மேட்டூர் நகராட்சி நவீன எரிவாயு தகன மேடை: கவிஞர் தணிகை.
கடந்த சனிக்கிழமை அங்கு சென்று வந்தேன். வாகனம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அதை எங்கு நடுவழியில் நிறுத்தி விட்டு நாம் கொண்டு செல்லும் உடலை வேறு வாகனம் பேசி அழைத்து செல்ல வேண்டுமோ என்னும் நிலையில் வாகனம் இருந்தது. அதை கீர் மாற்றினார் பாருங்கள் அந்த ஓட்டுனர் எனக்கு அடி வயிற்றில் புளியைக் கரைத்தது
ஆனால் அந்த மனிதர் கவலைப்பட வேண்டும். கொண்டு சென்று சேர்த்து விடுவேன் என உறுதி அளித்தார். அது அவருக்கு வழக்கம் போலும்.
மேலும் அவரே வாகன ஓட்டுனர் அவரே நவீன எரிவாய் மேடையின் இயக்குனர் எல்லாம் அவரே
இரண்டு புகைப்படம், ரேஷன் கார்ட் அல்லது ஸ்மார்ட் கார்ட் ஒரு நகல், இறந்த மருத்துவமனையின் கடிதத்தில் ஒரு நகல் இப்போது ரூ. 4500க்கும் மேல் கட்டணம். அடுத்து அவர்கள் வாகனத்துக்கு 1500க்கும் மேல் வாங்குகிறார்கள். அதெல்லாம் கூட பரவாயில்லை
அந்தக் கட்டணம் தவிர நாம் கொண்டு சென்ற உடலை உள்ளே தள்ளுகையில் கற்பூரம் வைத்து உறவினரை பற்ற வைத்துவிட்டு, நூற்று ஒரு ரூபாய் காணிக்கை என்றும் அதை அடுத்து போட விருப்பம் உள்ளோர் எல்லாம் போடுங்கள் என அனைவரும் போட அதில் ஒர் அள்ளு அள்ளிக் கொள்கிறார்.
மேலும் அதை அடுத்து ஓட்டுனருக்கு ஏதாவது கொடுங்கள் என அவரே வந்து நிற்கிறார் ஆனால் இதெல்லாம் அலுவலகத்தில் இருப்பவருக்குத் தெரியக்கூடாது என்றும் சொல்கிறார் என்னே ஒரு ஒளிவு மறைவு.
யாராவது ஒரு புண்ணியவான் அல்லது ஒரு நல்ல சேவை அமைப்பு ஒரு நல்ல வாகனத்தை ஸ்பான்சர் செய்ய வேண்டும் என எண்ணி இந்தப் பதிவை சமர்ப்பிக்கிறேன். ஏன் எனில் காரியம் நல்ல காரியம்தான். எந்த தவறும் இல்லை.
ஆனால் இந்த கீழ் மட்டப்பணியாளர்கள் எவ்வளவு காசு பணம் கொடுத்தாலும் அதற்கு மேலும் பிச்சை எடுப்பவராகவே இருக்கிறார்களே அதை யார்தான் மாற்ற முடியும்...
அரசு ஊழியர்களிலும் அந்தக் கடை நிலை ஊழியர்கள் அதை விடக் குறைவான ஊதியம் பெறுவாரிடமும் கூட தீபாவளி இனாம்.. துப்புரவு பணி செய்யும்போது இனாம் பொங்கல் இனாம் இப்படி ஊரெல்லாம் வாங்கிக் கொள்ளும் பழக்கத்தை எந்நாள் விடுவது
அவர்களுக்கு தட்டாமல் அரசுப் பணியும் மேல் நிலையில் படித்த இளைஞர்க்கு எல்லாம் கிட்டாத பணியுமாக இருப்பதெல்லாம் இதை எழுதி பகிர்ந்து கொள்ளத் தோன்றுகிறது.

No comments:
Post a Comment