Wednesday, October 30, 2019

வதந்திகள் செய்தியாகாது ஆனாலும் உண்மை எது எனத் தேடல் நடத்த உதவும்: கவிஞர் தணிகை

வதந்திகள் செய்தியாகாது ஆனாலும் உண்மை எது எனத் தேடல் நடத்த உதவும்: கவிஞர் தணிகை

Image result for TN govt taken steps to save the 2 year old boy"

கடந்த வாரத்தில் சுஜித் வில்சன் இரண்டு வயதுச் சிறுவன் உயிர்க் காப்பாற்றுதலில் நடந்த நிகழ்வில் சார்புக்கு அப்பால் நின்று சில  கேள்விப்பட்ட  மற்றும் ஊடகங்களில் வந்த  செய்திகளை கோர்த்துப் பார்த்திருக்கிறேன்.ஒப்பிட்டுப் பார்த்து நீங்களும் கேள்வி கேட்டுப் பாருங்கள் ஏன் என்று...ஏன் எனில் கேள்வி கேட்பதுதான் அறிவியல்.

1. அந்த சம்பவம் நடக்க அந்தச் சிறுவனின் பெற்றோரே முழு முதல் காரணம். ஏன் எனில் சிறு விளையாட்டுப் பையன்கள் இருக்கிறார்கள் என்பதறிந்தும் அந்த பல நூறு அடிகள் ஆழமான குழாய்க் குழியை  மழை நீர் சேகரிப்புக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என விட்டு வைத்தது அல்லது அதை மூடாமல் வைத்திருந்தது. அல்லது அதன் மேல் சரியான மூடாக்கு பலகையோ கற்களையோ வைக்காமலிருந்தது.

2. அந்த ஆழ்துளைக் கிணற்றிலிருந்து ஒரு எலி வந்ததாகவோ அல்லது அதற்குள் ஒரு எலி சென்றதாகவோ அதைப் பார்த்த சிறுவன் அதைப் பின் தொடர்ந்ததாகவும் வாய் வழிச் செய்தி.

3. அவன்  திரைக்காட்சியில் ஆடுவதையும், சில நாளுக்கு முன் அவன் தாயுடன் தங்களது விளைச்சல் காட்டிலிருந்து பயிர்க்கட்டுடன் செல்லும் தாயைப் பின் தொடர்ந்ததை சமூக ஊடகங்களில் பரப்பி உள்ளது.

4. அவர்களது அருகாமையிலேயே குழாய்க் கிணறு அமைக்கும் பணியைச் செய்து தற்போது அந்த தொழிலை விட்டு விட்ட ஒரு பெரியவரும் அவரது மகனான மற்றொரு சிறுவனையும் அரசு அங்கீகரித்து வெளியில் எடுக்க அனுமதிக்காதது.( அதனால் கோபப்பட்ட அந்த மனிதர் ஆரம்பத்தில் இருந்தே அந்த இடத்திற்கு வராமல் அரசின் முயற்சிகளைப் புறக்கணித்து உதவும்  மனப்பாங்கில் இருந்து விலகி அப்பால் சென்று அந்த பகுதிக்கே வராமல் தவிர்த்து விட்டது.)அல்லது ஒரு முறைக்கும் மேல் வேறு எந்த முயற்சியையும் அனுமதிக்காதது.
Image result for TN govt taken steps to save the 2 year old boy"
5. அது போன்று குழாய்க் கிணறுகள் அமைக்கும்போது தவறுதலாக ஏதாவது கருவிகள் உள்ளே விழுந்து விடும்போது இப்படி இந்தச் சிறுவன் தலைகீழாக சென்று எடுத்து வந்ததுண்டு என்று அந்தச் சிறுவனே தெரிவித்ததாக செய்திகள் வெளி வந்துள்ளன.ஆனால் இந்த முறை அந்தத் தொழிலை அவர்கள் விட்டு விட்டதால் அந்தக் கருவிகளை தேடி எடுக்க நேரமானதால் அதற்குள் அந்தச் சிறுவன் மேலும் பல அடிகள் உள் சென்ற காரணமும், இவர்களை அரசு நம்பாமல் அனுமதிக்காமல் இருந்தது.

6. கலாமின் ஆலோசகராக இருந்த பொன்ராஜ் இது போன்ற தருணங்களில் பயன்படுத்த வேண்டிய 6 தொழில் நுட்பங்களை ஏதுமே அரசு பயன்படுத்த வில்லை என்று கூறியுள்ளது.

7. இது போன்ற தருணங்களில் பஞ்சாப்பில் ஒரு அனுபவத்தில் வெற்றி பெற்றவர்களின் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள எந்த வகையிலும் அரசு முனையாதது என்ற செய்தி..

8. வாட்ஸ் ஆப் போன்ற சமூக பக்கங்களில் இது போன்ற இடரில் 300 அடியில் சீனர்கள் ஒர் குழந்தையை பத்து நிமிடத்தில் உயிருடன் மீட்டது என தொடர் காட்சிகள் வந்திருந்தன...ஏன் நம்மால் சீனர்களைத் தொடர்பு கொண்டு உடனே அந்த உயிரைக் காப்பாற்ற முயன்றிருக்கலாமே என்ற சிந்தனைத் துளிகள்...

9. தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுவினர் விண்வெளியில் விரைந்து வராமல்  சாலை மார்க்கமாகவே வரவழைக்கப்பட்டது.

10. மாநில பேரிடர் மேலாணமைக் குழுவினர் சாலை வழியே வந்து முயன்றது...
Image result for TN govt taken steps to save the 2 year old boy"
11.ரோபோ மூலம் முயற்சி செய்த நபரின் ரோபோவின் அளவை விட குழியின் அளவு போகப் போக மிகவும் குறுகிய அளவிலேயே இருந்தது. எனவே இடப்பற்றாக் குறையைப் போக்க இனி சிறிய அளவில் ரோபோ செய்யவிருப்பதாக அந்த அன்பர் முடிவு செய்திருப்பது.

12. உண்மையிலேயே  ஏற்கெனவே இறந்து துர்நாற்றம் அடிக்க ஆரம்பித்த அந்தச் சிறுவனின் உடல் எடுக்கப்பட்டு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டுத்தான் அடக்கம் செய்யப்பட்டதா அந்தப் பார்சலில் உண்மையிலேயே அந்த சிறுவனின் உடல் இருந்ததா...அதை அவனது பெற்றோர்களோ மற்றவர்களோ உண்மையில் பார்த்தனரா, அதன் பின் தான் அது நல்லடக்கம் செய்யப்பட்டு சிமென்ட் கலவை வைத்து பூசப்பட்டதா?

13.அந்த முயற்சிக்கு அந்தச் சிறுவனது தாயே தேவைப்பட்ட பைகள் தைத்துக் கொடுத்தது.

14, இந்த உயிர் காக்க வேண்டிய முயற்சியிலும் அரசியலும் ஊடகங்களின் விளையாட்டுகளும் நிறைய பங்கு பெற்றதாக செய்திகள் வந்து கொண்டிருந்தது.

15. தமிழக அரசின் பத்து இலட்சம், மாநில அரசின் ஆளும் கட்சி ரூபாய் பத்து இலட்சம், மேலும் எதிர்க் கட்சி பத்து இலட்சம் என தொகை வாரி வழங்கியுள்ளது.

16. இந்த நிகழ்வைப் பெற்றோர்கள் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் சேலம் மாவட்டத்தில் ஒரு வீட்டில் பின்னால் வைத்திருந்த பேரல் பீப்பாய் ஒன்றில் இன்னொரு குழந்தை விழுந்து உயிரிழந்தது.. இதற்கு எத்தனை இலட்சம் கொடுக்கப் போகிறதோ அரசு...

17. இந்த நிகழ்வைப் பார்த்த பல தொண்டு உள்ளங்கள் தாமாக முன் வந்து தங்களது சொந்தச் செலவில் இது போன்ற மூடாத ஆழ்துளைக் கிணறுகல் எங்கிருந்தாலும் சொல்லுங்கள் செலவின்றி வந்து மூடித் தருகிறோம் என்று தங்களது நல்ல உள்ளத்தை வெளிப்படுத்தி இருப்பது...

18. தமிழக அரசு இனி இது போல் எங்காவது திறந்த நிலையில் ஆழ்துளைக் கிணறுகள் இருந்தால் அவற்றை மூடுவதாகவும் மீறினால் தக்க நடவடிக்கை மேற்கொள்ளவிருப்பதாகவும் செய்திகள் வந்த வண்ணம் இருப்பது.

19. நீதிமன்றம் விளம்பர பேனர் விழுந்து உயிர் விட்டதைக் குறித்தும், சுஜித் வில்சன் உயிர் விட்டதையும் குறிப்பிட்டு அபாயங்கள் நிகழ்ந்து உயிர் போனால் மட்டுமே அரசு செயல்படுமா என எச்சரிக்கை விடுத்துள்ளது...

20. இந்த மேற்சொன்ன என்னளவில் தெரிந்த  சொற்றொடர்களில் நிறைய உண்மைகள் மறைந்து இருக்கலாம். இல்லாதும் இருக்கலாம் மொத்தத்தில் ஒரு உயிர் காக்கும் முயற்சி பற்றி நாடே பேசிவிட்டது டில்லியில் நடந்த‌ ஒரு சில கற்பழிப்பு பற்றி உலகையே பேசியது போல‌...

21. இந்த ஆழ்துளைக் குழியை உண்மையிலேயே நீர் தேக்கியாக வைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததா.... அந்தக் குடும்பம் அதன் பெற்றோர் அவர்கள் வீட்டில் விளையாடும் சிறு வயதுச் சிறுவர்கள் இருக்கிறார்கள் என்றிருந்த நிலையிலும் அந்த குழாய்க் கிணற்றை மூடாமல் விட்டிருந்தது அந்த அக்கறை எடுக்காமல் இருந்தது...இந்த நாட்டின் தனி மனித நாட்ட்ம், ஒழுக்கம் பற்றி எல்லாம் இந்த நாடும் சமூகமும் எப்படி எவ்வாறு அக்கறை எடுத்துக் கொள்ளப் போகிறது?

22. அது 700 அடிக்கும் மேலான நீர் வரவில்லை என்று மூடாமல் விட்ட குழிதானே?

23. அந்த அளவு ஆழமாக போட்ட குழியை மூடாது ஏன் அதை வெட்ட பயன்பட்ட நிறுவனமும் அந்தக் குடும்பமும், இந்த அரசும் இது வரை ஏன் விட்டு வைத்திருந்தது அதற்கு என்ன எவை எவை காரணங்கள்?
Image result for TN govt taken steps to save the 2 year old boy"
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment