Sunday, October 27, 2019

தீபாவளியின் கொட்டம் அடங்கி விட்டது: கவிஞர் தணிகை.

தீபாவளியின் கொட்டம் அடங்கி விட்டது: கவிஞர் தணிகை.


Image result for diwali 2019"
இந்த ஆண்டு சென்னை மற்றும் உள்ள எல்லா ஊர்களிலுமே தீபாவளியின் பட்டாசு சத்தம் நூற்றுக்கு தொண்ணூறு சதவீதம் கேட்கவில்லை. தீபாவளியான இன்று மட்டும் ஆங்காங்கே சில சத்தங்கள் கேட்டபடி இருக்கின்றன.

பட்டாசு வெடிப்பது உயிர்களுக்கான அச்சுறுத்தல்.
இயற்கைக்கு கேடு.
என்பது இயற்கை ஆர்வலர்களின் ஒருமித்த கருத்து.

இந்த தொழிலில் பட்டாசு தயாரிக்கும் ஈடுபடுவாரை அது சிறுவர் ஆன போதும் பெரியவர் ஆனபோது மடை மாற்றம் செய்து வேறு தொழில்களில் ஈடுபடுத்தி அவர்களுக்கு வாழ்க்கை உத்தரவாதம் வழங்க வேண்டிய அரசுகள் மத்தியிலும் மாநிலத்திலும் படித்து முடித்த இளைஞர்க்கே வேலை வாய்ப்பில்லாமல் இருக்க இது வேறா என்று கேட்கக் கூடும்.

ஆனால் அதை எல்லாம் செய்தால் மட்டுமே அரசு. இல்லையேல் அது வெறும் முரசு.
Image result for diwali 2019"
மொத்தத்தில் இந்த ஊடகம் எல்லாம் ஊதிப் பெருக்க வைத்துக் கொண்டிருப்பவைதான் இது போன்ற மாதம் ஒரு திருவிழா வைபவம் எல்லாமே. சரியாக சிந்தித்துப் பார்த்தால் நராகாசுர வதம் கிருஷ்ணர் என்பவை யாவும் கதை மாயை என்பதை மனிதரால் உணர முடியும். வழி வழியாக கேள்வி முறையின்றி ஐதீகம் என்ற ஒரு வார்த்தையுடன் எதுவுமே தெரியாமல் அறியாமல் உலகின் போக்கோடு பொது நீரோட்டத்தோடு ஓடிக் கொண்டிருக்கும் மனிதக் கூட்டம் இப்போது பொருளாதார  நலிவு மற்றும் சிந்திக்கும் கண்ணோட்டத்தில் பட்டாசு வெடிப்பது என்பது சரியல்ல என்று அறிந்து கொள்ள ஆரம்பித்து விட்டது என்றே சொல்லலாம்.

ஐப்பசி அடைமழைக்காலம் வியாபார மந்தம் எனவே எண்ணெய் விற்பனை , மாவு விற்பனை, துணி விற்பனை , பட்டாசு விற்பனை எல்லாவற்றையும் சூடு பிடிக்க வைத்து ஏழ்மை நிலையில் உள்ளாரை மேலும் ஏழ்மைக்கு நிலைக்கு கொண்டு சென்று கடன் உடன் வாங்கி சிறுவர் சிறுமிகளின் அழுகையை கண்ணீரை ஆற்றி விட்டு காலம் காலமாக கடன்களையே கட்டிக் கொண்டு செல்ல வேண்டிய வாழ்க்கையை இந்த சமூகம் கை காட்டி விடுவதே இந்த மாதமொரு திருவிழாக்கள்...இதற்கு ஊடகம் உடந்தை.

 சித்திரை சித்திரா பௌர்ணமி, வைகாசி, வைகாசி விசாகம், ஆனி  ஆடி ஆவணி ஆடி 18, ஆவணி அவிட்டம் பூணூல் அணிவிப்பு விநாயக சதுர்த்தி ,புரட்டாசி எல்லா சனியும் திருப்பது ஏழுமலையான், ஐப்பசி தீபாவளி, கார்த்திகை திருவண்ணாமலை தீபம்,மேலும் குமரனின் திருக்கார்த்திகை,மார்கழி சிவ விஷ்ணு விடியற்காலை வழிபாடுகள், தை தேவையான‌ அறுவடைத் திருநாள்( இது மட்டுமே தமிழர் திருநாள் என்பது) மாசி: சிவராத்திரி, பங்குனி பங்குனி உத்தரம் இப்படி...இன்ன பிற அட்சய திருதியை, அமாவாசை, பௌர்ணமி, பிரதோசம், அஷ்டமி, நவமி...சந்திராஸ்டம் இப்படி எல்லா நாளுமே ஏதாவதொன்று இருக்க மனித மனங்கள் மேன்மையடைந்தால் ஒழிய நாளும் கோளும் என்ன செய்யும்...

எல்லாமே தெய்வ சிந்தையோடு மனிதரும் தெய்வமாகலாம் என்பதற்கே என்று ஒரு சமாதானம் கேட்கிறது அப்படி எல்லாம் இருந்திருந்தால் 19 ஆம் நூற்றாண்டின் ராமலிங்க வள்ளல் போன்ற தெய்வப் பிறவிகள் கடைவிரித்தேன் கொள்வாரில்லை என்று நைந்து போயிருக்கும் அவசியம் எல்லாம் நேர்ந்திருக்காது.

இதில் பெண்களைப் பெற்ற பெற்றோர்க்கு என்ன செய்தாலும் எப்படி தலைதீபாவளியைக் கொண்டாடினாலும் என்ன செய்தீங்க பெரிசா சொல்றீங்க என்ற அடைமொழி குறை கேட்கும் நிலை வேறாக...மொய் எழுதும் வழக்கம், சீர் செய்யும் வழக்கம் என மனிதப் பொருளாதாரத்தை குழிக்குள் தள்ளி மண் மூடும் நடவடிக்கைகள் பழக்க வழக்கஙக்ள் இதை எல்லாம் வழி வழியாக பாரம்பரியமாக இருந்தவை என்பார் அவற்றைப் பற்றி எல்லாம் சிந்தித்துப் பாருங்கள் கேள்வி கேட்டுப் பாருங்கள் விடை கிடக்கும் கேள்வி கேட்பது மட்டுமே அறிவியல்.
Image result for diwali 2019"
மன்னர் காலத்தில் பிராமண இராஜ குருக்கள் செய்த மூளைச்சலவையே இதன் அடிப்படைகளாக இருந்து பொருளாதாரச் சுரண்டலில் மாதமொரு திருவிழாக்களை தோற்றுவித்து பயமுறுத்தி செல்வ வளத்தை கீழிருந்து மேல் நகர்த்திச் சென்றபடி இவர் படிக்கலாம் இவர் படிக்கக் கூடாது என்றெல்லாம் நிலை நிறுத்தி காய்கள் நகர்த்தியதை கீழடி போன்ற அகழ்வாய்வுகள் தெள்ளத் தெளிவு படுத்தியதை காணலாம்.

பல்லாயிரம் காலம் முன்பே அறிவு செறிவோடு  நாகரீகத்தோடு திட்டமிட்ட கட்டடக் கலையோடு, கல்வி எழுத்தறிவோடு கலை சார்ந்த சமூகமாய் வாழ்ந்த தமிழ் இனத்தை எப்படி கல்வி அறிவே இல்லாமல் மாற்றி இப்போது மறுபடியும் ஓரிரு தலைமுறைகளாக படிக்க ஆரம்பித்திருக்கின்றனர். ஏன் இடையில் என்ன நடந்தது எப்படி இந்த இடைவெளி ஏற்பட்டது...மன்னர் ராஜகுரு மர்மங்கள்தாம் அவை. ஆடு மாடு மேய்த்துக் கொண்டு கைபர் போலன் கணவாய்கள் வழியே வந்து இங்கு குடியேறிய நிகழ்வுகளும் அது முதல் இங்கு இருந்தவர் வாழ்வு ஒண்ட வந்த பிடாரி ஊர்ப்பிடாரியை விரட்டிய கதையும் இதை எல்லாம் சிதம்பரம் போன்ற கோவில்களில் இன்றும் நடந்துவருவதை உச்ச நீதிமன்றமே அங்கீகரித்த கதை எல்லாம் உண்டு.

சங்கராச்சாரிய ஜெயேந்திரர் நரகாசுர வதம் பற்றி பேசிவிட்டு எண்ணெய் ஸ்நானம் பற்றி பேசி, புத்தாடை உடுத்தி பட்சணம் செய்வதை எல்லாம் பேசி இருப்பதை நானும் பார்த்ததுண்டு...அதே நபர் பற்றி அனுராதா ரமணன் என்னும் ஒரு எழுத்தாளர் அவரை சந்தித்துப் பேட்டி எடுக்கச் சென்றபோது என்ன நடந்தது என்பதைப் பற்றி உலகறியச் செய்தார் . இத்தனைக்கும் அவா எல்லாம் ஓரினம்தான்.

அடுத்து இன்னொரு அபாயம் நடக்க ஆரம்பித்துள்ளது கீழிருந்து கிரேன் என்னும் வாக்கு வங்கி, அரசின் சாதிய ஒதுக்கீடு வழியே உயர உயரச் சென்றபடி இருக்கும் ஒரு கூட்டம் மேலும் நடுவிலும் வாழ்ந்து வரும் கூட்டம் ஏதோ இவர்களை வேண்டும் என்றே தடுத்து அழுத்தியதாக அவர்களிடம் மோதலைக் கடைப்பிடித்து தாங்கள் உயர்ந்த நிலைக்கு சென்றுவிட்டோம் நீங்கள் எல்லாம் இனி கீழ் தாம் என்ற குருட்டு மனப்பான்மையில் வாழ்ந்து வருவதும் சண்டை சச்சரவுப் போக்குடன் அன்றாட வாழ்வில் நெருக்குதல்களை ஏற்படுத்தி வருவதும், இனியும் அவர்களுக்கே பணி வாய்ப்புகள், கல்வி வாய்ப்புகள், உதவித்தொகை வாய்ப்புகள் எல்லாம் கொடுப்பதும் பொருளாதாரத்தில் நலிவடைந்த திறமை சாலிகளையும் ஒதுக்கி வருவதுமாக...இதை எல்லாம் சொல்லப்போனால் நிறைய பக்கங்களுக்கும் வருத்தமும் உள்ளதைச் சொன்னால் உடம்பெரிச்சலாமாக இருக்கும்.
Image result for diwali 2019"
தீபாவளியின் ஆட்டங்கள் எல்லாம் மேலும் மேலும் படிப்படியாக ஆண்டுக்கு ஆண்டு குறையட்டும், மனிதர்கள் மகத்துவமாக இது போன்ற சிறு சிறு விஷயங்களில் எல்லாம் கவனம் சிதறடிக்கப் படாமலிருக்கட்டும்

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment