Sunday, October 22, 2017

மெர்சல் ஆயிட்டேன் மெர்சல் ஆயிட்டேன்: கவிஞர் தணிகை

மெர்சல் ஆயிட்டேன் மெர்சல் ஆயிட்டேன்: கவிஞர் தணிகை


Related image

130 கோடி செலவில் எடுக்கப் பட்ட படம் இன்று 4 ஆம் நாளில் 100கோடி வசூலைத் தாண்டி விட்டதாம், பாரதீய ஜனதாக் கட்சி நல்ல நாடெங்கும் விளம்பரம் கொடுத்து விட்டது, நமது மாநிலத் தலைவர்கள் ராஜாவும் தமிழிசையும் அந்த படத்துக்கு நல்ல பிரச்சார பீரங்கிகள் ஆனார்கள்

படத்தைப் பார்க்காமல் எழுதக் கூடாது என்றே இது வரை எழுதாமல் இருந்தேன். இன்று பார்த்து விட்டேன். விஜய் இரசிகர்களுக்கு ஒரு நல்ல விருந்து. அட்லீ குமார் 31 வயது இளைஞர் இன்று இந்தியாவின் சினிமா உச்சத்தை தொட்ட இயக்குனர் ஆகிவிட்டார்.

படம் பொதுவாக சொன்னால் நன்றாக இருக்கிறது. பார்க்கலாம். விஜய் தமது தளபதி, தலைவர் பாணியில் நடித்திருக்கிறார். கை கூப்பி தொழுவதில் எம்.ஜி.ஆர் ஸ்டைல் வேறு. சினிமாவை சினிமாவாப் பார்த்தா சினிமா மெர்சல் நல்லாதான் இருக்குங்க...

கடவுளுக்கும் கூட மசிரைத்தான் கொடுக்கிறோம், மருத்துவருக்குத்தான் உசிரையே கையில் கொடுக்கிறோம், டாக்டர் ஆக இருக்க வேண்டுமென்றால் நல்லவராக இருக்க வேண்டும், நல்ல டாக்டராக இல்லையென்றால் டாக்டர் தொழில் உனக்கு எதுக்கு என அகங்காரமாக கேள்வி கேட்டிருக்கிறார்கள் மக்கள் குரலாக.

உண்மைதான், இந்தியாவில் மருத்துவம் நகர் புறம் சார்ந்ததாகவே இருக்கிறது, மருத்துவமனையில் நிறைய ஊழல்கள் நிறைந்துள்ளன. எல்லாமே ஒரு குடைக்கீழ் இயங்கும் மருத்துவ மனைகள் இதன் சான்றுகள்.
காலம் காலமாக இருந்து வரும் உயிர் காக்கும் தொழில் வடிவங்கள் மாறி வியாபாரமாக , பிணந்தின்னும் சாத்திரமாக மாறிவிட்டது என்பதெல்லாம் உண்மைதான். உண்மையைச் சொன்னால் எப்போதுமே உடம்பெரிச்சல்தான் இருக்கும்

ஆளும் கட்சி நீங்க சினிமாவை சினிமாவாப் பார்க்காமல் ஏதோ உங்கள் குப்பையை கிளறிவிட்டதாக, குட்டையை தோண்டி விட்டதாக நினைத்ததன் விளைவு படக் கம்பெனிக்கு ஏகப் பட்ட இலாபமும், நாடு தழுவிய விளம்பரமும்

மருத்துவம் உயிர்காக்கும் சேவையா?, வியாபரத்திற்கா என்ற எப்போதும் கேட்கப்படும் கேள்விகள் தான் விஜய்யின் வெற்றி மாறன் என்றும் ஏ.ஜே சூரியா என்ற மருத்துவர் கேரக்டர்களுமாக.

கோவிலை எல்லாம் சேர்ந்து கட்டுவார்கள், கடைசியில் ஒரு பிராமணப் பூசாரி உள்ளே சென்று பூஜை செய்துகொண்டு கட்டியவர்களிடமே காசு வாங்கிக் கொண்டு அப்போதுதான் சாமியைக் காண்பிக்க முடியும், நிற்காதே ஓடு ஓடு எனத் துரத்துவது போல, இன்னும் கொஞ்ச நேரம் அங்கே நின்றுஇருந்தால் நிற்க விட்டு விட்டால் வாழ்வே மாறும், மாறிவிடும் என்ற போலிக் கற்பனையை ஏற்படுத்தி விடுவது போல‌

வெற்றி மாறன் கட்டிய மருத்துவமனையில் ஏ.ஜே.சூரியா மருத்துவர் ஆளுமை செய்து கட்டிய குடும்பத்தையே நிர்மூலம் செய்கிறார், அதர்கு கட்டிய குடும்பத்தின் வாரிசுகள் தலையெடுத்து சூரியாவை எப்படி நிர்மூலமாக செய்கிறார்கள் என்பதே கதை. ஆனால் அதற்குள் நேரம் காலம் போவது தெரியாமல் த்ரில்லிங்காக விறு விறுப்பு குன்றாமல் செமையாக சம்பவங்களைக் கோர்த்து விளையாடி இருக்கிறார்கள்.

வடிவேலு, சத்யராஜ்,காஜல் அஹர்வால்,சாமந்தா, நித்யாமேனன் எல்லாமே ஓகே டபுள் ஓகே. ஏ.ஜே சூரியா இப்போதெல்லாம் நல்ல வில்லனாக வந்து கதையை தூக்கி நிறுத்தி சமுதாயத்தில் உள்ள ஓட்டைகளை எல்லாம் தூசு தட்டுவது போல கேள்வி கேட்டு மற்றொரு சமுத்திரக் கனியாக மாறி வருகிறார் எதிர்மறை நாயகனாக நடித்த போதும்.

உண்மைதான், தானாக பிறக்க வேண்டிய சுகப்பிரசவங்களை எல்லாம் கத்திரிக்கோல் பிரசவங்களாக மாற்றி வெட்டி எடுப்பது அதிகமாகிவிட்டதா இல்லையா? கத்திரிக்கோலை வயிற்றில் வைத்து தைத்த கதை எல்லாம் நிகழ்ந்ததா இல்லையா?

புற நகர் பகுதிகளில் இன்னும் சரியான மருத்துவமனைகள் எல்லாம் இல்லாமல் நிறைய மரணங்கள் எல்லாம் இரவில் நடக்கிறதா இல்லையா? எனது தாயே அப்படி இறந்தவர்களுள் ஒருவர்தான் 8 கி.மீ தள்ளித்தான் சென்று மாரடைப்புக்கு நள்ளிரவில் வாகனமின்றி தவித்து அப்போது 108 வேறு இல்லை...மருத்துவ மனையில் சேர்த்தோம். உள்ளூரில் இருக்கும் ஒரு சில மருத்துவர்கள் நள்ளிரவில் சென்று கதவைத் தட்டினால், அழைப்பு மணியை அடித்தாலும் எழுந்து வராமலே எத்தனை மரணங்கள் நிகழ்ந்துள்ளன தெரியுமா?

இதில் சொல்வதெல்லாம் உண்மைதான். சில தனியார் பெரு மருத்துவமனைகளில் இறந்து போன பிணத்தை தர மறுத்து காசை இலட்சக்கணக்கில் பிடுங்குவது என்பது தெரிந்த கதைதானே? காலம் காலமாக மருத்துவம் செய்து வரும்போது நோய் குறைந்து மருத்துவமனைகள் குறைந்தல்லவா இருக்க வேண்டும்? எப்படி பேரரண்மனைகளாக இன்னும் மருத்துவ மனைகள் தோன்றிக் கொண்டே இருக்கின்றன புதிதாக புதிது புதிதாக...Image result for mersal

 படம் இந்தியன் பட நினைவைக் கொடுக்கிறது... குரு இயக்குனர் சங்கரின் சிஷ்யப் பிள்ளை அட்லீ என்பதாலோ?  ஆமாம் உண்மைதான் சரக்கு சேவை வரி என்று உண்ணும் உணவுக்கும் தகவல் தொடர்பு சாதனங்களுக்கும் மக்கள் பரவலாக பயன்படுத்தும் அனைத்துக்கும் வரி போட்ட அரசு இந்த பா.ஜ.க அரசுதான் இதில் என்ன சந்தேகம்?

நல்ல மருத்துவர்கள் கோபப் பட இதில் ஏதுமே சொல்லப்படவில்லை. மருத்துவர்கள் ஏன் கோபப் பட வேண்டும்? வருவாய் இழப்பு ஏற்படுமே என்றா> அரசுத் தொடர்புடைய அனைவருமே அரசு மருத்துவமனைகளையே நாடவேண்டும், அரசுப்பள்ளிகளில்மட்டுமே தம் பிள்ளைகளைப் படிக்க வைக்க வேணும் என்று வந்துவிட்டால் பள்ளிகளும், மருத்துவமனைகளின் நிலையும் நன்னிலையை எய்திவிடும் என்ற கருத்து சரியானதுதானே?

சிங்கப்பூர்  7 சதம் வரி வாங்கும் நாட்டில் மருத்துவம் இலவசமாக கொடுக்கப்படும் போது 28 சதம் ஜிஎஸ்டிவாங்கும் இந்தியாவில் ஏன் இலவச மருத்துவம் இல்லை என்ற ஒப்பீடு நெருடலானதுதான், ஏன் எனில் இந்தியா பெரு நாடு உபகண்டம், இங்கு வரிகட்டுவோரும் அதாவது நேரடியாக வருமானவரி கட்டுவோரும் குறைவுதான். சிங்கப்பூர் கணகெடுத்துக் கொண்டால் 277 சதுர மைல் பரப்பும் சுமார் 56 இலட்சம் மக்கள் தொகையுமே உள்ள நாடு அல்லது நமது மாநிலத்தில்  மிகச் சிறியதை விட சிறியது இதில் 18.5 சதவீதம் பேர் எந்த மதத்தையுமே சாராத அறிவுடையார் என்பதும் தமிழை ஆட்சி மொழியாகவும் கொண்டிருக்கும் நாடு என்பதிலும்  இப்படி இந்தியாவும் அதன் ஒப்பீடும் மாறுகிறது. வேண்டுமானால் சீனாவை ஒப்பிட்டிருக்கலாம். அங்கு மருத்துவம் கிராம அளவில் சென்று சேர மாவோ  கால்நடை செவிலியர் என பயிற்சி பெற்ற பேர் ஃபூட் மெடிகல் ஒர்க்கர்ஸ், என பாரா மெடிகல் ஒர்க்கர்ஸை அவ்வளவு பெரிய நாடெங்கும் பரவச் செய்தார்

டிமானிட்டேசன், அப்துல்கலாம், கமல் அமெரிக்க விமான தள சோதனை எல்லாமே நடந்த சம்பவங்களின் கோர்வையாக அனைவர்க்கும் தெரிந்த நிகழ்வுகளாக கதை செய்யப்பட்டிருப்பினும் எல்லாம் உண்மைதானே? மறுக்க முடியாதே?

கோவிலுக்கு பதிலாக மருத்துவமனைகளே அவசியம் என்று சொன்ன கருத்து சரியானது. அந்தக் காலத்தில் பள்ளி வேண்டும் என்று சொன்னது போல இந்தக் காலத்திற்கு மருத்துவமனையே அவசியமானது. அதில் எப்போதும் பணியில் நல்ல மருத்துவர் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டியதும் அரசின் கடமை.

மேலும் இலவச மருத்துவம் வேண்டும் என்ற கோஷத்தையும் முன் வைத்துள்ளது வரவேற்கத்தக்கதே.

இந்தப் படம் விஜய்யின் நடிகர் தாக்கம் மிஞ்சி இருந்த போதிலும் சமுதாயத்திற்கு மிக அவசியமான மருத்துவக் கருத்துகளை எடுத்து வெளிப்படையாக இரசிக்கத்தக்க முறையில் பேசி இருப்பதால் இதற்கு மறுபடியும் பூக்கும் தளம் நூற்றுக்கு 60 மதிப்பெண்களை தருகிறது. அனைவரும் பார்க்கலாம்.

இவர் சும்மா நடிக்கட்டும் நாங்களும் காசு வாங்காமல் பார்க்கிறோம் என்று மருத்துவர்கள் சொல்வதை விட அரசு எங்களுக்கு செலவில்லாமல் மருத்துவப் படிப்பை தகுதியுள்ளார்க்கு ஒரு சம அளவு கோலை நிர்ணயம் செய்து அளிக்கட்டும் நாங்களும் சேவை செய்யத் தயங்க மாட்டோம் என  மருத்துவர்களும் மருத்துவ சங்கமும் அதன் தலைவர்களும் சொன்னால் அது நல்லது சிறந்ததாகக் கருதப்படும்.

அது சினிமா, நடிப்பு, என்று விட்டு விடாமல் செய்தியாக ஊடகத்தில் தீயாக பரவுகிறது அது தம்மையும் பற்றிக் கொள்ளுமோ என நல்ல மருத்துவர்கள் பயப்படத் தேவையில்லை.

ஒரு பக்கம் மேஜிக், இன்னொரு பக்கம் மருத்துவம், மற்றொரு பக்கம் மக்கள் சேவை இன்னொரு பக்கம் வெற்றி மாறனின் நேர்மை வீரம் விஜய்க்கு பாரட்ட நல்லcharacter  தேர்வு ஆனால் ஏன் எதுக்கு எப்படி என்ற லாஜிக் எல்லாம் பார்க்கக் கூடாது , கேட்கக் கூடாது கதையை சினிமாவாக சுருக்கமாக பார்க்க புரிந்து கொள்ள வேண்டும்.
Related image

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.
Inline image 1

thanks to this mail

Lakshmanan Marimuthu

Oct 20 (2 days ago)
to Chinnu, bcc: me
 Sankara Narayanan <psn.1946@gmail.com>:

Oct 20 (2 days ago)



2 comments:

  1. படம் பார்க்கும்ஆவலைத் தங்களின் விமர்சனம் தூண்டிவிட்டுவிட்டது நண்பரே
    நன்றி

    ReplyDelete
  2. thanks for your feedback on this post sir. vanakkam.

    ReplyDelete