என் நட்பின் நனி சிறந்தவர்கள்:8. பிரவீன்குமார்:கவிஞர் தணிகை.
பல ஆண்டுகளுக்கும் முன் பல இளைஞர்கள் என்னுடன் நட்பு பாராட்ட வந்திருந்தனர். ஆனால் அதில் இன்னும் தொடர்பில் இருப்பவர் தங்கவேல் பிரவீன்குமார் ஒருவரே. இவரைப் பற்றி சொல்ல வேண்டியது நிறைய உண்டு. இளமையிலேயே மிகவும் கஷ்டங்களைத் சிரித்துக் கொண்டே தாங்கும் வல்லமை படைத்தவர். நேர்மையை உயிர் மூச்சாகக் கொண்டதால் இவர் மேலும் மேலும் வளர்ந்தபடியிருக்கிறார் எண்ணத்தளவிலும். வாழ்வின் போக்கிலும்.
ஒரு முறை நாங்கள் இருவரும் நடைப்பயிற்சி மேற்கொள்ள எங்களது நாய் ஒன்றையும் அழைத்துக் கொண்டு செல்ல ஆரம்பித்த போதே அந்த முரட்டு நாய் இவர் பிடித்துக் கொண்டிருந்த இரும்புச் சங்கிலியிலிருந்து தப்பித்து ஓடி மற்ற நாய்களைத் துவம்சம் செய்ய ஆரம்பித்தது இவர் விட மாட்டேன் என்ற இறுக்கிப் பிடித்திருந்தவரை கடித்தும் விட்டது. வேறு யாராக இருந்திருந்தாலும் அந்த நட்பு அன்றே அதோகதியாகி இருந்திருக்கும்.
என்னிடம் தியானம் கற்றுக் கொண்டவர், எனது ஏற்ற இறக்கங்களில் பங்கு கொள்பவர். தனது குடும்பத்தின் மேன்மைக்காக, தாயின் மகிழ்வுக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடுக்கவும், நேரிய வழிகளில் எப்போதும் தியாகம் செய்யவும் தயாராக இருப்பவர்.
என்னிடம் அதிகம் இவர் ஒருவர்தான் நடைப்பயிற்சி செய்தவராக இருப்பார். அப்போது நாங்கள் பேசிய பேச்செல்லாம் நினைவில் வைத்து போற்றத் தக்கவை. எமை வளர்த்தியவை. எங்களது வாழ்வை வளப்படுத்தியவை. நான் ஒரு வேண்டுகோள் வைத்தால் அதை கட்டளையாக மேற்கொண்டு செய்து தனது பரந்த மனப்பான்மையை காண்பிப்பவர் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
எனக்கு பிறவாத உறு துணையாகும் எனது ஒருமகனைப் போன்றவர் உற்ற துணையாவார். எங்கிருந்தோ வந்தான் கண்ணன் ...என்று ஒரு சிவாஜிகணேசன் படத்தில் ரங்கன் என்ற கதாபாத்திரத்தில் ரங்காராவ் பேசுவாரே உணர்வாரே அது போன்ற ஒரு பிரியமான நட்பு எங்களுடையது.
எனைப் போலவே மணமுடிக்கும் முன்பே இளமையிலேயே தந்தையை இழந்தவர்
திருப்பூர், ஹோசூர், காரைக்கால் ஆகிய இடங்களில் இரசாயனத் துறையில் பணிபுரிந்து இப்போது குவெய்ட் நாட்டில் வாழ்க்கைத் துணையுடன் வாழ்ந்து வருபவர்.
எனக்கு mein kemph ஹிட்லர்,மிர்தாதின் கதை மைக்கேல் ந்யாமி எழுதியது...போன்றவற்றை அறிமுகப்படுத்தி வாங்கிக் கொண்டு வந்து தந்தவர்.
பாண்டிச்சேரி சியாமளன் படங்களான வில்லேஜ்,மற்றும் லூசி, டாவின்ஸி கோட் போன்ற பட வரிசையை எனக்கு அனுப்பி இதை எல்லாம் பாருங்கள் அண்ணா என அந்தப் படங்களை எல்லாம் அனுபவிக்கக் கொடுத்தவர். மேலும் ஷின்ட்லர்ஸ் லிஸ்ட் படம் கூட இவர் தந்ததுதானா இல்லை வேறொரு நண்பர் சொன்னதா என்பது இப்போது தீர்மானிக்க முடியாமல் என் நினைவலைகளில் உள்ளது.
வறண்டு போயிருக்கும் காலக் கட்டத்திலும் கூட இவர் என்னைத்தேடி வந்தால் அந்த நேரம் ஒரு ஊற்று பொங்கிப் பிரவாகமாய் நேரம் போவதே தெரியாமல் போய்விடும்.
வாழ்வின் எல்லாப் பக்கங்களையும் இவருக்கு திறந்து காண்பிக்கலாம் ஆர்வமுடன் கவனித்து உள் வாங்கிக் கொள்வார். இவரால் ஏதாவது பிரச்சனை அதனால் ஏற்பட்டு விடுமோ என்பதற்கான என்ற பய விதைகளுக்கு எல்லாம் அவசியமில்லை.
உற்ற நண்பராக, சிறந்த சீடராக, சரியாக உள் வாங்கிக் கொள்ளும் ஒரு கவனிப்பாளராக மேலும் சக மனிதராக, மனித நேயம் உள்ளவராக தனது குடும்பம் மட்டுமல்ல தன்னைச் சுற்றி உள்ள உலகும் மேம்பட எண்ணிடும் ஒரு நல் உயிராக எந்த வித போலித்தனமுமின்றி தனது உணர்வுகளை வெளிப்படுத்துபவராக இவர் இருப்பது இவர் குணாம்சம்.
நான் தியானம் கற்றுக் கொண்ட ஆண்டில்தான் இவர் இந்த உலகிற்கு தன் தாயின் வயிற்றில் இருந்து நமது பூமியின் மேனியில் அடி எடுத்து வைத்தவர். மேலும் எனது தியான வயதுதான் இவரது வயது.
இவர் மூலம் இவரது குடும்பமே அறிமுகமானது மட்டுமல்ல இவரது நண்பர்கள் வட்டமும், இவரது உறவின் வட்டமும் கூட எனது வட்டத்தில் வந்து கலந்து கொள்ளுமளவு எனது தனி மனிதத்தைப் பற்றி இவர் மதிப்பளித்து அங்கீகரித்து பெருமைப் படுத்தி இருக்கிறார்.
நிறைய சொல்ல வேண்டும் ஆனால் அது எனை நானே சொல்லிக் கொள்வது போல என்பதால் இதுவும் ஒரு பதிவாக நிற்கட்டும் என்றே இத்துடன் முடித்துக் கொள்ள வேண்டியதாகிறது. சில உறவுகளுக்கு வார்த்தைகள் ஈடாகாது. அதன் பொருள் சொல்லி விளக்க முடியாது. அது போன்ற உறவுதான் இது.
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

well said. he is great and good friend for all i proud to say i am also his friend thank you dear
ReplyDeletethanks. vanakkam. let me know you dear
Delete