Sunday, October 1, 2017

கூடமலை: கவிஞர் தணிகை

கூடமலை: கவிஞர் தணிகை



சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் கங்கவள்ளியை அடுத்துள்ள கூடமலை மலை வாழ்மக்கள் அதிகம் உள்ள பகுதி அங்கே கூடமலை, பைத்தூர், பெரிய கரட்டூர், செங்கக்கட்டு,இராமனாதபுரம் ஆகிய ஊர்களை மையப்படுத்தி கடந்த மாதத்தின் 3 ஆம் வாரத்தில் 18 செப்டம்பர் முதல்21 செப்டம்பர் வரை நான்கு நாட்கள் 5 மருத்துவர்கள் கொண்ட குழுவினருடன் பல் மருத்துவ முகாம் ஒன்றை ஒருங்கிணைப்பு செய்யும் பணி எனக்கு வாய்த்தது.



என்னுடன் வந்திருந்த மருத்துவர்கள் மிகுந்த ஆர்வம் காட்டியதால் அந்த முகாம் வெகுவாக வெற்றி அடைந்தது. ஏன் எனில் ஹேன்ட் இன் ஹேன்ட் என்ற ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் இதன் தமிழகத் தலைமையகம் காஞ்சீபுரத்தில் உள்ளது. அதன் பிரின்ஸஸ் பியூலா என்ற நிர்வாகியும், உதவித் திட்ட அலுவலர் மரிய வசந்தக்குமாரும், ஒருங்கிணைப்பாளர் இளைஞர் தமிழரசனும் தொடர்ந்து என்னுடன் எமது கல்லூரி சார்பாக இந்த முகாமை நடத்தக் கோரி வந்தனர்.



அதன் வேண்டுகோள் எமது கல்லூரியின் முதல்வர் டாக்டர் ஜா. பேபிஜான் அவர்களால் அது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியதாக இருந்தால் செயல்படுக என்ற உத்தரவின் கீழ், பொது பல் மருத்துவத் துறைத் தலைவர் டாக்டர்.என் சரவணன் அவர்களின் அனுமதியுடன் டாக்டர் பரத், டாக்டர் ஹரிராஜ், டாக்டர் லிங்கேஸ், டாக்டர் சஜித், டாக்டர் ராகுல் விஜய்,என்ற 5 இளம் மருத்துவர்களைக் கொடுத்து கல்லூரி உதவியது.

தினமும், தமிழரசன் ஏ.சி. இனோவா காரில்  கார்த்தி என்னும் ஓட்டுனர் இவர் கூட இந்த முகாம் பணிகளில் நெஞ்சார தம்மை இணைத்துக் கொண்டு மக்க்ளை வீடு வீடாக சந்தித்தபோது சர்வே செய்ய பெரிதும் உதவி எங்களுடன் துணை வந்தார். ஒரு முறை கார் டயர் பஞ்சர் ஆகிவிட மிகவும் குறைந்த நேரத்தில் சலித்துக் கொள்ளாமல் மாற்று டயரைப் பொருத்தி எமது பயண நேரம் மாறுபடாதிருக்க உதவினார்.



என்றாலும் காலை 8.30 மணிக்கு புறப்பட்ட எங்கள் பயணம் மாலை 5.30 வரை நீடித்தது. அந்த நேரத்துள் எமக்கு கொடுக்க வேண்டிய காலைச் சிற்றுண்டி, மதியம் உணவு ஆகியவை குறைவின்றி போகும் வழியில் வரும் வழியில் அந்த தன்னார்வ நிறுவனத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

அந்த முகாமிற்கு நபார்ட் வங்கி மற்றும் பைத்தூர் மலை வாழ் மக்கள் மேம்பாட்டுத் திட்டங்கள் உதவின. என்றாலும் களப்பணிகள் மக்கள் பங்கெடுப்புடன் சிறப்பாக நடைபெறவில்லை. எனவே நாங்களே களப்பணியை கையில் எடுத்துக் கொண்டோம்.



பள்ளி வாரியாக சென்று அங்குள்ள  அரசு, தனியார் பள்ளிக் குழந்தைகளுக்கும், மலையில் மரத்தடியில் பொது இடங்களில், கோயிலில்,
இப்படி பொது இடங்களில் எல்லாம் மக்களைக் கூட்டி வாய் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வுக் கூட்டங்களை தளராமல் சலித்துக் கொள்ளாமல் நடத்தினோம்

வெளியே வராத மலை வாழ் மக்களுக்கு கிராமங்களில் உள்ள வீட்டின் கதவைத் தட்டி கூட பல் பரிசோதனை செய்தும், பராமரிப்பு குறித்த ஆலோசனைகளையும் வழங்கினோம். சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிக் குழந்தைகளும், பொது மக்களும், முதியோர் ஆண் பெண் ஆகிய அனைத்து தரப்பு மக்களும் பயன் பெற முகாம் நடத்தப் பட்டதோடு மட்டுமல்ல எவருக்கு எல்லாம் உடனடியாக மருத்துவ உதவி சிகிச்சைகள் தேவைப்படுமோ அவர்களை எல்லாம் கல்லூரிக்கு வந்து உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ள திட்டமிடப்பட்டு செயலாக்க ஹேன்ட் இன் ஹேன்ட் , மற்றும் பைத்தூர், கூடமலை மலை வாழ்மக்கள் மேம்பாட்டுத்திட்ட செயல்பாட்டாளர்களிடம் பணியை ஒப்படைத்து தொடர பொறுப்பளித்துள்ளோம்.



அருமையான இயற்கை சூழல், தூய்மையான காற்று, நல்ல வளமையான மலை,பசும் பயிர்கள் என்ற மனித செயற்கை நாகரீகம் அதிகம் பரவாத மிகவும் பின் தங்கிய எளிதில் அடைய முடியாத பகுதிகள் அவை. ஆனால் அங்கும் மாவட்ட ஆட்சியர் ஒரு நாள் சென்று வந்ததாகவும் குறிப்பிட்ட தூரம் பயணம் சென்று திரும்பியதாகவும் தனியார் பள்ளி வித்யா விகாஸ் தனியார் பள்ளியின் முதல்வர் கந்தசாமி அவர்கள் தெரிவித்தார்.

அந்தப் பள்ளியின் ட்ரஸ்ட்டி செந்தில் குமார் , முதல்வர் கந்தசாமி ஆகியோர் அந்தப் பள்ளியில் காலாண்டுத் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்த போதும் அதன் கால வரையறைக்கேற்ப எங்கள் முகாமையும் நடத்திக் கொண்டு மாணவர்கள் பல், வாய்,ஈறு ஆகியவற்றின் பரமாரிப்பு பற்றிய விழிப்புணர்வை எட்ட பெரிதும் உதவினர். எனது அப்துல் கலாம் அறிமுகம் பெரிதும் அங்கு உதவியது. ஒரு பாராட்டுக் கடிதமும் எமது முகாம் பணிகளைப் பாராட்டிக் கொடுத்தனர். அவர்களது பள்ளியில் வரவேற்பு சுவரில் முதல் முதலாக அப்துல் கலாம் படமே வரையப்பட்டு இருந்து எமையும் அனைவரையும் வரவேற்பதாய் இருந்தது.



மேலும் மலைமேல் இருந்த் நடுநிலைப் பள்ளியிலும் அதே போல அனைத்து ஆசிரியர்களும் தலைமை ஆசிரியரும் பெரிதும் எமை எமது சேவையை பயன்படுத்திக் கொண்டனர்.



வினாயகா மிஷன்ஸ் பல்கலைக்கழகத்தின் சங்கராச்சாரியார் பல மருத்துவக் கல்லூரியின் தற்போதைய செயல்பாடு அது பொது மக்களுக்கும் அரசுப் பள்ளிப் பிள்ளைகளுக்கு செய்யும் சேவை ஆகியவை பெரிதும் பரவிட இந்த முகாம் உதவியது.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment