கள் என்றும் அரசு அதை எல்லாம் பார்த்துக் கொள்ளும், நீங்கள் உங்கள் வேலையை மட்டும் பாருங்கடா என்றெல்லாம் தனது கோப அதிர்வலைகளை கொட்டி இருந்தார்.

வியாபாரம் செய்து கொள்வார்கள், மருத்துவ சேவையை பயன்படுத்திக் கொள்வார்கள், விளையாடிக் கொள்வார்கள், ரயில் விட்டுக் கொள்வார்கள், சாலை வசதியில்,இணைத்துக் கொள்வார்கள் அங்கிருந்து இங்கு வந்து சுற்றி பார்ப்பார்கள் எல்லாவற்றுக்கும் ஒரு அனுமதி துண்டுச் சீட்டு, அல்லது டிஜிட்டல் ஆன்லைன் காட்சி வடிவம் அதில் பேர் அனுமதி விசா பாஸ்போட் என ...மற்றபடி தெரியாது எல்லைக்கோட்டைத் தாண்டி விட்டால் அடித்துக் கொள்வார்கள், எல்லையில் இருந்து சுட்டுக் கொல்வார்கள்...


எல்லாவற்றிலும் ஒரு சுயநலம் இருப்பதை நன்றாக ஊன்றிப் பார்ப்பார்க்குத் தெரியும் ஆட்சி, சாதி, அரசு, மதம் நாடு எல்லாவற்றிலும் மனிதம் ஊடுருவி இருப்பதற்கும் மேலாக சுயநலம் ஊடுருவி இருப்பதை உணர்வார் எவரோ அவரே மனிதம் . இதை எல்லாம் கடந்த மனிதம்....

நாடு,,இடம், மதம், மொழி, இனம், சாதி என்ற பேரால் ஒருவரை ஒருவரை அடித்துக் கொன்று கொல்வது அது எனது எல்லை இது எனது எல்லை என்று அடித்துக் கொல்வது சிறிய அளவில் வீடுகளில் காடுகளில் வரப்புகளில் நிகழும்போது காவலர்கள் வந்து அதைகேட்கிறார்கள், நீதிமன்றத்தில் நீதிபதிகள் நீதி செய்ய முயல்கிறார்கள்...அனால் அதுவே பெரிய பெரிய அளவில் நாடு தழுவிய அளவில் நடக்கும்போது எந்த ஐ.நா சபையும் கூட ஒன்றும் செய்ய முடிவதில்லை...  மனிதர்கள் அன்று மிருகங்களாக கரடு முரடான கற்களையும், மரத்தின் கிளைகளையும் மரத்தையும் ஆய்தங்களாக பயன்படுத்தி கொன்று  கொண்டிருந்தார்கள் அது கூர்மைப்படுத்தப்பட்ட கல்லாகி, உலோகமாகி, இன்று வெடிமருந்தாகி, குண்டுகளாகி இருக்கின்றனவே தவிர இவர்கள் இன்னும் அதே  மிருகங்களாகவே இருக்கிறார்கள்...

ஒரு கேள்வி கேட்டார்கள் : கர்நாடாகாவிலும், தமிழகத்திலும் எல்லா மதத்தினரும் கட்சியினரும், சாதியினரும் இருக்கிறார்கள் ஆனால் இங்குள்ளாரும் அங்குள்ளாரும் சேர்ந்து அவர்களால் இவர்களுக்கு அவர்களின் சொந்த சகோதரர்களுக்கும், சொந்த உறவினர்களுக்குமே கூட குடிக்க ஒரு ஆற்றின் தண்ணீரைக் கூடப் பகிர்ந்து கொள்ள முடியாது அங்கு வந்து பகைமை ஒட்டிக் கொள்கிறது

அதுமட்டுமில்லாமல் ஒரு கடையில் ஆங்கிலம், தமிழ் அதுவும் ஒரு ஓரத்தில்தான் மற்றும் கன்னடம் இடம் பெற்றிருக்க கர்நாடகத்தில் அதை அந்த மண்ணின் மைந்தர்களாம் சென்று ஆங்கிலம் இடம் பெற்றிருக்கலாமாம் ஆனால் தமிழ்தான் இடம் பெற்றிருக்கக் கூடாது என அந்தப் பகுதியை மட்டும் கிழித்து விடச் செய்கிறார்கள் ... அதே போல பாகிஸ்தான் எல்லைக் கோட்டில் மனிதர்கள் ஒரு விமானியை தவறி விழுந்தாரை அடித்துக் கொல்கிறார்கள்... இந்தப்பக்கமும் ஒன்றும் யோக்யமல்ல இங்கும் அவர்களைக் கொல்வது பற்றி மகிழ்கிறார்கள் ஆனால் அவர்கள் தீவிரவாதிகள் என்பது சற்று சிந்திக்கத் தக்கதுதான்.

அனைவராலும் ஆங்கிலத்தை ஏற்றுக் கொள்ள முடிகிறது ஆனால் அண்டை மாநிலத்து சகோதரனின் மொழியை அவனால் பல்வகைப்பட்ட வியாபாரமும் தொழிலும் செழித்து அவனால் பணம் கொழித்தாலும் அவனது மொழியை ஏற்றுக் கொள்ள முடியவில்லை...

அதே நிலைதான் இன்றைய பாகிஸ்தான் இந்தியப் பிரச்சனையும்...கல்வி அடிப்படையில் இவர்களிடம் எந்த மாற்றத்தையும் விளைவிக்க இல்லை போலும்

குடிப்பதற்கு நீர் இல்லாமல் தர்மபுரியில் சாலை மறியல் செய்கிறார்கள் இன்னும் குடங்களை வைத்தபடி பொது மக்கள் அதிலும் முக்கியமாக தாய்மார்கள் இன்னும் கொள்கை கூட்டணி பேசிக்கொன்டிருக்கிறார்கள் எங்களது பாராளுமன்ற உறுப்பினர்கள் மறுபடியும் பாராளுமன்ற உறுப்பினர்களாகிட...

இவற்றில் எல்லாம் அடிப்படையில் வேர்களிடமே ஏதோ தவறுகள் இருப்பது போல் இல்லை...சாதாரண மனிதர் சொல்கிறார் முதலில் புகையை தயாரிக்கும் சிகரெட், பீடி, குத்கா, பான் பராக், மதுவைத் தயாரித்து வடித்தெடுக்கும் ஆலைகள், பிளாஸ்டிக் பைகளை ஒரு முறை பயன்படுத்தும் உறைகளை தயாரிக்கும் ஆலைகளை, குடி நீர் அடைத்து விற்கும் ஆலைகளை எல்லாம் முதலில் நிறுத்தி விட்டால் பல நல்ல பொது பிரச்சனைகள் தீருமே என்று..

அதை தயாரிக்கச் சொல்லி விட்டு விற்பனையும் செய்து கொண்டு அதை தடுப்பதாகவும் நாடகமாடும் இரட்டை வேட அரசுகள் ஏழை எளிய மக்களின் பணத்தை வங்கிகளில் போட வைத்து ஆண்டுக்கு இவ்வளவு ஏடிஎம் அட்டைக்கு , சேவை வரிக்கு என இவ்வளவு என பிடித்தம் செய்தபடி அவர்கள் பணத்தையே அவர்கள் புழங்கவிடாமல் செய்தபடி அவர்களும் அந்த நிறுவனங்களும் அரசும் எடுத்துப்புழங்கியபடி பணமுதலைகளுக்கு எடுத்து வீசிவிட்டு அவர்களால் கட்ட முடியவில்லை என அவர்களுக்காக தள்ளுபடி செய்து விட்டு கொசுறுக் காசை தேர்தல் என்ற் பேரில் அந்தக் காலம் வரும்போது மட்டும் வாக்கு வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக வீசி எறிந்தபடி நல்லது செய்வதாக காட்டீ வேஷம் போடுகிறதே இதில் எல்லாம் எத்தனை அபிநந்தன்கள் ஏமாற்றப்பட்டு வருகிறார்கள்...எண்ணிலடங்கா நூற்றுக் கணக்கான கோடி மக்களுக்கு முதலில் குடிக்க நீர்  கொண்டு வந்து தரட்டும்...



மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.