அசுரனைப் பார்க்க வேண்டும் என்கிறார்கள்: கவிஞர் தணிகை
வெற்றி மாறனும் தனுஷும் ஒரு நல்ல இணைதான். இவர்கள் ஏற்கன்வே ஆடுகளத்தில் அதை நிரூபித்திருக்கிறார்கள். இப்போது அசுரன். நான் தியேட்டரில் சென்று படம் பார்ப்பதில்லை. இணையத்திலும் பார்ப்பதை நிறுத்தி பல காலம் ஆகிவிட்டது.
காந்தி கர்நாடகாவில் தங்கி இருக்கும்போது வாருங்கள் ஜோக்பால்ஸ் நீர்வீழ்ச்சி அருகில் தான் பார்த்து வரலாம் என்ற போது அதை விட உயரத்திலிருந்து பெய்யும் மழையையே நான் பார்த்திருக்கிறேன் எனவே வரவில்லை என மறுத்தது போல பொழுது போக்கிற்கே நேரம் ஒதுக்க முடியாத காலத்தில் நானும் பிரவேசித்திருக்கிறேன் என்றே நினைக்கிறேன்.
90களில் டில்லிவரை சென்றுவிட்டு தாஜ் செல்லாமல் வந்தவன் நான்.
படம் நன்றாகவே இருக்கிறது எனப் பார்த்தவர்கள் சொல்லக் கேட்கிறேன். என்றாலும் இது போன்ற படங்கள் அந்த அந்த காலக் கட்டத்தில் வந்து ஓடிக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் சமுதாயத்தில் மட்டும் பெரும் மாற்றம் ஏதுமே படங்களைப் பார்ப்பதால் வந்ததாக இல்லை.
பொழுது போக்கு பொழுது போக்காகவே எடுத்துக் கொள்ளப்படுகின்றன. சில வேளைகளில் தேவையில்லாத பின் விளைவுகளை சமூகத்தின் பால் ஏற்படுத்தி விடுவதையும் கண்டு கொண்டிருக்கிறோம்.
காடு இருந்தா பிடுங்கிக் கொள்வார்கள், பணம் இருந்தாலும் பிடுங்கிக் கொள்வார்கள், கல்வி இருந்தால் மட்டும் எவரும் பிடுங்க முடியாது போய்ப் படிங்க என்று சொல்லும் இந்த முத்தாய்ப்பான அறிவுரை இந்த படத்தின் ஹை லைட்
இது போலவேதான் தேவர் மகன், மகாநதி, நாயகன் போன்ற கமல் படங்களிலும் சொல்லப்பட்டன. அவரும் அரசியல் முத்திரைக் குத்தி ஒன்றும் செய்ய முடியாமல் இருக்கிறார். இந்தியன் இரண்டில் தீவிரமாக ஈடுபடுவதாகச் செய்திகள். ரஜினி அப்படியும் இப்படியும் எண்ணத் தடுமாற்றத்தில் அலைக்கழிப்புகளில் இருக்கிறார்
கல்வி கரையில கற்பவர் நாள் சில
மெல்ல நினைக்கின் பிணி பல
தெள்ளிதின் ஆராய்ந்து அமையவே
பாலுண் குருகின் தெரிந்து
என்ற பாடலில் கல்வியின் மேன்மை அழகாக இலக்கணப்பாங்காக சொல்லப்பட்டிருக்கும்
பிச்சை புகினும் கற்கை நன்றே என்பார் அவ்வையார்.
அன்ன சத்திரம் ஆயிரம் நாட்டல்
அதனினும் ஆங்கோர் ஏழைக்கோர் எழுத்தறிவித்தல் என்பார் பாரதி
கேடில் விழுச் செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை
என்பார் தமிழின் தலைமகன்.
அதை எல்லாம் படித்துத் தெரியாத உணராத அறியாத மாக்கள் இது போன்ற படத்தைப் பார்த்துதானா மாறி விடப் போகிறார்கள்...சாதி வேறுபாடுகளை வைத்து அவ்வப்போது படம் வந்து கொண்டுதான் இருக்கிறது காதல், கருமாதிக்கு சுடுகாடு இடுகாட்டுக்கு வழி தராமை, அல்லது வேறு சுடுகாடு, தண்ணீர் எடுக்க நீர் நிலைகளை பயன்படுத்த விடாமை இப்படி இப்போது வந்த மகாமுனி கூட இப்படித்தான் இருந்தது.
பூரணத்திலிருந்து பூரணத்தை எடுத்து விட்டாலும் பூரணம் பூரணமாகவே இருக்கும் என்கிறது கல்வி பற்றிய தத்துவம்
அதாவது ஆசிரியரிடமிருந்து எல்லாவற்றையும் நிறைவாக எடுத்து மாணவர்க்கு அளித்த போதும் ஆசிரியரிடமும் மாணவரிடமும் குறையாது அப்படியே இருக்கும் கல்வி மட்டுமே...செல்வத்திற்கு அந்த குணம் இல்லை எடுக்க எடுக்க கொடுக்க கொடுக்க குறைந்து இல்லாமல் போய்விடும்.
எனவே மாறன் தனுஷ் கூட்டணிக்கு வாழ்த்துகள்.
எனக்கும் கூட எப்படி ஒரு ஆரிய சமுதாயத்திற்கு முன்பே மொழியறிவு நாகரீகத்தில் வாழ்வியலில் முன்னேறியிருந்த தமிழ் சமுதாயம் கல்வி அறிவு அற்றதாக ஆக்கப்பட்டு மறுபடியும் இரண்டு தலைமுறைகளாக கல்விக்கு மாற ஆரம்பித்திருக்கிறது என்பது பற்றிய ஆய்வு செய்ய வேண்டிய அவசியங்கள் உண்டு என்பது
மேலும் இப்போது இது நம்ம ஆளு படத்தில் பாக்கியராஜ் ஒரு இணைப்பை பாலமாக்கிவிட்டு குமரி முத்து கால் மேல் கால் தூக்கிப் போட்டு க்ரூப் போட்டோவில் அமரும்போது சொல்வாரே அது போல சமவாய்ப்புகள் வேண்டும்தான் சமமாக இருக்க வேண்டும்தான் ஆனால் அதற்காக மேல் இருப்பார் என்ற எண்ணத்துடன் மற்றவர்கள் எல்லாருமே இவர்களுக்கு பகைதான் கீழ் தான் என்ற எண்ணத்தில் செயலையும் சொல்லையும் வீசி நிலையைக் காட்டிக் கொள்வாரைப் பார்க்கும்போது சற்று அசூயை எழுவதை சொல்லாமல் இருக்க முடியவில்லை. இவர்களுக்கும் சரியான கல்வி என்பது வேண்டும்தான். அரசும், வாக்கு வங்கிகளும், சாதிய ஒதுக்கீட்டு முறைகளும் இவர்களைப் பகடைக் காய்களாக மாற்றிக் கொண்டு இவர்கள் பொது இடங்களிலும், அரசு அலுவலகங்களிலும் ஒரு சிலர் அடிக்கும் லூட்டிகளுக்கு அளவே இல்லாமல் போவதையும் காண முடிகிறது. how can we change this?
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:
Post a Comment