கிரிக்கெட்: இந்தியா ஆப்கனிஸ்தானை ஏமாற்றி விட்டது: கவிஞர் தணிகை
கிரிக்கெட் விளையாட்டிற்காக நாள் கணக்கில் செலவளிப்பதை விட்டு விட்டு 10 ஓவர் மேட்ச் ஆரம்பித்து நேரத்தை சேமிக்கலாம் வெற்றி தோல்வியையும் நிர்ணயிக்கலாம்
அதிலும் இங்கிலாந்து போன்ற நாட்டில் உலகக் கோப்பை விளையாட்டுகளை மழைக்கிடையில் நடத்தி டக் ஒர்த் லூயிஸ் மெத்தேட் என்பதும் விளையாடாமலேயே பாயின்ட்களை ஆளுக்கொன்றாக மறுபடியும் விளையாட வைக்காமலேயே பிரித்து கொடுப்பதெல்லாம்... இதெல்லாம் தெளிவான வியாபார உத்தியே
ஆப்கானிஸ்தான் விளையாட்டு வீரர்கள் முதிர்ச்சி இல்லாத 18 வயது இளைஞர்கள் இந்திய அணியில் உலகக் கோப்பையை வென்ற அணியின் காப்டன் அவரின் அனுபவமும் வயதும் 30க்கும் மேல்...அடுத்து இங்கு உலகின் நெம்பர் ஒன் பௌலர், உலகின் முன்னணி பேட்ஸ்மேன் இப்படி எல்லாம் இருந்து கொண்டு ஆடுவதை இவர்களோடு நாம் ஆடவேண்டுமா என அசட்டையாக அவுட்டாகி அதன் பின் இழுத்துப் பிடித்து வெற்றி பெற்றிருக்கிறது இந்திய அணி.. இருந்தாலும் இந்திய அணி அவர்களிடம் திணறி ஆம் திணறி திக்கித் திணறி விட்டால் போதும் என வெற்றி பெற்றிருக்கிறது முகமது சமியால் . மேலும் ஆப்கானிஸ்தான் தான் விளையாடிய 6 போட்டியிலும் இந்தியாவில் இழந்ததையும் சேர்த்து தோல்வி அடைந்திருக்கிறது. இந்த அணியிடம் இந்தியா தோல்வியடையாதது இரசிகர்கள் செய்த புண்ணியமாம்.
டி ஆர் மெத்தெட் என அவுட்டா இல்லையா என்பதற்கு கேட்க அணிக்கு வாய்பும், பவர் ப்ளே என்பதும் இன்ன பிற விதிகளும் நாளுக்கு நாள் நவீனப்படுத்தியபடியே...
அங்கே பார்த்தால் ஒரு அம்மா பும்ரா வீசும் ஒவ்வொரு பந்துக்கும் கடவுளை பிரார்த்திதபடியே இருக்கிறார் அவர் இந்திய கோச் அவர்களின் மனைவியாம் இதை எல்லாம் வர்ணனையாளர் தெரிவிக்கிறார் காட்டுகிறார்கள் தொலைக்காட்சியில்.
இந்திய ரசிகர்கள் எங்கே மேட்ச் நடந்தாலும் கோடிக்கணக்கான இரசிகர்களாய் இறைந்து கிடைக்கிறார்கள்...
ஆக 20 ஓவர் மேட்ச், டெஸ்ட் போட்டிகள் கவர்ச்சி இழக்க, ஒன்டே மேட்ச் இப்படி வந்து பிரிமியர் லீக் இப்படி ஆகி...
இனி மேட்ச் 10 ஓவர்களுக்கும் மேல் இருக்கக் கூடாது
அது ஒவ்வொரு அணிக்கும் பத்து ஓவர் மட்டுமே பௌலிங், அதில் ஒவ்வொரு 6 பந்துக்கும் அல்லது ஒவ்வொரு ஓவருக்கும் ஒரு பேட்ஸ்மேன் அடுத்த ஓவருக்கு அடுத்த பேட்ஸ் மேன், அவுட் ஆனாலும் ஆகாவிட்டாலும் போய்விட வேண்டும் புது ஓவருக்கு புது பேட்ஸ்மேன் வரவேண்டும்...இப்படி ஒரு மேட்ச் நடத்தி அதன் ரன்கள் அடிப்படையில் வெற்றி தோல்வியை நிர்ணயித்து விட்டு போய்விட்டால் அது விளையாட்டாக இருக்கும் எவருடைய நாளும் விரயம் ஆகாது கால் பந்து, கூடைப்பந்து, கைப்பந்து, கபடி போல...
கிரிக்கெட் ஒரு ஏமாற்று விளையாட்டு அதில் இப்போது நிறைய வியாபார உத்திகள் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஒரு சில நிமிடங்களில் நீர் வடிந்து உடனே மேட்ச் நடத்த அறிவியல் நீர் உலர்த்தி முறை அறிமுகப்படுத்தி விட்டார்களாம். எல்லாம் பெரிய வியாபாரம் இது விளையாட்டே அல்ல...
இப்படி எல்லாம் இருக்கும்போது கிரிக்கெட் தோன்றிய நாடான இங்கிலாந்து அவர்கள் ஓய்வாக இருக்கும்போது விளையாட ஆரம்பித்த விளையாட்டை இந்தியாவில் எல்லாரும் மாட்டிக் கொண்டு கல்வி, சட்டம், மருத்துவம்,இப்படி ஆங்கில மோகத்திலேயே போய்க் கொண்டு இருக்கிறோம்.
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:
Post a Comment