Thursday, October 31, 2019

இந்திரா காந்தி சுடப்பட்ட தினம் சில நினைவுகள் பகிர்வுக்கு: கவிஞர் தணிகை.

இந்திரா காந்தி சுடப்பட்ட தினம் சில நினைவுகள் பகிர்வுக்கு: கவிஞர் தணிகை.

Image result for the last meeting of Indira Gandhi"

1984 அக்டோபர் 31 அன்று அவர் தனது பிரதமர் வீட்டில் இருந்து அலுவலகம் போகும் வழியில் ஒரே வளாகத்தில் இருக்கும் இரு வேறு பகுதிகளுக்கு நடைபாதையில் செல்லும்போது  சத்வத்சிங், பியாந்த் சிங் என்ற அவரது பாதுகாவலர்களாலேயே சுடப்பட்டு இறந்தார். அதில் ஒருவர் அவரைச் சுடுகிறார் அதன் பின் சுட்டவரை மற்ற ஒருவர் சுட்டு விடுகிறார். எனவே உண்மை வெளியே வராமலே போகட்டும் என்று... இதெல்லாம் நடந்து காலண்டரில் நாள் குறிக்கப்பட்டு 35 ஆண்டுகள் ஓடி விட்டன.

சீக்கியர்கள் நேர்மைக்கும் தியாகத்துக்கும் வீரத்துக்கும் பேர் பெற்றவர்கள் அவர்கள் செய்த நம்பிக்கைத் துரோகத்தைப் பார்த்து உலகே ஸ்தம்பித்தது ....இதன் தமிழ் மொழியாக்கம்: நிலை குலைந்தது என்று சொன்னாலும் அது அவ்வளவு சரியாக பொருந்தாததால் இந்த வார்த்தையை உபயோகப்படுத்தியிருக்கிறேன்.

இவரது கடைசி கூட்டம் மல்க்கங்கிரி ஒரிஸ்ஸாவின் பின் தங்கிய மாவட்டத்தில் அவர் இந்த நாட்டு நன்மைக்காக ரத்தம் சிந்தவும் தயார் என்று பேசிய வாய்ச் சொல் தலைச் சுமையாக சில நாட்களாகளுக்குள்ளாகவே முடிந்து போனது. அது தண்டகாருண்யம் என்னும் காட்டுள் அடங்கிய பகுதி ஆகும்.இந்த இடத்தில் நானும் காலடி எடுத்து வைத்திருக்கிறேன். எனவே அந்த தாக்கம் எனக்கு அதிகம்.

பஞ்சாப் பொற்கோவில் அமிர்தசரஸ் பிந்தரன் வாலேவை லோங்கோவாலுக்கு சீக்கிய குருமார்...எதிராக இந்திரா வளர்த்தி விட்டதாக செய்திகள் உள்ளன. அதன் பின் நிலை கட்டுக் கடங்காது போனபின்னே இராணுவத்தை அனுப்பி பொற்கோவிலுக்குள்ளேயே பிந்தரன்வாலேவும் அவரது கிளர்ச்சி செய்த கூட்டமும் சுட்டுக் கொல்லப்பட்டது. அதன் பழி வாங்கலே இந்திரா காந்தி கொலை செய்யப்பட்ட நிகழ்வு.( கணவர் பெயர் பெரோஸ் காந்தி என்பதால் மட்டுமே அவர் காந்தி என்றும் அழைக்கப்பட வேண்டியதானது. மற்றபடி மகாத்மா காந்தியின் தலைமுறைக்கும் இதற்கும் ஒரு தொடர்பும் இல்லை.  ஒரு பிரதமராக இருந்த ஒருவரை அவர் பதவியில் இருக்கும்போதே இப்படி சுடப்பட்டது இந்திய வரலாற்றிலேயே இதுவே ஒரே ஒரு சம்பவமாக இருக்கிறது
Image result for the last meeting of Indira Gandhi"
இந்த பஞ்சாப் என்ற தலைப்பில் அந்தக் காலத்தில் அடியேன் கூட ஒரு கவியரங்கில் மக்கள் கலைப் பண்பாட்டு நிகழ்வில் கவிதை வாசித்த நினைவும் உண்டு.

அதன் பிறகு டில்லியில் ஒன்றுமறியா அப்பாவி சீக்கியர்கள் கூட உலகெங்கும் பழிவாங்கப்பட்ட பிற்சேர்க்கை கதைகள் சம்பவங்கள் யாவும் உண்டு.

காட்சி: 2.

மொரார்ஜி தேசாய் மகா நேர்மையாளர், சரியான கண்டிப்பு உடையவர். அவரை அப்போது இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக இருந்த கிங்மேக்கர் லால் பகதூர் சாஸ்திரிக்கும் பின் யாரைத் தேர்ந்தெடுக்கலாம் என ஒரு காலக் கட்டத்தில் இவர் அப்போது லால்பகதூர் அமைச்சரவையில் செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சராக இருந்த இந்திராகாந்தியைத் தேர்ந்தெடுத்து விட்டார்.

அதே இந்திரா ஒரு கட்டத்தில் காங்கிரஸ்ஸை தன்பக்கம் இழுத்துக் கொண்டு பழைய காங்கிரஸ் சிண்டிகேட் என்றும் புதிய காங்கிரஸ் இந்திரா காங்கிரஸ் என்றும் பேர் இட்டு நாட்டை ஆண்டு அதன் ஆதிக்கத்தில்  அவசர கால பிரகடனம் என்று அனைத்து தலைவர்களையும் சிறையில் தள்ளினார் காரணம் காரியம் பார்க்காமலே. காமராசர் மட்டும் வெளியில் இருந்தவர் நொந்து போய் அக்டோபர் 2 காந்தி பிறந்த தினத்தில் உறக்கத்திலேயே உயிர் பிரிந்தார்.

தன் தாய்க்கும் கூட ஒரு சிறு அரசின் சலுகையைத் தர விரும்பாத அந்த சுயநலமில்லாத தலைவரை நன்றி அறிதல் இல்லாத இந்திரா" ஐ அம் நாட் ஆன்சரபிள் டு தோஸ் ‍ஹு பான் இன் பட்டி தொட்டி" என்று ஒரு ஊடகத்தின் பேட்டியில் தன்னை பிரதமராக்கிய காமராசருக்கு எல்லாம் நான் பதில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை என்று சொல்லி தூக்கி எறிந்து பேசினார்.

தர்மம் நின்று கொல்லும்.

சஞ்சய் காந்தி, ராஜிவ் காந்தி இருவரின் மரணமுமே இயல்பானதாக இல்லாமல் போயிற்று.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு....குறள்

ஈழத் தமிழினம் முழுதுமே பழி வாங்கும் குணத்தால் மட்டுமே அழிக்கப்பட்டதும் நினைவு கொள்ளப்பட வேண்டியதாகிறது.
Image result for the last meeting of Indira Gandhi"
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment