Sunday, October 27, 2019

பிகில்: விமர்சனம்: கவிஞர் தணிகை

பிகில்: விமர்சனம்: கவிஞர் தணிகை
Image result for bigil"

கால் பந்து பற்றிய  விளையாட்டு நுணுக்கங்களை , நுட்பங்களை இன்னும் ஆழ்ந்து ஆய்ந்து இந்தப் படம் செய்திருந்தால் டங்கல், கனா,சக்தே இன்டியா போன்ற படங்களுக்கு இணையாக பேசப்பட்டிருக்கக் கூடும். ஹாலிவுட் படங்கள் ரத்தினச் சுருக்கமாக தேவையான செதுக்கல்களுடன் இருக்கும்...ஆனால் தமிழில் தொடராக இருந்தாலும், பேச்சரங்கமாக இருந்தாலும், சினிமாவாக இருந்தாலும் நவரசங்கள் வேண்டும்.

எதிலும் ஒரு சினிமாத்தனமாக அதில் ஒரு அதிகபட்சத்தைக் காட்டுவது வழக்கம். அப்படித்தான் சண்டைக்காட்சிகள், பாடல்கள், சென்டிமென்ட்கள் எல்லாமே...இப்படி சங்கர் பார்முலா கூட கிராமியத்துகான ஒர் பாடல், நகரியம் சார்ந்த பாடல், குத்துப் பாடல் இப்படி எல்லா ரஸங்களையும் கோர்த்து எல்லா ரசிகர்களையும் திருப்திப் படுத்தி மொத்தத்தில் நிறைய பார்வையாளர்களை திரைக்கு  படத்துக்கு பார்க்க வரவழைத்து பெரும்பொருளீட்டி இலாபம் அடைய வேண்டும் அதுவே இவர்களின் இலக்கு.

அதை அவரிடம் பயிற்சி பெற்ற அட்லீ என்னும் இந்த இளைஞரான இயக்குனரும் தமது படங்களில் வரிசையாக செய்து வருகிறார். அதில் ஒன்றுதான் இந்தப் படமும்.

இவரது படங்களும் ரஜினியின் படங்களும் எதற்கெடுத்தாலும் பிரம்மாண்டம் என்ற பேரில் நிறைய மனிதர்கள் கூட்டத்துடன் காட்சிப் படுத்தப்பட்டிருப்பது வாடிக்கையாகிவிட்டது.

மைக்கேல் ராயப்பன், பிகில் என தந்தையும் மகனுமாக இருவரும் கட்டிப் பிடித்து நெஞ்சைத் தொட்டிருக்கிறார்கள் விஜய் என்ற ஒரே நடிகர் மூலம்.  நயன் தாரா, ஜாக்கி ஷ்ராப் போன்ற நடிகர்களின் திறம் காண்பிக்கப் படாமல் விஜய் என்ற நடிகர் மட்டும் மூலமாக படம் நகர்கிறது.

நயன் தாரா பிகில் தேவாலய நிகழ்வுகள், எல்லாம் மிகவும் செயற்கையாகவே இருக்கின்றன.நிறைய பொருட்செலவு என்பது மட்டும் நன்றாகத் தெரிகிறது. அதன் நாடித் துடிப்பாக இழையோட்டமாக கதையின் நெசவு சரியாக நெய்யப்படவில்லை.
Image result for bigil"
சகல விதமான மசாலாக்களும் போடப்பட்டு அனைத்து தரப்பு மக்களையும் கவரச் செய்யும் முயற்சியாகத் தெரிவிக்கும் நோக்கத்தில் தோல்வி அடைந்திருக்கிறது.

யோகிபாபுவின் நகைச்சுவை எடுபடவில்லை என்பதைப் பார்த்துவிட்டு நீண்ட இடைவெளிக்கும் பின் விவேக்கையும் சேர்த்திருக்கிறார்கள் அவர் பகுதியை நன்றாகவே செய்திருக்கிறார். வழக்கம் போல் இரசிக்க முடிகிறது.

ஏ.ஆர் ரஹ்மான் இரண்டு பாடல்களில் தெரிகிறார். ஒரு பாடலில் அநிருத்தை காப்பி அடித்தது போல சகிக்காத ஒரு பாடலுக்கு இவர் இசை என்பது இவரது தகுதிக்கு இழுக்காக இவரது தரத்தைக் குறைத்துள்ளது. ஆனந்தராஜ் உடன் ஒரு பட்டாளம் அவர் இருப்பதைக் காண்பித்திருக்கிறது. அவருக்கு பெரியதாக சொல்லிக் கொள்ள முடியாத ஒரு வாய்ப்பு. சினிமாத்துறையில் இருந்தால் இப்படித்தான் எதையாவது செய்து பிழைப்பு நடத்த வேண்டுமல்லவா

டேனியல் பாலாஜி ஒரு சீரியல் நடிகர்....இவரை விட்டால் வில்லனே இல்லாதது போல இழுத்துக் கொண்டிருக்கிறார்கள்...ஒன்றும் இரசிக்கவில்லை.பின்னாலிருந்து குத்தி மைக்கேல் இராயப்பனை வீழ்த்த பிகில் தலைஎடுக்கிறார் எதிரிகள் கூட்டத்தை நசுக்குகிறார் தனது பிரியமான கால் பந்து விளையாட்டுக்கும் பேர் வாங்கிக் கொடுக்கிறார். இந்த விளையாட்டு எல்லாமே தேசிய உலக விளையாட்டாகவே போய் முடிவதை எல்லாம் நிறைய படங்களில் ஒரே மாதிரி சொல்லப்பட்டிருப்பதால் இதையும் ஒரு பொழுதுபோக்கு படமாகக் கொள்ள வேண்டும்....மற்றபடி வெட்டி பந்தா ....நிறைய ...இரசிகர்கள் மெச்சிக் கொள்ளலாம். சாதாரணமாக ஒரு சினிமாவாக பார்க்கப் போனால் ஒரு சராசரி விரயம்.
Image result for bigil"
 மற்றுமொரு சராசரி ஒரு விஜய் படம்

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment