திருச்சி தேசியக் கல்லூரியில் விடியல் நண்பர்கள் சந்திப்பில் காந்தியம் ஒரு வாழ்வியல் நெறி: கவிஞர் தணிகை.
கடந்த 12.10.19 அன்று திருச்சி தேசியக் கல்லூரியில் விடியல் நண்பர்கள் சந்திப்பில் என்னை காந்தியம் ஒரு வாழ்வியல் நெறி என்ற தலைப்பில் பேச அழைத்திருந்தார்கள்.அன்றைய தினம் எனக்கு திருவள்ளுவர் விருது வழங்கப்பட்டது.
விடியல் குகன் என்னும் எனதினிய நண்பர் முன்னின்று ஒருங்கிணைப்பு செய்து நடத்தி வரும் விடியல் நண்பர்கள் குழுவில் சமுதாயத்தில் மேல் நிலையில் உள்ள நீதிபதிகள், வழக்கறிஞர்கள் கல்லூரி பிரமுகர்கள், உருமு தனலட்சுமி கல்லூரியின் முதல்வர், தேசியக் கல்லூரியின் உடற்பயிற்சி இயக்குனர் மற்றும் பல மாவட்டங்களில் இருந்தும் பிரதிநிதித்துவம் செய்த 60 பொறுக்குத் தரமான மனிதர் அடங்கிய சபை அது. அறிவார்ந்த சபையும் கூட.
எனக்கு நல்லதொரு ஊக்குவிப்புத் தொகையுடன் மரியாதை செய்யப்பட்டது. பிறகென்ன கரும்பு தின்ன யானைக்கு கூலியா கொடுக்க வேண்டும். அது ஒரு நல்லதொரு அரிய உரையாக அமைந்தது. எவ்வளவு நேரம் பேசினேன் என குறிப்பு எடுத்து வைக்கவில்லை எனினும் எந்தவித நேரத் தடையும் தடங்கலும் இன்றி பேச அனுமதிக்கப்பட்டேன். ஆனால் இது போன்ற தலைப்பில் சில மணி அல்லது ஒரு மணி பேசுவதெல்லாம் சரியில்லை ஒரு பத்து நாளாவது ஒர் மணி நேரம் பயிற்சி வகுப்பாக எடுத்தால் மட்டுமே சற்று இதன் தலைப்பு சார்ந்த கருப்பொருளை விளக்கி வைக்க முடியும். என்றாலும் அவர்கள் எல்லாம் பாராட்டும் வண்ணம் இந்த சிறிய காலத்திலேயே மிகவும் தெளிவாக அற்புதமாக பேசியதை அனைவரும் உள் வாங்கிக் கொண்டனர். ஒரு கவிதை படித்த பெண் பேசுவதற்காகவே பிறந்திருக்கிறீர்கள் என்ற வார்த்தையை ஒரு பாராட்டாக வழங்கினார் இதை விட சுருக்கமாக அந்த உரை வீச்சை எவரும் கணக்கிட்டு விட முடியாது
பேசிய அனைத்தையும் என்னால் பதிவிட முடியாது என்ற போதிலும் முடிந்த வரை பதிவிட வேண்டும் என்றே எண்ணுகிறேன். ஏன் எனில் அந்தக் காலத்தை பிடித்து வைக்க முயல்தல் ஒன்றும் தவறில்லையே... என்றாலும் எவரும் மிக நீண்ட பதிவு என்ற நோக்கத்தில் படிக்காமல் விட்டு விட்டால் அது அவர்களைப் பொறுத்தே அமையும். எனவே சற்று சுருக்கமாகவே எழுத விழைகிறேன்.
எர்த் ப்ரொவைட்ஸ் எனப்ஃ டு சேட்டிஸ்பை எவரி மேன்ஸ் நீட்ஸ், பட் நாட் எவரி மேன்ஸ் க்ரீட்....ஆங்கிலத்தில்.Earth provides enough to satisfy every man's needs, but not every man's greed.If you want to change the world change yourself.
டாக்டர் மு.வ சொல்வார் தனது நாவல் ஒன்றில்: உலகெங்கும் ஒரு ஓட்டப்பந்தயம் நடைபெறுகிறது இதில் முன் வருவார்க்கு முதல் பரிசை கொடுக்கிறது இந்த முடிவை மாற்றி கடைசியாக வருவாரிலிருந்து பரிசு கொடுப்பதை மாற்றி அமைக்க வேண்டும் என்பார்
தற்போது கூட வாட்ஸ் ஆப் குழுவில் மாற்றுத் திறனாளிக் குழந்தை ஒன்று ஓட்டப்பந்தயத்தில் கடைசியாக கைக்கட்டை ஊன்று கோலுடன் ஓட முயற்சித்து வருகிறது விழுகிறது வெற்றிக் கோட்டை எட்ட அருகில் சென்ற அத்தனை குழந்தைகளும் திரும்பி ஓடி வந்து அந்தக் குழந்தையை எடுத்து அதனுடன் சென்று அனைவரும் முதல் பரிசை பெறுகின்றனர்.
ஏன் ஒரு சூரியா படத்தில் கூட இப்படி சிலருக்கு பரிசு வழங்குவதை ஆட்சேபித்து வெளியே வந்து அனைவர்க்கு பரிசு கொடுக்க வேண்டும் அதுவே சரி என்பதாக இருக்கும்.
ஏன் விடியல் சந்திப்பில் கூட கலந்து கொள்ள வரும் அனைவரையுமே மன நிறைவையும் திருப்தியும் அடைய வைத்தே அனுப்புகிறார்கள் என்று முன்னுரையாகக் குறிப்பிட்டு விட்டு தலைப்பில் புகுந்தேன்.
நெறி என்றால்: ஒழுங்கு, கற்பு, முறை, நீதி இப்படி தமிழ் சொல்கிறது.
ஆறு கரையில் அடங்கி நடந்திடில் காடு வளம் பெறலாம்....வாகனத்தை இயக்கும்போது இருக்க வேண்டிய கட்டுப்பாடு, இப்படி சொல்லி விட்டு நெறிப்படுத்த வேண்டியவர் எல்லாம் யார் என்றால் : பெற்றோர், ஆசிரியர், நாடு, தலைமை, நட்பு போன்றவரே நெறிப்படுத்த முடியும்.
நகுதல் பொருட்டன்று....அக நக நட்பது....நட்பில்...
இப்போது சி.சி.டி.வி என்பது எதற்கு ...நேர்மையின் மதிப்பு எவ்வளவு... பைபிளில் மனித ஆயுள் 900 ஆண்டுகள் என்பதை நேர்மையின்மையை பார்த்த இறை 120 ஆக குறைத்தது என்றும் காந்தியும் 120 ஆண்டுகள் வாழ்வேன் என்று கூறியதையும் குறிப்பிட்டேன். காந்தியம் என்பது காந்தி என்ற தனி மனித வாழ்வு மட்டுமல்ல அது ஒரு உலகளாவிய தவம் என்பதை எடுத்துக் கூறினேன்.
உடல் என்னுடையது, உடல் உண்மையிலேயே உன்னுடையதுதானா? உடை , உணவு, கல்வி, புத்தகம்,பை, பணம் சொத்து இவற்றின் பால் பித்து...இவற்றின் ஆரம் அதிகரித்து அதிகரித்து சுயநலம் என்ற ஒரே சிறு விசை முதலாளித்துவம் என்ற பெரு விசையை ஏற்படுத்தி விட அதில் புவியடக்கம். பாதிக்கும் மேலான உயிர்களுக்கும் உணவு குடிநீரும் கூட இல்லை . கிரெட்டா தன்பெர்க் 16 வயது சிறுமி உலகத் தலைவர்களை எல்லாம் எள்ளி நகையாடி இருக்கிறாள்.
ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் சொல்லி இருக்கிறார்: பூமி முடிந்து விட்டது. விரைவில் வேறு கிரகத்தில் குடியேறுங்கள் என்கிறார் மனித குலத்தை. ஆதலால் சந்திரன், செவ்வாய், எட்ட முடியாக் கோKகள்,(totally saturn's moon until now is discoverd is 82 it is the highest number of moon having planet in our solar family) சனியின் 20 வது நிலா எல்லாம் சேர்ந்து 82 நிலாக்கள் எல்லாம் கண்டுபிடிப்புகளாக...காந்தியின் வார்த்தையை இங்கு நினைவில் கொள்ளலாம் அது மனிதரின் தேவைக்கேற்ப பூமியில் யாவும் கிடைக்கிறது பேராசைக்கேற்ப எல்லாம் கிடைக்குமா?
முதல் ஆதி தத்துவம்...முதலாளி தத்துவம் முதல் ஆதித் துவம் துவம், துவி: என்றால் இரண்டு: முதலாளித்துவம்...தொழிலாளித்துவம்...உழைப்பே மூலதனம். மூளைக்கும் அறிவுக்கும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் என்றால் ஆற்றலுக்கு காந்திதான்
19 ஆம் நூற்றாண்டு தந்தது: மார்க்ஸையும் கம்யூனிசத்தையும் 20 ஆம் நூற்றாண்டு தந்தது: காந்தியம்.
நெறி: தீயின் நெறி: எரித்தல், நிலத்தின் நெறி: பொறுத்தல், நீரின் நெறி: உயிர்ப்பித்தல் காற்றின் நெறி: உணர்த்தல் காந்திய நெறி என்பது: கடையனையும் கடைத்தேற்றல், அர்ப்பணித்தல், தியாகத்தால் சாதித்தல், சகித்துக் கொள்ளல்.
இன்னா செய்தாரை ஒறுத்தல்:; நெல்சன் மாண்டேலாவின் சிறை வாழ்க்கையில் அடித்து துன்புறுத்தி குடிக்க நீர் கேட்ட போது தன் முகத்தின் மேல் சிறு நீர்கழித்த ஜெயில் வார்டனுக்கு அவர் தென் ஆப்பிரிக்காவின் தலைவராக மக்கள் அங்கீகாரத்துடன் அரசாட்சியில் இருந்தபோது பாதுகாப்பு படை வீரர்களுடன் சென்று உணவருந்தும் இடத்தில் தனியாக இருந்த அவரையும் அழைத்து உணவருந்தச் செய்து அதற்குண்டான பணத்தைக் கொடுத்து அவரது கை நடுக்கம் தாம் ஏதாவது செய்து விடுவோமா என்ற பயமே என தன்னுடன் வந்தார்க்கு விளக்கி கூறியது...
காந்தி ஸ்மேட்ஸ் சம்பவத்தில் காந்தியை மலம் கழிக்கும்போது பூட்ஸ் காலால் உதைத்த ஜெயில் வார்டனுக்கு செருப்பு தைக்கும் தொழிலை சிறையில் கற்று முதல் பூட்ஸை அவருக்கு பரிசளித்தது அதை அவர் இங்கிலாந்து சென்றும் போடாமல் பிரார்த்தன அறையில் வைத்து வணங்கியது போன்றவை சொல்லப்பட்டது
ஒபாமா நோபெல் வாங்கிய உடன் யாரை சந்திக்க அவா என்ற கேள்விக்கு நாலைந்து முறை நோபெலுக்கு பெயர் பரிந்துரைக்கப்பட்ட போதும் கிடைக்காத காந்தி பேர் சொல்லி அவருடன் பேசிக் கொண்டே காலைச் சிற்றுண்டி அருந்த ஆசைப்பட்டது..
ஒரு பெருங்கடலை ஒரு மாபெரும் சமுத்திரத்தை 60000 பக்கங்களில் சொல்ல முயன்றதை சிறிய கால அளவில் சொல்ல முனைவது...
கலாம் சீடர்களாகிய நாங்கள் சொல்லும் வழக்கமான : பூங்கா, வெட்டுக்கிளி, மான்,தேனீ அத்துடன் மனிதரிடம் இருக்கும் பகவத் கீதையில் சொல்லப்பட்ட சத்வ, ரஜோ, தமோ...
பொய்யாமை பொய்யாமை ஆற்றின்... சொல்லி காந்தி ஹரிச்சந்திரா, இராமாயணம், வைதிகத் தாய், புலால் உணவு, மது, புகை மாது தொடமாட்டேன் என இலண்டன் பாரிஸ்டர் படிக்கச் சென்ற போதே பகவத் கீதை, தாய் சொல்லைத் தட்டாதே என வாழ்ந்தது அந்தக் காலத்தில் கடல் கடந்து போவதின் விளைவு, கோவிலுக்குச் செல்ல தடை ..
காந்தியின் தூண்டு உணர்வாளர்கள் பலர்: டால்ஸ்டாய், ரஸ்கின், கோகலே, தாகூர், அதில் தில்லையாடி வள்ளியம்மாள் வயது: 16. போராட்டத்தில் தென் ஆப்பிரிக்காவில் சிறை சென்று உயிர் இழந்தது, முத்துலட்சுமி ரெட்டி மருத்துவர் இருவருமே தமிழர்கள். வைகைக் கரையில் குளிக்கும்போது மேலாடையை இழக்க காரணமாக பெண்கள் ஆற்றங்கரையில் இருந்தது... தமிழ் கற்க ஆசிரியர் நியமித்துக் கற்றது, இரு கைகளாலும் எழுதக் கற்றது, விவசாயப் பண்ணை, ஆஸ்ரமங்கள், யங்க் இண்டியா, இண்டியன் ஒப்பீனியன், -ஹரிஜன் பத்திரிகை நடத்தியது, சமையல், பஜனை, பிரார்த்தனைக் கூட்டங்கள், துப்புரவுப் பணி, போராட்டங்கள், சத்தியாக்கிரகம், சிறைத்தவம், உண்ணாநோன்பு அஹிம்சையும் வாழ்வு என வாழ்ந்தது, விமானப் பயணம் செய்யாதது, ஜோக் பால்ஸ் நீர்வீழ்ச்சியை விட விண்ணிலிருந்து வரும் மழையையே பார்த்திருக்கிறேன் என வாழ்வில் ஓய்வையும் மகிழ்வுக்கான பொழுதுகளையும் புறக்கணித்தது
வின்ஸ்டன் சர்ச்சில் போன்ற அறிவாளிகள் இருக்கும் காலத்தில் வாழ்ந்து உலகெலாம் பிரதமர் என்றால் அது காந்தி எனப் பேர் பெற்றது அவரது தூண்டு உணர்வுடன் அடியேனாகிய நானும் கூட பாலமலையில் ஒர் கிராமத்தில் பள்ளியருகே அரசால் கட்டி மக்களால் பாழடிக்கப்பட்டிருந்த 8 கழிவறைகளை துப்புரவு செய்யும்போது அவர் எப்படி காந்திய மாநாடு நடந்த இடத்தில் அவர் அப்போது எவர் என்றே தெரியாத போது அருகிருந்த வீடுகளில் முறம் துடைப்பம் கொண்டு மலம் வாரி அப்புறப்படுத்தியது நினைவிலாட கைகள் வைத்தே மலத்தொட்டியை சுத்தம் செய்தது...
திருப்பூர் குமரன், லால்பகதூர், காமராஜ், வினோபா பவே, ஜெபி, கிருபாளினி, மொரார்ஜி, பகத், சுபாஷ், அம்பேத்கர், மோதிலால், ஜவஹர்லால், வல்லபாய் படேல் பாரதி, சிதம்பரம், சிவா, மித வாதம், தீவிர வாதம்....
13 வது வயதில் 14 வயது கஸ்தூரிபாவை மணந்தது, 2 முறை தாசி வீடு சென்றது, மூத்த மகன் ஹரிலால் குடிகாரராக ஏன் இருந்தது என்ற விளக்கம்... உண்ணா நோன்பு மருத்துவம் , நீர் சிகிச்சை, மண் சிகிச்சை, கூனே மெத்தெட் 8 முறை கொலை செய்ய முயற்சியில் 7 முறை தப்பியது, 8 வது முறை சுடப்பட்டு இறந்தது தென் ஆப்பிரிக்காவிலேயே கொலை முயற்சியில் பற்கள் எல்லாம் உடைக்கப்பட்டு சாலையில் இருந்தோர் வந்து காத்தது...பண்ணை விவசாய முறைகள், கூட்டுறவு விவசாய முறைகள், கிராமியப் பொருளாதாரம், அடிப்படையிலான வாழ்க்கை முறைகள்...ராமராஜ்ஜியக் கனவுகள்..சத்தியாக்கிரகம், ஒத்துழையாம, வெள்ளையனே வெளியேறு, செய் அல்லது செத்து மடி சட்டமறுப்பு இயக்கம், சௌரி சௌரா கட்டுக்கு அடங்கா கூட்டம், தண்டி, வேதாரண்யம் நீதிமன்றட்தில் நீதிபதிகளே எழுந்து நிற்பது அவர் செல்லும்போது...
மதுவே எல்லா பாவங்களுக்கும் அடிப்படை என்ற சத்யமான காந்தி சிரவணன், ஹரிச்சந்திரா, விஸ்வாமித்திரர், இராமயாணம், போன்ற கதைகளிலிருந்து உருவான ஒரு சத்திய வரலாறு சாத்தியமான வரலாறாக இந்தியாவில்.
3 குரங்கு பொம்மை...ஆயிரம் வழி அழிவுக்கு, ஒரே வழிதான் ஆக்கத்துக்கு. அது காந்திய நெறிக்குத் திரும்புவதும் கிராமிய வாழ்வின் உன்னத வாழ்வின் முறைக்கு மாறுவதும்தான்...அதை நமது மக்களும், அரசுகளும் செய்ய நாம் என்ன செய்யப்போகிறோம்?
தோன்றின் புகழொடு.... தோன்றுக...
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:
Post a Comment