Wednesday, October 25, 2017

சில நாள் இப்படியும் இருக்கும்: கவிஞர் தணிகை

சில நாள் இப்படியும் இருக்கும்: கவிஞர் தணிகை


Related image

காலை 6. 20 பேருந்தில் ஏறியதும் காதுகளில் பஞ்சை செருகி வைத்துக் கொண்டு அமைதியாக இருந்தேன். பாட்டு சத்தம் கேட்டுக் கொண்டுதான் இருந்தது.

சிறிது நேரம் சென்றதும், பயிற்சி நடத்துனர் குரல், காசில்லேண்ணே , எதுக்கய்யா பஸ்ல ஏறுகிறாய்? எனப் பேசி அந்தப் பயணியிடம் காசில்லை என்ற நிலை அறிந்து சலித்துக் கொண்டிருந்தார், இந்தக் காலத்திலும் இப்படி இருப்பார்களா? நடத்துனரின் குரலும் சேர்ந்து கொண்டது , அந்த நபரை எப்படி சமாளிப்பது என இருவரும் முயன்று வந்தனர். காசில்லாமல் பேருந்து ஏறிய பேர்வழி டோல்கேட்டில் இறங்கிக் கொள்வதாக வேண்டுகோள் விடுத்தார், நிற்காது, நிற்காது என சேலத்தில் 5 ரோட்டில்தான் நிறுத்துவோம் என மிரட்டி வந்தார்கள்...அதன் பின் எங்கே அந்த நபர் இறங்கினாரோ தெரியவில்லை..

அடுத்து இன்னும் இருவர் அந்த கூட்ட மிகுந்த நிறைய பேர் நின்று கொண்டே பயணம் செய்யும் பேருந்தில்: மோதாதே, வேண்டுமென்றே யாரும் மோதுவார்களா? காரில் வா, பேருந்தில் வந்தால் அப்படித்தான். இப்படியாக மாறி , மாறி வழக்கம் போல ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டதை பெரிது படுத்தி பேசியபடி, சண்டையிட்டபடி வந்தார்கள்...

ஏன்யா, நான் தினமும் உங்க பேருந்தில் வருகிறேன், எனக்கு இந்த சலுகை இல்லையா என்று கேலி செய்ய முயன்றபடியே பேருந்தை விட்டு இறங்கினேன்.

கல்லூரி பேருந்திலும் அந்த ஓட்டுனர் மாணவ மாணவியரிடம் தமது மேன்மையைக் காண்பித்து எப்போதுமே எரிச்சல் வரும்படி மேலாண்மை செய்தபடியே வாகனம் செலுத்துவார்.

அடுத்து மாலை தொடர் வண்டிப் பயணம் வீடு திரும்பல், ஒரு கல்லூரி மாணவன் முளைச்சி 3 இலை விடாத கேஸ்தான், தொடர்ந்து பீடி குடித்து ரயில் பெட்டியையே நாறடித்து வந்தான். என்னுடையது கடைசிப் பெட்டி, கடைசி சீட் / இருக்கை...அவர்கள் மத்தியில் இருந்தனர். சென்று எச்சரித்து வந்தேன் என்றாலும் அவர்கள் சட்டை செய்வதாக இல்லை.என்ன வயசு?  படிக்கிற பசங்களுக்கு இது தப்புன்னு தெரியாதா? ஏம்பா இப்படி பீடி குடித்து உடலைக் கெடுத்து வருகிறீர்கள் என்று எனது கடமைப் பணியை நிராகரிக்காமல் செய்தேன். ஆனால் பயன் ஒன்றுமிருப்பதாக இல்லை. இன்றும் கூட அவர்கள் புகைத்து வந்ததே அதற்கு சான்று.


Related image


அன்று எனக்கு தலைவலி வேறு அவர்கள் விட்ட புகையை தாக்குப் பிடிக்கவே என்னால் முடியவில்லை. அங்கிருந்த மற்றொரு உயரமான பையனையும் அழைத்து ஏம்பா நீங்களாவது சொல்ல மாட்டீர்கள்? என்றேன் பயனின்றி...அடுத்து நின்று கொண்டிருக்கும் அந்த ரயில் பெட்டிகளை இளம் பையனும் பெண்ணும் வந்து தவறான செயல்ளுக்கு பயன்படுத்துவது ரயில் புறப்படும் தருவாயில் இறங்கி சென்று விடுவது, ரயில் கழிப்பறையை நிலையத்தில் சந்திப்பில் நின்று கொண்டிருக்கும்போதே கழிப்பறையை பயன்படுத்துவதற்கென்றே வந்து செல்வது, பொது இடங்களில் புகைப்பது... எல்லா இடங்களிலும் அங்கிங்கெனாதபடி எல்லா இடங்களிலும் குப்பை...

எப்படி எப்போது நாம் சரி செய்யப் போகிறோம்?\

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

2 comments:

 1. உண்மைதான் நண்பரே
  பொதுவிடங்களில் எப்படி நடந்து கொள்வது என்பது பலருக்கும் தெரியவில்லை

  ReplyDelete
  Replies
  1. thanks for your feedback on this post and to your comment. vanakkam.

   Delete