Thursday, September 29, 2022

நல்ல நேரம் /சுப வேளை‍ கெட்ட நேரம்/ அசுப வேளை உண்மையா? கவிஞர் தணிகை

 நல்ல நேரம் /சுப வேளை‍ கெட்ட நேரம்/ அசுப வேளை உண்மையா? கவிஞர் தணிகை



நேற்று விட்டுப் போனதன் ஒரு சிறு தொடர் பதிவு இது.வியாழக் கிழமை குரு வாரத்தின் வணக்கங்களுடன்.(வாரம் என்பதை நாளின் பெயருடன் சேர்த்து சொல்வது தெலுங்கு ஸ்டைல்) அவர்கள் ஆதி வாரம், சோமவாரம், மங்கல வாரம், புத வாரம், குரு வாரம் சுக்ர வாரம், சனி வாரம் என்றே நாட்களைக் குறிப்பதைக் கவனித்திருக்கிறேன். வடக்கு ஸ்டைலும் கூட. இங்கு திருவள்ளுவர் ஆண்டு என ஆகும் போது 60 ஆண்டுகள் மறுபடியும் சுழல் செய்வதில்லை.


எங்கள் வீட்டில் கூட தந்தையும் தாயும் தமிழ் என்ற போதிலும் கூட தந்தை சோமவாரம் என்றே திங்கள்கிழமையைக் குறித்துப் பேசியதை அவர் ஆயுள் முடிந்து சுமார் 40 ஆண்டுகள் அருகே ஆன போதும் கூட நினைவில் கொள்ள முடிகிறது.



பொதுவாக கோள்கள் பெயரே நாட்களுக்கு இருக்கிறது. திங்கள் உப கோள். 


சரி இப்போது கருப்பொருள் இந்தப் பதிவுக்கு: நல்ல நேரம் கெட்ட நேரம் பற்றி ஒரு முடிவுக்கு வந்து விட்டீர்களா? அப்படி உண்டா? 60 ஆண்டுகளில் அவர்கள் முடித்து விட்டு மறுபடியும் ஆண்டின் பெயரை  முதலில் இருந்து ஆரம்பிக்கிறார்கள்...அப்படித்தான் ஆரம்பித்து இருக்கிறார்கள் பஞ்ச அங்கத்தின் படி... நல்ல நாள் , கெட்ட நாள், கரி நாள்,மேல் நோக்கு நாள், கீழ் நோக்கு நாள், சம நோக்கு நாள் பிறப்பின் அடிப்படையில் எல்லா மனிதரையும்  27 நட்சத்திரம் 12 இராசிகள்,அந்த 12 இராசிகளையும் தினமும் 3 ஆக பிரித்தல் இப்படி பிறப்பு அதன் குறிப்பு ஜாதகம், (ஏன் இன்னும் ஆழமாகப் போகும் போது தாயும் தந்தையும் கூடி இருக்கும் நாட்கள் அதன் அடிப்படையில் கருவுறுதல், இணைதல் நாட்கள் அதன் பலா பலன்கள்) அனுதினமும் ப்ரம்ம முகூர்த்த நேரம் அதிகாலை 4.30 முதல் 6 வரை...அப்போது ஓசோன் படரும் நேரம்.


  அடிப்படையில் நாட்கள், வளர் பிறை, தேய்பிறை, அமாவாசை, பௌர்ணமி,(நிலவின் பிறைத் தோற்ற‌ மாற்றம் கடலில் ஓத ஏற்றம் ஓத இறக்கம் எல்லாம் ஏற்படுவது அறிவியலும் சொல்லும் ஏற்றுக் கொள்ளும் உண்மை)அப்போது இறப்புகள் நடப்பவையும் உண்டு... பட்சி சாஸ்திரம், பறவை வலம் இடம் போதல்,கௌளி சொல், பூனை இடம் வலம் போதல், இப்படி நிறைய சகுனங்கள்...அறிகுறிகள் யாவும் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? 


உப கோள் திங்களின் தோற்ற மாற்றத்திற்கே விளைவுகள் இருக்கின்றன என்னும் போது கோள்கள்,பூமி, சூரியன், நட்சத்திர பயணங்கள், வேகம் எல்லாம் கூட விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நாம் ஏற்றுக் கொண்டாக வேண்டிய அத்தாட்சியாய் நிலவு இருக்கிறது. எனவே சூரிய தசை/திசை, சந்திர திசை,செவ்வாய் திசை, புதன் திசை, குரு திசை, சுக்ர திசை,சனி திசை, இராகு திசை, கேது திசை ( இராகு கேது சாயா கிரகமாம் அவை கிரகம் என்ற ஆதாரம் இல்லை ஆனால் அவை பாதிப்புகள் அதிகம் ஏன் அவை பின்னோக்கி பயணிக்கின்றன என்பன எல்லாம் கேள்விகள்) என மனித ஆயுளை ஆள்வதாகவும் அதில் புத்தி, அந்தரம், கரணம் எல்லாம் வருகின்றன...எட்டாம் இடத்து அஷ்டமத்துச் சனி, ஏழரைச் சனி இப்படி நிறைய நிறைய...


 அதில் தசா இருப்புக் கணக்குகள், நான் திருமணப் பொருத்தம் பார்க்கும் காலக் கட்டத்தில் தான் சோதிடம் பற்றி சிறிது கற்க ஆரம்பித்தேன்,திருமணப் பொருத்தம் பார்ப்பதிலும் எண் கணிதம் சோதிட முறைகளில் பெயர் வைத்தலில் வல்லமை வந்துவிட்டவர்களில் நானும் ஒருவனாகி விட்டேன்... அதில் செவ்வாய் தோசம், பரிகாரம், நிவர்த்தி, களத்திர தோசம், இராகு கேது இப்படி போய்க் கொண்டே இருக்கின்றன... ஆனால் காந்தர்வ விவாகம் என்றால் எதுவும் தேவையில்லையாம்...ஏன் எனில் அது பெண்ணைக் கவர்ந்து கொண்டு சென்று செய்து கொள்வதால்... 


கார்த்தி, சூரியா வின் தந்தை சிவகுமார் அவரின்  தந்தை ஒரு நல்ல ஆசிரியாக இருந்தாராம் அவர் எழுதி வைத்த குறிப்பு மிகத் துல்லியமாக இருந்தது என்றும் அவர் இவர் குழந்தையாக இருந்த போதே இறந்து விட்டார் என்பதையும் அவர் ஈரோடு புத்தகத் திருவிழாவில் ஒரு முறை பகிர்ந்து கொண்டதை நானும் கேட்டேன். சரியான சோதிடக் கணிப்பு சரியாக துல்லியமான நிலைப்பாட்டை விளைவை சொல்கிறது என்பது அவரது நிலைப்பாடாகவும் அன்றைய பேச்சில் வெளிப்பட்டது.


மந்திரம் கால் மதி முக்கால்...அல்லது  எல்லாம் விதிப்பயன்,தலையில் அப்படிதான் எழுதி இருக்கிறது தலை விதி, என்ன தான் விதி என்றாலும் முயற்சி திருவினையாக்கும் முயற்சியின்மை இன்மை புகுத்தி விடும்...


அதில் இராகு, குளிகை, எமகண்டம் இப்படியும், சுப முகூர்த்தம், நொடி, வினாடி, நாழிகை, முகூர்த்தம் , அமிர்தம், சோரம், மரண யோகம், சூலம் இப்படி நிறைய போய்க் கொண்டே இருக்கிறது... குளிகை என்ற குளிர்ந்த நேரத்தில் மட்டும் வீட்டில் இறந்தாரை காடு நோக்கி கொண்டு செல்வதில்லை...


கலாம் அஷ்டமியில் பதவி ஏற்ற போது பூமி சூரியனை சுற்றும் எல்லா நாட்களுமே எனக்கு நல்ல நாட்கள் என்பது நினைவிலாடுகிறது.


எல்லாவற்றையும் மீறி கடவுள், இறை,தெய்வம் என்ற ஒன்று இருந்தால் நாட்கள் எல்லாம் நல்ல நாட்கள் தாமே உயிருள்ள நாட்கள் எல்லாம் நமக்கு நல்லவைதானே? பின் ஏன் இத்தனை குறிப்புகள்? கடவுளையே கட்டி விடுவதாகவும், மூலஸ்தானத்தில் கருவறையில் கடவுளுக்கு மனிதர்கள் உயிர் கொடுப்பதாகவும்,கடவுள்களுக்கும் ஜாதகம், பிறந்த குறிப்புகள் உள்ளதாகவும் சொல்லி வருகிறார்கள்... அஷ்டமி எனில் கிருஷ்ணனை வணங்குவதும், நவமி என்றால் அம்பிகை அல்லது துர்கை வழிபாடும்..இப்படியே போய்க் கொண்டே இருக்கிறது...கண்ணதாசன் கூட தமது அர்த்தமுள்ள இந்து மதத்தில் பூனை வலம் இடம் பற்றி எல்லாம் பேசுகிறார்.


விவிலியத்தில் ஒரு இடத்தில் மனிதர் கையால் கட்டிய கோயிலில் கடவுள் குடியிருப்பதில்லை என்ற குறிப்பு உள்ளது.


முகமதியத்தில் அல்லாஹு அக்பர், அல்லாவே இணையற்றவர் என்று ஓதப்படுகிறது...இரமலிங்கர் கூட கடவுள் இணையற்றவர் என்று குறிப்பிடுகிறார்...ஒப்பிட்டுப் பார்க்க சில சேர்க்கைகள் எல்லாம் ஒன்றாகவே இருக்கிறது.அவர்களும் நிலவை வைத்தே எல்லா நாட்கணக்கு, திருவிழாக்கணக்கும் கொள்கிறார்கள்



வலது, இடது, இடது கையால் சிலர் வாங்குவது, செய்வது இல்லை...அது பீச்சாங் கை ஆயி கழுவுவதால் என்கிறார்கள்...


ஆனால் நாடி சுத்தி தமிழ் முறைப்படி டாய்லட் சோப்பை கழிவகத்தில் நிரந்தரமாக வைத்து ஆசன வாயைக் கழுவுதல் முதல், உள்ளங்கையைக் கழுவுதல்,மலம் மலக்குடலில் சேராமல் முழுதுமாக வழித்தெடுத்து சுத்தம் செய்து கொள்ள வழிகாட்டி தமிழ் முறைகளில் உள்ளவை. எனவே இடது வலது என்ற நிலை சரியா?



ஏன் எனில் இரு கையையும் பயன்படுத்தி பணி செய்வது, ஏன் காந்தி கூட இருகையாலும் எழுதி இருக்கிறார் என்ற குறிப்புகள் உள்ளன...அது உடலில் இரு பக்க உறுப்புகளின் செயல்பாடுகளுக்கு நல்ல விளைவைத் தருகின்றன‌


மேலும் பகிர்ந்து கொள்வோம்


இன்றைக்கு நண்பர்களுக்கு முன் எனது கேள்விகள் இவை...


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.




Wednesday, September 28, 2022

சிக்கலான சில கேள்விகளுடன் எனது இந்த புதனின் காலை வணக்கம்: கவிஞர் தணிகை

 


சிக்கலான சில கேள்விகளுடன் எனது இந்த புதனின் காலை வணக்கம்: கவிஞர் தணிகை

உடலை இழந்த பிறகும் உயிர் ஆவியாக இருக்கிறதா?

இருக்கிறது என்ற எனது அனுபவத்தின் பதில் பலரால் மறுக்கப் படலாம்
ஆனால் அப்படிப்பட்ட‌ 3 நபர்களிடம் நான் பேச்சு வார்த்தை நடத்தி இருக்கிறேன். சுமார் 38 ஆண்டுகளுக்கும் மேல் தியானப் பயிற்சியில் இருந்து வருகிறேன் எனக்கு உண்மையைத் திரித்து சொல்லி எவரையும் திசை திருப்பும் எண்ணம் ஏதும் இல்லை என்ற நிலையில் இதை உரைக்கிறேன். இதை அறிவியலோ அல்லது அது பற்றி நம்ப மறுக்கும் எண்ணமுடையோர் மறுக்கலாம் அது அவர்கள் நிலைப்பாடு. அதை நாம் ஒன்றும் குறை சொல்ல வழி இல்லை.

பிற உயிர்களின் அழிவும் ஏன் மற்ற ஜீவராசிகளின் இன அழிவும்
மக்கள் தொகைப் பெருக்கமும் என்ற தொடர்பு பற்றி என்ன தெளிவு இருக்கிறது?


புல்லாகி பூடாகி புழுவாய் மரமாகி பல்விருகமாகி பறவையாய்
பாம்பாகி, கல்லாய், மனிதராய், பேயாய் கணங்களாய்
வல்லசுரராகி, முனிவராய், தேவராய் செல்லா நின்ற 
இத்தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன்
எம்பெருமான் இன்று உன் பொன்னடிகள் கண்டு வீடுற்றேன்
   ....திருவாசகம்....மாணிக்க வாசகர்...இவரின் வயது 32 என்கிறார்கள்


மறுபிறப்பு என்ற ஒன்று இருக்கிறதா?

உடலை இழந்த உயிர்கள் எவ்வளவு காலம் ஆவி நிலையில் இருக்கின்றன? அவை எங்கு சென்று மறைகின்றன?மறு பிறப்பு என்ற ஒன்று இருக்கிறதா? இராமானுஜர் தமது மறுபிறப்பு பற்றி முன்னரே சொல்லி இருக்கிறார். அவர் ராமானுஜராக 120 ஆண்டுகளும், மணவாள மாமுனிவராக 80 ஆண்டுகளாகவுமிருந்திருக்கிறார் என்று அவரே கூறியதாக அவர் சார்ந்த ஆன்மீக ஏடுகள் குறிப்பிட்டுள்ளன.

கணியன் பூங்குன்றனார் முதல் கௌதம புத்தர் வரை ஏன் மற்றும் அறிவியல் யாவும் சொல்கிறது: வினை பற்றி(யே) கடவுள் பற்றி அல்ல...

மரணம் பற்றி மரணத்துக்கும் பின் பற்றி எந்த மதங்களாலும் ஏன் அறிவியலாலும் கூட அறுதி இட்டு இன்னும் எதையும் கண்டறிந்து சொல்ல முடியவில்லை.
மரணமிலாப் பெருவாழ்வு பற்றி பல ஞானிகளும் பேசியிருக்கின்றனர்.

இரவும் இருளும் இருந்த போதும் சூரியன் இருக்கிறது
பகலும் வெளிச்சமும் இருக்கிற போதும் விண்மீன்கள்  இருக்கிறது
எல்லாம் தோற்றம்...மறைவு...காட்சி, காட்சிகளின் நீட்சி...

எத்தனையும் பேதமுறாது எவ்வுயிரும் தம்முயிர் போல் எண்ணி உள்ளே
ஒத்துரிமையும்  உடையவராய் உவக்கின்றார் யாவர் அவர் உளம் தான்
சுத்த சித்துருவாய் எம்பெருமான் நடம் புரியும் இடம் எனத் தேர்ந்தேன்
அந்த வித்தகர் தம் அடிக்கு ஏவல் புரிந்திட என் சிந்தை மிக விழைந்ததாலோ!
 என்கிறார் இராமலிங்கர் ...ஏழைகள் பசி தீர்த்தலே ஜீவகாருண்ய ஒழுக்கம் எனச் சொல்லும் 
நாயினும் கடையேன் ஈயினும் இழிந்தேன்
ஆயினும் அருளும் அருட்பெருஞ்சோதி....என்னும் இராமலிங்கர் சுமார் 50 ஆண்டுகள்... வாழ்ந்தது பூமியில்.

1967ல் பாராளுமன்றத்தில் அறிஞர் அண்ணா முதல் கன்னிப் பேச்சிலேயே நாங்கள் வடக்கில் புகழ் பெற்றார் பெயரை எல்லாம் எங்கள் சாலைகள், பாதைகள், வழிகள், போன்றவற்றுக்கு எல்லாம் சூட்டி ஏன் நினைவாலயங்கள் எல்லாம் வைத்து பாராட்டுகிறோம் ஆனால் எங்கள் பெரியோரை அப்படி வடக்கே இருப்பார் கொண்டாடுகிறீர்களா?  என்றார்.... அந்த நிலையே இன்னும் இந்தியாவில் இருக்கிறது என்று சொல்லலாம்.

திருவள்ளுவர், பாரதி, இராமலிங்கர் பற்றி எல்லாம் நினைவுக்கு வந்தது...பாரதியை தாகூரை விட வலிமையான கவி என கு.அழகிரிசாமி  ஏன் இப்போதுள்ள சாருநிவேதிதா போன்ற முற்கால எழுத்தாளர் முதல் தற்கால எழுத்தாளர் வரை குறிப்பிடுகின்றனர்...ஆனால் பாரதிக்கு சோற்றுப் பஞ்சம் பசி,பட்டினி,பிணி...தாகூருக்கு நோபெல்... பெரும் புகழ்...நாம் எங்கு பிறக்கிறோம் என்பதில் கூட நிறைய தீர்மானங்கள் இருக்கின்றன.

கோவையில் நடந்ததாக‌ ஒரு நபர் ஒரு காணொளிக் காட்சியை பகிர்ந்திருந்தார். தலையில் காசு வைத்து ஆசி வழங்கிய பின் அந்த நபர் தமது பணப்பையை தாமாக எடுத்துக் கொடுத்து விட்டார் என்று...அது ஒரு பிரபலமாகி இருக்கும் காணொளிக் காட்சி...அது போன்று செல்வத்தை இழந்த அனுபவம் எனக்கும் உண்டு... தோற்றத்துக்கு, களப்பணிக்கு வெயில் மறைப்புக்கு என தொப்பி அணிந்து வந்த நான் அதிலிருந்து எப்போதுமே தொடர்ந்து தலைக்கு தொப்பி, அணிய அரம்பித்து விட்டேன்...அந்தக் காலத்தில் பேருந்து இல்லாக் காலத்தில் இரயில் அல்லது கால் நடை பயணம் நமது பெரியோர் கையில் ஒரு தடி, தலைக்கு உருமாலை, கையில் நீருக்கு என ஒரு திருகாணி செம்பு வைத்திருந்தனர். நாம் ஒரு தண்ணீர் பாட்டல், கையில் ஒரு குடை,தலைக்கு ஒரு தொப்பி அணிவதுகூட நல்லதே...

செய்வினை,பில்லி , சூனியம், மந்திரம், மாந்தீரிகம், எல்லாம் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்ன கருத்து கொண்டிருக்கிறீர்கள்...?

இப்படி நிறைய பேச வேண்டிய பேசு பொருள்கள்  நிறைய இருக்கின்றன‌

சிற்பி கொ.வேலாயுதம், விடியல் கு.கருணாநிதி, நூல் வழிச்சாலை நாகச் சந்திரன், குருசூரியப்ரகாஷ் குருசாமி நாம் மறையும் முன் நம்மால் முடிந்ததை நமது நாட்டுக்கும் வீட்டுக்கும் செய்ய வேண்டியது அவசியம். அதே போல சில கேள்விகளுக்கான பதிலை கண்டு கொள்ளும் ஆர்வமும் தெளிவடைய முடியுமா என்ற முயற்சியும் அவசியம் தான்... நீங்கள் எல்லாம் அறிவார்ந்து சிந்திக்கிறீர்கள், கருத்துகளை பகிர்ந்து கொள்கிறீர்கள் எனவே இது பற்றியும் பேசுங்கள், பகிர்ந்து கொள்ளுங்கள் மேலும் சில படிகள் படிப்பார் முன்னேற்றம் பெற...
 நன்றிகளுடன்...



அத்தேவர் தேவர் அவர் தேவர் என்றிங்கு
பொய்த் தேவுப் பேசி புலம்புகின்ற பூதலத்தே
பத்தேதும் இல்லாது பற்றற நான் பற்றி நின்று
மெய்த் தேவர் தேவுக்கே  சென்றூதாய் கோத்தும்பி.. 

( கல் ஏன் மலர் ஏன் கனிந்த நல் அன்பே பூஜை என்ற 
நல்லோர் பொல்லா எனையும் நாடுவரோ பைங்கிளியே
சினம் அடக்கக் கற்றாலும் சித்தி எல்லாம் பெற்றாலும்
மனம் இறக்கக் கல்லார்க்கு வாய் ஏன் பராபரமே 
எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே...தாயுமானவர் பராபரக்கண்ணி.

நெஞ்சகமே கோயில் நினைவே சுகந்தம்
அன்பே மஞ்சன நீர் பூஜை கொள்ள வாராய் பராபரமே!

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்
கோனாகி யான் எனதென்றவரவரை கூத்தாட்டும்
வானாகி நின்றாயை என் சொல்லி வாழ்த்துவனே...

உள்ளம் பெருங்கோவில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாயதுவே கோபுர வாசல்
தெள்ளத் தெளிந்தார்க்கு சீவனே சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளா மணி விளக்கே...
 ‍‍‍ திருமூலர்

உடல் வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே...திருமூலர்

மனமது செம்மையானால் மந்திரஞ் செம்மையாமே...அகத்தியர்

அளவற்ற நூல்களைப் படிப்பதால் பயனில்லை எல்லா நூல்களிலுமே மனோ நிக்ரஹமே வழி என்று சொல்லப் பட்டிருபதால் அளவற்ற நூல்களைப் படிப்பதால் பயனில்லை...இரமண மஹரிஷி...

நினைவென்ற ஒன்றை உரித்துப் பார்க்கின்ற போது மனம் என்ற ஒன்று இல்லை...இரமணர்.)

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.




Sunday, September 25, 2022

பென்ஷன்' வாங்காத ஒரே எம்.பி.,

 


ஒரு முன்னாள் எம்.பி.,யால், ராஜ்யசபா தலைவருக்கு பெரும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. அந்த முன்னாள் எம்.பி., ஜோதி. வழக்கறிஞரான இவர், ஜெயலலிதாவின் வழக்குகளை முன்னின்று நடத்தி, பல வழக்குகளில் வெற்றியும் பெற்றவர்.பின் சசிகலா, ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட பிரச்னையால் தி.மு.க.,வில் இணைந்து, இப்போது அரசியலிலிருந்து ஒதுங்கி வக்கீல் தொழில் செய்து வருகிறார்.

பென்ஷன், இலவச ரயில் பயணம் போன்ற சலுகைகளை உயர்த்த வேண்டும் என ஓய்வு பெற்ற எம்.பி.,க்கள் ஏங்கிக் கொண்டிருக்கும் நிலையில், ஜோதி, தன் எம்.பி., பதவிக்கான ஓய்வு ஊதியத்தை வாங்க மறுத்துவிட்டார். அதோடு அவருக்கு கிடைக்கும் ரயில் பயண சலுகை, மருத்துவ சலுகைகள் எதையுமே அவர் பெற்றுக் கொள்ளவில்லை.இது, ராஜ்யசபா அலுவலகத்தில் பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது. பல ஆண்டுகளாக ஜோதியின் பென்ஷன் பணம் அதிகமாக சேர்ந்துள்ளது. இதை என்ன செய்வது என அதிகாரிகள் திண்டாடி வருகின்றனர்.

இந்த விவகாரத்தை ராஜ்யசபா தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜக்தீப் தன்கரிடம் தெரிவித்தனர்.ஆச்சரியப்பட்ட தன்கர், இந்தியாவிலேயே ஜோதி ஒருவர் தான் பென்ஷன் வாங்காத முன்னாள் எம்.பி., என பாராட்டியுள்ளார். இதற்கு தீர்வு என்ன என இவர் கேட்க, இந்த பணத்தை அரசிடம் வழங்க ராஜ்யசபாவில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனராம்.

thanks: Dinamalar 25.09.2022

இப்படியும் வெகு சில அரிய மனிதர்கள் இருக்கிறார்கள் . சுயநலத்தை தியாகம் செய்து நாட்டுக்கு விட்டுக் கொடுக்கும் போக்கு நாட்டுக்கு பணியாற்ற/பணியாற்றியதற்கு ஓய்வூதியம் எதற்கு என்று சொல்லும் போக்கு ஒவ்வொரு மக்கள் பிரதிநிதிகளிடம் வந்து விட்டாலே அதிலிருந்து நல்ல விடியல் வரலாம். இவர் இராஜ்ய சபாவின் உறுப்பினராக இருந்திருக்கிறார். சிலர் ஊதியம் வாங்காமலே கூட பணியாற்ற முன் வரலாம். ஏன் எனில் அவ்வளவு நல்ல நிலையில் இருந்தபடியே அரசியல் பதவியில் இருக்கிறார்கள்....ஊதியம் இல்லாமல் இருப்பார்க்கே அரசியல் பிரதிநிதியாக இருக்கலாம் என்ற ஒரு நிலை வந்தால் எப்படி இருக்கும் என யோசிக்கலாம். அது போன்ற காலமும் வரலாம். வரவேண்டும். அதாவது மக்களுக்கான பணியாற்றும் பராமரிப்பு செலவன்றி தனியாக அவர்களுக்கு ஊதியம் என்ற ஒன்றே இல்லை என்ற நிலை என்பதை சிந்திக்கலாம்.
சுதந்திரப் போர்த் தியாகிகள்  இப்படி எதையும்  பிரதிபலனாக  பெற மறுத்த செய்திகள் இருக்கின்றன‌

போற்றுகிறோம்.
வாழ்த்துகிறோம்
வணங்குகிறோம்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை


Wednesday, September 21, 2022

எழுது அதை விடுவதாயில்லை...கவிஞர் தணிகை

 கால் நூற்றாண்டுக்கும் மேல்

காமம் பற்றி தெரிய காத்திருந்தேன்



அரை நூற்றாண்டுக்கும் மேல்

அன்பு பற்றி அறிந்து கொள்ள‌

முயன்றிருக்கிறேன்...


வாழ்க்கைப் புத்தகத்தின் பல பேரதிசய‌ ஏடுகள்

விரியும் போது மட்டுமே

புலப்படுகின்றன‌


நான் என் சிறந்த இறகுகளுடன்

மீண்டு(ம்) வருவேன்

என எவருமே நம்பவில்லை


திட்டமிடா ஒரு வாழ்வில்

நிர்பந்தம் எனை எழுதிச் செல்ல‌

எனக்கு(ம்) எந்த நம்பிக்கையும் இல்லை...


அட நான் இன்னும் உயிருடன் தான் இருக்கிறேன்

உயிர்ப்புடன் தான் இருக்கிறேன்...


எழுதுவதை விடுவதாயில்லை

எழுது அதை விடுவதாயில்லை...



           மறுபடியும் பூக்கும் வரை

                கவிஞர் தணிகை

பல் சுவைப் பாடங்கள்: கவிஞர் தணிகை

 காக்கா கூட்டத்தைப் பாருங்க அதுக்கு கத்துக் குடுத்தது யாருங்க?

பராசக்தி பாடல்



அது பகிர்ந்து மற்ற தம் இனத்தையும் அழைத்தே உண்ணும் ....


காக்கை குருவி எங்கள் ஜாதி...பாரதி...


தானிய மணிகளை பறவைக் கூட்டத்துக்கு இறைத்து விட்டு பட்டினி கிடந்ததாக பாரதி வாழ்விலுண்டு,


நிறைய பேர் தீனியும் குடி நீரும் காக்கை, குருவி, கிளிகள், புறாக்கள் என வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.


எனது நினைவுக்கு எட்டிய வரையில் என்னால் முடிந்த அளவு செய்து  வருகிறேன் பல்லாண்டுகளாக.


காக்கா வளர்க்கிறார் என்று எனை சொன்னதும் உண்டு, உணவைக் கையிலேயே வாங்கி அவை உண்டு செல்வதுமுண்டு.


அதெல்லாம் பழைய கதையாக‌


இப்போது காகங்கள் சப்பாத்தி , பூரி என்றால் பார்த்து இறங்கி போட்டி போட்டுக் கொண்டு எடுத்துக் கொள்கின்றன மற்ற காகங்களுக்கு கிடைக்காமலே அழைக்காமலே மூக்கு நிறைய வாய் நிறைய தாம் ஒன்றேகூட‌....


அதுவே தோசை, இட்டிலி, உப்புமா போன்ற உணவுவகைகளை வந்து பார்த்து விட்டு அப்பால் பறந்தோடி விடுவதை நான் பார்த்து வருகிறேன்...காக்கைகளுக்கும் இனிசுலின் சுரப்பி...நீரிழிவு வியாதி இருக்குமோ...இல்லை இல்லை இவற்றை வைத்திருந்து பின்னால் உண்ண இந்த வகை உணவு ஏற்றதாக இருக்கிறது போலும்...


கூடு கட்ட கம்பி தேடும் காகங்கள்...இந்த உணவை ஒரு வாயும் நீர் ஒரு வாயும் எடுத்து உண்ணுவதைக் காண்கிறேன்


உடனே அழைத்தவுடன் வந்தாலும் வராவிட்டாலும் போடுவதுடன் நம் கடமை முடிந்தது அவை வரும்போது வரட்டும் எடுக்கும் போது எடுத்துக் கொள்ளட்டும் என நிலைகளும் வந்து விட்டன...


எனவே இந்தப் பதிவு மூலம் நான் மனிதம் பற்றி எதையுமே குறிப்பிட விரும்பவில்லை...


மீன்களுக்கு கொண்டு செல்லும் மதிய உணவை ஏன் அதற்காகவே பிரட் போன்ற உணவுகளை வாங்கிக் கொண்டுவந்து போடும் நண்பர் ஒருவரையும் நான் கொண்டதுண்டு.


மயில்கள் நிறைய பெருகி விட்டன... நாங்கள் வாழும் பகுதிகளில், பணி புரிந்த பகுதிகளிலும்...


பன்றிகள் செடி , கொடிகள், புற்களை மேய்ந்து வருவதைக் கண்டு வருகிறேஎன்... எங்கள் ஊரில்.

பசுக்கள்,மாடுகள் காகிதத்தை நகர்புறச் சாலைகளில் உண்டு வருவதையும் கண்டு வருகிறேன்..


மறுபடியும் பூக்கும் வரை

                கவிஞர் தணிகை


Tuesday, September 13, 2022

தெய்வம் என்று சொல்லும்: கவிஞர் தணிகை

 தெய்வம் என்று சொல்லும்: கவிஞர் தணிகை



சுமார் இரு நூறு ஆண்டுகளுக்கும் முன் கி.பி. 19 ஆம் நூற்றாண்டில்

இலண்டனில் உள்ள தலைமை நீதி மன்றம்


சர் ஆர்தர் தாமஸ் காட்டன் குற்றவாளிக் கூண்டில்.


தலைமை நீதிபதி டேனியல் கேட்கிறார் அரசுத் தலைமை வழக்கறிஞரிடம்:

"இவரின் குற்றம் என்ன?"


இவர் நமது இங்கிலாந்து அரசின் சார்பாக இந்தியா அனுப்பப் பட்டவர், நீர் வளப் பொறியாளர்.

நமது அரசுக்கு பெரும் செலவு வைத்து நமது அரசுடன் ஒத்துழைக்காது இருந்திருக்கிறார்

இந்தியாவின் நீர் வளத் தந்தை ஆகி விட்டார்.


தலைமை நீதிபதி: தங்களின் விளக்கம் என்ன காட்டன் அவர்களே:

சரி ஆர்தர் தாமஸ் காட்டன் பதில்: 

நீங்கள் நமது நாட்டின் அரசுக்கு மகத்துவம் தேடுகிறீர், 

நானோ மானிடத்துக்கு மகத்துவம் தேடினேன்.


குற்றவாளியே தமது அரசுக்கு துரோகம் இழைத்ததை ஒத்துக் கொள்வதால் 

அவருக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனையும்  30,000 பவுண்ட் அபராதமும் கட்ட தீர்ப்பளிக்கிறேன்.


வெள்ளை ஆங்கிலேயே அரசு யாரையுமே விசாரணையின்றி தண்டித்ததே இல்லை.


1947 இந்தியாவிடமிருந்து வெள்ளை அரசு ஓட்டம் பிடித்தது. 

இந்தியாவின் நீர் வளத் தந்தையான  சர்.ஆர்தர் தாமஸ்  காட்டன் கோதாவரி ஆற்றங்கரையில்,காவிரி கல்லணையில்,இன்னும் பல்வேறு நீர்நிலைகளில் இந்தியாவில் பல இடங்களில்...

 இன்றும் என்றும் நின்று மாலை மரியாதைகளுடன்  சிரித்தபடி இருக்கிறார்.


 மறுபடியும் பூக்கும் வரை

 கவிஞர் தணிகை.

Monday, September 12, 2022

மருத்துவர் கோவிந்த் நந்தகுமார் 3 கி.மீ ஓடிச் சென்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாகச் செய்திருக்கிறார்: கவிஞர் தணிகை

 



மருத்துவர் கோவிந்த் நந்தகுமார் 3 கி.மீ ஓடிச் சென்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாகச் செய்திருக்கிறார்: கவிஞர் தணிகை



பெங்களூர் மணிப்பால் மருத்துவ மனையில் இரப்பை குடல் சிறப்புப் பிரிவின் மருத்துவரான கோவிந்த் நந்தகுமார் சர்ஜாபூரில் உள்ள மணிப்பால் மருத்துவ மனைக்கு ஒரு அவசர சிகிச்சை செய்ய செல்லும் போது வாகன நெரிசலில் சிக்கிக் கொண்டார். அது ஒரு அவசர லேப்ராஸ்கோபிக்  பித்தப் பை அறுவை சிகிச்சை. 


10 நிமிடம் காத்திருந்தும் வாகன வரிசை சிறிதும் அசையவில்லை. கூகுள் மேப்ஸ் நெரிசல் காரணமாக 45 நிமிடம் ஆகும் எனக் குறிப்பிட‌


காரிலிருந்து இறங்கி ஓடி 3 கி.மீ தொலைவைக் கடந்து மருத்துவமனை சென்று வெற்றிகரமாக தமது அறுவை சிகிச்சையை செய்து முடித்திருக்கிறார்.


தாம் உடற்பயிற்சி தினமும் செய்து வருவதால் 3 கீ.மீ ஓடி வருவது எனக்கு எளிதாக இருந்தது. எனவே குறித்த  நேரத்தில் அறுவை சிகிச்சைக்கு வர முடிந்தது என்கிறார். மேலும் அறிவோம் பாராட்டுவோம் இது போன்ற அரிய நல்ல மனிதர்களை நன்றி. வணக்கம்.


நன்றி: புதிய தலைமுறை.12.09.22


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை



Thursday, September 8, 2022

வாழ்வாங்கு வாழ வாழ்த்துகள்

 

                                            வாழ்வாங்கு வாழ   வாழ்த்துகள்

 

     பவித்ரா B.E;B.Ed,                                                      K..கிரிநாத் ME

     மென் பொறியாளர்                                                 IT ANALYST TCS

     SILICON VALLEY BANK                                            BANGALORE

 

 


                       நாள்: வெள்ளி 09.09. 2022:காலை 6 மணி முதல் 7.25

                                பிரசன்ன விநாயகர் திருக்கோயில்

                        ஜி.வி. கலையரங்க வரவேற்பு உடுமலைப் பேட்டை

                        தாரமங்களம் செங்குந்தர் திருமண மண்டப வரவேற்பு

:                           17.09.22 நண்பகல் 12 மணி முதல் 15 வரை


                                          இன்னும் மாறாமல் இருக்கும்

                                                 இந்த வீட்டில் பிறந்த

                                       பெண்குழந்தை ஹேமலதா

                                      பெற்ற இரு செல்வங்களுள்

                                            மூத்தவள் பவித்ரா.

 

                                     மாவட்ட அளவில் கல்வியில்

                                           முன்னிருந்து பூத்தவள்

                                     மதிப்பெண் அதிகம் பெற்ற

                                                  மதிப் பெண்

 

                                                 கலாம் கால் பதித்த

                                                       எம்..டியில்

                                              மெரிட்டில் இடம் பெற்று

                                             பொறியியல் படித்தவர்



                                                                      K.கிரிநாத்

                                                   கரம் பிடிக்கும் இந்நாளில்

                                                   நினைவுகளின் ஊர்வலம்

                                                           நிழலின் பயணம்

                                                    நிஜங்களின் பா(ர்)வை

 

                             திருமணத்தில் கலந்து கொள்ளாமைக்கு

                                         இடும் வாய்ப்பந்தலா இது?

                                       இல்லை வாய்ப்பு பந்தல்!

 

                                             ஹேமலதா கரம் பிடித்த

                                              குட்டி () பழனிவேல்

                                            எனது இளைய சகோதரர்

                                                     என்பதை விட

                                    கயிலாய நாதர் ஆலயத்தில்

                             நான் எனது கவிதையை விவரிக்க

                                         கேட்டிருந்த சிறுவர்

 

                                                இன்று ஊர் போற்றும்

                                                    நல்லாசிரியர்

                                                      தம்பதிகள்

                                                நல்வாழ்வின்

                                               அடையாளம்.

 

                             மகன் வாங்கிய பரிசுத் தட்டிலும்

                        இவர்கள் வழங்கிய அன்புத் தட்டிலும்

                                இன்று உணவருந்துகிறேன்.

 

                                                          தம்பதிகள்

                                                 வாழ்வாங்கு வாழ

                              குடும்பத்துடன் வாழ்த்துகிறேன்.

 

                                                கவிஞர் தணிகை

                                                .சண்முகவடிவு

                                              ..ரா.சு. மணியம்.

 

 

Monday, September 5, 2022

மகசேசே' விருதை பெற்றுக் கொள்ள கேரள முன்னாள் அமைச்சர் மறுப்பு

 


திருவனந்தபுரம் : மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் மூத்த தலைவரும், கேரள முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான கே.கே.ஷைலஜாவுக்கு வழங்கப்பட்ட, 'ரமோன் மகசேசே' விருதைப் பெற்றுக்கொள்ள, அவர் மறுத்துவிட்டார்.

தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சின் முன்னாள் அதிபர் மறைந்த ரமோன் மகசேசேவின் பெயரில் ஆண்டுதோறும் விருது வழங்கப்படுகிறது. பிலிப்பைன்ஸ் மற்றும் ஆசிய நாடுகளில் இருந்து அரசுப்பணி, பொது சேவை, பத்திரிகை, இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் சிறப்பாக சேவை செய்யும் நபர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

நம் நாட்டை சேர்ந்த மறைந்த திரைப்பட இயக்குனர் சத்யஜித் ரே, 'கார்டூனிஸ்ட்' ஆர்.கே.லஷ்மண், முன்னாள் தேர்தல் கமிஷனர் டி.என்.சேஷன், மறைந்த பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி, விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் உள்ளிட்டோர் இந்த விருதை பெற்றுள்ளனர்.


latest tamil news



கேரளாவின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் மூத்த தலைவருமான கே.கே.ஷைலஜாவுக்கு மகசேசே விருது அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த விருதை பெற்றுக்கொள்ள அவர் மறுத்துள்ளார்.

ஷைலஜா நேற்று கூறியதாவது: கேரள சுகாதாரத்துறையில் சிறப்பாக பணியாற்றியது தனிப்பட்ட சாதனை அல்ல; அது ஒரு கூட்டு முயற்சி. மேலும், பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் ரமோன் மகசேசே கம்யூனிஸ்டுகளை ஒடுக்கியவர். அவர் பெயரில் வழங்கப்படும் விருதை பெற விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

thanks:

Dina malar 05.09.22


marubadiyumpookkum.blogspot.com


Thursday, September 1, 2022

சேவை கோவி.,செந்தில் தாய்களின் மறைவுக்கு அஞ்சலி: கவிஞர் தணிகை

 சேவை கோவி.,செந்தில் தாய்களின் மறைவுக்கு அஞ்சலி: கவிஞர் தணிகை



நிலம்,

நீர்

நெருப்பு

காற்று 

ஆகாயம்

சூரியன்

நிலா

மழை

 சேவை

தாய்


இவற்றுக்கு

பதிலாக‌

மாற்றாக‌

யாதொன்றுமில்லை




   மறுபடியும் பூக்கும் வரை

   கவிஞர் தணிகை